
Post No. 8231
Date uploaded in London – 23 June 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
வேத கால மக்களுக்கு வெளி உலகவாசிகள் பற்றித் தெரியும்? (Post No.8231)

ஆதியில் தெய்வங்களும் பூமியில் மனிதர்களுடன் வாழ்ந்தனராம் ; மனிதர்கள் எங்களுக்கு ‘அதைக்கொடு’ ‘இதைக்கொடு’ என்று நச்சரிக்கவே இந்தப் பிச்சுப் பிடுங்கல்களில் இருந்து தப்பி ப்பதற்காக பூமியிலிருந்து வெளியேறிவிட்டனராம் . இது ஆதி சங்கரரும் சதபத பிராஹ்மணம் என்னும் நூலும் நமக்குத் தரும் தகவல்.
மாதலி தேரில் அர்ஜுனன் விண்வெளிப் பயணம் செய்தபோது பார்த்த ஒளிப்பிழம்புகளைக் கண்டு என்ன என்று வியந்து கேட்கிறான். இவர்கள்தான் பூமியிலிருந்து வந்த புண்ய ஆத்மாக்கள் ; இவர்களைத்தான் பூமியிலுள்ளோர் நட்சத்திரங்கள் என்பார்கள் என்று பதில் தருகிறான் மாதலி(காண்க -வனபர்வம், மஹாபாரதம் ).
தற்காலத்தில் பாரதியாரும் அதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கம்பன் , அதற்கும் பல நுறு ஆண்டுகளுக்கு முன்னர் மாணிக்கவாசகர் ஆகியோரும் பிரபஞ்சம் பற்றிக் கூறிய கருத்துக்களை முன்னரே கண்டோம்.
இரண்டாவதாக, ஐன்ஸ்டின் தத்துவப்படி ஒளியின் வேகத்தை எவரும் மிஞ்ச முடியாது; அப்படி முந்தும் ஒரு வாகனத்தைக் கண்டு பிடித்தால் அதில் செல்லுபவர் முதுமையை அடையாமல் மார்க்கண்டேயனாக என்றும் 16 வயதுக்காரனாக இருப்பான் என்று சொன்னதையும் கண்டோம். ஆனால் இந்து மத நூல்கள் மனோ வேகம் தான் பெரியவேகம் என்கிறது ;ஒளியின் வேகத்தில், அதாவது ஒரு வினாடிக்கு 186,000 மைல் வேகத்தில் ஒருவர் பயணம் செய்தால் பூமிக்கு அருகிலுள்ள ஆல்பா சென்டரை நட்சத்திரத்துக்கு செல்வதற்கு நாலரை ஒளி ஆண்டுகள் பிடிக்கும் . இப்போது நம்மிடமுள்ள ராக்கெட்கள் அதே நட்சத்திரத்தை அடைய பல நுறு ஆண்டுகள் ஆகும். நமது புராணங்களோ மனோ வேகத்தை உண்மை என்று காட்டுகின்றன. இராமபிரான் எண்ண சக்தியால் இயக்கப்படும் புஷ்பக விமானத்தில் இலங்கையிலிருந்து ஒரே இரவில் அயோத்திக்கு வந்துவிடுகிறான்!
ஆக மனோ சக்தியால் (Thought Power), நினைத்த மாத்திரத்தில் எங்கும் செல்லலாம். நாரதர் போன்றோர் ‘திரிலோக சஞ்சாரி’ என்று அழைக்கப்படுகின் றார். ஆயினும் இவை எல்லாம் அரிது.
ராக்கெட்டில் சந்திரனுக்கு செல்லலாம் என்று நாம் எல்லோரும் நம்புகிறோம். ஆயினும் 50 ஆண்டுகளில் சந்திரனில் இறங்கியவர் 12 பேர்தான். பூமியில் வேறு ஒரு காலக் கணக்கு, விண்வெளியில் ஒரு காலக் கணக்கு என்பதை எல்லாம் ரேவதி நட்சத்திர கதை விளக்குகிறது . ஒவ்வொரு கல்பத்திலும் தோன்றும் ‘பிரம்மா’வின் ‘ஒரு நாள்’ என்ன என்ற கணக்கு விஞ்ஞானிகளையும் திகைக்கவைக்கிறது! ஏனெனில் 200 ஆண்டுகளுக்கு முன்னர் அவர்களுக்கு பல பில்லியன் நட்சத்திரங்கள், அதைச் சுற்றி வ லம் வரும் கிரகங்கள் பற்றியெல்லாம் தெரியாது .
ரிக்வேதம் என்பதோ உலகின் பழைய நூல். அதில் கூட 100 பூமிகள், 1000 சூரியன்கள் என்ற வரிகள் வருகின்றன . இது போன்ற கற்பனை கூட சில நுறு ஆண்டுகளுக்கு முன்னர் எவருக்கும் கிடையாது. ஆனால் நமது வீட்டுக் குழந்தைகளோ ‘வக்ரதுண்ட மகா காய’ என்ற பிள்ளையார் துதியில் இறைவனை ‘சூர்ய கோடி சம பிரபா’ என்று போற்றுகின்றனர். அதாவது கடவுளை ‘10 மில்லியன் சூரியன்’ போன்ற ஒளி உடையவன் என்கிறது
விஞ்ஞானிகளுக்கும் நமது ஸ்லோகம்தான் நினைவுக்கு வருகிறது. அணுகுண்டு என்னும் மஹத்தான் ஆயுதத்தைக் கண்டுபிடித்தவர் அமெரிக்க விஞ் ஞானி (Father of Atomic Bomb- Robert Oppenheimer) ராபர்ட் ஓப்பன்ஹைமர். ஜப்பானிலுள்ள ஹிரோஷிமா மீது ஆகஸ்ட் 6, 1945 அன்று அணுகுண்டு போட்டு லட்சக்கணக்கானோரை படுகொலை செய்யும் ஒரு மாதத்துக்கு முன்னர் முதல் சோதனை நடந்தது. அதைப்பார்த்த ராபர்ட் ஓப்பன்ஹைமர் “அடக் கடவுளே பகவத் கீதையில் கண்ணன் காட்டிய ஆயிரம் சூரியன் பிரகாசம் போல –திவி சூர்ய சஹஸ்ரஸ்ய – இருக்கிறதே! என்று வியந்தார் . பின்னர் தான் அணுகுண்டு என்னும் ஆயுதத்தைக் கண்டுபிடித்தமைக்கு வருத்தப்பட்டார் .
ஆனால் அவர்க்கும் கூட கிருஷண பரமாத்மாவின் 1000 சூர்ய பிரகாச விஸ்வரூப தரிசனம் தான் நினைவுக்கு வருகிறது!!
***


இதோ ரிக்வேத துதி
ரிக் வேதம் 8-70 துதியில் ஆறாவது மந்திரம்
“இந்திரனே , உனக்கு நிகராக நூறு சொர்க்கங்களும் நூறு பூமிகளும் கூட வராது. ; ஆயிரம் சூரியன்களும் உன்னைப் புலப்படுத்த வல்லமை உடையவையில்லை. . படைக்கப்பட்ட எந்த வானுலக மண்டலமும், பூமியும் வேறு எந்தப் பொருளும் உன்னை நிரப்பும் ஆற்றல் பெற்றன அன்று.”
இப்படியெல்லாம் பாடுவது ஒரு அறிவியல் சமுதாயத்திலேயே நடக்கும் . ஒரு பூமியையே முழுதும் அறியாத பொட்டல் காட்டு , பாலைவன மக்களிடையே இது எடுபடாது. அவர்களுக்குப் புரியவும் புரியாது. பல்லாயிரம் ஆண்டுகளாக வேத மந்திரம் பாதுகாக்கப்பட்டு வருவத்திலிருந்தே இது உண்மை என்று தெரிகிறது.
இது போன்ற நிறைய குறிப்புகள் உண்டு . இந்திரன் என்பது ‘தலைவன்’, ‘அரசன்’, ‘இறைவன்’ என்று பல பொருள்களில் வரும். தமிழில்கூட இறைவன் என்பது கடவுள், அரசன், என்னைக்காக்க வந்த தலைவா என்ற பொருளில் பயன்படுத்தப்படுவதைக் காண்கிறோம் .

முந்தைய சில கட்டுரைகளின் இணைப்பு முகவரி இதோ :-
விண்வெளிப் பயணம் | Tamil and Vedas
tamilandvedas.com › tag › விண…
1.
27 Sep 2017 – மஹாபாரத வன பர்வத்தில் அர்ஜுனனின் விண்வெளிப்பயணம் (Inter Galactic Space Travel by … மாதலி என்னும் விண்வெளி பைலட்டிடம் (விமானியிடம்) அர்ஜுனன் ஒரு … பறக்கும் பட்டம் (kite) என்றும் மன்னரின் தேர் (Dipper, Chariot) என்றும் அழைத்தன.
வெளி உலகவாசிகள் | Tamil and Vedas
tamilandvedas.com › tag › வெள…
1.
https://tamilandvedas.com/tag/வெளி-உலகவாசிகள்/ … வெளி உலக கிரக வாசிகள் (ET) கண்டு பிடிக்கப்பட்டால் அவர்கள் இப்படிப்பட்ட … ஆனால் வெள்ளைக்காரர் களோவெனில் வெளி உலக வாசிகள் தான் இங்கு …
வெளி உலகவாசிகள் (E.T.), காலம் (Concept …
tamilandvedas.com › 2018/04/30
1.
30 Apr 2018 – வெளி உலகவாசிகள் (E.T.), காலம் (Concept of Time) பற்றி கம்பன்! … https://tamilandvedas.com/tag/வெளி-உலகவாசிகள்/ … வெளி உலக கிரக வாசிகள் (ET) கண்டு பிடிக்கப்பட்டால் அவர்கள் இப்படிப்பட்ட காலச் …
வெளி உலகவாசிகள் பற்றி தாண்ட்ய …
tamilandvedas.com › 2017/07/02
2 Jul 2017 – ஆனால் வெள்ளைக்காரர் களோவெனில் வெளி உலக வாசிகள் தான் இங்கு வந்து, பூமியில் உயிரினங்களை உண்டாக்கினர் என்பர்.
tags – வேத காலம், மக்கள், வெளி உலகவாசிகள் , ரிக் வேதம் 8-70
