குடி போதையில் இறந்த கவிஞர் டிலன் தாமஸ் (போஸ்ட் .9742)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9742

Date uploaded in London – –16 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

குடி போதையில் இறந்த  கவிஞர் டிலன் தாமஸ்

டிலன் தாமஸ் DYLAN THOMAS ஆங்கில மொழியில் எழுதிய வெல்ஷ் (வேல்ஸ் பிரதேச) கவிஞர். குடி போதையினால் 39 வயதிலேயே இறந்தார் ஆயினு ம் அவர்தம் படைப்புகள் இன்றும் பட்டொளி வீசிப் பறக்கின்றன.

ஐக்கிய சாம்ராஜ்யம் United Kingdom எனப்படும் கிரேட் பிரிட்டனில் இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து , வடக்கு அயர்லாந்து என்ற நான்கு பகுதிகள் உண்டு. வேல்ஸ் என்பது தென் இந்தியாவின் மலையாள பிரதேசம் போன்றது . அங்கிருந்த மக்கள் Welsh வெல்ஷ் மொழி பேசுவார்கள். இப்போது அங்கும் ஆங்கிலமே ஆதிக்கம் செலுத்துகிறது.

வெல்ஷ் புலவர்களில் புகழ்பெற்றவர் என்பதோடு இருபதாம் நூற்றாண்டின் ஆங்கிலப் புலவர்களில் முன்னனியில் நின்றவர் என்ற பெருமையும் உடையவர் டிலன் தாமஸ்.

அவர் நாடகங்களையும், சிறு கதைகளையும்   எழுதினார்.

பிறந்த தேதி – 27-10-1914

இறந்த தேதி – 9-11-1953

வாழ்ந்த ஆண்டுகள் – 39

டிலன் தாமஸ், ஸ்வான்ஸீ SWANSEA நகரில் பிறந்தார். இவரது எழுத்துக்களில் வெல்ஷ் பிரதேசத்தின் இயற்கை அழகு காணப்படும். மேலும் ஆங்கிலத்தில்  வெல்ஷ் மொழியின் இனிமை எதிரொலிக்கும் இதற்குக் சான்று  பகர்வது இவரது Under the Milkwood அண்டர் தி மில்க் வுட் என்ற ரேடியோ நாடகம் ஆகும் . ஒரு சிறிய கடலோர வேல்ஸ் நகரின் தாக்கம் இதில் மிளிரும். எலிசபெத் டெய்லர், ரிச்சர்ட் பர் ட்டன் நடித்த திரைப்படமாக இது 1971ல் வெளியானது .

ஸ்வான்ஸீ கிராமர் ஸ்கூலில் SWANSEA GRAMMAR SCHOOL இவரது தந்தை ஆங்கில மொழி கற்பித்தார். டிலனும் அங்கே படித்தார். பள்ளிக்கூட பத்தி ரிக்கையை நடத்தி அதில் கவிதை எழுதினாலும் படிப்பில் பட்டு மந்தம் .16 வயதில் பள்ளிப் படிப்புக்கு ‘குட்- பை’ சொல்லிவிட்டு ஒரு பத்திரிகையில் ரிப்போர்ட்டர் ஆனார். அதிலும் ஆள் தேறவில்லை. அந்த வேலைக்குப் பின்னர் முழு நேர கவிஞர் ஆனார். இருபது வயதிலேயே முதல் கவிதை நூல் வெளியானது. இந்த நேரத்தில் லண்டனுக்குக் குடிபெயர்ந்தார். இதனால் இவர் புகழ் பரவியது.

1937-ல் கைடலின் மக்நமாரா CAITILIN MACNAMARA

 என்ற பெண்ணை மணந்து வேல்சுக்குத் திரும்பினர் . அவர்களுக்கு  மூன்று குழந்தைகள் பிறந்தன. குடி போதையாலும் வறுமையாலும் திருமண வாழ்வு கரடுமுரடாக ஆனது .நண்பர்களிடம் நிறைய கடன் வாங்கினார்; அதைத் திருப்பிக் கொடுத்ததாக சரித்திரமே இல்லை.

இரண்டாவது உலக மஹா யுத்தம் வெடித்தது. ராணுவ சேவையில் சேராமலிருக்க உடல் நலத்தைக் காரணம் காட்டித் தப்பித்தார். ஆயினும் நாடக வசனங்களை எழுதி, ஒலிபரப்பி புகழ் அடைந்தார். பி.பி.சி. வானொலியில் இவரது நாடகம் ஒலிபரப்பாகியது . அமெரிக்காவுக்கு முதல் முறை சென்றபோது மகத்தான வரவேற்பு கிடைத்தது. இவரது கவிதைகளைக் கேட்க பெரிய கூட்டம் திரண்டது. பெண்கள் இவரைச் சுற்றி வட்டமிட்டனர். நாலாவது முறை அமெரிக்கப் பயணம் மேற்கொண்டபோது அதிகக்குடியினால் இறந்தார்.

இவரை மஹா மேதை என்று பலர் புகழ்ந்தாலும் பெரிய மோசடிக்காரன் என்ற பெயரும் ஒட்டிக்கொண்டது. குடிபோதை விடுதிகளில் கோமாளி போல நடந்து கொண்டார். கிறுக்குத் தனமான செயல்களில் ஈடுபட்டு சர்க்கஸ் பஃ ப்பூன் போல நடந்தார். அந்தக் கால வெல்ஷ் ‘பாணர்’ (bards)களைப் போல தன்னையும் எதாவது ஒரு பிரபு ஆதரிக்க வேண்டும் எதிர்பார்த்தார் ; அது நடக்கவில்லை.ஜோக்குகள், கதைகளை சொல்லி காலம் கடத்தினார்.

கொஞ்ச  காலத்துக்கு ‘ஜிப்ஸி’ நாடோடி போல ஊர் ஊ ராகத் திரிந்து வாழ்க்கை நடத்தினார்.

உலகப் போருக்குப் பின்னர் 1945 முதல் 1949க்குள் பி. பி. சி . ஒலி பரப்புக்கு  100 வசனங்களை எழுதினார். குடிபோதை காரணமாக அவருக்கு நிரந்தர வேலை கொடுக்க பி பி சி மறுத்தது.

நாலாவது முறை அமெரிக்காவுக்குச் சென்றபொழுது நிறைய விஸ்கி குடித்து நியூ யார்க் நகரில் கோமாவில் சிக்கி, பின்னர், இறந்தார் .

XXXX

படைப்புகள்

1934 – 18 கவிதைகள் EIGHTEEN POEMS

1936 –  25 கவிதைகள் TWENTY- FIVE POEMS

1939- தி மேப் ஆப் லவ் THE MAP OF LOVE

1940 – போர்ட்ரைட் ஆப் தி

ஆர்ட்டிஸ்ட் அஸ் எ யங் டாக்

PORTRAIT OF THE ARTIST AS A YOUNG DOG

1952- கலெக்டட் பொயம்ஸ் COLLECTED POEMS

1953- அண்டர் தி மில்க்வுட் UNDER THE MILKWOOD

இறந்த பின்னர் வெளியான படைப்பு –

அட்வெஞ்சஸர்ஸ் இன் தி ஸ்கின் ட்ரேட்

ADVENTURES IN THE SKIN TRADE

-subham–குடி போதை, இறந்த  கவிஞர் , டிலன் தாமஸ் 

அந்தணர் பற்றி கம்பர் எச்சரிக்கை (Post No.9741)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9741

Date uploaded in London – –16 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அந்தணர் பற்றி கம்பர் எச்சரிக்கை

ராம பிரானுக்கு முடி சூட்ட தசரதன் ஏற்பாடு செய்கிறார். ஊர்ப் பெரியோர்கள் மற்றும் மந்திரிசபைகுல குரு  ஆகிய மக்களை ஜன நாயக முறையில் கருத்துக் கேட்டு அப்படி முடிவு  செய்கிறார். எல்லோரும் Yes, Yes யெஸ் யெஸ்‘  என்று தலையை அசைத்துவிட்டனர். அப்போது தசரத மா மன்னன் குல குரு  வசிஷ்டருக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறான். ராம பிரானைச் சந்தித்துக் கொஞ்சம்  அரசியல் விஷயங்களைக் கதைத்து விட்டு வாருங்கள். எதுஎது தர்மம் என்று கற்பியுங்கள் , ‘ப்ளீஸ்‘ Please என்கிறான்.

வசிட்டனும் ராமனைச் சந்திக்கிறார். அவருக்குச் சொல்கிறார்.

அன்பரே அந்தணர் /பார்ப்பான் விஷயத்தில் ஜாக்கிரதையாக இரும்.

அவர்கள்  நினைத்தால் அது அப்படியே நடக்கும்

ஆவதும் ஐயராலே அழிவதும்  ஐயராலே ! கபர்தார்உஷார்ஜாக்கிரதை!’ என்கிறார்.

இதோ கம்பன் வாய் மொழி மூலம் அறிவோம்.

ஆவதற்கும் அழிவதற்கும்  அவர்

ஏவ ,நிற்கும் விதியுமென்றால்இனி

ஆவது எப்பொருள் இம்மையும் அம்மையும்

தேவரைப் பாரா வுந்துணை  சீர்த்ததே

மந்தரை சூழ்ச்சிப் படலம்அயோத்யா காண்டம்கம்ப ராமாயணம்

பொருள்

ஒருவரை உயர்த்துவதற்கும் தாழ்த்துவதற்கும் விதி கூட அந்தணப்  பெருமக்களின்

கட்டளைக்குக் காத்திருக்கும் என்றால் இப்பிறப்பிலும் மறு  பிறப்பிலும்  பூலோக

தேவர்களாக விளங்கும் பார்ப்பனர்களை போற்றுவது சிறப்புடையது ஆகும்  .

 இதனைவிட மேலான பொருள் வேறு எதுவும் இல்லை “.

(இங்கு அந்தணர் என்பதற்கு ஒழுக்கம் உடைய அறிஞர்கள் என்பது பொருள். ‘வெளுத்தது எல்லாம் பால் அல்ல’. ‘மின்னுவதெல்லாம் பொன் அல்ல’பூணுல் போட்ட எல்லோரும் பார்ப்பனர் அல்ல. மனம்மொழிமெய் என்ற மூன்றிலும் சுத்தம் உடைய- திரி கரண சுத்தி உடைய — பெரியோர் அந்தணர். அந்தக்காலத்தில் அப்படி இருந்தனர் நூற்றுக்கு 99 சதம் பிராமணர்கள்!)

இதில் அந்தணர் என்ற சொல்லே இல்லையே என்று சிலர் நினைக்கலாம்.

அதற்காக முன்னிரு பாடல்களையும்  தருகிறேன் .

அந்தணாளர் முனியவும் ஆங்கவர்

சிந்தையால் அருள் செய்யவும் தேவரில்

நொந்துளாரையும் நொய்து உயர்ந்தா ரையும் ,

மைந்த! எண்ண வரம்பும் உண்டு ஆங்கொலோ

பொருள்

டேய் சின்னப்பையா (ராமா ) கேள் !

ஐயர்கள் நினைத்த மாத்திரத்தில் சிலர் பதவி இழந்து அதல பாதாளத்தில் விழுந்தனர் ஐயர்கள் நினைத்த அளவில் சிலர் ‘பிரமோஷன்’ Promotion பெற்று பெரிய பதவியை அடைந்தார்கள் . இந்த விஷயத்தைக் கூட்டிக் கழித்துப் பார்த்தால் தேவலோகத்திலேயே கணக்கற்றவர்கள் இருக்கிறார்கள்!

(இந்த இடத்தில் உரைகாரர்கள் மூன்று எடுத்துக்காட்டுகளை இயம்புகின்றனர்: தேவர்களை விட அந்தணர்கள் உயர்ந்தோர் ஆவர். அருளிக்கூறினும் வெகுண்டு கூறினும் அது அப்படியே நடந்து விடும். அவர்கள் ஆற்றல் மிக்க நிறைமொழி (மந்திரம்) மாந்தர்கள். இந்திர பதவியில் இருந்த நகுஷன் அகத்தியன் சாபத்தினால் பூமியில் மலைப் பாம்பாக விழுந்தான். துருவாசருக்கு ஒரு தேவ லோகப் பெண் ஒரு மாலை அளித்தாள் . அதை அந்தப் பக்கம் ஐராவத யானை மேல் பவனி வந்த இந்திரன் மீது துர்வாசர் எறிந்தார். அவன் அதை வாங்கி யானையின் தலை மீது வைத்தான். அது மலரிலுள்ள மது வாசனையால் அதைத் தூக்கி கீழே எறிந்தது கோபத்தின் சின்னமான துருவாசர் இந்திரா! பிடி சாபம்! இந்த மாலை கீழே விழுந்தது போல நீயும் உன் பதவியிலிருந்து விழ க்கடவாய் ! என்றார் . இந்திரன் பதவியும் போச்சு. இன்னொரு எடுத்துக்காட்டு பிருகு- விஷ்ணு மோதல் ஆகும். பிருகு முனிவர் மும்மூர்த்திகளையும் சோதிக்க ஓவ் வொருவரையாக இன்டர்வியூ interview செய்யக் கிளம்பினார் . ஒவ்வொருவரும் அவரைக் கவனிக்காததால் ஒவ்வொரு சாபம் பெற்றனர். விஷ்ணு எப்போதும் அறிதுயிலில் இருப்பவர். தன்னைக் கவனிக்காமல் தூங்கிக் கொண்டு இருக்கிறார் என்று நினைத்து அவருக்கு சாபம் இட்டார். நீவிர் பூமியில் அவ்வப்போது மனிதனாக அவதாரம் எடுத்து யான் பெற்ற துன்பம் பெறுக என்று சபித்தார்)

அந்தணர் என்போர் துறவியரா அல்லது பார்ப்பனரா என்ற கேள்வி சிலருக்கு எழும். ‘நான் மறை அந்தணர்’ என்று சங்க இலக்கியமே பல இடங்களில் பேசுவதால் மறை  ஓதும் அந்தணர் பார்ப்பனர் என்பதில் சந்தேகமில்லை. ‘நான்மறை அந்தணர்’ என்ற சிலப்பதிகார மணிமேகலை வரிகளாலும், ‘நான்மறை முதல்வர்’ என்ற புறநானுற்றுச் சொற்களின் உரைகளாலும் வேதம் ஓதும் அந்தணர்களேதான் அவர்கள் என்பதில் ஐயம் வராது

இதோ கடைசி பாடல்

அனையர் ஆதலின் ஐய! இவ்வெய்ய தீ

வினையின் நீங்கிய மேலவர் தாளிணை

புனையும் சென்னியை ஆய்ப்புகழ்ந்து ஏத்துதி ;

இனிய கூறி நின்று ஏயின செய்தியால்

அந்தணர்கள் சொன்னபடி நடந்தே தீரும் என்பதால் கொடிய பாபத்தினின்று

நீங்கிய அந்த அந்தணர்களின் திருவடிகளைப்ப போற்றிப் புகழ் ந்து துதிப்பாயாக . மேலும் அவர்கள் ஏவிய பணிகளையும் மனமுவந்து செய்வாயாக.

ஆக அந்தணரைப் பணிவதோடு இல்லாமல் அவர்கள் சொன்னதையும் செய்க என்பது வசிட்டன் வாய் மூலம் கம்பன் தரும் கட்டளை.

இதை சிலப்பதிகாரத்தில் காணலாம். வெற்றிக் களிப்பில் மிதந்த செங்குட்டுவனைத் தட்டி எழுப்புகிறான் மாடல மறையோன் என்னும் பார்ப்பனன். “ஏய் ! போதும் உன் போர்கள். இனி போகும் வழிக்குப் புண்ணியம் சேர். யாக யக்ஞங்களைச் செய் ! என்று சொன்னவுடன் அப்படியே செய்கிறான் சேரன் செங்குட்டுவன். அது மட்டுமின்றி அந்தப் பார்ப்பனனுக்கு எடைக்கு எடை தங்கமும் பரிசாகத் தருகிறான் (காண்க- சிலப்பதிகாரம்)

–subham–

tags — அந்தணர் , கம்பர்,  எச்சரிக்கை,

நடந்தவை தான் நம்புங்கள் – 17 விதவிதமான புத்திசாலிகள்! (9740)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9740

Date uploaded in London – –  –16 JUNE   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நடந்தவை தான் நம்புங்கள் – 17 வெளியான தேதி 6-6-21 கட்டுரை எண:  9693   

நடந்தவை தான் நம்புங்கள் – 18

ச.நாகராஜன்

விதவிதமான புத்திசாலிகள்!

புத்திசாலித்தனம் எங்கும் எப்போதும் இருந்தால் தான் பிழைக்க முடியும் என்பது தான் இந்தக் காலத்திற்கான உண்மை! வித விதமான சந்தர்ப்பங்களில் வித விதமான புத்திசாலிகள் விதவிதமாக நடந்து கொண்டு தங்கள் சாதுரியத்தாலும் புத்திசாலித்தனத்தாலும் நிலைமையைச் சமாளித்துள்ளனர். சில புத்திசாலிகளைப் பார்ப்போமா?!!

வக்கீலின் தர்மசங்கடம்

மஹராஷ்டிர கவர்னராக இருந்த சி.சுப்ரமணியம் புகழ் பெற்ற ஒரு கிரிமினல் லாயரும் கூட! அவர் ஒரு கொலை கேஸில் தன் கட்சிக்காரருக்காக பிரமாதமாக வாதிட்டார்.

நீதிபதி தீர்ப்பைக் கூறினார்: “குற்றம் சாட்டப்பட்டவர் குற்றம் இழைக்கவில்லை. நிரபராதி, ஆகவே விடுதலை செய்கிறேன்”.

தீர்ப்பு இப்படி வழங்கப்பட்ட போதும் கூட குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளிக் கூண்டிலிருந்து இறங்கவில்லை. அங்கேயே நின்று கொண்டிருந்தார்.

நீதிபதி வக்கீலைப் பார்த்துக் கேட்டார்: “என்ன, உங்கள் கட்சிக்காரரைத் தான் நிரபராதி என்று சொல்லி விடுவித்து விட்டேனே. இன்னும் அவர்  குற்றவாளிக் கூண்டிலிருந்து ஏன் நகர மாட்டேன் என்கிறார்?”

உடனே வக்கீல் கூறினார்: “ யுவர் ஹானர்! அவர் குற்றம் இழைக்கவில்லை என்று உங்களிடம் நான் நிரூபித்து விட்டேன். ஆனால் அவரிடம் நான் இன்னும் அதை நிரூபிக்கவில்லையே!”

நீதிமன்றத்தில் இருந்த அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

நல்லவேளையாக தீர்ப்பு முன்னதாகவே வழங்கப்பட்டிருந்தது!

–    The Hindu  பத்திரிகையில் 14-1-1995 இதழில் Kolam Krishna Iyer  எழுதியுள்ள சம்பவம்

–     

–    ****

ஸ்வீடன் மன்னருக்கும் தெரியாத விஷயம்!

ஸ்வீடன் மன்னராக புகழ் பெற்று இருந்தவர் இரண்டாம் ஆஸ்கார் (King Oscar II-

1827-1907). ஒரு நாள் அவர் பள்ளி ஒன்றுக்கு விஜயம் செய்தார். 12 வயது மாணவர்கள் பயிலும் ஒரு வகுப்பறைக்குள் நுழைந்த அவர், மாணவர்களைப் பார்த்து, “ஸ்வீடன் சரித்திரத்திலேயே மாபெரும் மன்னர் யார்?” என்று கேட்டார்.

ஒரு பையன் எழுந்து, “குஸ்டாவஸ் வாஸா” (Gustavas Vasa)  என்றான்.

இன்னொரு பையன் எழுந்து, “குஸ்டாவஸ் அடோல்பஸ்” (Gustavas Adolphus) என்றான்.

வாத்தியாருக்கு தர்ம சங்கடமாக இருந்தது. அவர் ஒரு பையன் காதில் மெதுவாக முணு முணுத்தார். அந்தப் பையன் எழுந்து, “இரண்டாம் ஆஸ்கார்”, என்று கூறினான்.

உடனே மன்னர், “அப்படி என்ன அவர் பெரிதாய்ச் செய்து விட்டார்?” என்று கேட்டார்.

பையன், “எனக்கு.. எனக்குத் தெரியாது” என்றான்.

உடனே மன்னர், “அதனால் என்ன, பரவாயில்லை, எனக்கும் தான் தெரியாது” என்றார்.

****

மூன்று கடித உறைகள்!

நாட்டின் மிகப் பெரிய சூப்பர் மார்கெட் நிறுவனம் ஒன்றினால் அவர் பொது மேலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அவர் வேலைக்குச் சேர்ந்த போது அங்கிருந்து பதவி விலகிச் சென்ற பொது மேலாளர் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தார். “சார், உங்கள் அறிவுரை என்ன சார்?” என்று கேட்டார் புது மேலாளர்.

“இதோ, மூன்று கவர்களைத் (கடித உறைகள்) தருகிறேன். மிக மிக கஷ்டமான சூழ்நிலையில் மட்டும் இந்தக் கவரைத் திறந்து பாருங்கள். ஒரு தீர்வு கிடைக்கும்” என்று கூறி, 1, 2, 3 என்று எண்ணிட்ட மூன்று கவர்களைப் புது மேலாளருக்குக் கொடுத்தார் பழைய மேலாளர்.

சூப்பர் மார்கெட்டில் வேலை சூப்பராகப் போய்க் கொண்டிருந்தது. சில மாதங்கள் கழிந்த பின்னர் சிக்கல் ஆரம்பித்தது. விற்பனை படு மந்தம். மேலே உள்ளவர்கள் மேலாளரைக் குடைய ஆரம்பித்தனர் – என்ன நடக்கிறது என்று?!

மூன்று கவர்களில் முதல் கவரைப் பிரித்தார் மேலாளர், ஏதேனும் வழி பிறக்கும் என்று.

அதில் எழுதி இருந்தது இப்படி: “ எல்லாப் பழியையும் முந்தைய பொது மேலாளர் மேல் போடு”

அவ்வளவு தான், உற்சாகமாக மேலிடத்திற்கு எப்படி முந்தைய மேலாளர் கண்ட கண்ட சரக்கை எல்லாம் வாங்கிக் குவித்து வைத்திருக்கிறார், அதைத் தள்ளுவதற்கு தான் எவ்வளவு கஷ்டப்படவேண்டி இருக்கிறது என்று ஒரு பெரிய புராணத்தையே பாடினார் மேலாளர். மேலிடம் அவர் விளக்கத்தை ஏற்றுக் கொண்டது.

தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று, கடுமையாக உழைத்து விற்பனையை சரி செய்தார் மேலாளர்.

இன்னும் சில மாதங்கள் நன்றாக ஓடின. அடுத்தாற் போல மீண்டும் ஒரு சிக்கல். விற்பனை கீழே இறங்கத் தொடங்கியது. மேலிடத்திலிருந்து கேள்வி வந்து விட்டது – என்ன நடக்கிறது, அங்கே என்று.

வேறு வழி தெரியாத நிலையில் இரண்டாவது கவரைப் பிரித்துப் பார்த்தார் மேலாளர்.

REORGANIZE – அனைத்தையும் மறுபடி சீர்படுத்து – என்று இருந்தது. உடனே உற்சாகமாக மேலிடத்திற்கு விவரத்தைச் சொன்னார் மேலாளர்.

காலத்திற்கேற்றபடி புது உத்தி தேவையாக இருக்கிறது என்று! மேலிடமும் ஒப்புக் கொண்டது. விதவிதமாக சரக்குகளை வாங்கி வாடிக்கையாளர்களைக் கவர்ந்து விற்பனையை உயர்த்தினார் மேலாளர். இன்னும் சில  மாதங்கள் சூப்பராக ஓடின.

அடுத்தாற் போல ஒரு பெரிய சரிவு. இந்த முறை மேலிடம் மிகக் கடுமையாக விளக்கத்தைக் கேட்டிருந்தது.

வேறு வழியில்லாமல் மூன்றாவது கவரைப் பிரித்துப் பார்த்தார் மேலாளர்.

அதில் இருந்தது இப்படி : – “உடனே மூன்று கவர்களைத் தயார் செய்!”

***

tags – நடந்தவை தான்,  நம்புங்கள் – 17 , மூன்று உறைகள், 

Story of Two Ants in Ramayana (Post No.9739)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9739

Date uploaded in London – –15 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

There is an interesting story in Ramayana about two ants. Kamban, the great author , who rendered Valmiki Ramayana in Tamil, hints at it in the Ayodhya Kanda/ canto. Kamban puts the words Erumbin Kathaiyal / ‘the lady of two ants story’ in the mouth of lamenting King Dasaratha. He was the one who gave two boons to Kaikeyi, one of his three queens. Kaikeyi, using the boons sent Rama to forest and got the kingship for her own son Bharat.

In this context Dasaratha was complaining about Kaikeyi to his chief queen Kausalya. The words Erumbin Kathaiyal/ Llady of Ants brings out the background of Kaikeyi. Strangely Hindu epics dont give the birth names of Queens. They are always named after their countries or cities,

Gandhari from Kandahar/ Gandhara of Afghanistan

Kunti from the kingdom of Kunti

Kaikeyi from Kekaya kingdom in Afghanistan /Iran border

Kausalya is from Koshala

Mythili  is from the city of Mithila and so on.

Kaikeyi is from the country of Kekaya, where her father Asvapati was ruling. It happened in the life of Asvapati . One day while he was in bed with his beloved queen, he laughed wildly. The queen got annoyed and became suspicious. She asked her husband Asvapati what made him laugh at the dead of night in the bed. She added further that he was mocking at her. Asvapati pacified her and told that he listened to the talk of two ants  under his bed and burst into laughter about their conversation.

One in a billion gets the power of knowing the language of animals, Hindus believe. In Tamil Periya Purana, we know that Kazatrarivar and Aanayanar knew the language of the animals. So do the great Hindu emperor Vikramaditya.

When Asvapati explained it to his wife, the queen, she was not ready to believe him and so she insisted that he must disclose the joke that the ants exchanged. Asvapati told her that the seer who taught him the language told him that he should never disclose it to anyone. Violating the code would result in his death. Even after this, she insisted that he gives the secret conversation of two ants under the bed. He asked her for time so that he could consult the saint who gave him the power.

When he consulted him, he told Asvapati to banish the queen and that was what Asvapati did.

On the background of this old anecdote, Dasaratha condemned Kaikeyi with the words Ant Story Lady. What he meant was hereditary was more powerful than environment. Her genetics worked more than the acceptable law. According to law, the eldest , in this case Rama, should become king. Moreover she knew that Rama’s exile will shorten the life of Dasaratha , but she didn’t care like Asvapati’s wife, who was the mother of Kaikeyi.

Here we come across a scientific fact in genetics which is known to our forefathers. Another fact that animal languages are understood by humans. In fact Dirgatamas, the blind poet of the oldest book in the world the Rigveda,reveals that there are four levels of sound and humans understand only the fourth level. It is in R V 1-164. So, scientists in future may find one day what Hindus knew thousands of years before our time.

Xxx Subham xxxx

tags-  Kaikeyi, ant lady, story, two ants, Ramayana 

ராமாயணத்தில் எறும்பின் கதையும் கைகேயி வம்சமும் (Post No.9738)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9738

Date uploaded in London – –15 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கம்ப ராமாயணத்தின் அயோத்யா கண்டத்தில் ஒரு சுவையான கதை வருகிறது. கோடிப்  பேரில் ஒருவருக்கு மட்டும் பிராணிகள் பேசுவதைக் கேட்கும் அபூர்வ சக்தி இருக்கும். இந்து மத நூல்களில் விக்ரமாதித்தன், கழற்றறிவார் , ஆனாய  நாயனார் ஆகியோர் இவ்வாறு அபூர்வ சக்தி படைத்தவர்கள்  வால்மீகி ராமாயணத்தில் கைகேயியின் தந்தை அசுவபதிக்கும்  இந்த சக்தி இருந்ததாக செய்திகள் உள . கம்பரும் நமக்கு போகிற போக்கில் ஒரே வரியில் சுட்டிக்காட்டுகிறார்.

பிரபஞ்சத்தில் 4 விதமான ஒலிகள் உண்டு என்றும் அவற்றில் மனிதன் கேட்கும் ஒலி ஒன்று மட்டும்தான் என்றும் ஒரு அற்புதத் தகவலை உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்தின் முதல் மண்டலத்தில் தீர்க்க தமஸ் (RV1-164) என்ற அந்தகக்  கவிராயர் நமக்கு அளிக்கிறார். ஆக நாம் கேட்க முடியாத ஒலிகளில் ஒன்று பிராணிகளின் ஒலி – பாஷை என்பது சொல்லாமலேயே விளங்கும்.

இதோ கம்பன் சொல்லும் கதை

வன்மா யாக்கை கேசி வரத்தால் என்றான் உயிரை

முன் மாய் விப்பத் துனிந்தாளேனும்  கூனி மொழியால் ,

தன் மாமகனும் தானும் தரணி பெறுமாறு அன்றி

என்மாமகனைக்  கான் ஏகு என்றாள் எறும்பின் கதையாள்

நகர் நீங்கு படலம், அயோத்யா காண்டம் , கம்ப ராமாயணம்

பொருள் –எறும்பின் சரித்திரத்தைக் கொண்டவளின் மகளாகிய கைகேயி வஞ்சனையால் ,

கூனியால் தூண்டப்பட்டுத் தன் வரத்தாலே என் உயிரை வாங்கத் துணிந்துள்ளாள். மேலும் தன்னுடைய பெருமை மிக்க மகனும் தானுமாக இவ்வுலகினைப் பெற்றுக்கொள்வதோடு மட்டுமல்லாமல் என்னுடைய உயர்ந்த  மூத்த மகனையும் காட்டிற்குச் செல்க என்றாள்  என்று கைகேயியின் கொடுமையை கோசாலையிடம் கூறி, தசரதன் வருந்தினான்.

இங்கே ‘எறும்பின் கதையாள்’ என்ற 2 சொற்களின் பின்னால் ஒரு கதை உளது

அது என்ன கதை?

கைகேயியின் தந்தை பெயர் அஸ்வபதி. அவன் கேகய நாட்டின் மன்னன்.அவனுக்கு ஈ , எறும்பு போன்ற உயிர் இனங்கள் பேசும் மொழி தெரியும். இதை அவனுக்கு ஒரு முனிவர் கற்றுக் கொடுத்தார். ஒரு முறை மனைவியுடன் படுக்கையில் படுத்திருந்த போது அஸ்வபதி. திடீரென வெடிச் சிரிப்பு சிரித்தான். மனைவிக்குக்     கோபமும் சந்தேகமும் வந்தது. “ஓய் , என்ன என்னைக் கிண்டல் செய்கிறீர்களா? எதற்காக எம்மைப் பார்த்து இளித்தீர் ?” என்று வினவினாள். அஸ்வபதி சொன்னார்:- “அன்பே, ஆருயிரே, உன்னைப் பார்த்துச் சிரிக்கவில்லை. நம் படுக்கையின் கீழே போன இரண்டு எறும்புகள் பேசிக்கொண்டு இருந்ததைக் கேட்டுச் சிரித்தேன்”  என்றார்.

ஐயா நீவீர் ‘டூப்’ (பொய்) அடிக்கிறீர். அப்படியானால் எறும்புகள் என்ன பேசின என்பதை எமக்கும் செப்பும். பின்னர் உம்  மீதுள்ள ஐயப்பாடு அகலும் என்று புகன்றார்   .

அஸ்வபதி சொன்னார்:- அம்மே; சினம் தணிக !ஐயம் அகல! எனக்கு உயிரின மொழி கற்பித்த முனிவர், அவற்றின் பாஷையை எவருக்கும் நீர் புகலக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். அப்படிச் சொன்னால், மரணம் சம்பவிக்கும்; நான் உயிர் வாழ முடியாது என்றான்.

அவளோ அட, நீர் செத்தால் செத்துத் தொலையும் ; எனக்கு எறும்பின் குறும்புப் பேச்சைப்  பகரும் என்றாள். மறு  நாள் முனிவர் அனுமதி பெற்று உரைக்கிறேன் என்றான். முனிவரோ அத்தகைய  கொடியாள் நாட்டில் இருப்பது நல்லதல்ல அவளை நாடு கடத்து என்றார் .

முனிவரின் சொற்படி மனைவியை நாடு கடத்தி விட்டு அஸ்வபதியும் இனிதே அரசாண்டான். அந்தத் தாய்க்குப் பிறந்தவள்தானே கைகேயி! அவள் குணமும் அப்படியே; கணவன் செத்தாலும் ராமன் காட்டுக்குப் போகவே வேண்டும் என்று எண்ணுகிறாள்! என்னும் பொருள் தொனிக்க தசரதன் ஒரு சொல்லைப் போட்டான். அந்தச் சொல்தான் எறும்பின் கதையாள் .

ராமாயணத்தில்தான் எவ்வளவு உண்மைகள்! இதில் மரபணு இயல் என்னும் (Genetics) ஜெனெடிக்ஸ், பிராணிகளின் பாஷை  (Language of Animals) முதலிய அரிய விஷயங்களும் வந்து விட்டன.

தாயைப் போல (பெண்) பிள்ளை!!

நூலைப்  போல சேலை!!

–சுபம்–

tags- எறும்பின் கதையாள், ராமாயணத்தில், கதை,  கைகேயி,எறும்பு 

ஆங்கில நாவல் ஆசிரியை வர்ஜீனியா வூல்ஃப் VIRGINIA WOOLF (Post No.9736)

WRITTEN BY LONDON SWAMINATHAN 

Post No. 9736 

Date uploaded in London – –15 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஆங்கில புதின எழுத்துலகில் புதுமை படைத்தவர்; பெண்ணிய எழுத்தாளர்களில் முன்னணியில் நின்றவர். சிந்தனை ஓட்டத்தின் மூலம் கதைகளை முன் வைத்தவர். மன நோயினால் ஆற்றில் மூழ்கி இறந்த ஆங்கில எழுத்தாளர்.

VIRGINIA WOOLF வர்ஜீனியா வூல்ப்

D O B பிறந்த தேதி 25 ஜனவரி 1882

D O D இறந்த தேதி 28-3-1941

ஆங்கில நாவல் ஆசிரியைவிமர்சகர்பத்திரிகையாளர்

ப்ளூம்ஸ்பரி குழு எனப்படும் எழுத்தாளர் கலைஞர் அணியின் நிறுவனர் BLOOMSBURY GROUP OF WRITERS AND ARTISTS;  ஒரு கதா பாத்திரம் எண்ணும்  எண்ணத்தின் மூலம் கதையை வழங்கும்விரித்துப் படைக்கும்உத்தியைக் STREAM – OF – CONSCIOUSNESS METHOD கையாண்டவர்.

இலக்கிய ரசனை மிக்க குடும்பத்தில் இவர் பிறந்த போது இடப்பட்ட பெயர் அடிலைன் வர்ஜீனியா ஸ்டீபன் . முப்பது வயதான போது சமூக சீர்திருத்த வாதியான லியோனார்ட் வூல்ப்பை மணந்தார் .முதல் நாவல் வாயேஜ் அவுட்டை வெளியிட்டார்.அப்போதே அவருக்கு  அடிக்கடி மன நோய் ஏற்படுவதுண்டு .1917ல் கணவரும் அவரும் சேர்ந்து ஹோகார்த் பிரஸ் எனப்படும் வெளியீட்டு நிறுவனத்தை ஸ்தாபித்து

டிஎஸ்.எலியட் போன்றோரின் கவிதைகளை வெளியிட்டனர்.

நாற்பது வயதானபொழுது வூல்ப் எழுதிய ஜேக்கப்ஸ் ரூம் நாவலில் சிந்தனை ஓட்ட உத்தியைக் கடைப்பிடித்தார்.பின்னர் வந்த புதினங்களிலும் இந்த எண்ண ஓட்ட உத்தி தொடர்ந்தது.

ஆர்லாண்டோ நாவலில் ஒரே கதா பாத்திரம் பல நூற்றாண்டுகள் வாழ்ந்து  ஆணாகவும் பெண்ணாகவும் மாறி மாறித் தோன்றும் புதுமையைக் காணலாம் . இவருடை ய பாணி (Style) இருபதாம் நூற்றாண்டின் புதினங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தின.

தனது நாவல்களில் பெண்ணியக் கொடியையும் உயர்த்திப் பிடித்தார். ஆண் ஆதிக்க உலகில் பெண்கள் படும் கஷ்ட நஷ்டங்களை ஏ ரூம் ஆப் ஒன்ஸ் ஓன் என்ற நாவலில் படம்பிடித்துக் காட்டினார். கடைசி நாவல் எழுதிய பின்னர் கடும் மன நோயில் சிக்கினார். ஆற்றில் விழுந்து இறந்தார் . அவருடைய கட்டுரைகள்நாட் குறிப்பேடு ஆகியனவும் தனி புஸ்தகங்களாக வெளியாகியுள்ளன.

ஆங்கில நாவல் படிக்கும் எவரைக் கேட்டாலும் ஒரிஜினல் பெண் எழுத்தாளர் வர்ஜீனியாதான் என்று சொல்லுவர் .ஆனால் இவரை குறை சொல்லுவோர்இவருடைய புதினங்களில் இலக்கணப் பிழைகள் மலிந்துள்ளதாகவும் ஒரு வாக்கியம் கூட இலக்கணச் சுத்தமாக  இராதென்றும் செப்புவர்.

பெண்ணிய ஆராய்சசியாளருக்கு இவர் நிறைய படைப்புகளை விட்டுச் சென்றுள்ளார். வூல்ப்பின் கடிதங்கள் ஆறு தொகுதிகள் டயரிகள் 5 தொகுப்புகள் அவரை அறிந்தவர் எழுதிய நினைவு மஞ்சரிகள் என நிறைய படிப்பதற்கு உள்ளன. நூறு ஆண்டுகளுக்கு முன்னரே இத்தகைய சிந்தனை மலர்ந்ததால் இவர் புகழ் நீடித்தோங்கும் என்பதில் ஐயமில்லை.

xxx

எழுதிய நூல்கள்

1915 – த வாயேஜ் அவுட் THE VOYAGE OUT

1919 நைட் அண்ட் டே NIGHT AND DAY

1922 ஜேக்கப்ஸ் ரூம் JACOB’S ROOM

1925 மிஸிஸ் டல்லோவே MRS DALLOWAY

1927 டு தி லைட் ஹவுஸ் TO THE LIGHT HOUSE

1928 ஆர்லாண்டோ ORLANDO

1929 எ ரூம் ஆப் ஒன்ஸ் ஓன் A ROOM OF ONE’S OWN

1931 த வேவ்ஸ் THE WAVES

1937 தி இயர்ஸ்  THE YEARS

1941 பிட்வீன் தி ஆக்ட்ஸ்  BETWEEN THE ACTS.

–subham–

tags- ஆங்கில நாவல் ஆசிரியை, வர்ஜீனியா வூல்ஃப் , சிந்தனை ஓட்டம், எண்ண ஓட்டம் 

துளஸிதாஸர்! ராமசரிதமானஸம் (Post No.9735)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9735

Date uploaded in London – –  –15 JUNE   2021   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து திங்கள் தோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 14-6-2021 அன்று ஒளிபரப்பான உரை!

துளஸிதாஸர்!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம்!

பக்தி தேவதை தன்னைப் பற்றி பாகவதத்தில் கூறுகையில் ‘நான் தமிழ் தேசத்தில் பிறந்தவள்’ என்கிறாள். ஆம், உண்மை தான். தேவாரம், திருவாசகம், திருப்புகழ், நாலாயிரதிவ்யபிரபந்தம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான நூல்களை நினைத்துப் பார்த்தாலேயே போதும் இது உண்மை தான் என்பதை உறுதி செய்து கொள்ளலாம். ஆனால் பக்தி பாரதமெங்கும் பரவ ஏராளமான மகான்கள் அவதரித்தனர். வடக்கே ஒரு பெரும் பக்தி யுகமே தோன்றியது. சமர்த்த ராமதாஸர், பத்ராசல ராமதாஸர், சூர் தாஸர், ஜெயதேவர், கிருஷ்ண சைதன்யர், லீலா சுகர் என்று இந்தப் பட்டியல்  மீக நீண்ட பட்டியல். இந்த மகான்களின் சரிதங்களை ஸ்ரீ மஹா பக்த விஜயம் என்ற நூலில் காணலாம். இந்த மஹான்களிலே குறிப்பிடத் தகுந்த ஒருவர் இருக்கிறார். அவர் புண்ணியத்திற்கான வழியைக் காட்டியவர்.

புண்ணியத்தை வீட்டிலேயே வைத்திருக்க ஒரு வழி உண்டு என்று சொன்னால் ஆச்சரியமாக இல்லை? இதை வட நாட்டில் பக்தர்களிடம் சொன்னால், “ ஓ, ராமசரிதமானஸம் வீட்டில் இருக்கிறதா என்று கேட்கிறீர்களா? என்பார்கள். ஆம், துளஸிதாஸர் இயற்றிய ராமசரிதமானஸத்தை வீட்டில் வைத்திருந்தாலே புண்ணியம் தான்!  கோடானு கோடி மக்களுக்கு ஆன்மீக ஜீவனாகத் திகழ்வது ராமசரிதமானஸம். இதை இயற்றி அருளிய துளஸிதாஸர் ஒரு அபூர்வமான மகான்.

ராம சரிதத்தை உலகியல் மொழியான அவதி மொழியில் ராமசரித மானஸ் என்று துளஸிதாஸர் (1532 – 1623) இயற்றிய இடம் அயோத்தி!

துளஸிதாஸரின் வாழ்க்கை அற்புதமான சம்பவங்களைக் கொண்டது.ராஜாப்பூர் என்ற ஊரில் ஆத்மாராம்-ஹூலசி என்ற பிராமண தம்பதிகளுக்கு மூல நக்ஷத்திரத்தில் துளஸிதாஸர் அவதரித்தார்.  அவர் கர்ப்பத்தில் 12 மாதம் இருந்தார், பிறக்கும் போது 32 பற்களுடன் பிறந்தார், அத்துடன் பிறந்த உடனேயே ஐந்து வயதுக் குழந்தை போல இருந்தார். ராமா என்ற நாமத்தை உச்சரித்துக் கொண்டே பிறந்தார். இந்த நிலையில் பிள்ளையைப் பார்த்தால் தந்தை கண்டிப்பாகத் தன் பிள்ளையைத் துறந்து விடுவார் என்று அவரது தாயார் பயந்தார். ஆகவே சுனியா என்ற தாதியிடம் தன் குழந்தையைக் கொடுத்து வளர்க்கச் சொன்னார். ஆனால் அவரும் சில நாளில் இறந்து விடவே குழந்தை அனாதையாகவே வளர நேர்ந்தது. நரஹரியானந்தர் என்ற வைணவர் குழந்தையை அயோத்திக்கு அழைத்துச் சென்று யக்ஞோபவீதம், பஞ்ச சம்ஸ்காரம் உள்ளிட்டவற்றைச் செய்வித்தார். 15 வருடங்கள் வித்யாப்யாசம் செய்து வீடு திரும்பிய அவருக்கு பாரத்வாஜ கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பிராமணர் தன் பெண்ணை விவாகம் செய்து கொடுத்தார். இந்த மணவாழ்வில் தான் அவர் ராம பக்தராக மாறிய  அதிசய சம்பவம் நிகழ்ந்தது.  

அவரது மனைவி மீது கொண்ட அளவற்ற ஆசையால் அவர் மனைவி தனது பிறந்தகம் சென்ற போது அவரைத் தொடர்ந்து பின்னால் சென்றார்

அதைப் பார்த்த அவர் மனைவி, “எனது இந்த சதை மீதும் எலும்பின் மீதும் கொண்டிருக்கும் பற்றைப் போல ராமபிரானின் மீது கொண்டால் பிறப்பு இறப்பு பயம் நீங்குமே” என்று சொல்ல கண நேரத்தில் உலக வாழ்க்கையைத் துறந்து மஹா ஞானியானார் அவர்.

பாரத தேசமெங்கும் சுற்றி அலைந்து அனைத்து ஸ்தலங்களுக்கும் விஜயம் செய்து பக்தி மேலிட நெகிழ்ந்தார்; உருகினார்.

பின்னர் வாரணாசிக்கு அவர் வந்த போது அயோத்திக்குச் செல்லுமாறு இறைவனின் திருவருள் ஆணை பிறந்தது. அயோத்தி சென்றார் அவர்.

அங்கு அவர் துளஸி ராமாயணத்தை இயற்றியது பற்றிய சுவையான வரலாறு ஒன்று உண்டு.

ராமாயணத்தை வால்மீகி முனிவர் இயற்றிய போது அதைப் படித்து அதற்கு தனது கையெழுத்திட்டு அங்கீகாரம் தந்தார் ராமபிரான். 

ஹனுமானும் ராம சரிதத்தை எழுத ஆசைப்பட்டு கற்களில் தன் நகங்களால் ராம சரிதத்தை எழுதினார். தனது ராமாயணத்தை ராமபிரானிடம் அவர் காண்பிக்க, ராமபிரான், அதுவும் சரிதான் என்று கூறி விட்டு,, “ஆனால் ஏற்கனவே வால்மீகி ராமாயணத்தில் கையெழுத்திட்டு விட்டதால் அதில் தன்னால் கையெழுத்திட முடியாது என்றும் வால்மீகியிடம் சென்று அதைக் காண்பிக்குமாறும் அருளுரை பகர்ந்தார்.

ஹனுமான் வால்மீகியிடம் சென்றார்; தனது ஹனுமத் ராமாயணத்தைக் காட்டினார்.’அதைப் படித்து வியந்த வால்மீகி தனது ராமாயணம் அதற்கு முன் நிற்காது என்ற முடிவில் ஹனுமனது ராமாயணத்தைக் கடலில் போடுமாறு கேட்டுக் கொண்டார்.

வால்மீகி கூறியபடி தனது ராமாயணத்தைக் கடலில் போட்ட ஹனுமார் இனி வரும் காலத்தில் தானே துளஸி என்ற பெயருடைய ஒரு பிராமணருக்கு உத்வேகம் ஊட்டி, தனது ராமாயணத்தை எல்லா மக்களும் எளிதில் அறியும் மொழியில் இயற்றச் செய்யப் போவதாக அருளுரை பகர்ந்தார்.

அதன் படியே நடந்தது. அயோத்திக்குச் சென்ற துளஸிதாஸர் அங்கு ஒரு ஆலமரத்தின் அடியில் அமர்ந்தார். அந்த இடம் அவருக்கு ஏற்கனவே ஏற்பாடாகி இருந்தது. ஒரு சாது அந்த இடத்தைப் பீடத்தால் அலங்கரித்து துளஸிதாஸர் அங்கு வருவதைத் தன் குரு முன்னதாகவே கணித்துச் சொல்லி விட்டார் என்று கூறினார்.

1575ஆம் ஆண்டு ராம நவமி நாள். அறிஞர்களின் கூற்றுப்படி திரேதா யுகத்தில் ராமர் பிறந்த நாளில் எந்த கிரக நிலைகள் இருந்தனவோ அதே கிரக சேர்க்கை அமைந்த நாள் அது. ராமரைத் துதித்து தன் ராமசரிதமானஸ் காவியத்தைத்த் தொடங்கினார் துளஸிதாஸர்.

ஏழு காண்டங்களை எளிய மொழியில் இரு வரிகள் கொண்ட 6700 ஸ்லோகங்களில் பாடினார். மானஸ சரோவருக்கு ஏழுபடிகள் வழியே செல்வதாக உள்ள கருத்துப்பட ராமசரித மானஸ் என்ற பெயரை தான் இயற்றிய ராமாயணத்திற்குச் சூட்டினார்.

இரண்டு வருடம் ஏழு மாதம் 26 நாட்களில் அற்புதமான காவியம் முடிந்தது. அது முடிந்த நாள், சீதா கல்யாணம் நடந்த அதே ஆண்டு விழா நாள்.

சரிதத்தைப் பூர்த்தி செய்த துளஸிதாஸர் வாரணாசி திரும்பினார்.

அங்கு அவரது காவியத்தின் பெருமை பரவியது. இது பொறுக்காத பண்டிதர்கள் சிலர் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த சுவடிக் கட்டை எடுத்து வருமாறு இருவரை அனுப்பவே அவர்கள் ஆலயத்திற்கு இரவு நேரத்தில் சென்றனர்.

ஆனால் அங்கு இருவர் வில்லும் அம்புடனும் காவல் காத்து வருவதைப் பார்த்து அதிசயித்த அவர்கள் மறுநாள் துளஸிதாஸரை வணங்கி மன்னிப்புக் கேட்டு நடந்ததைக் கூறினர்.

‘அமிர்த கோ பி லஜ்ஜித கரதி சமர்த்த ஹோகர் ப்ராக்ருத வாணி’ -அமிர்தமே நாணமடையும் படியான சுவையான சொற்கள் கொண்டது எனப் புகழப்படும் காவியம் மக்களிடையே பரவி ராம பக்தியை வளர்த்தது.

சித்ரகூடத்தில் ராம தரிசனம் பெற்ற துளஸிதாஸர் சமாதி நிலையை எய்தினார்.

12 நூல்களைப் படைத்த துளஸிதாஸர் சம்ஸ்கிருதம் நன்கு அறிந்த ஒரு சம்ஸ்கிருத பண்டிதரும் கூட!

ராமசரித மானஸ் காவியத்தில் அமைந்திருக்கும் ஒரு அற்புதமான விஷயம் அதிசயமானது. வால்மீகியின் ராமாயணத்தில் ஒவ்வொரு ஆயிரமாவது ஸ்லோகத்திலும் காயத்ரி மந்திரத்தின் ஒரு எழுத்து தோன்றும். ராமசரித மானஸிலோ ஒவ்வொரு செய்யுளிலும் ச, த, ர, ம வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு எழுத்து வரும்.சீதாராமன் என்ற சொல்லில் உள்ள எழுத்துக்கள் இந்த ச, த, ர, ம வர்க்க எழுத்துக்கள். ஆக சீதை அல்லது ராமனை ஒவ்வொரு செய்யுளிலும் துதிக்கும்படியான ஒரு அற்புத அமைப்பு துளஸி ராமாயணத்தில் உள்ளது. காவியத்தின் கதையையும் சொல்ல வேண்டும், சந்த சாஸ்திரத்தின் படியும் அமைக்க வேண்டும், சீதாராமன் என்ற சொல்லில் உள்ள வார்த்தைகளில் ஏதேனுமொரு வார்த்தையைக் குறிக்கும் வர்க்க எழுத்தையும் தர வேண்டும் என்றால் அது மனித யத்தனத்திற்கு அப்பாற்பட்ட இறை செயல் அல்லவா? ராமனே தனது ஜென்ம பூமியில் தன் நினைவை மக்களுக்கு ஒவ்வொரு செய்யுளிலும் தரும் வரம் அல்லவா இது!

ராமசரிதமானஸத்தின் சிறப்புக்களைச் சொல்வது எளிதல்ல. இதன் ஏழு காண்டங்களும் ஏழு படிக்கட்டுகளாகும். சிவன் – உமை, சிவன் – காகுபசுண்டி, காகுபசுண்டி – கருடன், யாக்ஞவல்க்யர்- பரத்வாஜர் ஆகியோரிடையே நடந்த நான்கு சம்வாதங்கள் அதாவது உரையாடல்களும் நான்கு துறைகளாகும். மானஸத்தில் இருந்து சரயு, கங்கை, சோனை ஆகிய நதிகள் கிளம்புகின்றன. அது போல ராமசரிதமானஸத்தில் இருந்து கதை, பக்தி, வைராக்கியம் ஆகிய மூன்றும் வந்து நம்மைச் சேரும்.

யார் இந்த நூலுக்கு அதிகாரிகள்? இதற்கு அதிசயிக்கத்தக்க விளக்கம் வருகிறது. யார் இதைப் பாடுகிறார்களோ, யார் இதைச் சொல்கிறார்களோ, யார் இதைக் கேட்கிறார்களோ அவர்கள் எல்லாம் இதற்கு அதிகாரிகள். அட, கேட்டாலே இது நமது சொத்தாகி விடுகிறதா?! என்று அதிசயிக்கும் போது தான் இது வீட்டில் இருந்தாலேயே புண்ணியம் என்பதன் அர்த்தம் நமக்குப் புலப்படும்!

இந்த மானஸ்த்தில் குளிப்பதற்கான அன்னங்கள் தானே வரும். கொக்கு போன்றவை வரவே வராது. அன்னத்திற்கு ஆகாரம் உண்டு இங்கே! ஆனால் கொக்குகளுக்கோ ஆகாரம் இங்கு இல்லை.

ராமரைக் கண்ட சீதையின் பணிப்பெண் அவரின் அழகை விளக்க வழி தெரியாமல் கூறும் உவமை இது: “கிரா அநயனா நயன வினு வாணீ!”

இதன் பொருள் “நாக்குக்குக் கண்கள் இல்லை; கண்களுக்கோ பேசும் சக்தி இல்லை. எப்படி அவரின் அழகை விவரிப்பேன்?” இப்படி தோழி கூற, தன் தோழியை முன்னிட்டு சீதை அரசிளங்குமரர் இருவரையும் பார்க்கிறாள்.

இப்படி ஏராளமான உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் உவமைகளும், உபதேசங்களும், சிவ விஷ்ணு பேதத்தை நீக்கும் பாடல்களும் இதில் உள்ளன.

இதில் ராட்சஸ வர்ணனை அதிகம் இல்லை; ஆனால் அவதாரத்தின் வர்ணனையோ அதிகம் உண்டு. நல்லதைச் சொல்; கெட்டது தானே அழியும் என்பது துளஸிதாஸரின் மனப்போக்கு.

துளஸிதாஸரைப் பற்றி முன்னூற்றி ஐம்பது வருடங்களுக்கு முன்னர் தோன்றிய வேணு கவி என்பவர், “துளஸி என்று ஒருவர் தோன்றி இப்படி ஒரு மானஸத்தை உருவாக்கி இராவிட்டால் நாம் வேதம் என்ன கண்டோம், பக்தி என்ன கண்டோம், நல்லவர் கெட்டவர் என்ற பாகுபாடு தான் என்ன கண்டோம் என்று அழகுறக் கூறியுள்ளார். உண்மை தானே!

நம்மாழ்வார் திருவாய்மொழியில் எதைக் கற்க வேண்டும் என்பதை அழகுறக் கூறியுள்ளார்

கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ?

புற்பா முதலாப் புல் எறும்பு ஆதி ஒன்று இன்றியே

நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்

நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே

இராமபிரானைக் கற்று அவனை சரணாகதி அடைந்தால் வரும் பயன் என்ன? ராமரின் உறுதி மொழியே அதைத் தெரிவிக்கிறது! ராமாயணத்தின் உயிர்நாடியாக விளங்கும் அவரது ‘உறுதி மொழி ஸ்லோக’மானது யுத்தகாண்டம் 18ஆம் ஸர்க்கத்தில் 33ஆவது ஸ்லோகமாக அமைகிறது

ஸக்ருத் ஏவ பிரபன்னாய தவாஸ் மீதி ஸ யாசதே |

அபயம் சர்வ பூதேப்யோ ததாம் யேதத் வ்ரதம் மம ||

ஒரு முறை சரணம் அடைந்தாலும் உனக்கு அடியேனாக நான் ஆகிறேன், யாசிப்பவன் பொருட்டு எல்லா பிராணிகளிடத்திலும் நின்று அபயம் கொடுக்கிறேன். இதுவே எனது திட விரதம் – இது ராமபிரானின் சத்திய வாக்கு. சரணாகதி அடைந்த பக்தனை ராமன் எப்படிக் காப்பாற்றுவான்?

ஒரு சின்னக் கதை!

கடுமையான வெயில். காடு அடர்ந்த மலைப் பகுதி. பாதை சேறும் சகதியுமாக இருக்கிறது. சில பகுதிகளோ கல்லும் முள்ளுமாக கரடுமுரடாக இருக்கிறது. அந்த வழியில் செல்ல வேண்டியிருந்த பெருமாள் பக்தன் ஒருவனால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. பெருமாளைச் சரணடைந்தான் அவன். காப்பாற்று காப்பாற்று, சரணம் என்று கத்தினான் அவன். அவன் முன்னே பெருமாள் தோன்றி ஏன் கத்துகிறாய்? என்றார். ‘பெருமாளே சரணம். எனக்கு பயமாய் இருக்கிறது?’ என்றான் அவன். ‘சரி, நான் என்ன செய்ய வேண்டும்’ என்று கேட்டார் பெருமாள். ‘வேறு ஒன்றும் வேண்டாம், கூடவே வந்தால் போதும், எனக்கு தைரியமாக இருக்கும்’ என்றான் பக்தன். “சரி, அப்படியே ஆகட்டும்” என்றாள் பெருமாள். அவர் மறைந்தார். சேறும் சகதியும் நிறைந்த பாதையில் தன் இரு காலடித் தடங்களைப் பதித்தான் பக்தன். என்ன ஆச்சரியம், கூடவே இன்னும் இரு பாதத் தடங்கள் இருந்தன. பக்தனுக்கு பரம சந்தோஷம், பெருமாள் வாக்குக் கொடுத்தபடி கூடவே வருகிறார் என்று. சற்று தூரம் சென்ற பின்னர் பாதை இன்னும் கடுமையாக ஆனது. பக்தனுக்குக் களைப்புத் தாளவில்லை. மெல்ல அடி எடுத்து வைத்தான். திடீரென்று பார்த்தால் இரண்டு காலடித் தடங்கள் மட்டுமே இருக்கிறது பாதையில். பக்தன் திடுக்கிட்டு அலறினான். ‘பெருமாளே! சரணம் அடைந்த என்னை இப்படிப் பாதியில் விட்டு விடலாமா. இரண்டு தடங்கள் தானே இருக்கிறது?’ என்று கூறி ஓவென்று  அலறினான். ஒரு குரல் கேட்டது. “அட முட்டாளே! அது என்னுடைய பாதத் தடம். நீ நடக்க முடியாமல் தவித்ததால் உன்னை என் தோளின் மீது அமர்த்தி வைத்துக் கொண்டு நான் நடக்கிறேன்” என்றது அசரீரி குரல்! பக்தன் கண்ணீர் சொரிந்தான்.

GOD HAS NEVER BROKEN A PROMISR EVER SPOKEN!

ராம நாம மஹிமை பற்றி கவிச்சக்கரவர்த்தி கம்பன் மிக அழகாகக் கூறி விட்டான் இப்படி:-

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே

தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே

ஜென்மமும் மரணமும் இன்றித் தீருமே

இம்மையே ராமவென்ற இரண்டெழுத்தினால்.

துளஸி ராமாயணத்தின் தமிழ் மொழிபெயர்ப்பும் கிடைக்கிறது.

துளஸி ராமாயணம் கற்போம்; இராமரைச் சரணடைவோம்! இக பர சௌபாக்யம் அடைவோம்!                       

நன்றி, வணக்கம்!

tags- துளஸிதாஸர், ராமசரிதமானஸ,

LONDON CALLING (HINDUS) 14-6-2021(Post No.9734)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9734

Date uploaded in London – –14 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

14-6-2021 MONDAY PROGRAMME

GNANA MAYAM- GNANA SUDAR BROADCAST FROM LONDON

Title song – Maitrim Bhajata by Kanchi Paramacharya sung by MS

OPENING ANNOUNCEMENT & PRAYER -5 MTS

PRAYER -BY SIVA SRI SURESHJI, KOVAI

Talk by K Ganesan on Dharma sastra–- 12 MINUTES

ASHTAPATHI -18 BY LONDON SRI BALA SUBRAHMANYAN -6 mts

TALK BY BENGALURU S NAGARAJAN ON SAINT TULSIDAS- 12 MTS

அப்பருடன் 60 வினாடி பேட்டி – எழுதியவர் லண்டன் சுவாமிநாதன்;

வாசிப்பவர் கல்யாண சுந்தர சிவாச்சாரியார்- 8 MINUTES

SONG- 4 MTS

DR N KANNAN’S TALK from Chennai– ALWAR AMUTHAM -8

Mangalam – 3 mts

TOTAL TIME- APPR. 60 MINUTES

XXXX

INTRODUCTION TO GNANAMAYAM BROADCASTING

WE LAUNCHED A HINDU BROADCAST FROM LONDON IN AUGUST 2020 ON MONDAYS .

LATER WE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON, MOSTLY IN TAMIL.

TIME OF BROADCAST- TWO PM LONDON TIME;

 6-30 PM INDIAN TIME;

DAYS- MONDAYS AND SUNDAYS

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS.

MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)

ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH SUNDAY AND MONDAY

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.

FORMER BBC BROADCASTER,

SENIOR SUB EDITOR, DINAMANI,

FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL

PLUS

FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;

MANAGER, LONDON TAMIL SANGAM,

HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;

HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &

CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)

NOW BLOG WRITER WITH 6000 PLUS ARTICLES (tamilandvedas.com) TO HIS CREDIT AND AUTHOR OF FOUR BOOKS.

***

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

AND MRS SUJATHA RENGANATHAN IS OUR CO-PRODUCER.

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM AT 2 PM LONDON TIME

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

tags- broadcast1462021

LONDON CALLING TAMILS 13-6-2021(Post No.9733)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9733

Date uploaded in London – –14 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

13-6-2021 SUNDAY PROGRAMME

TAMIL THUNDER /THAMIL MUZAKKAM (Part of Gnanamayam Channel) BROADCAST from London

OPENING ANNOUNCEMENT & PRAYER – 5 MTS

Prayer –-  Pondy Girl Miss Sahana

MRS BRHANNAYAKI SATHYANARAYANAN ON   THIRUVANANTHAPURAM TEMPLE,8 MTS

Thiruppugaz Amirtham – by MRS JAYANTHI SUNDAR & Mrs SILATHA SAINATH & MRS LATHA MURTHY- 10 mts

WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH BY MRS SUJATHA RENGANATHAN

WORLD HINDU NEWS ROUNDUP IN TAMIL BY RANI SRINIVASAN

–25 MINUTES

Appar .50 minutes

xxx

INTRODUCTION TO GNANAMAYAM BROADCASTING

WE LAUNCHED A HINDU BROADCAST FROM LONDON IN AUGUST 2020 ON MONDAYS .

LATER WE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON, MOSTLY IN TAMIL.

TIME OF BROADCAST- TWO PM LONDON TIME;

 6-30 PM INDIAN TIME;

DAYS- MONDAYS AND SUNDAYS

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS.

MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)

ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH SUNDAY AND MONDAY

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.

FORMER BBC BROADCASTER,

SENIOR SUB EDITOR, DINAMANI,

FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL

PLUS

FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;

MANAGER, LONDON TAMIL SANGAM,

HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;

HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &

CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)

NOW BLOG WRITER WITH 6000 PLUS ARTICLES (tamilandvedas.com) TO HIS CREDIT AND AUTHOR OF FOUR BOOKS.

***

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

AND MRS SUJATHA RENGANATHAN IS OUR CO-PRODUCER.

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM AT 2 PM LONDON TIME

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

tags- broadcast1362021

February 2019 London Swaminathan Articles; Index 75 (Post No.9732)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9732

Date uploaded in London – –14 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

HOW TO GET ACCESS FOR THESE POSTS? 

JUST COPY THE TITLE YOU WANT TO READ AND PASTE IT IN GOOGLE SEARCH AND ADD “FROM tamilandvedas.com or from swamiindology.blogspot.com”

IF YOU HAVE ANY PROBLEM, PLEASE CONTACT US. OUR E MAIL IS IN ALL THE 9700 PLUS POSTS.

February 2019 Index 75

Similarities in Gilgamesh and Hindu Scriptures,6017;1 February 2019

English crossword 122019;1/2

Gilgamesh two thirds Divine one third Human,6023;2/2

More Gilgamesh Hindu Connection,6025;3/2

English crossword 322019;6027;3/2

Rivers and Mountains of Tamil Nadu, 6028:3/2

English crossword4 22019;6032;4/2

Colour Maps of District s in Tamil Nadu Asian 1938;;6030;4/2

Ratha saptami and Bhisma Ashtami,6033;4/2

Low in Zinc will make you sink,6036;5/2

I write when the Spirits command me- William Blake, 6040;6/2

Story of Tamil Devadasis-Part 1; Paravai and Intro 7/2

Jumble Jungle Mahabharata 822019:6047;8/2

Strange Liver Divination in Babylonia and Italy,6048;8/2

English crossword 92219, 6053; 9/2

English crossword 1022019;6059;10/2

Mars is Malevich, Saturn is benefic- Babylonian Astrology, 6051; 9/2

Devadasis part26052;9/2

Chinese Dragon Dance in london, 6058;10/2

Snake God and Mongoose God in Babylonia , 6062;11/2

Devadasi part 3;6065;12/2

Can Kassites help us to decipher the Indus Sarasvati Script?6070;13/2

Swami s crossword 1322019;6068:13/2

Swami s crossword 1422019;6072: 14/2

Devadasis part 4;6074;14/2

Ingersoll s Atheist Library,6079;15/2

Seven Thorns that prick Everyone’s Mind ,6081;16/2

Hindu Tree Wonders, 6082;16/2

God’s Gift to Newspaper Woman,6087;17/2

English crossword 1722019;6086;17/2

Devadasis part5;6092;18/2

I speak to 30 Million People through Pencil, 6091;18/2

Comparison between Indian and Babylonian Inscriptions, 6096;19/2

Oldest Satyagraha in the world, 6100:20/2

Swami s crossword 2122019;6102;21/2

Metals, Planets and Colours in Hindu and Western Cultures, 6104;21/2

Swami s crossword 2222019;22/2;6110

Angry Woman’s Trick to trap the Editor, 6107;22/2

Devadasis part 6;6108;22/2

Pythagoras Propagated Hindu Ideals, 6113;23/2

Part 2;6117;24/2

Swami s crossword 2522019;6120;25/2

Thank God Hell is Full,6121;25/2

31 Beautiful Quotations of tiruvalluvar,614;26/2

Swami s crossword 2722019;6130;27/2

Largest Bhagavad Gita,6127;27/2

How did Turner paint a storm at Sea? 6129;27/2

Devadasis part 7;6132; 28/2

Tolstoy’s Story about Painter Brulov,6134;28 February 2019

Xxx

TAMIL ARTI CLES IN FEBRUARY 2019

சிந்து சமவெளி -கில்காமேஷ் காவியம் உத்தரகுரு தொடர்பு,

 6016, பிப் ரவரி 1, 2019

சுவாமி குறுக்கெழுத்துப் போட்டி,6018, (சு.கு.போ)122019, 1/2

(சு.கு.போ)222019, 2/2;6022

மூன்றில் இரண்டு பங்கு இறைவன்- ஒரு பங்கு மனிதன் கில்காமேஷ் ,

6021; 2/2

(சு.கு.போ)322019, 3/2;6026

கில்காமேஷ் – இந்து சமய தொடர்பு பற்றி மேலும் சில தகவல்கள்,

6031, 4/2

இரத்த அழுத்தமும் துத்தநாகமும்,6035, 5/2

(சு.கு.போ)522019, 5/2;6037

வேத காலத்தில் ஆ டல் பாடல் , 6039, 6/2

(சு.கு.போ)722019, 7/2;6043

சுமேரியாவில் கலீரல் ஜோதிடம், 6044, 7/2

கொச்ச முச்ச722019, 6045, 7/2

சனியைவிட செவ்வாய் கிரகம் பொல்லாதது, – பாபிலோனியர்

ஜோதிடம் ,6049, 8/2

அசோக சக்ரவர்த்தி கதறி அழுதது ஏன் ?6054, 9/2

த .கு.போ.922019, 9/2;6055

பரி , கரி, அரி, நரி , மறி ,கிரி, சுரி ,வரி 6057, 10/2

போலி சந்யாசிகள் முகத்திரையை கிழித்த அசோகன், 6061, 11/2

சு.கு.போ.1222019, 12/2;6066

பாபிலோனியாவில் பாம்புக்கு கடவுளும் கீரிக் கடவுளும், 6064

அசோக சக்ரவர்த்தி 50% பிராமணன், 6069, 13/2

சிந்துவெளி எழுத்தைப் படிக்க காஸைட்ஸ் நாகரீகம் உதவலாம், 6073, 14/2

மனதைத் தைக்கும் ஏழு முட்கள்- பர்த்ருஹரி வருத்தம்,

6078, 15/2

ஒரு பூனைக்கதை சொல்லவா ?6083, 16/2

அசோக மறக்க கதை தெரியுமா? 6084, 16/2

ஆறு வகை எள் ஏகாதஸி ,6088, 17/2

சு.கு.போ.1822019, 6090, 18/2

த .கு.போ.1922019, 6097, 19/2

பாபிலோனிய எல்லைக் கற்களும் இந்தியக்

கல்வெட்டுகளும் , 6093, 18/2

இனி 2 மயில் மட்டுமே சமைக்கலாம், அசோகன்

உத்தரவு , 6095, 19/2

தோபா சுவாமிகள் செய்த அற்புதங்கள்,6099, 20/2

உலகின் முதல் சத்யாக்ரஹி ,6103, 21/2

சுவாமி த .கு.போ.2122019, 6105, 21/2

ஆத்திரக்காரி எழுதிய ஆசிரியருக்குக் கடிதம், 22/2, 6109, 22/2

சுவாமி த .கு.போ.2322019, 6114, 23/2

தமிழ்நாடு பற்றி அசோகர் கல்வெட்டு தெரிவிக்கும்

அதிசய விஷயங்கள், 6112, 23/2

கிரேக்க நாட்டில் இந்துமத ஞானி பிதகோரஸ் -1; 6116, 24/2

சுவாமி த .கு.போ.2522019, 6122, 25/2

ஒற்றைப்படை எ ண்கள் பெண்கள் , இரட்டைப்படை

எண்கள் ஆண்கள், 6119, 25/2

கெட்டவன் அருகில் நல்லவன் வசிப்பது முடியாது, 6125, 26/2

வெற்றி பெறுவது எப்படி? 31 தமிழ் ஸம்ஸ்க்ருதப் பொன்மொழிகள், 6128, 27/2

லண்டனில் ஆ ர்க்கிட் மலர்க்  கண்காட்சி ,6133, 28/2

–subham–

tags – index 75, february 2019, index