
Date: 8 FEBRUARY 2018
Time uploaded in London- 20-43
WRITTEN by London swaminathan
Post No. 4717
PICTURES ARE TAKEN FROM VARIOUS SOURCES
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST
WITH YOU.
(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

கீழ்க்கண்ட பாடல்களைப் பாடியது யாரோ? அவர் யாரோ?
- சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் ஈன்ற கற்பகக் களிறே!
முப்பழம் நுகரும் மூஷிக வாகன!
- பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொற் பனுவலும் யான்
எண்ணும் பொழுது எளிது எய்தநல் காய்
- “உலகப் பொய் வாழ்க்கையை உடலை ஓம்பற்க
பிறந்தன இறக்கும் இறந்தன பிறக்கும்
தோன்றின மறையும் மறைந்தன தோன்றும்”
- இந்திரன் முதலா எண்திசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக
வாசவன் மருகா வருக வருக
- தேனே யமுதே சிந்தைக்கரியாய்
சிறியேன் பிழை பொறுக்குங்
கோனே சிறிதே கொடுமை பகர்ந்தேன்
- பெருமாளும் நல்ல பெருமாள்! அவர்தம்
திருநாளும் நல்ல திருநாள்!
- உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து
வரிசைக்கு வருந்தும் இப்பரிசில் வாழ்க்கைப்
பரிசிலர்க்கு அடையா வாயிலோயே
- ஒரு காலில் சங்கு ஒருகாலில் சக்கரம் உள்ளடி பொறித்தமைந்த
இருகாலும் கொண்டு அங்கு அங்கு எழுதினாற்போல்
- உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்
நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே
- மாசு அறு பொன்னே! வலம்புரி முத்தே!
காசு அறு விரையே! கரும்பே, தேனே!
- ஆயிரம் ஞாயிறு போலும் ஆயிரம் நீண்முடியானும்
ஆயிரம் பேருகந்தானும் ஆரூர் அமர்ந்தவம்மானே
- தெய்விகச் சாகுந்தலமெனும் நாடகம்
செய்ததெவர் கவிதை? — அயன்
செய்வதனைத்தின் குறிப்புணர் பாரத
தேவி அருட் கவிதை
- அவ்வியம் பேசி அறம்கெட நில்லன்மின்
வெவ்வியன் ஆகிப் பிறர்பொருள் வவ்வன்மின்
- அன்றறிவாம் என்னாது அறம் செய்க
- பொருளற்ற பாட்டுக்களை – அங்குப்
புத்தமுதென்றனர்; கைத்தாளமிட்டனர்
இருளுக்குள் சித்திரத்தின் – திறன்
ஏற்படுமோ இன்பம் வாய்த்திடக் கூடுடுமோ?

ANSWERS
- தற்கால அவ்வையார்
- குமரகுருபரர், சகல கலாவல்லி மாலை
- பட்டினத்தார் பாடல்
- தேவராய சுவாமிகள், கந்த சஷ்டிக் கவசம்
- மாணிக்கவாசகர், திருவாசகம்
- காளமேகம், தனிப்பாடல்கள்
- சங்க கால அவ்வையார் , புறநானூறு
- பெரியாழ்வார் திருமொழி, திவ்யப் பிரபந்தம்
- கம்பன், கம்ப ராமாயணம்
- இளங்கோ, சிலப்பதிகாரம்
- அப்பர் தேவாரம், நாலாம் திருமுறை
- பாரதி, பாரதியார் பாடல்கள்
- திருமூலர் எழுதிய திருமந்திரம்
- திருவள்ளுவர் எழுதிய திருக்குறள்
- பாரதிதாசன் பாடல்கள்
–subham–