அதிசய க்யூரியம், அதிசய அமெரிஷியம்; குழந்தைகள் கூட்டத்தில் அறிவிப்பு! (Post No.5783)

Written by London Swaminathan


swami_48@yahoo.com



Date: 15 December 2018


GMT Time uploaded in London – 8-20 am

Post No. 5783


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

அதிசய க்யூரியம்அதிசய அமெரிஷியம்குழந்தைகள் கூட்டத்தில் அறிவிப்பு! (Post No.5783)

நம் வீடுகளை செங்கற்காளால் கட்டுகிறோம். இந்தப் பிரபஞ்சமானது 118 மூலகம் (தனிமம்) என்னும் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது என்று விஞ்ஞானிகள் பகர்வர். நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜன் முதல், பெண்கள் அணியும் தங்கம் வரை அனைத்தும் 118ல் அடக்கம். க்யூரியம் (Curium) என்ற உலோகமும் அமெரிஷியம் (Americium) என்ற உலோகமும் ரஹஸியமாகத் தயாரிக்கப்பட்டன. இரண்டாவது உலக மஹா யுத்த காலத்தில் அமெரிக்கா நடத்திய ஆராய்ச்சியில் இவை உருவானது. இதை அமெரிக்கா பரம ரஹஸியமாக வைத்திருந்தது. அதில் ஈடுபட்ட ஒரு விஞ்ஞானி குழந்தைகள் ரேடியோ   நிகழ்ச்சியில் இந்தக் கண்டு பிடிப்பை வெளியிட்டார். அவர் சொன்னது குழந்தைகளுக்கு விளங்கி இருக்காது! அடுத்த சில தினங்களில் அதிகார பூர்வ அறிவிப்பு வெளியான பின்னர் வேதியியல் உலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதோ சில சுவையான மூலகக் கதைகள்!

1945 நவம்பர் 11ம் தேதி க்விஸ் கிட்ஸ் (Quiz Kids- Radio Show) என்ற ரேடியோ நிகழ்ச்சி நடந்தது. அதில் சிறப்பு விருந்தினராக க்ளென் டி. ஸீபோர்க் (Glen T Seaborg) என்பவரை அழைத்திருந்தனர். அவர் எங்கள் ஆராய்ச்சியில் புதிய மூலகம் (தனிமம்) இரண்டு கிடைத்தன என்றார். இரண்டாவது உலக மஹா யுத்தம் முடிந்துவிட்டதால் அமெரிக்காவின் ரஹஸிய அணு ஆயுத ஆராய்ச்சிகள் வெளியிடப்பட்டன. இதற்குச் சில நாட்களுக்குப் பின்னர் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டு உலகத்தை வியப்பில் ஆழ்த்தியது அமெரிக்கா.

இதற்கு ஓராண்டுக்குப் பின்னர், அந்த மூலகத்துக்கு அமெரிஷியம் என்ற பெயர் சூட்டப்பட்டது. அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டதால் இப்படி ஒரு நாமகரணம்!

மற்ற மொழிகளில் அமெரிஷிய என்றாலும் ஆங்கிலத்தில் அமெரிஷம் என்பர்.

ரேடியத்தைக் கண்டுபிடித்து கதிரியக்கத்தினால் புற்று நோய் ஏற்பட்டு இறந்த மேரி க்யூரி, பியர் (பீட்டர்) க்யூரி என்ற பிரெஞ்சு விஞ்ஞானிகளின் நாமம் க்யூரியம் என்ற மூலகத்துக்கு சூட்டப்பட்டது. ரேடியம் கதையை இன்னொரு நாள் சொல்லுகிறேன்.

அமெரிஷம் பற்றி சில சுவையான செய்திகள்.

எங்கள் லண்டனில் எல்லோருடைய வீட்டிலும் ஸ்மோக் அலார்ம் (Smoke Detector)  உண்டு. வீட்டை வாடகைக்கு விடுவதாக இருந்தால் இது கம்பல்ஸரி (கட்டாயம்).

வீட்டிலெங்கேனும் புகை அதிகமானால் உடனே இது ‘கியா, கியா’ என்று கத்த ஆரம்பித்துவிடும். சில நேரங்களில் தோசை வார்க்கும் போதோ சுவையான கறி செய்யும்போதோ கொஞ்சம் புகை வந்துவிட்டால் புகை அபாய அறிவிப்பு அலறும்; ஓடிப்போய் அதை அணைத்துவிட்டுப் பின்னர் ‘ஆன்’ (Switch On)  செய்வோம். வீடுகளுக்கு ஐயர்களை  பூஜைக்கு அழைத்தால் அவர் போடும் முதல் கட்டளை.

“ஆத்தில் (அகத்தில்) ஏதேனும் ஸ்மோக் அலார்ம் இருந்தால் அணைச்சுட்டு வாங்கோ” என்பார். அல்லது அவர் விளக்கையும் ஊதுபத்தியையும் ஏற்றிய அடுத்த நிமிஷத்தில் அபஸகுன அலார்ம் (எச்சரிக்கை ஒலி) வந்து விடும். இவ்வளவு பீடிகை எதற்கு என்று கேட்கிறீர்களா?

வீட்டுக்கு மிகவும் பயன் தரும் உயிர் காக்கும் தோழனான– ஸ்மோக் அலார்மில், அமெரிஷம் அல்லது அமெரிசியம் உளது. ஆனால் இதிலிருந்து வரும் கதிரியக்கம் உடலைப் பாதிக்கும் அளவு கிடையாது. ஆயினும் இதைப் பயன்படுத்தும் எல்லா இடங்களிலும் கதிரியக்கம் தாக்காமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் உண்டு.

இதிலிருந்து வரும் கதிரியக்கம் எலும்புகளைத் தாக்கி அதன் மஜ்ஜையில் உருவாகும் இரத்த சிவப்பு அணுக்களை அழித்துவிடும்..

அமெரிக்காவில் இல்லினாய்ஸ் மாகாணத்திலுள்ள சிகாகோ பல்கலைக் கழகத்தில் ஸீபோர்க் உள்பட 4 விஞ்ஞானிகள் 1944ம் ஆண்டில் இதை உண்டாக்கினர். ப்ளூட்டோனியம் என்னும் மூலகத்தின் மீது, ஒரு அணு உலையில், நியூட் ரான்-களைக் கொண்டு தாக்கினால் க்யூரியமும் அமெரிஷமும் கிடைக்கும்.

ப்ளூடோனியம்-239 இலிருந்து அமெரிஷம் 243 கிடைக்கும் (ஐஸடோப்). இது நிலைத்து நிற்கக்கூடிய வகையறா; ஏனையவை குறுகிய காலத்தில் அழிந்து விடும். இது பாதியாகக் குறைய (Half Life) 7370 ஆண்டுகள் ஆகும். எல்லா கதிரியக்க மூலகங்களுக்கும் இப்படி அரை வாழ்வு (Half life) கணக்கு உண்டு. பின்னர் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக ஈயத்தில் வாழ்வு முடிந்து விடும்.

ஸ்மோக் டிடெக்டரில் பயன்படுவது அமெரிஷம்-241. ஒவ்வொரு ஸ்மோக் அலார்மிலும் 150 மைக்ரோக்ராம் அளவுதான் இது வைக்கப்படும். அந்தக் கருவியில்  மின்சார ஓட்டம் புகை காரணமாக தடைப்படுகையில் அதனுடன் இணைந்த எச்சரிக்கை மணி அடிக்கத் துவங்கும்.  5000 கருவிகள் செய்வதற்கு ஒரு கிராம் உலோகம் போதுமானது. ஆனால் அமெரிஷம் ஆக்ஸைட் ஒரு கிராமின் விலை 1500 டாலர்களுக்கு மேல்!

இதன் வேதியியல் குறியீடு- Am

அணு எண் -95

உருகு நிலை- 994 டிகிரி C

பூமியில் இது இயற்கையில் கிடைக்கக்கூடும். ஆனால் கோடிக்கணக்கான ஆண்டுகளில் அழிந்திருக்கலாம்.

பலவகை அமெரிஷம் காம்பவுண்டுகளை (உப்பு) செய்து, வெவ்வேறு கலர் ஊட்டுவர். எடுத்துக் காட்டாக அமெரிஷம் க்ளோரைட் இளஞ்சிவப்பு (ரோஜா) நிறத்தில் இருக்கும்.

இது வெள்ளி போன்று பளபளக்கும் ஒரு உலோகம்.

இனி க்யூரியத்தின் கதையைக் காண்போம்.

ஒரு பெண்ணின் பெயர் சூட்டப்பட்ட பெருமை இதற்கு உண்டு. அவர்தான் மேரி க்யூரி.

முன்னர் சொன்ன ஆராய்ச்சியில் கிடைத்ததுதான் க்யூரியமும். இந்தக் கதிரியக்கமும் மனிதர்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும். ஆனால் இதையும் மிக   குறைந்த அளவில் பயன்படுத்தினால் ‘உயிர்  காக்கும் தோழன் ஆவான்.

ப்ளூட்டோனியத்தை நியூட் ரான் கொண்டு அடிக்கும் அடியில், க்யூரியம் கதறிக்கொண்டு வெளியே வரும். ஒவ்வொரு கிராம் உலோகத்தைக் கொண்டு, மூன்று வாட் (3 Watt) மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம். இதன் காரணமாக இதை செயற்கை இருதயக் கருவிகள் (Pace makers), விண்கலங்கள், கடலில் மிதக்கும் வழிகாட்டி (Navigational buoys) மிதவைகள் ஆகியவற்றில் பயன்படுத்துகின்றனர். இது வெளியிடும் ஆல்பா (alpha rays) கிரணங்களை எளிதில் தடுக்க இயலுமாதலால் பாதுகாப்புப் பெட்டகத்தில் அடக்கிவைத்து, மின்சாரத்தைப் பெறுவர்.

இதன் வேதியியல் குறியீடு- Cm

அணு எண் -96

உருகு நிலை- 1340 டிகிரி C

இதுவும் செயற்கை மூலகம்; உலோகம். வெள்ளி  நிறம் உடையது. இதற்கு 14 அவதாரங்கள் (ஸடோப்புகள் ) உண்டு. க்யூரியம்-242 என்ற ஐஸடோப் 163 நாட்களில் அழிந்துவிடும். ஆனால் க்யூரியம்-247ன் அரை வாழ்வு 16 மில்லியன் ஆண்டுகள் (ஒரு மில்லியன் = பத்து லக்ஷம்).

இது இயற்கையில் கிடைப்பதல்ல. ஆனால் மனிதர்கள் நடத்திய அணு ஆய்த சோதனைகளால் காற்று மண்டலத்தில் கொஞ்சம் இருக்கக்கூடும்.

அமெரிஷத்தால் தீவிபத்து உயிரிழப்புகளைத் தடுக்க முடிகிறது; க்யூரியத்தால் செயற்கை இருதயக் கருவிகளை உருவாக்க முடிகிறது.

இயற்கையில் தீய கதிரியக்க மூலகங்கள்!!! ஆனால் மனிதனின் புத்திசாலித்தனம் இரண்டையும் உயிர் காப்பான் தோழன்’ என்ற வகையில் சேர்த்துவிட்டது அரக்கர்களைப் பயன்படுத்தி தேவர்கள் அமிர்தத்தைப் பெறவில்லையா? ஆகவே நம்மூர் முரடர்களையும் கூட, நுகத்தடியில் காளைகளைப் பூட்டி வேலை வாங்குவது போல வேலை வாங்கலாம்.

வாழ்க க்யூரியம்! வாழ்க அமெரிஷம்/ அமெரிஷியம்!!

TAGS– க்யூரியம், அமெரிஷியம்,  ஸ்மோக் அலார்ம், செயற்கை இருதயக் கருவி

–சுபம்–

மனிதன், தெய்வம், பேய், தலைவன்! (Post No.5782)

Written by S Nagarajan

Date: 15 DECEMBER 2018


GMT Time uploaded in London –7- 14 am


Post No. 5782

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

தமிழ் இலக்கியம்; அறநூல்!

பாண்டியன் வள்ளுவரிடம் கேட்கச் செய்த நூறு இரகசியம் விளக்கும் கேள்விகள்! – 9

மனிதன், தெய்வம், பேய், தலைவன்!

ச.நாகராஜன்

இன்றுடன் வள்ளுவரின் அருளுரை முடியப் போகிறது என்பதை அறிந்த மக்கள் சற்று வருத்தப்பட்டனர். என்றாலும் மூன்று தினங்களுக்கு மேல் ஓரிடத்தில் இருக்காத வள்ளுவப் பிரான் முப்பெரும் தேவியருக்காக ஒன்பது நாட்கள் இருந்ததை எண்ணி அவர்கள் ஆறுதல் அடைந்தனர்.

சபை ஆரம்பித்தவுடன் வேகம் வேகமாக கேள்விகள் வர ஆரம்பித்தன.

ஒருவர் எழுந்து கேட்டார்.

நல்ல முறையில் வாழ்க்கை நடத்துகின்ற ஒருவனை நாம் எப்படி வாழ்த்த வேண்டும்?

வள்ளுவர் உடனே கூறினார்:

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்.  

அப்படி வாழாதவன்?

ஒத்ததறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்

செத்தாருள் வைக்கப் படும்

பேய் உண்டா?

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து

அலகையா வைக்கப்படும்   

தலைவன் யார் ஐயனே!

முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு

இறை என்று வைக்கப்படும்   

ஒரு புலவர் உற்சாகத்துடன் எழுந்தார்.

பார்த்தீர்களா, வாழ்வாங்கு வாழ்பவனை தெய்வத்துள்  வைத்தார்.  மற்றவருக்கு உதவி செய்யாமல் வாழ்பவனை செத்த பிணத்துடன் வைத்தார். உலகத்தோடு ஒட்ட ஒழுகாமல் உலகம் உண்டு என்று சொல்வதை இல்லை என்று சொல்பவனைப் பேயாக வைத்தார். நீதிமுறை தவறாமல் மக்களைக் காப்பாற்றுபவனை தலைவன் என்று வைத்தார். இப்படி நான்கு விதமாக மனிதர்களைப் பிரிக்கிறார் வள்ளுவப் பிரான் என்று அவர் முடித்தவுடன் அனைவரும் கைதட்டி ஆரவாரித்தனர்.

ஒருவரை நடுநிலைமை உள்ளவரா என்று எப்படி அறிவது?

தக்கார் தகவிலர் என்பது அவரவர்

எச்சத்தாற் காணப் படும்   

இங்கு புலவர் இரு வரிசையாகப் பிரிந்தனர். ஒரு சாரார் ஒருவன் இறந்த பின் அவனைப் பற்றி நிற்கும் புகழாலும் பழியாலும் அவனது நடுநிலைத் தன்மை காணப்படும் என்றனர். இன்னொரு சாரார் அவனது எச்சம் என்பது அவனது பிள்ளைகளே, அவர்கள் வாழ்வைப் பார்த்து அறியலாம் என்றனர். இரு கருத்துக்களையும் மக்கள் ஏற்றுக் கொண்டனர்.

தர்மவான் போல இல்லாத ஒருவனை எப்படி இனம் காண்பது?

அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்

புன்மையாற் காணப் படும்    

மற்றவனைப் பற்றிப் புறங்கூறும் ஒருவன் தர்மவான் இல்லை என்பதை எளிதில் அறிந்து கொள்ளலாம்.

பிறவித் துன்பம் ஒழிவது எப்படி, ஐயனே?

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று

நிலையாமை காணப் படும்  

ஆசைகளை விடு; அப்பொழுதே பிறவித் துன்பம் ஒழியும். இல்லையேல் மாறிமாறிப் பிறக்கும் நிலையாமை காணப்படும்.

அனைவரும் பெரிய ரகசியத்தை உணர்ந்தனர்.

பிறவித்  துன்பம் அற வழி கேட்ட உடனேயே காமம் சம்பந்தமாக ஒருவர் ஒரு கேள்வி எடுத்து வைத்தார். மகளிரும் ஆண்களும் மிகவும் ஆவலாக வள்ளுவரைப் பார்த்தனர்.

ஐயனே!  மனைவி ஊடலின் போது ஒருவர் விட்டுக் கொடுக்கிறார். யார் இதில் வென்றது?

வள்ளுவர் சிரித்தார்.

ஊடலில் தோற்றவர் வென்றார் அது மன்னும்

கூடலிற் காணப் படும்    

மணம் புரிந்த அனைவரும் ஓஹோ என்று சிரித்து அதை ஆமோதிக்க இளம் மங்கையரும் வாலிபரும் புரியாமல் சற்று நாணித் திகைத்தனர்.

புலவர் ஒருவர் எழுந்து நான்கு ‘காணப்படும்’ விஷயங்களை பிரான் உணர்த்தி இருக்கிறார். இத்துடன் புறந்தூய்மை நீரால் அமையும் அகத் தூய்மை வாய்மையால் காணப்படும் என்று சொன்னதையும் சேர்த்துப் பார்த்தால் ஐந்து ‘காணப்படும்’ என்ற ரகசியங்களை அறிகிறோம் என்றார்.

எதைக் கண்டால் அஞ்ச வேண்டும்?

தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும்   

தீய செயல்கள் தீயினும் கொடியன. ஆகவே அந்தத் தீமை விளவிக்கும் செயல்கள் அஞ்சப்படும்.

வள்ளுவர் தொடர்ந்தார்:

முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா

வஞ்சரை அஞ்சப் படும்  

முகத்தினால் சிரித்து அகத்தினால் தீமை கொள்ளும் கறுப்பு உள்ளத்தவரை நட்பாகக் கொள்ள அஞ்ச வேண்டும்.

இரு அஞ்ச வேண்டிய விஷயங்களைக் கேட்டவுடன் ஒருவர் ஒருவனை எப்படி ஆராய்ந்து நம்புவது என்று கேட்டார்.

அறம் பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்

திறம் தெரிந்து தேறப் படும்   

அறம், பொருள், இன்பம், உயிரச்சம் ஆகிய நான்கு வகையாலும் ஒருவனை ஆராய்ந்து பார். பின்னரே அவனைப் பற்றி அறிய முடியும்!

வள்ளுவர் மன்னனைப் பார்த்துத் தொடர்ந்தார்:

ஒற்றெற் றுணராமை ஆள்க உடன் மூவர்

சொற்றொக்க தேறப் படும்  

ஒரு ஒற்றனை இன்னொரு ஒற்றனால் ஆராய்க; அப்படி ஆளப்பட்ட மூன்று பேர்களின் சொற்கள் ஒத்திருக்கிறதா என்று பார்த்து உண்மையை அறிக. 

எப்போது ஒருவனின் மதிப்பு கெட்டுப் போகும்?

வள்ளுவர் கூறினார்:

கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து

சொல்லாடச் சோர்வு படும் 

நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்

சொற்பொருள் சோர்வு படும் 

கல்லாத ஒருவன் தன்னைத் தானே உயர்த்திக் கொண்டு பேசும் மதிப்பானது கற்றவர் அவையில் கூடிப் பேசும் போது கெட்டுப் போகும்.

நன்கு படித்த ஒருவன் நல்ல நூலின் பொருளை விரித்து உரைத்தாலும் கூட அவன் வறியவனாக இருந்தால் அவன் சொற்களை மதிப்புக் கொடுத்து யாரும் கேட்க மாட்டார்கள் அவன் சொற்கள் பயனின்றிப் போகும்.

கண்ணுக்கு அணிகலன் எது ஐயனே!  கைகளில் மை தீட்டிய ஒரு அழகிய இளம் பெண் கேட்டாள்.

வள்ளுவர் குரல் புன்சிரிப்புடன் ஒலித்தது:

கண்ணுக்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்

புண்ணென்று உணரப் படும்.

அந்தப் பெண்ணை கருணை பொதிந்த கண்களால் பாண்டிமாதேவி பார்க்க அவள் கண்களுக்கு அழகு மை அல்ல; கருணைப் பார்வை இல்லையேல் அது புண் என உணர்ந்து அமர்ந்தாள்.

ஒருவர் எழுந்து கேட்டார்: சற்றுக் கருணையற்றுக் கடுமையான சொற்களால் குடும்பத்தில் உள்ளவர்கள் கடிந்து கொண்டால்?

உறாஅ தவர் போல் சொல்லினும் செறாஅர்சொல்

ஒல்லை உணரப் படும்  

வெளிப்பட அன்பில்லாதவர் போலக் கடுமையாகச் சொன்னாலும் கூட, அது அகத்தே பகையில்லாமல் தன் அன்புக்குரிய ஒருவரின் நன்மைக்காகவெ சொல்லப்பட்டது என்பதை விரைவில் யாரும் உணர்வர்.

வள்ளுவர் உடன் தொடர்ந்தார்:

நட்டார் போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்

ஒல்லை உணரப் படும்   

அதே போல நண்பர்கள் போல நல்லனவற்றைச் சொன்னாலும் கூட,  மனதிலே பகைமை கொண்டவர்கள் கூறும் சொற்களின் உண்மைத் தன்மையை விரைவில் யாவரும் உணர்வர்.

வள்ளுவரின் தீர்க்கமான சொற்களையும் அதற்கு புலவர்களின் விளக்க உரையையும் கேட்ட மக்கள் மகிழ்ந்தனர்.

ஆராயத் தக்கது எது?

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்

கேடும் நினைக்கப் படும்  

பொறாமை நெஞ்சம் கொண்ட ஒருவனுடைய செல்வமும், பொறாமை இல்லாத ஒருவனின் கேடு காலமும் ஏன் என்று ஆராயப்பட வேண்டியவை.

எள்ளப்படுவது எது?

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்

எல்லாரும் எள்ளப் படும்  

கேட்டவர்கள் எல்லாரும் வெறுக்கும் படியாக ஒரு பயனும் இல்லாத வெற்றுச் சொற்களைச் சொல்லும் ஒருவன் எல்லாராலும் இகழைப் படுவான்.

உள்ளப்படுவது எது?

வீறெய்தி மாண்டார் வினைத் திட்பம் வேந்தன் கண்

ஊறெய்தி உள்ளப் படும்   

நல்ல செயல் திறன் மூலம் தன் திறமை காட்டி உயர்ந்தவரின் வினைத் திட்பமானது அரசு வரை எட்டும்; அவரை அரசனும் மதிப்பான்.

எள்ளப்படுவதையும் உள்ளப்படுவதையும் கேட்டவுடன் மக்கள் மகிழ அந்தி மாலை வந்தது.

பாண்டிமாதேவி பாண்டியனுடன் வள்ளுவரின் பாதம் தொட்டு பாத பூஜையைச் செய்ய சேரமாதேவியும் சோழமாதேவியும் ஏக்கத்துடன் பார்த்தனர்.

காலையில் பாண்டிமாதேவியிடம் வள்ளுவர் தங்கள் நாட்டிற்கு வருகை தந்து தங்களைப் புனிதப் படுத்தக் கூடாதா என்ற ஏக்கத்தை அவர்கள் கொட்டித் தீர்த்தனர்.

பாண்டிமாதேவி வள்ளுவரிடம் வினயமாக ஏதோ விண்ணப்பித்தாள்.

மக்கள் அப்படி தங்கள் மஹாராணி எதை விண்ணப்பிக்கிறார் என்று அறிந்து கொள்ள ஆவல் கொண்டனர்.

வள்ளுவர் புன் சிரிப்புடன் தலையை அசைக்க பாண்டியன் பெரிதும் மகிழ்ந்து உற்சாகக்குரலை எழுப்பினான்.

மக்கள் புரியாமல் திகைக்கவே ராணி சேரமாதேவியையும் சோழமாதேவியையும் பார்த்துக் கூறினாள் : “காலையில் என்னிடம் வள்ளுவப் பிரான் உங்கள் நாட்டிற்கு வர வேண்டும் என்ற ஆசையைக் கூறினீர்கள் அல்லவா? அதை உங்கள் சார்பில் அவரிடம் விண்ணப்பித்தேன். அவர் வருகிறேன் என்று கூறி விட்டார். சென்று ஏற்பாடுகளைச் செய்யுங்கள். அங்கே உங்கள் மன்னருடன் நீங்கள் பாத பூஜை செய்யலாம்.”

கண்களில் ஆனந்தக் கண்ணீர் ததும்ப இருவரும் ஓடோடி வந்து அக்கா என்று கூவி அவரைக் கட்டி அணைக்க பாண்டிமாதேவி அவர்களைக் கட்டித் தழுவிக் கொண்டாள்.

அவர்கள் வள்ளுவரின் பாதம் பணிய அவர் ஆசீர்வாதம் கூறி எழுந்தார். மக்களும் எழுந்தனர். சிலர் அழுதனர். சிலர் ஆனந்தப் பட்டனர். சிலர் பேசினர்; சிலர் மௌனமாக இருந்தனர்.

மந்திரி, படைத்தலைவர், மக்கள் உடன் வர பாண்டியனும் மூன்று தேவிகளும் முன் செல்ல வள்ளுவர் பாண்டிய நாட்டு எல்லையை அடைந்து அனைவரையும் கையை உயர்த்தி ஆசீர்வதித்தார்.

இதற்கு மேல் என்னைத் தொடர வேண்டாம் என்பதை அனைவரும் புரிந்து கொண்டனர்.

நவ ராத்திரி போல ஒன்பது பகல் நடைபெற்ற அறிவு விருந்தைச் சுவைத்த மக்கள் திரும்ப மனமின்றி வள்ளுவரை வணங்கியவாறே திரும்பலாயினர்.

அவர் எந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்கப் போகிறார்?

கொல்லி மலையை நோக்கியா, பொதிய மலையை நோக்கியா?

யாருக்குத் தெரியும்?

வள்ளுவர் வாழ்க என்ற மாபெரும் ஒலி கொல்லி மலையையும் பொதிய மலையையும் சென்று எதிரொலித்தது.

வள்ளுவர் வாழ்க; தமிழ் வாழ்க; உலகோர் சிறந்து உயர்க!

நன்றி, வணக்கம்!

****

இந்தக் கட்டுரையில் இடம் பெறும் குறட்பாக்களின் எண்கள்

50,214,850, 388,114,185,349,1327, 202, 824,501,589, 405,1046,575, 1096, 826, 169,191,665,

இத்துடன் இந்தத் தொடர் நிறைவடைகிறது.

Index :

Chapter 1 இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள குறட் பாக்களின் எண்கள் 3,4,377,226,439,110                         Total upto this article 6

Chapter 2 இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள குறட் பாக்களின் எண்கள் : 126, 667, 496, 55                       total upto this :10

Chapter 3 இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள குறட்பாக்களின் எண்கள் : 56,54,1101,913,30,543,260             total upto this : 17

Chapter 4 இந்தக் கட்டுரையில் இடம் பெறும் குறட்பாக்களின் எண்கள் 293,306,799,1019,1207 Total upto this : 22

Chapter 5 இந்தக் கட்டுரையில் இடம் பெறும் குறட்பாக்களின் எண்கள் 620,380,619,371,494,505, 655,656,205,206,327,590                                   Total upto this : 34

Chapter 6 இந்தக் கட்டுரையில் இடம் பெறும் குறட்பாக்களின் எண்கள் 759,374,179,36,669,893,512,106,391,725,177,931,414,416,695,587    Total upto this : 50

Chapter 7 இந்தக் கட்டுரையில் இடம் பெறும் குறட்பாக்களின் எண்கள்

350, 12, 15, 291,298, 300, 292, 1081, 1085, 1113,1116, 1117   Total upto this : 62

Chapter 8 இந்தக் கட்டுரையில் இடம் பெறும் குறட்பாக்களின் எண்கள்

972,37,93,,200,645,644,711,712,  197,719, 1134,1164, 215,396,943,477, 725,33 

Total upto this : 80

Chapter 9 இந்தக் கட்டுரையில் இடம் பெறும் குறட்பாக்களின் எண்கள்

50,214,850, 388,114,185,349,1327, 202, 824,501,589, 405,1046,575, 1096, 826, 169,191,665,

Total upto this : 100

 tags –  தெய்வம், பேய், தலைவன்,

–subham–

ENGLISH CROSS WORD 14-12-18 (Post No.5781)

Compiled by London Swaminathan


swami_48@yahoo.com



Date: 14 December 2018


GMT Time uploaded in London – 12-32

Post No. 5781


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

FIND AT LEAST 16 WORDS THAT YOU COME ACROSS IN HINDU RELIGION AND HISTORY.

1
2
3
4


5












6









7












8



9




10


























11



12
13

ACROSS

1.LEGENDARY KING ASSOCIATED WITH VETALA STORIES

6.KINGDOM OF MONKEYS IN RAMAYANA

7.PRANAVA MANTRA

 8.METALPOT WITH WHICH PUJAS DONE

 10.HOLY MOUNTAIN OF HINDUS, PARTICULARLY SAIVITES

11.HORSE SACRIFICE IN THE VEDAS.

DOWN

1.GODDESS OFWORD, SPEECH

 2.SONSOF RAMA

 3.CONTOL ELEPHANT WITH IT

 4.VEDIC FIRE GOD

 5.GOD OF DEATH

9.SIVA,

8.DESIRE

10.DANCING FORM OF PARVATI

 12.UNITY

 13.ONE OF THE SEVEN RISHIS WHO COMES FIRST

XXX

ANSWERS

VIKRAMADITYA
A
U
N
G


A
KISHKINDA
MO


A
U
I


A
KALASHSALIAK
A
A
AA
T
R
A
M
V

R
K
T
L
A
ASVAMEDA
I

ACROSS

1.VIKRAM (1a)ADITYA, 6.KISHKINDA, 7.OM, 8.KALASH, 10.KAILASH

11.ASVAMEDA

DOWN

1.VAK, 2.KUSA LAVA, 3.ANKUSA, 4.AGNI, 5.YAMA, 9.HARA, 8.KAMA

10.KALI, 12.EKTA, 13.ATRI.

tags- cross word, 14-12-18

–SUBHAM–

பிதியாஸ் -டாமன் நாடகம் (Post No.5780)

Compiled by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 14 December 2018


GMT Time uploaded in London – 8-28 am

Post No. 5780


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

நேற்று பிதியாஸ்- பிசிராந்தையார் ஆராய்ச்சி கட்டுரை வெளியிட்டேன். மலேசியத் தமிழ்ப் பாட நூலில் பிதியாஸ்- டாமன் நாடகம் சின்ன நாடகமாக வெளியாகியுள்ளது. இதே போல பிசிராந்தையார்- கோப்பெருஞ்ச்ழஷன் நாடகமும்  எழுதப்படவேண்டும்.

tags- பிதியாஸ் -டாமன் நாடகம்

–subham–

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி14-12-18 (Post No.5779)

Written by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 14 December 2018


GMT Time uploaded in London – 7-54 am

Post No. 5779


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

கட்டத்திலுள்ள 18 தமிழ்ச் சொற்களைக் காணுங்கள்; காண முடியாவிட்டால் கீழேயுள்ள விடைகளை நாடுங்கள்.

1
2
3
4
4a








4b





5

6a6





7

8
6b
9

10



11a
11





12



குறுக்கே

1.உழவர் தொழிலுக்குத் தேவை

2.முஸ்லீம்களின் ஒரு பிரிவு

4.ஹோட்டல்களில் கிடைக்கும்

5.கபடிக் கபடி

6.அரசியல்வாதிகளுக்குப் பிடிக்கும்

6b.-புகழ், தேஜஸ்

9.பாசம்

11.வானத்தில் பறக்கும்

11a.தவறு செய்தால் இது போய்விடும்

12.வதந்தி

கீழே

2.ராமனின் புதல்வர்கள்

3.ஜப்பானியர் மூக்கு

4.- வங்கியில் கிடைக்கும்

4b- பூங்கா

6.சிவனின் தோழர்கள்

6. 6b.- மலர், பெருமாளின் மனைவியருள் ஒருவர்

7.பெண்களுக்கு மிகவும் பிடித்தது

6a.அழுக்கு

6b.தேவனின் பெண்பால்

8.ஏறக்குறைய

10.கொடு

9.பூமி

ANSWERS

குறுக்கே

1.கலப்பை 2.லப்பை 4.கா(4A.) ரம் 5.சடுகுடு 6.பூ6aமாலை

6b.தேசு 9.அன்பு 11.வி 11a.மானம் புரளி.

கீழே

2.லவகுசன், 3.சப்பை,4.கா (4B)சோலை, 6.பூதம், 6.பூ 6b.தேவி

7.வம்பு, 6A.மாசு,  6b.தேவி, 8.சுமார், 10.அளி, 9.புவி

க1
ல2ப்பை3
கா4
ர4a
ம்



ப்
சோ4b

டுகுடுச5
லைமா6aபூ6




வ7

சு8
தே6b
பு9
ன்அ10

ம்மா11a
வி11
வி

ளி
பு12

ர்

TAGS – குறுக்கெழுத்துப் போட்டி14-12-18

–SUBHAM–

பல்லக்குத் தூக்கியும் பல்லக்கில் ஏறியவனும்! (Post No.5778)

Written by S Nagarajan

Date: 14 DECEMBER 2018


GMT Time uploaded in London –7- 25 am


Post No. 5778

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

தமிழ் இலக்கியம்; அறநூல்!

பாண்டியன் வள்ளுவரிடம் கேட்கச் செய்த நூறு இரகசியம் விளக்கும் கேள்விகள்! – 8

பல்லக்குத் தூக்கியும் பல்லக்கில் ஏறியவனும்!

ச.நாகராஜன்

பொழுது புலர்ந்தது. மக்கள் வெள்ளம் திரண்டது. சபை ஆரம்பித்தது.

கூட்டத்தினருள் ஒருவர் எழுந்து கேட்டார்ர் :

எல்லா உயிர்களும் சமமா? சமம் எனில் ஏன் உலகில் இத்தனை வேற்றுமை?

வள்ளுவர் முழங்கினார்:

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமையான்

கேள்வி கேட்டவர் இதைக் கேட்டுத் தொடர்ந்தார்: “தாங்கள் எல்லா உயிர்களும் பிறப்பால் சமம் தான்; ஆனால் செய்யும் தொழில்களால் உயர்வு தாழ்வை அடையும் என்கிறீர்கள். கர்மம் தான் காரணம் எனில் அதை எப்படி அறிவது? எடுத்துக்காட்டு ஒன்றைச் சொல்ல முடியுமா, நாங்கள் தெளிவை அடைவதற்கு? வள்ளுவர் சிரித்தவாறே கூறினார்:

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை

பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை

இதைத் தனியாக வேறு மெய்ப்பிக்க வேண்டுமா என்ன? இதற்கு நூல்களே தேவை இல்லை. பல்லக்குத் தூக்கிச் செல்பவனையும் அதில் அமர்ந்திருப்பவனையும் பார்த்தால் தெரியவில்லையா என்ன?

அனைவரும் எளிய இந்த விளக்கத்தினால் மகிழ்ந்தனர். அன்றாடம் காணும் பல்லக்கு மூலம் கர்ம வினை பற்றிய ரகசியத்தை அறிந்தனர்.

அறம் யாது? மகளிர் பக்கத்திலிருந்து ஒரு இனிய குரல் ஒலித்தது.

வள்ளுவர் கூறினார்:

முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்

இன் சொலினதே அறம்

முகம் விரும்பும் தன்மையைக் காட்ட வேண்டும். இனிது பார்க்க வேண்டும்.உள்ளம் கலந்த இனிய சொற்களைப் பேச வேண்டும். இது அறம்!

அப்படியானால் சொல் எப்படி இருக்க வேண்டும்?

வள்ளுவர் உடனடியாகக் கூறினார்:

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க

சொல்லிற் பயனிலாச் சொல்  

சொற்களில் பயனுடைய சொற்களை மட்டுமே சொல்ல வேண்டும். பயனிலாச் சொற்களைச் சொல்லக் கூடாது.

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை

வெல்லுஞ் சொல் இன்மை அறிந்து 

இன்னுமொரு சொல் சொல்கின்ற சொல்லை வெல்லும் சொல்லாக இல்லாதிருக்கும்படி பார்த்து ஒரு சொல்லைச் சொல்ல வேண்டும்.

திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்

பொருளும் அதனினூஉங்கு இல் 

ஒரு சொல்லின் திறத்தை உணர வேண்டும். பின்னர் அதைச் சொல்ல வேண்டும். அத்தகைய சொல்லைச் சொல்லும் சொல்வன்மையை விடச் சிறந்ததான அறமும் பொருளும் இல்லை.

அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்

தொகையறிந்த தூய்மை யவர்

சொல்லின் தொகுதி அறிந்த தூய்மையாளர், பேசும் இடத்தில் அவையின் தன்மை அறிந்து அதற்கு ஏற்றதான சொற்களைச் சொல்ல வேண்டும்.

இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்

நடைதெரிந்த நன்மை யவர்   

சொற்களின் தன்மை அறிந்து ஆராய்ந்த நன்மை உடையவர், சபையின் தன்மையை நன்கு ஆராய வேண்டும். அதற்குத் தக சொல்ல வேண்டியதை உணர்ந்து சொல்ல வேண்டும்.

வள்ளுவர் கூறக் கூற புலவர்கள் அவர் கூறியதன் பொருளை உடனுக்குடன் விரித்துரைத்தனர். சொல் பற்றிய சொற்கள் இத்தனையா!

மக்கள் ஆரவாரம் செய்தனர். ஒரு புலவர் எழுந்து கேட்டார்;

சொல்லுக என்று சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டீர்கள்; சொல்லக் கூடாதது?

நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்

பயனில சொல்லாமை நன்று 

சான்றோராக இருந்தாலும் சரி நயனில்லாதவற்றைச் சொல்லினும் சொல்லட்டும்; ஆனால் பயனற்ற சொற்களை ஒரு போதும் சொல்லக் கூடாது.

புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க

நன்குசலச் சொல்லு வார் 

நல்ல அறிஞர்கள் கூடியுள்ள சபையில் நல்ல பொருளை மனதில் பதியும்படி சொல்லக் கூடிய திறன் உடையவர், அறிவில்லாதவரின் சபையில் மறந்தும் கூடப் பேசி விடக் கூடாது.

காதலின் தன்மை யாது? -ஒரு இளைஞன் கேட்டான். அனைவரும் வள்ளுவரை ஆவலுடன் பார்க்க அவர் கூறினார்.

காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு

நல்லாண்மை என்னும் புணை 

பெண்ணிடம் உள்ள நாணம், ஆணிடம் உள்ள ஆண்மை ஆகிய தோணிகளை காமம் என்னும் வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுகின்றன என புலவர் ஒருவர் விரித்துக் கூற அனைவரும் கரை சேர்வது எப்படியாம் என்று சிரித்தவாறே கேட்டனர்.

காமம் அப்படிப்பட்ட பெரும் புனலா? இன்னொருவர் கேட்டார்.

வள்ளுவர் சிரித்தவாறே கூறினார்:

காமக் கடல் மன்னும் உண்டே அது நீந்தும்

ஏமப் புணை மன்னும் இல்  

காமம் என்பது ஒரு பெருங்கடலே தான். அதை நீந்திக் கடந்து கரை சேர்வதற்கான தோணி தான் இல்லை! அனைவரும் தீராக் காதலின் தன்மையை அறிந்து ரசித்தனர். சபையில் கலகலப்பு உண்டானது.

ஐயனே, கடலைச் சொல்லி விட்டீர்கள், காமத்திற்காக! ஊருணியும் கேணியும் எங்கு வரும்? எதற்கு உவமையாகும்?

வள்ளுவர் கூறினார்:

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்

பேரறிவாளன் திரு  

ஊருக்கு உதவுகின்ற பெரிய உள்ளம் கொண்ட பேரறிவாளியின் செல்வமானது, ஊரார் அனைவருக்கும் உபயோகமாகும் நீர் நிறைந்த குளம் போல – ஊருணி போல ஆகும்.

ஆஹா, தேவைக்குத் தக அவரவருக்கு வேண்டியது போல எடுக்க தன்னை அர்ப்பணிக்கும் ஊருணி போல அல்லவா நல்ல உள்ளம் கொண்ட ஒருவனின் செல்வம்! அனைவரும் தமது ஊரில் உள்ள பேரறிவாளிகளுக்கு மனதால் நன்றி கூறினர்.

அடுத்து வள்ளுவர் கூறினார்:


தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத் தூறும் அறிவு 

மணலில் அமைந்துள்ள கேணியில் தோண்டத் தோண்டத் தோண்டிய அளவு நீர் ஊறும். அது போல மக்கள் தாம் கற்ற கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்.

ஆஹா, கடல், புணை, ஊருணி, கேணி ஆகிய அனைத்தையும் வைத்து எத்தனை ரகசியங்களை விளக்குகிறார் வள்ளுவர் என மக்கள் மெய் சிலிர்த்தனர்.

கூட்டத்தில் பருத்த உடலுடன் இருந்த ஒருவர் எழுந்திருக்க முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு எழுந்தார். இவருக்கு என்ன ரகசியம் அறிய வேண்டியிருக்கிறது என அனைவரும் அவரைப் பார்க்க, ‘இந்த உடம்பைப் பேணிக் காப்பது எப்படி ஐயனே! நெடுநாள் வாழ ஆசை தான்!’ என்றார்.

அனைவரும் சிரிக்க வள்ளுவர் புன்முறுவலுடன் கூறினார்:

அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு

பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு 

சித்த மருத்துவர் ஒருவர் எழுந்து உண்ட உணவு செரித்த பின்னரே அடுத்த வேளை உணவை அளவு அறிந்து சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த எளிய ரகசியமே உடம்பை அடைந்தோர் அதை நெடுங்காலம் பேணி வைத்திருக்க வைக்கும் வழி என்று நெடுநாள் வாழ வைக்கும் ரகசியத்தை வள்ளுவர் கூறிய படி கூறினார்.

‘இன்னும் எவற்றை அளவறிந்து செய்ய வேண்டும் ஐயனே!’

கேள்வி எழுந்தவுடன் ஐயன் பதில் கூறலானார்:

ஆற்றின் அளவறிந்து ஈக அது பொருள்

போற்றி வழங்கு நெறி  

பிறருக்கு வழங்கும் போது எவ்வளவு கொடுக்க முடியும் என்ற அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை வளமாக இருப்பது போலத் தோன்றி இல்லாமல் போய் விடும். ஆகவே அளவறிந்து கொடுக்கவும்.

ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்ச

மாற்றங் கொடுத்தற் பொருட்டு  

சபையிலே ஒன்றைக் கேட்கும் போது அஞ்சாமல் விடை கூறத் தக்க அளவு அளவை நூல் அறிந்து கற்க வேண்டும்.

புலவர்களின் விளக்க உரையைக் கேட்டு மக்கள் மகிழ்ந்து கொண்டிருந்த சமயம் ஒரு வயதானவர் எழுந்தார்:

ஐயனே! பயிர்த் தொழில் செய்து வாழ்கிறோம். நாங்கள் என்ன செய்ய வேண்டும்?

இதுவரை இல்லாத அளவு வள்ளுவர் முகத்தில் மகிழ்ச்சி தோன்றியது.

கரங்களைக் கூப்பினார்.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்

தொழுதுண்டு பின் செல்பவர் 

உழுகின்ற வேளாண்மைத் தொழிலைச் செய்து வாழ்பவர்களே வாழ்கின்றவர்கள். ஏனைய அனைவரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவர்கள் தாம்!

அனைவரும் உழவுத் தொழிலின் மகிமையையும் அதற்கு வள்ளுவர் தரும் முக்கியத்துவத்தையும் அறிந்து வியந்தனர். கதிரவன் சாயும் நேரம் வரவே, பிரிய மனமின்றி அனைவரும் பிரிந்தனர்.

***

இந்தக் கட்டுரையில் இடம் பெறும் குறட்பாக்களின் எண்கள்

972,37,93,,200,645,644,711,712,  197,719, 1134,1164, 215,396,943,477, 725,33

அடுத்த கட்டுரையுடன் இந்தத் தொடர் நிறைவடைகிறது.

Tags–பல்லக்குத் தூக்கி

GREEK PYTHIAS AND TAMIL PISIRANTHAIYAR – SYMBOLS OF FRIENDSHIP! (Post No.5777)

Research Article written by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 13 December 2018


GMT Time uploaded in London – 20-56

Post No. 5777


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

GREEK PYTHIAS AND TAMIL PISIRANTHAIYAR – SYMBOLS OF FRIENDSHIP! (Post No.5777)

The story of Pythias and Damon is popular in the West. It has become an idiom in English. The two friends of Athens stand as the symbol of true friendship. It is said that they followed the friendship as propagated  by the Greek philosopher Pythagoras. That is what exactly the great Tamil poet Tiruvalluvar, author of Tamil Veda called Tirukkural said,

“Friendship requires neither common residence nor frequent meeting; spiritual kinship creates the right to friendship”-  Kural 785

“Friendship is not that which shines as a smile in the face; Friendship is that which shines as a joy in the soul within” – 786

Another translation of the same couplets runs like this,

“Identity of feelings alone count for close friendship for which,

Constant companionship is not really necessary”-785.

“A surface smile in the face is not friendship, genuine affection,

Springs from the heart and lights up the face”-786.

The story Of Pythias is as follows,

Pythias and Damon were great friends. Once they visited Syracuse where the tyrant Dionysius was ruling. The king suspected the intention of their visit and arrested Pythias for anti- state activities.  He passed a death sentence on him after rejecting all his arguments. His friend Damon felt very sad and tried to help him.

At the same time Pythias’ mother was suffering from serious illness. So Pythias asked permission to go and see her before he  dies. But Dionysius was not ready to believe him. He thought he would never come back. Damon, who was his true friend, told the king that he was ready to be a hostage in the place of Pythias. The tyrant agreed to that proposal. Damon was put in jail.

The days passed; now everyone was waiting anxiously from Pythias return. When the deadline was about to expire, Damon was taken to the execution platform. But Damon was dead sure that he would come back. At that time there was a great commotion when people saw Pythias running towards the place. He came in and asked for pardon for the delay and explained that untimely and unseasonal weather stopped his ship. He begged the king to release Damon and execute him as per the original order.

Whoever heard this started shedding tears and appreciated the great friendship between Pythias and Damon. It moved even the stony-hearted Dionysius and he ordered the release of both Pythias and Damon. From that time their name became proverbial for true friendship.

Similar Story in Tamil literature.

Pythias incident happened in the fifth century BCE. A few centuries later another story happened in Tamil Nadu in South India. There was a king by name Kopperum Chozan. He had problems with his sons about ruling the country. Sangam Tamil poets were honest and bold advisers. One of the poets advised the Choza king to hand over the kingdom to his wards and go to forest life—Vanaprastha—third stage in a Hindu’s life. The king said that he wanted to fast unto death. It is called ‘Prayopavesa’ in Sanskrit and found in the Kishkintha Kanda of Valmiki Ramayana. Whoever dies that way goes directly to heaven. They face the holy Northern Direction and starve to death. Several people used to join such a venture because they knew it is a ‘direct flight ticket’ to Heaven. As was the custom lot of scholars and poets joined the Choza king in the fast. One poet by name Pothiar was refused a seat in the hall by the king. He told him that the poet should go back home and can join only after the birth of a male child, which is required to go to heaven according to Hindu Law Books. He went back and came back after the death of the group and lamented. All this information is in Purananuru (verses 213-223), part of 2000 year old Sangam literature.

Here is the interesting bit.

Choza king asked his colleagues to reserve a seat for a poet named Pisir Anthaiar of the neighbouring Pandya kingdom. All other poets in the hall were surprised because the king and the poet never met. They told the king not to get disappointed by expecting him.

Then the king told them in a verse,

“There in the distant Pandya country

A poet from the town of Pisir is a very close friend.

Even if he does not come when I had lot of money, he would definitely come to see me when I am in distress” – Purananuru verse 215

The king’s words did not go waste. Pisir Anthaiyar came there just on time and sat with the king fasting until death.

This is an example for true friendship like the Pythias- Damon story.

Greek story of Pythias and Damon was made into films in several languages. Like Pisir- Choza story we have stories of Kuchela/Sudama – Krishna friendship. The very first chapter of Panchatantra fables is about true friendship.

Ancient Greeks believed in several virtues like Hindus. Pythias story shows,

1.His love for his mother; Hindus say Matha, Pitha , Guru are goods.

2.Pythias also kept his words like Hindus. All ancient foreign visitors said, ‘in India there is no written legal document and all is done by word of mouth’. Hindu myths say they are like the legendary Harischandra.

3. We have umpteen examples about true friendship. When Karna was insulted that he being a commoner, should not participate in Royal Olympic Games, Duryodana made him a king in a second. Karna was loyal to Duryodana till his last minute.

So we see many similarities between the legends of Hindus and Greeks. One is also reminded of the great sacrifice of Sydney Carton in the novel of A Tale of Two Cities by Charles Dickens.

Long Live True Friendship!!

–subham–

தமிழ் நாட்டு பிசிராந்தையாரும் கிரேக்க நாட்டு பிதியாஸும் (Post No.5776)

தமிழ் நாட்டு பிசிராந்தையாரும் கிரேக்க நாட்டு பிதியாஸும் (Post No.5776)

Research Article written by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 13 December 2018


GMT Time uploaded in London – 18-28

Post No. 5776


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

கிரேக்க நாட்டு (கிரீஸ்) இலக்கியத்தில் அழியாத இடம் பெற்ற கதை பிதியாஸ்- டாமன் (Pythias- Damon) நட்புறவுக் கதை. அதை சங்க கால இலக்கிய பிசிராந்தையார்- கோப்பெருஞ்சோழன் கதையுடன் ஒப்பிட்டுப் பார்க்கவே இந்த ஆராய்ச்சிக் கட்டுரை.

நட்பின் இலக்கணம் என்ன?

வள்ளுவன் தமிழ் வேதமான திருக்குறளில் அழகாகச் சொல்லிவிட்டான்:

முகநக நட்பது  நட்பன்று நெஞ்சத்து

அகநக நட்பது நட்பு-786

பொருள்

ஒருவரை ஒருவர் சந்தித்துச் சிரித்துப் பேசுவது உண்மையான நட்பு அல்ல; மனத்தளவில் உள்ளன்போடு ஒருவரை ஒருவர் போற்றுவதும் பாராட்டுவதுமே நட்பு

இதற்கு முன்னுள்ள குறளில் இன்னும் தெளிவாகச் சொல்கிறார்:-

புணர்ச்சி பழகுதல்  வேண்டா உணர்ச்சிதான்

நட்பாம் கிழமை தரும் – 785

பொருள்

நட்பு கொள்வதற்கு ஒருவரை ஒருவர் அடிக்கடி சந்தித்து, கட்டித் தழுவி, கை குலுக்கிப் பேச வேண்டும் என்பது  தேவையல்ல; ஒரே மாதிரியான சிந்தனையே (same wave length) நட்பு என்னும் உரிமையைக் கொடுத்துவிடும்.

இதற்கு முன்னுதாரணமான கதை கோபெருஞ்சோழன்  –  பிசிராந்தையார் கதையாகும்.

பலரும் அறியாத பிதியாஸ் – டாமன் கதையை முதலில் பார்த்துவிட்டு பிசிராந்தையாருக்கு வருவோம்.

கிரேக்கநாட்டின் மிகப்பெரிய தத்துவ அறிஞர் பிதகோரஸ் (Pythagoras) . அவர் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர். அவரும் வள்ளுவரைப் போலவே நட்பின் இலக்கணத்தை வரையரை செய்துள்ளார். அது என்ன? அதற்கு முன்னுதாரணமான கதைதான் — உண்மைக் கதைதான்  — பிதியாஸ் கதை.

பிதியாஸும் டாமன்   என்பவரும் இணை பிரியாத் தோழர்கள். கிரேக்க நாட்டின் தற்போதைய தலைநகரான ஏதென்ஸில் வாழ்ந்தவர்கள். ஒருமுறை அவர்கள் சைரக்யூஸ் (Syracuse) நகருக்கு வந்தனர். அங்கு டயோனிஸியஸ் (கி.மு. 405-367) என்ற கொடுங்கோலன் ஆட்சி நடாத்தி வந்தான். பிதியாஸ் ஒரு உளவாளி என்று எண்ணி சிறைப் பிடித்தான். எவ்வளவோ மன்றாடியும் மன்னன் விடுவதாயில்லை. மரண தண்டனையும் விதித்தான். இதைக் கேட்ட அவனது ஆருயிர்த் தோழன் டாமன் மனம் வெதும்பினான்.

பிதியாஸ், சாவதற்கு அஞ்சவில்லை. ஆனால் தொலை தூரத்தில் வசிக்கும் தனது தாயார் உடல் நலம் குன்றி இறந்துவிடும் நிலையிலிருந்ததால் மன்னரிடம் ஒரே ஒரு வேண்டு கோள் மட்டும் விடுத்தான்.

“என்னுடைய மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்னர், என் தாயாரை மட்டும் தரிசித்துவிட்டு, விடை பெற்று வருகிறேன்; அனுமதி தாருங்கள்; நான் ஓடி விடமாட்டேன்; கட்டாயம் திரும்பி வருவேன்; என்னை நம்புங்கள்” — என்றான்.

கொடுங்கோலன் டயோனிஸஸ் அதை நம்பவில்லை; உன் தாயாரோ தொலைதூர கிராமத்தில் வசிக்கிறாள்; உன்னை வெளியே விட்டால், நீ கூண்டுக் கிளியாகப் பறந்து விடுவாய். நீ திரும்பி வருவாய் என்று நம்புவதற்கு நான் என்ன இளிச்சவாயனா; முடியாது போ– என்றான்.

அப்போது அங்கே டாமன் பிரவேசித்தான்.

மன்னர் மன்னவா; பிதியாஸ் என்னுடைய ஆப்த சிநேகிதன்; அவனுக்கு நான் உத்தரவாதம் தருகிறேன்; அவன் சொன்ன நாட்களுக்குள் திரும்பி வராவிடில், நான் மரண தண்டனையை ஏற்கிறேன்; அவனை விடுத்து அந்த கை விலங்குகளை எனக்குப் பூட்டுங்கள். அவன் வராவிடில் என்னைக் கொல்லுங்கள்- என்றான். மன்னரும் கை விலங்கை மாற்றி பிதியாஸை அனுப்பிவிட்டு டாமனைப் பிடித்து சிறையில் தள்ளினான்.

அம்மாவைப் பார்க்கச் சென்ற பிதியாஸ் வரும் அறிகுறியே இல்லை; நாளையுடன் கெடு முடிகிறது.பிதியாஸ் வராவிட்டால் டாமன் தலை உருளுவது நிச்சயம். ஆனால் டாமநோ கொஞ்சமும் அஞ்சவில்லை. கெடு முடிவதற்குள் பிதியாஸ் வருவது உறுதி என்று கருதினான்.

கெடு முடியும் தருவாய். டாமனை மரண தண்டனை மேடைக்கு இட்டுச் சென்றனர். அப்போது வாசலில் ஒரே ஆரவாரம். காவல் காரன் ஓடி வந்து பிதியாஸ், அரண்மனையை நோக்கி வந்து கொண்டிருப்பதாக அறிவித்தான். உடனே அவனை இங்கே அனுப்பு என்றான் மன்னன்.

பிதியாஸ் மூச்சு இளைக்க இளைக்க பேசினான்,

மன்னர் மன்னவா என்னை மன்னியுங்கள்; என் அருமை நண்பன் டாமனை பெரிய இக்கட்டில் வைத்தது என் தவறே. நான் வரும் வழியில் பருவ மழை கொட்டி கப்பல் திணறிப்போய் தாமதமாகிவிட்டது. டாமனை விடுங்கள் நான் உங்கள் கட்டளைப்படி மரண தண்டனையை ஏற்பேன் என்றான்

இதைக்கேட்ட மாத்திரத்தில் கொடுங்கோல் மன்னனின் மகன், மரண தண்டனையை நிறை வேற்றும் வெட்டியான் ஆகியோர் கண்களில் கண்ணிர் பெருகியது

அரிய நட்பின் பெரிய சின்னம் பிதியாஸ்- டாமன் நட்புறவு என்பதை அறிந்த கொடுங்கோல் மன்னன் டயோனிஸஸ், இருவரையும் விடுதலை செய்தான். நீங்கள் இருவரும் என்னுடனும் நப்பு பாராட்டுங்கள் என்று இறைஞ்சினான்.

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?

இப்போது எல்லோரும் அறிந்த பிசிராந்தையார்- கோப்பெருஞ் சோழன்  கதையைக் காண்போம்.

கோப்பெருஞ் சோழனை அவனுடைய மகன்கள் எதிர்த்தபோது, எயிற்றியனார் என்னும் புலவர் சொற்படி, நாட்டை மகன்களிடம் ஒப்படைத்துவிட்டு வடக்கிருந்தார். வடதிசை புனிதமான திசை என்பதால் பாண்டவ சஹோதர்கள் போல வடதிசை நோக்கி நடந்து கொண்டே இருந்து பூமியில் உடல் விழுந்து இறப்பர் பலர்; சிலர் இருந்த இடத்திலேயே வடதிசை நோக்கி அமந்து இறப்பர்; இந்த உண்ணா விரதத்துக்கு பிராயோபவேசம் என்று பெயர். ராமாயணத்தின் கிஷ்கிந்தா காண்டத்திலும் புறநானூற்றிலும் காணலாம்.

கோபெருஞ் சோழன் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதை அறிந்து பலரும் அவருடம் பந்தலில் உடகார்ந்து உயிர்துறந்தனர். பொத்தியார் என்ற புலவரை மட்டும் சோழன் திருப்பி அனுப்பிவிட்டான். நீ ஆண் குழந்தை பிறந்த பின்னர்தான் இப்படி சாக முடியும் என்று வீட்டுக்கு அனுப்பிவிட்டான். ஆனால் மன்னர், ஒரு ஆசனத்தை மட்டும் பிசிராந்தையாருக்காக ‘ரிஸர்வ்’ செய்தான். எல்லோருக்கும் ஆச்சர்யம். மன்னரே; அவரோ தொலைதூரத்தில் உள்ளார் உம்மையோ பார்த்ததே இல்லை. அவரை நண்பர் என்று சொல்லி இடம் ஒதுக்கச் சொல்கிறீரே என்று வியந்தனர்.

அதற்கு சோழன் பதில் சொல்கிறான்

தென்னம் பொருப்பன் நல் நாட்டுள்ளும்

பிசிரோன் என்பஎன் உயிர் ஓம்புநனே;

செல்வக் காலை நிற்பினும்

அல்லற்காலை நில்லலன் மன்னே (புறம் –215)

பொருள்

பாண்டிய நாட்டில் தொலைதூரத்தில் பிசிர் என்னும் ஊரில் என் நண்பன் இருப்பதாகச் சொல்லுவர். அவன் எனக்கு செல்வம் இருந்த காலத்தில் வாராவிட்டாலும் துன்பம் வந்த காலத்தில் வாராது இருக்க மாட்டான்

அவர் சொன்னபடியே பிசிர் வந்தார்! உசிர் தந்தார்!!

அவருடைய ஆரூயிர் நண்பர் புலவர் பிசிராந்தையார். இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்ததே இல்லை. ஆயினும் சோழன் எதிர்பார்த்தது போலவே பிசிராந்தையாரும் சாகும் வரை உண்ணா நோன்பில் கலந்து உயிர்நீத்தார்.

பிதியாஸ் கதைக்கு ஆதாரம்-  கிரேக்க  ஆசிரியர் அரிஷ்டசேன, ரோமானிய ராஜதந்திரி சிஸரோ, கிரேக்க ஆசிரியர் டியோதரஸ் சிகுலஸ்

பிசிராந்தையார் கதைக்கு ஆதாரம்- புறநானூறு பாடல்கள் 213-223

பிசிராந்தையார் யார்?

சங்க காலப் புலவர். அவர் பாடிய நரை முடி இல்லாமைப் பாடல் மிகவும் பிரஸித்தம்:

ஐயா, தொண்டுக் கிழமாகிவிட்டீரே; முடி மட்டும் கருக்கவில்லையே; ஏதேனும் கூந்தல் வளர் தைலம் தடவுகிறீரோ என்று எல்லோரும் வியப்புடன் பார்க்கின்றனர். அவர் சொல்லுகிறார்:- ஐயன்மீர் என் வீட்டிலும் ஓம் சாந்தி, நாட்டிலும் ஓம் சாந்தி, என் மனதிலும் ஓம் சாந்தி; இப்படி சாந்தி நிலவுகையில் முடி எப்படி நரைக்கும்? என்று பாடுகிறார்:–

யாண்டு பலவாக நரையில வாகுதல்

யாங்கா கியரென வினவுதிராயின்

மாண்டவென் மனைவியொடு மக்களும் நிரம்பினர்;

யான்கண் டனையர் என் இளையரும்: வேந்தனும்

அல்லவை செய்யான்காக்கும்அதன் தலை

ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச்

சான்றோர் பலர் யான் வாழும் ஊரே

——(புறநானூறு ,பாடல் எண். 191)

 பொருள்:-

நுமக்குச் சென்ற ஆண்டுகளோ  பலவாயின; இருந்தும் நரைமுடி காணவில்லை. இது எப்படி? என்று கேட்கிறீர்களா?

என் மனைவி நல்லவள்; என் பிள்ளைகள் கெட்டிக்காரர்கள்; என்னிடம் பணிபுரியும் ஏவலரோ நான் ‘எள் என்றால் எண்ணை யாக’ நிற்பர்; குறிப்பறிந்து ஒழுகும்  தன்மையர். என் அரசன், எந்த தவற்றையும் செய்யான்; இதற்கெல்லாம் மேலாக என் ஊரிலுள்ள அறிஞர்கள் புலன்களை வென்று, உயர்ந்த குறிக்கோள் உடையவர்கள். (எனக்கு கலையே இல்லை; கவலை இல்லாதோருக்கு நரை முடி வராதே!)

புறநானூற்றிலுள்ள (பாடல் 191) படுத்தும்.

xxx

பிதியாஸ் – டாமன் கதை திரைப்படங்களாகவும் நாடகங்களாகவும் பரவியிள்ளது. அவர்கள் நட்புறவு பற்றிய பாடல்களும்  உண்டு.

கிரேக்க கதை காட்டும் மற்ற உண்மைகள்

1. இந்துக்களைப் போலவே அவர்களும் சொன்ன சொல் மீறாதவர்கள். அரிசந்திரனை நினைவு படுத்துகிறது பிதியாஸ் கதை.

2.நட்புறவின் சிறப்பு; பஞ்ச தந்திரக் கதைகளின் முதல் பகுதியே நட்புறவின் சிறப்பைப் பற்றியதே; குசேலர்- கிருஷ்ணரின் நட்புறவு மற்றொரு எடுத்துக் காட்டு; உயிர் காப்பான் தோழன். சார்ல்ஸ் டிக்கன்ஸ் எழுதிய ‘எ டேல் ஆப் டூ சிட்டிஸ்’  (A Tale of Two Cities by Charles Dickens)  நாவலில் சிட்னி கார்ட்டனின் தியாகமும் நினைவு கூறத்தக்கது.

3. தாயைக் காண பிதியாஸ் மன்றாடியது- மாதா, பிதா குரு தெய்வம் என்ற வசனத்தை நினைவு படுத்தும்.

2500 ஆண்டுகளுக்கு முன்பு உலகம், தார்மீக ரீதியில் உளுத்துப் போகாமல் இருந்தது. போகப் போக  கழுதை தேய்ந்து ட்டெறும்பு ஆகி விட்டது.

வாழ்க நட்புறவு!

tags–நட்புறவு, 

பிசிராந்தையார், பிதியாஸ்- டாமன்

–subham–

யார் இந்தக் கவிஞர்? யார் அந்தச் சிறுமி? (Post No.5775)

Compiled  by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 13 December 2018


GMT Time uploaded in London – 7-58 am

Post No. 5775


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பார்கள். கருணையே வடிவான அந்தப் பெண்மணி உலகப் புகழ் பெற்றாள். அவரைப் பாடிய கவிஞரும் தமிழ் கூறு நல்லுலகம் முழுதும் பிரசித்தமானவரே!

கவிதையைக் கடைசி வரை படித்தால் புதிர் விடுபடும்.

tags- அழ.வள்ளியப்பா, பிளாரன்ஸ் நைட்டிங்கேல்

நன்றி-மலேசிய தமிழ்ப் பாடநூல்

பாரதியும் வானசாத்திரமும்! – 3 (Post No.5774)

Written by S Nagarajan

Date: 13 DECEMBER 2018


GMT Time uploaded in London –6- 49 am


Post No. 5774

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

பாரதி இயல்

பாரதியும் வானசாத்திரமும்! – 3

ச.நாகராஜன்

இனி பாஞ்சாலி சபதம் மற்றும் குயில் பாட்டு ஆகிய கவிதைச் சிகரங்களில் பாரதி கூறிய வானவியல் பற்றிய பாடல்களைக் காண்போம்:

பாஞ்சாலி சபதம்

‘பாரடியோ!வானத்திற் புதுமை யெல்லாம்,

பண்மொழீ!கணந்தோறும் மாறி மாறி
ஓரடிமற் றோரடியோ டொத்த லின்றி

உவகையுற நவநவமாய் தொன்றுங் காட்சி
யாரடிஇங் கிவைபோலப் புவியின் மீதே

எண்ணரிய பொருள் கொடுத்தும் இயற்ற வல்லார்?
சீரடியால் பழவதே முனிவர் போற்றுஞ்

செழுஞ்சோதி நவப்பையெலாம் சேரக் காண்பாய். 148

‘கணந்தோறும் வியப்புக்கள் புதிய தோன்றும்;

கணந்தோறும் வெவ்வேறு கனவு தோன்றும்;
கணந்தோறும் நவநவமாங் களிப்புத் தோன்றும்;

கருதிடவும் சொல்லிடவும் எளிதோ?ஆங்கே,
கணந்தோறும் ஒருபுதிய வண்ணங் காட்டிக்

காளிபரா சக்தி அவள் களிக்குங் கோலம்
கணந்தோறும் அவள் பிறப்பாள் என்று மேலோர்

கருதுவதன் விளக்கத்தை இங்குக் காண்பாய். 149

‘அடிவானத் தேஅங்கு பரிதிக் கோளம்

அளப்பரிய விரைவினொடு சுழலக் காண்பாய்
இடிவானத் தொளிமின்னல் பத்துக் கோடி

எடுத்தவற்றை ஒன்றுபட உருக்கி வார்த்து,
முடிவான வட்டத்தைக் காளி ஆங்கே

மொய்குழலாய்,சுழற்றுவதன் மொய்ம்பு காணாய்!
வடிவான தொன்றாகத் தகடி ரண்டு

வட்டமுறச் சுழலுவதை வளைந்து காண்பாய். 150

அமைதியடு பார்த்திடுவாய் மின்னே!பின்னே

அசைவுறுமோர் மின்செய்த வட்டு;முன்னே
சமையுமொரு பச்சைநிற வட்டங் காண்பாய்.

தரணியிலிங் கிதுபோலோர் பசுமை உண்டோ?
இமைகுவிய மின்வட்டின் வயிரக் கால்கள்

எண்ணில்லா திடையிடையே எழுதல் காண்பாய்;
உமை கவிதை செய்கின்றாள்,எழுந்து நின்றே

உரைத்திடுவோம்,”பல்லாண்டு வாழ்க!”என்றே. 151

வேறு

‘பார்;சுடர்ப்பிரிதியைச் சூழவே படர்முகில்
எத்தனை தீப்பட் டெரிவன?ஓகோ!
என்னடி!இந்த வன்னத் தியல்புகள்!
எத்தனை வடிவம்!எத்தனை கலவை!
தீயின் குழம்புகள்!-செழும்பொன் காய்ச்சி
விட்ட ஓடைகள்!-வெம்மை தோன்றாமே
எரிந்திடுந் தங்கத் தீவுகள்!-பாரடி!
நீலப் பொய்கைகள்!-அடடா,நீல
வன்ன மொன்றில் எத்தனை வகையடி!
எத்தனை செம்மை!பசுமையுங் கருமையும்,
எத்தனை!-கரிய பெரும்பெரும் பூதம்!
நீலப் பொய்கையின் மிதந்திடுந் தங்கத்
தோணிகள் சுடரொளிப் பொற்கரை யிட்ட
கருஞ்சிக ரங்கள்!-காணடி,ஆங்கு
தங்கத் திமிங்கிலம் தாம்பல மிதக்கும்
இருட்கடல்!-ஆஹா!எங்கு நோக்கிடினும்
ஒளித்திரள்!ஒளித்திரள்!வன்னக் களஞ்சியம்!’ 152

*

பாஞ்சாலி சபதம் காவியத்தில் பாட்டு 148-7,8அடிகளுக்கு பாரதியின் விளக்கம்:-

சீரடியார் பழவேத முனிவர் போற்றுஞ் செழுஞ் சோதி – சீர்களும் அடிகளும் இயைந்த மந்திரங்களால் முன்னைய வேத ரிஷிகள் போற்றிய ஞாயிறு

இங்கு சூர்யாஸ்தமய வர்ணனை கூறப்படுகிறது. இப்பாடல்களின் கருத்து நன்கு விளங்கும் பொருட்டு நமது ‘கர்மயோகிப்’ பத்திரிகையிலே இவ்விஷயத்தைப் பற்றி எழுதியுள்ள உபந்யாஸமொன்றை இங்கு தருகின்றோம்.

ஸூர்யாஸ்தமயம்

உலகத்தில் எங்கு பார்த்தாலும் நிறைந்து கிடக்கும் லாவண்யங்களைத் தமிழர்கள் கவனிப்பது கிடையாது. சனிக்கிழமை சாயங்காலந்தோறும் குளக்கரைகளிற் போய்க் கருடன் பார்ப்பதெற்கென்றால் நம்மவர்கள் கூட்டம் கூட்டமாக ஓடுகிறார்கள். சூர்யாஸ்தமய காலத்தில் வானத்திலே தோன்றும் அதிசியங்களைப் பார்க்க ஒருவன் கூடப் போவதில்லை. அப்போது வானத்திலே இந்திரஜால மஹேந்திர ஜாலங்களெல்லாம் நடக்கின்றன. இந்த க்ஷணம் இருந்த தோற்றம் அடுத்த க்ஷணம் இருப்பதில்லை. உலகத்திலுள்ள திரவிய முழுவதையும் செலவிட்டு வர்ணக் காட்சிகள் ஏற்படுத்திப் பார்ப்போமானாலும் அது சூர்யாஸ்தமய காலத்தில் வானத்திலே நாம் பொருட்செலவில்லாமல் பார்க்கக்கூடிய காட்சிகளிலே கோடியிலொரு பங்கு கூடக் காணாது. வாணவேடிக்கைகள் பார்க்க ஒரு செல்வன் பதினாயிரக்கணக்கான திரவியம் செலவிடுகிறான். அவ்னது செல்வத்தினாலன்றோ இந்தக் காட்சி சுலபமாகிறதென்று அதையே பார்த்து ஆயிரம் ஏழைகள் பெருமூச்செறிகிறார்கள். ஸஹோதரா! ஸூர்யாஸ்தமயத்தின் விநோதங்களைச் சென்று பார். ஸூர்யனைப் பார்த்தால் கண்ணுக்குக் கெடுதி என்ற குருடர் நம்பிக்கையைப்  பொருட்டாக்காதே. ஸூர்யனைப் பார்ப்பது பாவமென்று சொல்லும் மூடர் சாஸ்திரத்தைக் கண் கொண்டு பார்க்காதே.

    நமது நாட்டில் வேத காலத்து ரிஷிகள் பிரகிருதியின் சௌந்தர்யங்களைக் கண்டு மோஹித்துப் பரமானந்தமெய்தியவர்களாய்ப் பல அதிசியமான பாடல்கள் பாடியிருக்கிறார்கள். பிரகிருதியின் அழகைக் கண்டு பரவசமெய்திக் காளிதாஸன் முதலிய பெருங்கவிகள் அற்புதக் கவிதைகள் செய்திருக்கின்றனர். இக்காலத்திலே தான் இந்த துரதிர்ஷ்ட நிலை கொண்ட நாட்டில் வானம் பார்த்தறியாத குருடர்களெல்லோரும் கவிகளென்று சொல்லி வெளி வருகிறார்கள்.

    ஸூர்யாஸ்தமயத்தின் அற்புத சௌந்தர்யங்களை எழுதிப் பிறர் மனதில் படும்படி செய்வது சாத்தியமில்லை. (நேரிலே கொண்டு காட்டினாலும் பலருக்கு ஆரம்பத்திலே கண் கூசுவது தான் அர்த்தமாகுமேயல்லாமல் விஷயம் தெரியாது.) ஸஹோதரா! நீயாகவே போய்ப் பல தினம் அடுத்துப் பார்க்க வேண்டும். பிறகு தான் உனக்கு அந்தத் தெய்வக் காட்சி சிறிது சிறிதாக விளங்கும். ஸூர்யோதயத்திலேயும் ஸூர்யாஸ்தமயத்திலும் வானத்தில் நடக்கும் இந்திரஜாலக் காட்சியில் க்ஷணந்தோறும் புதிய புதிய விநோதங்கள் மாத்திரமேயன்றி இன்னுமொரு விசேஷமுண்டு. நேற்று இருந்தது போல இன்றைக்கு இராது. இன்று இருப்பது போல நாளை இராது. தினந்தோறும் வெவ்வேறு வியப்புக்கள். வெவ்வேறு உலகங்கள். வெவ்வேறு மஹிமைகள். வெவ்வேறு கனவுகள். வெவ்வேறு ஆனந்தங்கள். வெவ்வேறு அநிர்வசனீயங்கள்.

    சில தினங்களின் முன்பு ஓர் மாலைப்பொழுதில் நான் கண்ட அதிசியங்களை ஒருவாறு இங்குக் குறிப்பிடுகிறேன். அடிவானத்தில் ஸூர்ய கோளம் தகதகவென்று சுழன்று கொண்டிருந்தது. இருபது கோடி மின்னல்களை எடுத்து ஒரு சக்கரமாக வார்த்துச் சுழற்றுவது போலிருந்தது. ஆரம்பத்திலே தான் கண்கூசும். சிறிது நேரம் உற்று நோக்கிக் கொண்டிருந்தால், பிறகு கண் கூச்சம் தீர்ந்து போய் விடும். இரண்டு வட்டத் தகடுகள்  ஒன்றின் மேலொன்று சுழலும். கீழே இருப்பது சுத்தமான மின்வட்டம். மேலே இருப்பது மரகத வட்டம். பச்சை வர்ணம்! அற்புதமான பசுமை.

     பச்சைத் தகடு பின்புறத்திலிருக்கு மின் தகட்டை முழுவதும் மறைத்துக் கொண்டிருக்கும். ஆயினும் இடையிடையே பின்னுள்ள வட்டத்தின் வயிரக் கிரணங்கள் கண்மீது பாயும்.

    பார்! ஸுர்யனைச் சுற்றி மேகங்களெல்லாம் தீப்பட்டெரிவது போலத் தோன்றுகிறது! ஆஹா! என்ன வர்ணங்கள்! எத்தனை வித வடிவங்கள்! எத்தனை ஆயிர விதமான கலப்புக்கள்! அக்கினிக் குழம்பு! தங்கம் காய்ச்சியிட்ட ஓடைகள்! எரிகின்ற தங்கத் தீவுகள்!

    நீல ஏரிகள்! கரும் பூதங்கள்! எத்தனை வகை நீலம்! எத்தனை விதச் செம்மை! எத்தனை வகைப் பசுமை! எத்தனை விதக் கருமை! நீல ஏரியின் மீது மிதக்கும் தங்கத் தோணிகள்! எரிகின்ற தங்க ஜரிகைக்கரைப் போட்ட கரிய சிகரங்கள்! தங்கத் திமிங்கலங்கள்! மிதக்கும் செங்கடல்! எங்கு பார்த்தாலும் ஒளித்திரள், வர்ணக் களஞ்சியம்.போ, போ, என்னால் அதை வர்ணிக்க முடியாது.

*

குயில் பாட்டு

வான நடுவிலே மாட்சியுற ஞாயிறுதான் 
மோனவொளி சூழ்ந்திடவும் மொய்ம்பிற் கொலுவிருந்தான், 

மேலைக் கதையுரைக்க வெள்கிக் குலையுமனம், 
காரைக் கதிரழகின் கற்பனைகள் பாடுகிறேன். … 30 

தங்க முருக்கித் தழல் கறைத்துத் தேனாக்கி 
எங்கும் பரப்பியதோர் இங்கிதமோ? வான்வெளியைச் 
சோதி கவர்ந்து சுடர்மயமாம் விந்தையினை 
ஓதிப் புகழ்வார் உவமையொன்று காண்பாரோ? 
கண்ணையினி தென்றுரைப்பார்; கண்ணுக்குக் கண்ணாகி … 35 



விண்ணை அளக்கும்மொளி மேம்படுமோர் இன்பமன்றோ? 
மூலத் தனிப்பொருளை மோனத்தே சிந்தை செய்யும் 
மேலவரும் அஃதோர் விரியுமொளி என்பாரேல் 
நல்லொளிக்கு வேறுபொருள் ஞாலமிசை யொப் புளதோ? 
புல்லை நகையுறுத்திப் பூவை வியப்பாக்கி … 40 

மண்ணைத் தெளிவாக்கி, நீரில் மலர்ச்சி தந்து 
விண்ணை வெளியாக்கி விந்தைசெயுஞ் சோதியினைக் 
காலைப் பொழுதினிலே கண்விழித்து நான்தொழுதேன். 

நான் முகனே! … 75 

பண்டே யுலகு படைத்தனைநீ என்கின்றார். 
நீரைப் படைத்து நிலத்தைத் திரட்டி வைத்தாய் 
நீரைப் பழைய நெருப்பிற் குளிர்வித்தாய். 
காற்றைமுன்னே ஊதினாய் காணரிய வானவெளி 
தோற்றுவித்தாய், நின்றன், தொழில்வலிமை யாரறிவார்? … 80 

உள்ளந்தான் கவ்வ ஒருசிறிதுங் கூடாத 
கொள்ளைப் பெரியவுருக் கொண்ட பலகோடி 
வட்ட வுருளைகள் போல் வானத்தில் அண்டங்கள் 
எட்ட நிரப்பியவை எப்போதும் ஓட்டுகின்றாய்; 
எல்லா மசைவில் இருப்பதற்கே சக்திகளைப் … 85 

பொல்லாப் பிரமா, புகுத்திவிட்டாய் அம்மாவோ! 
காலம் படைத்தாய் கடப்பதிலாத் திக்கமைத்தாய்; 
ஞாலம் பலவினிலும் நாடோ றுந் தாம்பிறந்து 
தோன்றி மறையும் தொடர்பாப் பல அனந்தம்! 

*

இதுவரை கூறிய பாடல் பகுதிகளால் பாரதியார் வானக் காட்சிகள் மீது கொண்ட மோகத்தைப் பார்க்கிறோம்.

வானக் காட்சிகளைத் தமிழர் கவனிப்பது கிடையாது என்று அவர் அங்கலாய்க்கிறார்.

சந்திரன், சூரியன், நட்சத்திரங்கள், தாரகைக் கூட்டம், அண்டங்கள் உள்ளிட்ட அனைத்தையும் அவர் வியப்புடன் பார்க்கிறார்; அதன் உண்மை தெளிகிறார்; நமக்குப் புலப்படுத்துகிறார்.

இன்னும் வசன கவிதையிலும் உரை நடைப் பகுதிகளிலும் அவர் ஞாயிறு, நட்சத்திரம், நிலா ஆகியவை பற்றிக் கூறியவை ஏராளம் உள்ளன.

அவற்றையும் சேர்த்துப் படித்தால் வானவியல் கவிஞன் பாரதி என்று ஒரு புதிய பரிமாணத்தை மஹாகவி பாரதியாரில் நாம் காண முடியும்.

பாரதியைக் கற்றால் வானவியலையும் கற்றது போலத் தான் என்று கூறி இந்தக் குறுந்தொடரை முடிக்கிறேன்.

வாழ்க பாரதி நாமம்; வாழ்க அறிவியல்!

****