Written by London Swaminathan
Date: 1 MARCH 2018
Time uploaded in London – 7-56 AM
Post No. 4797
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU
(பேஸ்புக்- கிற்கும் பிளாக்- குகளுக்கும் எப்படி நன்றி சொல்லுவது என்றே புரியவில்லை!!! அவ்வளவு அயோக்கியர்களையும் எனக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது; நான் எழுதியதை பெயரை நீக்கி விட்டு — என் பிளாக்-கின் பெயரை நீக்கிவிட்டுப் போடுகிறார்கள்; இன்னும் சிலர் கொஞ்சம் வரிகளை மாற்றியும், பாரா–க்களை மாற்றியும் வெளியிடுகிறரர்கள்; இது இரண்டாம் தரம்.; இவர்கள் அத்தனை பேரையும் காட்டிக் கொடுக்கிறது FACEBOOK AND BLOGS!)
பண மோசடி செய்தவர்கள் எப்படி அழிவார்கள் என்பது பற்றி திருவள்ளுவன் திருக்குறளிலும் ,உலக மஹா மேதை சாணக்கியனின் சாணக்கிய நீதியிலும் சுவையான கணக்குகள் உள்ளன. அழ, அழ பணம் சம்பாதித்தவனை அழ அழ வைத்து லெட்சுமி போய் விடுவாளாம்– இது வள்ளுவன் கணக்கு; ஆனால் சாணக்கியனோ ஒரு விநோதக் கணக்குப் போடுகிறான். பண மோசடி செய்தவர்கள் பத்து ஆண்டுகளுக்கு ஆட்டம் போடுவார்களாம்; பின்னர் 11 ஆவது வருஷத்தில் ‘அம்போ’ன்னு போவார்களாம்; வள்ளுவன், சாணக்கியன் சொற்களிலேயே படியுங்கள்.
அகலாது அணுகாது வாழ்க!
அக்னிராபஹ ஸ்த்ரியோ மூர்க்காஹா ஸர்பா ராஜ குலானி ச
நித்யம் யத்னேன ஸேவ்யானி ஸத்யஹ ப்ராணஹராணி ஷட்
கீழ்கண்ட ஆறு விஷயங்களில் கவனமாக நடக்க வேண்டும்; ஏனெனில் இவர்கள் வெகுண்டால் உடனே மரணம் சம்பவிக்கும்: தீ, தண்ணீர், பெண்கள், முட்டாள்கள், பாம்பு, ஆட்சியாளர்கள் (ராஜ குலம்)
14-12
அத்யாஸன்னா விநாசாய தூரஸ்தா ந பலப்ரதாஹா
தே ஸேவ்யா மத்யாபாகேன ராஜா வஹ்னிர் குருஹு ஸ்த்ரியஹ
14-11
அரசன், ஆசிரியர், அக்னி (தீ) , பெண்கள் ஆகியோருக்கு மிகவும் அருகில் இருந்தாலும் மிகவும் தூரத்தில் இருந்தாலும் பயனில்லை; ஆகையால் நடு வழியில் செல்க.
அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர் சேர்ந்தொழுகுவார் – குறள் 691
அரசனைச் சார்ந்து வாழ்பவர்கள்; நெருப்பில் குளிர் காய்பவனைப் போல, மிக அருகிலும் போகக்கூடாது; மிக விலகியும் போகக் கூடாது. நடுவழியில் நின்று கடமை ஆற்ற வேண்டும்
இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப்பட்டார் தொடர்பு (920)
பொது மகளிர், கள், சூது ஆகியவற்றில் ஈடுபடுவோரிடம் லெட்சுமி தேவி தங்க மாட்டாள்
XXX
கெட்ட வழியில் சம்பாதித்த பணம் பத்து ஆண்டுகளுக்கு இருக்கும். பதினோராவது ஆண்டு துவங்கும் போது அடியோடு, வேரோடு பிடுங்கிக் கொண்டு போய்விடும்.
15-6
அன்யாயோபார்ஜிதம் வித்தம் தச வர்ஷாணி திஷ்டதி
ப்ராப்தே சைகாதசே வர்ஷே ஸமூலம் தத் வினஸ்யதி
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பாலவை – குறள் 659
பிற மக்களை அழ,அழ வைத்து சம்பாதித்த பொருள் எல்லாம், அந்த மனிதனை அழ அழ வைத்துவிட்டுப் போய் விடும்; உண்மையாக உழைத்து சம்பாதித்த பணம் போனாலும், அதில் ஒரு நன்மையே ஏற்படும்.
–SUBHAM–
Santhoshkumar v
/ March 1, 2018Sir.. i have one doubt. You can explain ..???
R.Nanjappa (@Nanjundasarma)
/ March 1, 2018இன்டெர்னெட், ஃபேஸ் புக்.வந்தபிறகு பிறருடைய எழுத்துக்களையும் கருத்துக்களையும் திருடுவது எளிதாகிவிட்டது. ஆதாரத்தை மறைக்க எத்தனையோ வழிகள் கம்ப்யூட்டரில் கற்கலாமே!
உங்கள் எழுத்துக்களில் பல ஆண்டு ஆராய்ச்சியையும் உழைப்பையும் காண்கிறேன். அதையும் மிறி ஒரு vision, direction, ideal இருப்பதையும் காண்கிறேன். ஒரு உயர்தரக் கல்லூரியோ. நூல் நிலையமோ. பல்கலைக் கழகமோ செய்யவேண்டிய முயற்சி இங்கு தெரிகிறது. உங்கள் எழுத்துக்களைத் தொகுத்தால் அதுவே ஒரு கலைக்களஞ்சியமாகும்
நீங்கள் செய்யவேண்டியது அதுதான்: இங்கு உங்கள் பிளாக்கில் வந்தவற்றைத் தொகுத்து எடிட் செய்து புத்தகமாக வெளியிடவேண்டும்.
உங்கள் எழுத்துக்களுக்கு காபிரைட்டும் இருக்கவேண்டும்.
சுற்றிலும் முள் இருந்தால் நாம்தானே காலில் செருப்பணியவேண்டும்?
திருடர்கள் இருந்தால் நாம்தானே நம் வீட்டிற்கு தாளிடவேண்டும்? ,