Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
மனிதன் தெய்வமாகலாம் என்று வள்ளுவரின் திருக்குறளும் ரிக்வேதமும் செப்புகின்றன.பல கவிஞர்கள் தெய்வ நிலைக்கு உயர்த்தப்படுவதை நாம் அறிவோம். ‘தெய்வப் புலவர்’ திருவள்ளுவர் என்பது ஆன்றோர் வாக்கு. ‘பகவான் பாணினி’ என்று இலக்கணப் பேருரை (மஹாபாஷ்யம்) எழுதிய பதஞ்சலி முனிவர், பாணியைப் புகழ்கிறார். கிரேக்க நாட்டிலும் ஹோமர் என்னும் மஹா கவியை Divine Homer ‘டிவைன் ஹோமர்’ என்று கிரேக்கர்கள் போற்றினர். பகவத் கீதையில் கண்ணபிரானும் கவிகளுள் ‘நான் உசனஸ் கவி’ என்று ரிக்வேத கவிஞரை தன நிலைக்கு உயர்த்துகிறார்.
ராமன், கிருஷ்ணன் போன்ற கறுப்புத் தோல்படைத்த மன்னர்களையும் அவதாரம் என்று இந்துக்கள் கருதுகின்றனர். மற்றொரு காகம் போல கருப்புத் தோல் படைத்த கிருஷ்ண த்வைபாயன வியாஸரையும் ‘பகவான்’ என்றும் விஷ்ணுவின் மறு அவதாரம் என்றும் சம்ஸ்க்ருத ஸ்லோகங்கள் துதி பாடுகின்றன. இவை எல்லாம் மனிதனை, குறிப்பாக கவிஞர்களை, தெய்வீக நிலைக்கு உயர்த்தியத்தைக் காட்டுகின்றன.
இதை வள்ளுவர் மிக அழகாகச் சொல்கிறார்….
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும் – குறள் 50
நிலவுலகத்தில் , இல்லற வாழ்க்கையை , வாழவேண்டிய அறநெறிப்படி நின்று வாழ்பவன் மண்ணுலகத்தில் வாழ்ந்தாலும், வானுலகத்தில் வாழும் கடவுளுக்கு சமமாகக் கருதப்படுவான்.
இதனால்தான் நாம் சம்பந்தர், ஆதி சங்கரர் போன்றோரையும் கடவுளின் அவதாரமாக அல்லது அம்சமாகக் கருதுகிறோம்.
திருக்குறள் 413–ல் மீண்டும் இதே கருத்தை வள்ளுவர் வலியுறுத்துகிறார்.
செவியுணவிற் கேள்வியுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து – குறள் 413
செவிக்கு உணவாகிய வேதத்தை (கேள்வி=சுருதி) உடையவர்கள் (பிராமணர்கள்)உலகத்தில் வாழ்ந்தாலும் அவிஸ் என்னும் யாக உணவை உண்ணும் தேவரோடு ஒப்பிட்டுக்கூறத்தக்கவர்களே .
பிராமணர்களை ‘பூ சுரர்’, ‘பூலோக தேவர்கள்’ என்று மநு முதலிய சட்டப்புஸ்தகங்கள் கூறுவதை வள்ளுவர் அப்படியே மொழி பெயர்த்து விட்டார். அவி = ஹவிஸ் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லை வள்ளுவர் பயன்படுத்துவதில் இருந்து இது தெரிகிறது. ஆயினும் ராமர் கிருஷ்ணர் போன்றார் பிராமணர் அல்ல. ‘வாழ்வாங்கு வாழ்பவர்’ எல்லோரும் தெய்வங்களே.
வள்ளுவருக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இது சதபத பிராஹ்மண நூலில் உளது.
யே ப்ராஹ்மணாஹா சுச்ருவாம்ஸோ
அனூ சானாஸ்தே மனுஷ்யே தேவாஹா
xxx
வித்வாம்ஸோ ஹி தேவாஹா (அறிஞர்களும் தேவர்களே)
2-2-2-6; 2-4-3-14 ; 3-7-3-10, சதபத பிராமணம்
ஜாதி என்பதை மறந்துவிட்டு அறிவை நாடும் எல்லோரும் தேவர்களுக்கு ஒப்பானவர்கள் என்று சுருக்கமாகச் சொல்லிவிடலாம்.
இந்தக் கருத்துக்கள் உலகிலேயே மிகப்பழைய நூலான ரிக் வேதத்தில் இருப்பது பலருக்கும் தெரிந்திராது
இதோ ரிக்வேதப் பாடல்கள்/ மந்திரங்கள்.இதைத்தான் பிற்கால பிராஹ்மண நூல்களிலும் திருக்குறளிலும் காண்கிறோம்
ரிக்வேதம் 1-20-8ல்
“வேள்வியைத் தாங்கும் ரிபுக்கள் மானிட வடிவில் இருந்தார்கள் ; அவர்கள் தங்கள் நற்செயல்களால் வேள்வியில் தேவர்களோடு பங்கு கிடைக்கப்பெற்றார்கள்” என்று ரிஷி மேதாதிதி கண்வன் பாடுகிறார் .
இது குறள் 413 போலவே உளது.
ரிபுக்கள் யார் ?
ரிக்வேதத்தில் வரும் தெய்வங்களில் ரிபுக்கள் என்ற பன்மைச் சொல்லும் உளது. இவர்கள் சுதன்வான் என்பவருடைய 3 மகன்கள்.இவர்கள் அங்கீரஸ் என்பவர்களின் வழித்தோன்றல்கள். ரிபு, விபவான், வாஜா என்ற மூவரையும் கூட்டாக ரிபுக்கள் என்பர்.இவர்கள் தங்கள் இடையறா முயற்சியால் தெய்வீக அந்தஸ்த்தைப் பெற்றனர் சூரிய மண்டலத்தில் இவர்கள் வசிக்கின்றனர். சூரியனின் ஒளிக்கதிர்கள் என்றும் இவர்களை ரிஷிகள் துதி பாடுகின்றனர் மனிதன் தெய்வீக நிலையை அடைய முடியும் என்பதற்கு இவர்கள் எடுத்துக்காட்டு என்று ரிக் வேத பாஷ்யம் (உரை) இயம்புகிறது.
பிற்காலத்தில் உபநிஷத்துக்களில் இந்தக் கருத்து மிகவும் தெளிவாகவே உள்ளது. ‘தத் த்வம் அஸி’, ‘அஹம் பிரம்மாஸ்மி’ (நீயே அது; நானே பிரம்மம்) போன்ற வேத வசனங்கள் இதை உறுதிப்படுத்துகின்றன.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
WILLIAM WORDSWORTH
(1770 – 1850)
இயற்கையை ரசித்துப் பாடிய ஆங்கிலக் கவிஞன் வில்லியம் வோர்ட்ஸ்வொர்த். ஆங்கில இலக்கியத்தின் வளர்ச்சியில் அவர் ஆற்றிய பங்கு மிக முக்கியமானது.
பிரிட்டனில் கம்பர்லாண்டில் (CUMBERLAND) பிறந்தார். அவரது இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தார். இவரது மாமாவும் சித்தப்பாவும் இவரை வளர்த்தனர். கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் சேர்ந்து கல்வி பயின்றார். 1791ஆம் ஆண்டில் அவர் பிரான்ஸ் சென்றார். அங்கு பிரெஞ்ச் (Annette Vallon) பெண்ணைக் காதலித்தார். அங்கு அவளைத் திருமணம் செய்து கொள்வதில் இடையூறுகள் ஏற்படவே மணமுடிக்காமலே திரும்பி வந்தார்.
பிரான்ஸில் இருந்தபோது பிரெஞ்ச் புரட்சி அவரை மிகவும் கவர்ந்தது. ஆனால் பிரெஞ்ச் புரட்சியைத் தொடர்ந்து வீசிய வன்முறை அலை அவருக்கு வெறுப்பை ஊட்டியது.
1795-இல் கவிஞர் காலரிட்ஜ் (COLERIDGE) ஐ அவர் சந்தித்த பின்னர் கவிபாடுவதில் ஈடுபட தீர்மானித்தார். முதலில் டார்செட் (DORSET) என்னுமிடத்திலும் பின்னர் சாமர்செட் என்னுமிடத்திலும் அவரது சகோதரி டோரத்தியுடன் (DOROTHY) வசித்தார். கவி காலரிட்ஜ்
(COLERIDGE)உடன் இணைந்து செயல்பட்டார்.
1799-இல் WORDSWORTH சகோதரி DOROTHYயுடன் ஏரி மாவட்டம் (LAKE DISTRICT) சென்றார். மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் COUSIN MARY HUTCHINSONஐ மணந்து கொண்டார். 1803இல் ஸ்காட்லந்து சென்று ஸர் வால்ட்டர் ஸ்காட்டை (SIR WALTER SCOTT) சந்தித்தார். 1833-இல் அவரது குடும்பம் RYDAL MOUNT சென்றது. அடுத்த சில ஆண்கள் அவர் கவிதைகள் எழுதினார். ஐரோப்பிய பயணம் மேற்கொண்டார்.
1838-இல் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் DURHAM பல்கலைக்கழமும் அவருக்கு பட்டமளித்து சிறப்பித்தன. 1843-இல்
அரசவைக் கவிஞராக நியமிக்கப்பட்டார். இவர் 4 முறை திருமணம் செய்துகொண்டார்
Isabella Curwen (died 1848) had six children: Jane, Henry, William, John, Charles and Edward.
Helen Ross (died 1854). No children.
Mary Ann Dolan (died after 1858) had one daughter Dora (born 1858).
Mary Gamble. No children.
இயற்கையைப் பாடுவதில் உலகில் தலை கவிஞர் வரிசையில் வோர்ட்ஸ்வொர்த் இருக்கிறார். அவர் பாடிய டாஃபோடில்ஸ் DAFFODILS கவிதையை அறியாதோர் இலர். ப்ரெலுட் (PRELUDE) டென்னும் கவிதையில் தன சுய சரிதையைச் சொல்கிறார். புஸ்தகங்களைத் தூக்கி எறிந்துவிட்டு மரம் செடி கொடிகளுக்கு இடையே வாருங்கள். எல்லா முனிவர்களையும் வீட அவை உங்களுக்கு அதிகம் கற்பிக்கும் என்கிறார். கானகத்தில் ஆஸ்ரமம் அமைத்து வானப்ரஸ்தம் வாழ்க்கை நடத்திய முனிவர்களை அவர் நமக்கு நினைவு படுத்துகிறார். இமயமலைக் காடுகளில் நமக்கு உபநிஷதங்களை அளித்த முனிவர் போல இவர் கவி படுவது சிறப்பானது. இதோ அவரது 2 கவிதைகள்
DAFFODILS
Mr and Mrs Srinivasan in the field of Daffodils
Mr and Mrs Srinivasan in the field of Daffodils
I wandered lonely as a cloud
That floats on high o’er vales and hills,
When all at once I saw a crowd,
A host, of golden daffodils;
Beside the lake, beneath the trees,
Fluttering and dancing in the breeze.
Continuous as the stars that shine
And twinkle on the milky way,
They stretched in never-ending line
Along the margin of a bay:
Ten thousand saw I at a glance,
Tossing their heads in sprightly dance.
The waves beside them danced; but they
Out-did the sparkling waves in glee:
A poet could not but be gay,
In such a jocund company:
I gazed—and gazed—but little thought
What wealth the show to me had brought:
For oft, when on my couch I lie
In vacant or in pensive mood,
They flash upon that inward eye
Which is the bliss of solitude;
And then my heart with pleasure fills,
And dances with the daffodils
Xxx
The Tables Turned
Up! up! my Friend, and quit your books; Or surely you’ll grow double: Up! up! my Friend, and clear your looks; Why all this toil and trouble?
The sun above the mountain’s head, A freshening lustre mellow Through all the long green fields has spread, His first sweet evening yellow.
Books! ’tis a dull and endless strife: Come, hear the woodland linnet, How sweet his music! on my life, There’s more of wisdom in it.
And hark! how blithe the throstle sings! He, too, is no mean preacher: Come forth into the light of things, Let Nature be your teacher.
She has a world of ready wealth, Our minds and hearts to bless— Spontaneous wisdom breathed by health, Truth breathed by cheerfulness.
One impulse from a vernal wood May teach you more of man, Of moral evil and of good, Than all the sages can.
Sweet is the lore which Nature brings; Our meddling intellect Mis-shapes the beauteous forms of things:— We murder to dissect.
Enough of Science and of Art; Close up those barren leaves; Come forth, and bring with you a heart That watches and receives.
–William Wordsworth
tags– ஆங்கிலக் கவிஞன், வில்லியம் வோர்ட்ஸ்வொர்த், William Wordsworth, Daffodils
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கடவுள் எங்கே? – 2
ச.நாகராஜன்
கடவுள் இன்றி எதுவும் இல்லை!
Bereft of God no Self exists,
Bereft of knowledge no world exists,
Sat and Asat in God exists,
In the heart of man or beast God exists!
Call God by any name
Worship God in any form,
Remember Him by any name,
He is in all forms.
All goodness is God,
All perfection is God,
All purity is God,
All love is God,
All unselfishness is God
கஸ்தூரி மான் ஒன்று அந்த கஸ்தூரி வாசனை எங்கிருந்து வருகிறது என்று எங்கெங்கோ தேடி அலைந்தது. அதற்குள்ளிருந்து தான் அந்த வாசனையே வருகிறது என்று அதற்குப் புரியவில்லை. அது போலவே, கடவுளைத் தேடி எங்கெங்கோ அலைந்தேன். அட, அவன் என் உள்ளுக்குள்ளேயே இருக்கிறானே! அது தெரியாமல் அலைந்தேனே, இன்று உணர்ந்தேன் உண்மையை! அவன் அருளாலே அவன் தாள் பணிந்தேன்.
As a foolish deer in search of her Dear,
I wandered in wilderness far and near,
Her Dear was her perfume within,
By His grace I found it within
He knocks at your door, awake and arise,
God pining for you! Have you no surprise,
You will never regain what you are missing,
It is the misfortune to miss His sweet kissing.
வீடு தேடி வந்து கதவைத் தட்டும் கடவுளைத் திறந்து வைத்தால் தானே காண முடியும்! மனம் என்னும் கதவை அகலத் திறந்து விடு! தரிசனம் கிடைக்கும்!
Be like a God and commune with God,
He is sweet joy pure as Gold,
God of all religions is one and the same,
He is only one though various are His names.
ஏகம் ஸத்; விப்ரா: பஹுதா வதந்தி என்கிறது வேதம். உண்மை ஒன்றே; அதை அறிஞர்கள் பலவாறாக அழைக்கின்றனர்!
God in diversity is man,
Man in unity is God,
God plus Ego is man,
Man minus Ego is God
இங்கு கவிஞர் ஒரு அழகிய ஃபார்முலாவைத் தருகிறார்.
கடவுள் + அஹங்காரம் = மனிதன்
மனிதன் – அஹங்காரம் = கடவுள்.
பொருள் பொதிந்த உண்மை அல்லவா இது!
God is goodness manifested,
God is truth perfected,
God is love in life,
God is unselfishness in disguise,
God is unity in diversity,
God is grace in adversity.
Praise God by any means; He will hear,
Worship God in any form; He is near,
Remember God constantly, He is dear,
He is everywhere, So have no fear!
To see God is to be God,
Because He alone is His measuring rod,
The mole and the mountain bear His image,
Even an atom conveys His message.
Zeroes have multiplying power with one at their back,
Without one, any amount of zeroes have no back,
Zeroes are nothing by themselves,
Zeroes with one have all – the power in themselves.
கடவுள் இல்லாமல் மனிதன் பூஜ்யம் தான். கடவுளுக்குப் பக்கத்தில் இருந்தால் அவன் மதிப்பே தனி; அதிகம் தான்!
God has no shape and form,
Still He is in every shape and form,
Shapes and forms do not exist by themselves,
For are they not projections of our ownselves
Hari Kishandas Aggarwal இயற்றிய Quieter Moments நூலிலிருந்து 12 verses மேலே தரப்பட்டுள்ளன.
19-10-1966 அன்று எனது நோட்புக்கில் இவை அனைத்தையும் எழுதி வைத்துள்ளேன் – ஏனெனில் இதை எங்கே, எப்படி வாங்குவது என்று அந்தக் காலத்தில் தெரியாததால்! காகிதம் பழுப்பேறி உதிர ஆரம்பிக்க, எழுத்துக்கள் மங்கலாகப் போக, இதை அவசியம் பாதுகாக்க வேண்டும் என்ற நிலையில் இதை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
எளிய சொற்களில் அருமையான கவிதைகள்! வாழ்க ஹரி கிஷன்தாஸ் அகர்வால்!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
வால்டேர் VOLTAIRE
(1694 – 1778)
வால்டேரின்முழுப்பெயர்FRANCOIS MARIE AROUET. இவர் ஒரு பிரெஞ்ச் எழுத்தாளர். புதிய சிந்தனை (AGE OF REASON) பிறந்த காலத்தில் தோன்றிய எழுத்தாளராகையால் அதனுடைய முழுநிறை தாக்கத்தை இவருடைய எழுத்தில் காணலாம்.
வால்ட்டே(ய)ர் என்பது இவரது புனைப்பெயர். உண்மைப் பெயர் பிரான்ஸ்வா மரி அருவே . இவர் 20,000 கடிதங்களுக்கு மேல் எழுதினார். 2000 புஸ்தகங்களையும் துண்டுப் பிரசுரங்களையும் எழுதி வெளியிட்டார்
இந்து மதம்
இந்து மதம் பற்றி உயர்ந்த எண்ணம் கொண்டவர்.வேதங்கள் என்பது உலகிற்குக் கிடைத்த பெரிய நன்கொடை. இதற்காக மேலை நாடுகள் கீழ்த்திசை உலகத்திற்கு என்றும் கடமைப்பட்டது என்றார்.
இந்துக்கள் அமைதியானவர்கள்; அப்பாவி மக்கள்; மற்றவர்களைத் தாக்கவும் தெரியாது. தங்களைத் தற்காத்துக் கொள்ளவும் தெரியாதவர்கள் . பைபிளுக்கு நல்ல பதிலடி கொடுக்கவல்லது இந்து மதம் என்றார்
அவரும் உயர்குல இந்துக்களைப் போல மாமிச உணவை வெறுத்தவர். பிராணிகளை வதைக்கக் கூடாதென்று வாதிட்டவர்.
கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தையும் பிரெஞ்சு அரசாங்கத்தையும் தொடர்ந்து தாக்கி வந்ததால் பாரிஸ் நகரைவிட்டு வெளியேற நேரிட்டது.
பணக்கார வழக்குரைஞரின் ஐந்தாவது மகனாகப் பிறந்தார். ஏசு சமய சமூகத்தார் – இவருக்கு கல்வி புகட்டினர். இவருக்கு இளம் வயதில் தந்தை கொடுத்த படித்தொகையில் (ALLOWANCE) இவர் சுகமாக வாழ்ந்தார்.
பாரிஸில் உயர்குடி வட்டாரத்தில் இடம்பெற்றார். அந்தக்காலத்தில் LAMPOONS என்னும் நையாண்டிக் கவிதைகளை எழுதுவது ஒரு புதிய வழக்கமாகத் தோன்றியிருந்தது.
அவர் கடுமையாகத் தாக்கி எழுதியதன் விளைவாக சிறைக்கம்பி எண்ண நேரிட்டது. சிறையிலும் அவர் கைகள் வாளாவிருக்கவில்லை. அங்கு முதல் நாடகமான ஈடிபஸ் (OEDIPUS)ஐ எழுதினார். அதை அனைவரும் ஆர்வத்துடன் படிக்கவே மேலும் பல நாடகங்களை எழுதினார்.
சிறையிலிருந்து விடுதலையானவுடன் இவர் உயர்குடி வட்டாரத்தில் மீண்டும் மதிப்பைப் பெற்றார். ஆனால் 1726ஆம் ஆண்டில் அவர் எழுதிய மற்றொரு புஸ்தகத்துக்காக மீண்டும் சிறை செல்ல நேரிட்டது. பிரான்ஸை விட்டு வெளியேறுவதாக இருந்தால் விடுதலை தருவதாக அதிகாரிகள் கூறினர். உடனே அவர் இங்கிலாந்துக்குச் சென்றார்.
பிரெஞ்ச் சமூகத்தைவிட ஆங்கில சமுகத்தில் அதிக சுதந்திரம் இருப்பதாக அவர் எண்ணினார். LETTRES PHILOSOPHIQUES என்ற புத்தகத்தில் அதைப்புகழ்ந்து எழுதினார். அவர் பாரிஸ் திரும்பிய பின்னர் இதை வெளியிட்டார். இது புதிய நெருக்கடியைத் தோற்றுவிக்கவே பாரிஸை விட்டு வெளியேற நேரிட்டது. மர்கூயிஸ் து சாதலே MARQUISE DU CHATELET என்ற அழகிய பெண்ணைக் காதலித்து அவரது வீட்டிலேயே குடியிருந்தார். அவருடைய வீடு ஷாம்பைன் CHAMPAGNE வட்டாரத்திலுள்ளது.
1744இல் அவர் PARIS திரும்பிய போது அவருக்கு வெர்சாய் VERSAILLES அரசவையில் இடமளித்தனர். அரசவை வாழ்வு அவருக்கு இன்பம் தரவில்லை. 1749இல் மர்கூயிஸ் இறக்கவே அவர் பிரஷ்யாவின் மன்னர் இரண்டாவது பிரெடெரிக்கின் (KING FREDERICK) அழைப்பை ஏற்று
பெர்லின் நகருக்குச் BERLIN சென்றார். அங்கு அரசவையில் இடம் பெற்றார். ஆனால் இந்த அன்னியரின் நட்பை பல ஜெர்மானியர்கள் விரும்பவில்லை. இதனால் பிரெடெரிக்-வால்டேர் நட்பு கரைந்தது. 1753இல் ஏமாற்றவுணர்வுடன் பாரிஸ் திரும்பினார்.
1755ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்துக்குச் சென்றார். பின்னர் FERNEYக்குச் சென்றார். இது ஜெனிவா நகரிலிருந்து சிலமைல் தொலைவில் பிரெஞ்ச் எல்லைக்குள் உள்ளது. இங்கு அவரது புகழ்பெற்றCANDIDE கதை பிறந்தது.
1778இல் 84 வயதான VOLTAIRE பாரிஸ் திரும்பி தனது முதலாவது நாடகமான IRENEஐப் பார்த்தார். அப்போது அவருக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆனால் அவ்வளவு முதிய வயதில் அவருக்குக் கிடைத்த அங்கீகாரத்தை அவர் அனுபவிக்க முடியவில்லை. அதே ஆண்டு அவர் இறந்தார்.
வால்டேர் பிறந்த தேதி -நவம்பர் 21, 1694 இறந்த தே தி – மே 30, 1778 வாழ்ந்த ஆண்டுகள் – 84
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கடவுள் எங்கே? – 1
ச.நாகராஜன்
கடவுளைப் பற்றி விவரிக்கப் புகுந்தவர்கள் அவர் விவரிக்க முடியாதவர்; சொல்லுக்கு அப்பாற்பட்டவர் (அநிர்வசனீயம்) என்று சுருக்கமாகச் சொல்லி முடித்து விடுவார்கள்.
ஹரி கிஷன்தாஸ் அகர்வால் (Hari Kishandas Aggarwall) என்பவர் நான்கு வரிகள் கொண்ட ஆங்கிலச் செய்யுள்களை ஏராளமாக இயற்றியுள்ளார். பொதுவாக அறப்பண்புகள், இறை சிந்தனை உள்ளிட்ட கொண்ட அவரது நூல்கள் PEACE OF MIND என்ற தலைப்பில் முதல் பாகம் இரண்டாம் பாகம் என்று இரு தொகுதிகளாக வெளியாகி உள்ளன. Quiter Moments என்பது அவரது இன்னொரு கவிதை நூல்.
Peace of Mind -இல், கடவுளைப் பற்றி அவர் கூறும் பாடல்களில் சில இவை:-
God is life in all beings,
God is light in all our seeings,
God is Bliss everywhere
God is present everywhere
அழகிய இனிய சொற்களால் கடவுளை விவரிக்கப் புகும் கவிஞர் மேலே தொடர்கிறார்:
God is seated in our hearts,
God looks through our eyes:
God hears through our ears,
God searches Himself in disguise.
கடவுள் எங்கே இருக்கிறார் என்று வெளியில் தேடாதே; உன் உள்ளேயே தேடு, கண்டுபிடிக்கலாம் என்கிறார் அவர்.
To search God outside is to get lost,
Therefore seek God within at all cost;
If God does not exist in us,
God does not exist anywhere else!
கடவுளை மறுக்கும் நாத்திகர்களைக் கேலியாகப் பார்த்து அவர் கூறுவது இது:
Denial of the existence of God,
Is in itself the proof of the existence of God,
One who says: “I have no tongue”,
Is not the one who is mum and dumb!
எனக்கு நாக்கே இல்லை என்று உரக்கப் பேசுகின்றவன் ஊமையோ, பேச முடியாதவனோ இல்லை, அவன் பேச்சே அவனைக் காட்டிக் கொடுத்து விடுகிறது அவன் நாக்கை உடையவன் என்பதை! ‘கடவுள் இல்லை’ என்று சொல்லும் அந்தச் சொற்களிலேயே ‘கடவுள்’ இருக்கிறானே!
GOD IS NOWHERE என்றான் ஒரு நாத்திகன். அவனது ஆசிரியர் GOD IS NOWHERE என்பதை NOW என்ற இடத்தில் ஒரு கமா போட்டுக் காட்டினார். GOD IS NOW HERE என்று அதிலே கடவுள் வந்து விட்டான்!
To realize God is to realize Oneself,
Devoid of SELF no GOD exists,
Self is the same in all of us,
Self is Omnipresent in each one of us
ஆக தன்னை மறுப்பவனே கடவுளை மறுப்பவன் ஆகிறான்!
God is the hope of the helpless,
God is the existence on all beings,
God is the knowledge on the Universe
God is the bliss in all things.
ஆகவே கவிஞர் தரும் அன்புரை இது:
Surrender to God,
Become one with Him,
Make Him your own
As yours very Self own HIM.
சரணாகதி ஒன்றே எளிய அருமையான வழி!
Like a magician producing by magic
God created the world basic;
Universe is the re- appearance of God,
God manifesting Himself in all and Odd.
He is the controller of the Universe,
He is the regulator in all of us,
He is the Omnipresent power in us,
He is the Light of lights within us.
He is present in all levels,
He is visible at all times,
He is appearing in all Beings,
He is projecting in all lives.
கடவுள் எப்படி இருக்கிறார் என்பதை அழகுறச் சொல்கிறார் இந்தப் பாடலில்!
Just as salt pervades the sea,
God pervades the universe;
Just as in the seed the tree is hidden,
Likewise in everyman God is hidden.
கடலில் உப்பு பரவி இருப்பது போல, கடவுள் பிரபஞ்சம் முழுவதும் நிரம்பி இருக்கிறான். எப்படி விதைக்குள் மரமானது ஒளிந்திருக்கிறதோ அதே போல ஒவ்வொருவரிடமும் கடவுள் ஒளிந்திருக்கிறான்!
இன்னும் கடவுளைப் பற்றிச் சிறிய சிறிய வார்த்தைகளால் அவர் நன்கு விவரிக்கிறார். அதை அடுத்துப் பார்ப்போம்.
***
அடுத்த கட்டுரையுடன் ‘கடவுள் எங்கே?’ தொடர் முடியும்
For this sutra 2400 year old Varttika adds 12 Notes.
One of them is Hruth from which Heart is derived.
There in NO word for heart in Tamil
(Ullam, Nenjam, Maarbu don’t mean the organ that pumps blood=heart)
ஹ்ருத்= ஹார்ட்= இருதயம்
May be Hruh came from Tamil Kuruththu, but there is no proof to support it.
Kuruththu = Bud; young or tender part of a vegetable
தமிழில் உள்ளம், நெஞ்சம் , மார்பு என்பது இருதயம் என்ற ரத்தம் செலுத்தும் உறுப்பைக் குறிக்காது
ஹார்ட் ஆபரேஷன் செய்து கொள்ளுவோர் இருதயம் என்ற சம்ஸ்க்ருத ச சொல்லை பயன்படுத்தியே ஆக வேண்டும் . ஹ்ருத் என்பது குருத்து/bud வடிவில் இருப்பதால் தமிழே மூலச் சொல்.
ஆனால் அதற்கு என்னால் ஆதாரம் தர முடியவில்லை
Xxx
5-2-123
Urna is given by Panini
Urna becomes Wool
Urna nabhi is spider that gives Nul/thread
So Urna= Wool= Nuul/thread are cognate words
ஊர்ண = wool கம்பளி நூல் = ஊல் /ஆங்கிலம்
ஊர்ண நாபி = நூல் விடும் சிலந்தி
ஊர் = நூல் R=L
Xxx
5-2-130 to 5-2-132
These three sutras contain the words used often in Indian languages
Vayas= vayathu in Tamil = v/age in English
Poorana = full = Muzu; P=M
Suka = Sukam சுக/ம்
Dharma, Seela/character/Varna(Guna)
Varna is not colour a person’s Guna/virtue
5-2-134 also used Varna, not Jaati/caste nor Colour
It is a category .
வயசு, பூரண = முழு
தர்ம = தரம் = அறம்
சீல = ஒழுக்கம்
வர்ண = வகை, பிரிவு, குணம் ; ஜாதியோ தோலின் நிறமோ இல்லை
Xxx
5-2-135
Panini used Pushkara as Tank
In South India still this is used in many temples for Temple Tanks or Theertha/Holy water
எல்லா கோவில்களிலும் புஷ்கரம் = குளம்/தீர்த்தம் உளது
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அண்மைக் காலமாக இந்து விரோதக் கும்பல்கள், தமிழ் இலக்கியத்தில் புகுந்து மக்களைக் குழப்பி வருகிறது. தமிழ் இலக்கியம் ஒரு பெரிய கடல் ; சம்ஸ்க்ருத இலக்கியமோ மஹா மஹா சமுத்திரம் ; இரண்டையும் நீந்திக் கரை சேர முடியாது. இதனால் ஏதோ ஒரு பாட்டை எங்கிருந்தோ எடுத்துக் காட்டி ஏதோ உண்மை போல பொய் யைச் சொல்லி விடுவார்கள்
“நான்மறை” என்றால் 4 வேதங்கள் என்று சங்க இலக்கியம் முழுதும் உளது.
சைவப் பெரியார்களான அப்பர், சம்பந்தர், சுந்தரர்,மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் தேவாரம், திருவாசகம் என்னும் திருமுறைகளை நமக்கு அளித்தனர். அவர்கள் சொன்னது திருமுறை. வேத கால ரிஷிகள் சொன்னது திருமறை.
சில அசட்டுப் பிசட்டு அரைவேக்காடுகளும் , தத்துப் பித்து தான் தோன்றிகளும் ‘நால்வர் சொன்னதே நான் மறைகள்‘ என்று உளறிக்கொட்டி கிளறி மூடிவருகின்றன.
நால்வரும் தோன்றி நான்மறை என்ற சொல் உருவாக அந்த நால்வரும் மறைந்த பின்னர் ஒரு சில நுற்றாண்டுகளாவது ஆகும். அது மட்டுமல்ல. சுந்தரர், மாணிக்க வாசகர் தோன்றுவதற்கு முன்னரே சம்பந்தர் “நான் மறை” என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். நால்வர் சொன்ன விஷயங்கள் நான் மறை கண்ட உண்மைகள் என்பதில் ஐயமில்லை ஆனால் அவர்கள் பாடலில் வரும் “நான்மறை” என்ற சொல் ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்ற நான்கு வேதங்களையே.குறிக்கின்றன. பழைய உரை காரர்களும் அப்படியே உரை செய்துள்ளனர்.
இதோ சில சான்றுகள் –
திருஞான சம்பந்தரின் முதல் திருமுறையில் (தேவாரத்தில்)
இவ்வாறு சம்பந்தரும் அப்பரும் நூற்றுக்கணக்கான இடங்களில் மறை, ருக்கு வேதம், சாம வேதம், 4 வேதங்கள் என்று தெளிவாகப் பாடியுள்ளனர். ஆக தேவார, திருவாசக, திவ்வியப்பிரபந்தத்தில் வருவன ருக், யஜுர், சம அதர்வண வேதங்களே என்பதில் ஐயம் வேண்டாம்.
Xxx
சங்க இலக்கியத்தில் நான் மறை
நான்மறை -பரிபாடல் 9-12, புறம்.6-20, 362-9;
நான்மறை முதல்வர் – புறம்.26-13, 93-7
நான்மறை முதுநூல் – அகம்.181-16
நான்மறையோர் – பட்டினப்பாலை 202
சிலப்பதிகாரம் 15-12, 23-68
நான்மறை மரபு- சிலப்பதிகாரம் 5-175, 28-191
நான்மறை மருங்கு- சிலப்பதிகாரம் 28-176
நான்மறைக் கேள்வி -பரி .திரட்டு 8-8
நான்மறையந்தணர் – சிலம்பு 13-141, மணி 6-169
நான்மறையாளன் – சிலம்பு 28-137
நான்மறையாள- சிலம்பு 11-152; 27-54
நான்மறைமாக்கள் – மணி.13-99
நான்மறைமாக்காள்– மணி..13-69
நான்மறையாளர் – திரிகடுகம் 3-3; ஆசாரக்கோவை-61-1
Xxxx
சங்க இலக்கிய, சிலப்பதிகார உரைகாரர்களும் சம்ஸ்க்ருதத்தில் உள்ள நான்கு வேதங்களையே குறித்துள்ளனர்.
நான் கூறும் புதிய கருத்தோ, எனது கண்டுபிடிப்போ இல்லை; எனக்கு முன்னே பல ஸைவப் பெரியோர்களும் இந்தக் கருத்தைச் செப்பியுள்ளனர்.
ஆகவே நேற்று வந்த சுள்ளான்களை, கள்ள மதம் பரப்ப வந்தோர் என்று கருதி விலக்குக .
–subham—
tags- நான்மறை, குழப்பம் வேண்டாம், சங்க இலக்கியத்தில்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ALFRED TENNYSON
(1809 – 1892)
உலகை அலங்கரித்த கவிஞர்களில் ஒருவரான டென்னிஸன் ஆங்கிலக் அரசவைக் கவிஞனாக (POET LAUREATE) இருந்தார்..
டென்னிஸன் குடும்பமே கவிஞர்கள் குடும்பம். இவரது தந்தை ஒரு சமயப் பிரசாரகர் (CLERGY MAN);கவிஞர்; RECTOR-ஆகப்பணிபுரிந்தார். டென்னிஸன் பள்ளியில் படித்த காலத்திலேயே அவரது அண்ணன் சார்லஸ் (CHARLES) முதல் கவிதைத் தொகுப்பை (POEMS BY TWO BROTHERS) வெளியிட்டார்.
டென்னிஸன் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் படித்தபோது டிம்பக்ட்டூ (TIMBUCTOO) பற்றிய கவிதைக்கான பதக்கம் (CHANCELLOR’S MEDAL) வென்றார். அவர் எழுதிய முதல் கவிதைப் தொகுப்பு அடுத்த ஆண்டு அச்சாகி வந்தது. 23ஆவது வயதில் அவரது ஆருயிர்த் தோழர் ஹாலம் (HALLAM) அவர்களுடன் ஐரோப்பிய பயணம் புறப்பட்டார்.
1832-இல் ஹாலம் HALLAM இறக்கவே டென்னிஸன் சோகக்கடலில் மூழ்கினார். —- சிறிது காலத்திற்குப் பின்னர் ‘இன் மெமோரியம்’ IN MEMORIAM என்ற கவிதையை எழுதத்துவங்கினார். அதே ஆண்டில் , எமிலி செல்வுட் EMILY SELLWOOD என்ற பெண்ணை மணக்க நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. ஆனால் அது திருமணமாக மலர 17 ஆண்டுகள் பிடித்து. இந்தக் காலத்தில் டென்னிஸன் அவரது குடும்பத்துடன் அமைதியாகக் காலந்தள்ளினார். அத்தோடு கவிதைகளையும் எழுதினார்..
அவர் 1832-இல் எழுதத்துவங்கிய IN MEMORIAM 1850-இல்தான் வெளியிடப்பட்டது. அதே ஆண்டில்தான் அவர் EMILY SELLWOODஐ மணந்தார். கவிஞர் வோர்ட்ஸ்வொர்த் WORDSWORTH அவர்களைத் தொடர்ந்து அரசவைக் கவிஞர் பதவியும் கிடைத்தது.
இதற்கு ஈராண்டுகளுக்குப் பின்னர் ODE ON THE DEATH OF DUKE OF WELLINGTON எழுதப்பட்டது. அதற்கு ஈராண்டுகளுக்குப் பின்னர் ‘த சார்ஜ் ஆப் தி லைட் பிரிகேட்’ (THE CHARGE OF THE LIGHT BRIGADE) எழுதப்பட்டது. 1855-இல் அவர் MAUD கவிதையை எழுதியபோது அவ்வளவு வரவேற்பைப் பெறவில்லை. இதற்கு நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் THE IDYLLS OF THE KING என்ற கவிதை அச்சேறிய பின்னர்தான் அவருக்கு மீண்டும் புகழ் சேர்ந்த்து.
இந்த காலத்தில் அவர் நாடகங்களையும் எழுதினார். அந்தக்கால மக்கள் ரசித்த நாடகங்களை இப்போது இலக்கிய உலகு மறந்துவிட்டது.
75 வயதானபோது அவர் பிரபு பட்டம் பெற்றார். 83-வயதில் உயிர்நீத்தார்.
இவர் 11 சகோதர சகோதரிகளுடன் பிறந்தார். மொத்தத்தில் ஒரு டஜன் பிள்ளைகள்!
முதல் கவிதை எழுதியபோது வயது எட்டு. முதல் புஸ்தகம் வெளியான பொழு து வயது 17.
டென்னிஸனின் இறுதிச் சடங்கில் சர் ஆர்தர் கானன்டாயில்
, தாமஸ் ஹார்டி ஆகியோர் கலந்து கொண்டனர்
1992ல் டென்னிஸன் நூற்றாண்டின்போது பிரிட்டன் 4 தபால்தலைகளை வெளியிட்டு கவுரவித்தது
டென்னிஸனின் யுலிசிஸ் கவிதை மிகவும் உணர்ச்சி ஊட்டக்கூடியது,.