

Post No. 9718
Date uploaded in London – –11 JUNE 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
வால்டேர் VOLTAIRE
(1694 – 1778)

வால்டேரின் முழுப்பெயர் FRANCOIS MARIE AROUET. இவர் ஒரு பிரெஞ்ச் எழுத்தாளர். புதிய சிந்தனை (AGE OF REASON) பிறந்த காலத்தில் தோன்றிய எழுத்தாளராகையால் அதனுடைய முழுநிறை தாக்கத்தை இவருடைய எழுத்தில் காணலாம்.
வால்ட்டே(ய)ர் என்பது இவரது புனைப்பெயர். உண்மைப் பெயர் பிரான்ஸ்வா மரி அருவே . இவர் 20,000 கடிதங்களுக்கு மேல் எழுதினார். 2000 புஸ்தகங்களையும் துண்டுப் பிரசுரங்களையும் எழுதி வெளியிட்டார்
இந்து மதம்
இந்து மதம் பற்றி உயர்ந்த எண்ணம் கொண்டவர்.வேதங்கள் என்பது உலகிற்குக் கிடைத்த பெரிய நன்கொடை. இதற்காக மேலை நாடுகள் கீழ்த்திசை உலகத்திற்கு என்றும் கடமைப்பட்டது என்றார்.
இந்துக்கள் அமைதியானவர்கள்; அப்பாவி மக்கள்; மற்றவர்களைத் தாக்கவும் தெரியாது. தங்களைத் தற்காத்துக் கொள்ளவும் தெரியாதவர்கள் . பைபிளுக்கு நல்ல பதிலடி கொடுக்கவல்லது இந்து மதம் என்றார்
அவரும் உயர்குல இந்துக்களைப் போல மாமிச உணவை வெறுத்தவர். பிராணிகளை வதைக்கக் கூடாதென்று வாதிட்டவர்.
கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தையும் பிரெஞ்சு அரசாங்கத்தையும் தொடர்ந்து தாக்கி வந்ததால் பாரிஸ் நகரைவிட்டு வெளியேற நேரிட்டது.
பணக்கார வழக்குரைஞரின் ஐந்தாவது மகனாகப் பிறந்தார். ஏசு சமய சமூகத்தார் – இவருக்கு கல்வி புகட்டினர். இவருக்கு இளம் வயதில் தந்தை கொடுத்த படித்தொகையில் (ALLOWANCE) இவர் சுகமாக வாழ்ந்தார்.
பாரிஸில் உயர்குடி வட்டாரத்தில் இடம்பெற்றார். அந்தக்காலத்தில் LAMPOONS என்னும் நையாண்டிக் கவிதைகளை எழுதுவது ஒரு புதிய வழக்கமாகத் தோன்றியிருந்தது.
அவர் கடுமையாகத் தாக்கி எழுதியதன் விளைவாக சிறைக்கம்பி எண்ண நேரிட்டது. சிறையிலும் அவர் கைகள் வாளாவிருக்கவில்லை. அங்கு முதல் நாடகமான ஈடிபஸ் (OEDIPUS)ஐ எழுதினார். அதை அனைவரும் ஆர்வத்துடன் படிக்கவே மேலும் பல நாடகங்களை எழுதினார்.
சிறையிலிருந்து விடுதலையானவுடன் இவர் உயர்குடி வட்டாரத்தில் மீண்டும் மதிப்பைப் பெற்றார். ஆனால் 1726ஆம் ஆண்டில் அவர் எழுதிய மற்றொரு புஸ்தகத்துக்காக மீண்டும் சிறை செல்ல நேரிட்டது. பிரான்ஸை விட்டு வெளியேறுவதாக இருந்தால் விடுதலை தருவதாக அதிகாரிகள் கூறினர். உடனே அவர் இங்கிலாந்துக்குச் சென்றார்.
பிரெஞ்ச் சமூகத்தைவிட ஆங்கில சமுகத்தில் அதிக சுதந்திரம் இருப்பதாக அவர் எண்ணினார். LETTRES PHILOSOPHIQUES என்ற புத்தகத்தில் அதைப்புகழ்ந்து எழுதினார். அவர் பாரிஸ் திரும்பிய பின்னர் இதை வெளியிட்டார். இது புதிய நெருக்கடியைத் தோற்றுவிக்கவே பாரிஸை விட்டு வெளியேற நேரிட்டது. மர்கூயிஸ் து சாதலே MARQUISE DU CHATELET என்ற அழகிய பெண்ணைக் காதலித்து அவரது வீட்டிலேயே குடியிருந்தார். அவருடைய வீடு ஷாம்பைன் CHAMPAGNE வட்டாரத்திலுள்ளது.
1744இல் அவர் PARIS திரும்பிய போது அவருக்கு வெர்சாய் VERSAILLES அரசவையில் இடமளித்தனர். அரசவை வாழ்வு அவருக்கு இன்பம் தரவில்லை. 1749இல் மர்கூயிஸ் இறக்கவே அவர் பிரஷ்யாவின் மன்னர் இரண்டாவது பிரெடெரிக்கின் (KING FREDERICK) அழைப்பை ஏற்று
பெர்லின் நகருக்குச் BERLIN சென்றார். அங்கு அரசவையில் இடம் பெற்றார். ஆனால் இந்த அன்னியரின் நட்பை பல ஜெர்மானியர்கள் விரும்பவில்லை. இதனால் பிரெடெரிக்-வால்டேர் நட்பு கரைந்தது. 1753இல் ஏமாற்றவுணர்வுடன் பாரிஸ் திரும்பினார்.
1755ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்துக்குச் சென்றார். பின்னர் FERNEYக்குச் சென்றார். இது ஜெனிவா நகரிலிருந்து சிலமைல் தொலைவில் பிரெஞ்ச் எல்லைக்குள் உள்ளது. இங்கு அவரது புகழ்பெற்ற CANDIDE கதை பிறந்தது.
1778இல் 84 வயதான VOLTAIRE பாரிஸ் திரும்பி தனது முதலாவது நாடகமான IRENEஐப் பார்த்தார். அப்போது அவருக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆனால் அவ்வளவு முதிய வயதில் அவருக்குக் கிடைத்த அங்கீகாரத்தை அவர் அனுபவிக்க முடியவில்லை. அதே ஆண்டு அவர் இறந்தார்.
வால்டேர் பிறந்த தேதி -நவம்பர் 21, 1694
இறந்த தே தி – மே 30, 1778
வாழ்ந்த ஆண்டுகள் – 84
PUBLICATIONS
1718- OEDIPUS
1728- THE HENRIADE
1730- BRUTUS
1731- CHARLES XII
1733- PHILOSOPHICAL LETTERS
1748- SEMIRAMIS
1751- THE CENTURIES OF LOUIS XIV
1759- CANDIDE
1760- TANCREDI
1778- IRENE


xxx—xxx
tags- வால்டேர் , VOLTAIRE,
You must be logged in to post a comment.