வந்தாள் மஹா லெட்சுமியே! என்றும் என் வீட்டில் அவள் ஆட்சியே !! (Post No.8494)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8494

Date uploaded in London – 12 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வந்தாள் மஹாலெட்சுமியே!  என்றும் என் வீட்டில் அவள் ஆட்சியே !!

பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் பெருமாள், லட்சுமியிடம் கேட்டார். நீ எந்தெந்த

இடத்தில் இ ருப்பாய் ? எங்கு இருக்க மாட்டாய் ?

அந்தக் கேள்விக்கு லெட்சுமி தேவி புன்னகை பூத்த முகத்துடன் பதில் கூறினாள் –

 இது ‘செளபாக்ய கல்பம்’ என்ற ஸ்தோத்திரத்தில் உள்ளது .

1.கண்ணா, வெள்ளை நிறம் வாய்ந்த சங்கு, பால், அதைத் தரும் பசு,  மாடப் புறாக்கள்

எங்கு இருக்கின்றனவோ ,

2.எந்த வீட்டில் சந்தியா காலங்களில் கோலம் போட்டு, விளக்கு ஏற்றப்பட்டு

கடவுளின் (என்னுடைய ) நாமம் ஒலிக்கிறதோ,

3.எந்த வீட்டில் கலகத்தை விரும்பாத, கள்ளம் கபடமற்ற குடும்பம் வாழ்கிறதோ

4.எந்த வீட்டில் தானியங்களும், வெள்ளி போன்ற அரிசியும் இருக்கின்றனவோ

5. எவர் வீட்டில் தான் உண்ணும் உணவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து அளிக்கின்றனரோ

6.எவர் வீட்டில் இனிமையான சொற்கள் பேசப்படுகின்றதோ

7.எவர் வீட்டில் தாய், தகப்பன் மற்றும் உள்ள பெரியோர்க்கும் பணிவிடை நடக்கிறதோ

8.எவர் வீட்டில் தர்ம காரியங்கள் நடக்கின்றனவோ

9.எவர் வீட்டில் சிறந்த கல்வியும் அறிவும் பெற்று அடக்கத்துடன் இருக்கிறர்களோ

10.எவர் வீட்டில் அன்பு பரிமாறப்படுகிறதோ

11.எவர் வீட்டில் குளிப்பதற்கு அதிக நேரமும் சாப்பிடுவதற்கு குறைந்த நேரமும்

எடுத்துக் கொள்கிறார்களோ

12.மலர்களைக் கையில் வாங்கியவுடன் முகர்ந்து பார்க்காமல் இருக்கிறார்களோ

13.எவர் வீட்டில் புத்தகம், பணப்பை, விபூதி, குங்குமம் முதலிய மங்களகரமான

பொருட்கள் காலில்  படாமலிருக்கிறதோ

14. எவர் வீட்டில் எல்லோரும் திரிகரண சுத்தியுடன் (மனம், உடல், வாக்கு)

செயல்படுகிறார்களோ அவர்கள் வீடுகளில் தான் நான் எப்போதும் இருப்பேன்.

****

எனக்குப் பிடிக்காத செயல்கள்

1.வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து காலைக் கழுவாதவன்

2.ஒரு காலினால் மற்றொரு காலைத் தேய்த்து அலம்புபவன்

3.அழுக்கான, கிழிந்த வஸ்திரங்களை அணிந்தவன்

4. தலையிலும் கன்னத்திலும் கை வைத்துக் கொண்டிருப்பவன்

5.குளிப்பதற்கு முன் தலையில் எண்ணெய் தேய்த்துக்கொள்பவன்

( ஆண்களானால் புதன், சனிக்கிழமைகளிலும், பெண்களானால்

செவ்வாய், வெள்ளிக் கிழமைகளிலும் எண்ணெய் தேய்க்கலாம் )

6. இரண்டு கைகளினாலும் தலையைச் சொறிந்துகொள்ளுபவன்

7. தன் உடலில் தானே தாளம் போட்டுக்கொள்பவன்

8.அமாவாசை, திதி போன்ற நாட்களில் முடி, நகம் வெட்டிக்கொள்பவன்

9.தூசியைக் கையால் அள்ளுபவன்

10.தித்திப்புப் பண்டங்களை தான் மட்டும் உண்பவன்

11.ஆடையின்றி நிர்வாணமாகப் படுப்பவன்

12.உலர்ந்த பசையற்ற உணவை உண்பவன்

13. விளக்கேற்றாத இருட்டு இடத்தில் இருப்பவன்

14.தண்ணீர் கோலம் போடுபவர்கள்

15. கால் தூசி, மற்றும் கழுதை, நாய், பூனை, ஆடு ஆகியவற்றின்

தூசி படும்படி நடப்பவன்

16.கெட்ட , கடூரமான வார்த்தைகளைப் பேசுபவன்

17.மற்றவர்களைக் குற்றம் சொல்லுபவன்,

டம்பமாக , தற்பெருமை உள்ளவனாக நடந்து கொள்பவன்

இவர்கள் வீட்டில் இருக்கமாட்டேன் ; இந்த மாதிரி வீடுகளுக்கு என்னுடைய

அக்காள் மூதேவியை அனுப்பிவைப்பேன்.

தொடரும்………………………………………..

tags – மஹாலெட்சுமி,  வந்தாள் 

Books Indians Should Read- 13 (Post.8493)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No. 8493

Date uploaded in London – – – 12 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

Books Indians Should Read- 13                         Chapter 5 – Part 1                               R.Nanjappa

THE DAILY STOIC

Busts of Greek philosophers.


Hindus are by nature philosophical and religious. Saints and singers, wandering minstrels,

men of God have over the centuries brought the wisdom of the ages to the doorsteps of the

common man. Even the unlettered peasant was familiar with the basic Hindu philosophical

ideas. Local proverbs in the myriad native tongues contain and convey wisdom that no

educated pundit or modern scholar can clothe in easy language.

Nearly two centuries of imitative westernised education, ill-conceived reform movements,

ill-tempered leftist propaganda and modern secular fashions have been attempting to change

this basic disposition. They even appear to have succeeded in their efforts to a large extent  

among the modern generation. But the older generation, and those with their family traditions

still in tact, even if distorted in form and diluted in content, are still holding on to their

heritage of religious sentiment and philosophical reflection.

Religion and philosophy

But what exactly do we mean by ‘philosophy’ and ‘religion’? We simply have in mind the

basic idea that there is a Power which runs the world, and we have to order our life in

accordance with it.  The belief is philosophy, its practice is religion. This is reflected as a

general attitude to life as a whole.The different religious sects merely represent various

interpretations of this position, giving rise to differing theologies. We may consign  

all academic controversies to the dung heap. But the practical discipline they enforce

is to a large extent uniform across sects! If we examine closely, practical religion is

contained in the Yama and Niyama prescribed under Yoga, whatever may be the sect

people follow. 

Popular religion encourages people to look upon a personal God as a present help in need,

and as remedy for all ills. People look up to God for fulfilment of desires. This attitude looks

upon God as dispenser of personal destinies. Theistic Hindu sects regard God as Mother,

Father, Child, Friend, Beloved, Master, etc  This attitude is effective, and this belief works-

as people experience in their day to day lives.

Scientific  attitude

Those who consider themselves  ‘philosophical’  and so above the common run may believe

in a Higher Power, but not necessarily that It takes an interest in or interferes with individual

situations. This is also the attitude of great scientists like Einstein who are not atheists or

agnostics, but do not think of God as a person. Einstein said:

The most beautiful thing we can experience is the mysterious……

It was the experience of mystery….that engendered religion.

A knowledge of the existence of something we cannot penetrate, our perceptions

of the profoundest reason and the most radiant beauty, which only in their most

primitive forms are accessible to our minds – it is this knowledge and this

emotion that constitute true religiosity; in this sense, and in this alone,

I am a deeply religious man.

My comprehension of God comes from the deeply felt conviction of a superior

 intelligence that reveals itself in the knowable world. In common terms one

can describe it as “pantheistic” (Spinoza)

I am not an atheist.


[From: The Quotable Einstein. Princeton University Press, 2005]

{ Pantheism here is the position where “God becomes the Absolute, and Nature and Self

are but his manifestations.This is pantheism, and the view-point of Spinoza-” John Dewey}

While arguments rage on either side, we can see that there is no contradiction in these a

ttitudes. Different attitudes suit different temperaments.  The basic question is how we

conduct our day to day life in the light of our religious or philosophical belief. Arguments

do not decide questions of life.


Variety, conflict , confusion

It is here that  we come across bewildering variety, conflicting advice and confusion. And not

unoften, solid hypocrisy. Often, belief and behaviour are seen in conflict. Religion is reduced

to ritualism, or magic tricks,while philosophical attitude degenerates into plain cynicism,

learned agnosticism, or  nihilism. 
While Hinduism is full of scriptures, it is difficult to point to one authoritative source of

practical conduct which is suitable for modern times. The Bhagavad Gita alone fills the

bill admirably,  but that too is subject to numerous interpretations.

THE DAILY STOIC

In such circumstances, I have found this book to be eminently practical and immensely

useful.

                                                           ****                 to be continued

பாரத ஸ்தலங்கள்-10 அருணகிரிநாதர் க்ஷேத்திரக்கோவை (Post 8492)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8492

Date uploaded in London – – –12 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

பாரத ஸ்தலங்கள் – 10

அருணகிரிநாதர் அருளிய க்ஷேத்திரக்கோவையில் உள்ள 29 ஸ்தலங்கள், க்ஷேத்திர வெண்பா மற்றும் திருவிசைப்பா, திருப்பல்லாண்டு !

ச.நாகராஜன்

31. முருகன் தலங்கள் 29

கும்பகோணமொடாரூர் எனத் தொடங்கும் க்ஷேத்திரக் கோவை திருப்புகழ் – அருணகிரிநாதர் அருளியது

29 தலங்களைக் குறிப்பாகச் சொல்லும் திருப்புகழ் இது.

1) கும்பகோணம்

2) திருவாரூர்

3) சிதம்பரம்

4) சீகாழி

5) மாயூரம்

6) சிவகாசி

7) ராமேஸ்வரம்

8) புள்ளிருக்கு வேளூர் (வைத்தீஸ்வரன் கோவில்)

9) திருப்பரங்குன்றம்

10) ஜம்புகேஸ்வரம் (திருவானைக்கா)

11) திருவாடானை

12) திருச்செந்தூர்

13) திருவேடகம்

14) பழமுதிர்ச்சோலை

15) பொதியமலை

16) பூரி

17) திருவேரகம்

18) திருவாவினன் குடி (பழனி)

19) குன்றுதோறாடல் (பல மலை ஸ்தலங்கள்)

20) திருப்புனவாயில்

21) விரிஞ்சிபுரம் (திருவிரிஞ்சை)

22) வஞ்சி (கருவூர்)

23) கம்பை மாவடி (கம்பா நதி தீரத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரத்தில் உள்ள

                   மாமரத்தின் அடியில் எழுந்தருளியிருப்பவர்)

24) காவிரிப்பூம்பட்டினம்

25) திருச்சிராப்பள்ளி

26) வயலூர்

27) திருப்போரூர் 

28) திருவாட்போக்கி

29) திருக்கண்டியூர்

மற்றும் அனைத்து தேவாலயங்களிலும் வீற்றிருக்கும் பெருமாள்

திருப்புகழ் பாடல் இதோ:-

கும்ப கோணமொ டாரூர் சிதம்பரம்

     உம்பர் வாழ்வுறு சீகாழி நின்றிடு

          கொன்றை வேணியர் மாயூர மம்பெறு …… சிவகாசி

கொந்து லாவிய ராமே சுரந்தனி

     வந்து பூஜைசெய் நால்வேத தந்திரர்

          கும்பு கூடிய வேளூர் பரங்கிரி …… தனில்வாழ்வே

செம்பு கேசுர மாடானை யின்புறு

     செந்தி லேடகம் வாழ்சோலை யங்கிரி

          தென்றன் மாகிரி நாடாள வந்தவ …… செகநாதஞ்

செஞ்சொ லேரக மாவா வினன்குடி

     குன்று தோறுடன் மூதூர் விரிஞ்சைநல்

          செம்பொன் மேனிய சோணாடு வஞ்சியில் …… வருதேவே

கம்பை மாவடி மீதேய சுந்தர

     கம்பு லாவிய காவேரி சங்கமு

          கஞ்சி ராமலை வாழ்தேவ தந்திர …… வயலூரா

கந்த மேவிய போரூர் நடம்புரி

     தென்சி வாயமு மேயா யகம்படு

          கண்டி யூர்வரு சாமீக டம்பணி …… மணிமார்பா

எம்பி ரானொடு வாதாடு மங்கையர்

     உம்பர் வாணிபொ னீள்மால் சவுந்தரி

          எந்த நாள்தொறு மேர்பாக நின்றுறு …… துதியோதும்

இந்தி ராணிதன் மாதோடு நன்குற

     மங்கை மானையு மாலாய்ம ணந்துல

          கெங்கு மேவிய தேவால யந்தொறு …… பெருமாளே.

32. ஐயடிகள் காடவர் கோன் பாடிய க்ஷேத்திர வெண்பாவில் உள்ள 21 சிவ ஸ்தலங்கள்!

ஐயடிகள் காடவர் கோன் 63 நாயன்மார்களில் ஒருவர். அவர் இயற்றியுள்ள நூல் க்ஷேத்திர வெண்பா பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இது சிவத்தளி வெண்பா என்றும் அழைக்கப்படுகிறது. 24 வெண்பாக்கள் குறிப்பிடும் 21 தலங்கள் :-

  1. இராமேஸ்வரம்
  2. ஒற்றியூர்
  3. கச்சி ஏகம்பம்
  4. குழித்தண்டலை (குளித்தலை)
  5. சாய்க்காடு
  6. சிராமலை
  7. சேனைமாகாளம்
  8. திருவாப்பாடி (கொள்ளிடத்தின் தென் திருவாப்பாடி)
  9. திருக்கோடிக்கா
  10. திருத்துருத்தி
  11. திருப்பனந்தாள்
  12. திருமயம்
  13. திருமழப்பாடி
  14. திருவாரூர்
  15. திருவையாறு
  16. தில்லைச்சிற்றம்பலம்
  17. தென்குடந்தைக் கீழ்க்கோட்டம்
  18. தென்னிடைவாய்
  19. திருநெடுங்குளம்
  20.  மயிலை
  21. வளைகுளம்

 33. திருவிசைப்பா, திருப்பல்லாண்டு திருத்தலங்கள் 14

சைவத் திருமுறையான திருவிசைப்பா, திருப்பல்லாண்டில் இடம் பெறும் சிவ ஸ்தலங்கள் 14.

இவ்விரண்டையும் பாடியவர்கள் :

திருமாளிகைத் தேவர், சேந்தனார், கருவூர்த் தேவர், பூந்துருத்தி நம்பிகாடநம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதனார், புருடோத்தம நம்பி, சேதிராயர் ஆகியோராவர்.

14 திருத்தலங்கள் வருமாறு :

  1. கோயில்
  2. கங்கை கொண்ட சோளேச்சுரம்
  3. களந்தை ஆதித்தேச்சரம்
  4. கீழ்க்கோட்டூர் மணியம்பலம்
  5. திருமுகத்தலை
  6. திரைலோக்கிய சுந்தரம்
  7. திருப்பூவணம்
  8. திருச்சாட்டியக்குடி
  9. தஞ்சை இராஜராஜேஸ்வரம்
  10. திருவிடைமருதூர்
  11. திருவாரூர்
  12. திருவீழிமலை
  13. திருவாவடுதுறை
  14. திருவிடைக்கழி

***

குறிப்பு : இது வரை நாம் பார்த்த தலங்கள் (இந்தக் கட்டுரையில் உள்ள தலங்கள் உட்பட) 2080 தலங்கள் ஆகும். சில தலங்கள் சிறப்பியல்புகளின் காரணமாக வெவ்வேறு தலைப்புகளிலும் இடம் பெற்றிருக்கக் கூடும். அவற்றையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

 tags – பாரத ஸ்தலங்கள்-10

 xxxx

INDEX 3 FOR S.SWAMINATHAN’S ARTICLES – YEAR 2011 & 2012 (Post No.8491)

PICTURES OF 1000 TONS OIL SPILL IN MAURITIUS BY A JAPANESE TANKER; FROM GUARDIAN NEWSPAPER; EMERGENCY DECLARED IN MAURITIUS BECAUSE OF THIS

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8491

Date uploaded in London – 11 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Though I started blogging in tamilandvedas.wordpress.com and swamiindology.blogspot.com from June 2011, I am giving below the INDEX for  I am giving below the INDEX for 2011 June and 2012 January .

 I did not give the date of loading or number for the article in the beginning. But all articles are available in both the blogs in the name of S Swaminathan. Later I used ‘London Swaminathan’.

Like you did with S Nagarajan’s articles INDEX get the articles by googling.

Following  is the method:-

Paste the title of the article in the google (space)and add ‘from tamilandedas.com or ‘from swamiindology.blogspot.com’

Here is an example :

Is Brahmastra a Nuclear Weapon? from tamilandvedas.com

Or

Is Brahmastra a Nuclear Weapon? From swamiindology.blogspot.com

Since I am going to give nearly 6000 titles, you may not find time to read all the articles/ posts at once.

So, please take a print out of the Index or note down the title and date of your favourite posts.

Thanks for all your support. We are reaching two million hits now.

If you have any difficulty in getting the articles ,please let us know.

Be careful about the spelling of the title. Even a small mistake will take you somewhere and waste your precious time.

TAMIL TITLES ARE GIVEN SEPARATELY .

IN THE BEGINNING I UPLOADE MY ARTICLES IN

THE SPEAKING TREE OF TIMES OFINDIA

TAMIL HERITAGE FOUNDATION SITE

TAMIL BRAHMINS.COM etc.

So you may find the same articles on different days on different blogs

****

JUNE 2011

June 5, 2011

Indus Script Deciphered

Is Brahmastra a Nuclear Weapon?

Amazing Power of Human Mind, You are What You Think

June 25, 2011

Great Engineers of Ancient India

XXXX

JANUARY 2012

TAMIL ARTICLES

நெல்லிக்காய் மகிமை: அவ்வையாரும், ஆல்பிரூனியும் அருணகிரிநாதரும் – ஜனவரி 31, 2012

சங்கத் தமிழ் இலக்கியத்தில் காளிதாசனின்  உவமைகள் –  ஜனவரி 29, 2012

தாயுமானவருடன் 60 வினாடி பேட்டி – ஜனவரி 27, 2012

பட்டினத்தாருடன் 60 வினாடி பேட்டி – ஜனவரி 25, 2012

சிவவாக்கியருடன் 60 வினாடி பேட்டி – ஜனவரி 22, 2012

ஆண்டாளுடன் 60 வினாடி பேட்டி –  ஜனவரி 20,2012

கரிகால் சோழனின் பருந்து வடிவ யாக குண்டம் -ஜனவரி 18,2012

கம்பனுடன் -60 வினாடி பேட்டி ஜனவரி 17,2012

அருணகிரிநாதருடன் 60 வினாடி பேட்டி -ஜனவரி 16,2012

மாணிக்கவாசகருடன்  60 வினாடி பேட்டி -ஜனவரி 15, 2012

மழை அற்புதங்கள் – ஜனவரி 7, 2012

ENGLISH ARTICLES

Do Hindus Believe in ETs and Alien Worlds ? – January 28, 2012

Brahmins Deserve an entry into the Guinness Book of Records – January 26, 2012

Kalidasa’s Age: Tamil Works Confirm 1st Century BC – January 22, 2012

Ravana Trapped and Sita Devi Died in Earth Quake – January 22, 2012

BULL FIGHTING – Indus Valley to Spain via Tamil Nadu — January 21, 2012

60 Second Interview With Adi Shankara – January 16, 2012

60 Second Interview with Swami Vivekananda – January 15, 2012

60 Second Interview with Sri Sathya Sai Baba- – January 15, 2012

No Brahmins, No Tamil !!  – January 14, 2012

Karikal Choza and Eagle Shaped Fire Altar – January 14, 2012

Rain Miracles – Rain by Fire and Music – January 7, 2012

Was Jayadratha killed by a Solar Eclipse? – January 3, 2012

Tulabharam – Indian – Sumerian Connection – January 2, 2012

To be continued…………………………………..

TAGS – INDEX 3, S.SWAMINATHAN, TAMIL AND ENGLISH POSTS

தேரு நல்ல தேரு; ஊரு பேரு தெரியுமா ? (Post No.8490)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8490

Date uploaded in London – 11 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தேரு நல்ல தேரு ; ஊரு பேரு தெரியுமா ?

இங்கே அசைந்தாடும் ,அழகான பெரிய ரதங்களின் 13  படங்கள் உள்ளன. எந்த ஊர் தேர்?

பவனி வரும் சுவாமி பெயர் என்ன ?

என்று கண்டுபிடியுங்கள். விடைகள் கீழே உள்ளன

எண் ஒன்று

xxx

எண் இரண்டு

xxx

 எண் மூன்று 

xxx

எண் நான்கு

xxx

எண் ஐந்து

xxxx

எண் ஆறு 

xxx

எண் ஏழு 

xxx

எண் எட்டு

xxx

எண் ஒன்பது

xxx

எண் பத்து

xxx

எண் பதினொன்று 

xxx

எண் பன்னிரெண்டு

xxx

எண் பதிமூன்று,

xx

விடைகள்

1.மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேர்கள்

2.சென்னை கபாலீஸ்வரர் தேர்

3.பாலக்காடு கல்பாத்தி விஸ்வநாத சுவாமி தேருடன் மேலும் 5 தேர்கள் – ரத சங்கமம்

4.திருவாரூர் தியாகராஜ சுவாமி தேர்

5.ஸ்ரீரங்கம் ரெங்கநாதப் பெருமாள் தேர்

6.ஸ்ரீவில்லிப்புத்தூர்  ஆண்டாள் தேர்

7.கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவில் தேர்

8.சிருங்கேரி சாரதாம்பாள் தேர்

9.காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் தேர்

10.திருமழிசை ஜெகநாத தேர்

11.அழகர்கோவில் சுந்தரராஜப் பெருமாள் கோவில் தேர்

12.தஞ்சாவூர் பிருஹதீஸ்வரர் கோவில் தேர்

13.திருப்பதி வேங்கடேஸ்வரர் கோவில் தேர்

TAGS — தேரு ,ஊரு, பேரு,  தெரியுமா ?, ஊர்,  தேர், 

தேர் பற்றிய 5 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் (Post No.8489)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8489

Date uploaded in London – 11 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரே சொல் பல பழமொழிகளில் வந்தால், ஒரு இடத்தில் மட்டுமே கட்டத்தில் காணப்படும் .

விடைகள் கீழே உள்ளன.

விடைகள்

1.தேரோடே நின்று தெருவோடே அலைகிறான்

2.தேரோடே போச்சுது திருநாள், தாயோடே போச்சுது பிறந்தகம்

3.தேர் இருக்கிற மட்டும் சிங்காரம், தேர் போன பிறகு என்ன?

4.தேர் ஓடித் தன் நிலையில் நிற்கும்

5.தேர் ஒண்டித் தெருவிலே அலையவிட்டாயே.

tags — தேர், பழமொழி

கைக்கு மாறும் பணமே ! உன்னைக் கைப்பற்ற நினைக்குது மனமே! (Post No.8488)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8488

Date uploaded in London – 11 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கைக்கு மாறும் பணமே ! உன்னைக் கைப்பற்ற நினைக்குது மனமே !காசேதான் கடவுளடா !

கைக்கு மாறும் பணமே !

உன்னைக் கைப்பற்ற நினைக்குது மனமே!

தேடும்போது வருவதில்லை

நீ போகும்போது சொல்வதில்லை !

காசேதான் கடவுளடா!

ஒரு காலத்தில் ஜாதகத்துடன் உள்ளே  நுழைந்தவுடன் ஜோதிடரிடம் கேட்கும் கேள்வி :-

எனக்குப் புதையல் கிடைக்குமா ? 1900 ல்;

எனக்கு குதிரை ரேஸில் பணம் கிடைக்குமா? 1940 ல் ;

எனக்கு லாட்டரி பரிசு விழுமா? 1972 ல் ;

(ஏரோப்ளேன் படம் போட்ட பத்து கோடி ரூபா லாட்டரி சீட்டு )

இப்போதெல்லாம் அப்படிக் கேட்பதில்லை.

………………………………………….. லர் ஆவேனா?

…………………………………………. A  ஆவேனா?

………………………………………… P  ஆவேனா?

இதற்கெல்லாம் காரணமானவள் மஹாலெட்சுமி ! ராத்திரியானால் டீ .வி.யில் பிச்சுப் புடுங்கி

விடுகிறார்கள் .டாலரையும் தாயத்தையும் காட்டி!

யூ ட்யூபில் கேட்கவே வேண்டாம். பலசரக்கு அத்தனையையும் காட்டி , இப்படிச் செய்தால் பணம்

வரும் அப்படிச் செய்தால் பணம் வரும் ………………………..

தண்ணீரில் உப்பு, கவிழ்த்து வைக்கப்பட்ட கண்ணாடி டம்ளரில் எலுமிச்சம்பழம் ,

உப்புமேல் அகல் விளக்கு, அரிசி மேல் வைக்கப்பட்ட  வலம்புரிச்ச சங்கு,

ஏலக்காய், கிராம்பு, பச்சைக் கற்பூரம், இதை விட தாமிரத் தகட்டில் வித விதமான வரை படங்கள்,

,அதாவது யந்திரங்கள், மந்திரங்கள், விட்டலாச்சார்யா படத்தில் வரும் ரத்தினைக் கற்கள்

அடங்கிய மாய மோதிரங்கள், தாயத்துக்கள், கருப்பு, மஞ்சள் , ஆரஞ்சு  நிறக் கயிறுகள் இத்யாதி, இத்யாதி ……………..

இதையெல்லாம் பல ஜோதிடரிம் கேட்டுச் செய்து பார்த்துவிட்டுத்தான் உங்களிடம் வந்திருக்கிறேன்

கத்துக் குட்டி அவர்களே!

நான் எனக்குள்ளேயே சிரித்துக் கொண்டேன்.

நான் என்ன சுவிஸ் பாங்கிலா பணம் போட்டு வைத்து இருக்கிறேன்?

என்னிடம் பணம் இருந்தால் உனக்கு ஏன் ஜோதிடம் சொல்லிக்கொண்டு இருக்கிறேன்?

உன்னிடம் ஸ்விஸ் பேங்கில் போடும் அளவு பணம் இருந்தால் நீ ஏன் இங்கே வருகிறாய்?

ஏழாவது மாடியில், முந்திரி பருப்பு சாப்பிட்டுக்கொண்டே, ஒரு பி எம் டபிள்யூ (B M W )

காரை, ட்ரைவருடன் அனுப்பி இருப்பாய் !

இந்தக் கதை  எல்லாம் வேண்டாமய்யா ; பணம் வருவதற்கு வழியைச் சொல்லுங்கள் .

இந்தக் கிரகம் இப்படி இருப்பதினால், அந்தக் கிரகம் அப்படிப் போகாமல் இருந்திருந்தால்,

நீங்கள் மட்டும் இன்னும் அரை மணி நேரம் தாமதமாகப் பிறந்திருந்தால் ….

பணம் வரும், வந்திருக்கும் என்று சொல்லப்  போவதில்லை.கிரகத்தைப் பற்றியோ ஜாதகத்தைப்

பற்றியோ ‘டிஸ்கஸ்’ பண்ணப் போவதில்லை

திரு. விஷ்ணுவின் மனைவி- திருமதி மகாலெட்சுமி ஒரு ஸ்தோத்திரத்தில் சொல்லி இருக்கிறாள் –

நீங்கள் எப்படி இருந்தால் உங்கள் வீட்டில் தங்கி விளையாடுவேன் என்று

எதிரில் உட்காந்திருந்தவர் துள்ளிக்குதித்து ,

சார், மதுரையில் கே ஏ எஸ் சேகர் லாட்டரி டிக்கெட் விற்கும் இடத்தில் 15 அடி

உயரத்துக்கு, நடிகை ஸ்ரீதேவி ஒரு பெரிய ‘ட்ரே’யில் ,

கட்டுக்கட்டாக பணம் கொண்டுவருவது போல் என் கண்ணுக்குத் தெரிகிறது…..

அட, முதலில் உன் வீட்டிலுள்ள மூதேவியை விரட்டு.

அப்புறம் பார்க்கலாம். யார் வருகிறார்கள் என்று.

அந்த மகா லெட்சுமி சொன்னதைச் சொல்கிறேன்.

தயவு செய்து கேளுங்கள். உங்கள் நண்பர்களிடமும் சொல்லி tamilandvedas.com

 அல்லது swamiindology.blogspot.comஐப் பார்க்கச் சொல்லுங்கள்

காசேதான் கடவுளடா

அந்தக் கடவுளுக்கும் அது தெரியுமடா

அளவுக்கு மேலே பணம் வைத்திருந்தால்

அவனும் திருடனும் ஒன்றாகும்

வரவுக்கு மேலே செலவு செய்தால்

அவனும் குருடனும் ஒன்றாகும்

காசேதான் கடவுளடா

To be continued…………………..

 tags – காசேதான் கடவுளடா, கைக்கு மாறும் பணமே 

BOOKS INDIANS SHOULD READ- 12 (Post No.8487)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No. 8487

Date uploaded in London – – – 11 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

  BOOKS INDIANS SHOULD READ- 12

                                                 Chapter 4 – Part 3

                                                    R. Nanjappa

Some general Issues

In a separate chapter, the book deals with some general ideas on NGOs- their sources and

uses of funds; the decline of the West and what it means for India;the generally unrecognised role

of our own forms of charity ( in contrast to the much hyped Bill Gates and Warren Buffet who

operate charity for tax saving);  how mobile phones have created revolution in the services in Uninc.;

how to get the World Bank off our back; and interestingly, holds up Bollywood and BCCI as the

quintessential Uninc.-though govt is trying to control them!

Where do we stand

The role of India Uninc. in our economy  is very significant, but the politicians,Western oriented

planners, brainwashed bureaucrats, leftist intellectual crooks – each group has its own set of blinds on

its eyes, and prejudices on its mind.
The Western models- either state socialism or crony capitalism will not work here. The West forgot

two six-letter words: SAVING, and FAMILY. Precisely these have been our strength. Westerners

theorise  and invent models and expect people to conform. But this is not how people live or

economy functions.

More than 85% of our people are self or contract-employed. The share of India Uninc. in

national income, savings, capital formation,exports, employment, and also the growth rate

of our economy is high, but this is not adequately recognized by the ruling establishment.

The govt is just obsessed with some 40 to 50 big companies, FII, FDI as if these constitute

our whole economy! The govt and corporate sectors employ less than 15% of our people,

but govts concentrate on this!


More than 80% of the people are becoming socially vulnerable as the joint family system is breaking

down, but the govt is hardly aware! We are still following Western models, while the West itself is in

turmoil.

Where do we go?

The professor concludes with a remarkable statement:

“It is required that India go beyond Marx and Markets and thinks up a paradigm which 

accommodated the primacy of families and communities. We are relationship-based society

and to destroy it to make a fully rule based society may not work. We are an adaptive

society since we are heterogenous. We need to rework the idea of India to suit our own

ethos and thousands of years of culture and civilization. …India needs to show a third way

to the world in the coming decades. “

[Gandhiji showed such a third way- but it was discarded by Nehru and successive

governments, who put Gandhiji’s picture on currency notes!]

I have been a student of economics for 60 years. This is a very remarkable book, and has taught me 

Indian Economics As It Is. Indian economy has worked, is working, not because of govt, but in spite of it.

That is the genius of our people in the Uninc. sector!

The book is closely argued, every idea and argument is supported by statistics. There are no loose or

polemical statements . The book is full of statistics, and charts. But these are eminently readable, and

the book reads simple and straight, without resort to jargon. That tough ideas could be so simplified and

presented so straight is itself a sign of the grip the author has on the subject. The book is based on 

years of study and reflection. No matter what one’s background or interest is, one is sure to benefit by a

reading of it. This is an important book for any one who desires to be a truly informed and intelligent 

citizen of India. 


As a life -long  student of Indian Economics, I place this on top of my shelf. 


” The corporate tail seems to be wagging the dog of the Indian economy.”    

xxxx

வள்ளலார் வாழ்வில் நாம் காணும் அற்புதங்கள்! – 3 (Post No.8486)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8486

Date uploaded in London – – –11 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

திரு அருட்பிரகாச வள்ளலாரின் வாழ்வில் நாம் காணும் அற்புதங்கள் பற்றிய மூன்று பகுதி குறுந்தொடரில் இது மூன்றாவது (இறுதிக்) கட்டுரை!

திரு அருட்பிரகாச வள்ளலார் வாழ்வில் நாம் காணும் அற்புதங்கள்! – 3

ச.நாகராஜன்

  1. ஒரு சமயம் வள்ளலார் பெருமான் திருவாதிரை தரிசனத்திற்காக சிதம்பரம் செல்லுகையில் வழியில் ஒரு மனிதன் குன்ம நோயால் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து கருணை கொண்டார். அவரது அருளால் அப்போதே அம்மனிதனின் வியாதி நீங்கியது.
  2. வடலூரில் ஒரு சமயம் மழை இல்லாமல் போனது. அனைவரும் வருந்துவதைக் கண்ட சுவாமிகள் நான்கு செவி மழை பொழிய அனுக்கிரகித்தார். அதே போல புதுப்பேட்டையைச் சேர்ந்தவர்கள் சுவாமிகளை தங்கள் ஊருக்கு அழைத்துச் சென்று அங்கிருந்த இரண்டு கிணறுகளிலும் நீர் இன்மையைச் சொல்லி அருள் புரிய வேண்டினர். சுவாமிகள் அனுக்கிரகம் செய்தார். உடனே இரு கிணறுகளும் நிரம்பியதோடு அவற்றின் நீரும் இனிமையானது. அந்தக் கிணறுகள் இன்று வரை வற்றவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.
  • ஒரு இரவில் சுவாமிகளும் மஞ்சக்குப்பம் கோர்ட்டு சிரஸ்தார் இராமச்சந்திர முதலியாரும் ஒரு மாட்டு வண்டியில் ஏறி வடலூரிலிருந்து மஞ்சக்குப்பம் சென்று கொண்டிருந்தனர். வழியில் சில கள்வர்கள் வண்டியை மறித்தனர். முதலியார் கையிலிருந்த வைர மோதிரத்தைக் கழட்டுமாறு அவர்கள் அதட்டினர். சுவாமிகள் அக்கள்வரை நோக்கி ‘அவசரமோ’ என்றார். அவரை அடிக்க கள்வர் கையை ஓங்க, ஓங்கிய கைகள் அப்படியே நின்றன. அவர்களின் கண் பார்வையும் போனது. பின்னர் அவர்கள் சுவாமிகளிடம் மன்னிக்குமாறு வேண்ட ‘பிச்’ என்னும் மகா மந்திரத்தை சுவாமிகள் கூறினார். இழந்த பார்வையை மீண்டும் பெற்ற கள்வர்கள் அன்று முதல் களவுத் தொழிலை விட்டு விட்டு சன்மார்க்க நெறியில் நின்றனர்.
  • குறிஞ்சிப்பாடியில் உள்ள வணிகர் ஒருவர் வடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். ஜலங்கழிக்க மறைவில் ஒதுங்கும் போது புற்றரவு ஒன்று அவரைத் தீண்டி விட்டது. உடனே அவர் “இராமலிங்கத்தின் மீது ஆணை” என்று கூறவே அப்பாம்பு புற்றில் நுழையாமல் அப்படியே நின்று விட்டது. அதை அவர் கவனியாமல் பயந்து அங்கிருந்து விரைவாக அகன்று வீடு போய்ச் சேர்ந்தார். விஷம் அவரை ஒன்றும் செய்யவில்லை. பின்னர் அவர் வடலூர் வந்து சுவாமிகளை தரிசனம் செய்த போது, “அட, பிச்! ஒரு உயிரை எத்தனை நாள் தான் பட்டினி போடுகிறது?! மூன்று நாட்கள் ஆயிற்றே. உடனே போய் ஆணையை விடுதலை செய்யும்!” என்றார் சுவாமிகள். வியப்படைந்த அந்த வணிகச் செட்டியார் உடனே பாம்பு இருந்த இடத்திற்கு விரைந்தார். அங்கு புற்றின் வாயிலில் பாம்பு பரிதாபமாக படுத்துக் கிடந்தது. செட்டியார் ஆணையை விடுதலை செய்ய பாம்பு புற்றுக்குள் நுழைந்தது.

  • சுவாமிகளின் அன்புக்கு பாத்திரமான தேவநாயகம் பிள்ளை என்பவரின் ஒரே புதல்வரான ஐயாசாமி என்பவர் நோய்வாய்ப்பட்டார். இருபது வயதே ஆன அவரை வைத்தியர்கள் கை விட்டு விட்டனர். அவர் ‘ஒ’வென்று அரற்றி சுவாமிகளை நினைத்துப் பிரார்த்தனை செய்தார். அன்று இரவே 11 மணிக்குப் பின்னர் அவர் இல்லம் வந்து சேர்ந்த சுவாமிகள் அவருக்கும் புதல்வருக்கும் திருநீறு கொடுத்து அருளி, “நாளை குணமாகும்” என்றார். மறு நாள் வியாதி குணமானது.
  •  

ஆனால் அவர் தேவநாயகம் வீட்டில் இருந்த அதே சமயம் வடலூர் சத்திய தரும சாலையில் சுவாமிகள் உபந்யாசம் செய்த வண்ணம் இருந்திருக்கிறார். இது பின்னால் தெரிய வர அனைவரும் இரு இடங்களில் ஒரே சமயத்தில் அவர் இருந்ததை எண்ணி பிரமித்தனர்.

  • இளம் வயதான் இஸ்லாமிய சிறுவன் ஒருவன் உடலில் எண்ணெயைத் தடவிக் கொண்டு ஆங்காங்கே பஞ்சை ஒட்ட வைத்து சுவாமிகளிடம் வந்து விளையாட்டாக, ‘எனக்கு உடம்பெல்லாம் சிரங்குங்க, நீங்க தீர்க்கணுங்க” என்றான். சுவாமிகள்  “தீர்ந்து விடும், போ” என்று கூறி அவனை அனுப்பி வைத்தார். அவன் வீடு போய்ச் சேர்வதற்குள் பஞ்சு ஒட்ட வைத்த இடமெல்லாம் பெரும் சிரங்குகள்  உண்டாகி அவன் துன்பம் அடைந்தான். துன்பம் பொறுக்க முடியாத நிலையில் சுவாமிகளிடம் வந்து முறையிடவே, சுவாமிகள் அவனிடம் சாலையில் உள்ள கிணற்று தீர்த்தத்தில்  முழுகும்படி கூறினார். அவனும் தீர்த்தத்தில் முழுகினான். சிரங்குகள் அகன்றன.#
  • ஒரு நாள், வெளியே சென்ற சுவாமிகள் வரவில்லையே என்று எண்ணிய வேலூர் சண்முகம் பிள்ளை என்பார் சாலையை விட்டு வெளியே போய்ப் பார்த்தார். அங்கே சுவாமிகளுடைய அங்கங்கள் எல்லாம் தனித்தனியே கிடந்தன. ஐயோ என்று அலறி அந்த அன்பர் புலம்பித் தவித்த வேளையில் சுவாமிகள் திடீரென்று அவர் கண் முன்னே தோன்றினார்., “இனி நீர் இது மாதிரி வந்து பார்க்காதீர்” என்று அவரை சுவாமிகள் எச்சரித்தார். அவரும் மகிழ்ச்சியுடன் சுவாமிகளைப் பின் தொடர இருவரும் சத்திய தரும சாலையை அடைந்தனர்.
  • ஒரு நாள் வடலூருக்கு அருகில் இருந்த குள்ளஞ்சாவடிக்குப் பெருமானார் சென்றார். அங்குள்ள அன்பராகிய இஸ்லாமிய போலீஸ் ஹெட்கான்ஸ்டபிள் புது வஸ்திரம் ஒன்றை பெருமானாருக்குக் கொடுத்து அதை அணிந்து கொள்ளுமாறு வேண்டினார். அவரும் அதை அணிந்தார்.  அன்று இரவு அவர் படுத்திருந்த போது திருடன் ஒருவன் அந்த வஸ்திரத்தை மெல்ல இழுத்தான். இதைக் கண்ட கான்ஸ்டபிள் அவனைப் பிடித்து தண்டிக்க முயன்றார். அவரைத் தடுத்த சுவாமிகள் அந்த புது வஸ்திரத்தை அந்தக் கள்வனுக்கே கொடுத்து அனுப்பினார்.
  1. சாலையில் இருந்த சில அன்பர்களுக்கு சுவாமிகளை போட்டோ எடுக்க வேண்டும் என்ற விருப்பம் உண்டாயிற்று. சென்னையில் உள்ள மாசிலாமணி முதலியார் முதலானவர்களைக் கொண்டு எட்டு தரம் போட்டோ படம் பிடித்தனர். ஆனால் ஒரு தடவையும் அவர் உருவம் படமாகவில்லை. சுத்த தேகத்தை எப்படிப் படம் பிடிக்க முடியும்?

வள்ளலார் வாழ்வில் நடந்த இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை தொழுவூர் வேலாயுத முதலியார் அற்புதமாகச் சித்தரித்திருக்கிறார்.

மிக பிரம்மாண்டமான ஒரு மஹா புருஷர் தமிழ் மண்ணில் தோன்றி ஆயிரக் கணக்கான பாடல்களை அருளி இருக்கிறார் என்பது தமிழர்கள் செய்த புண்ணியமே.

வள்ளலாரைப் படித்து அவர் காட்டும் சன்மார்க்க நெறி வழி அனைவரும் நடப்போம்; உயர்வோம்!

                       ***         இத்தொடர் நிறைவுற்றது

tags – வள்ளலார், அற்புதங்கள்! – 3

INDEX 2 FOR S SWAMINATHAN’S ARTICLES – YEAR 2011 (Post No.8485)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8485

Date uploaded in London – 10 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Though I started blogging in tamilandvedas.wordpress.com and swamiindology.blogspot.com from June 2011, I am giving below the INDEX for SEPTEMBER, OCTOBER AND DECEMBER, 2011. INDEX FOR NOVEMBER WAS POSTED YESTERDAY

 I did not give the date of loading or number for the article in the beginning. But all articles are available in both the blogs in the name of S Swaminathan. Later I used ‘London Swaminathan’.

Like you did with S Nagarajan’s articles INDEX get the articles by googling.

Following  is the method:-

Paste the title of the article in the google (space)and add ‘from tamilandedas.com or ‘from swamiindology.blogspot.com’

Here is an example :

Is Brahmastra a Nuclear Weapon? from tamilandvedas.com

Or

Is Brahmastra a Nuclear Weapon? From swamiindology.blogspot.com

Since I am going to give nearly 6000 titles, you may not find time to read all the articles/ posts at once.

So, please take a print out of the Index or note down the title and date of your favourite posts.

Thanks for all your support. We are reaching two million hits now.

If you have any difficulty in getting the articles ,please let us know.

Be careful about the spelling of the title. Even a small mistake will take you somewhere and waste your precious time.

TAMIL TITLES ARE GIVEN SEPARATELY .

IN THE BEGINNING I UPLOADE MY ARTICLES IN

THE SPEAKING TREE OF TIMES OFINDIA

TAMIL HERITAGE FOUNDATION SITE

TAMIL BRAHMINS.COM etc.

So you may find the same articles on different days on different blogs

****

SEPTEMBER 2011

SEPTEMBER 9-

100 WONDERFUL THINGS ABOUT TAMIL NADU

SEPTEMBER 10

DO WORDS HAVE POWER? AN INTERESTING STUDY OF

BOONS AND CURSES

SEPTEMBER 11

BHISMA – FIRST MAN TO PRACTISE ACUPUNCTURE

SEPTEMBER 12

Indiahhhhhhhhhhh- the RICHEST country in the World – part 1

Indiahhhhhhhhhhh- the RICHEST country in the World – part 2

Indiahhhhhhhhhhh- the RICHEST country in the World – part 3

SEPTEMBER 12

CAN YOU NAME THESE TAMIL SCHOLARS?

TO MASTER THE TAMIL LANGUAGE KEEP A CALCULATOR HANDY

SEPTEMBER 13

PANDYA KING WHO RULED VIETNAM

SEPTEMBER 14

Indiahhhhhhhhhhh- the RICHEST country in the World – part 4

SEPTEMBER 15

TAMIL THROUGH PROVERBS – PAZAMOLIYIL INTHU MATHAM

SEPTEMBER 16

Indiahhhhhhhhhhh- the RICHEST country in the World – part 5

 SEPTEMBER 17

Indiahhhhhhhhhhh- the RICHEST country in the World – part 6

SEPTEMBER 18

STRANGE LINK BETWEEN LORD SHIVA, SOCRATES AND THIRUVALLUVAR

SEPTEMBER 19

EVERY OLD ONE RUPEE FETCHES RS.2000, EVERY OLD 1000 RUPEES GETS YOU RS.30,000

******

OCTOBER 2011

OCTOBER 10

VISHNU SEAL IN INDUS VALLEY CIVILIZATION

OCTOBER 29

FREE TAMIL LESSONS NOW ON YOU TUBE

LAUNCH OF MY NEW BLOG- studytamil.wordpress.com

*****

NOVEMBER 2011 – POSTED YESTERDAY

**************

DECEMBER 2011

DECEMBER 3

Two little animals that inspired Indians

DECEMBER 10

The Mysterious Vedic Homa Bird- Does it Exist?

DECEMBER 17

When Animals Worship God, Why not Men?

DECEMBER 18

Double Headed Eagle – Sumerian- Indian Connection

DECEMBER 24

The Tortoise Mystery- Can We live for 300 Years?

DECEMBER 29

Do Our Dreams have Meaning?

DECEMBER 31

Valakhilyas – 60,000 Thumb Sized Ascetics Protect Humanity

TAMIL ARTICLES IN DECEMBER 2011

DECEMBER 27

தமிழ் இனத்தின் வயது என்ன ?

DECEMBER 29

புறநானூற்றில் சூரிய கிரஹணம்

DECEMBER 31

சூரியனுடன் சுற்றி வரும் குள்ள முனிவர்கள் யார்?

To be continued……………………………………..

 INDEX 2 , S SWAMINATHAN’S, ARTICLE, ‘ YEAR 2011