வத்தக்குழம்பு வைப்பது எப்படி? (Post No.6286) by S Nagarajan
யாருடி போன்? திருப்பித் திருப்பி ஆஃப் செய்றே?
“அது தான் என் ஃபிரண்டும்மா. லக்ஷ்மிம்மா. வெளியூர்லேர்ந்து வந்திருக்கே. பசிங்கறே! இப்ப அவளோட பேச ஆரம்பிச்சா நீ சாப்ட்ட மாதிரி தான். அதான் அப்பறம் பேசிக்கலாம்னு போனை ஆஃப் பண்றேன்.”
“அட, லக்ஷ்மியா! அவளை ஏண்டி கட் பண்றே! அப்படி என்ன பேசுவா, அவ?”
“வத்தக்குழம்பு எப்படி வைக்கறதுன்னு கேட்பா. மோர்க்குழம்பு எப்படி செய்றதுன்னு கேட்பா! அப்பறம் நாளைக்கு விடிஞ்சு போகும்.”
“சீ! அபத்தமா பேசாதடி. அஞ்சு நிமிஷத்திலே நான் சொல்லிக் கொடுத்திடுவேன். அவளைக் கூப்பிடு. அவள் க்ஷேமமா இருக்காளான்னு கேட்ட மாதிரியும் இருக்கும்”
“அம்மா, உனக்கு இன்னிக்கு நேரம் சரியில்லைன்னு நெனக்கிறேன். நீ இன்னிக்கி பசிலே மயக்கம் போட்டு விழப்போற. எதுக்கும் டாக்டர் இருக்காரான்னு செக் பண்ணிக்கறேன்.”
“எந்த பிராண்டு மாமி. பிஸ்லேரி தான் ஒசத்திங்கிறா. ஆனா என்கிட்ட பட்டர்பிளை தான் வரது”
“பட்டர்பிளையா! அது பறக்கலையோன்னோ. பறக்காம இருந்தா சரி, அதையே வச்சுக்கோ. கொதிக்க வை”
“மாமி எத்தனை டம்ளர்னு சொல்லலையே மாமி”
“உத்தேசமா நாலு டம்ளர் எடேன்”
“டம்ளர் எத்தனை மில்லி லிட்டர் மாமீ?”
“ஓ, அதைக் கேட்கறயா, 150 மில்லி லிட்டர் டம்ளர்லே எடேன்”
கொதிக்க வை.
“மாமி, டெம்ப்ரேச்சர் எவ்வளவு இருக்கணும் மாமி?”
“இதென்னடிம்மா, கேள்வி. கொதிக்கணும் அவ்வளவு தான்!”
“டெம்பரச்சர் சொன்னா சௌகரியமா இருக்கும்”
‘ஒரு நூறு டிகிரி வச்சுக்கோயேன்”
“மாமீ, பாரன்ஹீட்டா, செண்டிக்ரேடா”
“நல்ல வேளை, கெல்வினை விட்டுட்டயே. எனக்குக் கொஞ்சம் தலை சுத்தறது. கொதிக்க வச்சயா இல்லையா?”
“மாமி, கோபிச்சுக்காதேள். நல்ல விவரமா சொல்றேள். அப்பறம்?”
“புளியைத் தனியாக் கரை”
‘எந்தப் புளியை மாமி, கொட்டை இருக்கறதா, இல்லை, கொட்டை எடுத்ததா? மங்களூர் புளியா இல்லை, பிராண்டட் புளியா?”
“ எது கிடைக்கறதோ அதை எடுத்துக்கோ. நன்னா, கரை.’
“எப்படி கரைக்கறது மாமி. வெறும் கையாலயா, க்ளவுஸ் போட்டுக்கணுமா?”
“ஏண்டீ, நீ லாஸ் ஏஞ்சலஸ்லேர்ந்து எப்ப வந்தே? அங்கே ஏதோ கோர்ஸ் படிச்சயாமே, அங்க எப்படி கரைக்கச் சொன்னா?”
“மாமீ! கோபிச்சுக்காதேள். சில சமயம் க்ளவுஸ் போட்டுக்கணும். சில சமயம் கூடாது. சரி புளியைக் கரைக்கறேன். எவ்வளவு கிராம்னு சொல்லலை. அதை உருட்டணுமா, ஸ்குய்ரா போடணுமா, ரெக்ட் ஆங்கிளா ஆக்கணுமான்னும் சொல்லலே!”
“அடி லக்ஷ்மீ! அம்மா மயக்கம் போட்டுட்டா. புளியை கரைச்சு வச்சுக்கோ. ஞாபகமா அடுப்பை ஆஃப் பண்ணிடு. எப்படி ஆஃப் பண்ணணும்னு ஆரம்பிச்சுடாதே. சௌகரியப்பட்டபடி ஆஃப் பண்ணு. இப்ப நான் போனை ஆஃப் பண்றேன்.”
63 நாயன்மார்களில் எட்டாவது நாயன்மாராக இடம் பெற்று போற்றப்படுபவர்
எறிபத்த நாயனார்.
இவர் கரூரைச் சேர்ந்தவர்.
இவரைப் போற்றி கொங்கு மண்டல சதகத்தில் 27வது பாடலாக இடம் பெறும்
பாடல் இது :
நதிசூடும் வேணிக் கருவூர்ப் பசுபதி நம்பருக்குப்
புதுமாலை கட்டுஞ்ச் சிவகாமி யாண்டவன் போந்தெருவின்
மிதமீறிப் பூவினைச் சிந்துகை யான்விறன் மீறவெட்டி
மதயானை யைக்கொன் றெழுப்பிய துங்கொங்கு மண்டலமே
பாடலின் பொருள் : கரூர்ப் பசுபதி ஈஸ்வரருக்காக மாலை கட்டும்
திருத்தொண்டினை மேற்கொண்டிருந்தவர் சிவகாமி ஆண்டவர். அவர் பூக்கூடையைப் பிடுங்கி எறிந்த
யானையைக் கொன்று பின்னர் எழுப்பியதும் கொங்கு மண்டலமே.
அருமையான திருவிளையாடல் ஒன்றைக் கூறும் பாடல் இது.
எறிபத்தர் என்பவர் கரூரில் வாழ்ந்து வந்த சிவனடியார். அடியார்களுக்கு
ஆபத்து வந்தால் அதற்குக் காரணமாக இருந்தவர்களை வெட்டுகின்ற கொள்கையைக் கடைப்பிடித்து
வந்தவர் அவர். ஒரு நாள் சிவகாமி ஆண்டவர் என்பவர் பூக்களை எடுத்துக் கொண்டு தெருவழியே
வந்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த நாட்டை
ஆளும் புகழ்ச் சோழனாரது பட்டத்து யானை மதம் கொண்டு அபூக்கூடையைப் பிடுங்கித்
தூர எறிந்தது. இதனைக் கண்ட எறிபத்தர் அந்த யானையையும் கூட வந்த பாகர்களையும் கொன்றார்.
இவரது அன்பின் திறத்தைக் கண்ட புகழ்ச் சோழனார் சிவனடியார்க்குத்
தீங்கு செய்த யானையை வளர்த்தது தான் தானே என மனம் நொந்து தன்னையும் அல்லவோ அவர் கொல்ல
வேண்டும் என்று எண்ணினார். எறிபத்தரிடம் தன் வாளைக் கொடுத்துத் தன்னைக் கொல்லுமாறு
வேண்டினார். ‘ஆஹா! சிறந்த பக்தியுள்ள சோழனாரைக் கொல்லும் தீங்கை அல்லவோ இழைக்க வேண்டி
இருக்கிறது’ என்று பதைபதைத்த எறிபத்தர் தன் கழுத்தை அவ்வாளால் அறுக்க முயன்றார்.
இதைக் கண்ட புகழ்ச் சோழனார் மனம் நடுங்கி எறிபத்தரின் கையையும் வாளையும் பிடித்துக்
கொண்டார்.
அப்போது ஆகாயத்திலிருந்து அசரீரி – ஆகாயவாணி – ஒன்று எழுந்தது.
அதன் படி இறந்த யானையும் பாகர்களும் உயிர்பெற்று எழுந்தனர்.
சிவபெருமானின் இந்த அருள் விளையாட்டைக் கண்டு மக்கள் பக்திப்
பரவசம் எய்தினர்.
அப்படிப்பட்ட எறிபத்த நாயனார் வாழ்ந்து யானை உயிர்ப்பிக்கப்பட்டது
கொங்கு மண்டலத்திலேயே என்று புகழ்கிறது கொங்கு மண்டல சதகம்.
இவ்வரலாறைக் கூறும் திருத்தொண்டர் புராண சாரத்தில் வரும் பாடல்
இது:
கோபால
கிருஷ்ணபாரதியார் ஒரு யோகி, கவிஞர், சங்கீத
மேதை.
அவர்
நரிமணம் என்னுமிடத்தில் 1811ம் ஆண்டில் பிறந்து புகழ் கொடி
நாட்டியவர்.
அவர்
பற்றிய சுவையான இணைப்பைப் படிப்பதற்கு முன் சில் வார்த்தைகள்:–
அவர்
வாழ்நாள் முழுதும் பிரம்மச்சாரி.
தந்தை
பெயர்—
ராமசாமி பாராதியார்
தாத்தா
பெயர்–
கோதண்டராம ஐயர்
குருவின்
பெயர்– கோவிந்த
சுவாமி ஐயர், மாயூரம்
சீடர்களில்
முக்கியமானவர்- மாயவரம் முனிசீப் வேத நாயகம் பிள்ளை
இறந்த
ஆண்டு- 1896
நந்தனார்
சரித்திரம் நூலாக வர உதவியவர் – பிரெஞ்சு அதிகாரி- சீசய்யா.
கோபால
கிருஷ்ண பாரதியார் ,
தனது
படைப்பில் பல புதுமைகளையும் சேர்த்தார்.
பெரியபுராணம், நம்பியாண்டாரின் திருத்
தொண்டத்தொகையில் மிகச் சுருக்கமாக நந்தன் சரித்திரம் உளது. அதில் அந்தணர்ர்-
நந்தன் வாக்குவாதம்,
இரவில்
சிவ பெருமானே விவசாய வேலைகளைச் செய்து அந்தண நில உரிமையாளரை வியக்கச் செய்தது
முதலிய சில அம்சங்களை கோபால கிருஷ்ண பாரதியார் சேர்த்தார். பிற்காலத்தில் அவரது
கீர்த்தனைகள் தண்டபாணி தேசிகர் முதலிய சங்கீத மேதைகளால் பாடப்பட்டதாலும்
திரைப்படப் பாடல்களாக வந்ததாலும் மிகவும் பிரபலமாகின.