பகவத் கீதையில் சுவையான சொல்; (சாப்பாட்டு) ராமன் !(Post No.10,841)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,841

Date uploaded in London – –    13 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ராமாயண ராமன் உலகப் புகழ் பெற்றதற்கு காரணம் அவருடைய உத்தம குணங்களே. சொத்துத் தகராறு வந்துவிட்டால் அப்பனும் மகனுமே குத்து, கொலை, கோர்ட், கேஸ் என்று இறங்குவதை உலகம் முழுதும் காண்கிறோம். ஆனால் ராம பிரானோ “காட்டுக்குப் போ, உனக்கு பதவி கிடையாது” என்று சின்னம்மா சொன்னபோது அன்றலர்ந்த செந்தாமரை முகத்துடன் அதை  ஏற்றான் ; இது உன் அப்பா கட்டளை என்று சின்னம்மா கைகேயி சொன்னபோது “தாயே! அப்பா என்ன? நீங்கள் சொன்னாலே நான் அதைச் செய்வேனே ” என்கிறான்.

இராவணன், ஆயுதங்களை இழந்து அவமானப்பட்டு நின்ற போது , நிராயுதபாணிகளைக் கொல்வது க்ஷத்ரிய தர்மம் அன்று, “இன்று போய் நாளை வா” என்று ‘வாய்தா’ கொடுக்கிறார்.

இப்படி எங்கெங்கெல்லாம் நம்மைப் போன்ற மனிதர்கள் தடம் புரளுவோமோ அங்கெங்கெல்லாம் ராமன் என்னும் ரயில் சீராக தண்டவாளத்தில் ஓடுவதை வால்மீகியும் கம் பனும் நமக்கு காட்டியுள்ளனர்.

இவ்வளவு சிறப்பு மிக்க உதாரண புருஷனை ‘சாப்பாட்டு ராமன் ‘, ‘தண்டச் சோத்து தடி ராமன்’ என்ற சொற்றொடர்களில் சேர்த்து ஏன் அவமானப்படுத்துகிறோம் என்று வியந்தேன். பகவத் கீதை சொற்களின் தமிழ் இன்டெக்ஸ் தயாரித்தபோதுதான் இதன் உண்மைப் பொருள் விளங்கியது !

இது ‘ரம்’ என்ற சம்ஸ்க்ருத தாது / வேர்ச் சொல்லில் பிறந்த சொல். நாம் ராமா, ரமா , ரம்யா என்ற பெயர்களை ஆண் , பெண் பெயர்களுடன் இந்தியா முழுதும் காண்கிறோம் . மகிழ்ச்சி உண்டாக்குபவர் அல்லது மகிழ்ச்சியுடன் இருப்பவர் என்று இதற்குப் பொருள். இத்தோடு  சாப்பாடு என்ற சொல்லைச் சேர்த்தால் சாப்பிடுவதில் ஆனந்தம் அடைபவர் என்று பொருள். அதனால்தான்  அதிகம் சாப்பிடுவோரை சாப்பாட்டுராமன் என்று கிண்டல் செய்கிறோம். அப்படிச் சாப்பிட்டுவிட்டு வேலைக்கும் போகாதவர்களை தண்டச் சோற்று தடிராமன் என்றும் ஏசுகிறோம்.

கிருஷ்ண பாரமாத்வே பகவத் கீதையில் இந்த ராம சொல்லை வேறு  பொருளில் பயன்படுத்தியபோதுதான் எனக்கு சாப்பாட்டு ராமன் விஷயம் புரிந்தது. கிருஷ்ணனே ராமனைப் புகழும் (10-31) ஸ்லோகமும் உள்ளது.அங்கு மக்களை எல்லாம் ஆனந்தத்தில் மூழ்கடிக்கும் ராமன் ; அந்தர ராம, இந்திரிய ராம  என்னும் சொற்களில் அந்த இடத்தில் / விஷயத்தில் களிப்படைவோன், ஆனந்தம் அடைவோம் என்னும் பொருள்.

  இதோ சில எடுத்துக்காட்டுகள்

FROM http://www.sangatham.com/bhagavad_gita/

एवं प्रवर्तितं चक्रं नानुवर्तयतीह यः।
अघायुरिन्द्रियारामो मोघं पार्थ स जीवति॥१६॥

ஏவம் ப்ரவர்திதம் சக்ரம் நாநுவர்தயதீஹ ய:|
அகா⁴யுரிந்த்³ரியாராமோ மோக⁴ம் பார்த² ஸ ஜீவதி ||3-16||

பார்த² ய: இஹ = பார்த்தா எவன் இவ்வுலகில்
ஏவம் ப்ரவர்திதம் சக்ரம் = இங்ஙனம் சுழலும் வட்டத்தை
ந அநுவர்தயதி = பின்பற்றி ஒழுகாதவனாக
இந்த்ரியாராம: = புலன்களிலே களிக்கிறானோ
ஸ: அகா⁴யு: = அவன் பாப வாழ்க்கையுடையான்
மோக⁴ம் ஜீவதி = (அவன்) வாழ்க்கை விழலேயாம்

இங்ஙனம் சுழலும் வட்டத்தை இவ்வுலகில் பின்பற்றி ஒழுகாதோன் பாப வாழ்க்கையுடையான்; புலன்களிலே களித்தான்; பார்த்தா, அவன் வாழ்க்கை விழலேயாம்.

XXX

योऽन्तःसुखोऽन्तरारामस्तथान्तर्ज्योतिरेव यः।
स योगी ब्रह्मनिर्वाणं ब्रह्मभूतोऽधिगच्छति॥२४॥

யோऽந்த:ஸுகோ²’ந்தராராமஸ்ததா²ந்தர்ஜ்யோதிரேவ ய:|
ஸ யோகீ³ ப்³ரஹ்மநிர்வாணம் ப்³ரஹ்மபூ⁴தோऽதி⁴க³ச்ச²தி ||5-24||

ய: ஏவ அந்த:ஸுக² = எவன் தனக்குள்ளே இன்பமுடையவனாக
அந்தராராம: = உள்ளே மகிழ்ச்சி காண்பவனாய்
ததா² ய: அந்தர்ஜ்யோதி: = அவ்வாறே உள்ளே ஒளி பெற்றவனாகிய யோகி எவனோ
ஸ: ப்³ரஹ்மபூ⁴த: = அவன் தானே பிரம்மமாய்
ப்³ரஹ்மநிர்வாணம் அதி⁴க³ச்ச²தி = பிரம்ம நிர்வாணமடைகிறான்

தனக்குள்ளே இன்பமுடையவனாய், உள்ளே மகிழ்ச்சி காண்பவனாய், உள்ளே ஒளி பெற்றவனாகிய யோகி, தானே பிரம்மமாய், பிரம்ம நிர்வாணமடைகிறான்.

XXX SUBHAM XXXX

TAGS- பகவத் கீதை ,இந்த்ரியராம , அந்தராராம, சாப்பாட்டு ராமன்

Leave a comment

Leave a comment