பார் போற்றும் மகாகவி பாரதியார்! – 3 (Post No.10092)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,092

Date uploaded in London – 14 September   2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பாரெங்கும் பாரதியின் சிந்தனை! ஞான மயம் சார்பில் பாரதி நூற்றாண்டு நினைவு நிகழ்ச்சி சிறப்புற நடத்தப்பட்ட போது 11-9-2021 சனிக் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பான ச.நாகராஜன் ஆற்றிய உரை.

எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம். (இந்த உரை மூன்று பகுதிகளாக வெளியிடப்படுகிறது.)

பார் போற்றும் மகாகவி பாரதியார்! – 3

பாரதியார் பற்றிய சிறந்த நூல்கள், கட்டுரைகள், வானொலி உரைகள் ஆகியவற்றைப் பற்றிய அறிமுகம் தர வேண்டுமென்று ஒரு எண்ணம் உதிக்கவே 60 புத்தகங்கள் பற்றிய அறிமுகக் கட்டுரைகளை எழுதினேன்.22-8-2015இல் (கட்டுரை எண் 2091) சகுந்தலா பாரதி எழுதிய என் தந்தை என்ற நூலைப் பற்றி முதலில் எழுதி 27-8-2019இல் (கட்டுரை எண் 6939) 60வது புத்தகமாக சேக்கிழார் அடிப்பொடி திரு T.N.ராமச்சந்திரன் எழுதிய வழி வழி பாரதி பற்றி எழுதினேன். நேரம் கருதி அந்த அறுபது புத்தகங்களில் சிலவற்றை மட்டும் இங்கு பார்ப்போம்.                                                 என் தந்தை

பாரதியாரின் புதல்வி சகுந்தலா பாரதி எழுதிய அருமையான நூல் இது. 1974ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளி வந்த நூல்.

பாரதி நினைவுகள்

பாரதி பற்றிய இந்த நூலை எழுதியவர் யதுகிரி அம்மாள்.  1954 செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது.                                                                  

என் கணவர் :-

இது புத்தகம் அல்ல. வானொலி உரை. மகாகவி பாரதியாரின் மனைவி திருமதி செல்லம்மா பாரதி 1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் இந்தத் தலைப்பில் ஒரு உரையாற்றினார்.

நான் கண்ட நால்வர்

 1959ஆம் ஆண்டு பிரபஞ்ச ஜோதி பிரசுராலயத்தால் வெளியிடப்பட்ட இந்த அருமையான நூலை எழுதியவர் தமிழ் உலகம் நன்கு அறிந்த அறிஞர் வெ.சாமிநாத சர்மா (1895-1978) ஆவார்.

பாரதி புதையல் மூன்றாம் தொகுதி

மிக மிக அருமையான இந்த நூலை பாரதி பக்தர் ரா.அ.பத்மநாபன் தொகுத்து 1975ஆம் ஆண்டு பாரதி தினத்தன்று வெளியிட்டிருக்கிறார்.

பாரதி புதையில் மூன்று தொகுதிகளையும் ஒன்றாய் இணைத்து பாரதி புதையல் பெருந்திரட்டு என்ற நூலாய் அவர் வெளியிட்டார். அதில் 204ஆம் பக்கத்தில் வீர்யம் என்ற கட்டுரையின் முன் குறிப்பாக எனது தந்தையார் பெயரையும் அவர் குறிப்பிடுகிறார். எனது தந்தையார் தினமணி வெ.சந்தானம் 1940களில் ஜயபாரதி பத்திரிகையில் வேலை பார்த்து வந்த போது பாரதியாரின் கவிதைகளைத் தேடிப் பிடித்து வெளியிடுவது வழக்கம். அவரை அன்புடன் இப்போது நினைவு கூர்கிறேன்.

பாரதியார் பிறந்த நாள்

அரவிந்த ஆசிரமம் அமுதன்

இது ஒரு புத்தகம் அல்ல. வானொலி உரை. அரவிந்த ஆசிரமத்தைச் சேர்ந்த அமுதன் அவர்களை புதுவை வானொலி நிலையத்தார் அழைத்து மஹாகவி பாரதியார் பற்றி உரை ஒன்றை நிகழ்த்துமாறு வேண்டினார்கள்.

பாரதியார் பிறந்த தினத்தன்று 11-12-1968ஆம் தேதி இது ஒலிபரப்பப்பட்டது.

மஹாகவி பாரதியார் – வ.ரா. எழுதிய நூல்

Subramania Bharati  –  Patriot and Poet

அருமையான இந்த ஆங்கில நூலை எழுதியவர் பி.மஹாதேவன். 1957இல் வெளி வந்தது இது.

கண்ணன் என் கவி

பாரதி இயலில் பாரதி ஆர்வலர்கள் படிக்க வேண்டிய முக்கியமான ஒரு புத்தகம் கு.ப.ராஜகோபாலன், பெ.கோ.சுந்தரராஜன் (சிட்டி) ஆகியோர் எழுதிய ‘கண்ணன் என் கவி’ என்ற புத்தகம். இந்த நூலை மணிக்கொடி எழுத்தாளர்கள் எழுதியது ஒரு சிறப்பு அம்சம் என்றால் இதில் பாரதியார் உலக மகாகவியாக நிரூபணம் செய்யப்பட்டிருக்கிறார் என்பது இன்னொரு சிறப்பு அம்சம்.

பாரதியார் கவி நயம் – 31 அறிஞர்கள் எழுதிய 34 கட்டுரைகளின் தொகுப்பு – தொகுப்பாளர் ரா.அ..பத்மநாபன்

பாரதி நான் கண்டதும் கேட்டதும்

பாரதியைச் சந்திக்கும் பேறு பெற்ற பி.ஸ்ரீ எழுதிய நூல் இது.

பாரதி பிறந்தார் – கல்கி எழுதிய நூல்

தினமணி சுடரில் வெளியான பல கட்டுரைத் தொகுப்புகள்

பாரதியை ஒட்டிய நினைவுகள் – பெ.நா.அப்புஸ்வாமி

தினமணி சுடரில் 1980,1981,1982 வெளி வந்த கட்டுரைகள்

இப்படி மகாகவியைப் பற்றி நூற்றுக் கணக்கில் நூல்கள் மற்றும்  கட்டுரைகள், துணுக்குகள் அவ்வப்பொழுது ஏராளமான பத்திரிகைகளில் வெளி வந்துள்ளன.

மகாகவி ஒரு மாபெரும் கடல். அந்தக் கடலில் மூழ்கி முத்துக்களையும் பவழங்களையும் அரிய பொருள்களையும் எடுத்துக் கொண்டே இருக்கலாம். ஒவ்வொரு நாளும் சிறிது நேரம் ஒதுக்கி பாரதியைக் கற்போர் தேசபக்தியில் சிறந்து விளங்குவர்; தெய்வ பக்தியில் சிறந்து விளங்குவர்; மொழிப் பற்றில் சிறந்து விளங்குவர். வாழ்க்கையை வாழ்வாங்கு வாழும் வாழ்வியலில் சிறந்து விளங்குவர்.

பாரதி 100!

மஹாகவி பாரதி அமராரான நாள் செப்டம்பர் 11, 1921 ஆம் ஆண்டு அவர் மறைந்து 100 ஆண்டுகள் உருண்டோடி விட்டன.அவரது சிறப்பியல்புகள் எத்தனையோ. அவற்றில் 100ஐ இங்கு காண்போம். அவருக்கு நமது சிரம் தாழ்ந்த அஞ்சலியைச் செலுத்துவோம். தேச பக்தியிலும் தெய்வ பக்தியிலும் சிறந்துயர்வோம்.

1. சிறந்த சம்ஸ்கிருத விற்பன்னர்

2. பல்மொழி அறிந்தவர்

3. பள்ளி ஆசிரியர்

4. சிறந்த பத்திரிகாசிரியர்.

5. சிறந்த பதிப்பாளர்

6. கார்ட்டூனை அறிமுகப்படுத்தியவர்

7.சிறந்த கவிஞர்

8. சிறந்த கணவர்

9. சிறந்த தகப்பன்

10. சிறந்த கதாசிரியர்

11. சிறந்த நகைச்சுவை எழுத்தாளர்.

12. சிறந்த புதுக் கவிதை இயற்றிய புதுமையாளர்

13.சிறந்த சொற்பொழிவாளர்

14. சிறந்த மேலை இலக்கிய விற்பன்னர்.

15. மஹாத்மாவை இனம் கண்டவர், அவரைச் சந்தித்து அவரது இயக்கத்திற்கும் ஆசி கூறினார்.

16. திலகரைப் போற்றியவர்

17. தேசபக்தர்களைப் போற்றியவர்

18.வ.உ.சிக்கு நெருக்கமானவர்

19.நிவேதிதாவைக் குருவாகக் கொண்டவர்

20. அரவிந்தருடன் நெருங்கிப் பழகியவர்.

21. தமிழ் மொழியின் சிறப்பை உணர்த்தியவர்

22.சிறந்த இசை விற்பன்னர்

23. சிறந்த பாடகர்

24. தேவார திவ்ய பிரபந்த விற்பன்னர்

24. சங்க இலக்கிய விற்பன்னர்

25. கம்பனில் ஈடுபாடு கொண்டவர்

26. வேதம் புகழ்ந்தவர்

27.ரஷிய புரட்சியை வரவேற்றவர்.

28.பெல்ஜியம் நாட்டிற்கு வாழ்த்து பாடியவர்

29.பிஜித் தீவிலே ஹிந்து ஸ்திரீகள் படும் பாட்டைக் கண்டு வருந்தியவர்

30. உலக நிகழ்ச்சிகளை உன்னிப்பாகக் கவனித்தவர்

31. தீர்க்கதரிசி

32. வெள்ளையரை விரட்ட குரல் கொடுத்தவர்

33. ஜாதிகள் இல்லையென்றவர்

34. ஆதி திராவிடரான கனகலிங்கம் என்பவருக்கு பூணூல் போட்டு புரட்சி செய்தவர்

35. வானியல் நிபுணர்

36. தேசீய ஒற்றுமை போதித்தவர்

37. பெண் விடுதலை கேட்டவர்

38. சிறந்த மொழிபெயர்ப்பாளர்

39. காங்கிரஸ் மஹாசபையின் வரலாற்றை எழுதிய வரலாற்று ஆசிரியர்

40. புதிய தமிழ்நடையை உருவாக்கியவர்

41. பலரால் பாராட்டப் பெற்றவர் .பிரான்ஸ் நாட்டு அறிஞர் பாரதியாரது பாடலை மொழிபெயர்த்தார்.                                               42. தமிழறிஞர் உ.வே.சாமிநாதையரைப் பாராட்டியவர்

43.காங்கிரஸ் கூட்டங்களில் கலந்து கொண்ட செயல்வீரர்

44. பகைமை பாராட்டாதவர்

45. ராஜதந்திர நோக்குடையவர்

46. அஞ்சாநெஞ்சர்; பிரிட்டிஷ் அடக்குமுறைக்குப் பயப்படாதவர்.                 47. தபஸ்வி – மந்திரச் சொல் வேண்டித் தவம் புரிந்தவர்.

48. கொடையாளி – செல்வந்தர் இல்லை என்றாலும் தனக்குக் கிடைத்ததை மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டவர்.

49. வந்தேமாதரம் மந்திரத்தைப் பரப்பியவர்

50. படிப்பாளி

51. விருந்தினரை உபசரிப்பவர்

52. புதிய ஆத்திசூடி பாடி காலத்திற்கேற்றபடி புதிய நெறி கண்டவர்

53. வீதி தோறும் இரண்டொரு பள்ளி என்ற லட்சியத்தை முன் வைத்த சிறந்த கல்வியாளர்

54. விஞ்ஞான ஆர்வலர்

55. சக்தி உபாசகர்

56. கண்ணபிரான் பக்தியில் திளைத்தவர்

57. கற்பனையின் சிகரத்தில் ஏறி பல நல்ல கனவு கண்டவர்

58. நடைமுறை வேதாந்தி

59. மகாபாரதத்தின்  முக்கிய கட்டத்தை விடுதலையை மனதில் எண்ணி பாஞ்சாலி சபதம் காவியம் இயற்றியவர்.

60. வேதாந்தமாக விரித்துரைக்க ஒரு குயில்பாட்டு கண்டவர்

61. நடுநிலையாளர் சிறந்த நடுநிலை தலையங்கங்களையும் கட்டுரைகளையும் எழுதி வந்தார்.

62. சிறந்த ஹிந்து

63. பல இடங்களுக்கும் பயணம் செய்து வாழ்க்கையின் பல அம்சங்களையும் அலசிய பயணி

64. சிறந்த சித்தர்

65. நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூரைப் போட்டிக்கு அழைக்க நினைத்தவர்.

66. தன் சுயசரிதையைக் கவிதை வடிவில் யாத்தவர்.

67. சர்வ மதம் சமரஸம் கண்டவர்

68. அனைத்துக் கலைகளையும் ரசிக்கும் சிறந்த ரசிகர்.

69. இயற்கை ஆர்வலர்

70.நேரம் பயனுள்ளதாகக் கழிய விரும்பியவர்.

71. கட்டுரைகளில் சரளமான நையாண்டி நடையைக் கையாண்ட நையாண்டி வல்லுநர்

72. மதமாற்றம் கண்டு பொங்கியவர். தனது அருமை நண்பர் சுரேந்திர நாத் ஆர்யா மதம் மாறியது கண்டு வருந்தி நொந்து கண்ணீர் சிந்தினார்.

73. அழகிய கையெழுத்தைக் கொண்டவர்

74. நன்கு உடை அணிபவர்

75. நண்பர்களை அரவணைத்தவர் – சுமார் 35க்கும் மேலான சீடர்களைப் புதுவையில் கொண்டிருந்தார்.

76. புதிய பாரதம் அமைக்க எண்ணியவர்

77. வெளிதேச வாசம் வெறுத்தவர்

புதுவை வெள்ளைக்காரர் வசம் ஆகும் என்ற ஒரு நிலை வந்த போது பிரான்ஸில் குடியேறலாமா என்ற பேச்சு எழுந்தது. ஆனால் பாரதியார் அப்படி பிரான்ஸுக்குச் செல்ல விரும்பவில்லை. வெளிதேச வாசத்தை அவர் வெறுத்தார். சிறந்த சுதேசி.

78. மாதாமணி வாசகம் வெளியிட்டவர்

79. ஆங்கில பத்திரிகாசிரியர்

தமிழ் பத்திரிகை ஆசிரியர் என்பதோடு பால பாரதம் என்ற ஆங்கிலப் பத்திரிகைக்கும் ஆசிரியராக ஆனார்.

80.தெய்வ அருள் பெற்றவர்

‘மனத்தினிலே நின்றிதனை எழுதுகின்றாள் மனோன்மணி என் மாசக்தி வையத்தேவி’ என எழுதினார். அனைத்தும் சக்தி அருளினாலேயே நடக்கிறது என்று நம்பினார். அந்த சக்தியின் அனுக்ரஹத்தையும் பெற்றார்.

81.மரணம் வென்றவர்

காலா என் காலருகே வாடா, உன்னை சற்றே எட்டி மிதிக்கிறேன் என்றவர். சாகா வரம் அருள்வாய் -ராமா என்று பாடியவர்.பார் மீது நான் சாகாதிருப்பேன் என்று அறிவித்தவர். உண்மை தான்! தனது சாகா வரம் பெற்ற பாடல்களினால் இன்றும் வாழ்கிறார். என்றும் வாழ்வார்.

82. சகல உயிர்களையும் நேசித்தவர்

காக்கை குருவி எங்கள் ஜாதி நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் என்று முழங்கியவர்.

83.வ.வே.சு. ஐயரால் பெரிதும் போற்றப்பட்டவர் சுற்றி நில்லாதே போ பகையே துள்ளி வருகுது வேல்! ஆஹா, இதற்கு அக்ஷர லக்ஷம் கொடுக்கலாமே என்றார் அவர்.

84.விவேகானந்தரின் பக்தர்

85.ரமணரை தரிசித்த கவிஞர்

திருவண்ணாமலை சென்ற போது பகவான் ரமணரை தரிசித்தார்.

86.நாடக ஆசிரியர்

87. தமிழ் எழுத்துக்களைச் சீர்திருத்த நினைத்தவர்

88. பிரெஞ்சு தேசீய கீதத்தை தமிழில் மொழி பெயர்த்தவர்.

பிரெஞ்சு தேசிய கீதமான லா மார்ஸ்லே என்ற கீதத்தை   “ அன்னை நன்னாட்டின் மக்காள் ஏகுவம் மன்னு புகழ் நாள் இதுவே“ என்று தமிழில் மொழிபெயர்த்தார்.

ஆக வந்தேமாதரம் என்ற பாரதத்தின் தேசீய கீதத்தையும் பிரான்ஸ் நாட்டின் தேசிய கீதத்தையும் தமிழில் தந்ததால் இரு தேசங்களின் தேசீய கீதங்களையும் தமிழாக்கிய பெருமையைப் பெறுகிறார்.

89. பாரதி பட்டத்தை பதினோரு வயதிலேயே பெற்றவர்.

இவரை மட்டம் தட்ட நினைத்த காந்தி மத நாதர் தந்த ஈற்றடியான, ‘பாரதி சின்னப் பயல்’ என்பதை ‘காந்திமதி நாதனைப் பார்; அதி சின்னப் பயல்’ என எழுதி அனைவரையும் இள வயதிலேயே  வியக்க வைத்தவர். இவரது கவிதா திறமையைக் கண்ட அறிஞர்கள் இவருக்கு பதினோரு வயதிலேயே – 1893ஆம் ஆண்டிலேயே – இவருக்கு பாரதி பட்டம் அளித்தனர்.

90. புதிய கவிதா பாரம்பரியத்தை உருவாக்கியவர்

91 பழையதையும் புதியதையும் இணைக்கும் பாலமாக இருந்தவர்

92. உலக அறிஞர்களின் தத்துவங்களைப் பாராட்டியவர்

லாவோட்சு, விட்மன், புத்தர் என உலக அறிஞர்கள் மற்றும் மகான்களின் தத்துவங்களை ஆங்காங்கே கட்டுரையில் தந்தவர். அரவிந்தர், தாகூர், காந்திஜி உள்ளிட்டோரின் சிறப்பான கருத்துக்களையும் தமிழில் தந்தவர்.

93. புராணங்களைப் போற்றியவர்!

94. ஆங்கில கவிதை, கட்டுரை, நூல் எழுதியவர்

ஆங்கிலக் கவிதைகளை எழுதியுள்ளார். தனது கும்மிப் பாடலைத் தானே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். The Fox with the golden Tail என்ற ஆங்கில நூலை வெளியிட்டுள்ளார்.

95. சிறை சென்ற தியாகி

1918 நவம்பர் 20ஆம் தேதி புதுவையிலிருந்து குதிரை வண்டியில் குடும்பத்துடன் புறப்பட்ட பாரதியார் பிரெஞ்சு எல்லையைக் கடந்தவுடன் பிரிட்டிஷ் அரசால் கைது செய்யப்பட்டார். கடலூர் சப் ஜெயிலில் அடைக்கப்பட்டார். நவம்பர் 20 முதல் டிசம்பர் 14 முடிய சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.

96. ஏராளமான அதிசய அனுபவங்களைப் பெற்றவர்

வாழ்க்கையில் நம்ப முடியாத அதீத உளவியல் அனுபவங்களையும் அதிசய அனுபவங்களையும் பெற்றவர். கோவிந்தசாமி புகழ் என்ற கவிதையில். “ஒரு நாள் இறந்த எந்தை தன்னுருவம் காட்டினான், பின்னர் என்னைத் தரணிமிசை பெற்றவளின் வடிவம் உற்றான்’ என்று கூறி இறந்த தந்தையையும் தாயையும் கோவிந்த சாமி காட்டத் தான் பார்த்ததைக் கூறுகிறார். திருவனந்தபுரம் சென்ற போது மிருகக் காட்சிச் சாலையில் காவலாளி தடுத்த போதும் ஒரு சிங்கத்தின் அருகில் சென்று அதைத் தொட்டு, ‘அன்பு கொண்டோரை நீங்கள் ஒன்றும் செய்ய மாட்டீர்கள் என்பதை கர்ஜனை மூலம் தெரிவியுங்கள்’ என்று சொல்ல சிங்கம் கர்ஜித்தது. இப்படி ஏராளமான அனுபவங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

97.  சிறந்த பொன்மொழிகளையும் புது சூத்திரங்களையும் தந்தவர்.

98.கீதையின் பால் பற்று கொண்டவர். அதற்கு உரை எழுதியவர்.  பக்தி பண்ணி பிழைக்கச் சொன்னான்; பலனை எண்ணாமல் உழைக்கச் சொன்னான் என்று கீதையை  இரண்டே வரிகளில் சித்தரித்தவர்.

99. நல்ல புத்தகத்திற்கு முன்னுரை தந்தவர்.

100. சிறந்த மனிதர்

மன்னுக்கு இதம் செய்பவர் மனிதர். அதாவது உலகிற்கு இதம் செய்பவர் என்ற அர்த்தத்திற்கு இலக்கணமாக வாழ்ந்த சிறந்த  வியக்க வைக்கும் மனிதர் மகாகவி பாரதியார்.  இறுதியாக, இதோ எனது அஞ்சலி:-

பாரதிரப் பாடிய பாரதியைப் பணிமின்

பாரதி பாரதியே தான் என்ற எனது அஞ்சலியை பாரதிக்குச் சமர்ப்பிக்கிறேன்.

பாரதியாரின் புகழுக்கு முடிவில்லை. அவரது சிறப்பியல்புகளை 100 என்ற எண்ணுக்குள் கட்டுப்படுத்த முடியாது. இந்த எண்ணிக்கைக்கு அப்பாற்பட்டவர் அவர். பாரதியார் திரு நாமம் வாழ்க. தேச பக்தியும் தெய்வ பக்தியும் வெல்க! வந்தேமாதரம்!! பாரத் மாதா கீ ஜெய்!!! இந்த நல் வாய்ப்பை எனக்குத் தந்த திரு சந்தானம் சுவாமிநாதன் அவர்களுக்கும் சிவ ஸ்ரீ கல்யாண்ஜி அவர்களுக்கும், ஞானமயம் குழுவினருக்கும் செவி மடுத்த அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றியைக் கூறி அமைகின்றேன்.

நன்றி. வணக்கம்.

tags- பாரதியார்! – 3

LONDON CALLING GNANAMAYAM 13 -09- 2021 (Post No.10091)

Mr Yogeswaran, Germany
Mridangam player Mr Arvinda Mukunda kumar

Compiled  BY LONDON SWAMINATHAN

Post No. 10,091

Date uploaded in London – 13 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

GNANA MAYAM- GNANA SUDAR BROADCAST FROM LONDON

13-9-2021 MONDAY PROGRAMME as broadcast

WHERE – FACEBOOK.COM/GNANAMAYAM

WHEN – 2 PM LONDON TIME; 6-30 PM INDIAN TIME

IF U HAVE OUR MONDAY ZOOM LINK, PLEASE USE IT.

Title song – Maitrim Bhajata by Kanchi Paramacharya sung by MS

OPENING ANNOUNCEMENT & PRAYER -7  MTS

PRAYER –  Mr Yogeswaran

BHARATI CONCERT BY MR YOGESWARAN, GERMANY

(accompanied on Mridangam by Sri Aravind Mukunda Kumar) – 30 minutes

TALK BY BENGALURU S NAGARAJAN ON SAINT  NARAYANA THEERTHAR – 15 mts

Song  BY MRS DAYA NARAYANAN, LONDON- 5 MTS

DR N KANNAN’S TALK from Chennai—ON BHARATI 15 MTS

DR RAJE SRINIVASAN, SINGAPORE

Because of our Bharati Memorial lectures it would be extended more than our usual time of one hour.

Songs sung by singers from Dubai, Malaysia, Sri Lanka, India and London.

Dr Raje Srinivasan, Singapore

SUBHAM-

TAGS broadcast1392021

LONDON CALLING THAMIL MUZAKKAM 12 -09- 2021 (Post No.10090)

KAUSHIKA AND GAUTHAM

Compiled  BY LONDON SWAMINATHAN

Post No. 10,090

Date uploaded in London – 13 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

12-9-2021 SUNDAY PROGRAMME as broadcast

WHERE – FACEBOOK.COM/GNANAMAYAM

WHEN – 2 PM LONDON TIME; 6-30 PM INDIAN TIME

IF U HAVE OUR SUNDAY ZOOM LINK, PLEASE USE IT.

TAMIL THUNDER /THAMIL MUZAKKAM (Part of Gnanamayam Channel) BROADCAST from London

OPENING ANNOUNCEMENT & PRAYER – 7 MTS

Prayer – Mrs Nithya Sowmy

MRS BRAHANNAYAKI SATHYANARAYANAN ON  Ganesh Shrine in DHANDEESWARAR TEMPLE, CHENNAI– 10 MTS

Thiruppugaz Amirtham – by MRS JAYANTHI SUNDAR  AND GROUP–  10 mts

WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH BY MRS

NITHYA SOWMY

WORLD HINDU NEWS ROUNDUP IN TAMIL BY BRAHANNAYAKI SATHYANARAYANAN

–25 MINUTES

Bharatiyar songs BY MRS UMA PRASAD, DUBAI, MR.BALAJI ,LONDON,

XXXX

SPECIAL PROGRAMME -MAHA KAVI BHARATI’S 100th MEMORIAL ANNIVERSARY

TALKS BY DR TENKASI GANESAN -15 MTS

TALK BY DR DURAIMUTHU SUBRAHMANIAM, MALAYSIA

Talk by Mrs Vijayalakshmi Sivasubrahmanian, Chennai

BHARATI SONGS SUNG BY SINGERS IN DUBAI,SINGAPORE, SRILANKA, UK AND INDIA

KARAOKE BHARATI SONG BY MRS NITHYA SOWMY

CHILDREN SONG BY KAUSHIKA AND GAUTHAM (Nithya’s Students)

–subham–

tags – broadcast1292021

டார்ஜான் கதைகளைப் படைத்த அமெரிக்க கதாசிரியர் எட்கர் ரைஸ் பர்ரோஸ் (Post 10089)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,089

Date uploaded in London – 13 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இப்போது ஏராளமான சித்திரப் படைக்கதைகளும் அதில் வரும் கற்பனைக் கதாபாத்திரங்களும் சிறுவர் மற்றும் இளைஞர்களிடையே பிரபலமாகிவிட்டது. SPIDER MAN /ஸ்பைடர் மென், SUPER MAN /சூப்பர்மேன், PHANTOM/ பேண்ட்டம் முதலிய கற்பனை உருவங்களை அறியாதோர் எவருமிலர். அந்த கதாபாத்திரங்களை வைத்து உருவாக்கும் பொம்மைகளும் கோடிக்கணக்கில் விற்பனையாகின்றன. அவற்றைப் பொறித்த ஆடைகளை அணிந்து கொண்டு தங்கள் குழந்தைகள் செய்யும் சாகஸங்களைக் கண்டு, மகிழ்ந்து, பெற்றோர்கள் அவர்களைப் புகைப்படம் எடுக்கின்றனர். ஆனால் 100 ஆண்டுகளுக்கு முன்னர் எல்லோரும் அறிந்த கார்ட்டூன் கதாபாத்திரம் TARZAN டார்ஜான் ஒருவன்தான்.

இந்த டார்ஜான் என்னும் கார்ட்டூன் ஆளை உருவாக்கிய அமெரிக்க விசித்திரக் கதை எழுத்தாளர் EDGAR RICE BURROUGHS எட்கர் ரைஸ் பர்ரோஸ் ஆவார். அவருடைய கதையே சுவையான கதை.

பர்ரோஸ் , அமெரிக்காவில் சிகாகோ நகரில் பிறந்தார். அவருடைய தந்தை ராணுவத்தில் மேஜர் பதவியில் இருந்த பெரிய அதிகாரி. ராணுவத்தில் எவ்வளவு கட்டுப்பா டு உண்டோ அவ்வளவு கட்டுப்பாட்டையும் வீட்டிலும் எதிர்பார்ப்பவர். கட்டு திட்டங்களுக்கு இடையே வளர்ந்த பர்ரோஸ் , சிகாகோவில் (சரியான உச்சரிப்பு ஷிகாகோ) ஹார்வர்ட் பள்ளியில் ரோமானிய ,கிரேக்க வரலாற்றைப் படித்தார். அதில் வரும் வீரர், வீராங்கனைகளை போற்றி மகிழ்ந்தார்.

பள்ளிப்படிப்பு முடித்தவுடன் அவருடைய சகோதரர் வைத்திருந்த மாட்டுப் பண்ணைக்கு (Cattle Ranch) பர்ரோஸ் அனுப்பப்பட்டார். ஆங்கில திரைப்படங்களில் வைல்ட் வெஸ்ட் WILD WEST  படங்களை பார்த்தவர்களுக்குத் தெரியும்; இருவர் பேசிக்கொண்டே இருப்பார்கள். கொஞ்சம் காரசாரமாக வாக்குவாதம் வந்தால் ஒருவர் தன் துப்பாக்கியை உருவி ‘டுமீல்’ என்று சுட்டுவிடுவான். அவ்வளளவு கரடு முரடான வாழ்க்கையுடையது அமெரிக்காவின் மேற்குப்பகுதி மாட்டுப் பண்ணைகள். அவர்களை COWBOSY ‘கவ் பாய்’ என்று அழைப்பர் .அங்கே இரண்டு ஆண்டுகளுக்கு இருந்த பின்னர் புகழ்பெற்ற ராணுவ அகாடமியில் பர்ரோஸ் சேர்ந்தார்.

அங்கே அவரை சரியான சோம்பேறிப்பயல் இவன் என்று சொல்லி பள்ளியிலிருந்து வெளியேற்றி விட்டனர் . பின்னர் மிச்சிகன் மிலிட்டரி அகாடமியில் பயிற்சி பெற்று அமெரிக்க ராணுவத்தில் பர்ரோஸ் சேர்ந்தார். அவரை அப்பாச்சி APACHEES  என்றழைக்கப்படும் அமெரிக்க பழங்குடி மக்களை சுட்டுத்தள்ள அரிசோனா மாநிலத்துக்கு அனுப்பப்பட்டார். பின்னர் சிகாகோவுக்குத் திரும்பிவந்து பேனா , பென்சில் , காகிதம் விற்கும் தொழிலில் இறங்கினார். பின்னர் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டார்.

36 வயதானபோது அவருக்கு திடீரென்று எழுதத் துவங்கினார். விஞ்ஞான புனைக்கதைகளை SCIENCE FICTION வெளியிடும் ‘ஆல் ஸ்டோரி வீக்லி’ ALL STORY WEEKLY பத்திரிகைக்கு கதைகளை அனுப்பினார்.அப்போது அவர் படைத்த கற்பனைக் கதாபாத்திரம் டார்ஜான் என்னும் காட்டு மக்கள் வீரன் ஆவான். 39 வயதில் முதல் டார்ஜான் புஸ்தகம் வெளியானது.

டார்ஜான் யார் ?

ஒரு ஆங்கிலப் பிரபு தன்னுடைய மகனை  ஆப்பிரிக்காவின் இருண்ட, அடர்ந்த காடுகளில் விட்டுவிட்டு வந்து விடுகிறார். அந்தச் சிறுவனை மனிதக் குரங்குகள் (APES) வளர்க்கின்றன. அவன்தான் டார்ஜான். அவன் தனது சாகசங்களால் காட்டு ராஜா ஆகிவிடுகிறான். குரங்கு போலவே மரத்துக்கு மரம் தாவி சாகசங்களை புரிவான். தீமையை எதிர்த்துப் போராடி வெற்றி பெறுவான். இப்படி அவர் எழுதிய டார்ஜான்  கதைகள் , நாவல்கள் இரண்டரைக்  கோடி பிரதிகள் விற்பனையாகி அவரைப் புகழ் பெற வைத்தது. அவர் எழுதிய PLANET MARS பிளானட் மார்ஸ் செவ்வாய் கிரக கதைகளும் பெரிதும் வாசிக்கப்பட்டன. பழங்கால கிரேக்கத்தில் வாழ்ந்ததாக கிரேக்க புராணங்கள் கூறும் ஹெர்குலீஸ், யூலிசிஸ் (ஆடிசியஸ்) போன்றவர்களை மனதில் கொண்டு அவர் உருவாக்கிய கற்பனைக் கதாப்பாத்திரம் டார்ஜான். தற்காலத்தில் அவரை மிஞ்சும் ஏராளமான கார்ட்டூன் வீரர்கள் வந்துவிட்டனர்!!

எட்கர் ரைஸ் பர்ரோஸ்

பிறந்த தேதி – செப்டம்பர் 1, 1875

இறந்த தேதி – மார்ச் 19, 1950

வாழ்ந்த ஆண்டுகள் 74

பர்ரோஸ் எழுதிய கதைகள், நாவல்கள் :–

1914- TARZAN OF THE APES

1915 THE RETURN OF TARZAN

1917 – THE SON OF TARZAN

1917 – A PRINCESS OF MARS

1918 – THE GODS OF MARS

1922- AT THE EARTH’S CORE

1924 – THE LAND THAT TIME FORGOT

1928 – TARZAN, LORD OF THE JUNGLE

1939 – CARSON OF VENUS

1946 – ESCAPE ON VENUS.

–SUBHAM–

tags – டார்ஜான்,   அமெரிக்க கதாசிரியர், எட்கர் ரைஸ் பர்ரோஸ், Edgar Rice Burroughs

சென்னை வேளச்சேரி தண்டீஸ்வரர் கோவில் (Post No.10088)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 10,088

Date uploaded in London – –   13 September   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 12-9-2021 அன்று ஒளிபரப்பான உரை!

ஸ்ரீ கருணாம்பிகை சமேத தண்டீஸ்வரர் கோவில், வேத ஸ்ரேணி!

முத்தினை மணியைப் பொன்னை முழுமுதல் பவளம் ஏய்க்கும்   

கொத்தினை வயிரமாலைக் கொழுந்தினை அமரர் சூடும்            

வித்தினை வேத வேள்விக் கேள்வியை விளங்க நின்ற                     

அத்தனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்தவாறே!

திருநாவுக்கரசர் திருவடி போற்றி!

ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது சென்னை மாநகரில் வேளச்சேரி என்று இன்று அறியப்படும் வேதஸ்ரேணியில் உள்ள தண்டீஸ்வரர் ஆலயம் ஆகும். இது கிண்டிக்கு மிக அருகில் அமைந்துள்ளது.

மூலவர் திரு நாமம் : ஸ்ரீ தண்டீஸ்வரர்

அம்பிகையின் திரு நாமம் : கருணாம்பிகை    

ஸ்தல விருக்ஷம் : வில்வம்  

மிகப் பழம் பெரும் தலமான இதைப் பற்றிப் புராண வரலாறு ஒன்று உண்டு. திரேதா யுகத்தில்  சோமுகாசுரன் என்ற அசுரன் தனது தவ வலிமையால் தேவர்களை வென்று பிரம்ம லோகம் சென்றான்.  அங்கு பிரம்மாவும் நான்கு வேதங்களும் மட்டுமே வாசம் செய்தனர். சோமுகாசுரன் வருவதை அறிந்த பிரம்மா வேதங்களைப் புத்தக வடிவமாக மாற்றி விட்டு தான் மட்டும் மறைந்திருந்து என்ன நடக்கிறது என்பதைக் கவனிக்கலானார். பிரம்ம லோகத்தில் யாரும் இல்லாததைக் கண்ட அசுரன் கோபம் கொண்டு வேத புத்தகங்களை எடுத்துக் கொண்டு சமுத்திரத்தில் தனது இருப்பிடத்தை அமைத்துக் கொண்டான். இதைக் கண்ணுற்ற பிரம்மா ஈஸ்வரனிடம் சென்று இதை முறையிட வேதங்களை மீட்கும் பணியை விஷ்ணுவிடம் ஈஸ்வரன் ஒப்படைத்தார். மஹாவிஷ்ணு மச்சாவதாரம் எடுத்து சோமுகாசுரனை வதம் செய்தார். வேதங்களை மீட்டு அவற்றை பிரம்மாவிடம் ஒப்படைத்தார். வேதங்கள் பிரம்மாவிடம், “ஐயனே! எங்களுக்கு அசுர தோஷம் நீங்க அருள்க” என்று வேண்டின. பிரம்மா, “பூலோகத்தில் தாரக வனம் என்ற இடத்தில் ஸ்வயம்புவாகக் காட்சி அளிக்கும் ஈஸ்வரனை தியானித்து பூஜித்தால் உங்களது அசுர தோஷம் நீங்கும்” என்று கூறி அருள் பாலித்தார்.

வேதங்களும் தாரக வனம் சென்று ஈஸ்வரனை பூஜிக்க ஈஸ்வரன் வேதங்களின் முன் தோன்றி அசுர தோஷத்தை நீக்கி அருளினார். வேதங்கள் ஈஸ்வரனை தியானித்து பூஜித்து வந்த ஸ்தலமே வேத ஸ்ரேணி என்ற பெயரைப் பெற்றது. காலப் போக்கில் இந்தப் பெயர் மருவி இப்போது வேளச்சேரி என்று அழைக்கப்படுகிறது.

அடுத்து இன்னொரு வரலாறும் உண்டு. துவாபர யுகத்தில் மிருகண்டு முனிவருக்குப் புத்திரராக அவதரித்த மார்க்கண்டேய மஹரிஷிக்கு 16 வயது வரை மட்டுமே ஆயுள் உண்டு என்பதை அறிந்த மிருகண்டு முனிவர் மிகவும் வருத்தமுற மார்க்கண்டேயர் தான் திருக்கடையூர் சென்று சிவனை வழிபடப்போவதாகத் தெரிவித்தார். அங்கு சென்று வழிபட சிவன் யமன் தன் பாசக்கயிற்றை வீசும் போது மார்க்கண்டேயர் சிவனைத் தழுவிக் கொண்டார். சிவன் யமனைத் தன் காலால் உதைத்து அவனது தண்டத்தைப் பறித்துக் கொண்டார். தண்டத்தை இழந்த யமன் மிகவும் வருத்தமுற்று கைலாயம் நோக்கிச் செல்லலானான். அவனை இடைமறித்த நாரத மஹரிஷி, “அங்கே செல்ல அவசியமில்லை. இங்கே வேதஸ்ரேணியில் ஸ்வயம்புவாக எழுந்தருளி இருக்கும் சிவபிரானை வழிபட்டால் உமக்குப் பிராயச்சித்தம் கிடைக்கும்” என்று அருளுரை கூறினார். யமனும் அப்படியே இங்கு வழிபட்டான். அவன் ஒரு குளத்தை அமைத்து அதிலிருந்து நீர் எடுத்து சிவபிரானுக்கு மனமுருகப் பிரார்த்திக்க மனம் மிக மகிழ்ந்தார் சிவ பிரான். அவனது தண்டத்தை அவனுக்குத் தந்து அருளி தண்டீஸ்வரர் என்ற பெயருடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். யமன் வழிபட்ட தீர்த்தமே யமதீர்த்தம் என்ற பெயரைப் பெற்றது. ஆலயத்திற்கு வெளியே இது அழகுற இன்றும் தெள்ளிய நீருடன் அமைந்துள்ளது.

   கலியுகத்தில் இந்த ஆலயத்தைச் சோழ மன்னர்கள் நன்கு பரிபாலித்து வந்தனர். 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்த அப்பைய தீக்ஷிதர் ஆரணிக்கு அடுத்துள்ள அடையபலம் என்ற ஊரில் அவதரித்தார். அவர் பல தலங்களுக்கும் யாத்திரை செய்து வரும் போது வேதஸ்ரேணிக்கு வந்தார். அம்மையின்றி அப்பன் மட்டும் தனியே இருப்பதைக் கண்ட அவர் இங்கேயே தங்கி, அம்மையை பிரதிஷ்டை செய்ய எண்ணி ஒரு யாகம் செய்தார்; ஒரு தீர்த்தத்தையும் உருவாக்கினார். அது அப்பைய தீர்த்தம் என்ற பெயரைப் பெற்றது. இந்தக் குளமானது இன்று ஐஐடி (IIT) காம்பஸில் உள்ளது. இது அப்ளாங்குளம் என்று பெயர் மருவி இப்போது கூறப்படுகிறது.

அப்பைய தீக்ஷிதருக்கு அம்பிகையின் கருணைக் கடாக்ஷம் கிடைத்ததால் அம்பிகை கருணாம்பிகை என்ற பெயரைப் பெற்றாள். இப்போது இந்த ஆலயம் ஸ்ரீ கருணாம்பிகை சமேத தண்டீஸ்வரர் ஆலயம் என்று அழைக்கப்படுகிறது. காஞ்சி மஹாபெரியவாள் சென்னையில் சிறிது காலம் இருந்த போது திருவான்மியூருக்கு வந்து தரிசித்து பின்னர் காலணி இல்லாமல் இங்கு வந்து தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டார். இங்கு லிங்கம் ஸ்வயம்புவாக அதாவது மாணிக்கக் கல் வடிவில் தோன்றி அருள் பாலிக்கிறார். மகர சங்கராந்தி நன்னாளில் சூரிய ஒளி அதிகாலையில் லிங்கத்தின் மீது பட்டு வழிபடும் படி ஆலய அமைப்பு அமைக்கப்பட்டது. இன்று கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் இந்த ஒளி விழுவதைத் தடுக்கின்றன.

இங்கு தெற்கில் அமைந்துள்ள ராஜ கோபுரம் வழியாக உள்ளே சென்று இறைவனை பக்தர்கள் இப்போது தரிசிக்கின்றனர்.  கிழக்கு கோபுரம் தனியே வாயிலுடன் அமைந்துள்ளது. தண்டீஸ்வரர் கிழக்கு நோக்கி இருந்து அருள் பாலிக்கிறார். அம்பாளோ ராஜகோபுரத்தில் நுழையும் போதே நேரடியாகக் காட்சி தந்து அருள் பாலிக்கிறாள். கர்பக்ருஹத்தை அடுத்து உள்ளது இடைக்கழி மண்டபம். அதனை அடுத்து முன் மண்டபமும் இருக்க அங்கு துவாரபாலகர்களைத் தரிசிக்கலாம். முன் மண்டபத்தில் ஈஸ்வரனுக்கு வலப்பக்கம் விநாயகரும் இடப்பக்கம் வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமானும் காட்சி அளிக்கின்றனர்.

தமிழ் நாட்டில் ஸ்ரீ சக்ரம் அமைந்துள்ள ஆலயங்களில் இந்த ஆலயமும் ஒன்றாகும். அம்பிகையின் கர்பக்ருஹத்தில் அம்பிகையின் பாதத்தில் ஸ்ரீ சக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. வெளி பிரகாரத்தில் வில்வ விருக்ஷத்தின் அடியில் வைத்தீஸ்வரர், அதற்கு அப்பால் மீனாக்ஷி சுந்தரேஸ்வரர், நவகிரகங்கள் உள்ளிட்ட சந்நிதிகள் உள்ளன.

இந்த ஆலயத்தில் ஏராளமான கல்வெட்டுக்கள் உள்ளன. அவை சோழ மன்னர்கள் இந்த ஆலயத்தை எப்படி கண்ணே போல் காத்து வந்தனர் என்பதைத் தெரிவிக்கிறது. இங்கு தம்பதியினரின் அறுபதாம் கல்யாணம் சிறப்பாகக் கொண்டாடப்படுவது ஒரு குறிப்பிடத்தகுந்த விஷயமாகும்.

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் கருணாம்பிகையும் தண்டீஸ்வரரும்  அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.   

                      திருஞானசம்பந்தரின் அருள் வாக்கு இது:                                                            

இயமன் தூதரும் அஞ்சுவர் இன்சொலால்                                      

நயம் வந்து ஓத வல்லார் தமை நண்ணினால்                       

  நியமம் தான் நினைவார்க்கு இனியான் நெற்றி                              

நயனன் நாமம் நமச்சிவாயவே       

 நன்றி வணக்கம்!              

***

tags–சென்னை, வேளச்சேரி ,தண்டீஸ்வரர் கோவில் ,

PLEASE JOIN US TODAY MONDAY 13-09-2021

WHERE – FACEBOOK.COM/GNANAMAYAM

WHEN – 2 PM LONDON TIME; 6-30 PM INDIAN TIME

IF U HAVE OUR MONDAY ZOOM LINK, PLEASE USE IT.

13 -09– 2021 MONDAY PROGRAMME

GNANA MAYAM- GNANA SUDAR BROADCAST FROM LONDON

Title song – Maitrim Bhajata by Kanchi Paramacharya sung by MS

OPENING ANNOUNCEMENT & PRAYER -7  MTS

PRAYER – 

BHARATI CONCERT BY MR YOGESWARAN, GERMANY

(accompanied on Mridangam by Sri Aravind Mukunda Kumar) – 25 minutes

TALK BY BENGALURU S NAGARAJAN ON SAINT  NARAYANA THEERTHAR – 15 mts

Song  BY MRS DAYA NARAYANAN, LONDON- 5 MTS

DR N KANNAN’S TALK from Chennai—ON BHARATI 15 MTS

Because of our Bharati Memorial lectures it would be extended more than our usual time of one hour.

Songs sung by singers from Dubai, Malaysia, Sri Lanka, India and London.

-subham-

tags- publicity13921

உலக இந்து சமய செய்தி மடல் 12-9-2021 (Post No.10087)

Compiled  BY LONDON SWAMINATHAN

Post No. 10,087

Date uploaded in London – 13 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com


இன்று ஞாயிற்றுக் கிழமை  செப்டம்பர் 12-ம் தேதி 2021

ஆம் ஆண்டு


உலக இந்து   சமய செய்தி மடல்


தொகுத்து வழங்குபவர் BRHANNAYAKI SATHYA NARAYANAN


 இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,


நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது BRHANNAYAKI SATHYA NARAYANAN


 எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் FACEBOOK.COM/ GNANAMAYAM மற்றும் ZOOM வழியாக நேரடியாகக் கேட்கலாம்./ காணலாம்.

XXXX

காசி இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் ஆய்வு இருக்கை: பிரதமர்

காசி இந்து பல்கலைக்கழகத்தில், தமிழ் படிப்புகள் தொடர்பாக பாரதியார் பெயரில் தமிழ் ஆய்வு இருக்கை அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

குஜராத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்புகளுக்கான தொழிற்பயிற்சி அளிக்க ‛சர்தார் பவனை’ பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் VIDEO CONFERENCING முறையில் துவக்கி வைத்தார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது: சர்தார் வல்லபாய் படேல், இந்தியாவின் பெருமையாக உள்ளார். செப்.,11 வரலாற்றில் நினைவு கூரத்தக்க நாள். மனித நேயத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நாள். அதேநேரத்தில், நமக்கு மனித நேயம் குறித்தும் பாடம் கற்பிக்கப்பட்டது. செப்.,11 மிகவும் முக்கியம். 1893-ம் ஆண்டு இதே நாளில் தான் சிகாகோ நகரில், மனிதநேயத்தின் பண்புகள் குறித்து விவேகானந்தர் பேசினார்.

ஆராய்ச்சியாளர்கள், மாணவர்களுக்காக, தமிழ் படிப்புகள் தொடர்பாக பனாரஸ் ஹிந்து பல்கலையில், சுப்ரமணியபாரதி பெயரில் தமிழ் ஆய்வு இருக்கை அமைக்கப்படும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

XXXX

உத்தரப் பிரதேச ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த உயர்நீதிமன்றம் தடை

உத்தரப் பிரதேசத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் மீது ஞானவாபி பள்ளிவாசல் கட்டப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் மசூதி வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த வாராணசி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு அலாகாபாத் உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை தடை விதித்தது.

இதுதொடர்பாக வாராணசி விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கும் உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.

உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலின் பகுதியை இடித்துவிட்டு, அந்த இடத்தில் ஞானவாபி மசூதியை முகலாய மன்னர் ஒளரங்கசீப் கட்டியதாகவும், அந்த மசூதி உள்ள நிலம் காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சொந்தமானது என்றும் கூறி அங்குள்ள விரைவு உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி விசாரித்த அந்த நீதிமன்றம் கோயிலும் மசூதியும் உள்ள வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.


இந்த உத்தரவுக்கு எதிராக அலாகாபாத் உயர்நீதிமன்றத்தில் உத்தர பிரதேச வக்ஃபு வாரியம், வாராணசியைச் சேர்ந்த அஞ்சுமன் இன்தஸாமியா மசூதி குழுவின் சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் மீது உயர்நீதிமன்ற நீதிபதி பிரகாஷ் பாட்டியா வியாழக்கிழமை அறிவித்துள்ள உத்தரவில், “இந்த வழக்கில் அனைவரின் வாதங்களைக் கேட்ட பின்பு கடந்த மார்ச் 15-ஆம் தேதி தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.  ஆனால், தொல்லியல் துறை சோதனை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை கீழ் நீதிமன்றம் விசாரித்து உத்தரவை பிறப்பித்திருக்கக் கூடாது. உயர்நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருந்திருக்க வேண்டும். வாராணசி விரைவு உரிமையியல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது. அந்த நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடத்தவும் தடை விதிக்கப்படுகிறது. கோயிலை இடித்துதான் பள்ளிவாசல் கட்டப்பட்டதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை.

வக்ஃபு வாரியம், அஞ்சுமன் இன்தஸாமியா மசூதி ஆகியவற்றின் சார்பில் மூன்று வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டு வழக்கின் அடுத்த  விசாரணையை அக்டோபர் 8-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Xxxx

விநாயகர் சதுர்த்தி: பிரதமர் மோடி வாழ்த்து

விநாயகர் சதுர்த்தியையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை முதல்  சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மகாராஷ்டிரம் முதலிய மாநிலங்களில் விநாயக சதுர்த்தி பத்து நாட்களுக்கு நடைபெறும்.. சில மாநிலங்களில் மூன்று நாட்களுக்கு நடைபெறும். அப்போது ஊர்வலமாகச் சென்று நீர் நிலைகளில் விநாயகர் சிலையைக் கரைப்பார்கள்

பிரதமர் மோடி தனது டுவிட்டரில் வாழ்த்துச்செய்தி வெளியிட்டுள்ளார். அதில் ” நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். இந்த நல்ல நாளில் விநாயகர் அருள் அனைவருக்கு கிடைத்து அனைவருக்கும் மகிழிச்சி, அமைதி, அதிர்ஷ்டம், ஆரோக்கியம், ஆகியவை கிடைக்க வாழ்த்துகிறேன் ” கணபதி பாப்பா மோரியா !என்று மோடி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தம் இவ்வாறு வாழ்த்து தெரிவித்தார்.

XXX

முஸ்லிம்கள் இந்தியாவில் இருப்பதற்கு எந்த பயமும் இல்லை… ஆர்எஸ்எஸ் தலைவர் உரை

/ 100

இந்தியாவில் இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் ஒரே பரம்பரை உள்ளது, ஒவ்வொரு இந்தியனும் ஒரு இந்து. ஸ்லிம்கள் இந்தியாவில் இருப்பதற்கு எந்த பயமும் இல்லை என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கூறினார்,

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்  புனேயில் ஒரு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பின்னர் அவர் பேசினார்:

அடிப்படைவாதத்திற்கு எதிராக அனைத்து முஸ்லிம் தலைவர்களும் வலுவாக ஒன்றிணைய வேண்டும். இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எந்த பயமும் இல்லை. இந்துக்கள் எந்த சமூகத்திற்கும் விரோதமானவர்கள் அல்ல.

இந்து என்ற சொல் தாய் மண், முன்னோர்கள் மற்றும் இந்திய கலாச்சாரத்திற்கு ஒத்ததாகும். எங்களுக்கு ஒவ்வொரு இந்தியனும் ஒரு இந்து. அவர்கள் மதம், மொழி மற்றும் இனத்தில் வேறுபட்டிருந்தாலும், அவர்கள் இந்துக்கள்.

இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஒரே பரம்பரை உள்ளது. அண்டை நாடுகளில் இருந்து படையெடுப்பாளர்கள் மூலம் மட்டுமே இஸ்லாம் இந்தியாவிற்கு வந்தது. இது வரலாறு.

தேவையற்ற சர்ச்சைகளை எதிர்த்து அடிப்படைவாதத்திற்கு எதிராக முஸ்லிம் தலைவர்கள் ஒன்றாக நிற்க வேண்டும். இதை விரைவாகச் செய்தால், நமது சமுதாயத்திற்கு குறைவான சேதம் ஏற்படும்.

இந்தியாவுக்கு சூப்பர் பவர் அளவுக்கு சக்தி உள்ளது. யாரையும் அச்சுறுத்தவில்லை. அனைத்து துறைகளிலும் சிறந்த வளர்ச்சிக்கு இந்தியா அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

இந்து என்ற சொல் எந்த இனம், மதம் அல்லது மொழி அடையாளத்தைக் குறிக்கவில்லை. இந்து மதம் என்பது மிக உயர்ந்த பாரம்பரியத்திற்கு வழங்கப்பட்ட பெயர். வாழும் ஒவ்வொருவரையும் உயர்த்துவதே. எங்களுக்கு ஒவ்வொரு இந்தியனும் ஒரு இந்து.

முஸ்லிம்கள் இந்தியாவில் யாருக்கும் பயப்படதேவை இல்லை  இந்துக்கள் யாருக்கும் விரோதமானவர்கள் அல்ல. அனைவரின் வளர்ச்சிக்கும் நலனுக்கும் இந்தியர்கள் இருக்கிறார்கள்.

இந்தியாவைப் பிரிக்க விரும்பும் சிலர் நாங்கள் ஒன்றல்ல, நாங்கள் தனித்திருக்கிறோம் என்று கூறுகிறார்கள். யாரும் அதற்கு இரையாகிவிடக் கூடாது. நாம் ஒரே தேசமாக ஒற்றுமையாக இருப்போம். ஆர்எஸ்எஸ்ஸில் நாம் நினைப்பது இதுதான். இதை உங்களுக்கு தெரிவிக்கவே நான் இங்கு வந்துள்ளேன். “இவ்வாறு மோகன் பகவத் கூறினார்.

Xxxx

திருப்பதியில் செப்., 8 முதல் பொது தரிசனம்: துவங்கியது டோக்கன்வினியோகம்

கோவிட் பெருந்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஆந்திர மாநிலம் திருமலை திருப்பதி பாலாஜி வெங்கடேஸ்வரர் கோவிலில், இலவச பொது தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. எனினும், ரூ.300 கட்டண தரிசனம், முக்கிய பிரமுகர்களுக்கான தரிசனம் உள்ளிட்ட தரிசனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு வந்தது.


கோவிட் பாதிப்பு குறைந்ததை அடுத்து இன்று (செப்., 8) முதல் உள்ளூர் மக்களுக்கு இலவச பொது தரிசனத்துக்கான டோக்கனை விநியோகிக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட மக்களுக்கு மட்டுமே, நாள் ஒன்றுக்கு 2,000 டோக்கன்கள் தர கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. திருமலை திருப்பதியில் உள்ள ஸ்ரீநிவாசம் வளாகத்தில் காலை 6 மணி முதல் இலவச டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

xxxxxxxxxxxx

அயோத்தி ராமர் கோவிலில் 2023ல் தரிசனம் செய்யலாம்

‘அயோத்தி ராமர் கோவிலுக்கு அக்டோபர் மாதத்துக்குள் அஸ்திவாரம் தயார் ஆகி விடும்; 2023ம் ஆண்டு டிசம்பரில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர்’ என, விஷ்வ ஹிந்து பரிஷத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தேசிய பொதுச் செயலர் மிலிந்த் பரந்தே கூறியதாவது:


அயோத்தி ராமர் கோவில் கட்டும் பணி திட்டமிட்ட காலத்துக்குள் நிறைவடையும். இம்மாத இறுதி அல்லது அக்டோபர் முதல் வாரத்துக்குள் அஸ்திவாரம் அமைக்கும் பணிகள் முடிந்து விடும். 2023ம் ஆண்டு டிசம்பரில் ராமர் சிலை கர்ப்பகிரகத்தில் நிறுவப்பட்டு, தினசரி பூஜைகள் துவக்கப்படும். பக்தர்களும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.

xxxxx

இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் BRHANNAYAKI SATHYA NARAYANAN

நன்றி, வணக்கம்

 tags – உலக, இந்து சமய, செய்தி மடல், 12-9-2021,

WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH 12-9 -2021 (Post No.10086)

Compiled  BY LONDON SWAMINATHAN

Post No. 10,086

Date uploaded in London – 13 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Namaste , Namaskaram to Everyone

This is a weekly ‘HINDU NEWS ROUND UP’ from around the world.

Compiled from popular newspapers of India

Read by NITHYA SOWMY

This is a broadcast coming through ZOOM and FACEBOOK.COM / GNANA MAYAM live at

TWO pm London Time and 6-30 PM Indian Time Every SUNDAY.

Even if you miss our live broadcast on SUNDAYS

you can always visit us on FACEBOOK.COM– slash- Gnana Mayam 24 hours a day.

Here is the WEEKLY HINDU NEWS BULLETIN from ‘Aakaasa Dhwani’

Read by NITHYA SOWMY

XXXX

PRIME MINISTER  Modi announces Chair at BHU in honour of Tamil poet Subramania Bharati

PRIME MINISTER  Modi made the announcement on the 100th death anniversary of Subramania Bharati, while inaugurating Ahmedabad-based Sardardham Bhavan via video conferencing. He also extended Ganesh Chaturthi greetings to the people.

Prime Minister Narendra Modi on Saturday announced the setting up of chair in memory of Tamil poet Subramania Bharati at Banaras Hindu University (BHU) for Tamil studies. The Chair will be established in the faculty of arts at the BHU.

PM Modi made the announcement on the 100th death anniversary of Subramania Bharati, while inaugurating Ahmedabad-based Sardardham Bhavan via video conferencing. The Tamil poet passed away on this date in 1921.

“Today, September 11, is another big occasion. Today is the 100th death anniversary of India’s great scholar, philosopher and freedom fighter ‘Subramanya Bharati’ ji. The vision of “Ek Bharat Shreshtha Bharat” that Sardar Saheb used to carry, the same philosophy has been shining with full divinity in the Tamil writings of Mahakavi Bharati,” PM Modi said on the occasion.

“I am also making an important announcement on this occasion. It has been decided to establish a chair in the name of Subramanya Bharti ji at Banaras Hindu University. ‘Subramanya Bharati Chair’ on Tamil Studies will be established in Faculty of Arts of BHU,” the Prime Minister added.

Earlier in the day, paid tributes to Bharati, recalling his “rich scholarship, multi-faceted contributions to our nation, noble ideals on social justice and women empowerment”.

xxx

10-sq-km area around Krishna Janmabhoomi now a pilgrimage site

 Around 10 days after the announcement made by Chief minister Yogi Adityanath on the occasion of Janmashtami in Mathura, the state government has issued a notification declaring the 10 square kilometre range comprising 22 wards under the jurisdiction of the Mathura-Vrindavan Municipal Corporation a Pavitra Teertha Sthal (pious place of pilgrimage). The sale of alcohol and non-vegetarian food is now banned in the area.

The CHIEF MINISTER  went on to ask the Mathura district administration to work on banning meat and liquor in the vicinity of seven Hindu pilgrimage sites in the land of Lord Krishna. He also promised to relocate and rehabilitate those involved in the trade of liquor and meat businesses near these pilgrimage sites.

 xxxx

At 47%, Hinduism biggest gainer in religious conversion in Kerala

 While the BJP, in its election manifesto, has promised an Uttar Pradesh model law against forceful religious conversion and ‘love jihad’ in Kerala to woo Hindu and Christian voters, the data sourced by TNIE from the government gazettes paint an altogether different picture.

According to official figures for the year 2020, the biggest gainer – in terms of new converts – was Hinduism. People who embraced Hinduism constituted 47 per cent of religious conversions in Kerala during the one-year period under reference. 

Of the total 506 people who registered their change of religion with the government, 241 were those who converted from Christianity or Islam to Hinduism. A total of 144 persons adopted Islam whereas Christianity received 119 new believers in the year, shows the data.

xxxx

President Kovind, PM Modi extended Ganesh Chaturthi greetings to people

Ganesh Chaturthi, a ten-day festival that starts on the fourth day of the Hindu month Bhadrapada,  started on September 10 this year.

President Ram Nath Kovind and Prime Minister Narendra Modi on Friday extended greetings to people on the occasion of Ganesh Chaturthi.

xxxxx

Vinayaka idols made by prisoners sold out

Idol making is one of the activities introduced along with weaving and yoga to keep the prisoners occupied and give them something to look forward to in life, said the Inspector General of Prisons in PUDUCHERRY

Vinayaka Chaturthi has come as a blessing for convicts in the Puducherry Central Jail at Kalapet who made 51 beautiful Vinayaka idols that sold out in minutes, as part of a major prison reform programme. The reforms started rolling since July to make Puducherry Central Jail a model prison in association with Sri Aurobindo Society, Inspector General of Prisons Ravideep Singh Chahar told The New Indian Express.

xxxx

Gyanvapi mosque case: Allahabad HC stays Varanasi court’s order on archaeological survey

The Allahabad High Court on Thursday put a stay on an order passed by a lower court in Uttar Pradesh’s Varanasi city in April, allowing an archaeological survey of the Kashi Vishwanath Temple and Gyanvapi Mosque complex, Bar and Bench reported.

Justice Prakash Padia said that the court in Varanasi should not have decided on the matter since certain petitions related to the case were pending before the High Court, Live Law reported.

The Allahabad high court on Thursday stayed proceedings in the Kashi Vishwanath Mandir-Gyanvapi Masjid case in a Varanasi court, effectively suspending a controversial archaeological survey of the premises to determine whether a Hindu temple was partially razed to build the 17th-century mosque.

The court also granted three weeks’ time to the Union and state governments to file their replies on the issue. The mosque abuts the famous Kashi Vishwanath temple and has been embroiled in a decades-old legal dispute.

Xxx

Hindus & Muslims in India have common ancestors:

RSS chief Bhagwat said

Rashtriya Swayamsevak Sangh (RSS) chief Mohan Bhagwat on Monday said Hindus and Muslims share the same ancestry and every Indian citizen is a “Hindu”.

Speaking at an event here organised by Pune-based Global Strategic Policy Foundation, he said “sane” Muslim leaders should stand firmly against fundamentalists and added the minority community does not have to fear anything in India as Hindus don”t hold enmity towards anyone.

Hindus and Muslims share the same ancestry, Bhagwat said.

“Hindu is not a word that denotes any race, religion or linguistic identity. Hindu is a name given to the rich heritage that strives for upliftment of every living and non-living entity. Hence, for us, every Indian is a Hindu,” he said.

Bhagwat emphasized Muslims don”t have to fear anyone in India as Hindus don”t hold enmity towards anyone and Indians have always been committed to the well-being of all.

Kerala Governor Arif Mohammad Khan and Lt Gen Syed Ata Hasnain (retd), Chancellor, Central University of Kashmir, were among other prominent speakers at the event.

Khan said more diversity leads to a prosperous society and added “Indian culture considers everyone equal.”

The Kerala Governor quoted several ancient scriptures to highlight the all-encompassing nature of Hinduism.

XXXX

Odisha Celebrates Nuakhai festival

The drought-like situation and the pandemic notwithstanding, Nuakhai, the agrarian festival of Western Odisha, was celebrated with religious fervour and tradition across Western Odisha on Saturday. 

As per tradition, the first harvested crop was offered to Goddess Samaleswari in Sambalpur at the stipulated ‘lagna’ (auspicious moment) between 10.15 am  and 10.25 am. 

The presiding deity SAMALESWARI was dressed in a new saree and decorated with ornaments as the priests of Samaleswari temple performed the rituals.

Thousands of devotees thronged the shrine to worship the goddess.

Nuakhai also marks the homecoming of family members and relatives working outside.

The festival is also known for lip-smacking delicacies like ‘Muga Bara’, ‘Ras Bara’, ‘Muga Mada’, ‘Suji Mada’, ‘Chaula Mada’, ‘Kakara Pitha’ and ‘Kheeri’ all of which are relished during family feasting.

The ‘Nuakhai Juhar’ ritual involves seeking the blessings of elders for long life, happiness and prosperity. 
 

Xxxxx

Hindus shocked at 5th vandalizing of Swindon temple in Britain

Hindus globally are highly concerned regarding reports of the fifth vandalizing of Swindon Hindu Temple & Cultural Centre in South West England since May; this temple meets the spiritual needs of about 20,000 Hindus of the area.

Reports suggest that the break-in resulted in desecrating of deities, vandalizing of sacred altar and rooms, stealing of cash worth thousands of pounds and artefacts, damaging of doors, etc.; sending the area’s Hindu community into a state of anguish and fear.

Rajan Zed, president of the Universal Society of Hinduism, in a statement in Nevada (USA) today, said that it was appalling for the worldwide Hindus to hear about such incidents happening to a Hindu house of worship

Zed urged United Kingdom authorities to take this issue seriously and take action to put an end to such crimes .

XXXXXXXXXXXXXX

THAT IS THE END OF NEWS FROM AKASA DHWANI

READ BY NITHYA SOWMY

XXX

PLEASE WAIT FOR TAMIL NEWS

tags- Hindu news roundup,1292021

பார் போற்றும் மகாகவி பாரதியார்! – 2 (Post No.10085)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,085

Date uploaded in London – 13 September   2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பார் போற்றும் மகாகவி பாரதியார்! – 2

பாரதியாரைக் கற்றால் உலக கவிகளின் அறிமுகம் நமக்குக் கிடைக்கும்.

चिड़ियों से मैं बाज बनाऊ , गीदड़ों को मैं शेर बनाऊ ! सवा लाख से एक लडाऊ, तभी गोबिंद सिंह नाम कहउँ  – சிட்டுக் குருவி ராஜாளி ஆகும், சிறு நரி சிங்கமாகும். ஒன்றேகால் லக்ஷம் பேருடன் ஒருவன் சண்டை இடுவான். அப்படி நேரும் போது அங்கே குரு கோவிந்த சிம்மன் பேரைக் கேட்பாய்!

இதை சொல் ஒன்று வேண்டும் என்ற பாடலில் ஈயைக் கருட நிலை ஏற்றுவீர் என்ற அவர் வரியில் காணலாம்.யோகசித்தி பாடலில் ‘பன்றிப் போத்தைச் சிங்கவேறாக்கல்என்கிறார்.

‘அபி ஸ்வர்ணமயி லங்கா ந மே ரோசதே லக்ஷ்மணா, ஜனனீ ஜன்ம பூமிஸ்ச ஸ்வர்காதபி கரியஸி என்பதை பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானிலும் நனி சிறந்தனவே என்ற வரிகளில் காணலாம்.

To Sophia  என்ற ஷெல்லியின் கவிதையில் வரும் Thy deep eyes a double planet என்பதை சுட்டும் விழிச்சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ என்பதில் காணலாம். இப்படி நூற்றுக் கணக்கில் உதாரணங்களை அடுக்கலாம்.

தனித்துவம் மிகுந்து உலகக் கவிஞர்களில் உயர்ந்தவன் என்பதைச் சுட்டிக் காட்ட, ஒரு பாடல் – ‘தேனை மறந்து விட்ட வண்டும், ஒளிச் சிறப்பை மறந்து விட்ட பூவும் வானை மறந்திருக்கும் பயிரும் இந்த வையம் முழுதும் இல்லை தோழி, ஆசை முகம் மறந்து போச்சே! இந்த ஒன்று போதாதா, போதாது என்றால் இன்னொன்று இதோ – ‘வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட வெறும் வெளியிலிரத்த களியொடு பூதம் பாட, பாட்டின் அடிபடு பொருளின் அடிபடு மொலியிற் கூட களித்தாடுங் காளீ, சாமுண்டி கங்காளீ, அன்னை அன்னை அன்னை ஆடுங் கூத்தை நாடச் செய்தாய் என்னை என்ற பாடலுக்குத் தான் ஒப்புவமை உண்டா! இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம் உலக மகாகவியின் ஒப்பற்ற பாட்டுத் திறனுக்கு!

*

பாரதியாரைப் போற்றி ஆயிரக்கணக்கில் கவிதைகளும் கட்டுரைகளும் துணுக்குகளும் கடந்த நூறு ஆண்டுகளில் வெளி வந்துள்ளன. பாரதியாரைப் போற்றிய ஆயிரம் கவிதைகளைத் தொகுத்து வெளியிட எண்ணம் கொண்டு தொகுக்க ஆரம்பித்தேன். இந்தக் கவிதைகள் http://www.tamilandvedas.comஇல்11-12-2017இல் (கட்டுரை எண் 4479) ஆரம்பித்து 90வது அத்தியாயத்தில் 14-5-2008இல் (கட்டுரை எண் 5008) முடிவுற்றது. நேரம் கருதி அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கு பார்ப்போம்.

வி.ஜி.சீனிவாசன்

இவரே சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் பாரதியாரின் சிலை நிறுவுவதற்கான கமிட்டியின் செயலாளராக இருந்து சிலையை நிறுவியவர். பாரதியே இவர் சுவாசம். இவர் எங்களது பாரதி ஆசான். ஆகவே இவரது பாடல்களில் ஒன்றை முதலாவதாகக் கொண்டு இந்த நூலைத் தொகுத்தேன்.

தொன்மொழியாம் தென்மொழியும் தூய வடமொழியும்

தன்மொழியாக் கொண்டு தமிழகத்தை – நன்மையுறச்

செய்த புகழ் பாரதிசீர் செப்புதற்குத் தானெளிதாய்

எய்திடுமோ என்றனுக்கு மே

நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை பாடல்களில் பாரதி ஓர் ஆசான் என்ற கவிதையின் ஒரு பகுதி :

       அஞ்சியஞ்சி உடல்வளர்க்கும் ஆசை யாலே

அடிமைமனம் கொண்டிருந்த அச்சம் போக்கி
வெஞ்சமரில் வேல்பகைவர் வீசி னாலும்

விழித்தகண்ணை இமைக்காத வீரன் போல
நெஞ்சுறுதி உண்டாக்கும் கவிகள் பாடி

நேர்மையுடன் சுதந்தரத்தை நினைக்கச் செய்து
விஞ்சைமிகும் மனப்புரட்சி விரவச் செய்த

      வித்தகனாம் பாரதிஓர் ஆசான் மெய்தான்.

அழ.வள்ளியப்பா அவர்களின் கவிதையில் ஒரு பகுதி:

தமிழை வளர்த்திடப் பாடுபட்டார்.
     
தாய்மொழி ஆசையை ஊட்டிவிட்டார்.
அமுதாம் அவரது வார்த்தைகளை
     
அறிந்து செயலிலே காட்டிடுவோம்.

கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்களின் நீண்ட கவிதையிலிருந்து ஒரு கண்ணி :

உள்ளந் தெளியுமொரு பாட்டிலே, அடா! – மிக்க

     ஊக்கம் பிறக்குமொரு பாட்டிலே, அடா!

கள்ளின் வெளிகொளுமோர் பாட்டிலே, அடா! – ஊற்றாய்க்

     கண்ணீர் சொரிந்திடு மோர் பாட்டிலே, அடா!

பாரதிதாசன் : ‘புதுநெறி காட்டிய புலவன்-இல் ஒரு பகுதி

பைந்தமிழ்த் தேர்ப் பாகன் அவனொரு

செந்தமிழ்த் தேனீ ! சிந்துக்குத் தந்தை!

குவிக்கும் கவிதைக் குயில்! இந்நாட்டினைக்

கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு

நீடு துயில் நீக்கப் பாடி வந்த நிலா

காடு கமழும் கற்பூரச் சொற்கோ!

கற்பனை ஊற்றாம் கதையின் புதையல்

திறம்பாட வந்த மறவன், புதிய

அறம்பாட வந்த அறிஞன், நாட்டிற்

படரும் சாதிப்படைக்கு மருந்து

மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்

அயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன்

என்னென்று சொல்வேன்! என்னென்று சொல்வேன்!

கவியரசு கண்ணதாசன்:

சந்திர சூரியர் உள்ளவரையிலும்

   சாவினை வென்று விட்டான் – ஒரு

சாத்திரப் பாட்டினில் பாரததேசத்தின்

  தாய்மையை வார்த்துவிட்டான்

இந்திரதேவரும் காலில் விழும்படி

  என்னென்ன பாடிவிட்டான் – அவன்

இன்று நடப்பதை அன்று சொன்னான் புவி

   ஏற்றமுரைத்து விட்டான்

பண்டித ஜனாப் K. அப்துல் சுகூர் (1933) பாடலில் ஒரு பகுதி:

பூ மணக்குது புகழ் மணக்குது புண்ணியர் பாடலிலே

பா மணக்குது பயன் மணக்குது பாரதி பாட்டுள்ளே

கவிஞர் கே.பி. அறிவானந்தம்

2003ஆம் ஆண்டு  பாரதி பத்துப்பாட்டு காவியத்தை இயற்றியுள்ளார் இவர். பத்துக்கும் மேற்பட்ட கவிதை நூல்கள்/ காவியங்களை இயற்றியவர்.

நாடகக் காவலர் R.S. மனோகர் நடத்திய இந்திரஜித், பரசுராமர், நரகாசுரன், திருநாவுக்கரசர், உள்ளிட்ட பல மேடை நாடகங்களை எழுதியவர் இவரே. பாரத மாதா பார்வையில் பாரதி என்ற கவிதையில் ஒரு பகுதி.

சொந்த மண்ணை விட்டு வந்து

   சோர்ந்து வாழ்தல் வாழ்க்கையோ?

இந்தி யாவில் சிறையி லென்னை

   இட்ட போதும் தாழ்ச்சியோ?

இந்த வாழ்வு தேவை யில்லை

   என்று வந்து சிறையிலே

தந்த துன்பம் ஏற்று மீண்டாய்

   சார்ந்த நட்பால் விரைவிலே

ஹா.கி. வாலம் அம்மையார் பாரதியின் புகழைக் கூறும் கவிதையில் ஒரு பகுதி:_

வீரக் கனல் பொங்கும் வெற்றி மணிச் சிங்கம்!                         

         விண்ணாடு மண்ணாடு வியந்து பணி தங்கம்!                            கோரப் பகை அடிக்கும் கொடிய மணிக் கதிர்வேல்!                         

    கொடியவர்கள் கொட்டமழி நெடிய மணி நேமி                      ஆருக்கும் அஞ்சாத ஆரமர் செல்வன்                                 

          அன்புக்கு என்பு தரும் அருளாளன் அண்ணல்                        போருக்கு ரகுராமன்! புலமைக்கு வாணி!                              

    பொற்புக்கும் நட்புக்கும் புண்ணியக் கண்ணன்                           

சங்கு சுப்ரமணியன் – இலக்கியத் தலைவர் பாரதியார்

கம்பனைப் பெற்ற நாட்டில்

   கவிமணம் ஓயு நாளில்

வம்பரின் மந்தை தன்னில்

 வளர்த்திட தேச பக்தி

உம்பர் மா உலகதாக

  உயர்த்திடத் தமிழகத்தை

அம்புவி வந்த வீர

  அருங்கவி பாரதியார்

திருமதி சௌந்தரா கைலாசம் – தொழுகின்றோம் அருள்க நீயே!

எழுதுகின்ற எழுத்தாலே என்னென்ன

       என்னென்ன செய்து விட்டாய்!

தொழுதுநின்ற ஏழைதனை, துள்ளுகின்ற

   காளைகளாய் மாற்றி, துன்பம்

உழுதுநின்ற நெஞ்சுகளில் உவகையெனும்

  தேனூற்றி, அச்சமென்னும்

பழுதுநின்ற இடத்தினிலே, பாரதியே!

  வீரத்தைப் பயிர் செய்தாயே!

கவிஞர் K. ராமமூர்த்தி – மகாகவி பாரதி வாழ்க மாதோ!

சீர் மிகுந்த செந்தமிழின் சீராளர்;

   செகம் புகழும் கவிதந்த பேராளர்

கார்த்திகைத் தீபத்திங்கள் திருநாளில்

 கதிரெனவே அவதரித்தார் பாரதியார்

கவிஞர் தமிழழகன் – கோகிலக் கவிஞன்

ஞாலம் வியந்திடக் காலம் கடந்தும் மெய்ஞ்

  ஞானரதம் விடுவான் – அதன்

மூலம் புதுயுகச் சீலம் நமக்குற

   மோன பதம் நடுவான்

மு.சதாசிவம் – பாரதி பிள்ளைத் தமிழ் – செங்கீரைப் பருவம்

சுவைபல தருமொழி ஒரு மொழி எங்கள் தங்கத் தமிழ் மொழியில்

  கவிபல இசையுடன் உணர்வெனும் பக்தி சேர்ந்தே பலபாடல்

உவகையை “அவனுளம் கொளும்வகைப் பாடிப் போந்த திருவடியார்

  உளம் செலும் வழியினில் உனதுளம் போக்கி; கண்ணன் எனுமிறையை

நவமுறைக் கவிகளில் நயமுறப்பாடும் நல்லோய்! தமிழ்நாட்டின்

  நிறைபுகழ் பரவிட வழிசொலும் எங்கள் பாண்டித்திருமகனே!

புவிமிசைக் கவிகளில் தனியிடம் பெற்றோய்! செங்கோ செங்கீரை

  புகழொடு வறுமையின் முழுமையைக் கண்டோய் செங்கோ செங்கீரை

             **               தொடரும்


tags – பாரதியார்! – 2

BHARATI DAY IN LONDON 11-09-2021 (Post No.10084)

Compiled  BY LONDON SWAMINATHAN

Post No. 10,084

Date uploaded in London – 12 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Gnanamayam Channel in London has arranged a week long Bharati Memorial Centenary lectures via Zoom and Facebook.com. Many singers also participated in it. On 11th September 2021, the main event took place. Everyone enjoyed the 2 hours 15 minutes programme. Young and old from different parts of the world took part in it.

11-9-2021 IN SPECIAL BROADCAST FOR GREAT POET BHARATI

PLEASE JOIN US TODAY 11-9-2021 IN SPECIAL BROADCAST TO REMEMBER AND PAY RESPECT TO THE GREATEST TAMIL POET BHARATI . IT IS 100 YEARS SINCE HE DIED. TO COMMEMORATE BHARATI’S 100th DEATH ANNIVERSARY, GNANAMAYAM CHANNEL IS DOING A SPECIAL BROADCAST FROM LONDON.

USUAL TIME- LONDON TIME 2 PM ;INDIAN TIME 6-30 PM

USUAL PLACE- FACEBOOK.COM/ GNANAMAYAM

IF U HAVE OUR ZOOM, PLEASE USE OUR MONDAY ZOOM LINK.

SPEECHES BY DEDICATED TAMIL SCHOLARS AND SONGS BY DEVOTED SINGERS ARE BROADCAST.

FOLLOWING IS OUR  PROGRAMME.

Prayer Mrs Sasikala Janakiraman

Talks by

MR SUBRAMANIAN SITARAMAN, MUMBAI

வாராது வந்த மாமணி 

MR S NAGARAJAN, BENGALURU

பார் போற்றும் மகாகவி பாரதியார்!

DR NARAYANAN KANNAN, CHENNAI (with Shobika Murukesan)

xxx

பேச்சு.

கலைஞானச்சுடர். ஸ்ரீமதி. சுபாஷினி.

இயக்குனர், தேஜஸ்வராலயா கலைக்கூடம்.

ஆசிரியர், கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி.

திரு.   இளைய தம்பி ஜெயந்திரன். 

விரிவுரையாளர், சைவசிந்தாந்த துறை, யாழ்ப்பாண  பல்கலைக்கழகம்.

பாரதியார் பாடல்கள்.

செல்வி. கார்த்திகா கார்த்தீஸ்வரன். 

செல்வி. அபிலாஷிகா கணேசமூர்த்தி. 

செல்வி. தேஜஸ்வினி பிரணவன் 

செல்வி. ஜெகார்த்திகா கணேசமூர்த்தி.

xxxx

BHARATI SONGS SUNG BY SINGERS FROM DUBAI, SINGAPORE, SRI LANKA, AUSTRALIA AND INDIA

Here is the event in pictures :–

–subham-

tags- Bharati day, Gnanamayam, 1192021,