
Written by LONDON SWAMINATHAN
Date: 12 JUNE 2018
Time uploaded in London – 11-50 am (British Summer Time)
Post No. 5102
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
ராமாயணம் பற்றி எவ்வளவோ புஸ்தகங்கள் வெளியாகி வருகின்றன. சில நாட்களுக்கு முன்னர் லண்டன் பல்கலைக் கழக லைப்ரரிக்குப் போன போது புஷ்கர் பட்னாகர் எழுதி, 2005ஆம் ஆண்டு வெளியிட்ட, புஸ்தகத்தை எடுத்தேன். இதன் சுருக்கததை மட்டும் செப்புவேன்.
புத்தகத்தில் வான சாஸ்திர அடிப்படையில் வால்மீகி ராமாயனத்தை ஆராய்ந்து ராமனின் காலம் கி.மு5100– அதாவது இற்றைக்கு 7100 ஆண்டுகளுக்கு முந்தையவர் என்று கணித்துள்ளார். இதற்கு அவர் ஐந்து ஆண்டுகளுக்கு மேலும் உழைத்ததும் நவீன சாப்ட்வேர் computer software முதலியவற்றைப் பயன்படுத்தியதும் சுவையான செய்திகள் ஆகும்.
இந்தப் புத்தகத்தில் 60 வான மண்டல நட்சத்திர வரைபடங்கள் உள்ளன. வான சாஸ்திரம் (வானியல்) ஜோதிடம் அறிந்தோருக்கு அவை சுவை கூட்டும்.

ராமாயணத்தில் இரண்டு இடங்களில் வரும் ஸரஸ்வதி நதி பற்றிய குறிப்புகள், ராம ஸேது பாலம் பற்றிய ‘நாஸா’ (NASA) ஆய்வுகள் ஆகியவற்றை எல்லாம் ஆராய்கிறார். ஆயினும் இவர் வால்மீகி குறிப்பிடும் வானியல் குறிப்புகளையே பிரதானமாகக் கொள்கிறார். அவ்வகையில் இந்த நூல் தனிச் சிறப்புடையது.
ராமர் பிறந்தபோது இருந்த கிரஹ நிலைகள் முதலியவற்றை கம்ப்யூட்டர் சாப்ட்வேரில் (software) போட்டு ஆராய்ந்து இவர் கண்ட உண்மைகள் பின்வருமாறு:–
1.சமீப கால ஆய்வுகள் ஸரஸ்வதி- சிந்து நதி நாகரீகத் தடயங்கள் கி.மு 8000 என்று காட்டுகின்றன.
2.ரிக்வேதத்தின் பமையான பகுதிகள் கி.மு.6500 என்று வானியல் குறிப்புகளால் அறிகிறோம்.
3.ராமாயனணத்தின் காலம் கி.மு 5100
4.ரிக்வேதத்தின் கடைசி மண்டலம்– பத்தாவது மண்டலம்– கி.மு.5000
5.மஹாபாரத யுத்த காலம்- கி.மு.3137
6.ஸரஸ்வதி நதி மறைந்த காலம் கி.மு.1900
வால்மீகி இரண்டு இடங்களில் ஸரஸ்வதி நதியைப் பற்றி பாடுகிறார். பரதன், அயோத்தி நகருக்குத் திரும்பி வரும் வழியை அழகாக வருணிக்கிறார். அப்போது அவன் ஸரஸ்வதி நதிக்கரையைக் கடந்து சென்றதையும் நுவல்கிறார். இல்லாத நதியின் கரைகள் பற்றி யாரும் இயம்புவதில்லை. ஆக நதியின் கரைகள் என்றும் செப்புகிறார். இதனால் இராமபிரான் கி.மு 1900-க்கு முன்னர் இருந்தது உறுதியாகிறது.

வால்மீகியின் வரலாற்று உணர்வும் பூகோள அறிவும் மெய்சிலிர்க்க வைக்கிறது. ராமன் பிறந்த காலம், பரதன் சென்ற வழிகளை எல்லாம் அன்று எழுதி வைத்ததால் நாம் இன்று ஆராய முடிகிறது.
இவையெல்லாம் ஒரு புறம் நிற்க, புஸ்த ஆசிரியர் இந்த விஷயங்களை உறுதி செய்ய எவ்வளவு கஷ்டப்பட்டர் என்பது இன்னும் சுவை ஊட்டுகிறது புஸ்தகத்துக்கு!
இவர் ஆஸ்பத்திரியில் அனுமதியாகி உயிருக்குப் போராடிய தருணத்தில் ஒருவர் வால்மீகி ராமயணத்தின் இந்தி மொழிபெயர்ப்பை அன்பளிப்பாகத் தந்தாராம். ராமன் மீது பாரத்தைப் போட்டுவிட்டு அதைப் படிக்கவே உயிர் தப்பி, உடல் நலம் தேறினார். அப்போது பிறந்தது இந்த ஆராய்ச்சி எண்ணம். தற்காலத்தில் நிறைய வானியல் மென்பொருட்கள் (Software) அகப்படுவதால் அதையெல்லாம் கம்ப்யூட்டரில் ஏற்றி, கணினி என்ன புகல்கிறது என்று ஆராய, ஆராய அற்புத விஷயங்கள் வருகின்றன.
சீதையைத் தேடச் சென்ற அனுமன் இலங்கையில் அசோக வனத்தில் நுழைந்த நாள்– மார்கழி அல்லது தை மாத பௌர்ணமி என்றும் அன்றையதினம் ஒரு சந்திர கிரஹணம் நிகழ்ந்தது என்றும் இவரது கணிப்புகள் காட்டின. ஆனால் இவர் கையில் இருந்த சாப்ட்வேர் கிரஹணங்களைக் காட்டாது என்று நினைத்துக் கொண்டு பல சாப்ட்வேர் கம்பெனிகளை அணுகிணார். சரியான விடை கிடைக்காததால் ஐந்தாண்டுகள் தவியாய்த் தவித்தார். பல பத்திரிக்கைகளில் எழுதிய கட்டுரைகளை எல்லாம் தொகுத்து புஸ்தமாக அச்சிட ப்ரிண்டிங் பிரஸ்ஸுக்கும் (Printing Press) அனுப்பிவிட்டார்.
மறுநாள் காலையில் பத்திரிக்கைகளைத் திறந்தபோது நவம்பர் 9, 2003-ல் சந்திர கிரஹணம் ஏற்படப்போகிறது, அது இந்தியாவிலும் தெரியும் என்று கண்டார். அதற்கு முதல் நாள் தன்னிடம் இருந்த ஸாப்ட்வேரில் அதைப் போட்டு சரிபாரத்தார். பத்திரிக்கை சொன்ன கிரஹண கால விவரம் அப்படியே வந்தன. உடனே இதயம் பட படக்க்க நெஞ்சு துடிதுடிக்க தனது ஆராய்ச்சி தேதி கிரஹணத்தையும் போட்டுப்பார்த்தார். என்ன ஆச்சர்யம்! அவர் 12 செப்டம்பர் கி.மு.5076 என்று போட்டபோது அந்த தேதியில் சந்திர கிரஹணம் என்பதை கம்ப்யூட்டர் காட்டியது. கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைந்த கதை இதுதான். ஐந்தாண்டு தேடிய விஷயம் அவர் கையில் இருந்த ஸாப்ட்வேரில் ஐந்து நொடியில் கிடைத்தது
அவருக்கு பரமானந்தம், பிராம்மானந்தம். ஏன்?
இராம பிரானே நான் செய்த ஆராய்ச்சிக்கு ‘அக்மார்க்’ முத்திரை குத்திவிட்டார் என்று.
இப்படிப் பல சுவையான செய்திகள் உடைய இந்தப் புஸ்தகம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆகியும் என் கையில் கிடைத்தது சில நாட்களுக்கு முன்னர்தான்!

எனக்கும் இராம பிரான் ஒரு முத்திரை – யெஸ் YES முத்திரை குத்தினார்.
நேற்று ஆங்கிலத்தில் இதே கட்டுரையை எழுதி இராமபிரான் காலம் கி.மு 5100 என்று போட்டுவிட்டு கட்டுரை எண்.5100 என்று போட்டுவிட்டு ULOAD அப்லோட் செய்துவிட்டுப் பார்க்கிறேன்! ஆண்டும் 5100, கட்டுரை எண்ணும் 5100!! முதலில் நான் இரண்டு முறை தவறுதலாக 5100 என்பதை அடித்துவிட் டேனோ என்று முழித்தேன்; பின்னர்தான் விழித்தேன்; இதுவும் தெய்வ ஸங்கல்பம் என்று.
ராமர் காலம் கி.மு 5100 என்பது என் பிளாக் மூலம் ராமரே நிரூபித்தார் போலும்.

Krishna in Thailand
கடவுள் கனவில் வந்தாராம்! ஒரே நகைப்பு, கிண்டல்!
சின்ன வயஸில் எங்கள் வீட்டுக்கு ஒரு மாஜிஸ்டிரேட் வருவார். அவர் எப்போது பார்த்தாலும் பகவத் கீதை பற்றிப் பேசுவார். ஒரு நாள் கிருஷ்ணர் எந்த ஆங்கிளில் Angle (கோணத்தில்) ரதம் செலுத்தினார், அர்ஜுனன் எந்த ஆங்கிளில் angle அம்பு விட்டார் என்று மூளையைப் போட்டு குடைந்து கொண்டிருந்தேன் விடையே கிடைக்கவில்லை. இரவில் கண்ணனே தோன்றி இந்த Angle ஆங்கிள் என்று காட்டினார் என்று சொல்லி நடித்தும் காட்டினார்.
அவர் வீட்டை விட்டு வெளியே போனதுதான் தாமதம், நாங்கள் அண்ணன் தம்பிகள் அனைவரும் கூடி கேலியும் கிண்டலுமாகப் பேஸி சரியான பைத்தியம் இது; கிருஷ்ணன்தான் இவரைக் காப்பாற்ற வேண்டும் என்று சிரியாய் சிரித்தோம்.
ஆனால் பிற்காலத்தில் கணித மேதை ராமானுஜனுக்கு, நாமகிரித் தாயார் கணித ரகசியங்களை கனவில் வெளியிட்டதை ராமானுஜமே கூறியதைப் படித்த பின்னர், பிரபல வேதியியல் விஞ்ஞானிக்கு பென்ஸீன் ரிங் Benzene Ring என்னும் ஆர்கானிக் பார்முலா கனவில் வந்ததை அவரே கூறியதைப் படித்த பின்னர் இறைவன் என்பவன் “கல்லார்க்கும் கற்றவர்க்கும், வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிப்பவன்” என்பது விளங்கியது.

Picture of Benzene Ring that came in the dream of a scientist.
-சுபம், சுபம்-