பாரதியார் பாடலில், அதர்வண வேதத்தில் SIRIUS சிரியஸ் நட்சத்திரம் (Post No.10,432)

WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,432
Date uploaded in London – – 11 DECEMBER 2021

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பாரதியார் பாடலில், அதர்வண வேதத்தில் SIRIUS சிரியஸ் நட்சத்திரம்


பாராதியாருக்கு வானசாஸ்திரத்தில் அதிகமான ஈடுபாடு உண்டு. நிறைய பாடல்களில் இதைக் காண முடிகிறது. 100 அல்லது 125 ஆண்டுகளுக்கு முன்னர் சிரியஸ் நக்ஷத்திரம் SIRIUS STAR பற்றி செய்தி வெளியானவுடன் அது பற்றி கவிதை எழுதியது பலருக்கும் அதிகம் தெரியாது. தூமகேது என்ற தலைப்பில் ஹாலியின் வால் நட்சத்திரம் பற்றி அவர் எழுதிய கவிதை பற்றி முன்னரே (YEAR 2013) எழுதினேன்.
பாரதியார் பாடலில் சிரியஸ் பற்றி கூறும் தகவலில் சிறிது மாற்றம் உண்டு. அவர் காலத்தில் பத்திரிகைகளில் வந்த செய்தியை வைத்து அவர் எழுதியது சரியே . சிரியஸ் நட்சத்திரம் பற்றி உலக மக்களுக்கு முதல் முதல் முதலில் சொன்னவர்கள் வேத கால ரிஷிகள்தான். அதர்வண வேதத்தில் இரண்டு பாடல்கள் இருக்கின்றன. அதில் ஒரு பாடலில் பிளாக் ஹோல் BLACK HOLES எனப்படும் கருந்துளைகள் பற்றிய விஷயமும் உளது . அது வெள்ளைக்காரர்களுக்கு என்னெவென்று 100 ஆண்டுகளுக்கு முன் தெரியாததால் ‘அடையாளம் காண முடியாத ஒரு நட்சத்திரம்’ என்று அடிக்குறிப்பு எழுதிவிட்டார் RALPH TH GRIFFITH கிரிப்பித்..
முதலில் சிரியஸ் நட்சத்திரம் பற்றிய அதிசயச் செய்திகளைக் காண்போம்.

இது 8-5 ஒளி ஆண்டுகள் LIGHT YEARS தொலைவில் உள்ளது (பாரதியார் இதை 3 ஒளி ஆண்டு என்று எழுதியுள்ளார்). ஒளி என்பது ஒரு வினாடிக்கு 1,86,000 மைல் வேகத்தில் செல்லும். பிரபஞ்சத்தில் இதைவிட வேகமான பொருள் இல்லை என்பது விஞ்ஞானிகளின் கூற்று. (நான் மனோ வேகம் அதைவிட விரைவானது என்று எழுதியுள்ளேன்) ; சிரியஸ் விண்மீன்தான் வானத்தில் மிகவும் பிரகாசமான நட்சத்திரம். யாரும் இதைப் பார்க்காமல் இருக்க முடியாது.

வானத்தில் அதிகமாக ஒளிவிடும் கிரகம் வீனஸ் VENUS எனப்படும் வெள்ளி. இதைக் காலையிலும், வருடத்தில் சில மாதங்களுக்கு மாலையிலும் தொடுவவா னத்தில் காணலாம். இது மினுமினுக்காது NOT TWINKLING . இதைவிடப் பிரகாசமானது சிரியஸ் . இது மினுமினுக்கும் TWINKLING. இதுதான் நட்சத்திரத்துக்கும் கிரகத்துக்கும் உள்ள வேறுபாடு!

இன்று நாம் சிரியஸைப் பார்த்தோமானால் அதன் பழைய ஒளியை, அதாவது எட்டரை ஆண்டுகளுக்கு முன்னர் புறப்பட்ட ஒளியைத்தான் காண்கிறோம். இன்று அது அழிந்தால்கூட நமக்கு எட்டரை ஆண்டுகளுக்கு ஒளி தெரியும்.

பாரதியார் காலத்தில் இதை பூமிக்கு அண்மையில் உள்ள நட்சத்திரம் என்ற கருத்து இருந்தது. இன்று ஆல்பா செண்டாரை , பீட்டா செண்டாரை என்பதே அருகிலுள்ள நட்சத்திரக் கூட்டம்.

சிரியஸ் பற்றிய ஒரு அதிசயமான விஷயம் அது இரட்டை நக்ஷத்திரம் BINARY STAR SYSTEM. சிரியஸ் ஏ என்னும் நக்ஷத்திரமும் சிரியஸ் பி என்னும் என்னும் நக்ஷத்திரமும் ஒன்றை ஒன்று வலம் வருகின்றன. இதற்கு சுமார் 50 ஆண்டுகள் ஆகும். இதை வேதங்கள் இரண்டு நாய்கள் TWO DOGS என்று குறிப்பிடுவதில் இருந்து அவர்களுக்கு இது இரட்டை விண்மீன் BINARY STARS என்பது தெரிந்தது நமக்குத் புரிகிறது.
BLACK HOLES IN SIRIUS CONSTELLATION
இதுவரை விஞ்ஞானிகள் கண்டுபிடிக்காத வேறொரு விஷயமும் அதர்வண வேத துதியில் உள்ளது.
‘ 3 காலகாஞ்சர்கள்’ அங்கே இருப்பதாகவும் ஓர் ரிஷி பாடுகிறார். இதை இதுவரை எந்த விஞ்ஞானிகளும் கண்டுபிடிக்கவில்லை. எதிர்காலத்தில் பிளாக் ஹோல் எனப்படும் கருந்துளைகள் அங்கேயும் இருப்பதாக வானியல் வல்லுநர்கள் அறிவித்தால் நாங்கள் அன்றே சொன்னோம் என்று இந்துக்கள் மார்தட்டிக்கொள்ளலாம்.
இந்த தகவல் இந்துக்களிடம் இருந்துதான் போயின என்பதற்கும் நமக்கு அருமையான சான்று கிடைத்துவிட்டது.
அதர்வண வேதம் – ஆறாம் காண்டம்- சூக்தம் 253- காலகாஞ்சர்கள்
அதர்வண வேதம் – ஏழாம் காண்டம்- சூக்தம் 320 – யக்ஞம்
லத்தீன் கிரேக்க மொழிகளில் இதை DOG STAR நாய் நக்ஷத்திரம் என்று அழைப்பர். வேதத்தில் இரண்டு இடங்களிலும் இதை சுன , ஸ்வான என்று அழைப்பர். ‘ச’ என்பதை அவர்கள் ‘க’ என்ற எழுத்துடன் குழப்புவர். ஆகையால் அதை கேனிஸ் CANIS என்று உச்சரிக்கின்றனர் (CANIS MAJOR AND CANIS MINOR).

இந்த விஷயங்கள் நான் சொல்வது அல்ல. 100 ஆண்டுகளுக்கு முன்னர் கிரிப்பித் RALPH TH GRIFFITH முதலிய ஐரோப்பியர்கள் சொல்லிவிட்டனர். நாம் புதிதாகச் சொல்லுவது அதிலுள்ள கால காஞ்சர்கள் என்பன பிளாக் ஹோல் BLACKHOLE என்ற செய்தியே . இரட்டை நாய்கள் TWO DOGS என்ற தொடர் வேறு ஒரு சூக்கத்தில் வருகிறது .

முதலில் பாரதி எழுதிய பாடலைப் படியுங்கள் . அதில் அவர் ஒரு காதம் என்பதை பத்து மைல்களுக்கு சற்று குறைவாகக் கணக்கிட்டுள்ளார். அது சரியே .
ஊணர் = யவனர் (சங்கத்தமிழ் இலக்கியத்தில் இது லத்தீன் மொழி பேசிய ரோமானியர்களைக் குறிக்கும். சம்ஸ்க்ருத இலக்கியங்களில் இது கிரேக்க மொழி பேசிய கிரேக்கர்களையும் வடமேற்கு இந்தியாவில் வாழ்ந்த ஜாதியினரையும் குறிக்கும் )

பாடலின் தலைப்பு – திசை
1.“ஒருநொடிப் பொழுதில் ஓர்பத்(து)
ஒன்பதா யிரமாம் காதம்
வருதிறல் உடைத்தாம் சோதிக்
கதிரென வகுப்பர் ஆன்றோர்
கருதவும் அரிய(து) அம்ம!
கதிருடை விரைவும் அஃது
பகுதியி னின்(று)ஓர் எட்டு
நிமிடத்தில் பரவும் இங்கே

2.உண்டொரு வான்மீன் அஃதை
ஊணர்கள் ஸிரியஸ் என்ப
கண்டஅம் மீனின் முன்னை
விரைவொடு கதிர்தான் இந்த
மண்டலத்(து) எய்த மூவாண்(டு)
ஆமென மதிப்ப ராயின்
எண்டரற்(கு) எளிதோ அம்மீன்
எத்தனை தொலைய(து) என்றே

3.கேட்டிரோ நரர்காள், வானில்
கிடைக்கும்எண் ணரிய மீனில்
காட்டிய அதுதான் பூமிக்
கடுகினுக்(கு) அணித்தாம் என்பர்
மீட்டும்ஓ ராண்டு மூவா
யிரத்தினில் விரைந்(து)ஓர் மீனின்
ஓட்டிய கதிர்தான் இங்ஙன்
உற்றிடும் தகைத்தும் உண்டே !”

4.மானுடக் கிருமி கோடி
வருத்தத்தால் பயின்று கண்ட
ஊனுரு கருவி யால்இஃ(து)
உணர்ந்ததென்(று) உணரு வீரால்
தானும்இக் கருவி காணத்
தகாப்பெருந் தொலைய வாகும்
மீனுள கோடி கோடி
மேற்பல கோடி என்பர்

5.அறிவெனும் புள்ளும் எய்த்(து) அங்(கு)
அயர்வோடு மீளும் கண்டீர்
செறியும்இத் திசைதான் எல்லை
இலதெனச் செப்பும் மாற்றம்
பொறி தவிர்ந்(து) உரைத்த லன்றிப்
பொருள் இதென்(று) உளத்தி னுள்ளே
குறிதரக் கொள்ள லாமோ?
கொஞ்சமோ திசையின் வெள்ளம்”.—- பாரதி

இந்தப் பாடலை சேக்கிழார் அடிப்பொடி டாக்டர் டி என் ராமச்ச ந்திரன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். அதையும் காண்க

SIRIUS by Bharatiyar
1.In one moment light travels, the scholars say,
Nineteen thousand Katam; such is its speed;
It is indeed difficult to comprehend it.
The sun’s light reaches us in eight minutes.

2.Westerners speak of a star called Sirius, it is reckoned
That its rays , travelling at the same speed,
takes three years to reach this mantala- the earth
If so, is it easy for thought to fix its distance?

3.Oh men,hear this! This star among innuerable stars
it is said, nearest to the earth- a mere millet
Again there is a star whose rays take
Three thousand light years to reach the earth.

4.Know that the human insects with manifold pains
Devised but defective instruments to discover these (stars).
And there are billions and billions of stars far, far away
Which cannot be spotted through these tools at all.

5.The bird of intellect that soars returns fatigued;
The dictum that the expansive directions are boundless
Exceeds sense-perception; is beyond mind’s comprehension
Endless is indeed the vastitude of the direction.—பாரதி
— Tanslated from Tamil into English by Dr T N Ramachandran
In a footnote TNR adds, The Tamil original appeared in ‘India’ (3-4-1909) magazine. This poem was lost sight of by all the editors of Bharati’s works, so far. It is reproduced for the first tome by the Tamil University
கட்டுரையின் இரண்டாவது பகுதியில் அதர்வண வேத வேத செய்யுட்களில் உள்ளதைக் காண்போம்
XXX


LINKS TO MY OLD ARTICLES

வால் நட்சத்திரம் | Tamil and Vedashttps://tamilandvedas.com › tag › வ…· Translate this page5 Jan 2013 — பூமியை நோக்கி வால் நட்சத்திரம் வருகிறது. Comet Hale Bopp. 2013ஆம் ஆண்டில் பெரிய .


வால் நட்சத்திரம் | Tamil and Vedashttps://tamilandvedas.com › tag › வ…· Translate this page
5 Jan 2013 — ஹாலியின் (Halley’s Comet) வால் நட்சத்திரம் 76 ஆண்டுக்கு ஒரு முறை வரும்.

Tamil and Vedas | Page 129https://tamilandvedas.com › category· Translate this page
9 Jan 2013 — ஹாலியின் (Halley’s Comet) வால் நட்சத்திரம் 76 ஆண்டுக்கு ஒரு முறை வரும்.

Science | Tamil and Vedas | Page 18https://tamilandvedas.com › category· Translate this page
26 Apr 2014 — ஹாலியின் (Halley’s Comet) வால் நட்சத்திரம் 76 ஆண்டுக்கு ஒரு முறை வரும்.

— to be continued

tags- பாரதியார் , பாடல், அதர்வண வேதம் , SIRIUS ,சிரியஸ் நட்சத்திரம்,

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: