விண்வெளிச் சாதனைகள் -ஒரு அரிய தொகுப்பு! – 2 (Post No.4839)

Date: MARCH 22, 2018

 

 

Time uploaded in London- 7-18 am

 

 

WRITTEN by S NAGARAJAN

 

 

Post No. 4839

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

 

9-3-18 பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள எட்டாம் ஆண்டு இரண்டாம் கட்டுரை

அரை நூற்றாண்டு விண்வெளிச் சாதனைகள்ஒரு அரிய தொகுப்பு! – 2

.நாகராஜன்

 

உலகின் தலை சிறந்த அறிவியல் இதழ்களான நேச்சர், ஸயிண்டிஃபிக் அமெரிக்கன், ஸ்பேஸ், லைவ் ஸயின்ஸ் இவை அனைத்தையும் வாங்கிக் கட்டுபடியாகாது. மாதம் பல ஆயிரம் ரூபாய் செலவழிக்க வேண்டியிருக்கும். அந்தக் கவலையின்றி அனைத்து முக்கிய அறிவியல் தகவல்கலையும் இங்கு படித்து மகிழலாம்.

50 ஆண்டு கால் சாதனைகளின் தொகுப்பு தொடர்கிறது:

குறுகிய கால விண்வெளிக் கல மிஷன்

நாஸா வீரரான ஆலன் ஷெப்பர்ட் விண்கலமான ஃப்ரீடம் 7இல் 15 நிமிடங்களே பறந்தார். இப்படிப் பறந்த முதல் அமெரிக்கர் என்ற புகழை  ஈட்டினார். 115 மைல் உயரத்தில் பறந்த அவர் புறப்பட்ட ஃப்ளோரிடா தளத்திற்கு 302 மைல் தள்ளி அட்லாண்டிக்கில் தொப்பென இறங்கினார். 1971இல் அபல்லோ 14இல் சந்திரனுக்கு அவர் சென்ற போது 47 வயதான அவர் இன்னொரு உலகின் பரப்பில் நடநத அதிக வயதானவர் என்ற சாதனையைப் படைத்தார்.

அதிக தூரம் சென்றவர்

பூமியிலிருந்து அதிக தூரம் சென்ற ரிகார்டு 47 வருடமாக முறியடிக்கப்படவில்லை.1970 ஏப்ரலில் அபல்லொ 13 மிஷனில் கலம் சந்திரனின் எதிர்ப் பக்கம் சென்றது. 158 மைல் உயரத்தில் பறந்த அது 2,48,655 மைல் தூரம் தள்ளி இருந்தது. இதுவே பூமியை விட்டுச் சென்ற அதிக பட்ச தூரமாகும்.

 

அதிக நேரம் விண்வெளியில் கழித்தோர்

ரஷிய விண்வெளி வீரர் ஜென்னடி பாடல்கா 878 நாட்கள் 5 விண்கலப் பயணங்களில் இருந்துள்ளார். அமெரிக்க பெண்மணி பெக்கி விட்ஸன் 665 நாட்கள் விண்வெளியில் இருந்துள்ளார்.

நீண்டகாலம் தொடர்ந்து விண்ணில் இருந்த கலம்

இந்தப் பெருமை இண்டர்நேஷனல்  ஸ்பேஸ் ஸ்டேஷனைச் சாரும்.100 பில்லியன் டாலர் செலவில் சுழலும் லாப் கலமான இது 2000, நவம்பர் 2ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. இதில் தொடர்ந்து யாரேனும் இருந்து வருகின்றனர். அக்டோபர் 31, 2000இல் ஸ்டேஷனுக்கான க்ரூ அனுப்பப்பட்டதையும் சேர்த்தால் இரு நாட்கள் அதிகம். ஆக இது தான் விண்வெளியில் மனிதர் இருக்கும் அதி நீண்ட காலம்!

நீண்ட ஸ்பேஸ் ஷட்டில் மிஷன்

கொலம்பியா STS -80 கலம் 1996, நவம்பர் 19இல் விண்ணில் ஏவப்பட்டது. இது திட்டப்படி டிசம்பர் 5இல் திரும்பி இருக்க வேண்டும். ஆனால் காலநிலை சரியில்லை. ஆக இரு நாட்கள் கழித்துத் திரும்பியது. ஆக இது விண்ணில் இருந்த நேரம், 17 நாட்கள், 16 மணி நேரம். இது தான் அதிக பட்ச நேரம் கொண்ட ஷட்டில் மிஷன்!

சந்திரனில் அதிக நேரம்

1972, டிசம்பரில் ஹாரிஸன் ஷ்மிட், யூஜென் கெர்னான் ஆகியோர் அபல்லோ 17 இல் பறந்து 75 மணி நேரம் மூன்று நாட்களுக்கும் மேலாகக் கழித்தனர். சந்திரப்பரப்பை ஆராய்ந்தனர். மொத்தம் 22 மணி நேரம் மூன்று முறை நடந்தனர்.

1969 ஜூலை 20இல் அபல்லோ 11இல் பறந்த நீல் ஆர்ம்ஸ்ட்ராங் தனது ஈகிள் ல்யூனர் மாடுலில் இறங்கினார். அவரது சகா பஸ் அல்ட்ரின் பின்னால் இறங்கினார்.  2 மணி நேரம் 31 நிமிடம் நடை நீடித்தது. இது ஹாலிவுட் படம் ஒன்றின் நீளம் என்பது அதிசயிக்கத்தக்க ஒரு ஒற்றுமை!

அதிவேக விண் பயணம்

அபல்லோ 10 சந்திரப் பயணம் பயங்கர வேகத்தைக் கொண்டதாக இருந்தது. 24,701 மைல் பர் ஹவர். 1969 மே 26இல் இது திரும்பி பூமிக்கு வந்தது. இதுவே இதுவரையிலான உச்ச பட்ச ஸ்பீட்!

அடுத்த இரண்டு மாதத்தில் நிகழ விருக்கும் பிரம்மாண்ட உலக சாதனைக்கான ஒரு சோதனை முன்னோட்டமாக இருந்தது இது.

விண்வெளி வீரர் மேற்கொண்ட அதிகபட்ச பயணங்கள்

இரு நாஸா வீரர்களான ஃப்ராங்க்ளின் சாங்-டையஸ், ஜெர்ரி ரோஸ் ஆகிய இருவரும் ஏழு முறை நாஸா ஷட்டில்களில் பயணித்துள்ளனர். சாங் 1986 முதல் 2002 முடியவும் ரோ 1985 முதல் 2002 முடியவும் இந்தப் பயணங்களை மேற்கொண்டனர்.

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

கொரிய வீராங்கனையான சோயியான் யி (Soyeon Yi), இண்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷனில் வெற்றிகரமான தனது பயணத்தை முடித்துக் கொண்டு ரஷிய சோயுஸ் விண்கலத்தில் பூமிக்குத் திரும்பிக் கொண்டிருநதார்.

ஸ்பேஸ்  ஸ்டேஷனிலிருந்து கலம் விடுபடும் போது அவசரமாக விடுவிக்கவேண்டியதாயிற்று..அத்னால் சீக்கிரம் வரும் பாதை மாறி பின்னர் மாற்றுப் பாதை ஏற்பாடு செய்யப்பட்டது..

க்லம் வளிமண்டலத்தில் கீழே தானாகவே அதன் அழுத்தத்தில் இறங்கிக் கொண்டிருந்தது. வேகமாக, அதலபாதாளத்தில் அபாயகரமாக கல்ம் பூமியை நோக்கி வந்து கொண்டிருந்தது. சாதாரணமாக் மூன்று நான்கு ஹெலிகாப்டர்கள் வட்டமடித்து பாதுகாப்பை உறுதி செய்யும். அன்று ஒரு ஹெலிகாப்டரையும் காணோம்.

கலம் தானாக தரையில் மோத சோயியான் யி கதவைத் தானே திறக்க அங்க சற்று தூரத்தில் இருந்த ஆட்டிடையர்கள் திகைத்துப் போனார்கள்.

 

புல்வெளியில் படுத்துக் கிடந்த அவரை கழகஸ்தானிய இடைப் பெண்மணி ஒருத்தி தூக்கி உதவினார்.  அவர்களுக்கு விண்வெளித் திட்டம் பற்றி ஒன்றும் தெரியாது. விண்வெளி சூட்டை அணிந்திருந்த அவர்கள் அயல்கிரக வாசிகள் போலவே தோற்றம்ளித்தனர். எல்லோருமாகச் சேர்ந்து சோயுஸ் க்லத்தில் மாட்டிக் கொண்டிருந்த ஒருவரை வெளியில் கொண்டு வந்து உதவினர்.

கள்ளங்கபடமில்லாத அவர்களிடம் மொபைல் இருக்கிறதா என்று கேட்க அவர்கள் திகைத்தனர்.. பின்னர் கலத்தினுள் சென்று ஜிபிஎஸ் உதவியுட்ன் இருக்குமிடத்தை நிரணயித்து கலத்தின் மூலமாகவே கீழே உள்ள தரை ஸ்டேஷனைத் தொடர்பு கொண்டனர்.

கடைசியாக 300 மைல் தொலைவிலிருந்து ஒரு ஹெலிகாப்டர் வந்து சேர்ந்தது.

முதல் முதலில் விண்ணுக்கு ஏகி பூமி திரும்பும் தங்கள் முதல் வீராங்கனை தரை இறங்குவதை கொரியர்கள் ஆவலாகப் பார்த்த போது இந்த விபரீதம் ஏற்படவே அனைவரும் கலங்கிப் போனார்கள்.

கடைசியில் எல்லாம் சுபம் என்பதை அறிந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

 

“வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அனுபமாக இது ஆனது என்றார் சோயியான் யி!

 

சென்னைக்கு அருகில் ஒரு இயற்கை அதிசயம் (Post No.4838)

Written by London Swaminathan 

 

 

Date: 21 MARCH 2018

 

 

Time uploaded in London – 21-16

 

Post No. 4838

Pictures shown here are taken by london swaminathan

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

தமிழ்நாட்டில்  விழுப்புரம் அருகிலுள்ள திருவக்கரை– வக்ரகாளியம்மன் கோவிலாலும், பாடல் பெற்ற சிவன் கோவிலாலும் பக்தர்கள் இடையே பிரபலமான இடம். ஆனால் கோவிலுக்கு சில மைல் தொலைவில் ஒரு பெரிய இயற்கை அதிசயம் இருப்பது பலருக்கும் தெரியாது.

 

புவியியல் துறையினர் ஒரு போர்டா (board)வது வைத்து மக்களை ஈர்க்க வேண்டும்

என்ன அதிசயம்?

திருவக்கரையில் ஒரு கல் மரப் பூங்கா இருக்கிறது. அங்கே இரண்டு கோடி ஆண்டுப் பழமையான கல் மரங்கள் இருக்கின்றன. 247 ஏக்கர் பரப்புக்கு இந்தக் கல் மரங்கள் இருந்தாலும், சிறிய இடத்தை மட்டும் பொது மக்களின் பார்வைக்காக ஒதுக்கியுள்ளனர். அனுமதி இலவசம். ஒர் காவற்காரர் மட்டும் அங்கேயிருந்து வருவோர் போவோரிடம் ஒரு நோட்டுப் புத்தகத்தில் கையெழுத்து வாங்குகிறார்; பாராட்ட வேண்டிய பணி.

 

கல் மரம் என்றால் என்ன?

கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் காடுகளில் இருந்த சில மரங்கள் மட்டும் காலப்போக்கில் கல் போல ஆகி விடுகின்றன. அதாவது மரத்தில் இருந்த செல் cell போன்ற உயிருள்ள பகுதிகளில் சிலிகா silica எனப்படும் மணல் புகுந்து கற்கள் ஆகி விடுகின்றன. ஆனால் தோற்றத்தில் மரங்கள் எப்படி இருக்குமோ அப்படியே இருக்கும். இவ்வாறு 30 மீட்டர் நீளம் வரை மரங்கள் இருக்கின்றன. குறுக்களவு சுமார் ஒன்றரை மீட்டர்.

 

இந்த மரங்கள் பக்கத்திலுள்ள காடுகளில் இருந்து வெள்ளத்தில் அடித்து வரப்பட்டதாக ஆராய்ச்சியாளர் எண்ணுகின்றனர்.

 

அது எப்படித் தெரிந்தது?

இந்த மரங்களின் கிளைகள், இலைகள் இல்லாததால் இப்படி அடித்து வரப்பட்டிருக்கும் என்பது அவர்களின் துணிபு.

 

இந்த மரங்கள் பூக்கும் தாவரங்கள் (angiosperms), பூவாத் தாவரங்கள்(gymnosperms) ஆகிய இரண்டு வகையைச் சேர்ந்ததாகும்.

 

இவற்றைப் பாதுகாப்பதால் என்ன நன்மை?

உலகில் இப்படிப்பட்ட பல பூங்காக்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் அரியலூர் அருகில்கூட ஒரு கல் மரப் பூங்கா உளது. கல்லாகிப் போன மரங்களில் கூட ஆண்டுதோறும் ஏற்படும் வளையங்கள் (annular rings) இருப்பதால் இவை எவ்வளவு பழமையான மரங்கள் என்பதும் அக்கால காலநிலை எப்படி இருந்தது என்பதும் தெரியும்.

இதை முதலில் 1781ஆம் ஆண்டில் ஒரு ஐரோப்பியர் பார்த்து எழுதி வைத்துச் சென்றார். இப்பொழுது இது புவியியல் துறையின் (Geological Survey of India) கட்டுப்பட்டில் இருக்கிறது

மரங்கள் பற்றிய விவரங்கள், அவை எப்படித் தோன்றின என்ற விவரங்கள் அனைத்தும் பெரிய போர்டுகளில் இரு மொழிகளில் எழுதியும் வைத்துள்ளனர்.

 

சில பகுதிகளில், கோடிக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த எரிமலை வெடிப்பு, வறட்சி முதலியனவற்றை அறியக்கூட கல் மரங்கள் உதவுகின்றன.


(யாரைக் கடவுள் காப்பாற்றுவார்?  பிளாக்குகளிலும், ஃபேஸ்புக்கிலும் வரும் கட்டுரைகளைத் திருடாமல் — எழுதியவர் பெயருடன் வெளியிடுபவர்களைக் கடவுள் காப்பாற்றுவார். யாருக்கு அரசியல், சமூக விஷயங்களில் கருத்துச் சொல்லவும், குறை கூறவும், கண்டிக்கவும் உரிமை உள்ளது? மற்றவர் படங்களையும் படைப்புகளையும் திருடாதவனுக்கு பேஸ்புக்கிலும் பிளாக்குகளிலும் கருத்துச் சொல்ல உரிமை உண்டு)

—சுபம்—

NATURAL WONDER NEAR VILUPPURAM (Post no.4837)

Written by London Swaminathan 

 

 

Date: 21 MARCH 2018

 

 

Time uploaded in London – 12-46

 

Post No. 4837

Pictures shown here are taken from various sources.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

There is a natural wonder near Viluppuram. At 20 miles from Viluppuram, is Tiruvakkarai where there is a fossil wood park. Many people who visit the famous Vakrakali temple and the Siva temple do not know about the fossil wood or stone tree park. I would suggest the Geological Survey of India who maintain the park place sign posts near the temple.

 

Tiruvakkarai has hundreds of fossilised trees spreading over a vast area—247 acres. The entry is free. It has got trees 20 million years old. They were washed away millions of years ago and buried under the earth. They are now wood stones. The department has installed big boards in Tamil and English explaining it to laymen. They have done a very good job. A watchman is getting the signatures of visitors on a note book, which must be appreciated.

 

There is another fossil wood park near Perambalur.

Scientists have found out the types of trees. Following are the facts given on the board at Tiruvakkarai:-

Fossilwood of Mesembrixylon schmidianum (gymnosperms/non -flowering plants)

Peuce schmidiana (angiosperms/flowering plants)

 

How big the trees are?

30 metres long with a diameter of 1-5 metres

 

How did the trees become stones?

During the petrification period, the organic matter inside the tree is replaced with silica/sand

 

How did they know they were washed away from another area?

Absence of roots and branches indicate toward in this direction.

Who discovered it?

In 1781 an Europena recorded the occurrence of it.

What is the use of preserving it?

These trees tell the age of the earth and the flora and fauna of an area.

Trees’ annual rings are preserved even in the fossilised wood.

They are of Mio-pliocene Sedimentary Rocks.

In some parts of the world they even indicate the drought, volcanic eruptions happened millions of years ago.

 

 

–subham–

 

Meaning of Kunjithapaatham! (Post No.4836)


Written by London Swaminathan 

 

 

Date: 21 MARCH 2018

 

 

Time uploaded in London – 7-02 AM

 

Post No. 4836

Pictures shown here are taken from various sources.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

When we went to Chidambaram Nataraja  Temple in the first week of March 2018, we requested the priest to give us Kunjithapaatham. He was kind enough to bring a few and gave us the prasadam (offering from the god).

 

What is Kunjithapaatham?

It has got two meanings:

1.The hanging foot of Lord Nataraja while he is dancing

  1. The ring like ornament adorning the foot of Lord Nataraja.

 

It is commonly used by the Saivites to name their children.

 

When I googled for Kunchithapaatham, lot of Mr and Mrs Kunchithapathams only came! But one bit of information came from Mahaperiyava blog as well.

Mahaperiyava= Kanchi Shankaracharya Senior also known as Paramacharya (1894-1994)

 

What is it made up of?

When we got it at Chidambaram temple, we found it was made up of fragrant Vettiver (see the picture)

Botanical name- Vetiveria Zizanioides; also Chrysopogon zizanioides

 

 

Kanchithapaatham and Kanchi Shankaracharya

One year before Kanchi Paramacharaya- Sri Chandra Sekara Indra Sarasvati (1894-1994) attained Samadhi, he expressed his wish to visit Lord Nataraja temple in Chidambaram. But his devotees were very hesitant to take him to Chidambaram as he was very weak. A miracle happened. The Dikshitar priests of Chidambaram temple came to him with the Kunjithapaatha prasadam from the feet of Lord Nataraja. Sri Shankaracharya reverently took it and placed it on his head. Probably to show that he is going to adorn the feet of Lord Siva soon or to show to his devotees he is none other than Lord Shiva himself.

 

Where is the significance of it?

Whoever gets it will be lucky and get the grace of god.

–Subham–

 

 

நடைப்பயிற்சியே நல்ல மருந்து – 2 (Post No.4835)

Date: MARCH 21, 2018

 

 

Time uploaded in London- 6-30 am

 

 

WRITTEN by S NAGARAJAN

 

 

Post No. 4835

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL. The may be subject to copyright.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

 

திருநெல்வேலியிலிருந்து வெளிவரும் மாத இதழான ஹெல்த்கேர் மார்ச் 2018 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. முதல் கட்டுரை வெளியான தேதி 10-2-18 கட்டுரை எண் 4723

 

நடைப்பயிற்சியே நல்ல மருந்து – 2

 

ச.நாகராஜன்

 

7

சில ஆண்டுகளுக்கு  முன்னர் எவ்வளவு தூரம் ஒருவர் ஒரு நாளைக்கு நடக்க வேண்டும் என்று கேட்டிருப்போமேயானால் அறிவியல் பூர்வமான பதில் வந்திருக்காது.

ஆனால் இன்றோ அப்படியில்லை.

ஏராளமான ஆய்வுகள் 10000 காலடி நடைப்பயிற்சியின் பயன்களை அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளன.

அடிப்படை உண்மை இது தான்:- நடைப்பயிற்சி ஆரோக்கிய மேம்பாட்டைத் தருகிறது என்பதே.

ஒவ்வொரு 20 காலடி நடைக்கும்  ஒரு கலோரி எரிக்கப்படுகிறது. ஆக 10000 அடிகள் ஒரு நாளைக்கு எடுத்து வைத்தால் 500 கலோரி குறைகிறது! ஒரு வார முடிவில் இது ஒரு பவுண்ட் எடைக் குறைப்பிற்குச் சமம்!

 

8

எவ்வளவு தூரம் நடந்தோம் எத்தனை ஸ்டெப்ஸ் வைத்தோம் என்பதைக் கணக்கிடுவது இப்போது சுலபம். அதற்கென Pedometer உள்ளது. வாட்ச் போல கையில் கட்டிக் கொள்ளும் மீட்டர் எளிதானது; விலை குறைவானது; எவ்வளவு நேரம் நடந்தோம். எத்தனை ஸ்டெப்ஸ் எடுத்து வைத்தோம் என்பதை இது துல்லியமாகக் காட்டும்.

அர்பானா சாம்பெய்னில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் மக்கின்லி ஆரோக்கிய மையம் என்ற மையம் உள்ளது. இது தரும் ஒரு தகவல் சுவையானது.

ஒரு நாளைக்கு 2500 ஸ்டெப்ஸ் எடுத்து வைத்தால் – நீங்கள் மிக மோசமான அளவு செயல்பாடற்றவர்!

ஒரு நாளைக்கு 5000 ஸ்டெப்ஸ் எடுத்து வைத்தால் நீங்கள் செயல்பாடற்றவர்!

5000 முதல் 7500 வரை ஸ்டெப்ஸ் எடுத்து வைத்தால், பரவாயில்லை, ஓரளவு நீங்கள் செயல்பாடுள்ளவர் !

7501 முதல் 10000 வரை ஸ்டெப்ஸ் எடுத்து வைத்தால் நீங்கள் செயல்பாடுள்ளவர்.

10001க்கு மேல் என்றாலோ நீங்கள் அதிகம் செயல்பாடுடையவர்.

கலோரி எரிப்பை மேம்படுத்த 2000 ஸ்டெப்ஸ் என்ற அளவு ஒரு இலக்காகும். இது ஒரு மைல் தூரம் நடப்பதைக் குறிக்கிறது. அதாவது 100 கலோரி எடைக் குறைப்பிற்கு இது சமம்.

ஆக 10000 ஸ்டெப்ஸ் என்பது ஒரு மாஜிகல் நம்பர் – எடைக் குறைப்பிற்கான, ஆரோக்கித்தை உறுதி செய்வதற்கான ஒரு மாய எண் என்றே கருதப்படுகிறது!

 

9

10000 அடிகள் என்ன மாஜிக்கை உடலில் செய்யும்? நீங்கள் உணவால் பெறும் கலோரிகளை கணிசமான அளவு எரித்தால் தான் உடலின் எடை கூடுவது நிற்கும்.

பொதுவான ஒரு விதி என்னவெனில் ஒரு பவுண்ட் கொழுப்புச் சத்து 3500 கலோரிகளுக்குச் சமமாக ஆகிறது.

ஆக இதை அடைவதை ஒரு வார இலட்சியமாகக் கொள்ளலாம்.

ஆனால் பருமனாக ஒருவருக்கு இந்த விதி பொருந்தாது. ஏனெனில் அவர் நடப்பதற்குச் சற்று கூடுதல் சக்தி தேவையாக இருக்கிறது. 180 பவுண்டுள்ள ஒருவர் ஒரு மைல் தூரம் நடந்தால் அவர் 100 கலோரிகளையே எரிக்க முடியும் என்பது பொது விதி!

ஆனால் ஒல்லியான ஒரு நபர் இதே தூரம் நடந்தால் இன்னும் அதிக கலோரிகளை எரிக்க முடியும்!

அது மட்டுமல்லை, வேகத்தைப் பொறுத்தும் கலோரி எரிப்பு அமைகிறது!

சராசரி நடைப் பயிற்சியின் வேகம் மணிக்கு  3 மைல் ஆகும்.

இதை இன்னும் விளக்கமாகச் சொல்வது என்றால் 160 பவுண்ட் எடையுள்ள ஒருவர் மெதுவாக மணிக்கு இரண்டு மைல் வேகத்தில் 30 நிமிடம் நடந்தார் எனில் அவர் எரிப்பது 102 கலோரிகளாகும். ஆனால் அவரே மணிக்கு மூன்றரை மைல் வேகத்தில் நடந்தால் அவர் எரிப்பது 157 கலோரிகளாகும். அதாவது 54 சதவிகிதம் கூடுதலாக!

இது ஏன் என்பதைப் புரிந்து கொள்வது மிகவும்  சுலபம்!

வேகமாக நடந்தால் இன்னும் அதிக தூரத்தைக் குறிப்பிட்ட நேரத்தில் கடக்க முடியும், இல்லையா!

 

 

10

இன்னும் ஒரு சின்ன உண்மையும் இருக்கிறது! உங்களின் தற்போதைய எடைக்காக உங்களுக்கு 1800 கலோரி தினமும் தேவைப்படுகிறது எனக் கொள்வோம். ஆனால் நீங்களோ ஒரு நாளக்கு எடுக்கும் உணவில் 2300 கலோரிகள் உள்ளது என்றால், 10000 ஸ்டெப்ஸ் நீங்கள் தினமும் எடுத்து வைத்தாலும் அதிகப் படி உள்ள 500 கலோரியைத் தான் உங்கள் நடைப் பயிற்சி கழித்து பாலன்ஸ் செய்கிறது. ஆக மொத்தக் கணக்கில் ஜீரோ பாலன்ஸ் தான் இருக்கும்! எடை குறையாது.

10000 ஸ்டெப்ஸை Pedometerஐ வைத்துத் தான் போட்டேன், எடை குறையவில்லையே என்று அங்கலாய்க்கக் கூடாது!

உணவில் எடுத்தது 2300 கலோரிகள்

அன்றாடச் செயல்பாட்டில் எரித்தது 1800 கலோரிகள் + நடைப் பயிற்சியில் எரித்தது 500 கலோரிகள் = 2300 கலோரிகள்

பாலன்ஸ் 0. ஆக எடைக் குறைப்பு இருக்காது!

11

ஒவ்வொரு நீண்ட பயணமும் முதல் ஸ்டெப்பை எடுத்து வைப்பதில் தான் ஆரம்பிக்கிறது.

முயற்சியுடன் முதல் காலடியை எடுத்து வைத்தால் மற்றதெல்லாம் சுலபம்; நோக்கத்தை மனதில் இறுத்திக் கொண்டால்  அனைத்தும் தானே நடக்கும்! எல்லாம் உங்கள் கையில் தான் சார் இருக்கிறது என்று சொல்வது வழக்கம்!

ஒரு தடவையாவது, சற்று மாற்றிச் சொல்வோம்  – எல்லாம் உங்கள் காலில் தான் சார் இருக்கிறது!

வாழ்த்துக்கள்!

***

குறிப்பு : 1 பவுண்டு எடை = 0.45359 கிலோகிராம்

1 கிலோகிராம் எடை = 2.2046 பவுண்டு

கீழே தரப்பட்டுள்ள அட்டவணை உடல்பயிற்சி , கலோரி எரிப்பு, உடல் எடை ஆகியவற்றை உங்கள் எடைக்கும் பயிற்சிக்கும் தகப் பார்த்து  பயனடையலாம்!

வெள்ளைக்காரனுக்கு காட்சி கொடுத்த இராமபிரான்! (Post No.4834)

Written by London Swaminathan 

 

 

Date: 20 MARCH 2018

 

 

Time uploaded in London – 16-24

 

Post No. 4834

Pictures shown here are taken by London swaminathan

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

வெள்ளைக்காரனுக்கு காட்சி கொடுத்த இராமபிரான்!

 

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளைக்கார கலெக்டருக்கும் முஸ்லீம் ஆட்சியாளருக்கும் மேலும் இருவருக்கும் இராம பிரான் காட்சி கொடுத்தது பற்றி இதே பிளாக்-கில் எழுதினேன்; அவற்றில் ஏரி காத்த இராமபிரான் கதையை மட்டும் மீண்டும் கீழே கொடுத்துள்ளேன்.

 

யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எழுதும் காலம் இது. கொட்டாம்பட்டி சுப்பையா நியூயார்க் செல்லாமலேயே மற்றவர் எழுதியதை தனது பெயரில் போட்டு எழுதலாம்; மலையனூர் மாடசாமி ஜப்பானின் ப்யூஜியாமா எரிமலை பற்றி வேண்டுமானாலும் எழுதலாம். அவருக்கு ஜப்பான் எங்கு இருக்கிறது என்றுகூட தெரியாமல் இருக்கலாம். அப்படித்தான் நானும் மூன்றாண்டுகளுக்கு முன்னர் மதுராந்தக சோழன் எழுப்பிய ஏரியின் கரை மீதுள்ள கோதண்ட ராமன் பற்றி, புத்தகத்தில் படித்ததை எழுதினேன்; அது முதற்கொண்டு அங்கு நேரில் சென்று தரிசிக்க ஆவல் கொண்டேன். அந்த ஆசை மார்ச் 7, 2018-ல் நிறைவேறியது.

 

அர்ச்சகர் ஆராவமுதன் எங்களுக்கு தீபாராதனை காட்டிவிட்டு பக்கத்திலுள்ள பிளேஸ் துரை கல்வெட்டையும் பார்த்துச் செல்லுங்கள் என்றார். அப்படியே செய்தோம். பிளேஸ் துரை புதுப்பித்த சீதையின் (ஜனகவல்லி) சந்நிதியையும் தரிசித்தோம். அத்தோடு எதிரே உள்ள ஆஞ்சநேயர் கோவிலையும் அங்கு வரையப்பட்ட தற்கால ஓவியங்களையும் படம் எடுத்தோம். கோவிலில் இருந்த முரசையும் கண்டோம்.

சென்னையிலிருந்து சுமார் 50 மைல் தொலைவில் உள்ள இந்த ஊர் அனைவரும் காண வேண்டிய ஊர். ராமர் கோவிலாலும், மாபெரும் ஏரியாலும் புகழ் அடைந்த ஊர்.

 

இந்த ஸ்தலத்துக்கு இன்னும் ஒரு பெருமையும் உண்டு; ராமானுஜர் இங்கே பஞ்ச சம்ஸ்காரம் எனும் வைணவச் சடங்கைச் செய்து இராமானுஜராக ஆனது இங்குதான்.

கீழேயுள்ளது  மூன்றாண்டுக்கு முன்னர் நான் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி

கட்டுரை எண்:-    1951

Written by London swaminathan

Date: 24 June 2015

Uploaded in London at 9-32 காலை

தென் இந்தியாவில் இரண்டு அதிசய சம்பவங்கள் நடந்தன. இரண்டுக்கும் நல்ல ஆதாரங்களும் உள்ளன. செங்கல்பட்டுக்கு அருகிலுள்ள மதுராந்தகம் ஏரிகாத்த இராமர் கோவிலின் கதை பலருக்கும் தெரிந்திருக்கும். இதே போல 12 ஆண்டு சிறையில் இருந்த பத்ராசலம் இராமதாசர் செலுத்த வேண்டிய வரிப்பணத்தை முஸ்லீம் மன்னரிடம் இராம லெட்சுமணர் வந்து செலுத்திய கதையும் பலருக்குத் தெரிந்திருக்கும். இதிலிருந்து பக்தர்களுக்குக் கிடைக்கும் செய்தி என்ன என்பதையும் இது போன்ற வேறு இரண்டு சமபவங்களையும் சேர்த்து நான்கு கதைகளைச் சுருக்கமாகக் காண்போம்:

கதை 1

செங்கல் பட்டுக்கு அருகில் மதுராந்தகத்தில் கடல் போலப் பரந்து விரிந்து காட்சி அளிக்கும் மதுராந்தகம் ஏரி உளது. ஆண்டுதோறும் வடகிழக்குப் பருவமழை வந்துவிட்டால் இந்த ஏரி நிரம்பும். எந்த நேரத்திலும் கரையை உடைத்து ஊருக்குள் பாயும் அபாயம் ஏற்படும். 1795 முதல் 1799 வரை அந்தப் பகுதியில் கர்னல் லியோனல் பிளேஸ் (Colonel Lionel Place Durai) என்பவர் கலெக்டராக இருந்தார். இப்படி ஏரி நிரம்பி உடையும் தருவாயில் கரையைப் பலப்படுத்தும் பணியில் மும்முரமாக ஈடு பட்டார். ஊரிலுள்ள ராமர் கோவிலில் மண்டபம் கட்டுவதற்காக வைக்கப்பட்ட கற்களைக் கண்டவுடன் அதையும் ஏரிக் கரையைப் பலப்படுத்த பயன்படுத்த எண்ணினார். கோவில் பட்டர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அந்தக் கற்களின் மீது கைவைக்க வேண்டாம் என்றும் அப்போது ராமனே ஏரியைக் காப்பார் என்றும் அர்ச்சகர்கள் கூறிவிட்டனர்.

அர்ச்சகர்களின் வாதம் ஆங்கிலேய கலெக்டர் பிளேசுக்கு திருப்தி தரவில்லை. உங்கள் இராம பிரான் ஏரியைக் காக்க முடியுமானால் ஏன் இப்படி அ டிக்கடி ஏரிக்கரை உடைகிறது? என்று எள்ளி நகையாடியவாறு சென்றுவிட்டார். அன்று இரவு ஏரி முழுதும் நிரம்பி வழிந்தோடும் அல்லது கரை உடையும் அபாயம் இருந்ததால் கலெக்டர் விழித்திருந்து கரைகளைப் பாதுகாக்கும் பணியில் எல்லோரையும் ஈடுபடுத்தி இருந்தார். அப்பொழுது கலெக்டர் ஒரு அதிசயக் காட்சியைக் கண்டார்.

ஏரிக் கரையின் மீது, கையில் வில்லும் அம்புமாக இரண்டு உருவங்கள் நடந்து சென்று கொண்டிருந்தன. பளிச்சிடும் ஒளியுடன் அவர்கள் நடந்து சென்றனர். அதற்குப் பின்னர் மழையும் நின்றவுடன் கலெக்டர் பெருமூச்சுவிட்டார். மறுநாள் இந்த அதிசயத்தை அவரே சொல்லி, வந்தவர்கள் இராம லெட்சுமணரே என்றும் உணர்ந்தார். வெள்ளைக்காரர்கள் எங்கு போனாலும் முதலில் ஊர்க் கதைகளை அறிந்து அதை டயரி அல்லது கடிதம் அல்லது புத்தகமாக எழுதிப்போட்டு விடுவர். ஆகையால் அவருக்கு இராம லெட்சுமணர் கதை, தோற்றம் எல்லாம் அத்துபடி.

இதுபோல பல அதிசய சம்பவங்கள் செங்கல்பட்டு காஞ்சீபுரம் பகுதியில் நடந்ததால் கர்னல் பிளேஸ், ராபர்ட் கிளைவ் போன்றவர்கள் அங்குள்ள கோவில்களுக்கு நகைகளை அளித்து அவை இன்றுவரை அவர்கள் பெயரிலேயே உள்ளன. கர்னல் பிளேஸின் பெயர் மதுராந்தகம் கோவிலிலும் உளது. சாதாரண ராமர் – ஏரி காத்த ராமர் ஆகி இன்றும் நமக்கு அருள் பாலிக்கிறார்.

((மற்ற மூன்று கதைகளை எனது பிளாக்-கில் காண்க))

 

 

 

Anjaneya pictures are from the Hanuman Temple opposite the main shrine.

–subham–

 

குஞ்சிதபாதம் என்றால் என்ன? (Post No.4833)

Written by London Swaminathan 

 

 

Date: 20 MARCH 2018

 

 

Time uploaded in London – 6-24 AM

 

Post No. 4833

Pictures shown here are taken by London swaminathan

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

 

குஞ்சிதபாதம் என்பதற்கு இரண்டு பொருள் உண்டு;

 

சிதம்பரம் முதலிய இடங்களில் நடராஜர் காலைத் தூக்கி ஆடுவார். அப்போது வளைந்து நிற்கும் — தூக்கிய திரு அடிக்கு குஞ்சிதபாதம் என்று பெயர்.

 

மற்றொரு பொருள் சிதம்பரத்தில் தயாரிக்கப்படும் மூலிகை வட்டமாகும். இது நடராஜர் காலை அலங்ரிக்கும்; வெட்டிவேர் மற்றும் மூலிகைப் பொருளைக் கொண்டு வட்டமாகத் தயாரித்து இருப்பர். அதை நடராஜனின் காலில் அணிவிப்பர்.

 

காஞ்சிப் பெரியவர் சமாதி அடைவதற்கு ஓராண்டுக்கு முன்னர் சிதம்பரம் சென்று தரிசிக்க வேண்டும் என்றார். அவரது உடல்நிலை இருக்கும் நிலையைப் பார்த்து தொண்டர்கள் மிகவும் தயங்கினர். அவரது எண்ண அலைகள் நடராஜர் காதுகளை அடையவே அற்புதம் நிகழ்ந்தது. மறு நாளே சிதம்பரம் தீட்சிதர் சிலர் பிரசாதத்துடன் வந்து சுவாமிகளைத் தரிசித்துச் சென்றனர்! அவர்கள் நடராஜப் பெருமானின் காலை அலங்கரிக்கும் குஞ்சித பாதத்தையும் கொண்டு வந்தனராம்; அதை அவர் தன் சிரம் மேல் வைத்து வணங்கினாராம்.

அகராதியில் இல்லாத தமிழ் சொல்!

குஞ்சிதபாதம் என்றால் என்ன? என்று தமிழ் அகராதியில் தேடினேன். ‘நடராஜரின் வளைந்த பாதம்’ என்ற செய்தி மட்டுமே வந்தது.

 

ஆ.சிங்காரவேலு முதலியாரின் தமிழ் என்சைக்ளோபீடியாவிலும் (அபிதான சிந்தாமணி) தேடினேன்; விக்கிபீடியாவிலும் தேடினேன்; பயனிலை.

கூகுளில் தேடினேன்— திரு, திருமதி. குஞ்சிதபாதங்கள் வந்தனர்.

 

இன்னும் ஆழமாகத் தேடினேன்; காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் குஞ்சிதபாதம் கொண்டுவரச் சொன்ன சம்பவம் வந்தது.

 

நாங்கள் மார்ச் மாத முதல் வாரத்தில் சிதம்பரம் சென்ற போது மேடை மீது ஏறி நின்று நடராஜப் பெருமானையும், சிவகாமியையும் தரிசிக்க ஒரு தீட்சிதர் உதவி செய்தார். அவரிடம் குஞ்சித பாதம் கேட்ட போது அருள்கூர்ந்து கொடுத்தார். அது முழுக்க முழுக்க வெட்டிவேரினால் ஆனது- ஒரே கம கம  வாசனை; இப்பொழுது எங்கள் வீட்டு சுவாமி ரூமில் (PRAYER ROOM) மணம் பரப்பி வருகிறது.

 

–SUBHAM—

 

(யாரைக் கடவுள் காப்பாற்றுவார்?  பிளாக்குகளிலும், ஃபேஸ்புக்கிலும் வரும் கட்டுரைகளைத் திருடாமல் — எழுதியவர் பெயருடன் வெளியிடுபவர்களைக் கடவுள் காப்பாற்றுவார். யாருக்கு அரசியல், சமூக விஷயங்களில் கருத்துச் சொல்லவும், குறை கூறவும், கண்டிக்கவும் உரிமை உள்ளது? மற்றவர் படங்களையும் படைப்புகளையும் திருடாதவனுக்கு பேஸ்புக்கிலும் பிளாக்குகளிலும் கருத்துச் சொல்ல உரிமை உண்டு)

 

சூரியனோடு சுற்றும் ரிஷி – சூரிய ரகசியம்! – 2 (Post No.4832)

Date: MARCH 20, 2018

 

 

Time uploaded in London- 5-05 am

 

 

WRITTEN by S NAGARAJAN

 

 

Post No. 4841

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

மஹாபாரத மர்மம்

 

சூரியனோடு சுற்றும் ரிஷி – சூரிய ரகசியம்! – 2

 

ச.நாகராஜன்

சூரியன் சொல்லத் தொடங்கினார்:

“இவர் அக்னி அல்லர். அசுரனும் அல்லர். உஞ்சவிருத்தி விரதத்தில் சித்தி பெற்ற இந்த முனிவர் சுவர்க்கத்தை அடைந்தார். கனிகளையும் ஜலத்தையும் காற்றை அருந்துபவருமான இவர் சமாதியில் இருந்தார்.

சுவர்க்கம் அடைவதற்குக் காரணமான ஈஸ்வரரை வேத சம்ஹிதைகளால் துதித்தார்.

இந்த வேதியர் ஆசையற்றவர். உஞ்ச சீலத்தை ஆகாரமாக உடைய இவர் அனைத்துப் பிராணிகளின் நலத்திலும் அக்கறை உள்ளவர்.

இப்படிப்பட்டவர்கள் அடையும் உத்தம கதியை அவர் அடைந்தார்.

 

இதைக் கேட்ட நாகன் தன்னிடம் வந்த பிராம்மணரிடம் தான் கண்டதைக் கூறியதோடு, “ஓ! அந்தணரே!அந்த சூரிய மண்டலத்தில் இவ்விதமாக இந்த ஆச்சரியம் என்னால் பார்க்கப்பட்டது. அவர் சூரியனோடு சேர்ந்து சூரியனுடன் சுற்றி வருகிறார்.” என்றான்.

 

இதைக் கேட்ட அந்தணர் நாகனிடம், “சந்தோஷம்! நான் போகிறேன். நான் எதை நினைத்து வந்தேனோ அதை உன்னால் அடைந்து விட்டேன். நான் உஞ்சவிருத்தி விரதத்தை அனுஷ்டிப்பேன். உன்னிடமிருந்து விடை பெறுகிறேன்.” என்று கூறிக் கிளம்பினார்.

அவர் உடனடியாக சியவன மஹரிஷியை அணுகினார்.

சியவனரால் ஜனக மன்னனின் இல்லத்தில் நாரதருக்கு இந்த விஷயம் சொல்லப்பட்டது.

நாரதர் இதை இந்திரனுக்குக் கூறினார்.

இந்திரன் அனைத்து வேதியர்களுக்கும் இதைக் கூறினான்.

 

இந்த வரலாற்றால் உந்தப்பட்ட நாகனைச் சந்தித்த அந்த அந்தணர் உஞ்சசீலத்தை ஆகாரமாக உடையவராகி வனத்தினுள் சென்றார்.

மிகச் சுருக்கமாக சூரியனைப் பற்றிய விவரங்கள் இங்கு தரப்பட்டுள்ளது.

இந்த வரலாற்றில் சூரியனுடைய ஆச்சரியங்களை நாம் காண்கிறோம்.

பல கோடி ஆண்டுகளாக பல கோடி ஜீவராசிகளுக்கு அனைத்தையும் நல்கும் சூரிய சக்தியை அறிவியல் வியக்கிறது.

அறிவியலில் சூரியனின் ஆற்றலைப் பல்லாயிரம் பக்கங்களில் விவரிக்கக் காணலாம்.

ஆனால் சூரிய கிரணங்களில் கிளைகளில் இருக்கும் பட்சிகள் போலச் சித்தர்கள் இருப்பதையும், சூரியனோடு சுற்றும் அந்தணரையும் நாம் அறிவியலில் படிக்க முடியாது.

அதற்கு மஹாபாரதமே துணை!

சூரியனைக் குறித்துப் பல நூறு துதிகள் உள்ளன. ஏன் என்பதற்கான காரணம் சூரியனின் அளவிலா ஆச்சரியங்களே காரணம்!

(ஆதாரம்: மஹாபாரதம், ம.வீ.இராமானுஜாசாரியாரால் பதிக்கப்பெற்றது)

 

(யாரைக் கடவுள் காப்பாற்றுவான்?  பிளாக்குகளிலும்ஃபேஸ்புக்கிலும் வரும் கட்டுரைகளைத் திருடாமல் — எழுதியவர் பெயருடன் வெளியிடுபவர்களைக் கடவுள் காப்பாற்றுவார். யாருக்கு அரசியல்சமூக விஷயங்களில் கருத்துச் சொல்லவும்குறை கூறவும்கண்டிக்கவும் உரிமை உள்ளதுமற்றவர் படஙகளையும் படைப்புகளையும் திருடாதவனுக்கு பேஸ்புக்கிலும் பிளாக்குகளிலும் கருத்துச் சொல்ல உரிமை உண்டு)

***

 

English Collector saw Lord Rama in Madurantakam! (Post No.4831)

Written by London Swaminathan 

 

 

Date: 19 MARCH 2018

 

 

Time uploaded in London – 13-59

 

Post No. 4831

Pictures shown here are taken by London swaminathan

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

There years ago I wrote in this blog an article about Lord Rama giving Darshan to an English collector and a Muslim ruler. From that day I wanted to visit the temple and see the lord for myself. In the first week of March,2018, I and my brother drove to Madurantakam where there is a vast sea like lake. Though the temple is relatively small, it is famous because of Lord Rama’s appearance.

 

Priest Aramuthan explained to us the incident and asked us to visit the Manadap where there is an inscription regarding this. We saw it and I took some photographs. It is said that the collector reconstructed Sita’s shrine as well. She is called Janakavalli. When you read such anecdotes, you admire it; but when you see it it gives thrill and excitement. We become more devoted to Lord Rama.

 

I saw some old temple drums and some modern paintings in the Anjaneya temple opposite the main shrine.

Madurantakam is in Kanchipuram district. One can reach it within two hours from Chennai/Madras. The distance between the tow places is approximately 80 kilometres/50 miles.

I wrote in this blog four anecdotes about God’s love for his devotees where I explained how an English Collector and a Muslim Ruler saw Lord Rama. See below my three year old post.

Post No 1948

Written by London swaminathan

Date: 22 June 2015

Uploaded in London at 20-41

 

 

British Collector who saw Lord Rama

During the British rule, Colonel Lionel Place was the collector of Chengalpattu District near Chennai. Madurantakam, a nearby town has a huge lake. Every year the monsoon rains filled the lake and many a time it overflew or its banks breached. During his collectorship between 1795 and 1799, Col. Lionel Place Durai camped there to oversee the repairing of the banks.

 

When he saw big granite pillars in the famous ancient Rama temple he told that it could be used for strengthening the banks of the lake. The priests objected to the proposal saying that Rama would protect the town. But the collector insisted that if God could protect the lake why it breached several times. But he wanted to wait and see what happens in the next few days’ rain. The lake was full to the brim. Worried collector was supervising the banks at the dead of night. Suddenly he saw a flash of light and there stood two people with bow and arrow walking on the banks of the lake. The rain also stopped and nothing untoward happened. The collector knew that it was Lord Rama and his brother Lakshmana who were guarding the lake. He had seen those pictures in the local temple. Collector Place’s name is in the inscription in the temple and the temple was renamed as Eri Kaatha Ramar in Tamil meaning ‘Rama who protected the Lake’– temple. It is on record that Col. Place along with Robert Clive had donated jewellery to the temples in that area including Kancheepuram.

 

Collector Lionel Place

Drums in the temple

–Subham–

நெற்றிக் கண் ! சூடான தோசை ! சுவைமிகு சிங்கப் பெருமாள் கோவில்! (Post No.4830)

Written by London Swaminathan 

 

 

Date: 19 MARCH 2018

 

 

Time uploaded in London – 6-21 am

 

Post No. 4830

Pictures shown here are taken by London swaminathan

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

கோவில் என்றவுடன் கடவுளின்  பெயர், சந்நிதிகள், சிலைகள் என்று வருணிக்கத் துவங்கி விடுவர். எனது அணுகு முறை வேறு: முதலில் ‘புல்லட் பாயிண்ட்ஸ்’- பின்னர் விரிவான விளக்கம்; நானும் என் தம்பியும் மார்ச்  முதல்வாரத்தில் சிங்கப் பெருமாள் கோவில் பெருமாளைச் சேவித்தோம். இதோ முதலில் அதிசய மற்றும் சுவையான செய்திகள்:

This is not the main shrine; outside the temple.

1.நெற்றிக் கண் பார்க்கலாம்!

2.அதிசய அழிஞ்சில் மரம் காணலாம் (முந்தைய கட்டுரையில் காண்க)

  1. சூடான தோசைப் பிரஸாதம் சாப்பிடலாம்

4.பாரீஸ் நகர லவ்வர்ஸ் லாக் LOVERS LOCKS போல இங்கே பிராப்ளம் லாக்

PROBLEM LOCK சுவாமிக்கு சார்த்தலாம்

5.நரசிம்மர் சிலையின் மேல் சூரிய ஒளி விழுவதை சில மாதங்களில் காணலாம்

 

தலைப்புச் செய்திகளைக் கொடுத்துவிட்டேன் இனிமேல் விரிவான செய்திகள்:

 

சிங்கப் பெருமாள் கோவில் காஞ்சீபுர மாவட்டத்தில் உள்ளது. இங்குள்ள நரசிம்மர், பாடலாத்ரி நரசிம்மர் என்று அழைக்கப்படுகிறார். பாடலாத்ரி என்றால் சிவப்பு மலை. ஜாபாலி முனிவருக்கு இறைவன் காட்சி கொடுத்த இடம்..

 

இங்கு ஒவ்வொரு முறை தீபாரதனை காட்டும் போதும், பட்டர் அவர்கள், நரசிம்மரின் நெற்றிக் கண்ணைக் காட்டுகிறார்.சிவ பெருமானுக்கே உள்ள இந்த அம்சத்தை இங்கே காணலாம் ஹிரண்யகசிபு என்ற அரக்கனைக் கொன்றவுடன் கோபத்துடன் வந்த கோலம் இது. நரசிம்மாவதாரம், பத்து அவதாரங்களில் ஒன்று.

 

பேயாழ்வாரால் பாடப்பட்ட தலம்; 108 வைணவ திருப்பதிகளில் ஒன்று; இது சுமார் 1500 ஆண்டுப் பழமை வாய்ந்த பல்லவ குடைவரைக் கோவில்; ஒரு சிறிய குன்றின்மீது கோவில் அமைந்துள்ளது.

 

நரசிம்மப் பெருமாளைத் தரிசித்துவிட்டு கோவிலை வலம் வரும்போது, சூடான தோசைப் பிரசாதம் கிடைக்கும். விலை பத்து ரூபாய்; புளியோதரை சர்க்கரைப் பொங்கலும் விற்கிறார்கள். எங்கள் மதுரை அழகர் கோவில் அடை அளவுக்கு ருசி இல்லாவிடினும், பசிக்கு உதவும் அருமருந்து இது.

இன்னும் கொஞ்சம் நடந்தால் அழிஞ்சில் மரத்தைக் காணலாம். இது பற்றிய அற்புதச் செய்திகளை ஆதி சங்கரரின் சிவானந்தலஹரி மூலமும் ஆண்டாளின் நாச்சியார் மொழி மூலமும் ஏற்கனவே எழுதிவிட்டேன்.

 

கோவிலுக்கு வெளியே வந்தால் ஒரு நரசிம்மர் சந்நிதி உள்ளது; அங்கே பூட்டுகளாகத் தொங்கு கின்றன. பாரீஸிலும் பல ஐரோப்பிய நகரங்களிலும் ஆற்றுப் பாலங்கள் தோறும் பூட்டப்பட்ட பூட்டுகளும் அதன் மேல் காதலன்–காதலி பெயர்களும் இருக்கும்; இதன் தாத்பர்யம் என்னவென்றால் அந்த ஜோடி பூட்டு போல இணைந்திருக்குமாம் ( பூட்டைப் பூட்டிவிட்டு வீடு திரும்புவதற்குள், ஜோடிப்புறாவில் ஒன்று பறந்துபோனாலும் அதிசயமில்லை!!!)

நரசிம்மப் பெருமாள் கோவிலில் ஏன் இப்படிப் பூட்டு போடுகிறார்கள் என்று வினவியபோது கிடைத்த விடையில், பிரச்சினைகள் உள்ளோர் அது தீரும் வரை இப்படிப் பூட்டுப் போட்டு வைத்திருப்பராம்; பிரச்சனை தீர்ந்த பின்னர் அதை எடுத்துவிடுவராம்.

ஆண்டுதோறும் சில மாதங்களுக்கு நரசிம்ம மூர்த்தி மீது சூரிய ஒளி படுவதும் கோவிலின் சிறப்பு.

 

சாது சந்யாசிகள்

இந்தக் கோவிலுடன் இணைத்துப் பேசப்படும் முனிவர் ஜாபாலி என்பவர் ஆகும். ராமாயணத்தில் ஒரு ஜாபாலி உண்டு. ஆயினும் அவர்தான் இவர் என்று சொல்வதற்கில்லை. சங்க இலக்கியப் புலவர் பட்டியலில் கூட வால்மீகி உண்டு; அவர் ராமாயணம் எழுதிய வால்மீகி இல்லை. ஏனெனில் 2000 ஆண்டுப் பழமையான சங்க இலக்கியத்துக்கு பல ஆயிரம் ஆண்டு முன்னர் நடந்தது ராமாயணம். அவர் ராமனின் சமகால முனிவர்.

 

எந்த ஆண்மகனின் வெற்றிக்கும் பின்னால்  ஒரு பெண் உண்டு- There is a woman behind every man’s success என்று சொல்லுவர்.

அது உண்மையோ இல்லையோ எந்தக் கோவிலின் மஹிமைக்கும் பின்னால் ஒரு முனிவர் அல்லது சித்தர் அல்லது ரிஷி உண்டு There is a Rishi or Saint behind every Hindu Temple என்பது உண்மையே; இந்தக் கோவிலில் ஜாபாலி முனிவர் தொடர்பு இருப்பது போல சித்தர்கள் சமாதி உள்ள கோவில்களும் முனிவர் தொடர்புள்ள கோவில்களும் தன ஆகர்ஷணமும்  (பணம்) ஜன ஆகர்ஷணமும் (மக்கள் கூட்டம்) உடைத்தாய் இருக்கின்றன.

((யாரைக் கடவுள் காப்பாற்றுவான்?  பிளாக்குகளிலும், ஃபேஸ்புக்கிலும் வரும் கட்டுரைகளைத் திருடாமல் — எழுதியவர் பெயருடன் வெளியிடுபவர்களைக் கடவுள் காப்பாற்றுவார். யாருக்கு அரசியல், சமூக விஷயங்களில் கருத்துச் சொல்லவும், குறை கூறவும், கண்டிக்கவும் உரிமை உள்ளது? மற்றவர் படஙகளையும் படைப்புகளையும் திருடாதவனுக்கு பேஸ்புக்கிலும் பிளாக்குகளிலும் கருத்துச் சொல்ல உரிமை உண்டு))

Lovers’ Locks in Seine River Bridge, Paris, France

 

–சுபம், சுபம்–