WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,723
Date uploaded in London – – 8 MARCH 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சுபாஷிதம்
குவித்த கரங்களில் இருக்கும் மலர்களின் வாசனை!
ச.நாகராஜன்
அஞ்சலிஸ்தானி புஷ்பாணி வாஸயந்தி கரத்வயம் |
அஹோ சுமனஸாம் வ்ருத்திர்வாமதக்ஷிணயோ: சமா ||
குவித்த கரங்களில் இருக்கும் மலர்கள் இரு கைகளுக்கும் வாசனையைத் தருகிறது. நல்ல மனமுள்ளவர்களின் அணுகுமுறையும் மலர்களைப் போலவே இடதுபுறம் வலது புறம் ஆகிய இரு புறங்களிலும் இருப்பவர்களுக்கும் சமமாகவே இருக்கும்.
Flowers in folded hands make both the palms fragrant. The attitude of the good minded (flowers and good people) is indeed the same towards both, the left and the right.
*
அநாஹுதா: ஸ்வயம் யாந்தி ரஸாஸ்வாதவிலோலுபா: |
நிவாரிதா ந கச்சந்தி மக்ஷிகா இவ பிக்ஷுகா: ||
நல்ல ருசியுள்ளவற்றில் பேராசை கொண்ட பிச்சைக்காரர்கள் ஈக்களைப் போலவே அழைக்கப்படாவிட்டாலும் கூட மொய்த்துக் கொண்டிருப்பார்கள், விரட்டினாலும் போக மாட்டார்கள்.
Just like flies, beggars greedy for the taste of the tasty things flock even when they are not invited and do not go away even when they are driven out.
*
ப்ராப்ய சலானதிகாரான் ஷத்ருஷு மித்ரேஷு சாத் வித்வத்ஸு |
நாபக்ருதம் நோபக்ருதம் ந சத்க்ருதம் கிம் க்ருதம் தேன ||
(வரும், போகும் என்ற இயல்புடைய) அதிகாரத்தை ஒருவன் அடையும் போது எதிரிகளை விரட்டி, நண்பர்களை ஆதரித்து, வித்வான்களை கௌரவிக்காவிடில் அவன் அடைவது தான் என்ன?
After having gained authority which is transitory (by nature) if on has not hurt enemies, favoured (his) friends and honoured the learned people, what has he achieved?
*
அஹோ கலபுஜங்கஸ்ய விசித்தோயம் வதக்ரம: |
அன்யஸ்ய தஷதி ஸ்ரோத்ரமன்ய: ப்ராணைர்வியுஜ்யதே ||
கெட்டவனாக இருக்கும் பாம்பைப் போன்ற ஒருவனின் விசித்திரமான கொலைச் செய்கை எப்படி இருக்கிறது? அவன் ஒருவனின் காதைக் கடிப்பான், அடுத்தவனின் உயிரையே எடுப்பான்.
What a strange way of killing of the snake in the form of a wicked person? He bites the ear of one person and another is deprived of life.
*
லோபாவிஷ்டோ நரோ வித்தம் வீ க்ஷதே ந ஸ சாபதம் |
துக்தம் பஷ்யதி மார்ஜாரஸ்ததா ந லகுடாஹதிம் ||
பேராசையுள்ள ஒருவன் செல்வத்தைப் பார்க்கிறான், ஆனால் ஆபத்துக்களைப் பார்ப்பதில்லை. ஒரு பூனையானது பாலைப் பார்க்கிறது, ஆனால் தடி கொண்டு அடிப்பதைப் பார்ப்பதில்லை.
A greedy person looks at wealth, he is not (aware) of perils. A cat looks at the milk but not at the beating with cudgel.
(English Translation by Saroja Bhate)
tags- tags- குவித்த கரங்கள் , மலர்கள்,
rajapaarvaithiruthiru
/ March 8, 2022பணிதல் நன்று.
பணிதலே கரம் குவியச் செய்யும்.
“குவித்த கரங்களில்
மலர்கள் ஏந்துவதும், அர்ப்பணிப்பதும்
‘இரு கைகளுக்கும் வாசனையைத் தருகிறது.’
இது நிதர்சனம்.
இதுபோலவே,
நல் மனமுள்ளோரின் அணுகுமுறை ,பாகுபாடற்று இரு புறமும் – இரு கரங்களிலும் – இருப்பவர்களுக்கும்
எப்பக்கமும் கோடாமல் சமமாகவே இருக்கும் ‘ எனும் உங்களது உகந்த விளக்கம் உளம் மணக்க வைக்கிறது.
மகிழ்வுடன் பாராட்டும் இங்கே.
santhanam nagarajan
/ March 9, 2022நன்றி. லக்ஷக் கணக்கில் இருக்கும் சுபாஷிதங்களின் நறுமணம் உலகையே மணக்கச் செய்யும். அனைவருக்கும் பொதுவானதாகவே இருக்கும். தங்களது தமிழ் நடை மணக்கும் நடை. மீண்டும் நன்றி. வாழ்க வளமுடன் நாகராஜன்