


Post No. 9628
Date uploaded in London – –21 May 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
LEO TOLSTOY
(1828 – 1910)
ரஷ்ய நாவலாசிரியர் லியோ டால்ஸ்டாய்

லியோ நிகோலாயவிச் டால்ஸ்டாய் LEO NIKOLAYEVICH TOLSTOY , ரஷ்யாவின் புகழ்பெற்ற நாவலாசிரியர். போரும் சமாதானமும் (WAR AND PEACE), அன்னா கரீனினா (ANNA KARENINA) ஆகிய இரண்டு நாவல்கள் இவருடைய புகழ்பெற்ற படைப்புகள்.
அவரது குடும்பம் பணக்கார ரஷ்ய குடும்பம். அவர்கள் நிலச் சுவான்தார்கள்; குடும்பத்தில் நாலாவது மகனாகப் பிறந்தார் டால்ஸ்டாய். அவர்களுடைய சொத்துக்கள் ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவுக்கு அருகில் இருந்தது. இளம் வயதிலேயே பெற்றோர்கள் இறந்ததால் உறவினர்கள் இவரை வளர்த்தனர். அவர் எழுதிய சுய சரிதையில் தனது இளமைக்காலம் சுகமாகக் கழிந்தது என்றே குறிப்பிட்டுள்ளார். பணக்கார குடும்பம் என்பதால் வீட்டிலேயே கல்வி கற்றார். சட்டம், ஆசிய மொழிகள். மற்றும் வரலாறு ஆகியவற்றைப் பயின்றார். ஆனால் கனவுலகத்தில் சஞ்சரித்துக் கொண்டே இருந்ததால் பட்டப்படிப்பில் தோல் வியுற்றார் . பின்னர் மாஸ்கோவுக்கு சென்று ‘பட்டிக்காட்டான்’ போல வாழ் ந்தார்.
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் இவருடைய இளமைக்காலம் சுகபோகங்களுடன் கழிந்தது. ஆனால் இந்த சுகபோகம் அவருக்கு அலுப்பு சலிப்பை உண்டாக்கியது. பயனுள்ள பணி ஏதேனும் செய்ய அவா ஏற்பட்டது. ஆகவே 23 வயதில் ராணுவத்தில் சேர்ந்து காஸக்ஸ் (COSSALKS) இனத்தவரை எதிர்த்துப் போராடினார். பின்னர் கிரிமியன் போரில் சேர்ந்து கிரீமியாவில் CRIMEA-வில் போராடினார்.
1852-ஆம் ஆண்டில் தனது இளமைக்கால வாழ்வு குறித்து எழுதினார். இதன்மூலம் பீட்டர்ஸ்பர்கில் அவருக்கு புகழ் கிட்டியது. அங்கு 34 வயதில் 18 வயதே நிரம்பிய சோஃபியா பஹ்ர் (Sofia Behrse) ஸை திருமணம் செய்து கொண்டார். பத்து குழந்தைகளுக்குத் தந்தையானார்.. நகர வாழ்வை வெறுத்து நாட்டுப்புறத்திலுள்ள குடும்ப எஸ்டேட்டிற்குச் சென்றார். அங்குதான் அவருடைய புகழ்பெற்ற ‘போரும் சமாதானமும்’ (WAR AND PEACE) உருவானது. நெப்போலியனுக்கு எதிராக ரஷ்யா போரிட்டபோது பணக்கார ஏழை மக்களின் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை இக்கதை விளக்குகிறது. அதை முடித்தவுடன் ‘.அன்னா கரீனினா’ நாவலை எழுதினார்.
இவரது புகழ் திக்கெட்டும் பரவினாலும் டால்ஸ்டாய்க்கு வாழ்வில் நிறைவு ஏற்படவில்லை. தான் பணக்காரராகவும் குடியானவர்கள் ஏழைகளாகவும் இருப்பதை எண்ணி வருந்தினார். ஆகவே குடியானவர் போல உடையணிந்து களத்தில் இறங்கினார்.
எழுதி எழுதிப் புகழ் பரப்புவதைவிட ஆன்ம முன்னேற்றமே தேவை என்று கருதிய அவர், எழுதுவதையே ஒரு கட்டத்தில் நிறுத்திவிட்டார்.
இவர் குடியானவர் போல உடையணிந்து பணிபுரிவதை அவர் மனைவியால் புரிந்து கொள்ளமுடியவில்லை. இல்லறவாழ்வில் கருத்து வேறுபாடு நிகழ்ந்தது, இதன் விளைவு மனைவி ஓட்டம் பிடித்தார்.
போர், பணம், சர்ச், லோகாயத விஷயங்கள் ஆகியவை மீது அவருக்கு வெறுப்பு ஏற்பட்டது. ஆன்மீக வாழ்வு வாழ ஆசைப்பட்டார். My Confession ‘மை கன்ஃ பெசன்’ என்ற நூலில் இதை எழுதியும் வைத்தார்.
டால்ஸ்டாய் தன் உயிரினும் பெரிதாக நேசித்த மகள் அலெக்ஸாண்ட்ராவுடன் பயணம் புறப்பட்டார். மத்திய ரஷ்யவில் ஒரு ரயில் நிலையத்தில் நோய்வாய்ப்பட்டார். ரயில் நிலைய அலுவலக அறையில் உயிர் நீத்தார்.
Xxx



என் தந்தையின் மொழிபெயர்ப்பு
என் தந்தை தினமணி பொறுப்பாசிரியர் வெ .சந்தானம் .
அன்னா கரீனினா நாவலை அன்னா கரீனா என்ற பெயரில் 1947ல் மொழி பெயர்த்தார். அதை சென்னை திருவல்லிக்கேணி தமிழ்ச் சுடர் நிலையம் மார்ச் 22, 1947-ம் ஆண்டில் வெளியிட்டது; நீண்ட நாவல். சுமார் ஆயிரம் பக்கம் உடையது.
‘ .
அன்னா கரீனினா’ என்பதை தமிழில் “கரீனா” என்று சுருக்கியதற்குக் காரணத்தை வெ.சந்தானம் விளக்கியுள்ளார். அந்தப் பெயர் நிறைய இடங்களில் வருவதாலும் அத்துடன் வேற்றுமை உருபுகளைச் சேர்க்கையில் படிப்பதற்குக் கடினமாக இருக்கும் என்பதாலும் கரீனா என்று பெயர் சுறுக்கப்பட்டது என்கிறார் .
அதற்கு அ . கி கோபாலன் எழுதிய பதிப்புரையில் பின்வருமாறு எழுதினார் :-
“அடக்கம், அன்பு ,அமைதி ஆகிய இம்மூன்றும் ஒருங்கே குடிகொண்டுள்ள நண்பர் ஸ்ரீ வெ . சந்தானம் அவர்களின் மொழி பெயர்பு பற்றி ஒரு விஷயத்தை மட்டும் கூறவேண்டியது அவசியமாகிறது. ‘அண்ணா கரீனா’ வை மிக அழகிய, எளிய பாஷையில் தம்முடைய இடைச் செருகல் எதுவுமின்றி , மூலம் எப்படியோ அப்படியே, ஓரிரண்டு பகுதிகளை மட்டும் சுருக்கி, இந்த கலைப் பொக்கிஷத்தை தமிழில் சமைத்த பெருமை அவருடையதாகும் “.
காந்திஜிக்கு குரு போன்றவர் டால்ஸ்ட்டாய் என்பதையும் கோபாலன் கூறியதோடு அவருடைய புத்துயிர் (Resurrection) என்ற நாவலும் பதிப்பிட ப்பட்டு வருகிறது என்று எழுதியுள்ளார்.
ரா.ஸ்ரீ. தேசிகன் எழுதிய முகவுரையில் டால்ஸ்டாய் பற்றி நிறைய எழுதியுள்ளார்; இதோ ஒரு சில குறிப்புகள் :
“1870-ம் ஆண்டில் பிப்ரவரி 24-ம் தேதி டால்ஸ்டாயின் மனைவி தன் சகோதரிக்கு ஒரு கடிதம் எழுதினாள் அந்தக் கடிதம் இங்கே நோக்கத் தகுந்தது :
‘உயர்ந்த இடத்தில் பிறந்து , உயர்ந்த இடத்தில் வாழ்க்கைப்பட்ட ஒரு பெண் மெய் நெறியிலிருந்து தவறிவிடுகிறாள் . அப்பெண்ணின் குற்றத்தைச் சித்தி ரிக்காது , அவருடைய பரிதாபமான நிலையை சித்திரிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உதயமாயிருக்கிறது’ என்று கணவர் எனக்குச் சொன்னார்.
ஆனால் 1875ம் ஆண்டிலிருந்து நாவல் சிறிது சிறிதாக வெளிவந்தது. 1877ம் வருஷம்தான் நாவல் முழுதும் வெளியாயிற்று. எத்தனை வருஷமாக கதை மனதில் ஊறி வந்திருக்கிறது பாருங்கள் . முதற் கதை அமைப்பை இரண்டு மாதங்களில் முடித்துவிட்டார். ஆனால் புத்தகம் வெளியேற மூன்று வருஷங்கள் கழிந்துவிட்டன. கதையை அடித்துத் திருத்தி மறுபடியும் அடித்துத் திருத்தித்தான் , மனத்தில் கொண்ட கரு, உரு அடைகிறவரையில் மாறுதல்களைச் செய்துகொண்டே போனார். ஒரு கலைஞனுடைய மனச் சாட்சியை சீக்கிரம் திருப்தி செய்துவிட முடியாது. அது ஆம், அது சரியே என்று ஆமோதிக்கிற வரையில் அரும்பாடுபடவேண்டும்.”
எனது தந்தையின் மொழிபெயர்ப்புக்கு ரா.ஸ்ரீ. எழுதிய முகவுரையில் மேலும் கூறுகிறார் :-
‘.
அன்னா கரீனா’வை வசித்து உவகை நறவை மாந்தி மெய்ம் மறந்து டாஸ்டாவ்ஸ்கி பேசுகின்றார் –
“டால்ஸ்டாய் சாதாரண மனுஷ்யநல்லர். அவர் ஒரு தெய்வக்கலைத் தச்சன் என்று தெருவெல்லாம் சொல்லிக்கொண்டே போகிறார். இந்நாவலைப் போல முன்பு கிடையாது. யார் டால்ஸ்டாயை வெல்ல முடியும்? ஐரோப்பா கண்டத்தில் எந்த ஆசிரியர் அவரை அணுக முடியும்? என்று டாஸ்டாவ்ஸ்கி புகழ்கிறார்.
Old articles in this blog

Please Help to Find our Father’s Tamil Translation of Anna …
https://tamilandvedas.com › 2011/…/…
7 Nov 2011 — The scans are below: அன்னா கரீனினா – வெ. சந்தானம் மொழிபெயர்ப்பு, 1947: அன்னா கரீனா …
அன்னா கரீனா – 2 (Post No.8516) | Tamil and Vedas
https://tamilandvedas.com › அன்…
16 Aug 2020 — SRI V SANTANAM DURING STRUGGLE FOR INDEPENDENCE; IMPRISONED WITH SRI K KAMARAJ IN VELLORE JAIL. WRITTEN BY S …
‘அன்னா கரினினா’ | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › அ…
·
15 Aug 2020 — அன்னா கரீனா : எனது தந்தையார் தினமணி … லியோ டால்ஸ்டாய் எழுதிய அன்னா கரீனா …
அன்னா கரீனா – 4 | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › அ…
18 Aug 2020 — GEMMOLOGY MAGAZINE, YEAR 1999 SRI V SANTANAM WITH SWAMIJI KRISHNA OF AYAKKUDI. WRITTEN BY S NAGARAJAN. Post No.
அன்னா கரீனா – 3 (Post No.8522) | Tamil and Vedas
https://tamilandvedas.com › அன்…
17 Aug 2020 — Thanks for your great pictures. அன்னா கரீனா – 3. ச.நாகராஜன். 1. அன்னா கரீனா நாவலுக்கு முகவுரை …
Xxx subham xxx

tags- ரஷ்ய நாவலாசிரியர், லியோ டால்ஸ்டாய், அன்னா கரீனா