

WRITTEN BY LONDON SWAMINATHAN
swami_48@yahoo.com
Date: 22 AUGUST 2019
British Summer Time uploaded in London – 9-02 am
Post No. 6915
Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both blogs 12,000.








R.Nanjappa (@Nanjundasarma)
/ August 22, 2019நாமக்கல் மலைமீது பெரிய நாமம் இருந்தது உண்மை. நான் 60களில் சேலத்திலிருந்து திருச்சி செல்லும் போது அதைப் பார்த்திருக்கிறேன்.
நந்தி உருவம் போல் வேறு பல தெய்வ உருவங்களும் பிற இடங்களிலும் இருக்கலாம். இத்தகைய ஆஞ்சனேயர் உருவம் ஒன்றை நான் அறிவேன். 60களில் சேலம்-பங்களூர் ரயில் பாதை (மீட்டர் கேஜ்) புதிதாக அமைக்கப்பட்டு வந்தது. அதில் தர்மபுரியிலிருந்து சுமார் 12 மைல் தொலைவில் முத்தம்பட்டி என்ற இடத்தில் ரயில் தண்டவாளம் உயரத்தில் இருக்கும். இருபக்கமும் உயர்ந்த குன்று/மலை. கன்ட்ராக்டர் தினமும் அங்கு ஜல்லிக்கல்லைக் கொட்டி தளத்தை உயரச்செய்வார்;மறுநாள் காலையில் அது கலைந்திருக்கும்! இப்படி பலமுறை நடந்தபின் அங்கு வேலை செய்பவர்களுக்கு ஏதோ பயம் தோன்றியது. அப்போது ரயில் தடத்தின் இருபுறமும் வளர்ந்திருந்த செடிகொடி புதர்களை நீக்கி மலையைத் தேடிப்பார்த்தார்கள். ஒருபுறம் மலையில் ஒரு ஆஞ்சனேயர் உருவம் செதுக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. உடனே கன்ட்ராக்டர் தன் செலவில் அதற்குமுன் ஒரு மேடை அமைத்து, கோபுரம்போல் ஏதோ சிறிதாகக் கட்டுவதாகவும் , பூஜைக்கு ஏற்பாடு செய்வதாகவும், ஆஞ்சனேயர்தான் தடங்கல் இல்லாமல் ரயில் பாதை சரியாக அமைய அருள்புரியவேண்டும் என்றும் வேண்டிக்கொண்டார். அதன்பிறகு வேலைகள் துரிதமாக நடந்தன. கன்ட்ராக்டரும் தன் வேண்டுகோள்படி ஆஞ்சனேயர் திருமுன் மேடை அமைத்து, கோபுரம் போல் சிறிய அமைப்பையும் மலையையொட்டியே எழுப்பி, 1967ல் பெரிய விழாவாக பூஜை செய்தார். இந்த உருவம் எப்போது யார் செதுக்கியது என்று தெரியவில்லை. இது வியாசராயர் நிறுவிய 732 விக்ரஹங்கள் போல் இல்லை. சேலம்-பெங்களூர் புதிய இருப்புப்பாதையில் 1968 ஜனவரி பொங்கலன்று ரயில் போக்குவரத்து தொடங்கியது. அதன்பிறகு ஒவ்வொரு வருடமும் தை அமாவாசையன்று அந்த ஆஞ்சனேயருக்கு விழா எடுத்தார்கள். அப்போது முத்தம்பட்டிக்குச் செல்ல யாரும் டிக்கட் வாங்கவேண்டியதில்லை! முத்தம்பட்டி ஸ்டேஷன் சிறிது தள்ளி இருந்தாலும் பாசஞ்சர் ரயிலை கோவிலுக்கு நேரெதிரிலேயே நிறுத்துவார்கள். எக்ஸ்பிரஸ் வண்டி அங்கு வரும்போதெல்லாம் இஞ்சினில் விசில் அடித்து தங்கள் மரியாதையைத் தெரிவிப்பார்கள். இப்படிப் பல வருஷங்கள் நடந்தன. தற்போது நிலை தெரியவில்லை!
Tamil and Vedas
/ August 22, 2019Thanks for very Interesting information about Muthampatti Anjaneyar.