Buddha, Skanda, Nammalvar – Three Great Avatars on Vaikasi Visakam Day! (Post No.15,682)

Written by London Swaminathan

Post No. 15,682

Date uploaded in London –1 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

(vaikaasi visaakam)

May 1, 2026 Vesak; May 30,2026 Vaikasi Visakam.

There are two Full Moon Days in May 2026.

Visaka , a star name, is corrupted as Vesak in Buddhist terminology. 

Vesak, often called “Buddha Day” or Buddha Purnima, is the most sacred holiday in Buddhism, commemorating the birth, enlightenment, and passing (Parinirvana) of Gautama Buddha on the full moon in May.

Significance: Celebrates the three major milestones of the Buddha’s life, which in many traditions occurred on the same day. 

When: Celebrated on the full moon day of the Vaisakha month, usually in May. In 2026,  May 1. 

Temple Visits: Buddhists visit temples for services and to make offerings.

“Bathing the Buddha”: A ceremony where water is poured over a statue of the infant Buddha to symbolize purification and the washing away of negative actions.

 Light and Decor: Homes and temples are decorated with lanterns and lights to symbolize the enlightenment of the Buddha.

Lifestyle: Many devotees wear white, eat vegetarian food, and observe the “eight precepts” (a code of morality) for the day.

Global Recognition: The United Nations recognized the day internationally in 1999 to acknowledge the contributions of Buddhism to spirituality and humanity.

 Vesak is primarily celebrated in South and Southeast Asia (Sri Lanka, Thailand, India, Malaysia, Singapore) as well as by Tibetan and Mahayana traditions.

***

The festivalVaikasi Visakam is observed on the full moon day in the month of Vaikasi corresponding to the English month May -June. Moon is closer to the asterism/star Visaka. The day is said to be one in which god Subrahmanya incarnated in this world.

Dharmaraja , god of death, also known as Yama is also worshipped on this day. Hence this day is said to be doubly important and meritorious. Chaturdasi is the 14th day after a full moon day or new moon day; and the next day will be either full moon or new moon. If such a day happens to be a Tuesday in any of the dark fortnights, the occasion is said to be favourable for the worship of Yama. 

This is a month in which the days are extremely hot and sultry. Ponds and tanks dry up quickly and plants wither away. Rapidly.  Henc the sages have laid down that distribution of free food such as curd bath/yogurt rice with cool drinks or butter milk during such days will earn punya. Presentation of umbrellas and leather sandals, palm leaf fans as well as watering plants are considered acts of great religious merit.

 Certain places are considered to be especially important for such acts of charity, and Swamimalai is one of them.  It has a myth attached to it for its importance and it is in brief as follows,

 An asura by name Arikesa was giving Indra a lot of trouble. He visited various holy shrines to find a solution to solve this problem. When he went to Swamimalai and worshipped lord Subrahmanysa/ Muruga, He blessed him with the strength to shake off the demon and win back the kingdom he usurped.

 The observance of this festival at Tirumazhupadi near Thanjavur is considered especially important for the reason that Siva had on one occasion made a MAZHU or lance dance at this place and that took place on a Vaikasi Visaka day. And Siva’s sacred bull had its incarnation on this festive occasion.

 Alwar tirunagari in Tirunelveli district is the next important place for the observance of this festival. Most famous Vaishnava saint NAMMALVAR  was born here on Vaikasi Visaka day.

 There is an image of Narasimha Avatar of Vishnu is in the hill temple at Simhachalam in Andhra.  On all days of the year it is coated with sandal paste, but on the Vaikasi Visakam day the paste is scrubbed off, and the form is available for view. People flock to this place in large numbers to see the image.

***

 Inscriptions 

On the outside of the northern wall of enclosure of the

Thanjavur temple is a record in the sixth year of the Choza king Rajendradeva 1050-63 CE making provision for a daily allowance of paddy to a troop of actors to enact the drama of Rajarajeswara nataka on the occasion of the Vaikasi festival. On the rock outside the north prakara of the Ratnachaleswara temple at Ratnagiri in Trichy district, is an inscription relating to the 16th year,340th day of Tribhuvana chakravartin Konerumelkondan making a gift of land for the festival called Vaikasi tirunal.

***

My old article on Vaikasi  is given below: 

Significance of Tamil month Vaikasi (vaikaasi) 

This is the second month in Hindu Solar Calendar. Sun travels in second zodiac sign Rishaba, i.e, Taurus.

Tamil Hindus arrange auspicious events during this month. Marriages, Gruha Pravesa (house warming) , construction of buildings etc take place in this month.

Visaaka Star day (Viasaaka star and Moon together) known as Vaikaasi Visaakam is celebrated in Skanda/ Murugan temples. Millions of people visit Muruga/Kartikeya temples on that day.

For Buddhists Vesak (Visaka) is the most important festival of Buddha Jayanthi.

For Hindus, Tamil saints Sekkizar Jayanthi, Thiru Gnana Sambandar Jayanthi, Kanchi Mahaperiyavar Jayanthi (Shankaracharya of Kanchi Mutt (1894-1994) are important. This month roughly corresponds to May in English Calendar.

–Subham—

Tags- Vaikasi Visakam Festival, significance of Tamil month , Buddha Jayanti, Nammalvar, Vesak

முருகப்பெருமான்,  நம்மாழ்வார், புத்தர் அவதரித்த வைகாசி விசாகம் (Post No.15,681)

Written by London Swaminathan

Post No. 15,681

Date uploaded in London –1 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

2026 மே மாதம் முதல் நாள் வெசாக் ; 2026 மே மாதம் முப்பதாம் தேதி வைகாசி விசாகம்

வெசாக் பண்டிகை 

விசாகம் என்பதை சிங்கள மக்கள் வெசாக் என்று ஆங்கிலேயர் போல சுருக்கி விட்டனர்; வெசாக் பண்டிகை (Vesak) என்பது பௌத்தர்களால் மே மாத பௌர்ணமி தினத்தில் கொண்டாடப்படும் மிக முக்கியமான புனித நாளாகும். இது புத்தரின் பிறப்பு, ஞானோதயம் (Buddha Enlightment) மற்றும் பரிநிர்வாணம் (மறைவு) ஆகிய மூன்று முக்கிய நிகழ்வுகளைக் குறிக்கிறது. இந்நாளில் வீடுகள், தெருக்கள் வெசாக் கூடுகளால் (Lanterns) அலங்கரிக்கப்பட்டு, தானசாலைகள் வழங்கப்பட்டு, பௌத்த மத வழிபாடுகள் சிறப்பாக இடம்பெறும்.  

இது பௌத்தர்களின் மிக முக்கியமான தினமாகும், பெரும்பாலும் தெற்காசிய மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கொண்டாடப்படுகிறது. 

ஒளி வழிபாடு: வெசாக் கூடுகள் மற்றும் தோரணங்கள் கட்டப்பட்டு வீதிகள் ஒளிமயமாகக் காட்சியளிக்கும்.

தானசாலைகள்: பசித்தோருக்கு உணவு மற்றும் பானங்கள் தானமாக வழங்கப்படும் (தானசாலைகள்).

வழிபாடு: விகாரைகளுக்குச் சென்று பௌத்த மத போதனைகளைக் கேட்டல், தியானம் செய்தல் மற்றும் பஞ்சசீலங்களைப் பேணுதல்.

இலங்கையில் வெசாக்: இலங்கையில் இது மிக உற்சாகமாகக் கொண்டாடப்படும் தேசியப் பண்டிகையாகும். கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் அலங்காரப் பந்தல்கள் அமைக்கப்படுகின்றன. 

***

வைகாசி விசாக விழா

வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திர நாள், முருகப் பெருமான் அவதரித்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. இதனை வேனில் விழா என்றும் கூறுவர்.

முருகன் கோவில்களில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.  ஆறுமுகப்பெருமான் அவதரித்த தினமாதலின் விசாகம் விசேஷ தினமாகக் கொண்டாடப்படுகின்றது. இத்தினத்தில் கோயில்களில் வசந்தோற்சவமும், பிரமோற்சவமும் நடைபெறும்,

முருகன் கோவில்களில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக மும்  சிறப்பு அலங்காரமும் செய்வார்கள் ; பக்தர்கள் கூட்டமும் பெருகும்

முருக பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து அணி அணியாக வருவார்கள்

இத்தினம் பலசமயத்தாருக்கும் ஒரு புனித நாளாகும்.வைணவத்தில் நம்மாழ்வார் அவதார நாளாகவும் இந்நாள் கொண்டாடப்படுகின்றது. இந்நாளில் திருசெந்தூரில் மிகவும் சிறப்பான வழிபாடு நடக்கும்.

***

நம்மாழ்வார் அவதார நட்சத்திரம்

வைணவத்தில் வைகாசி விசாகத் திருநாள் நம்மாழ்வார் அவதாரத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.

நம்மாழ்வாரின் அவதார நட்சத்திரம் வைகாசி விசாகம் ஆகும்.

பிறந்த ஊர்: ஆழ்வார் திருநகரி

பெற்றோர்: காரி – உடையநங்கை.அம்சம்: திருமாலின் படைத்தலைவரான விஷ்வக்சேனரின் அம்சம்.

சிறப்புப் பெயர்: சடகோபன், மாறன், பராங்குசன்.

படைப்புகள்: திருவாய்மொழி, திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி. சுமார் 1300 பாடல்கள்

***

கல்வெட்டுகளில் வைகாசி

குறைந்தது இரண்டு கல்வெட்டுகளில் வைகாசித் திருநாள் பற்றிய கு றிப்புகள் கிடைக்கின்றன ,

தஞ்சாவூரில் சோழ  மன்னன் ராஜேந்திர தேவனின் CE 1050-63 கல்வெட்டு உள்ளது  .வைகாசி விழாவில் ராஜ ராஜேஸ்வர நாடகம் நடிக்க வேண்டும் என்றும் அதற்காக  அந்த நடிகர்களுக்கு தினமும் உணவுக்கு நெல் அளிப்பதற்காக நிலம் தானம் செய்யப்பட்டது  என்றும் கல்வெட்டு அறிவிக்கிறது.

இரண்டாவது கல்வெட்டு திருச்சி மாவட்ட ரத்னகிரியிலுள்ள ரத்னாசலேஸ்வரர் கோவில் பிரகாரத்தில் காணப்படுகிறது  திரிபுவன சக்ரவர்த்தி கோனெரு மேல்கொண்டானின்  16 ஆவது ஆட்சி ஆண்டில் 340 ஆவது நாளில் வெளியிட்ட இக்கல்வெட்டு வைகாசித் திருநாள் நடத்த நிலம் தானம் செய்யப்பட செய்தியைக் கூறுகிறது.

***

சிம்மசலத்தில் வைகாசித் திருநாள்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திற்கு அருகில் உள்ள சிம்மசலம் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் வைகாசி மாதம் சிறப்பாகத் திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

சிம்மசலம் நரசிம்மர் ஆண்டு முழுவதும் சந்தனப் பூச்சில் காட்சியளிப்பார். ஆனால், வைகாசி விசாகம் (அல்லது அக்ஷய திருதியை சமயத்தில்) மட்டுமே அந்த சந்தனம் களையப்பட்டு, மூலவரின் நிஜ ரூப தரிசனம் (சந்தன காப்பு இல்லாத வடிவம்) பக்தர்களுக்குக் கிடைக்கும்.

சிறப்பு பூஜைகள்: இந்த விசேஷ தினத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மூலவரை தரிசிக்க சிம்மசலத்திற்கு வருகை தருகின்றனர்.

***

மழுவேந்திய கூத்தர் தரிசனம்:

திருமழபாடி (அரியலூர் மாவட்டம்) வைகாசி விசாகத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது.

மழுவேந்திய கூத்தர் தரிசனம்: வைகாசி விசாகத்தன்றுதான், சிவபெருமான் (திருமழபாடி வைத்தியநாதசுவாமி) மழு எனும் ஆயுதத்தை ஏந்தி, தன் பக்தர்களுக்காக அற்புதத் திருநடனம் புரிந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.

 இந்தத் தலத்தில் மூலவர் வைத்தியநாத சுவாமியாகவும், அம்பாள் சுந்தராம்பிகையாகவும் அருள்பாலிக்கின்றனர். வைகாசி திருவிழாவின்போது இவர்களுக்குச் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படும்.

மழுவேந்திய பெருமான்: ‘திருமழபாடி’ என்ற பெயரே, சிவபெருமான் மழு ஏந்தியதால் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

***

சுவாமிமலையில் வைகாசித் திருநாள்

அரிகேச அசுரன் கதை :தாரகாசுரன் மற்றும் சூரபத்மனின் வம்சாவளியைச் சேர்ந்த அரிகேச அசுரன், தேவர்களையும் முனிவர்களையும் மிகவும் துன்புறுத்தி வந்தான். இவனது தொல்லை தாங்காத இந்திரன் பல புனிதத் தலங்களுக்குச் சென்று இறைவனை வழிபட்டான் ; சுவாமி மலை தரிசனத்துக்குப் பின்னர் அசுரர் தொல்லை அடியோடு நின்றது

அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது; இதே நாளில் தான் முருகப்பெருமான் தந்தை சிவபெருமானுக்கு ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தை குருவாக இருந்து உபதேசம் செய்ததாகவும் நம்பப்படுகிறது.வைகாசி விசாகத்தையொட்டி, அதிகாலையிலேயே கோயில் நடை திறக்கப்பட்டு, சுவாமிநாத சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் போன்ற வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெறும்.

முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சிதருவார் . ஆயிரக் கணக்கான  பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள்.

***

அறிவியல் விஷயம்

முக்கியமான அறிவியல் விஷயம், துலாத்தில் சூரியன் இணையும் போது இரவும் பகலும் சம அளவு என்று ஆகிறது. இரவையும் பகலையும் சமமாகக் காட்டும் தராசு (பாலன்ஸ்) துலாம் தான். அத்துடன், கோடை காலத்தையும் குளிர் காலத்தையும் பிரித்து பருவத்தை சமமாக்கும் மாதம் வைகாசி. விசாக நட்சத்திரத்தில் வரும் பௌர்ணமியை ஒட்டி அந்த மாதத்திற்கு வைகாசி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

27 நட்சத்திரங்களில் 16வது நட்சத்திரமாக அமையும் இது துலா ராசியில் அமைந்துள்ளது. இந்த நட்சத்திரத்திற்கு ராதா என்ற இன்னொரு பெயரும் உண்டு. ஆகவே தான் இதைத் தொடர்ந்து அடுத்து வரும் நட்சத்திரத்தை ராதாவைத் தொடர்ந்து வருவது என்ற பொருளுடைய அனுராதா (அல்லது அனுஷம்) என்ற பெயரால் அழைக்கிறோம்.

—subham—

Tags- முருகப்பெருமான்,  நம்மாழ்வார், புத்தர் ,அவதரித்த, வைகாசி விசாகம், வெசாக், சிம்மாசலம் சந்தனக் காப்பு, திருமழபாடி

ஹனுமான் சுக்ரீவன் உரையாடல் துளசிதாசரின் கிஷ்கிந்தா காண்டம்- 13 (Post.15,680)

WRITTEN BY R. SESHADRINATHAN

Post No. 15,680

Date uploaded in London –   1 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

துளசிதாசரின் கிஷ்கிந்தா காண்டம் ஆய்வு – 13 

(ஆர், சேஷாத்ரிநாதன்) 

ஹனுமான் சுக்ரீவன் உரையாடல் 

இராம இலக்ஷ்மணர்கள் இருவரையும் பார்த்துப் பயந்த சுக்ரீவன் ஹனுமனிடம் கூறுகிறான். “ஏ! ஹனுமனே! வருகின்ற இந்த இரண்டு மனிதர்களும் வலிமைக்கும் அழகிய வடிவத்திற்கும் இருப்பிடமாகக் காணப்படுகின்றனர். நீ ஒரு பிரம்மச்சாரியாக வடிவெடுத்து அங்கு சென்று கவனி. அவர்கள் யார் என்று அறிந்து அங்கிருந்தே சைகை  செய்து எனக்கு அறிவிப்பாயாக.. இதையே வால்மீகியும் கூறுகிறார். 

इङ्गितानाम् प्रकारैः च रूपव्या भाषणेन च

लक्षयस्व तयोः भावम्

शुद्ध आत्मानौ यदि एतौ जानीहि त्वम् प्लवंगम |

व्याभाषितैः वा रूपैः वा विज्ञेया दुष्टता अनयोः || ४-२-२७ 

“உனது சைகையை வைத்து அவர்கள் யான் என்று நான் புரிந்து கொள்வேன். வாலி இதுவரை பலரை என்னைக் கொல்ல அனுப்ப்பியுள்ளான். அவர்களை நான் கொன்றுவிட்டேன். அதனால் இவர்கள் இருவரையும் இங்கு அனுப்பியுள்ளான் என்ற சந்தகம் வருகிறது. வஞ்சக எண்ணம் கொண்ட வாலியால் அனுப்பப்பட்டவர்களாக இருந்தால் இவர்களும் வஞ்சகர்களே. என்னைக் கொல்ல வந்திருப்பார் என சந்தேகிக்கிறேன்.நீ அவர்களிடம் பேச்சுக் கொடுத்து அவர்கள் வந்த நோக்கத்தை அறிந்து கொள். நீ பிராமண வேடத்தில் இருப்பதால் உன்னிடம் எதையும் மறைக்க மாட்டார்கள். அவர்கள் இருவரும் வைத்திருக்கும் வில்லைப் பார்த்தால் அவர்கள் பெரிய வீரர்களாக இருப்பர் என நினைக்கிறேன். அவர்கள் வஞ்சக எண்ணம் கொண்ட வாலியால் அனுப்பபட்டவர்களாக இருந்தால் உடனே நான் இந்த மலையை விட்டு ஓடிவிடுகிறேன்”. என்றான்.

 हनुमान ! देखना तो जाकर, जो पुरुष इधर को आते हैं ।

दोनों ही तपसी तेजस्वी, मुझे नरसिंह समान सुहाते हैं ।

मातंग शाप बस बालि भ्रात, यद्यपि न यहाँ आ सकता है ।

पर मैं जब तक दुनियाँ में हूँ, वह चैन नहीं पा सकता है ।

सम्भव है उसके गुप्त दूत, मेरा यों भेद लगाते हों।

छल से, बल से या कौशल से, वध करने मुझको आते हों ।

इसलिये प्रथम चतुराई से, सब पता ठिकाना लेना तुम ।

फिर हो मेरा सन्देह सही, तो मुझे इशारा देना तुम।

(Ramayana mahanatak by  Ramesh Chandra ranadhir)

இங்கு துளசிதாசர் ஹனுமன் உடனே அந்தணர் வடிவம் கொண்டு இராமனிடம் சென்றான் என்று சொல்லிவிட்டார். 

बिप्र रूप धरि कपि तहँ गयऊ। माथ नाइ पूछत अस भयऊ॥ 

அந்தணர் வடிவம் கொண்டு ஹனுமன் இராமன் அருகில் நெருங்கினார். ஸ்ரீ இராமனின் தெய்வீக அழகைக் கண்டு பரவசம் ஆனார். இராமன் கால்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து எழுந்து வினவலுற்றார்.

இங்கு ஒரு கேள்வி . அந்தணர் வேடத்தில் இருக்கும் ஹனுமன் இப்படி க்ஷத்ரியர்கள் காலில் விழுந்து வாங்கலாமா? இங்கு ஹனுமன் இளம் பிராமண மாணவன் வேடத்தில் உள்ளான். இராம இலக்ஷ்மணர்கள் மரவுரி தரித்து துறவி உடையில் உள்ளனர். மேலும் அவர்கள் வயதில் பெரியவர்கள். அவர்களிடம் ஒரு தெய்வீகத் தன்மை தெரித்தது. அதனால் அவர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டியது ஹனுமனின் கடமை ஆகிற்று. இது தவிர இங்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று இராமனும் இலக்ஷ்மணனும் முன்பின் தெரியாத அன்னியர்கள். அவர்களிடம் முதன்முதலில் பேசும்போது அவர்களுக்கு தனது மீது நல்ள அபிப்ராயம் ஏற்படவேண்டும் என்று விரும்பினார், அது எப்படி சாத்தியம்? அவர்களை விழுந்து வணங்கி பவ்யமாக பேசுவதன் மூலம் ஹனுமனுடன் பேசுவது ஒரு ஆனந்தத்தை ஏற்படுத்துகிறது என்ற எண்ணம் அவர்கள் மனதில் வரவேண்டும்.. அப்படி இல்லை என்றால் அவர்கள் இருவரும் ஹனுமனிடம் பேசாது சென்று விடுவர். சுக்ரீவன் எந்த நோக்கத்திற்காக ஹனுமனை அனுப்பினானோ அந்த நோக்கம் நிறைவேறாமல் போய்விடும்.

 மற்றொன்று ஹனுமன் தனது வானர சரீரத்தை ஆடைகளுக்குள் மறைத்து இளம் பிராம்மண வேடத்தில் வந்துள்ளான். அதனால் ஹனுமன் அவர்களின் கண்களை நேராகப் பார்க்கவிரும்பால் அவர்களின் பாதங்களைப் பணிந்து வணங்கிக் கொண்டிருந்தான். ஒருக்கால் அவர்கள் தனது வேடத்தைக் கண்டுபிடித்துவிட்டால் தன்னைப் பற்றி தவறாக எண்ணக்கூடும் என்ற பயத்தில் அவ்வாறு செய்தான் என்று சொள்ளப்படுகிராது. 

அடுத்த அடியிலேயே ஹனுமன் அவர்களைப் பார்த்துக் கேட்கிறார்

 की तुम्ह तीनि देव महँ कोऊ। नर नारायन की तुम्ह दोऊ॥

की तुम्ह अखिल भुवन पति लीन्ह मनुज अवतार॥1

जग कारन तारन भव भंजन धरनी भार।

की तुम्ह अखिल भुवन पति लीन्ह मनुज अवतार 

(இதற்கு உரையாசிரியர்கள் சொல்வதாவது . ஹனுமன் அவர்களை பிரம்மா, விஷ்ணு, சிவன், நர நாராயணன் இவர்கள் ரூபத்தில் கண்டுகளித்ததால் அவர்களை காலில் விழுந்து வணங்கினான் 

ஆத்யாத்ம இராமாயணத்தில் இந்தப் பகுதி எவ்வாறு சொல்லப்பட்டுள்ளது? 

युवां त्रैलोक्यकर्ताराविति भाति मनो मम ।

युवां प्रधानपुरुषौ जगद्धेतू जगन्मयौ ॥ १३॥

मायया मानुषाकारौ चरन्ताविव लीलया ।

भूभारहरणार्थाय भक्तानां पालनाय च ॥ १४॥

अवतीर्णाविह परौ चरन्तौ क्षत्रियाकृती ।

जगत्स्थितिलयौ सर्गं लीलया कर्तुमुद्यतौ ॥ १५॥

स्वतन्त्रौ प्रेरकौ सर्वहृदयस्थाविहेश्वरौ ।

नरनारायणौ लोके चरन्ताविति मे मतिः ॥ १६॥ 

“ஓ புருஷ ஸ்ரேஷ்டர்களே!! நீங்கள்‌ விரர்களென்று நிதானிக்‌கக்கூடியவர்கள்‌, சூரியனைப்போல்‌ பிரகாசத்தால்  திசைகள்‌ எட்டும்‌ பிசகாசிக்கச்‌ செய்பவர்கள்‌, நீங்கள்‌ மூவுலகங்களையும்‌ சிருஷ்டிப்பவர்சகளென்று நான்‌ நினைக்கிறேன்‌, நீங்கள்‌ முக்கியபுருஷர்கள்‌, உலகுக்குக்‌ காரணமாகியவர்கள்‌. மாயையால்‌ மானிட வடிவம்‌ எடுத்து‌. விளையாட்டாகச்‌ சஞ்சாரம்‌ செய்பவர்கள்‌ போன்றவர்களாகிறீர்கள்.  பூபாரத்தை யொழிப்பதற்கும்‌, பக்தர்களைக்‌ காப்பதற்கும்‌ ௮வதாரம்‌ செய்த பசம புருஷர்கள்‌ போலக்‌ காணப்படுகிறிர்கள்‌, நீங்‌கள்‌ க்ஷத்‌திரிய வடிவமூடையவர்கள்‌, உலகத்‌தின்‌ ஸிருவ்டி , ஸ்திதி, சம்ஹாரம்‌ இவைகளை லீலையால்‌ செய்ய எத்தனமுடையவர்கள்‌, ஸ்வதந்திரர்கள்‌ எல்லோசையும்‌ பிரேணை செய்பவர்கள்‌, எல்லோருடைய இருதயத்திலிருக்கும்‌ ஈஸ்வரனைப்‌ போன்றவர்கள்‌, உலகத்‌தில்‌ சஞ்சரிக்கும்‌ நர நாராயணர்களென்றே நான்‌ உங்களை ஊகிக்கிறேன்., நீங்கள்‌ யார்‌ என்று எனக்கருளவேண்டும்‌’” என்று கூறினான் 

அது சரி எல்லோரும் இராமனும் இலக்ஷ்மணனும்  நர நாராயணர்களா என்று கேட்கின்றனரே? அந்த நர நாராயணர்கள் யார்? அவர்களின்  வரலாறு என்ன? 

***

ஹம்பியில் உள்ள ஊசி துவார கேமரா அமைப்புள்ள விருபாக்ஷர் ஆலய அதிசயம்! (Post No.15,679)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,679

Date uploaded in London – 1 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

24-4-26 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை! 

ஹம்பியில் உள்ள ஊசி துவார கேமரா அமைப்புள்ள விருபாக்ஷர் ஆலய அதிசயம்! 

ச. நாகராஜன்

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹம்பியில் உள்ள விருபாக்ஷர் ஆலயம் ஆன்மீகத்தோடு அதிநவீன அறிவியல் கோட்பாட்டையும் கலந்து பக்தர்களை ஆச்சரியப்பட வைக்கிறது.

 இங்கு ஒரு ஊசி துவார கேமரா அமைப்பு உள்ளது. இது சற்று இருளாக இருக்கும் எதிர்பக்கத்தில் கோவிலின் தலைகீழ் சித்திரத்தைக் காண்பிக்கிறது. 

இந்தக் கட்டிடக் கலை மாண்பானது இயற்பியல் பற்றியும் ஒளி பற்றியும் அந்தக் காலத்திலேயே நமது சிற்பிகள் நன்கு அறிந்திருந்தனர் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது! 

விஜயநகர சாம்ராஜ்யத்தின் போது 600 ஆண்டுகளுக்கு முன்னர் விரிவாக்கப்பட்ட சிவாலயமாகும் இது . 

ஊசி துவார கேமரா அமைப்பு என்றால் என்ன?

கோவில் சுவரில் ஓரிடத்தில் ஒரு சிறிய துவாரம் உள்ளது. இயற்பியல் தத்துவத்தின் படி ஒரு சிறிய துவாரத்தின் வழியே ஒளி ஊடுருவிச் செல்லும் போது அது தலைகீழான பிம்பத்தை அதற்கு எதிர்ப்புறத்தில் ஒரு கேமரா தருவதைப் போலத் தருகிறது.

இங்கு வரும் பக்தர்களும் யாத்ரீகர்களும் இந்த துவாரத்தின் வழியே தலைகீழ் பிம்பத்தை எதிர்புறத்தில் இருட்டாக உள்ள இடத்தில் பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள்.   

 இந்த ஒளியியல் நிகழ்வு (Optical Phenomenon) தற்செயலாக ஏற்பட்ட ஒன்று அல்ல. இயற்பியல் அறிவும் ஒளியியல் அறிவும் நன்கு அறிந்தவர்களே இதை அமைத்திருக்கிறார்கள் என்பது தெளிவு.

ஊசித்துவாரம் உள்ள இடம், அது காட்ட வேண்டிய பிம்பத்தின் உயரம் ஆகிய அனைத்துமே மிக மிக முக்கியமானவை.

துளையின் அளவு தலைகீழான ஒரு பிம்பத்தைத் துல்லியமாகக் காட்டவேண்டுமென்றால் அது நூறில் ஒரு பங்கு தூரத்தில் இருக்க வேண்டும்.

அப்போது தான் இந்த தலைகீழ் பிம்பம் எதிர்ப்புறத்தில் உருவாகும்.

 விருபாக்ஷர் ஆலயம் யுனெஸ்கோவின் பண்பாட்டு காப்பகங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. இதனுடைய மூல அமைப்பு ஏழாம் நூற்றாண்டில் தோன்றி இருக்கக் கூடும் என்று வரலாற்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

சாளுக்கியர், ஹொய்சாளர், விஜயநகர அரசர்கள் இங்கு வழிபட்டு இதை அமைத்து அபிவிருத்தி செய்து வந்துள்ளனர்.

இங்குள்ள ஆலய அமைப்பு வியக்க வைக்கும் ஒன்று. கிழக்கு திசையில் ஒன்பது நிலை கோபுரத்தை இந்த ஆலயம் கொண்டுள்ளது. கோபுரத்தின் உயரம் 50 மீட்டர். (164 அடி)

கிருஷ்ணதேவராயர் இந்தக் கோவிலுக்கு அடிக்கடி வருவது வழக்கம்.

இதை அவரே விரிவாக்கினார் என்பது குறிப்பிடத்தகுந்தது. 

இந்தக் கோவிலில் உள்ள பல கணித அதிசயங்கள் கணித நிபுணர்களை வியக்க வைப்பதோடு சாமானியர்களை வெகுவாக ஈர்க்கிறது. முக்கோண வடிவில் உள்ள கோவிலின் அமைப்பு திருப்பித் திருப்பி இதே வடிவ அமைப்பை மேல்நோக்கி அமைத்திருப்பது இவர்களின் அதிநுட்ப கணித அறிவைக் காட்டுகிறது.

 இப்படி வியக்க வைக்கும் அறிவியல் அமைப்பிலான பல கோவில்கள் கர்நாடக மாநிலத்தில் அமைக்கப்பட்டிருப்பதை உலகத்தினர் இன்னும் முழுதுமாக அறியவில்லை என்பது வேதனைக்குரிய விஷயம் தான்!

***