

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 18 NOVEMBER 2019
Time in London – 11-02 am
Post No. 7229
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

ஓம் ஸ்ரீ கோல்ப் ப்ரியாயை நமஹ!
ஓம் ஸ்ரீ கோல்ப் பந்துப் ப்ரியாயை நமஹ!!
ஓம் ஸ்ரீ கோல்ப் ஸ்டிக்ஸ் ப்ரியாயை நமஹ!!!
தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் பஸ் டிரைவர்களும் லாரி ட்ரைவர்களும் திடீரென்று வண்டி வாகனங்களை நிறுத்திவிட்டு ஒரு கல்லுக்கோ சிலைக்கோ பய பக்தியுடன் தேங்காய் உடைப்பர் அல்லது வாகனத்தின் டயருக்கு அடியில் ஒரு எலுமிச்சம் பழத்தை வைத்து நசுக்குவர். இது போன்ற நம்பிக்கைகள் உலகெங்கும் பல கலாசாரங்களில் உண்டு. அப்படிச் செய்தால் நன்மைகள் உண்டாகும் என்றும் செய்யாவிடில் வழியில் விபத்து நேரும் என்றும் நம்பிக்கை.
இவைகள் பாராட்டப்படவேண்டிய, பின்பற்றப்பட வேண்டிய நம்பிக்கைகள். ஒரு வண்டி ஓட்டிக்கு ஒரு தேங்காயோ அல்லது எலுமிச்சம்பழமோ தன்னம்பிக்கையை வளர்க்குமானால், தைரியத்தைக் கொடுக்குமானால் அது வாழ வேண்டிய நம்பிக்கையே.
எங்கள் லண்டனில் பைத்தியங்களைக் குணப்படுத்த மூன்று வகை ஆட்கள் உண்டு. இரண்டு வகை ஆட்கள் அரசாங்கத்திடம் (NHS) சம்பளம் வாங்குவர். மூன்றாவது வகை மக்களிடம் காசு பெறுவர்;
முதல் வகை சைகாலஜிஸ்ட் PSYCHOLOGIST (AANUAAL SALARY AROUND £ 50,000)- உள்ளவியல் டாக்டர்- உங்களுக்கு என்ன பயமோ அதை ஒரு மணி நேரம் திரும்பத் திரும்பச் சொல்லச் சொல்லுவர்; இப்படிச் சொன்னால் பயம் போய்விடுமாம் (நம் ஊரில் அதைப் பற்றி நினைக்காதே; வேறு எவ்வளவோ பேர் இதைவி மோசமாகக் கஷ்டப்பட்டு இப்போது நல்ல வாழ்க்கை வாழுகின்றனர் என்று தைரியம் ஊட்டுவோம்).
இரண்டாவது வகை சைக்கியாட்ரிஸ்ட் PSYCHIATRIST (ANNUAL SALARY AROUND £ 40,000) – மன நோய்க்கு மருந்து கொடுக்கும் டாக்டர்கள்; மூன்று கேள்விகளுக்கு ‘ஆமாம்’ என்று பதில் சொல்லிவிட்டால் லித்தியம் LITHIUM TABLETS மாத்திரைகளைக் கொடுத்து வாயில் நுரை தள்ள வைத்து, செக்ஸ் உறுப்புகளை செயல் படாமல் செய்ய வைத்து ஆளின் கதையை ஒரு வகையாக முடித்து, பிரமை பிடித்தவன் போலச் ஆக்கி விடுவார்கள்.
மூன்றாவது வகை சைகிக்ஸ் PSYCHICS – மாயா ஜால மந்திரம் மூலம் உடலில் உள்ள பைத்தியப் பேயை விரட்டுவதாகச் சொல்லி காசு பறிப்பர். இதில் ஓரளவு உண்மை உண்டு. அதர்வண வேதத்திலும் இருக்கிறது. ஆனால் பெரும்பாலான மந்திர தந்திர வித்தைக் காரர்கள் மோசடிக்காரர்கள்; பெண் பேய்கள் வந்தால், தொட்டும் கட்டியும் வைத்தியம் செய்வர். பேய் பிடித்த பெண்களைத் தனியே சிகிச்சை பெறுவதற்கு அனுப்பிவிடாதீர்கள்.
GOLF GODDESS ANNAKA HARUNA
இதையெல்லாம் பார்க்கையில் கோல்ப் GOLF விளையாட்டு தேவிக்கு கோல்ப் GOLF குச்சி மாலை போடுவதில் தவறில்லை. இதோ என்னுடைய 1992ம் ஆண்டு 16-2-1992 தினமணிக் கட்டுரை. நேற்று கூகிள் GOOGLE செய்ததில் சில படங்களும் கிடத்தன. அந்த தேவியின் பெயர்- அன்னக்கா ஹருனா ANNAKA HAARUNA IN JAPAN









–subham–