
மே மாத 2020 நற்சிந்தனை காலண்டர் –
Post No.7890
Date uploaded in London – 27 April 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
வேற்றுமைகள் நிறைந்த, வினோதமான உலகம் பற்றிய 31 பழ மொழிகள் மே மாத காலண்டரை அலங்கரிக்கின்றன
ஏகாதசி -3, 18; பௌர்ணமி–7; அமாவாசை–22;
சுப முகூர்த்த தினங்கள் – மே 4,6,13,18,24,27
பண்டிகை/ விடுமுறை நாட்கள் – மே 1 தொழிலாளர் தினம், 4–அக்கினி நட்சத்திர ஆரம்பம், 7 -சித்ரா பௌர்ணமி, 17-தத்தாத்ரேய ஜயந்தி , 28- அக்கினி நட்சத்திர முடிவு.

மே 1 வெள்ளிக் கிழமை
ஸர்வம் பதம் ஹஸ்தி பதே நிமக்நம் —
ஒரு யானையின் காலடிச் சுவட்டில் எல்லா விலங்குகளின் சுவடுகளும் அடங்கி விடும்.
**
மே 2 சனிக் கிழமை
ஸத் க்ருத்ய பூர்வம் பரதோபி பூயதே – முதலில் உபசரிப்பு , பின்னர் அவமதிப்பு .
**
மே 3 ஞாயிற்றுக் கிழமை
முதல் நாள் தலை வாழை இலை , இரண்டாம் நாள் தையல் இல்லை, மூன்றாம் நாள் கையில , நாலாம் நாள் தரையில சாப்பாடு
**
மே 4 திங்கட் கிழமை
சிலாயாம் கமலலோத்பவ — பாறையில் முளைத்த தாமரை
**
மே 5 செவ்வாய்க் கிழமை
சேற்றில் முளைத்த அழகான செந்தாமரை
**
மே 6 புதன் கிழமை
ரோஜாவில் முள்
**
மே 7 வியாழக் கிழமை
ஹஸ்தி ஸந்தே பிபீலிகா — யானைக் கூ ட்டத்தில் ஒரே ஒரு எறும்பு
**

மே 8 வெள்ளிக் கிழமை
சூர்யா பத்யம் சனிர்ஹந்த தீப பத்யம் து கஜ்ஜலம் — சூரியனுக்கு மகன் சனி! விளக்கிற்கு மகன் கருப்பு மை!!
**
மே 9 சனிக் கிழமை
சிரோ வேஷ்டனே நாசிகா ஸ்பர்சஹ –தலையைச் சுற்றி கையை வளைத்து மூக்கைத் தொட்டானாம் .
**
மே 10 ஞாயிற்றுக் கிழமை
தும்பை விட்டு வாலைப் பிடித்தானாம்
**
மே 11 திங்கட் கிழமை
ப்ராதர்சோ க்ருஹே நாஸ்தி, பிராஹ்மணானாம் நிமந்த்ரணம்
–காலைச் சோற்றுக்கே வழியில்லை ; பிராமணர்களை விருந்துக்கு அழைத்தானாம்
**
மே 12 செவ்வாய்க் கிழமை
வாத்தியார் பிள்ளை மக்கு; வைத்தியர் பிள்ளை சீக்கு sick/ நோயாளி .
**
மே 13 புதன் கிழமை
மாதா தாசி , பித்த தாஸஹ , புத்ரஹ சம்ராட் சிரோமணிஹி
அப்பாவும் அம்மாவும் வேலைக்காரர்கள் , மகனோ மகா ராஜன்

**
மே 14 வியாழக் கிழமை
ராமோ வாசி, ஹ்யசிகி பார்ஸ்வே
அருமையான பேச்சு, கையிலே வாள் வீச்சு
**
மே 15 வெள்ளிக் கிழமை
அரசனை நம்பி புருஷனைக் கைவிட்டாளாம்
**
மே 16 சனிக் கிழமை
க்ருஹஸ்தாம் தேவதாம் ஹித்வா பஹிர் சே த்யஸ்ய பூஜனம்
வீட்டிலுள்ள தேவதையை விட்டு விட்டு இடுகாட்டில் பூஜை செய்தனானாம்
**
மே 17 ஞாயிற்றுக் கிழமை
இடம் வலம் தெரியாதவன் இரண்டாயிரம் பேருக்கு உடற்பயிற்சி கற்றுக்கொடுக்கிறான்
**
மே 18 திங்கட் கிழமை
இடப ராசி கொடுக்கிறது, மேட ராசி கெடுக்கிறது
**
மே 19 செவ்வாய்க் கிழமை
இடித்தவள், புடைத்தவள் இங்கேயிருக்க எட்டிப்பார்த்தவள் கொட்டிக்கொண்டு போனாளாம்.
**
மே 20 புதன் கிழமை
தாய் தவிட்டுக்கு அழுகையில் பிள்ளை இஞ்சிப் பச்சடி கேட்கின்றது.
**
மே 21 வியாழக் கிழமை
பழுத்த ஓலையைப் பார்த்து குருத்து ஓலை சிரிக்கிறதாம்
**
மே 22 வெள்ளிக் கிழமை
வாய் சர்க்கரை ,கை கொக்கரை
கொக்கரை = கைத்தாளம்
**
மே 23 சனிக் கிழமை
பேர் பெரிய பேர், குடிக்கப் போனால் நீர் கிடையாது .
**
மே 24 ஞாயிற்றுக் கிழமை
பழி ஓரிடம் , பாவம் வேறிடம்
**

மே 25 திங்கட் கிழமை
அஹாரி ஸீதா தசகண்டரேன , பத்தஹ பயோதி ரகுநந்தனேன
சீதையைக் கடத்தியது ராவணன் , ராமன் கோபத்தில் அணைபோட்டது கடலுக்கு.
**
மே 26 செவ்வாய்க் கிழமை
அசாரு சாறுசுக்கினாம் , சாரு துக்காய துக்கினா ம் —
மகிழ்ச்சியாக இருப்பவனுக்கு கெட்டதும் இன்பமானதாகவே தோன்றும் , அழுமூஞ்சிகளுக்கோ நல்லதும் துக்கம் தருவதாகவே தோன்றும்.
**
மே 27 புதன் கிழமை
சித்திரைக்கு சித்தப்பா, பெரியப்பா ; வைகாசிக்கு வாங்காணும் , போங்காணும்
**
மே 28 வியாழக் கிழமை
காலில் முள் குத்தினாலும் கண்ணில்தான் வரும் கண்ணீர்.
**
மே 29 வெள்ளிக் கிழமை
கையிலே காசு இல்லை, வாசலில் நாட்டியக்காரி .
நாஸ்தே கபர்திகா கேஹே , த்வாரே ந்ருத்யதி நிருத்திகா.
**
மே 30 சனிக் கிழமை
தோஷம் ததாதி லேகன்யாயசமர்த்தோ அஸ்தி லேகனே .
எழுத முடியாதவன் பேனாவில் கோளாறு என்றானாம்.

**
மே 31 ஞாயிற்றுக் கிழமை
தாட்தோட்டக்காரனுக்கு தயிரும் சோறும், விசுவாசக்காரனுக்கு வெந்நீரும் பருக்கையும்
tags – சூரியன் , மகன், சனி, மே 2020,, காலண்டர்
Xxxx subham xxxx