செப்பியது யாரோ? தப்பாமல் சொல்!QUIZ (Post No.4717)

Date: 8 FEBRUARY 2018

 

Time uploaded in London- 20-43

 

WRITTEN by London swaminathan

 

Post No. 4717

 

PICTURES ARE TAKEN FROM VARIOUS SOURCES

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST

WITH YOU.

 

(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

கீழ்க்கண்ட பாடல்களைப் பாடியது யாரோ? அவர் யாரோ?

 1. சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான

அற்புதம் ஈன்ற கற்பகக் களிறே!

முப்பழம் நுகரும் மூஷிக வாகன!

 

 1. பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொற் பனுவலும் யான்
  எண்ணும் பொழுது எளிது எய்தநல் காய்

 

 1. “உலகப் பொய் வாழ்க்கையை உடலை ஓம்பற்க
  பிறந்தன இறக்கும் இறந்தன பிறக்கும்
  தோன்றின மறையும் மறைந்தன தோன்றும்”

 

 1. இந்திரன் முதலா எண்திசை போற்ற
  மந்திர வடிவேல் வருக வருக
  வாசவன் மருகா வருக வருக

 

 1. தேனே யமுதே சிந்தைக்கரியாய்

சிறியேன் பிழை பொறுக்குங்

கோனே சிறிதே கொடுமை பகர்ந்தேன்

 

 1. பெருமாளும் நல்ல பெருமாள்! அவர்தம்

திருநாளும் நல்ல திருநாள்!

 

 1. உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து

வரிசைக்கு வருந்தும் இப்பரிசில் வாழ்க்கைப்

பரிசிலர்க்கு அடையா வாயிலோயே

 

 1. ஒரு காலில் சங்கு ஒருகாலில் சக்கரம் உள்ளடி பொறித்தமைந்த

இருகாலும் கொண்டு அங்கு அங்கு எழுதினாற்போல்

 

 1. உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்

நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா

அலகு இலா விளையாட்டு உடையார் அவர்

தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே

 

 

 1. மாசு அறு பொன்னே! வலம்புரி முத்தே!

காசு அறு விரையே! கரும்பே, தேனே!

 

 

 1. ஆயிரம் ஞாயிறு போலும் ஆயிரம் நீண்முடியானும்

ஆயிரம் பேருகந்தானும் ஆரூர் அமர்ந்தவம்மானே

 

 1. தெய்விகச் சாகுந்தலமெனும் நாடகம்

செய்ததெவர் கவிதை? — அயன்

செய்வதனைத்தின் குறிப்புணர் பாரத

தேவி அருட் கவிதை

 

 1. அவ்வியம் பேசி அறம்கெட நில்லன்மின்

வெவ்வியன் ஆகிப் பிறர்பொருள் வவ்வன்மின்

 

 1. அன்றறிவாம் என்னாது அறம் செய்க

 

 1. பொருளற்ற பாட்டுக்களை – அங்குப்

புத்தமுதென்றனர்; கைத்தாளமிட்டனர்

இருளுக்குள் சித்திரத்தின் – திறன்

ஏற்படுமோ இன்பம் வாய்த்திடக்  கூடுடுமோ?

ANSWERS

 1. தற்கால அவ்வையார்
 2. குமரகுருபரர், சகல கலாவல்லி மாலை
 3. பட்டினத்தார் பாடல்
 4. தேவராய சுவாமிகள், கந்த சஷ்டிக் கவசம்
 5. மாணிக்கவாசகர், திருவாசகம்
 6. காளமேகம், தனிப்பாடல்கள்
 7. சங்க கால அவ்வையார் , புறநானூறு
 8. பெரியாழ்வார் திருமொழி, திவ்யப் பிரபந்தம்
 9. கம்பன், கம்ப ராமாயணம்
 10. இளங்கோ, சிலப்பதிகாரம்
 11. அப்பர் தேவாரம், நாலாம் திருமுறை
 12. பாரதி, பாரதியார் பாடல்கள்
 13. திருமூலர் எழுதிய திருமந்திரம்
 14. திருவள்ளுவர் எழுதிய திருக்குறள்
 15. பாரதிதாசன் பாடல்கள்

 

–subham–

 

 

உங்களுக்கு 10, 9, 8, 7, 6 5, 4, 3, 2, 1 தெரியுமா? (Post No.3044)

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

Written by london swaminathan

Date: 8th    August 2016

Post No. 3044

Time uploaded in London :– 8-32 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

இந்து மதத்திலும் தமிழ்,ச ம்ஸ்கிருத இலக்கியத்திலும் எண்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு.

எங்கே உங்கள் சமய, இலக்கியஅறிவைச் சோதியுங்கள் பார்க்கலாம்!

 

10.”பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்” என்பதை பலரும் சொல்லக் கேட்டிருப்பீர்கள். அது என்ன பத்து?

 

9.நவரத்தின மோதிரம் அணிந்தால் நல்லது என சாத்திரங்கள் கூறும். அந்த 9 ரத்தினங்கள் எவை?

gem ring

 1. அஷ்டலெட்சுமி கோவில் பற்றிக் கேட்டிருப்பீர்கள். அந்த எட்டு (அஷ்ட) லெட்சுமிக்கள் யார் யார்?

 

7.ஏழு நகரங்களில் இறந்துபோனால் மோட்சம் உறுதி என்ற நம்பிக்கை இந்துக்களிடையே நெடுங்காலமாக இருந்துவருகிறது? அந்த 7 மோட்ச புரீக்கள் எவை?

 

 1. அறுசுவை உணவைச் சாப்பிட்டிருப்பீர்கள். அவை என்ன என்ன சுவை?

 

5.பஞ்சாப் என்பது ஐந்து நதிகள் பாயும் பிரதேசம் எனப்பெயர் கொண்ட மாநிலம். அவை எவை?

 

4.சதுர்வித உபாயங்களால் எதையும் சாதிக்கலாம் என்பார்கள். அந்த 4 வழிமுறைகள் என்ன?

 

3.திரிகடுகம் என்ற தமிழ் நூல் மூன்று மூலிகைச் சரக்குகளின் பெயரில் எழுந்தது. அந்த மூன்று மூலிகைகள் என்ன என்ன?

 

2.மீமாம்ச சாத்திரத்தில் இரண்டு பகுதிகள் உண்டு. அவை யாவை?

 

1.ஏகாக்ஷரீ மந்த்ரம் (ஓரெழுத்து மந்திரம்) என்பது என்ன?

ashta lakshmi

விடைகள்:–

 1. பசி வந்திடப் பத்தும் பறந்து போம்:

மானம், குலம், கல்வி, வலிமை, அறிவு, தானம், தவம், உயர்வு, தாளாண்மை/முயற்சி, காமம்

 

9.நவரத்தினங்கள்: வைரம், வைடூர்யம், மாணிக்கம், மரகதம், நீலம், முத்து, பவளம், புஷ்பராகம், கோமேதகம்

 

8.அஷ்ட லெட்சுமி: தன (செல்வம்), தான்ய, தைர்ய (துணிவு), வீர,  விஜய(வெற்றி), வித்யா (கல்வி) ,சந்தான (பிள்ளைப்பேறு), கஜ (யானை)லக்ஷ்மி

 

7.முக்திதரும் ஏழு தலங்கள்:- அயோத்தி, மதுரா, மாயா(ஹரித்வார்), காசி(வாரணாசி), காஞ்சி, அவந்திகா(உஜ்ஜைனி),துவாரகா

6.அறு சுவை:- இனிப்பு, கார்ப்பு (காரம்), துவர்ப்பு, கசப்பு, கைப்பு(உப்பு), புளிப்பு

5.ஜீலம், சீனாப், ராவி, பியாஸ்(வியாச), சட்லெஜ் நதிகள்

 1. சாம (சமாதானம்), தான (பொருள் கொடுத்தல்), பேத (பிரித்தாளும் சூழ்ச்சி), தண்ட (தண்டித்தல் அல்லது தாக்கி அழித்தல்)

 

3.திரிகடுகம்:- சுக்கு மிளகு, திப்பிலி

 

3.திரிகடுகம்:- சுக்கு மிளகு, திப்பிலி

 

2.பூர்வ மீமாம்சம், உத்தர மீமாம்சம் (அத்வைதம்)

 

1.ஓரெழுத்துமந்திரம்:– ஓம்

 sapta-puri

Earlier Quiz posted by me:

 
(1&2) 27 Star Quiz (In English and Tamil)
(3&4)Hindu Picture Quiz-1 (In English and Tamil)
5.தமிழ் தெரியுமா? Tamil Quiz—1
6.தமிழ் தெரியுமா? Tamil Quiz—2
7.Tamil Quiz—3 தமிழ் தெரியுமா?
8.Hindu Tamil Quiz (in Tamil)
9.Hindu Tamil Quiz (in Tamil)-2
10.Hindu Tamil Quiz (in Tamil)-3
11.Hindu Tamil Quiz (in Tamil)-4
12.Hindu Quiz–1
13.Hindu Quiz–2
14.Hindu Quiz–3
15.Hindu Quiz–4
16.Hindu Quiz on Holy Forests
17.காடுகள் பற்றி இந்து மதம்: கேள்வி பதில்
18.ராமாயண வினா விடை
19.பிள்ளையார் பற்றி வினா விடை
(20&21)Quiz on Saivaite Saints (Both Tamil and English)
22.சைவம் பற்றி வினா விடை
23 & 24) Quiz on Hindu Hymns in English and Tamil

 1. Are you familiar with Number Four ?( (5 February 2014)
 2. நீங்கள் நாலும் தெரிந்தவரா? (5 February 2014)
 3. முருகப் பெருமானும் எண்களும்: ஒரு ‘க்விஸ்’ posted on 30 April 2016
28. நீங்கள் தமிழ்ப் புலியா? தமிழ்க் கிளியா? தமிழ் எலியா? ,30 April 2015

29.Hindu Flower Quiz (15 August 2014)

 1. பூ………….. இவ்வளவுதானா?, posted on 15 August 2014

 

31.இந்திரனைத் தெரியுமா உங்களுக்கு? 16 July 2014

32.Do you know Indra?,16 July 2014

 1. புண்ணிய தீர்த்தங்கள் கேள்வி-பதில் (க்விஸ்), posted on 6 May 2014

34.உங்களுக்கு வள்ளுவனையும் பாரதியையும் தெரியுமா? 27-3-14
35.Interesting Quiz on Logos (30 July 2012)
36. Answers for Interesting Quiz on Logos (31 July 2012)

 

 

 

 

நீங்கள் தமிழ்ப் புலியா? தமிழ்க் கிளியா? தமிழ் எலியா?

புலி

கட்டுரை எண் 1838

தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்

தேதி : ஏப்ரல் 30, 2015; லண்டன் நேரம்: 12–02

என் கேள்விக்கென்ன பதில்?

இது போல தமிழ், ஆங்கிலத்தில் முப்பதுக்கும் மேலான க்விஸ், இந்த பிளாக்-கில் உள்ளன.

கீழேயுள்ள கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள். எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொன்னால் நீங்கள் தமிழ்ப் புலி. 15 கேள்விகளுக்குப் பதில் சொன்னால் நீங்கள் தமிழ்க் கிளி. 10 கேள்விகளுக்குப் பதில் சொன்னால் நீங்கள் தமிழ் எலி. 5 கேள்விகளுக்கு மட்டும் பதில் சொன்னால் நீங்கள் தமிழுக்குத் தருவது பெரும் வலி. ஒன்றும் சொல்லாவிடில் தமிழ் மொழிக்குப் பிடித்தது கிலி!!!!

கோடிட்ட இடங்களை நிரப்புங்கள்:—

1)———————– படித்தவனுடன் சொல்லாடாதே.

2)——————- புலவருக்கு ஔஷதம்

3)—————-உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்

4)கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகுத்தி ————————–

5)—————- முப்பதும் செப்பினாள் வாழிய

6)நெஞ்சை அள்ளும் ————————

7)உச்சிமேற் புலவர்கொள் ————————-

8)ஒல்காப்புகழ் ————————————

9)வாய்மொழிக் ————————-; புலன் அழுக்கற்ற அந்தணாளன்

10)கருணைக்கு —————————

கிளி

11)கற்பனைக்குக் ————————–

12) நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும்———————–

13)———————— என்னைப் பாடினான்

14)———————— தன்னைப் பாடினான்

15)———————— பெண்ணைப் பாடினான்

16) ————– வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும்

17) வேதம் தமிழ் செய்த—————————-

18)பெரியாழ்வார் பெற்றெடுத்த————– வாழிய

19)விருத்தமென்னும் ஒண்பாவிற்கு ———–

20)மஹா கவி—————–

எலி

விடைகள்

1)கல்லாடம் 2) நைஷதம் 3) திருவாசகத்துக்கு 4) குறுகத் தரித்த குறள் 5)திருப்பாவை 6) சிலப்பதிகாரம் 7) நச்சினார்க்கினியர் 8) தொல்காப்பியன் 9) கபிலன் 10)அருணகிரி 11) கம்பன் 12) ஞான சம்பந்தன் 13) அப்பர் 14) சம்பந்தன் 15) சுந்தரர் 16) கம்பன் 17) மாறன் சடகோபன் 18) பெண்பிள்ளை 19) உயர் கம்பன் 20) பாரதி.