ரோமானிய பழங் கவிஞர் ஹோரஸ் (9759)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9759

Date uploaded in London – –21 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

ரோமானிய பழங் கவிஞர் ஹோரஸ் 

மேலை உலகத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பழங் கவிஞர்களில் (Latin Language Poets) சிறப்பிடம் பெறுபவர் ஹோரஸ் HORACE . இத்தாலி நாட்டின் தென் பகுதியில் உள்ள வெனுசியாவில் (VENUSIA)  அவர் பிறந்தார். அவருடைய தந்தை ஒரு அடிமை (Slave). பொருள் கொடுத்து அடிமைத் தளை யிலிருந்து விடுபட்டார். ‘தந்தை மகற்காற்றும் உதவி அவையத்து முந்தி இருப்பச்  செயல்’ என்பதைக் கருத்திற்கொண்டு மகனுடைய கல்விக்காக ரோம் நகருக்குச் சென்றார். அங்கே ஹோரஸ் கல்வி கற்ற பின்னர் அந்தக் காலத்தில் புகழ் மிகு கிரேக்க அகாடமியில் கற்பதற்காக ஏதென்ஸ் ATHENS நகரத்துப் போனார்.

பிறந்த தேதி – டிசம்பர் 8, கி.மு.65

இறந்த தேதி- நவம்பர் 27, கி.மு 8

வாழ்ந்த ஆண்டுகள் – 56

படைப்புகள் – LATIN கவிதைத் தொகுப்புகள்

 கி.மு ஆண்டுகள்

35- சடைர்ஸ் – முதல் புஸ்தகம் SATIRES BOOK I

30 – சடைர்ஸ் – இரண்டாம்  புஸ்தகம் SATIRES BOOK II

30- எபோட்ஸ் EPODES

23 – ஓட்ஸ் (1,2,3 தொகுப்புகள்) ODES- BOOK I, II, III

20 – எபிஸ்டில்ஸ் /கடிதங்கள் – முதல் புஸ்தகம் EPISTLES BOOK I

14- எபிஸ்டில்ஸ் /கடிதங்கள் – இரண்டாம்  புஸ்தகம் EPISTLES BOOK II

14- ஓட்ஸ் (நாலாவது தொகுப்பு) ODES BOOK IV

8- ஆர்ட்ஸ் பொயட்டிகா / கவிதைக் கலை ARTS POETICA / ART OF POETRY

கி.மு 44ல் ஜூலியஸ் சீஸர் படுகொலை நடந்த நாளில் ஹோரஸ் , அகாடமியில் படித்துக் கொண்டு இருந்தார். ரோமானிய சாம்ராஜ்யம் அதிபயங்கர குழப்பத்தில் வீழ்ந்தது. ஸீஸர் படுகொலையில் ஈடுபட்டவர் ப்ரூட்டஸ் (Brutus) . அவர்  அமைத்த படையில் ஹோரஸ் சேர்ந்தார் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் பரூட்டஸை அகஸ்டஸ் சீசர் மற்றும் மார்க் ஆன்டனி தோற்கடித்தனர்.

ஹோரசுக்கு பெருத்த ஏமாற்றம்; சொல்லொணா வருத்தம். அவரது தந்தையும் இறந்த நிலையில் புதிய ஆட்சியாளர்கள் ஹோரசின் சொத்துக்களை அபகரித்தனர்.. ஒரு சின்ன வேலையில் சேர்ந்த ஹோரஸ் பணம் வேண்டும் என்பதற்காக, கிடைத்த நேரத்தில் கவிதைகளை எழுதத் தொடங்கினார். அவருடைய கவிதைகளின் அழகைக் கண்டு வியந்த அக்காலத்தின் மிகப்பெரிய கவிஞர் வர்ஜில் (Virgil) ,  ஹோரஸை மெசினஸ்  MAECENAS என்ற பணக்கார வள்ளலிடம் அறிமுகப்படுத்தினார் அவர் கம்பனை சடையப்ப வள்ளல் ஆதரித்தது போல ஹோரஸை ஆதரித்தார்.

முப்பதே வயதில் ஹோரஸ் , சடைர்ஸ் SATIRES என்ற அங்கதச் செய்யுளை இயற்றினார். ஐந்தே ஆண்டுகளில் அத்தொகுப்பின்  இரண்டாபவது தொ குதியை வெளியிட்டார் . அத்தோடு எபோட்ஸ்(Epodes) என்ற கவிதைத் தொகுப்பும் வெளியானது ;வள்ளல் மெசினஸ் மிகவும் மகிழ்ச்சி அடைந்து இத்தாலியிலுள்ள அவரது பண்ணை ஒன்றை  ஹோரசுக்கு அளித்தார். இது ரோம் நகரிலிருந்து  தொலைவில் இருந்ததால் ஹோரசசுக்கு நிம்மதி கிடைக்கும் என்று வள்ளல்  நினைத்தார். அ ந்த அமைதியான சூழ்நிலையில் ஹோரசும் அருமையான இசைக் கவிதைகளை (ஓட்ஸ்) இயற்றினார் ODES / ஓட்ஸ் என்னும் பாணியில் 88 கவிதைகளின் தொகுப்பு அது

ODES/ ஓட்ஸ் என்பன ஏதேனும் ஒரு பொருளையோ பிராணி, பறவை ஆகியவற்றையோ நோக்கிப் பாடும் “கூவி அழைக்கும் மகிழ்ச்சிப் பாட்டு” ஆகும்.

வர்ஜில் இறந்த பின்னர் அவருக்கு அடுத்த புகழ் பெற்ற லத்தின் மொழிப் (Latin Poet) புலவர் இவர்தான்.

–subham–

tags- ரோமானிய, கவிஞர் , ஹோரஸ், Horace

உடலுக்கு மண் தேவையா? மண்ணின் மகத்தான சக்தி -2 (Post.9758)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9758

Date uploaded in London – –21 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

மணல் என்னும் மூலகத்தைப் பயன்படுத்தி பெண்கள் தங்கள் மார்பகங்களைப் பெரிதுபடுத்திக் கொள்வதை நேற்று கட்டுரையின் முதல் பகுதியில் கண்டோம். சிலிகோன் (SILICONES) எனப்படும் செயற்கை மார்பகங்கள் உடலுக்குள் ஒழுகினால் ஏற்படும் புற்றுநோய் முதலிய பிரச்சினைகள், வழக்கு வாய்தாக்களை உண்டாக்கி, கம்பெனிகளை திவால் ஆக்கியதால்,  சலைன் (SALINE) உப்புநீர்க் கரைசல் உடைய செயற்கை மார்பகங்கள் புழக்கத்துக்கு வந்தன. இவை உடைந்தோ பிரிந்தோ ஒழுகினாலும் சிலிகோன் போன்ற ஆபத்துக்கள் இதில் இல்லை.

மக்னீஷியம் சிலிகேட் உடைய ஆஸ்பெஸ்டாஸ் , புற்று நோயை உண்டாக்குவதால் மேலை நாடுகள் அதைத் தடை செய்ததையும் கண்டோம் .

இது தவிர  சிலிகோஸிஸ் (SILICOSIS) என்னும் ஒரு நோயும் இருக்கிறது; சுரங்கத் தொழிலார்கள், கல்லுடைக்கும் தொழிலில் உள்ளோர் ஆகியோருக்கு சிலிக்கோசிஸ் வரும். நுண்ணிய மணல் துகள் நுரையீரலில் படிந்து மூச்சு விடுவதை சிரமமாக்கும் நோய் இது.

சிலிகோன் (Silicone) என்னும் பொருளுக்கு வேறு சில பயன்களும் உண்டு. உடலில் இருந்து வெளியேறும் வாயுவைக்  (wind/ gas) கட்டுப்படுத்த சிலிகோன் மாத்திரைகள்  பயன்படும். நாம் சில வகைப் பொருட்களைச் சாப்பிட்டாலோ அல்லது வயிறு, குடலில் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டாலோ இந்த வாயு (wind breaking)  உபாதை உண்டு. இதே போல பசுமாடுகளுக்கும் வரும். இவற்றைக் குணப்படுத்த சிலிகோன் உதவுகிறது. இந்த சிலிகோனை ப்ராஸ்டேட் கேன்ஸர் (Prostate cancer) எனப்படும் ஆண்களுக்கு வரும் புற்றுநோயைக் குணப்படுத்த பயன்படுத்தும் ஆய்வுகள்  சுவீடனில் நடைபெறுகின்றன.

***

பொருளாதார உபயோகங்கள்

சிலிகா எனப்படும் மணலினால் கிடைக்கும் பொருளாதார உபயோகங்கள் மிகவும் அதிகம். அவைகளைக் காண்போம் . அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப்பகுதியில் மணல் என்னும் மூலகத்தை டிரான்சிஸ்டரில் பயன்படுத்தும் தொழில்நுட்பம் வளர்ந்தது. இத்தகைய டிரான்சிஸ்டர்கள் (Silicon  Chips)  நம் கம்ப்யூட்டருக்குள் உட்கார்ந்து கொண்டு மகத்தான வேலைகளை செய்கிறது. இது போன்ற புதுமையான கம்பெனிகள் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் வளரவே அந்த இடமும் அத்தொழிலும் சிலிகான் வாலி (SILICON VALLEY) என்ற பெயரைப் பெற்றது. இங்கு இந்தியர்கள் ஏரளாமானோர் பணிபுரிவது குறிப்பிடத்தக்கது

***

சூரிய ஒளித் தகடுகள் (Solar Panels)

இந்தியா போன்ற நாடுகளில் வெய்யிலுக்கு குறைவே இல்லை. அத்தகைய சூரிய ஒளியையும் வெப்ப சக்தியாக, மின்சார சக்தியாக, பயன்படுத்தும் தொழில்நுட்பம் வேகமாக முன்னேறி வருகிறது. சூரிய ஒளி விழும் இதயத்தில் சிலிகான் உடைய தகடுகளை (Solar Panels) வைத்தால் அவை நமக்கு மின் சக்தியையும், வெப்ப சக்தியையும் தரும் .அண்மைக்காலத்தில் கட்டப்படும் கட்டிடங்களின் கூரையில் சூரியத் தகடுகள் பொருத்தப்படுவதால்  காலை நேரத்தில் குளிப்பதற்கு வெண்ணீர் போடும் அவசியமே இல்லை. குளிர்காலத்தில் வீட்டை வெப்பமாக்கவும் இவை பயன்படும்; முதலில் மிகவும் விலை கொடுத்து வாங்க வேண்டியதை இப்போது மலிவு விலையில் விற்கின்றனர் . இந்தியாவில் தொலை தூர கிராமங்களிலும் மலை , காடுகளிடையே உள்ள குடிசைகளிலும் கூட சூரிய விளக்குகள், சூரிய அடுப்புகள் வந்துவிட்டன .

மணலை மிகவும் சுத்தபடுத்தி அத்துடன் வெவ்வேறு ரசாயனப் பொருட்களைக் கலக்கும்போது பல பயனுள்ள வசதிகள் கிடைக்கின்றன. சிலிகோன் பசை (putty) , சிலிகோன் ரப்பர் ஆகியன வீட்டுக்குள்ளேயே  பல இடங்களில் பயன்படுகிறது. கார்போரண்டம் (Carborundum)  என்ற வைரம் போன்ற கடினமான பொருள் சாண்ட் பேப்பர் (Sand Paper) என்னும் உப்புத் தாளில் பயன்படுகிறது .

சிமெண்ட்  மற்றும் கண்ணாடி செய்ய மணல் தேவைப்படுவதை எல்லோரும் அறிவர்.

குவார்ட்ஸ் (Quartz) எனப்படும் பொருள் கடிகாரங்கள், ரேடியோ , டெலிவிஷன் ஆகியவற்றில் அரிய வேலைகளை செய்கிறது

சோடியம் சிலிகேட் (Sodium Silicate) என்னும் பொருள் சுத்தப்படுத்தும் பவுடர்கள், திரவங்களில் (Detergents, Bleaching Powder) பயன்படுகிறது. எண்ணெய்க் கிணறுகளில் இருந்து உற்பத்தியை அதிகரிக்கவும் உபயோகப்படுத்தப்படுகிறது.

உலகெங்கிலும் மணல் இருந்தாலும் மற்ற ரசாயனப் பொருள்களுடன் கலந்து சிலிக்கேட் உப்புக்களாகக் கிடைக்கும் இடத்தில் அவற்றைத் தோண்டி எடுக்கும் சுரங்கப் பணிகளும் நடக்கின்றன.

இந்தியா இத்தாலி, ஆஸ்ட்ரியா , ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா , கனடா , அமெரிக்கா , பிரேசில் முதலிய நாடுகளில் டாக்Talc , மைக்கா Mica முதலிய ரூபங்களில் மணலின் உப்புக்கள் கிடைக்கின்றன. அகேட் , அமெதிஸ்ட் ஓபல் (Agate, Amethyst, Opal) முதலிய ரத்தினைக் கற்காளாகவும் தோண்டி எடுக்கப்படுகின்றன. மணலை ரசாயன முறையில் மற்ற உலோகங்களுடன் கலந்து கலப்பு உலோகம் (Alloy) தாயாரிக்கையில் சில சிறப்பு இயல்புகள், குணங்கள் ஏற்படுகின்றன .

***

மணல் என்னும் சிலிகா-வின் ரசாயன குணங்கள்

குறியீடு – Si எஸ் ஐ

அணு எண் -14

உருகு நிலை – 1410 டிகிரி C/ சி 

கொதி நிலை – 2355 டிகிரி C/ சி   –

மணல்= சிலிகன் டை ஆக்ஸைட் silicon di oxide

மூன்று ஐசடோப் உண்டு. ஆனால் கதிரியக்கம் கிடையாது.

–subham–tags- மண், மணல், சிலிக்கான் , குவார்ட்ஸ், சூரிய தகடு 

ஆலயம் அறிவோம் – திருநாகேச்சரம் (Post No.9757)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 9757

Date uploaded in London – – 21 JUNE   2021          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 20-6-2021 அன்று ஒளிபரப்பான உரை!

காளமேகம் நிறக் காலனொடு, அந்தகன் கருடனும்

நீளமாய் நின்று எய்த காமனும் பட்டன, நினைவு உறின்,

நாளும் நாதன் அமர்கின்ற நாகேச்சுரம் நண்ணுவார்,

கோளும் நாளும் தீயவேனும், நன்கு ஆம், குறிக்கொண்மினே

திருஞானசம்பந்தர் திரு நாமம் போற்றி! 

ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது நவகிரக ஸ்தலங்களுள் ராகு ஸ்தலமாக அமையும் திருநாகேச்சரம் தலமாகும். இது கும்பகோணத்திற்குக் கிழக்கே 6 மைல் தொலைவில் அமைந்துள்ளது.

இங்குள்ள நாகநாத ஸ்வாமி திருக் கோவிலில் ராகு பகவான் தன் இரு தேவியருடன் தனிக் கோயில் கொண்டு தன்னை வணங்கும் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.ராகு பகவானுக்கு ராகு கால வேளைகளில்  இங்கு அபிஷேகம் செய்வது சிறப்பான ஒரு நிகழ்ச்சியாகும். தினமும் பத்து முதல் 500 அபிஷேகம் வரை நடைபெறுகிறது. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் திரளாக வருகை புரிகின்றனர்.

ராகு பகவானுக்கு அபிஷேகம் செய்யும் போது அவர் திருமேனியில் வழிந்தோடும் வெண்மை நிறப் பால் நீல நிறமாக மாறுகிறது. பாதத்தை அடையும் போது பால் மீண்டும் தூய வெண்மை நிறமாக மாறித் தரையில் ஓடுவது அதிசயமான காணக் கண் கொள்ளாக் காட்சியாகும். இங்கு நாகராஜனான ராகு பகவான் சிவபிரானை பூஜை செய்து வழிபட்டதால் இந்தத் தலம் திரு நாகேஸ்வரம் என்ற பெயரைப் பெற்றது. கோவிலின் வெளிப் பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் ராகு பகவானைத் தரிசிக்கலாம். யோகத்திற்கு அதிபதியான யோககாரகனான ராகு பகவான் சிறந்த சிவபக்தர். சனி, செவ்வாய், புதன், சுக்கிரன், சந்திரன், சூரியன் ஆகிய கிரகங்களில் ஒன்றை விட ஒன்று பலம் மிக்கது. இந்த கிரகங்கள் அனைத்தையும் விட ராகுவும் கேதுவும் அதிக பலம் பெற்றவர்கள் என்பது ஜோதிட சாஸ்திரத்தின் கூற்றாகும். ஆகவே ராகு தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து காலம் காலமாக வழி படுகின்றனர்.

ராகு பகவானுக்கு அபிஷேகம் செய்யும் போது காப்பரிசி எனப்படும் வெல்லமும் அரிசியும் கலந்து நிவேதனம் செய்து விட்டு அதை சந்நிதியில் வைத்துப் பூட்டி விட்டுச் செல்வது வழக்கம். மறுநாள் வந்து பார்க்கும் போது அந்த அரிசி இருக்காது. அதை நாகம் வந்து தின்று விடும் என்பார்கள். 1986ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி நடந்த ஒரு அதிசய நிகழ்ச்சி இந்தக் கூற்றை மெய்ப்பிக்கும் வண்ணம் அமைந்தது. அன்று அர்ச்சகர் பூஜை செய்ய காலை 6 மணிக்கு வந்த போது விக்ரஹத்தின் திருமேனியில் ஐந்தரை அடி நீளமுள்ள பாம்புச் சட்டை ஒன்று மாலை போலத் தொங்கிக் கொண்டிருந்தது. இந்தச் செய்தி பரவி, பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து ராகு பகவானை தரிசித்தனர். பாம்புச் சட்டையின் வால் பகுதி ராகு பகவானின் இடப்புறமும் தலைப்பகுதி வலப்பக்கம் உள்ள அம்மனின் மேலும் இருந்தது. நாகம் அணிவித்த இந்த மாலையானது பக்தர்கள் தரிசனம் செய்யும் வண்ணம் ஒரு கண்ணாடிப் பேழையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தலத்தைப் பற்றிய புராண வரலாறு ஒன்று உண்டு.  தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க ராகுவானவர் ஒரு சிவராத்திரியில் நான்கு காலங்களில் முதல் காலத்தில் வில்வ வனமான குடந்தை கீழ்க்கோட்டத்தில் உள்ள ஸ்ரீ நாகேஸ்வரரையும் இரண்டாம் காலத்தில் சண்பக வனமான திரு நாகேஸ்வரத்தில் ஸ்ரீ நாகநாதரையும் மூன்றாம் காலத்தில் வன்னி வனமான திருப்பாம்புரத்திலும் நான்காம் காலத்தில் புன்னை வனமான நாகை காரோணத்திலும்  வழிபட்டு மறு நாள் உஷத் காலத்தில்  திருநாகேஸ்வரம் அடைந்து சாபவிமோசனம் அடைந்தார் என்பது ஐதீகம். ராகு பகவான் தன்னை இந்தத் திருத்தலத்திலேயே இருக்கச் செய்ய வேண்டுமென்று ஸ்ரீ நாகநாதரை வேண்ட, அதற்கு அவர் அருளி, ‘இங்கு உனது விஷம் யாரையும் தீண்டக் கூடாது’ என்று சொல்ல அப்படியே செய்வதாக ராகு வாக்களித்தார். ஆகவே இந்தத் தலத்தில் யாரையும் நாகம் தீண்டுவதில்லை.

கிழக்கு நோக்கி அமைந்துள்ள இந்தத் திருக்கோவில் நான்கு கோபுரங்களும் மூன்று பிரகாரங்களும், மட விளாகமும், தேரோடும் நான்கு வீதிகளும் கொண்டுள்ளது. கோயில் கிழக்கு மேற்காக 800 அடி நீளமும் தெற்கு வடக்காக 680 அடி நீளமும் கொண்டுள்ளது. ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும் எதிரே  விநாயகர், நந்தி தேவர் உள்ளனர். இடப்பக்கம் சூரிய புஷ்கரணியும் வலப்பக்கம் நூற்றுக்கால் மண்டபமும் புஷ்கரணி அருகே விநாயகர் சன்னிதியும் உள்ளன. அலங்கார மண்டபத்தில் நவக்கிரக சன்னிதியும், மூலவர் கருவறையை அடுத்துள்ள முதல் பிரகாரத்தின் மேல் புறம் விநாயகர், சந்திர சேகரர், முருகன், பஞ்ச லிங்கம், லக்ஷ்மி, பள்ளியறை முதலிய சன்னிதிகளும் உள்ளன. வடபுறம் அறுபத்து மூன்று நாயன்மார்கள் சன்னிதியும், நடராஜர் சன்னிதியும் உள்ளன. சேக்கிழார் பெருமான் இங்கு தங்கி சிவனடி பெற்றுள்ளார். அவரது திருவுருவமும், அவரது தாயார் திருவுருவமும் அவரது சகோதரர் பாலறாவாயர் திருவுருவமும் இங்கு உள்ளன. சேக்கிழார் சன்னதிக்கு வலப்பக்கம் அமைந்துள்ள அதிகார நந்தி விக்ரஹம் காண வேண்டிய அரிய விக்ரஹமாகும். இந்தக் கோவில் சோமஸ்கந்தர் அமைப்பைக் கொண்டது.

இந்தத் தலத்தில் அமைந்துள்ள கிரி குஜாம்பிகை சன்னதி மிகவும் சிறப்பு வாய்ந்தது. அம்மன் தவக் கோலத்தில் காட்சி அளித்து அருள் பாலிக்கிறார். இரு பக்கங்களிலும் கலை மகளும் திருமகளும் காட்சி அளிக்கின்றனர். தேவி சாமரத்துடன் கூடிய லக்ஷ்மியாலும் சரஸ்வதியாலும் இடப்புறத்திலும் வலப்புறத்திலும் பணிவிடை செய்யப்படுகிறாள்.  இந்தத் தலத்திற்கு உரிய ஸ்தல விருக்ஷம் செண்பக மரம். இங்கு சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், யம தீர்த்தம், பிரம தீர்த்தம், அக்கினி தீர்த்தம், துர்க்கா தீர்த்தம், கௌதம தீர்த்தம், பராசர தீர்த்தம், இந்திர தீர்த்தம், ப்ருகு தீர்த்தம், கண்வ தீர்த்தம், வசிஷ்ட தீர்த்தம் ஆகிய 12 தீர்த்தங்கள் உள்ளன. இந்தத் தலத்தில் வந்து வழிபட்டுள்ள திருஞானசம்பந்தர் இரு பதிகங்களையும், திருநாவுக்கரசர் மூன்று பதிகங்களையும், சுந்தரர் ஒரு பதிகத்தையும் அருளியுள்ளனர்.

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் நாகநாதரும் கிரி குஜாம்பிகையும், ராகு பகவானும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். நாவுக்கரசரின் நல் வாக்கு இது :   

வட்ட மா மதில் மூன்றுடன் வல் அரண்

சுட்ட செய்கையர் ஆகிலும் சூழ்ந்தவர்

குட்ட வல்வினை தீர்த்துக் குளிர்விக்கும்                                                   

சிட்டர் போல் திரு நாகேச்சரவரே!           

 tag- ஆலயம் அறிவோம், திருநாகேச்சரம்

பழமொழிகள் காலத்தின் பொக்கிஷம்!(Post No.9756)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9756

Date uploaded in London – –  –21 JUNE   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பழமொழிகள் காலத்தின் பொக்கிஷம்!

ச.நாகராஜன்

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு இனத்திலும் ஒவ்வொரு மொழியிலும் பழமொழிகள் உண்டு. இவை காலத்தின் பொக்கிஷம். இவை தரும் விவரங்கள் ஏராளம், ஏராளம்!

தமிழ் மொழியில் பழமொழிகள் பல்லாயிரக் கணக்கில் உண்டு. கடந்த பல்லாயிரம் வருடமாக வாழ்ந்து வரும் மூத்த குடியான தமிழ்க் குடி தனது அனுபவத்தையும், அறிவையும் இந்தப் பழமொழிகளில் கொட்டி வைத்திருக்கிறது.

இவற்றைத் தொகுக்கப் பல முயற்சிகள் கடந்த பல நூறு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இன்று வரை இந்த நல்ல முயற்சி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. வளரட்டும் இந்த முயற்சி.

10760 பழமொழிகளைத் தொகுத்து அனவரத விநாயகம் பிள்ளை என்பவர் 1912இல் ‘பழமொழி அகராதி’ என்ற நூலை வெளியிட்டார்.

1887இல் ஹெர்மன் ஜென்சன் என்பவர் 3644 பழமொழிகள் கொண்ட ஒரு நூலை வெளியிட்டார். இதில் தனது ஆங்கில மொழிபெயர்ப்பையும் சில அரிய விவரங்களையும் அவர் தொகுத்துத் தந்தார்.

1842இல் முதன் முதலாக பழமொழி தொகுப்பு நூல் வெளியானது. இதை யாழ்ப்பாணத்தில் இருந்த பெர்சிவல் தொகுத்து ‘பழமொழித் திரட்டு’ என்ற பெயரில் வெளியிட்டார்.

தமிழ் அறிஞரான கி.வா.ஜ. ஒவ்வொரு ஊருக்கும் செல்லும் போது அந்த வட்டாரத்தில் வழங்கி வந்த பழமொழிகளைத் தொகுக்க ஆரம்பித்தார்.

பின்னர் அவற்றை தொகுதிவாரியாக வெளியிட ஆரம்பித்தார்.

தமிழ்ப் பழமொழிகள் தொகுதி – 1இல் 5838 பழமொழிகள் இடம் பெற்றன. ‘அ’ முதல் ‘ஐ’ வரை அகர வரிசைப்படி இவை அமைக்கப்பட்டுள்ளன.

அடுத்து தொகுதி – 2இல் 5839 முதல் 11207 முடிய உள்ள பழமொழிகள் இடம் பெற்றன. ‘ஒ’ முதல் ‘சூ’ வரை அகர வரிசைப்படி இவை அமைக்கப்பட்டுள்ளன.

அடுத்து தொகுதி – 3இல் 11208 முதல் 16967 முடிய உள்ள பழமொழிகள் இடம் பெற்றன. ‘செ’ முதல் ‘பூ’ வரை அகர வரிசைப்படி இவை அமைக்கப்பட்டுள்ளன.

அடுத்து தொகுதி – 4இல் 16968 முதல் 21355 முடிய உள்ள பழமொழிகள் இடம் பெற்றன. ‘பெ’ முதல் ‘ஸ’ வரை அகர வரிசைப்படி இவை அமைக்கப்பட்டுள்ளன.

நான்காம் தொகுதியில் விடுபட்டுப் போன இன்னொரு 207 பழமொழிகள் பிற்சேர்க்கையாக  இணைக்கப்பட்டுள்ளன. இது தவிர அருஞ்சொற்பொருள் அகராதி ஒன்றும் பிற்சேர்க்கையாக இணைக்கப்பட்டுள்ளது.

மார்ஜாலம் என்ற சொல் பழமொழியில் வருகிறது. இதற்கான பொருள் என்ன? இந்த அருஞ்சொற்பொருள் அகராதியைப் பார்த்தால் பூனை என்று தெரிந்து கொள்ளலாம்.

சங்க இலக்கிய நூல்களுள் ஏராளமான பழமொழிகள் இடம் பெறுகின்றன.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாக அமைகிறது பழமொழி நானூறு.  400 பாடல்களும் சிறப்புப் பாயிரம், கடவுள் வணக்கத்தையும் சேர்த்தால் ஆக மொத்தம் 401 பாடல்களை இந்த நூல் கொண்டுள்ளது. மூன்றுரை அரையனார் என்ற சமண முனிவர் இயற்றிய அற்புதமான இந்த நூல் 34 தலைப்புகளைக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் பழமொழி சார்ந்த ஒரு பேருண்மை இருக்கும் படி உள்ள சிறப்பான நூல் இது.

அப்பர் பெருமான் பழமொழியை அமைத்து ஒரு பழமொழி பதிகத்தையே அருளியுள்ளார்.

இன்றைய திரைப்படப் பாடல்களிலும் பழமொழிகள் இடம் பெற்றுள்ளன.

இன்னும் ஏராளமான பழமொழி சார்ந்த பாடல்கள், நூல்கள் தமிழில் உண்டு.

தமிழில் மட்டும் அல்ல பழமொழிகள். சம்ஸ்கிருதத்திலும் உள்ளன. இந்த சம்ஸ்கிருத நூல்களின் தொகுப்போ விரிவானது; பெரியது.

இதர நாட்டு மொழிகளில் உள்ள பழமொழிகளின் தொகுப்புகள் அந்தந்த நாட்டில் உள்ள பழமொழி ஆர்வலர்களாலும், அறிஞர்களாலும் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.

சான்ஃபிரான்ஸிஸ்கோ நூல் நிலையத்திற்கு (அங்கு இருக்கும் போதெல்லாம்).அடிக்கடி செல்லும் வழக்கத்தைக் கொண்டவன் நான்.

அங்கு இப்படிப்பட்ட தொகுப்பு நூல்களைப் பார்த்தால் பிரமிப்பையே தரும்.

தமிழிலும் இந்திய மொழிகள் அனைத்திலும் உள்ள பழமொழிகளின் தொகுப்பு நூல்கள் வெளியிடப்பட வேண்டும். இது ஒரு அரிய பெரிய முயற்சி. ஆனால் காலத்தின் கட்டாயத் தேவை இது. பொறுத்திருந்து பார்ப்போம் – யார் முயற்சியை எடுக்கிறார்கள் என்று!

****

TAGS- பழமொழிகள்கி.வா.ஜ.

நகைச்சுவை நாடக ஆசிரியர் ஷெரிடன் (Post No.9755)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9755

Date uploaded in London – –20 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

ரிச்சர்ட் பிரின்ஸ்லி ஷெரிடன் (RICHARD BRINSLEY SHERIDAN)  நகைச்சுவையுடன் எழுதும் நாடக ஆசிரியர் ஆவார்.

அயர்லாந்தின் தலைநகரான டப்ளினில் பிறந்தார். நடிப்பும் நாடகமும் அவர் ரத்தத்தத்தில் ஊறிப்போன விஷயங்கள் ஆகும். அவரின் தந்தை ஒரு நடிகர். தாயாரோ நாடகங்களையும் நாவல்களையும் எழுதியவர்.

ஆயினும் அவரது குடும்பம் வறுமையில் தவித்தது. வாங்கிய கடன்களைத் திரும்பிச் செலுத்த இயலவில்லை. ஆகவே ஷெரிடன் , கல்வி கற்பதற்காக இங்கிலத்துக்குச் சென்றபோது, குடும்பம் பிரான்ஸுக்கு  குடியேறியது .

பிறந்த தேதி –அக்டோபர்  31, 1751

இறந்த தேதி – ஜூலை 7, 1816

வாழ்ந்த ஆண்டுகள் – 64

PUBLICATIONS எழுதிய நூல்கள் –

1775- தி ரைவல்ஸ்  THE RIVALS

1775 – செயின்ட் பாட்ரிக் டே SAINT PATRICK’S DAY

1775 – தி டுவேன்னா THE DUENNA

1777- தி ஸ்கூல் பார் ஸ்கேண்டல் THE SCHOOL FOR SCANDAL

1779 – தி க்ரிட்டிக் THE CRITIC

ஷெரிடனுக்கு 19 வயதான போது , அவருடைய குடும்பம் இங்கிலாந்துக்கு வந்தது.அவர்கள் பாத் என்னும் நகரில் வசித்தனர்.

அங்கு ஷெரிடன் ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டார்.எலிசபெத் அன் லின்லி என்பவருடன் அவர் காதல் விவகாரத்தில் சிக்கினார். அவர் சிறந்த பாடகி.அவருக்காக இரண்டு முறை மற்றவர்களுடன் மோதினார் .1773ல் இருவரும் கல்யாணம் செய்துகொண்டு லண்டனுக்கு வந்தனர்

லண்டனில் டாக்டர் ஜான்ஸன் , ஆலிவர் கோல்ட்ஸ்மித் ஆகிய பிரமுகர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. எலிசபெத்தின் பாடல் தொழில் மூலமே அவர்கள் காலம் தள்ளியிருக்க முடியும். ஆனால் ஷெரிடன் , எழுத்துமூலம் பிழைக்க எண்ணினார்.

23 வயதில்  தி ரைவல்ஸ் என்ற நாடகத்தை எழுதினார். அதே ஆண்டில் மேலும் இரண்டு நாடகங்களை எழுதி வெளியிட்டார். மூன்றும் வெற்றி அடைந்தன. உடனே பிரபல நாடக அரங்கு அவருக்கு நடிகர்/ மானேஜர் என்ற இரண்டு பணிகளை அளித்தது.

ஷெரிடன் எழுதிய நாடகங்களில் மிகவும் நகைச்சுவை ததும்பியது ஸ்கூல் ஃ பார் ஸ்கே ண்டல் என்ற நாடகம்தான். 18ம் நூற்றா ண்டின் நாடகங்களில் மிகவும் பிரபலமானது . முட்டாள்தனமும், கொடூரமும், சுய விளம்பரமும் கொண்ட மனிதர்களைக் கிண்டல் செய்யும் நாடகம் இது .

நாடகத்தில் பேசிப் பேசி நல்ல பேச்சாளராக உருவானார். இதன் மூலம் பிரிட்டிஷ் பார்லிமெண்டுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சர் பதவியையும் வகித்தார்.

XXX

old article

ஷெரிடன் கொடுத்த சூடான பதில் (Post …

https://tamilandvedas.com › ஷெர…

1.     

Translate this page

13 Aug 2016 — (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com). ஐரிஷ் கவிஞர், நாடக ஆசிரியர், அங்கத எழுத்தாளரான ஷெரிடன் வாழ்வில் நடந்த …

—subham—

tags- நகைச்சுவை, நாடக ஆசிரியர்,  ஷெரிடன்

சுபாஷிதங்களின் பெருமை! (Post 9753)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9753

Date uploaded in London – –  –20 JUNE   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

சுபாஷிதங்களின் பெருமை!

ச.நாகராஜன்

டாக்டர் டி.எஸ்.கௌரிபதி சாஸ்திரி (Dr.T.S. Gouripathi Sastri) என்பவர் சம்ஸ்கிருத அறிஞர். அவரிடம் ஆந்திரா பல்கலைக்கழகம் நல்ல சில சுபாஷிதங்களைத் தேர்ந்தெடுக்குமாறு பணிக்க, அவர் 36 சுபாஷிதங்களைத் தொகுத்துத் தந்தார். அதற்கான ஆங்கில மொழிபெயர்ப்பையும் அவரே செய்துள்ளார். அவற்றில் சில:-

சுபாஷிதேன கீதேன யுவதீனாம் ச லீலயா |

மனோ ந பித்யதே யஸ்ய ச யோகீ ஹ்ருத்வா பசு: ||

சுபாஷிதம், இசை, அழகிகளின் லீலை ஆகியவற்றினால் இதயம் உருகாதவன் ஒன்று யோகியாக இருக்க வேண்டும் அல்லது மிருகமாக இருக்க வேண்டும்!

Surely he must be either a sage or a beast whose heart does not melt by the wise saying, music, and the grace of wonderful damsels.

*

சம்சாரகடுவ்ருக்ஷஸ்ய த்வே பலே ஹ்ராம்ருதோபமே |

சுபாஷிதரஸாஸ்வாத: சங்கதி: சுஜதே ஜனே ||

சம்சாரம் என்னும் கசப்பான மரத்தில் அம்ருதத்திற்கொப்பான இரண்டு பழங்கள் உள்ளன. ஒன்று சுபாஷிதங்களின் ரஸத்தை உணர்ந்து அனுபவிப்பது; இரண்டாவது நல்லவர்களின் சேர்க்கை!

There are two fruits (goals) endowed with the taste of the Ambrosia to the bitter (fruit bearing) tree of the world : one is relishing the wise sayings and the company with the virtuous men is the other.

*

ப்ருதிவ்யாம் த்ரீணி ரத்னானி ஜலமன்னம் சுபாஷிதம் |

மூடை: பாஷாணகண்டேஷு ரத்னசம்ஞா விதீயதே ||

உண்மையாகவே மூன்று ரத்தினங்கள் இந்த உலகில் உள்ளன. ஜலம், உணவு மற்றும் சுபாஷிதம் ஆகியவையே அவையாகும். ஆனால் மூடர்களோ கூழாங்கற்களை ரத்தினங்கள் என்று கூறுகின்றனர்.

(Really) there are three gems in this world: they are food, water and good saying. (But) the fools name (call) pubbles (as) gems.

*

அபூர்வ: கோபி கோஷோயம் வித்யதே தவ பாரதி |

வ்யயதோ புத்திமாயாதி க்ஷயமாயாதி சஞ்சயாத் ||

ஓ! பாரதி! உனது பொக்கிஷம் அபூர்வமான ஒன்றாகும்! ஏனெனில் அது செலவழிக்கப்படும் போது வளர்கிறது. அது செலவழிக்கப்படாமல் இருக்கும் போது குறைகிறது.

O Goddess of speech! Unique is thy treasure indeed! (Because) it waxes when it is spent away and wanes when it is unspent.

*

வித்வானேவ விஜானாதி வித்வத்ஜனபரிஷ்ரமம் |

நஹி வந்த்யா விஜானாதி குர்ஷீம் ப்ரஸவ வேதனாம் ||

ஒரு வித்வானின் உழைப்பை இன்னொரு வித்வானால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். ஒரு கர்ப்பிணியின் பிரசவ வேதனையை மலடியால் ஒரு போதும் புரிந்து கொள்ள முடியாது.

Only a scholar can understand the endeavor of a (another) scholar. Never can s sterile lady understand the acute laboures (of a pregnant lady).

***

tag- சுபாஷிதம்,

உடலுக்கு மண் தேவையா? மண்ணின் மகத்தான சக்தி -1 (Post No.9754)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9754

Date uploaded in London – –20 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

மணல் என்னும் மூலகம் / தனிமம் பற்றிய அதிசயமான விஷயங்களை இன்று காண்போம். பிரபஞ்ச்சத்திலுள்ள 118 தனிமங்களில் இதுவரை 34 மூ லகங்களைக் கண்டோம். இன்று சிலிகா SILICA என்னும் 35ஆவது தனிமத்தின் கதையைக் கேளுங்கள்.

பெண்களின் மார்பகத்தை அலங்கரிப்பது சிலிகா.

கம்யூட்டரில் கோடிக்கணக்கான விஷயங்களை  தேக்கி வைப்பது சிலிகா- SILICON CHIPS .

வீட்டின் கூரைகளில் சூரிய ஒளியை வாங்கி நமக்கு வெப்பமாக SOLAR PANELS மாற்றித்தருவது சிலிகா; உடலுக்கும் தேவைப்படுவது சிலிகா

இது வெறும் மணல் செய்யும் வேலை !

முதலில் செக்ஸியான விஷயத்துடன் சிலிகா பெரிய விஞ்ஞான விஷயங்களை ஆராய்வோம்

பல பெண்கள் தன் மார்பகங்கள் எடுப்பாக இல்லை என்பதற்காக அறுவைச் சிகிச்சை செய்துகொள்கிறார்கள். அப்போது அவர்களுக்கு செயற்கை SILICONE மார்பகங்கள் உடலுக்கு உள்ளே பொருத்தப்படுகின்றன. பல நடிகைகள் இப்படி செயற்கை அறுவைச் சிகிச்சைகள் செய்துகொண்டதை பத்திரிகைகளில் கிசு கிசு (GOSSIP) பகுதிகளில் படித்திருப்பீர்கள்.

சிலிகான் என்னும் தனிமம் (ELEMENT) மணலைக் குறிக்கும். சிலா என்ற ஸம்ஸ்க்ருத்ச் சொல்லுக்கு பாறை என்று பொருள். அதிலிருந்து நாம் வடிப்பதே கோவில் சிலைகள் ; லத்தீன் மொழியில் ‘சிலக்ஸ்’ என்பர். அதிலிருந்து அந்தச் சொல் ஐரோப்பிய மொழிகளில் பலவித அவதாரம் எடுத்தது.

உலகம் முழுதும் இந்தப் பொருள் நிரம்பி இருக்கிறது. அது மட்டுமல்ல விண்வெளியில் உளது. விண்கற்களில் சிலவற்றில் மணலின் கூட்டுப்பொருளான சிலிகன் டை ஆக்சைட் (SILICON DI OXIDE) இருக்கிறது.

பெண்கள் தன் மார்பகப் பகுதியில் வைக்கும் செயற்கை முலைகள் சிலிகோன் SILICONES எனப்படும். ரசாயன பாஷையில் இதை ஆர்கா னோ சிலிகோன் – ஆக்சிஜன் பாலிமர் (ORGANO SILICONE- OXYGEN POLYMERS)  என்பர். அமெரிக்காவில் பெண்கள் இதை அழகு சாதன பொருளாகப் COSMETICS பயன்படுத்தவே உலகம் முழுதும் பரவி பெரும் (COURT CASES) வழக்குகளை உண்டாக்கி  பல கோடி டாலர் நஷ்ட ஈட்டுச் செய்திகளாக உருவாயின.

1960 களில் துவங்கிய சிலிகோன் பொருத்தல் 1990-களில் நஷ்ட ஈடு கோரும் வழக்குகளாக மாறின. சிலிகோன் என்னும் செயற்கை உறுப்பைப் பொருத்திக் கொண்ட பெண்கள் அது உடலுக்குள் ஒழுகி (LEAKING) ஆரோக்கியப் பிரச்சினைகளை உருவாக்குவதாக புகார் செய்தனர். இதனால் இது தொடர்பான புதிய சட்டங்கள், கட்டுப்பாடு விதிமுறைகள் பிறந்தன. செயற்கை மார்பக  சிலிகோன்களை உற்பத்தி செய்த மிகப்பெரிய நிறுவனமான டவ் கார்னிங் DOW CORNING கம்பெனி திவால் ஆகியது. அது மூன்று பில்லியன் டாலர் நஷ்ட ஈடு கொடுக்க நேரிட்டது.

அமெரிக்காவில் இந்த மோகம் முடிவுக்கு வந்தது. ஆயினும் உலகின் மற்ற நாடுகளில் இப்போதும் சிலிகோன்  பொருத்துதல் நடை பெறுகிறது.

உண்மை என்ன ?

மணலைக் கொண்டு செய்யும் இந்த சிலிகோன் உண்மையில் பிரச்சனை எதையும் உண்டாக்காது என்று அமெரிக்கா மற்றும் சுவீடன் நாட்டிலுள்ள புகழ்மிகு விஞ்ஞான நிறுவனங்கள் நிரூபித்தன. இதனால் புற்றுநோய் (CANCER) வரும் என்பதற்கெல்லாம் ஆதாரமே இல்லை. தவறான ஆபரேஷன் முறைகளால் ஏற்படும் கோளாறுகள் எல்லா வகை ஆபரேஷன்களிலும் நிகழக்கூடும் அதற்கும் சிலிகோனுக்கும் தொடர்பு இல்லை.

****

சர்ப்ரைஸ், சர்ப்ரைஸ் SURPRISE SURPRISE

சிலிகோன் பற்றிய கெட்ட செய்திக்கு  நேர்மாறான நல்ல செய்தியும் உண்டு. தீ விபத்துக்களில் உடல் கருகி  உருமாறியவர்களுக்கு  உதவுவது இந்த சிலிகோன் தான் .கருகிய தோலின் மீது சிலிகோன் ஜெல் பூசினால் புதிய திசுக்கள் வேகமாக வளர்ந்து குணமடைகிறார்கள் என்பதை ஸ்கட்லாந்தின் கிளாஸ்கோ நகர ஆஸ்பத்திரி பேராசிரியர் ஹென்றி ரெய்ட் PROF HENRY REID, CANNIESBURN HOSPITAL, GLASGOW, SCOTLAND, UK.கண்டுபிடித்தார்.

***

GEM STONES

மணல் என்று நாம் ஆற்றின், கடலின் கரைகளில் காண்பது சிலிக்கன் டை  ஆக்சைட் SILICON DI OXIDE ஆகும். இதன் மறு  வடிவங்களே கிறிஸ்டல் CRYSTAL எனப்படும் ஸ்படிகம் மற்றும் குவார்ட்ஸ் QUARTZ  எனப்படும் கண்ணாடிக்கல் ஆகும். இதில் வேறு சில ரசாயன உப்புக்கள் கலக்கும் பொழுது ஓபல் , அமெதிஸ்ட் OPAL , AMETHYST  எனப்படும் ரத்தினக் கற்களும் உருவாகின்றன.

–தொடரும்

tags- சிலிகா, மணல், செயற்கை மார்பகம்,  முலை , சிலிகோன்

Tamil and English Words 2700 years ago-55 (Post 9752)

Tamil and English Words 2700 years ago-55 (Post 9752)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9752

Date uploaded in London – –19 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

DON’T FORGET TO READ 43 PARTS – “TAMIL WORDS IN ENGLISH” THAT ENDED ON SIXTH DECEMBER 2020;

FOLLOWING SERIES STARTED ON NINTH DECEMBER 2020.

ALL THE NUMBERS BELOW ARE SUTRA NUMBERS FROM 2700 YEAR OLD ‘ASHTADHYAYI’ OF PANINI, WORLD’S FIRST GRAMMAR BOOK.

XXX

2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், ஆங்கில சொற்கள் – பகுதி -55

Xxxx

5-4-2

தண்ட

Danda = punish, punishment

தண்டம் செலுத்தல்

தண்டித்தல், தண்டனை  என்பதெல்லாம் இந்த ஸம்ஸ்க்ருத்ச் சொல்லில் இருந்து வருகிறது

த்வீபதிகான் தண்டிதஹ  என்றால் இரண்டு கால் பணம்/ நாணயங்கள் தண்டிக்கப்பட்டான் என்று பொருள்

Pathikaan = PADIK kaasu in Tamil

Padi = quarter/ foot

படிக்காசு என்றால் கால் நாணயம் என்று பொருள்.

Quarter may be one fourth of a sovereign= 2 grams gold

இது தங்க மாக இருந்தால் மதிப்பு அதிகம்

பத = கால்/foot உடல் உறுப்பு; பத = கால்/ 1/4 ஒரு கால் பகுதி

தமிழிலும் சம்ஸ்க்ருதத்திலும்  மட்டுமே உள்ள சொல்.

Jnana Sambandar and Appar, Tamil saints, used PADIK KAASU to buy grains for the public during times of drought in Tamil Nadu 1400 years ago

ஆகையால் படிக்காசு என்பது  கால் நாணயம் /பணம்

இதிலிருந்துதான் தினப்படி, ; படி = அலவன்ஸ் என்பன வந்தன

பயணப் படி; வாடகைப் படி முதலியன இதிலிருந்து விரிவடைந்த சொற்கள் ஆகும்

Xxx

5-4-3

ஸ்தூல = பருமன்  ஆன

Stuula = stout

ஸ்தூல = ஸ்டவுட்

அணுக = அணுவைப் போன்ற= மிகச் சிறிய

Anu = atomic in size

xxx

5-4-4

எடுத்துக்காட்டில்

சின்ன = முழுதும் உடைக்கப்பட்டது ; broken fully

பின்ன = முழுதும் பிளக்கப்பட்டது ;  split or cut fully

Chinnaa binna = made into bits and pieces

என்ற சொற்கள் காட்டப்பட்டுள்ளன .

தமிழில் சின்னாபின்னமாகியது என்பர்

கணக்குப் பாடத்திலும் வகு, பகு என்பதில் ‘பின்னம்’ வரும்.

xxx

5-4-5

ந ஸாமி  வசனே என்பது சூத்திரம்

ஸாமி = அரை/பாதி  ; ஆங்கிலத்தில் செமி

Saami = Semi in English

Ardha – half; arai in Tamil

அர்த்த = அரை

அர்த்த என்பது தமிழில் அரை என்று மருவி இருக்கலாம்

5-4-9

இந்த சூத்திரத்தில் ஜாதி என்ற சொல் வருகிறது

Jaati = group

Tamils have nbeen using it at least for 1400 years . it is in Tevaram with Tamil Saa= Jaa

இதற்கான எடுத்துக் காட்டில் ப்ராஹ்மண ஜாதி என்ற சொல் காட்டப்படுகிறது.

இன்று ஜாதி என்பதை அதே பொருளில் பயன்படுத்துகிறோம் .

ஆயினும் பாணினி அந்தப் பொருளைக் குறித்தாரா என்பது கேள்விக்குறியே.

ஒரு பிரிவு, ஒரு அணி என்று அவர் சொல்கிறார்.

Xxx

5-4-10

ஸ்தான = நிலை, இடம்

Staan = Status = position; place

தந்தையின் ஸ்தானத்தில் மகன் நிற்கிறான்

கோ ஸ்தானம் = மாடுகள் இருக்கும் இடம்; மாட்டுத் தொழுவம்

ஸ்தான் = Status ஸ்டேட்டஸ் ஆனது

ஸ்தான் என்பது பல நாடுகளில் இருக்கிறது

Attached to many countries such as Aghani+stan, Kazaka+stan, Uzbeki+stan; Turagastan = Turkey

துரகஸ் தானம் = துருக்கி = குதிரை உள்ள நாடு

கஜக , பாகிஸ் , உஸ்பெக்கிஸ் , ஆப்கானிஸ் + ஸ்தான்.

xxx

5-4-11

சூத்திரத்தில் தரு = மரம் எடுத்த்த்துக்காட்டா க உள்ளது.

தரு= ட்ரீ ஆனது.

Taru= Tree

xxx

5-4-16
visarino matsye

here visaarin means Fish
the word Pisces is derived from Visaarin
P=V
visarin becomes Meen in Tamil
P=V=M

the Tamil word Meena in Rig Veda is not a Tamil word.
I have already written an article on it.
so the summary is
Meena = Pisces= Visarin

மீன என்ற தமிழ்ச் சொல் ரிக்வேதத்தில் இருப்பதாகச் சொல்லுவார்கள்.
இதுவும் நீர் என்ற சொல்லும் சம் ஸ்ருதத் தொடர்பு மொழியில் இருப்பதால் அவை ஒரே மூலத்திலிருந்து தமிழ் சம்ஸ்க்ருதத்தில் வந்தவ என்று முன்னரே காட்டியு ள்ளேன் (எனது கட்டுரையில்)

நீரெய்ட்ஸ் என்பது கிரேக்க மொழியில் நீர்த் தேவதைகள்.

இந்த குறிப்பிட்ட சூத்திரத்தில் விஸாரின் என்பது மீனைக் குறிக்கும் என்று பாணினி கூறுகிறார்.
விஸாரின் = பைஸரின் = பை ஸஸ் / மீனா ராசி
பை ஸஸ்= மீன் -= வைஸாரின்
ப=வ


xxx
5-4-25
8 Varttika notes added to this sutra. One of them is Nava= Nutana.
nava becomes Novel, New in English.
Even Tamils use Naveena

நவ / நூதன = நாவல், நவீனம்
xxx
5-4-33
kaalaa= black
Yama is Kaalan who is black
Kaali is black
These are used in modern Tamil.
in the examples given by commentators Kalikaa Saadi is given it means Black Sari or Saaree
in English Sari is used.
xxx
5-4-39
Mruda for Mud
Mrudha becomes Mud in English and Man in Tamil
xxx

tags – Tamil in Panini 55

பிரடெரிக் நீட்ஸே (GOD IS DEAD) , கடவுள் பற்றி இப்படிச் சொல்லலாமா? (Post No.9751)

பிரடெரிக் நீட்ஸே , கடவுள் பற்றி (GOD IS DEAD)  இப்படிச் சொல்லலாமா? (Post No.9751)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9751

Date uploaded in London – –19 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

கடவுள் செத்துப்போனான்’ ‘GOD IS DEAD’  என்றார் புகழ் பெற்ற ஜெர்மானிய தத்துவ ஞானி பிரெடெரிக் நீட்ஸே FRIEDRICH NIETZSCHE . கிறிஸ்தவ மதத்தையும் தாக்கினார். ஏன் ?

நீட்ஸே யார் ?

புகழ்பெற்ற ஜெர்மனி நாட்டு தத்துவ ஞானி (Phiosopher) , மொழியியல் (Philologist) அறிஞர்.

பிறந்த தேதி – 15  அக்டோபர் , 1844

இறந்த தேதி – 25 ஆகஸ்ட், 1900

வாழ்ந்த ஆண்டுகள் 55

நீட்ஸேயின் எழுத்துக்கள், படைப்புகள் மேலை நாட்டு அரசியல் மற்றும் இலக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின .

ஒரு சின்ன ஜெர்மானிய கிராமத்தில் நீட்ஸே பிறந்தார்.அவருக்கு 5 வயதானபோது தந்தை இறந்தார். இதனால் அவரது  சகோதரியையும்  அவரையும் தாயார்  வளர்த்தார். அவர் பான் (BONN) நகர பல்கலைக்கழகத்தில் இறையியல் (THEOLOGY) படிப்பில் சேர்ந்தார். பின்னர் அதை விட்டு தத்துவம் (PHILOSOPHY) படிக்கச் சென்றார்.

 நீட்ஸே அதி மேதாவி. 24 வயதிலேயே சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள பேஸல் (BAZEL) பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஆனார் அப்போது பிரபல ஜெர்மானிய இசை மேதை, சாஹித்ய கர்த்தா ரிச்சர்ட் வாக்னருடன் (RICHARD WAGNER)  நட்பு ஏற்பட்டது.  நீட்ஸே கொண்டிருந்த கருத்துக்களையே அவரும் கொண்டிருந்தார்.

அரசியல் மற்றும் சமூகம் பற்றிய தனது கருத்துக்களை அன் ‘டைம்லி மெடிடேஷன்ஸ்’ என்ற பெயரில் நூலாக வெளியிட்டார். ஜெர்மானிய கலாசாரம் மற்றும் அப்போதைய நிறுவனங்களை அவர் சாடினார்.

தனது புரட்சிகரமான கருத்துக்களை ‘தஸ் ஸ்போக் ஜராதுஷ்ட்ரா’ (THUS SPOKE ZARATHUSTRA) என்ற நூலிலும் ‘பியாண்ட்  குட் அன்ட் ஈவில்’ (BEYOND GOOD AND EVIL)  என்ற நூலிலும் பிரகடனம் செய்தார்.

கிறிஸ்தவ மதம் இக்காலத்துக்குப் பொருந்தாது. தனி மனிதர்கள் எது நல்லது எது கெட்டது என்பதை பகுத்துணர்ந்து சொல்ல வேண்டும் ,பின்பற்ற  வேண்டும் என்று கூறி “கடவுள் இறந்துவிட்டார் God is Dead” என்ற வாசகத்தின் மூலம் வெளியிட்டார்.

இதைக்கேட்ட பல அறிஞர்கள் மூக்கின் மீது விரல் வைத்து அதிசயித்தனர்; மேலும் பலர் வெகுண்டு எழுந்தனர்.

ஒரு நல்ல உதாரண புருஷன்/ எடுத்துக்காட்டான மனிதன் என்பவன் தன் உணர்ச்ச்சிகளைக் கட்டுப்படுத்தி அதை ஆக்கபூர்வமான வழிகளில் பயன்படுத்த வேண்டும் என்றார் . இது 19-ஆவது நூற்றாண்டின் நாவல்களிலும் நாடகங்களிலும் செல்வாக்கு பெற்று புதிய கதாபாத்திரங்களை உருவாக்கியது.

நீட்ஸே சொல்லாத விஷயங்களை அவரது பெயரில் ஹிட்லரின் ஜெர்மானிய நாஜி கடசியினர் பரப்பியதால் அவருடைய பெயருக்கு களங்கம் ஏற்பட்டது; யூத மத எதிர்ப்புக்கு நாஜி கட்சிக்காரர்கள் நீட்ஸேயின் பெயரைப் பயன்படுத்தி பிரசாரம் செய்தனர். பிற்காலத்தில் இந்தப் புளுகு அம்பலப்படுத்தப்பட்டது. பின்னர் நீட்ஸேயின் புகழ்  மீண்டும் உச்சிக்குச் சென்றது .

நீட்ஸேயின் முக்கிய படைப்புகள் இதோ :-

1872- THE BIRTH OF TRAGEDY

1873-76 UNTIMELY MEDITATIONS

1878-90 HUMAN,  ALL -TOO- HUMAN

1883-85 THUS SPOKE ZARATHUSTRA – A BOOK FOR ALL AND NONE

1886 BEYOND GOOD AND EVIL

1887 ON THE GENEOLOGY OF MORALS

1889 TWILIGHT OF THE IDOLS

XXX

PUBLISHED AFTER HE DIED:–

1901 THE WILL TO POWER

1908 ECCE HOMO

சுவிட்சர்லாந்தில் சில்வபானா ஏரி  இருந்த இடத்தில் இரண்டு சாலைகளுக்கு இடையே நடக்கும்போது பிரமிடு வடிவிலுள்ள மிகப்பெரிய பாறையைக்  கண்டவுடன் அவருக்குத் தோன்றிய எண்ணங்களை தஸ் ஸ்போக் ஜராதுஷ்ட்ரா புஸ்தகத்தில் 4 பகுதிகளாக வெயிட்டார். இது ஒரு தத்துவ நாவல். இதில் அதிக சொற்சிலம்பம் உண்டு; பிற மொழிகளில் அப்படியே மொழி பெயர்க்க முடியாது. ஒவ்வொரு சொல்லையும் அவர் எப்படி, என்ன பொருளில் பயன்படுத்துகிறார் என்பதை  விளக்க வேண்டிவரும்.

–SUBHAM–

TAGS- பிரடெரிக் நீட்ஸே ,GOD IS DEAD , கடவுள் பற்றி,  

சூரியனை தினமும் துதிப்போர்க்கு ஏழ்மை வராது! (Post No.9750)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9750

Date uploaded in London – –  –19 JUNE   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

சூரியனை தினமும் துதிப்போர்க்கு ஆயிரம் ஜென்மங்களிலும் ஏழ்மை வராது!

ச.நாகராஜன்

குறிப்பு : (Eng Translation from : RSS Sanga Shaka book)

ஏகம் விஷரஸம் ஹந்தி சஸ்த்ரேணைகஷ்ச  வத்யதே |                         சராஷ்ட்ரம் சப்ரஜம் ஹந்தி ராஜானாம் மந்த்ர விப்லவ: ||

விஷமானது ஒருவனைத் தான் கொல்லும்; ஆயுதங்களோ பல பேரைக் கொல்லும். ஆனால் தவறான  முடிவை ஒரு அரசன் எடுத்தாலோ அல்லது அவனது அமைச்சர்கள் எடுத்தாலோ, அது ஒரு தேசத்தையும் அதில் வாழும் மக்கள் அனைவரையுமே அழித்து விடும்.

Poison kills but one person at a time while a weapon can destroy many more. Incorrect decisions by the king or by his ministers, by contrast, can destroy the entire nation and its citizens.

*

ஆதித்யஸ்ய நமஸ்காரம் யே குர்வந்தி தினே தினே | ஜன்மாந்தரஸஹஸ்ரேஷு தாரித்ர்யம் நோபஜாயதே ||

சூரியனை  எவர் ஒருவர் போற்றித் தினமும் துதிக்கிறாரோ அவருக்கு ஆயிரம் ஜென்மங்களிலும் தரித்திரம் வராது. சூரியனைப் போலக் காலம் தவறாமல் கடமையைச் செய்வோர் ஒரு நாளும் ஏழையாக இருக்க மாட்டார்கள்.

Those who adore and worship the sun everyday will not inherit poverty over thousands of births. People who are punctual in their duties like the sun will never be poor.

*

ஜ்யேஷ்டத்வம் ஜன்மனா நைவ குணைர்ஜ்யேஷ்டத்வமுச்யதேI குணாத் குருத்வாமாயாதி துக்தம் ததி த்ருதம் கமாத் ||

முதன்மைத்தன்மை (ஜ்யேஷ்டத்வம்) என்பது பிறப்பினால் வருவது அல்ல; ஒருவனின் குணங்களினால் பெறப்படுவது அது. அது எப்படி பாலானது தயிராகவும் நெய்யாகவும் படிப்படியாக மாறுகிறதோ அதே போல (நல்ல) குணங்களினால் அடையப்படுவது அது.

Greatness is not ascribed at birth; it is rather acquired by qualities possessed by the individual. It increases progressively like the transformation of milk into yogurt, and ghee.

*

உத்யமேன ஹி சித்யந்தி கார்யணி ந மநோரதை: |                     ந ஹி சுப்தஸ்ய சிம்ஹஸ்ய ப்ரவிஷந்தி முகே ம்ருகா: ||          

நல்ல விளைவுகள் தளராத முயற்சியினாலும் கடும் உழைப்பினாலுமே அடையப்படும். மான் சும்மா இருக்கும் சிங்கத்தின் வாயில் விழும் மானைப் போல பகல் கனவினா (மனோரததினால்) அல்ல.

Results are obtained by hard work and industry; not by daydreaming just as deer do not fall (willingly) into the mouth of the idle lion.

                                              *                                      ஸ்தானப்ரஷ்டா: ந ஷோபதே தந்தா: கேஷா நகா நரா: |               இதி விஞ்ஞாய மதியான் ஸ்வஸ்தானம் ந பரித்யஜேத் ||             

பற்கள், மயிர், நகங்கள், மனிதர்கள் அவை அவற்றின் உரிய இடங்களில் இல்லாத போது பிரகாசிப்பதில்லை. இந்தப் பழமொழியின் உண்மையை அறிந்த புத்திசாலிகள் தங்கள் இடத்தை அதாவது ஸ்வஸ்தானத்தை விட்டு ஒரு போதும் அகலக் கூடாது.                                                        Teeth, hair, nails, and men do not shine when not in their places. Knowing this adage, the wise should not leave their place or location.

                              *                                                               உதயே சவிதா ரக்தோ ரக்த:ஸ்சாச்தமயே ததா |                    ஸம்பத்தௌ ச விபத்தௌ ச மஹாமேகரூபதா ||   (மஹாபாரதம்)

சூரியன் உதய காலத்திலும் அஸ்தமன காலத்திலும் சிவப்பாகக் காட்சி அளிக்கிறான. அது போலவே மஹான்கள் நல்ல காலத்திலும் ஆபத்துக் காலத்திலும் ஒரே நிலையில் (உறுதியுடன்) இருக்கிறார்கள்.

**

TAGS- சூரியனை  துதி, ஏழ்மை , வராது,