

Post No.7794
Date uploaded in London – 7 April 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
2700 ஆண்டுகளுக்கு முன்னர் பாணினி என்ற ரிஷி உலகின் முதல் இலக்கண புஸ்தகத்தை எழுதினார். அதன் பெயர் அஷ்டாத்யாயி; அதாவது எட்டு/அ ஷ்ட அத்தியாயங்கள். நாம் எப்படி த்ருண தூமாக்கினி என்ற ரிஷி எழுதியதை தொல்காப்பியம் என்று அழைக்கிறோமோ அப்படி பாணினி பெயரால் அந்த நூலை பாணினீயம் என்றும் அழைப்பர்.
(காப்பிய (காவ்ய) கோத்திரத்தில் பிறந்ததால் அவருக்கு தொல்காப்பியன் என்ற பெயரும் உண்டு.) tamilandvedas.com, swamiindology.blogspot.com
பாணினி திருவள்ளூவருக்கும் மேலாக ஒரு படி சென்று ரத்தினச் சுருக்கமாக இலக்கணத்தை எழுதிவிட்டுப் போய்விட்டார் . புத்தகமாகப் போட்டால் 35 பக்கம்தான் வரும். ஆனால் உலகம், இவர் எழுதியது பற்றி இன்னும் எழுதிக் கொண்டே இருக்கிறது. அவர் சொல்லுமொரு சுவையான விஷயம் ‘உத்ய- பித்ய’ ஆறுகள் பற்றிய விஷயமாகும் .

பாணினி சொல்கிறார் —
பித்யோத் த்யௌ நதே —
சூத்திரம் 3-1-115
அதாவது தான் கூறிய இலக்கண விதிக்குப் புறம்பாக இப்படியும் உத்ய , பித்ய நதிகள் பெயர்கள் உளது என்று இயம்புகிறார்.
பித்ய – கரையை உடைக்கும் ஆறு;
உத்ய – கரை புரண்டு ஓடும் ஆறு
உத்ய , பித்ய நதிகள் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் எல்லைப்பகுதி நதிகள் என்றும் அவை ரவி என்னும் நதியின் உபநதிகள் என்றும் ஆராய்ச்சியாளர் விளம்புவர். இவை மழைக்காலத்தில் மட்டும் வெள்ளப் பெருக்கெடுத்து சேதம் விளைவிப்பதால் இந்தப் பெயர்கள் ஏற்பட்டதாக சிலர் பகர்வர்.
உலகப் புகழ் பெற்ற காளிதாசன் எழுதிய ரகு வம்ச காவியத்தில் பித்ய – உத்ய நதிகளை ராம லெட்சுமணர்களின் நடைக்கு ஒப்பிடுகிறார்.
இன்னும் ஒரு இடத்ததில் யமுனை- கங்கை நதிகளை சிவ பிரானின் வெண்மை நிற உடலுக்கும் அவர் கழுத்தில் நெளியும் பாம்புக்கும் ஒப்பிட்டிருக்கிறார். கங்கை நதி வெள்ளையாக இருக்கும்.அதில் கலக்கும் யமுனை நதி கருப்பாக இருக்கும் . இன்றும் இக்காட்சியைக் காணலாம்.
ராமனும் லெட்சுமணனும் teenage boys ‘ டீன் ஏஜ் பாய்ஸ்’ ; அவ்விருவரும் கைகளை வீசிக்கொண்டு விசுவாமித்திர முனிவனைப் பின்தொடர்ந்து நடந்தனர். அவர்கள் காட்டுப் பாதையில் போனதைக் காளிதாசன் வருணிக்கிறார் . tamilandvedas.com, swamiindology.blogspot.com
“மேகம் வரும் மழைக் காலத்தில் எப்படி உத்யம், பித்யம் என்ற நதிகள் பெயருக்கு ஏற்றபடி செயல்படுகின்றனவோ அதுபோல அலை வீசும் கைகளையும் மெதுவாக நடைபோடும் கால்களையும் அவ்விரு பாலகர்களும் கொண்டிருந்தனர்”– -ரகு வம்சம் 11-8
உத்யம் என்றால் தண்ணீரைப் பெருக்குவது என்று பொருள்; பித்யம் என்றால் கரைகளை உடைக்கிறது என்று அர்த்தம். பெரும்பாலான நதிகள் மழைக்காலத்தில் இதைத்தான் செய்கின்றன. ஆயினும் ஜம்மு பகுதியில் உள்ள இந்த இரு நதிகள் பெயரிலேயே அவைகளைக் கொண்டுவிட்டன. சின்னப் பையன்களான ராம லெட்சுமண கை வீச்சும், கால் வீச்சும் அப்படி இருந்தனவாம்.

கங்கை யமுனை நதிகள் உவமை
திரு நீறு அணிந்த- சுடுகாட்டுச் சாம்பலைப் பூசிக்கொண்ட– சிவனின் உடல் வெள்ளை நிறத்தில் காட்சி தரும்.
அதில் கலக்கும் கரு நிற யமுனை நதி, சிவன் கழுத்திலுள்ள பாம்பு போலக் காட்சி தரும் என்கிறார் காளிதாசன் –ரகு வம்சம் 13-54/57
நாம் கற்கும் பாடங்கள்
காளிதாசன் 2200 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தார்; ஏனெனில் அவர் பயன்படுத்திய சுமார் 200 உவமைகள் சங்கத் தமிழ் பாடல்களில் உள்ளன. அது மட்டுமல்ல. அவர் குப்தர் காலத்துக்கு 500, 600 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர் என்று இந்திய வெளிநாட்டு அறிஞர்களும் காரண காரியங்களுடன் விளக்கியுள்ளனர். அவருக்கு 500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர் பாணினி. ஒரு உவமையை ஒருவர் கையாள வேண்டுமானால் அது எல்லோருக்கும் தெரிந்ததாக இருக்க வேண்டும். கங்கை யமுனை நதிகளைத் தெரியாதோர் எவருமிலர். சங்கத் தமிழ் பாடல்களிலேயே இரு நதிகளும் புனித நதிகளாகப் பாடப்பட்டுள்ளன. ஆனால் உத்ய , பித்ய நதிகள் பற்றிப் பாணினியும் காளிதாசனும் பகராவிடில் நமக்குத் தெரியாது. ஆயினும் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இவை எல்லோருக்கும் தெரிந்த நதிகள் என்பது உவமையிலிருந்து கிடைக்கும் செய்தியாகும். tamilandvedas.com, swamiindology.blogspot.com
वीचिलोलभुजयोस्तयोर्गतम्
शैशवाच्चपलमप्यशोभत।
तोयदागमे इवोद्ध्यभिद्ययोः
नामधेयसदृशम् विचेष्टितम्॥ ११-८
vīcilolabhujayostayorgatam
śaiśavāccapalamapyaśobhata |
tooyadāgame ivoddhyabhidyayoḥ
nāmadheyasadṛśam viceṣṭitam || 11-8
vIcilolabhujayostayorgatam
shaishavAccapalamapyashobhata |
tooyadAgame ivoddhyabhidyayoH
nAmadheyasadR^isham viceShTitam || 11-8
क्वचिच्च कृष्णोरगभूषणेव
भस्माङ्गरागा तनुरीश्वरस्य।
पश्यानवद्याङ्गि विभाति गङ्गा
भिन्नप्रवाहा यमुनातरङ्गैः॥ १३-५७
kvacicca kṛṣṇoragabhūṣaṇeva
bhasmāṅgarāgā tanurīśvarasya |
paśyānavadyāṅgi vibhāti gaṅgā
bhinnapravāhā yamunātaraṅgaiḥ || 13-57
kvachichcha kR^iShNoragabhUShaNeva
bhasmA~NgarAgA tanurIshvarasya |
pashyAnavadyA~Ngi vibhAti ga~NgA
bhinnapravAhA yamunAtara~NgaiH || 13-57
slokas taken from Sanskrit documents.org


tags — ராமன், லெட்சுமணன், உத்ய , பித்ய நதிகள் , கங் கை, யமுனை ,சிவன்
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX