
WRITTEN BY London Swaminaathan
swami_48@yahoo.com
Date: 22 SEPTEMBER 2019
British Summer Time uploaded in London – 16-45
Post No. 7002
Pictures are taken from various sources;
beware of copyright rules; don’t use them without permission; this is a non-
commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and
tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs
11,000.
கிரேக்க மன்னன் பிர்ரஸ் (Pyrrhus of Epirus, 318- 272 BCE) உலகையே வென்ற பின்னaர் சின்ன வீடு கட்டி சுகமாக இருக்கப் போவதாகச் சொன்னான். பாரதியோ உலகையே வெல்ல நினைக்காமல் காணி நிலம் போதும் என்றார். அவர் ஒரு வேதாந்தி. இதோ பிர்ரஸுக்கும் வேதாந்திக்கும் நடந்த வாக்குவாதமும் பாரதி பாடலும்:-



R.Nanjappa (@Nanjundasarma)
/ September 22, 2019இந்தக் கதை இப்பொழுது ஒரு நவீன வடிவில் வழங்கி வருகிறது.
அமெரிக்கக் கோடீசுவரன் ஒருவன் மெக்ஸிகோ நாட்டின் ஒரு சிறிய கடலோரக் கிராமத்துக்கு சுற்றுலாவில் வந்தான். அப்போது மெக்ஸிக மீனவன் ஒருவன் ஒருசிறிய படகில் அன்றைய மீன்மூட்டையைத் தோளில் சுமந்தவாறு கீழே இறங்கி நடந்தான். அமெரிக்க கோடீசுவரன் அவனை அணுகி, ‘ஏன் இவ்வளவு சிறிய மூட்டை, உன் படகும் சிறியது” என்றான்,
மீனவன்: இதுவே என் குடும்பத்திற்குப் போதுமானது.
கோ: பின் என்ன செய்வாய்?
மீ: இதை சந்தையில் விற்பேன். தேவையான பொருள்களை வாங்குவேன். என் மனைவி வேண்டியதைச் சமைத்துப் போடுவாள் வயிறார உண்போம். சிறிது கிராமத்தைச் சுற்றுவோம். ஜாலியாக ஒரு பெக் போடுவோம். என்
நண்பர்களுடன் சேர்ந்து கிதார் வாசித்து ஆடிப்பாடி பொழுதுபோக்குவோம். நன்றாக தூங்குவோம். காலையில் நேரம் கழித்தே எழுந்திருப்பேன். பிறகு மீன் பிடிக்கச் செல்வேன். எப்பவும் சந்தோஷம்தான்.
கோ: நீ ஏன் இப்படிச் சிறிய படகை வைத்துக்கொண்டிருக்கிறாய்? பெரிய படகு வாங்கு, நிறைய மீன் பிடி. பணம் அதிகம் சேரும். இன்னும் பெரிய படகு வாங்கலாம். இன்னும் அதிக பணம் சேரும். இன்னும் பல படகுகள் வாங்கலாம். கப்பலே வாங்கலாம். ஆழ் கடலில் சென்று அமோகமாக மீன் பிடிக்கலாம். லட்சாதிபதி, கோடீஸ்வரனாக ஆகி விடலாம். பின், இந்தக் கிராமத்தை விட்டு மெக்ஸிகோ சிடி, நியூ யார்க் எனச் செல்லலாம்.
மீ: இதற்கு எத்தனை காலம் பிடிக்கும்?
கோ : 15-20 வருஷங்கள் ஆகலாம்
மீ: பின்?
கோ: பின் என்ன? எல்லாம் இன்ப மயம்தான். உன் படகு-கப்பல்களையெல்லாம் அதிக லாபத்திற்கு விற்று பணத்தை எங்காவது முதலீடு செய்துவிட்டு ஹாயாக காலம் தள்ளலாம். என்னைப் போல் நீயும் சுற்றுலா கிளம்பலாம், பல கடற்கரைக் கிராமங்களைப் பார்த்து ரசிக்கலாம். உன் மனைவி-குழந்தைகளுடன் ஜாலியாகச் சுற்றலாம். நண்பர்களுடன் சேர்ந்து கொட்டமடிக்கலாம். கவலையில்லாமல் தூங்கி மெதுவாக எழுந்திருக்கலாம்.ஆசைக்கு கொஞ்சம் மீனும் பிடிக்கலாம்.
மீ: அதைத்தானே இப்போதே செய்துகொண்டிருக்கிறேன்!
இந்தக் கதை பல வடிவங்களில் உலா வந்துகொண்டிருக்கிறது.
அல்கா நல்குரவு அவா எனப் படுமே
செல்வம் என்பது சிந்தையின் நிறைவே என நாம் சொல்கிறோம்.
Contentment is a continuous joy.
நவீன பொருளாதாரம் இந்த நிலையைக் கெடுத்து வருகிறது.
ஒரு ஹிந்தி சினிமா பாட்டில் கவிஞர் ஷைலேந்த்ரா இதை நன்றாக விவரித்தார்: [ Musafir, 1957]
एक आए एक जाए मुसाफिर
दुनिया एक सराय रे
एक आए एक जाए…
अलबेले अरमानों के तूफ़ान लेकर आए
नादान सौ बरस के सामान लेकर आए
और धूल उड़ाता चला जाए
एक आये एक जाए…
Ek aaye ek jaye musafir
Duniya ek saray re
Ek aaye ek jaye musafir……….
Albele armano ke Tufan lekar aaye
Nadan sao baras ke Saman lekar aaye
Albele armano ke……
Aur dhul udata chala jaye
Ek aaye ek jaye musafir
Duniya ek saray
ஒருவன் வருகிறான், ஒருவன் போகிறான்
அப்பனே, இந்த உலகம் ஒரு வழிப்போக்கன் தங்கும் விடுதி போன்றது.
புயல்போல் ஆசையை மனதில் தாங்கி
என்னென்னவோ நினைத்து வருகிறான்
நூறு வருஷங்களுக்கென்று தேவையில்லாததை யெல்லாம்
சேர்த்து வைக்கிறான்.
போகும் போது வெறும் புழுதிதான் கிளம்புகிறது
Tamil and Vedas
/ September 23, 2019VERY INTERESTING STORY AND RELEVANT HINDI FILM SONG. THANKS..