HINDU DHRUVA IN SHAKESPEARE! (Post No.4449)

Written by London Swaminathan 

 

Date: 1 DECEMBER 2017 

 

Time uploaded in London-  14-46

 

 

Post No. 4449

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

SHAKESPEARE, the greatest English playwright and dramatist was influenced by Hindu literature. We know from his plays that he has read lot of materials. We see Kalidasa’s Shakuntala in Miranda in his play the Tempest. We hear about Nagaratna (cobra jewel) in one of the plays. I have already listed the parallelisms in Tirukkural, the Tamil Veda and Shakespeare in several articles. Here is one more Hindu story in Shakespeare.

 

The story of the young boy DHRUVA is known to every Hindu. Dhruva has been elevated to the status of Pole Star in Hindu literature. Not only Pole star but also the seven stars circling the pole star worshiped by millions of Hindus every day three times  when they do Sandhyavandan, the water ceremony.

 

According to the Vishnu Purana, the sons of Swayambhuva Manu were Priyavrata and Uttanapada. Uttandapada had two wives, one was Suruchi who was very proud and haughty and the other was Suniti who was humble and gentle. Suniti gave birth to Dhruva. Suruchi treated him very badly while he was young. Suruchi made sure that her son Uttama succeeds to the throne. Dhruva and his mother Suniti were helpless. Dhruva wanted to pray to God to keep himself happy. He joined a group of seers (Rishis) and he went through rigid course of austerities. Indra wanted to distract him so that there wont be any competition from him for his post. At the end, he got a boon from Vishnu and became a star. A star among boys and a star in the sky. Hindus are shown Dhruva Nakshatra—known as Pole Star during wedding along with the Seven Stars, the Ursa major. He is the pivot of the planets. He became the symbol of steadfastness, determination, tenacity and resolution to the Hindus. Hindus are advised to be as constant as Dhruva.

Shakespeare says in Julius Caesar,

“But I am constant as the Northern Star, of whose true fixed and resting quality, there is no fellow in the firmament”– (Caesar)

 

Several of Hindu beliefs are in Shakespeare for which there is no other source such as Greek, Egyptian and Roman.

 

–Subham–

 

 

 

 

டார்வினை எதிர்த்த பெண்மணி! (Post No.4448)

Written by S.NAGARAJAN

 

 

Date: 1 DECEMBER 2017

 

Time uploaded in London- 6-38 am

 

 

 

Post No. 4448

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

பாக்யா 1-12-2017 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (ஏழாம் ஆண்டு 41வது) கட்டுரை

டார்வினை எதிர்த்த பெண்மணி!

ச.நாகராஜன்

“ஒருவன் உண்மையை அறிய முடியுமென்றால் அது கடவுளின் புத்தகத்திலிருந்து வருகிறதா அல்லது மனிதனிடமிருந்து வருகிறதா என்பது ஒரு பொருட்டே இல்லை – ஆண்டாய்னெட் ப்ரௌன் ப்ளாக்வெல்

பரிணாமக் கொள்கையை உலகிற்கு அளித்துப் பெரும் புகழ் பெற்ற டார்வினுக்கு 1869ஆம் ஆண்டு ஒரு புத்தகம் வந்தது. புததகத்தை எழுதியவர் ஒரு பெண்மணி. அவர் பெயர் ஆண்டாய்னெட் ப்ரௌன் ப்ளாக்வெல் ((Antoinette Brown Blackwell).

அந்தப் புத்தகத்தைப் படித்துப் பார்த்து பதில் எழுதிய டார்வின் தனது பதிலில், ‘புத்தகத்தைப் படிக்கும் போது அதில் எனது பல குறிப்புகள் காணப்படுகின்றன. இவை பொது மக்கள் அதிகம் அறியாதவை’ என்று குறிப்பிட்டிருந்தார். அந்தக் கடிதத்தில் அவர் செய்த ஒரே தவறு அதன் ஆரம்ப வார்த்தைகள் தான்! டியர் சார் என்று அந்தப் பெண்மணிக்கு எழுதிய கடிதத்தை அவர் ஆரம்பித்திருந்தார்!

அடுத்து ஆறு வருடம் கழித்து அவர் வெளியிட்ட புத்தகத்தில் அவர் டார்வினை ஒரு பிடி பிடித்திருந்தார். டார்வின் எந்தக் கொள்கைகளை முன் வைத்தாரோ அவை தவறு என்று போர்க்கொடி உயர்த்தினார். அத்துடன மட்டுமின்றி புகழ்பெற்ற விஞ்ஞானியான ஹெர்பர்ட் ஸபென்ஸரையும் துணிச்சலாக எதிர்த்துக் கருத்துக்களை வெளியிட்டார்.

தி செக்ஸஸ் த்ரூ அவுட் நேச்சர் (The Sexes throughout Nature) என்ற அவரது புத்தகம் பல கட்டுரைகளின் தொகுப்பு.

டார்வின் தனது புத்தகமான ‘தி டெஸண்ட் ஆஃப் மேன் (The Descent of Man) என்ற நூலில் பரிணாமம் பெண்ணை விட ஆணை சுபீரியராக – மிக மேலாக- ஆக்கியிருக்கிறது என்று கூறியிருந்தார்.

ஹெர்பர்ட் ஸ்பென்ஸரோ தனது நூலில் ‘சர்வைவல் ஆஃப் தி ஃபிட்டஸ்ட் – வலியது வாழும் – என்ற கொள்கையை முன் வைத்திருந்தார்.

இந்த இரண்டையும் எதிர்த்தார் ப்ளாக்வெல்.

“கலை, கவிதை, ஓவியம், சிற்பம், இசை ஆகியவற்றில் திறம்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் பற்றிய ஒரு பட்டியலை எடுத்தால் அது ஒப்பிடவே தக்கதல்ல என்று ஆகி விடும்” என்றார் டார்வின் தனது நூலில்.

ஹெர்பர்ட் ஸ்பென்ஸர் ஒரு படி மேலே போய், ‘மனித இனம் மேம்பட வேண்டுமெனில் பெண்கள் கருத்தரித்து இனவிருத்தி செய்வதை மட்டும் கொண்டிருந்தால் போதும்’ என்று கூறி இருந்தார்.

பெண்களுக்கு சம உரிமை கேட்டுப் போராடி வந்த 44 வயதே ஆன ப்ளாக்வெல்லுக்கு வந்தது கோபம்

டார்வினை நன்கு விமரிசித்து அவர் கொள்கைகள் தவறு என்று வாதித்து டார்வினை எதிர்த்த முதல் பெண்மணி என்ற பெயரைப் பெற்றார். டார்வின் கூறிய அனைத்தும் அறிவியலுக்குப் புறம்பானவை என்று ஒரே போடாகப் போட்டார் அவர்.

அமெரிக்காவில் ஓஹையோவில் அவரது சகோதரர் இறையியல் படிப்பு படித்துத் தேறியிருந்தார். அதே இறையியல் படிப்பைத் தானும் படிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டார் அவர். தொழில்துறை ரீதியில் மத பிரசாரகராக – வுமன் மினிஸ்டராக ஆக வேண்டும் என்பது அவரது ஆசை.

ஆனால் அமெரிக்காவில் அப்படி ஒரு பெண்மணியை பாதிரியாக – இறையியல் பரப்புநராக அதுவரை நியமித்ததே இல்லை. இறையியல் பிரிவில் பெண்கள் படிக்க அனுமதியே கிடையாது.

சண்டை போட ஆரம்பித்தார் ப்ளாக்வெல். அவரது தீவிரத்தைக் கண்ட நிர்வாகம் அவர் படிக்க அனுமதி அளிப்பதாக ஒப்புக் கொண்டது – ஒரு நிபந்தனையுடன். அதாவது அவரது படிப்பு முடித்த பின்னர் அவருக்கு டிகிரி – பட்டம் – வழங்கப்பட மாட்டாது என்பதே நிபந்தனை!

பெண்கள் மத போதனை செய்யும் வேலையில் ஈடுபடக் கூடாது என்பதை எதிர்த்த அவர் ரகசிய சங்கம் ஆரம்பித்து பெண்களை நன்கு பேசப் பயிற்றுவித்தார். பட்டப்படிப்பு முடிந்தவுடன் மறையியல் பரப்புநர் வேலை எங்கு கிடைக்கும் என்று அமெரிக்கா முழுவதும் சுற்ற ஆரம்பித்தார்.

இதில் அவர் பட்ட இன்னல்கள் ஏராளம். ஒரு சமயம் பனிப்புயலில் சிக்கி சுமார் ஏழரை மைல் தூரத்தை நடந்தே கடந்தார்.

1850ஆம் ஆண்டு முதல் பெண்ணுரிமை மாநாடு மசாசூசெட்ஸில் நடந்தது. அதில் பேசிய அவர் பைபிளில் பெண்கள் செய்யக்கூடாது என்று சொல்லிய அனைத்தையும தாக்கிப் பேசினார்.

1853இல் நியூயார்க்கில் முதல் அமெரிக்க பெண் பாதிரியாக -வுமன் மினிஸ்டராக அவர் ஆனார். அதே சமயம் டைனோசர் பற்றிய படிமப் பாறைகள் கிடைத்தன. அவை மனிதன் தோன்றியதாக பைபிள் கூறும் கருத்துக்களுக்கு எதிரான அறிவியல் நோக்கை முன் வைத்தது.

டார்வினும் ஹெர்பர்ட் ஸ்பென்ஸரும் ப்ளாக்வெல் அறிவியல் சம்பந்தமான கொள்கைகளை எதிர்ப்பதில் பயனில்லை என்று வலியுறுத்தினர்.

தான் ஒரு முறையான விஞ்ஞானி இல்லை என்றாலும் பெண்களுக்கு இழைக்கும் அநீதியைத் தட்டிக் கேட்க ஒரு பெரிய தகுதி தன்னிடம் இருக்கிறது என்று முழங்கிய ப்ளாக்வெல், அந்த தகுதி, ‘நான் ஒரு பெண் என்பது தான்’, என்றார்.

ஆண்கள் ஆண்களாக இருப்பதால்யே அவர்கள் ஒரு தலைப்பட்சமாக இருக்கிறார்கள் என்று கூறிய அவர், “அதனால் தான் அவர்களின் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளும் கூட ஒரு தலைப்பட்சமாக (ஆண்களுக்கு வக்காலத்து வாங்குவதாக) இருக்கிறது” என்று கூறினார்.

டார்வின் தந்த புள்ளிவிவரங்களில் ஆண் எவ்வளவு பெண் எவ்வளவு என்பது இல்லை என்று கூறிய ப்ளாக்வெல் தானே களத்தில் இறங்கினார். உயிரின வகைகளில் உள்ள இனங்களில் ஆண் தாவரம், பெண் தாவரம். ஆண் பூச்சிகள், பெண் பூச்சிகள், மீன் வகைகளில் ஆண், பெண், கடல் வாழ் உயிரினங்களில் ஆண், பெண் இனம், பறவை, மனிதர் என்று இப்படி அனைத்திலும் புள்ளிவிவரங்களைச் சேகரித்தார்.

உதாரணமாக சிங்கங்களில் ஆண் சிங்கம் உருவத்தில் பெரிதாகவும் வலிமையானதாகவும் இருந்தாலும் கூட பெண் சிங்கங்கள் தனித்துவம் மிக்க உடல் அமைப்பைக் கொண்டு இன விருத்தி செய்து தன் குட்டிகளுக்கு உணவு தருவது உட்பட்ட சிக்கலான இயக்கங்களையும் வேலைகளையும் செய்கிறது என்று அவர் சுட்டிக் காட்டினார்.

தனது ஆராய்ச்சியின் இறுதி முத்தாய்ப்பாக அவர் பரிணாமம் சுட்டிக் காட்டுவது ஆணும் பெண்ணும் சமம் என்பதையே என்று ஓங்கிய குரலில் கூறி முடித்தார்.

ப்ளாக்வெல்லை இன்றும் கூட ஒரு விஞ்ஞானியாக அறிவியல் சமூகம் அங்கீகரிக்கவில்லை. என்றாலும் கூட பெண்களின் உரிமையை ஓங்கிய குரலில் சுட்டிக் காட்டி அதற்கெனப் பாடுபட்டவராகவும், இறையியலில் பெண்களும் போதகராக வரலாம் என்பதற்கு வழி வகுத்தவராகவும், டார்வினைத் தட்டிக் கேட்ட முதல் பெண்மணியாகவும், பெண் விஞ்ஞானிகள் வளர வழி வகுத்த முதல் பெண்மணியாகவும் உலகம் இன்று போற்றுகிறது.

அறிவியல் அறிஞர் வாழ்வில் . ..

 

கிரேக்க புராணங்களில் மாஜிக் எனப்படும் மாயாஜாலத்தின் அதி தேவதையாக சித்தரிக்கப்படும் தேவதை கிர்க் (CIRCE).இந்த தேவதையைப் பற்றி ஏராளமான கதைகள் உண்டு.

மூலிகைகளின் இரகசியங்களைப் பற்றி அனைத்தும் அறிந்த தேவதை இது. யுலிஸிஸின் தோழர்களை மயங்க வைத்ததும் இது தான். தன் எதிரிகளை மிருகங்களாக மாற்றி விடுமாம் கிர்க். கையில் எப்போதும் ஒரு மந்திரக்கோலை இது வைத்திருக்கும். ஹோமரின் ஒடிஸி உள்ளிட்ட காவியங்களில் இடம் பெறும் பிரபலமான தேவதை இது.

இதைப் பற்றி விஞ்ஞானிகளில் பலர் ஆர்வம் காட்டியுள்ளனர்.அவர்களுள் குறிப்பிடத்தகுந்தவர் வில்லியம் ஜெங்ஸ் (William Jencks தோற்றம் 15-8-1927 மறைவு 3-1-2007) என்னும் அமெரிக்க உயிரியல் மற்றும் என்ஜைம் பற்றிய நிபுணராவார்.

தனது ஆய்வுகளின் மூலமாக கிர்க் பற்றிய பல கதைகளுக்கு விளக்கம் அளிக்க முடியும் என்று நம்பி அதில் அவர் தீவிரமாக முனைந்தார்.

என்ஜைம்களிள் எதிர்வினைகளைப் பற்றி ஆராய்ந்த அவர் தனது ஆய்வு ஒன்றுக்கு ‘கிர்க் எபெக்ட்’ என்றே பெயர் தந்து விட்டார்.

ஆக பிரபலமாக இன்றளவும் உலகினரால் சொல்லப்பட்டு வரும் இந்த தேவதை அறிவியலிலும் புகுந்து நிரந்தரமாகத் தன் பெயரைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

****