Faith Story and Mahatma Gandhi (Post No.7895)

Compiled  BY LONDON SWAMINATHAN

Post No.7895

Date uploaded in London – 28 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

‘One who has indomitable faith and controls his senses attains divine knowledge. Having obtained the knowledge, he quickly attains the supreme peace’.

Bagavad Gita 4-39

Let me tell you how powerful faith is. A man was about to cross the sea from Ceylon to India. Vibhishana, the saintly brother of demon Ravana, said to him,

“Tie this in a corner of your wearing cloth and you will cross the sea safely . You will be able to walk on the water. But be sure not to examine it, or you will sink”.

The man was easily walking on the water of the sea – such is the strength of faith. When having gone part of the way, he thought, what is this wonderful thing, Vibhishana has given me , that I can even walk on the water?

He untied the cloth and found nothing, but a leaf with the name Rama written on it.

“Oh, only this”, he thought and immediately sank.

Xxx

Mahatma Gandhi on Faith

A disciple may not make rapid progress because of lack of faith in the goal. We must have faith.

As Mahatma Gandhi has said,

“Faith is not a delicate which would whither under stormy weather. Faith is like the Himalaya mountains which cannot possibly change. No storm can possibly remove the Himalayas from their foundations . And I want everyone of you to cultivate that faith in God and Religion. For the development of spiritual knowledge it is essential to cleanse one’s heart of all material dirt and control the senses. The time taken to gain knowledge varies from person to person. One must realise that nothing can be mastered overnight. Through practice and perseverance, the apparently can be accomplished”.

The Essential Teachings of Hinduism, Kerry Brown, London

Xxx

Swami Vivekananda on Faith

Faith is not belief, it is the grasp on the Ultimate an illumination.

**

He who has no faith in himself can never have faith in god.

**

A man must not only have faith but intellectual faith too.

**

Faith is one of the potent factors of humanity and of all religions.

**

Faith, faith, faith in ourselves, faith, faith, faith in god— this is the secret of greatness.

**

It is faith that makes a lion out of a man .

**

The essence of our Faith consists simply in the freedom of the ‘Ishta’.

**

So long you have faith in your Guru , nothing will be obstruct your way.

**

The ‘Shraddha’ must enter into you.

tags – Faith, quotes, Vivekananda, Gandhi, Vibhishana

–SUBHAM–

வெள்ளைக்காரன் விளக்கங்களை நம்பாதே – குமாரில பட்டர் (Post No.7894)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7894

Date uploaded in London – 28 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்னர் வட இந்தியாவில் வாழ்ந்த மாபெரும் தத்துவ மேதை குமாரில பட்டர் . முதல் முதலில் தமிழ் மொழியை திராவிட பாஷை என்று குறிப்பிட்டவர். ஆதி சங்கரர் விவாதத்துக்கு வந்த போது , அவரை தனக்கு வயதாகி விட்டதால் மண்டன மிஸ்ரருடன் விவாதியுங்கள் என்று நர்மதை நதிக்கரையில் உள்ள மஹிஷமதி நதி தீர  நகரத்துக்கு அனுப்பியவர். இவர் மிலேச்சர்களாகிய வெளிநாட்டுக்காரன் சொல்லும் விளக்கங்களை ஏற்காதே என்று  1300 வருஷங்களுக்கு முன்னரே செப்பியவர். பல தமிழ் சொற்களை தனது சம்ஸ்கிருத நூலில் குறிப்பிட்டவர்.

குமாரில பட்டர் பற்றிய அதிசயமான விஷயங்களை முன்னரே பல கட்டுரைகளில் எழுதிவிட்டேன். அதை படிக்காதோருக்கு இதோ அதிசயப் பட்டியல்:-

முதல் அதிசயம்

புத்த மதத்தினர் போல நடித்து நாளந்தா பல்கலைக்கழகத்தில் (Nalanda University)  படித்தபோது ஒருநாள் புத்தமத தலைவருடன் கடுமையான வாக்குவாதாத்தில் இறங்கியபோது இவரது குட்டு வெளிப்பட்டது . உடனே பலகலைக் கழகத்தின் ஏழாவது மாடியில் இருந்து குதித்தார் . அப்படிக் குதிக்கையில் நான் சொல்லும் வேதங்கள் உண்மையென்றால் எனக்கு ஒரு காயமும் ஏற்படக்கூடாதென்று சொல்லி குதித்தார் . ஐயருக்கு செமை அடி. குருவிடம் போனார்.

“என்ன சுவாமிகளே; நம்முடைய தத்துவமே வேதத்தில் உள்ள சடங்குகள்தான் பிரமாணம்; வேதாந்தம் எல்லாம் பின்னார்தான் என்னும் பூர்வ மீமாம்சை தத்துவாமயிற்றே. அதன் மீது சத்தியம் செய்து குதித்த என் கதியைப் பார்த்தீர்களா?” என்று ஐயப்பாடு கிளப்பினார். குரு சிரித்துக் கொண்டே சொன்னார்– நீதான் வேதத்தின் மீதே  சந்தேகப்பட்டாயே ; அதான் உனக்கு இந்த அடி- என்றார் . வேதங்கள் உண்மையானால் — என்று ஒரு ‘ஆல்’ (If)  சேர்த்தாயே ; ஏன் ? உனக்கே முழு நம்பிக்கை இல்லையா?” என்று வினவ குமாரில பட்டர் தன் தவற்றை உணர்ந்தார்.

இரண்டாவது அதிசயம்

‘‘காலா ! உனை சிறு புல்லென நான் மதிக்கிறேன் என்றன்  காலருகே வாடா ! சற்றே  உனை மிதிக்கிறேன்’ என்று பாடினார் பாரதி. இப்படி சாவையும் துச்சமென மதித்தவர் குமாரில பட்டர். சங்கரர் வாதம் செய்ய வந்தபோது இவர் உமிக்கரி குவியலுக்கு  இடையில் உட்கார்ந்து கொண்டு தனது உடலை அணு அணுவாக எரித்துக்கொண்டு இறந்தார் . புத்த மதத்தினரிடம் பொய் சொன்ன பாவத்தைக் கழுவ இப்படி செய்தார். ஆனால் ஞானத்தீ யில் மூழ்கியவரை உண்மைத் தீ வாட்டாது. ‘மிதிலை எரிந்திட வேதப் பொருளை வினவிய ஜனக’ மன்னனை பாரதியார் பாடியதை நாம் அறிவோம்.

மூன்றாவது அதிசயம்

குமாரில பட்டரை வென்றால் உமது அத்வைத சாஸ்திரம் வட இந்தியாமுழுதும் பட்டொளி வீசிப் பறக்கும் என்று சொன்னதால் ஆதி சங்கரர் இவரை நாடி வந்தார். அவரோ இவரை மண்டன மிஸ்ரர் வீட்டுக்கு அனுப்பிவிட்டார். கையிலோ ‘மொபைல் போன்’ கிடையாது. வண்டியிலோ ‘கூகிள் மேப் , சாட்டலைட் நேவிகேஷன்’ (Google Map, Satellite Navigation) இல்லை. எப்படி மிஸ்ரர் வீட்டை அடையாளம் கண்டுபிடிப்பது ? நர்மதைக் கரையில் குளித்துக் கொண்டிருந்த பெண்களிடம் கேட்டார். அவர்களுக்கு ஒரே சிரிப்பு; ஒரு சின்னப்பையன் நம்ம ஊர் அய்யரோட வாதம் செய்ய வந்திருக்கிறானே என்று நகைத்து ‘சம்ஸ்கிருத மொழியில் விடுகதை வடிவில்’ வழி சொன்னார்கள். அவர்களுக்கு ஆதி சங்கரர் பரமசிவன் அவதாரம் என்பது தெரியாது. சங்கரர் வழி கண்டு பிடித்தார். வீட்டின் கதவு ‘திதி’ என்பதால் தாளிடப்பட்டிருந்தது . ஒரு மரத்தை வளையும்படி சங்கரர் கட்டளை இட்டார்; மரமும் யானை, மன்னரை ஏற்றிக்கொள்ள குனிவது போல குனிய அதன் மேல் ஏறி வீட்டுக்குள் குதித்தார்.

நாலாவது அதிசயம்

மண்டன மிஸ்ரருடன்  வாதம் செய்யும் போது , பட்டிமன்ற நடுவர் வேண்டுமே. ‘வேதத்தின் சடங்குதான் முக்கியம்; இறைவனைப் பற்றி கவலை இல்லை’  என்று சொல்லும் பூர்வ மீமாம்சை தத்துவம் மிஸ்ரர் தத்துவம். வேதாந்தமே முக்கியம்; இறைவன் உண்டு; அவனுடன் ‘அஹம் பிரம்மாஸ்மி’ என்று ஐக்கியமாவதே லட்ச்சியம் என்பது உத்தர மீமாம்சை. அதை ஆதரிப்பவர் சங்கர்; இருவரும் உலக மஹா மேதாவிகள்; இந்த மேதாவிகளுக்கு ஈடு கொடுக்கும் ஒரே ஆள்தான் அந்த ஊரில் உண்டு. அவள்தான் மிஸ்ரரின் மனைவி சரசவாணி ; சரஸ்வதி தேவியின் மறு  அவதாரம். அவர் பட்டிமன்ற நடுவராக இருக்க சம்மத்தித்தார். அவள் சைக்காலஜி  (Doctorate in Psychology)

படிப்பில் டாக்டரேட் வாங்கியவள். ஆகையால் சொன்னாள் – ‘நான் தீர்ப்பு சொல்கையில் என் கணவர் என்பதால் அவருக்கு சாதமாகத் தீர்ப்பு சொல்லிவிட்டேன் என்ற அபவாதம் எனக்கு வரக்கூடாது. ஆகையால் இருவர் கழுத்திலும் மாலை போட்டுக் கொள்ளுங்கள். யார் மாலை முதலில் வாடுகிறதோ அவர்தான் தோற்றவர்’ என்றாள் . அவள் பெரிய சைன்டிஸ்ட்; சைக்காலஜிஸ்ட்; நிறை குடம் தளும்பாது குறை குடம் கூத்தாடும் ; சொல்லுவதற்கு பசையான வாதம் இல்லாமல் வசை மொழி பாடுவோர் உடலில் வெப்பம் அதிகமாகி மாலை முதலில் வாடும் என்று அவளுக்கு தெரியும்.

கணவர் மாலை முதலில் வாடியது ; பின்னர் செக்ஸ் sex பற்றி கேள்வி கேட்டு பிரம்மச்சாரி சங்கரரை அவள் மடக்கப் பார்த்தது, பின்னர் அனைவரும் தோல்வியை ஒப்புக்கொண்டு சங்கரின் சீடர்களானது முதலியவற்றை முன்னரே எழுதிவிட்டேன்

XXXX

யவனர் பற்றி குமாரில பட்டர்

சபர ஸ்வாமின் எழுதியது சபர பாஷ்யம்;  இது ஜைமினியின் பூர்வ மீமாம்ச சூத்திரங்கள் மீதான உரை.. இதன் மீது குமாரில பட்டர் எழுதிய உரை ‘தந்த்ர வார்த்திகம்’. அதில் காணும் விஷயம் (1-3-6-10)-

சோடிதம் து ப்ரதியே தா விரோதாத் பிரமானேன — சூத்திரம் 10

வேதத்தில் வரும் ஒரு சொல்லுக்கு மிலேச்சர்கள் சொல்லும் வியாக்கியானத்தை ஏற்க வேண்டுமா அல்லது சொற்பிறப்பு இயல் (etymology) எனப்படும் நிருக்தத்தையோ அல்லது சம்ஸ்க்ருத இலக்கண விளக்கத்த்தையோ ஏற்க வேண்டுமா என்ற விவாதத்தைத் தொடர்ந்து இந்த சூத்திரம் வருகிறது .

பூர்வ பக்ஷ :-

பூர்வ பக்ஷ என்பது பொதுவான கருத்து அல்லது எதிரியின் கருத்து ;இதைச் சொல்லிவிட்டு உரை எழுதுவோர் தம் கருத்தை முன் வைப்பர்

“ஒரு உதாரணத்துக்கு திராவிட பாஷையை எடுத்துக்கொள்வோம். அவர்கள் ‘சோறு’ என்று சொல்லுவார்கள். அதை  வடக்கிலுள்ளோர் சோர (திருடன்) என்று அர்த்தம் செய்யலாம்  இன்னும் பல சொற்கள் உள . ‘பாப’ என்பது பாம்பு, பாவம் என்று பொருள் படும். ஒரு பாம்பு தீமையே செய்யும் என்பதால் இப்படிப்பொருள்.

வேதங்களை பொறுத்த மட்டில் மிலேச்சர்களுக்கு கருத்து சொல்லும் அதிகாரமின்மையால் இலக்கண விளக்கமும், சொற்பிறப்பியல்/ நிருக்த விளக்கமுமே  ஏற்கப்படும் .

இந்த விளக்கத்துக்கு நேர் மாறான கருத்தைச் சொல்லாவிடின் மிலேச்சர் விளக்கத்தை அங்கிகரிக்கலாம்” .

(மிலேச்சர் = சங்க இலக்கியத்தில் வெளிநாட்டு மொழி பேசிய ரோமானியர்களைக் குறிக்கும். சம்ஸ்க்ருத இலக்கியத்தில் இந்தியாவுக்கு வெளியே உள்ள எல்லா வெளிநாட்டினரையும் குறிக்கும். பாரதியார் பாடல் முதலிய பிற்கால நூல்களில் துலுக்கர்களைக் குறிக்கும்)

அனந்தம் மிலேச்ச தேஷாம்ஸ்ச  கஹ சர்வோநூபலப்ஸ்யதே

“மிலேச்சர் நாடுகள் அதிகமாக இருக்கின்றனவே. அவர்களின் சொற் பிரயோகத்தை எல்லாம் எப்படி ஒருவர் அறியமுடியும் ?

மிலேச்சர்களிடமிருந்து புதிய விளக்கம் வந்தால் நம்முடைய விளக்கமும் மாறும்.  அவர்களுடைய கருத்துக்களை நாம் புறக்கணிக்கும்போது ஆர்யாவர்த்த்தில் உள்ள அர்த்தங்களை பார்க்கலாம். நமது தர்மத்தைப் பின்பற்றாதவர்கள்  சொல்லின் உருவத்தை சிதைத்தது போல அர்த்தத்தையும் சிதைக்கலாம்.

திராவிட பாஷைகளின் விஷயத்திலேயே இவ்வளவு வேறுபாடு இருக்கையில் நாம் எப்படி தொலை தூரத்திலுள்ள பாரசிகர், பார்ப ர்கள், யவனர்கள், ரோமானியர்கள் இடையே புழங்கும் சொற்களிலிருந்து நம் சொற்களுக்கு அர்த்தம் கற்பிக்க இயலும்?”

குமாரில பட்டரின் இந்த வாதத்தை ஒரே வரியில் சொல்லவேண்டுமானால், “வேதத்தின் கொள்கைகளுக்கு எதிரான வியாக்கியானங்களை  வேறு மொழி பேசுவோர் சொன்னால் ஏற்காதே. நமது கருத்தை  ஏற்கும் வாதத்தங்களை ஒப்புக்கொள்வோம்”.

இந்த வாதத்துக்கு முடிவுரை  எழுதுகையில் மிலேச்சர்களின் அர்த்தங்களை ‘ஓரளவு’ ஏற்கலாம் என்கிறார். ஆனால் உள்நாட்டுக்குள்ளேயே திராவிட பாஷையில் உள்ள ‘சோறு’ என்ற சொல்  வடக்கிலுள்ளவர்களுக்கு தவறான பொருள் தரக்கூடும் என்பதால் வேதத்தை எதிர்க்காத அர்த்தங்களை ஒப்புக்கொள்ளலாம்.

1300 ஆண்டுகளுக்கு முன்னரே அவர் இப்படி எழுதியது நம்மை வியப்புக்கு உள்ளாக்கும். ஏனெனில் அவர் சொல்லும் மிலேச்சர்கள் “யவனர்/கிரேக்கர்களும் ரோமானியர்களும் பார்ப்பரர்களும்” ஆகும். அப்போதே கால்டுவெல்களும் மாக்ஸ்முல்லர்களும் இருந்திருக்கின்றனர்!!

குமாரில பட்டர் மிகவும் பரந்த அறிவுள்ளவர் என்பதும், நாளந்தா பல்கலைக் கழகத்துக்கு வந்த உலகின் பல நாட்டு அறிஞர்களை சந்தித்து அளவளாவியர் என்பதும் தெரிகிறது.

TAGS — மிலேச்சர் , குமாரில பட்டர் , யவனர், திராவிட பாஷா, சோறு , வெள்ளைக்காரன்

–SUBHAM–

ஹிந்தி படப் பாடல்கள் – 20 – ஒரு கரு, ஒரு கவி, நான்கு பாடல்கள்!-(Post No.7893)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No.7893

Date uploaded in London – – 28 April 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஹிந்தி படப் பாடல்கள் – 20 – ஒரு கரு, ஒரு கவி, நான்கு பாடல்கள்!-(1)

R. Nanjappa

ஒரு கரு, ஒரு கவி, நான்கு பாடல்கள்!

ஒரு சிறந்த கவிஞன் ஒரே விஷயம் அல்லது எண்ணம் அல்லது உணர்ச்சி பற்றி பல நிலைகளில், பல வழிகளில் சிந்தித்து  எழுதவேண்டும். இதற்கு சினிமாவில் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.கதை அடிப்படையில் ஒன்றாக இருந்தாலும் , சந்தர்ப்பச் சூழ்நிலைகள் வேறுபடும். இதுவே கவிக்குக் கிடைக்கும் வாய்ப்பு. நம் திரைக்கவிகள் அனைவருமே இந்தக் கலையில் தேர்ந்தவர்களாக இருந்தார்கள்.

காதலில் தோல்வி அல்லது  ஏமாற்றம்  என்பது சினிமாவில் முக்கியமான ஒரு “தீம்”. இதை இசை, சாஹித்யம் கலந்து தரும்போது, “சோகம்’ என்ற உணர்ச்சி பாவம்  மனதில் எழும். இதைச் சிறந்த முறையில் தரும்போது,  இந்த பாவம் “ரஸமாக” மாறுகிறது. ‘உணர்ச்சிவசப்படுதல்’ என்று சொல்கிறோம். நாட்டியக் கலையில், அபிநயம் சங்கீதம் சாஹித்யம் மூன்றும் இணைந்து இந்த பாவத்தை உச்ச நிலைக்குக் கொண்டு செல்லும், சினிமாவில் இதை நடிப்பில் காட்டுகின்றனர்


 இந்த ஏமாற்றத்தையும் அதன் விளைவுகளையும் கவிகள் பலவிதமாகக் கவிதையில் வடித்திருக்கின்றனர். நல்ல கவிதைக்கு நல்ல இசையும் அமையும் போல! இப்படி கவிஞர் ஸாஹிர் லுதியான்வி எழுதிய நான்கு கவிதைகளைப் பார்ப்போம். ஏமாற்றம் அல்லது தோல்வி என்பதுதான் கரு. அதை எப்படி வெளிப்படுத்துகிறார் என்று பார்ப்போம்.

1. ஜானே கைஸே லோக் தே

Song: Jaane Woh kaise

Film: Pyaasa 1957

Music: S.D.Burman

Singer: Hemant Kumar

जाने वो कैसे लोग थे जिनके प्यार को प्यार मिला
हमने तो जब कलियाँ माँगी काँटों का हार मिला 

ஜானே கைஸே லோக் தே ஜின்கே ப்யார் கோ ப்யார் மிலா

ஹம்னே தோ ஜப் கலியா(ன்) மாங்கீ கா(ன்)டோ கா ஹார் மிலா

இந்த உலகில் தங்கள் காதல் நிறைவேறப் பெற்றவர்கள் எப்படி இருப்பார்கள்?

எனக்குத் தெரியவில்லையே!

நான் மலர்களை நாடியபோது எனக்கு முட்களின் மாலை தானே கிடைத்தது!

खुशियों की मंज़िल ढूँढी तो ग़म की गर्द मिली
चाहत के नग़मे चाहे तो आहें सर्द मिली

दिल के बोझ को दूना कर गया जो ग़मखार मिला

हमने तो जब

குஷியோ(ன்) கீ மன்ஃஜில் டூன்டீ தோ கம் கீ கர்த் மிலீ

சாஹத் கே நகுமே சாஹே தோ ஆஹே(ன்ஸர்த் மிலீ

தில் கே போஜ் கோ தூனா கர் கயா ஜோ கம்கார் மிலா

நான் சந்தோஷம் நிறைந்த லட்சிய இடத்தைத் தேடினேன்

ஆனால் துக்கத்தால் வளைக்கப்பட்டேன்

நான் நல்ல காதற் சொற்களைக் கேட்க விரும்பினேன்

துக்கம் கலந்த பெருமூச்சு தான் கிடைத்தது

என்னுடைய துக்கம் விலகும் என்று யாரையாவது நெருங்கினால்

என் வருத்தம் இரு மடங்கானது!

बिछड़ गया हर साथी देकर पल दो पल का साथ
किसको फ़ुरसत है जो थामे दीवानों का हाथ
हमको अपना साया तक अक्सर बेज़ार मिला

हमने तो जब

பிசட் கயா ஹர் ஸாதீ தேகர் பல் தோ பல் கா ஸாத்

கிஸ்கோ ஃபுர்ஸத் ஹை ஜோ தாமே தீவானோ(ன்) கா ஹாத்

ஹம் கோ அப்னா ஸாயா தக் அக்ஸர் பேஃஜார் மிலா

கூட இருந்தவர்கள் எல்லாம் சில காலத்திலேயே என்னை விட்டுப் பிரிந்தனர்

ஆம், ஒரு பைத்தியத்தின் கையைப் பிடித்து நிற்க யாருக்கு நேரம் இருக்கிறது!

என்னுடைய நிழலுக்கே கூட  என்னைக் கண்டு பேஜாராகிவிட்டது போலும்!

इसको ही जीना कहते हैं तो यूँ ही जी लेंगे
उफ़ करेंगे लब सी लेंगे आँसू पी लेंगे
ग़म से अब घबराना कैसा, ग़म सौ बार मिला
हमने तो जब

இஸ்கோ ஹீ ஜீனா கஹதே ஹை தோ யூ(ன்) ஹீ ஜீலேங்கே

உஃப் கரேங்கே லப் ஸீ லேங்கே ஆன்ஸூ பீலேங்கே

கம் ஸே அப் கப்ரானா கைஸா, கம் ஸௌ பார் மிலா

இதுதான் வாழ்க்கை என்று சொல்கிறீர்களா?

சரி, அப்படியே இருந்துவிட்டுப் போகிறேன்!

பெருமூச்சு விடமாட்டேன், குற்றம் குறை சொல்லமாட்டேன்,

கண்ணீரைச் சகித்துக் கொள்வேன்!

துக்கத்தைக் கண்டு இப்போது எப்படி பயப்படுவது

அதுதான் நூறுமுறை வந்துவிட்டதே!

எத்தனை உருக்கமான பாடல்! இதை ஹேமந்த்குமார் மிகவும் உருக்கமாகவே  பாடியிருக்கிறார்.

இந்த உணர்ச்சிக்கு இலக்கணம் வகுக்கும் பாடல். பர்மனின் இசை பற்றிச் சொல்ல தகுந்த சொற்கள் இல்லை!

 2.நிலவுக்கும் தாரகைகளுக்கும் ஆசை!

Song: Maine Chaand  aur sitaro(n) ki tamanna

Film: Chandrakantha 1956

Music: N.Dutta

Singer: Mohammad Rafi

मैंने चाँद और सितारों की तमन्ना की थी
मुझको रातों की सियाही के सिवा कुछ ना मिला
मैंने चाँद और सितारों की 

மைனே சாந்த் ஔர் ஸிதாரோ(ன்) கீ தமன்னா கீ தீ

முஜ்கோ ராதோ(ன்) கீ ஸியாஹீ கே ஸிவா குச்  நா மிலா

சந்திரனையும் தாரகைகளையும் அடையவேண்டும் என விரும்பினேன்

இரவின் இருளைத் தவிர வேறெதுவும் எனக்குக் கிட்டவில்லை!

मैं वो नग़मा हूँ जिसे प्यार की महफ़िल ना मिली
वो मुसाफ़िर हूँ जिसे कोई भी मंज़िल ना मिली
ज़ख़्म पाएँ हैं, बहारों की तमन्ना की थी
मैंने चाँद और सितारों की  

மை நக்மா ஹூ(ன்) ஜிஸே ப்யார் கீ மஹஃபில் மிலீ

வோ முஸாஃபிர் ஹீ(ன்) ஜிஸே  கோயீ பீ மன்ஃஜில் நா மிலீ

ஜக்ம் பாயே(ன்) ஹை, பஹாரோ(ன்) கீ தமன்னா கீ தீ

நான் ஒரு பாடல்என்னை ஆசையோடு கேட்கும்  ரசிகர்கள் கிடைக்கவில்லை

எந்த லட்சியத்தையும் எட்டமுடியாத பயணத்தில் ஈடுபட்ட வழிப்போக்கன் நான்

வஸந்த காலத்தின் இன்பங்களுக்கு  ஆசைப்பட்டேன்காயமே கிட்டியது!

நான் சந்திரனுக்கும் தாரகைகளுக்கும் ஆசைப்பட்டேன்……

किसी गेसू, किसी आँचल का सहारा भी नहीं
रास्ते में कोई धुँधला सा सितारा भी नहीं
मेरी नज़रों ने नज़ारों की तमन्ना की थी
मैंने चाँद और सितारों की  

கிஸீகேஸூ, கிஸீ ஆன்சல்  கா ஸஹாரா பீ  நஹீ 

ராஸ்தே  மே கோயீ துந்தலா ஸா ஸிதாரா பீ நஹீ

மேரீ நஃஜ்ரோ(ன்) நே  நஃஜாரோ கீ தமன்னா கீ தீ

எந்தக் கூந்தலோ, முந்தானையின் உதவியோ கூட கிடைக்கவில்லை

மறைந்துவரும் ஒரு  நட்சத்திரம் கூட வழியில் இல்லை

நல்ல காட்சிகளைக் காண கண்கள் ஏங்கின

நான் சந்திரனுக்கும் நிலவுக்கும் ஆசைப்பட்டேன்…….

मेरी राहों से जुदा हो गई राहें उनकी
आज बदली नज़र आती हैं निगाहें उनकी
जिनसे इस दिल ने सहारों की तमन्ना की थी
मैंने चाँद और सितारों की

மேரீ ராஹோ(ன்ஸே  ஜுதா ஹோ கயீ ராஹே(ன்உன்கீ

ஆஜ் பதலீ நஃஜர் ஆதீ ஹைய் நிகாஹேன்) உன்கீ

ஜின்ஸே இஸ் தில் நே ஸஹாரோ(ன்கீ தமன்னா கீ தீ

அவள் பாதை என் பாதையிலிருந்து பிரிந்து விட்டது

இன்று அவள் கருத்து மாறிவிட்டது

நான் அவள் துணையை நாடினேன்

நான் நிலவுக்கும் நட்சத்திரத்திற்கும் ஆசைப்பட்டேன்……..

प्यार माँगा तो सिसकते हुए अरमान  मिले
चैन चाहा तो उमड़ते हुए तूफ़ान मिले
डूबते दिल ने किनारों की तमन्ना की थी
मैंने चाँद और सितारों की...

ப்யார் மாங்கா தோ ஸிஸ்கதே  ஹுயே அர்மான் மிலே

சைன் சாஹா தோ உமட்தே ஹுயே  தூஃபான் மிலே

டூப்தே தில் நே  கினாரோ(ன்) கீ தமன்னா கீ தீ

அன்பைத் தேடினேன், அழுகையே கிடைத்தது

சாந்தியைத் தேடினேன், வீசும் புயல் கிடைத்தது

மூழ்கும் இந்த மனது கரையைத் தேடியது

நான் நிலவுக்கும் நட்சத்திரத்திற்கும் ஆசைப்பட்டேன்…….

dil men naakaam ummidon ke basere paaye
roshani lene ko nikala to andhere paaye
rang aur noor ke dhaaron ki tamanna ki thi
main ne chaand aur sitaaron ki…………

பயனில்லாத ஆசைகள் மனதில் குடிகொண்டு விட்டன

வெளிச்சத்தைத் தேடினேன்இருள் கிடைத்தது

சொர்க்கத்தின் ஒளியும் நிறமும் நிறைந்த அந்தப் பெருக்கைத் தேடினேன்

நான் நிலவையும் தாரகைகளையும் தேடினேன், இரவின் இருளே கிடைத்தது.

இதுவும் முதல் பாடலைப் போன்ற அதே மன நிலையை விவரிக்கிறது, சொற்கள் தான் வேறு.

முதல் பாடலில் மலர்முள் என்றார்; இங்கு ஓளிஇருள் என்கிறார். மனதை வருடும் இசை, ரஃபியின் இனிய குரல்.

என்.தத்தா  நல்ல இசைஞர். அவருக்கு உரிய இடமோ, அங்கீகாரமோ கிடைக்கவில்லை. ஸாஹீரை பெரிய இசைஞர்கள்  ஏற்க மறுத்தபோது, என்.தத்தா போன்ற இசைஞர்களுடன் சேர்ந்தார்.

இந்த இரண்டு பாடல்களும் படத்தில் கதையை ஒட்டி எழுந்தவை. சோக மயம் தான்ஆனால் மனதைத் தொடும்படி இல்லை! புத்தியில் பதிகிறதுமனதில் அவ்வளவு பாதிப்பில்லை.ஏன்?

நாம் தமிழில் இதைவிடவும் மனதைத் தொடும் பாடலைக் கேட்டிருக்கிறோம்! பழையதேவதாஸ்படத்தில் சி.ஆர். சுப்பராமன் இசையமைத்து, கண்டசாலாவும், ராணியும் பாடிய பாடல்கள் இவற்றை விட உருக்கமானவை. “சீறும் புயலும் மழையும் சேர்ந்தால், சின்னக்குடை தாங்காதே” –அப்பா, இந்த வரிகளை கண்டசாலாவின் குரலில் கேட்டவர்களுக்கு, இதற்கு நிகராக வேறு ஒரு வரியைச் சொல்வது கஷ்டம். “எல்லாம் மாயைதானா..” என்று கே.ராணி எடுக்கும்போதே மனம் திடுக்கிடுகிறது. ‘பயனில்லாத ஆசைகள் மனதில் குடிகொண்டுவிட்டனஎன்று இங்கு வருவது  ‘நிறைவேறாத ஆசை வளர்வதும் ஏனோஎன்ற தேவதாஸ் பாடலின் வரியை நினைவுபடுத்துகிறது. [இந்தப் பாடலை எழுதியது யார்? எஸ்.டி சுந்தரம் என்று நினைவு. சிலர் உடுமலை நாராயண கவி என்பர்.]

நான் ஸாஹிரின் கவிதையில் குற்றம் சொல்லவில்லை! இதே உணர்ச்சிகளை இன்னும் ஆழமாகத் தமிழ்ப்பாடலில் பார்த்திருக்கிறோம் என்று சொல்ல வந்தேன்!

சரி, இப்படி நடந்ததையே நினைத்து வருந்துவதால் ஆவதென்ன?  இதற்கு மாற்று என்ன? இதை வேறு கவிதைகளில்  சொல்கிறார். அடுத்துப் பார்ப்போம்.

tags —  ஹிந்தி படப் பாடல்கள் – 20 

***

லட்சம் புதிர்கள் – 10 (Post No.7892)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7892

Date uploaded in London – – 28 April 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

லட்சம் புதிர்கள் – 9 கட்டுரை எண் 7492 வெளியான தேதி 25-1-2020

லட்சம் புதிர்கள் – 10 (101 முதல் 150 முடிய)

ச.நாகராஜன்

கேள்விகள் :

ராமாயணம்

101) ராமாயணத்தை இயற்றியவர் யார்?

102) ராமாயணத்தில் மொத்தம் எத்தனை ஸ்லோகங்கள்?

103) புத்திரர்களைப் பெற தசரதன் செய்த யாகம் எது?

104) ராமாயண காலத்தில் சரயு நதி – அதன் இன்றைய பெயர் என்ன?

105) கைகேயியுடன் அவர் அரண்மனையிலிருந்து கூடவே வந்த பணிப்பெண்ணின் பெயர் என்ன?

106)மஹரிஷி வால்மீகியின் பூர்வ பெயர் என்ன?

107) வேடனாக இருந்து ரிஷியாக மாறியவர் யார்?

108) ராமாயணம் எந்த யுகத்தில் நடந்தது

109) வாலி, சுக்ரீவரின் தந்தை பெயர் என்ன?

110) ராமாயணம் எந்த சந்தத்தில் இயற்றப்பட்டுள்ளது?

111) வசிஷ்டர் ஆஸ்ரமத்தில் இருந்த பசுவின் பெயர் என்ன?

112) ஜனக மன்னரின் இயற் பெயர் என்ன?

113) அசோகவனத்தின் இன்னொரு பெயர் என்ன?

114) லக்ஷ்மணனைக் காப்பாற்ற அனுமன் கொண்டு வந்த மருந்தின் பெயர் என்ன?

115) ராமாயணத்தின் இன்னொரு பெயர் என்ன?

116) இன்று வியாச நதி என்று அழைக்கப்படும் நதி ராமாயண் காலத்தில் என்ன பெயரில் அழைக்கப்பட்டது?

117) லங்கையில் ராவணனின் குல தெய்வம் எங்கு வைக்கப்பட்டிருந்தது?

118) ராமாயண காலத்தில் லவபுரம் என்று அழைக்கப்பட்ட நகரத்தின் இன்றைய பெயர் என்ன?

119) ராவணன் சுக்ரீவனுக்கு அனுப்பிய தூதனின் பெயர் என்ன?

120) எட்டாவது வசுவின் பெயர் என்ன?

121) தசரத மன்னரை அழைக்க அயோத்திக்கு ஜனகர் அனுப்பிய மந்திரியின் பெயர் என்ன?

122) ராமாயணம் மொத்தம் எத்தனை காண்டங்கள்?

123) ராமாயணத்தில் பெரிய காண்டம் எது?

124) ராமாயணத்தில் சிறிய காண்டம் எது?

125) அமராவதி நகரின் அரசன் யார்?

126) இந்திரனின் யானையின் பெயர் என்ன?

127) அஸ்வமேத யாகத்தில் குதிரையின் நெற்றியில் கட்டப்பட்டிருக்கும் பத்ரத்தின் பெயர் என்ன?

128) சமுத்திரம் கடையப்பட்ட போது வெளி வந்த மணி எது?

129) குபேரனின் யானையின் பெயர் என்ன?

130) சமுத்திரத்தைக் கடைந்த போது வெளி வந்த விஷத்தின் பெயர் என்ன?

131) வருணனின் யானையின் பெயர் என்ன?

132) யமனின் யானையின் பெயர் என்ன?

133) ராமரின் கதையை கருடனுக்குச் சொன்ன காகத்தின் பெயர் என்ன?

134) கலஹப்ரியர் என்று எந்த மஹரிஷிக்குப் பெயர்?

135) சஞ்ஜீவினி மூலிகையை அனுமார் எடுத்து வந்த போது தூக்கி வந்த மலையின் பெயர் என்ன?

136) மஹரிஷி விஸ்வாமித்திரர் உடலுடன் சொர்க்கத்திற்கு அனுப்பிய மன்னனின் பெயர் என்ன?

137) கல்லாகப் போகக் கடவது என்று மனைவியை சபித்த முனிவரின் பெயர் என்ன?

138) சூரியனை பழம் என்று நினைத்து உண்ணச் சென்றவர் யார்?

139) யமனுடன் போர் புரிந்த ராக்ஷஸன் யார்?

140) ராம பட்டாபிஷேகத்தின் போது ஐந்து புனித நதிகளிலிருந்து நீர் கொண்டு வந்தவர் யார்?

141) ராவணனை தன் அக்குளில் ஆறு மாதங்கள் வைத்திருந்த வீரன் யார்?

142) விஸ்வாமித்திரர் ராமனை அழைக்க வந்த போது அவரிடம் தசரதன் தன் வயது எவ்வளவு என்று சொன்னார்?

143) பத்தாயிரம் வீரர்களை ஒரே சமயத்தில் எதிர் கொள்ள வல்ல வீரனின் பெயர் என்ன?

144) ராமாயணத்தில் மொத்தம் எத்தனை காண்டங்கள் உள்ளன?

145) ராமாயணத்தில் மொத்தம் எத்தனை ஸர்க்கங்கள் உள்ளன?

146) ஒரே சமயத்தில் லக்ஷ்மணன் எத்தனை அம்புகளை விட வல்லவ்ன்?

147) வால்மீகிக்கு அந்தப் பெயர் ஏன் வந்தது?

148) இந்திரஜித்தின் இயற்பெயர் என்ன?

149) இந்திரஜித்திற்கு அந்தப் பெயர் ஏன் வந்தது?

150) சீதைக்கு ஜானகி என்ற பெயர் எப்படி வந்தது?

விடைகள் :

101) வால்மீகி மஹரிஷி 102) 24000 103) புத்ரகாமேஷ்டி 104) ககரா (Ghagara) 105) மந்தரை 106) ரத்னாகரர் 107) வால்மீகி 108) த்ரேதா யுகம் 109) ரிக்ஷராஜன் 110) அனுஷ்டுப் 111) சுரபி 112) ஷீரத்வஜன் 113) ப்ரமத வனம் 114) சஞ்சீவினி மூலிகை 115) புலஸ்த்ய வதம் அல்லது தசானனன் வ்தம் 116) விபாஷா 117) அசோக வனம் 118) லாகூர் 119) ஷுக் 120) சவித்ரா 121) சுதாமன் 122) ஏழு 123) யுத்த காண்டம் 124) ஆரண்ய காண்டம் 125) இந்திரன்

126) ஐராவதம் 127) ஜய பத்ரம் 128) கௌஸ்துப மணி 129) ஹிம்பந்த்ர 130) ஆலகாலம் 131) சௌமனஸ் 132) மஹாபத்மம் 133) காகபுஷுண்டி 134) நாரதர் 135) த்ரோண கிரி 136) திரிசங்கு 137) கௌதமர் 138) ஹனுமான் 139) ராவணன் 140) ஜாம்பவான் 141) வாலி 142) 60000 வருடங்கள் 143) அதிரதி

144) 7 145) 500 146) 500 147) அவர் தவம் செய்த போது அவர் புற்றினால் மூடப்பட்டதால் 148) மேகநாதன் 149)  இந்திரனை ஜெயித்ததால் 150) ஜனகரின் புதல்வி என்பதால்.

tags — லட்சம் புதிர்கள் – 10

***

SWAMI CROSSWORD 2742020 (Post No.7891)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7891

Date uploaded in London – 27 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ACROSS

1.– 8 letters – author of the world’s proper Economics book

8. – 9–a Himalayan Shiva temple, closed during winter months

11. – 5- with long sound it means religious discipline; with short sound which is not moving

12. – 4- cart, vehicle, wagon

13.– 4–crow

15. – 5– 28 books giving rules for temples and priests in South India

16 – English words axle, axis are derived from this Sanskrit word

17. – 4– beautiful pink colour flower that came from Persia

19. – 7—change, modification, alteration; also used with the meaning of Selling

20. – 4—ray of light, small particle, fibre, end of fibre in Sanskrit.

X XX

DOWN

1. – 6 letters –  land of Kaikeyi of Ramayana

2. – 5–betel nut ; Malayalam word is used in English

3. – 6–moisture, wet in Sanskrit

4. – 5–Ravana’s island

5. –5– it has two meanings- wealth and meaning

9. – 5–garden, park in Sanskrit

6. -4– illusion, passion

7. – 6–10th sign in  zodiac.

10. –6– Vedic Goddess

14. – 4–hand,

18.–2–– sound used before every mantra

—subham–

சூரியனுக்கு மகன் சனி! விளக்கிற்கு மகன் கருப்பு மை!! (Post No.7890)

மே மாத 2020  நற்சிந்தனை   காலண்டர் –

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7890

Date uploaded in London – 27 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

வேற்றுமைகள் நிறைந்த, வினோதமான உலகம் பற்றிய 31 பழ மொழிகள்  மே  மாத காலண்டரை அலங்கரிக்கின்றன

ஏகாதசி -3, 18; பௌர்ணமி–7; அமாவாசை–22;

சுப முகூர்த்த தினங்கள் – மே  4,6,13,18,24,27

பண்டிகை/ விடுமுறை நாட்கள் – மே 1 தொழிலாளர் தினம், 4–அக்கினி நட்சத்திர ஆரம்பம், 7 -சித்ரா பௌர்ணமி,  17-தத்தாத்ரேய ஜயந்தி , 28- அக்கினி நட்சத்திர முடிவு.

மே  1 வெள்ளிக் கிழமை

ஸர்வம் பதம் ஹஸ்தி பதே  நிமக்நம் —

ஒரு யானையின் காலடிச்  சுவட்டில்  எல்லா விலங்குகளின் சுவடுகளும் அடங்கி விடும்.

**

மே  2 சனிக் கிழமை

ஸத் க்ருத்ய பூர்வம் பரதோபி பூயதே –  முதலில் உபசரிப்பு , பின்னர் அவமதிப்பு .

**

மே  3 ஞாயிற்றுக் கிழமை

முதல் நாள் தலை வாழை இலை , இரண்டாம் நாள் தையல் இல்லை, மூன்றாம் நாள் கையில , நாலாம்  நாள் தரையில சாப்பாடு

**

மே  4 திங்கட் கிழமை

சிலாயாம்  கமலலோத்பவ  — பாறையில் முளைத்த தாமரை                  

**

மே  5 செவ்வாய்க் கிழமை

சேற்றில் முளைத்த அழகான செந்தாமரை

**

மே  6 புதன் கிழமை

ரோஜாவில் முள்

**

மே  7  வியாழக் கிழமை

ஹஸ்தி ஸந்தே  பிபீலிகா — யானைக் கூ ட்டத்தில்  ஒரே ஒரு எறும்பு

**

மே  8 வெள்ளிக் கிழமை

சூர்யா  பத்யம் சனிர்ஹந்த தீப பத்யம் து  கஜ்ஜலம் — சூரியனுக்கு மகன் சனி!  விளக்கிற்கு மகன் கருப்பு மை!!

**

மே  9 சனிக் கிழமை

சிரோ வேஷ்டனே  நாசிகா ஸ்பர்சஹ –தலையைச் சுற்றி கையை வளைத்து மூக்கைத் தொட்டானாம் .

**

மே  10 ஞாயிற்றுக் கிழமை

தும்பை விட்டு வாலைப் பிடித்தானாம்

**

மே  11 திங்கட் கிழமை

ப்ராதர்சோ க்ருஹே நாஸ்தி, பிராஹ்மணானாம் நிமந்த்ரணம்

–காலைச் சோற்றுக்கே வழியில்லை ; பிராமணர்களை விருந்துக்கு அழைத்தானாம்

**

மே  12 செவ்வாய்க் கிழமை

வாத்தியார் பிள்ளை மக்கு; வைத்தியர் பிள்ளை சீக்கு sick/ நோயாளி .

** 

மே  13 புதன் கிழமை

மாதா தாசி , பித்த தாஸஹ , புத்ரஹ சம்ராட் சிரோமணிஹி

அப்பாவும் அம்மாவும் வேலைக்காரர்கள் , மகனோ மகா ராஜன்

**

மே  14  வியாழக் கிழமை

ராமோ வாசி, ஹ்யசிகி  பார்ஸ்வே

அருமையான பேச்சு, கையிலே வாள் வீச்சு

**

மே  15 வெள்ளிக் கிழமை

அரசனை நம்பி புருஷனைக்  கைவிட்டாளாம்

**

மே  16 சனிக் கிழமை

க்ருஹஸ்தாம் தேவதாம் ஹித்வா பஹிர் சே த்யஸ்ய பூஜனம்

வீட்டிலுள்ள தேவதையை விட்டு விட்டு இடுகாட்டில் பூஜை செய்தனானாம் 

**

மே  17 ஞாயிற்றுக் கிழமை

இடம் வலம் தெரியாதவன் இரண்டாயிரம் பேருக்கு உடற்பயிற்சி கற்றுக்கொடுக்கிறான்

**

மே  18 திங்கட் கிழமை

இடப ராசி கொடுக்கிறது, மேட ராசி கெடுக்கிறது

**

மே  19 செவ்வாய்க் கிழமை

இடித்தவள், புடைத்தவள் இங்கேயிருக்க எட்டிப்பார்த்தவள் கொட்டிக்கொண்டு போனாளாம்.

**

மே  20 புதன் கிழமை

தாய் தவிட்டுக்கு  அழுகையில் பிள்ளை இஞ்சிப் பச்சடி கேட்கின்றது.

**

மே  21  வியாழக் கிழமை

பழுத்த ஓலையைப் பார்த்து குருத்து ஓலை சிரிக்கிறதாம்

**

மே  22 வெள்ளிக் கிழமை

வாய் சர்க்கரை ,கை  கொக்கரை

கொக்கரை = கைத்தாளம்

**

மே  23 சனிக் கிழமை

பேர் பெரிய பேர், குடிக்கப் போனால் நீர் கிடையாது .

**

மே  24 ஞாயிற்றுக் கிழமை

பழி ஓரிடம் , பாவம் வேறிடம்

**

மே  25 திங்கட் கிழமை

அஹாரி  ஸீதா தசகண்டரேன , பத்தஹ பயோதி ரகுநந்தனேன

சீதையைக் கடத்தியது ராவணன் , ராமன் கோபத்தில்  அணைபோட்டது கடலுக்கு.

**

மே  26 செவ்வாய்க் கிழமை

அசாரு சாறுசுக்கினாம் ,  சாரு  துக்காய துக்கினா ம்  —

மகிழ்ச்சியாக இருப்பவனுக்கு கெட்டதும் இன்பமானதாகவே தோன்றும் , அழுமூஞ்சிகளுக்கோ  நல்லதும் துக்கம் தருவதாகவே தோன்றும்.

**

மே  27 புதன் கிழமை

சித்திரைக்கு சித்தப்பா, பெரியப்பா ; வைகாசிக்கு வாங்காணும் , போங்காணும்

**

மே  28  வியாழக் கிழமை

காலில் முள் குத்தினாலும் கண்ணில்தான் வரும் கண்ணீர்.

**

மே  29 வெள்ளிக் கிழமை

கையிலே காசு இல்லை, வாசலில் நாட்டியக்காரி .

நாஸ்தே கபர்திகா கேஹே , த்வாரே ந்ருத்யதி நிருத்திகா.

**

மே  30 சனிக் கிழமை

தோஷம் ததாதி  லேகன்யாயசமர்த்தோ அஸ்தி லேகனே .

எழுத முடியாதவன் பேனாவில் கோளாறு என்றானாம்.

**

மே  31 ஞாயிற்றுக் கிழமை

தாட்தோட்டக்காரனுக்கு தயிரும் சோறும், விசுவாசக்காரனுக்கு வெந்நீரும் பருக்கையும்

tags – சூரியன் , மகன், சனி, மே 2020,, காலண்டர்

Xxxx subham xxxx

31 Quotations on Patience & Forbearance (Post No.7889)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7889

Date uploaded in London – 27 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

MAY 2020 GOOD THOUGHTS CALENDAR

31 Quotations on Patience are given in this month’s calendar:-

Festival Holidays — May 1 May Day, 4 Agni Nakshatra period begins, 7 Chitra Purnima, 17 Dattatreya Jayanthi, 28 Agni Nakshatra period ends.

Ekadasi Fasting Days— 3,18; Full moon day- 7;

New Moon day 22.

Subha Muhurtams/ Auspicious Days- May 4,6,13,18,24,27

**

May 1 Friday

Patience, Purity and Perseverance  will prevail –Swami Vivekananda 

**

May 2 Saturday

Forbearance is the best ornament for both men and women-Valmiki Ramayana 1-33-7

**

May 3 Sunday

The earth support the men who dig at it . Similarly bear with those who scorn you; that is the best virtue- Tirukkural 151

**

May 4 Monday

Forbearance is the highest abode of Brahmins-

Katha Sarit Sagara

**

May 5 Tuesday

Forbearance is the crest jewel of the mighty

 –Jatakamala

**

May 6 Wednesday

Forgive wrongs done to you; better still forget them

–Tirukkural 152

**

May 7 Thursday

What cannot be achieved by forbearance?

Chanakya sataka 13-22

**

May 8 Friday

Forbearance is the bedrock of all penance–Harshacharita

**

May 9 Saturday

Great people deem that as tolereance which is free from complaint-Bharata Manjari

**

May 10 Sunday

Patience is not present in all the valiant

-Valmiki Ramayana — 7-58-5

May 11 Monday

Forbearance glistens in the truthful, the gallant and the mighty–Ramayana Manjari

**

May 12 Tuesday

The greatest want is , not looking after a guest; the greatest courage is suffering fools patiently-

Tirukkural 153

**

May 13 Wednesday

When inferiors speak improper words, it is good to bear them patiently. The earth will not regard impatient behaviour as praiseworthy but only as baseness- Naladiyar  81

May 14 Thursday

Patience is an embellishment of the mighty

Chanakya Sataka–13-22

**

May 15 Friday

No weapon equivalent to patience–Kiratarjunia

 2-43

**

May 16 Saturday

Over come by forbearance those that harm you by this overbearing conduct–Tirukkural 158

**

May 17 Sunday

If you have infinite patience and perseverance , success is bound to come –Swami Vivekananda

**

May 18 Monday

Man must be forbearing –Satopadesaprabandha

**

May 19 Tuesday

Patience is the ornament of wisdom

–Subhasita ratnakanda manjusha

**

May 20 Wednesday

The wise regard not those that retaliate but they esteem those that forbear–Tirukkural 155

**

May 21 Thursday

Is not intimate friendship with the great contracted with a hope that they would bear and forgive the grievous faults done by their friends? – Naladiyar 87

**

May 22 Friday

One who desires to maintain ones goodness should cultivate forbearance–Tirukkural 154

**

May 23 Saturday

When two persons unite as friends one should as far as possible patiently bear the misconduct of the other if there’s any—Naladiyar 85

**

May 24 Sunday

Those who perform penance by fasting are certainly great but even they are not equal to those that forbear the harsh words spoken by others–

Tirukkural 160

**

May 25 Monday

Those will never experience the evil s of life who knowing what ought to be known, become placid and submissive—Naladiyar 84

**

May 26 Tuesday

The seed grows into the tree, patiently and gently –Swami Vivekananda

**

May 27 Wednesday

Those that forbear the harsh words of the unrighteous one live as holy as a hermit who has renounced the world –Tirukkural 159

**

May 28 Thursday

Patience is the best means of success – –Swami Vivekananda

**

May 29 Friday

The gratification which one derives by retaliation is momentary ; but the glory of forbearance lasts for all time–Tirukkural 156

**

May 30 Saturday

Even when wrong is done by others one should feel compunction for the consequences they should suffer, and refrain from doing any harm in return–Tirukkural 157

**

May 31 Sunday

It is the patient upbuilding of character , the intense struggle to realise the truth, which alone will tell in the future of humanity –Swami Vivekananda.

tags – quotations, patience, forbearance, May 2020 calendar

—-SUBHAM—

ஹிந்தி படப் பாடல்கள்-19 – திரை இசைக்கு அநீதி? (Post No.7888)

                     

WRITTEN BY R. NANJAPPA                          
Post No.7888  
Date uploaded in London – – 27 April 2020 Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.  

  ஹிந்தி படப் பாடல்கள்-19 – திரை இசைக்கு அநீதி?                                                            R.Nanjppa  


திரை இசைக்கு அநீதி?   ரேடியோ ஒலிபரப்பு வந்த பிறகு இசையை மக்களிடையே கொண்டு செல்ல வானொலி சிறந்த சாதனமாக அமைந்தது.     50களில் நமது சினிமா இசை  தரத்தில், வீச்சில் உயர்ந்திருந்தது  பொதுவாக  80% மேல் மரபு வழி இசையின் அடிப்படையில் அமைத்த பாடல்கள், நல்ல கருத்துள்ள கவிதைப் பாடல்கள்  எனப்  பலவகையிலும் திரை இசை சிறந்திருந்தது. குரல்வளம் மிக்க  பாடக -பாடகிகள். வாத்திய இசை விற்பன்னர்கள், ஜீனியஸ் இசைஞர்கள் – என திரை இசைத்துறை திறமை மிக்கவர்களால்  நிறைந்திருந்தது.      ஹிந்துஸ்தானி இசையில் தேர்ந்திருந்த பல உஸ்தாதுகளும் பண்டிட்களும் திரை இசைக்கு  இசைந்து வந்தனர். பீம்ஸேன் ஜோஷி  பஸந்த் பஹார் படத்தில் பாடியிருக்கிறார், பிஸ்மில்லா கான் ஷெனாய் வாசித்திருக்கிறார். அப்துல் ஹலீம் ஜாஃபர் கான் ஸிதார் வாசித்திருக்கிறார். அலி அக்பர் கான் ஸரோட் வாசித்திருக்கிறார்  அமீர்கான்  சில படங்களில் சாஸ்திரீய இசை வழங்கியிருக்கிறார்..    

[இந்த அலி அக்பர் கான் விஷயம் அன்று இருந்த தரத்தைக் காட்டும். இவரை ஒரு  படத்திற்கு    ஸரோட்  வாசிக்க ஷங்கர்-ஜெய்கிஷன் அழைத்தனர். உங்களுக்கு ஸரோட் இசை பற்றி என்ன தெரியும் என்று கேட்டார் கான் ஸாஹிப். ஷங்கர்  சரோட் வாசித்துக் காட்டினார்! அவருக்கு விஷயம் தெரியும் என்ற நம்பிக்கை வந்த பிறகுதான் கான் வாசிக்க ஒப்புக்கொண்டார்!   ஷங்கர் பல வாத்யங்களில் தேர்ந்தவர்] இருந்தாலும் நமது அரசு திரை இசைக்கு அநீதி செய்தது எனத் தோன்றுகிறது.     அப்போது  ( 1952-62) தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சராக இருந்தவர் பி.வி கேஸ்கர்.  இவர் பாரம்பரிய இசையில் பிடிப்புள்ளவர். அதற்கு ஒவ்வாதது என்று கருதிய அம்சங்களை  அகில இந்திய ரேடியோவில் அனுமதிக்க வில்லை, ஹார்மோனியம் கூட தடுக்கப்பட்டது, சினிமா இசை தரம் தாழ்ந்தது, அது மக்களின் ரசனையைத் தாழ்த்தும், நமது பாரம்பரிய இசைக்கும் பண்பாட்டுக்கும் ஊறு விளைவிக்கும் என உறுதியாக நம்பினார். அதனால்  ஆல் இந்தியா ரேடியோ திரை இசையை  ஒலிபரப்புவதைத் தடை செய்தார்! (கிரிக்கெட் காமென்டரியும் தடை செய்யப்பட்டது!) என்ன கொடுமை , பாருங்கள்! அன்று 80% சினிமா இசை நமது பாரம்பரிய இசையின் அஸ்திவாரத்தில் எழுந்தது தான்- இது ஏனோ கேஸ்கருக்குப் புரியாமல் போனது ! இந்த சமயத்தில் ரேடியோ சிலோன்  எழுந்தது! நமது சினிமா பாடல்களை அவர்கள் ஒலி பரப்பத் தொடங்கினார்கள், மக்களிடையே அபரிமித ஆதரவும் பெற்றார்கள். இந்திய சினிமா பாடல்களை  ரேடியோ சிலோனில் கேட்க வேண்டும்! -என்ன அவல நிலை!    



  இதை உணர்ந்துகொண்ட அரசு 1957ல் “விவித் பாரதியை”த் தொடங்கினர். ஆனால் ரேடியோ சிலோன் இடத்தைப் பிடிக்க முடியவில்லை.  அகில இந்தியாவையும் கவர்ந்த “பினாகா கீத் மாலா” போன்ற சூபர் ஹிட் நிகழ்ச்சி  ஒன்றைக்கூடத் தரமுடியவில்லை. பிற அரசுத்துறைகளைப் போலவே சுரத்தில்லாமல், மக்கள் தொடர்பு இல்லாமல் அதிகார  நோக்கிலேயே இயங்கியது விவித் பாரதி. ரேடியோ சிலோனில் கோபால் ஷர்மா, தரம் தில்லன், மஹாஜன் போன்றவர்கள் குரலில் ஒரு
கவர்ச்சி இருக்கும், சினேகத் தன்மை இருக்கும். நமக்கு மிக வேண்டியவர்கள் பேசுவது போலவே இருக்கும்.

There would be a personal touch., a sense of intimacy.       அதிகாரத் திமிரில் ஊறிய ஆல் இந்தியா ரேடியோவில் இதை எதிர்பார்க்கலாமா?   இன்று இன்டர்நெட், யூடியூப் இருப்பதால் எவர் தயவும் இல்லாமல் நம் பொற்காலத்து இசையைக் கேட்கலாம், [ஆனால் யூடியூப் நம்பத் தகுந்ததல்ல- இன்று இருப்பது நாளை காணாமல் போகலாம்!] அன்று நடந்த அநியாயத்திற்குப் பிராயச்சித்தம் போல், இன்று வரும் சினிமா இசை தங்கு தடையில்லாமல் ரேடியோவில் வருகிறது! ஆனால் அந்தத் தரம் இன்று இல்லையே!   இன்றய டெக்னாலஜி அந்தப் பழைய இசை-ஜீவனுள்ள இசை- உருவாக உதவாது. பல நவீன கருவிகள் அசல் வாத்யங்களுக்கு இடமில்லாமல் செய்துவிட்டன. [ ஆனால் இது நம் தவறுதான்!] கலைஞர்களுக்கும் குழி பறித்து விட்டன. ஒரு கருவியை வைத்து பல வாத்ய இசைகளை எழுப்பலாம். ஒரு மிலோன் குப்தா, கூடீ சீர்வை. ஸன்னி கேஸ்டலினோ. சிக் சாக்லேட்- போன்றோருக்கு அவசியமில்லாமல் செய்துவிட்டது  



  ஆனால் இசையைக் கேட்கவும் பதிவு செய்யவும்  புதிய டெக்னாலஜி உதவும்.  டெக்னாலஜிக்கு ஜே போடலாமா?   Medium is the message என்று  Marshall McLuhan மீடியாத்துறைக்குச் சொன்னது பொற்கால சினிமா இசைக்கு முற்றும் பொருந்தும். இசை நம் பண்பாட்டின் ஒரு அங்கம். இது தரம் தாழ நாம் காரணமாக இருக்கக்கூடாது.  

Golden days may not return, but golden appreciation need not decline or dwindle! This is the message of the golden music of the Golden era!   நல்ல திரை இசை மக்களுக்கு பாரம்பரிய இசையை அனுபவிக்க, ரசிக்க பயிற்சிதரும் ஒரு சாதனமாகப் பயன் படும். நல்ல பாடல்கள் நம் இலக்கிய மரபுடன், பண்பாட்டு அம்சங்களுடன் உள்ள தொடர்பை வலுப்படுத்தும். அந்தக் காலத்து நாடகப்  பாடல்மூலம் எஸ். ஜி.கிட்டப்பா பாமர மக்களிடம் நல்ல இசையைக் கொண்டு சேர்க்கவில்லையா!


  ‘கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த’ என்ற வள்ளலார் பாட்டை அவர் தானே பிரபலப் படுத்தினார்!  ஏன்.  ஜி.என்.பி, முசிரி, எம். எஸ், தண்டபாணி தேசிகர். கே.பி.சுந்தராம்பாள் போன்றோர் சினிமாவிலும்  பாடி  நடித்தார்களே!   “பண்பாடு”- இது Culture என்ற சொல்லின் தமிழாக்கம்- செய்தவர்- டி.கே.சி அவர்கள்! சினிமா இதை எப்படி வளர்க்க முடியும்? இசை, சாஹித்யம் – இவை இரண்டும் முக்கிய வழிகள்.   ஒரு உதாரணம் பார்க்கலாம். 1954லில் வந்த ‘மிஸ்ஸியம்மா’ தமிழ்ப்படம் அனேகமாக அனைவருக்கும் தெரிந்திருக்கும். இனிய பாடல்கள் நிறைந்தது. எல்லாப் பாடல்களும் கர்னாடக ராகங்களில் அமைந்தவை. மக்களிடையே நல்ல வரவேற்பும் பெற்றன. இதில் வந்த “பிருந்தா வனமும் நந்த குமாரனும்” என்ற பாட்டு மிகப் பிரபலமானது. இதன் ஸாஹித்யம்  நினைவிருக்கலாம்:  


பிருந்தா வனமும் நந்த குமாரனும்
யாவருக்கும் பொதுச் செல்வ மன்றோ
ஏனோ ராதா இந்தப் பொறாமை
யார்தான் அழகால் மயங்கா தவரோ


புல்லாங் குழலிசை இனிமை யினாலே
உள்ளமே ஜில் லெனெத் துள்ளாதா
ராகத்திலே அனு ராக மேவினால்
ஜகமே ஊஞ்சலில் ஆடாதா



கண்ணனின் உன்னத லீலையை நினைத்தால்
தன்னையே மறந்திடச் செய்யாதா
ஏனோ ராதா இந்தப் பொறாமை
யார்தான் அழகால் மயங்கா தவரோ
    


  இந்தப் பாடலை எழுதியவர் தஞ்சை ராமையதாஸ். இந்தப் படம் “மிஸ்மேரி ” என்ற பெயரில் ஹிந்தியில் வந்தது. அதில் ராஜேந்த்ர க்ருஷண் எழுதிய பாடலைப் பாருங்கள்: ப்ருந்தாவன் கா க்ருஷ்ண கன்ஹையா  

वृन्दावन का कृष्ण कन्हैया सबकी आँखों का तारा मन ही मन क्यों जले राधिका मोहन तो है सबका प्यारा     ப்ருந்தாவன் கா க்ருஷ்ண கன்ஹையா ஸப் கீ ஆ(ன்)கோ கா தாரா மன் ஹீ மன் க்யோ(ன்) ஜலே ராதிகா மோஹன் தோ ஹை ஸப் கா ப்யாரா ப்ருந்தாவனத்தின் க்ருஷ்ண கன்னையா நம் அனைவரின் கண்ணின் மணியன்றோ! பின் ராதே,  ஏன் உன் மனத்தில் பொறாமைத் தீ வந்தது? கண்ணன் அனைவரின் உள்ளம் கவர்ந்தவன் இல்லையா?  

जमुना तट पर नन्द का लाला जब जब रास रचाए रे तन मन डोले कान्हा ऎसी मुरली मधुर बजाये रे सुध-बुध खोये खड़ी गोपियाँ जाने कैसा जादू डाला वृन्दावन का …

    ஜமுனா தட் பர் நந்த்கா லாலா ஜப் ஜப் ராஸ் ரசாயே ரே தன் மன் டோலே கான் ஹா ஐஸே முர்லீ  மதுர்  பஜாயே ரே ஸுத்-புத் கோயே ஸடீ  கோபியா(ன்) ஜானே கைஸா ஜாதூ டாலா     யமுனையின் கரையிலே இந்த நந்தனின் செல்வம்  எப்பொழுதெல்லாம்  ராஸ க்ரீடை தொடங்கினானோ – எப்பொழுதெல்லாம் கண்ணன் தன் மதுரக் குழலிசை இசைக்கத் தொடங்கினானோ – இந்தக் கோபியர்  தம் உடல்-மன நினைப்பையே இழந்துவிட்டனரே ! இது எந்த விதமான மாயமோ தெரியவில்லையே!  

रंग सलोना ऐसा जैसे छायी हो घटा सावन की ऐ री मैं तो हुई दीवानी मन मोहन मन भावन की तेरे कारण देख सांवरे छोड़ दिया मैंने जग सारा    

ரங்க் சலோனா ஐஸா ஜைஸே  சாயீ ஹோ கடா ஸாவன் கீ ஏ ரீ மைதோ ஹுயீ தீவானா மன் மோஹன்  மன் பாவன் கீ தேரே காரண் தேக் ஸா(ன்)வ்ரே  சோட் தியா மைனே ஜக் ஸாரா     கார்காலத்தின் மேகங்கள் விரிந்து பரந்து வண்ணமயமாக்கி விட்டது ஏனடி, மன மோஹன க்ருஷ்ணன் மனதில் புகுந்ததும் நான் பித்துப் பிடித்தவளாகி விட்டேன் அன்பனே! உன் காரணமாக நான் இந்த உலகத்தை எல்லாம் விட்டுவிட்டேன், பார்!!  



Song: Brindavan ka krishna kanhaiya Film: Miss Mary 1957 Lyricist: Rajinder Krishan Music: Hemant Kumar Singers: Rafi & Lata       Hemant Kumar was assigned music direction, and he wanted to compose on his own. But the producers prevailed upon him to retain this tune as it had become a super hit in the whole South. Hemant Kumar had to reluctantly agree, but he retained his original touch by composing it in the Raag Pahadi, and introducing subtle variations in orchestration. One may listen to both versions, and easily decide which sounds sweeter!  


 இரண்டு பாடல்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள். ஒரே கருப்பொருள்தான்-அதை வெளியிடுவதில் தான் எத்தனை வித்தியாசம்! ‘யாவருக்கும் பொது செல்வம்’ என்பது சாதாரணமான சொல்லாக்கம். ‘ஆ(ன்)கோ கா தாரா” என்பது இலக்கிய மொழி வழக்கு! எது கவிதை? ஊகித்துக் கொள்ளுங்கள்! ‘லீலை” என்று ஒரு சொல்லில் தமிழில் குறுக்கியதை விரித்து ஹிந்தியில் எழுதிவிட்டார் கவிஞர் ராஜேந்த்ர க்ருஷன். கோபியர்களின் பக்திப் பரவசத்தையும்  விவரித்துவிட்டார்! பாகவதத்தை ஒட்டியே கவிதை இயற்றிவிட்டார்!      கோபியரின் நிலையைச் சொன்னது இதை பக்திப் பாடல் வரிசையில் முதல் இடத்தில் சேர்த்துவிட்டது! ஆம், நமது பக்தி இலக்கியத்தில் எழுத்தறிவில்லாத கோப-கோபியரைப்போன்ற பக்தியிற் சிறந்தவர்கள் இல்லவே இல்லை! பக்தி இலக்கணத்திற்குச் சூத்திரம் வகுத்த நாரதர், பக்திக்கு உதாரணமாகச் சொல்வது கோபியரை மட்டுமே!    

यथा व्रजगोपिकानाम् । २१ – १.२१ யதா வ்ரஜோ கோபிகானாம் [சூத்ரம் 21] விரஜ பூமியில் எவ்விதம் கோபியர்களுக்குப் பக்தி இருந்ததோ அப்படிச் செய்யவேண்டும். (பகவானுக்காக உடல், பொருள், ஆவி அனைத்தையும் துறப்பது) ஹிந்திக் கவிஞர் எப்படி நமது பக்தி இலக்கிய மரபை சினிமாப் பாட்டில் கொண்டுவந்து விட்டார், பாருங்கள்!    

[ தமிழ் பக்தி மரபில், “கண்ணப்பன் ஒப்பதோர் அன்பு” என்பார் மாணிக்கவாசக ஸ்வாமிகள். ] இப்பாடல் ஒரு பஜனைப் பாடலாக இன்றுவரை வட இந்தியாவில் பாடப்படுகிறது- துளியும் சினிமா  சாயலே இல்லை!     தமிழில் முடியாதா?   தமிழில் இப்படி எழுத முடியாதா?  ஏன் முடியாது?  ‘மீரா”  1945 படப் பாடல்களை  நாம் கேட்டதில்லையா? அதற்குப் பிறகும் “ஜாதகம்” 1953 என்ற படத்தில் இரு பாடல்கள் வந்தன, -மதி குலவும் யாழிசையே, கண்ணன் குழலிசை ஆவாயோ,  கண்ணன் குழலிசை போலே உள்ளம் கொள்ளை கொள்வாயோ -மாடுகள் மேய்த்திடும் பையன்- இந்தப் பாடலை முழுதும் பார்ப்போம்:    


மாடுகள் மேய்த்திடும் பையன்-
பசு மாடுகள் மேய்த்திடும் பையன் 
தன்னை மதிப்பவர்க்கே மெய்யன்
இவன் வானவர்க்கும் புவி மானிடர்க்கும்
சுக வரமளிக்கும் ஐயன்  
மலையைக் குடையாய் ஏந்திடுவான்-
விஷ மடுவில் தனியாய் நீந்திடுவான்
மாதர்கள் அலற சேலைகள் திருடி
மறைந்தே செல்வான் பொல்லாதவன்    
இவன் வானவர்க்கும் புவி மானிடர்க்கும்     
 சுக வரமளிக்கும் ஐயன்      
மண்ணைத் தின்று தன் வாயில் உலகம் வளர்வதெல்லாம் காட்டி-

மாயையினாலே யாரையும் வென்று மயக்கிடுவான் மலை யாதவன்   வலிய மீன் பெரிய ஆமை வராக
வடிவமெல்லாம் எடுப்பான் மானிடர் காணா ஜால மிகுந்த மாயா வினோத னே இவன்     இவன் வானவர்க்கும் புவி மானிடர்க்கும்    

சுக வரமளிக்கும் ஐயன்     பால் தயிர் வெண்ணைப் பானையில் மூழ்கி பைய நடந்தே ஆடுவான்-அதைப் பார்த்திடில் தனது பந்தைத் தேடிப் பார்த்தேன் என்றே ஓடுவான்      இவன் வானவர்க்கும் புவி மானிடர்க்கும்       சுக வரமளிக்கும் ஐயன்   இதை எழுதியவர் டி.கே, சுந்தர வாத்யார். விவரம் ஒன்றும் தெரியவில்லை. கோவர்த்தனம் இசையில் இதைத் தன் தேன் குரலில்  பாடியவர் எம்.எஸ்.ராஜேஸ்வரி! இப்போது இத்தகைய பாடல் வருமா? தரமும் பண்பாடும் ரசனையும் எப்படித் தாழ்ந்து போய்விட்டன பாருங்கள்!   இன்னொரு டூயட் பார்ப்போம்

  chanda tale o
chanda tale o
chanda tale muskuraye jawaniya
hotho pe aa gayi dil ki kahaniya
hotho pe aa gayi dil ki kahaniya
chanda tale o chanda tale
muskuraye jawaniya    

சந்தா தலே முஸ்குராயே ஜவானியா(ன்) நிலவொளியிலே இளமை இனிக்கிறதே! மனதின் விஷயம் வாய்வழியாக வந்துவிட்டதே! நிலவொளியிலே……    

dil ka fasana kaha bhi na jaye
kahe bina hamse raha bhi na jaye
bha gayi teri nadaniya ho nadaniya
chanda tale muskuraye jawaniya
hotho pe aa gayi dil ki kahaniya
chanda tale o chanda tale
muskuraye jawaniya    

தில் கா ஃபஸானா கஹா பீ ந ஜாயே மனதின் கதையைச் சொல்ல இயலவில்லையே! அதைச் சொல்லாமலும் இருக்க முடியவில்லையே! ஓ உன்னுடைய இந்த ‘அறியாத்தனம்’ பிடித்துப் போய் விட்டதே! நிலவொளியிலே…..    

pahli wafaye pahli bahar hai
koi bata de kaisa ye pyar hai
taro ke jaise kaaba le aao
kaaba le aao
chanda tale muskraye jawaniya
hotho pe aa gayi dil ki kahaniya
chanda tale o chanda tale
muskuraye jawaniya  


பஹலீ வஃபாயே  பஹலீ பஹார் ஹை முதலில் தோன்றும்  நம்பிக்கையே முதல் வஸந்தமாகும்! இக் காதலின் இயல்பு என்ன, எவராவது விளக்குவார்களா? தாரகைகளைப் போல,  நற் செய்தி தாங்கி வா! நிலவொளியிலே…….   Song: Chanda tale Film: Chandi Rani 1953 Lyricist: Vishvamitra Adil Music: C.R.Subbaraman +M.S.Visvanathan Singers: Talat Mahmood & P.Bhanumathi  



இது பானுமதி  தயாரித்து ,  நடித்து இயக்கிய படம்.  (வாழ்க பெண்கள் விடுதலை!) தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மும்மொழிகளில் வந்தது. தெலுங்கிலும் தமிழிலும் இப்பாட்டை கண்டசாலாவும் பானுமதியும் பாடினார்கள். தமிழ்ப்பாடல் எழுதியது கே.டி.சந்தானம். தமிழைவிட தெலுங்கில் இனிமையாக இருக்கிறது என்பது என் கருத்து. பாடகர்களுக்கு தாய்மொழியானதால் அப்படி இருக்கலாம். ஹிந்தியிலும் பானுமதியே பாடியிருக்கிறார். உச்சரிப்பில் வித்தியாசம் தெரிகிறது.     இந்தப் பாட்டின் மெட்டு யார் அமைத்தது? இந்தப் படத்திற்கு இசைஞரான சி ஆர். சுப்பராமன் இடையில் காலமானார். அவர் உதவியாளராக இருந்த எம்.எஸ்.விஸ்வனாதன் அப்பணியைச் செய்து முடித்தார். இந்த மெட்டு தான் அமைத்தாக அவர் சொல்லியிருக்கிறார். மற்றும் இந்த மெட்டுக்குப் பாட்டெழுத விஸ்வாமித்ர ஆதில் தடுமாறியதாகவும், தானே முதல் வரியை ” சந்தா தலே முஸ்குராயே ஜவானியா” என்று எடுத்துக் கொடுத்ததாகவும் யூட்யூபில் சொல்லி யிருக்கிறார். இதை நம்புவது கடினம். இந்த மெட்டு அப்படி ஒன்றும் கடினமானதல்ல.  நான் 60 வருஷங்களாக ஹிந்திப் பாட்டைக் கேட்டும், கற்றும் வருபவன் .

ஹிந்தி பாடலாசிரியர்கள் அப்படி சோடைபோனவர்கள் அல்ல. டைரக்டர், பெரிய நடிகர்கள், இசைஞர் ஆகியோர் விருப்பத்தின்படி பலமுறை எழுதுவார்கள். சில சமயம் பாடகர்களுக்கே சில வார்த்தைகள் கடினமாகிவிடும், அதை மாற்றுவார்கள். லதா மங்கேஷ்கர் தமிழில் பாடமுயன்றபோது (டப்பிங்கில்) தடுமாறினார். அவருக்காக கம்பதாசன் பலமுறை சொற்களை மாற்றி எழுத நேர்ந்தது என்பார்கள்!        

மேலும், இந்த முதல்வரியின் சொற்கள் சாதாரண வழக்கிலிருக்கும் சொற்கள் அல்ல! தரமான இலக்கிய வழக்கு! ஹிந்தி பேசாத, தாய்மொழியாக இல்லாத  ஒருவருக்கு இத்தகைய சொற்கள் அமைவது அதிசயமே!     [ இது என் சொந்தக் கருத்து. எம்.எஸ்.வி அபிமானிகள் தயவு செய்து  கோபிக்க வேண்டாம்!] இந்தப் பாடலில், “taro ke jaise kaaba le aao” என்ற வரியின் பொருள் விளங்கவில்லை! இங்கு

வரும் “காபா” என்ற சொல்லுக்கு அகராதியிலும் பொருள் தரவில்லை! விஸ்வாமித்ர ஆதில் பல வெற்றிப் படங்களுக்கு கதையும் உரையாடலும் எழுதியவர், உதவி டைரக்டராக இருந்தவர்.     சில சமயம் பாடலாசிரியர்கள் தடுமாறுவது உண்டு; இது இயலாமையினால் வருவது அல்ல. 1965ல் தேவ் ஆனந்த்  Guide படமெடுத்தார். ஹஸ்ரத் ஜய்புரி பாட்டெழுத வேண்டும்.. ஒரு சீனிற்குப் பல முறை எழுதியும் டைரக்டர் விஜய் ஆனந்திற்கு திருப்தியாகவில்லை.

[இதில் வரும் கதா நாயகன் ‘கேரக்டர்’ சரியில்லை.] ஏதோ சொல்லிக்கொண்டே இருந்தார். ஹஸ்ரத்திற்குக் கோபம் வந்துவிட்டது. “ஒரு மோசமான பாத்திரத்திற்கு இன்னும் நன்றாக என்ன எழுதுவது” என்று சொல்லி காகிதத்தை விட்டெறிந்து விட்டுப்  போய்விட்டார். [அவர் சொன்ன அசல் வார்த்தை “ஒரு படவா”விற்கு என்பது] பின்னர் ஷைலேந்த்ராவை எழுதச்சொன்னார்கள். அவர் ஹஸ்ரத்தின் நண்பர். அதனால் ஹஸ்ரத் எழுதியிருந்த முதல் வரி ” தின் டல் ஜாயே” என்ற சொற்களை வைத்தே பாட்டெழுதினார். இங்கு வெளிப்படுவது எழுத்தாளரின் மனோதர்மமே தவிர, இயலாமை அல்ல!

    சில சமயம் சிலர்  அசப்பில் சொல்லும் சொற்கள் பாட்டின் முதல் வரியாக அமைவதுண்டு. ஒரு சமயம் இசைஞர்கள் ஷங்கர், ஜெய்கிஷன், கவி ஹஸ்ரத், ஷைலேந்த்ரா ஆகியோர் காரில் வந்துகொண்டிருந்தனர். ஜெய்கிஷன் வழியில் யாரையோ திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே வந்தார். கூட இருந்த யாரோ , “அரே க்யா முட் முட் கே தேக் ரஹே ஹோ” ( என்ன திரும்பிப் பார்த்துக் கொண்டே இருக்கிறாய் ) என்று கிண்டலடித்தார். பின்னர் ஷைலேந்த்ரா இந்த வார்த்தையை வைத்தே “முட் முட் கே நா தேக் முட் முட் கே” என்று பாட்டெழுதினார்.


ஸ்ரீ 420 படத்தில் இது பெரிய ஹிட் ஆனது!       கவி பரத் வ்யாஸ் “தோ ஆங்கே பாரஹ் ஹாத்” படத்திற்குப் பாட்டெழுதவேண்டும் படப்பிடிப்பு தொடங்கியும் பாட்டு வரவில்லை ஒரு நாள் தயாரிப்பாளர்-டைரக்டர் சாந்தாராம் வ்யாஸிடம், ‘அரே மாலிக், நீ எந்தக் காலத்தில் பாட்டு எழுதி முடிக்கப் போகிறாய்” என்று கிண்டலாகக் கேட்டார். கவிக்கு ரோசம் வந்தது!  “யே மாலிக் தேரே பந்தே ஹம்” என்ற பிரார்த்தனைப் பாடலை எழுதி முடித்தார்! மாலிக் என்று சாந்தாராம் சொன்னது, ஓ தலைவா, எஜமானரே என்று நாம் கிண்டலாகச் சொல்வது, கவி எழுதியதோ, அசல் மாலிக் கடவுளைப் பற்றி!. இதில் “மாலிக் ” என்ற சொல்லைப் போட்டதால் இது முஸ்லிம்களுக்கும் பிடித்துப் போய்விட்டது-

பாகிஸ்தானிலும் பாடினார்கள்.   அதாவது, சில சொற்கள் பாட்டுக்குத் தூண்டுகோலாக அமையலாம். ஆனால் ஒரு முழு இலக்கிய வரியே அம்மொழி பேசாத ஒருவருக்கு வந்தது என்பது ஆச்சரியமே! எப்படியானால் என்ன, ஒரு நல்ல பாட்டு நமக்குக் கிடைத்தது!                                                                                                                ****            tags — ஹிந்தி படப் பாடல்கள்-19 , திரை இசை, அநீதி,

மனிதனின் முப்பது கடமைகள்! (Post No.7887)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7887

Date uploaded in London – – 27 April 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures

மனிதனின் முப்பது கடமைகள்!

ச.நாகராஜன்

நாரதர் கூறிய 30 கடமைகள்

தர்மபுத்திரருக்கு ஒரு முறை தர்ம சம்பந்தமான சில சந்தேகங்கள் எழுந்தன. தனது சந்தேகங்களைத் தீர்க்க வல்லவரான நாரதைரை அவர் தரிசித்தார்.

நாரதரிடம் தனது சந்தேகங்களைக் கேட்க அவர் ஒவ்வொன்றாக விளக்குகிறார்.

பாகவதத்தில் ஏழாவது ஸ்கந்தத்தில் பதினொன்றாம் அத்தியாயத்தில் பல்வேறு தர்மங்கள் நாரதரால் விளக்கப்படுகின்றன.

தர்ம ரகசியத்தை எனக்கு விளக்கி அருள்வீராக என்று யுதிஷ்டிரர் கேட்க நாரதர் விளக்கும் ஒரு பகுதியாக மனித வாழ்வில் ஒவ்வொரு மனிதனும் சாதாரணமாய் அனுஷ்டிக்க வேண்டிய முப்பது கடமைகள் விளக்கப்படுகிறது.

அந்த முப்பது கடமைகளாவன:-

1) அனைத்துப் பிராணிகளுக்கும் இதம் செய்வதாகிய ஸத்யம்

2) பிறர் துக்கம் கொண்டு பொறுக்காமல் இருக்கும் தயை

3) உபவாசம் முதலிய தவம்

4) பொறுமை

5) விவேகம்

6) உள்ளே இருக்கும் இந்திரியமான மனத்தை அடக்குதல்

7) வெளி இந்திரியங்களை, அதாவது புலன்களை, அடக்குதல்

8) மனோ வாக்கு காயங்களால் மற்றவர்களுக்குத் துன்பம் இழைக்காமை

9) தகாத காலங்கள் பெண்களுடன் உடலுறவு கொள்ளாமை

10) லோபம் இல்லாமை

11) முறைப்படி மந்திர ஜபம் செய்தல்

12) மனோ வாக்கு காயங்கள் ஒன்றாக இருத்தல்

13) தெய்வாதீனமாய் ஏற்பட்டிருக்கும் அன்னம் முதலியவற்றால் மகிழ்ச்சியுற்றிருத்தல்

14) எல்லாவற்றையும் பரப்ரஹ்ம ஸ்வரூபம் என்று சமமாய்ப் பார்க்கும் பெரியோர்களைப் பணிதல்

15) ப்ரவிருத்தி கர்மங்களிலிருந்து மீளுதல்

16) பயனற்ற காரியங்களைச் செய்யலாகாது என்று நிரூபித்து நிர்ணயித்தல்

17) வீண்பேச்சுப் பேசாமல் மிதமாகப் பேசுதல்

18) தேகத்தைக் காட்டிலும் விலக்ஷணனான ஆத்மாவின் சொருபத்தை ஆராய்தல்

19) பிராணிகளுக்கு உரியபடி அன்னம் முதலியவற்றைக் கொடுத்தல்

20) அனைத்து பூதங்களிலும் ஆத்மாவும் பரமாத்மாவும்

அமைந்திருக்கின்றார்கள் என்ற நினைவு கொண்டிருத்தல்

21) அனைத்து பூதங்களும் தன்னைப் போன்றவை என்றும், பரப்ரம்ம சொரூபங்கள் என்றும் பாவித்தல்

22) மனிதரிடத்தில் அந்த நினைவு எப்போதும் மாறாது நிறைந்திருத்தல்

23) பெரியோர்கள், “நமக்கு இவனே கதி” என்று பாவித்து வணங்கும் பகவானுடைய குணங்களைக் கேட்டல்

24) பகவானுடைய நாமங்களைக் கீர்த்தனை செய்தல்

25) அவனது சொரூப ரூப குண விபூதிகளை நினைத்தல்

26) அவன் பாதங்களைப் பணிதல்

27) அர்க்யம் , பாத்யம் முதலியன கொடுத்து அவனை ஆராதித்தல்

28) அவனை வணங்குதல்

29) அவனுக்கு எல்லாவிதத்திலும் அநுகூலனாய் இருத்தல்

30) அவனிடத்தில் ஆத்ம சமர்ப்பணம் செய்தல்

இந்த முப்பதும் மனிதர்கள் அனைவரும் சாதாரணமாக அனுஷ்டிக்க வேண்டிய மேலான தர்மம் என்று நாரதர் யுதிஷ்டிரருக்கு விளக்கி அருளுகிறார்.

*

Truthfulness, compassion, austerity and cleanliness [with the vidhi]; tolerance, discrimination, composure and continence, nonviolence, celibacy, generosity and study of the scriptures, sincerity, contentment and to serve the holy souls [in yama and niyama]; gradually cutting with that what is unnecessary and to be of gravity in avoidance of empty talk, self-search, to share food and drink with all beings and to consider everyone first of all a part of God, oh Pândava; to listen and to sing as also to remember Him who is the shelter of all the great souls, to attend, to worship and to propitiate, to be a servant, to be a friend and to be of surrender [in bhâgavata dharma]; to possess all the thirty characteristics as described constitutes the supreme of dharma that pleases Him, the Soul of All, oh King [compare B.G. 12: 13-20].

*

இன்னொரு ஆங்கில மொழிபெயர்ப்பு : செய்தவர் :

 An Unknown Servant

Thirty Items of Man’s Duty

Truth,

Compassion,

Austerities,

Purity,

Endurance,

Discrimination between right and wrong,

Control over the mind and senses,

Non-violence,

Practice of Brahamacharya,

Renunciation of prohibitory acts and of part of one’s earning for charity,

Study of the Vedas and practices of Japa and Kirtana of the Divine Name,

Contentment,

Service of saints who regard all as equal,

Gradual withdrawal from worldly enjoyments,

Reflection on the failure of man’s egoistic efforts,

Introspection,

Meditation on the Self,

Equitable distribution among creatures of food-grains and other necessary things,

Looking upon all beings and especially men as the Self or as the Deity,

Hearing,

Loud chanting and constant remembrance of the Name and virtues of Bhagavan Sri Krishna,

The Supreme refuge of saints,

Offering of Service,

Adoration and salutations to Him,

Cultivation of the servant or friendly sentiment towards Him,

And surrender of the Self to Him,

All these are the highest Dharma of men.

Observance if these thirty items of Dharma propitiates God, the soul of the Universe.

*

நாத்திகம் பற்றி பாகவதம்!

கடவுளை நினைக்காமல் அவனிடமிருந்து தள்ளி இருக்கும் மனிதனுக்கு என்ன நடக்கும் ?

இப்படி விதேஹ மன்னனான ஜனகன் கேட்க அவன் முன்னே கூடி இருந்த ஸாதுக்களில் ஒருவர் இப்படி பதில் அளிக்கிறார் :- (அதாவது ஒரு நாத்திகனுக்கு என்ன நடக்கும் என்பதே ஜனக மன்னனின் கேள்வி!)

தர்ம சூட்சுமத்தை அறியாத மூடர்கள் வணக்கமின்றித் தங்களைத் தாங்களே புத்திசாலிகளாக நினைத்துக் கொண்டு ‘நமக்கு என்ன நேருமோ’ என்ற சந்தேகமே இல்லாமல், ‘நமக்கு ஒரு கெடுதியும் இல்லை’ என்ற பெரிய நம்பிக்கை உடையவர்களாகி பிராணிகளுக்குத் தீங்கை இழைக்கின்றனர்.

அந்தப் பிராணிகள் மேலுலகம் சென்ற பின்னர் தங்களுக்குத் தீங்கை இழைத்த துரோகிகள் அங்கு வரும் போது அவர்களுக்குத் தீங்கைச் செய்கின்றன. மேலும் அந்த மூடர்கள் பிறருடைய தேகங்களில் வெறுப்பு கொண்டு அபிசாரம் முதலிய கொடிய செயல்களைச் செய்கின்றனர். அந்த வெறுப்பானது தங்களுக்கும் பிறர்க்கும் அந்தராத்மாவாய் இருக்கும் துக்கங்களைப் போக்கும் பரம புருஷனிடத்திலேயே போய்ச் சேரும் என்பதால் அவர்கள் அவனையே வெறுத்தவர்கள் ஆகிறார்கள்.

மேலும் அவர்கள் பிள்ளை பெண்டிர் போன்ற  இணைப்பைக் கொண்டதும்  பிணம் போன்றதுமாகிய தேகத்தில் சிநேகம் கொண்டு அதில் வேரூன்றப் பெற்று நரகத்தில் விழுகிறார்கள்.

வாசுதேவனை நினைப்பவர்கள் நல்ல கதியை அடைய அப்படி இறைவன் நினைப்பு இல்லாதவர்கள் தீய கதியையே அடைகின்றனர்.

இந்த விடையால் ஜனகன் தெளிவு பெறுகிறான்.

****

இப்படி ஏராளமான கேள்விகளை ஒன்றன் பின் ஒன்றாக ஜனகன் பெரும் மகான்களின் முன் வைக்க அவனுக்கு உரிய விடைகள் கிடைக்கின்றன.

பாகவதம் தரும் ஏராளமான அற்புத விளக்கங்களை பதினொன்றாம் ஸ்கந்தம் நான்காம் அத்தியாயத்தில் காணலாம்.

****

tags — ஜனகன், நாத்திகம், பாகவதம், நாரதர் , 30 கடமைகள்

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி2642020 (Post No.7886)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7886

Date uploaded in London – 26 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

குறுக்கே

1.—6 எழுத்துக்கள் — தமிழ்நாட்டின் வட எல்லை

4.– 2–குன்று / வலமிருந்து இடம் செல்க

5. – 3–இந்தியாவின் தேசீய மலர்

8. – 3– பிறவா யாக்கைப் பெரியோன் / வலமிருந்து இடம் செல்க

9. -2– பாட்டி சொல்லுவாள்; பேரன் கேட்பான்

10. – 3- 1000 ஆண்டுக்கு முன் இவன் எழுதாத சப்ஜெக்டே இல்லை. இவன் ஒரு மன்னன்

11. – 4- – சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றையும் இவ்வாறு அழைக்கிறார் ஒரு புலவர்

கீழே

1.–7–செங்கல்பட்டுக்கு அருகிலுள்ள புகழ்பெற்ற பறவைகள் சரணாலயம்

2. –4– வியாசம் என்று சொல்லுவர் ; ஒரு பொருள் குறித்து பத்திரிக்கைகளிலும் பரீட்சையிலும் எழுதுவது

3.ம  — 7– மீனாட்சி தேவியின் தந்தை; கொடியில் மலை பொறித்தவர்

6. – 5– குருட்டுத்தனமாக தலைவனை பின்பற்றுவோரை இந்த மிருகத்தின் பெயரை சொல்லி திட்டுவார்கள்

7.– 5– இப்போது கம்போடியா என்று பெயர்

12.-  8– கொங்கு நாட்டில் ஓடா நிலை கோட்டை கட்டியவர் ; கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிர்க்க போர்க்கொடி தூக்கிய வீரர் / கீழிருந்து மேல் செல்க.

–SUBHAM–