சித்த மருத்துவமும் அதன் சீரும் சிறப்பும் – Part 1(Post No.8806)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8806

Date uploaded in London – – 13 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

12-10-2020 அன்று லண்டனிலிருந்து ஒளிபரப்பட்ட ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை.

ஒவ்வொரு திங்களன்றும் இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு ஞானமயம் நிகழ்ச்சியை

facebook.com/gnanamayam-இல் பார்க்கலாம்.

சித்த மருத்துவமும் அதன் சீரும் சிறப்பும்

by Kattukutty

உலக வரலாற்றில் மிக மிக தொன்மை வாய்ந்தது மருத்துவக்கலை.

ஆதி மனிதன் தனக்கு ஏற்பட்ட நோய்களுக்கும், காயங்களுக்கும்

உடல் உபாதைகளுக்கும், இலை, தழை, மரம், பூ, காய், பழம், வேர்

முதலியவற்றைக் கொண்டு தன்னைத்தானே குணப்படுத்திக்கொள்ளும்

வழி முறைகளைக் கண்டுபிடித்தான்.

இதைத்தான் மருத்துவ விஞ்ஞானம் என்கிறோம்.

மருத்துவம் என்றால் என்ன ???

உயிரினங்கள் நோய்வயப்படும் போதும் உடலை இயக்க முடியாமல்

இருக்கும் பொழுதும் அந்நிலையைக் கண்டுபிடிப்பதும் அதைக்

குணப்படுத்துவதும் மீண்டும் வராமல் செய்தலும் ஆகும்.

மருத்துவத்தின் பல முறைகள்

அல்லோபதி, சித்த மருத்துவம், ஆயுர் வேதம், ஹோமியோபதி, யுனானி,

அக்குபஞ்சர்,யோகா, இயற்கை மருத்துவம், மலர் மருத்துவம்,உயிர்

வேதியல் மருத்துவம், காந்த சிகித்சை, வண்ண மருத்துவம், இசை

மருத்துவம், ஜப்பானிய காம்போ மருத்துவம், பண்டைய சீன

மருத்துவம்……. மற்றும் பல……..

சித்த மருத்துவம்

உலக மருத்துவ வரலாற்றில் மிக மிக தொன்மை வாய்ந்தது சித்த

மருத்துவம். முதலில் சித்தர்கள் யார் என்று பார்ப்போம்

“சித்” என்றாலே அறிவு என்று அர்த்தம். சித்தர்கள் தன் அறிவினாலும்

அனுபவ முறைகளினாலும் பட்டறிவினாலும் கண்ட மருத்துவ முறைகளைப்

பயன்படுத்தி அஷ்டமாசித்திகளையும் பெற்று தனது

தவ வலிமையினால் சாகா வரம் பெற்றவர்கள்.

சித்தர்கள் கண்ட உண்மை

ஆன்மீக உலகம் இவ்வுடலை “பொய் “என்று கூறும் பொழுது இவ்வடலை

“மெய்”என்று கூறியவர்கள் சித்தர்கள்!!! மற்ற எல்லா

மருத்துவ முறைகளிலிலும் மனிதனுக்கு” மரணம்”உண்டு என்று

கூறும்போது சித்தர்கள் “மரணமில்லாப் பெருவாழ்வு” வாழலாம் எனக்

கூறி வாழ்ந்தார்கள், இன்றும் வாழ்கிறார்கள்!!!

வேதியல், மற்றும் பவுதிக முறைகளில் பொருள்களைப் பகுத்தறிந்து

இவ்வுலகில் முதன்முதலில் பயன் படுத்தியவர்கள் தமிழ் சித்தர்களைத்

தவிர வேறு யாருமில்லை!!! தமிழ் நாட்டில் தொன்று தொட்டு மரபு

வழியாக அவர்களால் செய்யப்பட்டு வரும் மருத்துவமே சித்த மருத்துவம் ஆகும்.

சித்தர்களின் கண்டுபிடிப்பு

மனித உடல் 18 குணங்களைக் கொண்டது. அந்த குணங்களின்

செயல்களால் வாழ்க்கை நடக்கிறது. அவைகள் :

வியப்பு, இன்பம், உவகை, உறக்கம், கேதம், கையறவு, நரை, நினைப்பு,

நீர்வேட்கை, நோய், பசி, அச்சம், பிறப்பு, மதம், வியர்வை, வெகுளி,

வேண்டல், மரணம்.

மனித உடல் பஞ்ச பூதங்களினால் ஆனது. நீர், நிலம், நெருப்பு, காற்று,

ஆகாயம் – இந்த ஐம்பூதங்களின் பிரதிபலிப்பே இந்த உடல்…….

நோய்களுக்கான காரணங்கள்

மனித உடலில் தோன்றும் நோய்களுக்கான காரணம்,

மனித உடலில் உள்ள வாதம், பித்தம், கபம், ஆகியவற்றின் வேறுபாடுகளே

காரணம்.

சித்த முறைப்படி ஒரு ஆரோக்கியமான உடலில் உள்ள நாடித்துடிப்பு

வாத நாடி – 1 மாத்திரை அளவும்,

பித்த நாடி – 1/2 மாத்திரை அளவும்,

கப நாடி. – 1/4 மாத்திரை அளவும், துடிக்க வேண்டும்.

இவற்றில் மாறுபாடு உண்டானால் வியாதி எனத் தெரியும்.

மேலும் இந்த வாத, பித்த, கப, நாடிகள் காலை, மதியம், மாலை

என்ற மூன்று வேளைகளுக்கும் மாறும்.

இதைத்தான் வள்ளுவரும்,

“மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்

வளி முதலாகிய மூன்று” என்று கூறியுள்ளார்.

இதை முக்குற்றம் எனக் கூறுவார்கள். சித்த வைத்தியர்கள் நாடி பார்த்து

இக்குற்றங்களின் வேறுபாடுகளை களைய மருந்துகள்

அளிப்பார்கள். அக்குற்றங்கள் அதிகமானால், அல்லது குறைந்தால்

என்னன்ன விளைவுகள் உடலில் ஏற்படும் என்பதைக் காணலாம்.

to be continued…………………………………….

tags–சித்த மருத்துவம் ,  சீரும் சிறப்பும் , 

நீ டப்பா தமிழனா ? முட்டாள் வடுகனா ? (Post No.8805)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8805

Date uploaded in London – –13 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நீ டப்பா  தமிழனா ? முட்டாள் வடுகனா ?

ஒவ்வொரு மொழி பேசுவோரும் ‘காக்கைக்கும் தன்  குஞ்சு பொன் குஞ்சு’– என்ற பாணியில் தன் மொழியே உலகில் சிறந்தது, இனியது என்று தம்பட்டம் அடித்துக் கொள்வர். இதில் வியப்பு ஒன்றுமில்லை. இது போலவே ஒவ்வொரு மதத்தினரும் தன் மதமே உயர்ந்தது என்பர். இன்னும் சிலர் ஒருபடி மேலே சென்று பிற மத தூஷணம் செய்வார்கள். கிறிஸ்தவர்கள், ஏனைய மதத்தினரை பேகன் pagan என்றும் முஸ்லீம்கள் , மற்ற மதத்தினரை காஃபிர் kafir என்றும் இகழ்ந்துரைப்பர். இந்துக்கள் மட்டும் ‘வசுதைவ குடும்பகம் – இந்த உலகமே ஒரு குடும்பம்’- என்பர். மாணிக்கவாசகர் போன்றோர் அசுரர்களும் தேவர்களும் புல்லும் பூண்டும் ஒரே ஆன்மாவின் பல பிறவிகள் என்று பாடுகிறார்கள். பாரதியோ ‘காக்கை குருவி எங்கள் ஜாதி, நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்’ என்று அதே கருத்தை எதிர் ஒலிக்கிறார்.

பாரதி போன்ற உயர்ந்த உள்ளம் படைத்த கவிஞர்கள் ‘சுந்தரத் தெலுங்கு’, என்றும் ‘பாகு மொழிகளில் புலவர்கள் போற்றும் பாரத ராணி’ என்றும், சம்ஸ்கிருத மொழியை ‘தெய்வீக சாகுந்தலம்’ தோன்றிய மொழி என்றும் பாராட்டுகிறார். ஆயினும் ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிதான் இனிது’ என்றும் முடிவுசெய்கிறார்.

மொழிகள் மூலம் சண்டை போடுவது உலகெங்கிலும் நடக்கிறது. பிரெஞ்சுக்காரர்களுக்கு இங்கிலிஷ் என்றால் வெறுப்பு. ஆங்கிலேயருக்கு பிரெஞ்ச் என்றால் வெறுப்பு. பிரிட்டனுக்குள் இங்கிலீஷ்கார்கள், அருகிலுள்ள ஐரீஷ் , ஸ்காட்டிஷ், வெல்ஷ் மொழிகளையும் அவர்களது ஆங்கில உச்சரிப்புக்களையும் எள்ளி நகையாடுவர். இது டெலிவிஷன் காமெடி ஷோ comedy show க்களில் அடிக்கடி நடைபெறும்.

50 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய பார்லிமெண்டில் இந்தி மொழி பற்றி காரசார விவாதம் நடந்தது. இந்தி நேற்று வந்த மொழி; அதில் என்ன இலக்கியம் இருக்கிறது? கனத்த, தடித்த டெலிபோன் டைரக்டரியும் ரயில்வே கால அட்டவணையும்தான் உளது என்று தமிழ் மொழி எம்.பிக்கள் சாடினர் ; இந்தி மொழி அபிமானியான சேத் கோவிந்ததாஸ் எழுந்து ‘அட, போடா , தமிழா, உன் பாஷை யே கர்ண கடூரமானது. ஒரு தகர டப்பாவில் கற்களைப் போட்டு குலுக்கினால் என்ன ஸப்தம் வருமோ அதுதாண்டா தமிழ்’ என்று பதில் கொடுத்தார்..

அதாவது ஒரு மொழி புரியாவிட்டால் அல்லது அந்த மொழி பேசுவோரைப் பிடிக்காவிட்டால் இப்படித் திட்டுவது வழக்கம். கிரேக்கர்கள் தங்கள் மொழியைப் பேசாதோரை barbarian பார்பேரியன் என்று அழைத்தனர். இப்போது அதன் பொருள் மிகவும் மருவி காட்டுமிராண்டி என்று மாறிவிட்டது. உண்மையில் அவர்கள் சொன்னது நமமைப் போல பண்பட்ட மொழியைப் பேசாதவர்கள் என்றுதான் சொன்னார்கள்.

இது போல நாகரீகமே இல்லாத அராபியர்கள் மிகவும் நாகரீகம் அடைந்த இரானியர் மொழியை ‘அஜம்’ என்றனர். அதாவது ‘ஊமை மொழி’ என்று பொருள். ‘ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை’ என்ற பழமொழியை நினைவுபடுத்தும்.

அரவர் என்றால் ‘அதிக சப்தம் போடுவோர்’ என்று பொருள். இதைத் தான் தெலுங்கர்கள் தமிழர்களைத் திட்டப் பயன்படுத்தினர் இதற்கு ‘பாம்பு’ என்ற கெட்ட பொருளும் பாம்புக்கால் முனிவரான பதஞ்சலி என்ற நல்ல பொருளும் உண்டு. (See Ananda Vikatan Tamil Dictionary 1935)

தமிழில் தெலுங்கர்களைக் கிண்டல் செய்யும் பல பழமொழிகள் இருக்கின்றன . அவர்களைத் தமிழர்கள் ‘வடுகர்’ என்று அழைத்தனர். வடுகர் என்றால் தெலுங்கர் என்றும் முட்டாள், மூடன் என்றும் பொருள். உண்மையில் சொல்லப்போனால் இப்படிப்பட்ட தீய பொருள் வருவது, அவர்கள் நமக்கு எதிராக மாறும்போதுதான்.

இதோ சில தெலுங்கு எதிர்ப்பு பழமொழிகள்—

வடுகச்சி அம்மா, வாலம்மா, வாலைப் பிடித்துக்கொண்டு தொங்கம்மா

வடுகச்சி காரியம்  கடுகுச்சு  முடுகுச்சு 

வடுகத் துரட்டு மகா வில்லங்கம்

வடுக வில்லங்கமாய் வந்து வாய்த்தது

வடுகனும் தமிழனும் கூட்டுப் பயிரிட்ட கதை

வடுகன்  தமிழறியான் வைக்கோலை கசு வென்பான் .

வடுகு பொடுகாச்சு,  வைக்கோற் போர் நெல்லாச்சு

வடுகு கொழுத்தால் வறையோட்டிற்கு  மாகாது.

xxx

ஆரியனா , அனார்யனா ?

‘ஆரிய’ என்றால் பண்பாடு உடையவர்கள், நாகரீக முடையோர் , ரிஷி முனிவர்களுக்குச் சமமானவர்கள்  என்றே பொருள். மாக்ஸ்முல்லர் கும்பலும் கால்ட்வெல் கும்பலும் இந்துமதத்தை அழிக்கும் நோக்கத்தோடு ‘ஆர்ய’ என்ற எழுத்தை ஆங்கிலத்தில் பெரிய Arya எழுத்தில் எழுதி ஒரு இனம் என்று காட்டத்  துவங்கினர். இதனால் இதைப் பண்பாடுடையோர் என்று மொழி பெயர்க்காமல் ஆரிய Arya என்றே எழுதத்துவங்கினர்.

2700 ஆண்டுகளுக்கு முன்னர் சம்ஸ்க்ருத மொழிக்கு இலக்கணம் எழுதிய பாணினி ‘ஆரிய’ என்ற சொல்லை பிராமண, க்ஷத்ரிய, வைஸ்யர்களுக்குப் பயன்படுத்தினார் . இன்றும் தமிழ்நாட்டில் ‘ஆர்ய வைஸ்ய சபா’–க்களைக் காணலாம்.

பகவத் கீதையிலும் கூட  இதற்கு உதாரணம் உளது ;

அர்ஜுனன்  கோழை போல நடந்து கொண்டவுடன் ஏன் ‘ஆரியனில்லாத’—‘பண்பாடில்லாத’- வன் போல நடந்து கொள்கிறாய்? என்று கேட்கிறார் (கீதை 2-2).

ன் க்ஷத்ரியவன் இல்லாதவன் போல் என்று கேட்கவில்லை.

ஏன் பிராமணன் போல, சூத்திரன் போல, வைஸ்யன்போல நடந்து கொள்கிறாய்? என்று கேட்கவில்லை.

நாம் யாராவது நடை உடை பாவனையில் கோளாறு இருந்தால் உடனே ‘என்ன பட்டிக்காட்டானா நீ?’ என்று திட்டுவோம்.

எதையாவது காணாதது கண்டது போல முறைத்துப் பார்த்தால் ‘பட்டிக்காட்டான் யானையைப் பார்த்தது போல’ என்று திட்டுவோம் . இங்கே பட்டிக்காடு, என்பது இனமல்ல; ஜாதியுமல்ல.

இதுபோலவே ‘அனார்யாஜுஷ்டம்’ உனக்கு எங்கிருந்து வந்தது என்கிறார்.

இந்த சுலோகத்துக்கு வியாக்கியானம் எழுதிய டாக்டர் ராதாகிருஷ்ணனும் ‘வீரம், பெருந்தன்மை, மரியாதை , நேரிய அணுகுமுறை’ முதலிய குணங்களை உடையவர்கள் ஆரியர் எனப்படுவோர் என்கிறார்.

ஆக ஆரிய என்பது ஒரு உரிச் சொல்லேயன்றி (Adjective) இனப்பெயர் அல்ல.

ஆர்ய என்ற சொல் பிராகிருத / பேச்சு வழக்கில் ‘அஜ்ஜ’ என்று மருவி, தமிழில்  ‘அய்யர்’ என்று வந்தது . கௌடில்யரோ 2400 ஆண்டுகளுக்கு முன்னர் ஆர்ய என்றால் சுதந்திர மனிதன், தாச என்றால் அடிமை என்கிறார்.

வேதத்தில் சப்பை மூக்கு சீனர்களை கடுஞ்சொல் மக்கள் என்கின்றனர். அவர்களை ‘தஸ்யூ’ என்றும் அழைத்தனர். இதை ஒரு கும்பல், திராவிடர்களைத் தான் இப்படிச் சொன்னார்கள் என்று கதைகட்டிவிட்டது. சப்பை மூக்கு திராவிடர்கள் வடக்கில் வாழ்ந்ததற்கு இதுவரை எந்த சான்றும் கிடைக்கவில்லை. சிந்து-சரஸ்வதி நதி தீரத்தில் கிடைத்த எலும்புக்கூடு எல்லாம் நீண்டு உயர்ந்த பஞ்சாபியர் எலும்புக்கூடுகளே . சங்கத் தமிழர்கள் ரோமானியர்களை ‘வன் சொல் யவனர்’ என்று வருணித்தது போலவே சப்பை மூக்கு சீனர்களை கடுமையான வசனம் உடையோர் என்று அழைத்தனர். சங்கத் தமிழ் நூல்களிலும் சம்ஸ்கிருத நூல்களிலும் ‘மிலேச்சர்’ என்ற சொல் வருகிறது இதுவும் வேற்று மொழி பேசிய, நம் கலாசாரத்தைப் பின்பற்றாத கும்பலையே குறித்தது.

2200 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பதஞ்சலி முனிவர்கூட ஒரு இலக்கண உதாரணத்துக்கு, ‘படுத்துக்க கொண்டே உணவு சாப்பிடும் யவனர்’ என்று வசைபாடுகிறார்.

xxxx

பிளாக்,  நீக்ரோ Black, Negro

ஆக்ஸ்போர்டு அகராதியில் பறையா’ ‘ஐயோ’ போன்ற அசிங்கமான தமிழ்ச் சொற்கள் சேர்க்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் நாம் எவரையும் ‘பறையா’ என்று இப்போது திட்டவும் முடியாது; கூப்பிடவும் முடியாது. அனால் ஆங்கில அகராதியில் உள்ள ‘பறையா’ என்ற சொல்லை உலகம் முழுதும் உள்ள ஆங்கிலப் பத்திரிகைகள் நாள்தோறும் பயன்படுத்துகின்றனர் தீண்டத்தகாத untouchable  என்ற பொருளில் பயன்படுத்துகின்றனர். தமிழனை அவமானப்படுத்தும் பறையா , ஐயோ போன்றவற்றை நீக்க நாம் போராடவேண்டும்.

லண்டனில் வசிக்கும் நான், கறுப்பின மக்களை ‘கறுப்பர்’ என்றோ ‘நீக்ரோ’

என்றோ அழைக்க முடியாது. கடும் அபராதம் விதிக்கப்படும். ஆப்ரிக்க- கரீபிய இனத்தினர் afro-Caribbean community என்றுதான் குறிப்பிட்ட முடியும் இதே போல ‘பறையா’ என்ற சொல்லையும் ஒழிக்க முன் வருக!

Tags-  வடுகன், அரவர், யவனர், மிலேச்சர் , பார்பேரியன், ஆரிய, தெலுங்கு எதிர்ப்பு

–subham–

கண் திருஷ்டியைத் தவிர்க்க என்ன செய்வது? – 2(Post No.8804)

WRITTEN BY S NAGARAJAN                                    

Post No. 8804

Date uploaded in London – – –13 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

கண் திருஷ்டியைத் தவிர்க்க என்ன செய்வது? – 2

 ச.நாகராஜன்

கிரேக்க நாகரிக இலக்கியத்தில் பொறாமையுடன் பார்க்கப்படும் பார்வை பொல்லாத பார்வை என்று குறிப்பிடப்படுகிறது. ‘பூரி நஜர்’ (தீய பார்வை) என்றும் இது பொதுவாக எங்கும் இது சொல்லப்படுகிறது.

திருஷ்டியை அறிவியல் ரீதியில் விளக்கம் கொடுக்க முன்வந்த முதல் அறிஞர் கிரேக்க நாட்டு அறிஞரான ப்ளூடார்க் (Plutarch) தான்! மனிதனின் கண்களிலிருந்து வெளிவரும் ஆற்றல் சில சமயங்களில் மிருகங்களை அல்லது குழந்தைகளைக் கூடக் கொல்லும் ஆற்றல் படைத்தது என்று அவரது சிம்போஸியாக்ஸில் (Symposiacs) அவர் விளக்குகிறார். அவர் மேலும் இது பற்றி விளக்குகையில், “சிலருக்கு இன்னும் அதீதமான ஆற்றல் கண் பார்வையில் இருக்கிறது. அவர்கள் பார்வையினாலேயே சாபம் இட வல்லவர்கள்’ என்கிறார்!

இதே போல கி.பி.மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹெலியோடோரஸ் (Heliodorus), “ அருமையான ஒன்றை பொறாமை கொண்ட கண்ணுடன் ஒருவன் பார்த்தானானால் சுற்றி இருக்கும் சூழ்நிலையையே அவன் மாற்றுகிறான்; உயிரைப் போக்கும் அளவு மோசமான சூழ்நிலையை உருவாக்குகிறான், அத்துடன் தனது விஷத்தைக் கண் மூலம் தனக்கு அருகில் இருக்கும் அனைத்தின் மீதும் பாய்ச்சுகிறான்” என்கிறார்.

ப்யூர்டோ ரிகோசில் பிறந்த குழந்தைகளுக்கு அஜாபச்சே (Azabache) என்ற அதிர்ஷ்டத்திற்கான தாயத்து தரப்படுகிறது.

துருக்கியில் வாழ்ந்த பழங்குடியினர் தங்களது சுவர்க்க தேவதையான் தெங்ரி நீல நிறத்துடன் இருப்பதால இளநீல வண்ணத்தை கொண்ட தாயத்துகளையும் கோபால்ட், தாமிரம் ஆகியவற்றையும் பயன்படுத்தினர். இன்றும் துருக்கியில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கண் திருஷ்டி டோக்கன் வழங்கப்படுவது வழக்கம்!

இத்தாலியில் திருஷ்டிக்குப் பெயரான மால் ஓச்சியோ (Mal Occhio) என்பதையே தலைப்பாகக் கொண்டு  அகடா டே சாண்டிஸ் என்பவர் ஒரு டாகுமெண்டரி திரைப்படத்தை எடுத்தார். அதில் திருஷ்டியினால் தலைவலி, வயிற்றுவலி போன்றவை வந்து அவஸ்தைப் படுவோர் அதைப் போக்க செய்ய வேண்டிய சடங்கை விளக்குகிறார். பல அறிஞர்களைச் சந்தித்து கண் திருஷ்டி பற்றிய அவர்களது கருத்தையும் கேட்டு திரைப்படத்தில் அதை அவர் தந்துள்ளார். முடிவான கருத்து என்னவென்றால் இதை மூட நம்பிக்கை என்று ஒதுக்கி விட முடியாது என்பது தான்!

கி.பி. முதல் ஆறு நூற்றாண்டுகளில் வாழ்ந்த அராபியர்கள் கல், மரம் உள்ளிட்டவற்றால் செய்த தாயத்துகளை பாதுகாப்பிற்காக அணிந்தனர்.

பழைய கால ஹீ ப்ரு, எகிப்திய நாகரிகத்தைச் சேர்ந்த மக்களும் அந்தக் காலத்தில் தாயத்துகளை அணிந்தனர். ஆனால் இன்றைய நவ நாகரீக காலத்திலோ அவர்கள் ஒரு சிறிய பேப்பரில் பிரார்த்தனை மந்திரம் ஒன்றை எழுதி வைத்துக் கொள்கின்றனர். இது குர் ஆன் வசனமாக இருக்கும். இதை ஒரு வயதான ஆன்மீகப் பெரியார், தான் தேர்ந்தெடுத்த பொருள் ஒன்றில், கறுப்பு மையால் எழுதித் தருவார்.

இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் தேச மை பேப்பரில் நன்கு ஆழமாகப் பதிவதால் அந்த மைக்கு மவுசு அதிகம்.

இப்படிப் பட்ட தாயத்துக்களை இடது கையிலோ அல்லது கழுத்திலோ அணிவது பாரம்பரிய பழக்கம்.

வரலாற்றை அலசிப் பார்த்தால் பல பிரபலங்கள் தீய திருஷ்டிப் பார்வையைக் கொண்டவர்களாக இருப்பது தெரியவரும்.

இந்தப் பட்டியலில் ஆங்கிலக் கவிஞர் பைரன், போப் ஒன்பதாம் பயஸ், போப் பதிமூன்றாம் லியோ, இரண்டாம் கெய்ஸர் வில்லியம், மூன்றாம் நெப்போலியன் உள்ளிட்ட பலர் இடம் பெறுகின்றனர்.

போப் ஒன்பதாம் பயஸ் கையில் குழந்தையை வைத்துக் கொண்டிருந்த ஒரு நர்ஸை ஜன்னல் வழியே பார்த்தார். சில விநாடிகளிலேயே அந்தக் குழந்தை இறந்து விட்டது. இது அனைவருக்கும் பரவியது. இதன் பின்னர் அவர் செய்யும் ஒவ்வொரு ஆசீர்வாதமும் கெட்ட விளைவுடனேயே முடிந்தது. அவர் 1878ஆம் ஆண்டு மறைந்தார். 

இதே போல போல் போப் பதிமூன்றாம் லியோ பார்வையும் மற்றவர்களுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்துமாம். அவர் போப்பாக இருந்த காலத்தில் ஏராளமான கார்டினல்கள் இறந்து விட்டதால் அவரைக் கண்டாலேயே அனைவருக்கும் பயமாம் – தனக்கும் சாவு வந்து சேருமோ என்று தான் பயம்! முத்தாய்ப்பாக அறிவியல் என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்போம். அது கண் திருஷ்டியின் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு ஆனந்தம் தரும் செய்தியாக அமைகிறது.

 உலகம் கண்ட மிகப் பெரும் விஞ்ஞானிகளுள் ஒருவரான ராபர்ட் ஓப்பன்ஹீமர் அணுகுண்டைக் கண்டு பிடித்தவர். அதனால் அணுகுண்டின் தந்தை என்று அவர் போற்றப்படுகிறார். அணுகுண்டு வெடிப்பதை நேரில் பார்த்து மலைத்தவர் அவர்.

ஹிந்து மதத் தத்துவத்தின் பால் ஆழ்ந்த மதிப்புக் கொண்ட அவர் அணுகுண்டு வெடிப்பைப் பற்றி கீதையின் 11வது அத்தியாயத்தில் வரும் 12வது சுலோகத்தை எடுத்துக்காட்டாகக் கூறினார்.

 “திவி சூர்ய சஹஸ்ரஸ்ய” என்பதைக் கூறிய அவர், ஆயிரம் சூரியன் ஒரே சமயத்தில் உதித்தால் எப்படி இருக்குமோ அதே போல அணுகுண்டி வெடிப்பு இருந்தது என்றார்.

 ஓப்பன்ஹீமர் ஹிந்து பழக்க வழக்கங்களை நன்கு ஆராய்ந்து அவற்றின் பால் பற்றுக் கொண்டவர்.

அவரது வாழ்க்கை வரலாற்றை ஆப்ரஹாம் பயஸ் என்பவர் ஜே.ராபர்ட் ஓப்பன்ஹீமர் என்ற புத்தகத்தில் விவரிக்கிறார்.

 அதில் வரும் ஒரு செய்தி கண் திருஷ்டியைப் பற்றியது.

ராபர்ட் ஓப்பன்ஹீமர் ஹிந்துக்களின் திருஷ்டி கழிக்கும் பழக்கத்தைப் பற்றி ஆராய்ந்தார்.

அதன் முடிவில் பிரமிக்க வைக்கும் ஒரு உண்மையைக் கண்டுபிடித்தார்.

“ஹிந்துக்கள் உப்பை (கடல் உப்பு அல்லது கல் உப்பு, உப்புப் பொடி அல்ல) ஒரு சிறு பாத்திரத்தில் (பழைய கால ஆழாக்கு அல்லது படி) போட்டு இடது புறமும் வலது புறமும் தலையைச் சுற்றி திருஷ்டியைக் கழிக்கின்றனர்.

அப்போது லட்சக்கணக்கான நெகடிவ் ஐயான்கள் (Negaive Ions) அவர்கள் உடம்பை விட்டு வெளியேற்றப்படுகின்றன.” என்கிறார் அவர்.

லட்சக் கணக்கான நெகடிவ் ஐயான்கள் என்ற சொற்றொடர் குறிப்பிடத் தகுந்தது.

ஆக இப்படி உலகின் ஆகப் பெரும் விஞ்ஞானியே ஹிந்துக்களின் திருஷ்டி கழிப்பை அறிவியல் ரீதியாக ஆமோதித்துப் புகழ்கிறார்.

  எப்படி இப்படி திருஷ்டியைக் கழிக்கும் ஒரு அரிய பழக்கத்தை ஹிந்துக்களின் முனிவர்கள் கண்டுபிடித்தனர்? இது வியப்புக்குரிய ஒரு விஷயம்!

ஆகவே கண் திருஷ்டி என்பது உண்மை தான்; அதைத் தவிர்க்க ஹிந்துக்கள் பாரம்பரியமாக மேற்கொள்ளும் கல் உப்பைச் சுற்றிப் போடுதல், கர்பூர ஆரத்தி எடுத்தல் உள்ளிட்ட பாரம்பரியப் பழக்கங்கள் பொருள் பொதிந்தவையே என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

திருஷ்டியைப் பற்றி இவ்வளவு விவரங்களை அறிந்து  கொண்ட நீங்கள் இந்த ஞானமயம் நிகழ்ச்சி முடிந்த பின்னர் என்ன செய்யப் போகிறீர்கள் என்று எனக்கும் தெரியும் உங்களுக்கும் தெரியும்! இப்படி திருஷ்டியைப் பற்றி எல்லோரிடமும்  அறிவியல் ரீதியாக விளக்கினால், திருஷ்டி பற்றிய உங்கள் அறிவைக் கண்டு உங்கள் மீது திருஷ்டி பட்டு விட்டால்?! கல் உப்பை ஆழாக்கில் போட்டு வீட்டில் மூத்த பெண்மணியை வைத்து உங்கள் வீட்டு வழக்கப்படி திருஷ்டி சுற்றிப் போட்டுக் கொள்ள வேண்டியது தான்!

என்ன இருந்தாலும் கண் திருஷ்டி பொல்லாதது தானே! நன்றி, வணக்கம்!

                 *           முற்றும்

tags – கண் திருஷ்டி-2

R U AN ARYAN OR A BARBARIAN; VADUGAN OR ARAVAN? (Post No.8803)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8803

Date uploaded in London – –12 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ARE YOU AN ARYAN OR ARAVAN OR BARBARIAN?

For every language speaker another language is unsweet, harsh, uncultured and uncivilized.

Vedic Hindus called the Chinese and Mongoloid people as ‘snub nosed’, ‘harsh worded’ Dasyus. Foreigners attributed it to Dravidians . But Dravidians were not in that area at all. All the skeletons discovered in Indus/Sarasvati valley have Punjabi Hindu features; none Dravidian.

Tamils called the neighbouring Telugu speakers Vadugan. It has got good and bad connotations. It meant Muttal/ Muta

 in Sanskrit. Telugus called Tamils Aravan. Noisy, boisterous lot. It has also a bad connotation- snake. So each one criticised the other.

Seth Govindadas called Tamil language in Lok Sabha as a noisy language equivalent to putting stones in a tin box and shaking. When Tamil MPs said that there is no literature in Hindi except Thick and Bulky Railway Time Table or Telephone Directory. So each one mocked at others’ languages.

This type of criticism is in every part of the world. Greeks called Turkish with a different word and Turkish used different word for the Greeks. All belittling and mocking words.

Nowadays we don’t even call a Black or Negro. In my Britain they are called a person from Afro-Caribbean community. You should not say Black. If you say Negro, you will lose your post. You will  be sacked.

Though we banned the Tamil word Pariah in Tamil Nadu, (Tamil dalit), all the English newspapers use it every day around the world to mean an ‘untouchable’. Another Tamil word with bad connotation AYYOH (alas) is also added to Oxford dictionary. Tamils must fight with them and remove both the bad words. Otherwise English newspapers will use the word Pariah for ever.

The real meaning of Arya till the Max muller gang and Caldwell gang changed it, it meant a cultured person or a civilised person or  a person equal to Himalayan saint. Kautilya used it for a man with freedom and Dasa for a slave.

Tamil Sangam poets and Devotional poets use it for saints and Lord Shiva.

Even Krishna used it in that sense in Bhagavad Gita . When Arjuna behaved like a coward Krishna did not call his attitude or his behaviour  ‘Un Kshatriya’ or ‘like a Shudra’ or ‘like a Brahman’a or ‘like a Vaisya.’

He asked him where did you get this ‘ANAARYAJUSTAM’ (B.G.2-2)?

Where did you get this ‘un Aryan attitude’?

Arya is used with brahmin, kshatriya and vaisya in Panini’s grammar.

****

The word  Arya meant ‘a person with courage and courtesy, nobility and straight dealing according to philosopher Dr S Radhakrishnan and others. Arya became Ajja in Prakrit and Ayyer in Tamil.

Sangam age Tamils criticised Yavanas (People from Italy and Greek) as Mlecha and harsh worded (Van Sol Yavanar); they simply copied it from Northern Sanskrit speakers. Pre Sangam age Patanjali also criticised Yavana Greeks

****

Greeks and Barbarians

When Kalhana used the word Mlecha in Raja Tarangini RS Pandit interpreted them as Greeks

Mlechcha , he says, literally meant the people of indistinct speech. The Greeks similarly used the word Barbarian for those  whose speech they did not understand.

The Arabs when they conquered called the highly civilised Iranians the Ajam, the dumb.

In Raja Tarangini 1-107 and 8-2763 and 2766, Kalhana used the word Mlechchas. In the 8th chapter , actually  they were the allies of Prince Bhoja .

Likewise city people mocked at villagers as uncultured, uncivilised and not mannered . in Tamil also they are called Pattikkaattan, meaning country brute.

Christians called others as Pagans and Muslims called others as Kafirs. Hindus called the entire world as one family (Vasudaiva Kutumbakam)

English always mocked at the French and the Scottish. There are English proverbs against Irish as well.

So you can always call your neighbours idiots and fools, dumb and noisy, short and ugly, but you must remember they have also got another dictionary where you are mocked at.

–subham–

காதலியை பிக்குணியாக மாற்றினார் புத்தர் (Post No.8802)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8802

Date uploaded in London – –12 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அவதானம் என்றால் செயற்கரிய செயல் புரிவது என்று பொருள். தமிழ் நாட்டிலும் ஆந்திர தேசத்திலும் அஷ்டாவதானி, தசாவதானி, சதாவதானி என்ற அடைமொழிகளுடன் பலர் வாழ்ந்ததையும் அவர்கள் ஒரே நேரத்தில் 8 அல்லது, 10 அல்லது, பத்துக்கு மேற்பட்ட செயல்களை செய்ய வல்லவர்கள் என்றும் நாம் அறிவோம்.

புத்த மத நூல்களில் ஒன்று திவ்யாவதானம் . இது  கி.பி நாலாம் நூற்றாண்டைச்  சேர்ந்தது. இதில் புஷ்ய மித்ர சுங்கன்  மற்றும் ரோமானிய தினாரா நாணயம் பற்றி வருவதால் காலத்தை ஓரளவு கணிக்க முடிகிறது

இதிலுள்ள சார்த்தூல  கர்ணாவதானம் என்னும் பகுதி சீன மொழியில் கி.பி 265ல் மொழிபெயர்க்கப்பட்டது . அதில் வரும் ஒரு சுவையான கதை–

புத்தரின் பிரதம சீடன் ஆனந்தன் . அவன் மிக மிக வலியுறுத்தியதன் பேரில்தான் பெண்களை புத்த மத பிக்குணிகளாக புத்தர் அனுமதித்தார். அதுவும் என் மதம் நான் நினைத்த காலத்தை வீட சீக்கிரமே மறைந்துவிடும் என்று சொல்லி வருத்தத்துடன் அனுமதித்தார். நிற்க.

கௌதம புத்தர் சிராவஸ்தி நகரில் தங்கி இருந்தார். ஒருநாள் புத்தரின் முக்கிய சிஷ்யனான  ஆனந்தன், பிக்ஷையின் பொருட்டு நகர தெருக்களுக்குச் சென்றுவிட்டு  திரும்பி வந்து கொண்டிருந்தான்  . அப்போது ஒரு சண்டாள ஜாதி பெண்மணி  கிணற்றில்  தண்ணீர் இறைத்து, வந்து கொண்டிருந்தாள். அவள் பெயர் பிரகிருதி. அவளிடம் கொஞ்சம தண்ணீர் தருமாறு ஆனந்தன் கேட்க, அவள் தன ஜாதியைக் காட்டி தண்ணீர் தருவதற்கு மறுத்தாள்.

ஆனந்தன் சொன்னான்- நான் உன் குலம், கோத்திரம் பற்றிக் கேட்கவில்லை சகோதரியே; தண்ணீர் தானே கேட்டேன் என்றான். அவளும் தண்ணீர் கொடுத்தாள் . ஆனந்தனுக்குத் தண்ணீர் தாகம் போயிற்று. சண்டாளப் பெண்மணிக்கோ காதல் தாகம் பிறந்தது. உடனே தாயாரிடம் திரும்பி வந்து ஆனந்தனை,  தான் மணம் புரியமுடியாவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என்றாள் .

அவளுடைய தாய் ஒரு பெரிய மந்திரவாதி. அவள் ஒரு வசிய மந்திரத்தை எழுதி உருவேற்றி ஆனந்தனை , பிரகிருதியின் படுக்கையில் வந்து அமரும்படி செய்தாள். ஆனந்தன் கண்களிலிருந்து திடீரென கண்ணீர் வழிந்தோடியது. அவன் புத்தரை தியானம் செய்யவே புத்தர் தோன்றி சூனியக்காரியின் வசிய மந்திரத்தை முறியடிக்கிறார்.  ஆனந்தன் பத்திரமாக புத்த மடத்துக்குத் திரும்பி வந்தபோதும் பிரகிருதியின் காதல் தீரவில்லை. அவள் ஆனந்தன் செல்லுமிடமெல்லாம் அவனைச் சுற்றிச் சுற்றி வந்தாள் . ஆனந்தன் புத்தர் உதவியை நாடினான்.

புத்தர் , பிரகிருதியின் காதல் தாகத்தைத் தனிப்பதாக அழைத்து ,தர்ம உபதேசம் செய்தார். ‘அடிக்க அடிக்க அம்மியும் நகருமன்றோ’; அவளும் மனம் மாறினாள் ; பிக்குணி / சன்யாசினி ஆனாள் .

இப்படி சண்டாளப் பெண்ணை சன்யாசினியாக மாற்றி மடத்தில் உட்கார வைத்தவுடன், அந்தணர் முதலிய ஜாதியினர் மன்னன் பிரசேனஜித்திடம் முறையிட்டனர்.  அவரும் மக்களின் மகஜரை- மனுவை — புத்தரிடம் கொண்டு சென்றார். பெரும் கூட்டமும் மன்னருடன் சென்றது. உடனே புத்தர் கதைத்தார்:—

“முன்னொரு காலத்தில் திரிசங்கு என்ற சண்டாள அரசன் இருந்தான். அவனுக்கு சார்த்தூல  கர்ணன் என்ற மகன் இருந்தான். அவன் கல்வி கேள்விகளில்  சிறந்தவன். அந்த ஊர் அந்தணரான புஸ்கராச்சாரி என்பவரின் மகளைத் திருமணம் செய்ய விரும்பினான். அந்தணரோ மறுத்தார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. ஜாதி, குலம், கோத்திர வேறுபாடுகளை திரிசங்கு கண்டித்து , பிறக்கும்போது ஏது ஜாதி என்று வினவுகிறான். அவனுடைய அபார அறிவினை மெச்சி , கல்யாணத்துக்கு அனுமதி தருகிறார் அந்தணர்.

இதைச் சொன்ன புத்தர் அந்த அந்தணரின் மகளே இந்த ஜென்மத்தில் பிரகிருதி என்னும் சண்டாளியாகவும், புஸ்கரசாரி ஆனந்தராகவும்  , சண்டாள அரசன் திரிசங்கு புத்தராகவும் வந்து பிறந்ததாகச் சொல்லி முடிக்கிரறார் .

எல்லோரும் கலைந்து சென்றனர்

புத்தர் காலத்தில் ஜாதி, குலம் , கோத்திரம் பெரும்  பிர ச்சினையாக விவாதிக்கப்பட்டது . அவருக்கு 2600 ஆண்டுகளுக்குப் பின்னரும் டெலிவிஷனும் பத்திரிக்கைகளும் எதிர்க்கட்சிகளும் ‘தலித்’ பிரச்ச்சினையைப் பெரிதாக்குவது இந்தியா மாறவில்லை என்பதைக் காட்டுகிறது.

tags-காதலி, பிக்குணி, புத்தர்

–SUBHAM–

PLEASE JOIN US MONDAY 2 PM LONDON TIME, 6-30 PM INDIAN TIME- FACEBOOK.COM/ GNANAMAYAM

 WORLD HINDU NEWS

Q AND A ON HINDUISM

COME TO FACEBOOK.COM / GNANAMAYAM EVERY MONDAY

கண் திருஷ்டியைத் தவிர்க்க என்ன செய்வது? – 1 (Post .8801)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8801

Date uploaded in London – – 12 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஒவ்வொரு திங்கள்கிழமை தோறும் லண்டனிலிருந்து ஞானமயம் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் இரண்டு மணிக்கும் இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. கேள்வி- பதில் நிகழ்ச்சியும் இதில் ஒரு பகுதி.

28-9-2020 அன்று ஒளிபரப்பான கேள்வி பதில் நிகழ்ச்சியில் கண் திருஷ்டி – கண்ணூறு என்றும் அருணகிரி நாதர் மற்றும் வள்ளலார் பாடல்களில் கூறப்பட்ட திருஷ்டி குறித்தும் அதைத் தவிர்க்க என்ன செய்வது? என்பது குறித்தும் அடுத்த திங்களில் விளக்கம் தாருங்களேன். என்று வந்த மடலுக்கு

அளித்த பதிலை இங்கு காணலாம்.

கேள்வியை அனுப்ப விரும்பும் அன்பர்கள் facebook.com/gnanamayam -க்கு அனுப்பலாம்.

கண் திருஷ்டியைத் தவிர்க்க என்ன செய்வது? – 1

 ச.நாகராஜன்

 அருணகிரிநாதர், வள்ளலார் போன்ற மகான்கள் கண் திருஷ்டி பற்றிப் பாடி இருக்கிறார்களே! கண் திருஷ்டி என்பது உண்மையா அல்லது மூட நம்பிக்கையா? திருஷ்டி சுற்றிப் போடுவதை அறிவியல் ஆமோதிக்கிறதா?

QUESTION ASKED BY HEALTHCARE RAJA

கேள்வி நம்மைச் சிந்திக்க வைக்கும் அருமையான கேள்வி! பதிலை விரிவாகப் பார்ப்போம்.

உலகில் கண் திருஷ்டிக்குப் பயப்படாதவர்கள் இல்லை. 

நாடகம் முடிந்தாலும் சரி, பெரிய விழா முடிந்தாலும் சரி திருஷ்டி கழிப்பது வழக்கமாகி விட்டது.உடனடியாக திருஷ்டி கழித்துப் போட்டு விட்டுத் தான் மறு வேலை பார்ப்பார்கள்.

திருஷ்டியைப் பற்றி தமிழர் தம் பழக்கங்களைத் தெரிந்து கொள்வோம்.

கண்ணுக்கு அழகூட்டுவதற்காக மட்டும் தமிழ் மங்கையர் மையைத் தீட்டிக் கொள்ளவில்லை. தன்னைத் தீய பார்வையிலிருந்து காத்துக் கொள்வதற்காகவும் மையைத் தீட்டிக் கொள்கின்றனர். குழந்தைகளுக்கு மை தீட்டும் தாய்மார் மறந்து விடாமல் அதே மையினாலேயே குழந்தையின் கன்னத்தில் ஒரு திருஷ்டிப் பொட்டை வைக்க மறக்கமாட்டார்கள்.

சில பொல்லாத கண்களிலிருந்து தம் குழந்தைகளைப் பாதுகாப்பதற்காகத் தான் இந்த திருஷ்டிப் பொட்டு.

மணமக்கள் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்னர் அவர்களை வாசலிலேயே நிறுத்தி வைத்து வீட்டில் அவர்களுக்கு மிகவும் வேண்டியவர்கள், வயதானவர்கள் கற்பூரத்தை ஏற்றி அவர்களைச் சுற்றி திருஷ்டி கழிப்பது பழக்கம்.

தொன்று தொட்டு இருந்து வரும் இந்த தமிழர்களின் பழக்கம் பல இலக்கியங்களில் சுட்டிக் காட்டப்படுகிறது.

அருட்பிரகாச வள்ளலாரின் திருஅருட்பாவில் ஆறாம் திருமுறையில் நான்காயிரத்து இருநூற்றி இருபத்தைந்தாம் பாடல் இந்த கற்பூரம் ஏற்றி திருஷ்டி கழிக்கும் பழக்கத்தைச் சுட்டிக் காட்டுகிறது.

“கற்பூரம் கொணர்ந்துவம்மின் என் கணவர் வந்தால் 
          கண்ணெச்சில் கழிக்க என்றேன்”

என்ற வரிகள் கற்பூரத்தைப் பயன்படுத்துவதைச் சுட்டிக் காட்டுவதைப் பார்க்கிறோம்.

‘என் கணவராகிய சிவபிரான் என்னிடம் வந்தருளுவாராயின் அவருக்குக் கண்ணேறு (கண் திருஷ்டி) கழிக்கும் பொருட்டுக் கற்பூரம் கொண்டு வந்து வைப்பீராக என என் செவிலியரிடம் சொன்னேன்’ என்பதே இதன் பொருள்.

பழம் பெரும் இலக்கியமான மதுரைக் காஞ்சியில் ‘கழுநீர் கொண்ட எழுநாள் அந்தி’ என்ற வரியைக் காண்கிறோம். அதாவது ஊரிலே திருவிழாக் காலத்தில் ஏழாம் நாள் விழா அன்று மாலையில் நிகழ்ச்சி நிறைவு பெறும். அப்போது ஆரத்தி எடுத்து அந்த நீரைக் கீழே கொட்டுவார்கள். இது தான் கழுநீர். அப்போது பெண்கள் குலவை இடுவர். ஆண்கள் ஆரவார ஒலி எழுப்புவர். அப்படிப்பட்ட கோலாகல ஒலி கொண்டது மதுரை என்பது இந்த வரியின் பொருள். கண் திருஷ்டி போகத் தமிழர் வாழ்க்கையில் கொண்ட சடங்கு இது; சங்க காலம் முதலே இப்படி திருஷ்டி கழிப்பது இருந்து வந்திருக்கிறது.

அருணகிரிநாதரோ சென்னையில் ஆவடிக்கு அருகே உள்ள தலமான வடதிருமுல்லை வாயிலில் மின்னிடை கலாபம் என்று தொடங்கும் பாடலில் அன்பொடு பதஞான

கண்ணியிலு ளாக சுந்தர

   பொன்னியல் பதாரமுங் கொடு

      கண்ணுறு வராமல் இன்பமொடு எனை ஆள்வாய் என்று வேண்டுகிறார்.

அதாவது அன்புடன் ஞான பதமான வலையினுள் அகப்படும்படி அழகிய பொலிவு நிறைந்த தாமரைத் திருவடிகளைக் கொடுத்து, கண் திருஷ்டி வராத படி இனிமையுடன் என்னை ஆண்டருள்வாயாக என்று வேண்டுகிறார்!

    உமாபதி சிவாச்சாரியார் நெஞ்டு விடு தூதில் ‘கண்ணூறு தேனமுதம் காட்டினான்’ என்கிறார். இப்படி கண் திருஷ்டி பற்றி ஏராளமான பாக்கள் தமிழில் உள்ளன.

சில பேருடைய பார்வை பட்டாலேயே போதும் திருஷ்டிக்கு உள்ளானவர் பல விதத்திலும் பாதிக்கப்படுவர், ஏன், சில சமயம் உயிருக்கே ஆபத்து ஏற்படுவதுண்டு!

பார்த்த பார்வையில் புதுச் சட்டை கிழியும்; பால் புளித்துப் போகும், பார்த்த பார்வையில் பல நாட்களுக்குச் சாப்பிடவே பிடிக்காது. வாந்தி எடுக்கும் – இப்படி கெட்ட திருஷ்டியின் “கெட்ட மஹிமையைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

தி ஈவில் ஐ –  எ கேஸ் புக் என்று ஆலன் டுண்டஸ் (The Evil Eye : A casebook – Alan Dundes) இது பற்றிப் பெரிய ஆராய்ச்சி நூலையே எழுதியுள்ளார்.

திருஷ்டி பற்றிக் கவலைப்படாத நாகரிகமே இல்லை; நாடே இல்லை; மக்களே இல்லை!

ஒவ்வொரு நாட்டிலும் இதற்குத் தனிப் பெயர் உண்டு.

சுவாரசியமான அந்தப் பெயர் பட்டியலை அப்படியே சொல்கிறேன்.

ஜெர்மனியில் இதற்குப் பெயர் போஸ் ப்ளிக் (Bose Blick)

ஹாலந்தில் இதற்குப் பெயர் பூஸ் ப்ளிக   (boose Blick)

போலந்தில் இதற்குப் பெயர் டே ஒகோ   (Zte Oko)

இத்தாலியில் இதற்குப் பெயர் மால் ஓச்சியோ  (Mal Occhio)

சார்டினாவில் இதற்குப் பெயர் ஒகு மாலு   (Ogu Malu)

கோர்ஸிகாவில் இதற்குப் பெயர் இன்னோச்சியாடுரா   (Innochiatura)   

ஸ்பெயினில் இதற்குப் பெயர் மால் டி ஓஜோ   (Mal De Ojo)

பிரான்ஸில் இதற்குப் பெயர் மௌவாயிஸ் செய்ல்  (Mauvais Ceil)   

நார்வேயில் இதற்குப் பெயர் ஸ்கோயர் டுஞ்ஜ்   (Skjoertunge)

டென்மார்க்கில் இதற்குப் பெயர் ஆண்ட் ஓஜே (Ondt Oje)

இங்கிலாந்தில் இதற்குப் பெயர் ஈவில் ஐ (Evil Eye)

அயர்லாந்திலும் ஸ்காட்லாந்திலும் இதற்குப் பெயர் இல் ஐ   (Ill Eye)

சிரியாவில் இன்று வரை இதற்குப் பெயர் அயினா பிஷா   (Aina Bisha)

பெர்சியாவில் இதற்குப் பெயர் ஆகாஷா  (aghasha)

ஆர்மீனியாவில் இதற்குப் பெயர் படேரெக்   (Paterrak)

இந்தியாவில் இதற்குப் பெயர் கோர சக்ஷு (Goram cakshu); அதாவது கண் திருஷ்டி!

இப்படி உலகில் எந்த நாட்டை எடுத்துக் கொண்டாலும் கெட்ட திருஷ்டிக்குத் தனிப்  பெயர் உண்டு. கண் திருஷ்டியின் தீய பலன் பற்றி அவ்வளவு நம்பிக்கை.

பைபிளில் ப்ராவெர்ப் 23:6-இல் கெட்ட திருஷ்டி உடையவனிடம் ரொட்டியை வாங்கிச் சாப்பிடாதே; அவனது திருஷ்டி பட்ட உணவையும் விரும்பாதே என்று சொல்லப்பட்டிருக்கிறது.

குரானிலும் ஷேக்ஸ்பியர் நாடகங்களிலும் கண் திருஷ்டி சொல்லப்படுகிறது.

ஹிந்துக்கள் குடும்ப உறுப்பினர்கள் சாப்பிடுவதை வெளியார் யாரும் பார்ப்பதை விரும்புவதில்லை!

அபாயகரமான தொழில்களான சுரங்கப் பணி, கடலில் மீன் பிடிக்கச் செல்லுதல் போன்றவற்றில் ஈடுபடுவோர் திருஷ்டி பற்றி நன்கு கவனிப்பர்.குறிப்பாகப் பெண்மணிகள் தங்கள் வீட்டு ஆண்கள் வெளியே செல்லும் போதோ அல்லது ஒரு காரியத்தை நன்கு முடித்து விட்டு வந்தாலோ திருஷ்டி பற்றிக் கவனிப்பர். திருஷ்டி சுற்றிப் போடுவர்.

இந்தியாவில் அனைத்து மாநில மக்களும் கண் திருஷ்டியைக் கழிக்க நவரத்தினங்களை அணிவதைப் பழக்கமாகக் கொண்டுள்ளனர்.

திருஷ்டியிலிருந்து எப்படித் தப்புவது? முதல் வழி அப்படிப்பட்ட ஆள்களைப் பார்க்கவே பார்க்காதே என்பது தான். அடுத்த வழி சில தாயத்துகளை அணிவது தான்.

அரைஞாண் கயிற்றில் ஆரம்பித்து மணிக்கட்டு, புஜத்தின் மேல் பகுதியில் கயிறு கட்டுதல், கழுத்தில் ஒரு கயிற்றில் தாயத்தை அணிவது என்று பல ரகங்களில் திருஷ்டியிலிருந்து தன்னைப் பாதுகாக்க ஒவ்வொருவரும் முயல்கின்றனர்.

நமது ஊரில் மிளகாயைப் மரக்கால் படியில் வைத்து திருஷ்டி சுற்றிப் போடுவர். கடல் உப்பை (கல் உப்பு; உப்புப் பொடி அல்ல) வைத்து திருஷ்டி கழிப்பது அன்றாடப் பழக்கம். பூசணிக்காய் பற்றிச் சொல்லவே வேண்டாம். அமாவாசை அன்று சாலை எங்கும் உடைத்த பூசணிக்காய் மயமாக இருக்கும்.

உலகில் தன்னை திருஷ்டியிலிருந்து பாதுகாத்துக் கொள்ளாத பிரபலங்களே இல்லை. பேஷன் மாடலான கிம் கர்டாஷியான் (Kim Kardashian) கெட்ட திருஷ்டியைப் போக்கும் ப்ரேஸ்லெட், தலையணி போன்றவற்றை அணிந்து போஸ் கொடுப்பது வழக்கம். ஜிஜி ஹடிட் GIGI HADIT – 2017இல் ‘ஐ லவ்– ஷீ (Eye love shoe)-ஐ திருஷ்டியிலிருந்து காத்துக் கொள்வதற்காக அறிமுகப்படுத்தினார். அதன் விலை 35000 ரூபாய் தான்!

பிரபலங்கள் இதற்காகவே அறிமுகப் படுத்தும் கண் அணிகள், நெக்லேஸ், கீ-செய்ன் ஆகியவை சந்தையில் விற்பனையில் சக்கைப்போடு போடுகின்றன. *

tags- கண் திருஷ்டி, part 1

தொடரும்

INDEX 30 FOR LONDON SWAMINATHAN’S ENGLISH & TAMIL ARTICLES (Post No.8800)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8800

Date uploaded in London – –11 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

HOW TO GET ACCESS FOR THESE POSTS?

JUST COPY THE TITLE YOU WANT TO READ AND PASTE IT IN GOOGLE SEARCH AND ADD “FROM tamilandvedas.com or swamiindology.blogspot.com”

IF YOU HAVE ANY PROBLEM, PLEASE CONTACT US. OUR E MAIL IS IN ALL THE 8700 PLUS POSTS.

MAY  2015 INDEX OF TAMIL ARTICLES

 பழங்கால இலக்கியங்களில் பாராசூட், மலை ஏறும் கருவிகள், 1898,30/5

அகத்தின் அழகு முகத்தில் தெரியும், 28/5, 1894

விவேகாநந்தரின் 30 அற்புதப் பொன் மொழிகள்!, 1892, 27/5

ரிக் வேதத்திலிருந்து வந்தது “பணம்”!, 1891, 26/5

பகுதி-2 ராம நாம மஹிமை: மேலும் சுவையான கதைகள், 1888, 25/5

ராம நாம மஹிமை: 4 சுவையான கதைகள், 1887, 24/5

அரிய பஞ்சமுக வாத்யம்!, 1885, 24/5

வாலும் கொம்பும் இல்லாத பசு !!, 1883, 23/5

வேத கால மக்களின் வியத்தகு புவியியல் அறிவு!, 1881, 22/5

காலம் பற்றிய ஐந்து அற்புதக் கதைகள்!-2, 1870, 20/5

காலம் பற்றிய ஐந்து அற்புதக் கதைகள்!-1, 1875, 19/5

ரிக் வேதத்தில் பூகம்பம், 1870; 17/ 5

உலகின் மிகப் பழைய நகரம் – காசி/வாரணாசி!1866; 15/ 5

சம்ஸ்கிருத பொன் மொழிகளும் இணையான தமிழ்ப் பழமொழிகளும், 1865;  14/5

பைபிள் தோன்றியது எப்போது?, 1863; மே 13; கட்டுரை 1863;

அஷ்டமி, நவமி பற்றி சத்ய சாய் பாபா, 1862, 13/5

கி.மு.1700-இல் ஒரு பெண் எம்.பி.! இந்திய அதிசயம்!!; 1861; 13/5

பாட்டுக்கு பத்து ரூபாய்! ஞானியார் அடிகள் கதை; 1859; 12/5

மூன்று சூரியன்கள் தோன்றிய அதிசயம்!! 1857; 11/ 5

தமிழனுக்கு நேரம் காலம் தெரியுமா?; 1855; 10/5

நான் பாற்கடலை நக்கிக் குடிக்கும் பூனை – கம்பன்; 1851; 7/5

சிந்து சமவெளியில் ராமாயண முத்திரை!! 1849; 6/5

முதலில் வந்தது ராமாயணமா? மஹாபாரதமா? பெரிய குழப்பம்!!! 1846; 5/5

இரண்டு எதுகை அகராதிகள் !!; 1844; 4/5

  சம்ஸ்கிருத எதுகை அகராதி!; 3/5; 1843

இந்துக்கள் கண்டுபிடித்ததை வெளிநாட்டினர் மீண்டும் “கண்டுபிடித்த” விநோதம்!! 1842; 2/5

அப்பாய் செட்டியாரின் அற்புத தமிழ் அகராதி; 1840;  மே 1, 2015

XXXX

VIEWS OF INDIAN SCHOLARS ON THE TRANSLATIONS OF THE VEDAS, 31 MAY 2015, POST 1901

S NAGARAJAN’S POST LISTED ALREADY/ SEPARATELY, POST 1900, 1896, 1879, 1875, 1872, 1868,1853,

DICTIONARY OF 10,000 KINGS, PART 20, MAY 30, POST 1899

RAMA IN INDIAN GRAMA, 29/5, 1897

SAMPURNA RAMAYANA IN PICTURES , 1895, 28/5

PARACHUTING AND MOUNTAINEERING IN ANCIENT HINDU SCRIPTURES, 27/5, POST.1893

31 BEAUTIFUL QUOTATIONS FROM PHILOSOPHER DR ADHAKRISHNAN, POST. 1890, 26/5

HOW AMZING! THE POWER OF GOD’S NAME! FOUR BEAUTIFUL STORIES! 1886, 24/5

A RARE MUSICAL INSTRUMENT !PANCHMUKA VADHYA,  1884, 23/5

UNIQUE AND WONDERFUL FOOD ITEMS (PRASADS) OF HINDU TEMPLES, 1882, 22/5

SANSKRIT AND TAMIL WORDS IN ANCIENT CHINESE, POST 1880; 21/5

THE STORY OF JUGGERNAUT, POST 1878; 20/5

OLD LANGUAGES NEVER DIE, 1876, 19/5

AMAZING GEOGRAPHICAL KNOWLEDGE OF THE VEDIC HINDUS; 1873;  18/5

SUNDARA KANDA IN PICTURES; POST 1871; 17/5

FIVE BEAUTIFUL STORIES ON HINDU CONCEPT OF TIME, POST 1869; 16/ 5

EARTH QUAKE IN RIG VEDA; 1867; 15/5

OLDEST CITY IN THE WORLD – KASI/VARANASI/BENARES; POST ; 1864; 14/5

COMETES IN BRHAT SAMHITA,

OLDEST DEMOCRACY IN THE WORLD; OLDEST FEMAL MP IN THE WORLD, 1858;  11/5

IS IT GOOD TO SEE THREE SUNS IN THE SKY ?1856; 10/ 5

BRAHMIN KINGS OF SRILANKA;  1854; 9/5

RAMAYANA EAGLE SEAL IN INDUS VALLEY; 1852; 8/5

KISHKINDHA KANDA PICTURES FROM VALMIKI RAMAYANA; 1850; 7/5

ARYA PUTRA RAVANA SPOKE SANSKIT; HANUMAN SPOKE PRAKRTA; 1848.       6/5

RAMAYANA CAME FIRST; MAHABHARATA CAME LATER; POST 1947; 5/5

INDIA IN SILAPPADIKARAM; 1844; 4/5

JAHAN NA PAUNCHRE RAVI:, VAHAN PUNCHE KAVI:1841, 1 MAY 2015

TAGS- INDEX 30, LONDON SWAMINATHAN, MAY 2015

–SUBHAM–

சிங்கத்தை ஏமாற்றிய தந்திரக்கார நரி (Post No.8799)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8799

Date uploaded in London – –11 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சிங்கத்தை ஏமாற்றிய தந்திரக்கார நரி

நீ அவல்  கொண்டு வா ; நான் உமி கொண்டுவருகிறேன் ; அவை இரண்டையும் கலந்து எங்கள் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து ஊதி, ஊதித் தின்போம் என்ற கதை உங்களுக்குத் தெரிந்ததே. எங்கள் வீட்டுத் திண்ணை என்பது முக்கியம். அதே உமியைச் சேகரித்து அதை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம். ஆக அந்த ஆளுக்கு 100 சதவிகித லாபம். இதே போல 2000 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட புத்த மதக் கதை ஒன்றைக் கேளுங்கள் –

வசுபந்து என்பவர் கி.பி.நாலாம் நூற்றாண்டில் வாழ்ந்தார். அவருடைய சாஸ்திர அறிவு மிகப்  பரந்தது . அவர் இயற்றிய முக்கியமான நூல் அபிதர்மகோஸம் . இது நமக்கு கிடைக்கவில்லை. ஆயினும் யசோதர்மர் இதற்கு உரை எழுதியுள்ளார். மேலும் இந்த நூல் திபெத்திய மொழியிலும் சீன மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இவற்றிலிருந்து நாம் இந்த நூலின் உள்ளடக்கத்தை அறிகிறோம். இதை பரமார்த்தர் என்பவர் கி.பி. 563-ல் மொழிபெயர்த்தார்

வசுபந்து  ‘கதா சங்கிரகம்’ என்ற  நீதிக்கதையையும் எழுதினார். இது தம்மபதக் கொள்கைகளை விளக்கும் நூல். ஆயினும் இதற்கு முன்னர் எழுந்த  சம்ஸ்கிருதக் கதை நூலான பஞ்ச தந்திரக் கதையைப் பின்பற்றுகிறது.

இதோ ஒரு கதை –

ஒரு நரி, ஒரு சிங்கத்தைப் பின் தொடர்ந்து சென்றது சிங்கம் அடித்துக் கொன்று சாப்பிடும் மாமிசத்தின் மிச்சம் மீதி  தமக்கு கிடைக்கும் என்பது அதன் எண்ணம். ஒரு முறை, சிங்கம் மிகப்பெரிய  காட்டுப் பன்றியை அடித்துக் கொன்று புசித்தது. ஆனால்  நிறைய பகுதி மிச்சமாக எஞ்சியிருந்தது. இதைத் தூக்கிக் கொண்டுவா என்று நரிக்கு கட்டளை இட்டது சிங்கம். நரியால் அதைத் தூக்க முடியவில்லை. உடனே தந்திர புத்தியைப் பயன்படுத்தியது. தூக்கிச் செல்லாவிட்டால் கோபத்தில் சிங்கம் தன்னைக் கொன்றுவிடும் என்றும் பயந்தது. சிங்கமோ கர்வம் உடைய பிராணி. ஆகையால் அதன் கர்வத்தை நரி பயன்படுத்திக்கொண்டது.

இதைத்தூக்கிச் சுமப்பதற்கு இரண்டு காரியங்கள் தேவை; ஒன்று பாரம் தாங்காமாட்டாமல் முனகுவது. அப்படிச் செய்தால்  காரியம் மன அளவில் எளிதாகத் தோன்றும் . இரண்டாவது இதைத் தூக்கி வருவதாகும் ;இரண்டு காரியங்களையும் ஒரே ஆள் செய்ய முடியாது.ஆகையால் ஏதேனும் ஒரு பணியை நீ எடுத்துக் கொள்  என்று நரி சொன்னது.

இதைக்கேட்ட சிங்கம் , முனகுவது தமது தகுதிக்கு உரிய செயலன்று என்று எண்ணி, நான் தூக்கி வருகிறேன் என்றது. நரியோ அதற்குப் பின்னால் ‘ஜாலி’யாக முனங்கிக் கொண்டே சென்றது . இது போல பெளத்த மதக் கொள்கைகளை சுமந்து சொல்லுகிறேன்.. என்னோடு ஒத்து, அது சரிதான் என்று முனகுவதற்குக் கூட  உங்களால் முடியவில்லையே என்று நகைச் சுவை ததும்ப கதையை முடிக்கிறார் வசுபந்து!

tags–  வசுபந்து,  சிங்கம், நரி.

‘ஹிந்து விரோத செகுலரிஸம்’ தேவையில்லை (Post.8798)

HINDU WEDDING IN CZECH REPUBLIC FROM FACEBOOK

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8798

Date uploaded in London – – 11 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஹிந்து விரோதம் தான் செகுலரிஸம் என்றால் செகுலரிஸம் தேவையில்லை!

ச.நாகராஜன்

     அரசையும் மதத்தையும் தனித் தனியே வைத்திருப்பது தான் செகுலரிஸம்.

ஆனால் பாரதத்தில் நடப்பது என்ன?

ஹிந்து விரோதம் தான் செகுலரிஸம் என்று கருதப்பட்டு ஓதப்பட்டு வருகிறது. இது தான் செகுலரிஸம் என்றால் – இந்த ஹிந்து விரோத மனப்பான்மை தான் செகுலரிஸம் என்றால் – ஹிந்துக்கள் ஒழிவதை ஒரே நோக்கமாகக் கொண்டிருப்பது தான் செகுலரிஸம் என்றால் – அப்படிப்பட்ட செகுலரிஸம் பாரதத்தில் உள்ள ஹிந்துக்களுக்கு வேண்டவே வேண்டாம்.

     திரு அஸ்வின் சாங்கி ஆங்கிலத்தில் எழுதும் பிரபல  இந்திய எழுத்தாளர். அவரது The Rozabal Line, Chanakya’s Chant, The Krishna Key, The Sialkot Saga, keepers of the Kalachakra, The Vault of Vishnu ஆகிய நாவல்கள் குறிப்பிடத் தகுந்தவை. அவரது இரண்டு நாவல்கள் நியூயார்க் டைம்ஸின் பெஸ்ட் செல்லர் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

அவரது 8, ஆகஸ்ட் 2020 தேதியிட்ட கட்டுரை குறிப்பிடத் தகுந்த ஒரு கட்டுரை.

அதன் சில பகுதிகளை இங்கு பார்க்கலாம்.

*

      எங்கு முஸ்லீம் மெஜாரிட்டி இருக்கிறதோ அப்படிப்பட முஸ்லீம் தேசங்கள் இஸ்லாமிய நாடுகளாக ஆகி விடுகின்றன. உலகெங்கும் உள்ள 49 முஸ்லீம் மெஜாரிட்டி நாடுகளைப் பாருங்கள். செகுலரிஸம் என்பதை நிஜமாகப் பாதுகாக்க வேண்டுமானால் அதற்கு ஹிந்து மனப்பான்மை தேவை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

   கங்கா- யமுனா கொள்கையைக் கடைப்பிடிப்பதில் நாம் கர்வம் கொள்கிறோம்.

ஒவ்வொரு பீம்சென் ஜோஷிக்கும் இங்கு ஒரு ஜாகீர் ஹுசைன் உண்டு. ஒவ்வொரு விக்ரம் சாராபாய்க்கும் இங்கு ஒரு அப்துல் கலாம் உண்டு. ஒவ்வொரு ரவீந்திரநாத் தாகூருக்கும் இங்கு ஒரு சல்மான் ருஷ்டி உண்டு. ஆனால் உங்களை நீங்களே கேட்டுப் பாருங்கள்! இந்த கங்கா- யமுனா கொள்கை ஏன் பாகிஸ்தானில் இல்லை?

இதில் அடிப்படையாக இருக்கும் ஹிந்து மனப்பான்மையை எவராலும் எளிதில் ஒதுக்கி விட முடியாது.

    சமீபத்தில் ஆஸ்திரேலிய அரசு பூர்வகுடியினருக்கு எதிராக தாங்கள் செய்த கொடுமைகளுக்கு மன்னிப்பு கேட்டது. தென்னாப்பிரிக்க அரசு பூர்வ குடியினருக்கு எதிராக செய்யப்பட்ட கொடுமைகளுக்கு மன்னிப்பு கேட்டது.

ஜப்பானியர்கள் தாங்கள் ஆசியாவில் இழைத்த உலகப் போர் கொடுமைகளுக்கு மன்னிப்பு கேட்டனர். ஜெர்மானியர் தாங்கள் யூதர்களுக்கு எதிராக இழைத்த கொடுமைகளுக்கு மன்னிப்பு கேட்டனர். ஏன், போரிஸ் யெல்ட்சின் கூட போல்ஷ்விக் புரட்சிக்கு மன்னிப்பு கேட்டார்.

   ஆனால் ஹிந்துக்கள் யாரிடமிருந்து மன்னிப்பை எதிர்பார்ப்பது? முகம்மது பின் காசிமை நமக்குத் தந்த அராபியர்களிடமிருந்தா? முகம்மது கஜினியைத் தந்த ஆப்கானிஸ்தானியரிடமிருந்தா? குதுப் டித் அய்பக்கைத் தந்த துருக்கியர்களிடமிருந்தா? அவுரங்கசீப்பைத் தந்த துருக்கி- மங்கோலியர்களிடமிருந்தா? அலெய்கோ டியாஸ் ஃபால்கோவைத் தந்த போர்த்துக்கீசியரிடமிருந்தா? அல்லது ரெஜினால்ட் டயரைத் தந்த ஆங்கிலேயரிடமிருந்தா?

   ஹிந்துக்கள் யாரிடமிருந்தும் மன்னிப்பை எதிர்பார்க்கவில்லை. ஆனால் எனது தலைமுறையினர் ஹிந்துவாக இருப்பதற்காக யாரிடமும் மன்னிப்புக் கேட்கவும் தயாராக இல்லை.

    எவ்வளவு செகுலராக நாங்கள் இருக்கிறோம் என்று அடிக்கடி நிரூபித்து நிரூபித்து நாங்களும் அலுத்து விட்டோம். இந்த அக்னி பரிக்ஷை நிறுத்தப்பட வேண்டும்.

   நீங்கள் நிஜமாகவே செகுலரிஸத்தை இந்தியாவில் நிலைநிறுத்த விரும்புகிறீர்களா? அப்படியானால் ஹிந்துப் பண்பட்ட்டைக் காப்பாற்றுங்கள்.

இந்தக் கட்டுரை முதலில் ஸ்வராஜ்யா பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டது.

இது கல்கத்தாவிலிருந்து வெளி வரும் வார இதழான ட்ரூத் பத்திரிகையில் மறு பிரசுரம் செய்யப்பட்டது. (Truth Volume 88 No 9 dated 4-9-2020)

***

நீண்ட கட்டுரையின் இறுதிப் பகுதியே இங்கு தரப்பட்டுள்ளது. இதன் ஆங்கில மூலத்தைப் படிக்க விரும்புவோருக்காக ஆங்கிலக் கட்டுரையின் இறுதிப் பகுதி இதோ:-

     In most Muslim-majority countries, Islamisation eventually creeps in. Just look at the 49 Muslim- majority countries around the world and you will realize that the only way to preserve secularism is by preserving Hindu Syncretism.

     We are proud of the Ganga- Jamuna techzeeb of India. For every Bhimsen Joshi there is a Zakir Hussain; for every Vikram Sarabhai there is an Abdul Kalam; for every Rabindranath Tagore there is a Salman Rushdie. But ask yourself; why did this Ganga-Jamuna syncretism not take root in Pakistan?

The answer is the underlying Hindu spirit that simply cannot be ignored.

     In recent times, The Australian government has apologized to the aboriginal people for their crimes against them. The South African government has aplologized for apartheid. The Japanese have apologized for their war crimes in Asia. The Germans have apologized to the Jews for the holocaust. Even Boris Yeltsin apologized for the Bolshevik Revolution. But from whom should Hindus seek an apology? From the Arabs who gave us Muhammaed bin Qasim? From the Afgans who gave u Mahmud Ghzni? From the Turks who gave us Qutb al – Din – Aibak? From the Truko-Mongols who gave us Aurangazeb? From the Portuguese who gave us Aleixo Diaz Falcao? Or from the English who gave us Reginald Dyer?

     Hindus do not expect an apology from anyone. But my generation is equally unwilling to apologize for being Hindu. We are also tired of being the ones who have to regularly prove how secular we are. This agni-pariksha must stop.

   Do you really want to preserve secularism in India? Then preserve the Hindu ethos first.

***

Thanks to Swarajya magazine

Thanks to Truth magazine

Tags-  ஹிந்து விரோதம் , செகுலரிஸம்,

—subham–