800 கல்வெட்டுக் கவிஞர்கள் பற்றிய புஸ்தகத்தில் இருந்து மேலும் சில சுவையான, வரலாற்றுச் சிறப்புமிக்க விஷயங்களைக் காண்போம்.
அசலத
அசலத என்னும் கவிஞர் புனைந்த இரண்டு ஸம்ஸ்க்ருதக் கவிதைகள்
பட்டடக்கல் லோகேஸ்வர கோவில் தூணில் பொறிக்கப்பட்டுள்ளது. சாளுக்கிய அரசன் இரண்டாம் விக்ரமாதித்யன் காலக் கல்வெட்டு இது (733-747CE).
தென்னிந்தியாவில் 1300 ஆண்டுகளுக்கு முன்னரே பரதக் கலை எந்த அளவுக்குப் பரவியிருந்தது என்பதைக் காட்டும் வரலாற்றுச் சிறப்புமிக்க சாசனம் இது.
நாட்டிய சாஸ்திரத்தை சம்ஸ்க்ருத மொழியில் நமக்களித்த பரத முனிவரை அசலத எழுதிய இரண்டு செய்யுட்களும் குறிப்பிடுகின்றன.
பரமத , குடிலோன்னதநட என்னும் இரண்டு வகை நாட்டிய நாடகங்களை கவிஞர் குறிப்பிடுகிறார் என்பது நாட்டிய அறிஞர்கள் கருத்து. இது அக்காலத்தில் பரத நாட்டிய சாஸ்திரத்துக்குப் போட்டியாக மற்றொன்று தோன்றியதாகவும் ஆனால் பரத சாஸ்திரம் வெற்றிக்கொடி நாட்டியது என்றும் விளம்புகிறது.
பரதனுத வசனரசனா விரசித நரஸேவ்ய ஸிம்ஹ நாதேந
பரநட மதாந்த ஹஸ்தி பரிஹீனமதோ பவத் யேவ
நட ஸேவ்ய பரதமதன்யுதபடுதர வசனா சனி ப்ரபாதேன
குடிலோன்னதநட சைலஹ ஸ்புடிதாநத மஸ்தகஹ பததி
பரத நாட்டிய சாஸ்திரத்தின் பெருமையை விதந்து ஓதும் கவிதை இது.
xxxx
அமர கவி
சண்டேல அரசன் போஜ வர்மன் (Bhojavarman), வீர வர்மன், கல்யாண தேவி ஆகியோரின் புதல்வன் ஆவார் . அவர் 1288-ல் ஆட்சி புரிந்தபோது அமர என்ற பெயர்படை த்த அமைச்சர் ஒரு கவி இயற்றினார். அது பண்டேல்கண்ட் பகுதியில் நானாவில் உள்ளது . அஜயகத கல்வெட்டு எனப்படும். எண்களை திறமையாக சொல்லிலும் எண்களிலும் பயன்படுத்தும் கவிதை இது. கணட , இசேக்ஷண , சுருதி, பூத என்ற சொற்கள் இவ்வாறு கையாளப்படுகிறது ஜெயா துர்க் என்னும் இடத்தில் கோவில் கட்டப்பட்டதைக் கூறும் சாசனம் இது. முதலில் கவிதை சிறப்பாக அமைய விஷ்ணுவை வேண்டுகிறார் . 39 செய்யுட்களில் வெவ்வேறு யாப்பு அணிகளில் அமைந்த கவிதை ஆகும்.
சித்ரவர்ணம் மிக்க ஒரு கம்பளம் அல்லது துணியைப் போன்றது என் செய்யுள் என்று புகழ்ந்து கொள்கிறார். அறிஞர் உலகத்தை மகிழ்விக்க, திருப்திப்படுத்த இந்த பல வண்ண துணியை தாம் நெய்ததாக — அதாவது பல அணிகளைக் கொண்ட கவிதையை இயற்றியதாக — புகழ்பாடுகிறார்.
இதோ அமர கவியின் செய்யுள்,
அமர கவிரனர்த்யாம் குர்வலங்கார ஸாராம் படு பதல
பனீயாமேஷா சிஷ்டஸ்தவிஷ்டஹ
அசயதுரு குணார்க்கஹ ஸம்ருதா பிக்ஞ ஸம்க்ஞஹ
க்ருதி குதுக மபீப்ஸுர் வாக்பதீம் சித்ர வர்ணாம்
xxx
பிராமணப் புலவர்கள்
விஜயநகர சாம்ராஜ்யப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் அரசைவயில் எட்டு பிராமண அறிஞர்கள் அமைச்சர்களாக இருந்தனர். அவர்களுக்கு அஷ்ட திக் பாலகர்கள் என்று பெயர். அனைவரும் புலவர்கள். அவர்களுக்கு திப்புலேரு கிராமத்தை அக்ரஹாரமாக மன்னர் பரிசளித்தார் இது கி .பி. அல்லது பொது ஆண்டு 1440-ல் நடந்தது. எட்டு புலவர்களின் தலைவர் அல்லாசானி பெத்தண்ணா . அவர்தான் ஆந்திர கவிகளின் பிதாமகர்.
இது புதிதல்ல. சங்க இலக்கியத்தில் பதிற்றுப்பத்து பாடிய பிராமணப் புலவர்கள் அனைவருக்கும் சேர மன்னர்கள் பொற்காசுகளையும் கிராமங்களையும் பரிசளித்த செய்தி உளது.
பல்லவ மன்னன் நந்திவர்மனின் உதயேந்திரம் சாசனத்தை எழுதிய புலவன் பரமேஸ்வரனுக்கு பிரம்மதேயம் கிடைத்தது.
வேள்விக்குடி சாசனம் எழுதிய யுத்தகேசரிக்கு நில புலன்களும் வீடும் தானமாக அளிக்கப்பட்டது
உச்சலகல்ப குடும்பத்தைச் சேர்ந்த மஹாராஜா ஜயநாத , கி.பி. 496-ல் சவபாவ என்ற பிராமணப் புலவருக்கு அக்ரஹாரம் அளித்த செய்தி கல்வெட்டில் பதிவாகியுள்ளது.
ஒரிஸ்ஸா மன்னன் இரண்டாம் கங்கவர்மனின் சாசன அதிகாரி காமதேவ ஸ ர்மனுக்கு கிடைத்த நில தானமும் கல்வெட்டில் உளது. (கி.பி.1304)
கங்க வம்ச அரசன் இரண்டாம் பானு, ஒரிஸ்ஸாவிலுள்ள பூரி நகரில் ரங்கதாச சர்மனுக்கு 1304ம் ஆண்டில் கொடுத்த அக்ரஹாரம் பற்றிய செய்தியும் கல்வெட்டிலிருந்து கிடைக்கிறது .
கங்க வம்ச அரசன் இரண்டாம் நரசிம்மன் அளித்த கொடையையும் ஆலல்பூர் சாசனம் அறிவிக்கிறது
தென் ஐரோப்பாவில் உள்ள இத்தாலி உலகின் ஐந்தாவது பெரிய சுற்றுலா இடமாக, வருடத்திற்கு ஐந்து கோடி பயணிகளைக் கவர்ந்து ஈர்க்கும் இடமாக உள்ளது.
இது, ஸ்லோவேனியா, ஆஸ்திரியா, ஸ்விட்சர்லாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளை எல்லை நாடுகளாகக் கொண்டுள்ளது. சான் மரினோ மற்றும் வடிகன் இந்த நாட்டின் உள்ளே அமைந்துள்ள இரு குட்டி நாடுகள்.
இத்தாலியின் மொத்த ஜனத்தொகை சுமார் ஆறு கோடி.
பரப்பளவு 1,16,340 சதுர மைல்கள்.
இனிக்கும் இத்தாலி
இத்தாலி என்று சொல்லும் போதே மனமெல்லாம் இனிக்கும் என்கின்றனர் உலக அறிஞர்கள். ஆம் இத்தாலிய மொழி அன்பினுக்குரிய – காதலுக்குரிய ஒரு மொழியாம்!
தமிழ் அறிஞர் போப், வணிகத்திற்கு ஒரு மொழி ஆங்கிலம் என்றால். ராஜதந்திரத்திற்கு ஒரு மொழி பிரெஞ்சு என்றால், காதலுக்கு ஒரு மொழி இத்தாலி என்றால், தத்துவத்திற்கு ஒரு மொழி ஜெர்மன் என்றால் தெய்வீகத்திற்கு ஒரு மொழி தமிழாகும் என்றார்.
(If English be the language of commerce, French the language of diplomacy, Italian the language of love, and German the language of philosophy, then Tamil is the language of devotion.)
லயத்தை அடிப்படையாகக் கொண்ட மொழி என்றும் உயிர் எழுத்துக்களை சொற்களின் இறுதியில் ஓசை நயத்துடன் கொண்ட மொழி என்றும் காதல் மொழியான இத்தாலிய மொழியை மொழி அறிஞர்கள் கொண்டாடுகிறார்கள்.
பெல்லோ என்ற ஒரு வார்த்தையே அழகு, அருமை, சூபர் போன்ற அர்த்தங்களை சந்தர்ப்பத்திற்குத் தக தரும். அனைவரும் பயன்படுத்தும் வார்த்தை பெல்லோ!
இத்தாலியின் தலை நகர் ரோம். ரோம் என்ற ஒரு வார்த்தையைச் சொன்னவுடனேயே இத்தாலியின் பிரமிக்க வைக்கும் பாரம்பரியம் அனைவருக்கும் புரிந்து விடும். இங்கு பார்க்க வேண்டிய இடங்கள் ஏராளம் உண்டு.
வடிகன் மியூஸியம்
அத்துடன் மட்டுமல்லாமல், கிறிஸ்தவர்களின் தலைமைப் பீடம் இங்குள்ள வடிகனில் தான் அமைந்துள்ளது. போப்பாண்டவர் இங்கிருந்தே அருளாட்சி செய்கிறார். 121 ஏக்கர் பரப்பளவையும் 453 பேரை ஜனத்தொகையாகவும் கொண்டுள்ள வடிகன் உலகின் குட்டி நாடாகும். வடிகன் மலையையொட்டி இந்தப் பெயர் எழுந்துள்ளது.
வடிகன் நகரில் முக்கியமாகப் பார்க்க வேண்டிய இடம் சிஸ்டின் சேப்பல். வடிகன் அருங்காட்சியகத்தின் சிறப்பு அம்சமாக விளங்கும் இதில் தான் மைக்கேலேஞ்சலோவின் புகழ்பெற்ற பலிபீடம் உள்ளிட்ட புகழ் மிகு ஓவியங்களைப் பார்க்கலாம்
ரோம் நகரம்
டைபர் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது ரோம் நகரம். ‘எல்லாச் சாலைகளும் ரோமை நோக்கியே செல்கின்றன’ என்ற புகழ் பெற்ற பண்டைய வாக்கியம் உலகின் மிகப் பெரும் நகரமாக இது இருந்ததைக் குறிக்கிறது. இங்கு வழக்கு மொழியாக இருந்தது உலகின் மிகப் பழம் பெரும் மொழியான இலத்தீன்.
ஐரோப்பாவில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் கலாச்சாரத்தைத் தந்தது ரோம் தான்.
கிறிஸ்துவுக்கு முன் 753ஆம் ஆண்டில் ரோமுலஸ் மற்றும் ரேமஸ் ஆகியோர் இணைந்து அமைத்த நகரம் ரோம்.
இத்தாலியில் மக்கள் தொகை அதிகம் கொண்ட நகரம் ரோம்.
கராகல்லா பாத்
பழைய கால ரோமப் பெரும் மன்னனான கராகல்லாவால் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட கராகல்லா குளியல் இடங்கள் மிகவும் புகழ் பெற்றவை. ரோமானிய கட்டிடக் கலையின் விரிவு இங்கிருந்தே ஆரம்பித்தது. ‘தி பாத் ஆஃப் கராகல்லா’ (கராகல்லா குளியல் இடங்கள்) இன்று பார்வையாளர்கள் பார்வையிடும் ஒரு நினைவுச் சின்னமாக ஆகி விட்டது.
கொலோசியம்
ரோமானிய நாகரிகம் பற்றி அறியாதவர் இருக்க முடியாது. ரோம் நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள கொலோசியம் நீள்வட்ட வடிவில் அமைந்துள்ள கட்டிடம். பண்டைய காலத்தில் அதிக பட்சமாக 80000 பேர் இந்த அரங்கத்தில் அமர்ந்து வேடிக்கை பார்ப்பார்களாம். நன்கு தேர்ச்சி பெற்ற போர்வீரர்கள் தங்களுக்குள்ளும் இதர கைதிகளுடனும் மற்றும் சிங்கம் புலி போன்ற கொடிய விலங்குகளுடனும் சண்டை இடுவர்.
சண்டையிடும் இருவரில் ஒருவர் இறக்கும் வரை இந்தச் சண்டை நீடிக்கும். இங்கு சண்டையிடுபவர்களுக்கு க்ளேடியேட்டர் என்று பெயர். ‘க்ளாடி’ என்றால் ஸ்பானிய மொழியில் கத்தி என்று அர்த்தம். முதலில் கத்திச் சண்டையாக இருந்த இது நாளடைவில் இரும்புத் தடி, கோடாலி உள்ளிட்ட அனைத்து கொடிய் ஆயுதங்களாலும் போடப்பட்டது.
கைதிகளை, பட்டினி போடப்பட்ட பல சிங்கங்களுடன் மைதானத்தில் விட்டு விடுவர். அவற்றால் அவன் கடிபட்டுச் சாக வேண்டும். திறமையுள்ள அபூர்வமான ஒருவன் விலங்குகளை ஜெயிக்கவும் கூடும். கூடியிருக்கும் மக்கள் கை தட்டி ஆரவாரித்து மகிழ்வர்!
இந்த அடிப்படையில் எடுக்கப்பட்ட ஹாலிவுட் திரைப்படங்கள் சக்கை போடு போட்டு வெற்றி பெறுவது நாம் அனைவரும் அறிந்ததே. 2000ஆம் ஆண்டு வெளியான ரஸ்ஸல் க்ரோவ் நடித்த க்ளாடியேட்டர் படத்தைப் பாராட்டாதவர் இல்லை. ஆறு ஆஸ்கார் விருதுகளை இது பெற்றது.
காலப்போக்கில் கொலோசியத்தில் இருந்த சலவைக் கற்கள் அகற்றப்பட்டன. பழைய நாகரிகத்தை நினைவுறுத்தும் இது இன்று சிதிலமடைந்து உல்லாசப் பயணிகளின் கவர்ச்சிக் கேந்திரமாகத் திகழ்கிறது!
இங்குள்ள சுரங்க அறை உள்ளிட்டவற்றைப் பார்க்க ஏராளமான டூர் திட்டங்கள் உள்ளன. இரவு நேரத்திலும் இதைச் சென்று விளக்கொளியில் பார்க்கலாம்.
வெனிஸ் நகரம்
ரோம் நகரிலிருந்து 555 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வெனிஸை ஆறரை மணி நேரத்தில் அடைந்து விட முடியும். சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் நகரமான இது, இத்தாலியின் வடகிழக்குப் பகுதியில் உள்ளது.
மிதக்கும் நகரம், நீர் நகரம், பாலங்கள் உடைய பால நகரம், அட்ரியாடிக் ராணி என்றெல்லாம பல செல்லப்பெயர்கள் வெனிஸுக்கு உண்டு.
ஆறுகிடந்தன்ன அகல் நெடுந்தெரு என தமிழ் இலக்கியம் நமது தென் தமிழக நகர் வீதிகளை ஆறுடன் ஒப்பிட்டுக் கூறும். வெனிஸ் நகரிலோ’ அகல் நெடும் ஆறே வீதி. அகல் நெடுந் தெருவே ஆறு.
118 தீவுகளைக் கொண்டுள்ள வெனிஸ் 150 கால்வாய்களைக் கொண்டுள்ளது. ஆங்காங்கே பாலங்கள் உண்டு. தோணி மூலம் தான் போக்குவரத்து. வேகமாகச் செல்லும் தண்ணீர் பஸ்களும் (வாட்டர் பஸ் என்று பெயர்) உண்டு.
இரண்டு மணி நேர நடைப் பயணம், பலூன் பயணம், ஹெலிகாப்டர் பயணம், சொகுசுக் கப்பல் பயணம் என ஏராளமான விதங்களில் வெனிஸைப் பார்த்து மகிழலாம். பெரிய கால்வாயான ‘க்ராண்ட் கானல் பயணம்’ அனைவரும் விரும்பும் ஒன்று.
செயிண்ட் மார்க் பஸிலிகா தேவாலயம் உலகின் ஆகப் பெரிய அழகிய சர்ச் ஆகும். செயிண்ட் மார்க் சதுக்கத்தில் உள்ள இதைப் பார்க்க பெரும் கூட்டம் கூடும். பார்வையாளர்கள் நீண்ட வரிசையில் நின்று தான் பார்க்க முடியும். அழகிய பாரம்பரியமிக்க வியக்க வைக்கும் தேவாலயம் இது.
பஸிலிகா
இத்தாலி முழுவதும் அமைந்துள்ள பஸிலிகாக்களை ஆங்காங்கே காணலாம். நீண்ட அரை வட்ட வடிவிலான அரங்கங்கள் பழைய ரோமானியர் காலத்தில் அமைக்கப்பட்டது. இதுவே பஸிலிகா என அழைக்கப்படுகிறது. பொதுமக்கள் கூடும் இடமாகவும் நீதி வழங்கும் நியாய மன்றமாகவும் அந்தக் காலத்தில் இருந்தது. காலப்போக்கில் கிறிஸ்தவ தேவாலயங்கள் உருவாக ஆரம்பித்து விட்டன.
கண்ணாடி அருங்காட்சியகம்
வெனிஸில் உள்ள கண்ணாடி அருங்காட்சியகம் வியக்க வைக்கும் கண்ணாடிப் படைப்புகளைக் காட்சிப்படுத்துகிறது.
இத்தாலி சென்றதன் அடையாளமாக நினைவுப் பரிசு வாங்க உகந்த இடம் இது.
ப்ரிட்ஜ் ஆஃப் சை
மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் கடைசியாக வந்து பெருமூச்சு விடும் ப்ரிட்ஜ் ஆஃப் சை எனப்படும் பெருமூச்சு பாலம், ரியால்டோ பாலம், டோகே அரண்மனை, வெனிஸுக்கு அருகிலுள்ள முரானோ மற்றும் புரானோ தீவுகள் ஆகியவற்றை வழிகாட்டிகள் காட்டி, பழைய காலக் கதைகளைச் சொல்லி கொண்டே வருவர்.
நமது நேரத்தைப் பொறுத்து, இங்கு பார்க்க உள்ள இடங்களின் பட்டியலும் நீண்டு கொண்டே போகும்
வெரோனா
வெனிஸ் நகரிலிருந்து 121 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது வெரோனா.
வெனிஸ் மற்றும் மிலான் நகர்களுக்கு நடுவில் அமைந்துள்ளது இது.
காதல் காவியங்களில் ரோமியோ-ஜூலியட் காவியத்தை அறியாதவர் இருக்கவே முடியாது. ஷேக்ஸ்பியரின் படைப்பில் மயங்கும் அனைவரும் மேற்கொள்ளும் ஒரு டூர் ரோமியோ-ஜூலியட் டூர்.
இங்குள்ள ஜூலியட் சிலை மிக அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையில் ஜூலியட்டின் மார்பகத்தைத் தொட்டால் நல்ல அதிர்ஷ்டம் வரும் என்பது இங்கு வருவோரின் நம்பிக்கை.
இங்குள்ள ஆம்பி தியேட்டர் அனைவரையும் ஈர்க்கும் ஒரு அரங்கம். 22000 பேர் அமரக்கூடிய இந்த அரங்கம் அபாரமான கட்டிட வடிவமைப்பைக் கொண்ட ஒன்றாகும். வெரோனா ஒபேரா விழா இங்கு ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறுகிறது.
அடிகே நதிக்கரையில் அமைந்துள்ள ஸ்கேலிகிரி ஒரு தற்காப்பு கோட்டையாகும்.
சான் ஜீனோ மக்கியோர் பஸிலிகா உள்ளிட்ட பல இடங்கள் வெரோனாவின் கவர்ச்சி மிகு கட்டிடக்கலை அற்புதங்கள்!
பல்வேறு அருளாளர்களின் நினைவாக அவர்கள் பெயரைச் சூட்டி அமைக்கப்பட்டுள்ள சர்ச்சுகள் பிரமிக்க வைக்கும் பிரம்மாண்டமான கலைப் படைப்புகளாக மிளிர்கின்றன.
வெரோனாவில் உள்ள கடைவீதி உள்ள இடம் வியா மாஜினி. இங்குள்ள பெரிய கடையான பெனிடன் ஸ்டோரின் தரை கண்ணாடியால் ஆனது. இதன் வழியாக, கீழே உள்ள முதலாம் நூற்றாண்டு ரோமானிய வீடுகளின் – அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட – இடிபாடுகளைப் பார்க்க முடியும்.
உணவு வகைகள்
இத்தாலியின் உ.ணவு வகைகள் பிரத்தியேகமானவை. இத்தாலி பாஸ்தா, பிஸ்ஸா, சீஸ் என்றால் அதற்குத் தனி மகிமை தான். சீஸ் உள்ள எந்த உணவு வகையானாலும் அது அனைவரையும் கவரும். இத்தாலி எங்கும் பரவி இருக்கும் உணவு விடுதிகளில் இவை கிடைக்கும்.
நேபிள்ஸ்
மூன்று நாட்களுக்கும் அதிகமாகத் தங்க திட்டமிடும் பயணிகள் ரோமிலிருந்து 139 மைல் தொலைவில் தெற்கு இத்தாலியில் உள்ள நேபிள்ஸ் நகரைப் பார்க்கச் செல்லலாம். நேபிள்ஸை சாகு முன் பார்த்து விடு (See Naples and die) என்ற பழமொழி நேபிள்ஸ் நகரம் எவ்வளவு கலையழகுடன் காட்சி தரும் ஒரு நகரம் என்பதைப் புலப்படுத்தும்
பைசாவின் சாய்ந்த கோபுரம்
55 மீட்டர் உயரமுள்ள சாய்ந்த கோபுரம் பைஸா நகரில் உள்ளது. 1173இல் கட்டப்பட்ட இது இப்போது பத்து டிகிரி சாய்ந்துள்ளது. இதன் எடை மலைக்க வைக்கும் 14453 டன்!
297 படிகளைக் கொண்டுள்ள இந்த கோபுரமும் பார்வையாளர்கள் ஈர்க்கும் ஒன்று!
இத்தாலிக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் உள்ள தொடர்பு
இத்தாலிக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் முக்கிய தொடர்பு உண்டு.
இத்தாலியின் விடுதலைக்காகப் பாடுபட்ட மாபெரும் வீரர் மாஜினியை (தோற்றம் : 22-6-1805 மறைவு: 10-3-1872) மஹாகவி பாரதியார் போற்றிப் பாராட்டியுள்ளார்.
21-11-1908 இந்தியா இதழில் மாஜினியைப் பற்றி வெகுவாகப் புகழ்ந்து அவர் ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். அத்துடன் “மாஜினி என்ற இத்தாலி தேசத்து தேசாபிமானி தம்மால் ஸ்தாபிக்கப்பட்ட்ட ‘யௌவன இத்தாலி’ என்ற சங்கத்திலே செய்து கொண்ட பிரதிக்கினை” என்ற தலைப்பில் அழகிய ஒரு கவிதையையும் இயற்றியுள்ளார். (இது இப்போது மாஜினியின் சபதம் என்ற தலைப்பில் வெளியாகி வருகிறது.)
இத்தாலியைப் பற்றி இரு வார்த்தைகள்
ஒரு பிரம்மாண்டமான புகழோங்கிய கால கட்டத்தில் உள்ள சரித்திரம், இலக்கியம், கட்டிடக் கலை, போர் வீரம், காதல், பண்பாடு ஆகியவற்றின் பின்னணியில் இத்தாலியைச் சுற்றிப் பார்ப்பதென்றால் அதற்குப் பல மாதங்கள் தேவை.
இத்தாலி செல்வதற்கு முன் நமது பயணத்தின் அடிப்படையைத் திட்டமிட்டுக் கொண்டால் அதற்கேற்ப நாம் பார்க்க வேண்டிய இடங்களை நிர்ணயித்துக் கொள்ளலாம்.
ஏனெனில் பல்துறை ஆர்வலருக்கும் கண்கவர் காட்சிகளைத் தரும் நாடு இத்தாலி.
இத்தாலியைப் பற்றி இரண்டு வார்த்தைகள் சொல்லுங்களேன் என்றால் உடனே சொல்லலாம் : சியோ பெல்லோ! (அடடா, அழகோ அழகு)
விண்ணெறி அல்லது திருமாலியம் என்பது சங்ககாலத்திற்கு முன்பிருந்தே தமிழ் மண்ணில் பயிலப்படும் சமய ஒழுங்கு ஆகும். தமிழின் தொன்மையான நூலான தொல்காப்பியம் தமிழர் வாழ்வியலை நான்காகப் பிரித்துக் காண்கிறது. காடும் காடு சார்ந்த நிலப்பரப்பை முல்லை என்றும், மலையும் மலை சார்ந்த நிலப்பரப்பை குறிஞ்சி என்றும், நிலமும் நிலம் சார்ந்த கழனிப் பரப்பை மருதம் என்றும், கடலும் கடல் சார்ந்த நிலப்பரப்பை நெய்தல் என்றும் காண்கிறது. இதில் ‘சிறப்புடைப் பொருளை முதற்படக் கிளர்த்தல்’ எனும் பண்டைய முறையால் முல்லையை முதன்மைப் படுத்திப் பேசும் தொல்காப்பியம், அதற்குக் காரணமான திருமால் வழிபாட்டை முன்னிருத்தி, ‘மாயோன் மேய காடுறை உலகமும்’ என்று தொல்காப்பியம் செப்புகிறது.
இதன் வழி பின் வரும் காப்பியமான சிலப்பதிகாரம், “பெரியவனை மாயவனை” என்று தெளிவாக திருமால் எல்லாத் தெய்வங்களுக்கும் பெரியவன், தொன்மையானவன் என்று செப்புகிறது. திருக்குறளைச் சிறப்பித்துப் பேசும் திருவள்ளவ மாலையில் சங்கப் புலவரான பரணர், “தேவரில் திருமால் எனச்சிறந்த தென்பவே பாவிற்கு வள்ளுவர்வெண்பா” என்கிறார். ஆக, பெரியவனை, மாயவனை தொன்று தொட்டு தமிழர்கள் போற்றி வழிபட்டு வருவது தெரிகிறது.
நமது ஊரில் புழங்கும் கருப்பன், கருப்பணசாமி, மாயாண்டி, பரமன் போன்ற பெயர்கள் அனைத்தும் கண்ணன் எனும் கருந்தெய்வத்தையே குறிக்கும். கண்ணனின் உடன் பிறப்பான பலராமன் பெயரை முன் வைத்து, வெள்ளையன், வெள்ளைச்சாமி, அண்ணாகண்ணன் போன்ற பெயர்களை வைக்கும் பழக்கமும் தமிழ் மண்ணில் தொன்று தொட்டு உண்டு. தமிழின் ஆகப் பழமையான பானை ஓட்டுப் பெயர்களில் கண்ணன், சாத்தான், ஆதன் போன்ற பெயர்கள் இருப்பதை தொல்லியல் கூறும்.
இத்தகைய பழமையான தெய்வ நெறியின் சம்பிரதாயக் கூறுகளை விளக்கும் முகமாக திரு. ச. நாகராஜன் அவர்கள், “வைணவ அமுதத் துளிகள்” எனும் நூலை எழுதியுள்ளார். சங்கம் மருவிய காலத்தில் தமிழ் நெறிகள் வடமொழியை அரவணைக்கத் தொடங்கின. இது பெரும்பாலும் அரசின் ஆணையின் பேரில் நடந்திருப்பதாகவே சரித்திரம் கூறுகிறது. மௌரியர் காலத்திலிருந்து வடபுலத்தில் வாழும் அரசர்கள் தென்னகத்தோடு வர்த்தக, அரசியல் தொடர்புடன் இருந்ததைச் சங்கம் பகரும். வேளிர் எனும் 18 குடிகள் வடக்கிருந்து தெற்கே வந்து கலந்ததை கபிலர் சொல்லுவார். கிபி 7-8ம் நூற்றாண்டில் அரச குடும்பங்களில் சாளுக்கியரோடும், தெலுங்கர்களோடும், களப்பிரரோடும், சௌராஷ்ஷியரோடும் திருமண உறவுகள் ஏற்பட்டதின் காரணமாக வடமொழி ஆதிக்கம் தமிழ் மண்ணில் அதிகமாகவே இருந்திருக்கிறது. இவ்வரசர்கள் சதுர்வேதி மங்கலங்கலை உருவாக்கி, பிரம்மதேயம் எனும் பெயரில் பிராமணர்களை ஆதரிக்கத் தொடங்கினர். தமிழ்ப் பிராமணர்கள் வேதம் ஓதி, வடமறைகளை பாதுகாக்கும் பொறுப்பை அளித்தனர். இதன் பயனாய் தமிழ்ச் சமய ஒழுங்கு மெல்ல, மெல்ல ஆரியக் கலப்பை ஏற்றுக் கொள்ளத் தொடங்குகிறது. வடமொழி கலந்து தமிழை எழுதும் “மணிப்பிரவாளம்” எனும் புலவர் நடை பிரபலமாகத் தொடங்குகிறது. தமிழ்ப் பிராமணர்கள் அரசு ஆதரவு பெற்று வடமொழியிலும், தெலுங்கிலும் இலக்கியம் படைக்கத் தொடங்கினர். இதன் தாக்கம் விண்ணெறியிலும் தெரிவதை இந்த நூல் தெளிவாகக் காட்டுகிறது. வேதாந்த தேசிகர் எனும் காஞ்சிபுரத்து பன்மொழிப் புலவர் இயற்றிய பல்வேறு சமிஸ்கிருத நூல்கள் பற்றிய விவரணை இந்த நூலில் கிடைக்கிறது.
இதே காலக் கட்டத்தில் ஒரு தமிழ் மறுமலர்ச்சியும் காணக்கிடைக்கிறது. மதுரகவி எனும் பிராமணர், காரிமாறன் எனும் நான்காம் வருணத்தைச் சேர்ந்த அருளாளர் சொல்லிய திருவாய்மொழியைத் தமிழ் வேதம் என பிரகடணப்படுத்த. நம்மாழ்வாரை குலகுருவாகக் கொண்டு ஒரு புதிய புரட்சி சம்பிரதாயத்தை நாதமுனிகள் எனும் தமிழ் பிராமணர் தொடங்குகிறார். பெண்ணிய கருத்தாக்கம் கொண்ட இப்புதிய வழியை “ஸ்ரீ சம்பிரதாயம்” என அழைத்தனர். அகமரபிற்கு வடமொழி ஆதரவைத் தேட உருவாக்கிய நெறிதான், “ஸ்ரீவைஷ்ணவம்” என்பது. திருமால் எனும் பதத்தில் முதலில் “திரு” வருவதைக் கொண்டு “ஸ்ரீ வைஷ்ணவம்” முன் வைக்கப்படுகிறது. அரசு ஆதரவு கொண்ட வடமொழியுடன் உறவு வைத்துக் கொண்டு தமிழ் மரபு முன்வைக்கப்படுகிறது. அரங்கநாதன் வடமொழிக்கு பின்புறம் காட்டி, தென்மொழிக்கு முகம் காட்டுகிறான் எனும் புரட்சிப்போக்குத் தொடர்ந்ததை கம்பன் தனது சடகோபரந்தாதியில் பதிவு செய்கிறான். அதன் பிரகாரம் தென் தமிழ் நாட்டில் தமிழ் கோயில் மொழியானதையும், பெருமாள் புறப்பாட்டில் தமிழ்ப் பிரபந்தங்கள் முன் செல்ல, இறைவன் தமிழ் நோக்கி ஓட, வேதம் பெருமாளுக்குப் பின்னால் தொடர்வதாக சரித்திரம் மாறிப் போகிறது. இப்பெரும் புரட்சி காலப்போக்கில் மக்கள் மனதிலிருந்து விலக வடமொழி கலந்த வியாக்கியானங்கள் வழி வகுக்கின்றன. வடமொழி அறிந்த பிராமணர்களுக்கு அகமரபை விளக்க உருவாக்கிய இந்த இலக்கிய வகை விண்ணெறி என்பதே ஆரிய நெறி என்பது போன்ற மாயத் தோற்றத்தை காலப்போக்கில் உருவாக்கிவிட்டது.
இவ்வகை சம்பிரதாயத்திலிருந்து எடுத்த துளிகள்தான் இந்த நூல். முப்பத்தோரு அரிய கட்டுரைகள் மூலம் விண்ணெறியின் சில முகங்களை ச. நாகராஜன் காட்ட முற்படுகிறார். பின்னால் பகவத் கீதையின் பெருமையை ஏழு கட்டுரைகளில் விளக்குகிறார். தேன் கூட்டில் இருக்கும் தேன் பல்வேறு மலர்களின் தேன் சுவை கொண்டிருப்பது போல் இந்த நூல் பல்வேறு நூல்களின் சாரமாக நமக்குக் கிடைக்கிறது. எளிய தமிழ் நடையில் அமைந்திருக்கிறது. அரிய கருத்துக்களை முன் வைக்கிறது. விண்ணெறி முன் வைக்கும் முக்கிய கருதுகோள், இறைவனை அடைய பக்தி முக்கியம். பக்தி செய்ய சாதி வித்தியாசம் கிடையாது, ஆண் பெண் வேறுபாடு கிடையாது என்பது. அதை சில கட்டுரைகள் விளக்குகின்றன. அடுத்தது, இறைவனை விட அடியார் செய்யும் பக்திக்கே சிறப்பு என்பது. அடியார்தம் பெருமையை இறைவனும் விரும்புகிறான் என்பது. எனவே “பாகவத அபச்சாரம்” என்பது இறைவனிடம் படும் குற்றங்களை விடக் கொடியது என்றும் எச்சாதியில் இருந்தாலும் பாகவதர்கள் போற்றப்பட வேண்டியவர்களே எனும் சமதர்மக் கருத்து இந்நூலில் வலிந்து சொல்லப்படுகிறது.
இந்த நூல் தமிழ் கூறு நல்லுலகிற்கு விருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை. தேனீ போல் தான் ச. நாகராஜனும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார். இது அவரது 100 நூலாக அமைகிறது. இதற்கு நான் சிறப்புரை வழங்குவது என் பாக்கியம்.
ஜனவரி 15, 2022 முனைவர் நா. கண்ணன் மேனாள் பேராசிரியர் கீல் பல்கலைக் கழகம் கீல், ஜெர்மனி
###
நூலில் நான் வழங்கிய என்னுரையில் ஒரு பகுதி:-
என்னுரை
தெய்வத் தமிழின் முக்கிய அங்கம் பக்திப் பாடல்கள், பாசுரங்கள்!
நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் இல்லாத விஷயமே இல்லை.
இந்த வைணவப் பெருங்கடல் அமிர்தக் கடல். அதன் ஒரு துளி சுவையைப் பருகினால் கூட அமர நிலையை அது தரும்.
வைணவ அமுதத்தின் ஒரு சில துளிகளைக் கட்டுரைகளாக வடித்து வந்தேன்.
இதை www.tamilandvedas.com இல் வெளியிட்ட லண்டன் திரு ச. சுவாமிநாதன் அவர்களுக்கு எனது நன்றி.
இந்த நூலுக்கு அழகிய பொருள் பொதிந்த ஒரு அணிந்துரையை ஆய்வுரையாகத் தந்திருப்பவர் வைணவ இலக்கியத்தைக் கரை கண்ட பண்பாளர் பேராசிரியர் முனைவர் திரு நா. கண்ணன் அவர்கள். வைணவ இலக்கியத்தில் ஆழ்ந்திருக்கும் அறிவியல் புதையலைத் தன் ஆய்வின் மூலம் கண்டு அதை ஆன்மீகத்துடன் குழைத்து இவர் மக்களுக்குச் சொற்பொழிவுகள் மற்றும் நூல்கள் வாயிலாகத் தந்து வருகிறார். இவரது சொற்பொழிவுகளைக் கேட்பதே ஒரு சுகமான அனுபவம்.
மதுரையில் முனைவர் பட்டத்தைப் பெற்றுப் பின் மேல் படிப்பை ஜப்பானில் முடித்த இவர் அங்கிருந்து ஜெர்மனிக்குச் சென்று ஜெர்மன் குடிமகனாக ஆகி வேதிமக் கடலாய்வு ஒன்றைச் செய்து உலகின் ஒட்டு மொத்தக் கவனத்தையும் ஈர்த்தார். 15 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜெர்மனியிலிருந்து தென் கொரியா சென்று அங்கு 8 ஆண்டுகளும் பின்னர் மலேசியாவிற்கும் பின்னர் சிங்கப்பூருக்கும் பணியாற்றச் சென்றார். கோலாலம்பூரில் விவேகப் பசுமை முனையம் ஒன்றை நிறுவி அதன் நிர்வாக இயக்குநராக இருக்கிறார். உலகளாவிய விதத்தில் பல மொழிகளில் வெளி வரும் பத்திரிகைகளில் கதை, கட்டுரை, கவிதைப் படைப்புகளை வெளியிட்டு வரும் இவருக்குத் தமிழ் என்றால் உயிர்.
காஞ்சி காமகோடி பீடம் ஜகத்குரு அவர்கள் முதல் பல்நாட்டு அறிஞர்கள் முடிய பலரிடமிருந்து பல விருதுகளைப் பெற்றுள்ளார். இவ்வளவு பெருமை வாய்ந்தவர், இந்த நூலுக்கு அணிந்துரை நல்கி என்னைக் கௌரவித்தமைக்காக இவருக்கு எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் புத்தகத்தை வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கும் அவரது குழுவினருக்கும் என் நன்றி உரித்தாகுக!
நன்றி.
பங்களூர் ச.நாகராஜன் 15-1-2022
*
நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.
தமிழில் தனிப்பாடல்கள் இருப்பதுபோல சம்ஸ்க்ருத மொழியில் சுபாஷிதங்கள் என்ற கவிதைகள் இருக்கின்றன. இவைகளின் எண்ணிக்கை எண்ணிலடங்கா. 20,000 சுபாஷிதங்களுக்கு மேல் புஸ்தக வடிவில் கிடைக்கின்றன. இவைகள் பொன்மொழிகள் போன்றவை. பெரும்பாலும் நீதிகளை போதிக்கும். ஆயினும் இவை தொடாத விஷயங்களே இல்லை. மருத்துவம், செக்ஸ், ஜோதிடம் முதலிய பல்வேறு விஷயங்கள் பற்றியன அவை.
ராஜஸ்தானில் ஜோத்பூர் அருகில் உள்ள கல்வெட்டில் கக்குக என்னும் பிரதிகார வம்ச மன்னனின் சுபாஷித பாடல் உள்ளது. இது கிபி. அல்லது பொது ஆண்டு 862-ல் பொறிக்கப்பட்ட கல்வெட்டு. காக்க என்ற மன்னனின் மகன் கக்குக. அவன் சம்ஸ்க்ருத மொழியில் வல்லவன். கல்வெட்டும் சம்ஸ்க்ருத மொழியில் உள்ளது. கல்வெட்டைக் கவிதை வடிவில் பாடியவர் கவிஞர் மைத்ரி ரவி.
இந்தக் கல்வெட்டு இருக்கும் இடம் கண்டியால. இது ஜோத்பூர் அருகிலுள்ள கிராமம். கல்வெட்டு விநாயகர் துதியுடன் துவங்குகிறது. கக்குக என்ற மன்னனே எழுதிய பாடல் இது என்று கல்வெட்டு குறிப்பிடும் பாடல் வரிகளில் மன்னனுக்குப் பிடித்த விஷயங் கள் கல்வி, தர்மம், செல்வம், என்று சொல்லப்பட்டுள்ளது.
இதோ சுபாஷித வரிகள்
யெளவனம் விவிதைர் போகைர் மத்யமம் ச வயஹ ஸ்ரியா
வ்ருத்த பாவச்ச தர்மேண யஸ்ய யாதி ஸ புண்யவான்
கல்வெட்டை எழுதிய மைத்ரி ரவி ஒரு ‘மக’ பிராமணன். இவர்கள் சக த்வீப பிராமணர்கள் என்றும் அழைக்கப்படுவர்.இந்தியாவுக்கு வெளியே வசித்தவர்கள் என்றும் அங்கு படை எடுப்புகள் நடந்ததால் இந்தியாவுக்குள் வந்தவர்கள் என்றும் கருதப்படுகிறது.
கக்குக என்னும் மன்னன், அருகிலுள்ள ஆபீரர் தாக்கு தலில் இருந்து அந்த இடத்தைக் காப்பாற்றியதாக கல்வெட்டு கூறுகிறது.
XXX
நேபாள மன்னரின் சிவ ஸ்துதி
நேபாள நாட்டின் மன்னர் பூபால சந்திர , சம்ஸ்க்ருத மொழியில் புலமை வாய்ந்தவர். அவர் சிவபெருமான் மீது இயற்றிய துதி 1690ம் ஆண்டுக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது
நேபாள நாட்டின் தலை நகரமான காத்மாண்டுவில் புகழ்பெற்ற சிவன் கோவில் பசுபதிநாதர் கோவில் இருக்கிறது. அவரைப் போற்றும் பாடல் இது:
வர லப்த ப்ரஸாத தே தீப்ய மான மானோ ன்னத ஸ்ரீ ரகு வம்சாவதார ரவிகுல திலக
ஹநுமத்வஜ ஜனேபாலேஸ்வர மஹா ராஜாதி ராஜ ஸகல ராஜசக்ராதீச்வர
XXX
கவிஞர் கமல லாஞ்சன கவிதை
உலக நிலையாமை குறித்த ஒரு பாடல் ஹிமாச்சல பிரதேஷின் சம்பா பகுதியில் கிடைத்திருக்கிறது சம்பா அரசன் நாக பாலனின் புகழைப் பாடும் இக்கவியை அவரது குருவான கமலா லா ஞ்சன இயற்றியுள்ளார். லலித வர்மனின் 17-ம் ஆட்சி ஆண்டில் இது எழுதப்பட்டது லலிதா வர்மனின் ஆட்சியின் கீழ் குறு நிலா மன்னராக இருந்தவர் நாக பால..
மன்னன் லலித வர்மன் 1159ம் ஆண்டில் ஆட்சி புரிந்தார் . அவர்தான் குறுநில மன்னருக்கு ராஜநா க பட்டத் தை அளித்தார் நாக பால இறந்தவுடன் அவருடைய மனைவி தீப்பாய்ந்து உயித்துறக்கத் துணிந்தார். ஆயினும் அமைச்சர்கள் அவரைத்த தடுத்து நிறுத்தினர். அவளும் ஒரு குளம் வெட்டி சமூக சேவை செய்ததைக் கல்வெட்டு குறிப்பிட்டிடுகிறது 17 கவிதைகள் கொண்ட கல்வெட்டில் கடைசி பகுதி மட்டும் தான் மிஞ்சியுள்ளது. அதிலுள்ள கவிதை இதோ:-
ஜவ நப வெல்லோல்ல கல்லோல்ல மாலா
ப்ரதிமித சசிலேகா சஞ்சலம் ஜீவலோகம்
ப்ரதிபதமவபுத்தயோ சீகரத்ஸாத பல்ஹா
நிஜபதி ஸு க்ருதார்தம் புஷ்கரா தாரஸேதம்
சம்ஸ்க்ருதம் தெரியாதவர்களும் கூட இதிலுள்ள எதுகை மோனைகளை ரசிக்கலாம்..
அற்புதங்களை நிகழ்த்தி அனைவரையும் வியக்க வைத்த அற்புத சித்தர்!
முக்திக்கு வழி சொன்ன முக்தர்!
இந்தியாவின் திரண்ட வடிவமாகத் திகழ்ந்து இந்தியாவின் உண்மை சொரூபத்தை உலகிற்குக் காட்டிய உன்னத தெய்வீகப் பேரருளாளர்!
வெளிநாட்டு அறிஞர்களையும், மேதைகளையும் இந்தியாவை நோக்கிக் கவர்ந்த யோகி!
அமெரிக்காவை ஆன்மீகத்தால் வென்றதோடு உலகெங்கும் பயணித்து அனைவரின் உயர்வுக்காகவும் பாடுபட்ட உத்தமர்!
ஏழைகளின் துயர் தீர்க்கவும், அவர்களை உயர்த்தவும் வானிலிருந்து உலகிற்கு இறங்கி வந்த ராமகிருஷ்ண மிஷன் ஸ்தாபகர்!
இந்தியாவை அறிய வேண்டுமெனில் முதலில் அறிய வேண்டிய மஹா புருஷராக வாழ்ந்து காட்டிய வித்தகர்!
இப்படி ஸ்வாமி விவேகானந்தரின் அருமை பெருமைகளை முடிவற்று முழங்கிக் கொண்டே இருக்கலாம்!
குறுகிய காலமே வாழ்ந்த அவரது வாழ்வில் தான் எத்தனை நிகழ்வுகள். அனைத்தும் அருமையானவை; சத்தியத்தோடு பரிமளிப்பவை.
அந்த நிகழ்வுகளின் சிறு துளிகளே இந்த நூல்.
இந்தக் கட்டுரைகளைப் படித்து உத்வேகம் பெற்று ஸ்வாமி விவேகானந்தரின் அனைத்து உரைகளையும் படித்து அவர் காட்டிய வழியில் ஹிந்து மதத்தின் பெருமையை உலகெங்கும் பரப்பி உயர்வோமாக!
ஞான ஆலயம், பாக்யா, முதல் ஓசை உள்ளிட்ட பத்திரிகைகளிலும், www.tamilandvedas.com இணையதள ப்ளாக்கிலும் அவ்வப்பொழுது நான் எழுதி வந்த கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூலாக மிளிர்கிறது.
இந்தக் கட்டுரைகளை வெளியிட்டு என்னை ஊக்குவித்த ஞான ஆலயம் ஆசிரியர் திருமதி மஞ்சுளா ரமேஷ், பாக்யா ஆசிரியர் திரு கே.பாக்யராஜ், லண்டன் திரு சுவாமிநாதன், திரு தென்னவன் பாலு ஆகியோருக்கு எனது நன்றி.
இந்த நூலை அழகுற அமைத்து வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக!
புனே நகரைச் சேர்ந்த பேராசிரியர் திஸ்கல்கர் 1962ல் இறந்ததற்கு 30 ஆண்டுகளுக்குப் பின்னர், அவருடைய குடும்பத்தினர் அரசாங்க உதவியுடன் கல்வெட்டுகளில் உள்ள 800 சம்ஸ்க்ருத, பிராக்ருதக் கவிஞர்களின் விவரங்கள் அடங்கிய புஸ்தகத்தை 1992ல் வெளியிட்டனர்.
திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலின் 11 நிலைக் கோபுரத்தைபி போற்றி நான்கு ஸம்ஸ்க்ருத கவிதைகளை இயற்றியுள்ளார்.
இந்தக் கல்வெட்டு கோவிலுக்குள் இருக்கிறதா என்பதை புஸ்தகம் வெளியிடவில்லை.
XXX
வேதாந்த தேசிக
புகழ்பெற்ற வைஷ்ணவ ஆசார்யர் , அறிஞர் ; மாதவரின் மகன்; ரங்கநாதரின் விக்ரஹத்தை 1370ம் ஆண்டில் கோபனார்ய என்பவர் மீண்டும் ஸ்தாபித்ததைப் பாராட்டி இ யற்றிய ஸம்ஸ்க்ருதக் கவிதைகள் அடங்கிய கல்வெட்டு . தெலுங்கு சோழ மன்னன் சிங்க காலத்தில் இது நிகழ்ந்தது .
இதிலும் கல்வெட்டு இருக்கும் இடம் குறிப்பிடப்படவில்லை. நிகமாந்த வேதாந்த தேசிகர் 1369ல் இறந்ததாக விக்கிபீடியா முதலிய க்ளிக் களஞ்சியங்கள் தெரிவிக்கின்றன. மேலும் சுவாமி தேசிகரின் தந்தை பெயரும் கலைக்களஞ்சிய குறியிலிருந்து மாறுபட்டுள்ளது. ஆக இரண்டு வட்டாரத்து தகவலில் எதோ ஒன்றில் பிழை உளது.
இந்தக் கல்வெட்டு கோவிலுக்குள் இருக்கிறதா என்பதை புஸ்தகம் வெளியிடவில்லை.
XXX
என்னுடைய கருத்து
800 ஸம்ஸ்க்ருத , ப்ராக்ருத கவிஞர்களின் பெயர்களைத் தொகுத்தது மகத்தான சாதனை. இது போல தமிழ்க் கல்வெட்டுகளில் மேக் கீர்த்திகள் முதலிய கவிதைகளை இயற்றியோரின் பெயர்களைத் தொகுக்க வேண்டும். 800 கவிஞ ர்கள் தொகுத்த கவிதைகளை வெளியிட வேண்டும். அது பல தொகுதிகளாக வருகையில் மொழி பெயர்ப்புடன் வரவேண்டும் .
XXX
வைகுண்டன் உதயணன்
இவரது கல்வெட்டு தமிழ் மொழியில் வட்டெழுத்தில் உள்ளது. இந்தப் புஸ்தகத்தில் அவர் பெயர் வருவதால் கவிதைகள் சம்ஸ்க்ருதத்தில் உள்ளது என்று ஊகிக்கலாம்.
கொல்லம் ஆண்டு 371ல் அதாவது 1169ல் இயற்றப்பட்டது வெள்ளாணி கல்வெட்டு என்று தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுப்பு சொல்கிறது வேணாட்டு அரசர் வீர ராம வர்மா நிலத்தையும், அதில் வேலை செய்ய பணியாட்களையும் தானம் செய்தது பற்றி கல்வெட்டு குறிப்பிடுகிறது.
XXX
எனது கருத்து
கல்வெட்டுக் கவிதைகளை தொகுதி தொகுதியாக வெளியிடுவதோடு , அவைகளில் வரும் பெயர்கள், கோத்திரங்கள், கோவில்கள், அரசர்கள் போன்றோரின் விவரங்களையும் தொகுத்து ஆராய வேண்டும். இந்தியாவில் தமிழ் நாட்டில்தான் கல்வெட்டுகள், தாமிர சாசனங்கள் அதிகம். உலகப் புகழ்பெற்ற தொல்பொருத்தி துறை அறிஞர், காலம் சென்ற டாக்டர் இரா. நாகசாமி, யாவரும் கேளிர் என்ற அவருடைய நூலில் கல்வெட்டுகள் தரும் அரிய விஷயங் களை , இலக்கிய தகவல்களோடு இணைத்து வெளியிட்டுள்ளார். அது போன்ற புஸ்தகங்களை , நிறைய வெளியிட வேண்டும்.
உலகிலுள்ள மிக முக்கியமான வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைக் கண்டுபிடிக்க சில மர்ம தூதர்கள் உதவினார்கள் . கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட் உலகப் புகழ்பெற்ற இந்துக் கோவில் ஆகும். இதைக் கண்டுபிடிக்க உதவியது ஒரு பட்டுப் பூச்சி (Butterfly). ஹென்றி முகோட் என்ற பிரெஞ்சு ஆராய்ச்சியாளர் பட்டுப் பூச்சிகளைச் சேகரித்து வந்தார். அவர் ஒரு அபூர்வ பட்டுப் பூச்சியைப் பார்த்தவுடன் அதைப் பிடிப்பதற்காக கையில் (net) வலையைத் தூக்கிக்கொண்டு அதன் பின்னால் சென்றார். நீண்ட தூரம் அடர்ந்த காட்டுக்குள் சென்ற போது பிரம்மாண்டமான ஆல மரங்களுக்கு இடையே மாபெரும் கட்டிடங்கள் இருப்பதை அறிந்து உலகிற்கு அறிவித்தார். அதுதான் தென் கிழக்கு ஆசியாவை 1500 ஆண்டுகளுக்கு ஆண்ட இந்து சாம்ராஜ்யத்தின் சிதைவுகளின் ஒரு பகுதி என்று தெரிந்தது. அதன் மூலம் அங்கோர்வாட் கண்டுபிடிக்கப்பட்டது.
பூர்வ ஜென்மத்தில் இந்து சிற்பியாக இருந்த ஒருவன் பட்டுப் பூச்சி வடிவத்தில் வந்து ஹென்றியை காட்டுக்குள் வரும்படி செய்தானா?
xxx
வெள்ளைக்காரர்கள் இந்தியாவை ஆண்ட காலத்தில் அஜந்தா பகுதியிலுள்ள காடுகளில் புலி வேட்டை ஆடுவது வழக்கம். ஜான் ஸ்மித் என்பவர் புலி வேட்டை ஆடிய போது , ஆடு மேய்க்கும் ஒரு சிறுவன் வந்து அவர்களை ஒரு குகைக்குள் அழைத்துச் சென்று பிரமாண்டமான அஜந்தா குகைகளைக் காட்டிவிட்டு போய்விட்டான். அவற்றை ஆராய்ந்ததில் புராதன ஓவியங்களும் சிற்பங்களும் வெளிப்பட்டன..
பூர்வ ஜென்மத்தில் புத்த பிட்சுவாக இருந்த ஒருவர் ஆட்டு இடையனாக வந்தானா ?
Xxx
எகிப்திய பிரமிடுகள் கண்டுபிடிக்கப்பட்டதும் மர்மமான முறையில்தான். ஒரு அராபியன் திடீரென்று தோன்றிய ஒரு நரியை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தான். அவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அது பிரமிடைச் (Pyramids) சுற்றி இருந்த மணலுக்குள் இருந்த ஒரு குழியில் விழுந்து மறைந்தது. மணலுக்குள் எப்படி அப்படி ஒரு சுரங்கம் என்று அராபியன் ஆராய்ந்தபோது பிரம்மாண்டமான எகிப்திய பிரமிடுகளுக்குள் சித்திர எழுத்துக்களும் ரத்தினம் பதித்த சித்திரங்களும், மம்மி (Mummy) களும் மறைந்து இருந்ததை உலகிற்கு அறிவித்தான்.
எகிப்திய மன்னனே நரியாக வடிவெடுத்து வந்தானோ!
xxx
இஸ்ரேலில் சாக்கடல் (Dead Sea) பகுதியில் குகைகளுக்குள் 2200 ஆண்டுப் பழமையான பைபிள் சுவடிகள் (Dead Sea Scrolls) கண்டுபிடிக்கப்பட்டதும் ஒரு ஆட்டினால்தான். ஒரு ஆட்டிடையன் காணாமற்போன ஒரு ஆட்டைத்தேடி ஒரு குகைக்குள் நுழைந்தான் . அப்போது அவன் கண்டுபிடித்த சுருள்கள் (Scrolls) பைபிள் வரலாற்றையே மாற்றியது
யார் அந்த ஆட்டு இடையன்? கிறிஸ்துவா? அவர்க்கு முந்திய மோஸஸின் மறுபிறவியா?
xxx
ஆதி சங்கரர், காட்டின் வழியே செல்லுகையில், கர்ப்பம் அடைந்த ஒரு தவளைக்குப் பாதுகாப்பாக ஒரு பாம்பு மழை நீர் விழாமல் தன் படத்தைக் குடை போல விரித்து நிற்பதைக் கண்டு அதிசயித்தார் . அந்த இடத்தின் அபூர்வ தன்மையை அறிந்து அங்கே சிருங்கேரி மடத்தை ஸ்தாபித்தார்.
xxx
வீர பாண்டிய கட்டபொம்மன், காட்டில் வேட்டை ஆடச் சென்றபோது அவனது நாய்கள் ஒரு முயலை விரட்டிச் சென்றன. ஒரு குறிப்பிட்ட இடம் வந்தவுடன் முயல், திடீரென்று வீரத்துடன் நாய்களை விர ட்டத் துணிந்தது. அந்த இடத்தின் வீரத் தன்மையை அறிந்து அங்கே கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையைக் கட்டினான்.
xxx
மதுரை மீனாட்சி சுந்தரேசஸ்வரர் கோவில் உலகப் புகழ்பெற்ற கலைப் பொக்கிஷம் ஆகும். அது தோன்றிய, வரலாறும் ஒரு மர்மமான சூழ்நிலையில்தான். தனஞ்சயன் என்ற வணிகன், வியாபாரத்தை முடித்துக் கொண்டு மதுரைக்கு வரும்போது , கடம்பவனக் காட்டின் வழியாக வந்தான். அங்கே ஒரு அதிசய ஜோதியை- ஒளியைக் கண்டான். அதைக் கவனித்தபோது தேவ லோகத்தில் இருந்து இந்திரன் முதலானோர் வந்து ஒரு லிங்கத்துக்குப் பூஜை செய்வதைக் கண்டான். மறுநாள் பகற்பொழுதில் அதை பாண்டிய மன்னனுக்குத் தெரிவிக்கவே புதிய மதுரை நகரமும் அதன் மத்தியில் மீனாட்சி கோவிலும் கட்டப்பட்டன.
யார் அந்த தனஞ்சயன்? இறைவன் அனுப்பிய மர்ம தூதனோ !!
இப்படி வரலாறு நெடுகிலும் சில மர்ம தூதர்கள் வந்து, மறைந்து போன செல்வங்களை, மர்மங்களை வெளிப்படுத்துகின்றனர்.
இது Mysterious Messengers for Ajanta, Angkor Wat and Sringeri என்ற தலைப்பில் 2011ல் வெளியிட்ட என்னுடைய கட்டுரையின் சுருக்கம் .
Mysterious Messengers for Ajanta, Angkor Wat and Sringeri
14 Nov 2011 — There he was trapped amidst some ruins. He was surprised to see vast ruins in a thick forest. Now his interest moved slowly from the butterflies …
Tags- மர்ம தூதர்கள், அஜந்தா, அங்கோர்வாட், சிருங்கேரி, மதுரை , பாஞ்சாலங்குறிச்சி
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
அறிவியல் அறிஞர் வாழ்வில்.. – (1)
ச.நாகராஜன்
யூலரின் பதில்!
(1707 – 1783)
பிரபல கணித மேதையான யூலர் (LEONHARD EULER) 1766ஆம் ஆண்டு தனது 59வது வயதில் நோய்வாய்ப்பட்டார். அவரது கண்பார்வை மங்கிப் போய், பார்வையை இழந்து விட்டார். ஆனால் மனதிலேயே எந்தக் கணிதத்தையும் போட்டு விடும் ஆற்றல் அவருக்கு இருந்ததால் தனது கண் பார்வை போனது பற்றி அவர் சற்றும் கவலைப்படவில்லை.
அடுத்த 17 ஆண்டுகளில் அவர் தனது நூல்களைத் தொடர்ந்து படைத்து வந்தார். பாதிக்குப் பாதியான அவரது நூல்கள் இந்த 17 ஆண்டுகளில் இயற்றப்பட்டவை தான்!
அவருக்கு கண்ணில் ஒரு அறுவைச் சிகிச்சை நடந்தது. அது தோல்வியில் முடிந்தது. பார்வை வரவில்லை. எப்படி இனி நீங்கள் உங்கள் வேலையைத் தொடரப் போகிறீர்கள் என்று அவரைக் கேட்ட போது யூலர் கூறினார் : இனி மேலாவது எதுவும் எனது கவனத்தைக் குலைக்காமல் இருக்கும். (Atleast now, nothing will distract my attention).
அவர் போட்ட கணிதப் புதிர்களில் இதுவும் ஒன்று:-
ஒரு வியாபாரி சில குதிரைகளையும் காளைகளையும் வாங்கினான். அவன் கொடுத்த தொகை 1770 டேலர். ஒவ்வொரு காளைக்கும் அவன் கொடுத்த பணம் 31 டேலர். ஒவ்வொரு குதிரைக்கும் அவன் கொடுத்த பணம் 21 டேலர். அவன் எத்தனை காளைகள் வாங்கினான்? எத்தனை குதிரைகள் வாங்கினான்? (Taler – எகிப்திய நாணயம்)
தீர்வு:
இதை 31x + 21y = 1770 என்ற சமன்பாட்டால் தீர்க்க வேண்டும்.
வரும் விடைகள் மூன்று.
காளைகள் 9 ; குதிரைகள் 71
காளைகள் 30 ; குதிரைகள் 40
காளைகள் 51 ; குதிரைகள் 9
மூன்று விடைகளும் சரி தான்!
*
பைத்தியமாக நடித்த கணித மேதை அல்ஹாஸன்
(965-1039)
இராக்கில் பஸ்ரா என்ற நகரில் பிறந்தவர் இபுன் அல்-ஹய்தம்.
பெரிய இயற்பியல் மற்றும் கணித மேதை. அவர் அல்ஹாஸன் என்ற பெயரால் நாடு முழுவதும் பிரபலமானார்.
எகிப்தில் தான் அவரது வாழ்க்கையில் பெரும்பாலான பகுதி கழிந்தது.
நைல் நதியில் வருடந்தோறும் வெள்ளப் பெருக்கு ஏற்படுவது வழக்கம்.
அதனால் ஏற்படும் சேதமும் அதிகம்.
அல்ஹாஸன் தன்னால் நைல் நதி வெள்ளத்தைத் தடுக்கும்படியான ஒரு மெஷினை செய்ய முடியும் என்று கூறி வரவே இது எகிப்தை ஆண்ட அல்-ஹகீம் காதிற்கு எட்டியது.
உடனே அவரை கெய்ரோவிற்கு வருமாறு அல்-ஹகீம் அழைப்பு விடுத்தான்.
மன்னரின் அழைப்பு ஆயிற்றே. உடனே அல்ஹாஸன் கெய்ரோவிற்குக் கிளம்பினார்.
ஆனால் அங்கு சென்ற பிறகு தான் தெரிந்தது, சொன்னபடி தான் ஒரு மெஷினைச் செய்யவில்லை என்றால் மன்னனின் கோபத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும், தனது உயிர் நிலைக்காது என்று!
நன்கு யோசித்தார். எகிப்தில் பைத்தியங்களுக்குத் தனி சலுகை கொடுக்கப்படுவது வழக்கம்.
ஆகவே அவர் பைத்தியமானது போல நடிக்க ஆரம்பித்தார்.
அவரது நடிப்பு அசல் பைத்தியங்களையே தோற்க அடிக்கும் படி இருந்ததால் அவர் மன்னனின் கோபத்திற்கு ஆளாகவில்லை.
இந்த நடிப்பை 1021ஆம் ஆண்டு அல்-ஹகீம் இறக்கும் வரை அவர் தொடர்ந்தார்.
பின்னர் அவர் ‘பைத்தியம் தெளிந்து விட்டது’!
பெரும் கணீத மேதைகளே வியக்கும் படி அவர் ஏராளமான கணிதப் புதிர்களைப் படைத்திருக்கிறார்!
மனித குலம் வாழ்வாங்கு வாழ்ந்து உய்யும் பொருட்டு பகவான் கிருஷ்ண பரமாத்மாவே அருளிய நூல் பகவத் கீதை.
இதைப் பற்றிய ஏராளமான அற்புதமான உண்மைகளை இந்த நூலில் காணலாம்.
கீதை வழியை உணரலாம்; காணலாம்; அதன் வழி செல்லலாம்!
இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ள கட்டுரைகள் ஞான ஆலயம் மாத இதழிலும், www.tamilandvedas.com இணையதள ப்ளாக்கிலும் அவ்வப்பொழுது வெளி வந்தவை.
இவற்றை வெளியிட்ட ஞான ஆலயம் ஆசிரியர் திருமதி மஞ்சுளா ரமேஷ் அவர்களுக்கும் www.tamilandvedas.com ப்ளாக் திரு லண்டன் சுவாமிநாதன் அவர்களுக்கும் எனது நன்றி உரித்தாகுக.
இந்த நூலை நல்ல முறையில் வெளியிட முன்வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக!
நன்றி.
சான்பிரான்ஸிஸ்கோ 30-7-2022
ச.நாகராஜன்
*
நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.
Many thanks for your answer (on Tolkappiar is Trnadhumagni), sir. Kindly tell whether any tamil words are used in Sanskrit literature just like we see many Sanskrit words in Tamil literature.
10-8-2022
MY ANSWER
MY OPINION IS THAT THERE ARE WORDS WITH COMMON ORIGIN IN SANSKRIT.
E.g.Mayura, Neera
SO YOU CANT SAY SANSKRITISTS BORROWED THEM FROM TAMIL. THOSANDS OF TAMIL WORDS ARE IN ENGLISH.
ACCORDING TO LINGUSTS TAMIL HAS NO RELATIONSHIP WITH ENGLISH, GREEK, LATIN, GERMAN, ROMANCE LANGUAGES WHICH ARE PART OF INDO-EUROPEAN FAMILY.
SO MY EXPLANATION WILL HOLD GOOD TO EXPLAIN TAMIL WORDS IN ENGLISH.
MY 150 ARTICLES ON THIS SUBJECT WILL BE IN BOOK FORM VERY SOON.
Tamil Nadu has the highest number of inscriptions and epigraphs in India. Muslim invasions destroyed most of the inscriptions in North India. When Dr R Nagaswamy became the Head of the Department of Archaeology in Tamil Nadu, the inscriptions in Tamil received full attention of the general public. But such a trend is not seen anywhere in India. There are lot of Sanskrit inscriptions in India. Most f the Tamil copper plates have the first part in Sanskrit and then comes the Tamil part. Prof. D B Diskalkar of Pune has published an excellent book with 800 poets found in inscriptions in his book Sanskrit and Prakrit Poets known from Inscriptions. But t is only a list and the exact verses composed by the poets are not included. So we need a book with the beautiful verses composed one thousand or thousand five hundred years ago. Here is some interesting information of poems done and inscribed in Temple walls of Srirangam and Tiruvannamalai; for Vaishnavites Temple means Sri Rangam and for Saivites, Tiruvannamalai Temple is important because it is one of the Panchabhuta shrines.
Vedanta Desika
Vedanta Desika (1268- 1369) was a great Vaishnavite scholar who wrote over 100 books 700 years ago. His Sanskrit verses engraved on the Srirangam temple eulogises the restoration of Ranganatha image by Gopanaarya in 1370 CE in the time of Telugu Chola king Singa (E.I.25/324)
(The book says “Vedanta Desika, son of Madhava” and the “year 1370”. According to Wikipedia Desikar died in 1369. So it seems one of the entries is wrong ; either the Epigraphica India or Wikipedia is wrong. “Vedanta Desika, Son of Madhava” says the book, which also differs from the Wikipedia version).
Xxx
Srinivasa Dikshita
Srinivasa Dikshita of Saktimangalam; son of Andampillai and Lakshmi ; his sons were named Kesava Dikshita Ardhanarisvara Dikshita and Rajachudamani Dikshita. He had the ‘biruda’ Divaapradipa. He composed four Sanskrit verses in praise of the gopura/tower of 11 storeys of the Arunachaleswara temple at Tiruvannamalai in Saka 1494 (A.R.S.IE.1929, No.419)
(Is it inside the temple or outside; the book doesn’t say it)
Xxx
Tamil inscription in Kerala
Vaikundan Udayanan
He wrote Vellaani inscription of the Venadu king Vira Rama Varmaa of Kerala in the Kollam year 371 (1169 CE) which records a grant of lands and labourers by the king of the Venad. The record is written in Tamil in Vatteluthu characters.
Xxx
Srinivasa
Son of Sthirananda , composed the first part consisting of 45 verses of the Bilhari (Jabalpur) stone inscription. It is in praise of Kalachuri king Yuvarajadatta II who ruled in the tenth century CE. The inscription traces the genealogy of the Haihayas. It gives a list of Saivite ascetics. Second part of the Prasasti (praises) from 46 to 78 were composed by Sajjana , son of Thira; concluding nine verses were composed by Kayastha (writer or engraver) Siruka.
The inscription records the building of a Siva temple by the queen of the Chedi prince Keyuravarsha.
In verse 85, it says that Sanskrit poet Rajasekhara is said to have been struck with wonder at the composition of the eulogy. He must have found in it the qualities which make a good piece of literature, free use of the metre Sardulavikridita and the poetic quality Samadhi which means an alternate combination of heavy and light syllables. He must have also liked the reference to several parts of India, says historian V V Mirashi.
My comments
In addition to beautiful Sanskrit verses these inscriptions give us the names of people, places, gotras, temples, development of a particular script, Vamsavali (lineage) and general history. Each one of the aspects must be analysed under different topics. For instance Tamil archaeologist Dr R Nagaswamy has listed the Gotras found in the inscriptions in his Tamil book Yaavarum Kelir. It is necessary for us to list them under different headings. Sanskrit verses must be published in full with translations in English and vernacular languages/
–subham–
Tags- VEDANTA DESIKAR, INSCRIPTION IN SRI RANGAM , DIKSHITAR INSCRIPTION, TIRUVANNAMALAI TEMPLE,
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
துணிவே எனது தோழன் – Courage My Companion : ஒரு சுயசரித்திரம்!
ச.நாகராஜன்
1
திரு ஆர். வி. ராஜன் அவர்கள் எழுதிய ‘துணிவே எனது தோழன் – Courage My Companion – என்ற அவரது சுய சரித்திரத்தைப் படிக்கும் நல் வாய்ப்பு கிடைத்தது.
பங்களூரில் வசிக்கும் விஞ்ஞானி திரு வி. தேசிகன் எனது நல்ல நண்பர். 1983ஆண்டிற்கான DRDO விருதான, ‘ஆண்டிற்கான சிறந்த விஞ்ஞானி ‘( ‘Scientist of the Year (1983) DRDO award) என்ற விருதை பாரதப் பிரதமர் திருமதி இந்திராகாந்தி அவர்களிடமிருந்து நேரில் பெற்றவர். அவர் ஒரு சிறந்த எழுத்தாளரும் கூட. அவர் எழுதிய கட்டுரைகள் அனைத்தும் ப்ருந்தாவன் எக்ஸ்பிரஸ் என்ற தலைப்பில் ஒரு புத்தகமாக வெளியிடப்பட்டது. பங்களூரில் நடந்த வெளியீட்டு விழாவிற்கு அவர் என்னை அழைத்தார்.
அங்கு அறிமுகமானார் திரு ஆர்.வி.ராஜன்.
திரு ஆர்.வி.ராஜன் அவர்களின் தூண்டுதலினால் வெளிவந்தது ப்ருந்தாவன் எக்ஸ்பிரஸ்.
விழாவிற்குப் பின்னர் திரு ராஜன் அவர்களின் அனைத்து ஆங்கிலக் கட்டுரைகளும் எனக்கு வர ஆரம்பித்தன. பல இதழ்களில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரைகள் நடைச்சித்திரக் கட்டுரைகளாக பெரும்பாலும் அமைந்திருந்தன; சுவையான செய்திகளைத் தந்து சிந்தனையைத் தூண்டின.
இது தொடரும் போது தான் சென்ற வாரம் டிஜிடல் வடிவிலான அவரது சுயசரிதையும் எனக்குக் கிடைத்தது. 2009ஆம் ஆண்டு எழுதப்பட்டது இந்த நூல்.
2
206 பக்கங்கள் கொண்ட இந்த நூலை எழுதி பதிமுன்று ஆண்டுகள் ஆன போதிலும் கூட மிகவும் ரசித்துப் படித்தேன்.
இதைப் படித்த Madison World நிறுவனத்தின் சேர்மன் மற்றும் மானேஜிங் டைரக்டரான திரு சாம் பல்சாரா, ‘இதைப் படித்த போது ஆர்.கே,நாராயணனின் நாவலைப் படித்தது போல இருந்தது’ என்று தனது கருத்தைப் பதிவிட்டிருக்கிறார்.
நானும் ஒரு மால்குடி பிரியன் தான்! அவரது கருத்து நூற்றுக்கு இருநூறு சதவிகிதம் சரிதான் என்று நான் வழி மொழிகிறேன்.
தட்டுத் தடங்கலற்ற சரளமான ஆங்கில நடை சக்கை போடு போடுகிறது! எளிமையான நடை; இனிய நடை.
சுவை பட தனது மும்பை வாழ்க்கையில் ஆரம்பிக்கிறார் சுய சரிதத்தை.
மும்பைக்கே உரித்தான சால் என்னும் (தமிழக ஸ்டோரை நினைவுபடுத்தும்) வீட்டில் தொடங்குகிறது அவர் வாழ்க்கை. சால் என்பது வாயிலைத் தாண்டி உள்ளே சென்றால் ஐந்து அல்லது ஆறு வீடுகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டி இருக்கும். ஒரு அறை அல்லது இரண்டு அறை கொண்ட வீடு தான்! பல மாடிக் குடியிருப்புகளில் இப்படி வாழ்ந்து வந்த அந்த ஆயிரத்திதொள்ளாயிரத்து அறுபதுகளின் வாழ்க்கையைச் சுட்டிக் காட்டி விளக்குகிறார் அவர்.
எதிர் வரும் வாழ்க்கையே ஒரு சவால் தான்; அதில் பற்பல முட்டுக்கட்டைகள்!
அந்தத் தடைக்கற்களை அவர் படிக்கட்டுகளாக மாற்றிய வரலாறே அவரது சுய சரித்திரம்.
3
பெரிய குடும்பம்.
விளம்பரத் துறையில் அவர் காலடி எடுத்து வைக்கிறார். அதில் ஆகப் பெரும் உலக நிறுவனங்களின் நிர்வாகிகளையும் தலைவர்களையும் சந்திக்கிறார்.
தனக்கென ஒரு முத்திரையைப் பதிக்கிறார்.
விளம்பரத் துறை எப்படிப்பட்ட ஒன்று தெரியாத சாமானியனான (என் போன்ற) எந்த ஒருவருக்கும் இந்த நூல் சுலபமாக அதைப் புரிய வைத்து விடும்.
நாட்டுப்புறம் என்று சொல்லப்படும் இந்தக் கால ஊராட்சி கிராமங்களில் பற்பசையிலிருந்து டயர் வரை கொண்டு சென்று விளம்பரப்படுத்த ஒரு தனி முயற்சியை எடுத்து அந்தப் பழைய காலத்தில் அதற்கு ஒரு முன் மாதிரியான வித்தை அவர் ஊன்றினார்.
மும்பை, டில்லி, கல்கத்தா, சென்னை என்று பல ஊர்களைச் சேர்ந்த பல மொழிகளைப் பேசுகின்ற ஏராளமான பெயர்களை நூலில் காண்கிறோம். பெயர்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை; என்ன காரியம் சாதிக்கப்பட்டது என்பதைத் தான் தெரிந்து கொள்ள வேண்டும். அதை ஆற்றொழுக்குப் போன்ற நடையில் சொல்லி நம்மைக் கவர்கிறார் ராஜன்.
4
நூல் காவிரி போலப் பரந்து பாய்ந்தோடி பல கிளைகளாகவும் பிரிகிறது.
ஒரு பக்கம் விளம்பரத் துறை வேலை என்றால் இன்னொரு பக்கம் சமுதாய சிந்தனை!
ரவுண்ட் டேபிள் என்னும் அமைப்பு செயல்பட ஆரம்பித்த காலத்தில் அதில் இணைந்து தான் ஆற்றிய சமுதாயப் பணிகளை விரிவு பட, சுவையாகத் தருகிறார் ராஜன்.
அதில் உயர் மட்டத்தில் இருப்பவர்கள் வியந்து பாராட்ட பல நாடுகளுக்கும் அழைக்கப்பட்டு ஆங்காங்கு நடக்கும் கூட்டங்களில் பேச அழைக்கப்படுகிறார்; இறுதியில் தானே உச்சியில் ஏறி ஜொலிக்கிறார்.
அத்துடன் மட்டுமல்ல, மும்பை, கல்கத்தா வாழ்க்கையிலிருந்து விடுபட்டு சென்னைக்கு வந்து அங்கும் பல சங்கங்களிலும் தன்னை இணைத்துக் கொள்கிறார். Ad Club, AMIC, RMAI, Rotary போன்ற பல அமைப்புகளில் பல சவால் விடும் பணிகளை மேற்கொண்டு அவற்றில் வெற்றிக் கொடியை நாட்டுகிறார்.
இவ்வளவு பணியிலும் ஈடுபட தேனீ போன்ற சுறுசுறுப்பும், யானை போன்ற பலமும், கருடன் போல உயரப் பறக்கும் மனமும், நான் தான் தலைவன் என்று பார்வையாலேயே சொல்லி கர்ஜிக்கும் சிங்கத்தின் திறனும் தேவை. அவற்றைக் கொண்டவர் இவரே என்று நூலைப் படிக்கும் ஒவ்வொரு பக்கமும் சொல்கிறது.
5
அந்தணக் குடும்பத்தில் பிறந்ததால் ஏற்பட்ட பிறப்பொழுக்கத்தை அவர் விட்டு விடவில்லை. வெளிநாடுகளுக்குச் சென்றாலும் மறக்காமல் பவித்ரம், தர்ப்பை எடுத்துக் கொண்டு சென்று ஆவணி அவிட்ட பூணுலை மாட்டிக் கொண்ட செய்தியைப் படிக்கிறோம். வளர்ப்பு அப்படி!
சைவ உணவு என்றாலே என்ன என்று தெரியாத இடங்களில் அவர் பட்ட சங்கடமும் தெரிகிறது.
மனைவி பிரபா மீது கொண்ட அளவற்ற அவரது அன்பு, இரு மகள், ஒரு மகன், செல்லப் பேத்திகள், பேரன் பற்றிய செய்திகளையும் படிக்கிறோம்.
குழந்தை அவர் தொந்தி மீது உட்கார்ந்து குதிக்கும் போது அவர் சந்தோஷம் அடைகிறார்; அதைப் படிக்கும் போது நமக்கும் குதூகலம் ஏற்படும் தானே!
43 ஆண்டுகள் இடைவிடாது உழைக்கிறார். 1-4-2007இல் தனது அனுக்ரஹா மாடிஸனிலிருந்து தானே ஓய்வு பெற்றுக் கொள்கிறார்.
நூலில் சுவையான குட்டிக் குட்டிச் செய்திகள் ஏராளம் உள்ளன. உதாரணத்திற்கு ஒன்று. ஆகப் பெரிய கார்ட்டூனிஸ்டான ஆர்.கே.லக்ஷ்மண் இவரைப் பார்த்து நான்கு விரல்களில் சில கோடுகளை இழுக்கிறார். அட, ஒரு சில வினாடிகளில் அது ஆர்.வி.ராஜனைக் காட்டுகிறதே!
யாரையும் அவர் மறக்கவில்லை. குடும்பத்தார், உறவினர், நண்பர்கள், மேலதிகாரிகள் என யாரையும் விட்டு விடவில்லை. அன்புடன் அவர்களை நினைவு கூர்கிறார். பாராட்டுகிறார். நன்றி தெரிவிக்கிறார்!
6
இந்த நூலின் பயன் என்ன?
சம காலத்தில் நவீன தொழில் நுட்பத்தால் ஏராளமான புதிய கலைகள் தோன்றியுள்ளன. அவற்றின் துவக்கமும் வளர்ச்சியும், விரிவாக்கமும், அவசியமும் அதில் முனைப்புடன் ஈடுபட்டவர்கள் மட்டுமே அறிய முடியும்.
அப்படிப்பட்டவர்கள் தங்கள் சுய சரிதத்தை எழுதினால் தான் அது அனைவரையும் சென்றடையும்.
அந்த வகையில் இந்த சுய சரிதம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று!
அதை இனிய நடையில் தந்த ஆர்.வி.ராஜன் அனைவரது பாராட்டுக்கும் உரியவர்.
7
புதுக்கோட்டையிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நெற்குப்பை என்ற ஊரில் 30-8-1942 அன்று பிறந்தார் திரு ஆர்.வி.ராஜன். 30-8-2022இல் அவருக்கு 80 வயது. அவருக்கு நமது வணக்கங்கள்; வாழ்த்துக்கள்!
இப்போது அவர் சென்னையில் வசிக்கிறார்.
8
திரு ராஜன் அவர்களுக்கு எனது தனிப்பட்ட முறை நன்றி ஒன்றும் உண்டு. இதுவரை எனது புத்தகங்கள் 114 வெளியாகியுள்ளன. இவற்றில் லண்டனைச் சேர்ந்த திருமதி நிர்மலா ராஜு அவர்களின் www.nilacharal.com வெளியிட்ட புத்தகங்கள் 61. பங்களூரைச் சேர்ந்த www.pustaka.co.in வெளியிட்ட புத்தகங்கள் 53. புஸ்தகா நிறுவன உரிமையாளரான டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd. அவர்களை எனக்கு அறிமுகப்படுத்தியவர் திரு ராஜன் தான்! நன்றி மறப்பல்லது நன்றன்று, அல்லவா! அவருக்கு எனது உளமார்ந்த நன்றியை இங்கு பதிவு செய்கிறேன்.
9
Courage My Companion நூலைப் படிக்க ஆர்வமுள்ளவர்கள் அணுகினால் இந்தப் புத்தகம் டிஜிடல் வடிவில் அனுப்பி வைக்கப்படும்.
அட, இன்னொரு சுவையான, ஆர்.கே.நாராயணன் எழுதிய ‘மால்குடி டேஸ்’, போன்ற, வேறு மாதிரியான ஒரு புத்தகத்தை நீங்களும் தான் படித்து மகிழுங்களேன்!
விளம்பரம் இல்லாத வணிகமானது அழகி ஒருத்தி இருட்டில் தன் மேனி அழகைக் காண்பிப்பது போல – அல்லது அவள் தன் அருள் பொங்கும் முகத்தைக் காண்பிப்பது போல – அவளது அழகும் அருள் பொங்கும் முகமும் அவளுக்கு மட்டுமே தான் தெரியும் என்ற வார்த்தைகளைச் சும்மாவா சொன்னார்கள்?!
***
நன்றி : புத்தகத்தை அனுப்பிய ஆர்.வி.ராஜன் அவர்களுக்கு எனது நன்றி!
Dedication by Santhanam Nagarajan This book is dedicated to my parents Sri V.Santhanam and Srimathi Rajalakshmi Santhanam
*
நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.