ஆங்கிலக் கவிஞர் டென்னிஸன் (Post.9714)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9714

Date uploaded in London – –10 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ALFRED TENNYSON

(1809 – 1892)

உலகை அலங்கரித்த கவிஞர்களில் ஒருவரான டென்னிஸன் ஆங்கிலக் அரசவைக் கவிஞனாக (POET LAUREATE) இருந்தார்..

     டென்னிஸன் குடும்பமே கவிஞர்கள் குடும்பம். இவரது தந்தை ஒரு சமயப்  பிரசாரகர் (CLERGY MAN);கவிஞர்; RECTOR-ஆகப்பணிபுரிந்தார். டென்னிஸன் பள்ளியில் படித்த காலத்திலேயே அவரது அண்ணன் சார்லஸ் (CHARLES) முதல் கவிதைத் தொகுப்பை (POEMS BY TWO BROTHERS) வெளியிட்டார்.

     டென்னிஸன் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் படித்தபோது டிம்பக்ட்டூ (TIMBUCTOO) பற்றிய கவிதைக்கான பதக்கம் (CHANCELLOR’S MEDAL) வென்றார். அவர் எழுதிய முதல் கவிதைப் தொகுப்பு அடுத்த ஆண்டு அச்சாகி வந்தது. 23ஆவது வயதில் அவரது ஆருயிர்த் தோழர் ஹாலம் (HALLAM) அவர்களுடன் ஐரோப்பிய பயணம் புறப்பட்டார்.

     1832-இல் ஹாலம் HALLAM இறக்கவே டென்னிஸன் சோகக்கடலில் மூழ்கினார். —- சிறிது காலத்திற்குப் பின்னர் ‘இன்  மெமோரியம்’ IN MEMORIAM என்ற கவிதையை எழுதத்துவங்கினார். அதே ஆண்டில் , எமிலி செல்வுட் EMILY SELLWOOD என்ற பெண்ணை மணக்க நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. ஆனால் அது திருமணமாக மலர 17 ஆண்டுகள் பிடித்து. இந்தக் காலத்தில் டென்னிஸன் அவரது குடும்பத்துடன் அமைதியாகக் காலந்தள்ளினார். அத்தோடு கவிதைகளையும் எழுதினார்..

     அவர் 1832-இல் எழுதத்துவங்கிய IN MEMORIAM 1850-இல்தான் வெளியிடப்பட்டது. அதே ஆண்டில்தான் அவர் EMILY SELLWOODஐ மணந்தார். கவிஞர் வோர்ட்ஸ்வொர்த் WORDSWORTH அவர்களைத் தொடர்ந்து அரசவைக் கவிஞர் பதவியும் கிடைத்தது.

     இதற்கு ஈராண்டுகளுக்குப் பின்னர் ODE ON THE DEATH OF DUKE OF WELLINGTON எழுதப்பட்டது. அதற்கு ஈராண்டுகளுக்குப் பின்னர் ‘த சார்ஜ் ஆப் தி லைட் பிரிகேட்’ (THE CHARGE OF THE LIGHT BRIGADE) எழுதப்பட்டது. 1855-இல் அவர் MAUD கவிதையை எழுதியபோது அவ்வளவு வரவேற்பைப் பெறவில்லை. இதற்கு நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் THE IDYLLS OF THE KING என்ற கவிதை அச்சேறிய பின்னர்தான் அவருக்கு மீண்டும் புகழ் சேர்ந்த்து.

     இந்த காலத்தில் அவர் நாடகங்களையும் எழுதினார். அந்தக்கால மக்கள் ரசித்த நாடகங்களை இப்போது இலக்கிய உலகு மறந்துவிட்டது.

     75 வயதானபோது அவர் பிரபு பட்டம் பெற்றார். 83-வயதில் உயிர்நீத்தார்.

இவர் 11 சகோதர சகோதரிகளுடன் பிறந்தார். மொத்தத்தில் ஒரு டஜன் பிள்ளைகள்!

முதல் கவிதை எழுதியபோது வயது எட்டு. முதல் புஸ்தகம் வெளியான பொழு து  வயது 17.

டென்னிஸனின் இறுதிச் சடங்கில் சர் ஆர்தர் கானன்டாயில்

, தாமஸ் ஹார்டி ஆகியோர் கலந்து கொண்டனர்

1992ல் டென்னிஸன் நூற்றாண்டின்போது பிரிட்டன் 4 தபால்தலைகளை வெளியிட்டு கவுரவித்தது

டென்னிஸனின் யுலிசிஸ் கவிதை மிகவும் உணர்ச்சி ஊட்டக்கூடியது,.

–subham—

tags- ஆங்கிலக் கவிஞர்,  டென்னிஸன்