DR R.NAGASWAMY SPEAKS, NEVER FORGET MONDAYS

WORLD FAMOUS  HISTORIAN DR R N SPEAKS, SURESHJI SPEAKS AND SCIENTIST DESIKAN SPEAKS; USUAL NEWS  AND VIEWS IS ALSO THERE

PLEASE JOIN US AT 1 PM LONDON TIME, 6-30 PM INDIAN TIME TODAY/ MONDAY AT FACEBOOK.COM/GNANAMAYAM. IF U WANT TO PARTICIPATE LIVE WE WILL SEND U THE ZOOM LINK. PL. CONTRIBUTE 3 TO 4 MINUTES VIDEO OR AUDIO CLIPS. U CAN ALWAYS SEE US ON FACEBOOK.COM/GNANAMAYAM. 

U R ALSO WELCOME TO BECOME A BROADCASTER.

SUBHAM

TAMIL WORDS IN ENGLISH – PART 20 (Post No.8904)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8904

Date uploaded in London – –8 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தமிழில் ஆயிரம் ஆங்கிலச் சொற்கள் – Part –20

Words beginning with – N

N.1.NULL, NULLUM- ALLA,/ILLAI ந/ அல்ல, ந/இல்லை,

N.2. NULL AND VOID- ந/ செல்லாது  SELLATHU

N.3.NEAR – AYAL; ANITHTHE- MIRROR IMAGE OF NEAR=ANER ந/அயல், ந/ அணித்தே,

N.4. NAN0- ANU ந/அணு

INITIAL LETTER N IS LOST IN THE ABOVE WORDS.

XXXX

N.5. NARCISSISM/GREEK – நர-ஸ்வ -ப்ரிய ; தன் உடலின் மீதே தான் காதல் கொள்ளும் கிரேக்க புராண மனிதன் நரசிஸ்ஸஸ் SELF LOVE,  NARA SVA PRIYA/ SKT.

N.6.NASO, NOSE, NASAL – NAASIKA; USED IN ALL INDIAN LANGUGES

NASI DVAR – NOSTRILS நோஸ் – நேசல் – நாசி ; நாசி த்வாரம் (யோகா, மருத்துவம் தொடர்பான தமிழ் நூல்களில் சம்ஸ்க்ருதம் காணப்படும்

N.6. NAVY, NAVAL – NAAVA/SKT; NAAVAAY/TAMIL – BOAT, SHIP நாவ , நேவி ,

N.7. NEBULA – KUZAPPAM குழப்பம்

N.8. NEOS, NEW – NAVA, NUUTANA நூதன, நவ

N.9.NEPHRO – NEERAKAM நீரகம் ,

N.10.NEURO – NARAMBU, நரம்பு, நாடி, நார்

N.11. NERVE – SEE BOVE நாடி,  நரம்பு,  நார்

N.12. NEUT- RAL – NADU/ CENTREநடு ,

N.13. NIHIL- NAY, NO, NA, ILLAIந, நோ, நை  ந/இல்லை

N.14.NOMEN, NAME – NAAMAM/ NAME நாமம்

N.15. NOMOS – NIYAMA /RULES நியம,

N.16. NOSOS – NOY, NASITHTHAL/ DISEASE; NAASA நாஸ,

N.17. NOMADIC – NAADODI நாடோடி

M.18.NEGATION, NEGATIVE- NA(N)THTHAMAI, VIRUMBAAMAI நத்தம் / நத்தாமை, நந்தாமை ந , நோ

M.19. NICI/ NIGHT – RATRI/SKT; NADU NISI/TAM. நிஸி , நடு நிசி, நிசா , நைட்

N.20. NICE – NAISAANA, NAYAMAAANA நைஸான, நைச்சியமான

N.21. NAGGING – NACHCHARI, NAKSHATRYEYAN நச்சரி; நட்சத்திரேயன் (அரிச்சந்திரன் கதை)

N.22. NATION, NATURA- NAATU நாடு (த/ ட =ஸ ), TION= SION

N.23.NOBLE – NALLA, NANI NALLA, நல்ல

N.24. NICHOLAS – NIKILA நிகிலா

N.25-NEEM – VEMBU, வேம்பு,

N.26. NOON; NAN PAHAL நண் பகல்,

N.27. KNIGHT/ NEIGHING  – KANAITHAL; க/ணைத்தல்

N.28. NOVEMBER – NINTH MONTH; DECEMBER- DASA/10

SEPTE/ MBER-  SAPTA7, OCTO-ASHTA 8; JULIAN CALENDAR CHANGED EVERYTHING. நவ-9-ம்பர் தச-10-ம்பர், சப்த-7-ம்பர், அஷ்-8-டோபர் ; ஜூலியன் காலண்டர் செயல்பாட்டில் வரும் முன் மார்ச்/யுகாதியே உலகம் முழுதும் ஆண்டுத் துவக்கம் . பிற்காலத்தில் காலண்டர் மாறினாலும் மாதப் பெயர்கள் மாறவில்லை. நவ-9–ம்பர்= ஒன்பதாம் மாதம்

N.29. NUMBER- ENNAM ந/எண்ணம், ,

N.30.NAVEL – NAABHI ;  V=B நாபி

N.31. NECTAR- NARAVAM; ATTAR நறவம் /அத்தர்

N.32.NECESSARY- NISCHAYA THEVAI நிச்சய தேவை, ,

N.33. NODD- AATTU தலை/ ஆட்டு

N.34. NOODLE – NUUL PONDRA நூல் போன்ற

N.35- NOAH/BIBLICAL CALENDAR – NAVA= NEW MAN OR NAAVA MAN- BOAT MAN நோவா /பைபிள் கதை= நவ மனிதன்/புதியவன்; நாவ மனிதன்- படகில் வந்தவன்

N.36.NEMESIS – NAMUCI OF RIG VEDA; ALSO ENEMY

ந முசி = ரிக் வேத அரக்கன்

N.37. NAÏVE – NAICHCHIYAMAANA; VINAYA/MIRROR IMAGE நைச் சியமான ; வல ம் இடமாக படித்தால் வினய /பணிவான- வினய = வணக்கம்

N.38. MINUTE- NIMI – IMAI/EYELID; NIMISHA= MINISHA= MINUTE; MIRROR IMAGE OF NIMI- IMAI IN TAMIL FOR EYELID

N.39.NIMI- MUMMI/ FICATION; NIMI STARTED MUMMFICATION IN INDIA

நிமி- முதல் முதலில் இந்தியாவில் எண்ணைத் தைலத்தால் சடலம் காப்பாற்றப்பட்ட முறையை உண்டாக்கியவன் ; நிம்மி= எகிப்திய மம்மி.

நிமிஷம் — வல ம் இடம் படித்தால்  மினிட்/ ஆங்கிலம் ; த/ ட =ஷ

நிமி — கண்/இமை ; 60 முறை இமைத்தால் – ஒரு நிமிஷ ;

N.40.NUANCES- NUNUKKAM/ MINUUTE நுணுக்கம்,

N.41. NIGGER, NEGRO – NISHAADA நிஷாத, நைஜர், நைஜிரியா , நிக்கர் /நீக்ரோ

N.42. NIGERIA, NIGER – COUNTRYAND DARK RIVER; GOING THROUGH DARK CONTINENT; AFRICAN WAS CALLED DARK CONTINENT; NICI= NIGHT

N.43. NARAM SIN, NABONIDUS – KINGS OF MIDDLE EAST = NAVANEETHA, NARA SIMHA; ALSO NABHA- SKY நரம் சின் = நரசிம்மன் அல்லது நர சேனன் , நபோ நிதஸ் = நவநீதன் ; நப = ஆகாயம்

N.44.NIXON- NISHADAN நிஷாதன்,

N.45. NURTURE, NURSURY – NAATRU நாற்று

N.46. NIGER- FLOWING RIVER IN AFRICAN LANGUAGE; WE HAVE NEY AARU IN INDIA நெய்  ஆறு/ கேரளம் 

N.47- NAKED – NAGGA IN PALI நக்க; நேக்கட் /ஆங்கிலம், நிர்வாண /சம்ஸ்க்ரு

NICOBR ISLAND IS FULL OF JHARAVA TRIBES WHO ARE NAKED; தம் ; அம்மண மாந்தர் வாழும் நிக்கோபார் தீவு – நக்க வரம் 

N.48. NUMB- NAMATHU/ MARATHU POCHU நமத்துப் போ;

N.49. NOTORIOUS – NAATU ARINTHA; KNOWN TO ALL நாடறிந்த ,

N.50.NOTE/ NOTICE- NAATTAM OR NOTTAM; NOKKU நோட்டம், நாட்டம், நோக்கம்

N.51. NEAT- NIYATHI/RULE நியதி/ விதி

N.52. NOSOS – DISEASE; NAASAM/DESTROY- – நோய், நாசம் ; பீ நாசம்- மூக்கில் ரத்தம் கொட்டும் நோய்.

tags-  Tamil words – part 20

—SUBHAM—

அதிர்ஷ்டம் ‘அம்பாசிடர்’ கார்ல வந்தா, பிரச்சினை ‘ப்ளைட்ல’ வருது ! (Post.8903)

COMPILED  BY KATTUKKUTY

Post No. 8903

Date uploaded in London – – 8 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நவீன ஞான மொழிகள் – 6

Compiled by Kattukutty

குறைகளை தன்னிடம் தேடுகிறவன் தெளிவடைகிறான்

குறைகளை பிறரிடம் தேடுகிறவன் களங்கப்படுகிறான்

 XXX

அறுந்து போன செருப்புக்குக் கூட வீட்டில் இடம் உண்டு

இறந்து போன மனித உடலுக்கு ஒரு இடமும் இல்லை……

XXXX

விழுதல் என்பது வேதனை.

விழுந்த இடத்தில் எழுதல் என்பது சாதனை!!!

XXXX

பேசிப் பேசி நம்மை ஏமாற்றுகிறார்கள் என்பதெல்லாம் “பொய்”

அவர்கள் பேச்சில் நாம் ஏமாந்து விடுகிறோம் எனபதுதான் “மெய்”

XXXX

விஸ்கி குடிச்சா நாம நாலு பேருக்கு முன்னாடி ஆடலாம்,   –  அதுவே

அதிகமா குடிச்சா நமக்கு முன்னாடி நாலு பேரு ஆடுவாங்க……..

XXX

நீங்க எவ்வளவு பெரிய பருப்பா இருந்தாலும்,  உங்களை வைச்சு

சாம்பாரெல்லாம் பண்ண முடியாது!!!

XXX

டீ மாஸ்டர் எவ்வளவுதான் லைட்டா டீ போட்டாலும், அதிலிருந்து

கொஞ்சம் கூட ‘லைட்’ LIGHT  வராது !!!

XXX

முட்டை இடாத பறவை எது ???

ஆண் பறவை !!!

XXX

ஊசி குத்தின இடத்தில் ஏன் ரத்தம் வருது ???

தன்னை குத்தினது யாருன்னு பார்க்க வருது!!!

XXX

என்னதான் ஊருக்கு கேட்கிற மாதிரி குறட்டை விட்டாலும்,

அத நம்ம காதால கேட்க முடியாது ……..

XXX

அதிர்ஷ்டம் அம்பாசிடர் கார்ல ஏறி வந்தா,

பிரச்சினை FLIGHT  ப்ளைட்ல ஏறி வருது !???

XXX

கல்யாணம் ஆன பின்னால ஒண்ணு அடி விழும்,

இல்லே முடி விழும், அவ்ளோதாங்க வாழ்க்கை………

XXXX

என்னதான் வேல வெட்டி இல்லாமல் இருந்தாலும்,

நமக்கு நாமே போன் பண்ணும்போது பிஸியாத்தானே

இருப்போம்????

XXX

மூக்கும் முழியுமா இருக்கிற பொண்ண விட 

நாக்குக்கு நயமா சமைக்கிற பொண்ணுதான் 

ஆண்களுக்குத் தேவையாம்!!!

Xxx

 கடன் கொடுத்துப் பார்…..உறவுகள் உன்னைப் போற்றும்!!!

கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுப் பார், மண்ணை வாரி தூற்றும்!!

XXXX

மாசத்துக்கு ஒரு நாள்தான் சம்பளம் தராங்க

ஆனா வேல மட்டும் தினமும் தராங்க???

XXX

பணத்தின் மதிப்பு தெரிய வேண்டுமா???

செலவழியுங்க…..

உங்க மதிப்பு தெரிய வேண்டுமா???

கடன் கேளுங்க…….

XXX

பிச்சை போடுவதும் சுய நலம்தான், புண்ணியம் கிடைக்கும்

என்று நினைத்தால்!!!

XXX

அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்,

பொண்டாட்டி சொல்லியே கொல்லும்……….

நவீன,  ஞான மொழிகள் – 6,

***

ஆயுளை குறைத்துக் கொள்ளாதீர்கள்! (Post No.8902)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8902

Date uploaded in London – – 8 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஆயுளை குறைத்துக் கொள்ளாதீர்கள்!

ச.நாகராஜன்

‘ஜீவேம சரத சதம்’ என்பது வேதம் நமக்கு இட்டிருக்கும் கட்டளை – நூறு வயது வாழ்வோமாக!

இப்படிச் சொல்லி விட்டு அது ஒதுங்கி விடவில்லை.

100 வயது வாழ்வதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும், எதையெல்லாம் செய்யக் கூடாது என்றும் வழி காட்டி இருக்கிறது.

இந்த வேத நெறிகளை பல்வேறு நூல்கள் எளிதாகப் புரியும் வண்ணம் கூறி உள்ளன.

சுபாஷித ஸ்லோகங்கள் இந்த வகையில் பெரும் வழிகாட்டி ஸ்லோகங்களாக அமைந்துள்ளன.

ஆயுள் விருத்தியைப் பற்றி சில சுபாஷிதங்களைப் பார்ப்போம்.

சர்வலக்ஷண ஹீனோபி ய: சதாசாரவாந்தர: |

ச்ரத்யானோனசூயச்ச சதம் வர்ஷாத் ஜீவதி ||

நல்ல குணங்கள் இல்லாவிட்டாலும் கூட தனது செயலில் புண்யமான செயல்களைச் செய்து சிரத்தையுடனும் பொறாமை இல்லாமலும் இருக்கும் ஒருவன் நூறு ஆண்டுகள் வாழ்வான்.

**

பாலார்கோ யக்ஞதூம்ரச்ச பாலஸ்த்ரீ நிர்ஜரோதகம் |

ஆயுஷ்யவர்தகம் நித்யம் ராத்ரௌ க்ஷீரான்னபோஜனம் ||

உதய சூரியன், யாகத்திலிருந்து எழும் புகை, இளம் பெண், ஊற்றிலிருந்து ஊறும் தெள்ளிய நீர் ஆகியவை ஆயுளை நீடிக்க உதவுபவை. அத்துடன் இரவில் பால் கலந்த உணவும் ஆயுளை நீடிக்கும்.

**

வ்ருத்தார்க: ப்ரேததூம்ரஸ்ச் வ்ருத்த ஸ்த்ரீ தில்லரோதகம் |

ஆயுஷ்ய நாசகம் நித்யம் ராத்ரௌ தத்யன்ன போஜனம் ||

நடுப்பகலில் உள்ள சூரியன், எரியும் சிதையிலிருந்து எழும் புகை, வயதான ஸ்த்ரீ, சேற்றிலிருந்து எடுக்கப்பட்ட நீர் ஆகிய அனைத்தும் ஆயுளைக் குறைப்பவையாகும். அத்துடன் இரவில் தயிர் சாதம் சாப்பிடுவதும் ஆயுளைக் குறைக்கும்.

**

தீபநிர்வாணகந்தம் ச சஹ்ருத்வாக்யமருந்ததீம் |

ந ஜிக்னந்தினி ந ச்ருண்வந்தி ந பச்யந்தி கதாயுஷ: ||

 அணைக்கப்பட்ட தீபத்திருந்து எழும் நாற்றம், நண்பனின் புத்திமதி, அருந்ததி நட்சத்திரம்  ஆகியவை முகரப்பட்டதில்லை, கேட்கப்பட்டதில்லை, பார்க்கப்பட்டதில்லை – குறைந்த ஆயுளை உடையவனால்!

**

வேதோக்த ஆசீர்வாதம் அனைவரையும் நல்ல முறையில் வாழ்த்துகிறது இப்படி:

சர்வே பவந்து சுகின: சர்வே சந்து நிராமயா: |

சர்வே பத்ராணி பச்யந்து மா கஸ்சித் துக்க பாக்பவேத் ||


அனைவரும் சந்தோஷத்துடன் இருக்கட்டும்.

அனைவரும் வியாதிகள் இல்லாமல் இருக்கட்டும்.

அனைவரும் தங்களைச் சுற்றி நல்லனவற்றையே பார்க்கட்டும்.

அனைவரும் ஒரு போதும் துக்கம் அடையாமல் இருக்கட்டும்.

வேத பிரார்த்தனையைச் செய்வோம்; அனைவரும் சுகமாக இருக்கட்டும்.

*

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல்

வேறொன்றறியேன் பராபரமே – தாயுமானவர்

tags -ஆயுள் 

***

INDEX 33 FOR LONDON SWAMINATHAN’S ENGLISH & TAMIL ARTICLES (Post No.8901)

PICTURES ARE FROM OLD SIVA PURANA BOOK

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8901

Date uploaded in London – – 7 NOVEMBER

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

HOW TO GET ACCESS FOR THESE POSTS?

JUST COPY THE TITLE YOU WANT TO READ AND PASTE IT IN GOOGLE SEARCH AND ADD “FROM tamilandvedas.com or swamiindology.blogspot.com”

IF YOU HAVE ANY PROBLEM, PLEASE CONTACT US. OUR E MAIL IS IN ALL THE 8800 PLUS POSTS.

மௌனம், மானம், கர்வம் பற்றிய  தமிழ், சம்ஸ்க்ருத பொன்மொழிகள்

செப்டம்பர் 2015 காலண்டர், 31-8-2015, KATTURAI 2110

இலங்கைச் சரித்திரம், 2108, 30/8/2015

பாரசீகக் கிளி செய்த தந்திரம், 2104, 28/8

கொம்பு முளைத்த மாணவன் வகுப்புக்குள்  வர முடியவில்லை , 2101; 27/8

கல்யாண ஊர்வலத்தில் மனம் மாறிய மாப்பிள்ளை , 2097; 25/8

செளராஷ்ட்ர சமூகம் பற்றி மேலும் ஒரு பழைய நூல் , 2093, 23/8

பிரிட்டிஷ் மஹா ராணிக்கு ஜே!  ஜால்ரா, சம்ச்சா மஹா ஜால்ரா , 2089,

புகழ் எனின் உயிரும் கொடுக்குவர், பழி எனின்

 உலகுடன்  பெறினும் கொள்ளலர் 2087,20/ 8

பழைய தமிழ் நாவல்கள் பற்றிய சில  விநோதச் செய்திகள் – 3; 2086. 20/8,

பொறுமை ; 3 குட்டிக்கதைகள் , 2085; 19/8

பழைய தமிழ் நாவல்கள் பற்றிய சில  விநோதச் செய்திகள் பகுதி-2; 19/8, கட்டுரை ; 2084

பழைய தமிழ் நாவல்கள் பற்றிய சில  விநோதச் செய்திகள் பகுதி-1, கட்டுரை 2083, 19/8

செளராஷ்டிர சமூகம் பற்றிய சுவையான விஷயங்கள் ; 2081; 18/8

மலைப் பாம்பாகப் பிறந்த கோவில் பூஜாரி ; 2080; 18/8

ஹிந்து யோகிகளின் அபூர்வ நினைவாற்றல் ; 2076; 16/8

நெப்போலியன் தந்திரம்- உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுவது எப்படி ; 2075; 16/8

பறையர் உற்பத்தி – 2074, 16/8

எகிப்திய, சுமேரிய கனவுகளும் இந்துமதக் கனவுகளும் – 2072; 15/8

தோல்வி=வெற்றி=ஆப்ரஹாம் லிங்கன், 14/8, கட்டுரை எண் 2070

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு , கட்டுரை 2069, 14/8

கல்விக்கழகு கசடற  மொழிதல் -2065; 12/8

இலக்கியத்தில் எண் ஐந்து, 2062; 11/8

ஒரு சுவையான கதை- இக்கரைக்கு அக்கரை பச்சை , 2059; 10/8

12 அத்தியாயங்களில் 2467 ஸ்லோகங்களில் மனு என்ன செப்பினார் – பகுதி 1; 2055; 9/8

12 அத்தியாயங்களில் 2467 ஸ்லோகங்களில் மனு என்ன செப்பினார் பகுதி-2, 2054, 9/8

ஏழைக்கேற்ற எள்ளுருண்டை, விரலுக்கேற்ற வீக்கம் ;2052; 8/8

இலண்டன், ஆக்ஸ்போர்ட் நகரங்களில் நவக்ரஹ சிலைகள்; 2050; 7/8

உண்மை, வாய்மை, மெய்மை (சத்யம் ) பற்றிய பொன்மொழிகள் , 2049; 7/8

வேத, உபநிஷத்துகளில் கனவுகள் – 2047; 6/8

யானையின் எடை என்ன அவுரங்கசீப்பை அசத்திய படகுக்காரன் , 2045; 5/8

விநோதக் கனவுகள்- கனவில் வந்த கதைகளும் கவிதைகளும்;2042; 4/8

எகிப்து சுமேரியாவில் திருஷ்டி பொம்மைகள்; கந்தசஷ்டி கவச வரிகள் ; 2040; 3/8

யாழ்ப்பாணம் வேலுப்பிள்ளை செய்த திருத் தில்லை நிரோட்டக யமக அந்தாதி, 2039; 3/8

ஆடுற மாட்டை ஆடிக்கறக்கனும் , பாடுற மாட்டை பாடிக்கறக்கனு ம் ;2038; 2/8

ஐன்ஸ்டீன் மூளை பற்றிய ரகசியங்கள் , கட்டுரை எண் 2033; ஆகஸ்ட் 1, 2015

xxx

AUGUST  2015 INDEX OF ENGLISH ARTICLES

September 2015 calendar, Post.2112,31 August 2015

Quotations from Swami Tejomayananda

S Nagarajan Articles, separately indexed, Post s2111,2106; 2102; 2099,

2095: 2091;2067; 2064; 2061; 2058; 2056; 2044; 2035;

Funny Ghost Stories from Indian Villagers,30/8: Post 2109

No pain, No gain! Wisdom from Indian Villagers, Post 2107; 29/8

Are You a Bggar. Beg only of God, Post 2105;28/8

The King and the Slave! Punctuality and Reliability, Post 2103;27/8

Story of a Persian Parrot! When your Ego dies, You are Free ,Post 2100;26/8

Islamic Militants Destroyed Indra Temple in Syria? Post 2098;25/8

Story of a Bridegroom who changed his mind suddenly!2096; 24/8

You become What You Think, 2094; Post 2094; 23/8

God and the Church Anecdotes, Post 2092; 22/8

Evolution: Monkey to Man! Some anecdotes about Ancestors, Post 2090, 21/8

Two stories : Differences between Donkeys work and Dogs work, 2088; 20\8;

Folk Tales: Haste makes Waste, Post 2085; 19/8

Cut a Diamond with a Diamond, Post 2082;18/8

Three Popular Anecdotes on Patience,Post 2079;17/8

Tamil-English Proverb Book-1;Post 2078;17/8

Vallabhacharya and Python, Post 2077;16/8

Origin of Pariahs (Tamil Book from British Library, Year 1894), Post 2074; 16/8

Leadership Qualities of Napoleon the Great, Post,2073: 15/8

Phenomenal Memory Power of Hindu Ascetics, Post 2071;14/8

True Story: Everything happens for good, Post 2068;13/8

God ever protects those who rely on Him, Post 2066;12/

Hindu Festivals in London, Post 2063; 11/8

Lucky Number 5’s Link to Literature, Post 2060; 10/8

A Story about Mountain of Worries,Post 2057;9/8

What can a Parrot Teach You? , Post 2053;8/8

Navagraha (Nine Heavenly Bodies) Statues in Oxford and London, Post 2051;7/8

What can a Sparrow Teach You? , Post 2048;6/8

What can a Crow Teach You?, Post 2046; 5/8

Weight of an Elephant: Boatman who outsmarted Aurangzeb, Post 2043; 4/8

Kamini and Kanchana: 3 Stories about Women and Gold, Post 2041;3/8

Magic in Hindu, Sumer and Egyptian Culture, Post 2036; 2/8

Hanging Justified, Post 2034; First August 2015

To be continued………………..

Tags —  August 2015 posts, London swaminathan, articles,

தேர்தலும், ஊழலும், அரசியல்வாதியும்!!! (Post No.8900)

COMPILED  BY KATTUKKUTY

Post No. 8900

Date uploaded in London – – 7 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தேர்தலும், ஊழலும், அரசியல்வாதியும்!!!

Compiled by Kattukutty

தேர்தல்

யாரோ வீடு கட்ட நாம் எடுத்து வைக்கும் செங்கல் !!!              ஆர்.பாலு ,புதுவை-3

XXX

அடுத்த சுரண்டலுக்கு விடப்படும் டெண்டர்!!!                          டி. தேசிகன்,திருச்சி-6

XXX

ஆளும் கட்சி மருமகளும்எதிர்கட்சி மாமியாரும் சேர்ந்து

ஜன நாயக கணவன் கழுத்தை நெரிப்பது!!!         புளியரை கணேசன்,சென்னை – 30

XXX

நரிகளுக்கு ஆடுகளே நாட்டாமை வழங்கும் நிகழ்ச்சி     

                                                                          செல்வ. தியாகராஜன்,  திருக்கடையூர்

XXX

அகவை அறுபதுக்கு மேலாகியும் மூளை வளர்ச்சியடையாத

புத்திரன் .                                                                          வி.ஆர்.சந்திரன், சென்னை – 23

XXX

அரசியல்வாதிகளுக்கு “சீசன் டிக்கட்”, பொது மக்களுக்கு

லாட்டரி டிக்கட் “!!!                                                               பி.எஸ் வசந்தா,சென்னை -4

XXX

ஒரு நாள் தவறுக்கு ஐந்து ஆண்டுகள் தண்டனை தரும்

நீதி மன்றம் !!!                                                                      ஆர்.திலகவதி,சென்னை – 38.

XXX

இந்திய வாக்காளர்கள் விடை தேடிக் கொண்டிருக்கும் புதிர்!!!

                                        எஸ். ரேணுகா தேவி, சென்னை -28

XXX

வோட்டுக்களை வாங்குவதற்கு நோட்டுக்களை நீட்டிஜனநாயகத்திற்கு வேட்டுக்களை வீசும் விசித்திர விழா !!!

                                                ஜெ. பாலா, இடைப்பாடி

XXX

குடிசைப் பகுதியில் கார் மட்டுமல்லகாசும் புரளும் திருநாள்!!!

                                         மணி வண்ணன், சென்னை-43

XXX

ஐந்து ஆண்டுகளுக்கு அப்பாவி(க்ளுக்கு நடத்தும்

காது “குத்தும்” திருவிழா!!!                      ரா. கோவிந்த ராஜு, கோனேரிராஜபுரம்

XXX

மக்களின் தலை எழுத்தை நிர்ணயிக்கும் பிரும்ம நேரம்!!!

                                            கேசாந்தி, சோழன் மாளிகை

XXXX

ஓட்டுப் போட்டவன் தார் ரோட்டில்ஓட்டால்ஜெயித்தவன்

கார் சீட்டில்!!!                              போந்தூர் வே.ல.ஏழுமலை, மேல் மருவத்தூர்

XXXX

ஆண்டுக்கு ஒரு முறை வருவது ஏப்ரல் தினம்

ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை வருவது ஏமாளிகள் தினம் !!!

                                               ஏ.உமா, சென்னை – 112

XXXX

இறந்தவர்கள் மீண்டும் உயிர் பெற்று எழும் தினம்!!!      சரவணன், புவனகிரி

பிராந்தி கடையில் காந்தி ரூபாய் நோட்டாகதேர்தல் தினத்தன்று

                                             அர்ஜுன் பாபு, சென்னை – 73

XXX

அரசியல்வாதி

மக்களுக்கு தெரிந்த கொள்ளைக்காரர்கள்!!!                       ம.சாந்தி, மீன் சுருட்டி

அன்று நாட்டிற்காக உழைத்தார்கள்இன்றுநோட்டுக்காக

உழைக்கிறார்கள்!!!                                                  விருதை ஜெயராஜ், விருது நகர்

XXX

தாத்தாவின் தேசமல்ல பாப்பா

தாதாவின் தேசமடி பாப்பா                                          ஜி.பழனி, ஊத்துக் கோட்டை

XXX

நாடு என்னும் நீரைசேறாக்கும் எருமை.                     இ.கரிகாலன்,சென்னை- 23

XXXXX

ஊழல்

ஊழல் என்பது, முகவரி தொலைத்தவர்களைக் கூட சரித்திர

நாயகர்களாக்கும் அட்சய பாத்திரம்!!!                                 இ.நாச்சி முத்து ஈரோடு-9

XXX

அரசியல்வாதியின் ஆனந்த பானமாய் மாறும் அறியா மக்களின்

வியர்வைத்துளிகள்                                   தஞ்சை கலைவாணர்தாசன், கோட்டையூர்

XXXX

தனக்குத்தானே கட்டிக கொள்ளும்சமாதி                              விமலா சுகுமார் திருச்சி.

XXX

உண்மை உழைப்புக்கு சமாதி எழுப்பத் துடி துடிக்கும் குட்டிச்

சாத்தான் !!!                                                                எல்.சண்முக சுந்தர், இராமநாதபுரம்-

XXXX1

ஐந்து வருட ஆட்சியில் முன்னேற்றம் காணும் ஒரே துறை!!!

                                                   எஸ்.சுகந்தி, சென்னை -33

XXX

அடுத்தவர் புரிவது !!!                                              ஆர்.ஸ்ரீனிவாசன், ஸ்ரீரங்கம்

image of Kattukuty

tags — ஊழல், அரசியல்வாதி, தேர்தல்

மலை அளவு பாவங்கள் போக வழி உண்டா? (Post No.8899)

WRITTEN BY S NAGARAJAN                                    

Post No. 8899

Date uploaded in London – – 7 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

மந்திர மலை போன்ற அளவு பாவங்கள் போக வழி உண்டா?

ச.நாகராஜன்

பூவுலகில் மனித ஜென்மம் எடுத்தவர்கள் அனைவரும் தெரிந்தோ தெரியாமலோ பாவத்தைச் செய்கின்றனர்.

சிலரோ தெரிந்தே பாவத்தின் உருவாய் அனைத்து பாவங்களையும் ஆரவாரத்துடன் செய்கின்றனர்.

இப்படி மந்திர மலை போன்ற அளவு பாவங்களைச் செய்து விட்டு வருந்துவோருக்கு அந்தப் பாவங்கள் போக வழி உண்டா?

உண்டு என்றால் என்ன வழி?

இப்படிப்பட்ட விஷயங்களைச் சரியான முறையில் ஆய்ந்து வழியைச் சொல்பவர்கள் இறைவனின் அருளுக்கு நேரடியாகப் பாத்திரமானவர்களாகவே தான் இருக்க வேண்டும்.

இந்த வகையில் முருகனின் அவதாரமான திருஞானசம்பந்தர் அன்னையிடம் ஞானப்பாலை உண்டவர்.

தோடுடைய செவியன் என்று தான் கண்ட காட்சியைக் கூறியவர்.

அவர் இரு பதிகங்களைப் பாவங்கள் போக்கும் வழியாகக் கூறி அருளுகிறார்.

இந்த இரு திருப்பதிகங்களும் மூன்றாம் திருமுறையில் அமைந்தவை.

ஒன்று பஞ்சாக்கரத் திருப்பதிகம்.

இன்னொன்று நமச்சிவாயத் திருப்பதிகம்.

பஞ்சாக்கரத் திருப்பதிகத்தில் அஞ்செழுத்து என்று மட்டும் சொல்லி இருப்பதால் இது பஞ்சாக்கரத் திருப்பதிகம் என்ற பெயரைப் பெற்றுள்ளது.

நாதன் நாமம் நமச்சிவாயவே என்று வெளிப்படையாக நமசிவாய நாமம் சொல்லப்பட்டிருப்பதால் இந்தப் பதிகத்தின் பெயர் நமச்சிவாயத் திருப்பதிகம் ஆயிற்று.

நமசிவாய நாமத்தை எப்படி ஓத வேண்டும்?

காதல் ஆகிக் கசிந்து கண்ணீ ர் மல்கி

ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது

வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது

நாதன் நாமம் நமச்சிவாயவே

என்று நமச்சிவாயப் பதிகத்தின் முதல் பாடல் அமைகிறது.

காதலாகி கசிந்து உள்ள ஈடுபாட்டுட்ன் கண்ணீர் மல்கி உருகிச் சொல்ல வேண்டும் நமசிவாய நாமத்தை.

அப்படிச் சொன்னால் வரும் பெரும் பேறுகள் ஏராளம்.

அவற்றில் ஒன்றை இந்தப் பதிகத்தின் ஆறாம் பாடல் அறிவிக்கிறது.

மந்தரம் அன பாவங்கள் மேவிய

பந்தனையவர் தாமும் பகர்வரேல்

சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால்

நந்தி நாமம் நமச்சிவாயவே

மந்திரமலை போன்ற அளவு பாவங்கள் செய்தவர்கள் என்றாலும் அவர்கள் நமச்சிவாய நாமத்தை உச்சரிப்பார்கள் என்றால் அவர்கள் பாவங்கள் அனைத்தும் போகும்; செல்வமும் பெருகும்.

மந்திர மலை என்பது பாற்கடல் கடைந்த மலை ஆகும்.

அது மட்டுமல்ல,

நரகம் ஏழ் புக நாடினர் ஆயினும்

உரைசெய் வாயினர் ஆயின் உருத்திரர்

விரவியே புகுவித்திடும் என்பரால்

வரதன் நாமம் நமச்சிவாயவே  (பாடல் எண் 7)

ஏழு நரகங்களும் புக வேண்டிய செயல்களைச் செய்தவர்கள் என்றாலும் கூட அவர்கள் ஒருமுறை திருவைந்தெழுத்தை ஓதுவார் ஆகில் அந்த நாமமானது அவர்களை உருத்திர கணத்தவருள் கலந்து புகச் செய்யும். கேட்டது அனைத்தையும் தருபவன் ஆதலால் அவன் வரம் அருளும் வரதன்.

பஞ்சாக்கரத் திருப்பதிகத்தில் முதல் பாடல் நமச்சிவாயத்தைக் கூறுவோரை மாய்க்க வரும் எமனும் அஞ்சுமாறு உதைத்த வல்லமை உடையவை அவனது நாமம் என்பதைத் தெளிவாக்குகிறது.

துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும்

நெஞ்சு அகம் நைந்து நினைமின் நாள்தொறும்

வஞ்சகம் அற்று அடி வாழ்த்த வந்த கூற்று

அஞ்ச உதைத்தன அஞ்சு எழுத்துமே (பஞ்சாக்கரத் திருப்பதிகம், பாடல் 1)

மார்க்கண்டேயனின் உயிரைப் பறிக்க வந்த காலனை காலால் உதைத்த பிரானின் திருநாமமான அஞ்சு எழுத்தும் அவனை அஞ்ச உதைத்தன!

கொல்ல நமன் தமர் கொண்டு போம் இடத்து

அல்லல் கெடுப்பன அஞ்சு எழுத்துமே (பஞ்சாக்கரத் திருப்பதிகம், பாடல் 4)

நல்லான் என்பது சிவபெருமானுக்கு ஒரு பெயர் ஆகும்.

கொல்வாரேனும் குணம் பல நன்மைகள்

இல்லாரேனும் இயம்புவர் ஆயிடின்

எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பதால்

நல்லார் நாமம் நமச்சிவாயவே (நமச்சிவாயத் திருப்பதிகம் பாடல் 5)

கொல்வார்கள் என்றாலும், குணமே இல்லாதவர்கள் என்றாலும் நமச்சிவாய எனச் சொன்னால் அவர் தம் தீங்கு நீங்கப் பெறும் என்பது இந்தப் பாடலால் உறுதியாகிறது.

இரு பதிகங்களிலும் மொத்தம் 22 பாடல்கள் உள்ளன.

இவற்றைக் கற்றுத் தேர்பவர் – அஞ்செழுத்து உற்றன வல்லவர் – உம்பர் ஆவரே!

வானவர் ஆகும் ரகசியத்தை உரைக்கும் பதிகங்கள் இவை.

உய்வதற்கு எளிய வழியைச் சுட்டிக் காட்டும் பதிகங்கள் இவை.

மந்திர மலை போன்ற பாவங்கள் செய்திருந்தாலும் அவற்றைப் பொடிப் பொடியாக்கும் வல்லமை படைத்த பதிகங்கள் இவை.

ஆகவே ஓதுவோம் நாளும் நமச்சிவாய நாமம்!

தென்னாடுடைய சிவனே போற்றி!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!

tags –பாவங்கள் போக வழி

***

PROJECT MADURAI- YESTERDAY 5-11-2020 IN LONDON (Post 8898)

DR  K KALYANASUNDARAM

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8898

Date uploaded in London – –6 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Gnanamayam’s second Tamil broadcast ‘THAMIL MUZAKKAM’ went on air yesterday 5th November 2020. Dr K Kalyanasundaram of Lausanne, Switzerland gave an excellent talk on Project Madurai. It is a project launched in 1990s and now has over 800 Tamil books with 1800 files, available through internet.

The success of the broadcast  surprised Gnamayam team with 700 hits within a few hours.

Dr Kalyanasundaram is a scientist and lectures on his subject Chemistry. But his passion for Tamil led him to deeply involve in creating Tamil font for internet and archiving and digitizing  old Tamil Literature. It all started with volunteers under his leadership and grown into a big banyan tree.

We know that millions of rupees are poured into universities to create such websites; but the volunteers under Kalyansundaram have done a marvellous job even before the universities. And he explained their future projects– to give all the books via mobile and e books. The wonder of wonder is everything is free. Any one can get access to all that is in Tamil literature from Sangam age to Bharati and beyond.

Gnamayam has requested him to give further talks about his training offered to Tamil schools in Switzerland and his work in the field of science.

Before his interview-cum talk Mr Balasubrahmanyan recited the prayer. Bharati’s song Vaazka Thamil Mozi was played (Music set by Mrs Harini Raghu of London and rendered  with musical instruments by Needamangalam Mrs Jayashri Umasankar and troupe)

Thiruppugaz was rendered by Mrs Jayanthy Sundar and her disciples Mrs Srividhya Sriram, her daughter Sneha of Langley and Keerthana Ramalingam of Shencottai in Tamil Nadu. Mr Sathyarthi Chandrasekaran also recited a Thiruppugaz song.

After the talk Mrs Daya Narayanan of London recited Alvar Pasurams in her melodious voice. Mrs Sarasvathy Chandrasekaran of Guildford sang her favourite Bharati song.

Little girl Rithika Premumar and a famous devotional singer Kovai Suresh Guruji had sent their video recordings for broadcasting.

Co Producer Mrs Vaishnavi Anand presented the programmes along with producer London Swaminathan . Co producer Sri Kalyanasundara Sivacharyar and Studio Engineer Harrow Sridhar coordinated the programmes well beforehand.

See you all on Monday at 1 pm London Time and 6-30 pm Indian Time at facebook.com/gnanamayam.

If you want to join our broadcasting team or present any programme please contact us. We will send you the zoom link. But you can watch live programme by visiting facebook.com/gnanamayam.

TAGS – DR KALYANASUNDARAM, PROJECT MADURAI, THAMIL MUZAKKAM

–subham–

TAMIL WORDS IN ENGLISH – PART 19 (Post No.8897)

TAMIL WORDS IN ENGLISH – PART 19 (Post No.8897)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8897

Date uploaded in London – –6 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தமிழில் ஆயிரம் ஆங்கிலச் சொற்கள் – Part 19

Words beginning with – M continued………………………..

M.61.MADAME, MAID – MAATHAA/MOTHER, MAATHU IN TAMILமாது,

M.62. MOUSE – MUUSHIKA IN SKT; MUUNJURU IN TAMIL; MUUKKU IS NOSE IN TAMIL. மூஷிக, மூஞ்சுறு , மூக்கு நீண்ட பிராணி ; மூக்கு= மவுஸ்/ஆங்கிலம்

STRANGE COINCIDENCE IS THERE IS ONE MUUSHIKA DYNASTY IN KERALA AND   ANOTHER DYNASTY WITH MUSHIKA IN EGYPT.

M.63. MONK – MUNI IN ANCIENT TAM. AND SKT; IN FRENCH IT MOINE; IN SPANISH IT IS MONYE; MONCH AND MONACO IN OTHER LANGUAGES முனி, முனிவர்,

M.64.MONARCH – MANNAR IN TAM மன்னர் 

M.65.MOUSTACH – MEESAI IN TAM;  மீசை

M.66.MOON- MONTH, MENSES ALL ARE COGNATE WORDS TO TAMIL MAATHAM; SKT MAASA (SEE MONTH AND MENSES, MENSTRUATION) மூ ன் – மந்த் — மாத – மாச ஸ =த

M.67. MIND – MANAS IN SKT; MANATHU IN TAM. , மனது, மனஸ்

MIND AND MOON ARE ALSO LINKED;

CHANDRAMAA MANASO JAATHAH- SAYS RIG VEDA.; IT MEANS MOON IS BORN FROM MIND OF GOD.

சந்திர மா மனசோ ஜாதஹ – ரிக் வேதம்/புருஷ சூக்தம்

கடவுளின் மனத்திலிருந்து உதித்தது சந்திரன்; கண்களிலிருந்து உதித்தது சூரியன்

MIND GOES BERSERK ON FULL MOON DAYS AND NEW MOON DAYS. VEDIC SCHOOLS ARE CLOSED ON THESE DAYS

M.68.MARK- MARU IN TAMIL MOLE மரு

M.69. MANY – POLY- PALA ;M=P பாலி/GREEK = பல ; MANI/ENGLISH =PAALI

M.70. M/AKE- AAKKU IN TAMIL MEANS CREATE, COOK, AAKU= BECOME ஆக்கு,

M.71. MAIDEN- SEE MAID, MADAME மாது

M.72. MESSIAH – MAHAASAYA; LAHIRI MAHASAYA WAS A FAMOUS YOGI. MAHARSI- GREAT SEER, மஹாசய , மகரிஷி

JESUS WAS CALLED A MESSIAH IN GREEK

M.72..METHUSALAH – HEBREW BIBLE SAYS HE LIVED 946 YEARS- MUTHU IN TAMIL IS OLD AGE, MUTHIYAVAR- OLD MAN முது- மைந்தன் , முதியவன்,

M73.MURDER – MRTYU IN SKT; MARANAN, MARI IN TAM. மரணம்/ம்ருத்யூ / மறித்தான்

M75.MUSIC – ISAI IN TAMIL YASAS IN SKT இசை=யசஸ் =மியூசிக்= மன்னன் அல்லது இறைவன் புகழ் பாடுதல்

ALWAYS USED TO SING THE GLORY OF GOD OR GOLDLY KING

M.76.MARIAM – MARI- KADAL; MARI= VAARI/SEA, RAIN- ALREADY EXPLAINED மரியம் = கடல்  வாரி- வாரிதி,

M.77.MOW- MEY மேய்

M.78. M.NEMONICS- NINAVU/MEMORY நினைவுக்குறிப்பு

M.79.MOUND, MONUMENT – MAN MEDU/SAND HILL மண் மேடு , மண் திட்டு

M.80.MITE- MIITHI/BALANCE மிச்சம், மீதி

M.81.MIMI/ CRY- ACTING AS ‘UUMAI’ ஊமை,

M.82. MEEK – MAKKU/ TIMID/ NOT RESPONDING PROPERLY மக்கு,

M.83. MUCK- SEE ABOVE (dirt, rubbish, waste) மக்கு, மக்கிய, மக்கிப் போன

M.84. MORROW- MARU NAAL/ NEXT DAY மறுநாள்

M.85. MORON – MURADAN; MUUTA, MADAIYAN; MUTA IS SKT முரடன், மூடன் , மடையன்

M.86. MUCUS- MUUKKU/NOSE LIQUID மூக்கு சளி /கோழை

M.87. MARKET- MALIKAI KATAI- GROCERY SHOP மளிகை/கடை

M.88. MALICE – MAASU/SPOT, MAL/BLACK, MALA- DIRTY, MALIVU- CHEAP மலிவு, மாசு, மருவு,

M.89. MALE – MALLAN/FIGHTER; STRONG MAN மல்லன், மள்ளன் , பலவான் ; ப=ம

M.90. MENSA – MESAI IN TAMIL, BUT A LATIN WORD; MEJ IN HINDI

மேஜை, ,

M.91.MORVEN/SCOTTISH, MARISSA/HEBREW- SUMMIT; IN SKT-MERU, IN TAMIL – MEDU/HIGH யூத , கிறிஸ்தவ மத பெண்கள் பெயர்

M.92. MITIGATE- MITHAM AAKKU/SOFTEN,SUBDUE மிதமாக்கு

M.93. MASS- NA/MAS/ISLAM; MASS/CHRISTIAN; NAMAS KAAR/HINDU WORSHIP

IN THE SAME WAY OM/HINDU, AMEN/CHRISTIAN; AAM AND OOM IN TAMIL=YES; மாஸ் / நமாஸ் / நமஸ்கார்

ஓம்/ ஆம், ஆமென்

M.93. MEGHARA/MARKET – AGARAM IN TAMIL மளிகை/கடை அகரம்;

M.94.MANNA- FOOD FROM HEAVEN IN BIBLE; IT IS ANNA/FOOD IN SKT

ALSO USED IN TAMIL மன்னா /பைபிள் = அன்னம், சோறு

M.95. MENORA/HEBREW- ARK OF HE LAW; MANU SMRTI IN SKT. மனோரா=மனு விதி

M.96.MERDE/FRENCH- FAECES/ PII IN TAMIL; A/MEDHYA IN SKT

ALSO COGNATE TO MEETHI/ LEFTOVER IN TAMIL அமேத்யம்= மலம் ; உடலில் மிச்சம், மீதி

M.97. MANDOLIN- MANDAI YAAZ; BIG LYRE மண்டை யாழ் ,

M.98. MUSCLE/ MUSCULAR- MALLAN/FIGHTER; STRONG MAN மல்லன்

M.99. MAX MULLER- MAHA MULA, THIRU MULA; BORN ON MULA STAR DAY

மாமூலன் =மஹா மூலன், திரு மூலன் ; மூல நட்சத்திரத்தில் பிறந்த

M.100.MARROW/BROWN- MARA VARNA- TREE COLOUR

M=B OR P மர நிறம் ; ப=ப ; நிறம்= ரங்/க

M.101.MAD – MATHA/DOGMATIC; ADAMANT

M.102.MAIM- MUTAM/DISABLED மதம், உன்மத்த ப=ம; பித்தம்=மத்தம் ; பித்தம்= பைத்தியம்  முடம்

M.103.MAGHRIB/ARABIC- MERKU/WEST மேற்கு

M.104. MIRAGE – MRGA THRSHNA IN SKT. மிருக த்ருஷ்ண ; இதில் மிருக = மான் ஆகியது ; மிருக ஸீர்ஷ நட்சத்திரம் = மான்தலை

HALF TAMIL- MRGA BECOMES MAA/N IN TAMIL. மற் றொரு பெயர்= கானல் நீர்

tags- tamil words -19,

TO BE CONTINUED……………………………………

பெண் – பல கோணங்களில்! – 1 (Post.8896)

COMPILED  BY KATTUKKUTY

Post No. 8896

Date uploaded in London – – 6 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

                                        Compiled by Kattukutty

பழி யார் மீது???

தங்க நகை இல்லாமல்

தங்கைக்கு

திருமணம் என்றேன்

தங்கை

மறுத்து விட்டாள்

xxxxx

வரதட்சிணை இல்லாமல்

எனக்கு

திருமணம் என்றேன்

என் தாய்

மறுத்து விட்டாள்

xxxx

பெண் குழந்தை

ஒன்று போதும் என்றேன்

என் மனைவி

மறுத்து விட்டாள்

xxxx

பெண்ணுக்கு பெண்ணே

எதிரி என்றால்

பழி எங்கள் மீதா ??? – இ. ராமசாமி , கோட்டக்கரை

xxxx

வர தட்சிணை

மனைவியாகும் போது

கொடுத்தவள்,

மாமியாராகும்போது

வாங்கினாள் – முல்லைப்பூ அ.முருகையன் பாப்பா நாடு

xxxxx

அம்மாவின் துணையோடு

வரதட்சிணை வில்லெடுத்து

ஆசை அம்பெறிந்தான்

அந்த வேட்டைக்காரன்

அங்கம் நிறைய

தங்க நகைகளோடு

வலையில் விழுந்தது

ஒரு பெண் மான்!!! – கருணாகர பல்லவன்

xxxx

ஜாதி

விவாகத்திற்கு

கேட்பது

விபசாரியிடம்

கேளாதது – மா.சுப்பிரமணியன், சென்னை-84

கருவிலும்

கல்லறையிலும்

இல்லாத

வார்த்தை – க.சுவிதா, சென்னை- 4

xxxxxx

பெண்நடிகையாக

அன்று கதையை

வைத்து சினிமா

இன்று சதையை

வைத்து சினிமா – உத்திராட்ச மணி, தாயார் தோப்பு

பெண்களும்

சேர்ந்து நடித்தனர்

ஆனால்

பார்ப்தென்னவோ

ஆண்கள் மட்டுமே – முகவை முத்துசாமி ,தொண்டி

உடையைக் குறைத்து

சுவருக்கு உடை

கொடுத்தாள்

போஸ்டராக – சி.என்.கணேசன் பெத்தூர்

இவள் உண்டானாலும்

தப்பு

குண்டானாலும்

தப்பு – வி.சி.கிருஷ்ண ரத்னம் காட்டாங்குளத்தூர்

xxxxxx

பெண்விதவையாக

இளம் விதவை

பூச்சூடினாள்

பொம்மைக்கு – எல்.ரவி, செ. புதூர்

விதவைக்கு

வேலை கிடைத்தது

மல்லிகைப் பூ தோட்டத்தில்

மலர் பறிக்க – தீன தயாளன், ஓடைப்பட்டி

மலையாய் குவிந்த

எந்தக் கலர் சேலையும்

பிடிக்கவில்லை

குங்குமம் போன பிறகு -ஆங்கரை பைரவி,இலால் குடி

முகர்ந்தவனுக்கு

மூச்சுப் போனதால்

முல்லைப் பூவுக்கு

முக்காடு – ஐ.ஜெய் கணேஷ் நாகர் கோவில் – 2

வண்ண ரோஜாக்களுக்கு

நடுவில் வெள்ளை ரோஜா

கலர்சாயம் பூச

யாருமில்லையோ??? – சி.முட்லூர் செல்வ குமார் சென்னை-15

விதி

கொடுத்த

விவாக ரத்து – காரை தமிழ் செல்வன்

அடப்பாவிகளா

கைம்பெண்ணை

வெள்ளாடை கட்டச்

சொல்கிறீர்கள்

மல்லிகையும்

முல்லையும்

வெள்ளைதானே

அதை சூடிக்கச்

சொல்லாததேன்??? – குடந்தை கி.மனோகரன்

பூவைக்குள்

பூகம்பம்

பூ வைக்க

தடை

விதவை – செருவை.வே.சேகர்,ஓசூர்

வாழ்க்கைப் பாதையில்

விபத்துக்குள்ளான

உணர்ச்சியுள்ள ஊர்தி – கே. ராஜா, பாவக்கல்

சமுதாய மாலையில்

உதிர்ந்து

சடங்குச் சாக்டையில்

மிதக்கின்ற

பூக்கள் – விடியல் விரும்பி, சென்றாம் பாளையம்

பூக்களை

இழந்த

செடிகள் – மு.முத்துக்கிருஷ்ணன், கொங்கணாபுரம்

இனி கடல்

தேவையில்லை

உப்பு தயாரிக்க

எங்கள் கண்ணீரே

போதும் – பி. கவிச்செழியன், திருவையாறு 23

xxxxxxxxx

பெண்விலை மாதாக

வாழ்வதற்காக

வாழ்க்கையை

இழந்தவர்கள்- சுமன் லடசுமணன்,சாயல்குடி

xxxx

காசு வாங்கினால்

விலை மாது

காசு கொடுத்தால்

கல்யாணப் பெண் – நீரோடை சந்தானம், தூத்துக்குடி

xxxx

வாழ்க்கையில்

தடம் புரண்ட

சரக்கு ரயில் – பி.என். ஜெய்சங்கர், திருவாரூர்

xxxx

தோகை விரிக்கக்

கூட

தொகையை

எதிர்பார்க்கும்

விசித்திர மயில் – தமிழவன், பாகலூர்

xxxx

தெருவோரம்

நிற்கும்

தபால் பெட்டி – ஆர்.சி.சந்திர மணி ஊத்துக்குளி ராயப்பட்டி

xxxx

வாழ்க்கைப் புயலில்

சிக்கி

தரை தட்டிய

கப்பல். – பி.என் .ஜெய்சங்கர்,திருவாரூர்

tags–
பெண், விதவை,
  பல கோணங்களில்           

                                     ****