உபநிஷத் மொழிபெயர்த்த, நோபல் பரிசு வென்ற, கவிஞர் W B.யேட்ஸ் (Post.9955)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9955

Date uploaded in London – 9 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அயர்லாந்து நாட்டின் புகழ்பெற்ற நாடக ஆசிரியர், கட்டுரையாளர், கவிஞர் வில்லியம் பட்லர் யேட்ஸ் WILLIAM BUTLER YEATS  ஆவார்.

புராண, புராதன விஷயங்களில் ஆர்வம் கொண்ட அவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசும் கிடைத்தது. அழகான ஐரிஷ் நடிகையைத் திருமணம் செய்துகொண்ட அவர், புரோஹித் சுவாமி PUROHIT SWAMI என்பவருடன் சேர்ந்து இந்து மதத்தின் உயர்ந்த தத்துவ நூல்களான பத்து உபநிஷதங்களை ஆங்கிலத்தி ல்  மொழிபெயர்த்து 1938-ம் ஆண்டு வெளியிட்டனர். ஆங்கிலப்புலவர், நாடக ஆசிரியர், கட்டுரையாளர் வரிசையில் முதல் வரிசையில் நிற்பவர் யேட்ஸ் . அயர்லாந்தில் பிறந்து அயர்லாந்தில் வாழ்ந்து அயர்லாந்தின் பழமைக் காவியங்களைத் தொகுத்து அவற்றைப் போற்றியதால் ஐரிஷ் மக்களின் பெருமதிப்பையும் பெற்றார்.

டபிள்யூ .பி. யேட்ஸ் அயர்லாந்து நாட்டின் தலைநகரான டப்ளினில் DUBLIN, IRELAND பிறந்தார். அவர் இருபதாம் நூற்றாண்டின்  இணையற்ற ஆங்கில மொழி எழுத்தாளர் . தன்னுடைய காலத்தில் வாழும் மிகப்பெரிய கவிஞர் GREATEST POET  என்று T.S.. எலியட்டால் பாராட்டப்பட்டவர் . 1923-ம் ஆண்டில் அவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கொடுக்கப்பட்டது லண்டனிலும் அயர்லாந்திலும் மாறி, மாறி வாழ்ந்தாலும் அயர்லாந்தையே தாய்வீடாகக் கொண்டவர்.லண்டனில் வாழ்ந்த காலத்தில் அவருக்கு இந்து மதம் , புத்த மதம் முதலிய ஆசிய சமயங்களில் ASIAN RELIGIONS  வேட்கை பிறந்தது. மனிதனுக்கு அப்பாற்பட்ட அதீத ஆற்றலில் SUPER NATURAL POWERS நம்பிக்கை ஏற்பட்டது . அயர்லாந்திலும் இத்தகைய நம்பிக்கை இருந்ததால் அயர்லாந்தின் நாட்டுப்புற கதைகளையும் நம்பிக்கைகளையும் தொகுத்து நூல்களாக வெளியிட்டார்.

24 வயதிலேயே இந்த நூல்கள் அச்சாகின. அவருடைய கவிதைகளில் பழங்காலம் பற்றிய ஏக்கம் இருக்கும். நாம் பொன்னியின் செல்வன் நாவலைப் படித்துவிட்டு சோழர் காலத்தில்  வாழ மாட்டோமா என்று ஏங்குவது போல.

1936ம் ஆண்டில் புரோஹித் சுவாமி என்ற இந்தியருடன் மத்திய தரைக்கடல் பிரதேசம் மற்றும் மயோர்கா MAJORCA தீவுகளில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போதுதான் இந்து மத உபநிஷத்துகளில் மிகவும் முக்கியமான பத்து உபநிடதங்களை TEN PRINCIPLE UPANISHADS இருவரும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தனர் .

1889-ல் மாட் கான் MAUD GONE  என்ற ஐரிஷ் நடிகையைக் கண்டு, காதல் கொண்டு, அவரைக் கல்யாணம் செய்துகொண்டார். மாட் கான்  அயர்லாந்தில் ஆங்கில ஆட்சிக்கு சாவு மணி அடிக்கப் போராடியர். இவரும் மனைவிக்கு ஆதரவாக  அயர்லாந்து அரசியலில் குதித்தார். இதன் தாக்கத்தை இவருடைய கவிதைகளில் காணலாம் .

எழுத்தின் ஆற்றலை, பேனா  முனையின் வலிமையை, ணர்ந்த அவர் தனது கவிதைகளையும், நாடகங்களையும் அயர்லாந்து ஓன்றுபட பயன்படுத்தினார். ஐரிஷ் புராணக் கதைகளையும் வாய் மொழி இலக்கியத்தையும் தொகுத்து இரண்டு நூல்களாக வெளியிட்டார். 1896-ல் அயர்லாந்துக்குத் திரும்பிய அவர் லேடி கிரிகரி LADY GREGORY என்ற பெண்மணியை , பணக்கார பிரபு வம்ச பெண்ணைச் சந்தித்தார். அவருக்கும் இவரைப் போலவே பழமையில் ஆர்வ இருந்ததால் 1904-ம் ஆண்டில் ABBEY THEATRE GROUP  அப்பி தியேட்டர் குரூப்பை நிறுவினார். இது மிகவும் பிரபலம் அடைந்தது . மக்களைக்  கவரும் நாடகங்களை இருவரும் மேடை ஏற்றினர்

எ விஷன் A VISION – ‘நான் காணும் காட்சி’ என்ற நூலில் இவர் தனது நம்பிக்கைகளையும் உணர்ச்சிகளையும் வெளியிட்டார். வயது ஆக ஆக அவர் நம்பிக்கை ஆல் போல் தழைத்தது; அருகு போல வேரூன்றியது. இவருடைய நான்கு நாடகங்களையும் பல கவிதைகளையும் படிக்காத ஆங்கில இலக்கிய ரசிகர்கள் இல்லை.

Maud Gone

பிறந்த தேதி – ஜூன் 13, 1865

இறந்த தேதி – ஜனவரி 28, 1939

வாழ்ந்த ஆண்டுகள் – 73

எழுதிய நூல்கள் –

1889- THE WANDERINGS OF OISIN AND OTHER POEMS

1893- THE CELTIC TWILIGHT

1894 – THE LAND OF HEART’S DESIRE

1897 – THE SECRET ROSE

1902 – CATHLEEN NI HOULIBAN

1925 – A VISION

1928- THE TOWER

1933- THE WINDING STAIR

1936- 39 THE LAST POEMS AND PLAYS

–SUBHAM–

tags- உபநிஷத், மொழிபெயர்த்த, நோபல் பரிசு , கவிஞர் W B.யேட்ஸ் , W B YEATS

திருவிடைமருதூர் திருத்தலம்!(Post No.9954)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 9954

Date uploaded in London – –   9 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 8-8-2021 அன்று ஒளிபரப்பான உரை!

திருவிடைமருதூர் திருத்தலம்!

எண்ணும் அடியார்கள் அண்ணல் மருதரைப்

பண்ணின் மொழி சொல்ல, விண்ணும் தமது ஆமே!

பிறை ஆர் சடை அண்ணல், மறையார் மருதரை

நிறையால் நினைபவர், குறையார் இன்பமே

திருஞானசம்பந்தர் திருவடி போற்றி போற்றி!

ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது காசிக்குச் சமமான பஞ்ச க்ரோச தலங்களுள் ஒன்றான  மத்யார்ஜுனம் எனப்படும் திருவிடைமருதூர் தலமாகும். இந்தத் தலமானது தமிழகத்தில், கும்பகோணம் நகருக்கு வடகிழக்கில் 8 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. திருவாரூர் தேர் அழகு திருவிடைமருதூர் தெரு அழகு, மன்னார்குடி மதில் அழகு என்பார்கள். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த வீதி அமைப்பைக் கொண்ட இந்தத் தலத்தில் பிரம்மா பிரதிஷ்டை செய்த மூர்த்தி, இந்திரன் உண்டாக்கிய தீர்த்தம் உள்ளன. மேலும் வருணன், வாயு உள்ளிட்ட தேவர்கள் பூஜித்த தலம் இது.  ஆதி சக்தியின் மத்திய ஸ்தானத்தை உணர்த்திய பின்பு அந்த இருதயகமல மத்தியில் தியானிக்கப்பட்டு விளங்கிய ஜோதிர்மய மஹாலிங்க பெருமான், முனிவர்கள், தேவர்கள், ரிஷிகள் ஆகியோருக்குத் தரிசனம் தருவதற்காக இங்கு எழுந்தருளியதால் இந்தத் தலம்  மத்யார்ஜுனம் என்ற பெயரைப் பெற்றது. இன்னொரு காரணமும் உண்டு. முன்னொரு காலத்தில் ரோமச முனிவர் அர்ஜுன வனத்தின் மையப்பகுதியில் சிவலிங்கம் எழுந்தருளி இருப்பதைக் கண்டு இந்த க்ஷேத்திரம் ‘மத்யார்ஜுனம்’ என்று அழைக்கப்படலாயிற்று. இன்னொரு காரணமும் கூறப்படுகிறது.

வடக்கே உள்ளது ஸ்ரீ சைலம் எனப்படும் மல்லிகார்ஜுனம். தெற்கே திருநெல்வேலி மாவட்டத்தில் திருப்புடைமருதூர் எனப்படுவது புடார்ஜுனம் ஆகும். இவை இரண்டிற்கும் இடையே இருப்பதால் இது மத்யார்ஜுனம் என்று அழைக்கப்படுகிறது. அர்ஜுனம் என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு மருத மரம் என்று அர்த்தம். இங்கு மருத மரங்கள் ஏராளமாக நிரம்பி இருப்பதால் இது திருவிடைமருதூர் என்று அழைக்கப்படலாயிற்று.

மூலவர் : மஹாலிங்கேஸ்வரர், மருதவனேஸ்வரர், மருத வாணர்

அம்பிகை : பிரகத் சுந்தரகுஜாம்பிகை தல விருக்ஷம் : மருத மரம்.

தீர்த்தம் : காருண்ய தீர்த்தம்

சண்பக வனம், சக்திபுரம், சர்வதீர்த்தபுரம், வில்வ வன க்ஷேத்ரம், பூலோக கைலாஸம் உள்ளிட்ட பல பெயர்களையும் கொண்டுள்ளது இந்தத் திருத்தலம்!

காருண்ய தீர்த்தம், இந்திர தீர்த்தம், பாண்டவ தீர்த்தங்கள், அக்னி தீர்த்தம், வாயு தீர்த்தம், துரோண தீர்த்தம், கௌதம தீர்த்தம் உள்ளிட்ட 35 புண்ய தீர்த்தங்கள் இங்கு உள்ளன. இந்த ஆலயத்தில் மூன்று பெரிய பிரகாரங்கள் உள்ளன. முதல் பிரகாரமான அஸ்வமேத பிரகாரத்தில் பிரதக்ஷிணம் செய்வோர் அஸ்வமேத யாகம் செய்த பலனை அடைவர். இந்த பிரகாரத்தின் உள்ளே உள்ள இரண்டாம் பிரகாரமான கொடுமுடி பிரகார பிரதக்ஷிணம் கைலாய மலையைச் சுற்றி வந்த பலனைத் தருகிறது. கொடுமுடி பிரகாரத்தின் உள்ளே உள்ள மூன்றாவது பிரகாரம் ஓங்கார பிரகாரம்.இந்த பிரகாரச் சுற்றில் பிரணவ ஒலி எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கும். 

இந்தத் தலத்தைப் பற்றி ஏராளமான புராண வரலாறுகள் உண்டு. தேவியானவள் இங்கு தவம் செய்ய, சிவபிரான் தேவியின் ஹிருதய கமலத்தில் ஜோதிர்மயமாய் மஹாலிங்க மூர்த்தியாய் காட்சி அளித்தார். அடுத்து இன்னொரு வரலாறு உண்டு. ரோமச முனிவர் இங்கு வந்த போது காகம் ஒன்று கனக தீர்த்தத்தில் மூழ்கி நீராடி அருகிலுள்ள மருத மரத்தில் அமர்வதையும் அது உடனே பொன்னிறமாக மாறியதையும் பார்த்து அதிசயித்தார். அந்த காகத்திடம் அது பற்றி ரோமசர் கேட்க, அது தனது வரலாற்றைக் கூறியது. அது முன் ஜன்மத்தில் ஒரு அந்தணராக இருந்தது. அரசன் ஒருவனிடம் கிரகண காலத்தில் யாகம் வாங்க அந்த அந்தணர் சென்ற போது அவரது மார்பில் இருந்த சந்தனத்தைக் கண்ட அரசன் இதற்கு முன்பு தானத்தை எங்கேனும் வாங்கினீர்களா என்று கேட்க ஆம் என்று உண்மையை ஒப்புக் கொண்டார் அவர். உடனே,  ‘காகம் போல தானம் வாங்க அலையும் நீர் காகமாகக் கடவது’ என்று அரசன் சாபமிட்டான். அதனால் காகமாக மாறிய அந்தணர் இங்குள்ள புண்ய தீர்த்தத்தில் நீராடி மஹாலிங்கத்தின் அருளால் பொன்னுடல் பெற்றது. தலத்தின் பெருமையை அறிந்து, ரோமச முனிவர் அங்கிருந்த சமயம் ஸ்தல யாத்திரையாக வந்த மன்னன் வீ ர சோழன் ரோமசரைக் கண்டு வணங்க அவரது ஆணையால் இந்த இடத்தில் பெரும் கோவிலை அவன் கட்டினான்.

இன்னொரு வரலாறும் உண்டு. அது பாண்டிய மன்னனான வரகுணபாண்டியன் பற்றியது. ஒரு முறை வரகுணபாண்டியன் வேட்டையாடி விட்டு இரவு நேரத்தில் திரும்பிய சமயம் அவனது குதிரையின் கால் மிதிபட்டு அந்தணன் ஒருவன் இறக்கவே, அவனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது. இதனால் வருந்திய அவன் சோமசுந்தரேஸ்வரரை வேண்ட, அவன் கனவில் தோன்றிய இறைவன், திருவிடைமருதூர் சென்று வழிபடுமாறு கூறி அருளினார். ஆனால் பகை நாடாக இருந்த சோழநாட்டில் உள்ள தலத்திற்கு எப்படிச் செல்வது என்று அவன் எண்ணியிருந்த சமயத்தில் சோழ நாட்டுப் படை அவனை எதிர்க்க வருவதை அறிந்து போரிட்டான். சோழப் படை தோற்க வரகுணன் திருவிடைமருதூர் கோவிலில் கிழக்கு வாயில் வழியே நுழைந்தான். ஆலயத்தினுள்ளே நுழைய சக்தி இல்லாமல் அந்தணன் ஆவியும் பிரம்மஹத்தியும் கிழக்கு வாயிலின் வெளிப்புறத்திலேயே நின்று அவன் திரும்பி வரும்போது அவனைப் பிடிக்கக் காத்திருந்தன. பாண்டியன் மஹாலிங்கேஸ்வரரை வழிபட்டான். ஆனால் ஒரு அசரீரி அவனை மேற்கு வாயில் வழியே வெளியில் செல்லுமாறு கூற அவனும் மேற்கு வாயில் வழியே வெளியேறினான். பிரம்மஹத்தி மற்றும் அந்தணனின் ஆவியிடமிருந்து அவன் தப்பித்தான். ஆக இன்றும் பக்தர்கள் கிழக்கு வாயில் வழியே நுழைந்து மேற்கு வாயில் வழியே வெளியே செல்வது மரபாக உள்ளது.

இந்தத் தலத்தில் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூன்று சமயக் குரவர்களும் மொத்தம் 12 பதிகங்கள் பாடி அருளியுள்ளனர்.அருணகிரிநாதர் இங்கு 4 திருப்புகழ் பாடல்களை அருளியுள்ளார். இன்னும் இந்தத் தலம் ஆதிசங்கரர், பட்டினத்தார், பத்திரகிரியார், ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாள் போன்ற பெரும் மகான்களின் வாழ்க்கையில் பல அற்புத சம்பவங்கள் நிகழ்ந்த தலமாக அமைந்துள்ளது.

 காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் மஹாலிங்க ஸ்வாமியும் பிரகத் சுந்தரகுஜாம்பிகையும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.  திருநாவுக்கரசர் அருள் வாக்கு இது:       

                                               இம்மை வானவர் செல்வம் விளைத்திடும், அம்மையே பிறவித் துயர் நீத்திடும்             எம்மை ஆளும் இடைமருதன் கழல், செம்மையே தொழுவார் வினை சிந்துமே!

நன்றி வணக்கம்!**

tags- திருவிடைமருதூர் , ,மத்யார்ஜுனம்,, மஹாலிங்கேஸ்வரர், மருதவனேஸ்வரர், மருத வாணர்,

பலாப்பழம் சாப்பிடலாம், டயபடீஸ் இருந்தாலும்! (Post No.9953)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9953

Date uploaded in London –  9 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

திருநெல்வேலியிலிருந்து மாதந்தோறும் வெளிவரும் ஆரோக்கிய மாத இதழான ஹெல்த்கேர்-இல், ஆகஸ்ட் 2021 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!

பலாப்பழம் சாப்பிடலாம், டயபடீஸ் இருந்தாலும்!                         

ச.நாகராஜன்

இனிப்புச் சுவையே வாழ்க்கையில் கூடாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பவர்கள் டயபடீஸ் என்னும் நீரிழிவு நோய் வியாதி உள்ளவர்கள். இவர்களுக்கு ஒரு நல்ல செய்தி அறிவியல் ஆய்வுகளின் முடிவில் வெளி வந்துள்ளது. ஆம, இனிக்கும் பலாச்சுளையை தைரியமாக டயபடீஸ் உள்ளவர்கள் சாப்பிடலாம். என்ன ஒரு ‘இனிப்பான செய்தி!

பலாப்பழம் ஆன்டி ஆக்ஸிடண்ட் மற்றும் விடமின்களின் உறைவிடம். ஆனால் இனிப்பும் ஏராளமாக இருக்கிறது.

150 கிராம் பலாச்சுளையை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் உள்ளவை இவை:- 

கலோரிகள் 143,                                                                        

கொழுப்புச் சத்து – 1 கிராம்,                                                       

 புரோட்டீன் – 3 கிராம்,                                                         

கார்போஹைட்ரேட் (Carbs) – 35 கிராம்,                                                 

 ஃபைபர் – 2 கிராம்,                                                                      

விடமின் B6 – 29% தினசரி மதிப்பில் (Of the Daily Value – DV),                                                  

விடமின் C – 23% of the Daily Value DV.

விடமின் C  சிறந்த ஆன்டி ஆக்ஸிடண்ட்! இதய நோய்க்கும் டயபடீஸ் டைப் 2விற்கும் வழி வகுக்கும் நீண்ட நாள் வீக்கத்தை இது கட்டுப்படுத்தும். இதில் கார்போஹைட்ரேட்ஸ் இருந்து சர்க்கரை சத்தை அதிகப்படுத்தும் என்பது உண்மை தான். ஆனால் மற்ற ஊட்டச்சத்துக்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரைச் சத்தை சரியாக்கும் என்பதும் உண்மையே.  

 பலாப்பழத்தில் க்ள்செமிக் இண்டெக்ஸ் 50 முதல் 60 வரை உள்ளது. (100 என்ற அளவீட்டின் படி) (glycemic index (GI) of about 50–60 on a scale of 100)                               இந்த GI என்பது எவ்வளவு சீக்கிரமாக உங்கள் உணவு வகைகள் உங்கள் இரத்த சர்க்கரை அளவை உயர்த்துகிறது என்பதைக் காட்டும் ஒரு குறியீடு.     எடுத்துக்காட்டாக, இதை விவரிப்பதென்றால், சுத்தமான சர்க்கரை – அதாவது குளுகோஸ் – 100 என்ற அளவில் ரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்துகிறது. வெள்ளை ரொட்டி (White Bread) 75 என்ற அளவைக் கொண்டுள்ளது.    

                                                            பலாப்பழத்தில் உள்ள புரோட்டினூம் ஃபைபரும் ஜீரண இயக்கத்தை மெதுவாக ஆக்கி, ரத்தத்தில் சர்க்கரை அளவு உயர்வதைத் தடுக்கிறது.அதனால் குறைந்த GI  கொண்டுள்ளது.                                                                        

பலாப்பழம் மீடியம் க்ளெசெமிக் லோட் (GL) கொண்டுள்ளது. GL என்பது உணவில் உள்ள கார்போஹைட்ரேட் எண்ணிக்கையை எடுத்துக் கொள்வதைப் ப்ற்றியும் GI பற்றியும் குறிக்கும் ஒரு அளவீடாகும். ஆகவே இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் காட்டும் ஒரு சரியான அளவீடாகும்.

இரத்த அழுத்தம் : GL 0 முதல் 10 முடிய இருப்பின் இரத்த அழுத்தம் குறைவு.

பலாப்பழத்தில் GL 13 முதல் 18 வரை உள்ளது. GL 20 இருந்தால் அது அதிகம் என்பதன் அறிகுறி. அதுமட்டுமல்ல, பலாப்பழத்தில் ஃப்லாவொனாய்ட் ஆன்டி ஆக்ஸிடன்ட் (flavonoid antioxidant) அதிகம் உள்ளது. இது நீண்ட நாள் வியாதிகளால் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க வல்ல ஒன்றாகும்.        

சில ஆய்வுகள் பலாப்பழமானது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்கிறது என்று காட்டுகின்றன. ஆனால் இந்த ஆய்வுகள் மிருகங்களின் மீது மேற்கொள்ளப்பட்டவை என்பதால் மனிதர்களுக்கு இந்த முடிவை உறுதியாகச் சொல்ல முடியுமா என்ற சந்தேகம் உள்ளது.

பலாப்பழம் குறைந்த அமில அளவைக் (Low Acidity Level) கொண்டுள்ள ஒன்று. பலாப்பழம் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கிறது. பாலுடன் பலாச்சுளையை வைத்து அரைத்து தோலில் பூசி சிறிது நேரம் வைத்திருப்பதால் இளமைப் பொலிவுடன் இருக்கும் மினுமினுப்பான தோல் உருவாகிறது.

இதில் உள்ள அதிக அளவு புரோட்டீன்கள் மன அழுத்தத்தைக் குறைக்கிறது. இது இரத்த சோகையையும் குறைக்கிறது, ஹீமோகுளோபின்  கொண்ட இரும்புச் சத்து இதில் நிறைய இருப்பதால் தான் இந்த நன்மை ஏற்படுகிறது. அடர்த்தியான கேஸமும், நல்ல கண்பார்வையுக் கூட பலாப்பழக் கொட்டைகளால் ஏற்படுகிறது. இதில் உள்ள விடமின் ஏ சக்தியால் இந்த நன்மை எற்படுகிறது. பலாப்பழ கொட்டைகளைப் பொடி செய்து சாப்பிடுவதால் ஜீரணக் கோளாறுகள் நீங்குகின்றன. தசைக் கட்டமைப்பையும் இது அழகுற ஆக்குகிறது.

பலாப்பழத்தில் உள்ள புரோட்டீன்கள் கொலஸ்ட்ரால் இல்லாதவை என்பது குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும்.

உடல் எடை கூடி விட்டதே என்று கவலைப்படுவோருக்கும் பலா ஒரு அரிய ம்ருந்து.  அதில் உள்ள ஃபைபர் ஜீரணத்தை ஊக்குவிக்கிறது. பலா தேவையற்ற கொழுப்புச் சத்தை உடலில் சேர விடாமல் தடுக்கிறது.

இதில் உள்ள விடமின் சி உடலில் ஏற்படும் நோய்களை வர விடாமல் எதிர்ப்புச் சக்தியைத் தருகிறது. விடமின் சி இரத்தத்தில் வெள்ளை அணுக்களை அதிகரிக்கிறது.

பலாப்பழத்தில் குறிப்பிடத்தகுந்த அளவு பொடாசியமும் உள்ளது. ஆகவே இது வாஸோடிலேடராக அதாவது இரத்த நாளங்களை இயல்பாக ஓய்வுடன் இயங்கச் செய்வதாக ஆக்குகிறது. ஆகவே உடலின் இரத்த அழுத்தம் – ப்ளட் ப்ரஷர் – சீராக ஆகிறது. இரத்த அழுத்தம் கூடி இருந்தால் அதைக் குறைக்கிறது.ஒன்றாகும்.

பலாப்பழத்தின் இன்னொரு அரிய பயன் அது எலும்புகளை வலுவுள்ளதாக ஆக்குகிறது. கால்சியம் இதில் உள்ளது என்பதால் தான் இந்த நன்மை. விடமின் சி இருப்பதால் கால்சியத்தை உறிஞ்ச இது ஏதுவாகிறது.

இதில் உள்ள மக்னீஷியம் தூக்க வியாதி உள்ளவர்களுக்கு ஒரு அரும் வரபிரசாதமாகும்.இது மூளையில் உள்ள நியூரோ டிரான்ஸ்மிட்டர்களை அளவுடன் கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது. ஆகவே நல்ல தூக்கம் ஏற்படுகிறது. தூக்கமே வரவில்லை என்பவர்கள் பலாப்பழத்தைச் சாப்பிட ஆரம்பித்தால் நல்ல பயன் தெரியும்!

அட,இன்னும் எதற்காகக் காத்திருக்கிறீர்கள், பலாப்பழத்தைச் சாப்பிட கூலியா தர முடியும்! பலாப்பழத்தைச் சாப்பிட ஆரம்பியுங்கள், பலன் கண்டு மகிழுங்கள்!!

***

tags- பலாப்பழம் , டயபடீஸ்,

PLEASE JOIN US TODAY MONDAY 9-8-2021

9-8-2021 MONDAY PROGRAMME

GNANA MAYAM- GNANA SUDAR BROADCAST FROM LONDON

Title song – Maitrim Bhajata by Kanchi Paramacharya sung by MS

OPENING ANNOUNCEMENT & PRAYER -7  MTS

PRAYER –  MRS ANNAPURANI PANCHANATHAN, LONDON

DR CHAMUNDEESWARY FROM LONDON AND SUBRAMANIAN SITARAMAN FROM INDIA -DISCUSSION ON THEIR NEW DANCE DRAMA PROJECT – SECOND PART 25 MTS

Dr Chamundeeswari is a lawyer and researcher in cultural heritage and development law. She is a Bharatanatyam dancer, trained in the Kalakshetra style of nritta and Smt. Kalanidhi Narayanan bhani of abinaya, having completed her arangetram under the guidance of the abinaya exponent Padma Bhushan Srimathi Kalanidhi Narayanan and her dance school Abinayasudha in Madras. She has completed her Government of Tamilnadu lower and higher exams in bharatanatyam, and lower exam in carnatic music. Having moved to the UK in 2000, she has developed her classical repertoire in an international context and has found the exposure to new ideas and literature deepen her love for classical work, and led her to experiment in bringing together different classical arts, such as literature and dance. She has choreographed and performed innovative solo and group Bharatanatyam productions, in the UK, India, Mexico, USA, Australia, Croatia, Costa Rica, Netherlands, Portugal and Italy. Her recent choreographic work, all funded through Arts Council England, include Shades of Love: Chandrika, and Dancing Vernacular Indian poetry – Kshetrayya (2021) Chinnadevi (2020) Women of Mahabarata (2019) Rasamanjari (2019), Gopala Vimshati, East Meets West and Madras Sepoy (2018). She is currently doing research and development work on Kuruvi Koodu, a poem by the poet Tiruloka Sitaram, and today she will be discussing this. 

Subramanian Sitaram is the 5th of the seven children of Tamil poet Tiruloka Sitaram (1917-1973), who strode the literary scene in Tamilnadu as Mahakavi Subramanya Bharati’s principal message bearer in the period from 1945 to 1973. Subramanian was a career banker and worked at several places in India during a career spanning 31 years and later for 9 years at Dubai, UAE. He is a Treasury and Risk Management specialist. He consults for banks in Risk Management and also offers training on Financial Risk to Corporates and training institutions.

Subramanian was 17 years old when his poet father passed away. However, he spent a good amount of time with his father during his last few years, travelling with his father on his lecture tours and meeting authors. Subramanian also ran his father’s printing press for 4 years after his passing away before joining banks.

Subramanian produced a documentary on Tiruloka Sitaram, a dance video on Tirulokam’s long verse drama ‘Udaiyavar’, an Odissi dance performed by his daughter Suprita Trilok and also organised the Centenary celebrations of Tirulokam at Chennai. A committed follower of Tirulokam’s literary works, he was also instrumental in bringing out the complete poetical works of Tirulokam with English translation and notes by Sekkizhar Adippodi T.N.Ramachandran in 2014.

ABHANGAM SONG BY MRS DAYA NARAYANAN, LONDON- 5 MTS

TALK BY BENGALURU S NAGARAJAN ON SAINT Sri Aurobindo (Aravinthar)– 13 MTS

DR N KANNAN’S TALK from Chennai– ALWAR AMUTHAM -7

MANGALAM – 3 MTS

TOTAL TIME- APPR. 60 MINUTES

XXXX

INTRODUCTION TO GNANAMAYAM BROADCASTING

GNANAMAYAM HAS 3000 REGULAR FOLLOWERS

WE ARE IN OUR SECOND YEAR OF BROADCASTING.

WE LAUNCHED GNANAMAYAM BROADCASTS FROM LONDON IN AUGUST 2020 ON SUNDAYS AND MONDAYS .

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON, MOSTLY IN TAMIL.

TIME OF BROADCAST- TWO PM LONDON TIME;

 6-30 PM INDIAN TIME;

DAYS- MONDAYS AND SUNDAYS

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS.

XXXX

MONDAYS BROADCAST UNDER GNANAMAYAM AND GNANA SUDAR

ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH DAYS.

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.

FORMER BBC BROADCASTER,

SENIOR SUB EDITOR, DINAMANI,

FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL

PLUS

FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;

MANAGER, LONDON TAMIL SANGAM,

HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;

HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &

CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)

NOW BLOG WRITER WITH 6000 PLUS ARTICLES (tamilandvedas.com) TO HIS CREDIT AND AUTHOR OF FOUR BOOKS.

***

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM AT 2 PM LONDON TIME

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

TAGS- PUBLICITY9821

பிரெஞ்ச் நாவல் ஆசிரியர் எமில் ஸோலா (Post No.9952)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9952

Date uploaded in London – 8 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

19-ம் நுற்றாண்டின் தலைசிறந்த நாவல் ஆசி ரியர்களில் ஒருவர் எமில் ஸோலா (EMILE  ZOLA ) . இவர் உள்ளதை உள்ளபடியே வருணிக்கும் , தத்ரூபமாக வருணிக்கும் பாணியை பின்பற்றுபவர். இதை நேச்சுரலிசம் NATURALISM என்பர் . அவர் தொழிலாளர் வர்க்கம் பற்றிய உண்மைகளை நாவலில் கொடுத்தார். பாரீஸ் நகரில் பிறந்தாலும் தென்கிழக்கு பிரான்சில்தான் அவர் வசித்தார்.

அவருக்கு 7 வயதானபோது தந்தை காலமானதால் , குடும்பம் பணச் சிக்கலில் மாட்டிக்கொண்டது. 18 வயதில் அவர் தாயாருடன் பாரீஸ் நகரில் குடியேறினார். பள்ளி இறுதித் தேர்வை கோட்டைவிட்டார் (FAILED). இதனால் ஒரு பதிப்பகத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அவர்

நாவல்களை எழுதத் துவங்கினார். 27 வயதில் அவர் எழுதிய தெரசா ரகீன் THERESE RAQUIN நாவல் அச்சாகியது

சோலா ஒரு அரசியல் சார்பு பத்திரிக்கைக்காரர். அப்போதைய மூன்றாம் நெப்போலியன் தலைமயில் உருவான இரண்டாவது குடியரசு ஆட்சியை அவர் குறைகூறினார். 31 வயதில் இது பற்றிய 20  தொடர் நாவல்களை எழுத ஆரம்பித்தார். ஆனால்  அதை 22 ஆண்டுகளுக்குப் பின்னரே முடித்தார். இரண்டாவது குடியரஸின் கீழ் வாழ்ந்த ஒவ்வொரு குடும்பத்தையும் வருணிக்கும் நாவல்கள் அவை.

வெவ்வேறு தொழில்புரிவோரின் குடும்பங்களைக் கதைகளின் கருப்பொருளாகப் பயன்படுத்தியதால் விபசாரி முதல் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர் வரை இவர் நாவல்களில் இடம்பெற்றனர். ஏழை விவசாயிகளின் வாழ்க்கையையும் படம்பிடித்துக்காட்டினார்.

இதே பாணியில் வேறு இரண்டு தொடர் நாவல்களையும் எழுதினார். ‘மூன்று நகரங்கள்’ ‘நான்கு போதனைகள்’ என்று அவைகளுக்குத் தலைப்பு.வாழ்க்கையின் கசப்பான  பகுதியை வருணித்தாலும் பண்புகளையும் குணநலன்களையும் ஆதரித்துப் போற்றினார். 1898ல் பிரென்சு ஜனாதிபதிக்கு ஒரு யூத மத போர்வீரன் ‘ஸே அக்யூசே’ – நான் குற்றம்சாட்டுகிறேன் என்று எழுதிய கடிதத்தை ஆதரித்தார். அதை எழுதிய வீரனின் பெயர் ஆல்ப்ரெட் ட்ரைபஸ் .அந்த வீரன் மீது தேசத்துரோக- ராஜத்துரோக குற்றம் சாட்டப்பட்டது. இதனால் அவருக்கு பல விரோதிகள் தோன்றினர் .

அவர் 62 வயதில் வீட்டில் புகைபோக்கியில் கசிந்த கார்பன் மோனாக்சைட் (CARBON MONOXIDE) விஷவாயுவை சுவாசித்ததால் இறந்தார். இது கூட விபத்து அல்ல; அவரைக் கொல்லத்  திட்டமிட்டோர்,  புகைபோக்கியை அடைத்து, விஷ வாயு கசிய வழிசெய்தனர் என்று பலரும்  கூறுவர்.

பிறந்த தேதி – ஏப்ரல் 2, 1840

இறந்த தேதி – செப்டம்பர் 29, 1902

வாழ்ந்த ஆண்டுகள் – 62

எழுதிய நூல்கள் –

1867 – THERESE RAQUIN

1873 – THE BELLY OF PARIS

1877 – THE GROG SHOP

1880 – NANA

1885 – GERMINAL

1887-  THE SOIL

1890 – THE HUMAN ANIMAL

1894-98- THE THREE CITIES- 3 VOLS

1898- I ACCUSE

1899- 1902- THE FOUR GOSPELS – 4 VOLS

–SUBHAM–

tags-நாவல் ஆசிரியர் எமில் ஸோலா, Emile Zola, 

உலக இந்து சமய செய்தி மடல் 8-8-2021 (Post No.9951)

Compiled  BY LONDON SWAMINATHAN

Post No. 9951

Date uploaded in London – 8 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com


இன்று ஞாயிற்றுக் கிழமை AUGUST 8  ,2021


உலக இந்து   சமய செய்தி மடல்


தொகுத்து வழங்குபவர் RANI SRINIVASAN


 இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,


நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது RANI SRINIVASAN


 எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் FACEBOOK.COM/ GNANAMAYAM மற்றும் ZOOM வழியாக நேரடியாகக் கேட்கலாம்./ காணலாம்.

XXXX

2023ல் அயோத்தி ராமர் கோவில் தரிசனத்துக்கு திறப்பு

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில், 2023ம் ஆண்டு இறுதியில், பக்தர்கள் தரிசனத்துக்கு திறக்கப்படும’ என, கோவிலை கட்டும், ‘ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ர’ அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் அயோத்தியில், உச்ச நீதிமன்றம் அனுமதியளித்ததை தொடர்ந்து, பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது.மத்திய அரசு அமைத்த, ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை, கோவிலை கட்டி வருகிறது.

அயோத்தியில், ராமர் கோவில் கட்டும் பணி வேகமாக நடந்து வருகிறது. மூன்று மாடிகள், ஐந்து மாடங்கள், கோபுரம், 360 தூண்கள், 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில், ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது.

கட்டுமான பணிகள் முடிந்து, 2023ம் ஆண்டு இறுதியில், பக்தர்கள் தரிசினத்துக்காக கோவில் திறக்கப்படும் என, எதிர்பார்க்கிறோம். கோவில் வளாகத்தில் உள்ள மற்ற பணிகள் அனைத்தும் 2025ம் ஆண்டுக்குள் முடியும் என்று அறக்கட்டளை உறுப்பினர் ஒருவர் கூறினார்.

XXX

இந்து கோவில் தாக்குதல்; பாகிஸ்தான் பார்லிமெண்ட் கண்டனம்


பாகிஸ்தானில் ஹிந்து கோவில் தாக்கப்பட்டதற்கு அந்நாட்டு பார்லிமென்ட் கண்டனம் தெரிவித்து உள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள போங்க் நகரில் 100க்கும் மேற்பட்ட ஹிந்து குடும்பங்கள் உள்ளன. அந்தப் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம்கள் கூட்டமாக சென்று அங்குள்ள ஹிந்து கோவில் மீது தாக்குதல் நடத்தினர். இதில் அந்த கோவில் சேதமடைந்துள்ளது. அங்கிருந்த கடவுள் சிலைகளையும் அவர்கள் சேதப்படுத்தினர்.

பாகிஸ்தான் பார்லிமெண்டில் இந்த பிரச்னை பற்றி பாக்., ஹிந்து கவுன்சில் தலைவர் ரமேஷ் வங்வானி பேசுகையில், ”கோவில்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளது; இது நாட்டுக்கே அவமானம். இதை  கண்டிக்க வேண்டும்,” என்றார்.இதையடுத்து கண்டனம் தெரிவித்து, பார்லிமெண்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ‘தாக்குதலில் ஈடுபட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என, தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

ஹிந்து கோவில் மீது நடந்த தாக்குதல் தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பாக்., உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி குல்சார் அகமது, தானாக வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகிறார்.

இதுபோன்ற சம்பவங்கள் உலகளவில் பாகிஸ்தானுக்கு அவமானத்தை ஏற்படுத்துவதாக கூறிய நீதிபதி, நடந்த சம்பவம் குறித்து போலீசார் அறிக்கை தாக்கல் செய்யவும், கோவிலை புனரமைக்கவும் உத்தரவிட்டார்.

இதோ வங்க தேசத்திலிருந்து ஒரு செய்தி

நமது பக்கத்து  நாடான வங்கதேசத்தில் குமிலா மாவட்டத்தில் 1,000 ஆண்டு பழமையான விஷ்ணுவின் கருங்கல் சிலை மீட்கப்பட்டுள்ளது. ஆசிரியர் ஒருவர் வீட்டில் இருந்து இந்த சிலை மீட்கப்பட்டுள்ளது. கிராமத்தில் குளம் தோண்டும்போது இந்த சிலை கிடைத்ததாக கூறப்படுகிறது. போலீசுக்கு தெரிவிக்காமல் வீட்டில் வைத்திருந்ததாக அந்த ஆசிரியர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

XXXX

பாரத மாதாவுக்கு ‘நினைவாலயமா? நினைவாலயம் என்பதற்கு பாரதீய ஜனதா எதிர்ப்பு

DINAMALAR NEWS

தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில், சுதந்திர போராட்ட தியாகி சுப்ரமணிய சிவா மணிமண்டபம் உள்ளது. இங்கு, பாரத மாதா சிலை வைக்க வேண்டும் என்பது, சுப்ரமணிய சிவாவின் கனவு. இதற்காக, தர்மபுரி பாப்பாரப்பட்டி, பாரத புரத்தில், 6 ஏக்கர் நிலம் வாங்கினார். அங்கே, பாரத மாதா ஆலயம் கட்ட பாடுபட்டார்.

போதுமான நிதி திரட்ட, ஊர் ஊராக நடை பயணம் சென்றார். 1923ல், சித்தரஞ்சன் தாஸை அழைத்து வந்து, பாரத மாதா ஆலயத்துக்கு, அடிக்கல் நாட்டினார். அடுத்த இரண்டு ஆண்டுகளில், சிவா இறந்து விட்டார். இதனால், அவரது கனவு நிறைவேறவில்லை. இந்நிலையில், 1.5 கோடி ரூபாயில், அதே பாரத புரத்தில், பாரத மாதாவுக்கு, தமிழக அரசு சார்பில், நினைவாலயமும் அருகில் நுாலகமும் அமைக்கப்பட்டுள்ளது. அதை திறந்து வைத்தார், செய்தி துறை அமைச்சர் சாமிநாதன்.

 இதற்கிடையில், பாரத மாதாவுக்கு எப்படி “நினைவாலயம்” எழுப்பலாம் என பா.ஜ.,வினர் கேட் கின்றனர்.


இது குறித்து, அக்கட்சியின் மாநில பொருளாளர் சேகர் கூறியதாவது:சுப்ரமணிய சிவாவின் கனவு நிறைவேற, நிறைய பேர் முயற்சி எடுத்தனர். தமிழக காங்., தலைவராக இருந்த குமரி அனந்தனும் முயற்சித்தார். அங்கிருக்கும் மக்களும், பல கட்ட போராட்டங்கள் நடத்தினர். இதன் விளைவாக, அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், 1.5 கோடி ரூபாய் மதிப்பில், பாரதபுரத்தில் பாரத மாதாவுக்கு ஆலயமும், பக்கத்தில் நுாலகமும் கட்டி முடிக்கப்பட்டது. அதை திறந்து வைப்பதற்குள், இ.பி.எஸ்., ஆட்சி முடிவுக்கு வந்து விட்டது.



ஆனால், பாரத மாதா “நினைவாலயம்” என, அரசு தரப்பில் குறிப்பிட்டுள்ளனர். இறந்தவர்களுக்கு தான் “நினைவாலயம்” கட்டப்படும். கோடிக்கணக்கானவர் மனங்களில் வாழும் தெய்வம் பாரத மாதாவை சாகடித்துள்ளனர். இது, பாரத மாதாவை நேசிக்கும் இந்தியர்களுக்கு தலைக்குனிவு என்று B J P மாநில பொருளாளர் சேகர் கூறினார்.


XXXXX

ஜலகண்டேஸ்வரர் கோயிலில் ராஜகோபுரத்திற்கு ரசாயன கலவை பூசி சீரமைக்கும் பணிகள் தொடக்கம்

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் செடி, கொடிகள் முளைத்திருந்த ராஜகோபுரத்திற்கு ரசாயன கலவை பூசி சீரமைக்கும் பணிகள் தினகரன் செய்தி எதிரொலியாக ெதாடங்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்தியாவில் தரைக்கோட்டைகளில் வலுவானதாக தற்போதும் விளங்கி வருவது வேலூர் கோட்டை. வேலூர் கோட்டைக்கு முன்னதாகவே அங்கு சம்புவராயர்களால் ஜலகண்டேஸ்வரர் கோயில் கட்டப்பட்டு, கோட்டையை கட்டமைத்த விஜயநகர மன்னர்களால் விரிவாக்கம் செய்யப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

மத்திய அரசின் தொல்லியல் துறையினர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் உட்பட அனைத்து கோபுரங்களிலும் முளைத்துள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும். என்று தினகரன் நாளிதழில் கடந்த 2ம் தேதி படத்துடன் கூடிய விரிவான செய்தி வெளியானது.

தினகரன் செய்தி எதிரொலியாக, வேலூர் கோட்டை ராஜகோபுரம் உட்பட அனைத்து கோபுரங்களிலும், ரசாயன கலவை பூசி சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.. இதுகுறித்து இந்திய தொல்லியல்துறை வேலூர் முதுநிலை பராமரிப்பு அலுவலர் வரதராஜ் சுரேஷ் கூறுகையில், ‘வேலூர் கோட்டை ஜலகண்ேடஸ்வரர் கோயில் ராஜகோபுரம் உட்பட அனைத்து கோபுரங்களிலும் ரசாயன கலவை பூசி சீரமைக்கப்பட உள்ளது. இதன்மூலம் பறவைகள் எச்சத்தினால் செடி, கொடிகள் முளைப்பது தடுக்கப்படும். மழைநீரும் கோபுரத்தில் ஊறி பாசி படர்வது, பூஞ்சைகள் படர்வது இருக்காது. இப்பணிகள் 3 மாதங்களில் முடிக்கப்படும், என்றார்.

XXX

திருத்தணி முருகனுக்கு திருப்பதி பாலாஜி  கோவில் சார்பில் பட்டு வஸ்திரம் சமர்ப்பணம்

திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா ஆகஸ்ட் 2ம் தேதி நடந்தது. திருத்தணி முருகனுக்கு, திருப்பதி பெருமாள் சீர் கொடுக்கும் சிறப்பு வைபவம் அப்போது  நடந்தது. இதற்காக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து திருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி மற்றும் அதிகாரிகள் பலர் திருததணிக்குச் சென்றனர்.

அவர்கள், பெருமாள் சார்பில் பட்டு வஸ்திரம் மற்றும் தட்டுகளில் பல விதமான பழங்கள், மங்கள பொருட்கள் ஆகியவற்றை எடுத்து வந்தனர். அவர்களுக்கு, திருத்தணி முருகன் கோவில் தேர் வீதியில் மேள தாளம் முழங்க சிறப்பு மரியாதை செய்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பெருமாளின் சீர் வரிசை பொருட்களை திருமலை-திருப்பதி  தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி ஒரு தட்டில் வைத்து, தலையில் சுமந்தபடி ஊர்வலமாக வந்து சமர்ப்பணம் செய்தார்.

XXXX

ஆகஸ்ட் 11ம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர திருவிழா

108 வைணவத் தலங்களில் மிக முக்கியமானதாக கருதப்படுவது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆகும். லட்சுமி தேவியின் அம்சமாகிய ஆண்டாள் மானிட பெண்ணாக பிறந்து பூமாலை சூட்டி பின், பாமாலை பாடி, இறைவனை அடைந்தது ஸ்ரீவில்லிபுத்தூரில் தான்.

இங்கு ஆண்டாளின் ஜென்ம நட்சத்திரமான ஆடிப்பூரத் திருவிழா மிக வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த வருடத்திற்கான ஆடிப்பூர தேர்த்திருவிழா 3-ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா காரணமாக பக்தர்கள் யாரும் இன்று கோவிலுக்கு அனுமதிக்கப்படவில்லை.


சென்ற வருடம் போல் இந்த வருடமும் அனைத்து திருவிழா நடைமுறைகளும் கோவில் வளாகத்திலேயே நடைபெறும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

ஆடிப்பூரத் திருவிழாவின் 2-ம் நாள் சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருளினர் அர்ச்சகர்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர்.

ஆடிப்பூர விழாவில் 5-ம் திருநாள் 7-ம்தேதியும், கருட சேவை 9-ம்தேதியும் நடைபெறுகிறது.

முக்கிய நிகழ்வான திருஆடிப்பூர தேரோட்டம் 11-ம் தேதி நடைபெறுகிறது. சென்ற வருடம் போல் இந்த வருடமும் கோவில் பிரகாரத்தில் தங்கத் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு ஆண்டாள்-ரெங்கமன்னார் காட்சியளிப்பர்.

MALAI MALAR NEWS

XXXX

இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் RANI SRINIVASAN

நன்றி, வணக்கம்

TAGS- TAMILHINDU, NEWS ROUNDUP, 882021, RANI

WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH 8-8 -2021 (Post No.9950)

COMPILED BY LONDON SWAMINATHAN

Post No. 9950

Date uploaded in London – 8 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Namaste , Namaskaram to Everyone

This is a weekly ‘HINDU NEWS ROUND UP’ from around the world.

Compiled from popular newspapers of India

Read by BRAHANNAYAKI SATHYANARAYANAN

XXX

This is a broadcast coming through ZOOM and FACEBOOK.COM / GNANA MAYAM live at

TWO pm London Time and 6-30 PM Indian Time Every SUNDAY.

Even if you miss our live broadcast on SUNDAYS

you can always visit us on FACE BOOK.COM – slash- Gnana Mayam 24 hours a day.

Here is the WEEKLY HINDU NEWS BULLETIN from ‘Aakaasa Dhwani’

Read by BRAHANNAYAKI SATHYANARAYANAN

XXX

20 arrested, for attack on Hindu temple in Pakistan

Police in Pakista

n’s Punjab province on Saturday have arrestED 20 people and booked over 150 others for their alleged involvement in an attack on a Hindu temple in a remote town of the country.

The police action came after the country’s Supreme Court on Friday pulled up authorities for failing to stop the attack and ordered the arrest of the culprits, observing that the incident has tarnished the image of the country abroad.

Hundreds of people, carrying sticks, stones and bricks attacked the temple, burning parts of it and damaging the idols, in Bhong area of Rahimyar Khan district of the province in protest against the release by a court of an eight-year-old Hindu boy, who was arrested for allegedly urinating in a local seminary.

“We have so far arrested over 20 suspects allegedly involved in attacking the temple in Bhong,” District Police Officer (DPO) of Rahim Yar Khan Asad Sarfraz told reporters.

He said more arrests are expected in the coming days as police are identifying the suspects through video footage. An FIR has been registered under terrorism and other sections of the Pakistan Penal Code he said.

On Friday, Chief Justice of Pakistan Gulzar Ahmed said that vandalism at the temple had brought shame to the country as police acted like silent spectators. The Chief Justice wondered at the arrest of the eight-year-old boy and asked whether police were incapable of understanding the mental capacity of the minors.

Pakistan’s parliament on Friday condemned the temple attack by adopting a resolution. The hearing in the case has been adjourned till August 13.

India on Thursday summoned the Pakistani charge d’affaires in New Delhi and lodged a firm protest, expressing grave concerns at this reprehensible incident and the continued attacks on the freedom of religion of the minority communities and their places of religious worship in Pakistan.

Hindus form the biggest minority community in Pakistan. According to official estimates, 75 lakh Hindus live in Pakistan. However, according to the community, over 90 lakh Hindus are living in the country. The majority of Pakistan’s Hindu population is settled in Sindh province.

XXXX

Giant sea waves swallow centuries-old temple in Odisha’s Kendrapara district

The marauding sea that had been eroding the coastline in Kendrapara for decades, devouring one village after another, recently razed to the ground the centuries-old Pancha varaahi temple.

Away from their hometown, much of which has been eaten up by the sea, some of its former residents, however, visited Satabhaya village from time to time to pay obeisance at the Pancha varahi temple, although the idol of the deity has also been relocated to the rehabilitation colony.

Shivendra Narayan Bhanjadeo, the scion of an erstwhile royal family of Rajkanika and the trustee of the temple, said Satabhaya has lost its identity with the caving-in of the shrine.

 The distance between the sea and the temple was around three kilometers some three decades ago. Now the sea has successfully gobbled up the centuries-old temple. For all practical purposes, Satabhaya has now lost its geographical identity,” Bhanjadeo added.

XXXX

Swami Vivekananda’s statue unveiled  in London

PICTURE AND NEWS FROM ASIAN VOICE, LONDON

The first outdoor statue of Swami Vivekananda in the United Kingdom, sculpted in Portland stone was unveiled on 28 July to commemorate Swamiji’s arrival to England 125 years ago outside of Harrow Arts Centre in greater London area.

A vision of the late and former Mayor Cllr Mrinal Choudhury, who passed away on 1 August 2020, the statue was unveiled by The Mayor of Harrow Ghazanfar Ali. Deputy Mayor Sasikala Suresh, Manmeet Singh Naran, Minister for Coordination at the Indian High Commission and Swami Sarvasthananda of Ramakrishna Vedanta Centre, UK were also present. 

Swami Vivekananda travelled to the UK twice, in 1895 and 1896, lecturing successfully here. In November 1895, he met Margaret Elizabeth Noble an Irish woman who would become Sister Nivedita. During his second visit to the UK in May 1896 Vivekananda met Max Muller, a noted Indologist from the University of Oxford who wrote Ramakrishna’s first biography in the West.

Xxx

Ayodhya Ram temple likely to open to devotees by 2023-end

The Ram temple in Ayodhya will be opened to the public by the end of 2023, even though the entire complex is expected to be ready only by 2025, a person aware of the matter said on Wednesday.

The foundation stone of the temple was laid by Prime Minister Narendra Modi on August 5, 2020, and a year on, construction is on in full swing.

The ground floor of the temple, where the sanctum sanctorum will be located and where an idol of Ram Lalla will be placed, will be ready for prayers by December 2023 and arrangements are being made to streamline the process of providing security clearances and installing public amenities, said another person aware of the details.

The temple complex, which is expected to incur a cost of ₹900-1,000 crore and will be spread over 110 acres of land, is being built by Larsen & Toubro while Tata Consulting Engineers has been signed on as the project management consultant.

The temple complex will also have a museum, a research centre, and an archival centre.

XXXXX

MADRAS HIGH COURT seeks treatment of ethical treatment of cattle donated to Temples

Pointing out that the religious beliefs have to be respected and the cattle treated in a human and dignified manner as they are also living creatures, the first bench comprising Chief Justice Sanjib Banerjee and Justice P D Audikesavalu sought details of the standard operating procedure that may be in place for the well-being of the cattle.

The bench also appealed to the State to treat such animals in the most ethical manner and as per the intention of the donors until the issue is dealt in a wholesome manner by the court.

The court while adjourning the case by six weeks after seeking for the necessary report from the state by collating all materials by then, also recorded the petitioner Rangarajan Narasimhan’s submission that once a cow stops producing milk or a male calf is born or there is a bull which is useless in breeding purposes, they are disposed of in an unethical manner by sending them to slaughter houses much against the religious beliefs of the institutions and the donors.

XXX

THAT IS THE END OF NEWS FROM AKASA DHWANI

READ BY BRAHANNAYAKI SATHYANARAYANAN

PLEASE WAIT FOR TAMIL NEWS

XXXXXXXXXXXXX

 TAGS- HINDU, NEWS ROUNDUP, 882021, GNANAMAYAM

APRIL 2020 London Swaminathan Articles, Index-89 (Post No.9949)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9949

Date uploaded in London – 8 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

HOW TO GET ACCESS FOR THESE POSTS? 

JUST COPY THE TITLE YOU WANT TO READ AND PASTE IT IN GOOGLE SEARCH AND ADD “FROM tamilandvedas.com or from swamiindology.blogspot.com”

IF YOU HAVE ANY PROBLEM, PLEASE CONTACT US. OUR E MAIL IS IN ALL THE 9900 PLUS POSTS.

April 2020 Index 89

Teacher who hugged a Tiger got killed, 7770;April 1,2020

Stranger Greek Prayers,7774;2/4

Swami s crossword 242020;7775;

Modi is a Magician,Modi is a Ghost buster,7778;3/4

Tamil Sword and Greek Sword,7782;4/4

Swami’s crossword 442020;7784

Advertising Anecdotes,7787;5/4

Mahabharata Puzzle in Sangam Tamil literature, 7791;6/4

Swami’s crossword 642020;7792;

Interesting Historical Information from

Harsha Charita, 7795;7/4

New Information on Brahmin Country and

Shudra country,7798;8/4

Rama and Lakshmana are Udhya and Bidhya Rivers,7799;8/4

Swami s crossword 842020;7800

Don’t trust your Father and Swindler Anecdotes,7804;9/4

Yavanas are Hindus,but not all Yavanas are Greeks,7808;10/4

Swami’s crossword 1042020;7809

Money means Murder,7813;11/4

Atonement for Brahmins, 3000 Gayatri for a month,7819;12/4

Swami’s crossword 1242020;7818

Real Estate and Fire Insurance Anecdotes,7823;13/4

Swami’s crossword 1342020:7824

More folktales,Riches are destructible, Learning is

Indestructible , 7828;14/4

Tamil Siddhars and Vedic Symbolism in poetry, 7831;15/4

Swami s crossword 1542020;7832

Bankers and eagles, Abraham Lincoln 7836;16/4

Swami’s crossword1742020;7841;

Sangam tamil verse throws more light on Rigveda,7842;17/4

The Tamils 3000 years ago, 7845;18/4

More Banks Anecdotes, 7851;19/4

Swami’s crossword 1942020;7852

The Tamils……part 2;7855;20/4

Ascetics who rolled Boulders Every day and Laughed,7856;20/4

Wonder rock in Tamil Nadu 7860;21/4

Prince and the Ascetic, 7862;21/4

Swami’s crossword 2142020;7863

Astrology- Cock and Chicken in

Rome and Greece,7867;22/4

Dog and the Room of Mirrors,7870;24/4

Swami’s crossword 2442020:7877

Tamils knew River Ganga but not Sindhu,24/4:7875

Tolkappiar statue in Indonesia? 7884;27/4

Wealth and Collection Anecdotes,7880;25/4

Swami’s crossword 2742020;7891

31 Quotations on Patience and Forbearance,7889;27/4

Faith story and Mahatma Gandhi,7895;28/4

Panini’s Interesting titbits on 27 Stars,7900;29/4

Swami’s crossword 3042020;7905

Why did Valmiki name Monkey canto as Beauty Canto? 7904;30 April 2020

Xxx

ஏப்ரல் 2020 கட்டுரைகள்

பார்ப்பன மகனே ! பார்ப்பன மகனே !7769, ஏப்ரல் 1, 2020

த .கு.போ 142020, 7771

(தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி)

குக்கூ என்றது கோழி- பெண்களின் மாதவிலக்கு பற்றிய

சுவையான பாடல்,7773;2/4

மோடி ஒரு மந்திரவாதி! மோடி ஒரு தீர்க்கதரிசி, 7779, 3/4

வள்ளல் சீதக்கத்தியை இழந்து வருந்திய

புலவரின் பாடல்கள்; 7776, 3/4

த .கு.போ 342020, 7780

பெண்ணைஎதிர்பார்த்து புலியிடம் சிக்கியா ஆசிரியர், 77834/4

த .கு.போ 542020, 7788

சங்க இலக்கியத்தில் காம் பிரம்மாஸ்மி, 7786;5/4

சங்க இலக்கியத்தில் தரும புத்திரன் யார்? பெரிய புதிர், 7790;6/3

ராமனும் லெட்சுமணனும் உத்ய பித்ய நதிகள் ,7794; 7/4

த .கு.போ.742020; 7796

த .கு.போ.942020; 7805

வீணைக்குள் கத்தியை வைத்துப் படுகொலை 7803;9/4

த .கு.போ.1142020; 7814

யவனர்கள் கிரேக்கர்களா? இல்லை/ஆமாம் ,7812;11/4

மகனே! உன் அப்பாவைக் கூட நம்பாதே 817;12/4

பிராணிகளும் தவம் செய்து சொர்க்கத்துக்குப்

 போகின்றன -மநு 7822;13/4

அணுகுண்டுக்கு சக்தி தரும்; மரகதத்துக்கு ஒளியூட்டும் பெரில் லியம்; 7827;14/4

சித்தர் பாடல்களில் எண்கள் – ரிக்வேத எதிரொலி;7835; 16/4

த .கு.போ.1642020; 7837

புறநானூற்றில் 21 யாகங்கள் பற்றிய அதிசயச் செய்திகள், 7840,17/4

அகஸ்தியர் பற்றி தென் கிழக்கு ஆசிய நாடுகளில் கல்வெட்டுகள் ,7846, 18/4

த .கு.போ.1842020; 7847

3000 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள்;7850;19/4

3000 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள்-பகுதி -2, 7855, 20/4

நாடகத்தில் யாருக்கு என்ன கலர்? என்ன மொழி? 7861, 21/4

ஆடி கழிஞ்ச அஞ்சாம் நாள் கோழி அடிச்சு கும்பிட்டானாம், 7866, 22/4

சிலப்பதிகாரக் கதை- கோழி, யானை சண்டை, 7871, 23/4

த .கு.போ.2342020; 7872

த .கு.போ.2642020; 7886

த .கு.போ.2842020; 7896

ஊ ஊ ஊ ஊ ஊ …. சிலப்பதிகார நரிக்கதை ,7876, 24/4

இந்தோனேஷியாவில் தொல்காப்பியர் சிலை, 7885, 26/4

ரிக்வேத பூகோளம் – மாக்ஸ்முல்லர்களுக்கும்

கால்டுவெல்களுக்கும் செமை அடி ; 25/4; 7881

சூரியனுக்கு மகன் சனி, விளக்கிற்கு மகன் கருப்பு மை ,

மே மாத காலண்டர், 7890, 27/4

வெள்ளைக்காரன் விளக்கங்களை நம்பாதே, 7894, 28/4

27 நட்சத்திரங்களில் எது முதல் நட்சத்திரம்?-1; 7899, 29/4

அஸ்வினி முதல் நட்சத்திரம் இல்லை! 30 ஏப்ரல் 2020, 7903

–சுபம் —

TAGS -INDEX 89, APRIL 2020 INDEX, LONDON SWAMINATHAN

முயற்சியே வெற்றி தரும்! (Post No.9948)

OLYMPIC GOLD MEDAL WINNER NEERAJ CHOPRA

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9948

Date uploaded in London –  8 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

டாக்டர் டி.எஸ்.கௌரிபதி சாஸ்திரி அவர்கள் தேர்வு செய்து வழங்கிய சில சுபாஷிதங்கள் தரப்பட்ட முந்தைய கட்டுரை எண் 9862 (வெளியான தேதி: 18-7-2021)

முயற்சியே வெற்றி தரும்!

ச.நாகராஜன்

சம்ஸ்கிருத அறிஞரான டாக்டர் டி.எஸ்.கௌரிபதி சாஸ்திரி (Dr.T.S. Gouripathi Sastri)   அவர்களிடம் ஆந்திரா பல்கலைக்கழகம் நல்ல சில சுபாஷிதங்களைத் தேர்ந்தெடுக்குமாறு (1978இல்) பணிக்க, அவர் 36 சுபாஷிதங்களைத் தொகுத்துத் தந்தார். அதற்கான ஆங்கில மொழிபெயர்ப்பையும் அவரே செய்துள்ளார். அவற்றில் முதல் இருபது சுபாஷிதங்களை சென்ற கட்டுரைகளில் கண்டோம். அடுத்த ஐந்து சுபாஷிதங்கள் இதோ:-

ஷதேஷு ஜாயதே ஷூர: சஹஸ்ரேஷு ச பண்டித: |

வக்தா தசஸஹஸ்ரேஷ் தாதா பவதி வா ந வா ||

நூற்றில் ஒருவனே சூரனாகிரான். ஆயிரத்தில் ஒருவனே பண்டிதனாகிறான். பத்தாயிரத்தில் ஒருவனே பேச்சாளனாகிறான். ஆனால் ஒரு கொடையாளி பிறக்கிறானோ இல்லையோ யாருக்கும் தெரியாது!

Among hundreds a hero may be born, a scholar among thousands, an orator among tens of thousands but one does not know whether a donor is born or not!

யதி சந்தி குணா: பும்ஸாம் விகசந்த்யேவ தே ஸ்வயம் |

நஹி கஸ்தூரிகாமோத: ஷபதேன நிதார்யதே ||

நற்குணங்கள் இருப்பின் அவர்கள் தாமாகவே விகசிக்கிறார்கள். கஸ்தூரியின் மணத்தை யாராலும் உறுதிமொழியாலோ ஸத்யபிரமாணத்தினாலோ தடுத்து விட முடியாது.

If people have merits then they bloom of their own accord. Nobody can stop the fragrance of musk with an oath or swearing.

உத்தமேன ஹி சித்யந்தி கார்யாணி ந மனோரதை: |

ந ஹி சுப்தஸ்ய சிம்ஹஸ்ய ப்ரவிஷந்தி முகே ம்ருகா: ||

பெரும் திட்டங்கள் முயற்சியினாலேயே வெற்றி பெற்று முடிகின்றன. வெறும் ஆசையினால் அல்ல. தூங்குகின்ற சிங்கத்தின் வாயில் மான் தானாகச் சென்று நுழையாது.

Projects attain consummation surely by endeavor only and not by mere desires. Verily the deer do not enter the mouth of the lion who is fast asleep.

பூர்வஜன்ம க்ருதம் கர்ம தத்தைவமிதி கத்யதே |

தஸ்மாத் புருஷகாரேண வினா தைவம் ந சித்யதி ||

பூர்வ ஜன்மத்தில் செய்த கர்மங்களே அதிர்ஷ்டம் அல்லது கடவுள் என்பதாகும்.ஆகவே முயற்சி இல்லாது அதிர்ஷ்டம் அல்லது கடவுள் என்பது இல்லை.

The endeavor made in the last birth is what is known as (luck or) God. Hence no God (or luck) can succeed without endeavor.

அல்பானாமபி வஸ்தூனாம் சம்ஹதி: கார்யசாதிகா |

த்ருணைர்குணத்வமாபன்னைர்பத்யந்தே மத்ததந்தித: ||

அல்பம் என்றாலும் கூட அந்த வஸ்துக்கள் கூட்டாகச் சேரும் போது ஒரு செயலை முடிக்கின்றன.  மதம் பிடித்த யானை தான் என்றாலும் கூட புல் கட்டுகளால் சேர்க்கப்பட்ட கயிறு அதைப் பிணைத்து விடுகிறது.

The group of even trivial things (united) accomplishes the action. The rutty elephants are tied by means of a rope formed of blades and grass.

***

INDEX

சூரன், பண்டிதன், பேச்சாளன், தனவான்

கஸ்தூரி மணம், நற்குணங்கள்

அதிர்ஷ்டம், கடவுள், முயற்சி

கூட்டாக இருந்தால் வெற்றி

மத யானை, புல்கட்டுக் கயிறு

TAGS- முயற்சி, வெற்றி ,

PLEASE JOIN US TODAY 8-8-2021

8-8-2021 SUNDAY PROGRAMME

TAMIL THUNDER /THAMIL MUZAKKAM (Part of Gnanamayam Channel) BROADCAST from London

OPENING ANNOUNCEMENT & PRAYER – 7 MTS

Prayer –

MRS BRAHANNAYAKI SATHYANARAYANAN ON THIRUVIDAIMARUDUR TEMPLE8 MTS

Thiruppugaz Amirtham – by MRS JAYANTHI SUNDAR AND GROUP–  10 mts

***

WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH BY MRS BRAHANNAYAKI SATHYANARAYANAN

WORLD HINDU NEWS ROUNDUP IN TAMIL  BY RANI SRINIVASAN

–20 MINUTES

***

TALK BY  SRI THIRUKOODAL MUKUNTHA RAJAN ON ALVARKAL  SARITHTHIRAM -15 MTS

DURATION-  Appr. 60 minutes 

XXXX

INTRODUCTION TO GNANAMAYAM BROADCASTING

WE ARE IN OUR SECOND YEAR OF BROADCASTING.

WE LAUNCHED GNANAMAYAM BROADCASTS FROM LONDON IN AUGUST 2020 ON SUNDAYS AND MONDAYS .

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON, MOSTLY IN TAMIL.

TIME OF BROADCAST- TWO PM LONDON TIME;

 6-30 PM INDIAN TIME;

DAYS- MONDAYS AND SUNDAYS

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS.

XXXX

MONDAYS BROADCAST UNDER GNANAMAYAM AND GNANA SUDAR

ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH DAYS.

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.

FORMER BBC BROADCASTER,

SENIOR SUB EDITOR, DINAMANI,

FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL

PLUS

FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;

MANAGER, LONDON TAMIL SANGAM,

HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;

HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &

CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)

NOW BLOG WRITER WITH 6000 PLUS ARTICLES (tamilandvedas.com) TO HIS CREDIT AND AUTHOR OF FOUR BOOKS.

***

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM AT 2 PM LONDON TIME

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

TAGS —  PUBLICITY8821