நீண்ட ஆயுளுக்கு வேதப் பிரார்த்தனை! (Post No.4206)

Written by London Swaminathan

 

Date: 12 September 2017

 

Time uploaded in London- 17-35

 

Post No. 4206

 

Pictures are taken from various sources; thanks.

 

 

வேத கால நிஷிகள் என்ன வேண்டினர் என்று ஒரு கட்டுரையில் கண்டோம். உலகின் பழமையான நூலில் மனிதனின் ஆயுள் 100 ஆண்டு சொல்லப்பட்டிருக்கிறது. எந்த அளவுக்கு ஒரு சமுதாயம் முன்னேறியிருந்தால் இந்த அளவுக்குப் பாட முடியும் என்று சிந்திக்க வேண்டும். கி.மு 1400 முதல் கி.மு 6000 வரை தேதி குறிப்பிட்ட வேதத்தில் என்ன அற்புதமான சிந்தனை! உலகின் எந்த பழைய நூலிலும் இப்படி ஆயுள் நிர்ணயிக்கப்படவில்லை.

ரிக்வேதத்துக்குப் பின்னர் வந்த யஜுர் வேதத்தில் நூறாண்டுக் காலம் வாழ்க, நோய் நொடியில்லாமல் வாழ்க, மகிழ்ச்சியுடன் வாழ்க என்று பெரிய மந்திரமே உள்ளது.

(பஸ்யேம சரதஸ்சதம், ஜீவேம சரதஸ்சதம் சரதம், நந்தாம சரதஸ்சதம், மோதாம சரதஸ்சதம், ப்ரப்ரவாம சரதஸ்சதம்)

 

“100 சரத்காலங்களைக் காண அருள்வாயாக; எங்கள் முன்னோர்கள் வாழ்ந்ததுபோல இன்ப வாழ்வைத் தருக (2-27-10)

எங்களுக்கு நீண்ட ஆயுளைத் தா, ஓ அக்னி! 4-12-6

ஓ மருத் தேவர்களே, என்னுடைய இந்த அன்பான பாடலைக் கேள்; இந்தப் பிரார்த்தனை மூலம் நாங்கள் 100 குளிர் காலங்களைக் காண்போமாக 5-54-5

 

இந்திரா, அன்பு காட்டுக! என்னுடைய வாழ் நாட்கள் நீடிக்கட்டும் 6-47-10

 

இவ்வாறு மண்டலம் தோறும் நீண்ட ஆயுளுக்கான பிரார்த்தனைகள் இருக்கின்றன. மேலே கூறியவை சில எடுத்துக்காட்டுகளே.

நல்ல பிள்ளைகளை அருளுக!

 

“தங்கள் வம்சக் கொடி தொடர்வதற்காக மனிதர்கள் பிள்ளைகளுக்காக ஏங்குகிறார்கள்; அவர்கள் நம்பிக்கை பொய்ப்பதில்லை 1-68-4

 

செல்வம் தரும் அக்னிதேவன் செல்வத்தையும் வீரர்களையும் (வீர மகன்கள்) அளிக்கட்டும் 1-96-8

செல்வம் தருவோன் எங்களுக்கு உணவையும் பிள்ளைகளையும் அருளட்டும் 1-96-8

 

செல்வம், மிக நல்ல நல்ல, புகழ் வாய்ந்த அளவற்ற பிள்ளைகளையும் வம்ச விருத்தியையும் உதவுவாயாக 2-2-12

எங்களுக்கு ஒரு பிள்ளை பிறக்கட்டும், அவன் மூலம் வம்சம் பெருகட்டும். அக்னியே! இவ்வாறு அருள் செய்க.

 

பிருஹஸ்பதியே! நங்கள் செல்வங்களுக்கு அதிபதிகளாகட்டும்; நல்ல வம்சம் வளரட்டும் பல குதிரைகள் கிடைக்கட்டும் 4-50-6

 

இவ்வறு செல்வம், நீண்ட ஆயுள், நல்ல வம்சம் இவைகள் வேத கால ரிஷிகளின் பிரார்த்தனையில் அடக்கம்.

 

பெரும்பாலான மந்த்ரங்கள் எங்களுக்கு என்று பன்மையிலேயே (plural) இருக்கும். சில மந்திரங்களே எனக்கு என்று ஒருமையில் இருக்கும்.

 

ஆகையால் அவர்கள் கூட்டுப் பிரார்த்தனை செய்வதே வழக்கம். இது நாகரீக முன்னேற்றத்தைக் காட்டும். வேறு எந்த நூல்களிலும் 3500 ஆண்டுகளுக்கு முன் இத்தகைய பிரார்த்தனைகள் இல்லை

 

எல்லோரும் கோவணாண்டிகளாக நாகரீகமற்ற நிலையில் ஓடிச் சாடிய போது வேத கால மக்கள் பாஸிட்டிவ் எண்ணங்க ளைப்( Positive thoughts) பரப்பும் கூட்டுப் பிரார்த்தனையில் அதுவும் டெஸிமல் சிஸ்டம் தெரிந்த (100, 1000, 10,000…. என்று) கணக்குப் புலிகளாகப் பிரார்த்தித்தனர்.

 

அடுத்த கட்டுரையில் எதிரிகள் ஒழிப்பு, பாவ மன்னிப்பு, ஆபத்திலிருந்து காத்தல் ஆகிய துதிகளைக் காண்போம்.

 

மந்திரங்களின் எண்கள் முழுதும் உலகின் மிகப் பழைய நூலான ரிக்வேத மண்டல, மந்திர எண்கள் ஆகும்

ரிக்வேதத்தில் பத்து மண்டலங்கள் உண்டு. ஆயிரத்துக்கும் மேலான துதிகளும் 10,000க்கும் மேலான மந்திரங்களும் உண்டு.

TAGS: வேத துதிகள், நீண்ட ஆயுள், நல்ல பிள்ளைகள், வீர மகன்கள்

 

–SUBHAM–

Leave a comment

1 Comment

  1. chandraravikumar

     /  September 12, 2017

    The Rk, Yajus, Sama manthras were there more than 3500 years ago.In the Bhagavad Geetha krishna says that he is like the Saamam amongst the vedas. If even Krishna is around 5200 years ago ( Kali Samvatsar), that makes the vedas existant and ancient by Krishna’s time. Valmiki Ramayana says the same. And Ramayana is dated 9000 years before present, if only that, and the Veda is mentioned in the Ramayana!

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: