சங்க இலக்கியத்தில் பார்ப்பனர் கோத்திரங்கள் (Post No.10,718)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,718

Date uploaded in London – –    6 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சங்க காலத்திலேயே பல்வேறு கோத்திரங்களைச் சேர்ந்த பிராமணர்கள் தமிழ் நாடு எங்கும் வசித்தது புலவர்களின் பெயர்களிலிருந்து தெரிகிறது. இது தவிர கல்வெட்டுகள், செப்பேடுகளில் நிறைய விஷயங்கள் கிடைக்கின்றன. முதலில் முது பெரும் அறிஞர், வரலாற்று ஆசிரியர் டாக்டர். இரா. நாகசாமி தரும் தகவல்களைத் தருகிறேன் :

புத்தகத்தின் பெயர் – யாவரும் கேளிர் , எழுதியவர் டாக்டர். இரா. நாகசாமி, 1973, வாசகர் வட்டம், சென்னை-17

“அகத்தியர், கவுண்டின்யர் தலைமையில் பிராமணர்கள் வந்தனர். இவர்கள் வேறுகுடிகளோடு வந்தனர்.அசோக மாமன்னன் பவுத்த சமயத்தைப் பரப்புவதற்கு இலங்கைக்கு, ஆட்களை அனுப்பியபோது  இலங்கையில் அந்தணர் இருந்தனர்; அவர்களில் பலரும் பவுத்த மதத்தைத் தழுவினர் என்று அந்நாட்டு நூல்களிலிருந்து அறிகிறோம்.. பிராமணப் பெண்கள் பிராகிருத மொழி பேசினர் .

சங்க காலத்திலேயே பல கோத்திரங்களைச் சேர்ந்த பிராமணர்கள் வசித்ததை சங்க இலக்கியயனங்களிலிருந்து அறிகிறோம்.

கவுண்டின்யர்,

வாதுளர்

கோசிகர்

ஆத்ரேயர்

காசியபர்

ஆகிய கோத்திரங்களைச் சேர்ந்தோர் தமிழ்நாட்டில் வசித்தனர்.

சுமார் கிபி. எட்டாம் நூற்றாண்டில் தமிழகத்திலும் ஆந்திரத்திலும் 32-க்கும் மேற்பட்ட கோத்திரங்களை சேர்ந்தோர் வசித்தது செப்பேடுகளில் இருந்து தெரிகிறது.

அந்த கோத்திரங்கள் பின்வருமாறு:

சாண்டில்ய, ஆவிஷ்ட, கவுண்டின்ய , ஹரித

பாரத்வாஜ, ஆத்ரேய, சாவர்ணி, லோஹித ,

கெளதம , கெளசிக , மெளத்கல ,  வாசிஷ்ட,

தாராயண , வத்ஸ, சாங்கிருத்யாயன , கார்க்க

பராசர, விஷ்ணுவிருத்த, மாஷல , அக்நிவேச்ய ,

காச்யப, ரதீதர , காமக , சாங்கர்ஷ,

கண்வ, மாத்தர , குத்ஸ, சாலவத,

வாதூல பவுரு குத்ஸ, கபி , ஜாதகர்ண

XXX

பாண்டியரின் ஸ்ரீவரமங்கலம் செப்பேடு பார்கவ கோத்திரத்தையும் தளவாய்புரம் செப்பேடு வான கோத்திரத்தையும் குறிக்கின்றன .

XXX

சூத்திரங்கள்

அந்தணர்களின் அன்றாட வாழ்க்கையை  கிருஹ்ய சூத்திரங்கள் என்ற நூல்கள் கட்டுப்படுத்துகின்றன . இவற்றில் பல கோத்திரங்களைச் சேர்ந்தவர்கள் ஒரே சூத்திரத்தைப் பின்பற்றுவது உண்டு.

இச்சூத்திரங்கள், இயற்றிய முனிவரால் பெயர்பெற்றன பல்லவர் காலத்தில்

ஆபஸ்தம்ப,

பிராவசன

வாஜசனேயி

ஹிரண்யகேசி

பவிஷ்ய

சந்தோக

கலாராச்ய

காலார்ச்ச

அக்னிவேச்ய

முதலிய சூத்திரங்களைப் பின்பற்றினோர் இருந்தனர் என்பதை காசாக்குடி, புல்லுர் முதலிய செப்பேடுகளால் அறியலாம்.

ஸ்ரீவரமங்கலம் செப்பேடு ஆச்வலாயன சூத்திரத்தைக் குறிக்கிறது

பாண்டியர் செப்பேட்டில் பெளதாயன கல்பத்தைச் சேர்ந்தவர் குறிக்கப்படுகிறார்.

தமிழகத்தில் ஆபஸ்தம்பம் , போதாயனம் , ஆச்வலாயனம் ஆகிய சூத்திரங்கள் இன்றுவரையிலும் பெருவாரியாகப் பின்பற்றப்படுகின்றன

XXX

நான் கண்ட விஷயங்கள் :–

இனிமேல் நான்கண்ட விஷயங்களைத் தருகிறேன்.

சங்க இலக்கியப் புலவர்கள் தங்கள் பெயர்களுடன் பெருமையாக கோத்திரப் பெயர்களைச் சேர்த்துக் கொள்கின்றனர் . இதோ சில எடுத்துக் காட்டுகள்:-

தொல்காப்பியரும், காப்பியாற்றுக் காப்பியனாரும் கபி என்னும் காவ்ய கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள்

தொல்காப்பியரின் பெயர் த்ருண தூமாக்கினி என்று ‘உச்சிமேற் புலவர்கொள்’ நச்சினார்க்கினியர் செப்புகிறார்.

பாலைக் கெளதமனார் – கெளதம கோத்ரம்

செல்லூர் கோசிகன் கண்ணன் –  கெளசிக

பெருங் கெளசிகனார் , இளம் கெளசிகனார் – கெளசிக

கள்ளில் ஆதிரையனார், தங்கால் ஆத்ரேயன் – ஆத்ரேய

கொடி மங்கலம் வாதுளி நற்சேந்தன் – வாதூல

கார்க்கியார் – கார்க்ய

மதுரை கவுணியன் பூதனார் – கவுண்டின்ய

ஆமூர்க் கோதமன் சஹதேவன் –  கெளதம கோத்ரம்

இவர்களைத் தவிர கபிலர், பரணர், நக்கீரர் முதலிய சுமார் 20 பிராமணப் புலவர்கள் தங்கள் கோத்திரங்களை வெளியிட வில்லை.

நச்சினார்க்கினியர் என்னும் உரை ஆசிரியர் சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். அவர்தான் தமிழில் அதிக உரைகளை நமக்கு எழுதிவைத்தவர். அவர் எழுதிய ஒவ்வொரு உரை முடிவிலும் தன்னை மதுரை பாரத்வாஜ கோத்திரத்தைச் சேர்ந்த  நச்சினார்க்கினியர் எழுதிய உரை என்று பெருமையாக தம்பட்டம் அடிக்கிறார்.

–SUBHAM—

tags- சங்க இலக்கியம், கோத்ரம், சூத்திரம், பட்டியல், பிராமணர், பார்ப்பனர் .

நடுவெழுத்தலங்காரப் பாடல் – 2 (Post No.10,717)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,717
Date uploaded in London – – 6 MARCH 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

தமிழ் என்னும் விந்தை

நடுவெழுத்தலங்காரப் பாடல் – 2
ச.நாகராஜன்

நடுவெழுத்தலங்காரப் பாடல்கள் தமிழில் ஏராளம் குறிப்பிடத்தகுந்த ஒரு பாடலாக சே.ரா.சுப்பிரமணியக் கவிராயர் இயற்றிய ஒரு பாடலைக் கூறலாம்.

இவர் கி.பி.1857ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் பிரபலமான மு.ரா.அருணாசலக் கவிராயர் அவர்களது தம்பி. திருவாவடுதுறை ஆதீனம் இரண்டாவது சந்நிதானமாக இருந்த ஶ்ரீமத் நமசிவாய தேசிக சுவாமிகளிடம் முறையாகக் கல்வி கற்றுத் தேர்ந்தவர். அந்த ஆதீனத்து மகா சந்நிதானமாக இருந்த ஶ்ரீ சுப்பிரமணிய தேசிக சுவாமிகள் காலத்தும் பின்னர் ஶ்ரீமத் அம்பலவாண தேசிக சுவாமிகள் காலத்தும் ஆதீன வித்வானாக இருந்தவர். பல தம்பிரான்களுக்குத் தமிழ் கற்பித்தவர்.

தமிழ்ச் சங்கத்தில் சைவ நூல்களின் பரிசோதராகவும் இவர் இருந்தார். இவரது ஆராய்ச்சியின் மூலமாக புராதன சைவ சாஸ்திர நூல்களான ஞானாமிருதம், வில்லிபாரதம் மற்றும் பல நூல்கள் பல விசேஷக் குறிப்புகளுடன வெள்யிடப்பட்டன.

செப்பறைப் பிள்ளைத் தமிழ், அரிமழப் பிள்ளைத் தமிழ் ஆகிய இரண்டு நூல்களை இவர் இயற்றியுள்ளார்.

இவர் இயற்றிய நடுவெழுத்தலங்காரப் பாடல் இது:-

பாடலத்தின் பெயர்சதய நாளின்பேர் தெற்குப் பகர்பெயர்
நற் புதுமையின் பேர் விரைவென்ப தின் பேர்
நாடியே படித்தலின் பேர் தலைமையின்பே ரிவற்றி
னடுவெழுத்தாம் பதிக்குருவே நவின்றவப் பேர் முன்பின்
கூடுமவை முறையேயக் கைலைவைத்தோ துநர்க்குக்
கொடுத்தேமுப் புரக்குதவிக் குலவடியார்க் ககற்றித்
தேடியுற்றார் தமக்குசெய் யாதுசெய்தப் பொழுதே
சிறப்பருளம் பலவாண தேவவருள் புரியே

பாடலின் பொருள் இது:

பாடலத்தின் பெயர் – பா(தி)ரி
சதயநாளின் பெயர் – வா(ரு)ணி
தெற்கின் பெயர் – அ(வா)சி
புதுமையின் பெயர் – ந(வ)ம்
விரைவின் பெயர் – ச(டு)தி
படித்தலின் பெயர் – ஓ(து)கை
தலைமையின் பெயர் – இ(றை)மை

பாதிரி, வாருணி, அவாசி, நவம், சடுதி, ஓதுகை, இறைமை ஆகிய சொற்களின் நடு எழுத்துக்களை (அடைப்புக்குள் தரப்பட்டவை) ஒன்று சேர்த்த்தால்
வரும் சொல் திருவாவடுதுறை.
திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் அம்பலவாண தேவ, அருள் புரியே என்று முடிகிறது பாடல்.

இதில் இன்னொரு சிறப்பு இருக்கிறது.
திருவாவடுதுறை என்ற சொல் வரக் காரணமாக அமைந்த சொற்களின் முன் எழுத்தும் பின் எழுத்தையும் சேர்த்துப் பார்த்தால் வரும் சொற்கள் இவை:

பாரி – மனைவி
வாணி – கலைமகள்
அசி – அவமதிச் சிரிப்பு
நம் – ஆணவம், மாயை
சதி – வஞ்சனை
ஓகை – மகிழ்ச்சி
இமை – இமைப் பொழுது

ஆக இப்படி ஒரு அருமையான பாடலை நடுவெழுத்து அலங்காரப் பாடலாக அமைத்து இயற்றியுள்ளார் பெரும் புகழ் சே.ரா.சுப்பிரமணியக் கவிராயர்.
இப்படிப்பட்ட அரும் பாடல்கள் கால வெள்ளத்தால் அழியாமல் காப்பது தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவரின் கடமையன்றோ!


tags—-சுப்பிரமணியக் கவிராயர், திருவாவடுதுறை 

WOMEN AS GIFT TO RISHIS ! GOTRAS IN TAMIL SANGAM LITERATURE (Post No.10,716)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,716

Date uploaded in London – –    5 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Who are Rishis?

Rishis are Vedic seers. They see what we don’t see. They have perspective outlook. They see inward. Scientists see outward and do research on what they see. Rishis see inward because they know the body is the microcosm and the universe is macrocosm.

The English word ‘seer’ is the mirror image of RSI; that is , you read the word backward, as you see it in a mirror.

Other examples

Hunter Valmiki can’t say Rama. So he was asked to say mara (mirror image of Rama)

English word Leo is the mirror image of Mythical Hindu animal Yali. Liya= Lion= Leo

Ratha in Sanskrit becomes Ther in Tamil.

Xxx

Seven Rishis known as Sapta Rishis are the progenitors of man kind. They created inner heat called ‘Tapas’ with which they did miracles. The more heat one creates and saves, the more powerful one becomes.

But like all miracle men, God sends temptations to test them. Many succumb to such temptations and lose their energy. Visvamitra is the best example. Each time he accumulated great energy, Indra sent him Menaka or Anger or Ego. He lost his energy in the fight with Vasistha (greedy for the divine cow Kamadhenu) , Trisnaku episode (Ego) and Menaka episode (sexual urge).

But those who do not succumb to such temptations develop ‘Urdhwaretas’ (having the semen drawn upwards), sending sexual energy upward unlike ordinary men. Loss of seed/semen meant loss of power. But yet they don’t waste it. They use it one or two times to get progeny. Kalidasa in his Raghuvamsa beautifully explained the qualities of Raghu Dynasty. One of their qualities is the kings marry women not for sex but for getting sons. This is same with the Rishis. The accumulated energy is used for creating good children. But that also goes wrong if the receiving women are bad. We know what happened when Vyasa was asked to lie down with two women. As genetics shows, a child is the product of genes from husband and wife.

Here are some details about the gift of women received by the Rishis/Saints:

Many kings gave their daughters to Rishis…

King Prasenajit gave Renuka to Jamadagni ;

King Trnabindu gave Ilvalaa to  Pulastya ;

King of Vidharba gave Lopamudra to  Agastya;

King Marutta, son of Karandhama gave his daughter to  Angiras;

King Mitrasaha Saudasa gave Madayanti to Vasistha .

Visvamitra got Madhavi and gave her to his disciple Galava and as a result Astaka was born.

Kuvera gave three Rakshasa wives to Pulastya and their names are Puspotkata, Raakaa and Maalini.

Daksa , son of Brahma, gave women to the following,

27 to Soma, the Moon;

13  to Kasyapa;

10 to Dharma

4 to Aristanemi

2 to  Angiras

2 to Krasava

The Gotra organisation shows their children and grand children and great grandchildren. Brahmins strictly follow Gotras and the Same Gotra (sahotra) marriage is banned in the community.

xxx

Gotras in Sangam Tamil Literature

Most interesting thing about the Gotra/clan organisation is we come across different Gotras among Sangam Tamil poets. If the southern most part of India can relate so many gotras in the Chera, Choza, Pandya territories, we may guess the prevalence of different gotras in other parts.

Following are some Gotras of Brahmin poets in Sangam Tamil Literature:

Dr R Nagaswamy, World famous Tamil historian and Archaeologist , gives the list of Gotras found in Sangam literature and later inscriptions :

Kaundinya

Vatula

Kausika

Atreya

Kasyapa

 According to inscriptions, 32 Gotras lived in South India; they were

Chandilya, Bharadwaja, Gautama, Darayana,

Parasara, Kasyapa, Kanva, Vatula

Avishta, Atreya, Kausika, Vatsa, Vishnuvrdda

Rateetara, Maatra, Paurukutsa, Kaundinya

Saavarni, Mautkala, Sankrudyaayana, Maashala,

Kaamaka, Kutsa, Kapi, Harita, Lohita, Vaasistha,

Gaarga, Agnivesya, Saankarsha, Saalavatha,

Jaatakarna, Bhargava, Vaana

Xxx

Tamil  poets with Gotra names as suffix or prefix:–

Tolkapyan, Grammarian, Kavya Gotra

Kaappiyaatru Kaappiyanaar , Kavya Gotra

Paalai Gauthamanaar (Gautama Gotra)

Sellur Kosikan Kannan (Kausika )

Perum Kausikanar, Ilam Kausiknar (Kausika)

Gargyar (Gaarga )

Madurai Kavuniyan Bhutattanar (Kaundinya)

Tangaal Atreyan ( Atreya Gotra)

Kadimangalam Vaatuli  (Vaatula )

Kallil Aaththiraiayanar (Atreya)

Aamur Gotaman Sahadevan (Gauthama )

Kabilar, Paranar, Maamulan and umpteen others have not declared their Gotras. Perhaps those gotras were well known at that time.

The great commentator Nachinarkiniyar, proudly declared at the end of each commentary, that he belonged to Bhaaradvaja gotra.

–Subham —

 Tags- Women, Gifts, Rishis, Gotras, Sangam literature

திராவிட “அறிஞர்கள் ” எழுதிய நூல்கள் பற்றி எச்சரிக்கை ! (Post No.10,715)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,715

Date uploaded in London – –    5 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

1967 முதல் தமிழ் நாட்டில் திராவிடக் கட்சிகளின் ஆட்சி நடை பெற்று  வருகிறது. அதற்குப் பின்னர் வந்த தமிழ் புஸ்தகங்களில் ஏராளமான திராவிட விஷமங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் நிறைய பாதிக்கப்பட்டவர்  திருவள்ளுவர்தான். நெடுஞ்செழியன் போன்றோர் எழுதிய விளக்கவுரைகளைப் படித்தால் திருவள்ளுவர் தற்கொலை செய்துகொள்வார். தமிழ் பிளாக் BLOGS குகளில் அவர் குறளின் குரல் வளையை நெரிப்போரைக்கண்டால் திருக்குறள் என்பதை நான் எழுதவில்லை என்று சொல்லிவிட்டு ஒடி ஒளிந்து கொள்வார்.

ஒரு நூலுக்குப் பல உரைகள் இருப்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட மரபுதான். காளிதாசரின் சில  நூல்களுக்கும்  மனு ஸ்ம்ருதி போன்ற சட்டப்புஸ்தகங்களுக்கும்  60, 70 உரைகள் கூட உள்ளன. திருக்குறளுக்கு பத்துப் பேர் எழுதிய உரைகளில் நமக்கு 5 கிடைத்து இருக்கின்றன. அவை அனைத்தும் எதிரும் புதிருமாக இராது. ஒன்றுக்கு ஒன்று அனுசரணையாகாவே இருக்கும். அப்படி எதிர் உரைகள் தந்தாலும் மற்றவர் என்ன சொல்கிறார்கள் என்பதைச் சொல்லி நமது கருத்தைச் சொல்லலாம். நான் கூட ‘இந்திரனே சாலுங் கரி’ என்ற குறள் வரிகளுக்கு பரிமேல் அழகர் எழுதிய உரை தவறு என்று காட்டி  பதின்மர் உறையில் ஒருவரும், புத்தரும் இந்திரனின் ஒழுக்கத்தைப்  புகழ்ந்து கூறிய வரி என்று ஆதாரம் காட்டி  நிரூபித்துள்ளேன்.. வேதங்களுக்கு சாயனர் எழுதிய வேத பாஷ்ய உரைகளை சங்கர மடங்கள் ஏற்பதும் இல்லை; புகழ்வதும் இல்லை. ஆனால் சாயனர் மகா மேதாவி என்று ஏற்றுக்கொள்வர்.

சுருங்கச் சொன்னால் உரை பேதங்களை எல்லோரும் வரவேற்றுள்ளனர்.

திராவிட உரைகள், அப்படியல்ல. அது விஷ(ம)ம்! எடுத்துக்காட்டுகள் தருகிறேன். இதன் மூலம் நான் தெரிவிப்பது என்னவென்றால், எந்த தமிழ் நூலின் உரைக்கும் 1965-க்கு முந்தைய நூல்களை நாடுங்கள்.

திருவள்ளுவர், அவ்வையார் பற்றிய பழைய கதைகளை புது நூல்களில் காணமுடியாது. அது தவறு என்று வாதாடுவோரும் பழைய கதைகளைச் சொல்லிவிட்டு, தனது கருத்துக்களை சொல்லலாம். ஏனெனில் அந்தக் கதைகள் பழைய நூல்கள் எல்லாவற்றிலும் உள

xxxx

புலியூயூர் கேசிகன்.

புலியூயூர் கேசிகன். புற  நானூறு உரையைப் படித்தால் எவ்வளவு விஷமம் செய்திருக்கிறார் என்பது விளங்கும். பாரதியார் பாடலில் அவர், துலுக்கன் என்று எழுதிய வரிகளைக்கூட, பொதுமக்களுக்குப் பயந்து, துருக்கன்  என்று சில அறிஞர்கள் மாற்றினாராம்.

இதே போல காஞ்சி பரமாசார்யார் பேசிய உரைகளில் கூட சில விஷயங்களை ரா.கணபதி ‘எடிட் செய்துள்ளார். ஆர் எஸ். எஸ். இ யக்கத்தின் பெருந்தலைவர், மஹா யோகி,  கோல் வால்கர் எழுதிய BUNCH OF THOUGHTS BY M S GOLWALKAR ‘பஞ்ச் ஆப் தாட்ஸ்’ நூல் கூட ‘எடிட்’ செய்து வெளியிடப்படுகிறது. இவ்விரண்டுக்கும் காரணம் சிலர், பழைய விஷயங்களை இடம், பொருள், ஏவல் இல்லாமல் கண்டபடி உபயோகப்படுத்தக்கூடாது என்பதற்காகத்தான்.

ஏசுநாதர் ஆங்கிலத்தில் பேசவில்லை ; அவர் அராமிய மொழியில் கதைத்தார். அதைக் கிரேக்க மொழியில் உருக்குலைத்தனர். அதன் அடிப்படையில் 400 ஆண்டுகளுக்கு முன்னர் ஜேம்ஸ் என்பவர் ஆங்கிலத்தில் தந்தார். அதற்குப் பின்னர் நூற்றுக்கண்ணாக்கான மாற்றங்களுடன் ஒவ்வொரு ஆண்டும் பதிப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. பிரிட்டிஷ் லைப்ரரியில் உள்ள ஒரிஜினல் கிரேக்க மொழி பைபிளை மொழி பெயர்க்க எவருக்கும் துணிவு இல்லை. அப்படி மொழிபெயர்த்தால் 1000 கணக்கில் மாற்றங்கள் வரும் என்பது அதை எட்டிப்பார்த்த, தொட்டுப்பார்க்க, அறிஞர்களுக்கு விளங்கியது.

தொல்காப்பியயத்தில் 2000 பட பேதங்கள் இருந்தன. ஆனால் பெரும்பாலும் பிரதி எடுத்ததில் ஏற்பட்ட எழுத்துப் பிழைகள்தான்; கருத்துப் பிழைகள் அல்ல. ஆகையால் பெரிய சர்ச்சைக்கு இடமில்லை.

மேற்கூறிய எல்லாவற்றில் இருந்தும் வேறுபட்டது திராவிட உரை விஷ(ம)ம்.

XXXXX

இதோ சில எடுத்துக்காட்டுகள்.

‘பார்ப்பார்’ என்ற சொல்லை புறநானூற்றில் குரவர் (குரு ) என்று மாற்றியுள்ளார் புலியூர் கேசிகன். இந்த விஷமத்தை தவறு என்று காட்ட நமக்கு ஆதாரமும் உள்ளது.

இதற்கெல்லாம் மூல காரணம் ‘கழக வெளியீடு’ என்பது அவ்வை துரைசாமிப்பிள்ளை எழுதிய நீண்ட உரையிலிருந்து தெரிகிறது

சங்க இலக்கியத்தின் பழைய நூல்களில் ஒன்று புறநானூறு. ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் காண்போம்.

புறம் பாடல் 34

பாடியவர்- ஆலத்தூர் கிழார்

சோழன் குள முற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர் கிழார் பாடியது

ஆன் முலை அறுத்த அறனிலோர்க்கும்

மாண் இழை மகளிர் கருச் சிதைத்தோர்க்கும்

பார்ப்பார் தப்பிய கொடுமையோர்க்கும் வழுவாய் மருங்கில் கழு வாயும் உள என,

நிலம்புடை பெயர்வதாயினும்  ஒருவன்

செய்தி கொன்றோர்க்கு உய்தி இல் என அறம் பாடின்றே”

 நன்றி கொன்றவருக்கு பரிகாரமே இல்லை. ஆனால் பிரமணர்களையோ, பசுக்களையோ, பெண்களையோ அவமானப்படுத்தியோருக்கு பரிகாரம் உண்டு.

பெண்களின் கருவை சிதைத்தோர்க்கு — என்பது இரண்டாவது வரி. இதில் கரு என்பதும் , சிதை என்பதும் ஸம்ஸ்க்ருதச் சொற்கள்

இந்தப் பாடலில் மூன்றாவது வரியை கவனியுங்கள் ‘பார்ப்பார்’ என்ற சொல்லை குரவர் என்று புலியூர் கேசிகன் மாற்றியுள்ளார். இதை பாரி நிலையம்  1995ல் வெளியிட்டுள்ளது.இது விரிவாக்கிய, புதிய பாதிப்பு என்றும்  உள்ளது.

இது வேறு பதிப்புகளில் இல்லாத ஒன்று. இது உரை வேறுபாடு அல்ல. பார்ப்பன துவேஷத்தால் கலக்கப்பட்ட விஷம்.

குரவர் என்ற சொல்லை சங்க இலக்கிய சொல்லடைவு நூல்களிலும் காணவில்லை.குரவர் என்பதை சரி என்று சொல்வோரும் அது ‘குரு’ என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லின் தமிழ் வடிவமே என்பதை ஒப்புக்கொள்ளவேண்டிவரும். காரணம் – தொல்காப்பியடித்திலோ சங்க இலக்கியத்திலோ ‘குரவர்’ இல்லை.

வர்த்தமானன் பதிப்பக வெளியீட்டில் குரவர் என்று போட்டுவிட்டு உள்ளே உரையில் அந்தணர் என்று எழுதியுள்ளார்  மாணிக்கனார். அவர் அரைகுரையாக ‘காப்பி’ அடித்தது இதில் புலனாகிறது.

1958-ம் ஆண்டு. எஸ்.ராஜம் புறநானூற்றுப் பதிப்பில் ‘பார்ப்பார்’ என்றே உளது

நன்றி கொன்றவருக்கு பரிகாரமே இல்லை. இது வால்மீகி ராமாயண (4-34-12) ஸ்லோகத்தின் கருத்தை ஒட்டி எழுந்தது.

இதற்கெல்லாம் மூல காரணம் கழக வெளியீடு என்பது அவ்வை துரைசாமிப்பிள்ளை எழுதிய நீண்ட உரையிலிருந்து தெரிகிறது. கழக வெளியீட்டின் பல பதிப்புகளில்- குறிப்பாக திருமந்திர உரையில்- பார்ப்பன விரோத கருத்துக்களை நிறையவே காணலாம். அதாவது ‘யானை தன் தலையிலேயே மண்ணை அள்ளி போட்டுக்கொண்ட’ உரைகள்.

மேலும் அவ்வை துரை சாமிப்பிள்ளை, இதே பாடலில் காலை அந்தி, மாலை அந்தி என்று பிராமணர்களின் சந்தியாவந்தனம் பற்றிச் சொல்வதும், ரத்தி , சிதைத்தல் முதலிய ஸம்ஸ்க்ருத  சொற்களை பயன்படுத்துவதும் தமிழ் இலக்கியம் முழுதும் பசுவையும் பிராமணர்களையும் இணைத்தே பாடி இருப்பதையும், 43-ஆவது பாடலில் சோழர்கள் “பார்ப்பார் நோவன செய்யலர்” (சோழர்கள் பிராமணர்களுக்கு எதிராக எதுவும் செய்யமாட்டார்கள் ) என்ற  வரி வருவதையும் எடுத்துக் காட்டுகிறார். இறுதியாக தரும சாத்திர நூல்களில் இந்த மூன்று பாவ செயல்களும் (கோ ஹத்தி, பிரம்மஹத்தி , ப்ரூனுஹத்தி = பசு, பார்ப்பனர், கரு கொலைகள் ) சேர்ந்தே வருவதையும் துரைசாமிப் பிள்ளை காட்டுகிறார்.

சைவ  சித்தாந்த கழகப் பதிப்பு விஷமிகளை சங்க இலக்கிய சொல்லடைவுகள் நிராகரித்தது மகிழ்ச்சிக்குரிய செயல் ஆகும்.

XXX

TAMIL JOKERS

பலரும் தங்கள் பெயர்களை தமிழ்ப்படுத்திக்கொண்டதாக நினைப்பதும் தவறு. சூர்ய நாராயண சாஸ்திரி என்ற மதுரைப் பார்ப்பனர் இதைத் துவக்கிவைத்தார். அவர் துவேஷத்தின்  பெயரில் செய்யாமல் தமிழ் அபிமானத்தில் செய்ததை அவர் எழுத்துக்களில் காணலாம்.100 ஆண்டுகளுக்கு முன்னரே  தமிழை முதலில் செம்மொழி என்று அறிவித்தவர்ம் அவரே

பரிதி மாற் கலைஞர் என்று அவர் பெயரை மாற்றினாலும் அதில் பரிதி, கலைஞர் என்ற சொற்கள் தமிழ் இல்லை என்பது அவருக்குத் தெரியும்.

ஐராவதம் என்பதை வெள்ளை வாரணம் என்று மாற்றினாலும் வாரணம் ஸம்ஸ்க்ருதமே. கருணா நிதியோ முழுக்க ஸம்ஸ்க்ருதப் பெயர். அது போதாதென்று கலைஞர் என்ற ஸம்ஸ்க்ருத்ச் சொல்லையும் சேர்த்துக் கொண்டார். அவர் எழுதிய தொல்காப்பியப் பூங்கா நூல் பற்றி தனியாக எழுதுகிறேன் .

இந்த வரிசையில் பெரிய Joker ஜோக்கர் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளைதான். தமிழ் வாழ்த்து என்று ஒரு பாடலை எழுதி அதில் முழுவதும் ஸம்ஸ்க்ருத்ச் சொற்களைப் போட்டுவிட்டு ’ஆரியம் போல் உலக வழக்கொழிந்து சிதையாவுன்’’என்று தமிழை ப் பாராட்டி எழுதி எழுதி “நான் ஒரு முட்டாளுங்க நல்லா படிச்சவங்க நாலு பே ரு சொன்னாங்க” — என்ற சந்திரபாபு வின் திரைப்படப் பாடலையும் நினைவுபடுத்துகிறார்.

தமிழில் நாடகமே இல்லை என்ற குறையைப் போக்க  ஒரு ஆங்கில நாடகத்தைத் தழுவி மனோன்மணீயம் என்ற நாடகத்தை சுந்தரம் பிள்ளை எழுதினார் . பரணர் பாடலில் உள்ள 80 வரலாற்றுச் செய்திகளை விட்டு விட்டு ஊர் பேர் தெரியாத ஒரு ஆங்கில நாடகத்தை எடுத்துக்கொண்டு அதற்கு ஸம்ஸ்க்ருதப் பெயர் சூட்டி வெளியிட்டார். நல்ல வேளையாக சுவையும் தரமும் இல்லாத அந்த நாடகத்தை ஒருவரும் படிப்பதில்லை.

சம்ஸ்கிருதத்தைக் குறைகூறி சுந்தரம் பிள்ளை எழுதியதை தமிழ்நாடு அரசே நீக்கிவிட்டது. சிதைக்கப்பட்ட தமிழ் மொழி வாழ்த்தை எல்லோரும் பாடிக் கொண்டிருக்கிறார்கள்: ‘’ஆரியம் போல் உலக வழக்கொழிந்து சிதையாவுன்’’ என்ற வரிகளை நீக்கி  பாட்டையே சிதைத்துவிட்டார்கள்.

—- SUBHAM —

tags– திராவிட, அறிஞர் , உரை, புலியூர் கேசிகன், புறநானூறு

நடுவெழுத்தலங்காரப் பாடல் – 1 (Post No.10,714)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,714
Date uploaded in London – – 5 MARCH 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

தமிழ் என்னும் விந்தை
நடுவெழுத்தலங்காரப் பாடல் – 1
ச.நாகராஜன்
தமிழ் என்னும் விந்தையில் சொல்லணிகள் பல உண்டு.

நடு எழுத்து அலங்காரம் என்பது கவிஞர்களின் கவிதா சாமர்த்தியத்தை காட்டுவதோடு, அதை ரஸிப்பவர்களின் புத்திகூர்மையையும் சோதிக்கும் வண்ணம் அமைக்கப்படும் பாடலாகும்.

உதாரணத்திற்கு ஒரு பாடலை இங்கு பார்க்கலாம்:

நெஞ்ச மதிகம் புனமுருக் கத்திர நீடுதெய்வ
வெஞ்ச லிலாப்பசுவோடு விரோத வியல்புபண்ணை
விஞ்சுநெற் போர்நிகழ் வொன்பான் பரியாய மேவிடையின்
நஞ்சிவன் பாக நகுலாம் பிகையம்மை நண்ணிடுமே

யாழ்ப்பாணம் க. மயில்வாகனப் பிள்ளை எழுதிய நகுலேச்சர விநோத விசித்த கவிப் பூங்கொத்து என்னும் நூலில் 55வது பாடலாக
அமைகிறது இப்பாடல்.
நகுலாம்பிகையைத் துதித்துப் பாடும் இப்பாடலில் பல சொற்கள் உள்ளன.
அவற்றின் நடு எழுத்தையோ அல்லது அந்தச் சொல் சுட்டிக் காட்டும் அர்த்தமுடைய ஒரு சொல்லையோ கண்டுபிடித்து எடுத்து,
அதன் நடு எழுத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அனைத்து நடு எழுத்துக்களையும் கோர்த்துச் சொல்லாக அமைத்துப் பார்த்தால் நமக்கு பாடலின் பொருள் எளிதில் விளங்கி விடும்.

மேலே உள்ள பாடலைப் பார்ப்போம்.
1.நெஞ்சம் – இது குறிப்பிடும் சொல் ம(ந)ம் (இது பாடலின் முதல் அடியில் முதல் சொல்லாக வருகிறது)

  1. அதிகம் – இது குறிப்பிடும் சொல் மி(கு)தி (இது பாடலின் முதல் அடியில் இரண்டாவது சொல்லாக வருகிறது)
    3.புனமுருக்கு – இது குறிப்பிடும் சொல் ப(லா)சு (இது பாடலின் முதல் அடியில் மூன்றாவது சொல்லாக வருகிறது)
    4.அத்திரம் – இது குறிப்பிடும் சொல் அ(ம்)பு (இது பாடலின் முதல் அடியில் நான்காவது சொல்லாக வருகிறது)
    5.தெய்வப்பசு – இது குறிப்பிடும் சொல் க(பி)லை (இது பாடலின் முதல் அடியில் ஐந்தாவது சொல்லாக வருகிறது. – நீடு தெய்வ வெஞ்சலிலாப் பசு)
  2. விரோதவியல்பு – இது குறிப்பிடும் சொல் ப(கை)மை (இது பாடலின் இரண்டாம் அடியில் வருகிறது)
  3. பண்ணை – இது குறிப்பிடும் சொல் வ(ய)ல் (இது பாடலின் இரண்டாம் அடியில் வருகிறது)
  4. நெற்போர் – இது குறிப்பிடும் சொல் சு(ம்)மை (இது பாடலின் மூன்றாம் அடியில் வருகிறது)
  5. நிகழ்வு – இது குறிப்பிடும் சொல் அ(மை)தி (இது பாடலின் மூன்றாம் அடியில் வருகிறது)

இந்த சொற்களின் நடு எழுத்துக்களை (அடைப்புக்குள் இருக்கும் எழுத்துக்களை) ஒன்று சேர்த்துப் பார்த்தால் வருவது என்ன சொல்?

நகுலாம்பிகையம்மை!

நடு எழுத்துக்களை ஒன்று சேர்த்தால் ‘நம் சிவன் பாகம் ஆக அமைந்துள்ள நகுலாம்பிகையம்மையை’ அடையலாம்.

எப்படி ஒரு எழுத்து அலங்காரம் பாருங்கள்!

இப்படி ஏராளமான நடு எழுத்து அலங்காரப் பாடல்கள் தமிழில் உள்ளன.

விந்தை மிகு எழில் மொழி தமிழ் என்பது புலனாகிறது அல்லவா!


TAGS– நடு எழுத்து , அலங்காரம் , யாழ்ப்பாணம், மயில்வாகனப் பிள்ளை, நகுலாம்பிகை

KALKI AVATAR IN SRI LANKA? – Part 2(Post No.10,713)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,713

Date uploaded in London – –    4 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

First part of KALKI AVATAR IN SRI LANKA? Was posted here yesterday.

Continued from Sloka 7…..

7.Women will be eating and sleeping before their husbands.

(My Interpretation: Hindu tradition is that menfolk should eat first along with children and then the women should eat. Women will go to bed after her husband and children and wake up before them. After women started working, particularly in computer industry and call centres, it has gone upside down.

Great Tamil poet says,

“Even the clouds will obey and pour out at the bidding of a wife

Who prefers to worship her husband rather than any god”  – Kural 55

This is repeated in two Tamil epics Silappadikaram and Manimekalai verbatim.

‘Husband is God’ is in Manu Smrti and Sangam Tamil literature. Nowadays women ridicule such statements. The wonder is that it (ridiculing) was written at least 100 years ago in this book. At that time no one would have dared to say what the modern Tamil women say openly in meetings.)

xxx

8.Earth will become less fertile. Plants won’t grow properly.

9.People will be afflicted with diseases. Widows will remarry and produce children. Married women will fight with their husbands and live like widows.

(My Views: It has already come true. In Western countries single mothers get enormous financial benefits and so they simply divorce their husbands and live with them as ‘friends’. This puts them in extra advantage. A lot of men will be after that ‘single mother’ and she may marry or not, but gets all favours from such men. Even in India, all big cities have more than 8000 divorce cases each every year. What we see among the film actors today, may become order of the day soon!

The disease factor is an amazing prediction. After the Chinese virus attack in 2020, the world saw millions of deaths. 100 years ago, no one would have taken this sloka  seriously.)

Xxx

10. People with charitable mind will become poor; misers will be praised as big donors. Sinners will live longer and good people will die sooner. Low caste will become rulers and they will be worshipped by high caste people

( My Views- It is happening in many states in India; but it is not new; it has happed 2600 years ago when Nanda Dynasty came to power. Even the Brahmin Chanakya threw the Shudra kings out by making another low caste person as king- Maurya Chandra Gupta.)

xxx

12.In Kaliyuga all will talk about Vedanta without knowing the meaning. Brahmins will be argumentative and will be only ‘namesake Brahmins’.

(My interpretation: It is very true. All Dravidian news papers are using temple matter as a selling factor; 25 years ago no such news item was seen in those newspapers. All run blogs and write whatever they think or fancy without quoting any scripture. I see 100 % correct statement about Brahmins. No one worships Fire like ancient Brahmins. No one study the Vedas. No one follows tradition, but only showing the sacred thread to claim superiority over others. No brahmin does even the basic Tri Kala Sandhya Vandana- Thrice a Day Water Oblation!)

xxx

13.Men will show truth as untruth and lie as truth. They would criticise Vedic customs and wouldn’t follow Niti Sastra.

(My views- This is also true. Look at the judgements passed by our courts; look at the profession of lawyers; we don’t need to elaborate on our constitution. Rejecting Ambedkar’s 25 year stipulation, all the low caste millionaires and billionaire politicians are getting all concessions and reservations; they act against their conscience and justice. No political party is ready to criticise it)

Xxx

14.Fake Gurus will be surrounded by disciples and defraud the public. They would teach high Mantras to Tom Dick and Harry without following them.

(My View:- How true it is! Several Babas are in jails and several others are absconding)

xxx

15.In the Age of Kali, some Babas/Gurus will teach others, but won’t even follow Daily Rituals and will live like Kulinga Birds)

16.Brahmins and other high caste people will consume Meat, Liquor and Drugs.

17.Gurus and their disciples will have no difference in enjoying sex with each other’s women

(My Views: – These evil things are already happening; but slowly coming out. In foreign countries Priest- Disciple SEX is a big problem in Churches. But it may become a problem here soon. We know for sure the first three castes have lost all their traditional customs.)

Xxx

18.People born in good castes become poor and become bad. There wouldn’t be much difference between castes. There wont be any demarcation. There is no boundary line between castes.

19. Men will give birth to animals and animals may give birth to men

(My Views: Author might have meant men with animal behaviour and animal urges. Who knows? Like Wuhan City research in China, some may even create monsters and Frankenstein and Draculas or Dinosaur like men)

20.When Vyasa told all these things to Suthar and through him to other saints, they were all wonderstruck. They requested Vyasa to elaborate on Krta Yuga, the Golden Age.

Sampurnam

–subham–

 tags- Kalki Avatar-2, Sri Lanka, tenth incarnation 

பகவத் கீதையில் சுவையான சொற்கள் – ‘முத்து மாலை’ (Post No.10,712)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,712

Date uploaded in London – –    4 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பகவத் கீதையில் சுவையான சொற்கள் – ‘முத்து மாலை’

பகவத் கீதையின் சொல் நயத்தை ரசித்துப் படித்தால் , கிருஷ்ண பரமாத்மா சொல்லும் கருத்துக்களை நினைவு வைத்துக் கொள்வதும் எளிதாக இருக்கும். கீதையின்(7-7) ஏழாவது அத்யாய  ஏழாவது ஸ்லோகம் சுவையான விஷயத்தை முத்து மாலை உவமையுடன் சொல்கிறது

ஸூத்ரே மணிக³ணா

मत्तः परतरं नान्यत्किञ्चिदस्ति धनञ्जय।
मयि सर्वमिदं प्रोतं सूत्रे मणिगणा इव॥७॥

மத்த: பரதரம் நாந்யத்கிஞ்சித³ஸ்தி த⁴நஞ்ஜய|
மயி ஸர்வமித³ம் ப்ரோதம் ஸூத்ரே மணிக³ணா இவ ||7-7||

த⁴நஞ்ஜய = தனஞ்ஜயா
மத்த: அந்யத் கிஞ்சித் = என்னைக் காட்டிலும் வேறு ஒன்றும்
பரதரம் ந அஸ்தி = உயர்ந்த பொருள் இல்லை
இத³ம் ஸர்வம் = இவ்வையகமெல்லாம்
ஸூத்ரே மணிக³ணா இவ = நூலில் மணிகளைப் போல்
மயி ப்ரோதம் = என் மீது கோக்கப்பட்டது

தனஞ்ஜயா, என்னைக் காட்டிலும் உயர்ந்த பொருள் வேறெதுவுமில்லை. நூலில் மணிகளைப் போல் இவ்வையகமெல்லாம் என் மீது கோக்கப்பட்டது.

ஒரு நூலில் கோர்க்கப்பட்ட முத்துக்களைப் போல (ரத்ன மணிகளைப் போல) இந்த அண்ட சராசரங்கள் அனைத்தும் என்னுள்ளே உள்ளன என்பது பொருள்.

xxxxxx

இதில் பல சுவையான விஷயங்கள் உள்ளன. இது பாஷா (Basha)  எழுதிய நாடகத்திலும் திருக்குறளிலும் உளது. காளி தாசனும் புறநானூற்றுப் புலவனும் இதை ‘தோரண மாலை’ என்னும் உவமையால் விளக்குவார்கள்.

1.முதலில் சூத்ரம்= நூல் என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். இதற்கு தமிழ், சம்ஸ்க்ருத மொழிகள் இரண்டில் மட்டும் ஒரே பொருள்; காரணம் இவை இரண்டும் ஒரே மூலத்தில் பிறந்த மொழிகள். கால்ட்வெல் கும்பல், மாக்ஸ்முல்லர் கும்பல் கதைப்பது போல ஆரிய- திராவிட மொழிக் குடும்பம் வேறு வேறு அல்ல.

சூத்ரம் = புஸ்தகம்  = நூல்

சூத்ரம் =  நூல் = துணி தைக்கும் நூல்

தொல்காப்பியத்தில்  சூத்திரம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல் உளது.

2.இரண்டாவது சுவையான விஷயம் மணி என்பதை வியாக்கியான கர்த்தர்கள் முத்து (Pearl)  என்றோ உருண்டையான மணி (gem beads) என்றோ விளக்கி அதை நூலில் கோர்த்த மாலை என்கின்றனர். 2300 ஆண்டு பழமையான புத்தமத சிற்பங்களிலும் (Barhut, Sanchi, Saranath, Amaravati) அதைக் காண்கிறோம். அதாவது பூமி முதலிய கிரகங்கள் உருண்டையானவை. (Globe) கோள வடிவில் ஆனவை. இதை குப்தர் கால வராஹ அவதார சிலைகளிலும் காண்கிறோம் . ஆக அந்த சராசரங்கள் கோள வடிவு கொண்டவை என்பதைக் கண்டுபிடித்ததும் நாம்தான்.

Xxx

குறள் 1273

திருக்குறளிலும் முத்து மாலை உவமை இருக்கிறது

“( கோத்த) மணியினுள் விளங்கும் நூலைப் போல் என் காதலியின் அழகினுள் விளங்குவதான குறிப்பு ஒன்று இருக்கின்றது.”

மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன்று உண்டு– குறள் 1273

பொருள்
மணியாரத்திற்குள் மறைந்திருக்கும் நூலைப்போல இந்த மடந்தையின் அழகுக்குள்ளே என்னை மயக்கும் குறிப்பு ஒன்று உளது.

Xxx

1500 ஆண்டுகளுக்கு முன்னர் வராஹமிஹிரர் என்னும் வானசாஸ்திரி, ஜோதிட நிபுணர் எழுதிய இரண்டு நூல்களில் ஒன்றான பிருஹத் சம்ஹிதையில் (13-1-6) சப்தரிஷி மண்டல நட்சத்திரக் கூட்டத்தை  முத்து மாலை என்றும் தாமரை மாலை என்றும் வருணிக்கிறார்.

அவருக்கு 700 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய பாஷாவும் (ஸ்வப்ன வாசவ தத்தம் 4-2) , அவரை ஒட்டி வந்த காளிதாஸ மஹா கவியும் இதே போல பற வைக் கூட்டத்தை தோரண மாலை, முத்து மாலை என்று வருணிக்கின்றனர். அதை சங்க காலப் புலவர்களும் அப்படியே எழுதியுள்ளனர் (பறவைகள் குடியேற்றம் பற்றிய கட்டுரையில் முன்னரே கொடுத்துள்ளேன் )

இவர்கள் எல்லோருக்கும் ஊற்றுணர்ச்சி கொடுத்தது பகவத் கீதை ஸ்லோகமே.

இமயம் முதல் குமரி வரை ஒரே சிந்தனை என்பதற்கு பாஷா 2200 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய நாடகங்களை எடுத்துக் காட்டலாம். சம்ஸ்க்ருத மொழியில் தோன்றிய முதல் நாடகங்கள் இவை. பாஷா எழுதிய ஸ்வப்ன வாசவ தத்தம் என்னும் அவருடைய நாடகம்,  காளிதாசனின் சாகுந்தலத்துக்கு இணையானது.

Xxx

My Old articles

பறவைகள் குடியேற்றம்

Bird Migration in Kalidasa and Tamil Literature

https://tamilandvedas.com › 2012/02/05 › bird-migratio…

5 Feb 2012 — Bird Migration in Kalidasa and Tamil Literature … Migration of birds is one of nature’s mysteries and wonders. Birds migrate to warmer places …


Bird Migration in Kalidasa and Tamil Literature – South Indian …

http://www.sisnambalava.org.uk › articles › others › bir…

8 Aug 2012 — Migration of birds is one of nature’s mysteries and wonders. Birds migrate to warmer places from cold countries for food and breeding.

ஒத்து | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ஒ…

·

28 Sept 2020 — tamilandvedas.com, swamiindology.blogspot.com … பகவத் கீதை யில் கண்ணனும் ‘ சூத்ர மணி கணா‘ இவ (7-7 ) …


pearl | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › pearl

·

4 Jan 2017 — … சர்வமிதம் ப்ரோதம் ஸூத்ரே மணிகணா இவ … சம்ஸ்கிருதத்தில் உள்ள சூத்ரம் என்ற …

Kalidasa’s references of swan, cranes and Himalayan geese: Mega. 11,23, 59, 70,81.

Vikra. IV 2,3,4,6,20;31,32,33,3441,54

BIRD MIGRATION :Vikra IV 14 to 17

Kumara. 1-30 (Hamsa mala)

Ragu. IV 19,VIII 59, XIII-33, XVI 33, 56, XVII-75

Malavika.II-2

Rv 1-41

–SUBHAM–

TAGS— பகவத் கீதை, சுவையான சொற்கள் ,முத்து மாலை

வேதங்களின் மஹிமை : ஶ்ரீ சத்யசாயி பாபா அருளுரை! (Post.10,711)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,711
Date uploaded in London – – 4 MARCH 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

வேதங்களின் மஹிமை : ஶ்ரீ சத்யசாயி பாபா அருளுரை!
ச.நாகராஜன்
வேதங்களின் மஹிமை பற்றி ஶ்ரீ சத்யசாயி பாபா 3-10-1989 அன்று பிரசாந்தி நிலையத்தில் ஒரு விளக்கவுரையை நிகழ்த்தினார்.
அதன் மொத்த சாரம் வேதங்களை அலட்சியப்படுத்தினால் ஆன்மீகச் சீரழிவு ஏற்படும் என்பது தான்!
அவர் உரையின் ஒரு பகுதியைக் கீழே காணலாம்:
வேதங்கள்
வேதங்கள் நான்கு.
ஒவ்வொர் வேதத்திலும் பல சாகைகள் (கிளைகள்) உண்டு. உபசாகைகளும் உண்டு. (உள் கிளைகள்).
ரிக் வேதத்தில் 20 சாகைகளும் 21 உபசாகைகளும் உள்ளன. அவற்றில் இன்று நம்மிடம் இருப்பது மூன்று மட்டுமே.
அதே போல யஜூர் வேதத்தில் 96 சாகைகள் உண்டு. அவற்றில் இன்று நம்மிடம் காலவெள்ளத்தை எதிர்த்து இருப்பது இரண்டு மட்டுமே.
அடுத்து சாம வேதத்தில் 1000 சாகைகள் உண்டு. இன்று நம்மிடம் இருப்பது மூன்று மட்டுமே.
இப்போது நம்மிடம் இருக்கின்றவற்றிலேயே அத்துணை ஆன்மீகச் செல்வம் இருக்கிறது என்றால் வேதம் அனைத்தும் அப்படியே நம்மிடம் இன்று இருந்தால் பாரதீயர்களின் ஆன்மீகப் பாரம்பரியம் எவ்வளவு இருந்திருக்கும்!
வேதங்களை அலட்சியப்படுத்தியதாலேயே பாரதீயர்களின் ஆன்மீக மற்றும் அறிவியல் அறிவு படிப்படியாக குறைந்து விட்டது.

இதன் காரணமாக அவர்களிடையே ஒரு குறுகிய மனப்பான்மை வந்து விட்டது.

பரந்த பார்வை என்பதை கிரகணம் பிடித்து விட்டது.
இன்று வேதங்களின் பால் பற்றும் மதிப்பும் இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. பிராமணர்களிடையே கூட வேதத்தின் மீதுள்ள அக்கறையும் ஆர்வமும் குறைந்து விட்டது.

பிராமணர்கள்

பிராமணர்கள் யார்? பிராமணர் என்றால் மந்திரத்தின் மறு உருவம். பிரம்மத்தைக் குறிக்கும் மந்திரங்களை சீராக ஓதுபவர்களே பிராமணர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.
இன்று பிராமணர்கள் தங்கள் மந்திரத்தை மறந்து விட்டார்கள்.
நவீனக் கல்வி முறை, பணத்தின் மீது கொண்ட பேராசை, குறுகிய மனப்பான்மையுள்ள் விஷயங்களின் மீதான ஆர்வம் ஆகிய இவற்றால் அவர்கள் தங்களது உள்ளார்ந்த தெய்வீகத்தை மறந்து விட்டார்கள்.
அதன் விளைவாக, அமைதியும் பாதுகாப்பும் பலியாகி விட்டன.
வேதம் என்றால் என்ன? ஒரு அர்த்தம் விழிப்புணர்ச்சி என்பதாகும்.
இன்னொரு அர்த்தம் புத்திகூர்மை என்பதாகும். இன்னொரு அர்த்தம் விவேகம் என்பதாகும்.
விவேகத்தை வளர்க்க விரும்புவோர்கள் வேதத்தின் மீது அளவற்ற ஆர்வத்தைக் கொள்ள வேண்டும்.
இன்று புத்திகூர்மை அதிகார பதவிகள் மற்றும் உடைமைகளை பெறவும் வசதிகளையும் சுகங்களையும் பெறவும் மட்டுமே பயன்படுத்தப் படுகிறது. நல்ல குணங்களை வளர்த்து இறைவனை அடையும் நோக்கத்துடன் நல்ல மனிதராக ஆவதில் அது பயன்படுத்தப்படாமல் போய் விட்டது. எல்லா புத்திகூர்மையும் சிறிய நோக்கங்களுக்காகவே துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது.

பரந்து விரிந்த பார்வையைத் தரும் வேதங்கள்

மனித குணாதிசயங்களைக் கொண்டு அதன்படி வாழ்ந்து நல்ல வாழ்க்கையை வாழ்ந்தாலேயே மனிதன் நிஜமான மனிதன் என்று கூறப்படுவான் என்று வேதங்கள் வலியுறுத்துகின்றன.
இன்று வேதங்களை ஓதுபவர்களில் பலரும் அதன் உண்மையான நோக்கத்தை அறிய சிரமப்படுகிறார்கள்.
அவற்றின் உண்மையான அர்த்தத்தை உணர்ந்து அவற்றை அவர்கள் ஓதத் தொடங்கினால் எல்லையற்ற சந்தோஷத்தை அடைவார்கள்.
அப்போது மட்டுமே அவர்கள் வேதங்களின் உள்ளார்ந்த தெய்வீகத்தையும் ஆற்றலையும் அறிவர்.
வேதங்கள் எதெல்லாம் சிறந்தவையோ எதெல்லாம் உன்னதமானவையோ அவற்றைத் தழுவி உலகளாவிய பரந்த பார்வையைக் கொண்டுள்ளவை.
அனைத்திலும் சமத்வம் என்னும் கொள்கையை அவை கற்பிக்கின்றன.
ஏகம் என்ற ஒருமையை அவை பறை சாற்றுகின்றன.
துன்பத்தையும் இன்பத்தையும் ஒன்றாகப் பாவிக்குமாறு அவை கற்பிக்கின்றன.
இன்று மந்திரங்களை ஓதுபவர்கள் அந்த உள்ளார்ந்த அர்த்தத்தை உணர்ந்து கொள்ளவில்லை.
ஒரே ஒரு மந்திரத்தின் அர்த்தத்தை உணர்ந்து கொண்டால் கூட, அதுவே போதும்!
ஒவ்வொரு நாளும் சாந்தி மந்திரம் ஓதப் படுகிறது.
ஓம் சஹனாவவது|
சஹனௌ புனக்து|
சஹவீர்யம் கரவாவஹை|
இது எதைக் குறிக்கிறது?
நாம் அனைவரும் ஒன்றாக இணைவோம்.
நாம் அனைவரும் ஒருவரோடு ஒருவர் ஒருங்கிணைந்த லயத்துடன் இருப்போம்.
என்ன ஒரு பிரமாதமான பரந்த ஒரு பார்வையை இந்த மந்திரம் தருகிறது!

இப்படிப்பட்ட பரந்த மனப்பான்மையைச் சுட்டிக் காட்டும் மந்திரங்கள் கூட குறுகிய உணர்வில் இன்று தவறாகச் சித்தரிக்கப்படுகிறது.
ஆகவே தான் அந்தக் காலத்தில் இருந்த சமத்துவத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட இன்றைய நாளில் நம்மால் காண்பதற்கு முடியவில்லை.
ஏனெனில் மனிதனின் அணுகுமுறைகளும் உணர்வுகளும் மனித அளவிலிருந்து கீழிறங்கி பிளவு சக்திகள் உட்புகுந்து விட்டதால் தான்!

மேற்கூறிய உரையில் பகவான் பாபா இன்னும் அதிக விளக்கங்களைத் தருவதோடு, வேதங்களையும் உபநிடதங்களையும் உள்ளபடி உணர்ந்து கொண்டால் தான் உண்மையான அத்வைதத்தை உணர முடியும் என்கிறார்.
இந்த உரை வேதங்களின் பெருமையை விளக்கும் அற்புதமான ஒரு உரையாகும்.

இதை ஆங்கிலத்தில் படிக்க விரும்புவோர் ‘Sathya Sai Speaks’ தொகுதி 22இல் 29வது அத்தியாயமான ‘Message of the Vedas’ -இல் படித்து மகிழலாம்;
வேதங்கள் வாழி! பாரதம் வாழி வாழி!!


tags- பிராமணர்கள்,சத்யசாயி பாபா, வேதங்கள்,

KALKI AVATAR IN SRI LANKA? – Part 1 (Post No.10,710)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,710

Date uploaded in London – –    3 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

I came across an interesting Tamil book in the library. It is hundred-year-old book titled Kalki Purana. It is a translation of Sanskrit book by one Mr Desikacharya. It is available in the British Library in London.

It entered the library in 1903 according to the entry rubber stamp.

The first 4 pages make interesting reading with 20 Sanskrit slokas saying in bullet points what is going to happen in the Kali Yuga. Even 2020 Chinese Virus (Covid 19) is predicted.

Before going into them, let me summarise the personal details of Lord Kalki, the Tenth Incarnation of Lord Vishnu. He is coming here again to destroy the evil and reestablish the Golden Age on earth.

The fourth and last age is called Kali Yuga (Black Age) and the Golden age is called Krita Yuga.

The book says Lord Vishnu/ Kalki will be born as a son of  Vishnu Yasas and his wife Sumathi . Kalki will be born with four brothers. He will marry one Miss Padmavathy, daughter of Brhadratha of the same island/ Simhala Island.

The most interesting point is that they are all from Simhala Island according to the book. In Hindu geography only two islands are linked with Lion/ Simha. They are Singapore (Simhapuri) and Sri Lanka. The language the majority of Sri Lankans speak today is Simhalese (Sinhalese).

In the beginning of the book, Vishnu promised the good saints that he will destroy evil Kaliyuga and establish Golden Krtayuga.

Xxx

What will happen in the Iron Age called Kaliyuga?

1.30 feet tall humans will become 3 inches tall.

2.People will be selling foods, women will be selling their honour and Brahmins will be selling their Mantras.

(My interpretation:- People will be reduced in size morally by one tenth. More restaurants will be there; housewives will cook less and buy more from restaurants. Brahmins will be money oriented than Mantra oriented)

3.Brahmins will be teaching Vedas to low caste people. Brahmin women will be selling milk and curd/yogurt. Business community will be selling meat.

4.Brahmins, Kshatrias and Vaisyas will be more into sex and eating. Shurdas will become good people with spotless character

(My Views: The meaning is everything will become topsy turvy. Even the government will implement reservation policy in religious schools and low caste people will be taught Vedas and appointed as priests; it has already happened in Tamil Nadu and Kerala.)

5. Women will give birth to children at the age of eight. No rules will be followed for sex.

6.Women will give birth like pigs. Everyone will be using both hands on their heads because of itching.

(My view:- Teen age pregnancy is already a big issue in Western countries. Probably it will spread to India. Women giving birth to lot of children is very common in Muslim countries. In Somalia 12 to 16 children in a family is very common. When the Muslim population crosses 50 % on earth, there will be more problems- the phrase used is ‘Itching on head which require both hands’.)

To be continued……………….

TAGS- Kalki, Tenth, Avatar, Kalki Purana, Simhala island, Sri Lanka

பிள்ளை (Fils-Son- Pillai) தமிழ் சொல் இல்லை? (Post No.10,709)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,709

Date uploaded in London – –    3 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

(FOR PICTURES GO TO MY OTHER BLOG swamiindology.blogspot.com)

பிரெஞ்சு மொழியில் எப்படி பிள்ளை Fils (Filius in Latin) வந்தது ? என்பதே என் கேள்வி

பிள்ளை என்றால் பொதுவாக மகன் என்ற பொருளில் இன்று பயன்படுத்துகிறோம். ஆயினும் பிள்ளை எதனுடைய குட்டியாகவோ, குஞ்சாகவோ இருக்க முடியும். மேலும் இது ஆண் , பெண் இரண்டுக்கும் பயன்படும்

ஆண்  பிள்ளை, பெண் பிள்ளை, அணில் பிள்ளை etc.

1935 ஆம் ஆண்டு ஆனந்த விகடன் அகராதி தரும் பொருள்-

அணில், அன்றிற்  குஞ்சு, இளமையோன், கரிக்குருவி, காகம், கிளி, கீரி தெங்கு, கமுகு இவற்றின் கன்று, மகன், குட்டி, குழந்தை, இளைஞன், மரப்பாவை , ஒரு பட்டப் பெயர், சாதி, இளமை, சிறுமை என்று அடுக்குகிறது.

இதுதவிர பிள்ளைப்பேறு முதலிய சொற்களும் தொடர்ந்து வருகின்றன.

xxxxxx

ஒரு மனிதன் அல்லது மிருகம் அல்லது பறவை அல்லது தாவரத்தின் இளம் நிலை (Young, Little ones)  என்பது தெளிவாகிறது

பிள்ளை என்பதன் ஸம்ஸ்க்ருத அர்த்தம் ‘புத்ர (Putra in Sanskrit) ’. இது வேத காலம் முதல் வழங்கும் சொல்.

இதன் தமிழ் வடிவம் ‘புதல்வன் (Putra= Puthalva in Tamil)’.

சங்க இலக்கியத்தில் ‘மகன்’ என்று சொல்ல வரும் இடங்களில் புதல்வ – என்ற சொல்லே அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

xxxx

பிள்ளை :– இதோ புள்ளி விவரம்–

தொல்காப்பிய பொருள் அதிகாரத்தில் குறைந்தது 8 இடங்கள்

நற்றிணை – 91, 181, 367, 385,

குறுந்தொகை – 46, 92, 139

அகநானூறு – 193, 257, 290, 297

புற நானூறு- 117, 342, 380, 389

ஐங்குறு நூறு 24, 151, 160

‘பிள்ளை’, வேறு வேறு பொருள்களில் பயன்படுகிறது.

xxx xxxxxxxxxxxx

புதல்வன் (Puthalva in Sangam Literature)  புள்ளி விவரம்:–

தொல்காப்பிய பொருள் அதிகாரத்தில் குறைந்தது 7 இடங்களில் வருகிறது

சங்க இலக்கியத்தில் சுமார் 70 இடங்களில் வருகிறது.

அதாவது பிள்ளை – என்பதைவிட சுமார் 4 மடங்கு சம்ஸ்க்ருத சொல் அதிகம்.

Xxxxx

Fils in French

பிரெஞ்சு மொழியில் F ஈல்ஸ் FILS  என்ற சொல் மகன் என்பதைக் குறிக்கும். இது லத்தீன் (Filius in Latin)  மொழியில் இருந்து வந்தது. லத்தீன் மொழி ஸம்ஸ்க்ருதத்துக்கு மிகவும் நெருக்கமானது. அதாவது ஒரே குடும்பத்தைச் சேர்ந்தது. தமிழ் மொழியோ இதிலிருந்து வேறுபட்ட திராவிடமொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது என்பது  மொழி இயல் வல்லுநர் கூறும் விஷயம். ஆனால் நிறைய தமிழ்ச் சொற்கள் ஆங்கிலத்தில் இருப்பதை பல கட்டுரைகளில் நான் காட்டிவிட்டேன். இந்த ‘பிள்ளை’ PILLAY என்பதும் அது போல ஒன்று என்பது என் வாதம்.

எனது மொழிக் கொள்கை — உலக மொழிகளுக்கு எல்லாம் மூல மொழிகள் தமிழும் ஸம்ஸ்க்ருதமும் என்பதே. எந்த பழைய சொல்லையும் இதன் ஒரு மூலத்துடன் இணைத்து விடலாம். மூலம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கு வேர் (Mula= Root)  என்று பொருள். ஆகவே தமிழும் ஸம்ஸ்க்ருதமுமே வேர் – உலகின் பழைய மொழிகளின் வேர் என்பது எனது துணிபு.

ஒரு சொல்லை மட்டும் நான் இதை எழுதவில்லை. இந்த பிளாக்கில் உள்ள 100க்கும் மேலான என் கட்டுரைகளைப்ப படித்தால் இது தனியானது அல்ல என்பது விளங்கும் . இதோ பிரெஞ்சு மொழியின் மூலம் – அதாவது சொற் பிறப்பியல் (Etymology of Pillai/ Fils/Son)

SON (Pillai in Tamil)

French- Fils ;

Galician – Fillo

Hungarian – Fiu

Italian- Figlio 

Portuguese – Filho

Latin- Filius

Xxxx

Daughter

French- Fille

Latin- Filia

Latin is the older than French and Italain. So linguists say it is derived from Latin

Xxx

My  Etymology

Puthra in Sanskrit = Puthalva in Tamil = Fils in French; Filius in Latin

R=L change is universal.

Where did Latin get it from?

Filius= Priya in Sanskrit meaning; Darling.

xxx

Homo/ Man = Mahan/Son in Tamil

Mirror image of Homo is Moho(n)= Mahan in Tamil= Son

If you read it in reverse, it becomes Moho/n

Xxx

Conclusion

Though we use Makan and Pillai for Son in Tamil today, Pillai is a foreign word in Tamil. That is why Pillai is used less than Puthalva in 2000 year old Sangam Tamil Literature.

–subham—

Tags- பிள்ளை, பிரெஞ்சு , புத்ர, புதல்வன், சம்ஸ்க்ருதம், லத்தீன் , தமிழ் சொல்