பொன் கொண்டு இழைத்த மாட மாளிகை ஸ்ரீ லங்கா (Post.10,970)

MAP OF RAMAYANA LANKA

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,970

Date uploaded in London – –     12 MAY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

இனிமை தரும் இடங்கள் நிறைந்த இலங்கை என்ற தலைப்பில் 10-5-2022 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

பொன் கொண்டு இழைத்த மாட மாளிகை ஸ்ரீ லங்கா

ச.நாகராஜன்

‘எப்படி இருந்த ஆளு இப்படி ஆயிட்டயேப்பா’ என்று வாழ்ந்து கெட்ட மனிதரைப் பார்த்து வருத்தப்படுகிறோம். ‘சூப்பர் கம்பெனியா இப்படி ஆயிடிச்சு’ என்று லாபம் கொழித்த கம்பெனி நஷ்டம் அடைந்த போது ஆச்சரியம் கலந்த வருத்தத்தை வெளிப்படுத்துகிறோம். அதே போல் தான் நாடுகளைப் பற்றி நினைக்கும் போது இன்றைய ஸ்ரீ லங்காவைச் சொல்ல வேண்டி இருக்கிறது.

எப்படி இருந்த இலங்கை இன்று இப்படி ஆகி விட்டதே!

கம்பன் வர்ணித்த இலங்கை இது:

பொன்கொண்டு இழைத்து மணியைக் கொடு பொதித்த

மின் கொண்டு இழித்த வெயிலைக் கொடு சமைத்த

என் கொண்டு இயற்றிய எனத் தெரிகிலாத

வன் கொண்டல் தாவி மதி முட்டுவன மாடம்

அதாவது, “தங்கத்தைக் கொண்டு இழைத்து அதில் ரத்தினங்களைக் கொண்டு வந்து பதித்து வலிய மேகங்களையும் தாண்டி சந்திரனைத் தொடும் மாடங்கள் மின்னலைக் கொண்டு செய்யப்பட்டவையோ அல்லது சூரிய காந்தியைக் கொண்டு செய்யப்பட்டவையோ? எதை வைத்துத் தான் செய்தார்கள் என்று உண்மை அறிய முடியாமல் இருக்கின்றனவே!” என இப்படி கம்பன் இலங்கையை வர்ணிக்கிறான்!

இன்று தங்க மாளிகைகளும் இல்லை; குழல், வீணை, யாழ் ஒலியும் இல்லை; அழுகுரல் தான் கேட்கிறது அங்கு!

உணவுப் பொருள்களுக்கு டிமாண்ட். போக்குவரத்திற்கான உயிர்நாடியாக உள்ள டீஸல் பெட்ரோலுக்குத் தட்டுப்பாடு. இத்யாதி இத்யாதி

இந்திய அரசு அங்கு தமிழர்களுக்கு வீடுகளைக் கட்டித் தருகிறது, ஆயிரக் கணக்கான டன்கள் உணவுப் பொருள்களை அனுப்பி வைக்கிறது, இலங்கையை விட்டு விட மாட்டோம் என்று நாம் சொல்லக் காரணம் என்ன?

வரலாற்றின் ஆரம்ப காலத்திற்குச் செல்ல வேண்டும். சங்க இலக்கியத் தொகுப்பில் ஈழத்து பூதன் தேவனார் என்ற புலவர் இயற்றிய பாடல்கள் உள்ளன. சக்ரவர்த்தி அசோகன் புத்தரின் கொள்கைகளைப் பரப்ப தனது மகனான மகேந்திரனையும் மகள் சங்க மித்ரையையும் இலங்கைக்கு அனுப்பியதை மகாவம்சம் பதிவு செய்திருக்கிறது.

பாண்டிய மன்னர்களும் ஈழத்து மன்னர்களும் பெண் ‘கொடுத்தும் கொண்டும்’ வாழ்ந்ததை வரலாற்று ஏடுகள் குறிப்பிடுகின்றன.

ஆகவே தான் பாரம்பரியத் தொடர்புக்கேற்ப, இலங்கையை ஒரு போதும் நாம் விட்டு விட மாட்டோம் என்று மெய்ப்பிக்கிறோம்.

கால வசத்தால் பொருளாதார நெருக்கடியில் இலங்கை இப்போது சிக்கியிருந்தாலும் அதன் இயற்கை வளங்கள் மாறவில்லை.

திருச்சியிலிருந்து சில நிமிடங்கள் பறந்தாலே போதும் கொழும்பு விமான நிலையத்தை அடைந்து விடலாம்.

ராமேஸ்வரத்திலிருந்து 46 மைல் தூரத்தில் உள்ளது தலை மன்னார். இந்தியப் பகுதியிலிருந்து கப்பலில் செல்வோரும் சில நிமிடங்களில் இலங்கையின் வடக்குக் கோடியைச் சென்றடைந்து விடலாம்.

தங்குவதற்கு ஏராளமான வசதியான ஹோட்டல்கள் இலங்கையில் உண்டு. அமெரிக்க லாஸ்வேகாஸ், சிங்கப்பூர் போன்ற இடங்களில் உள்ள தரம் வாய்ந்த ஹோட்டல்களுக்கு இணையாக அனைத்து வசதிகளும் கொண்ட ஹோட்டல்கள் கால் ஃபேஸ் பகுதியில் உண்டு.

குட்டித் தீவான இலங்கையின் இன்றைய ஜனத்தொகை இரண்டு கோடியே பதினாறு லட்சம். பரப்பளவு 65610 சதுர கிலோமீட்டர். 28 டிகிரி உஷ்ணநிலை.

பார்ப்பதற்கு ஏராளமான இடங்கள் இலங்கையில் உள்ளன.

முதலில் கொழும்பு நகரை வலம் வரலாம்.

கால் ஃபேஸ் கடற்கரை

கொழும்பு நகரையொட்டி உள்ள  கால் ஃபேஸ் கடறகரை மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று. உல்லாசப் பயணமாக வரும் அனைத்துப் பயணிகளும் இந்தக் கடற்கரையில் இளைப்பாறி ஆனந்தமாகப் பொழுது போக்குவதோடு உலகப் பிரசித்தி பெற்ற கால் ஃபேஸ் கிரீன் பார்க்கில் நேரத்தைக் கழிப்பது வழக்கம். இப்பகுதியில் உள்ள புத்தர் ஆலயம், நேஷனல் மியூஸியத்தையும் பார்க்காமல் விட்டு விடக் கூடாது.

கொழும்பில் உள்ள ப்ளானிடோரியமும் பார்க்க வேண்டிய வானக் காட்சிகளைக் காட்டும் ஒரு இடமாகும்.

கண்டி புத்தர் ஆலயம்

இலங்கை எங்கும் பரவி இருக்கும் புத்த ஆலயங்களுக்குள் ஊதுபத்தியை ஏற்றி வழிபடுவது மரபு. ஆலயங்கள் தெய்வீக நறுமணத்துடன் திகழும்.

புத்தரின் புனிதப் பல் இருக்கும் ஆலயம் கண்டியில் அமைந்துள்ளது. அற்புதமான இந்த ஆலயத்தில் ஒரு தங்கப் பேழையில் புத்தரின் புனிதப் பல் 2500 ஆண்டு காலமாக பாதுகாக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டு வருகிறது.

இந்த ஆலயத்தை ஒட்டி இருக்கும் ஏரி இயற்கை வனப்புக் கொண்டது. பௌர்ணமி இரவில் இதில் காணும் பிரதிபிம்பத்தையும், தினசரி சூரியோதயத்தையும் கண்டு மகிழ ஏராளமானோர் இங்கு கூடுகின்றனர்.

அனுராதபுரம்

பழம்பெரும் நகரான அனுராதபுரம் இலங்கையின் பாரம்பரியச் சிறப்பு வாய்ந்த நகரமாகும். யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரிய பண்பாட்டு இடம் இது. இங்குள்ள மகாபோதி மரம் உலகின் மிகப் பழமையான மரம் என்பதோடு தெய்வீக மரமும் கூட என்பது குறிப்பிடத் தகுந்தது. இந்த போதி மரம் இந்தியாவில் உள்ள போதி மரத்தின் ஒரு சிறப்பான கிளையிலிருந்து உருவாகியது என்று வரலாறு கூறுகிறது.

புத்தர் ஞானம் பெற்றது போதி மரத்தின் அடியில் என்பதால் இதன் தெய்வீக மஹிமையை அனைவரும் போற்றி போதி மரத்தை வணங்குகின்றனர் இங்கு.

அனுராதபுரத்தில் உள்ள ஸ்தூபமே உலகின் மிக அதிக உயரமான ஸ்தூபம் என்பதும் ஒரு சுவையான செய்தி.

ஆடம்ஸ் பீக்

இலங்கையின் தெற்கே அமைந்துள்ள ஆடம்ஸ் பீக் அனைவரும் விரும்பிச் செல்லும் ஒரு இடம். இங்கு தான் உலகின் ஆதி மனிதனான ஆதாம் சுவர்க்கத்திற்குப் போகும் முன்னர் தன் காலடியைப் பதித்தான் என நூல்கள் கூறுகின்றன.

இந்தக் காலடிகளை புத்தரின் பாதம் என்றும் கூறுவர்; இது சிவபிரானின் திருப்பாதம் என்றும் கூறுவர். ஆகவே அனைவரும் விரும்பும் இடமாக அமைந்து விட்டது இது.  2200 மீட்டர் உயரமுள்ள இதன் உச்சியை அடைய சாலை வசதி உண்டு.

தமிழ் போற்றும் யாழ்ப்பாணம் (ஜாஃப்னா)

தமிழைப் போற்றி வளர்த்த பெருமை அன்றும் இன்றும் ஈழத்திற்கு உண்டு. ஏராளமான சைவ சமய நூல்களும் தத்துவ நூல்களும் இந்தப் பகுதியில் எழுந்துள்ளன. இந்தப் பகுதியில் உள்ள ஏராளமான கோவில்கள் தனக்கென ஒரு தனிப் பெருமையைக் கொண்டவை.

சில முக்கியமான கோவில்களை மட்டும் இங்கு சுட்டிக் காட்ட முடியும்.

கதிர்காமம்

‘இத மொழி பகரினும் மத மொழி பகரினும் ஏழைக்கு இரங்கும் பெருமாள்’ என்றும் ‘கதிர காம வெற்பிலுறைவோனே, கனக மேரு ஒத்த புயவீரா மதுர வாணி யுற்ற கழலோனே, வழுதி கூன் நிமிர்த்த பெருமாளே’ என்றும் அருணகிரிநாதர் உளமுருகி திருப்புகழ் பாடிப் பரவும் கதிர்காமத்தை அறியாதோர் இருக்க முடியாது. அருணகிரிநாதர் அற்புதமான திருப்புகழ் பாடல்கள் பதிமூன்றை இத்தலத்திற்கு அருளியுள்ளார். திருகோணமலைக்கு அவர் அருளியுள்ள ஒரு பாடல் உள்ளது.

கதிர்காமத்தில் உள்ள முருகன்கோவில் சிறியதானாலும் கீர்த்தியில் பெரியது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபடும் தலம் இது. இங்குள்ள மூல அறைக்குள் யாரும் செல்ல முடியாது. மூல அறைக்குள் விக்ரஹம் எதுவும் கிடையாது. திரை ஒன்று தொங்கவிடப்பட்டிருக்கிறது.

திருகோணமலை

அழகிய இயற்கை துறைமுகமான இதன் பெருமையை கடல் பற்றி ஆய்வு செய்யும் நிபுணர்கள் வியந்து போற்றுகின்றனர்.

இங்குள்ள கோணேஸ்வரர் ஆலயத்திற்கு ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து வணங்கி வழிபடுவது பாரம்பரிய வழக்கமாக அமைந்துள்ளது. இராவணன் தினமும் வழிபட வந்த தலம் இது என்று தலப் பெருமை கூறப்படுகிறது.

திருகோணமலை கடற்கரைப் பகுதிகளில் திமிங்கிலம் மற்றும் டால்பின்களைப் பார்க்க முடியும் என்பதால் ஆர்வமுள்ளோர் இங்கு வந்து அவற்றைப் பார்த்து மகிழ்வது வழக்கம்.

கேதீஸ்வரர் ஆலயம்

திருஞானசம்பந்தராலும் சுந்தரராலும் பாடல் பெற்ற தலம் இலங்கையின் மேற்குப் பகுதியில் உள்ள கேதீஸ்வரம். இறைவன் கேதீஸ்வரர். இறைவி : கௌரியம்மை. இது தலைமன்னார் ரயில் நிலையத்திலிருந்து 5 மைல் தூரத்தில் உள்ளது. நவகிரகங்களுள் கேது பகவான் இங்கு வந்து வழிபட்டதால் இறைவன் திருநாமம் கேதீஸ்வரர் என்றும் ஊர் கேதீஸ்வரம் என்றும் அழைக்கப்படுகிறது.

காடுகளும் தேயிலைத் தோட்டங்களும்

இயற்கையான காட்டுப் பகுதிகளும் அழகிய தேயிலைத் தோட்டங்களும் அமைந்துள்ள நாடு இலங்கை.

அலுவலகப் பணியாக ஒரு வாரம் சென்று வாருங்கள் என அலுவலகம் ஆணை பிறப்பிக்கவே கொழும்பு சென்ற நான் 9 மாதங்கள் பல் வேறு காரணங்களினால் அங்கு வசிக்க நேர்ந்தது.

ஆகவே பல இடங்களையும் சுற்றிப் பார்த்ததோடு அற்புதமான தேயிலைத் தோட்டங்களிலும் உலவ முடிந்தது. நமது மூணாறில் உள்ள தேயிலைத் தோட்டங்களை நினைவு படுத்துபவை இவை.

தேயிலை பறிப்பது, அவற்றை தரம் பிரிப்பது, தேயிலைத் தூள் தயாரிக்கும் தொழிற்சாலை என தேயிலை பற்றிய பல நுட்பமான விஷயங்களை நேரில் பார்த்து அனுபவித்து தெரிந்து கொள்ளலாம். இங்குள்ள தேயிலைத் தூள் சுவை மிக்கது; மணம் மிக்கது. அத்தோடு இலங்கையில் கிடைக்கும் ஏலக்காயின் மணமும் சுவையும் தனி தான்!

எனது பணி முடிந்த சமயம் நண்பர் ஒருவர் தான் காட்டிற்குள் அமைத்திருக்கும் பங்களாவைப் பார்க்க அழைப்பு விடுத்தார். நம்ப முடியாத அதிசயம் – மனித நடமாட்டமே இல்லாத பகுதியில் அவ்வளவு பெரிய பங்களாவை அவர் எப்படி அமைத்தார் என்பது. ஜெனரேட்டர் மூலம் மின் வசதியும் அவர் அமைத்திருந்தது வியக்க வைத்தது.

ஆனால் ஓய்வெடுக்க இப்படி இலங்கையின் வளப்பமான கிராமம் மற்றும் காட்டை ஒட்டிய பகுதிகளுக்கு வருபவர் எண்ணிக்கை இப்போது அதிகம் என்பதை இலங்கையைப் பற்றி நன்கு அறிந்த பின்னர் புரிந்து கொள்ள முடிந்தது.

பிரபல எழுத்தாளரான ஆர்தர் க்ளார்க் உள்ளிட்ட

உலக பிரபலங்கள் ஓய்வெடுக்க இலங்கையைத் தேர்ந்தெடுத்தது குறிப்பிடத் தகுந்தது.

யானை சஃபாரி

ஆங்காங்கே உள்ள பகுதிகளில் யானை சஃபாரி உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம்.

நிறைய கடற்கரைகள் இருப்பதால் கடற்கரை சார்ந்த விளையாட்டுக்களையும் விளையாடலாம்.

பல மியூஸியங்கள் இருப்பதால் வரலாறு சார்ந்த பல விஷயங்களை அருங்காட்சியகச் சேகரிப்புகள் மூலம் பார்த்து மகிழலாம்.

நவமணிகளின் நாடு

பழைய காலத்தில் ரத்ன த்வீபம் என்று அழைக்கப்பட்ட இலங்கை தரம் வாய்ந்ரத நவமணிகளை அளிக்கும் இடம். அதுமட்டுமல்ல 200க்கும் மேற்பட்ட உபரத்தினங்களும் இங்கு கிடைக்கின்றன. இங்கு கிடைக்கும் அலெக்ஸாண்டரைட் உட்பட்ட பல உபரத்தினங்கள் உலகத் தரம் வாய்ந்தவை. மகளிருக்கான மாலைகள், நெக்லஸ் உள்ளிட்டவைகளை இங்கு கடைகளில் வாங்கலாம்.

அது மட்டுமல்ல கொழும்பு மாநகரில் உள்ள கடைகளில் வாங்க வேண்டிய பொருள்கள் ஏராளமாகக் கிடைக்கும் என்பதால் இங்கு வருகை தரும் பயணிகள் ஷாப்பிங் செய்யத் தவறுவதில்லை.

டக் டக் சவாரி

இலங்கையில் ஒரு அதிசய சவாரி டக் டக் சவாரி. ஆட்டோபோல உள்ள டக் டக் வண்டிகளில் முதலில் கறாராக தொகையைப் பேசி விட்டு, செல்ல வேண்டிய இடம் எங்கும் செல்லலாம். ஊரைச் சுற்றிப் பார்க்க வேண்டுமானாலும் டக் டக் டிரைவர்கள் தங்களது ரேட்டைச் சொல்லி விட்டு அழைத்துச் செல்வார்கள். சில சமயம் டக் டக்கை பயணிகளே ஓட்டவும் அதன் டிரைவர்கள் அனுமதிப்பதுண்டு.

எழுத்தறிவுள்ள, படித்தவர்கள் அதிகம் உள்ள நாடு என்ற பெருமை வாய்ந்த இந்த நாடு சிங்களம் மற்றும் தமிழ் மொழியை அதிகார பூர்வமான பயன்பாட்டு மொழிகளாகக் கொண்டுள்ளது.

இலங்கையில் அதிக காலம் தங்க திட்டம் தீட்டுவோர் யலா நேஷனல் பார்க் (இங்கு 123 மிருக வகைகள், 227 பறவை இனங்கள் உள்ளன), க்ளென் நீர்வீழ்ச்சி, சிகிரியா கோட்டை, யானைகளின் சரணாலயம் உள்ளிட்ட ஏராளமான இடங்களைப் பார்க்க முடியும்.

ராமாயண டூர்

ராமாயண டூர் ஒன்றை மேற்கொண்டால் நுவரெலியாவில் உள்ள சீதையம்மன் ஆலயம், ஹனுமானின் பாதச் சுவடுகள் உள்ள இடம், என்பதில் ஆரம்பித்து ராவணன் வெட்டு என்று ராவணன் வாளால் மலையை வெட்டிய இடம் உள்ளிட்ட இராமாயண சம்பந்தமான இடங்களைப் பார்க்க முடியும்.

ஒரு வரியில் இலங்கையை வர்ணிக்க முடியுமா? காலம் காலமாகச் சொல்லி வரும் வரி என்ன தெரியுமா:

‘இந்து மாகடலின் முத்து இலங்கையே’ என்பது தான்!

இலங்கை தன் பழம் பெரும் வளத்தை மீண்டும் பெற இந்தியர்கள் வாழ்த்துவதிலும் உதவுவதிலும் வியப்பே இல்லை!

***

தமிழர்களுக்கு முத்தம் இடத் தெரியாது? பகுதி 2 (Post No.10,969)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,969

Date uploaded in London – –    11 MAY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

முதல் பகுதியில் உத்தமியும் பத்தினியுமான இராவணன் மனைவி  மண்டோதரியைக் கண்டவுடன் அவள்தான் சீதை என்று தவறாக கருதி, அனுமன், அதிக சந்தோஷத்தில் வாலில் முத்தம் கொடுத்துக் கொண்டதை வால் மீகி வருணித்ததைக் கண்டோம்.

பெண்களையே பார்க்காமல் ஆஸ்ரமத்தில் வசித்துவந்த இளம் முனிவர் ரிஷ்ய ஸ்ருங்கரை (கலைக்கோட்டு முனிவன்) நடன அழகிகள், விலைமாதர்கள் வந்து வாயில் முத்தம் கொடுத்ததை அவர் தேவலோக இளைஞர்கள் என்று கருதி அப்படியே அப்பாவிடம் சந்தோஷமாக உரைத்தை மஹாபாரத வனபர்வத்தில் கண்டோம்.

கடல் கதாநாயகன், நதிகள் என்னும் காதலிகளுக்கு ஒரே நேரத்தில் பூமியின் பலவேறு இடங்களில் முத்தம் கொடுப்பதை உலக மஹா கவிஞன் காளிதாசன் ரகு வம்ச காவியத்தில் வருணித்ததையும் கண்டோம்.

இப்படியிருக்கும் நிலையில், தமிழர்கள் மட்டும் மிக அடக்கமாக முத்தத்ததை மறைத்து வைத்து இருப்பதையும் கண்டோம். சங்க காலத் தமிழர்களுக்கு முத்தம் என்றால் முத்து/ pearl என்று அர்த்தம். கிஸ்/kiss அல்ல. உதடு/lips என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லையும் கூட அவர்கள் சங்கத் தமிழின் 30,000 வரிகளில் எழுதவில்லை.

xxx

argument from silence (Latinargumentum ex silentio)

வாத்ஸ்யாயன மகரிஷி எழுதிய காம சூத்திர நூலில் உள்ள  பல விஷயங்களைக் குறிப்பிடும் வள்ளுவன் கூட வாய் முத்தத்தை , காம சூத்திரம் வருணிப்பது போல எழுதாமல் பயந்து ஒதுங்கிவிட்டான். தமிழர்களைப் பொறுத்தவரையில் முத்தம்/kiss வெளியே சொல்லக்கூடாத விஷயம் போலும!!!

ஒரு விஷயம் சொல்லப்படாததால் அது நடக்கவில்லை என்று பொருள் அல்ல.

‘சொல்லாது மவுனமாயிருப்பதை வைத்து வாதாடுதல்’ ‘argument from silence (Latin: argumentum ex silentio’ என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். அதாவது அப்படி வாதாடுவது தவறு. தமிழர்கள் ‘இதயம்’ என்றே சொல்லாததால் அவர்களை இதயமற்றவர் என்று சொல்லாதே; ரிக் வேதத்தில் ‘உப்பு’ பற்றி  சொல்லாததால் அவர்களுக்கு கடல் என்பதே தெரியாது அவர்கள் உப்பில்லாமல் சாப்பிட்ட ‘உப்பிலியப்பன்’கள் என்று எழுதாதே , மெகஸ்தனீஸ் ‘புத்தர்’ பற்றியே கதைக்காததால் அக்காலத்தில் புத்தர் என்றே ஒருவர் இல்லை என்று சொல்லாதே, மார்கோபோலோ சீனா பற்றி எழுதிவிட்டு உலக அதிசயமான நெடுஞ்சசுவர் (Great Wall of China) பற்றி எழுதாததால் அவர் சீனாவுக்கே போகவில்லை என்று எழுதாதே ; இப்படி எழுதுவதை ஆங்கிலத்தில் . argument from silence (Latin: argumentum ex silentio) என்று

சொல்லுவர். ஆகையால் தமிழன் முத்தக் கலைபற்றி எழுதாததை தவறாக எடை போடாதே . உதடுகள் (உஷ்ட்ர =ஸம்ஸ்க்ருதம் ) இல்லாமலா தமிழன் பிறந்தான் ? தாய்மார்கள் குழந்தைகளைக் கொஞ்சி முத்தமிட்டாமலா தமிழர்கள் வளர்த்தார்கள் ? இல்லையே!

XXXX

இதோ சில ‘குமார சம்பவ’ முத்தக் காட்சிகள்

உலக மஹா கவிஞன் காளிதாசன் முத்தங்களை வருணிக்கும் இடம் தேவலோகம். சிவனும் உமையும் கல்யாணம் செய்த பின்னர் முருகன் பிறப்பதற்கு முன்னர், நடந்தவை. தாரகாசுரனைக் கொல்ல வல்ல தேவ சேனாபதியை – திரு முருகனை — அவதரிக்கச் செய்ய – நடந்த செயல் அது.; காமத்தை வென்ற சிவ பெருமான் மனதில் காமத்தை தோற்றுவிக்க மன்மதனை அனுப்புகின்றனர் தேவர்கள் ; சிவன் தனது ஞானக் கண்ணால் மன்மதனை எரிக்கவும் ரதி தேவி அழுது புலம்பினாள். போகட்டும் போ ; மனித இனம் உள்ளவரை உன் புருஷன் அநங்கன் (Bodyless)  ஆக – அங்கம் இல்லாதவனாக – என்றும் (in abstract form) இருப்பான் என்று அருளுகிறார். அதனால்தான் இன்றும் நம் மனதில் உருவம் இல்லாத எண்ணம் (Abstract but not concrete)  ஆக காமம் உலவுகிறது; அதனால்தான் உலக ஜனத்தொகை நிமிடம் தோறும் ஆயிரக்கணக்கில் அதிகரிக்கிறது மன்மதனை (Sexual desire) எவரும் அழிக்க முடியாது.

xxx

Kumara sambhavam sloka 8-8

அவர்கள் முத்தத்தில் உமாதேவி கீழ் உதட்டை சுவைக்க அனுமதியாள் .

சிவனோ முரட்டுப் பிடியில் அவளை வைத்திருந்தான்.

உமாதேவிக்கு வேதனையாக இருந்தாலும், செய்கையில் ஆதரவு காட்டாவிட்டாலும்,

சிவனின் சிந்தை மகிழ்ந்தது 8-8

Xxx

Sloka 8-9

“அவள் வாயை அகற்றினாள் ;

ஆனால் கீழ் உதடு கடிபடவில்லை .

நகத்தால் கீறினாலும் காயம் ஏற்படும் அளவுக்கு இல்லை ;

சிவனது செய்கைகளும் பார்வதியின் மெல் மேனி

தாங்கும் அளவே இருந்தது 8-9

Xxx

8-16

கணவனின் கவர்ச்சியில் சொக்கிப்போனாள்  மனைவி;

மனைவியின்  கவர்ச்சியில் சொக்கிப்போனான் கணவன்.

ஜானுவின் புதல்வியான கங்கா ,

சமுத்திரத்தை நோக்கித்தானே ஓடும் .

அவளுடைய வாய் அமுதம் சிவனுக்குக்

கிடைத்த வரப் பிரசாதம் 8-16

தம் யதா த்ம ஸத்ருசம் வரம் வதூர்

அன்வரஜ்யத வரஸ் த தைவ தாம்

சாகராத் அனபகா ஹி ஜாஹ்னவி

ஸோ அபி தன் முக ரஸை க நிர் வ்ருத்தி ஹி 8-16

Xxx

8-18

லோக மாதா அம்பிகாவின்

பூங் கொடி போன்ற கைகள்

வலியில் துடித்தன ;

கடிபட்டு விடுதலை பெற்ற

அவளுடைய கீழ் உதடு விரைவில் குளிர்ந்தது ;

முக்கோல் தாரியான சிவன் முடிமேல்

உள்ள பிறைச் சந்திரன் போல (குளிர்ந்தது) 8-18

xxxx

8-19

சிவன் முத்தம் இட்டபோது உமை அம்மையின்

கூந்தல் பொடியினால் மூன்றாவது கண் எரிச்சலுற்றது ;

மலர்ந்த தாமரையின் மணம் வீசியது

பார்வதியின் மூச்சுக் காற்றும் கூட  8-19

சும்பனாத் அலக சூரண தூஷிதம்

ஸத்காரோபி நயனம் லலாடஜம்

உத்சவசத் கமல கந்த யே ததெள 

பார்வதி வதன  கந்த வாஹினே 8-19

Xxx

8-90

காதலியின் இதழ் ரசம் அருந்திய

சிவனுக்கு தாகம் தணியாது, அதிகரித்தது ;

இரவும் பகலும் வாழ்க என்று கருதிய தருணத்தே ,

வெளியே பெரும் கூட்டம் தரிசனத்துக்காக

காத்திருப்பதை விஜயா அறிவிக்கவே,

சிவனும் அவ்விடத்தில் இருந்து மறைந்தார்.

ஸ ப்ரியா முகரஸம் திவானிசம்

ஹர்ஷவ்ருத்தி ஜனனம் சிஷே விஷுஹூ

தர்சன ப்ரணியினாம்  அத் ர்ஷ்யதாம்

ஆஜ காம விஜயா நிவேதநாத் 8-90

8-90

XXXX

MY RESEARCH ON MOUTH= MUTHA= KISS= CHUMBANA

தமிழ் மொழியில் இருந்து தோன்றிய தெலுங்கு, மலையாளத்தில் தமிழ் அல்லது ஸம்ஸ்க்ருத்ச் சொல்லே உள்ளன.

ஐரோப்பிய மொழிகளை மொழியியல் அணுகுமுறையில் பார்த்தால், வாய் (Vaai= Baai) என்ற சொல்லை பல மொழிகளில் காணலாம். ‘முத்த’ (M=P) என்ற சொல்லை வேறு சில மொழிகளில் காணலாம். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து :-

மவுத் / வாய் = MOUTH= MUTH/A

முத்த (ஆங்கிலம்)

Albanian          puthje= புதுஜெ = முத்தம் (ப=ம)

Some examples for B=M changes;பத்ர= மத்ர , பனுவல் = மானுவல்

Basque musu=  ச = த  முசு =முத 

Some examples for T=S (ஓசை= ஓதை ; தானை=சேனை ; வித்தை = விச்சை )

Catalan            petó =ப=ம; பெத்த=முத்த

xxx

வாய் என்ற சொல்லின் ஒலியை  பிரெஞ்சு, இத்தாலியன், போர்ச்சுகீசிய மொழிகளில் காணலாம் ;

B=V

baiser/பிரெஞ்சு;      bacio/ இத்தாலியன் ; beijo/ போர்ச்சுகீசியம் ;Beso/ஸ்பானிஷ்

உலகம் முழுதுமுள்ள எந்த மொழிச் சொல்லையும் சம்ஸ்க்ருதம் அல்லது தமிழுடன் தொடர்புபடுத்திவிடலாம். அவ்விரு மொழிகளே உலகம் முழுதும் பண்பாட்டைப் பரப்பிய மொழிகள் என்பது என்னுடைய ஆராய்ச்சிக்களின்  துணிபு

XXX

FROM WEBSITES:–

चुम्बित

adjective

kissedचुम्बित
kissedप्रणिंसित

noun 

  1. चुम्बनम्

verb 

  1. चुम्ब्

–SUBHAM—

Tags-  முத்தம், சும்பன , அனுமன், காளிதாசன், குமார சம்பவம், தமிழர், kissing

“காய்கறி” குறள். (Post No.10,968)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 10,968

Date uploaded in London – –   11 MAY  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஞான மொழிகள் – 69

Kattukutty

*”காய்கறி” குறள்.*

*தக்காளி எப்போதும் உட்கொண்டால் தரணியில் எக்காலும் நோயில்லை காண்.*

*எலுமிச்சை புளித்தாலும் எடுத்ததை உட்கொள்வீர் எலும்புக்கு வலு சேர்க்குமே*

*வெங்காயம் இல்லாச் சாம்பார் எஞ்ஞான்றும் தங்காதே நாவில் ருசி.*

*பொல்லாத பேரையும் நல்லவராக்குமே புடலங்காய் போற்றிச் சுவை.*

*தள்ளாத வயதிலும் உள்ளே தள்ளுவாய் முள்ளங்கி மூன்றினைத்தான்*.

*வெண்டைக்காய் இருக்கையில் சுண்டை எந்நாளும் தொண்டையில் இறங்காது காண்.*

*வள்ளிக் கிழங்குண்ணார் வையத்தில் வாழ்ந்தும் வாழாதார் என்பது வழக்கு*.

*கத்தரி உண்பாரே உண்பார் மற்றெல்லாம் இத்தரையில் பித்தருக்குச் சமமெனக் கொள்.*

*பூசணியைச் சேர்த்தாரே புண்ணியர் பூவுலகில் புகழோடு வாழ்வார் அவர்* .

*காய்கறியைத் தின்னாதார் வாழ்க்கை எப்போதும் நோய் நொடியில் வீழ்ந்து கெடும்.*

*முருங்கைக்காய் ருசித்தாரே ருசித்தார் மற்றோரெல்லாம் வெறுங்கையில் முழம் போடுவர்*

*காரிருளில் கண்தெரிய வேண்டுமெனில் பாரிலுள்ள கரிசலாங் கண்ணியைச் சேர்.*

*இரும்பைப் போல் இதயமது வேண்டுமெனில் கரும்பைப் போய் விரும்பிச் சுவை*

*உரிக்க உரிக்கத் தோல் தான் வெங்காயம் என்றாலும் செரிக்குமோ உரிக்காவிடில்.*

*பறித்தவுடன் உண்ணுவீர் பரங்கியை எப்போதும் பலனது வேண்டுமெனில்*

*பாகற்காய் கசக்கும் என்பதால் சீண்டாதார் சோகத்தில் சேர்ந்து விழும்*.

*வெல்லத்தில் இரும்புண்டு ஆகையினால் சாப்பாட்டில் ஒரு துண்டு சேர்த்துச் சமை*

*வாழ்வதனால் ஆய பயனென்கொல் வாழைக்காய் தாழ்வேயெனவே எண்ணு பவர்.*

*கேரட்டைச் சேர்க்காத சமையல் கிணற்றுக்குள் தேரை வாழ்ந்த கதை*

*பீடுநடை போடுதல் வேண்டுமெனின் தினமும் பீட்ரூட்டை உணவில் சமை*.

*கொத்தவரை பீன்ஸ் முட்டைகோஸ் இவையெல்லாம் சத்தே எனவே சரியாய் உணர்*

*கறிவேப்பிலை மல்லி கடுகு சேராதோர் சொறி பிடித்தோடுவார் காண்.*

*பொன்னிற மேனி வேண்டுமெனில் நீ அந்த பொன்னாங் கண்ணியைச் சேர்*

*கண் இருந்தும் குருடரே காசினியில் காய்கறியை உண்ணாதவர்.*

 xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

tags-  ஞான மொழிகள் – 69, Kattukutty, காய்கறி குறள், 

தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும்.; இருமல் மருந்து சாப்பிட்டா……………………(Post 10,967)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 10,967

Date uploaded in London – –   11 MAY  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஞான மொழிகள் – 68

Kattukutty

(இது முழுக்க கடி ஜோக்ஸ் இதழ். சில நீங்க முன்னாடியே

படிச்சிருக்கலாம். இருந்தாலும்இன்னொரு தடவை ரசியுங்களேன்!!!)

ரயில் ஏறணும்னா பிளாட்பாரத்திற்கு வந்துதான ஆகணும்

இதுதான்டா வாழ்க்கை!!!

பஸ் ஸ்டாப்லே வெயிட் பண்ணினா பஸ் வரும்.

புல் ஸ்டாப் கிட்டே வெயிட் பண்ணினா full வருமா???

—இப்படிக்கு தண்ணி வண்டி குருப்

xxx

என்னதான்பொண்ணுங்க வண்டி ஓட்டினாலும், ஹீரோ

ஹோண்டா ஹீரோயின் ஹோண்டா ஆகாது…..

xxxx

என்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும்

லேடிஸ் பிங்கர் ஜெண்ட்ஸ் பிங்கர் ஆகாது…..

—இப்படிக்கு ஆம்பள-பொம்பள சங்கம்

xxx

பஸ் ஸ்டாப்புல பஸ் நிக்கும்,

ஆட்டோ ஸ்டாண்டுல ஆட்டோ நிக்கும்,

சைக்கிள் ஸ்டாண்டுல சைக்கிள் நிக்கும்,

ஆனா கொசுவர்த்தி ஸ்டாண்டுல கொசு நிக்குமா???

—இரவு முழுவதும் யோசிப்போர் சங்கம்

xxx

இன்ஜினீயரிங் காலேஜ் படிச்சா இன்ஜினீயர் ஆகலாம்

ஆனா பிரஸிடன்ஸி காலேஜுலே படிச்சா பிரஸிடண்ட்

ஆக முடியுமா???

xxxx

ஆட்டோவுக்கு AUTO ன்னு பேர் இருந்தாலும்,

Manual ஆகத்தான் ஓட்டியாகணும்.

xxxx

தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும்.

இருமல் மருந்து சாப்பிட்டா……..இருமல் வராது…….

–படிச்ச முட்டாள்கள் சங்கம்

xxx

செருப்பு இல்லாம நாம நடக்கலாம்,

ஆனா நாம இல்லாம செருப்பு நடக்குமா???

—தீவிரமாக யோசிப்போர் சங்கம்

xxxxx

போலி கடிஜோக்ஸுகளை நம்பாதீர்கள்

எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது!!!

xxxx

இட்லி மாவ வச்சு இட்லி போடலாம்,

சப்பாத்தி மாவ வச்சு சப்பாத்தி போடலாம்,

கடல மாவ வச்சு கடல போட முடியுமா???

—ராவெல்லாம் முழிச்சு கிடந்து யோசிப்போர் சங்கம்

xxxx

உங்க உடம்புல கோடிக்கணக்கான செல்களிருந்தாலும்

ஒரு செல்லுல கூட சிம்கார்டு போட்டு பேச முடியாது.

xxxx

நிக்குற பஸ் முன்னாடி ஓடலாம்,

ஆனா ஓடற பஸ் முன்னாடி நிற்க முடியாது

—–தத்துவ ஞானிகள் சங்கம்

xxx

வண்டியில்லாம டயர் ஓடும்,

ஆனா டயர் இல்லாம வண்டி ஓடுமா???

சைக்கிள்ஓட்டறது சைக்கிளிங்ன்னா

ட்ரெயின் ஓட்றது ட்ரெயினிங்கா???

இல்ல ப்ளேன் ஓடறது ப்ளானிங்கா???

—இப்படிக்கு மல்லாந்து படுத்து யோசிப்போர் சங்கம்

xxxx

TEA / COFFEE – இதுல எது சுகாதாரம் இல்லாதது????

TEA – யில ஒரு ஈ உள்ளது

COFFEE-லே இரண்டு ஈ உள்ளது

xxxx

வாழை மரம் தார் போடும் ஆனா

அந்த தாரை வச்சு ரோடு போட முடியாது

Xxxx

பல்வலின்னு வந்தா பல்ல புடுங்கலாம்

கால் வலின்னு வந்தா கால புடுங்க முடியுமா???

இல்ல தல வலின்னு வந்தா தலையைதான்

புடுங்க முடியுமா???

xxxx

பில்கேட்ஸோட பையனா இருந்தாலும்

கழித்தல் கணக்கு போடும்போது கடன்

வாங்கித்தான் ஆகணும்……

xxxx

கொலுசு போட்டா சத்தம் வரும்

ஆனா

சத்தம் போட்டா கொலுசு வருமா???

xxx

பேக் வீல்ல எவ்வளவு ஸ்பீடா போனாலும்

பிரன்ட் வீல முந்த முடியாது

இது தான்டா ஒலகம்…..

xxxx

T நகர்ல போனா டீ வாங்கலாம்

ஆனா

விருது நகர் போனா விருது வாங்க முடியுமா???

xxxx

என்னதான் பெரிய வீரனா இருந்தாலும்

வெயிலடிச்சா திருப்பி அடிக்க முடியுமா???

xxxx

இள நீர்ல தண்ணி இருக்கு, பூமிலயும் தண்ணி இருக்கு

அதுக்காக

இள நீர்ல போர் போடவும், பூமில ஸ்ட்ரா போட்டு

உறிஞ்சவும் முடியாது!!!

xxxx

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்

சண்டே அன்னைக்கு சண்டை போடமுடியும்,

அதுக்காக

மண்டே அன்னைக்கு மண்டையை போட முடியுமா.???

***

 tags- ஞான மொழிகள் – 68,  கடி ஜோக்ஸ் 

ஹிந்து சாஸ்திரம் : ப்ரதிக்ஞா, ஹேது, திருஷ்டாந்தம்! (Post No.10,966)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,966

Date uploaded in London – –     11 MAY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஹிந்து சாஸ்திரம் : ப்ரதிக்ஞா, ஹேது, திருஷ்டாந்தம்!

ச.நாகராஜன்

குருடர்கள் யானையைப் பார்த்த கதை என்ற ஒரு கதையை அனைவரும் அறிவர். குருடர்கள் தனக்குக் கிடைத்த யானையின் ஒரு பகுதியைத் தொட்டுத் தடவிப் பார்த்து முறம் என்றும் தூண் என்றும் பலவாறாக அனுமானித்தது போல ஹிந்து மத சாஸ்திரத்தையும் முற்றிலும் படிக்காமல், ஆராயாமல் தனக்குக் கிடைத்த அல்லது தனக்குத் தோன்றிய ஒரு பகுதியை மட்டும் படித்து பகுத்தறிவாளர்களும், ஹிந்துமத த்வேஷிகளும் பல கட்டுரைகளையும் ‘நடுநிலை’ உரைகளையும் எழுதி வருகின்றனர்.

இவர்களை யானையைப் பார்த்த குருடர்கள் என்றே சொல்லலாம்.

சிறுவர்களுக்கு ஒரு விஷயத்தைச் சொல்லும் போது அனுபவஸ்தர்களான பெரியவர்கள், ‘இது இப்படி’ என்று சொல்வர்.

பின்னர் அவ்விஷயத்தில் ஒரு நிச்சயம் ஏற்படுவதற்கான அதற்கான ஹேதுவை – ஏதுவை – காண்பிப்பர். ஹேதுவைக் காட்டிய பின்னர் அதற்கான திருஷ்டாந்தத்தையும் சொல்வர்.

ஆக ஹிந்து மதம் எந்த ஒரு விஷயத்தையும் இது இப்படி என்கிற பிரதிக்ஞா, பின்னர் ஹேது, பின்னர் திருஷ்டாந்தம் ஆகிய இந்த மூன்று அடிப்படைகளில் விளக்குகிறது.

நமது ஹிந்து மதத்தில் வேதம் தான் பிரதிக்ஞை.

ஸ்மிருதி, ஸூத்ரங்கள் ஹேது.

இதிஹாஸ புராணங்கள் திருஷ்டாந்தம்.

பிரதிக்ஞா வடிவில் உள்ள வேதம் கர்ம காண்டம், ஞான காண்டம் என இரு பிரிவுகளாக உள்ளன.

கர்ம காண்டத்தில், “இதனைச் செய்; இதனைச் செய்யாதே” என விதிகளும் விலக்குகளும் சொல்லப்பட்டுள்ளன.

ஞான காண்டம், “இது இப்படிப்பட்டது”, “இதனை தியானிப்பாயாக”, “இதனை அறிந்து கொள்” என அறிவு பூர்வமான வாக்கியங்களைக் கொண்டுள்ளதாகும்.

இது வேதாந்தம் என்றும் பரம் பொருளை அடைய வழி வகுக்கும் உபநிஷத் என்றும் சொல்லப்படுகிறது.

வேதமானது ராஜாவின் ஆணை போல அல்லது அரசியல் சட்டம் இடும் ஆணை போல ப்ரதிக்ஞா வாக்கியமாகும்.

அரசன் மக்களை நோக்கி, “இதைச் செய்க” என ஆணையிடுகிறான். அரசன் இல்லாத இந்தக் காலத்தில் அரசியல் சாஸனம் செய்ய வேண்டுவனவற்றையும் செய்யக் கூடாதவற்றையும் சொல்லி மக்களை நல்வழிப் படுத்த உதவுகிறது. ஆனால் இந்த அரசனின் ஆக்ஞையும் அரசியல் சட்ட வழிகாட்டுதல்களும் மனிதனால் செய்யப்பட்டவை. திருத்தங்களுக்கு உட்பட்டவை.

வேதங்களோ எனில் மனிதர்களால் இயற்றப்பட்டவை அல்ல; என்றுமுள்ள நியதிகள். தெய்வீகமானவை.

வித்யாநாதர் உள்ளிட்ட ஆன்றோர் “யாதொன்று இறைக்குச் சமமாகப் ப்ரவர்த்தித்ததும் சப்தத்தைப் ப்ரதானமாகக் கொண்டதுமாகிய வேதத்தினால் அறியப்பட்டு வருகின்றதோ” என்று கூறி வேத மஹிமையைப் போற்றியுள்ளனர்.

இந்த வேதங்களில் உள்ள விஷயங்களுக்கு யுக்தி, திருஷ்டாந்தங்களை ஸ்மிருதி, சூத்ரம், இதிஹாஸம்  ஆகியவற்றைக் கொண்டே உண்மைப் பொருளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

வேதத்தின் பூர்வ பாகமாகிய கர்ம காண்டத்தில் உள்ள ப்ரதிக்ஞைக்கு மன்வாதி ஸ்மிருதி முதலான நூல்களே ஹேது க்ரந்தங்கள் ஆகும்.

ராமாயணம் மற்றும் மஹாபாரதம் ஆகிய இதிஹாஸங்கள் திருஷ்டாந்தகளாகும்.

பகவத் கீதையில் பதிமூன்றாம் அத்தியாயத்தில் பகவான் கிருஷ்ணர்,

கூறுவது இது:

ருஷிபிர்பஹுதா கிதம் சந்தோபிர்விவிதை ப்ருதக் |

ப்ரஹ்மஸூத்ரபதைஸ்சைவ ஹேதுமத்பிர் விநிஸ்சிதை ||

“ரிஷிகளால், க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞர்களின் தத்வமானது பலவிதமாகக் கூறப்பட்டுள்ளது. பலவிதமான வேத பாகங்களால் தனித்தனியாகச் சொல்லப்பட்டுள்ளது. யுக்திகளுடன் கூடியவனவாகிய நிச்சயமான ஞானத்தைத் தரக்கூடிய ப்ரஹ்ம ஸூத்ரங்களாலும் நன்கு விவரிக்கப்பட்டுள்ளது”. (கீதை அத் 13 ஸ்லோகம் 4)

மஹாபாரதம், பாகவதம், யோக வாஸிஷ்டம் முதலிய நூல்கள் ஞான காண்ட விஷயங்களை த்ருஷ்டாந்த வாயிலாகப் போதிக்கின்றன.

உபாஸனா காண்ட அர்த்தங்கள் சிவ ரஹஸ்யம் முதலிய நூல்களிலும் விஷ்ணு புராணம் உள்ளிட்ட நூல்களிலும் சொல்லப்பட்டுள்ளன.

மஹாபாரதத்தில் உள்ள பர்வங்களில் சில கர்ம காண்டத்தை விளக்குபவை; சில பர்வங்கள் ஞான காண்டத்தை விளக்குபவை.

ஆகவே தான் மஹாபாரதம் ஐந்தாம் வேதம் என அனைவராலும் போற்றப்படுகிறது.

வேதத்தில் சொல்லப்பட்டுள்ளவற்றை ஹேதுவாக வந்து ஸ்மரிக்கச் செய்கின்றமையால் ஸ்மிருதி என ஆயிற்று.

ஆகவே வேதம், ஸ்மிருதி, ஸூத்ரங்கள், ராமாயணம், மஹாபாரதம், புராணங்கள் ஆகிய இவற்றையே சாஸ்திரம் எனக் கொள்ள வேண்டும்.

அத்தோடு கர்ம மற்றும் ஞான காண்டங்களை விளக்க வந்துள்ள சிக்ஷை, வியாகரணம், யோகம், ஸாங்கியம், நியாயம் முதலிய மற்ற நூல்களும் சாஸ்திரம் என்ற சொல்லால் வழங்கப்பட்டு வருகின்றன.

இவை அனைத்தையும் கற்றவரே ஹிந்து மதம் கூறும் உண்மைகளை முற்றிலும் அறிந்தவராவர்.

ஏதோ ஒரு நூலின் ஒரு பகுதியை மட்டும் அரைகுறையாகப் படித்து விட்டு வேத மதத்தை – என்றுமுள்ள ஸநாதன தர்மத்தை – விமரிசிக்கக் கூடாது.

அப்படி விமரிசித்தால் அது குருடன் யானையைப் பார்த்த கதையாகவே அமையும்.

இப்படி அனைத்தையும் படிக்க முடியாதவர்கள் வேத வித்துக்களையும், ஆசாரியர்களையும் அணுகி வணங்கி வேண்டிக் கேட்டுக் கொண்டு அவர்களது உபதேச உரைகள் மூலம் இவற்றை உணர முடியும்.

ஒரு நாளைக்குச் சிறிது நேரமாவது ஒதுக்கி இவற்றை முறைப்படி கற்று உணர்வோமாக!

***

Tags-  ஹிந்து சாஸ்திரம்,  ப்ரதிக்ஞா, ஹேது, திருஷ்டாந்தம்,

HIPPOS IN GREEK IS SANSKRIT ‘ASVA’ (Post No.10,965)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,965

Date uploaded in London – –    10 MAY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

The etymology of Hippos/Horse in Greek has strange twists and turns.

Following is the explanation given by linguists. But  It is wrong :-

“before vowels, hipp-, word-forming element meaning “horse,” from Greek hippo-, from hippos “horse,” from PIE root *ekwo- “horse.”

Entries linking to hippo-

*ekwo- 

Proto-Indo-European root meaning “horse.” Perhaps related to *ōku- “swift.”

It forms all or part of: alfalfaEohippusequestrianequineequushippo-hippocampusHippocraticHippocrenehippocrepianhippodromehippogriffHippolytushippopotamusPhilipphilippicPhilippinesXanthippe.

It is the hypothetical source of/evidence for its existence is provided by: Sanskrit açva-, Avestan aspa-, Greek hippos, Latin equus, Old Irish ech, Old Church Slavonic ehu-, Old English eoh, Gothic aihwa- all meaning “horse.”

xxx

MY COMMENTS

The above derivation is wrong.

When linguists say Proto, it means their ‘imagination’, ‘fake construction’; it also means it is ‘not found in any available literature’.

Ekwo is also Proto; that means ‘concocted’, ‘imaginary’, ‘fake invention of western linguists’.

Hippo can be derived from Sanskrit Asva without any difficulty.

We see P=V changes in Tamil, Avestan and Sanskrit; three documented languages ; not Proto!

AsVa = asPa in Avestan

uPama = uVamai in Tamil Tolkappiam, oldest Tamil book according to Tamils

taPas = taVam in Tamil Sangam Literature

Panini also gave examples in Ashtadhyayi

Step 1

PP in Hippo is hiVVos

Xxx

Next Step

H= S (Helios= Surya)

Since S is not in Greek and Persian we got the word Hindu (Sindhu=Hindu)

aSmi= aHmi in Avestan

So

Hippo = SIVVOS

Xxx

Step 3

Addition of A is not uncommon; but here we don’t even need addition of A; S itself changes to A

Rigvedic Sabha becomes Avai in 2000 year old Sangam literature

So  Hippos = Aivvos

Aivvos= Asva/s

xxx

Even if you go for Equs we have IVULI in Tamil for horse.

Coming back to my favourite theory that Sanskrit and Tamil are the two languages that took the culture around the world is proved once again by

Hippos= AiVVos= Asvas

Instead of beating round the bush, we get Asva in straight forward method.

Xxx subham xxx

Tags —    Asva, Hippos, V=P

தமிழனுக்கு முத்தம் கொடுக்கத் தெரியாது ?? (Post.10,964)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,964

Date uploaded in London – –    10 MAY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

சங்கத்தமிழ்  நூல்களில் முத்தம் (கிஸ்) என்ற சொல் இல்லை. அதே  காலத்திலும்  , அதற்கு முந்திய காலத்திலும் ஸம்ஸ்க்ருதத்தில் முத்தக் காட்சிகள் உள்ளன. இந்திய திரைப் படங்களில் முத்தக் காட்சிகளுக்கு தடை விழுந்ததற்கு பரத முனியே காரணம். 2000 ஆண்டுகளுக்கு முன்னர் சம்ஸ்க்ருதத்தில் அவர் எழுதிய பாரத நாட்டிய சாஸ்திர நூலில் முத்தக்காட்சிகள், மரணக் காட்சிகள், கொலை, கற்பழிப்புக் காட்சிகளுக்கு தடை விதித்தார். நாடக மேடைகளில் எவைகளைக் காட்டக்கூடாது என்று அவர் ஒரு பட்டியலே தந்துள்ளார். ஆனால் வாத்ஸ்யாயன மஹரிஷி எழுதிய காம சூத்திர நூலில் முத்தம் கொடுத்தல் (Kissing) பற்றி விரிவான தகவல் உள்ளது.

முத்தம் (கிஸ்) கொஞ்சு, உதடு என்ற சொற்கள் சங்க இலக்கியத்தில் இல்லை உதடு என்பது ஸம்ஸ்க்ருத்ச் சொல் (உஷ்ட்ர = உதடு ; உஷ்ட்ரஹ= ஒட்டகம்/ உதடு பருத்த மிருகம்).

காமத்துப்பால் எழுதிய திருவள்ளுவர் கூட இதை பெரிது படுத்தவில்லை

ஸம்ஸ்க்ருதத்தில் இரண்டு சொற்கள் முத்தம் கொடுப்பதற்குப் பயன்படுகின்றன. சும்பண (CHUMBANA) , க்ரா (GHRAA)

ரிஷ்ய ஸ்ருங்கர் கதை

முத்தம் என்பது பல வகைப்படும். ஒரு தாயார் தன குழந்தையைக் கொஞ்சசும் போது தரும் முத்தம் வேறு; காதலனும் காதலியும் கொடுத்துக்கொள்ளும் முத்தம் வேறு. இரண்டாவது வகை முத்தம் மஹாபாரதத்தில் உள்ளது

உதட்டுடன் உதட்டைச் சேர்க்கும் முத்தம் ரிஷ்ய ஸ்ருங்கர் கதையில் வருகிறது; மஹா பாரத வன பர்வத்தில் வரும் செய்தி இதோ :-

ரிஷ்ய ச்ருங்கர் (கலைக்கோட்டு முனிவன்),  ஆஸ்ரமத்தில் வசித்ததால் பெண்களையே பார்த்தது கிடையாது. அப்பேற்பட்ட தவ சிரேஷ்டரை ஏமாற்றி அழைத்துவர மன்னன், விலைமாதர்களை அனுப்புகிறான். அப்படிப்பட்ட அழகிகளை வாழ்நாளில் பார்த்து அறியாத அம்முனிவன் அவர்களையம் ஆண் என்று நினைத்து கீழ்கணட வசனங்களை மொழிகிறார்:

“அப்பா! அவனை (பெண்ணை) நான் பார்த்தபோது தேவலோகத்தில் இருந்து வந்த புதல்வன் என்றே நினைத்தேன். எனக்கு ரொம்ப சமதோஷம் ஏற்பட்டது. எல்லையில்லாத இன்பம் ஏற்பட்டது.  அவன் என் உடலைக் கட்டிக்கொண்டான். என் ஜடாமுடியைப் பிடித்துக்கொண்டான் ;என் முகத்தைத் தாழ்த்தி அவன் வாயை என் வாயில் வைத்தான். என் வாயுடன் கலந்தபோது ஒரு சப்தம் கொடுத்தான். மிகவும் நன்றாக இருந்தது.”

ஒரு பெண், தனக்கு முத்தம் கொடுத்தது முனிவருக்குத் தெரியவில்லை. தந்தைக்குப் புரிந்துவிட்டது.

மஹாபாரதத்தில் உள்ள இக்கதை மனிதனின் உள்ளத்தைப் படம்பி டித்துக்காட்டுகிறது ; பசி, தாகம் , உறக்கம் என்பன போல செக்ஸ் / காம உணர்வு என்பதும் அடிப்படை உணர்வு என்பதை உலகில் முதலில் கூறிய நூல் மஹாபாரதமே . பாரதியாரும் கூட “சொல்லித் தெரிவது இல்லை மன்மதக் கலை” என்று பாடுகிறார்.

அனுமன் வாலில் முத்தம்

ராமாயணத்தில், அனுமன் சந்தோஷத்தில் தன் வாலில் முத்தம் இட்ட காட்சி வருகிறது.

இரண்டு இதிகாசங்களிலும் முத்தம் இடுதலுக்கு உள்ள ஸம்ஸ்க்ருதச் சொல் ‘க்ரா ராமாயணத்திலும் உதடு முத்தம் வருகிறது சீதையைத் தேடி வந்த அனுமன் ராவணன் அரண்மனையில் ஒவ்வொரு அறையாகப் பார்க்கிறான். கீழ்கண்ட காட்சியை வால்மீகி வருணிக்கிறார் –

அந்தப்புர அழகிகள், ராவணனின் முகத்தில் KISS கிஸ் கொடுப்பதாக நினைத்து சக தோழிகளுக்கே தூக்கக் கலக்கத்தில் முத்தம் கொடுப்பதைக் காண்கிறான்.

அவர்கள் எண்ணம் முழுதும் ராவணன் பற்றியே இருந்ததால் தோழிகளுக்கு தோழிகளே இன்பம் தந்தார்கள்

-வால்மீகி ராமாயணம் 5-7-54/55

வால்மீகி பயன்படுத்திய சொல் -உபாஜிக்ரன் . மற்றோரு ஸம்ஸ்க்ருதச் சொல்லான ‘சும்பண’ (முத்தம்) என்பதை அனுமார் விஷயத்தில் வால்மீகி பயன்படுத்துகிறார்.

சும்பண , க்ரா

அனுமன் , ஓரிடத்தில் இராவணன் மனைவியான மண்டோதரியைக் காண்கிறான்.அழகி; பொன் நிறுத் தோல் கொண்ட உத்தமி;  அவள்தான் சீதை என்று   நினைக்கிறான் அனுமன் . உடனே சந்தோஷத்தில் தன் வாலுக்கே முத்தம் கொடுத்துக் கொள்கிறான்.

இதற்குப் பின்னர் காளிதாசனின் காவியங்கள் வருகின்றன. அவரது காலத்தை ஒட்டி வாழ்ந்த அசுவகோஷர் புத்த சரிதம், சவுந்திராநந்தம் என்ற நூல்களில் முத்தக் காட்சிகளை  எழுதவில்லை; காளிதாசன் அவருக்கு சற்று முந்தியவர் . காளிதாசன் பாடல்களில் முத்தக் காட்சிகள் வருகின்றன.

குமார சம்பவத்தில் மட்டும் நாலு இடங்களில் முத்தம் பற்றி காளிதாசன் பாடுகிறார். இதுதவிர மறைமுகமாக முத்தத்தைக் குறிப்பிடும் சொற்களும் வருகின்றன

சந்திரன் இரவு நேரத்தை முத்தம் இடுவதாக புதிதாக மணந்துகொண்ட உமாதேவியிடம் சிவபெருமான் கூறுவதாக ஒரு இடம்.(8-63)

இன்னொரு இடத்தில் கிம்புருஷன் தனது காதலிக்கு முத்தம் இடுவதை காளிதாசன் பாடுகிறார்.(3-38)

எட்டாவது சர்க்கத்தில்தான் சிவன்- உமா காதல் காட்சிகள் முழு அளவில் மலர்கின்றன .அவைகளை 8-8, 8-19-களில் காணலாம்.

8-23ல் மறைமுகக்குறிப்பு வருகிறது பார்வதியின் வாய் தாமரை என்றும் சிவ பெருமான் தேனீ என்றும் வருணிக்கப்படுகிறது

ரகு வம்சத்தில் கடல் அரசன், நதி அழகிகளை முத்தம் இடும் வருணனை முதல் பல காட்சிகளை 9-31, 13-9, முதலிய பாடல்களில் காண்கிறோம்

சில எடுத்துக் காட்டுகளை மட்டும் பார்ப்போம்

उपहितं शिशिरापगमश्रिया मुकुलजालमशोभत किंशुके ।

प्रणयिनीव नखक्षतमण्डनं प्रमदया मदयापितलज्जया ॥ ९ -३१॥ RAGHU9-31

வசந்த காலம் வந்தவுடன் பலாச மரத்தில் உண்டாக்கப்பட்ட, வளைவான , சிவத்த நிற  மொட்டுக்கள் பெண்கள், அவர்களுடைய காதலன் மீது இட்ட நகக்குறிகள் போல விளங்கின . கலவிக் காலத்தில் பெண்கள், தங்கள்  காதலர் மீது இப்படிச் செய்வதுண்டு நகக்குறிகளை நகக்ஷதம் என்பர். பொதுவாக ஆண்கள்தான் பெண்கள் மீது இக்குறிகளை உண்டாக்குவதாக கவிகள் பாடுவார்கள். காளிதாசர் இங்கே பெண்கள் ‘வெட்கத்தினால்’ இப்படிச் செய்ததாகக் கூறுகிறார்

xxx

मुखार्पणेषु प्रकृतिप्रगल्भाः स्वयं तरंगाधरदानदक्षः ।

अनन्यसामान्यकलत्रवृत्तिः पिबत्यसौ पाययते च सिन्धुः ॥ १३-९॥

13-9 ரகு வம்சம்

கடல், தனது உதடாகிய அலையால் தனது மனைவிகள் ஆகிய நதிகளை ஒரேகாலத்தில் முத்தமிட்டு அனுபவிக்கிறது அவ்வாறே நதிகள் எல்லாம் தங்களுடைய உதடுகளை ஏக காலத்தில் கொடுத்து சுவைக்க வசதி செய்கின்றனவாம்

இந்த ஸ்லோகத்தில் கடலினைக் காதலனாகவும் நதிகளை காதலிகளாகவும் காட்டுகின்றான் கவிஞன்

இவை சில காட்சிகளே. இன்னும் பல காட்சிகளையும் காணலாம்.

குமார சம்பவ ஸ்லோகங்களை தொடர்ந்து  காண்போம்

–தொடரும்

tags-தமிழன், முத்தம், தெரியாது, சும்பண , க்ரா , ரிஷ்ய ச்ருங்கர் அனுமன், வால்

சமையல் என்சைக்ளோபீடியா (Post.10,963)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 10,963

Date uploaded in London – –   10 MAY  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஞானமொழிகள் – 67

Kattukutty

சமையலில் செய்யக்கூடாதவை.

* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.

* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.

* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.

* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.

* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.

* சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.

* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.

* பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.

* பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.

* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.

* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.

* குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.

*காய்கறிகளை நறுக்குவதற்கு முன், தண்ணீரில் நன்கு கழுவிய பிறகு நறுக்கவும். நறுக்குவதற்கு முன் ஊற வைப்பதோ, காய்களை நறுக்கிய பிறகு தண்ணீரில் கழுவுவதோ கூடாது.

*காய்கறிகளிலும் பழங்களிலும் தோலை ஒட்டித்தான் தாதுஉப்புக்களும், உயிர்ச்சத்துக்களும் நிறைந்திருக்கின்றன. எனவே, முடிந்தவரை தோலுடன் சமைக்க வேண்டும்.

கீரை வாங்கும்போது மஞ்சள் நிறமுள்ள இலைகள் அதிகமிருந்தால் வாங்குவதைத் தவிர்க்கவும். ஓட்டைகள் மற்றும் பூச்சிகளின் முட்டைகள் உள்ள கீரைகளையும் வாங்கக்கூடாது.

பழங்கள், காய்கறிகள், சிறுதானியங்களில் நார்ச்சத்துக்கள் அதிகமாக இருக்கும். எனவே, இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

பாலைத் திரித்து பனீராக்குவதற்கு எலுமிச்சைச் சாறு ஊற்றுவோம்.

அதற்கு பதில் தயிர் ஊற்றி, பாலைத் திரித்தால் பனீர் புளிக்காமல் சுவையாக ‌இருக்கும்.

பூரிக்கு மாவு பிசையும்போது கால் டீஸ்பூன் ரவையைச் சேர்த்துக் கொண்டால், பூரி புஸுபுஸுவென உப்பலாக இருக்கும்.

எலுமிச்சை சாதம் செய்யும்போது தாளித்ததும் சாற்றை ஊற்றிக் கொதிக்கவிட்டால் சாதம் கசந்து போகும். அதற்கு பதில் ஒரு கிண்ணத்தில் எலுமிச்சைச் சாறு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கலந்து கொள்ளவும். அதில் தாளித்ததை ஊற்றிக் கலக்கிய பிறகு, சாதத்தில் சேர்த்துக் கிளறினால், சாதம் கூடுதல் சுவையுடன் இருக்கும்.

டிப்ஸ்… டிப்ஸ்…

கீரையை வேகவிடும்போது சிறிதளவு வெண்ணெய் அல்லது எண்ணெய் சேர்த்து வேகவைத்தால் பச்சை நிறம் மாறாது; ருசியாகவும் இருக்கும்.

தயிர் வடை போன்றே தயிர் இட்லியும் செய்யலாம்! தேங்காய்த் துருவல், பச்சை 11மிளகாய், முந்திரிப்பருப்பு, கொத்தமல்லித்தழை ஆகியவற்றை அரைத்து தேவையான தயிரும், உப்பும் சேர்த்து வைக்கவும். இட்லிகளை சதுரமான துண்டுகளாக்கி, இந்தக் கலவையில் சில நிமிடங்கள் ஊற வைத்துப் பரிமாறினால்… மணம், சுவை நிறைந்ததாக இருக்கும். விருப்பப்பட்டால், கேரட் துருவல், காராபூந்தி இவற்றையும் மேலே தூவலாம்.

வாழைப்பூவை சமையலுக்கு பயன்படுத்தும்போது மோர் கலந்த தண்ணீரில் பொடியாக நறுக்கிப் போட்டு, பின் அதை ஜல்லி கரண்டியால் அரித்தெடுத்து இட்லி பானையில், இட்லி வேகவைப்பது போல் வேகவைத்தெடுத்தால், பூ கறுக்காமல் இருக்கும்.

தக்காளி சூப் நீர்த்துப் போய்விட்டால் மாவு கரைத்து விடுவதற்கு பதில், வெந்த உருளைக்கிழங்கு ஒன்றை மசித்து சேர்த்தால் ருசியும் கூடும்; சத்தும் அதிகம் கிடைக்கும்.

தொண்டை கட்டிக்கொண்டால்… கற்பூரவல்லி சாற்றுடன் பனங்கற்கண்டு சேர்த்து பருகினால் சரியாகிவிடும்.

அதிக அளவு பாலாடை தேவைப்படுகிறவர்கள் கொதித்து ஆறிய பாலை மூடாமல் ஃப்ரிட்ஜில் வைத்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே அதிக அளவு பாலாடை தோன்றிவிடும்.

கறிவேப்பிலை, கொத்தமல்லியை ஃப்ரிட்ஜில் வைக்கும்போது மஸ்லின் துணியில் சுற்றி வைத்தால், நிறம் மாறாமல் பச்சைப்பசேலென இருக்கும்.

துவரம்பருப்புடன் இரண்டு மஞ்சள்பூசணித் துண்டுகள் (அல்லது) சர்க்கரை வள்ளிக் கிழங்கு துண்டுகளை சேர்த்து வேகவைத்து, மசித்து, சாம்பாரில் சேர்த்தால்… சாம்பாரும் ருசிக்கும்; துவரம்பருப்பின் அளவையும் குறைத்துக்கொள்ளலாம்.

கேரட் அல்வா கிளறும்போது பால் ஊற்றுவதற்குப் பதிலாக பால்கோவா போட்டுக் கிளறி, ஏதாவது ஒரு எசென்ஸ் சில துளிகள் சேருங்கள்… பிரமாதமான சுவையில் இருக்கும்.

வடை தட்டும்போது உள்ளே ஒரு பனீர் துண்டை வைத்து மாவால் மூடி எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுத்தால், வடை வித்தியாசமான ருசியுடன் இருக்கும்.

பாகற்காய் குழம்பு செய்யும்போது, நாலைந்து துண்டு மாங்காய் சேர்த்து வைத்துப் பாருங்கள்… பாகற்காயின் கசப்பு தெரியாது; ருசியும் கூடும்.

சிறிதளவு இஞ்சியோடு மிளகு, தேங்காய்த் துருவல், பேரீச்சம்பழம், உப்பு சேர்த்து அரைத்து, தயிரில் கலந்தால், சூப்பர் சுவையில் பச்சடி தயார்.

குலாப் ஜாமூன் ஜீரா மிகுந்துவிட்டால், அதில் மைதாவை சிறிது சிறிதாக சேர்த்துப் பிசைந்து சப்பாத்தி போல் திரட்டி, சதுர துண்டுகளாக வெட்டி. எண்ணெயில் பொரித்தால்… சுவையான பிஸ்கட் ரெடி! இதை மிக்ஸரிலும் சேர்க்கலாம்.

ஜவ்வரிசி, ரவை இரண்டையும் சம அளவு எடுத்து வறுத்து, பால் சேர்த்து வேகவிட்டு, வெல்லப்பாகு சேர்த்து, நெய்விட்டுக் கிளறினால், வித்தியாசமான சுவையுடன் சர்க்கரைப் பொங்கல் ரெடி!

வற்றல் குழம்பு செய்யும்போது, கடைசியில் வெங்காய வடகத்தை வறுத்துப் பொடித்துப் போட்டு கிண்டிவிட்டால், குழம்பு கனஜோரா இருக்கும்!

முருங்கை இலைக் காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதை இடிக்கவும். இஞ்சி, மிளகு, சீரகம், பூண்டு ஆகியவற்றை இடித்து அதனுடன் சேர்க்கவும். இதில் தண்ணீர், சிறிது உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு, பாதியாக்கி வடிகட்டி, சூப் போல குடித்து வந்தால்… உடல் வலி குணமாகும்.

மல்லியை (தனியா) சிறிதளவு நெய் விட்டு வறுத்துப் பொடி செய்து… சாம்பார் செய்து முடித்தவுடன் இந்தப் பொடியை போட்டு மூடிவைத்தால், சாம்பார் நல்ல மணத்துடன் இருக்கும்.

எந்தவிதமான சூப் செய்தாலும், சோள மாவு இல்லாவிட்டால், ஒரு டீஸ்பூன் அவலை வறுத்து, பொடித்து, சலித்து, அதில் சேர்த்துக் கொதிக்கவிட்டால்… சூப் கெட்டியாக, ருசியாக இருக்கும்.

பீட்ரூட்டையும், ரோஜா இதழையும் அரைத்து அடிக்கடி உதடுகளில் தடவிவந்தால்… நாளடைவில் உதடுகள் நல்ல நிறமாகும்.

ஈ, கொசு வராமல் தடுக்க சில வழிகள்… புதினா இலையை கசக்கி அறையின் ஒரு மூலையில் வைக்கலாம்; காய்ந்த கறிவேப்பிலையைக் கொளுத்தலாம்; ஒரு ஸ்பூன் காபி பொடியை வாணலியில் போட்டு சூடுபடுத்தலாம்.

குப்பைமேனி இலையோடு மஞ்சள், கல் உப்பு சேர்த்து அரைத்து தோலில் அரிப்பு, அலர்ஜி, சிரங்கு உள்ள இடங்களில் தடவி வந்தால்… விரைவில் குணமாகும்.

கற்பூரம், பச்சை கற்பூரம், நாப்தலின் உருண்டை, மிளகு, உப்பு இவற்றை பொடித்து சிறு துணியில் கட்டி அலமாரி, பீரோவில் வைத்துவிட்டால், பூச்சி வராது; நறுமணமாக இருக்கும்.

சப்பாத்தி தேய்க்கும்போது, தொட்டுக்கொள்ள கார்ன்ஃப்ளார் (சோள மாவு) பயன்படுத்தினால் நன்றாக வரும்; மாவும் கொஞ்சமாகத்தான் செலவழியும்.

இட்லிமாவு அரைத்தபின் ஒரு வெற்றிலையைக் கிள்ளிப்போட்டு வைத்தால், மாவு பொங்கி வழியாது.

***

 .

Tags– சமையல் குறிப்புகள்

ஐந்து பவித்ரமான (புனிதமான) பொருட்கள் (Post No.10,962)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 10,962

Date uploaded in London – –   10 MAY  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஞான மொழிகள் – 65

Kattukutty

ஐந்து பவித்திரமான வஸ்துக்கள்!

ஆன்மீக ஸூதா ரஸம்!

ஐந்து பவித்திரமான வஸ்துக்கள்!

மகாபாரதத்தில் வேதவியாசர் ஐந்து பவித்திரமான வஸ்துக்களை சொல்லியிருக்கிறார்!

உச்சிஷ்டம் சிவ நிர்மால்யம் வமனம் ஸவகர்படம் காகவிஷ்டாதே பஞ்சைதே பவித்ராதி மனோஹரா!

அதாவது ஐந்து பவித்திரமான வஸ்துக்கள்!

1. எச்சில்

2. சிவ நிர்மால்யம்

3. வாந்தி

4. சவத்தின் மேல் விரிக்கும் போர்வை

5. காக்கையின் மலத்தினாலே விளைந்த ஒன்று

இந்த ஸ்லோகத்திற்கு இப்படி ஒரு பொருளா? அபவித்திரமான பொருட்கள். நிஷித்தமான இந்த பொருட்களை வேதவியாசர் எப்படி பவித்திரமான பொருட்கள் என்று சொல்லியிருப்பார்? சொல்லப்பட்ட இந்த ஐந்து வஸ்துக்களும் வைஷ்ணவர்கள் ஒதுக்கி வைத்துள்ளவை. சமஸ்கிருதத்தில் அப்படியே மொழி பெயர்த்தால், இவை விரோதத்திற்கு உண்டான பொருட்கள். நாம் சொல்வதற்கும் இதன் அர்த்தத்தையும் பார்த்தால் துளிக்கூட சம்பந்தம் இல்லை!

வேதவியாசர் சாக்ஷாத் மகாவிஷ்ணுவின் அவதாரம்,

வ்யாஸாய விஷ்ணு ரூபாய வியாச ரூபாய விஷ்ணவே!

18 புராணங்களையும் உப புராணங்களையும் பாகவதம் முதலியனவைகளையும் ரசனை செய்து பாமரர்களுக்கும் ஸ்திரிகளுக்கும் கொண்டு போய் சேர்க்க, ஐந்தாவது வேதமாக மகாபாரதத்தை ரசனை செய்கிறார்!

வேதங்களில் இருக்கும் சப்தங்களுக்கு குறைந்தபட்சம் மூன்று அர்த்தங்கள் உள்ளன. மகாபாரதத்தில் உள்ள ஸ்லோகத்திற்கு குறைந்தபட்சம் பத்து அர்த்தங்கள் உண்டு. அந்த மகாபாரதத்தில் அங்கம் வகிக்கின்ற விஷ்ணு சகஸ்ரநாமத்தில் ஒவ்வொரு நாமத்திற்கும் குறைந்தபட்சம் நூறு அர்த்தம் உண்டு. ஆனந்த தீர்த்த பகவத் பாதாச்சாரியார் விஸ்வ என்ற நாமத்திற்கு 100 அர்த்தங்களை காண்பித்து இருக்கிறார் என்பதை அவருடைய சரித்திரத்தில் காண்கிறோம். தான் எழுதும் வேகத்திற்கு ஏற்றார் போல சொல்ல வேண்டும் என்ற விக்னேஸ்வரரின் வேண்டுதல் படி, வேதவியாசர் சொல்லச்சொல்ல விக்னேஸ்வரர் தன் கொம்பை உடைத்து மகாபாரதத்தை அவருடைய வேகத்திற்கு எழுதினார். அப்போது வேதவியாசர் ஒரு நிர்பந்தம் வைக்கிறார் அதாவது அர்த்தம் புரிந்து கொண்டு எழுத வேண்டும் என்பதே. ஆனால் விக்னேஸ்வரனுக்கு சில இடங்களில் அர்த்தங்கள் புரியவில்லை. ஏனென்றால் அது சில இடங்களில் குஹ்ய பாஷைகளில் சொல்லப்பட்டிருந்தது. அதாவது மறைமுகமாக சிலவற்றை வைத்து சொல்லப்பட்டது தான் இந்த ஸ்லோகம். அப்போது விக்னேஸ்வரர் பிரார்த்தித்ததன் பேரில் வேதவியாசர் அவருக்கு அந்த அர்த்தத்தை தெளிவுபடுத்துகிறார்.!*

*ஐந்து பவித்ரமான வஸ்துக்களை பார்க்கலாம்!*

*முதலாவதாக எச்சில். எச்சில் வஸ்துவான ஒன்று ஸ்ரீமந் நாராயணனுக்கும் மகாலட்சுமிக்கும் தேவதைகளுக்கும் முக்யபிராணருக்கும் அபிஷேகம் ஆக பயன்படுகிறது. அது பசுவினுடைய பால் அதாவது க்ஷீரம் அபிஷேகத்திற்கு எப்படி இருக்க வேண்டும் என்பது சம்பிரதாயத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது அது பசுவினுடைய பால் ஆக இருக்க வேண்டும், அதுவும் உயிருடன் உள்ள கன்றுடன் கூடிய பசு ஆக இருக்க வேண்டும், (கோபூஜை கூட கன்றுடன் கூடிய பசுவுக்கு செய்வதே சிரேஷ்டம்) மேலும் கன்று பால் குடித்தவுடன் தான் பாலைக் கறக்க வேண்டும். அதாவது கன்று குடித்தவுடன், பசுவின் மடியை அலம்பாமல் அதாவது அந்த எச்சிலை (உச்சிஷ்டத்தை) துடைக்காமல் அப்படியே பால் கறக்க வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. அந்த எச்சிலை அலம்பாமல் கறக்கும் பாலைத் தான் ஸ்ரீமன் நாராயணன் மகாலட்சுமி தேவதைகள் எல்லோரும் ஸ்வீகாரம் செய்கிறார்கள். அந்தக் கன்று எச்சில் செய்த பால்தான் தேவதைகளுக்கு அபிஷேகத்திற்கு பவித்திரமான வஸ்துவாக உள்ளது. அதையே தான் வேதவியாசர் உச்சிஷ்டம் என்று எச்சிலை பவித்திரமான வஸ்துவாக சொல்லியுள்ளார்!*

*இரண்டாவது சிவ நிர்மால்யம். பொதுவாக வைஷ்ணவர்கள் சிவ நிர்மால்யத்தை ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால் அனைவருமே பவித்திரமாக தலையில் தெளித்துக் கொள்ளும் ஒரு சிவ நிர்மால்யம் உள்ளது. அது என்னவென்றால், சகலலோக பாவங்களையும் தீர்க்கக்கூடிய கங்காஜலம். எந்த ஒரு ஜீவோத்தமரான பிரம்மதேவர் தன் கமண்டலத்தில் இருந்து ஸர்வோத்தமனான விஷ்ணுவின் பாதங்களுக்கு அபிஷேகம் செய்தாரோ அந்த தீர்த்தம் . அதை சிவன் தன் சிரமேற்கொண்டு தரிக்கிறார். அவருடைய சிரஸிலிருந்து வரும் அந்த கங்கா ஜலத்தை அனைத்து வைஷ்ணவர்களும் எடுத்துக் கொள்கிறார்கள். அந்த தீர்த்தத்தை பவித்ரமான வஸ்துவாக ஸ்வீகாரம் செய்கிறார்கள்!*

*மூன்றாவதாக பவித்திரமான வஸ்துவாக சொல்லப்பட்டது வாந்தி. அது எப்படி பவித்திரம் ஆகும்? தேவதைகள் அபிஷேகத்திற்கு, ஆயுர்வேதங்களில் ஔஷதமாக சொல்லப்பட்டிருக்கும் மது அதாவது தேன். தேனீக்கள் மகரந்த மலர்களில் உள்ள தேனை தன் வாயினால் உறிஞ்சி எடுத்துக்கொண்டு வந்து தன்னுடைய கூட்டிற்கு வந்து வாயில் உள்ளதை கக்கி வாந்தி எடுத்து சேகரிக்கிறது. அப்படி தேனீக்கள் வாந்தி எடுத்த தேன் தான் தேவதைகளின் அபிஷேகத்திற்கு பவித்திரமான வஸ்துவாக உள்ளது!*

*நான்காவதாக சொல்லப்படும் பவித்ரமான வஸ்து ஸவ கர்படம். அதாவது சவத்தின் மேல் போர்த்திருக்கும் போர்வை. அது எப்படி சவத்தை தொட்டாலே தீட்டு அது எப்படி மடி ஆகும்? எப்பேர்ப்பட்ட பாந்தவ்யமானவர் இறந்தாலும் ஒரே நாள் மூன்று நாள் பத்து நாள் என்று சூதகம் உண்டு. அது என்னவென்று பார்த்தால் பட்டு வஸ்திரம் என்கிறார் வேதவியாசர். அதாவது பட்டுப்பூச்சிகள் கூடுகளில் உள்ள போதே அதை எடுத்துக் கொண்டு வந்து கொதிக்கும் தண்ணீரில் போட்டு அதிலிருந்து எடுக்கப்படும் நூலை வைத்து தயாரிக்கப்படுவது பட்டு வஸ்திரம். அதாவது சவதத்தின் மேலிருந்து எடுத்த போர்வை ஆன இது மடி என்பது மட்டுமல்ல மகாவிஷ்ணுவுக்கும் பிடித்த பீதாம்பரம். மேலும் மான் தோல் – கிருஷ்ணாஞ்சனமும் கூட சவத்தின் மேல் போர்த்திய போர்வை. ஜப தப அனுஷ்டானங்கள் மேற்கொள்பவர்களுக்கு மான் தோல் ஆஸனம் மிகச் சிறந்தது. இதுவே நான்காவதாக சொல்லப்பட்ட ஸவ கர்படம் என்னும் பவித்திரமான வஸ்து!*

*ஐந்தாவதாக பவித்திரமான வஸ்து என்று சொல்லப்பட்டது காகவிஷ்டா. அதாவது காக்கையின் மலத்திலிருந்து எடுக்கப்படும் ஒரு வஸ்து. அதாவது காக்கையின் மலத்தினால் வளர்ந்த, கோவில் கோபுரங்களில் மேலே உள்ள அஸ்வத்த செடி. அதாவது காக்கையானது பழங்களை தின்று அந்த விதைகளை மலமாக கழிக்கும்போது மண்ணிலோ கோபுரங்களிலும் அது விழும் போது அவை அஸ்வத்த செடியாக வளர்கிறது. அதாவது அரச மரமாக வளர்கிறது . அரச மரமானது பகவானின் விபூதிகளில் முக்கியமானது. பகவான் கிருஷ்ணர் கீதையில் சொல்கிறார் மரங்களிலே அஸ்வத்த மரம் தன்னுடைய விபூதிகளில் முக்கியமானது என்று. ஏனென்றால் அந்த அஸ்வத்த மரத்திலே மும்மூர்த்திகளின் சொரூபம் உள்ளது என்று பிரார்த்தனை செய்கிறோம். அதுவே மும்மூர்த்திகளின் சன்னிதானமான விருக்ஷ ராஜா. ஸ்ரீமுஷ்ணத்தில் வராக ரூபி பரமாத்மா அந்த அஸ்வத்த மர ரூபத்திலே இருக்கிறார். அந்த அஸ்வத்த மரமே காகத்தின் மலத்தில் இருந்து உருவானது, பவித்ரமானது என்று வேதவியாசர் கூறுகிறார். காக்கையினுடைய மலத்திலிருந்து வளர்ந்ததானாலும் அஸ்வத்த விருட்சம் பவித்ரம் ஆனது என்று சொல்கிறார்!*

*இவை ஐந்தையும் வேதவியாசர் பவித்ரமான வஸ்துக்கள் என்று சொல்கிறார். இவைகளை மேலோட்டமாகப் பார்த்தால் நமக்கு அர்த்தம் புரியாது. குஹ்ய பாஷையில் (ரகசியமாக) வேதவியாசர் சொல்லியுள்ளார். மேலோட்டமாகப் பார்த்தால் விருத்தமாக, எதிர்மறையாகத் தோன்றுகிறது. ஆனால் உள்நோக்கி அறிந்து பார்த்தால் விசேஷமான அர்த்தத்தைக் கொடுத்திருக்கிறார் மகாவிஷ்ணுவின் அவதாரமான வேதவியாசர்!

இப்பேர்ப்பட்ட விஷயங்கள் நாம் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் குருவின் அனுகிரகத்தால், முக்யபிராணரின் ஆசியாலும், வேத வியாசரின் அனுகிரஹத்தினாலும் மட்டுமே சாத்தியம். அதற்கு நாம் அனைவரும் பாத்திரராகுவோமாக!

ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணமஸ்து!

***

tags- பவித்ரமான, புனித, பொருட்கள்

யாருக்கு எத்தனை நமஸ்காரம்? (Post No10,961)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,961

Date uploaded in London – –     10 MAY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

யாருக்கு எத்தனை நமஸ்காரம்?

ச.நாகராஜன்

ஒவ்வொரு விஷயத்திற்கும் விளக்கமும் விதியும் நம் முன்னோரால் தெளிவாக வகுக்கப்பட்டுள்ளன.

நமஸ்கார விதிகளும் அப்படியே!

 சிவனை எப்படி நமஸ்கரிக்க வேண்டும்?

“அம்பிகையோடு கூடியவரும், கணங்களோடு கூடியவரும், விநாயக, குமாரர்களோடு கூடியவரும், நந்தியோடு கூடியவரும், கங்கையை உடையவரும், ரிஷபத்தை உடையவருமாகிய சிவபிரான் பொருட்டு நமஸ்கரிக்கிறேன்.”

“தாராநாயகனை (சந்திரனை) தலையில் ஆபரணமாகக் கொண்டவரும், ஜகங்களுக்கு ஆதாரமாக உள்ளவரும், மேகங்களின் நிறமுள்ள கழுத்தை உடையவரும், கிரிஜையின் ஸங்கத்தையே சிருங்காரமாகக் கொண்டவரும், நதியினால் (கங்கையினால்) சிரோ பூஷணம் உடையவரும், நேத்திரத்தினால் திலகம் உடையவரும், நாராயணனால் பாணத்தை உடையவரும், நாகங்களால் கங்கணம் என்னும் ஆபரணத்தை உடையவரும், மலையையே இல்லமாகக் கொண்டவரும் ஆகிய நாதன் பொருட்டு இந்த நமஸ்காரத்தைச் செய்கிறேன்.”

இப்படிப்பட்ட சிவரஹஸ்யம் உள்ளிட்ட நூல்களில் உள்ள ஸ்லோகங்களைச் சொல்லியவாறே மூன்று முறை சாஷ்டாங்கமாக நமஸ்கரிக்க வேண்டும்.

சாஷ்டாங்க நமஸ்காரம் என்றால் என்ன?

கால்கள் இரண்டு, கைகள் இரண்டு, மார்பு, முகம், ஆகியவை பூமியில் நன்றாகப் படும்படியாகவும், மனம், புத்தி ஆகிய இரண்டும் வேறு விஷயங்களில் செல்லாமலும், செய்யப்படும் நமஸ்காரமே சாஷ்டாங்க நமஸ்காரம் ஆகும்.

நந்தி பீடத்தின் அடியில் நந்தியின் முகத்திற்கு முன்னால் வடக்கு முகமாக நோக்கி, கர்ப்பகிருஹத்திலுள்ள ஸ்வாமியை உத்தேசித்து சாஷ்டாங்க நமஸ்காரத்தை மேலே கூறியவாறு செய்ய வேண்டும்.

ஸ்லோகங்களை உச்சரித்தவாறே மூன்று முறை செய்த பின்னர் இடது புறமாக பிரதக்ஷணமாகச் சென்று விநாயகரை விநாயக ஸ்லோகம் சொல்லியவாறே ஒரு நமஸ்காரம் செய்ய வேண்டும். விநாயகருக்கு ஒரு நமஸ்காரமே விதிக்கப்பட்டுள்ளது.

பின்னர் விநாயகரை பிரதக்ஷணமாகச் சுற்றி, சுப்ரமண்யரை மும்முறை சாஷ்டாங்கமாக நமஸ்கரிக்க வேண்டும். பின்னர் பிரகாரத்துடன் வந்து ஆலயத்துக்குள் சென்று சிவபெருமான கர்ப்பகிருஹத்தில் நின்று தரிசித்து ஸ்லோகங்களைச் சொல்ல வேண்டும். ஏராளமான துதிகள் உள்ளன. அவற்றில் எதை வேண்டுமானாலும் சொல்லலாம்.

பிறகு விபூதி ப்ரஸாதத்தைப் பெற்றுக் கொண்டு உட்பிரகாரத்தில் பிரதக்ஷணமாகச் செல்ல வேண்டும்.

தக்ஷிணாமூர்த்திக்கு எதிரில் பஞ்சாக்ஷரத்தை ஜபிக்க வேண்டும்.

பிறகு பிரதக்ஷணமாக வந்து அம்பிகையின் சந்நிதி வந்து ஸ்துதி பூர்வமாக அம்பிகையின் எதிரில் நின்று நமஸ்கரிக்கும் போது கால் பக்கத்தில் தேவதா பிரதிபிம்பங்கள் இல்லாத நிலையில்  சாஷ்டாங்க நமஸ்காரம் மூன்று முறைக்குக் குறையாமல் செய்ய வேண்டும். பிறகு ப்ரஸாதம் பெற்றுத் திரும்ப வேண்டும்.

சிவாலயங்களில் மும்முறையோ அல்லது பதினொரு முறையோ பிரதக்ஷணமாக வெளி பிரகாரத்தில் வலம் வர வேண்டும்.

வெளிப் பிரகாரத்தில் உள்ள சண்டீஸ்வரரிடம்  சண்டீஸ்வர ஸ்துதியைச் சொல்லி, வெளி வந்து கால் பக்கத்தில் தேவதா மூர்த்திகள் இல்லாத மண்டபம் அடைந்து நமஸ்காரத்தை மும்முறை செய்து நந்தியின் கொம்புகள் இரண்டுக்கும் நடுவின் வழியாக கர்ப்பக்ருஹத்தில் உள்ள ஸ்வாமியின் வடிவத்தை நோக்கிக் கொண்டு பிரார்த்தித்து திரும்ப வேண்டும்.

இதுவே சிவ தரிசன விதியாகும்.

சிவாலய தரிசனம் செய்த பிறகு விஷ்ணு ஆலய தரிசனத்தை இரவில் மேற்கொள்ள வேண்டும்.

விஷ்ணுவாலய தரிசனம் செய்த பிறகு சிவாலய தரிசனம் காலையில் செய்ய வேண்டும்.

இப்படி நமஸ்கார விதிகள், தரிசன விதிகள் நமது அற நூல்களில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

***