ரிக் வேதத்தில் தீர்கதமஸ் புதிர்! அறிஞர்கள் திணறல்! (Post No.4452)

Written by London Swaminathan 

 

Date: 2 DECEMBER 2017 

 

Time uploaded in London-  13-38

 

 

Post No. 4452

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

ரிக்வேதம் எவ்வளவு புதிர்கள் நிறைந்த து; யாருக்கும் எட்டாத கனி; எல்லோரையும் திணறடிக்கும் விடுகதை; சங்கேத மொழியில் விளையாடும் புலவர்களின் சொர்கம் — என்பதை முதல் மண்டலத்திலுள்ள 164-ஆம் எண் துதியைப் (RV 1-164) படித்தால் போதும். இதை நமக்குக் கண்டுபிடித்துக் கொடுத்தவர் தீர்கதமஸ் என்னும் முனிவர். அவர் அந்தகர்; அதனால் அவர் பெயர் ‘நீண்ட இருள்’! அவர் மமதா என்ற பெண்மணிக்குப் பிறந்தவர் என்பதால் தீர்கதமஸ் மாமதேயா என்பர். அவருடைய மகன் கக்ஷிவான் அவரும் கவிஞர். தீர்கதமஸ் பற்றிப் பல சுவையான கதைகள் உண்டு; இவரை ஆற்றில் தூக்கிப் போட்டதாகவும் பின்னர் வேறு ஒருவர் காப்பாற்றியதாகவும் சொல்லுவர். நூறு ஆண்டுகள் வாழ்ந்த  வர் என்று வேதம் விளம்புகிறது.

 

இவர் பற்றிய சுவையான கதைகளைக் காண்பதற்கு முன்னர், இவர் போட்ட புதிர் என்ன என்பதைக் காண்போம்.

 

  1. இவர் சொன்ன கவிதைதான் ரிக் வேதத்தில் மிக நீண்ட கவிதை; 52 மந்திரங்கள் (கண்ணிகள்) கொண்டது

2.இவர் பெயரே புதிரானது– நீண்ட இருள்; உலகப் புகழ் பெற்ற கிரேக்க அந்தகக் கவி ஹோமருக்கும் முன்னால் புகழ்பெற்ற அந்தகக் கவிஞர் இவர். பெரும்பாலான புலவர்கள் தந்தையின் பெயரை இணைத்துக் கொள்வர். ஆனால் இவரோ தாயின் பெயரை இணைத்துப் பெண்ணினத்துக்குப் புகழ் சேர்த்தவர். இவர் தனக்கு முன்னால் வாழ்ந்த புரா ண புருஷர்களைப் பற்றிக் கதைப்பதால் இவரை பிற்காலத்தவர் என்றும் அறிவோம்

  1. இவர் எண்களுடன் விளையாடும் விளையாட்டு– அதாவது கவிதையில் எண்களைப் பயன்படுத்தும் முறை – நம் நாட்டு வேத பாஷ்யக்காரர் சாயனரையும், வெளி நாட்டு போலி சாயனர்களையும் திணறடிக்கச் செய்கிறது. வெள்ளைத்தோல் போலி சாயனர்கள் ஏழு என்ற எண்ணுக்குச் சொல்லும் பொருளைப் பார்த்தால் அவர்கள் குழப்பவாதிகள், பாஷ்யக்காரர் கள் அல்ல; உரைகாரர் கள் இல்லை என்பதை உணர்வோம்.

 

4.திருமூலர், சிவவாக்கியர், திருமழிசை ஆழ்வார் போன்றோர் எண்களை சகட்டு மேனிக்குப் பயன்படுத்தி பாடல்களுக்குப் பொருள் விளங்காமற் அல்லது எளிதில் பொருள் சொல்ல முடியாமற் செய்தது எல்லாம் ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்குள் நடந்தது. ஆனால் தீர்கதமஸோ இவர்களுக்கு எல்லாம் 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து எண்க            ளை  பாடலில் பயன்படுத்தினார் என்றால் பொருள் விளங்குவது கடினமே!

 

  1. தீர்க தமஸ் ஏழு என்ற எண்ணைப் பல இடங்களில் பயன்படுத்துகையில் அது ஏழிசையா? வாரத்தில் 7 நாட்களா, சூரியனின் 7 குதிரைகளா (VIBGYOR), ‘செவென் சிஸ்டர்ஸ்’ seven sisters என்று அழைக்கப்படும் பறவை வகைகளா என்று வியந்து ஒவ்வொருவரும் ஒரு விதமாகப் பொருள் கற்பிப்பர்.
  2. இவர் மூன்று என்னும் போதும் ஆறு என்னும் போதும் பருவ காலம் என ஆண்டை (வருடத்தை) வெவ்வேறு விதமாகப் பிரிப்பர் சாயனர்.

 

  1. தீர்கதமஸ் உலகப் புகழ்பெற்றதற்கு இந்த மந்திரத்தில் வரும் “ஏகம்சத் விப்ராஹா பஹுதா வதந்தி” என்ற வரிகளே காரணம்; அதாவது வேத காலரிஷிகளு கே தெரியும்– பல்வேறு கடவுள் பெயர் சொன்னாலும் அவை எல்லாம் ஒரே பரம்பொருளைத்தான் குறிக்கும் என்று!

 

இதன் பொருள் “உண்மை ஒன்றே; அறிஞர்கள் அதைப் பலவாறாகப் பகர்வர்”.

 

 

  1. தீர்கதமஸ் உலகப் புகழ்பெற்றதற்கு மற்றொரு காரணம், இவர் கதையை பைபிள் திருடியயதாகும். பைபிளின் முதல் அத்தியாயத்திலேயே ADAM AND EVE ஆடம் அண்ட் ஈவ் கதை வருகிறது. ஆடம்=ஆத்/ட்மா; ஈவ்= ஜீவ்+ ஆத்மா இதை ஆடம் ADAM ஈவ் EVE என்று சொல்லிவிட்டனர். ஒரு பறவை பழத்தை உண்டது மற்றொன்று பழம் சாப்பிடவில்லை என்று ஒரே மரத்தில் உள்ள இரண்டு பறவைகள் பற்றிப் பாடியுள்ளார். இதை சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்னர் காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994) தனது உபந்யாசத்தில் விளக்கியுள்ளார் (பைபிளில் சம்ஸ்கிருதம் என்ற எனது கட்டுரையிலும் விளக்கியுள்ளேன்)

  1. தீர்கதமஸின் 52 மந்திரங்கள் அடங்கிய இந்தத் துதியைப் படிப்போர் வியப்பர்; வேதம் என்பதை வெள்ளைக்கார ‘தோழான், துருத்தி’ எல்லோரும் “தத்தக்கா புத்தக்கா இரண்டு காலு, தடுக்கி விழுந்தா நாலு காலு” என்று மொழி பெயர்ப்பதால் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

உமாபத சென் என்பவர் இந்தத் துதியில் சப்தரிஷி மண்டலம், துருவ நட்சத்திரம், சூரியனின் பயணம், பூமியின் சுழற்சி, விஷ்ணுவின் மூன்றடி முதலியன சொல்லப்படுகிறது என்பார்.

12.சரஸ்வதி என்ற சொல்லைக்கூட சூரியன் என்று மொழிபெயர்க்கின்றனர் ஒரு மந்திரத்தில்.

 

13.மூன்று, ஐந்து, ஏழு, ஆறு போன்ற எண்கள் எல்லாவற்றையும் வெவ்வேறு பிரிவு பருவங்களாக மொழிபெயர்த்துள்ளனர் “அறிஞர்கள்”.

 

14.சுபர்ண என்ற சொல்லுக்கு சரியாக அர்த்தம் காண முடியாத லுட்விக் இதை இடை செருகல் என்று சொல்லி தப்பித்துக்கொள்கிறார்.

 

15.ஏழு என்பதற்கு சூரியனின் ஏழு கிரணங்கள், ஏழு பருவங்கள்,  ஏழு சஹோதரிகள் என்பதை ஏழு நதிகள் அல்லது  ஏழு பசுக்கள், ஏழு இசை, ஏழு பறவைகள் என்றும் அறிஞர்கள் மொழிபெயர்த்துள்ளனர்

 

16.காயத்ரி முதலான 7 யாப்பிலக்கண அணிகளும் பேசப்பட்டுள்ளன.

கிரிப்பித், வில்சன், லுட்விக், சாயணர், ஹில்ப்ராண்ட், மாக்ஸ் முல்லர் ஆகியோர் ஆளுக்கு ஒரு கருத்து சொல்லுவதால் கடைசியாக  வந்த வேத மந்திரம் கூட “அறிஞர்களைத்’ திணறவைக்கும் என்பதை அறியலாம். இதற்கு 500 ஆண்டுகளுக்கு முந்தைய மந்திரங்களும் ரிக் வேதத்தில் உள.

 

17).1 முதல் 10 வரையுள்ள எண்களை வைத்து விளையாடுகிறார் தீர்கதமஸ்! அனைவரும் படித்து விடுகதைக்கு வி டைட காண்பது சுவையாக இருக்கும்.

 

 

18.இதில் வானியல், வானிலையியல், பறவையியல், கணிதம், சமயம், சங்கேத மொழி (coded language) , காலக் கணக்கீடு, தத்துவம் என்று பல விஷயங்கள் பிரஸ்தாபிக்கப்படுகின்றன.

ரிக் வேதம் 1-164

ஒரு சில மந்திரங்களைக் கொடுத்துவிட்டு இரண்டாம் பகுதியில் தீர்க தமஸ் பற்றிய சுவையான கதை சொல்லுகிறேன்:-

 

“தெரியாமல்தான் கேட்கிறேன் ஓ முனிவர்களே! தெரிந்தவர்கள்தான் சொல்லுங்களேன்!

அறியாமையால் வினவுகிறேன்; அறிந்துகொள்வதற்காகத்தான்!

பிறவாத அந்த ஒன்று எது? (பிறவா யாக்கைப் பெரியோன் எவன்)

இந்த உலகத்தின் ஆறு பிரிவுகளைத் தாங்கி நிறுத்துகிறதே, அந்த ஒன்று!

1-164-6

 

(இங்கு ஆறு பிரிவு என்பதற்குப் பல வியாக்கியானங்கள் உண்டு)

 

“பொருள் விளங்காமல் வேதத்தின் துதியைப் பாடுவோரே! அதை வைத்து என்ன செய்வீர்– தேவர்கள் உறையும் பரலோக சாம்ராஜ்யத்தில் உள்ளவனை (அறியவில்லையே)

அவனை உணர்ந்தோரே அறிஞர்கள்/பூரணம் நிறைந்தோர்”

“இரண்டு பறவைகள் நண்பர்களாக ஒரே மரத்தில் அடைக்கலம் புகுந்தன. ஒரு பறவை பழங்களைத் தின்றன. மற்றொ          ன்று சாப்பிடவில்லை. 164-20

 

(பரமாத்மா- ஜீவாத்/ட்மா= ஆடம் – ஈவ் )

 

“அவர்கள் இந்திரன் மித்திரன், வருணன், அக்னி என்று அழைக்கின்றனர்; இறக்கைகள் உடைய ‘கர்த்மன்’ என்பர்.

ஒரே உண்மைப்பொருளை முனிவர்கள் அக்னி என்றும் யமன் என்றும் மாதரிஸ்வான் என்றும் அழைக்கின்றனர்.

(கடவுள் ஒருவரே)” 164-46

(இன்னும் ஒரு புதிர்! இந்திரன் மித்ரன், வருணன் எல்லாம் தெரியும் ; இவர் சொல்லும் கருத்மான் யார் என்பதாகும்.

 

“கடவுளர், யாகம் மூலம் எல்லாவற்றையும் அடைந்தனர். பழமைச் சிறப்புடைய சாத்யர்கள் வசிக்கும் வானமண்டலத்துக்கு — சுவர்கத்துக்கு — இந்த தேவர்கள் சென்றனர்.” 164-50

 

(சாத்யர்கள் என்பதை சிறு கடவுள்கள் என்று 2000 ஆண்டுக்கு முந்தைய அமரகோசம் சொல்லும். சாயனர் காலத்தில் இச் சொல்லுக்குப் பொருள் விளங்காமல் போய்விட்டதென்று வில்சன் விமர்சனம் செய்கிறார்.

 

“செல்வம் தரும், புதையல் அளிக்கும், நற்பலன் தரும் சரஸ்வதியைக் கொண்டாடுவோம்”. 164-49

 

“வாக் (பேச்சு) என்பதை, விஷயம் அறிந்த பிராமணர்கள் நான்கு வகையாகப் பிரிப்பர். மூன்று ரஹசியமானவை; மனிதர்கள் கதைப்பதோ நாலாம் வகை”. 164-45

 

 

(இதில் மூன்று என்பதை மூன்று வேதம் என்று சிலரும் நாலு வகைப் பேச்சுகளில் மூன்று என்றும் உரை அளிப்பர். நாலு வகைப் பேச்சு: பரா, பஸ்யந்தி, மத்யமா, வைகரி.

 

சரஸ்வதி என்ற சொல்லைக்கூட சூரியன் என்று மொழி பெயர்க்கின்றனர் ஒரு மந்திரத்தில்.

 

மூன்று, ஐந்து, ஏழு, ஆறு போன்ற எண்கள் எல்லாவற்றையும் வெவ்வேறு பிரிவு பருவங்களாக மொழிபெயர்த்துள்ளனர் “அறிஞர்கள்”.

 

சுபர்ண என்ற சொல்லுக்கு சரியாக அர்த்தம் காண முடியாத லுட்விக் இதை இடைச்செருகல் என்று சொல்லி தப்பித்துக்கொள்கிறார்.

ஏழு என்பதற்கு சூரியனின் ஏழு கிரணங்கள், ஏழு பருவங்கள் என்றும்,  ஏழு சஹோதரிகள் என்பதை ஏழு நதிகள் அல்லது  ஏழு பசுக்கள், ஏழு இசை, ஏழு பறவைகள் என்றும் அறிஞர்கள் மொழி பெயர்த்துள்ளனர்

 

காயத்ரி முதலான 7  யாப்பிலக்கண அணிகளும் பேசப்பட்டுள்ளன.

கிரிப்பித், வில்சன், லுட்விக், சாயணர், ஹில்ப்ராண்ட், மாக்ஸ் முல்லர் ஆகியோர் ஆளுக்கு ஒரு கருத்து சொல்லுவதால் கடைசியாக வந்த வேத மந்திரம் கூட “அறிஞர்களைத்’ திணறவைக்கும் என்பதை அறியலாம். இதற்கு 500 ஆண்டுகளுக்கு முந்தைய மந்திரங்களும் ரிக் வேதத்தில் உள.

 

1 முதல் 10 வரையுள்ள எண்களை வைத்து விளையாடுகிறார் தீர்கதமஸ்! அனைவரும் படித்து விடுகதைக்கு வி டை காண்பது சுவையாக இருக்கும்.

தொடரும்……………..

 

—-சுபம், சுபம்—-

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: