
Written by London Swaminathan
Date: 13 JANUARY 2018
Time uploaded in London 6-54 AM
Post No. 4613
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
WARNING: DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.
திராவிடப் பூர்வகாலக் கதைகள் என்ற புத்தகததை 1886 ஆம் ஆண்டில் நடேச சாஸ்திரி என்பவர் வெளியிட்டார். அதில் 49 கதைகளை வெளியிட்டார். தான் கேட்ட கதைகளை தனது நினைவிலுள்ளபடி எழுதுவதாக வெளியிட்டார். அதில் சில கதைகளை நானும் சிறுவயதில் எங்கள் வீட்டில் சமையல் வேலை செய்துவந்த சுப்புலெட்சுமி அம்மாள் என்பவர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அந்தக் கதைகளை எனது சொற்களில் சுருக்கமாக வடிப்பேன்.
ஒரு ஊரில் ஒரு ப்ராஹ்மணன் இருந்தான். அவன் மிகவும் வறியவன்; வறுமையின் சின்னம்; வயிறு காய்ந்தது. ஏதேதோ செய்து பார்த்தும் காசு பணம் கிடைக்கவில்லை. சரி, போ! நாம் பூர்வஜன்மத்தில் செய்த பாபம் போலும்; நம் கர்மத்தைக் காசிக்குச் சென்று தொலைப்போம் என்று புறப்பட்டான. கட்டுச் சோறு கட்டிக் கொண்டான்; வழி நடந்தான்.
பாதி தூரத்தில் களைப்பு வந்தது; கண்டான் ஒரு தோப்பை; கொண்டான் ஆனந்தம்! அருகில் குளம்; தென்றல் வீசியது. கால் கை கழுவி விட்டு உண்போம் என்று குளத்தில் இறங்கினான். ‘கால் கை கழுவாதே’ என்று ஒரு குரல். ஓஹோ, களைப்பால் வந்த அலுப்பு! என்று சொல்லிவிட்டு கால், கைகளை அலம்பிவிட்டு சாப்பிட அமர்ந்தான். மீண்டும் ஒரு குரல்; ‘சாப்பிடாதே’ என்று;
இது ஏதெடா சிவ பூஜையில் கரடி புகுந்த கதை என்று சொல்லிவிட்டுச் சாப்பிட்டான். பின்னர் காசிக்குப் புறப்பட்டான். ‘போகாதே’ என்று ஒரு சப்தம்; இப்போது அவனுக்குக் கோபம் வந்தது. ஏய், யார் நீ? எங்கிருந்து குரல் கொடுக்கிறாய்? என்று கேட்டான்.
ஒரு பிரம்ம ராக்ஷஸன் அவன் முன் குதித்தான்; தன் பூர்வ ஜன்மக் கதைதனை உரைத்தான்.

பிரம்ம ராக்ஷஸ் என்றால் ‘ப்ராஹ்மணப் பேய்’ என்று பொருள்; தவறு செய்யும் ப்ராஹ்மணர்கள் அகால மரணம் அடைந்தால் பேய்—பிரம்ம ராக்ஷஸன் ஆகிவிடுவர்.
“நான் பூர்வ ஜன்மத்தில் நல்ல ஸங்கீத ஞானம் உள்ளவன்– என் இசை ஞானத்தை எவருக்கும் சொல்லிக் கொடுக்காமல் ஒளித்தேன்; மறைத்தேன்; ஆகையால்தான் இந்த கதி என்று சொல்லிவிட்டு எனக்கு ஒரு உபகாரம் செய்யேன் என்றது.
இந்த காட்டுக்கு வெளியே உள்ள ஒரு கோவிலில் ஒரு நாகஸ்வர வித்வான் இருக்கிறான். அவன் காலை, மதியம், மாலையில் அபஸ்வரத்துடன் வாசிக்கும் நாகஸ்வர இசை என் காதுகளில் ஈயத்தைப் பாய்ச்சியது போல இருக்கிறது; ஆகையால் என்னை இந்த நாகஸ்வர த்வனி கேட்காத தூரத்தில் கொண்டு போய் விடு; அது எனக்கு நீ செய்யும் பெரிய உதவி ஆகும் என்று பேய் சொன்னது.
அந்தப் ப்ராஹ்மணப் பேய் மீது கருணை கொண்ட இந்த ஏழைப் ப்ராஹ்மணன், அதற்கென்ன பேஷாய் உதவி செய்கிறேன். நீ எனக்கு எனக்கு என்ன பிரத்யுபகாரம் (பதில் உதவி) செய்வாய் என்று கேட்டான்.
அது சொன்னது: நீ காசிக்குப் போ. உன் கர்மத்தைத் தொலைத்துவிட்டு வா; அதற்குள் நான் மைசூர் மஹாராஜவின் மகளைப் போய் பிடித்துக் கொள்கிறேன் யார் வந்து பேய் ஓட்டினாலும் நான் அகல மாட்டேன். நீ வந்தவுடன் ஓடி விடுகிறேன்; மைசூர் மஹாராஜா உனக்கு பரிசு மழை பொழிவார் என்றது.
அந்தப் ப்ராஹ்மணனும் நல்ல ஐடியா (IDEA) என்றான். ஆனால் ஒரு கண்டிஷன் (CONDITION) என்றது பிராஹ்மணப் பேய்.
அது என்ன நிபந்தனையோ என்று ப்ராஹ்மணன் வினவ, பேய் சொன்னது; நீ ஒரு முறை என்னை இப்படி விரட்டலாம் இரண்டாவது முறை எங்காவது என்னை விரட்ட வந்தால் உன் கதி ‘சகதி’ என்று எச்சரித்தது.
பிராஹ்மணன் காசிக்குச் சென்றுவிட்டுத் திரும்பினான். மைசூருக்கு வந்தான்; ஒரு கிழவி வீட்டில் தங்கினான்.
((தமிழ்த் திருடர்களுக்கு எச்சரிக்கை: உங்கள் குலம் வாழ வேண்டுமானால், தமிழ் வாழ வேண்டுமானால், இந்து மதம் வாழ வேண்டுமானால், எனது பிளாக் (blog)கில் உள்ள கட்டுரைகளப் பகிர்வோர்ப் எழுதியவர் பெயரையும் பிளாக்கின் பெயரையும் நீக்காமல் வெளியிடுக.
பாட்டி ஊரில் என்ன விசேஷம்? என்ன பார்க்கலாம்? என்றான்.
கிழவி சொன்னாள்: மகனே மஹாராஜாவின் மகளுக்குப் பேய் பிடித்துவிட்டது. அது பொல்லாத பிசாசு! யார் வந்தாலும் விரட்ட முடியவில்லை யாராவது விரட்டினால் பெரும் தொகை கிடைக்கும் என்று மன்னன் அறிவித்துள்ளான் என்றாள்.
ப்ராஹ்மணன் மறு நாளைக்கு அரண்மனைக்குச் சென்று மஹாராஜாவிடம் பேய் ஓட்ட வந்ததாச் சொன்னான். முதலில் மன்னனுக்கு நம்பிக்கை இல்லை. பின்னர் முயன்று பார்ப்போமே என்று ப்ராஹ்மணனை மகள் இருக்கும் அறைக்குள் அனுப்பினான்.

அவன் உள்ளே நுழைந்தவுடன், பிரம்ம ராக்ஷசஸ், அவனை அடையாளம் கண்டு ‘குட் பை’ (GOOD BYE) சொல்லிவிட்டுப் போனது போகும்போதே அது போட்ட ‘கண்டிஷனையும்’ நினைவுபடுத்தியது. இதற்கு மேல் என்னைத் தொடர்ந்து வந்தால் உன் கதி அதோகதி என்று சொல்லிவிட்டுப் போனது.
ப்ராஹ்மணன் பேய் ஓட்டிய செய்தி, மன்னனுக்குக் கிடைத்தது; அவனுக்கு அளவற்ற மகிழ்ச்சி; ப்ராஹ்மணனுக்கு ஏராளமான பரிசு; நிலபுலன்கள் கிடைத்தன.
சுகமாக ஊருக்குத் திரும்பி வாழ்ந்து வந்தான்; கல்யாணம் முடித்து குழந்தை குட்டிகளுடன் காலம் உருண்டோடியது.
ராமேஸ்வரம் போனாலும் சனீஸ்வரன் (சனைச் சரன்) விடாது என்பது பழமொழியல்லவா?
மைசூர் மஹாராஜாவிடம் இருந்து ஓடிய பேய் – ப்ரஹ்மராக்ஷஸ் – திருவனந் தபுரம் மஹாராஜாவின் மகளைப் போய் பீடித்தது. அவன் பெரிய பெரிய மலையாள மாந்த்ரீகர்களை எல்லாம் அழைத்துப் பேயை ஓட்ட முயன்றான்; பலிக்க வில்லை. அவனது ஒற்றர்கள் மூலம் மைசுர் மஹா ராஜா மகள் விஷயத்தை அறிந்து அந்த மந்திரவாதியைத் தமக்கும் அனுப்பிவைக்குமாறு ஓலை அனுப்பினான்.
திருவநந்தபுரம் மஹா ராஜா மீது கருணை கொண்ட மைசூர் மன்னன், ‘நான் பெற்ற இன்பம் வையகமும் பெறுகவே’ என்று ப்ராஹ்மணனுக்குச் செய்தி அனுப்பினான். உடனே திருவனந்தபுரம் சென்று உதவக் கட்டளை இட்டான்.
ப்ராஹ்மணனுக்கு உதறல் எடுத்தது; இரண்டாம் தடவை அதே ப்ரஹ்மராக்ஷஸைச் சந்தித்தால் தன் கதை முடிந்துவிடும் என்று தெரியும். இருந்தாலும் மன்னர் உத்தரவு என்பதால் திருவனந்தபுரத்துக்கு ஏகினான். பல்வேறு சாக்குப் போக்குகள்; நாள் நட்சத்திரங்களைச் சொல்லி பேய் ஓட்டுவதை ஆனமட்டிலும் தாமதித்தான்.
இந்தச் சாக்குப் போக்குகள் நீண்ட காலம் தாக்குப் பிடிக்கவில்லை. தனது சொத்து சுகங்களைப் பகிர்ந்து விட்டு சாகத் தயாராக அரனண்மனைக்குள் சென்றான்; மஹாராஜவின் மகளைப் பார்த்தான். அவளைப் பிடித்த பிரம்ம ராக்ஷஸும் ப்ராஹ்மனனைப் பார்த்தது. ஆத்திரம் கொண்டது; பெரிய உலக்கையைத் தூங்கிக் கொண்டு அவனை அடிக்க ஓடிவந்தது.
இதற்குள் பிராஹ்மனனின் அத்புத மூளை வேலை செய்தது. அந்தப் பேய் அருகில் வந்தவுடன் திருப்ம்பி ஓடுகிறாயா? அல்லது அபஸ்வர நாகஸ்வர வித்வானை உள்ளே வரச் சொல்லவா? இதோ அரண்மனை வாயிலின் அந்தப் பக்கத்தில் கோவில் நாகஸ்வர வித்வான் உன்னைப் பார்க்க காத்திருக்கிறான் என்று கத்தினான்.
இதை கேட்டவுடன் அந்த ஸங்கீதப் பேய் — ப்ராஹ்ம ராக்ஷஸ் — ஓட்டம் பிடித்தது.
தவறான ஸங்கீத ஒலிக்குப் பேயும் பயப்படும்!!!!!!!!!!!!!!!
((தமிழ்த் திருடர்களுக்கு எச்சரிக்கை: உங்கள் குலம் வாழ வேண்டுமானால், தமிழ் வாழ வேண்டுமானால், இந்து மதம் வாழ வேண்டுமானால், எனது பிளாக் (blog)கில் உள்ள கட்டுரைகளப் பகிர்வோர்ப் எழுதியவர் பெயரையும் பிளாக்கின் பெயரையும் நீக்காமல் வெளியிடுக. அல்லது சொல்ல நாக்கு கூசுகிறது…………………………. கடவுளே! என் நாவினால் ……………… சாபம் இட வேண்டாம்; நீயே கவனித்துக்கொள்!))
–SUBHAM–
Muralidaran Sethu
/ January 17, 2018உங்களுக்கு ரெண்டு ராஜாக்கள் கிட்ட சொல்லி சன்மானம் தரனும்.