
WRITTEN BY S NAGARAJAN
Post No.7785
Date uploaded in London – – 5 April 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ச.நாகராஜன்

பிரதமர் நரேந்திர மோடி ஜியை தரக்குறைவாக சாய் வாலா என்று ஒருவர் விமரிசனம் செய்தார்.
நாட்டில் உள்ள அனைவருமே ஏழை முதல் பணக்காரர் வரை அதை புகழாரமாக எடுத்துக்கொண்டு ‘உயர்ப்பால் உயர்ந்தவர்’, ‘பேதமற்ற பெருமனிதர்’ என்பன போன்ற பட்டங்களை அள்ளி வீசினர்.
சாய் வாலா என்று பேசியவர் ஙே என்று விழித்தார்; இன்றும் விழித்துக் கொண்டிருக்கிறார்.
மோடி அவர்களைத் தட்டிப் பார்த்தால் அவர் ஒரு தங்கம் – பத்தரை மாத்துத் தங்கம் என்பதை நாட்டு மக்கள் புரிந்து கொண்டனர்.
எந்த ஒரு பிரதம மந்திரிக்கும் இல்லாத, அல்லது எந்த ஒரு அரசருக்கும் இல்லாத வரலாறு காணாத ஒரு சவாலை – கொரானாவை அவர் எதிர் கொண்டிருக்கிறார்.
பேரரக்கன் கொரானாவைக் கண்டு உலகப் பெரும் தலைகள் அரண்டு மிரண்டு போயிருக்கும் இந்த நேரத்தில், ஒன்று கூடி வீட்டிலிருந்தே, நமக்காகத் தம்மை அர்ப்பணிக்கும் போலீஸ், நர்ஸ்கள், டாக்டர்கள், வியாபாரிகள், அரசு ஊழியர்கள், தன்னலம் கருதாத் தொண்டர்கள் உள்ளிட்ட அனைவருக்கும், பாராட்டும் நன்றியும் தெரிவிக்கும் வகையில் கையைத் தட்டச் சொன்னார்; தட்டினோம்.
உலகம் வியந்தது; இந்திய ஒற்றுமையைப் பார்த்து பிரமித்தது.
இது என்ன புது டெக்னிக் என்று! மற்ற நாடுகளும் கைகளைத் தட்ட ஆரம்பித்தன.அடுத்து தமஸோ மா ஜோதிர் கமய என்ற உத்தியை – இருளிலிருந்து ஒளிக்கு இட்டுச் செல்லும் தீப மங்கள ஜோதியை ஏற்றச் – சொல்லி வேண்டிக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்திய மக்கள் ஜோதி ஏற்ற என்றுமே தயங்கவே மாட்டார்கள்!
ஹி ஹி இது என்ன டார்ச் லைட் என்பவர்களுக்கு வரலாறு காண்பிக்கும் உண்மைகள் பல
உப்பால் நாடு ஒன்று படுமா, இது என்ன உப்பு சத்யாக்ரஹம் என காந்திஜிக்கு அருகில் இருந்த பல தலைவர்களே சந்தேகம் கொண்டார்கள்; சிலர் ‘குழந்தைத்தனமானது இது’ என்று கோபமும் கொண்டார்கள்.
ஆனால் நாடே உப்பால் ஒன்று திரண்டது; வெள்ளைக்காரனை அரள வைத்தது.
அந்த உப்பு போல இந்த ஜோதியும் ஒற்றுமையை வளர்க்கும். அனைவரையும் இணைக்கும்.
மோடி ஜி இன்று எதிர் நோக்கும் தலையாய சவால்கள் நூற்றுக் கணக்கில் உள்ளன; வரலாறு காட்டும் தலைவர்கள் எவரும் எதிர் கொள்ளாத சவால் என்று துணிந்து அடித்துக் கூறலாம்.
அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கு பார்க்கலாம்:
- ‘பிரமிக்கத்தக்க விதத்தில் நாட்டை ஓரிழையில் கொரானா காலத்தில் இணைத்து விட்டாரே, இந்த நாட்டை எப்படிச் சிதைப்பது’ என்று அரண்டு போயுள்ள பாகிஸ்தான் போன்ற நாடுகள் பல வித கெட்ட உத்திகளைக் கையாளும். இவர்களுக்குத் தக்க பதில் தர வேண்டும்.
- அரண்டு போயுள்ள பிரிட்டிஷ் மற்றும் மேலை நாட்டுப் பத்திரிகைகள் கெட்ட செய்திகளை இட்டுக் கட்டி வெளியிடுகின்றன. இப்படிப் பட்ட உலக பத்திரிகைகளின் பொய்களை முறியடித்து உண்மையை உலகின் முன் வைக்க வேண்டும்.
- பிற நாட்டுப் பத்திரிகைகள் ஒரு புறம் இருக்கட்டும், இந்தியத் திருநாட்டில் ஐந்தாம்படை வேலை பார்க்கும் சில ஊடகங்களும், பத்திரிகைகள், குட்டி டிவிக்கள் மணிக்கு ஒரு பொய்ச் செய்தி என்பதை வெளியிட்டு மதக்கலவரம், இனக்கலவரம் ஆகியவற்றிற்கு வித்திடுகின்றன. இதை நீக்க வேண்டும்.
- பொருளாதாரச் சரிவு என்பது நினைத்துப் பார்க்க முடியாத அளவு போகும். இதைச் சரி செய்து மீள வேண்டும். ‘மனித உயிர்கள் தான் முதலில், ‘அவர்களுக்கான பொருளாதாரம் அடுத்து’ என்று உறுதியாகக் கூறிய அவர் அன்றாடக் கூலி வேலை பார்த்துப் பிழைக்கும் தொழிலாளிகள், அவ்வப்பொழுது கிடைக்கும் சவாரி கொண்டு வாழ்க்கை நடத்தும் ஆட்டோ ஓட்டிகள் போன்ற பல நூறு துறைகளைச் சார்ந்தோருக்கு உதவ வேண்டும். 130 கோடி பேர் கொண்ட நாடு என்பதை நினைக்கும் போது இது ஒரு பெரிய சவால்.
- ஏற்கனவே தீய நோக்கத்திற்காக இந்தியாவிற்குள் பணம் அனுப்பி வந்த என் ஜி ஓக்களைக் கட்டுக்குள் கொண்டுவந்ததற்காகக் கடுப்பில் இருப்போர் கொரானாவை எப்படித் தங்கள் நோக்கத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் திட்டமிடுவர். இதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
- தொழிற்சாலைகள் இயங்காதிருத்தல், போக்குவரத்து முடக்கம், இயல்பான வாழ்க்கை இன்மை, கல்விச்சாலைகள் மூடி இருத்தல் – இவை எல்லாம் தற்காலிக நிறுத்தம் என்றாலும் பழைய தடத்தில் இயல்பாக இயங்க வைக்க வேண்டும். இது ஒரு பெரிய சவால்.
- ஒரே நாடு என்ற சிந்தனை இன்றி, தனி இனம், மொழி, கலாசாரம் என்று பிதற்றி வந்து கொண்டே இருக்கும் சில குரூப்புகள் அயல்நாட்டுப் பணத்திற்கு இரையாகாமல் இருக்க வேண்டும்.
- ஒவ்வொரு வளர்ச்சித் திட்டத்திற்கும் தடை போடும் கட்சிகள், தவறான ஆட்களுக்கு பேச்சு சுதந்திரம், தனி நபர் உரிமை என்ற பெயரில் துணை போகும் அமைப்புகள் தரப் போகும் குடைச்சலை எதிர் கொள்ள வேண்டும்.
- குடைச்சலைக் கொடுத்துக் கொண்டே இருக்கும் சீனாவை பல்துறைகளிலும் பாங்காக எதிர்கொண்டு வெல்ல வேண்டும்.
இன்னும் பல, பற்பல!
ஆனால் மோடி ஜியின் உடலில் ஓடுவது இந்திய மக்களின் அன்பு என்னும் இரத்தம். அந்த உடலைத் தட்டிப் பார்த்தால் தங்கமாக இருக்கிறது. அது மற்ற உலோகங்களை எளிதாக வெல்லும்!
ஒவ்வொரு இந்தியனும் இந்த வரலாறு காணாத ஆபத்துக் காலத்தில் மோடி ஜிக்கு உற்ற துணையாக இருக்க வேண்டும். இருப்போம்; வெல்வோம்

tags- நரேந்திர மோடி, தமஸோ மா ஜோதிர் கமய, கொரானா
***


















































