மாக்ஸ்முல்லர் மர்மம்! – 8 (Post No.4451)

Written by S.NAGARAJAN

 

 

Date: 2 DECEMBER 2017

 

Time uploaded in London- 7-16 am

 

 

 

Post No. 4451

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

நண்பரா, கைக்கூலியா!

மாக்ஸ்முல்லர் மர்மம் – 4 : கட்டுரை எண் 4269 – வெளியான தேதி 4-10-2017 ; மாக்ஸ்முல்லர் மர்மம் – 5 : கட்டுரை எண் 4327 – வெளியான தேதி 23-10-2017 ; மாக்ஸ்முல்லர் மர்மம் – 6 -கட்டுரை எண் 4355 – வெளியான தேதி 1-11-2017; மாக்ஸ்முல்லர் மர்மம் -7 கட்டுரை எண் 4385 – வெளியான தேதி  11-11-17

இதனுடைய தொடர்ச்சியாக இக் கட்டுரை வெளியாகிறது.

 

மாக்ஸ்முல்லர் மர்மம்! – 8

 

ச.நாகராஜன்

 

11

மாக்ஸ்முல்லரைப் பற்றிய செய்திகளில் அவர் யூஜின் பர்னாஃப் (Eugene Burnouf – 1801-1852) என்ற சம்ஸ்கிருத பேராசிரியரிடம் சம்ஸ்கிருதம் பயின்றார் என்பதும் ஒரு செய்தி.

யூஜின் பர்னாஃப் பாரிஸில் 20 வருடங்கள் சம்ஸ்கிருத பேராசிரியராக இருந்தவர். இவரிடம் மாக்ஸ்முல்லர் 1845ஆம் ஆண்டு சென்றார். 1846இல் அவர் இங்கிலாந்து சென்று விட்டார். அதாவது மாக்ஸ்முல்லர் தனது 22ஆம் வயதில் பர்னாஃப்பிடம் சம்ஸ்கிருதம் கற்றுக் கொண்டார். ஒரே ஒரு வருடம் கற்றுக் கொண்டு, தனது 23ஆம் வயதில், இங்கிலாந்து சென்று விட்டார்,

 

வளமான இலக்கியத்தையும் இலக்கணத்தையும் மொழி நயத்தையும் அவர் ஒரே ஆண்டில் கற்றுக் கொண்டு தேர்ந்த சம்ஸ்கிருத நிபுணராக ஆகி விட்டாரா?

இதை நம்பியா ஈஸ்ட் இந்தியா கம்பெனி அவரிடம் வேதங்களை மொழி பெயர்க்கும் பணியைத் தந்தது.

 

இந்த சந்தேகம் இயல்பான சந்தேகமே.

 

பற்பல வருடங்கள் ஆழ்ந்து வேதம் கற்ற பாரம்பரியம் மிக்க  வேத குடும்பங்களில் வந்தவர்களே வேதங்களின் உண்மைப் பொருளை அறிந்திருப்பதாக மார் தட்டிச் சொல்ல மாட்டார்கள். அவ்வளவு நுட்பமான விஷயங்களை வேதம் கொண்டுள்ளது.

 

ஆக 23 வயது வாலிபர் ஒருவர் ஒரு வருடத்தில் சம்ஸ்கிருதத்தில் தேர்ச்செ பெற்றார் என்பதை யாரும் நம்ப மாட்டார்கள். ஆனால் ஈஸ்ட் இந்தியா கம்பெனியின் நோக்கம் மாக்ஸ்முல்லருக்கு சம்ஸ்கிருத புலமை உண்டா இல்லையா என்பதை ஆராய்வதல்ல.

தாங்கள் கூறியபடி விஷக் கருத்துக்களை அவரால் வித்திட முடியுமா, அந்தத் தகுதி அவருக்கு உண்டா, தங்கள் வழிக்கு அவர் வருவாரா என்பது தான்.

 

மாக்ஸ்முல்லர் அவர்களது நிபந்தனைகளுக்கு உட்பட்டார். கிறிஸ்தவ மிஷனரிகள் குளிரும் விதமாகத் தன் பணியை ஆரம்பித்தார்!

 

12

மாக்ஸ்முல்லர் 1849ஆம் ஆண்டிலிருந்து 1874ஆம் ஆண்டு முடிய – அதாவது சுமார் 25 ஆண்டுகள் வேதங்களை மொழி பெயர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அதாவது அவரது 26ஆம் வயதிலிருந்து 41ஆம் வயது வரை இந்த ப் பணியில் அவர் ஈடுபட்டிருந்தார்.

இந்த 25 வருடங்களில் சம்ஸ்கிருதத்தை அவர் படித்துத் தேர்ச்சி பெற்று விட்டதாகச் சொல்லலாமா?

அவரே வேதங்களை மொழி பெயர்க்கவில்லை என்று சொல்கிறது வரலாறு.

 

அமெரிக்காவின் தலை சிறந்த அறிவியல் பத்திரிகை ‘ஸயிண்டிபிக் அமெரிக்கன்”.

அதில் 1900ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதியிட்ட இதழில் மாக்ஸ்முல்லர் இறந்ததை ஒட்டிய இரங்கல் செய்திப் பகுதி வெளியானது.

 

அதில், மாக்ஸ்முல்லர் ரிக் வேதத்தை உண்மையில் அவரே மொழி பெயர்க்கவில்லை. அதைப் பெயர் தெரியாத ஒரு ஜெர்மானிய அறிஞரே செய்தார். முல்லர் அந்தப் பணியைப் பணம் கொடுத்து செய்யச் சொன்னார்.” என்று இருக்கிறது.

 

விக்கிபீடியா தரும் ஆங்கில மூலத்தைக் கீழே காணலாம்:

 

Scientific American carried his obituary in the December 8th, 1900 edition of the magazine. It was revealed that Max Muller had in fact usurped the full credit for the translation of the Rig veda which was actually not his work at all, but of another unnamed german scholar whom Muller had paid to translate the text. To quote from his obituary in Scientific American, “What he constantly proclaimed to be his own great work, the edition of the “Rig Veda,” was in reality not his at all. A German scholar did the work, and Muller appropriated the credit for it.”

 

13

வேதங்களைப்பற்றிய தவறான கருத்தைக் கொண்டு அந்தப் பணியை ஆரம்பித்த மாக்ஸ்முல்லர் அதனுடைய சிறப்பை உணர்ந்து (தான் செய்ய வேண்டிய டாமேஜை எல்லாம் செய்து முடித்து விட்டு    – செஞ்சோற்றுக் கடன் கழித்த பின்னர் – ) இந்திய பாரம்பரியத்தையும் அதன் ஆழ்ந்த ஆன்மீக உணர்வையும் பாராட்ட ஆரம்பித்த போது கிறிஸ்தவ மிஷனரிகளால் அதைத் தாங்க முடியவில்லை.

அவரைக் கிறிஸ்தவ மதத்தின் எதிரி என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினர்.

ஆடம் லார்ட் கிஃப்போர்ட் (Adam Lord Gifford) என்பவர் ஆண்டு தோறும் இறையியலில் ஒரு தொடர் சொற்பொழிவைச் செய்யுமாறு ஏற்பாடு செய்திருந்தார்.

அதற்கு கிஃப்போர்ட் லெக்சர்ஸ் (Gifford Lectures) என்று பெயர். மிகவும் பிரசித்தமான இந்த கிஃப்போர்ட் சொற்பொழிவாளராக 1888ஆம் ஆண்டு மாக்ஸ்முல்லர் க்ளாஸ்கோ பல்கலைக் கழகத்தில் நியமிக்கப்பட்டார். அடுத்த நான்கு ஆண்டுகளில் தொடர்ந்து வருடாவருடம் இந்த கிஃப்போர்ட் சொற்பொழிவுகளை மாகஸ்முல்லர் நிகழ்த்தினார்.

இந்தச் சொற்பொழிவை நிகழ்த்திய போது முல்லர் சொல்லிய கருத்துக்கள் கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு உடன்பாடுடையதாக இல்லை.அதனால் அவரை கிறிஸ்தவ மத எதிரி என்று கூறிக் குற்றம் சாட்டினர்.

இதப் பற்றி விக்கிபீடியா தரும் தகவலின் ஆங்கில மூலம் இது:

Anti-Christian

During the course of his Gifford Lectures on the subject of “natural religion” Muller was severely criticized for being anti-Christian. In 1891, at a meeting of the Established Presbytery of Glasgow, Mr. Thomson (Minister of Ladywell) moved a motion that Muller’s teaching was “subversive of the Christian faith, and fitted to spread pantheistic and infidel views amongst the students and others”, and questioned Muller’s appointment as lecturer.

An even stronger attack on Muller was made ny Monsignor Alexander Munro in St Andrew’s Cathedral. Munro, an officer of the Roman Catholic Church in Scotland (and Provost of the Catholic Cathedral of Glasgow from 1884 to 1892), declared that Muller’s lectures “were nothing less than a crusade against Divine revelation, against Jesus Christ, and against Christianity”. The blasphemous lectures were, he continued, “the proclamation of atheism under the guise of pantheism” and “uprooted our idea of God, for it repudiated the idea of personal God”.

14

இப்படியாக எந்த ஒரு பணியை ஆற்றச் சொல்லி கிறிஸ்தவ மிஷனரிகள் பெரும் பணத்தைத் தந்து மாக்ஸ்முல்லரை நியமித்தார்களோ அவரது அந்தப் பணியில் அவர்கள் திருப்தி அடையவில்லை .

மாக்ஸ்முல்லர் ஆரிய இனம் என்ற பிரிவினைக் கொள்கையை ஏற்படுத்தினார். வேத காலத்தை மனம் போன படி மிகவும் குறைத்து மதிப்பிட்டார். வேதத்தின் பொருளை மாற்றினார்.

என்ற போதும் கூட கிறிஸ்தவ மிஷனரிகள் திருப்தி அடையவில்லை. ஏனெனில் மாக்ஸ்முல்லர் இந்தியாவைப் புகழத் தொடங்கியது அவர்களைத் திடுக்கிட வைத்தது.

சொந்தப் பணத்தில் சூன்யம் வைத்துக் கொண்டது போல அவர்கள் தவித்தனர்.

 

***      (தொடரும்)

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: