ஒரு அறிஞரை இழந்தோம்! (Post No.9052-a)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 9052-a

Date uploaded in London – – 19 DECEMBER 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஒரு அறிஞரை இழந்தோம்!

ச.நாகராஜன்

www.tamilandvedas.com தளத்து நேயர்களுக்கு மிகவும் நன்கு அறிமுகமானவர் திரு ஆர்.நஞ்சப்பா அவர்கள்.

அவர் 14-12-2020 அன்று பங்களூரில் காலமானார் என்ற செய்தியை அவரது புதல்வர் திரு கணபதி தெரிவித்த போது மிகவும் துயரம் அடைந்தோம். நம்ப முடியாத செய்தி தாங்கொணா துக்கத்தைத் தந்தது.

ஏனெனில் சென்ற வாரம் கூட அவரது விமரிசனப் பதிவு வந்திருந்தது. ஆகவே தான் இந்த செய்தியை எளிதில் ஜீரணிக்க முடியவில்லை.

சிறந்த அறிஞர். பொருளாதார வல்லுநர். அனைத்து நல்ல புத்தகங்களையும் ஆழப் படித்தவர். அதை அழகுற முக்கியமான விளக்கங்களுடன் கட்டுரைகளாகத் தரும் பாங்குடைய எழுத்தாளர். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் விற்பன்னர்.

இந்திய கலாசாரத்தில் ஊறித் திளைத்தவர். அதை வளர்க்கும் பணியில் ஈடுபட்டவர்.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் – அவர் பெருமைகளை!

அவரைப் பற்றிக் கேட்ட போது எளிமையுடன் ஒரு வங்கியில் பணி புரிந்தவர் என்று போடுங்கள் என்று பதில் எழுதினார்.

அரசு வங்கி ஒன்றின் தலைமைப் பொறுப்பில் இருந்த சிறந்த நிர்வாகி இப்படி எழுதியதிலிருந்தே அவரது எளிமையும் நமக்குத் தெரிய வந்தது.

ஹிந்தி திரைப்படப் பாடல்களை, 1950க்கு முன்பிலிருந்தே வந்தவனவற்றிலிருந்து சிறந்தவற்றை எடுத்து, அதன் ராகம், இயற்றியவர், பாடியவர், பாடலின் சிறப்பு, அது தொடர்பான சுவையான செய்திகளை வாரந்தோறும் அவர்

www.tamilandvedas.com இல் தந்த பாங்கு பிரமிக்க வைத்தது.

பொருளாதார நூல்களை அக்கு வேறு ஆணி வேறாக அலசி எது எதைப் படிக்க வேண்டும் என்று அவர் கோடி காட்டினார்.

அரவிந்தர் உள்ளிட்ட பெரியோரின் அறவுரைகளைச் சுருக்கமாக வரைந்தார்.

நல்ல கட்டுரைகள் வெளியாகும் போதெல்லாம் அதற்கு உரிய அற்புதமான விமரிசனங்களைக் கீழே தர அவர் தவறியதே இல்லை.

எனது கட்டுரைகளுக்கு அவர் எழுதும் விமரிசனங்கள், எனது கட்டுரையை விட அழகுற அமைந்திருந்ததோடு அதிகப் படியான சிறந்த கருத்துக்களையும் தந்தன.

கட்டுரைகளை அவர் அனுப்பிய வேகம் யாராலும் நம்ப முடியாது. இதைப் பற்றி நான் வியந்த போது, “உங்களை என் கட்டுரைகளால் பம்பார்ட் செய்கிறேன்” என்றார். அற்புதமான ஒரு எழுத்து ஆற்றல்!

நேரில் பார்க்கவில்லை; போட்டோ கூட கிடையாது. ஆனால் எழுத்தில் ஏற்பட்ட நட்பு இப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இப்போது தான் உணர்கிறோம்.

அன்னாரது குடும்பத்தாரால் இந்த இழப்பை எளிதில் தாங்க முடியாது.

அவர்களுக்கு சர்வ பலத்தையும் தர ஆண்டவனைப் பிரார்த்திக்கிறோம்.

அன்னாரது ஆன்மா சாந்தி அடைய தமிழ் அண்ட் வேதாஸ். காம் அன்பர்கள் அனைவரும் பிரார்த்திக்கிறோம்.

tags – ஆர். நஞ்சப்பா

***

நாமும் நறுமணப் பொருட்களும் (Post No.9051)

WRITTEN  BY KATTUKKUTY

Post No. 9051

Date uploaded in London – – 19 DECEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நாமும் நறுமணப் பொருட்களும்

Kattukutty

வெளிநாட்டினர்  இந்தியாவிற்கு வழிகண்டு பிடிக்க

வேண்டும் என்று வெறி கொண்டலைய வைத்தது நம் நாட்டிலுள்ள

வாசனைப் பொருள்களும் உணவுப் பொருள்களுமே!!!

நாம் இந்தப் பொருள்களை வாசனைப் பொருள்களாக மட்டுமின்றி

உணவிற்காகவும், மருந்து பொருள்களாகவும் பன்நெடுங்காலமாக

உபயோகப் படுத்திக்கொண்டு வருகிறோம்.அவை என்னென்ன என்று பார்ப்போமா????

தெய்வீகச் செடியாகவும் நெஞ்சில் கபம் அகற்றியாகவும் உள்ள முக்கியமான ஒரு பொருள் “துளசி”. உடலில் வியர்வையை உண்டாக்கும் மிக முக்கியமான பொருளாக விளங்குகிறது இது!!!

நம் உடலுக்கு பசியைத்தூண்டி நம்மை உண்ணவைக்கும் உணவுப்

பொருள்கள் :-

இஞ்சி, சோம்பு, இலவங்கப்பட்டை, கறி வேப்பிலை, ஓமம், பெருஞ்சீரகம், சீரகம், குங்குமப்பூ, அன்னாசிப்பூ, முள்ளங்கி, கிராம்பு.

நிரம்பப்பேர் அவதிப்படுவது வயிற்றிலுள்ள வாயுத் தொந்தரவினால்

தான்……இதோ இதை போக்கும் நறுமணப்பொருள்கள் :-

இஞ்சி, மஞ்சள், வெள்ளைப் பூண்டு, மிளகு, ஏலக்காய், மிளகு, புதினா,

கொத்தமல்லி, வெந்தயம், இலவங்கப்பட்டை, கருவப்பட்டை, கிராம்பு

சீரகம், பெருஞ்சீரகம்

நாம் சாப்பிடும் சாப்பாட்டை நம் உடலுக்குள் உரமாக்கும் சில

பொருள்களாவன :-

புளி, மிளகாய், வெந்தயம், கறிவேப்பிலை, வசம்பு, அதிமதுரம்,

வெள்ளைப் பூண்டு, ஜாதிக்காய், ஓமம், தாளிச பத்திரி.

நம் உடலுக்குத் தேவை வெப்பம். நம் நாடி நடையை வேகப்படுத்தி வெப்பத்தை கொடுக்கும் சில நறுமணப் பொருள்கள் :-

வெள்ளைப் பூண்டு,  பெருங்காயம், புளி, முள்ளங்கி, ஏலக்காய், மிளகு,

மிளகாய், இஞ்சி, மஞ்சள், கொத்தமல்லி, இலவங்கப்பட்டை, கடுகு,

திப்பிலி ஜாதிக்காய் முதலியன….

நம் நெஞ்சில் உள்ள இருமலைப் போக்கி கோழையை அகற்றும்

சில பொருள்கள் :-

துளசி , பெருங்காயம்,வெள்ளைப் பூண்டு, அதிமதுரம்

நம் உடலில் உள்ள அயர்வினையும் களைப்பினையும் போக்கும் சில

பொருள்களாவன :-

ஓமம் , குங்குமப்பூ, புதினா, பெருங்காயம், மிளகாய்

உடலுக்கு உரம் தரும் வலுவைத்தரும் வாசனைப் பொருள்கள் :-

கிராம்பு, கச கசா

மேற்கண்ட பொருள்கனைத்தையும் தெரிந்தோ , தெரியாமலோ நாம்

நமது சமையலில் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

இனி மேல் தெரிந்தே செய்வோமாக!!!!

tags- நறுமண,  வாசனை,  பொருள்கள்

***

INDEX 40 FOR LONDON SWAMINATHAN’S ENGLISH & TAMIL ARTICLES (9050)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9050

Date uploaded in London – –18 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

HOW TO GET ACCESS FOR THESE POSTS?

JUST COPY THE TITLE YOU WANT TO READ AND PASTE IT IN GOOGLE SEARCH AND ADD “FROM tamilandvedas.com or swamiindology.blogspot.com”

IF YOU HAVE ANY PROBLEM, PLEASE CONTACT US. OUR E MAIL IS IN ALL THE 9000 PLUS POSTS.

INDEX 40 MARCH 2016

மகனைத் தியாகம் செய்து இளவரசனைக்

காப்பாற்றிய வீரத்தாய்! (Post No 2680);31/3/2016

ஏப்ரல் 2016 காலண்டர் (மன்மத/துர்முகி ஆண்டு

பங்குனி/சித்திரை) Post No.2674; 29-03

பெண்களை எங்கே, எங்கே பார்த்தால் குற்றமாகாது? (Post No 2671);28/3

புளியமரத்தில் பேய்கள் வசிப்பது ஏன்? ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை (Post No.2667);27/3

பெண்களுக்கும் மலர் மாலைக்கும் என்ன ஒற்றுமை? (Post No. 2665);26/3

எண்ணிய முடிதல் வேண்டும்; நல்லவே எண்ணல் வேண்டும்! (Post No. 2662);25/3

கடலில் பெய்த மழையும் புத்தகத்திலுள்ள அறிவும் வீண்! வீண்! (Post No.2661);25/3

இளவரசர் ஹாரிக்கு ‘பஞ்ச கன்யா’ பெண்கள் வரவேற்பு (Post No 2654)

அழகு பற்றிய 20 சம்ஸ்கிருத பழமொழிகள் (Post No 2649);20/3

 முஸ்லீம் படைகளை விரட்டிய அர்கால் தேச ராணி! (Post No 2646)19/3

அன்னை தெரசாவுக்கு எதற்கு புனிதர் பட்டம்? லண்டன் பத்திரிக்கை கேள்வி (Post No 2644);18/3

ன்று நாழிகை சிம்மாசன யோகம்! (Post No 2639);17/3

கொடுங்கோலன் கஜினி முகமதுவுக்கு ஆந்தைகள் கற்பித்த பாடம் (Post 2636);16/3

ஆப்ரஹாம் லிங்கன் சொன்ன கதை: பதவிக்காக

அலையும் கழுதைகள் (Post No.2630);14/3

ஜீரண சக்தி அதிகரிக்க 5 விஷயங்கள்!(2633); 15/3

சோஷலிசத்தின் விலை 16 பைசா! (Post No.2627);13/3

மனைவிக்கு ‘பெர்Fயூம்’ (செண்ட்) வாங்குவது எப்படி? (Post No 2624);12/3

சாமிநாத சாஸ்திரி கோர்ட்டுக்கு வராததற்கு காரணம்! (Post No. 2621);11/3

இந்துமதமும் விஞ்ஞானமும்! அற்புதமான தீபாராதனை மந்திரம்! (Post No 2619);11/3

நண்டு சாப்பிட்ட ஐயர் கதை! (Post No 2617);10/3

எட்டாம் நாள் திரு நாள் – வேட்டைத் திருநாள் – ஏன்? (Post No. 2613);9/3

திருவாரூர் தேவதாசி கொண்டியம்மாள் கதை (Post No 2610);8/3

அகநானூற்றுப் பாடலில் யாக குண்ட ஆமை!! புரியாத புதிர்!!! (Post No 2607);7/3

ஒரே சிந்தனை! கம்பன், பாரதி, கண்ணதாசன் மூவரும் பாடிய விஷயம்! (Post No.2604);6/3

 கர்நாடக இசையில் கங்கை நதியும் கூவம் நதியும்!(Post No. 2600);5/3

பஞ்ச மாபாதகம், 5 கர்ம சண்டாளர்கள், 5 நடைப் பிணங்கள் (Post No. 2599);5/3

பஞ்சாமிர்தம், பஞ்சாங்கம், பஞ்சகவ்யம் பஞ்சயக்ஞம் என்றால் என்ன?(Post No.2596);4/3

மார்ச் 2016 காலண்டர் (மன்மத ஆண்டு மாசி/பங்குனி) Post No.2593;3/3

மரணத்தை முன்னறிவித்த கோயம்புத்தூர் செட்டியார்!(Post No.2591);2/3

உலக மஹா கவிஞன் பற்றி ஒரு சுவையான கதை!(Post No 2587);1-3-2016,

XXXXX

ENGLISH ARTICLES

S NAGARAJAN ARTICLES ALREADY INDEXED IN THIS  COLUMN; 2679, 2676,2673,2670,2668,2664,2660,2656,2653, 2651,2648,2645,2641,2638,2635,2632,2629,2626,2622, 2618, 2615,2612, 2609,2606,2603, 2598, 2595, 2592, 2589, 2586

Four Benefits of Breath control/ Pranayama! (Post No 2681);31-3-2016

In India Rain drops turn into Pearls and Rubies! (Post No.2678 ); 30/3

“My father always………”- Jahangir about Akbar! (Post No.2675);293

Tansen and Tamarind Tree! Ghosts in Tamarind Trees! (Post No 2666)

Never Vote for Bad People! (Post No.2669);27/3

Four Maha Vakyas; Four Types of Devotees (Post No 2663);25/3

Spider in the Newspaper! 6 Interesting Advertising Anecdotes (Post No. 2659);24/3

What is Waste, Useless and Worthless? (Post No 2657);23/3

Positive thoughts help! (Post No 2655);22/3

Hindu Welcome to Prince Harry in Nepal (Post No 2652);21/3

Holy Cow: Edwin Arnold (Post No 2650); 20/3

Why I Love Bombay: Edwin Arnold (Post No. 2647);19/3

Mother Theresa is not so saintly: London Newspaper (Post No. 2643)

Mogul Emperor for 72 Minutes only! (Post No 2642);18/3

What did Mahmud of Ghazni learn from the Owls? (Post No 2640);17/3

India, farewell! Poem by Edwin Arnold (Post No 2637);16/3

Snake Charmers of India and Hindu Magic: Edwin Arnold (Post No 2634);15/3

Wisdom from Sanskrit couplets! Always Remember Five People! (Post No 2631);14/3

Every Jackass wants an office! (Post No 2628);13/3

‘Women in state affairs are like Monkeys in Glass Shops’ (Post No 2625);12/3

Science in Hinduism! Arti Mantra and the Science behind it! (Post No 2623);12/3

How do you select a perfume for your wife? (Post No.2620);11/3

Socialism is 16 cents each! (Post No. 2616);10/3

Rare book on 30 Devadasis of Tamil Nadu (Post No.2614);9/3

Three women make a market! (Post No. 2611);8/3

Fish and Guests smell in Three Days!(Post No.2608);8/3

Destiny has 4 feet, 8 hands and 16 eyes (Post No.2605);6/3

Why did Bharati burn the Harmonium? (Post No 2602);5/3

Tamil Grammar Mistakes in Bharati’s poems!(Post No. 2601);5/3

Ganges and Coovam Rivers in Carnatic Music!(Post No.2597);4/3

If England leave India………(Post No. 2594);3/3

A whip for a fool, and a rod for a school (Post No.2590);2/3

Five Big Sins, 5 untrustworthy, 5 walking Dead & 5 lowest people! (Post No.2588);2-3-2016

tags–March 2016 posts, swaminathan articles, Index 40,

–subham–

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO- PART 7 (Post No.9049)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9049

Date uploaded in London – –18 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், ஆங்கில சொற்கள் – பகுதி 7

Panini  Sutras from his Ashtadhyayi continued……………………………..

உலகம் முழுதும் புழங்கும் எல்லா பழைய மொழிச் சொற்களும் சம்ஸ்க்ருதம், தமிழ் ஆகியவற்றிலிருந்தே சென்றன என்பதை நிரூபிப்பதே இந்தக் கட்டுரைத் தொடரின் முக்கிய நோக்கம் 

XXXX

SUTRA 2-1-39

SATA – 100- CENTUM BRANCH, HUNDRED BRANCH IN EUROPEN LANGUAGES,

SAHASRAM IN VARTIKAM – BECOMES AAYIRAM IN TAMIL.

SINCE TOLKAPPIAM BANS SA AS INITIAL WORD IN TAMIL, THOSE WORDS WILL USE A OR AA IN TAMIL.

SABHAA IN RIG VEDA BECOMES AVAI IN TAMIL; S=A, B=V

IN INDIAN, PERSIAN AND ROMANTIC LANGUAGES SANSKRIT ‘SATA’ IS RETAINED; IN KELTIC AND GERMANIC LANGUAGES AND GREEK,  SA BECOMES KA OR HA .

RIVER SINDHU IS CHANGED TO HINDUS BY THE PERSIANS AND GREEKS

RIVER SARASVATI IS CHANGED TO HYDRAYOTES

MEGASTHENES MENTIONED KAMBISTHOLOI (KAPISTHALA=KAITHAL TOWN IN MODERN HARYANA ) AS A PEOPLE IN THE PANJAB THROUGH WHOSE TERRITORY THE RIVER HYDRAYOTES FLOWED (page 324, India as known to Panini, by V S Agrawala, 1953)

Hydra in Greek means Water (Eg. Hydrogen); this came from Udhra (aquatic animal; Eg.Otter); Udhra is derived from Uthaka/water in Sanskrit (Eg.wet, water, Vodka, Volga river); S=H

SATA சதம் – 100- CENTUM சென்டம் கிளை மொழிகள்  BRANCH, HUNDRED BRANCH ஹண்ட்ரட் கிளை மொழிகள்  IN EUROPEN LANGUAGES,

SAHASRAM IN VARTIKAM – BECOMES AAYIRAM IN TAMIL. ஸஹஸ்ரம் = ஆயிரம்

SINCE TOLKAPPIAM BANS ‘SA’ AS INITIAL LETTER IN TAMIL, THOSE WORDS WILL USE ‘A’ OR ‘AA’ IN TAMIL..

SABHAA IN RIG VEDA BECOMES AVAI IN TAMIL; S=A, B=V ஸபா = அவை

IN INDIAN, PERSIAN AND ROMANTIC LANGUAGES SANSKRIT SATA IS RETAINED; IN KELTIC AND GERMANIC LANGUAGES AND GREEK  SA BECOMES KA OR HA .

RIVER SINDHU IS CHANGED TO HINDUS BY THE GREEKS சிந்து = ஹிந்து ; ஹைட்ரவதி – சரஸ்வதி

RIVER SARASVATI IS CHANGED TO HYDRAYOTES

MEGASTHENES MENTIONED KAMBISTHOLOI (KAPISTHALA=KAITHAL TOWN IN MODERN HARYANA ) AS A PEOPLE IN THE PANJAB THROUGH WHOSE TERRITORY THE RIVER HYDRAYOTES FLOWED (page 324, India as known to Panini, by V S Agrawala, 1953)

Hydra in Greek means Water (Eg. Hydrogen); this came from Udhra (aquatic animal; Eg.Otter); Udhra is derived from Uthaka/water in Sanskrit (Eg.wet, water, Vodka, Volga river); S=H ஹைட்ரஜன்

உதக/உத்ர = நீர், நீர் வாழ் மிருகங்கள் .

XXXX

2-1-37 panchami பஞ்சமி

பஞ்ச = அஞ்சு ; சம்பந்தர் தேவாரம் காண்க.

Pancha = Anchu in Tevaram/colloquial Tamil

Aindhu in written form;literal இலக்கியத்தில் ஐந்து

Xxx

2-1-39

Anthika – Anmai in Tamil அந்திக- அண்மை

Dhura – Tholaivu ; r=l தூர – தொலைவு ; ர=ல

K ruchra – katinam ; r = t; க்ருச்ர – கடினம்

In Magharashtra and Rajasthan the names of forts are pronounced with D or R at the end

E g. Simhagar – Simhagad; Dharwar- Dharvad

Xxxx

2-1-40 saptami – seven சப்தமி= ஏழாவது

September was seventh month in Calendar before the modern calendar came into use

ச – க அல்லது ஹ

சப்த – ஹப்த

சிந்து – ஹிந்து

Sapta becomes Hapta in Old Persian ; Sapta Sindhu region of India was called Hapta Hindu in Persian; S=H

ஹப்த ஹிந்து = சப்த சிந்து ; ச–ஹ

Xxxxx

பகலும் இரவும் தமிழ்ச் சொல் இல்லை

2-1-45 Ahoratri அஹோராத்ரி

Ahas – Pahal in T amil அஹ – பஹல்

Ratri -Iravu in Tamil ராத்ரி – இரவு

In Sanskrit we see Day and Night in 99% places in literature ;

In Tamil we see Night and Day in 99 % places in literature ;

I don’t know why they follow this reverse order.

இரவும் பகலும் என்பது தமிழ் இலக்கிய மரபு ; பகலும் இரவும் என்பது சம்ஸ்க்ருத மரபு

Xxx

2-1-48

Paatra /vessel = vat in English பாத்ர = வாட் = வட்டை

P =V ப=வ

Vessel /vat

Tamils also  use this Sanskrit word Paaththiram

எவர் சில்வர் பாத்திரம், வெள்ளிப் பாத்திரம்

Xxxxx

2-1-49

Puurva, purana – pre பூர்வ /புராண

Nava – new; Nova in Biblical flood story; meaning everything new

நவ , சம, ஜரா -மூப்பு

Samaa = same, saman in Tirukkural

Jarat – old; aged; Gerontology – study of old age; aging

Xxxx

2-1-50

Dik – Direction திக், திசை

In Tamil Dikku/ Tikku or Disai/ Tisai

Xxx

2-1-56

Vyaagra – Vengai in Tamil

வ்யாக்ர – வேங்கை

Vyaagra – Tiger in English

Xxx

To be continued…………………………..

 TAGS – TAMIL WORDS-7, SAPTA SINDHU, CENTUM, SATAM, HUNDRED

மனைவியிடமிருந்து தப்பிப்பது எப்படி ??? (Post No.9048)

WRITTEN  BY KATTUKKUTY

Post No. 9048

Date uploaded in London – – 18 DECEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மனைவியிடமிருந்து தப்பிப்பது எப்படி ???

Kattukutty

( கணவன்மார்களேவெட்கப்படாமல் உங்கள் மனைவி,மகள்

மற்றும் சகோதரிகளிடமும் காண்பியுங்கள்)

மனைவிடமிருந்து தப்பிப்பது எப்படி???

“இதைத் தான் ரொம்ப நாளா எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் சார்” என்று நினைத்துக் கொண்டிருக்கும் அன்பர்களுக்கு ஒரு வார்த்தை.

பாத்திரங்களை விட்டெறியும், அல்லது பயங்கரமான ஆயுதங்களான அதாவது விளக்குமாறு, முறம், தடி, காய் வெட்டும் கத்தி, கரண்டி போன்றவற்றை “பிரயோகிக்கும்போது” தப்பிப்பது எப்படி என்ற சொல்லப் போவதில்லை……….. நாம் வழக்கமாக வாரா வாரம் காய்கறி வாங்கி வந்த பின் “வாங்கிக்” கட்டிக் கொள்கிறோமே அதிலிருந்து தப்பிப்பது எப்படி என்பதைப் பற்றி மட்டுமே பற்றி சொல்லப் போகிறேன்.

மனைவி சொல்கிறாள் :-

“எப்படிய்யா ஒரே முத்தல் வெண்டைக்காயையும், முத்தின கத்திரிக்காயையும் வாங்கிட்டு வந்திருக்கீங்க …… அந்த காய்கறிக்காரி, முத்தலும், தொத்தலுமா இருக்கற காயை உங்க தலையில கட்டிருக்கிறாள்……..”

நாம் குற்ற உணர்வுடன் “இது அவள் கொடுக்கவில்லை, நானே

பொறுக்கி எடுத்தேன்”………” என்கிறோம்.

“உங்கம்மா! உங்கள எப்படித்தான் வளர்த்தாளோ உங்கம்மா…..”

எங்கம்மாவுக்கு ஒரு “அடி”

“ஆமா, உங்கப்பா கூட கடைக்கு போவேளே அவர் கூட சொல்லித் தரல்லயா????”

அப்பாவுக்கும் ஒரு “அடி”

“உங்காத்து பரம்பரையிலேயே யாருக்குமே காய்கறி வாங்கத் தெரியாதா???”

எங்க பரம்பரைக்கே ஒரு “ஆப்பு”…….

“கடவுளே, இவங்களையெல்லாம் எப்படித்தான் படைத்தாயோ???”

கடைசியில் வைத்தாள் ஒரு பெரிய ஆப்பு கடவுளுக்கே!!!

இதோ காய்கறிகள் வாங்குவது எப்படி என்ற ஆராய்ச்சியில்

ஈடுபட்டு “மாஸ்டர் டிகிரி”யே வாங்கிவிட்டேன், அதாவது என் மனைவியே பக்கத்து வீட்டு பெண்மணியிடம் “உங்காத்துக்கு

ஏதாவது காய்கறி வேணும்னா சொல்லுங்கோ,

எங்காத்துக்காரரை விட்டு வாங்கிண்டு வரச் சொல்றேன். ஒரு சொத்தை, ஒரு முத்தல் இருக்காது, சுத்தமா புதுசா வாங்கிண்டு வருவார்” என்று சொல்கிறாள் இப்போது!

வெண்டைக்காய் – நுனியை உடைத்தவுடன் படக்கென்று உடைய

வேண்டும் வளையக்கூடாது. அப்படியே உடைந்தாலும் பச்சையாகவும் தொடுவதற்கு மென்மையாகவும் இருக்க வேண்டும்.

பீன்ஸ் – வளைத்தவுடன் படக்கென்று உடையவேண்டும். எல்லா பீனஸையும் உடைக்க முடியாது. ஒருபக்கம் நுனியைக் கிள்ளினால் அதிக நார் இருக்கக்கூடாது, அப்படியே இருந்தாலும் எளிதில் உரிபடும்.(நீங்கள் மனகுவது தெரிகிறது …எப்படி அத்தனையும் உரிச்சு பார்ப்பது) நீங்கள் தொட்டவுடனேயே தெரியும் முத்தலா இல்லையா என்று.

அவரை – விதை புடைத்துக் கொண்டு இல்லாமல் வளைய வேண்டும்.

கொத்தவரங்காய் – பீன்ஸ் மாதிரி படக்கென்று உடைய வேண்டும

வாழைத்தண்டு – வெள்ளையாக இருப்பதுடன், நுனியை நகத்தினால் கிள்ளினால், நார் வரக்கூடாது.

முருங்கைக்காய் – விதைகள் புடைத்துக்கொண்டு இல்லாமல் ஒரே மாதிரி பிரம்பு மாதிரியாகவும் முறுக்கினால் நன்றாக வளைய வேண்டும்

வெங்காயம் – கரு நீலம் இல்லாமல் லைட் ரோஸ் கலரில் இருக்க வேண்டும்

சேனைக் கிழங்கு – வெண்மையாக இருக்க வேண்டும். சிவப்பாக

இருந்தால் அரிக்கும். வாங்கி 2 நாள் கழித்தே சமைக்க வேண்டும்.

சேனையை நறுக்கியவுடன் புளித் தண்ணீரில் போட்டால் அரிக்காது.

கருணைக்கிழங்கு – தோலை உரித்தால் சிவப்பாக இருந்தால் நல்லது, சீக்கிரம் வேகும். சுவையாகவும் இருக்கும்

உருளைக்கிழங்கு- பச்சை நிறம் கூடாது. முளையோ, வேரோ, விட்டிருக்கக் கூடாது. அமுங்கக் கூடாது.

முள்ளங்கி – முடி முளைத்திருக்க கூடாது. கையினால் தொட்டால் சாப்டாக வழ வழ என்று இருக்கவேண்டும்.

பச்சை மிளகாய் – கெட்டியாக, மெலிந்ததாக இருக்க வேண்டும்.

தடியாக இருத்தால் உறைப்பு கம்மியாக இருக்கும்

பூண்டு- சிறியதாக இருக்க வேண்டும்

சேம்பு – கூடிய மட்டிலும் உருண்டையாக இருக்கும் படி பொறுக்கவும்.

முட்டை கோஸ் – கெட்டியாக, பச்சையாகவும் கனமாகவும் இலை பிரியாமலும் இருக்க வேண்டும்.

காலி ப்ளவர் – வெண்மையாகவும் இலைகள் பச்சையாகவும், அடர்த்தியாகவும் இருக்க வேண்டும். பூவின் மேல் பிரவுன் நிற

புள்ளியிருந்தாலும் வாங்கலாம். பூ மஞ்சள் நிறமாகவோ, மஞ்சள்

புள்ளிகள் இருந்தாலோ வாங்கக் கூடாது.

தக்காளி -கெட்டியாக, சிவப்பும், பச்சையாகவும் கலந்த நிறமுடையதாக வாங்கவேண்டும் மஞ்சள் நிறம் துளியும்

இருக்கக் கூடாது. மற்ற காய்கறிகளுடன் சேர்த்து வைக்காமல் மூங்கில் தட்டில் அல்லது பிளாஸ்டிக் தட்டில் பரத்தி வைக்க வேண்டும்

வெள்ளரிக்காய் – கெட்டியாக பார்த்து வாங்கவும். இரு புறமும்

நறுக்கி அந்த நறுக்கிய பகுதியைத் தேய்த்தால் நுரை வரும். அதன் கசப்புத்தன்மையும் நீங்கி விடும்.

புடலங்காய் – முறுக்கிப் பார்த்தால் நெளிய வேண்டும். கோடு தெரியக் கூடாது.

பீட்ரூட், கேரட் – பசுமையாகவும், கெட்டியாகவும் இருக்க வேண்டும்.

பாகற்காய் – நல்ல கரும் பச்சை நிறமாக இருக்க வேண்டும்

வாழைப் பூ – கெட்டியாக, கனமாக, இருக்க வேண்டும் இதழ்கள்

பிரிந்திருக்கக் கூடாது்.

சுரைக்காய் – கனமானதாக வாங்க வேண்டும்

முசுப்பலா – தோல், கிள்ள வர வேண்டும்.

கத்தரிக்காய் – கரு நீலம் கூடாது. வெளிர் நீலம் சுவையாக இருக்கும் பாவாடை( மேல் உள்ள பச்சைத்தோல்) கத்தரிக்காயை ஒட்டி இருக்க வேண்டும். அழுத்தினால் மென்மையாக இருக்க வேண்டும்.

வாழைக்காய் – பட்டையாக மூன்று புறமும் கெட்டியாக இருக்க வேண்டும். நுனி கருத்திருக்கக் கூடாது.

கீரைகள் – தண்டு கனமாக இருக்கக் கூடாது. தண்டை ஒடித்தால்

படக்கென்று ஒடிய வேண்டும் சிறிய இலைகளாக இருக்க வேண்டும் இலைகளில் ஓட்டை இருந்தாலும் பரவாயில்லை.

காய்களை நறுக்கும் போது வாழைத்தண்டு, வாழைப்பூவை நறுக்கும் போது, மோர் கலந்த நீரிலும், கத்தரிக்காய், சுண்டைக்காய், பாகற்காய்களை நறுக்கும்போது அரிசி

கழுவிய நீரிலும், போட்டால் அதன் நிறம் மாறாது. கசப்பு துவர்ப்பு, உவர்ப்பு போன்றவை குறையும்.

கருணை, சேனை நறுக்கும்போதே புளித்தண்ணீரில் போட்டு புளித்தண்ணீரில் வேக வைத்தால் சாப்பிடும் போது நமைச்சல் இருக்காது.

கீரைகளை சமைக்கும்போது மூடி வைக்கக் கூடாது.

முருங்கைக் கீரையை ரொம்பவும் வேக வைக்கக் கூடாது

பச்சை நிறம் மாறக்கூடாது.

அகத்திக் கீரையை நன்றாக வேக வைக்க வேண்டும்.

அதாவது பச்சை நிறம் மாற வேண்டும்

பழ மொழி – “வெந்து கெட்டது முருங்கைக் கீரை

வேகாமல் கெட்டது அகத்திக்கீரை”!

வெந்தயக்கீரை சாம்பார் செய்யும்போது, பருப்பு கரைத்து விடும் முன் கீரையை சாம்பாரில் போட்டு சிறிது நேரம் வேக வைத்தால் சாம்பார் கசக்காது.

தண்டு கீரையின் தண்டு கனமாக இருக்கும். மலச்சிக்கலைப் போக்கும். அதன் தோலை சற்று லேசாக சீவி மூன்று மூன்று

அங்குலமாக நறுக்கி சாம்பாரிலோ, மோர் குழம்பிலோ போடலாம்.

நாம் காய் வாங்கும்போது “கொசுறு” அதாவது இலவசம் என்று

கொத்தமல்லியும்கறிவேப்பிலையும் தருவார்கள்அது மாதிரிதான் இதுவும் “கொசுறு!!!

சில காய்களின் மருத்துவ குணங்கள்

அவரைக்காய் – நரம்புகள் வலுப் பெறும், மலச்சிக்கலைப் போக்கும்

கத்தரிக்காய் – உடலின் உஷ்ணத்தைத் தணிக்கும்

வெண்டைக்காய் – ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

முருங்கைக்காய் – ஆண்மைக் குறைவு, கருப்பை கோளாறுகளை நீக்கும்

வெள்ளரிக்காய் – கல்லீரல் பலம் பெற,மஞ்சள் காமாலை குணமாக, தாகத்தை தணிக்க,குளிர்ச்சியைத்தர, எளிதில் ஜீரணிக்க

பூசணிக்காய் – இருமல் காச நோய் குணமாக

சுரைக்காய் – சிறு நீரக கோளாறுகள் நீங்க, பொட்டாசியம் தர

வாழைக்காய் – மலச்சிக்கலைப் போக்க

மணத்தக்காளிக்காய் – குடல் புண்களைப போக்க

பாகற்காய் – வயிற்றிலுள்ள புழு பூச்சிகள் நீங்க, குளிர்ச்சி தர

முட்டைகோஸ் – நெஞ்சுவலி வராமல் தடுக்க, ஜீரணத்திற்கு

சுண்டைக்காய் – நரம்பு வலுப்பெற, எலும்பு வளர்ச்சியடைய

தேங்காய் – கருப்பை, வயிற்றிலுள்ள புண்களை ஆற்ற

மாங்காய் – ரத்தத்தை விருத்தி செய்ய

கோவைக்காய் – தொண்டை, நாக்கு வெடிப்பு புண்களை ஆற்ற

நெல்லிக்காய் – கண்ணோய் அகல, மூளை நரம்புகள் பலப்பட

அத்திக்காய் – ரத்த சோகை போக

வாழைத்தண்டு – சிறு நீரக கற்களை கரைக்க

பீட்ரூட் – நார்ச்சத்து மலச்சிக்கலை போக்கும்

உருளைக்கிழங்கு -இரும்பு, பாஸ்பரஸ் சத்து அதிகமாக

சேப்பங்கிழங்கு – எலும்பு, பற்களுக்கு உறுதி தர

கேரட் – மாலைக்கண், கண் கோளாறுகளைப் போக்க

பீனஸ் – புரதச் சத்து அதிகரிக்க, கால்ஷியம் அதிகரிக்க

புடலங்காய் – எலும்பக்க உறுதி தர

கொத்தவரங்காய் – நார்சத்து மலச்சிக்கலைப் போக்க

சௌ சௌ – பற்களுக்கு, எலும்புகளுக்கு உறுதி தர

முள்ளங்கி – பொட்டாசியம் பற்றாக்குறையை நீக்க

தக்காளி – அமினோ அமிலம் உற்பத்தியாக்கும், ரத்த விருத்திக்கும் நல்லது.

பூசணிக்காய் – நீர்ச்சத்தை அதிகரிக்க, ரத்த விருத்தி, குளிர்ச்சி தர

கருணைக்கிழங்கு -மலச்சிக்கல், மூலநோய் தீர, எலும்பு வளர்ச்சிக்கு

குடை மிளகாய் -அஜீரணத்தைப் போக்க

நூல் கோல் – பாஸ்பரஸ் அதிகரிக்க, மலச்சிக்கலைப் போக்க

வெங்காயம் – அதிக பாஸ்பரஸ் உள்ளது கொழுப்பைக் கரைக்க

மணத்தக்காளி -வாய் மற்றும் வயிற்றுப்பண்களை நீக்க

(கீரைகள், மற்றும் பழங்கள் பற்றி நேயர்கள் விரும்பினால் தொடரும்)

***

tags–   மனைவி, தப்பிப்பது, எப்படி,

பாரதியாரின் ராகங்கள்! – 3 (POST No.9047)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 9047

Date uploaded in London – – 18 DECEMBER 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

டிசம்பர் 11. பாரதியாரின் பிறந்த தினம். அதையொட்டிய சிறப்புக் குறுந்தொடர் இது!

பாரதியாரின் ராகங்கள்! – 3

ச.நாகராஜன்

மஹாகவி பாரதியாரின் வேதாந்தப் பாடல்கள் அரிய பெரிய உண்மைகளை மிகத் தெளிவாக இனிய சொற்களால தருபவை.

அவற்றிற்கு அவர் அமைத்த இசையைக் காண்போம்.

  1. மாயையைப் பழித்தல் – உண்மை யறிந்தவருன்னை

ராகம் – காம்போதி        தாளம் – ஆதி

  • அச்சமில்லை – பண்டாரப் பாட்டு
  • ஜீவன் முக்தி – ஜயமுண்டு பயமில்லை மனமே

ராகம் – கமாஸ்    தாளம் – ஆதி

  • நந்தலாலா – காக்கைச் சிறகினிலே

ராகம் – யதுகுல காம்போதி தாளம் – ஆதி

  • விடுதலை – வேண்டுமடி எப்போதும் விடுதல்

ராகம் – நாட்டை

குயில் பாட்டு

குயில் பாட்டில் இசையின் மகிமை பற்றி ஏராளமாகச் சொல்கிறார் பாரதியார்.

இதைப் பல்வேறு கட்டுரைகளில் குறிப்பிட்டு விட்டோம்.

ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ என்கிறார் மஹாகவி.

“கானப் பறவை கலகலவெனும் ஓசையிலும்

காற்று மரங்களிடைக் காட்டு மிசைகளிலும்

ஆற்று நீரோசை அருவி ஒலியினிலும்

நீலப் பெருங்கல் எந்நேரமுமே தான் இசைக்கும்

ஓலத்திடையே உதிக்கும் இசையினிலும்

மானுடப் பெண்கள் வளரும் ஒரு காதலினால்

ஊன் உருகப் பாடுவதில் ஊறிடுந் தேன் வாரியிலும்

ஏற்றநீர்ப் பாட்டின் இசையினிலும் நெல் இடிக்கும்

கோற்றொடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒலியினிலும்

சுண்ணம் இடிப்பார் தம் சுவை மிகுந்த பண்களிலும்

பண்ணை மடவார் பழகு பல பாட்டினிலும்

வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாம் ஒலிக்கக்

கொட்டி இசைத்திடும் ஓர் கூட்டமுதப் பாட்டினிலும்

வேயின் குழலோடு வீணை முதலா மனிதர்

வாயினிலும் கையாலும் வாசிக்கும் பல் கருவி

நாட்டினிலும் காட்டினிலும் நாள் எல்லாம் நன்றொலிக்கும்

பாட்டினிலும் நெஞ்சைப் பறி கொடுத்தேன்.”  என இப்படி அடுக்கடுக்காக பதினோரு வகைப் பாடல்களைக் குயில் பாட்டில் சுட்டிக் காட்டுகிறார்.

காதல் காதல் காதல்

இந்தப் பாடலுக்கு பாரதியார் தரும் குறிப்பு இது:-

ராகம் – சங்கராபரணம் ஏக தாளம்

ஸ்வரம் :

“ஸா – ரிமா – காரீ

        பாபாபாபா – மாமாமாமா

ரீகா – ரிகமா – மாமா

(சந்த பேதங்களுக்குத் தக்கபடி மாற்றிக் கொள்க)

இதே பாடலில்,

“நாதம், நாதம், நாதம்,

நாதத்தேயோர் நலிவுண்டாயின்

சேதம், சேதம், சேதம்” என்றும்

“தாளம், தாளம், தாளம்,

தாளத்திற்கோர் தடையுண்டாயின்

கூளம், கூளம், கூளம்”     என்றும்

“பண்ணே, பண்ணே, பண்ணே,

பண்ணிற்கோர் பழுதுண்டாயின்,

மண்ணே, மண்ணே, மண்ணே.”    என்றும்

பாடி இசையமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார்.

பாரதியாரின் சங்கீதத் திறனாய்வை அவர் எழுதியுள்ள சங்கீத விஷயம் என்ற கட்டுரையில் படித்து வியக்கலாம்.

இப்படி ஏராளமான ராகங்களைத் தன் பாடல்களுக்கு அமைத்துத் தந்த மஹாகவி ஸ்வர அமைப்பிலும் சிறந்தவர் என்பதை அவரது பல வாழ்க்கை நிகழ்ச்சிகள் சுட்டிக் காட்டுகின்றன.

அன்பர்கள் பாடல்களைப் படிக்கும் போதும், பாடும் போதும் அவரது இசை அமைப்பையும் மனதில் கொண்டால் பாடல்கள் இன்னும் அதிகச் சுவையுடன் தேனாகத் தித்திக்கும் என்பதில் ஐயமில்லை.

                        ***               இந்தக் குறுந்தொடர் முற்றும்

tags- ராகங்கள்! – 3,பாரதியார்

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO- 6 (Post No.9046)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9046

Date uploaded in London – –17 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், ஆங்கில சொற்கள் – பகுதி 6

Panini  Sutras from his Ashtadhyayi continued……………………………..

உலகம் முழுதும் புழங்கும் எல்லா பழைய மொழிச் சொற்களும் சம்ஸ்க்ருதம், தமிழ் ஆகியவற்றிலிருந்தே சென்றன என்பதை நிரூபிப்பதே இந்தக் கட்டுரைத் தொடரின் முக்கிய நோக்கம் 

XXXX

SUTRA 1-4-87

UPA – UP உப -அப் – உப்பரிகை

IN TAMIL UPPRIKAI/BALCONY

IN HINDI UUPAR, WHICH IS UPPER IN ENGLISH ஊபர் , அப்பர்

TAMILS USE IT IN LONG DISTANCE/ LINEAR- APPAAL, APPATI

NOT IN HEIGHT BUT IN LENGTH IN SANGAM LITERATURE அப்பால், அப்படி

XXX

1-4-89

VACHANE – VAAK- SPEAK; V=P

வசனே – வசனம், வாக்- வாக்கு- வாக்கியம்

 VAAKKIYAM IN TAMIL-

THIRAIPPATA VASANAM –

வ=ப; வாக்- ஸ்பீச்

ஸ்பீச் = பேச்சு

P/B- V- M —-  ARE INTERCHANGEABLE

XXX

1-4-90

BHHAGA – SHARE- DIVISION பாக ; பகுதி; பகு , பிரி

BHAG- AN AREA IN A CITY ; KAROL BHAG IN DELHI

கரோல்பாக் – டில்லியில் உள்ள ஒரு பேட்டை

IN TAMIL BHHAGAM IS USED FOR SHARE, PART

IT IS IN PURE TAMIL AS PAKU/DIVIDE, PAKUTHI பகு

பகுதி PREFIX ;THIS PAKUTHI IS DERIVED FROM SANSKRIT PRAKRUTHI

VIKRUTHI IS SUFFIX VIKRUTHI  பகுதி, விகுதி

SO TAMIL AND SANSKRIT HAVE SAME ROOT.- PAKU OR BHAAG

பகு , பாக – ஒரே மூலச் சொல்லிலிருந்து வந்தது

XXX

1-4-94

PUJA – PUUJAI IN TAMIL, PUUSANAI IN TIRUKKURAL பூஜை ; பூசனை/குறள்

பூஜா அர்த்தம்- புகழ் பாடுதல்

PUJA MEANING – WHICH IS PRAISED, APPRECIATED, OFFERED TO GOD

XXX

1-4-95

ADHI- A LOT அதி, அதிகம்

ATHIKAM IN TAMIL; KURAL 636-  ADHI NUTPAM

அதி நுட்பம் – குறள் 636

XXX

TAMILS USED ALL GRAMMATICAL TERMS FROM SANSKRIT BECAUSE THE FITST GRAMMAR, NOW EXTINCT, CAME FROM AGASTYA. HE IS PRAISED AS FATHER OF TAMIL. BHARATI AND OTHER POETS SAY SO.

PAKUTI, VIKUTHI = PREFIX, SUFFIX CAME FROM SANSKRIT. பகுதி, விகுதி

EVEN THE WORDS SINGULAR, DUAL, PLURAL ARE EXACT TRANSLATIONS OF SANSKRIT WORDS.

ஒருமை, இருமை , பன்மை (ஸம்ஸ்க்ருதத்திலும் இதே போல, 1,2,3 உண்டு..

ஆங்கிலம் முதலான மொழிகளில் 1,2,3 கிடையாது.

SINGULAR – EKA VACHANAM – ORU MAI ; EKA=1

DUAL – DVI VACHANA – IRU MAI ; IRU=2

PLURAL – BAHU VACHANA – PAN MAI; BAHU/MANY/VEHU IN TAMIL; B=V

பஹு =வெகு ; ப=வ

XXX

1-4-105

YUSMAT = YOU யூஸ்மத்

TVAM – YOU; TU IN FRENCH, HINDI தவம்; தூ /பிரெஞ் சு

AHAM= I; VAYAM= WE  அஹம் = ஐ; வயம் – வீ

TAT= THAT= ATHU IN TAM.தட் – அது; இத- இது –

ITA – IT- ITHU IN TAM. இது

XX

xxxx

2-1-1 VARTIKAM USED SUCHI, SEW

IN TAMIL SUUCHI/NEEDLE   BECOMES   UUSI

IN ENGLISH SIIVPAN IS SEW/STITCH

சூசி= ஊசி

தை – தையல்- 

XXX

2-1-27

SAAMI= SEMI சாமி= செமி

SEMI IS USED IN SCORES OF  WORDS

SEMI CONDUCTOR, SEMI TRANSPARENT, SEMI CIRCLE, SEMI ANNUAL

XXX

2-1-28

கால=க்ரோனோ

KAALA = CHRONO

L=R

CHRONOLOGY, CHRONOMETER

XXX

2-1-34

ANNA/FOOD அன்ன = பைபிளில் மன்னா

MANNA IN BIBLE

ODHANA- FOODHANA= FOOD ஒதன

DHADHYOTHANA= THAYIR SAADHAM

XX

2-1-35

MISRA/ MIXED மிஸ்ர – மிக்ஸ்

MIX

XXX

2-1-39

சத – சென்டம்

சஹஸ்ரம்- ஆயிரம்

VARTIKA- SATA/ CENTUM, centenary ; hundred

SAHASRAM BECAME AAYIRAM IN TAMIL

XXX

2-1-41

SUSHKA = SUKKU IN TAMIL/ DRIED GINGER சுஷ்க=சுக்கு

PAKVA – PAKKUVAM

STHAALI – THAAZI/POT தாழி  , முதுமக்கள் தாழி

MUTHU MAKKAL THAAZI

 tags- tamil words -6

—SUBHAM—

சௌபாக்யம் அருளும் சுக்கிரன் !!! -PART 2 (Post.9045)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 9045

Date uploaded in London – – 17 DECEMBER 2020

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

மகாபலியும் சுக்கராச்சாரியாரும்
மகாபலியின் ஆணவத்தை , கொட்டத்தை அடக்க வாமனவதாரம்
எடுத்தார் ஸ்ரீ மகா விஷ்ணு . யாகத்தின் போது யார் எதைக்கேட்டாலும் தருவேன்
என்ற மமதையோடு இருந்த மகாபலி மன்னனிடம், மூன்றடி மண் கேட்டார் வாமனன்.
வந்திருப்பவர் மகா விஷ்ணுவே என்று தெரிந்து கொண்ட சுக்கிராச்சாரியார், தானம் வார்த்து
கொடுக்க கிண்டியில் உள்ள தண்ணீரைவிட மகாபலி முயற்சித்த போது,
கிண்டியின் மூக்கின் நுனியை வண்டு ரூபமாக போய் அடைத்தார். இதை அறிந்த மகா விஷ்ணு
ஒரு தர்பைப் புல்லை எடுத்து குத்த வண்டான சுக்கிராச்சாரின் கண் குத்தப்பட்டு குருடானது.
அதிலிருந்து சுக்கிராச்சாரியாருக்கு “ஒற்றைக் கண்”தான்!
பிறகு நடந்த கதை தான் உங்களுக்கு தெரியுமே……
விவரம் தெரிந்தவர்கள் வெள்ளிக்கிழமை கண் ஆபரேஷன்
வைத்துக் கொள்ள மாட்டார்கள்.
சுக்கிரன் ஜாதகத்தில் பலமில்லையென்றால்
பாலியல் நோய்களான V D முதல் AIDS வரை,சிற்றின்ப சுகமில்லாமை, குழந்தையில்லாமை,
சுகர், அழகுக்கு உபயோகப்படுத்தபடும் ரசாயன கலவைகளினால் அரிப்பு , சொறி, சிரங்கு
ஜன்னேந்திரியத்தில் எல்லா கோளாறுகளும், கண்ணோய்களும்,பெண்களுடைய
மாதாந்திர கோளாறுகள், வெள்ளைப்படுதல், வெண்குஷ்டம் …………போன்றவை வரும்!

சுக்கிரன் பற்றிய விஞ்ஞான விவரங்கள்
சூரியனிடமிருந்து சுக்கிரன் 6 கோடியே, 72 லட்சத்து 40மைல்கள்
சூரியனை ஒரு முறை சுற்றி வர – 225 நாட்கள்
பூமிக்கு சந்திரன் போல் சுக்கிரனுக்கு துணைக்கோள் கிடையாது.
தன்னைத்தானே சுற்றிக் கொள்ள 23 1/2 மணி நேரம்
பகலிலும், தெரியக்கூடிய ஒரே கிரகம் சுக்கிரன்தான்!!! சூரியனுக்கு அருகில் இருப்பதாலும்,
சூரியனுடைய ஒளியை அப்படியே பிரதி பலிப்பதாலும் “விடி வெள்ளி”யாகவும்
“மாலை வெள்ளி”ஆகவும் மிளிர்கிறார் சுக்கிரன் !!!


சுக்கிரன் பற்றிய மற்ற விவரங்கள்
வேறு பெயர்கள் – ப்ருகு, காப்பியன், அசுர மந்திரி,உசனன்,வெள்ளி,
பளிங்கு, சுங்கன், கவி, மழைக் கோள்,வேதாங்க பாரகன்,பிரபு
மனைவிகள் – சுக்ருதி, ஊரஜஸ்வதி
ஜாதி – பிராமணர்
கோத்திரம் – பார்க்கவ
இனம் – ஸ்திரீ
நிறம் – வெண்மை
குணம் – ராஜஸம்
உத்யோகம் – மந்திரி
அதி தேவதை – இந்திரன்
ப்ரத்யதி தேவதை – சசி தேவி
திசாதிபதி – தென் கிழக்கு
பூதம் – நீர்
மொழி – ஸம்ஸ்கிருதம்
உடலில் தாது – இந்திரியம்
நாடி – சிலேத்துமம்
அவஸ்தை. நடு வயது
வாகனம் – கருடன்
இஷ்ட காலம் – பிற்பகல்
சுவை – புளிப்பு
சுபாவம் – சௌமியம்
தானியம் – மொச்சை
சமித்து – அத்தி
புஷ்பம் – வெண் தாமரை
ரத்தினம் – வைரம்
உலோகம் – வெள்ளி
மிருகம் – ஆண் யானை
பறவை – மயில்
ஸ்வரம் – நி
வஸ்திரம் – வெண் பட்டு
ஆசனம் – ஐங்கோணம்
ருது – வஸந்தம்
குணம் – சுபர்
தன்மாத்தரை -ரஸம்
எழுத்து – இ
தேசம் – காம்போஜம்
நிவேதனம் – நெய் சோறு
ஆட்சி – ரிஷபம், துலாம்

உச்சம் – மீனம்
நீசம் – கன்னி
நட்பு – சனி, செவ்வாய்
சமம் – குரு, சூரியன்
பகை – சந்திரன்
பார்வை- 7ஆம் பார்வை
சுக்கிர திசை – 20 வருடங்கள்

பரிகார ஸ்தலங்கள்
சுக்கிரனே பூஜித்த ஸ்தலம் – திருநாவலூர் (பாடல் பெற்ற ஸ்தலம்)
கஞ்சனூர், ஸ்ரீ ரங்கம்,
நவ திருப்பதி ஸ்தலம்-தென் திருப்பேரை
நவ கைலாச ஸ்தலம் – சேந்தமங்கலம்
சென்னை – மாங்காடு, சைதையில் உள்ள வெள்ளீஸவரர்.
உடலில் சுக்கிரன் வலுவாக இருக்க உண்ண வேண்டிய உணவுப்
பொருள்கள்- பாதாம், சூரிய காந்தி விதை, சிவப்பு பூசணி விதை,
சுரைக்காய், நிலக்கடலை, பிஸ்தா……..
சுக்கிர காயத்ரி
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே தனுர் ஹஸ்தாய தீமஹி
தன்னோ சுக்ரப் ப்ரசோதயாத்
சுக்கிர ஸ்லோகம்
ஹிமகுந்த ம்ருணா லாபம் தைத்யாநாம் பரமம் குரு
ஸர்வ ஸாஸ்த்ர ப்ரவக்தாரம் பார்கவம் ப்ரணமாம்யஹம்.

மேற் கண்ட ஸ்லோகங்களாலும், சுக்கிர ஸ்தலங்களுக்கு சென்று
வழிபடுவதனாலும், சுக்கிர தோஷங்கள் நீங்கி சந்தோஷகரமான வாழ்க்கை ,
இதைக் கேட்ட, tamilandvedas ப் பார்த்த அனைவருக்கும் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை
பிரார்த்தித்து விடை பெறுகிறேன்
நன்றி , வணக்கம்.

tags- சுக்கிரன்-2, Venus-2,
***

சிறந்த தானம் மூன்று, விடக் கூடாதவர்கள் மூவர்! (Post No.9044)

WRITTEN BY S NAGARAJAN                                    

Post No. 9044

Date uploaded in London – – 17 DECEMBER 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

சுபாஷிதம்

சிறந்த தானம் மூன்று, விடக் கூடாதவர்கள் மூவர், மதிப்பு போடவே முடியாதவர் மூவர்…!

ச.நாகராஜன்

சிறந்த தானங்கள் மூன்று!

த்ரீண்யாஹுரதி தானானி காவ: ப்ருத்வி சரஸ்வதி |

சிறந்த தானங்கள் மூன்று. அவையாவன பசு. நிலம், கல்வி!

*

விடக் கூடாதவர்கள் மூவர்!

பக்தம் ச பஜமானம் ச த்வாஸ்மீதி ச வாதினம் |

த்ரீநேதாச்சரணம் ப்ராப்தான் விஷமேபி சத்யஜேத் ||

விடவே கூடாதவர்கள் மூவர் :

பக்தன் – கடந்த கால பணியாளன்

பஜமான: – நிகழ்கால பணியாளன்

தவாஸ்மீதி வாதி – உங்களைச் சரணடைந்து பாதுகாப்பு கேட்பவன்

*

மதிப்பு போடவே முடியாதவர் மூவர்!

த்ரய ஏவாதனா ராஜன் பார்யா தாஸஸ்ததா சுத: |

யத்தே சமதிகச்சதி யஸ்ய தே தஸ்ய தத்தனம் ||

மனைவி, பணியாளன், மகன் ஆகிய இந்த  மூவருக்கு மதிப்பு போடவே முடியாது. விலை மதிக்க முடியாத செல்வங்கள் இவர்கள்.

*

கடன் கொடுக்கவே கூடாதவை மூன்று

புஸ்தகம் வனிதா வித்தம் பரஹஸ்தகதம் கதம் |

யதி சேத் புனராயாதி நஷ்டம் ப்ரஷ்டம் ச கண்டிதம் ||

புஸ்தகம், பெண், பணம் இந்த மூன்றையும் கடனாகக் கொடுக்கவே கூடாது.

ஒருவேளை திரும்பி வந்தாலும் புஸ்தகம் சிதிலமாகி இருக்கும்; பெண் ப்ரஷ்டையாகி இருப்பாள், வந்த பணம் குறைந்தும் சில்லறையாகவும் இருக்கும்!

*

புரிந்துகொள்ளவே முடியாத அளவு சக்தி கொண்டவை மூன்று!

அசிந்த்யோ ஹி மணி மந்த்ர ஔஷதீனாம் ப்ரபாவ |

நம்மால் புரிந்து கொள்ளவே முடியாத அளவு அளப்பரிய சக்தி கொண்டவை மூன்று!

அவையாவன ரத்தினக் கற்கள் (மணி), மந்திரம், மூலிகைகள்

*

அலங்காரங்கள் மூன்று

தத்ர ப்ரதமம் சப்தார்தோபகதத்வேன த்ரைவிதமலங்காரவர்கஸ்ய

ப்ரதாபருத்ரீயம் , சப்தாலங்கார ப்ரகரணம்

கவிதையில் வரும் அலங்காரங்கள்  மூன்று! அவையாவன வார்த்தை, அர்த்தம், வார்த்தையும் அர்த்தமும்!

*

தவிர்க்க வேண்டியவை மூன்று

வாக்வாதார்த்த சம்பந்ததத்பத்னீபரிபாஷணம் |

யதிச்சேத் விபுலாம் மைத்ரீம் த்ரிணி ந காரயேத் ||

 கருட புராணம் 114.5

ஒரு நட்பு நீடித்து இருக்க வேண்டுமானால்

வாக்கு வாதம் கூடாது

அர்த்த சம்பந்தம் அதாவது பணம் தொடர்பான விஷயங்கள் இருக்கக் கூடாது.

தத் பத்னி பரிபாஷணம் அதாவது நண்பனுடைய மனைவியுடன் பேசக் கூடாது.

இந்த மூன்றும் நட்பு நீடித்து இருக்க வேண்டுமானால் தவிர்க்கப்பட வேண்டும்.

*

போரினால் பெறும் பயன்கள் மூன்று

பூமி மித்ரம் ஹிரண்யம் ச விக்ரஹஸ்ய பலம் த்ர்யம்

ஹிதோபதேசம் III- 66

விக்ரஹ பலம் அதாவது போரினால் ஏற்படும் பலன்கள் மூன்று

பூமி கிடைக்கும். நட்பு கிடைக்கும் (போரில் உதவிக்கு வருவோர்). தங்கம் கிடைக்கும்.

*

tags- tags —   தானம் ,மூன்று, 

INDEX 39 FOR LONDON SWAMINATHAN’S ENGLISH & TAMIL ARTICLES (9043)

PICTURES FROM SYDNEY, AUSTRALIA

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9043

Date uploaded in London – –16 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

 2016  FEBRUARY  ARTICLES

HOW TO GET ACCESS FOR THESE POSTS?

JUST COPY THE TITLE YOU WANT TO READ AND PASTE IT IN GOOGLE SEARCH AND ADD “FROM tamilandvedas.com or swamiindology.blogspot.com”

IF YOU HAVE ANY PROBLEM, PLEASE CONTACT US. OUR E MAIL IS IN ALL THE 9000 PLUS POSTS.

INDEX 38 FOR LONDON SWAMINATHAN’S  ENGLISH & TAMIL ARTICLES 

FEBRUARY TAMIL 2016 INDEX

நன்கொடை/ தானம் பற்றிய பழமொழிகள், பாடல்கள் (Post No.2584); 29-2-2016

ரோமானிய சக்ரவர்த்தியின் ‘வில்லன்’ சிரிப்பு! (Post No 2579) 27/2

தலைகீழாகக் காற்றில் நடந்த பெண்ணைக் காப்பாற்றிய நீதிபதி! (Post No.2576); 26/2

ஆசிரியரைப் பழிவாங்கிய நீதிபதி! Post No. 2573; 25/2

மூன்றாம் கடிதம்:மாமிகளின் துயரமும் மருமக்களின்

கொண்டாட்டமும் (Post No. 2570); 24/2

இரண்டாவது மாமியின் கடிதம்! (Post No 2567); 23/2

மாமியின் துயரம்! (Post No 2564);22/2

ஆர்டிக் பிரதேச பனிக்கட்டிக்கு அடியில் வைரக்கற்கள்! (Post No 2561);21/2

விஸ்வ பாவனா ( யாதும் ஊரே! யாவரும் கேளிர்) (Post No. 2557);20/2

லண்டனில் இந்திய மஹாராஜா மோதிரங்களும் காதல்கிளிகளும் (Post No. 2556);19/2

கடலுக்கும் ஆற்றுக்கும் இடையே உரையாடல்! (Post No 2551);18/2

ராஜா தந்த முத்தை பிச்சைக்காரனுக்கு கொடுத்த பூசாரி (Post No 2550);17/2

நம்பினார் கெடுவதில்லை: மரண தண்டனை ரத்து! (Post No.2546);16/2

மெத்தக் கற்ற எத்தன் சிட்டாய்ப் பறந்துபோனான்! (Post No.2542);15/2

108 உபநிஷத்துகளின் பட்டியல் (Post No. 2539);14/2

பேசத் ‘தெரிந்தவன்’! (Post No.2536);13/2

புனித அய்யர் மலையைப் பற்றிய கதைகள்! (Post No. 2533);12/2

திருவள்ளுவர் பற்றிய பழைய புத்தகம் (Post No. 2532);12/2

பிரிஸ்பேன் நகர அதிசயங்கள்! (Post No. 2529); 11/2

ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் சுவையான வரலாறு (Post No. 2526);10/2

ஆஸ்திரேலியப் பழங்குடி கலாசாரத்தில் ‘அக்னி’ (Post No. 2523); 9/2

ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களிடையே இந்துமத கருத்துக்கள் (Post No. 2520);8/2

ஆஸ்திரேலியப் பழங்குடிகள் தமிழர்களா? (Post No. 2517); 7/2

ஆஸ்திரேலியாவில் ஒரு அற்புத புத்தர் கோவில்! (Post No.2514);6/2

ஆஸ்திரேலியாவில் கடலோர பொங்கு நீரூற்று (Post No 2512); 6/2

உலகின் மிகப் பெரிய இயற்கை அதிசயம்! (Post No 2510);5/2

தமிழ்ப் பாஷையறியாத தர்மராஜ பிள்ளை (Post No 2507)4/2

பாரதியாரின் நூலுக்கு 1908 ஆம் ஆண்டு

செந்தமிழ் மதிப்புரை! (Post No. 2503);3/2

சீனர்களின் அபார ஜோதிட நம்பிக்கை! (Post No. 2497);1-2-2016

XXXX

FEBRUARY ENGLISH 2016 INDEX

What are Panchangam? Panchmrutam? Panchagavyam? Pancha yajnam? (Post No. 2585); 29 பெப்ரவரி 2016

Interesting Story of the Greatest and Oldest Poet in the World! (Post No 2582); 28/2

Rules about Dhana/ Charity in Hindu Literature (Post No.2580);27/2

S NAGARAJAN POSTS – ALREADY INDEXED SEPARATELY – 2583, 2581, 2578, 2575,2569,2566,2563,2560, 2558, 2554, 2552, 2548, 2545, 2541, 2538, 2535, 2531, 2528, 2525, 2522, 2519, 2516, 2513, 2509, 2506,2504, 2499, 2496.

What are you reading? My son! (Post No 2577); 26/2

Kings, Fools and Scoundrels!(Post No. 2574); 25/2

Judge’s Sweet Revenge on a Teacher! (Post No 2571); 24/2

Win Anger by serenity, wickedness by Virtue (Post No. 2568); 23/2

When angry, count a hundred! (Post No 2565); 22/2

Who will shut the door? Husband and Wife Quarrel! (Post No 2562); 21/2

Hindu Science: Four Types of Speech (‘Vak’)- Post No 2559; 20/2

Grace will last, Beauty will blast! (Post No 2555);19/2

Famous Doctor refused to write a book! Why? (Post No. 2553); 18/2

Why do you praise me without knowing past and present? – Buddha (Post No.2549);17/2

The difference between a Sage and an Astrologer (Post No.2547);16/2

The Big and the Small: Conversation between the River and the Ocean! (Post No. 2544);15/2

Priest and the Emperor (Post No.2540);14/2

Vows made in Storms are forgotten in Calms! (Post No.2537);13/2

Miser or Philanthropist? 5 Anecdotes (Post No. 2534); 12/2

Sixty Stories about Ayers Rock!(Post No.2530);12/2

Let them Enjoy or You Speak! Eleven Anecdotes (Post No. 2527);10/2

‘An inch of Gold will not buy an inch of Time’ (65 Sayings on TIME) – Post No 2524;9/2

Fire/ Agni in Vedic and Aborigine Cultures (Post No. 2521);8/2

Hindu Thoughts in Australian Aborigines’ Folklore! (Post No. 2518);7/2

Are Australian Aborigines Tamil Hindus? (Post No. 2515); 6/2

Absent minded Professor (Post No 2511);5/2

New COLOURING Book on Astrology! (Post No 2508);4/2

Eating Habits of Famous Authors (Post No 2505);3/2

Amazing Ganesh Figure in Australian Hills! (Post No 2502);2/2

Chinese belief in Astrology (Post No. 2498); 1-2-2016

— SUBHAM —

TAGS– INDEX-39, SWAMINATHAN, FEBRUARY 2016