சிலப்பதிகாரக் கதை : கோழி -யானை சண்டை (Post No.7871)

கரிகாற் சோழன் அமைத்த பருந்து வடிவ யாக குண்டம்

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7871

Date uploaded in London – 23 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

திருச்சிக்கு  அருகிலுள்ளது உறையூர். ஒரு காலத்தில் சோழரின் தலைநகராக விளங்கியது . இதற்கு மற்றோரு பெயர் கோழியூர்  . புறநாநூற்றில் (பாடல் 212)   கோப்பெருஞ்சோழனை பிசிராந்தையார் ‘கோழியோன்’ என்று பாடுகிறார்.

இதன் பின்னாலுள்ள கதையை வைத்து சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் ‘வார்த்தா ஜாலம்’ செய்கிறார். சம்ஸ்கிருதத்தில் ‘வாரணம்’ என்ற சொல்லுக்கு யானை, கோழி/சேவல் என்று இரு பொருள் உண்டு. இவைகளை இளங்கோ அடிகள் ‘முறச் சிறை வாரணம்’, ‘புறச் சிறை வாரணம்’ என்று வருணிக்கிறார்.  அதாவது முறம் போன்ற காதுகளுடைய யானையும் புறத்தே சிறகுகளுடைய கோழியும் போரிட்டதில் இறுதியில் கோழி வென்றது. இதன் காரணமாக உறையூருக்கு ‘கோழியூர்’ என்றும் அதைத் தலைநகராகக் கொண்டு அரசாண்ட  சோழனுக்கு ‘கோழியோன்’  என்ற சிறப்பு அடை  மொழிகளும் உண்டு. உறையூருக்குள் கோவலனும்  கண்ணகியும் புகுந்ததைச் சொல்லும் போது, இதைப் போகிற போக்கில் இளங்கோ சொல்லுவதால்   அ ந்தக் காலத்தில் இது எல்லோருக்கும் தெரிந்த விஷயமாக இருந்திருக்க வேண்டும். பிசிராந்தையாரின் குறிப்பைப் பார்க்கையில் இது 2000 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது என்பது தெளிவாகிறது .

காவுந்தி ஐயையும் தேவியும் கணவனும்

முறம்செவி வாரணம் முன்சமம் முரு க்கிய

புறஞ்சிறை வாரணம்  புக்கனர் புரிந்துன்

–நாடுகாண் காதை , புகார்க் காண்டம் , சிலப்பதிகாரம்

இது குறித்து உரைகள் விளம்புவது யாதெனில்,

முற்காலத்தே ஒரு கோழி, யானையை எதிர்த்து போரில் புறங் கொடுத்தோடச் செய்தது . இன் நிகழ்ச்சியைக்கண்ட சோழ மன்னன் இந்நிலத்திற்கு ஒரு சிறப்புண்டென்று கருதி அவ்விடத்தே தன தலை நகரை அமைத்துக்கொண்டு அரசாட்சி செய்தனன். அந்த நகருக்கே ‘கோழி’ என்று பெயர் சூட்டினான் . அதனைக் காணும் அவாவோடு கண்ணகியும் கோவலனும் அவ்வூருக்குள் நுழைந்தனர் .

‘கோழியூர்’ என்பதற்கு உரைகாரர்கள் மற்றோரு விளக்கமும் தருவார்கள்.  அந்நகரம் அமைக்கும்போது கழுத்து போலவும் இரு புறம் சிறகுகள் இருப்பது போலவும் — பறவை வடிவில் — நகரம் அமைக்கப்பட்டதால் புறம் சிறை வாரணம் என்று இளங்கோ சொன்னதாக வியாக்கியானம் செய்வர் சிலர். இது அடியார்க்கு நல்லாரின் உரையில் உளது.

இவ்வாறு பல பிராணிகள் – ஊர்களை தொடர்புபடுத்தும் கதைகள் பாரத நாடு முழுதும் இருக்கின்றன. வேட்டை நாய்கள் முயல்களை விரட்டிச் சென்றபோது, திடீரென்று வேட்டை நாய்களை முயல்கள் வீரம் கொண்டு விரட்டத்  துவங்கியதைக் கண்ட வீர பாண்டிய கட்டபொம்மன் அந்த இடத்தில் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையைக் கட்டினான். ‘புலியை விரட்டு’ என்று முனிவர் சொன்னவுடன் அதை விரட்டிக் கொன்ற மன்னரின் வம்சம் ‘ஹொய்சாள’ எனப்பட்டது. மயில் வளர்த்த சாதாரணக் குடிமகனை சாணக்கியன் என்ற பார்ப்பன ன், பிராமணத் துவேஷிகள் நிறைந்த  நந் த வம்சத்தை அடியோடு ஒழித்ததால் மயில் வளர்த்த முராதேவியின் வம்சம் ‘மௌர்ய வம்சம்’ ஆயிற்று. கர்ப்ப நிலையில் தவித்த தவளைக்கு பாம்பு குடை பிடித்து பாதுகாப்பு கொடுத்ததைக் கண்ட ஆதிசங்கரர், அந்த சிருங்கேரியில் முதல் மடத்தை அமைத்தார் என்பர். இப்படி ஒவ்வொரு ஊரிலும் ஒரு கதை இருப்பது இந்துக்களின் இயற்கையோடு இயைந்த வாழ்வைக் காட்டுகிறது .

பருந்து வடிவில் அமைந்த யாக குண்டத்தில் கரிகாற் சோழன் யாகம் செய்ததை சங்க இலக்கியம் கூறும். பறவை வடிவில் படை வியூகம் அமைத்த செய்தி மஹாபாரதத்தில் வருகிறது.

tags – கோழி , கோழியூர், உறையூர் , வாரணம், சிலப்பதிகாரம், யானை , சண்டை , கோழியோன்

-subham-

Leave a comment

Leave a comment