
Written by London Swaminathan
Date: 6 DECEMBER 2017
Time uploaded in London- 11–04 am
Post No. 4464
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

வேத கால இலக்கியங்களில் இருந்து முனிவர்களின் ஆயுள் பற்றி நாம் சில சுவையான விஷயங்களை அறிகிறோம்.
பொதுவாக மனிதனுக்கு வேதம் நிர்ணயித்த ஆண்டு நூறு வயது. இதை பிராமனர்களும் தினமும் சந்தியாவந்தனம் செய்யும்போது உறுதிப்படுத்துகின்றனர்.
பரத்வாஜர் வேதம் கற்ற கதையில் அவர் நீண்டகாலம், அதாவது நாலாவது முறை பிரம்மச்சாரியாக வாழ்ந்தார் என்று வருகிறது.
மநுவும் கிருத யுகத்தில் மனிதர்கள் 400 ஆண்டுக்காலமும், திரேதா யுகத்தில் 300 ஆண்டுக்காலமும், துவாபர யுகத்தில் 200 ஆண்டுக்கலமும், கலியுகத்தில் 100 ஆண்டுகளும் வாழ்வர் என்று இயம்புகிறார் (மநு- 1-83)
இவ்வாறு சொல்லும்போது இதை அதிகபட்சம் என்று கொள்ளவேண்டும். அப்போது வாழ்ந்த எல்லோரும் இவ்வளவு ஆண்டுகள் வாழ்ந்ததாக எண்ணுவது தவறு என்பது எனது கருத்து.

பஸ்யேம சரதஸ்சதம்/ நூறாண்டுக் காலம் வாழ்க
பிராமணர்கள் தினமும் காலை, பகல், மாலை என்று மூன்று வேளைகளில் சந்தியாவந்தனம் செய்வர். அதில் மதிய நேரத்தில் அவர்கள் சொல்லும் மந்திரம் அற்புதமானது:-
பஸ்யேம சரதஸ் சதம்
ஜீவேம சரதஸ் சதம்
நந்தாம சரதஸ் சதம்
மோதாம சரதஸ் சதம்
பவாம சரதஸ் சதம்
ஸ்ருணவாம சரதஸ் சதம்
ப்ரப்ரவாம சரதஸ் சதம்
அஜீதாஸ்யாம சரதஸ் சதம்
பொருள்
சூரிய தேவனை நூறாண்டுக் காலம் காண்போமாக
(அவ்வாறே) நூறாண்டுக் காலம் வாழ்வோமாக
நூறாண்டுக் காலம் உற்றார் உறவினருன் கூடிக்குலவுவோமாக
நூறாண்டுக் காலம் மகிழ்வோமாக
நூறாண்டுக் காலம் புகழுடன் விளங்குவோமாக
நூறாண்டுக் காலம் இனியதைக் கேட்போமாக
நூறாண்டுக் காலம் இனியதைப் பேசுவோமாக
நூறாண்டுக் காலம் தீமைகளால் வெல்லப்படாமல் வாழ்வோமாக

Picture of Trailinga Swami of Varanasi
பெரியவர்களை வணங்கும்போது அவர்கள் ‘தீர்காயுஸ்மான் பவ:’ என்று ஆசீர்வதிப்பர். இதன் பொருள் ‘நீ நீண்ட ஆயுளுடன் இருப்பாயாக’; அப்படிச் சொல்லும்போதே நோய் நொடியில்லாமல் சகல சௌபாக்கியங்களுடன் வாழ்வாயாக என்பதே அர்த்தம்.
வேத கால இந்துக்கள் எப்போது பார்த்தாலும் இதைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தனர்.
தீர்க தமஸ் என்ற முனிவர் நூறு ஆண்டுகள் வாழ்ந்ததாக ரிக்வேதமும் சாங்காயன ஆரண்யகமும் மொழியும்.
90 முதல் 100 வயது வரை உள்ள காலத்தை அதர்வவேதமும் பஞ்சவிம்ச பிராம ணமும் தசமி என்ற சொல்லால் குறித்தன. ரிக்வேதம் இதை ‘தசம யுக’ என்று சொல்லிற்று.
நூறாண்டுக்காலம் வாழ்வோமாக என்பது ரிக் வேதத்திலேயே கணப்படுவதால் (1-89-9; 10-18-10) இவர்கள் ஆதிகாலத்திலேயே ஆரோக்கிய விஷயங்களில் மிகவும் ‘கறார்’ ஆன பேர்வழிகள் என்பதும் நாகரீகத்தின் உச்சகட்டத்தை எட்டியவர்கள் என்பதும் புலப்படும்.
தீர்கதமஸ் 100 ஆண்டு வாழ்ந்தார்
மஹீதாச ஐதரேயர் 116 ஆண்டு வாழ்ந்தார்.
இந்துக்கள் 130 ஆண்டுகள் கூட வாழ்ந்தனர் என்று ஒனெசிக்ரிடஸ் (Onesicritus) சொல்கிறார். இவர் அலெக்ஸாண்டருடன் வந்தவர். 2300 ஆண்டுகளுக்கு முன் அவர் எழுதிய புத்தகத்தில் 130 ஆண்டுகள் வாழ்ந்த இந்துக்கள் பற்றிக் குறிப்பிடுகிறார்
புத்த ஜாதகக் கதைகளும் 120 ஆண்டுகள் வாழும் விருப்பத்தைக் குறிப்பிடும்.
நமது காலத்தில் வாழ்ந்த காஞ்சி சங்கராசார்யார் 100 ஆண்டுகளும் திருக்கோவிலூர் ஞானானந்த சுவாமிகள் 150 ஆண்டுகளும் வாழ்ந்தனர்.
காசியில் வாழ்ந்த த்ரைலிங்க சுவாமிகள் (1607-1887) 280 ஆண்டுகளுக்கு உயிர்வாழ்ந்தார். இவரை ‘காசியின் நடமாடும் சிவபெருமான்’ என்று ராமகிருஷ்ண பரமஹம்சர் புகழ்வார்.
இதைக் காணும்போது உலகிலேயே அதிக காலம் வாழ்ந்த ஒருவர் இந்துதான் என்று தோன்றுகிறது
ரிக்வேதம் (10-62-2), அதர்வ வேதம் (1-22-2) முதலிய நூல்களில் ‘தீர்காயுத்வம்’ (நீண்ட ஆயுள்) என்பதைக் காணலாம்.
அதர்வ வேதத்தில் நீண்ட ஆயுளுக்கான மந்திரங்கள் தனியாகவே உள்ளன.
யாரேனும் வேத வேள்விகளைச் செய்தால் அவர்களுக்கு,
‘சர்வம் ஆயுர் இதி’ என்ற பலனை பிராமண நூல்கள் திரும்பத் திரும்ப இயம்புகின்றன. இதன் பொருள் – ‘அவர்களுக்கு பூரண ஆயுள்’ என்பதாகும்.
![]()
Picture f Gnanananda of Tirukkovilur
நீண்ட ஆயுள் பற்றிய முந்தைய கட்டுரைகள்
https://tamilandvedas.com/tag/நீரையும்/
நூறாண்டுக் காலம் நாம் காண்போமாக; நூறாண்டுக் காலம்நாம் வாழ்வோமாக. (நூறாண்டுக் காலம் வாழ்க; நோய்நொடியிலாமல் வாழ்க). 13).பஹிஸ்ஸரதி நிஸ்வாஸே விஸ்வாச: க: ப்ரவர்ததே – மஹாபாரதம். வெளியே போன மூச்சு திரும்பிவரும் என்று எப்படி நம்புவது? (போன மூச்சு …
நூறு வயதானவர்களின் | Tamil and Vedas
https://tamilandvedas.com/…/நூறு-வயதானவர்களி…
8 Sep 2016 – … மேலும் வேத மந்திரங்களில் நிறைய இடங்களில் “நூறாண்டுக் காலம் வாழ்க; நோய் நொடியில்லாமல் வாழ்க” என்ற பிரார்த்தனை வருகிறது. வேதங்களின்படி ஒருவனுடைய ஆயுள் நூறு வயதுதான். ஆயுர்வேத, சோதிட சாத்திரப்படி ஒருவனின் வயது 120 ஆகும். வாழ்க நூற்றாண்டு …
https://tamilandvedas.com/tag/பிரம்ம/
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com;. “பாகத்தில் ஒருவன் வைத்தான் பங்கயத்து இருந்த … கண்ணதாசனும் யஜூர்வேதத்திலுள்ள ‘பஸ்யேம சரதஸ் ஸதம், ஜீவேம சரதஸ் ஸதம்’ (நூறாண்டுக் காலம் வாழ்க, நோய் நொடியில்லாமல் வாழ்க………..) மந்திரம் முதல் எவ்வளவோ சம்ஸ்கிருதப் …
நீண்ட ஆயுளுக்கு வேதப் பிரார்த்தனை …
https://tamilandvedas.com/…/நீண்ட-ஆயுளுக்கு-…
12 Sep 2017 – ரிக்வேதத்துக்குப் பின்னர் வந்த யஜுர் வேதத்தில்நூறாண்டுக் காலம் வாழ்க, நோய் நொடியில்லாமல் வாழ்க, மகிழ்ச்சியுடன் வாழ்க என்று பெரிய மந்திரமே உள்ளது. (பஸ்யேம சரதஸ்சதம், ஜீவேம சரதஸ்சதம் சரதம், நந்தாம சரதஸ்சதம், மோதாம சரதஸ்சதம், ப்ரப்ரவாம சரதஸ்சதம்).
நீண்ட நாள் வாழும் பிராணி எது? யோகி …
https://tamilandvedas.com/…/நீண்ட-நாள்-வாழும…
பிராமணர்கள் தினசரி சந்தியாவந்தனத்தில் ‘பஸ்யேம சரதஸ் சதம்’ என்ற மந்திரத்தைச் சொல்லுகிறார்கள். கண்ணதாசன் இதை ஒரு சினிமாப் பாடலில் அழகாக மொழிபெயர்த்துள்ளார்: “ நூறாண்டுக் காலம் வாழ்க, நோய் நொடி இல்லாமல் வாழ்க” என்று. நிமிடத்துக்கு 15 முறை சுவாசித்தால் …
போஜனப் பிரியன் | Tamil and Vedas
https://tamilandvedas.com/tag/போஜனப்-பிரியன்/
அதை சினிமா பாட்டிலும் நூறாண்டுக் காலம் வாழ்க! நோய் நொடியில்லாமல் வாழ்க! என்று மொழிபெயர்த்துள்ளனர். சூரியனைப் பாதுகாப்பாகப் பார்க்க பிராமணச் சிறுவர்களுக்கு சிறு வயதிலேயே கற்றுத் தருவர். சூரியனை நோக்கிச் சொல்லப்படும் இந்த துதி: பஸ்யேம சரதஸ் சதம்: …
பிராமணர் தர்மம் | Tamil and Vedas
https://tamilandvedas.com/tag/பிராமணர்-தர்மம்/
… என்று சொல்லி எல்லோருக்கும் மஞ்சள் அட்சதை போட்டு மங்களம் பாடினர். (ஸ்வஸ்தி பிரஜாப்ய பரி பாலயந்தாம்………….). நூறாண்டுக் காலம் வாழ்க, நோய் நொடியில்லாமல் வாழ்க என்ற சினிமாப் பாட்டு வேத மந்திரத்தின் மொழி பெயர்ப்பு என்பதை எல்லாம் முன்னரே காtடிவிட்டேன்.
வாழ்க அந்தணர் | Tamil and Vedas
https://tamilandvedas.com/tag/வாழ்க-அந்தணர்/
14 Jan 2017 – இன்பமுடன் வாழ்க) என்று நாமும் பிரார்த்தனை செய்வோம். சைவ சமய நிகழ்ச்சிகள் அனைத்தும் “வாழ்கஅந்தணர் வானவர் ஆனினம்” (அந்தணர் முதலான எல்லாஜாதியினரும், பசு முதலான எல்லாப் பிராணிகளும்வாழ்க) … நூறாண்டுக் காலம் நோய் நொடியில்லாமல் வாழட்டும்).
பரத்வாஜர் வேதம் கற்ற கதை & தவற்றைத் …
https://tamilandvedas.com/…/பரத்வாஜர்-வேதம்-கற…
பரத்வாஜர் வேதம் கற்ற கதை & தவற்றைத் திருத்துவது எப்படி? கதை (Post No.4043). Compiled by London Swaminathan Date: 1 July 2017. Time uploaded in London-20-44. Post No. 4043. Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. வேதகால இலக்கியத்தில் நான்கு பகுதிகள் உண்டு: 1.சம்ஹிதை/துதிகள் 2
–SUBHAM–