வெளி உலகவாசிகள் பற்றி தாண்ட்ய பிராமணம் (Post No.4046)

Compiled by London Swaminathan
Date: 2 July 2017
Time uploaded in London-17-21
Post No. 4046

 
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

வேத கால இலக்கியத்தில் நான்கு பகுதிகள் உண்டு சம்ஹிதை, பிராமணம், ஆரண்யகம், உபநிஷத் என்பன அவை. அதில் நேற்று சுவையான சில கதைகளைத்  தந்தேன். இன்று மேலும் சில தகவல்களைக் காண்போம்

 

தாண்ட்ய மஹா  பிராமணம் தரும் தகவல்:-

 

உயிரினங்களைப் படைத்த பிரஜாபதி, தேவர்களின் நன்மைக்காக  தன்னையே, யாகத்தில் ஆஹுதியாக அளித்தார். முன்னர் மரணம் அடைந்து கொண்டிருந்த தேவர்கள், இதன் காரணமாக இப்பொழுது தெய்வீக நிலையைப் பெற்றனர் (தேவர்களாயினர்)

 

இது பற்றி ஆபஸ்தம்பர் (2-7-16) தரும் வியக்கியானம் சுவையானது:-

முன் காலத்தில் இவ்வுலகத்தில் தேவர்களும் மனிதர்களும் ஒன்றாகவே வாழ்ந்து வந்தனர். பின்னர் யாக யக்ஞங்கள் செய்தவர்கள், அதன் பலனாக, தேவ லோகம் சென்றனர். மனிதர்களோவெனில் உலகிலேயே தங்க நேரிட்டது தேவர்களைப் போல யாக யக்ஞங்களைச் செய்பவர்கள் மரணத்துக்குப் பின்னர், தேவ லோகத்தில் பிரம்மாவுடன் வசிப்பர்..

தேவ லோகவாசிகள் பற்றி இந்துமத புராணங்கள் தரும் தகவல் வேறு எங்கும் இல்லை. ஆக,  நாமே இத்துறையில் மிகவும் முன்னேறி உள்ளோம்; எதிர்காலத்தில் வெளி கிரஹ வாசிகளைக் கண்டுபிடிக்கையில் நாம் அன்றே சொன்னோம் என்று சொல்லலாம்:-

1.தேவலோக வாசிகள் கண் இமைக்காது

2.கால்கள் நிலத்தில் பதியாது

3.அவர்கள் போட்டிருக்கும் மாலைகள் வாடாது

4.அவர்கள் இன்பமாக இருப்பர்; ஆனால் செக்ஸ் (SEX) செய்ய முடியாது

5.அவர்கள் மானசீகமாக எங்கும் பயணம் செய்யலாம்.

6.தாண்ட்ய பிராமண விளக்கத்தின்படி பார்த்த்,,,,,,,,,,,ல், அவர்கள் பூமியிருந்து பிற கிரகங்களுக்குச் சென்றவர்களே

 

ஆனால் வெள்ளைக்காரர் களோவெனில் வெளி உலக வாசிகள் தான்  இங்கு வந்து, பூமியில் உயிரினங்களை உண்டாக்கினர் என்பர்

தசரதர் போன்றோர் இறந்த பின்னரும் பூமிக்கு வந்து காட்சி தந்தனர்.  அர்ஜுனன் போன்றோர் இந்திர லோகம் வரை சென்று வந்ததை மஹாபாரதம் கூறுகிறது.

 

ஐதரேய பிராமணக் கதை

 

வேதங்களுக்கு உரை எழுதிய சாயனர் சொல்லும் கதை இது. பழங்கால ரிஷிகளில் ஒருவருக்கு பல மனைவியர் உண்டு. ஒரு மனைவியின் பெயர் இதரா. அவருக்கு மஹிதாச ஐதரேய என்ற ஒரு மகன் இருந்தான். ஆனால் அவர் அந்த மகனைத் தவிர மற்ற மனைவியர் மூலம் பிறந்த எல்லோர் இடத்திலும் அன்பு காட்டினார். அவனைத் தவிர மற்ற எல்லோரையும் மடியில் உட்கார வைத்துக் கொஞ்சுவார். மஹிதாசனுடைய அம்மாவுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. தன்னுடைய குல தெய்வத்திடம் வேண்டினாள்.

மஹிதாசன் எல்லோரையும் விட அறிவில் சிறந்தவனாக இருந்ததால் எல்லோர் முன்னிலையிலும் தேவி தோன்றி அவரை சிம்மாசனத்தில் உட்கார வைத்தாள். ஐதரேய பிராமணம் அவர் முன்னிலையில் தோன்றியது –ஆரண்யகமும் அவர் முன்னிலையில் தோன்றியது

 

பிராமண நூலும் ஆரண்யக நூலும் அவர் முன்னிலையில் “தோன்றியது” என்பதன் பொருள், அவர் அருள் பெற்றபோது பொங்கி எழுந்த விஷயங்களே இவ்விரு நூல்களும் என்பதாகும்.

 

–Subham–

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: