
WRITTEN BY KATTUKKUTY
Post No. 9014
Date uploaded in London – – 9 DECEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
TALK BY KATTUKUTY SRINIVASAN IN FACEBOOK.COM/GNANAMAYAM ON 7-12-2020.
VOICE RECORDING IS AVAILABLE AT GNANAMAYAM AND YOUTUBE.COM/GNANAMAYAM
செவ்வாய் MARS/ ANGARAKA தோஷம்
ஒரு ஜாதகத்தில், 1,2,4,7,8,12 இடங்களில் செவ்வாய் இருந்தால்
அது செவ்வாய் தோஷ ஜாதகமாகும். இதை “பாவம்” என்றும்கணக்கிடுவார்கள்.
பாவம் என்றால் ஏதோ கொலைக் குற்றம் செய்த மாதிரி என்று நடுங்க வேண்டாம்.
பாவம், தோஷம் என்றால்
“TEMPERAMENT” என்று அர்த்தம் . ஒருவருக்கொருவர் விட்டுக்
கொடுக்கும் மனப்பான்மை இருக்கிறதா…….ஒருவர் எகிறினால்,
மற்றொருவர் adjust செய்து போவாரா, என்று பார்ப்பதே பாவசாமியம்
பார்ப்பது என்று பெயர். இதில் ராகு, கேது அவர்களும் சேர்வார்கள்!!
பாவ சாம்யம் பார்க்காமல் திருமணம் நடந்தால், விவாக ரத்து, மனைவியோ,
புருஷனோ ஒருவரை ஒருவர் பிரிதல், அல்லது வீட்டை விட்டு ஓடிப்போதல்,
அல்லது மரணம் வரை சம்பவிக்கும்.
எப்படி இருந்தால் செவ்வாய் MARS தோஷம் இல்லை???
ஒருவரின் ஜாதகத்தில், மேஷம்,கடகம், விருச்சிகம்,மகரம் ராசிகளில்
செவ்வாய் இருந்து அந்த இடம் 8 வது, 12 வது இடமாக இருந்தாலும்
தோஷம் இல்லை.
ஒருவருடைய ஜாதகத்தில் சிம்மம், கும்பத்தில்,செவ்வாய் இருந்தால்
தோஷம் இல்லை.
செவ்வாய் குருவோடு சேர்ந்து எந்தக் கட்டத்திலிருந்தாலும் தோஷமில்லை.
செவ்வாய் சனி, ராகு, கேது உடன் சேர்ந்திருந்தால், தோஷமில்லை.
ஜாதகத்தில், 7- ம் இடம் கடகமாகவோ, மகரமாகவோ இருந்து
அதில் செவ்வாய் இருந்தால் தோஷம் கிடையாது.
செவ்வாய் சுக்கிரனுடன் சேர்ந்து சிம்மம் , கும்ப ராசியில் இருந்தாலும் தோஷமில்லை.
ஆண்கள் இரண்டாம் திருமணத்திற்கும், விதவையின் மறுமணத்திற்கும் செவ்வாய்
தோஷம் பார்க்கத்தேவையில்லை.
MARS விஞ்ஞான விவரங்கள்
சூரியனுக்கும் செவ்வாய்க்கும்
இடையில்உள்ள தூரம். 14, கோடியே, 60 லட்சம் மைல்கள்
சூரியனைச்சுற்றி வர 687.9 நாட்கள்
பூமிக்கும் செவ்வாய்க்கும் இடையில் உள்ள தூரம். 5கோடியே,46 லட்சம் மைல்கள்
செவ்வாய் தன்னைத்தானே சுற்றி வரும் நேரம். 24 மணி,37 நிமிடம்,27 நொடிகள்

செவ்வாய் பற்றிய மற்ற விவரங்கள்
மனைவிகள் – மாலினி, சுசீலினி
மகன் – மிருத்யு
ஜாதி – க்ஷத்திரியன்
லிங்கம் – புருஷன்
காரகம் – சகோதர காரகன்
நிறம் – செம்மை கலந்த வெண்மை
குணம் – தாமசம்
உத்யோகம் – சேனாதிபதி
அதி தேவதை – பூமி
ப்ரயதி தேவதை – ஷேத்ர பாலகன்
திசை – தெற்கு
பூதம் – தீ
வித்தை – மந்திரம்
உடல் பகுதி – மஜ்ஜை, ரத்தம்
அவஸ்தை – கௌமாரர்
வாஹனம் – அன்னம்
இஷ்ட காலம். – பகல்
சுவை – கைப்பு
சுபாவம் – குரூரம்
தான்யம் – துவரை
சமித்து – கருங்காலி
புஷ்பம் – செண்பகம், சிவப்பு அரளி
ரத்தினம் – பவழம்
உலோகம் – செம்பு
வஸ்திரம் – சிவப்பு ஆடை
ஆசனம் – முக்கோணம்
இயற்கை – பாபி
ஸ்வரம் – ப
பறவை – சேவல், கழுகு
மிருகம் – பெண் பாம்பு
சொந்த வீடு – மேஷம், விருச்சிகம்
உச்சம் – மகரம்
நீசம் – கடகம்
பார்வை – 4 , 7 , 8
நண்பரகள் – சந்திரன், சூரியன், குரு
சமம் – சுக்கிரன், சனி
விரோதி – புதன்

பரிகாரம் செய்ய சிறந்த இடம் மயிலாடுதுறை அருகில் உள்ள
ஸ்தலங்கள். வைத்தீஸ்வரன் கோவில்( அங்காரகனின் வியாதி
தீர்ந்த இடம்,) சித்தாமிர்த தீர்த்தத்தில் உப்பு, மிளகு , போட்டு வெல்லம் கரைக்க வேண்டும்.
நவக்கிகங்களும் வரிசையாக நிற்கும் இடம் இது.
”தையல் நாயகியைத் தொழுவார் தொங்க தொங்க தாலியணிவார்” (செவ்வாய்தோஷம் நீங்கி)!
பழனி மலை முருகன்.
சென்னை அருகில் பூந்த மல்லியில் உள்ள வைத்தீஸ்வரன் கோவில்,
நவதிருப்பதியான திருக்கோளூர்,
நவகைலாசமான கோடக நல்லூர்,
வட பழனி முருகன்.
இடம், வீடு தேவைக்கு சிறுவா புரி முருகன்
செவ்வாய் தோறும் முருகனுக்கு சிவப்பு மாலை அணிவித்தல், துவரை
தானம் செய்தல்.
செவ்வாய் என்றாலே அலறி புடைத்துக்கொண்டு ஓடும் தமிழ்நாட்டு
மக்களுக்கு நேர் எதிரிடை வட நாட்டு மக்கள் !!!
செவ்வாயை “மங்கள் வார்”எனப்பெயரிட்டு, அன்று கடை திறப்பதும், திருமணம் செய்வதும்
முக்கிய காரியங்கள் செய்வதுமாக மிக மிக சிறப்பாக கொண்டாடுகிறார்கள்!!!
வீரத்திருமகன், பூமி காரகன், தாலி பாக்கியம் தரும் மங்கள காரகனை
வணங்கி வாழ்வில் வளம் பெறுவோமாகுக!!!!
அன்பர் அனைவருக்கும் ஓர் வேண்டுகோள்- செவ்வாய்கிரகத்தையும்,
செவ்வாய் தோஷத்தையும், தோஷ நிவர்த்தியும் பற்றி நன்றாக தெரிந்து கொள்ள
தயவு செய்து tamilandvedas ஐ கண்டிப்பாக பார்த்து நண்பர்களிடமும் பகிரவும்.
நன்றி, வணக்கம்.
xxx
tags- அங்காரகன் , Part 2 ,

