இலக்கியத்தில் அதிசய மான்கள்! (Post No.11,016)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,016

Date uploaded in London – –    15 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

இலக்கியத்தில் அதிசய மான்கள்!

ஸம்ஸ்க்ருத , தமிழ் இலக்கியத்தில் அதிசய மான்கள் பற்றி நிறைய தகவல்கள்  கிடைக்கின்றன .

‘மயிர் நீப்பினும் வாழா கவரிமா’ பற்றி (குறள் 969) பற்றி வள்ளுவர் படுகிறார். இதைப் பலரும் ‘மான்’ என்றும் சடை எருமை (YAK யாக்) என்றும் மொழி பெயர்க்கின்றனர். இப்படி ஒருமிருகம் தற்காலத்தில் இல்லை. அதாவது ‘கவரி’யை (பெண்கள்  பயன்படுத்தும் செளரி , கடவுளுக்கு வீசப்படும் சாமரம் என்னும் ‘சவுரி’ , அமெரிக்காவில் விழாக்களில் கைகளில் சாமரத்துடன் வரும் சீயர் Cheer ladies லேடீஸ் ஆகிய சொற்கள் இதிலிருந்து வந்தனவே). ஒரு காலத்தில் சிலவகை மிருகங்கள் இப்படி இருந்து அழிந்து போயிருக்க வேண்டும் என்பதே என் கருத்து. சோம லதை என்னும் அற்புத மூலிகை, டோடோ Dodo என்னும் பறவை முதலியன நமது காலத்திலேயே அழிந்துவிட்டன. இது போல அதிக உபயோகம் காரணமாக கவரிமா அழிந்து இருக்கலாம்.

கம்ப ராமாயணத்தில் கவரி ‘மான் என்றே பாடுகிறார். பிற இடங்களில் மா= மிருகம் என்று வருகிறது. பரிமேல் அழகர்  உரையில் ‘ஒரு மயிர் நீங்கினும் உயிர்வாழாது கவரி மா’ என்பார். அப்படிப்பட்ட மிருகம் உலகில் எங்கும் இல்லை. யாக் Yak என்னும் சடை எருமை குளிரிலிருந்து தப்பிக்க உடம்பு முழுதும் மயிரைப் பெற்றுள்ளது ; ஒருவேளை எல்லா மயிரையும் நீக்கினால் அது குளிரில் இறக்கக்கூடும் . இமயமலையில் மட்டுமே இது காணப்படுவதால் தமிழ்நாட்டில் இது பற்றிய நம்பிக்கை மிகைப்படுத்தப்பதாக இருக்கலாம்.

xxx

கஸ்தூரி என்னும் நறுமணப் பொருளை சுரக்கும் சுரப்பிகள் உள்ள கஸ்தூரி மான் (Musk deer) இப்பொழுதும் உள்ளன . இவை பற்றி நாம் அறிவோம்.

யதி சந்தி குணா: பும்ஸாம் விகசந்த்யேவ தே ஸ்வயம் |

நஹி கஸ்தூரிகாமோத: ஷபதேன நிதார்யதே ||

நற்குணங்கள் இருப்பின் அவர்கள் தாமாகவே விகசிக்கிறார்கள். கஸ்தூரியின் மணத்தை யாராலும் உறுதிமொழியாலோ ஸத்யபிரமாணத்தினாலோ தடுத்து விட முடியாது.

If people have merits then they bloom of their own accord. Nobody can stop the fragrance of musk with an oath or swearing.

கஸ்தூரி மான் தன் உடலில் இருந்து வாசனை வருவதை அறியாது அடி அடியாக முன்னேறி வாசனை வரும் திக்கை நோக்கிச் செல்லும் என்ற உவமையையும் தேவார உரையில் காணலாம். இவ்வகை கஸ்தூரி மான்கள் இப்போது காஷ்மீரில் வசிக்கின்றன.

xxxx

பிராமண  பிரம்மசாரிகள்  அணியும் பூணூலில் ஒரு சிறிய மான் தோல் இருக்கும். ஒரு காலத்தில் ரிஷி, முனிவர்கள் மான் தோலைப் போர்த்திக் கொண்டு வாழ்ந்ததன் எச்சம் சொச்சம் போலும் இது. காடுகளில் வாழ்ந்த ரிஷி முனிவர்கள் பனி படர்ந்த மலைப்பகுதிகளில் இரவு நேரக் குளிரிலிருந்து தங்களை பாதுகாக்க இவைகளை அணிந்தனர்.

மநு எழுதிய சட்டப் புஸ்தகத்தில் ‘பண்பாடுள்ள கற்றறிந்த அறிஞர்’களை ‘ஆரிய’ என்னும் சொல்லால் குறிப்பிடுகிறார் . அப்படிப்பட்ட ஆரியர்கள் வாழும் பூமி எது, நாடு எது என்பதைக் குறிக்க அவர் ஒரு வகை மான்களைச் சொல்லி இவை வாழும் இடமே ஆரிய பூமி என்கிறார் (காண்க- மநு ஸ்ம்ருதி 2-23; . இவை கிருஷ்ண மிருக  (black antelope) என்னும் மான் வகை ஆகும் இதைக்கொண்டு பார்த்தால் தமிழ் நாடும் ஆரிய பூமியே.. தமிழ்நாட்டிலும் காடுகளில் அவ்வகை மான்கள் வாழ்கின்றன.

xxxx

ஆதி சங்கரர்  சொல்லும் அதிசய மான் விவேக சூடாமணியில்  வருகிறது (ஸ்லோகம் 76). மான்களைப் பிடிக்கும் வேடர்கள் மான் போல ஒலி எழுப்பி மற்ற மான்களைப் பிடிப்பார்களாம். ஒவ்வொரு புலன் மூலமாக சில மிருகங்கள் உயிரை இழக்கின்றன ; மனிதர்களோ ஐந்து புலன்களின் வேட்கையால் உயிரை இழக்கின்றான் என்ற பொருள்பட விவேக சூடாமணியில் பாடுகிறார்.; மானுக்கு எதிரி அதன் செவி.

கவரிமாவுக்கு எதிரி அதன் மயிர்.(குறள் 969)

xxxx

கல்ஹணர் என்னும் பிராமணப் புலவர் ஸம்ஸ்க்ருதத்தில் ராஜ தரங்கிணி என்னும் நூலை எழுதியுள்ளார். அது காஷ்மீர்  மாநில வரலாறு பற்றியது . அவர் ஒரு அதிசய மான் பற்றிப் பாடுகிறார்..

ராஜ தரங்கிணி 5-15, 6-364, 8-3034 ஸ்லோகங்களில் ‘அக்நி செளச’ என்னும் மான் பற்றி கல்ஹணர் பேசுகிறார். இந்த மான் தீயில் விழுந்து தன்னுடைய தோலை சுத்தம் செய்துகொள்ளுமாம். அக்கினி என்றால் தீ; செளச என்றால் சுத்தம்.  அவர் பயன்படுத்தும் உவமைகள்

5-15

கடலில் புகுந்த பின்னரும்கூட லட்சுமி சுத்தம் ஆகவில்லை. எப்படி ‘அக்நி செளச’ தீயில் புகுந்து தன்னை சுத்தம் செய்துகொள்கிறதோ அப்படி அவள் தன்னைப் பிறருக்கு கொடுப்பதன் மூலமே சுத்தம் செய்துகொண்டாள்.

6-364

காட்டு மரங்களில் தீ இல்லாவிடினும் குரங்குகள் அவற்றில் தங்கியே குளிரைத் தாங்குகின்றன. தீ மூலமும் தண்ணீர் மூலமும் மான்கள் தங்களை சுத்தம் செய்துகொள்கின்றன. ஆகையால் பொருள்களில் ஒன்றும் இல்லை. அதை பயன்படுத்துவோரின் அணுகுமுறையிலேயே அவரவர்  வேண்டியதைப் பெறுவார்கள் .

மேலை நாடுகளில் பீனிக்ஸ் (Phoenix) பறவை பற்றி உள்ள நம்பிக்கை போன்றது இது. அந்தப் பறவை தீயில் விழுந்து மீண்டும் மீண்டும் புத்துயிர் பெறும் என்பது பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது.

xxx

மான்கள் உள்ள தபால்தலைகளை மட்டும் சேர்ப்பது சிலரின் பொழுது போக்கு . இந்தியா  வெளியிட்ட எட்டு பைஸா மான் தபால்தலைக்கு இப்போது கிராக்கி ஜாஸ்தி. குறிப்பாக பயன்படுத்தாத தபால்தலைக்கு இன்னும் அதிக மதிப்பு . 100 தபால்தக்காளின் விலை குறைந்தது 550 ரூபாய்.!

–subham—

TAGS- அதிசய மான்கள், கவரி மா, அக்நி செளச, கருப்பு மான், கிருஷ்ண மிருக , மநு , ராஜதரங்கிணி

சில மனிதர்களின் அதிசய சக்திகள்! (Post No.11015)

dharma master

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,015

Date uploaded in London – –    15 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

சில மனிதர்களின் அதிசய சக்திகள்! (Post No.11015)

ச.நாகராஜன்

நம்பமுடியாத சில அதிசய சக்திகளைக் கொண்டுள்ள மனிதர்கள் உண்டு.

 ‘புத்திஸம் ஆஃப் விஸ்டம் அண்ட் ஃபெய்த்’ என்ற நூலில் தர்மா மாஸ்டர் திக் தியன் தம் (Buddhism of Wisdom & Faith by Dharma Master Thich Thien Tam –  பக் 51) தான் அறிந்த சில அதிசய  மனிதர்கள் பற்றிக் கூறுகிறார் இப்படி:

தர்மா சகா ஒருவர் பற்றி நான் அறிந்தது இது. அவரது இளமைப் பருவ காலத்தில் ஒவ்வொரு சமயமும் அவர் கனவு காணும் போது, அவர் வானில் வெகு உயரத்தில் பறந்து கொண்டே இருப்பார். எங்கு வேண்டுமானாலும் அவர் பறந்து செல்வார்.  ஆனால் வயதாக ஆக, அவரது கனவுகளில் அவரால் உயரப் பறக்க முடியவில்லை. தாழ்வாகத் தான் பறக்க முடிந்தது.

‘கைட் டு புத்திஸம்’ (Guide to Buddhism) என்ற நூலின் பாஷ்யத்தில் ஒரு சாமானியனைப் பற்றிய செய்தி ஒன்று உண்டு. அவரது 4ஆம் அல்லது 5ஆம் வயதில் அவரால் இரவு நேரத்தில், பகல் நேரத்தில் பார்ப்பது போல எதையும் தெளிவாகப் பார்க்க முடிந்தது. வயது கூடும் போது அவருக்கு இந்தத் திறன் குறைந்து கொண்டே வந்தது. பத்து வயது முதல் அவரால் இருட்டில் எதையும் பார்க்க முடியவில்லை. ஆனால் சில சமயங்களில் மட்டும் இரவில் சில விநாடிகள் மட்டுமே அவரால் எதையும் பார்க்க முடிந்தது. 17 வயது முதல் இந்தத் திறன் அவருக்கு இரண்டு, மூன்று வருடங்களுக்கு ஒரு முறையே வந்தது. அதுவும் ஒரு கணம் தான் வரும். இந்த மனிதர்கள் தங்கள்  முந்தைய பிறவிகளில் இப்படிப்பட்ட சக்தியை வளர்த்துக் கொண்டவர்கள்!

 அவர்கள்  மறு பிறவி எடுக்கும் போது மாயை வசப்பட்டு அவர்களது ஆசைகள் அதிகமாக ஆக அவர்கள் தங்களது விசேஷ திறனை இழக்கின்றனர்.

இதே போல சில மனிதர்களால் தங்களைச் சுற்றி பல காதங்கள்  (ஒரு காதம் என்றால் 10 மைல்கள்) என்ன நடக்கிறது என்பதைத் தெளிவாகக் காண முடியும். சிலருக்கோ பூமிக்கடியில் என்ன இருக்கிறது என்பதைப் பார்க்க முடியும்! சுவர்களை ஊடுருவி என்ன இருக்கிறது என்பதை அவர்களால் சொல்ல முடியும். ஒருவரின் பாக்கெட்டில் என்ன வைத்திருக்கிறார் என்பதையும் அவர்களால் சொல்ல முடியும்.

 இந்தத் திறனை அவர்கள் வளர்க்கவில்லை என்றால் அவை நாளடைவில்  மங்கி மறைந்து விடும். சாமானிய  மனிதரைப் போலவே அவர்களும் ஆகி விடுவர்.

சிலருக்கோ ஒரு புத்தகத்தை ஒரே ஒரு முறை படித்தால் போதும். அதை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை திருப்பிச் சொல்வார்கள்.

இன்னும் சிலருக்கோ கவிதையில் ஒரு விசேஷ திறன் இருக்கும். அவர்கள் எதை எழுதினாலும் அல்லது எதைப் பேசினாலும் அது கவிதையாகவே இருக்கும்.

ஆனால் இவற்றையெல்லாம் அவர்கள் வளர்த்துக் கொள்ளாவிடில் நாளடைவில் இந்தத் திறன் எல்லாம் மறைந்து விடும்.

இன்னும் விரிவாக இப்படி பல செய்திகளைத் தருகிறார் புத்த துறவியான திக் தியன் தம்!

இந்தச் செய்தியைப் பார்க்கும் போது ஸ்வாமி விவேகானந்தர் தான் ஒரு முறை படித்ததை அப்படியே திருப்பிச் சொன்ன சம்பவம் நினைவுக்கு வருகிறது இல்லையா!

ஸ்வாமி விவேகானந்தரும் இப்படி அபூர்வ சக்தி வாய்ந்த மனிதர்களைப் பற்றிச் சொல்லி இருக்கிறார்; அவர்களைக் கண்டு பேசியும் இருக்கிறார்!

தன் திறனை மட்டும் அவர் என்றுமே சொன்னதில்லை. அதை மற்றவர்கள் கூறி இருப்பதால் நாம் அறிகிறோம்.

உலகில் அபூர்வமான திறமைகளைக் கொண்டவர்களுக்குப் பஞ்சமே இல்லை.

அவர்களைப் பார்த்து உலகம் பிரமிக்கிறது!

***

Tags- மனிதர்கள்,  அதிசய சக்திகள்

Rameswaram Wonders and Dhanushkoti Wonders in Bullet Points (Post No.11,014)

Rameswaram Temple

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,014

Date uploaded in London – –    14 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

Rameswaram Wonders and Dhanushkoti Wonders in Bullet Points (Post No.11,014)

I visited Rameswaram on 31st May 2022. This is not my first visit. So I would just give some details in bullet points.

What are the natural wonders in Rameswaram?

Rameswaram is an island near east coast in Bay of Bengal. It is approximately 175 kilo metres from Madurai well connected by trains and buses. Three hour drive from Madurai.

Ramaeswar = Shiva worshipped by Rama

Dhanush koti = Bow (and arrow) Point

Wonders

1.Beauiful sea shells are available. Also pearls and coral garlands are sold here.

2. When I went there with my family several decades ago, we saw light emitting planktons in the night sea.

3.In those days we were able to buy broken parts of coral reefs called Seethai Manjal.

4.Though it is surrounded by salt water, there is one spring with drinkable pure water. The place is called Vil Undri Theertham. The meaning is Bow created spring. Rama shoot his arrow to create a good water spring to quench the thirst of Seeta Devi.

5. As one approaches the island one can see the seas on both sides coming closer and closer and merges into one in Pamban.

6.There is a bridge which will give way to ships by parting into two. Another bridge like that is in London; Tower Bridge also opens for ships.

7. Once upon a time,  20 or 25 kilo metres away was Dhanushkoti which was slowly devoured by the sea. In the severe storm in 1964 , Dhanuskoti disappeared along with several small temples and buildings. Pamban bridge was also washed away. Now they have rebuilt the railway bridge and laid another road bridge in Pamban. One can sea the beauty from road bridge.

8.Indian ocean and Bay of Bengal meet at Dhanushkoti. An Indian outpost is there to show that is the end of Indian landmass. 30 kilometres away is Sri Lanka.

9.Along the route, one can see floating rocks collected by some enthusiasts. I was given a big rock and I placed it in a bucket full of water. It was floating like sponge. Hanumar Brigade under the leadership of engineer Neelan built a bridge to Sri Lanka for Rama. Tamil Sangam Book Purananuru describes Rama’s consultation meeting under a banyan tree. Valmiki Ramayana described the engineering consultation meeting under Civil engineer Neelan.

10. Natural beauty spot is at Erosion Point (Arichal Munai in Tamil) where two seas meet. It is a dangerous point where many have lost their lives in quick sand and giant sea waves. When I stood there I felt water running like fast river under my feet washing away the sand. Some 100 enthusiasts went far into sea who were chased away by coast guards. Warning boards are there in many places to warn the foolish adventurers. It is a beautiful spot with giant waves and under current. No one is allowed into this area after sunset.

RELIGIOUS WONDERS

1.Rameswaram is one of the 12 Jyotir Linga shrines of Lord Shiva spread over India. But Rameswar is unique among them. Kasi Viswanath is worshipped along with Ramnath. Holy Ganges water from Varanasi/Kasi is used to bathe Rama Linga in the Rameswar temple. People take sea water and holy sand from Rameswaram and pour them into River Ganga in Prayag. This tradition shows that Hinduism is the binding factor in India. Far away Uttar Pradesh and Tamil Nadu join together to worship shiva here every minute.

2.The linga (Formless state of Lord Shiva)  was made up of sand by Sita Devi. Though Lord Rama sent Hanumar/ Anjaneya to fetch a rock from the Holy Himalayas he came late and hence Sita made a statue which is the main deity at Rameswar. The Linga brought by Hanuman is installed as Kasi Visvanath inside the temple.

3.In olden days Hari/Vishnu and Hara/Shiva were worshipped in the same temple. Now we see it in Rameswar and Chidambaram in Tamil Nadu.

4. A holy place should have Murthi/statue, Theertha/holy water and Sthala/religious heritage. Rameswar has all the three qualifications. Lord Rama lived several thousand years ago. Sambandar who lived 1400 years ago immortalised this place in his Thevaram songs.

5.Rameswar has another architectural wonder. The longest Prakara/corridor in the world is in Rameswar temple. The third Prakara with 1212 pillars is the longest with 700 feet long granite structure. It was built by a Sethupati King in the 18th century. It is a wonder in the sandy island where granite is a rare commodity.

About the Theertha/holy water source, here are 22 water wells inside the temple and 31 out side the temple.

6.Thousnds of people take holy dip everyday in the sea known as Agni Theertha.

Rama worshipped Shiva (in Linga shape) here to get rid of the sin of murdering a Brahmin (Ravana).

7.Another wonder is world’s first Exile Government was formed here. Rama did the coronation of Vibheesana , brother of Ravana here. He declared him the king of Sri Lanka on Indian soil. Now there is a temple called Kothanda Ramaswami temple in that place.

Past President of India Abdul Kalam was from this island. A place where a Siddha/saint attained Samadhi will attract huge crowd and enormous wealth. Saint Patanjali attained Samadhi (living death) here.

Dhanushkoti is just 19 kilometres from Rameswar temple. Both Vaishnavites and Saivites worship the gods here. The God is known as Ramanatha or Ramalinga and goddess is known as Parvathavarthini.

A lot of shrines and mandapas (Stony halls) are inside the huge temple.

There are museums for President and scientist Abdul Kalam and fisheries. Those who love marine life will love this place.

In short Rameswaram island is full of wonders. Every sand particle here is singing the glory of Lord Shiva and Lord Rama!

Jai Ramanath!

–Subham—

Tags- Rameswar, Dhanushkoti, floating rock, erosion point

அற்புதக் காட்சி அளிக்கும் அரிச்சல் முனை, தனுஷ்கோடி, ராமேஸ்வரம் (Post No.11,013)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,013

Date uploaded in London – –    14 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

அற்புதக் காட்சி அளிக்கும் அரிச்சல் முனை, தனுஷ்கோடி

ராமேஸ்வரம் எங்கு உள்ளது?

ராமேஸ்வரம் தமிழ் நாட்டில் உள்ளது. அது ஒரு தீவு. முன்னர் ரயில் பாதை மூலம் மட்டும் இணைக்கப்பட்டது. அந்தப் பாலம் 1964 புயலில் சேதம் அடைந்தவுடன் சரி செய்யப்பட்டு, புதிய சாலைப் பாலமும்  கட்டப்பட்டது. அந்தப் பாதைகளில் செல்லும்போது இரு புறமும் கடல் இருப்பதைக் காணலாம். மதுரையிலிருந்து சாலை வழியாக 3 மணிநேரத்தில் சென்றுவிடலாம். மதுரையிலிருந்து சுமார் 170 கிலோ மீட்டர் தொலைவில் ராமேஸ்வரம் உள்ளது. தனுஷ்கோடி, அங்கிருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

அதிசய விஷயங்கள் என்ன?

ராமேச்வரம் பற்றிய இரண்டு அதிசய விஷயங்கள் :-

1.கப்பல் வந்தால் பாம்பன் பாலம் இரண்டாகப் பிரிந்து வழி விடும். இதே போன்ற பாலம் லண்டனில் டவர் ப்ரிட்ஜில் TOWER BRIDGE உள்ளது. கப்பல் வருகையில் பாலம் இரண்டாகப் பிரிந்து மேலே எழும்பும் .

2.உலகியிலேயே நீண்ட கோவில் பிரகாரம் ராமேஸ்வரத்தில் உள்ளது. அற்புதமான பொறியியல் வேலை அது. கருங்கல் கிடைக்காத தீவில் இவ்வளவு பெரிய பிரகாரம் அமைந்தது உலக அதிசயமே !

பிரகாரத்தின் நீளம் 640 அடி.

மொத்தமுள்ள பல பிரகாரங்களின் நீளம் 3850 அடி

வெளிப் பிரகாரத்தில் உள்ள தூண்கள் 1212. அவற்றில் சிற்பங்களும் உண்டு.

இவை 15-ம் நூற்றாண்டு முதல் கட்டப்பட்டன.

உலகப் பிரசித்திபெற்ற மூன்றாம் பிரகாரத்தை முத்துராமலிங்க சேதுபதி 300 ஆண்டுகளுக்கு முன்னர்தான் கட்டினார்.

இயற்கை அதிசயங்கள் என்ன ?

1.ஏராளமான விதவிதமான சங்குகள், கிழிஞ ல்கள் இந்தக் கடலில் கிடைக்கின்றன.. அவற்றை விலைக்கு வாங்கலாம்.

2.தண்ணீரில் மிதக்கும் பெரிய பாறை போன்ற கற்கள் கிடைக்கின்றன. இவற்றைக் கொண்டு மிதக்கும் பாலத்தை வானர சேனை உருவாக்கியது.

3.மூன்றாவது இயற்கை அதிசயம் உப்பு நீர்க் கடலுக்கு இடையே நல்ல நீர் வரும் ‘வில் ஊன்றி தீர்த்தம்’ உள்ளது. சீதையின் தாகத்தைத் தணிக்க, ராம பிரான் வில் மூலமாக உருவாக்கிய தீர்த்தம் இது.

4.நாலாவது இயற்கை அதிசயம் போகப்போக இருபுறமும் உள்ள கடல் இணையும் காட்சியை பாம்பன் என்னும் இடத்தில் காணலாம் .

5.ஐந்தாவது இயற்கை அதிசயம், தனுஷ்கோடி செல்லும் வழியில் கடல், ஆறு மாதத்துக்கு ஒரு முறை சாலைக்கு எதிர்ப்புறம் மாறுவதாகும்

6. ஆறாவது இயற்கை அதிசயம் தனுஷ்கோடியின் எல்லையில் உள்ள அரிச்சல் முனை EROSION POINT ஆகும்.

அங்கே இந்தியப் பெருங்கடல் என்னும் இந்து மஹா சமுத்திரமும் , வங்காள விரிகுடாவும் சந்திக்கின்றன. 30 கிலோ மீட்டர் தொலைவில் இலங்கை என்னும் ஸ்ரீ லங்கா உள்ளது  இந்தியாவின் எல்லையைக் குறிக்கும் அசோக ஸ்தூபி அங்கே உள்ளது. மாலை ஆன பின்னர் எவருக்கும் அனுமதி இல்லை. அங்கே புதை மணலிலும் கடல் அலையிலும் சிக்கிப் பலர் இறந்தனர். ஆகையால் எச்சரிக்கை போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. நான் ஜூன் மாதம் (2022) சென்றபோது எச்சரிக்கை எல்லையையும் தாண்டி 100, 200 பேர் கடலுக்குள் சென்றவுடன் கடல் பாதுகாப்புப் படையினர் வந்து எச்சரி க்கை விசில் அடித்து அவர்களை விரட்டினர்.

கடலில் தொலைவில் பேரலைகள் வீசும். கடற்கரைக்கு அருகில் வேகமான ஆறு ஓடுவது போல தண்ணீர் நம் காலின் கீழேயுள்ள மணலை அரிப்பதைக் காணலாம் . ஒரு காலத்தில் அதையும் தாண்டி இருந்த கட்டிடங்கள், கோவில்கள் அனைத்தும் 1964 புயலில் கடலுக்குள் மூழ்கிவிட்டன. சுருங்கச் சொன்னால் கடல் அரித்து அரித்து முன்னால் வந்து கொண்டு இருக்கிறது இந்த இடத்தின் பெயரே அரிச்சல் முனை.

சமய அதிசயங்கள் என்ன?

  1. ராமேஸ்வரம் 12 ஜோதிர் லிங்க ஸ்தலங்களில் ஒன்று . நாட்டின் ஒற்றுமையை நிலைநாட்டும் 12 ஜோதிர் லிங்க கோவில்கள் 12 இடங்களில் உள்ளன. அவற்றில் மிகவும் சிறப்பானது ராமலிங்கம் என்னும் ராமநாத சுவாமி கோவில் ஆகும். ராமரே சிவபெருமானை பூஜித்ததாக ஐதீகம் (வரலாறு). அதுமட்டும் அல்ல. இங்கு கடலில் (அக்கினி தீர்த்தத்தில்) ஸ்னானம் செய்து அந்த தண்ணீரையும் மணலையும் எடுத்துக்கொண்டு பிரயாகையில் கொட்டுவார்கள். காசியிலிருந்து கங்கை நீரைக் கொண்டுவந்து ராமலிங்கக சுவாமிக்கு அபிஷேகம் செய்வார்கள். தமிழ் நாட்டையும் உத்தரப் பிரதேசத்தையும் நாள் தோறும் இணைக்கும் காட்சியை, கண் முன்னே காணலாம்.

விபீஷணரை இந்தியமண்ணிலேயே ராமர், இலங்கை அரசனாக முடி சூட்டிய இடமும் இதுதான். உலகின் முதல் EXILE GOVERNMENT ‘எக்ஸைல் கவர்மெண்ட்’ ராமபிரானால் உண்டாக்கப்பட்டது. அங்கு உயரமான இடத்தில் கோதண்ட ராம சுவாமி கோவில் உள்ளது .

பழங்கதாலத் தமிழ்நாட்டுக் கோவில்களில் பெருமாள்/ விஷ்ணு சந்நிதியும் உண்டு. இதற்குச் சான்று -சிதம்பரம், ராமேஸ்வரம் கோவில்கள் . ராமநாத சுவாமி கோவிலுக்கு உள்ளேயே பெருமாள் சந்நிதியும் உண்டு.

XXX

ஒரு இடம் பெருமை பெறுவதற்கு மொன்று விஷயங்கள் தேவை. மூர்த்தி, தீர்த்தம், ஸ்தலம்.

மூர்த்தி- ராம பிரானே பூஜித்த சிவ லிங்கம்

ஸ்தலம் – ராமாயண காலத்திலேயே சேது/ பாலம்/BRIDGE எழுப்பிய இடம். 1400 ஆண்டுகளுக்கு முன்னரே சம்பந்தர் முதலிய ஞானிகளால் பாடல் பெற்ற இடம்/ ஸ்தலம் .

தீர்த்தம் – கோவிலுக்குள் மட்டுமே 22 தீர்த்தங்கள் உள . மேலும் 31 தீர்த்தங்கள் தீவின் பல இடங்களில் இருக்கின்றன.

கோவிலில் உள்ள சந்நிதிகள்

ராமநாதர், ராமலிங்கர் என்றழைக்கப்படும் சிவலிங்கம்

பர்வத வர்த்தனி என்னும் அம்மன் சந்நிதி; அங்கு ஸ்ரீசக்கரமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது

ராம பிரான், இராவணன் என்னும் பிராமணனைக் கொன்றதால் பிரம்மஹத்தி (பிராமணக் கொலை) தோஷம் ஏற்பட்டது அதிலிருந்து விடுபட இமயமலையில் இருந்து சிவ லிங்கத்தை எடுத்துவர அனுமனை அனுப்பினார். அவர் வருவதற்குத் தாமதம் ஆகவே , சீதையே மணலால் லிங்கத்தைச் செய்து கொடுக்க, ராமன் அதை வழிபட்டார். அவரே மூலவர். பின்னர் அனுமன் கொண்டு வந்த லிங்கத்தையும் அதே கோவிலில் ராமர் பிரதிஷ்டை செய்து பூஜிக்க உத்தரவிட்டார்.

XXX

வேறு முக்கிய சந்நிதிகள்

அனுமன் கொணர்ந்த லிங்கம்- விசுவநாதர்

அவரது துணைவியார் – விசாலாட்சி

செளபாக்கிய கணபதி

சந்தான கணபதி

மஹா கணபதி

பெருமாள் சந்நிதி

உலகப்  பிரசித்தி பெற்ற மூன்றாம் பிரகாரத்தில் நடராஜர் சந்நிதி

ஆஞ்சனேயர்

மஹாலெட்சுமி

பள்ளியறை

இவை தவிர பல மண்டபங்கள்.

இந்திய ஜனைதிபதியாவும் நாட்டின் தலை சிறந்த விண்வெளி, விஞ்ஞானியுமான அப்துல் கலாமின் ஊர் இராமேஸ்வரம். அவரைப் பற்றிய காட்சி சாலையும் இருக்கிறது ; பாம்பனில் மீன் காட்சி சாலை இருக்கிறது .

பதஞ்சலி முனிவர் சமாதி அடைந்த புனித இடமும் இராமேஸ்வரம்.

கோவிலுக்குள் இருக்கிறது. எங்கெங்கு சித்தர்கள் சமாதிகள் உள்ளனவோ அங்ககெ ங்கெங்கெல்லாம் மகத்தான கூட்டமும் செல்வமும் வந்து சேரும். தமிழ்நாட்டின் மிகப் புகழ்பெற்ற கோவில்கள் அனைத்தும் சித்தர்கள் சமாதி உள்ள இடங்கள்தான்.. ராமேஸ்வரத்தில் பதஞ்சலி  முனிவர் சமாதி அடைந்தார்.

XXX

நான் பல முறை ராமேஸ்வரம் சென்று வந்துள்ளேன்.

ராமேஸ்வரம் கடற்கரையில் அமைந்த சங்கர மண்டபத்திலும் கோவிலிலும் பேசுவதற்கு எனது தந்தை தினமணி பத்திரிகை பொறுப்பாசிரியர் வே. சந்தானம் பல முறை சென்றுள்ளார். அப் போது அவருடன் சென்ற நினைவு இன்றும் உள . மானாமதுரை சாம்பார் சாதம் மிகவும் கீர்த்தி வாய்ந்தது. அந்தக் காலத்தில் ரயில்பாதை மட்டும்தான் . ரயில்வேயின் ஐ ஆர் ஆர் I R R சமையல்காரர் செய்யும் சாதம் அவ்வளவு ருசியானது .

இரவு நேரத்தில் தினமணி கரஸ்பாண்டண்ட் ஆதிநாராயணனின் மகன்களுடன் உட்கார்ந்து கொண்டு கடல் அலைகளை ரசித்தோம். கடலில் ஒளி உமிழும் LIGHT EMITTING PLANKTONS பிளாங்டான்கள் என்னும் தாவரங்கள் மிதந்து வந்தன. அவற்றை பாட்டிலில் பிடித்துக் கொண்டுபோய் தேவஸ்தான தங்கும் விடுதியில் வைத்து வேடிக்கை பார்த்தோம் . கடல் குச்சி, ராவணன் மீசை, சீதை மஞ்சள் ஆகியவற்றை வாங்கினோம். இப்போது சென்றபோது, என் பேரக் குழந்தைகளுக்காக விதவிதமான சங்குகளை (SEA SHELLS) வாங்கினோம்.  சீதை மஞ்சள் எனப்படும் பவளப் பாறைகள் (CORAL REEFS) கிடைக்கவில்லை. ஆனால் 300, 400 ரூபாய்க்கு நல்ல, பாலிஷ் போடாத பவள மாலைகள் (CORAL NECKLACES) கிடைத்தன .

அருகில் உள்ள திருப்புல்லாணி, உத்தரகோச மங்கை ஆகிய இடங்களுக்கும் சென்றோம்.. ஆனால் இம்முறை சேதுப்பட்டினம் , சேதுக்கரை செல்ல வில்லை .

-SUBHAM-

TAGS-  ராமேஸ்வரம், பதஞ்சலி முனிவர், அரிச்சல் முனை, தனுஷ்கோடி,

உலகின் உயரமான நாடு – நேபாளம்! (Post No.11,012)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,012

Date uploaded in London – –    14 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

  24-5-2022 தேதியிட்ட மாலைமலர் நாளிதழில் வெளியாகியுள்ள கட்டுரை

உலகின் உயரமான நாடு – நேபாளம்!

ச.நாகராஜன்

உயரமான நாடு

தெற்காசியாவில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் அமைந்திருப்பதோடு உலகின் உயரமான இடத்தில் உள்ள உயர் நாடு நேபாளம்.

பழம் பெரும் வரலாற்றையும் மிக்க பெருமையையும் கொண்ட நாடு இது.

இரு விதமான பயணங்கள் இந்த நாட்டை நோக்கி மேற்கொள்ளப்படுகின்றன.

ஒன்று ஆன்மீக யாத்திரை இன்னொன்று இயற்கை ஆர்வலர்களின் உற்சாகமான பயணம்.

உலகில் உள்ள நாடுகளில் ஒரே ஹிந்து நாடு இது தான் என்ற தனிப் பெரும் பழமையை சமீப காலம் வரை பெற்றிருந்தது நேபாளம். (நமது இந்தியா மதசார்பற்ற செகுலர் நாடு)

2015இலிருந்து அரசியல் சட்டம் காரணமாக இதுவும் செகுலர் நாடு என ஆயிற்று.

சிவ பெருமான் உறையும் இமயப் பகுதியில் உள்ள இந்த நாட்டில் சிவத் தலங்களுள் முக்கியமான ஒன்றான பசுபதிநாத் ஆலயம் அமைந்துள்ளது.

ஏராளமான முனிவர்களும் தபஸ்விகளும் உறையும் நாடு இது.

நேபாளம் – பெயர் காரணம்

நேபாளத்தின் தலை நகர் காத்மாண்டு. பண்டைய காலத்தில்  இந்தப் பகுதி பெரிய ஏரியாக இருந்தது. இதைப் பற்றிய புராண வரலாறு சுவையானது.

விஷ்ணு பகவான் தனது சக்கரப்படையை ஏவி இந்த மலைப்பகுதியை வெட்டி இரு பிளவுகளை உருவாக்கினார்.  இங்கிருந்த ஏரி நீர் வடித்து தரைப்ப்குதி வெளிப்பட்டது. வாங்மதி, (அல்லது பாக்மதி), விஷ்ணுமதி, ருத்ரமதி என மூன்று அழகிய ஆறுகள் ஓட ஆரம்பித்தன.

இந்த பகுதியின் தெய்வீகத் தன்மையைக் கண்டு நேவா என்னும் மஹரிஷி இங்கு வந்து நீண்ட நெடும் தவம் புரிய ஆரம்பித்தார். ஒரு நாளிரவு கனவில் அவர் பெரிய ஜோதி தரிசனத்தைக் கண்டார்.  அது என்ன என்று அவருக்குப் புலப்படவில்லை. அவர் வளர்த்த பால் பசு ஒன்று மாலையில் மேய்ச்சலிலிருந்து திரும்பி வந்ததிலிருந்து பால கொடுப்பதை நிறுத்தி விட்டது. பாலும் அதனிடம் இல்லை. அதன் காரணம் நேவா ரிஷிக்குப் புரியவில்லை.

ஆனால் ஒரு நாள் பகல் பொழுதில் அந்தப் பசு  ஓரிடத்தில் நின்று தானாகவே தன் மடியிலிருந்து பாலைப் பொழிந்து கொண்டிருந்தது. மஹரிஷி நேவா அந்த இடத்தின் மகிமையைக் காண விரைந்தார். பசு பால் பொழிந்த இடத்திலிருந்து ஒரு ஜோதி வெளிப்பட்டு பூமிக்குள் மறைந்தது. தான் கனவில் கண்ட ஜோதியே அது என்று உணர்ந்த நேவா தனக்கு ஜோதி தரிசனம் அருளிய இறைவனின் கருணையை நினைத்து ஆடிப்பாடி மகிழ்ந்தார். அங்கேயே எப்போதும் ஜோதி வடிவினனாக எழுந்தருளி மக்கள் அனைவருக்கும் அருள் புரிவாயாக என்று இறைவனை வேண்டினார். ‘அப்படியே ஆகுக’ என அசரீரி ஒலித்தது.

அந்த இடத்திலேயே நேவா முனிவர் பாதரஸத்தைக் கொண்டு ஒரு லிங்கத்தை ஸ்தாபித்தார். அந்த லிங்கத்தை எந்த உலோகத்தால் தொட்டாலும் அது பொன்னாயிற்று. அவருக்கு பாரஸ்நாதர் என்ற திருநாமம் ஏற்பட்டத்.

நேவா முனிவர் தவம் புரிந்த இடம் நேவா பாலம் என்ற பெயரைப் பெற்றது. அது நாளடைவில் பெயர் மருவி நேபாளம் ஆயிற்று. நேவா, பாலம் என்றால் நேவ முனிவரால் உருவாக்கப்பட்டு பரிபாலனம் செய்யப்பட்டது என்று பொருள்.

புராணங்கள் இங்கு வந்து வழிபட்டு அருள் பெற்ற தேவர்களின் பெரும் பட்டியலைத் தருகிறது.

பசுபதிநாதர் ஆலயம்

உலக காரணனான பசுபதி நாதர் ஆலயம் காத்மாண்டுவின் கிழக்குப் பகுதியில் உள்ளது, இங்கு வந்து வழிபடுவோர் தொன்று தொட்டு இன்று வரை ஏராளம்.

ஆலயத்திற்கு முன்னால் ஓடும் வாங்மதி (பாக்மதி என்பது வழக்கில் உள்ள பெயர்) நதியில் நீராடி விட்டு பசுபதிநாதரை தரிசிப்பது மரபு.

ஆலயத்தின் கர்ப்பகிருகம் நான்கு வாயில்களைக் கொண்டுள்ளது. வெளி பிரகாரம் ஒன்று உண்டு. இரண்டாவது திருச்சுற்றில் மேலை சந்நிதி நீங்கலாக மூன்று புறமும் சுற்றி வரலாம். மரத்தால் அமைந்த கோவில் இது. ஏகமுக ருத்ராக்ஷம், தங்க முலாம் பூசப்பட்ட திரிசூலம்  என ஆலயத்தின் பெருமை சொல்லி மாளாது.

இந்தக் கோவிலில் பூஜை செய்வோர் கர்நாடகத்தில் உள்ள ஷிமோகாவைச் சேர்ந்த பட்டர்களே. கடந்த 350 ஆண்டுகளாக இவர்கள் வமிசாவளியினரே இங்கு பூஜை செய்கின்றனர்.

அருகில் மலையின் மீது ஏறிச் சென்றால் குஹ்யேஸ்வரி ஆலயத்தை அடையலாம். நேபாள நாட்டினர் ஏராளமானோர் வழி படும் கோவில் இது.

தர்பார் ஸ்குயர்

காத்மாண்டுவில் உள்ள யுனெஸ்கோவின் பண்பாட்டு மையங்கள் பட்டியலில் உள்ள தர்பார் ஸ்குயர்  ஹனுமான் தோகா தர்பார் ஸ்குயர் என்று அறியப்படுகிறது. ஏராளமான கோவில்கள் உள்ள பகுதி இது. சுமார் 500 வருடங்களுக்கு முந்தைய கலைப் படைப்புகளை இங்கு கண்டு மகிழலாம். குறிப்பாக மரத்திலான நுட்பமான சித்திர வேலைப்பாடுகள் பயணிகளைக் கவரும்.

புத்தர் அவதரித்த கபிலவாஸ்து

வைகாசி பௌர்ணமி புத்தர் அவதரித்த திருநாளாகும்.

உலகின் அறிவு ஜீவிகளும் ஏராளமான விஞ்ஞானிகளும் போற்றும் அவதாரமான புத்தர் அவதரித்த கபிலவாஸ்து நேபாளத்தில் தான் உள்ளது. ‘எதையும் நீயே அறிவால் அறிந்து உணர்ந்து உண்மையைக் காண்’ என்ற அவரது அறிவுபூர்வமான உபதேசம் உலகில் உள்ள அனைவரையும் கவர்கிறது. புத்தர் அவதரித்த லும்பினித் தோட்டமும் சித்தி அடைந்த குசிநாரா என்னும் காசியாவும் நேபாளத்தில் தான் உள்ளது.

லும்பினி கபிலவாஸ்துவிலிருந்து 74 கிலோமீட்டர் தொலைவிலும், காத்மாண்டுவிலிருந்து 255 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. லும்பினியில் மட்டும் சுமார் 14 பௌத்த மடாலயங்கள் உள்ளன.

சீன யாத்ரீகனான ஃபாஹியானில் ஆரம்பித்து இன்றைய நாள் வரை இப்புனிதப் பகுதியில் வந்து வணங்காதோர் இல்லை.

மாமன்னன் அசோகன புத்தர் அவதரித்த தலத்திற்கு உபகுப்தனுடன் வந்து வணங்கி இருக்கிறான். தன் பரிவாரங்களுடன் வந்த அவன் ஏராளமான நறுமணப் பொருள்களையும் மலர்களையும் எடுத்து வந்து வழிபட்டான்.  அவன் தோட்டத்தை நெருங்கியதும் அவனுட்ன் வந்த உபகுப்தன் ஆவேசம் வந்த நிலையில்,  ஓ! மாமன்னா! இந்த இடத்தில் தான் சாக்கிய முனி அவதரித்துள்ளார். இங்கு அவர் நினைவாக ஒரு நினைவுச் சின்னம் அமைப்பாயாக” என்று கூறவே அதே போல் அசோக ஸ்தம்பம் ஒன்று இங்கு நிறுவப்பட்டது. அதன் உச்சியில் குதிரை உருவம் ஒன்றை அமைத்து வழிபட்டு அவன் தன் நாடு திரும்பினான்.

இன்று அந்த ஸ்தம்பத்தின் கீழ் தேவியின் திருவுருவமும் விநாயகர் திருவுருவமும் அமைக்கப்பட்டுள்ளன. தேவியின் பெயர் கும்மிந்தேவ் அல்லது ரூபந்தேகி பகவதி. இந்த ரும்மிந்தேவ்யில் (லும்பினித் தோட்டம்) புத்தருடைய தாய் மாயாதேவி பிரசவத்துக்கு முன் குளித்த குட்டை இருக்கிறாது. அதன் கரையில் உள்ள அத்திம்ரத்தின் பழத்தை அவள் உண்டாள் என்று கர்ண பரம்பரைச் செய்தி கூறுகிறது. ஏராளமான

 பௌத்தர்களும் இந்துக்களும் வந்து வணங்கும் தலம் இது.

காத்மாண்டுவில் உள்ள ஸ்வயம்புநாத் ஆலயத்திற்கு அருகில் உள்ள அமிதேவ புத்தர் பார்க்கில் 67 அடி உயரமுள்ள புத்தரின் சிலையைப் பார்த்து வியக்கலாம்.

பதான் ஸ்தூபங்கள்

பதான் நகரின் நாற்புறமும் உள்ள நான்கு ஸ்தூபங்கள் பெரிதளவும் வியக்கப்பட்டு பேசப்படுபவை. கிழக்கு திசையில் உள்ள ஸ்தூபத்தின் சுற்றளவு மட்டும் 75.83 மீட்டர். உயரம் 10.4 மீட்டர்.

ஜைன மத ஆசாரியர்கள்

ஜைன மத ஆசாரியர்களான சம்புதறாயர்,  பத்ரபாகு ஆகியோரும் பாடலிபுரத்தில் இருந்தனர். ஆக ஜைனர்கள் போற்றும் நாடாகவும் நேபாளம் அமைகிறது.

நேபாளத்தின் கொடி

நேபாளத்தின் பரப்பளவு 56,827 சதுர மைல்கள். இதன் ஜனத்தொகை மூன்று கோடியே ஒரு லட்சம்.

நேபாளத்தின் கொடி ஒரு மகத்தான சிறப்பைக் கொண்டுள்ளது. உலகின் பெரும்பாலான நாடுகளின் கொடிகள் செவ்வக வடிவில் இருக்கும் போது இதன் கொடி மட்டும் வேறு அமைப்பைக் கொண்டுள்ளது. இது சுமார் 2000 ஆண்டுகளாக இருந்து வரும் பழம் பெரும் கொடி என்று வரலாறு கூறுகிறது.

நேபாளத்தில் சுதந்திர தினமே கொண்டாடுப்படுவதில்லை. ஏனெனில் இது ஒரு போதும் அன்னியரின் ஆட்சிக்கு உட்பட்டதில்லை. பழம் பெரும் நாடான இதை யாரும் ஆக்கிரமிக்கவே இல்லை. ஆகவே விடுதலை என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்த நாட்டின் கூர்க்கா படையின்ரின் வீரம் உலகம் அறிந்த ஒன்று.

பசுவை வதை செய்தால் 12 வருட சிறைவாசம் நிச்சயம்.

வெவ்வேறு 80 இனங்களைச் சேர்ந்தவர்கள் ஒற்றுமையாக வாழும் இந்த நாட்டில் 123 மொழிக்ள் பேசப்படுகின்றன!

நேபாளத்தின் மொத்த ரயில் பாதையின் நீளமே 59 கிலோமீட்டர் தான். ஒரு நாள் போதும், இதில் பயணிக்க!

காத்மாண்டு நகரின் தெருக்கள் குறுகியவை. மர வேலைப்பாடுகள் நிறைந்த வீடுகள் இங்கு அதிகம்.

சங்கு நாராயணன் கோவில்

தவளகிரி மலைப் பகுதியில்  காத்மாண்டு நகரின் கிழக்கில் இருபது கிலோ மீட்டர் தொலைவில் சங்கு என்ற கிராமத்தில் மனோகரா ஆற்றின் அருகே அமைந்துள்ளது திருமால் கோவிலான சங்கு நாராயணன் கோவில்.

இயற்கை வளம் மிக்க இமயமலைப் பகுதி

இமயமலைப் பகுதி என்பதால் இங்கு வியக்க வைக்கும் இயற்கை காட்சிகளுக்குப் பஞ்சமே இல்லை.

பாரா க்ளைடிங், மலை ஏறுதல் உள்ளிட்ட விதவிதமான விளையாட்டுக்களுக்கு உகந்த இடம் இது என்பதால் இதில் ஆர்வமுள்ள வெளிநாட்டோர் இங்கு வருகை புரிகின்றனர்.

நேபாளத்தின் வருவாயில் 25 விழுக்காடு சுற்றுலாப் பயணிகளாலேயே வருகிறது என்பது ஒரு சுவையான செய்தி.

இங்கு நெட் வசதி இல்லை என்பது ஒரு சிறிய குறை.

உலகில் உள்ள மிக உயரமான மலை சிகரங்கள் மொத்தம் பத்து. அவற்றில் எட்டு சிகரங்கள் நேபாளத்தில் தான் உள்ளன. இதில் உலகிலேயே மிக மிக உயரமான 29029 அடி உயரமுள்ள மவுண்ட் எவரெஸ்டும் ஒன்று.

நேபாள பனி மனிதன்

யேடி என்று அழைக்கப்படும் இமயமலை பனி மனிதனைப் நேபாள மலைப் பகுதிகளில் பார்த்ததாக பல சுவையான செய்திகள் உண்டு. யேடி என்பது ஒரு ஷெர்பா வார்த்தை, யே என்றால் பாறை; டி என்றால் விலங்கு என்று பொருள்.

ஆக யேடி என்றால் மலைவாழ் மிருகம் என்று பொருள். யேடி மனிதன் போலத் தோற்றமளிப்பதாக ஒரு செய்தி உண்டு. எரிக் ஷிப்டன், ஃப்ராங்க் ஸ்மித், ஜான் ஹண்ட் போன்ற மலையேறும் நிபுணர்கள் பெரிய பாதச் சுவடுகளைக் கண்டதாக அறிவிக்கின்றனர். கர்னல் சி.கே. ஹோவர்ட் மற்றும் டான் வில்லன்ஸ் தாங்கள் கறுப்பாக மனிதன் போன்ற ஒரு உருவத்தைப் பார்த்ததாக தெளிவாகக் கூறுகின்றனர். இந்தப் பனி மனிதன் மர்மம் பற்றிய  செய்திகள் இன்று வரை அடிக்கடி வெளி வருவதால் நேபாளம் என்றவுடன் யேடியின் ஞாபகமும் அனைவருக்கும் வருவதில் வியப்பில்லை.

அன்னபூர்ணா மலைச் சுற்று

உடல் வலு உள்ள பக்தர்களும் இயற்கை ஆர்வலர்களும் மேற்கொள்ளும் ஒரு கிரி வலம் அன்னபூர்ணா மலைச் சுற்று. 17 முதல் 21 நாட்கள் வரை இதற்கு ஆகும்.

போகரா சாந்தி ஸ்தூபம்

காத்மாண்டுவிற்குப் பிறகு அடுத்த பெரு நகரம் போகரா.அன்னபூர்ணா மலைச் சுற்று மேற்கொள்வோர் இங்குள்ள அழகிய மலைப் பகுதியைப் பார்க்காமல் போக முடியாது. இங்குள்ள சாந்தி ஸ்தூபம் அனைவரையும் ஈர்க்கும் ஒன்று.

சூரியோதயம் மற்றும் சூர்யாஸ்தமனம் பார்ப்பது மலை ஏறுவது என பல்வேறு அம்சங்களால் அனைவரையும் கவர்வது போகரா.

இந்தியாவின் வடக்குப் பகுதியிலிருந்து நேபாளத்திற்குப் பயணம் மேற்கொள்வது சுலபம். விசா கெடுபிடிகள் கிடையாது என்பது இன்னொரு செய்தி. விசாவை பயணம் மேற்கொள்ளும் முன்பேயும் பெறலாம். அங்கே சென்ற பின்னர் அங்கேயும் பெற்றுக் கொள்ளலாம்..

நேபாளத்திற்கும் இந்தியாவிற்கும் உள்ள தொடர்பு இமயமலை போன்றது என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கூறியது முற்றிலும் உண்மை.

மொத்தத்தில் ஆன்மீகத்தையும் அன்றாட வாழ்வியலில் பார்க்க வேண்டிய இயற்கையையும் இணைக்கும் உயரமான நாடு நேபாளம்.

ஒருவரியில் நேபாளத்தைச் சொல்வதென்றால்,

உலகின் மிக மிக உயரமான சிகரம் மவுண்ட் எவரெஸ்டைக் கொண்ட நாடு நேபாளம் என்று சொல்லி முடிக்கலாம்!

***

TAGS- நேபாளம், கபிலவாஸ்து, பசுபதிநாதர் ஆலயம்

VISITED 30 PLUS TEMPLES IN  22 TOWNS IN TAMIL NADU (Post No.11,011)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,011

Date uploaded in London – –    13 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

 I left London for India on 21st May and came back on 13th June, 2022. I visited the following pilgrim centres and had the Darshan of Gods and Goddesses.

Following are the places I visited :

23 May 2022- Kapaleeswar Temple in Chennai

25 – Pillayar Temple and  Hanumar Temple in Madurai( which we visited for over 25 years almost every day before leaving for London in 1987)

25- Immaiyil Nanmai Tharuvar Sivan Temple

26- Madurai Meenkashi Temple and Tirupparankundram Temple

Kuzanthaiyananda Swami Adhistanam in Madurai

27 – Tiruvarur Thyagaraja Swamy Temple (Vanmekanathar, Veethi vidangar)

27- Vaitheeswaran Koil

28- Thirukkadaiyur Abhirami, Amirthakadeswar Temple.

28- Sirkazi Sattanathar Temple

28- Chidambaram Natarajar Temple

28- Chidambaram Thillai Kali Rathotsavam

28- Thiruvenkadu Swetharanyesawar Temple, Bhudan (Navagraha) Shrine

29- Thiruchi Akilandeswari, Jambukeswar Retmple in Thiruvanaikkaval

31- Rameswaram Ramanathaswamy Temple

31-Dhaaunshkoti Koti Theertham

31- Arichchal Munai (Sea erosion Point;last post to Sri Lanka which is twenty miles away)

31-Tiru Uttarakosa Mangai- Mangalanathar Temple, Maragatha Natarajar

31. Thiruppullani Adi Jagannatha Perumal Temple

31- Panchamuki Hanumar  near Rameswaram Temple

5th June 2022- Nellaiyappar-Kanthimathi Amman Temple in Tirunelveli

5- Tirukkurungkudi Nindra Nambi Perumal Temple

5- Nanguneri Vanamaamalai Totadri Perumal temple

6- Sankarankovil- Sankaranarayanar Temple

6- Srivilliputhur Vadabadhri Narayanan- Andal temple

6- Madavaar Valaakam Vaitheeswaran Temple

9- Kanchipuram Kamakshi Temple

9- Kanchi Ekamranathar/ Amravarneswar Temple

9-Kancipuram Sankara Mutt, Periyava Adhistanam

9- Kanchi Chitraguptan Temple

9- Yadhokthakari Perumal Temple

11- Tiruvannamalai Arunachaleswar/ Annamalaiaiyar temple

11- Sri Seshadri Swamikal Adistanam

11- Sri Ramana Ashrmamam

11- Girivalam- Darshan of different Lingams along the Hill route.

13 June 2022- Back in London

(Detailed reports will follow soon with pictures.)

–subham-

Tags- 22 places, 30 plust temples

S.Nagarajan  Article Index : May 2022 (Post No.11,010)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,010

Date uploaded in London – –    13 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

MAY  2022

 1-5-2022. 10914  SNR Article Index April 2022

 2-5-2022  10922 விஞ்ஞானத்திலும் மோசடிகள்!

3-5-2022   10927 ஒட்டக்கூத்தருக்கும் புகழேந்தியாருக்கும் நடந்த பாடல்

             போட்டி! (தொண்டைமண்டல சதகம் பாடல் 21)

4-5-2022 10932 மனம் வெளுக்க வழி!

5-5-2022 10937 குழந்தைகள் விரும்பும் நாடு! (மாலைமலர் 3-5-22)

6-5-2022 10942 மனிதர்களை மரம் போல நினை!

7-5-2022 10946 ஒரு ரூபாய் நோட்டு!

8-5-2022  10951   புத்தகம் படிக்க விரும்புவோருக்கு ஒரு அற்புதமான

             நிறுவனம்!

9-5-2022 10956 முன்னாள் வெளிநாட்டு தூதரின் கேள்விகள்!

10-5-2022 10961 யாருக்கு எத்தனை நமஸ்காரம்?

11-5-2022 10966 ஹிந்து சாஸ்திரம், ப்ரதிக்ஞை, ஹேது, திருஷ்டாந்தம்

12-5-2022 10970 பொன் கொண்டு இழைத்த மாட மாளிகை லங்கா

13-5-2022 10975 அலங்காரம் செய்து கொண்டு உடலைப் பேணுங்கள்!

              (ஹெல்த்கேர் 2022, மே மாத கட்டுரை)

14-5-2022   10981   எண்கள் தரும் ஞானம்!

15-5-2022 10986 வேதத்தை அறிய இதிஹாஸ புராணங்கள் படிக்க

              வேண்டும்!

16-5-2022 10991  மனம் என்னும் மாயம் – 1

17-5-2022 10995  மனம் என்னும் மாயம் – 2

18-5-2022 10999  லேக் டாஹோ, டைம் ஸ்குயர், க்ராண்ட் கான்யான் –

               அமெரிக்க டூர் – 17-5-22 மாலைமலர் கட்டுரை 

19-5-2022 11002  நோய்களைக் குணமாக்கும் பகவத் கீதை ஸ்லோகங்கள்!

20-5-2022 11005  சூதாட்ட போரை நடக்க விடாமல் நீ தடுத்திருக்கலாமே

              கிருஷ்ணா!

21-5-2022 11007  தொழில்நுட்பத்தை ஒதுக்கினால், உலகம் ஒதுக்குபவரை

               ஒதுக்கி விடும்!

***

21-5-2022 முதல் 12-6-2022 முடிய tamilandvedas.comஇல் பதிவுகள் ஒன்றும் இடப்படவில்லை.