Sita’s Famous Quotes: I would Follow Eleven Women (Post No.11,469)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,469

Date uploaded in London – 24 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx 

Sundara Kanda (kaanda) of Valmiki (vaalmiiki) Ramayana has beautiful quotes. When Sita was threatened by the demon women she did not give up. Hanuman was watching all these things from the top of a tree. Sita says she would not yield to their threats. She quotes the eleven great heroines of Hindu scriptures

She says she would follow Suvarchala, Sachi, Arundhati Rohini, Lopamudra ,Sukanya ,Srimati, Kesini, Madayanti, Savitri and Damayanti.

Here is the detail:

[The ogresses chide Sita who resolutely condemned Ravana.]

ततः सीतामुपागम्य राक्षस्यो विकृताननाः।

परुषं परुषा नार्य ऊचुस्तां वाक्यमप्रियम्।।5.24.1।।


ततः then, परुषाः harsh, विकृताननाः hideous, राक्षस्यः नार्यः ogresses, तां सीताम् that Sita, उपागम्य having approached, अप्रियम् unbecoming, वाक्यम् words, परुषम् harshly, ऊचुः uttered.


Then the hideous ogresses approached Sita and spoke these harsh words in an unbecoming manner:

किं त्वमन्तःपुरे सीते सर्वभूतमनोहरे।

महार्हशयनोपेते न वासमनुमन्यसे।।5.24.2।।


सीते O Sita, त्वम् yourself, सर्वभूतमनोहरे delightful for all, महार्हशयनोपेते furnished with fine bedsteads, अन्तःपुरे in the women’s chambers, वासम् residence, किम् why, नानुमन्यसे not willing?


‘O Sita why don’t you agree to dwell in Ravana’s inner apartment furnished with fine bedsteads, and which is delightful?

मानुषी मानुषस्यैव भार्यात्वं बहुमन्यसे।

प्रत्याहर मनो रामान्न त्वं जातु भविष्यसि।।5.24.3।।


मानुषी being a woman, मानुषस्यैव of a man only, भार्यात्वम् being wife, बहुमन्यसे you are holding this in high esteem, रामात् from Rama, मनः mind, प्रत्यहर you may turn, त्वम् you, जातु indeed, न भविष्यसि will not live.


‘You are a woman, wife of Rama, an ordinary mortal you are holding in high esteem. Withdraw your mind from Rama or else you will not survive.

त्रैलोक्यवसुभोक्तारं रावणं राक्षसेश्वरम्।

भर्तारमुपसङ्गम्य विहरस्व यथासुखम्।।5.24.4।।
 


त्रैलोक्यवसुभोक्तारम् enjoy the wealth of the three worlds, राक्षसेश्वरम् demon king, रावणम् Ravana, भर्तारम् as husband, उपसङ्गम्य after uniting yourself, यथासुखम् pleasure, विहरस्व sport with him.


“Accept Ravana as your husband and after uniting with him enjoy all the pleasures of the three worlds.

मानुषी मानुषं तं तु राममिच्छसि शोभने।

राज्याद्भ्र्रष्टमसिद्धार्थं विक्लबं त्वमनिन्दिते।।5.24.5।।


शोभने O charming lady, अनिन्दिते blameless one, मानुषी a woman, त्वं तु you too, राज्यात् from the kingdom, भ्रष्टम् dethroned, असिद्धार्थम् one who is not successful, विक्लबम् distressed, मानुषम् human, तं him, रामम् Rama only, इच्छसि wanting.


‘O charming lady you have an irreproachable beauty and grace. Why do you think of human Rama only who has been dethroned from the kingdom. He is only a human being who is unsuccessful and distressful.’

राक्षसीनां वचः श्रुत्वा सीता पद्मनिभेक्षणा।

नेत्राभ्यामश्रुपूर्णाभ्यामिदं वचनमब्रवीत्।।5.24.6।।
 


पद्मनिभेक्षणा a lady with eyes like lotus petals, सीता Sita, राक्षसीनाम् of the ogresses, वचः words, श्रुत्वा on hearing, अश्रुपूर्णाभ्याम् those filled with tears, नेत्राभ्याम् with both eyes, इदम् this way, वचनम् words, अब्रवीत् spoke.


Hearing the words of the ogresses, Sita with eyes like lotus petals full of tears replied this way:

यदिदं लोकविद्विष्टमुदाहरथ सङ्गताः।

नैतन्मनसि वाक्यं मे किल्बिषं प्रतिभाति वः।।5.24.7।।
 


सङ्गताः joined together, लोकविद्विष्टम् not acceptable to the world, यत् such, इदम् this, मे my, वाक्यम् words, उदाहरथ you spoke, एतत् this way, वः addressed by you, मनसि in mind, किल्बिषम् sinful, न प्रतिभाति not thought.


“All of you joined together and spoke such words that are not acceptable to the world. Your sinful words of advice do not appeal to me.

न मानुषी राक्षसस्य भार्या भवितुमर्हति।

कामं खादत मां सर्वा न करिष्यामि वो वचः।।5.24.8।।
 


मानुषी a human being, राक्षसस्य ogre’s, भार्या wife, भवितुम् to become, न अर्हति ought not to be, सर्वाः all of you, कामम् freely, माम् me, खादत eat, वः addressed by you, वचः words, न करिष्यामि I will not do.


‘ A human being ought not to become wife of a demon. Devour me if you want. I refuse to accept your advice.’

दीनो वा राज्यहीनो वा यो मे भर्ता स मे गुरुः।

तं नित्यमनुरक्तास्मि यथा सूर्यं सुवर्चला।।5.24.9।।


दीनो वा Poor, राज्यहीनो वा or a king , यः he who, मे my, भर्ता husband is, सः he is, मे my, गुरुः lord, सुवर्चला Suvarchala, सूर्यं यथा just as to Sun god, नित्यम् ever, तम् him, अनुरक्ता devoted, अस्मि I am.


‘Poor man or a king of a country, Rama is my Guru. I will ever remain devoted to Rama as Suvarchala, wife of the Sungod is to him.

यथा शची महाभागा शक्रं समुपतिष्ठति।


अरुन्धती वसिष्ठं च रोहिणी शशिनं यथा।।5.24.10।।

लोपामुद्रा यथागस्त्यं सुकन्या च्यवनं यथा।

सावित्री सत्यवन्तं च कपिलं श्रीमती यथा।।5.24.11।।

सौदासं मदयन्तीव केशिनी सगरं यथा।

नैषधं दमयन्तीव भैमी पतिमनुव्रता।।5.24.12।।

तथाऽहमिक्ष्वाकुवरं रामं पतिमनुव्रता।


महाभागा noble, शची Sachi, यथा like, शक्रम् Indra, समुपतिष्ठति is steadfadt, अरुन्धती Arundhati, वसिष्ठं  with Vasistha, रोहिणी Rohini, शशिनम् the moon, यथा likewise, लोपामुद्रा Lopamudra, अगस्त्यम् with Agastya, यथा similarly, सुकन्या Sukanya, च्यवनम् Chayavanam, यथा so also, सावित्री Savitri, सत्यवन्तम् with Satyavan, श्रीमती Srimati, कपिलम् with Kapilamuni, यथा so also, सौदासम् Soudasa, मदयन्तीव Madayanti, केशिनी Kesini, सगरं यथा with Sagara likewise, पतिम् as husband, नैषधम् Nala, king of Naishada, अनुव्रता devoted, भैमी Bhima’s daughter, दमयन्तीव like Damayanti, तथा in the same way, अहम् I, इक्ष्वाकुवरम् foremost of Ikshvaku family, पतिम् a husband, रामम् Rama, अनुव्रता I am devoted.


‘I am steadfast (in love) to my husband Rama, the foremost of the Ikshvaku family in the same manner as noble Sachi to Indra, Arundhati to Vasistha, Rohini to the Moon, Lopamudra to Agastya, Sukanya to sage Chyavana, Savitri to Satyavan, Srimati to Kapilamuni Madayanti to Soudasu, Kesini to king Sagara and Bhima’s daughter Damayanti to her lord Nala, (the king of Nishadas)’.

सीताया वचनं श्रुत्वा राक्षस्यः क्रोधमूर्छिताः।।5.24.13।।

भर्त्सयन्ति स्म परुषैर्वाक्यै रावणचोदिताः।
 


रावणचोदिताः ordered by Ravana, राक्षस्यः by the ogresses, सीतायाः Sita’s, वचनम् words, श्रुत्वा after hearing, क्रोधमूर्छिताः overtaken by anger, परुषैः with harsh, वाक्यैः with statements, भर्त्सयन्ति स्म threatened.


Hearing the reply of Sita, the ogresses ordered by Ravana and overtaken by anger again began to threaten Sita using harsh words.

अवलीनः स निर्वाक्यो हनूमान् शिंशुपाद्रुमे।।5.24.14।।

यसीतां सन्तर्जयन्तीस्ता राक्षसीरशृणोत् कपिः।


कपिः monkey, स: he, हनुमान् Hanuman, निर्वाक्यः speechless, शिंशुपाद्रुमे Simsupa tree, अवलीनः kept concealed, सीताम् Sita, सन्तर्जयन्तीः listened threatening, ताः those, राक्षसीः ogresses, अशृणोत् listened.


Hanuman who kept himself concealed on the simsupa tree speechlessly listened to the ogresses threatening Sita.

—-subham—-

Tags- Sita, follows, 11 women, Suvarchala, Sachi, Arundhati, Savitri, Sukanya, Kesini, Madayanti, Damayanti, Rohini, Lopamudra

மனைவி பற்றி அறப்பளீச்சுர சதகம் (Post.11,468)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,468

Date uploaded in London – 24 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

லண்டன் சுவாமிநாதன் வியாக்கியானம் / விளக்க உரை

First verse was posted yesterday. Following is the second verse.

2. இல்லாளின் சிறப்பு

கணவனுக் கினியளாய்ம்ருதுபாஷி யாய்மிக்க     

 கமலைநிகர் ரூப வதியாய்க்,
  
காய்சினம் இலாளுமாய்நோய்பழி யிலாததோர்
     
கால்வழியில் வந்த வளுமாய்,
மணமிக்க நாணம்மடம் அச்சம் பயிர்ப்பென்ன
     
வரும்இனிய மார்க்க வதியாய்,
  
மாமிமா மற்கிதம் செய்பவளு மாய்வாசல்
     
வருவிருந் தோம்பு பவளாய்,

இணையில்மகிழ் நன்சொல்வழி நிற்பவளு மாய்வந்தி
     
என்பெயர் இலாத வளுமாய்,
  
இரதியென வேலீலை புரிபவளு மாய்ப்பிறர்தம்
     
இல்வழி செலாத வளுமாய்,
அணியிழை யொருத்தியுண் டாயினவள் கற்புடையள்
     
ஆகும்;எம தருமை மதவேள்
  
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     
அறப்பளீ சுரதே வனே!


     (
இ-ள்.) எமது ………… தேவனே! கணவனுக்கு இனியளாய் – கணவன்
பார்வைக்கு அழகியவளாய்,

 மிருது பாஷியாய் – இன்மொழி யுடையவளாய்,
கமலை நிகர்மிக்க ரூபவதியாய் – திருமகளைப்போலச் சாலவும் அழகியாய்,
காய்சினம் இலாதவளுமாய் – வெறுக்கத்தக்க கோபம் இல்லாதவளாய்,
நோய்பழி இல்லாதஓர் கால்வழியில் வந்தவளுமாய் – நோயும் இழிவும்
இல்லாத ஒப்பற்ற மரபிலே பிறந்தவளாய்,

மணம்மிக்க நாணம் மடம் அச்சம் பயிர்ப்பு என்ன வரும் இனிய மார்க்க வதியாய் – புகழத்தக்கநான்கு பண்புகளும் பொருந்திய நல்லொழுக்கமுடையவளாய்,

மாமி, மாமற்கு இதம் செய்பவளுமாய் – மாமிக்கும் மாமனுக்கும் நலம் புரிபவளாய்,
வாசல்வரு விருந்து ஓம்புபவளாய் – வாயிலில் வரும் விருந்தினரை
ஆதரிப்பவளாய்,

இணைஇல் மகிழ்நன் சொல்வழி நிற்பவளுமாய் – ஒப்பற்ற
கணவன் மொழிப்படி நடப்பவளாய்,

வந்தி என் பெயர் இல்லாதவளுமாய் – மலடியெனும் பெயரில்லா தவளாய்,

இரதியெனவே லீலை புரிபவளுமாய் – இரதியைப்போல இன்பக்கலவி செய்பவளாய்,

பிறர்தம் இல்வழி செலாதவளுமாய் – மற்றவருடைய வீட்டுவழி செல்லாதவளாய்,
அணியிழைஒருத்தி உண்டாயின் – அழகிய அணிகலன்களையுடைய ஒரு
மங்கை இருந்தால், அவள் கற்பு உடையளாகும் – அவள் கற்புடையவள்
எனப்படுவாள்.


     
(க-து.) இங்குக் கூறப்பட்டவை கற்புடைய பெண்ணின் பண்புகள்.

xxx

வாழ்க்கைத் துணை நலம்,  இல் வாழ்க்கை ஆகிய தலைப்புகளில் 20 குறள்களில் வள்ளுவர் சொன்னதை அனைவரும் அறிவர்; சில புதிய ஒப்பீடுகளைக் காண்போம்

சகுந்தலைக்கு கண்வர் அறிவுரை

உலகப் புகழ் பெற்ற கவிஞன் காளிதாசன்–. அவன் எழுதிய நாடகங்களில் உலகமே போற்றி வியந்த நாடக நூல் சாகுந்தலம். அதில் சகுந்தலை என்னும் அழகி உலகம் அறியாத அப்பாவிப் பெண்.அவள் கணவன் வீட்டுக்குப் (அரசனின் அரண்மனை) போவதற்கு முன், வளர்ப்புத் தந்தை கண்வர் சொன்னது: 

“என் அன்பு மகளே. உன் கணவன் வீட்டுக்குச் செல்லப் போகிறாய். அங்கே:-

உன்னை விட வயதில் மூத்த பெரியோருடன் கவனமாகப் பழகி, அவர்களுக்குச் சேவை செய். அரசனின் சக மனைவிகள் இடத்தில் நட்போடு வாழ். கணவன் உனக்கு ஏதேனும் கஷ்டம் கொடுத்தாலும் கோபத்தில் எதையும் சொல்லிவிடாதே. நீ யார் யாருக்குச் சேவை செய்கிறாயோ அவர்களுக்கு எல்லா மரியாதைகளும் கொடு. செல்வத்திலும் சுக போகங்களிலும் வாழப் போகும் நீ அகந்தையும் தலைக்கனமும் ஏறாமல் பார்த்துக்கொள். அப்படி வாழ்ந்தால்தான் பெண்கள் இல்லத்தரசி என்ற பெயர் எடுப்பர். இதற்கு மாறாக நடப்பவர்கள் குலத்தைக் கெடுக்கவந்த கோடாரி என்று பெயர் எடுப்பர்.” (சாகுந்தலம், காட்சி 4)

இதையெல்லாம் சொல்லி முடித்த பின், வயதில் மூத்த ஞானத்தில் முதிர்ந்த மகரிஷி கண்வர், தன் மனைவி இருக்கும் திசையைப் பார்த்து, “அன்பே நீ என்ன நினைக்கிறாய்?” என்று கேட்கிறார். அவள் உடனே, “ஒரு மணப் பெண்ணுக்கு இது அருமையான புத்திமதி. அன்பு மகளே, எப்போதும் இதை நினைவில் வைத்துக்கொள்” என்கிறார்.

xxxxx


சுபாஷிதக்ஞேன ஜனேன ஸாகம்

ஸம்பாஷணம் சுப்ரபு ஸேவனம் ச

ஆலிங்கனம் துங்க பயோதராணாம்

ப்ரத்யக்ஷ ஸெளக்யம் த்ரயமேவ லோகே

உலகில் எல்லோரும் விரும்பும் சுகம் மூன்று வகையானவை

மூன்று சுகங்களே கண்கூடாகப் பயனளிப்பவை

1.அறிஞர்களுடன் பேசி அடையும் மகிழ்ச்சி.

2.அள்ளிக் கொடுக்கும் முதலாளி கீழே வேலை செய்வது

3.அழகு வாய்ந்த நிமிர்ந்து உயர்ந்த மார்பகம் உள்ள பெண்களைத் தழுவுவது

Xxxx

கணவனே கண்கண்ட தெய்வம்

பதிர் ஹி தைவதம் ஸ்த்ரீணாம் பதிர் பந்துப் பதிர் கதிஹி

நான்யம் கதிம் அஹம் பச்யே ப்ரமதாயா யதா பதிஹி

அநு சாசன பர்வம், மஹாபாரதம்

பெண்களுக்குக் கணவனே கண்கண்ட தெய்வம்; கணவன் ஒருவனே உறவினன் ;கணவன் ஒருவனே நற்கதி , அடைக்கலம் ; வேறு ஒருவரும் இல்லை இதுவே என் கண்ணோட்டம் .

சங்க இலக்கியப் பாடலிலும் கணவனைப் போற்றும் பாடல்கள் உள .

குறுந்தொகை 49

அணிற்பல் அன்ன கொங்குமுதிர் முண்டகத்து

மணிக்கேழ் அன்ன மாநீர்ச் சேர்ப்ப

இம்மை மாறி மறுமை யாயினும்

நீயா கியரென் கணவனை

யானா கியர்நின் னெஞ்சுநேர் பவளே.    5

– அம்மூவனார்.  

அணிலின் பல்லை ஒத்த முள்ளையுடைய தாது முதிர்ந்த முள்ளிச் செடியையும் நீலமணியினது நிறத்தை ஒத்த கரிய நீரையுமுடைய கடற்கரையை உடைய தலைவ இப்பிறப்பு நீங்கப்பெற்று நமக்கு வேறு பிறப்பு உண்டாயினும் என்னுடைய தலைவன் இப்பொழுது என்பால் அன்பு செய்தொழுகும் நீயே ஆகுக! நின்னுடைய மனத்திற்கு ஒத்த காதலி இப்பொழுது நின் நெஞ்சு கலந்தொழுகும் யானே ஆகுக!

Xxx

வால்மீகி  காட்டும் பெண்

नगरस्थो वनस्थो वा पापो वा यदि वा शुभः। 

यासां स्त्रीणां प्रियो भर्ता तासां लोका महोदयाः।।2.117.22।।

நகரஸ்தோ  வனஸ்தோவா பாபு வா யதி வா சுபஹ

யாஸாம் ஸ்திரீனாம் ப்ரியோ பர்த்தா தாஸாம் லோகா மஹோதயாஹா

यासाम् எந்தப்  , स्त्रीणाम् பெண்கள் , नगरस्थः in the city,நகரத்திலிருந்தாலும்  वनस्थो वा காட்டிலிருந்தாலும் , पापो वा பாவியானாலும் , यदि वा அல்லது , शुभः புண்யவானானா லும் , भर्ता கணவனிடத்தில் , प्रियः அன்புடன் இருக்கிறார்களோ , तासाम् அவர்களுக்கு , महोदयाः மிக உயர்வான , लोकः உலகம் (கிடைக்கும்).


xxxx

நற்றிணை 10

தலைவியைத் தலைவனுடன் அனுப்பிவைக்கும் தோழி தலைவனுக்கு ஒழுக்கநெறி என்று சில கூறுகிறாள்.

பூத்துக் கிடக்கும் செம்மையான ஊரின் தலைவனே,

இப்போது அண்ணாந்து உயர்ந்திருக்கும் இவளது அழகிய முலை மகப்பேற்றுக்குப் பின்னர் தளர்ந்து தொங்கினாலும்பொன்னிறம் கொண்ட இவள் மேனி கருத்து மணிநிறம் கொண்டு நரைத்துப்போன கூந்தலை இவள் முடித்திருந்தாலும்இவளைப் பிரியாமல் இருப்பாயாக.

அண்ணாந்து ஏந்திய வன முலை தளரினும்,

பொன் நேர் மேனி மணியின் தாழ்ந்த

நல் நெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்,

நீத்தல் ஓம்புமதி பூக் கேழ் ஊர!

xxxx

கற்பு என்பது பெண்ணுக்கு மட்டுமல்ல ஆணுக்கும் பொது என்று பாரதியார் பாடினார் . பிறன் மனை நோக்காத பேராண்மை என்பதை காளிதாசன் முதல் வள்ளுவன் வரை பாடிப் ரவியுள்ளனர் ; மன்னர்கள் மட்டும் பலதார மணம் செய்யலாம் என்பதை சங்க இலக்கியத்திலும் இதிஹாச புராங்களிலும் காண்கிறோம்; கரிகாலன், ஆய் அண்டிரன் போன்ற சங்க கால மன்னர்கள் பல மனைவியருடன் வாழ்ந்ததை சங்க செய்யுட்கள் காட்டுகின்றன. ராமன் ஒருவன் மட்டுமே இந்த இப்பிறப்பில் சிந்தையாலும் இரு மாதரைத்  தொடேன் என்கிறான். ஸீதையும் ராமனின் எல்லை மீறிய கடுமையைத் தாங்கி அவனைத் தெய்வமாகவே போற்றினாள்

தீநோ வா ஹீநோ வா யோ மே பர்த்தா ஸ  மே குரு ஹு

தம் நித்யம் அனுரக்தாஸ்மி  யதா ஸூர்யம் சுவர்ச்சலா

ராமாயணம் சுந்தரகாண்டம்

दीनो वा राज्यहीनो वा यो मे भर्ता स मे गुरुः।

तं नित्यमनुरक्तास्मि यथा सूर्यं सुवर्चला।।5.24.9।।

—-SUNDARA KANDA, VALMIKI RAMAYANA

என் கணவன் ஏழையானாலும் நாடாளும் மன்னன் ஆனாலும் அவனே என் கணவன் ;என் குரு ; அவனை நான் எப்போதும் பின்பற்றிச் செல்வேன் எப்படி சூரியனைத் தொடர்ந்து சுவர்ச்சலா செல்கிறாளோ அப்படி நானும் செல்வேன். (ராவணனைக் கட்டிக்கொள் என்று சொன்ன அரக்கிகளுக்கு ஸீதை  சொன்ன மறுமொழி இது )

xxx

காணி நிலம் வேண்டும் பாடலில் பாரதியும் பத்தினிப் பெண்ணைத்தான் கேட்கிறான்

பாட்டுக் கலந்திடவே – அங்கேயொரு

பத்தினிப் பெண்வேணும் – எங்கள்

கூட்டுக் களியினிலே – கவிதைகள்

கொண்டுதர வேணும் – அந்தக்

காட்டு வெளியினிலே – அம்மா! நின்றன்

காவலுற வேணும், – என்றன்

பாட்டுத் திறத்தாலே – இவ்வையத்தைப்

பாலித்திட வேணும்.

 —subham—-

tags- மனைவி , அறப்பளீச்சுர சதகம், 

ராமாயணத்தில் வரும் நதிகள்! – 1 (Post No.11,467)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,467

Date uploaded in London – –   24 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ராமாயண வழிகாட்டி!

ராமாயணத்தில் வரும் நதிகள்! – 1

ச. நாகராஜன்

உலகின் ஆதி காவியமான ராமாயணம் அதிசயிக்க வைக்கும் காவியம்.

மனிதப் பண்புகளின் உச்ச கட்டத்தையும், மனிதன் கோரமான, அதம ரூபத்தையும் விளக்கிக் காட்டி, அறம், மறத்தை வெல்வதைச் சித்தரிக்கிறது ராமாயணம்.

இது ஒரு கலைக் களஞ்சியம்.

இதை ஆதி காலம் தொட்டு இன்றைய செல்போன், கணினி யுகம் வரை ஆராய்ந்தோர், ஆராய்ந்து வருவோர் ஏராளம்.

ராமாயணத்தில் இடம் பெறும் நதிகளைப் பற்றித் தனியே ஆய்வு நடத்தலாம்.

கம்பன் கோதாவரி நதியை கவிதையுடன் ஒப்பிட்டு கவிதைக்கு இலக்கணம் சொன்னான்.

இதோ வால்மீகி ராமாயணத்தில் இடம் பெறும் 49 நதிகளின் பெயர்களைப் பார்ப்போம்.

1) பாகீரதி : கங்கையின் இன்னொரு பெயர் தான் பாகீரதி. பகீரதன் பிரம்ம பிரயத்தனம் செய்து கங்கையைப் பூமிக்குக் கொண்டு வந்தான். அவர்களது முன்னோர் கடைத்தேற அவன் இந்த மாபெரும் செயலைச் செய்தான். படைப்புத் தெய்வமான பிரம்மா இதனால் மனம் மிக மகிழ்ந்தார். கங்கை பகீரதனின் மூத்த புதல்வியாகக் கருதப் படுவாள் என்றும் அவள் பெயர் பாகீரதி என அழைக்கப்படும் என்றும் அவர் சொன்னார். ஆகவே கங்கை பாகீரதி என்ற பெயரைப் பெற்றாள்.

2) கங்கா : வார்த்தையால் வர்ணிக்க முடியாத மஹிமையைக் கொண்ட தெய்வ நதியான கங்கை சொர்க்கம், பூமி, பாதாளம் என மூன்று லோகங்கள் வழியே பாய்ந்த நதி. இதைப் பற்றிய ஏராளமான வரலாறுகள் உண்டு. அவற்றைச் சித்தரிக்கும் புத்தகங்கள் உண்டு.

அவற்றைப் படித்தால் கங்கையின் மஹிமை ஒரு சிறிது நமக்குப் புரிய வரும்.

3) கோதாவரி : பஞ்சவடிக்கு அருகில் உள்ள நதி கோதாவரி. ராமருடன் நெருங்கிய தொடர்பு கொண்ட நதி.  வனவாசத்தின் போது சீதையுடனும் லட்சுமணனுடன் நெடுங்காலம் ராமர் பஞ்சவடியில் கழித்தார். ஆகவே கோதாவரியிலும் குளித்து மகிழ்ந்தார். அகத்திய மாமுனியின் யோசனையைக் கேட்டு தன் முன்னோர்களுக்காக உரிய சடங்குகளையும் இங்கு அவர் செய்தார். தெளிவான, புனிதமான நீரைக் கொண்டது கோதாவரி.  அப்ஸரஸ்கள் – தேவ கன்னிகைகள் – இங்கு வந்து குளித்து நீர் விளையாடலில் ஈடுபடுவதுண்டு. சீதையை மீட்டு அயோத்திக்கு புஷ்பக விமானத்தில் ஏறி ஆகாயமார்க்கமாகத் திரும்பும் போது ராமர் கோதாவரியை சீதைக்குச் சுட்டிக் காட்டுகிறார்.

4) கோமதி : கங்கை வழியே கடலை நோக்கிப் பாய்ந்து கடலில் சேரும் புனித நதி கோமதி. ராமர் சீதை லட்சுமணருடன் இந்த நதியைக் கடக்கிறார். அழகிய பசு மந்தை இருக்கும் இடம் கோமதி நதிக் கரை.

5) ஹ்லாதினி :  கங்கையிலிருந்து கிழக்கு முகமாகப் பாயும் மூன்று ஓடைகளில் இதுவும் ஒன்று. பரதன் கேகய நாட்டிலிருந்து அயோத்திக்குச் செல்லுகையில் இதைக் கடந்து சென்றான்.

6) இக்ஷுமதி : புனிதமான நதி இக்ஷூமதி. ஏராளமான பறவைகள் வசிக்குமிடம் இக்ஷுமதி பிரதேசம். இக்ஷ்வாகு குல மன்னர்களால் காத்து வரப்பட்ட நதி இது. பரதரையும் சத்ருக்னரையும் அயோத்திக்குக் கூட்டி வரச் சென்ற தூதர்கள் இந்த நதியைக் கடந்து கேகயம் சென்றனர்.

7) ஜாஹ்னவி : கங்கையின் இன்னொரு பெயர் ஜாஹ்னவி.  ஜானு என்ற பெரும் தபஸ்வியின் புதல்வி என்ற அர்த்தத்தில் ஜாஹ்னவி என்ற பெயர் ஏற்பட்டது.

8) காலாமாஹி : கிழக்கே பாயும் நதி இது. வனங்களும் மலைகளும் உள்ள பிரதேசம் காலாமாஹி பிரதேசம்.

9) காளிந்தி : சித்ரகூடம் செல்லும் வழியில் உள்ள நதி இது. சீதாதேவி இதைப் போற்றி வணங்குகிறாள்.

10) கபிவதி : கிழக்கே உள்ள நதி இது.

11) கௌஸிகி : இன்று கோசி என்று அழைக்கப்படும் கௌஸிகி கிழக்கே உள்ள நதி. இங்கு தான் விஸ்வாமித்திரர் தனது கடும் தவத்தை மேற்கொண்டார். சுக்ரீவனால் சீதையைத் தேடுவதற்காக அனுப்பப்பட்ட வானரர்களின் குழு இந்த நதியைக் கடந்து சென்றது.

12) காவேரி : தெற்கே தமிழகத்தில் பாயும் புனித நதி. இதன் பெருமை சொல்லில் அடங்காது. அப்ஸரஸ்கள் விளையாடி ஆனந்திக்கும் நதி காவேரி.

13) க்ருஷ்ணவேணி : தென்னிந்தியாவில் பாயும் அழகு நதி இது.

14) குலிகோடிகா: கேகயத்திற்கு அயோத்திக்கும் இடையே பாயும் நதி இது.

15) குலிங்கா : அயோத்திக்கு அடுத்துள்ள மலையில் பாயும் நீரோடை.

16) மாஹி : சீதையைத் தேடி சுக்ரீவன் ஆணையின் பேரில் புறப்பட்ட வானரங்கள் கிழக்கே பாயும் இந்த நதியைக் கடந்து சென்றனர்.

17) மாலினி : கேகய நாட்டின் வடக்கே ப்ரலம்பா பகுதியில் பாய்வது மாலினி.

18) மால்யவதி : மந்தாகினி நதியின் இன்னொரு பெயர் மால்யவதி.

19) மந்தாகினி : சித்ரகூட பிரதேசத்தில் பாயும் அழகிய நதி இது. ஸ்படிகம் போன்ற இதன் தூய நீரைப் பார்த்து ராமரும் சீதையும் ஆனந்தப்பட்டனர். அதில் குளித்தனர். சீதையை மகிழ்ச்சி அடையச் செய்வதற்காக ராமர் மந்தாகினி நதியை வர்ணிக்கிறார். இதன் கரையில் கனி கொடுக்கும் ஏராளமான அழகிய மரங்கள் உள்ளன.

20) நளினி : கங்கையின் ஏழு உபநதிப் பிரிவுகளுள் ஒன்று நளினி. ஹ்லாதினி மற்றும் பாவனியுடன் இது விந்துசரோவரம் நோக்கிப் பாய்கிறது.

21) நர்மதா : புனிதமான அழகிய நதி இது. மாஹிஷ்மதி நகருக்கு அருகே பாயும் நதி இது. மேற்கு நோக்கிப் பாயும் இந்த நதியில் தான் ராவணன் குளித்து விட்டு சிவனை நோக்கி தனது பாவம் தொலைய பிரார்த்தனை செய்தான். அப்போது நர்மதையின் வேகம் மாஹிஷ்மதியின் அரசனான கார்த்தவீர்யார்ஜுனனின் கைகளால் தடுக்கப்பட்டது. அவன் நர்மதாவின் இன்னொரு பக்கம் ஸ்தீரிகளுடன் விளையாடலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். ஆகவே ராவணன் அர்ச்சித்த மலர்கள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் கோபம் அடைந்தான் ராவணன். ராவணனுக்கும் கார்த்தவீர்யார்ஜுனனுக்கும் இடையே கடும் போர் ஏற்பட்டது. கார்த்தவீர்யார்ஜுனன் ராவணனைத் தோற்கடித்து அவனை மாஹிஷ்மதி நகருக்குக் கைதியாகத் தூக்கிச் சென்றான்.

ராமாயணம் விளக்கமாகக் கூறும் இந்த நதிகளின் பெருமை இன்று வரை பாரத தேசத்தில் வசிக்கும் ஒவ்வொருவராலும் போற்றப்பட்டு வருகிறது.

மீதியுள்ள நதிகளை அடுத்துப் பார்ப்போம்.

                   ***                     தொடரும்

புத்தக அறிமுகம் 121 – 2

அற்புத அவதாரம் சத்யசாயிபாபா

(அம்ருத சாகரம் இணைப்பு)   

பொருளடக்கம்

நூலில் அம்ருத ஸாகரம் என்னும் சாயி உபதேச மஞ்சரி தரப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட பாபாவின் 108 அருளுரைகள் இதில் தரப்பட்டுள்ளது. அந்த 108 அருளுரைகளின் தலைப்புகள் ;

1. என்னை பூஜிப்பதன் பலன்

2. சாயி என்றால் அர்த்தம் என்ன?   

3. சாயி மொழிகளும் சாயி வழியும்

4. அவதார காரணம்

5. அவதார பணி

6. பக்தர்களிடம் நான் நேரே வருவேன்! யார் மூலமாகவும்

   செயல்படுவதில்லை!!

7. பிரேமை என்ற கட்டணமே போதும்!

8. பிரேமையே சாயியின் நிதி

9. சாயி நிதி!

10. அவதாரங்களின் நோக்கம்     

11. சாயி பக்தன் யார்?

12. சாயி பக்தர்களுக்கு அறிவுரை  

13. இரும்பு குண்டு போன்ற உறுதி தேவை!

14. கூட்டு பிரார்த்தனையின் மகிமை

15. நாம மகிமை!   

16. ஆதாரமும் ஆதேயமும்

17. நாமம் சக்தி வாய்ந்தது 

18. நால்வகை சங்கீர்த்தனமும் நாமலிகிதமும்

19. நாம ஸ்மரணமே வழி

20. பாரதத்தின் அடிப்படை

21. ஐந்து பிரார்த்தனைகள்!

22. சரணாகதியே நேரடி தொடர்பு  

23. சரணாகதி செய்க

24. அனுக்ரஹம் எப்போது கிடைக்கும்?

25. சத்சங்க மகிமை!

26. மனச்சாட்சியே சத்சங்கம்

27. சனாதன மத ஸ்தாபகர் யார்?  

28. வேதங்களின் மகத்துவம்

29. ஈஸாவாஸ்ய உபநிஷத்

30. ‘ஓம்’கார மகிமை

31. பிரக்ஞானம் என்றால் என்ன?

32. பிரசாந்தி என்றால் என்ன?     

33. தீபத்தின் ஆற்றல்

34. காயத்ரி 

35. காயத்ரி – 2

36. பகவத் கீதை

37. ‘யோகக்ஷேமம்’ என்பதன் உட்கருத்து  

38. கிருஷ்ணரும், அர்ஜுனனும்    

39. குரு பக்தி

40. விநாயக தத்துவம்!     

41. கணபதி வழிபாடு

42. துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி

43. சிவராத்திரி ஏன்?

44. ராதை யார்?

45. எங்கும் உள்ள தெய்வம்!

46. கடவுளின் அஷ்ட ஐஸ்வர்யங்கள்

47. கடவுளுக்கு என்ன வேண்டும்?

48. ஒருமைப்பாட்டை உணர்தல் வேண்டும்

49. தாயும், கடவுளும்

50. அனைத்து மதங்களும் சுட்டிக் காட்டும் இறைத்தன்மை ஒன்றே!

51. எம்மதமும் சம்மதமே!

52. ஐந்து மதங்களும் ஒரு கரத்தின் ஐந்து விரல்களே

53. கர்ம பலன்களிலிருந்து தப்பிக்க வழி!

54. செயலுக்கு ஏற்றபடியே விளைவு இருக்கும்!

55. கர்மம், ஜன்மம், தர்மம், மர்மம்

56. உலகம் ஒரு கண்ணாடி, உன்னையே பிரதிபலிக்கும்!

57. மனித சக்தியும், தெய்வ சக்தியும்

58. சரீரம், மனது, ஆன்மா, மூன்றும் இணைந்து செயல்படுவதே

   மனிதத் தன்மை

59. முயற்சி தேவை

60. ஆறு வகை பக்தி

61. சுவர்க்கத்தின் கதவுகள் எப்போது திறக்கும்?

62. இறைவன் கருணை பெற மாசற்ற பிரேமை தேவை!

63. காமமும் மோகமும்

64. காமம், குரோதம், லோபம்

65. எட்டு வித அகங்காரங்கள்

66. திருப்பதி மொட்டையின் அர்த்தம்

67. கர்மமும், ஞானமும்

68. தியானமே யோகம்

69. மூன்று சரீரங்களும் ஐந்து கோசங்களும்

70. ஆன்மீகம் காட்டும் இறுதி நிலை

71. சேவையே சிறந்த வழிபாடு

72. ஒரே வரியில் 18 புராணங்களின் சாரம்!

73. தியாகம் ஒன்றே வழி!

74. ஆனந்தம் பெற வழி!

75. ராமராஜ்யம் ஏற்பட வழி

76. கலியின் விளைவிலிருந்து விடுபடுங்கள்

77. நீங்கள் அறங்காவலர்களைப் போல

78. தபஸ் என்றால் என்ன?

79. காம்பஸ் போல கடவுளை நோக்கி இரு!

80. ஆசைகளுக்கு வரையறை தேவை

81. சமமாக அனைவரையும் நேசி

82. மூன்று விதத் தூய்மை

83. நிந்திக்காதே

84. பொறுமை

85. உலக அமைதிக்கு வழி தெய்வ ப்ரீதி, பாப பீதி, சங்க நீதி

86. சத்தியத்திலிருந்து சாந்திக்கு

87. வாழ்க்கையின் நான்கு படித்தரங்கள்

88. ஐந்து நியமங்கள்

89. சுத்தம்

90. மனக் கண்ணாடி

91. பாரதத்தின் ஆதாரம் தர்மமே

92. தெய்வ ப்ரீதி, பாப பீதி, சங்க நீதி

93. பெண்ணே ஆதாரம்!

94. மகளிர் கடமை

95. அமரத்வம் அடைய வழி!

96. இயற்கையை ஆராய மூன்று தகுதிகள் தேவை

97. பயமின்றி இருக்க வழி

98. நிகழ்காலத்தில் வாழுங்கள்!

99. உணர்ச்சி வசப்பட வேண்டாம்!

100. நாவு சக்தி இழக்க நான்கு காரணங்கள்

101. இரண்டு

102. வாழும் வழி

103. விஜய சாக்ஷி: வெற்றிக்கு வழி

104. உன் துயரம் போக வழி!

105. தவிர்க்க வேண்டியவை!

106. டி.வி.யினால் ஏற்படும் தீய விளைவுகள்

107. இதய நோய்க்கு இடமே இல்லை

108. ஆன்மீகப் புத்தகங்களைப் படியுங்கள்!

*

நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது:

Linking with the previous incarnation of Shirdi Sai and the expected incarnation of Prema Sai, this book describes in detail the living legend Sri Sathya Sai Baba. The 41 chapters are truly blissful, providing an insight into the miracles of Sathya Sai Baba. Also attached are 108 prime discourses of Sathya Sai Baba. A must read for Sai devotees and spiritually inclined people.

நாம் வாழும் காலத்தில் நம்மோடு வாழ்ந்த அற்புத அவதாரமான ஸ்ரீ சத்திய சாயிபாபாவின் வாழ்க்கை வரலாற்றைத் தெளிவாக விளக்கும் நூல். அவருடைய முந்தைய அவதாரமான ஷீர்டி சாயி பற்றியும் அடுத்து அவர் பிரேம சாயியாக அவதரிக்கப் போவது பற்றியும் நூலில் காணலாம். 41 அத்தியாயங்களில் சாயியின் அற்புத வரலாற்றை விரிவாகப் படிப்பது ஆனந்தமான அனுபவம்! அத்துடன் ஸ்ரீ சாயிபாபாவின் 108 முக்கியமான உரைகளின் தொகுப்பும் நூலில் இரண்டாவது பகுதியாக இணைக்கப்பட்டுள்ளது. சாயி அன்பர்களும் ஆன்மீக நாட்டம் உடையவர்களும் அவசியம் படிக்க வேண்டிய நூல்!

*

இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘அற்புத அவதாரம் சத்யசாயிபாபா!’ நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

*

மனிதப் பிறவி அரிது -அறப்பளீச்சுர சதகம் (Post No.11,466)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,466

Date uploaded in London – 23 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

அறப்பளீச்சுர சதகம் என்னும் நூலில் அருமையான விஷயங்கள் காணக்கிடக்கின்றன ; அம்பலவாணக்  கவிராயர் பாடிய இந்த நூறு பாடல்களும் கொல்லி மலையில் உள்ள அறப்பளீஸ்வரர் என்ற சிவபெருமானை நோக்கிப் பாடியதாகும். அந்த மலை, சதுர கிரி என்று அழைக்கப்படும். மதுரைக்குப் பக்கத்திலும் ஒரு சதுரகிரி உள்ளது . அது வேறு ; இது வேறு. தமிழ் இணையக் கல்விக்கழகம் இதை நமக்கு இலவசமாக வெப்சைட்டில் வெளியிட்டதற்கு நாம் நன்றிக் கடன்பட்டவர்களாவோம்.. அதற்கு முன்னரே நான் பிரிட்டிஷ் நூலகத்தில் இதைக் கண்டு, இதே பிளாக்கில் பல கட்டுரைகளை எழுதியுள்ளேன். இப்பொழுது முடிந்தமட்டும் எனது வியாக்கியானத்துடன் பாடல்களைக் காண்போம் .

முதல் பாடலில் வரும் சுவையான சொற்களை அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறேன் :–

கடலுலகில் வாழும்உயிர் எழுபிறப் பினுள்மிக்க
     
காட்சிபெறு நரசன் மமாய்க்
  
கருதப் பிறத்தலரி ததினும்உயர் சாதியிற்
     
கற்புவழி வருதல் அரிது;
வடிவமுடன் அவயவம் குறையாது பிழையாது
     
வருதலது தனினும் அரிது;
  
வந்தாலும் இது புண்யம் இதுபாவம் என்றெண்ணி
     
மாசில்வழி நிற்றல் அரிது;
நெடியதன வானாதல் அரிததின் இரக்கம்உள
     
நெஞ்சினோன் ஆதல் அரிது;
  
நேசமுடன் உன்பதத் தன்பனாய் வருதல்இந்
     
நீள்நிலத் ததினும் அரிதாம்;
அடியவர்க் கமுதமே! மோழைபூ பதிபெற்ற
     
அதிபன்எம தருமை மதவேள்
  
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     
அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) அடியவர்க்கு அமுதமே – அடியவர்களின் துன்பத்தை
நீக்குபவனே!’

மோழை பூபதி பெற்ற அதிபன் – மோழை எனப்படும்
தலைவன் ஈன்ற தலைவன்,

 எமது அருமை மதவேள் – எம் அரிய மதவேள்,

அனுதினமும் மனதில் நினைதரு – எப்போதும் உள்ளத்தில்
வழிபடுகின்ற,

சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே – சதுர கிரியில்
எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!’

கடல் உலகில் வாழும் எழுபிறப்பு
உயிர்களுள் – கடலாற் சூழப்பட்ட நிலத்தில் வாழ்கின்ற எழுவகையாகத்
தோன்றிய உயிர்களுள்;

மிக்க காட்சிபெறு நரசன்மமாய்க் கருதப் பிறத்தல்
அரிது – மிகுந்த அறிவையுடைய மக்கட்பிறப்பாய் நினைக்குமாறு பிறப்பது
அருமை,

அதினும் உயர் சாதியில் கற்புவழி வருதல் அரிது – அப்
பிறப்பினுள்ளும் உயர்குணமுடைய இனத்திலே கற்பொழுக்கமுடைய மரபிலே தோன்றுதல் அருமை,


அதுதனினும் வடிவமுடன் அவயவம் குறையாது பிழையாது வருதல்
அரிது – அவ்வாறு பிறப்பவர்களுள்ளும் அழகுடன் உறுப்புக் குறையாமலும்
பிழை இல்லாமலும் பிறப்பது அருமை,

வந்தாலும் இது புண்யம் இது பாவம் என்று எண்ணி மாசு இல்வழி நிற்றல் அரிது – அவ்வாறு பிறப்பினும் இதுநன்று இது தீது என நினைத்துக் குற்றமில்லாத நெறியில் நிற்றல் அருமை,


நெடிய தனவான் ஆதல் அரிது – (அதனினும்) பெரிய செல்வனாவது
அருமை,

அதின் இரக்கம் உள நெஞ்சினோன் ஆதல் அரிது – அதனினும்
அருட்பண்புடைய உளத்தோன் ஆவது அருமை,

அதினும் உன்பதத்து நேசமுடன் அன்பனாய் வருதல் இந் நீள்நிலத்து அரிது, ஆம் – அதனினும்உன் திருவடிகளிலே அன்புதவழும் அடியவனாக வருதல் இப் பேருலகிலே அருமையாகும்.

     
(வி-ரை.) எழுவகைப்பிறப்பு: வானவர், மக்கள், விலங்கு, பறவை,
ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம். பூ – உலகம், பதி – தலைவன்.
பூபதி – அரசன்; தங்களுக்கு உதவிய வள்ளல்களைப் பூபதி யென்று
புகழ்தல் அக்காலப் புலவர் வழக்கம்.
  (கருத்து) அறிவுடைய மக்கட் பிறப்பாகப் பிறந்து அழகு, செல்வம்,
ஒழுக்கம், கடவுள் வழிபாடுகள் உடையவராக இருப்பது அருமை.

Xxx

லண்டன் சுவாமிநாதன் வியாக்கியானம் / விளக்க உரை

முதலில் விஞ்ஞான விஷயம் ஒன்று: உயிர்வாழ்வன அனைத்தையும் வகை வகையாகப் பிரித்தல் வேண்டும் என்று எண்ணுவது அறிவுடைமை. இது அறிவியல் அணுகுமுறை; காலம்தோறும் இது மாறிவரும். நான் பி.எஸ் சி. தாவரவியல் B.Sc. Botany படித்தபோது  தாவரங்களை லின்னேயஸ் கிளாசிபிகேஷன்படி Linnaeus Classification of Plant Kingdom , படித்தேன்; செம்பருத்திப் பூ என்றால் அதை ஹைபிஸ்கஸ் ரோஸா சைனன்ஸிஸ் என்போம் . வெண்டைக் காயென்றால் ஹைபிஸ்கஸ் எஸ்குலன்டஸ் என்றும் முருங்கைக் காய் என்றால் மொரிங்கா ஆப்லெங்காடா என்றும் சொன்னோம். ரஷ்ய விஞ்ஞானி மெண்டலீவ் (Periodic Table) மூலக அட்டவணையைக் கண்டுபிடிக்கும்வரை அதை வேறு வகையாகப் பிரித்தனர். இன்னும் கொஞ்சம் காலத்தில் இதைவிட முன்னேறிய ஒன் ற வரக்கூடும்.

சம்ஸ்க்ருதத்தில் உயிர்வாழும் பிராணிகளை நாலு வகையயாகப் பிரித்தது மனு ஸ்ம்ருதியில் வருகிறது

1.அண்டஜம்: முட்டையில் இருந்து பிறப்பவை

2.ஜராயுதம்; கருப்பையில் பிறப்பவை

3.உத்பிஜம்: வித்து, வேர், கிழங்கு மூலம் பிறப்பவை

4.சுவேதஜம்: வேர்வையில் (கிருமிகள், பாக்டீரியாக்கள்) பிறப்பவை.

அண்டசஞ் சுவேதசங்கள் உற்பிச்சம் சராயுசத்தோ

டெண்தரு லெண்பத்து நான்கு நூறாயிரந்தான்

உண்டுபல் யோனியெல்லாம் ஒழித்து மாநுடத்துதித்தல்

கண்டிடில் கடலைக் கையால் நீந்தினன் காரியங்காண்”

என்று சிவஞான சித்தியார் கூறுகிறார்.

தாவரம் முதல் தேவர்கள் வரை உள்ளவர்களை ஏழுவகையாகப் பிரித்தனர்:

1.தேவர்

2.மனிதர்

3.விலங்கு: சிங்கம், புலி, யானை, ஆடு, மாடு முதலியன

4.பறவை: காகம்,குயில், மயில், குருவி, கொக்கு முதலியன

5.ஊர்வன: பாம்பு, பூரான், தேள், பல்லி முதலியன

6.நீர்வாழ்வன: மீன், ஆமை, முதலை, திமிங்கிலம் முதலியன

7.தாவரம்: மரம், செடி, கொடி, பாசி, புல், பூண்டு முதலியன

இவைகளை 84 லட்சம் (8400000) வகைகள் என்றும் கூறினர்.

இந்த 84 லட்சம் உயிர்வகைகள் என்பது தற்போதைய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்கு நெருக்கமாக வருகிறது. இதை அப்பர் தேவாரத்திலும் காணலாம். மனிதப் பிறவி அரிதிலும் அரிது , அதிலும் கூன் , குருடு உடலூனம் இல்லாமல் பிறப்பது அரிது என்பதை அவ்வையாரும் அவருக்கு முன்னால் ஆதிசங்கரரும் சொல்லிவிட்டனர்.

அரியது கேட்கின் வரிவடி வேலோய்!

அரிதரிது மானிடர் ஆதல் அரிது

மானிடராயினும் கூன் குருடு செவிடு

பேடு நீக்கிப் பிறத்தல் அரிது

பேடு நீக்கிப் பிறந்த காலையும்

ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது

ஞானமும் கல்வியும் நயந்த காலையும்

தானமும் தவமும் தான்செயல் அரிது

தானமும் தவமும் தான்செய்வராயின்

வானவர் நாடு வழிதிறந் திடுமே

என்று அவ்வைப் பாட்டியும் கூறுவர்.

ஆதிசங்கரர் கூற்று

ஆதிசங்கரர் பல இடங்களில் மாநுடப் பிறவியின் அரிய தன்மை பற்றிக் கூறுகிறார்: “ஜந்தூனாம் நரஜன்ம துர்லபத:” (அரிது அரிது மானுடராதல் அரிது). அவர் எழுதிய விவேக சூடாமணியில் 2, 3, 4– ஆவது ஸ்லோகங்களிலேயே இதைப் பற்றிப் பிரஸ்தாபிக்கத் துவங்கி விடுகிறார்.

அரிது அரிது மனிதப் பிறவி, அதிலும் அரிது பிரம்மத்தை நாடும் பிறவி

அதனிலும் அரிது வேத அறிவு, அதனிலும் அரிது ஆத்ம ஞானம்

முக்தி பெறுவதோ நூறு கோடியில் ஒன்றே!

மூன்றாவது ஸ்லோகத்தில் மூன்று அரிய விஷயங்களைக் கூறுகிறார்: மனுஷ்யத்வம், முமுக்ஷுத்வம், மஹா புருஷர்களின் அருள். மனிதப் பிறவி, வீடு பேற்றை நாடல், பெரிய குருவின் பூரண பாதுகாப்பு என்பதே அவர் கூறுவது.

வேதத்தைப் படித்த பின்னரும் முக்தியை நாடாதவன் தற்கொலை செய்துகொள்வதற்குச் சமம் என்கிறார் நாலாவது ஸ்லோகத்தில்.

जन्तूनां नरजन्म दुर्लभमतः पुंस्त्वं ततो विप्रता

तस्माद्वैदिकधर्ममार्गपरता विद्वत्त्वमस्मात्परम् ।

आत्मानात्मविवेचनं स्वनुभवो ब्रह्मात्मना संस्थितिः

मुक्तिर्नो शतजन्मकोटिसुकृतैः पुण्यैर्विना लभ्यते ॥ २ ॥

दुर्लभं त्रयमेवैतद्देवानुग्रहहेतुकम् ।

मनुष्यत्वं मुमुक्षुत्वं महापुरुषसंश्रयः ॥ ३ 

மானுடப் பிறவி கிடைப்பது அரிது;அதிலும் ஆணாகப் பிறந்து பிரம்மனை நாடும் பிறப்பு கிடைப்பது மேலும்  அரிது  அதிலும் ஆன்ம உணர்வு பெறுவது அரிதரிது; முக்தி அடைவது என்பது நூறு கோடி பிறப்புகளில்தான் கிடைக்கும்

மூன்று விஷயங்கள் மிகவும் அரிதானவை:அவை இறையருளால்தான் கிடைக்கும்::மனிதப் பிறவி, முக்தி அடையும் வேட்கை , நல்ல குருவின் அருள் பார்வை

लब्ध्वा कथंचिन्नरजन्म दुर्लभं

तत्रापि पुंस्त्वं श्रुतिपारदर्शनम् ।

यस्त्वात्ममुक्तौ न यतेत मूढधीः

स ह्यात्महा स्वं विनिहन्त्यसद्ग्रहात् ॥ ४ 

எப்படியோ மனிதப்பிறவி கிடைத்துவிட்டது; வேதங்களைக் கற்கும் பாக்கியமும் கிடைத்துவிட்டது அதற்குப் பின்னரும் அவன் முக்தி அடைய முயற்சி செய்யாதிருப்பது தற்கொலைக்கு ஈடாகும்.

xxxx

மாநுடப் பிறவி எவ்வளவு அரிது என்பதை சிந்தாமணிச் செய்யுள் ஒன்று மிகமிக அழகாகக் கூறுகிறது. இதில் தத்துவம் ஒரு புறம் இருக்க தமிழர்களுக்கு கடல் பற்றி எவ்வளவு அறிவு இருந்தது என்பதையும் இது காட்டும். சீவக சிந்தாமணி என்பது திருத்தக்க தேவரால் எழுதப்பட்ட நூல். தமிழில் ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று. அவர் கூறுவார்:

பரவை வெண் திரை வடகடல் படு நுகத் துளையில்
திரை செய் தென் கடல் இட்டதோர் நோன் கழி சிவணி
அரச அத்துளை அகவயிற் செறிந்தென அரிதால்
பெரிய மோனிகள் பிழைத்து இவண் மாநிடம் பெறலே” (சீவக.2749)

வட கடலில் நுகத் துளையோடு கூடிய ஒரு கழி தண்ணீரில் மிதந்து செல்கிறது; தென் கடலில் மற்றொரு கழி மிதந்து செல்கிறது. இந்த இரண்டும் ஒன்றை ஒன்று சந்திப்பது மிக மிக அரிது. அப்படியே சந்தித்தாலும் அவ்விரண்டு துளைகளிலும் ஒரு கோல் நுழைவது அரிதினும் அரிது. இந்த இரண்டு கழிகளும் ஒன்றை ஒன்று சந்தித்து ஒரு கோல் நுழைந்துவிட்டால் அது எவ்வளவு பெரிய அதிசயம் ஆகும்? அத்துணை அரிது நமக்கு மாநுடப் பிறவி கிடைத்திருப்பது என்கிறது சிந்தமணிச் செய்யுள்

மனிதனுக்கும் மிருகங்களுக்கும் உள்ள பெரிய வேறுபாடு சிந்திக்கும் திறன் ஆகும். எது நல்லது எது கெட்டது என்று மனதினால் சிந்திக்கும் அரிய பண்பு இருப்பதால் மனுஷ்ய என்று சம்ஸ்க்ருதத்தில் சொன்னார்கள். அது ஆங்கிலத்தில் MAN என்றும் தமிழில் மானுடன், மனிதன் என்றும்  ஆயிற்று சிந்திப்பவன் மட்டும் மனிதன் அல்ல. சிந்தித்து நல்லவழியில் செல்பவன்தான்  மனிதன்.

–subham–மனிதப் பிறவி, அரிது ,அறப்பளீச்சுர சதகம்,

Tamil Hindu Encyclopaedia 29: Garuda Purana in Sangam Tamil Books (Post.11,465)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,465

Date uploaded in London – 23 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

It is amazing to see the Rig Vedic Garuda in 2000 year old Tamil Sangam literature. Rig Veda says that the Soma plant was brought by the falcon or eagle in umpteen places. No one can explain the mystery until this day. Whether someone trained eagle or falcon to identify it and bring it or a certain mountainous tribe was called Eagles, we don’t know for sure. Later Ithihasas and Puranas, (epics and mythologies) give different stories about கருடன், Garuda, the white necked bird of prey. Even today Tamils salute it, worship it, whenever it is sighted. If it is sighted during auspicious ceremonies, it is considered a positive YES from the gods.

Paripatal gives a detailed description of Garuda, which coincides with the descriptions in the Puranas.

“A bird with curved wings, with many lines on it.

White teeth with holes full of poison.

Breaths hot air like fire, has enormous strength to attack snakes till they die,

It has another name ‘Snake Enemy’ ( in Tamil பாம்புப் பகை Paampup pakai)- Pari.13-48/50

It can keep thousand headed ஆதி சேஷன் Aadisesha in his beak, is that all? No, it wears snakes as jewels. It is wound with a snake in its belly area, it eats snake and its life

It has snakes on all its body part” s-

Murugu 148-150, Pari 13-38/40; Pari.3-59/60; Pari 4-42/48

That strong Garuda was subdued by the Red Eyed Maal Vishnu

When the Garuda lost its strength it cried

Oh Red Eyed Maal ஓ, செங்கண் மால். Pari 3-60/61

The Garuda story in the Puranas say that it released its mother from slavery. In a competition with its co wife of her husband it lost its freedom. Garuda released her mother Vinata.

Pari 3-16/17 praised the bird One who removed the difficulty of its mother.

How did Garuda do it also explained in Pari 3-16/17

Because of jealousy Kadru wanted to belittle Vinata. During one conversation Vinata said the tail of Indra s horse is white. Kadru said that it was dark. Then both had a bet. If it is not white Vinata must be a slave to Kadru. And the jealous Kadru changed the colour of the tail into black through foul means. Then Kadru put a condition for her release. If she can get her the Amrita from Indra ,Vinata will be released. Garuda did it and got its mother’s freedom back. Probably this is what the Rigvedic poets mean when they sing Garuda brought Soma plant.

If it is correct, we may say Amrita is equal to Soma and vice versa.

If one studies both the literature with its hidden meaning more mysteries may be solved.


சுமேரியாவில் கருடபுராணம் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ச…

முதலில் கருடன் கதையைப் பார்ப்போம். … பல மனைவியரில் விநதா என்பவளுக்கு கருடனும் கத்ரு …

Tamil References:-

விடமுடை அரவின் உடல் உயிர் உருங்கு உவணம்;

அவன் மடிமேல் வலந்தது பாம்பு;

பாம்பு தொடி; பாம்பு முடி மேலன;

பாம்பு பூண்; பாம்பு தலைமேலது;         45

பாம்பு சிறை தலையன;

பாம்பு படி மதம் சாய்த்தோய்! பசும் பூணவை

கொடிமேல் இருந்தவன் தாக்கு இரையது பாம்பு;

பரிபாடல் 4-42-48

Xxx

படர் சிறைப் பல் நிறப் பாம்புப் பகையைக்

கொடியெனக் கொண்ட கோடாச் செல்வனை;

ஏவல் இன் முது மொழி கூறும்,

பரிபாடல் 13-38/40

Xxx

ஆயிர அணர் தலை அரவு வாய்க் கொண்ட

சேவல் ஊர்தியும், செங் கண் மாஅல்!   

ஓ!’ எனக் கிளக்கும் கால முதல்வனை;

பரிபாடல் 3-59/60

Xxx

ஏஎர், வயங்கு பூண் அமரரை வௌவிய அமிழ்தின்,15
பயந்தோள் இடுக்கண் களைந்த புள்ளினை;
பயந்தோள் இடுக்கண் களைந்த புள்ளின்
நிவந்து ஓங்கு உயர் கொடிச் சேவலோய்! நின்

பரிபாடல் 3-16/17

To be continued…………………………..

கலியுக அவதாரம் ஶ்ரீ சத்ய சாயிபாபா! (Post No.11,464)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,464

Date uploaded in London – –   23 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

கலியுக அவதாரம் ஶ்ரீ சத்ய சாயிபாபா!

ச.நாகராஜன் 

இன்று, நவம்பர் 23. ஶ்ரீ சத்யசாயிபாபாவின் அவதார தினம்.

எல்லையற்ற அவதார பெருமைகளை நினைவு கூர்ந்து அவரைப் போற்றி வணங்குவோம்.

1) ஶ்ரீ சத்ய சாயிபாப அவதார தோற்றம் : 23-11-1926  சமாதி : 24-4-2011

   வயது 84

2) ஆந்திர மாநிலத்தில் அனந்தப்பூர் மாவட்டத்தில் புட்டபர்த்தியில் தோற்றம். சாதாரண சிறு கிராமமாக இருந்த புட்டபர்த்தி லட்சக்கணக்கான பக்தர்களின் யாத்திரை ஸ்தலமாக பகவானின் அருள் விளையாடலால் மாறியது.

3) பாபா நிறுவிய ஶ்ரீ சத்யசாயி சேவா சமிதி ஆயிரத்திதொள்ளாயிரத்து அறுபதுகளில் வீறு கொண்ட இயக்கமாயிற்று. 126 நாடுகளில் சமிதியின் கிளைகள் தோன்றி அரும்பணி ஆற்றலாயின.

4) இதற்கு 1200 கிளைகள் உலகெங்கும் உள்ளன.

5) பகவான் ஆற்றிய உரைகளின் ஆங்கில வடிவம் SathyaSai Speaks என்ற பெயரில் 42 தொகுதிகளாக வெளி வந்துள்ளன. அவற்றை

https://archive.org/details/sathyasaispeaks/sss01%20%28194%29%20%281953%20a%201960%29/ என்ற தளத்தில் படிக்கலாம்.

6) ஷீர்டி சாயியின் அடுத்த அவதாரம் ஶ்ரீ சத்ய சாயிபாபா. அடுத்த அவதாரம் கர்நாடக மாநிலத்தில் பிரேம சாயியாக எடுப்பேன் என்று அவர் அருளுரை பகர்ந்துள்ளார்.

7) வாஹினி என்ற வரிசையில் பகவான் கீதா வாஹினி, ஞான வாஹினி, பிரேம வாஹினி, தியான வாஹினி, தர்ம வாஹினி, பிரசாந்தி வாஹினி, சூத்திர வாஹினி, பாகவத வாஹினி, ப்ரச்னோத்தர வாஹினி ராமகதா ரஸ வாஹினி, சத்ய சாயி வாஹினி, உபநிஷத் வாஹினி, வித்யா வாஹினி உள்ளிட்ட நூல்களைப் படைத்து அருளியுள்ளார்.

7) சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவ மனையை110 கோடி ரூபாய் செலவில் அமைத்து 1991 நவம்பர் 2ஆம் தேதி திறந்து வைக்க சங்கல்பம் கொண்டார் பாபா. மூன்று லட்சம் சதுர அடியில் அமைந்துள்ள பிரம்மாண்டமான மருத்துவ மனை இது.

8) அப்போதைய பிரதமர் திரு பி.வி.நரசிம்ம ராவ் இந்த மருத்துவ மனையைத் திறந்து வைத்தார்.

9) உலகில் உள்ள பெரும் விஞ்ஞானிகள் பாபாவை தரிசித்தனர்; அவரது அற்புதங்களை நேரில் கண்டனர்; வியந்தனர்.

10) டாக்டர் ப்ராங்க் பாரனோஸ்கி அரிஜோனா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்தவர். அவர் பாபாவை தரிசித்தார். அவரது ஒளிவட்டத்தை (அவுரா) கண்டு வியந்தார். அவரை LOVE WALKING ON TWO FEET என்று வர்ணித்தார்.

11. உலகின் பிரபல சைக்கியாட்ரி நிபுணர் டாக்டர் சாமுவெல் சாண்ட்விஸ் பாபாவை தரிசித்தார். அவரது அருளைப் பெற்றார். AMAZING, UNBELIEVABLE, UNTHINKABLE என்று வர்ணித்தார். இனி சைக்கியாட்ரியே இல்லை! சாயிகியாட்ரி தான் என்று சிலேடையாக உரைத்தார்.

12. அமெரிக்காவைச் சேர்ந்த வால்டர் கோவான் 1971ஆம் ஆண்டு இந்தியா வந்தார். பாபாவை தரிசித்தார். திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக டிசம்பர் 25ஆம் தேதி காலை மரணமடைந்தார். உயிர் பிரிந்திருந்த உடலை பாபா காலை பத்து மணிக்குப் பார்க்க வருவதாகச் சொன்னார். சவத்தை மீண்டும் பார்க்க வந்த டாக்டர் அவர் உயிருடன் இருப்பதைப் பார்த்து பிரமித்தார். நாசி துவாரம், காதுகளில் வைக்கப்பட்டிருந்த பஞ்சு அகற்றப்பட்டது. உயிர் பிழைத்த கோவான் பாபாவே தன்னை வந்து காப்பாற்றியதாகவும் நடந்ததை விவரமாகவும் குறிப்பிட்டார்.

13. ஹாலிவுட்டில் கொடி கட்டிப் பறந்த திரைக்கதை ஆசிரியர் ஆர்னால்ட் ஷுல்மன் இந்தியா வந்தார். பங்களூரில் ஒய்ட்பீல்டில் பகவானைச் சந்தித்து ஆசி பெற்றார். அவர் கண்ட அனுபவங்கள் அவரைத் திகைக்க வைத்தது.

14. உலகெங்கும் இருந்த பக்தர்களின் வீடுகளில் இருந்த தெய்வீகப் படங்களிலிருந்து ஒரு கால கட்டத்தில் ஏராளமான விபூதி தானாகத் தோன்றியது. இது எப்படி என்று அனைவருக்கும் புரியவில்லை. பாபாவின் அருள் விளையாடல்களில் இதுவும் ஒன்று என்று அவர்கள் தெளிந்தனர்.

15. சிவராத்திரியன்று தனது உடலிலிருந்து லிங்கத்தை பாபா எடுப்பதை லட்சக் கணக்கான பக்தர்கள் கண்டு ஆனந்தித்து வந்தனர்.

16. பாபாவின் அணுக்கத் தொண்டரான கஸ்தூரி 1959தொடங்கி பாபாவுடன் நெருங்கி இருக்க ஆரம்பித்தார். 1982இல் அவர் எழுதிய LOVING GOD அவரது அனுபவங்களைத் தெளிவாகக் கூறும் ஒரு அபூர்வமான நூல்!

17. பிரசாந்தி நிலையத்திலிருந்து (புட்டபர்த்தி) சனாதன சாரதி என்ற ஆன்மீக மாத இதழ் ஆரம்பிக்கப்பட்டது. அதில் ஏராளமான ஆன்மீகக் கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன்.

18.உலகில் உள்ள ஏராளமான ஆன்மீகப் பெரியார்கள் பாபாவை தரிசனம் செய்து அருள் பெற்றுள்ளனர்.

19. பாரத ரத்னா திருமதி எம்.எஸ். சுப்புலட்சுமி பாபாவின் அணுக்க பக்தை. பாரத ரத்னா சச்சின் டென்டுல்கர் பாபாவின் பக்தர். பாபாவின் சமாதி தினத்தன்று நேரில் வந்து அஞ்சலி செலுத்தி அதில் அவர் கலந்து கொண்டார்.

20. பிரதமராக இருந்த பி.வி.நரசிம்மராவ், வாஜ்பாயி, மன்மோகன் சிங் ஆகியோர் பாபாவைப் பெரிதும் போற்றியவர்கள். பிரதமராக இருந்த மன்மோகன் சிங் சமாதி தினத்தன்று நேரில் வந்து கலந்து கொண்டார்.

21. HELP EVER, HURT NEVER என்பதே பாபாவின் உபதேசம். MY LIFE IS MY MESSAGE  என்று சுருக்கமாக தனது உபதேச சாரத்தை ஒரே வரியில் அவர் எடுத்துரைத்தார்.

22. DEDICATION, DEVOTION, DISCIPLINE, DISCRIMINATION, DETERMINATION என்று  இப்படி ஐந்து Dக்களைக் கூறிய பாபா இந்த ஐந்து நியமங்களையும் எவர் ஒருவர் நன்றாகப் பின்பற்றித் தேர்ச்சி பெறுகிறாரோ அவர் இறையருள் பட்டமான தெய்வானுக்ரஹம் என்பதை அடைவார் என்றார்.

23. பாபாவின் மஹிமை எல்லையற்றது. எந்த நேரத்திலும் அவரை வணங்கலாம்; அருள் பெறலாம்! அவரவர் அனுபவத்தையும் பெற்று மகிழலாம்!

***

புத்தக அறிமுகம் 121 – 1

அற்புத அவதாரம் சத்யசாயிபாபா

(அம்ருத சாகரம் இணைப்பு) –                                                        

பொருளடக்கம்

நூலில் உள்ள அத்தியாயங்கள்

1. அவதாரம் உதித்தது    

2. பிராமண பாலகன் 

3. செப்பினட்லு சேஸ்தாரா?    

4. நானே சாயிபாபா

5. ஷீர்டி சாயி  

6. ஷீர்டி சாயியின் அற்புத வாழ்க்கையில்

7. பூர்வ ஜென்ம பந்தம்    

8. மீண்டும் அவதரிப்பேன்

9. அவதாரப் பணி துவக்கம்     

10.சித்ராவதி நதிக் கரையில்    

11. பிரசாந்தி நிலையம்    

12. ரிஷிகேச யாத்திரை   

13. சுப்பம்மாவிற்கு அனுக்ரஹம்

14. ஜோடி ஆதிபல்லி ஸோமப்பா     

15. பத்ரிநாத் யாத்திரை    

16. ஸ்வாமி அபேதானந்தருக்கு அருள்     

17. கிழக்கு ஆப்பிரிக்க விஜயம்

18. சனாதன சாரதி   

19. கஸ்தூரி பெற்ற அருள்

20. கஸ்தூரி கண் அன்புக் கடவுள்

21. சிவராத்திரி லீலை     

22. அற்புதங்கள் என் விசிடிங் கார்டுகள்    

23. ராஜ குடும்பத்தின் அனுபவம்     

24. இந்திய விஞ்ஞானிகளின் வியப்பு

25. ஈஸ்வரம்மா     

26. சத்ய சாயி சேவா நிறுவனங்கள்  

27. இந்திரா தேவி பெற்ற அனுக்ரஹம்     

28. ஹோவர்ட் மர்பட்     

29. உல்ப் மெஸ்ஸிங்கிற்கு அனுக்ரஹம்   

30. சுவாமியின் ஒளிவட்டம்    

31. இறந்தவர் எழுந்தார்   

32. சைக்கியாட்ரிஸ்ட் கண்ட சாயிகியாட்ரி

33. விஞ்ஞானிகளை வியக்க வைத்தவ்ர்   

34. அருள் பெற்ற ஆர்னால்ட் ஷுல்மன்    

35. நக்ஸலைட் பக்தரானார்     

36. கேன்ஸர் கேன்ஸல்ட்

37. சூப்பர் ஸ்பெஷாலிடி ஆஸ்பத்திரி

38. பல நாடுகளிலும் சாயி

39. பாபா தன்னைப் பற்றிக் கூறியது!

40. சுவாமியின் அருள் உரைகளும் நூல்களும்   

41. பிரேம சாயி     

*

2002ஆம் ஆண்டு அச்சுப் பதிப்பாக வெளி வந்த நூலில் இடம் பெற்ற முன்னுரை இது:

நாம் வாழும் காலத்தில் அற்புதமான அவதாரம் நிகழ்ந்துள்ளது! ஶ்ரீ சத்ய சாயிபாபா தோன்றிய காலத்திலேயே நாமும் பிறந்து வாழ்ந்து வருவது நாம் செய்த மிகப் பெரும் பாக்கியம்!

ஶ்ரீ ராமருடன் வாழ்வதில் அயோத்திவாசிகள் எவ்வளவு சந்தோஷம் அடைந்தார்களோ, ஶ்ரீ கிருஷ்ணருடன் வாழ்வதில் மதுரா, கோகுலம், பிருந்தாவனவாசிகள் எவ்வளவு ஆனந்தம் அடைந்தார்களோ அவ்வளவு சந்தோஷமும், ஆனந்தமும் சாயி லீலைகளை அனுபவிப்பதில் பெறுகிறோம்.

1965ஆம் ஆண்டு முதல் முதலாக பகவானைத் தரிசிக்கும் பேறு கிடைத்தது. பழம் பெரும் சாயி பக்தரான திரு பி.எஸ்.ஏ. சுப்ரமணிய செட்டியார் அவர்கள்  முன்னின்று ஏற்பாடு செய்த புட்டபர்த்தி யாத்திரையில் என் தந்தையார் தினமணி திரு வெ.சந்தானம் அவர்களுடன் குடும்பம் முழுதும் பயணப்பட்டோம். எல்.ஐ.சி. உயர் அதிகாரி திரு கே.ஆர்.கே.பட் உட்பட மதுரை பக்தர்கள் புட்டபர்த்தியில் அடைந்த ஆனந்த அனுபவம் வார்த்தைகளில் விளக்க முடியாதது! பர்த்தியில் தந்தையாருடன் அந்தரங்க பேட்டி அறையில் குடும்பம் முழுதும் சென்றோம். பகவான் தனது விசிடிங் கார்டை சிருஷ்டித்து எனது தந்தையாருடன் அந்தரங்க பேட்டி அறையில் கொடுத்த போது, சுமார் நூறு நாட்களில் பகவான் பற்றி நூற்றியெட்டு பாடல்களை இயற்றி ராக தாளத்துடன் அதை அச்சிட்டு நூலை சுவாமியிடம் எனது தந்தையார் சமர்ப்பித்த போது அது தோன்றிய அந்தக் கணமே சமர்ப்பிக்கப்பட்டு விட்டது என்ற பகவான் பதங்கள் துள்ளிக் குதித்து வந்துள்ளன என்றும் குறிப்பிட்டார். இது தான் எங்கள் குடும்பம் பகவானுடன் தொடர்பில் வந்த முதல் நிகழ்ச்சி.

சாயி பக்தியில் ஊறித் திளைத்த பக்தர்களுடன் சேவா தளத்தில் இணைந்தேன். காலை நான்கு மணிக்கு நகர சங்கீர்த்தனம், பிறகு மதுரை எர்ஸ்கின் மருத்துவ மனியில் சேவை, பிறகு மேலப் பனங்காடியில் இலவச மருத்துவ முகாம், மாலையில் கோவிலில் உழவாரப் பணி, பிறகு சாயி பஜன், சத்சங்கம் என்று எல்லா நிகழ்ச்சிகளையும் ஒவ்வொரு ஞாயிறு அன்று செய்து வந்தோம். புட்டபர்த்திக்கு சேவாதளத் தொண்டர்களை அழைத்துச் செல்லும் வாய்ப்பு, பல கூட்டங்களிலும் முகாம்களிலும் பங்கு கொள்ளும் பேறும் கிடைத்தது. பாபாவின் திருக்கரத்தால் பரிசு வாங்கும் பேறும் கிடைக்கப் பெற்றேன்.

அவரது அற்புத சரித்திரத்தை எழுத வேண்டுமென்ற எண்ணம் பல வருடங்களாக இருந்த போதிலும் பணியின் பிரம்மாண்டம் மலைப்பைத் தந்தது. வருடங்கள் கழிந்தன.

விநாயகா பதிப்பக உரிமையாளர் திரு சுவாமிநாதன் திடீரென்று ஒரு நாள் இயற்கையாக சர்வ சாதாரணமாக சாயிபாபா சரித்திரத்தை எழுதுங்கள் என்றார்.

பகவானே இந்தப் பணியைச் செய்யத் தூண்டுகிறார் என்று உணர்ந்தேன்.

எனது தந்தையார் சேர்த்த புத்தகங்களும் நான் வாங்கிய புத்தகங்களும் நிறைய இருந்தாலும் நூலுக்குச் சில முக்கிய புத்தகங்கள் தேவையாக இருந்தன. எனது சகோதரர் திரு வி.எஸ். மீனாட்சிசுந்தரிடம் இருந்த புத்தகங்களை எடுத்துக் கொண்டு – இல்லை, அள்ளிக் கொண்டு வந்தேன். எடுத்துச் செல்ல அன்புடனும் ஆர்வத்துடனும் அனுமதி கொடுத்த அவருக்கு என் நன்றி.

பாபாவின் சரித்திரம் பல ஆயிரம் பக்கங்கள் எழுதினாலும், சரித்திரத்தின் ஒரு சிறிய பகுதியையே கூறியிருப்பதாக ஆகி விடும்.

அவ்வளவு மகத்தான சரிதம்! கபீர்தாஸரின் “ஏழு சமுத்திர நீரை மையாக ஆக்கினாலும், பூமியையே பேப்பராக ஆக்கினாலும், மரங்களை பேனாக்களாக ஆக்கினாலும், பகவானே! உன் புகழை எழுத முடியாது” என்ற வாக்கின்படி சாயி அவதாரத்தின் மகிமையை முற்றிலுமாக யாரே உரைக்க வல்லார்?!

இதை எழுதுவதற்கு உதவியாக இருந்தும் சாயி சேவாதள பணிகள், பஜனா மண்டலி பணிகள் ஆகியவற்றில் ஊக்கமுடன் ஈடுபட்டு வரும் என் மனைவி சித்ரா நாகராஜன், மற்றும் மகன்கள் திரு நா.சத்யநாராயணன், திரு நா. விஜயகிருஷ்ணன் ஆகியோருக்கு என் நன்றி. சாயி பக்தியை ஊட்டி வளர்த்த என் தந்தை, தாய்க்கு நன்றி!

நல்ல முறையில் இதை அச்சிட்ட திரு சுவாமிநாதன் அவர்களுக்கு என் நன்றி.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்றி மணிவாசகர் கூறியது போல சுவாமியை வணங்கச் செய்த அருளை நினைந்து ஆனந்தம் அடைகிறேன். பரமபாவன நாமமான சாயி நாமத்தை உச்சரித்து, அவரது லீலைகளை அனுபவித்து, அவர் காட்டிய வழியில் சாதனை புரிந்து அவர் அருளுக்குப் பாத்திரர்களாக ஆவோமாக!

சாயி அன்பர்கள் அனைவருக்கும் இந்த நூலைக் காணிக்கையாக்குகிறேன்.

சென்னை                         அன்புடன் ச.நாகராஜன்

1-10-2002

நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது:

Linking with the previous incarnation of Shirdi Sai and the expected incarnation of Prema Sai, this book describes in detail the living legend Sri Sathya Sai Baba. The 41 chapters are truly blissful, providing an insight into the miracles of Sathya Sai Baba. Also attached are 108 prime discourses of Sathya Sai Baba. A must read for Sai devotees and spiritually inclined people.

நாம் வாழும் காலத்தில் நம்மோடு வாழ்ந்த அற்புத அவதாரமான ஸ்ரீ சத்திய சாயிபாபாவின் வாழ்க்கை வரலாற்றைத் தெளிவாக விளக்கும் நூல். அவருடைய முந்தைய அவதாரமான ஷீர்டி சாயி பற்றியும் அடுத்து அவர் பிரேம சாயியாக அவதரிக்கப் போவது பற்றியும் நூலில் காணலாம். 41 அத்தியாயங்களில் சாயியின் அற்புத வரலாற்றை விரிவாகப் படிப்பது ஆனந்தமான அனுபவம்! அத்துடன் ஸ்ரீ சாயிபாபாவின் 108 முக்கியமான உரைகளின் தொகுப்பும் நூலில் இரண்டாவது பகுதியாக இணைக்கப்பட்டுள்ளது. சாயி அன்பர்களும் ஆன்மீக நாட்டம் உடையவர்களும் அவசியம் படிக்க வேண்டிய நூல்!

*

இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘அற்புத அவதாரம் சத்யசாயிபாபா!’ நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

*

Tamil Hindu Encyclopaedia 28: Garuda Flag, Lotus from Belly with Brahma, Source of Universe/Vishnu (11,463)

 WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,463

Date uploaded in London – 22 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

This is the third part on Vishnu in Sangam Tamil Literature

BRAHMA ON LOTUS FROM BELLY

Sangam poets describe the appearance of Vishnu in detail.

They say a lotus flower was there in the belly of Vishnu from which Lord Brahma appeared even before the landmass appeared from the water.

Perum. lines 402-404. Pari 3-93/94

LOTUUS EYED

His eyes also were lotus petals shaped

Pari.2-53 , 1-6, 4-60/61; 15-49,.(It is in Tirukkural as well)

His feet are like lotus petals. He is beyond Pat, Present and Future.

Pari.13-46/47

These feet are capable of cutting one from the cycle of birth and death

Pari.3-2

Since they are helping one to come out of the cycle of birth and death, they are considered better than Vishnu himself.

Pari.4-62

WHEEL AND CONCH ON TWO HANDS

Tiru mal is holding the Wheel on his right hand and Chanka / conch on his left hand . They look like sun and moon Pari.13-7/9.

Chakra is Sun and Chank is Moon according to Kali.134-1/4

Akam.175-14

The chank is a rare right Whorl Chank (Valampuri), Pari 13-9 and Mullai- line 1-3

His Wheel is of golden, metal

Kali 104-9; Pari.1-55/56

They are ever victorious. With those two Tirumal destroyed enemies and those criticized him.

Akam.175-14; Pathitr.31-8; Puram.58-15, Mullai.1-2, Pari.1-55/56; 60-6 and four more places, Kali.129-4; 134-3/4

Chank roared like thunder, Wheel Chakra was like flame. The action of these two in eliminating enemies is described like battle field Pari.2-36/51

HIS GARUDA FLAG AND  GARUDA VAHANA

Eagle or Falcon/ Garuda is his vehicle and the symbol on his flag.

Pari.2-60

In other places the word ‘’bird flag’’ is used

Puram.56-6; Pari 1-66; 13-4; 1-11; 4-37/38; 13-4.

Garuda figured in the Amrita episode and it took some of the Amrita. Probably that is the reason for placing him in the flag.Pari 3-15/18

Pari 4-36/42

The detailed descriptions are given below

Pari.1-5/11; 13-50/60

Pathitr.31-7/9

The devotees of Vishnu are great Gnanis, scholarly Saints according tossngam poets

SPECIAL KURAVAI DANCE

KURAVAI dance is a particular group dance done by Tamil women. They joined their hands and formed a big circle and did the dancing. They sang a chorus

Kali.103-74/75; 104-78

Shrines of Vishnu

Following holy towns had Vishnu temples according to Sangam poets,

Irunthaiyur (near Madurai)

Kulavaay

Tiruvarangam

Tiruvehgha

Tiruvananthapuram

Tirumalirumcholai (near Madurai)

Pari Thirattu.1-5; 1-60/63

Festival

Panguni Uttara festival on full moon day was celebrated in Tiru Arangam

Akam.137-6/11

Tiru Anantha Puram Pathitr 31-7/9

Tiru vegga, Kanchi Perum 372/3 in Sleep ing pose

Tiru Malirum Cholai five places including Pari 15-21/23, 10/16

His Tulsi Garland is also mentioned.

Virtues of Vishnu

When Tamil Sangam poets described the virtues of Vishnu they repeated whatever said about him in the Vedas . They are beautiful translations of the Vedas. Some of the attributes of Vishnu as recited by the Sangam poets are given below

Brahmins praise him in various ways and stages.

Pari 1-11/12; 1-56/57;3-11/14

He is the supreme one according to Vedas.

But he is beyond the Vedas and Agamas.

He cannot be understood through Agamas or mind or feeling. He is beyond all these.

He is the chief of Devas and the Asuras who went and jumped into the sea fearing him. So he has neither friends nor enemies.

He is omnipresent. He is the five senses and make everyone to feel them.

He is the five elements. He is the source of everything. He is the Eternal Time and Dharma ; in him reside all that live in the 3×7 worlds.

More description about his body

The shining that comes from his body is similar to the shining of sapphire.

His eyes are like lotus/ petals

He is as true as days which comes without fail.

His patience is similar to the earth

He is like the clouds in showering grace.

That is what the Vedas say.

But yet he cannot be compared with the things and actions listed so far.

Another poet portrayed him as the source of five elements, all heavenly bodies including sun and moon, all the living beings in the 3×7 worlds

Pari 2-52/59

Pari 3-4/11

Another beautiful description about Vishnu is as follows

You are the heat and light in the fire

You are the fragrance in flowers

You are the gem stones under the earth

You are the Truth in words/ speech

You are the Love in Moral codes

You are the punishment for the evil people.

You are the hidden Upanishads in the Vedas

You are the source of elements

You are the heat in the sun

You are the grace in moon light

You are everything, you are in everything

Pari 3-63/68

Another poem describes him as impartial one and above all the attributes given to him. He described them as the reflection s of human thinking. In truth he has no shape , both concrete and abstract.

Pari 4-49/56

Poem 4-25/35 describes him as

Your heat and light are seen in sun

Your grace and coolness are in moon

Your showering and force are in rain

Your good governing and maintaining are seen in the world

Your fragrance and shining beauty are in flower

Your appearance and vastness are in water

Your shape and sound are seen in the sky

You are the Big Bang and Big Crunch,seen in Maruts/ wind/atmosphere

Pari 4-66/73 poem shows the locations where he is

In the banyan tree Kadamba tree,

In river and hill, in river island,in top places

In the worshipping hands of the devotees

You act as their servants and protectors

You have many names

In another place he is depicted as an umbrella

The cloth of the umbrella is his grace and the stick is Dharmam, the moral code.

That is how he is protecting 3×7 worlds under the shadow.

Pari 3-73/76

My Comments:

We see all that is said in the Vedas, Vishnu sahasranama and Alvar poems.

We see the origin of Bhakti in the Vedas. But in Tamil,  Pari patal is the source of Bhakti in Sangam period.

Later poets compared the kings to Vishnu because of their good governance and protection.

Xxx

Tamil Reference:

பரிபாடல் 3-48/58

வனப்பும் வலியும்

நினக்கு-விரிந்து அகன்ற கேள்வி அனைத்தினும்,

வலியினும், மனத்தினும், உணர்வினும், எல்லாம்-

வனப்பு வரம்பு அறியா மரபினோயே!     50

அணி நிழல் வயங்கு ஒளி, ஈர்-எண் தீம் கதிர்,

பிறை வளர், நிறை மதி உண்டி,

அணி மணிப் பைம் பூண், அமரர்க்கு முதல்வன் நீ;

திணி நிலம் கடந்தக்கால், திரிந்து அயர்ந்து, அகன்று ஓடி,

நின் அஞ்சிக் கடற் பாய்ந்த பிணி நெகிழ்பு அவிழ் தண் தார் 55

அன்னவர் பட, அல்லா அவுணர்க்கும் முதல்வன் நீ;

அதனால், ‘பகைவர் இவர்; இவர் நட்டோர்’ என்னும்

வகையும் உண்டோ, நின் மரபு அறிவோர்க்கே?

Xxxx

எங்குமாய் எல்லாமாய் நிறைந்த பெருமை

பரிபாடல் 13-14/25

சுவைமை, இசைமை, தோற்றம், நாற்றம், ஊறு,

அவையும் நீயே, அடு போர் அண்ணால்!  15

அவைஅவை கொள்ளும் கருவியும் நீயே;

முந்து யாம் கூறிய ஐந்தனுள்ளும்,

ஒன்றனில் போற்றிய விசும்பும் நீயே;

இரண்டின் உணரும் வளியும் நீயே;

மூன்றின் உணரும் தீயும் நீயே;             20

நான்கின் உணரும் நீரும் நீயே;

அதனால், நின் மருங்கின்று–மூ-ஏழ் உலகமும்,

மூலமும், அறனும், முதன்மையின் இகந்த

காலமும், விசும்பும், காற்றொடு கனலும்  25

Xxx

பொன் ஏர்பு அவிர் அழல் நுடக்கு அதன் நிறனே.

பரிபாடல் 2-52/60

திருமால் திருமேனியின் ஒளி முதலிய சிறப்புக்கள்

நின்னது திகழ் ஒளி சிறப்பு இருள் திருமணி;

கண்ணே, புகழ்சால் தாமரை அலர் இணைப் பிணையல்;

வாய்மை, வயங்கிய வைகல்; சிறந்த

நோன்மை நாடின், இரு நிலம்; யாவர்க்கும், 55

சாயல் நினது, வான் நிறை-என்னும்

நா வல் அந்தணர் அரு மறைப் பொருளே:

அவ்வும் பிறவும் ஒத்தனை; உவ்வும்

எவ் வயினோயும் நீயே.

உருவமும், உணவும், வெளிப்பாடும்

செவ்வாய் உவணத்து உயர் கொடியோயே!

Xxx

பரிபாடல் 3-4/11

தீ வளி விசும்பு நிலன் நீர் ஐந்தும்,

ஞாயிறும், திங்களும், அறனும், ஐவரும்,         5

திதியின் சிறாரும், விதியின் மக்களும்,

மாசு இல் எண்மரும், பதினொரு கபிலரும்,

தா மா இருவரும், தருமனும், மடங்கலும்,

மூ-ஏழ் உலகமும், உலகினுள் மன்பதும்,

மாயோய்! நின்வயின் பரந்தவை உரைத்தேம்   10

மாயா வாய்மொழி உரைதர வலந்து:

Xxx

பரிபாடல் 3-61-70

ஓ!’ எனக் கிளக்கும் கால முதல்வனை;

ஏஎ இன கிளத்தலின் இனைமை நற்கு அறிந்தனம்;

சாம வேதம் கூறுதலின் தெளிந்த பொருள்

தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ;

கல்லினுள் மணியும் நீ; சொல்லினுள் வாய்மை நீ;

அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ;         65

வேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ;

வெஞ் சுடர் ஒளியும் நீ; திங்களுள் அளியும் நீ;

அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ; ஆதலின்,

உறையும் உறைவதும் இலையே; உண்மையும்

மறவியில் சிறப்பின் மாயமார் அனையை;               70

Xxxx

பரிபாடல் 3-73-76

பறவாப் பூவைப் பூவினோயே!

அருள் குடையாக, அறம் கோலாக,

இரு நிழல் படாமை மூ-ஏழ் உலகமும்

Xxxx

பரிபாடல்-4

உலகு உயிர்களின் தோற்றமும், நிலைபேறும், ஒடுக்கமும்

நின் வெம்மையும் விளக்கமும் ஞாயிற்று உள;   25

நின் தண்மையும் சாயலும் திங்கள் உள;

நின் சுரத்தலும் வண்மையும் மாரி உள;

நின் புரத்தலும் நோன்மையும் ஞாலத்து உள;

நின் நாற்றமும் ஒண்மையும் பூவை உள;

நின் தோற்றமும் அகலமும் நீரின் உள;      30

நின் உருவமும் ஒலியும் ஆகாயத்து உள;

நின் வருதலும் ஒடுக்கமும் மருத்தின் உள;

அதனால், இவ்வும், உவ்வும், அவ்வும், பிறவும்,

ஏமம் ஆர்த்த நிற் பிரிந்து,

மேவல் சான்றன, எல்லாம்.   35

Xxxx

பகையும் நட்பும் இன்மை

கடு நவை அணங்கும் கடுப்பும், நல்கலும்,

கொடுமையும் செம்மையும், வெம்மையும் தண்மையும் 50

உள்வழி உடையை; இல்வழி இலையே;

போற்றார் உயிரினும், போற்றுநர் உயிரினும்,

மாற்று ஏமாற்றல் இலையே; ‘நினக்கு

மாற்றோரும் இலர்; கேளிரும் இலர்’ எனும்

வேற்றுமை இன்று, அது போற்றுநர்ப் பெறினே: 55

மனக்கோள் நினக்கு என வடிவு வேறு இலையே;

கோள் இருள் இருக்கை ஆய் மணி மேனி,

நக்கு அலர் துழாஅய் நாறு இணர்க் கண்ணியை;

பொன்னின் தோன்றிய புனை மறு மார்ப!

நின்னில் தோன்றிய நிரை இதழ்த் தாமரை     60

அன்ன நாட்டத்து அளப்பரியவை;

நின்னின் சிறந்த நின் தாள் இணையவை;

நின்னில் சிறந்த நிறை கடவுளவை;

அன்னோர் அல்லா வேறும் உள; அவை

நின் ஓர் அன்ஓர் அந்தணர் அருமறை.    65

பல்வேறு திருப்பெயர் கொண்ட ஒரு பொருள்

அழல் புரை குழை கொழு நிழல் தரும் பல சினை

ஆலமும், கடம்பும் நல் யாற்று நடுவும்,

கால் வழக்கு அறு நிலைக் குன்றமும், பிறவும்,

அவ்வவை மேவிய வேறு வேறு பெயரோய்!

எவ் வயினோயும் நீயே; நின் ஆர்வலர்    70

தொழுத கை அமைதியின் அமர்ந்தோயும் நீயே;

அவரவர் ஏவலாளனும் நீயே;

அவரவர் செய்பொருட்கு அரணமும் நீயே. 73

To be continued………………………………………

 Tags- Garuda flag, Garuda Vahana, Belly Button, Brahma on Lotus, attributes of Vishnu, Paripatal, Bhakti poems

முயற்சியே மேன்மை தரும்! (Post No.11,462)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,462

Date uploaded in London – –   22 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

மஹாபாரத வழிகாட்டி!

முயற்சியே மேன்மை தரும்!

ச.நாகராஜன்

எந்த ஒரு சிக்கலான கேள்விக்கும் மஹாபாரதத்தில் விடை உண்டு.

இதில் இல்லாதது வேறு எதிலும் இல்லை!

விதியா, முயற்சியா என்ற கேள்வி காலம் காலமாக மனித மனதைக் குடைந்து கொண்டிருக்கும் ஒரு கேள்வி.

இதற்குத் தெளிவான பதிலை மஹாபாரதத்தில் காண்கிறோம்.

முயற்சியே அனைத்தையும் தரும் என்பதே பதில்.

இதையே யோக வாஷிஷ்டமும் கூறுகிறது.

அநுசாஸன பர்வம் ஒன்பதாவது அத்தியாயம் முயற்சியின் சிறப்பைக் கூறுகிறது.

பத்தாவது அத்தியாயம் நல்வினை, தீவினைகளின் பயனைக் கூறுகிறது.

யதா பீஜம் பினா க்ஷேத்ரமுப்தம் பவந்தி நிஷ்பலம் |

ததா புருஷகாரேண பினா தைவம் ந சித்யதி ||

வித்தின்றி எதுவும் உண்டாவதில்லை.  வித்தின்றி பழமும் கூட உருவாகாது.  வித்திலிருந்து வித்து உண்டாகிறது. பழமும் வித்திலிருந்தே உண்டாகிறது.

வித்திலிருந்து முளை முளைக்கிறது. முளையிலிருந்து இலை உண்டாகிறது. இலையிலிருந்து காம்பு உண்டாகிறது.

காம்பிலிருந்து கிளை உண்டாகிறது. கிளையிலிருந்து மலர் உண்டாகிறது. மலரிலிருந்து கனி உண்டாகிறது.

கனியினால் வித்து ஏற்படுகிறது. வித்திலிருந்து திரும்பவும் உற்பத்தியானது உண்டாகிறது.

மஹிமை பொருந்திய வசிஷ்டருக்கு வந்த சந்தேகத்திற்கு பிரமதேவர் கூறும் பதில் இது!

நல்வினையினால் இன்பமும் தீவினையினால் துன்பமும் உண்டாகிறது.

ஒரு காரியத்தைச் செய்பவன் பாக்யத்தினால் நோக்கப்பெற்று எல்லாவற்றிலும் லாபத்தை அடைகிறான்.

செய்யாதவன் தன் நிலைகுலைந்து புண்ணில் உப்பு நீர் விட்டது போன்ற துயரத்தை அடைகிறான்.

 முயற்சி செய்யாதவனுக்கு அதிர்ஷ்டத்தினால் வருவது ஒன்றுமில்லை.

நக்ஷத்திரங்களும், தேவர்களும், நாகர்களும், யக்ஷர்களும் சந்த்ரன், சூர்யன், வாயு இவர்கள் அனைவரும் மனிதர்களாயிருந்து முயற்சியினால் தேவத்தன்மையை அடைந்தவர்கள்.

தம் தம் செய்கைகளுக்குப் பலன் இல்லாது போமாயின், உலகம் தெய்வத்தையே எதிர்பார்த்துக் கொண்டு ஒன்றும் செய்யாமல் இருந்து விடும்.

அப்போது எல்லாம் வீணாகிப் போய் விடும்.

மானிடர் செய்யும் முயற்சியைச் செய்யாமல் தெய்வத்தையே நம்பி இருப்பவன், ஆண்மை இல்லாத கணவனை அடைந்த பெண் போல வீணாக வருத்தப்படுகிறான்.

புண்ய பாவங்களுக்குத் தேவ லோகத்தில் சீக்கிரமாகப் பயன் உண்டாகும்; அது போல மானிட லோகத்தில் உண்டாவதில்லை.

தானே தனக்கு நண்பன். தானே தனக்குப் பகைவன்.

தான் செய்ததற்கும் செய்யாததற்கும் தானே ஸாக்ஷி.

முன்னொரு காலத்தில் யயாதி ஸ்வர்க்கத்திலிருந்து தள்ளப்பட்டு நழுவிப் பூமியில் விழுந்த போது அவனது தௌஹித்திரர்கள்  தம் தம் புண்ய கர்மாக்களினால் அவனைத் திரும்பவும் ஸ்வர்க்கத்தில் ஏற்றினர்.

(இளையின் மகனான) ஐஸன் என்று பெயர் பெற்றவனும் பூமிக்கு அதிபதியுமான புரூரவன் என்னும் ராஜரிஷி, பிராமணர்களின் சொல்லினால் ஸ்வர்க்கம் அடைந்தான்.

அஸ்வமேத யாகம் உள்ளிட்டவற்றால் மேன்மை பெற்ற கோசல தேசத்தின் அதிபதியான ஸௌதாஸன் என்பான் வசிஷ்ட மஹரிஷியின் சாபத்தினால் ராக்ஷஸத் தன்மையை அடைந்தான்.

வில்லாளிகளான அஸ்வத்தாமாவும் பரசுராமரும் ரிஷி புத்திரர்களாக இருந்தாலும் கூட ஸ்வர்க்கம் பெறவில்லை.

(ஏனெனில் அஸ்வத்தாமா தூங்கினவர்களை பாரதப் போரில் கொன்றான் பரசுராமரோ தம் புண்யலோகங்களை ராமர் பாணத்தினால் தடுத்ததால் இழந்தார்.)

இப்படி இன்னும் ஏராளமான உதாரணங்களை இந்த அத்தியாயத்தில் காணலாம்.

வழி தப்பி நடப்பவனை தெய்வம் தடுப்பதில்லை. ஸ்வதந்திராதிகாரம் தெய்வத்தின் கண் இல்லை. குருவை சிஷ்யர் அனுசரிப்பது போல மனிதன் செய்த சிறந்த கர்மத்தைத் தெய்வம் அனுசரிக்கிறது.

விடாமுயற்சியினால் தெய்வத்தைத் தூக்கி விட்டு விதியும் வினையும் சேர்வதனால் ஸ்வர்க்கத்தின் வழியை அடையலாம்.

இப்படி வசிஷ்டருக்கு பிரம்மா விடாமுயற்சி, தைவம் ஆகிய இரண்டையும் பற்றித் தெளிவாக எடுத்துரைத்தார்.

தபஸா ரூப சௌபாக்யம் ரத்னானி விவிதானி ச |

ப்ராப்யதே கர்மணா சர்வம் ந தைவாத்க்ருதாத்மனா ||

By his strenuous effort, man gains beauty, good fortune and other riches. Through endeavor man can achieve everything; by depending on providence nothing.

இடைவிடா முயற்சியினால் மனிதன் அழகு, நல்ல சௌபாக்யம் மற்றும் இதர செல்வங்களைப் பெறுகிறான்.

முயற்சியினால் மனிதன் எல்லாவற்றையும் அடைகிறான்.

அதிர்ஷ்டத்தை (தைவம்) நம்பி ஒன்றையும் அடைவதில்லை.

க்ருத புருஷகாரஸ்து தைவமேவானுவர்ததே |

ந தைவமக்ருதே கிஞ்சிதம் தாஹ்துமர்ஹதி ||

மனித முயற்சி தைவத்தைப் பின் தொடர்கிறது. ஆனால் முயற்சி இல்லையேல் தைவம் ஒன்றுமில்லை.

இதை விட முயற்சி, அதிர்ஷ்டம் (தைவம்) பற்றித் தெளிவாக எந்த நூலும் உரைக்க முடியாது.

அடுத்த அத்தியாயத்தில் நல்வினை  மற்றும் தீவினைகளின் பயன் அற்புதமாக விவரிக்கப்படுகிறது.

படிக்க வேண்டிய முக்கிய அத்தியாயங்கள் இவை.

முயற்சி எடுத்து இவற்றைப் படிப்போம். சூக்ஷ்ம மர்மத்தைப் புரிந்து கொண்டு முன்னேறுவோம்.

*** 

Tags- முயற்சி, மேன்மை,

புத்தக அறிமுகம் – 120

அறிவியல் நிரூபிக்கும் அழிவற்ற ஆன்மா                                      

பொருளடக்கம்

நூலில் உள்ள அத்தியாயங்கள்

1. அறிவியல் நிரூபிக்கும் அழிவற்ற ஆன்மா!

2. ஆன்மீக வாழ்க்கை மூளையில் ஏற்படுத்தும் அதிசய மாற்றங்கள்!

3. உளவியல் நோய்களைத் தியானம் மூலம் குணமாக்கும் 

  இன்டர்நெட் யோகி டேவிட் ஷானஹாஃப் கால்ஸா!

4. அபாய நோயிலிருந்து பிரபஞ்ச ஆற்றலால் மீண்டவர்!

5. விஞ்ஞானிகள் வியக்கும் பிரார்த்தனை மஹிமை!

6. கடவுள் துகளில் கடவுள் இல்லை, ஆனால் இருக்கிறார்!

7. கடவுள் துகளைக் கண்டு விண்ட திருமூலர்!                       8. அறிவியல் விஞ்ஞானிகள் வியக்கும் அஸ்திரங்கள்

9. அதிசயிக்க வைக்கும் கர்ம பலன் ரகசியம்! – 1

10. அதிசயிக்க வைக்கும் கர்ம பலன் ரகசியம்! – 2

11. அடியார்கள் வானில் அரசாள ஆணையிட்ட அற்புதர் சம்பந்தர்!

12. அப்பர் தேவாரத்தில் அரும் பழமொழிகள்

13. பகவத்கீதையின் ஒரு பதம்!

14. ஆன்ம ஞானம் பெற அதி சுலபமான அதிசய வழி!

15. மூன்று சோதனைகள்!

16. அந்தமில் பெருமை அறம் வளர்க்கும் அழகா போற்றி!

17. இன்னொரு பிறவியும் வேண்டுவதே இந்தப் பூவுலகிலே!

18. பகவான் ரமணரைச் சந்தித்த பாக்கியவான்கள்!

19. ராஜாஜி ரமணரை தரிசித்ததுண்டா? – ஒரு விளக்கம்

20. பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபாவின் வாழ்வும் பகவான் ரமணரின்    

   வாக்கும் புகட்டும் அற்புத உண்மைகள்!

21. அரவிந்த யோகம்

22. கிருஷ்ணார்ஜுனர் – பரமஹம்ஸ விவேகானந்தர் அவதார ரகசியம்!

23. ஸ்பரிசவேதி ஸ்வாமி விவேகானந்தர்

24. ஞான சூர்யன் ஸ்வாமி விவேகானந்தரின் சிகாகோ வெற்றி!

25. சங்க ஜனனி ஸ்ரீ சாரதா மணி தேவியார்!

26. மரணத்தை வரவேற்ற மரணமில்லா மகான்!

27. காந்திஜியின் உடலிலிருந்து ராம நாமம் ஒலிக்கிறது!

28. புராணத் துளிகள்

*

இந்த நூலுக்கு ஞான ஆலயம் ஆசிரியர் திருமதி மஞ்சுளா ரமேஷ் அவர்கள் வழங்கியுள்ள அணிந்துரை இது:

அணிந்துரை

எழுத்தாளர் சுஜாதா விஞ்ஞானத்தை இலக்கியத்தில் கொண்டு

வந்து சுவாரஸ்யமாக, ஜனரஞ்சகமாக எழுதி வெற்றி பெற்றார். அதற்குப்

பிறகே எதையும் விஞ்ஞானரீதியாக அணுகி ஆராய்வது என்பது பரவலாக வர ஆரம்பித்தது எனலாம்.

ஆனால் நம் பாரத நாட்டிலோ மிகத் தொன்மையான காலத்திலிருந்தே

ஆன்மிகத்தை விஞ்ஞான அடிப்படையிலேயே வார்த்திருந்தனர். அது

மக்களிடம் பரவலாகச் சென்றடையவில்லை. நம்பிக்கை, ”பெரியவர்கள்

இப்படிச் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள், அப்படிச் செய்கிறோம்” என்ற நம்பிக்கை அடிப்படையிலேயே வழிவழியாக வாழ்ந்து வந்தனர். சஞ்சலமில்லாத இந்த வாழ்வியல் முறையே நமது பலம் என்று கூட சொல்லலாம்.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் சிறு குழந்தைகள் முதல் எல்லோரிடமும் கேள்விகள் இருக்கின்றன. விளக்கம் திருப்தி தந்தாலேயே அதனை ஏற்றுக் கொள்கின்றனர் இன்றைய சமுதாயத்தினர். நமது ஆன்மிகத்தில் எத்தனை விஞ்ஞானமும், அதிசயங்களும் நிறைந்துள்ளன என்பதை ஆராய்ந்து அறியும் போது வியப்பும் பிரமிப்பும்தான் ஏற்படுகின்றன. ஆனால் இவற்றையெல்லாம் விளக்குபவர்கள் தான் குறைவாக உள்ளனர்.

அப்படிப்பட்டவர்களில் மிக அபூர்வமானவர் என்றே திரு ச. நாகராüன் அவர்களை சொல்லலாம். வேதங்கள், சாஸ்திரங்கள், ராமாயணம், மகாபாரதம் போன்றவற்றில் உள்ள உன்னதமான விஷயங்களை அறிவியல் ரீதியாக விளக்கி, அதே சமயம் சுவாரஸ்யம் குன்றாமல் அவர் ஞான ஆலயத்திற்கு எழுதி அனுப்புவார். வாசகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட அக்கட்டுரைகளின் தொகுப்பே இந்தப் புத்தகம் என அறியும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

எங்களுடைய இன்னொரு பத்திரிகையான ‘ஸ்ரீ ஜோசியம்’ பத்திரிகைக்கு விஞ்ஞானத்துடன் கூடிய ஜோதிட ரீதியான கட்டுரைகளை அனுப்பியிருந்தார். பிரமிக்க வைக்கும் தகவல்களை அவைகள் தந்தன.

எழுத்துலகில் தனக்கென ஒரு பாணியை அமைத்துக் கொண்டு

பணியாற்றி வரும் ச.நாகராஜன் அவர்கள் நீண்டகாலம் வாழ்ந்து,

இலக்கியப் பணியாற்ற வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை

பிரார்த்திக்கிறேன்.

–           மஞ்சுளா ரமேஷ்

–          *

இந்த நூலில் உள்ள என்னுரை:-

என்னுரை

எல்லாம் வல்ல இறைவனின் திருவருளினால் ஆன்மீகக் கட்டுரைகள் அடங்கிய இந்த நூல் மலர்கிறது.

அறிவியல் வளர வளர சனாதன தர்மமான ஹிந்து மதத்தின் கொள்கைகள் அனைத்தும் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டு வருகின்றன. இவற்றைத் தொகுத்து கட்டுரைகளாகப் படைப்பது ஒரு ஆனந்தமான அனுபவம். இவற்றைப் படைக்கும் போது பல விஞ்ஞானிகளைத் தொடர்பு கொள்ளும் பாக்கியம் கிடைத்தது. உலகின் பிரபல விஞ்ஞானிகளாகத் திகழும் இவர்கள் அனைவரும் உடனே அவர்களைப் பற்றியும் அவர்கள் கண்ட ஆய்வு முடிவுகள் பற்றியும் வெளியிட எனக்கு சம்மதம் தந்ததோடு ஏராளமான குறிப்புகளையும் வாழ்த்துக்களுடன் அனுப்பி வைத்தனர்.

பிரபல விஞ்ஞானியான ஸ்டூவர்ட் ஹாமராஃப் அறிவியல் ரீதியாக அழிவற்ற ஆன்மாவின் இருப்பை நிரூபிப்பவர். பிரபல மூளை இயல் விஞ்ஞானியான ஆண்ட்ரூ நியூபெர்க் இறை உணர்வானது மூளையில் ஏற்படுத்தும் நல் விளைவுகளைத் தன் ஆய்வின் மூலம் நிரூபித்தவர். உலகின் பிரபலமான யோகா ஆய்வாளரும், விஞ்ஞானியும், குண்டலினி யோகா சிகிச்சை நிபுணருமான டேவி ஷானஹாஃப் கால்ஸா  குண்டலினி சக்தி பற்றி விரிவாக ஆராய்ந்தவர். இவர்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றியை இங்கு பதிவு செய்கிறேன்.

மஹரிஷி ரமணர், மஹரிஷி அரவிந்தர், கலியுக அவதாரம் ஸ்ரீ சத்ய சாயிபாபா, மஹாத்மா காந்திஜி, ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர். ஸ்வாமி விவேகானந்தர், அன்னைஸ்ரீ சாரதா மணி தேவியார், ஸ்வாமி ராமதீர்த்தர் உள்ளிட்ட ஏராளமான மஹான்களின் வாழ்க்கையில் நடந்த அற்புத சம்பவங்களையும் அப்பர், ஞானசம்பந்தர் போன்ற அருளாளர்களின் அற்புத அருளுரைகளையும் அவ்வப்பொழுது திருமதி மஞ்சுளா ரமேஷ் அவர்கள் ஆசிரியராக உள்ள ஞான ஆலயம் இதழில் எழுதி வந்தேன். அவற்றின் தொகுப்பே இந்த நூல்.

திருமதி மஞ்சுளா ரமேஷ் தேர்ந்த ஒரு பத்திரிகாசிரியர். அற்புதமான ஆன்மீகக் கட்டுரைகளைப் படைப்பவர். பல்வேறு ஆன்மீக நூல்களை எழுதியவர்; எழுதி வருபவர். உலக நலனுக்காக இறை சம்பந்தமான பூஜை, யாகம் உள்ளிட்டவற்றை ஆகமம் மற்றும் சம்பிரதாய பூஜா விதிகள் மாறாமல் நடத்துபவர். சக்தி பீடங்களைப் பற்றியும் ராமர் சென்ற இடங்களைப் பற்றியும் நேரில் சென்று பக்திபூர்வமாகப் பார்த்து அனுபவித்து கட்டுரைகளாகப் படைத்து தான் பெற்ற ஆனந்த  அலைகளை அனைவருக்கும் அளித்து வருபவர்.

தமிழ் உலகில் பல்வேறு பெண் எழுத்தாளர்கள் இருந்தாலும் அவர்களில் பெரும்பாலானோர் தங்களின் கதைகளாலும் கட்டுரைகளாலும் பிரபலமானவர்கள். ஆனால் சமூகப் பொறுப்புடன் திறம்பட பத்திரிக்கைகளை நடத்துவதுடன் சிறப்பான ஆன்மீகக் கட்டுரைகளை தலம் தோறும் சென்று நேரில் பார்த்து எழுதும் பெண் எழுத்தாளர்கள் என்று சுட்டிக் காட்ட விரலை மடக்கும் போது ஒரு விரலே, இவரைச் சுட்டிக் காட்டும் போது மடங்குகிறது.

அயோத்தி மாநகரத்தைப் பற்றி வர்ணிக்க வந்த வடமொழிப் புலவர் அற்புதமான ஸ்லோகம் ஒன்றை எழுதியுள்ளார்.:

“புரா புரீணாம் கணனப்ரஸங்கே  கநிஷ்டிகா திஷ்டித மத்யயோத்யா

அத்யாபி தத்துல்ய புரீ நஜாதேத் யநாமிகா ஸார்த்தவதீ பபூவ”

 “முன்னம் நகரங்களின் பெருமையைக் கணக்கிட்டுச் சொல்லும்போது, சிறப்புடைய அயோத்தி மாநகரை முதலாவதாகச் சொல்லி சிறு விரலை மடக்கினார்கள். அதற்குச் சம்மான இன்னொரு நகரம் இல்லை என்பதால் சிறுவிரலுக்கு அடுத்து மடக்கக்கூடிய ஒரு நகரத்தின் பெயரை பவித்திர விரல் அடையவில்லை. ஆகவே தான் அதற்கு அநாமிகை (பெயரில்லாதது) என்னும் பெயர் நிலைத்து விட்டது” என்பதே இதன் பொருள்.

இந்த ஸ்லோகம் குறிப்பிடும் அநாமிகா வழியே சென்று ஆன்மீகத்தை மிகச் சிறப்பாக எழுதக் கூடிய இன்னொரு பெண் எழுத்தாளரைச் சுட்டிக் காட்ட முடியாமல் அநாமிகையாக அடுத்த விரல் அமைந்துள்ளது என்று கூறுவதன் மூலமே அயோத்தி ராமனைப் பற்றி எழுதும் இவரது பெருமையைக் கூற முடியும். இத்தகு பெருமையுள்ள இவர் இந்த நூலுக்கு நல்லதொரு முன்னுரையை நல்கியுள்ளமைக்கு எனது மனமார்ந்த நன்றி.

 நல்ல முறையில் இந்த நூலை வெளியிடும் லண்டன் நிலா ப்ப்ளிஷர்ஸ் உரிமையாளர் திருமதி நிர்மலா ராஜு அவர்களுக்கு எனது நன்றி.

‘அறிவால் அறிந்து உன் இருதாள் இறைஞ்சும் அடியார் இடைஞ்சல் களைவோனே’ என்று பாடி உருகினார் அருணகிரிநாதர். அறிவியல் ரீதியாக பல்வேறு உண்மைகளைக் காட்டும் அறிஞர்களின் உரைகளை என்னைப் போலவே கேட்டு, படித்து, உணர்ந்து, ஆனந்தித்து, மகிழ்ந்து பணிய சேர வாரும் ஜெகத்தீரே என்று  அனைவரையும் அழைத்து இக்கட்டுரைகளை வாசகர்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

பெங்களூரு                                                                                            ச..நாகராஜன்

                                                                         *

நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது :

Scientists provide scientific explanations for the soul. Brain Scientist Andrew Newberg explains scientifically the effect of thought on God on the changes brought about in the human brain. Internet Yogi David kalsa cures psychological ailments through Kundalini Yoga. Thirumular has explained the exact measurement of Higs boson in his Thirumanthiram. It simply beholds the reader the rare episode of Sri Sathya Saibaba’s life of sacrifice based on the Thaithreeya Upanishad. Thus it has the articles on spirituality based on the analysis of scientific facts and views. There are articles on the wonderful happenings in the episodes of Mahabaratha. It is not an exaggeration when we say that this book is a spiritual book based on scientific basis- a novel attempt. We get answers for the questions arise in our minds through our scriptures and puranas- religious texts, wonders wrought by our Siddhas that baffle the scientists, the indestructible soul that is proved by scientific methods! Divine dance of Nataraja in the world! Spiritual life that brings changes in one’s brain! Articles of this type are abounding in this book that makes us wonder based on the scientific premises. Let us understand and enjoy spirituality through science!

விஞ்ஞானிகள் ஆத்மா பற்றிய விளக்கத்தை நவீன அறிவியல் வழியாகத் தருகின்றனர். மூளை இயல் விஞ்ஞானியான ஆண்ட்ரூ நியூபெர்க் கடவுளை பற்றிய எண்ணம் மூளையில் ஏற்படுத்தும் மாற்றத்தை அறிவியல் நோக்கில் விளக்குகிறார். இண்டர்நெட் யோகி டேவிவட் கால்ஸா குண்டலினி யோகம் மூலம் உளவியல் வியாதிகளைத் தீர்க்கின்றார். ஹிக்ஸ் போஸானின் சரியான அளவை திருமூலர் தன் திருமந்திரத்தில் விளக்கியுள்ளார். ஸ்ரீ சத்யசாயிபாபா தியாகம் பற்றிய தைத்ரீய உபநிடதத்தின்படி வாழ்ந்து காட்டிய அரிய சம்பவம் அனைவரின் உளத்தையும் உருக்குகிறது. இப்படி ஆன்மீகம் தொடர்பான செய்திகளை அறிவியல் நோக்கில் அலசும் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. மேலும் மஹாபாரத நிகழ்வுகளில் அதிசயமாக உள்ள நிகழ்வுகள் பற்றிய கட்டுரைகளும் இந்த நூலில் உள்ளன. புதிய பாணியிலான அறிவியல் இணைந்த தமிழ் ஆன்மீக நூல் இது என்றால் மிகையில்லை! நம் உள்ளத்தில் எழும் கேள்விகளுக்கு விடை தரும் புராணங்கள், விஞ்ஞானிகள் வியக்கும் நம் சித்தர்களின் அற்புதங்கள், அறிவியல் வழி நிரூபிக்கப்படும் அழிவற்ற ஆன்மா!, அண்டத்தில் ஆடவல்லானின் அற்புத நடனம்! ஆன்மீக வாழ்க்கை மூளையில் ஏற்படுத்தும் அதிசய மாற்றங்கள்! என நம்மை அறிவியல் ஆதாரத்துடன் வியக்க வைக்கும் கட்டுரைகள் இந்நூலில் பொதித்து கிடக்கின்றன. அள்ளிப்பருகி அறிவியல் வழி ஆன்மீகம் அறிவோம்.

இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘அறிவியல் நிரூபிக்கும் அழிவற்ற ஆன்மா’ நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

*

பெண்களை நம்புவதா? புலவர்களை நம்புவதா ? (Post No.11,461)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,461

Date uploaded in London – 21 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 பெண்களை நம்புவதா? புலவர்களை நம்புவதா ? கீழே உள்ளவற்றைப்

படித்துவிட்டு நீங்களே சொல்லுங்கள் .

Woman  = Light of Billion Galaxies

अतुलं तत्र तत्तेजः सर्वदेवशरीरजम्।

एकस्थं तदभून्नारी व्याप्तलोकत्रयं त्विषा॥

atulaṃ tatra tattejaḥ sarvadevaśarīrajam।

ekasthaṃ tadabhūnnārī vyāptalokatrayaṃ tviṣā॥

 English Translation:

The incomparable radiance that was born from all gods and pervaded the 3 worlds,

came to one place and took the form of a woman.

அதுலம் தத்ர தத் தேஜஹ ஸர்வ தேவ சரீரஜம்

ஏகஸ்தம் தத பூந் நாரீ வ்யாப்த லோக த்ரயம் த்விஷா

–தேவி மஹாத்ம்யம் 2-13

மூவுலங்களில் உள்ள எல்லா கடவுளரின் ஈடு இணையற்ற , ஒப்பற்ற ஒளியும் ஒரு சேர ஒரே பெண்ணின் உருவெடுத்து வந்தது (தேவியானவள் வந்தாள் )

xxxx

ஒளதும்பராணி புஷ்பாணி ஸ்வேத வர்ணம் ச வாயஸம்

மத்ஸ்ய பாதம் ஜலேத் பச்யேத்  ந நாரீ ஹ்ருத்யஸ்திதம்

அத்திப் பூவைக் கண்டாலும் காணலாம் ; வெள்ளைக் காக்கையைக் கண்டாலும் காணலாம் ; நீருக்குள் மீன் கால்களைக் கண்டாலும் காணலாம் ; பெண்களின் உள்ளத்தை மட்டும் அறிந்துகொள்ள முடியாது – மஹா பாரதத்தில் கிருஷ்ணன் சொன்னது .

அறியமுடியாதது

இதை விவேக சிந்தாமணி எழுதிய பெயர் தெரியாத ஒரு புலவரும் அழகாக மொழிபெயர்த்துள்ளார்

அத்தியின் மலரும் வெள்ளை யாக்கை கொள் காக்கை தானும்,

பித்தர் தம் மனமும் நீரில் பிறந்த மீன் பாதந்தானும்

அத்தன் மால் பிரம தேவ னாலள விடப்பட் டாலும்,

சித்திர விழியார் நெஞ்சம் தெளிந்தவர் இல்லை கண்டீர்.

அத்தி மரத்தில் மலரையும் வெள்ளை உடலை உடைய காக்கையும் பித்தர்களுடைய மனதையும் நீரில் வாடுகின்ற மீனின் பாதச்சுவடையும் பிரம்மாவும் பெருமாளும் காணமுடியாத சிவபெருமானின் முடியையும் அடியையும் காணமுடியாது. இவைகளை காண முடிந்தாலும் பெண்களின் மனதில் உள்ளதை அறிபவர் யாருமில்லை.

Xxx

Gods reside where women are worshipped

यत्र नार्यस्तु पूज्यन्ते रमन्ते तत्र देवताः।

यत्रैतास्तु न पूज्यन्ते सर्वास्तत्राफला क्रिया:॥

yatra nāryastu pūjyante ramante tatra devatāḥ।

yatraitāstu na pūjyante sarvāstatrāphalā: kriyā:॥

English Translation:

Where women are honoured, divinity blossoms there.

And where they are Dishonoured, all actions remain unfruitful.

Source:

Manusmriti 3.56

யத்ர நார்யஸ்து பூஜ்யந்தே ரமதே தத்ர தேவதாஹா

யத்ரைதாஸ்து  ந பூஜ்யந்தே  ஸர்வாஸ்த த்ராபலாஹா

மநு ஸ்ம்ருதி 3-56

எங்கே பெண்கள் மதிக்கப்படுகிறார்களோ அங்கே இறையுணர்வு பரிணமிக்கும் ;

எங்கே பெண்கள் மிதிக்கப்படுகிறார்களோ அங்கே செய்யப்படும் அனைத்து

விஷயங்களும் அடியோடு அழியும்

பெண்கள் 2, 4, 6, 8

ஸ்த்ரீணாம் த்வி குணம் ஆஹாரம் புத்திஸ் சாபி தசதுர் குணம்

ஸாஹஸம் ஷட்  குணம் சைவ காமோ  அஷ்ட குண முச்யதே

ஆண்களைக்காட்டிலும் பெண்களுக்கு உணவு விஷயத்தில் இரு மடங்கு விருப்பமும்,

புத்தி/அறிவு விஷயத்தில் நான்கு  மடங்கு அதிக திறமையும் ,

தைரியம், பிடிவாத விஷயத்தில் ஆறு  மடங்கு அதிக ஈடுபாடும்  ,

இன்பம் அனுபவிக்கும் விஷயத்தில் எட்டு   மடங்கு அதிக  ஈடுபாடும்

இருப்பதாக நூல்கள் செப்புகின்றன / என்மனார் புலவர் .

Rough translation

Women are twice better in enjoying food, four times cleverer in learning, six times more involved in adventures/innovations and eight times more involved in enjoying sexual pleasures (in comparison with men).

Xxx

Women must always be protected

பிதா ரக்ஷதி கெளமாரே பர்தா ரக்ஷதி யெளவனே

ரக்ஷந்தி வார்த்தகே புத்ராஹா ந ஸ்த்ரீ ஸ்வாதந்த்ரீய மர்ஹதி

பெண்களை இளம்  பருவத்தில் தந்தையும் , திருமணம் ஆனவயதுக் காலத்தில் கணவனும் , முதிய பருவத்தில் புத்திரர்களும் காப்பாறுகிறார்கள் ஆகையால் அவர்கள் எப்போதும் பாதுகாப்பில்லாமல் இருக்கக்கூடாது .

This is a very important couplet and always misinterpreted by half bakedpeople. Nowhere in the world women get such a protection. Old parents are thrown into dust bins (what others call Old Age Homes) in the Western World. After teenage, no woman is protected by anyone in the West. The statistics on Rapes, Single Mothers, Divorces and Old Age Homes in the West, stand as biggest proof for my statement.

—subham— 

 tags- பெண்கள், புலவர்கள், நம்புவதா, மநு நூல், தேவி மஹாத்ம்யம்

Tamil Hindu Encyclopaedia 27: Mr Blue, Mr Tall/ Vishnu , நீல நிற வண்ணன், நெடியோன் (Post.11,460)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,460

Date uploaded in London – 21 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

This is the second part of Vishnu in Sangam Tamil Literature

Vishnu is praised as Mr Blue Colour நீல நிற வண்ணன் (Kali.104-38),and Mr Tall நெடியோன் (Madu.line 763, Perum.line 402, Pathitr.15-39, Kali.104-8).

Tamils and Sanskrit scholars always use blue and black as interchangeable colours. Even when Tamils described the bird cuckoo/Koel, they praised it as Blue or Black bird. When you see blue in dark or less lighted areas it looks black.

All gods are nothing but Vishnu says a poet.4-66/69

அழல் புரை குழை கொழு நிழல் தரும் பல சினை

ஆலமும், கடம்பும் நல் யாற்று நடுவும்,

கால் வழக்கு அறு நிலைக் குன்றமும், பிறவும்,

அவ்வவை மேவிய வேறு வேறு பெயரோய்!

எவ் வயினோயும் நீயே; நின் ஆர்வலர்—பரிபாடல்

Six Paripatal poems praise him.

Mr Black God

Hinduism is the only religion in the world where BLACK is praised. All famous and worship worthy persons are BLACKS (Vyasa, Krishna, Draupadi, Kaali etc)

Other poets of 2000 year old Sangam Books described him as sapphire coloured person, Black as cloud, Black as Utter Darkness, As Blue as ocean, Shining Black Flower (Puram.56-5; 58-15; Perum. Lines 30 and 402; Pari.1-61/62; 2-52; 3-3; 4-67; 13-42; 15-50; Kali.119-3 and so called Maayon மாயோன் ( Mr Black and Mr Magic).

மண்ணுறு திருமணி புரையும் மேனி

விண்ணுயர் புள்கொடி விறல்வெய் யோனும்

—புறநானூறு -56

நீல்நிற உருவின், நேமியோனும், என்று  

இருபெருந் தெய்வமும் உடன் நின்றாஅங்கு,

—புறநானூறு -58

(Linguistic point: English word Magic is derived from Maaya, literaly that which disappears. If I say Maaynthaan in Tamil it means he is dead/ disppaered/Gone. Tiruvalluvar in his Kural also described  Gopi Krishna as Pal Mayak Kalvan in Kural 1258).

Tamil references for

Sapphire coloured man- Pari. 4-6/7

Ocean coloured, Cloud coloured – Pari. 4-6/7

Dark man like darkness, as Dark flower Puuvai – Pari.1-6/7

You are as dark (blue or black)  as the Five= Cloud, Puuvai flower, Ocean, Darkness, Sapphire gem stone- Pari.13-42/43

DRESS

Vishnu’s crown and his waist belt cloth look like shining sun in the background of Blue Mountain (Pari.13-42/43)

His body and his dress served as contrast- differently coloured- (Pari.4-8)

Dress Uniform

Hindus are the first ones in the world to use uniforms; now in the West , blue means boys, pink means girls.

Hindus called their Gods as Yellow Dressed man (Krishna= Peetambhara Dhari), Blue Dressed Man (his brother Balarama= Neelaambhara Dhaari)

Miss Black= Goddess Kaali

(Linguistic point: R and L are interchangeable in Tamil, Sanskrit and other ancient languages. Kari/Kali/Kaali/Carbon are cognate words)

Tamil References:

Peetaambharam/yellow- Pari.8; Pari 1-9/10

Many Coloured Garland:

Hindus are the most Herbal, Botanical Men in the world. They have different herbs for different Gods. Different Flowers for different Gods and goddesses. This can be seen in South India even today. In North India they lost most of the traditions due to Greek, Huna and Muslim and Christian invasions and destruction. In the South, one can see one particular flower garland is sold for one particular temple God or Goddess. In North India they use a particular Yellow chrysanthemum which is banned in South Indian Temples (it is called Muslim/Tulukka Saamanthy).

In the South one can see Tulsi garlands for Vishnu, Bilva/ Vilva garlands for Shiva, Red Arali for Durga, White Lotus for Sarasvati, Red Lotus for Lakshmi, Jasmine for Goddesses etc.

Tamil References:

Hindus are the ones who studied the body features than any other community in the world; they described Goddesses with Three Lines in their necks, Eyes like Neelotpala flower or Fish, Gods with Broad Chest and Long Hands, Lotus Eyed etc.

Sangam Tamils praised Vishnu as a person with Mountainous Chest (strong and broad like hills)- Kali.108-55; Pari13-10/12

The garland (white pearls) on his neck looked like the water falls in the blue mountains- Pari.13-4

Many flower Garland on his neck looked like Rainbow/coloured – Akam.175- 13/16

Another poet compared his garland as the one made up of four different flowers on the seashore with bees buzzing around them-Kali.127-1/5

Tulasi/ Tulavam in Tamil; Tulsi in Hindi- Pathitr.31-7/9; Pari.13-59/60.

Pari. poets go one step forward by describing Vishnu with Tulsi on his head as well- Pari.4-59 and Pari.13-29.

Hindu Gods and Goddesses wear enormous jewelley which is very visible in sculptures. Greek Gods wear very little; Hindus  and Hindu Gods wearj ewels from Head to Foot. No where in the world we see such types; if we see some of them on Mayan or Babylonian deities, it is a clear proof of Hindu influence .

Vishnu wears a particular medal with gems and it is known as Kaustuba Gem.Pari.1-8/9

His gem studded garland shined like rainbow (probably Nava Ratna Mala): Pari.1-31; 2-28/29

Hindus are the only one people in the world who describe men and women are equal. The word the other half for woman is found in the Vedas.

Siva is described as Ardhabnari (means Half Woman); Vishnu is described ‘Woman in Chest’ person= Sri Vatsan

Tamil Hindus who lived 2000 years ago never missed a single point described in Bhagavata and Vishnu Purana. Even Krishna- Gopi episode is described in Sangam Tamil literature.

Sri Vatsa in Tamil is Tiru Maru Maarba (Perum.line 29, Pari.1-38; Pathitr31-7; Pari.1-3/8; Pari-2-31; kali.104-9

In short, Tamil Sangam poems contain all the des -criptions about Vishnu  found in Sanskrit scriptures.

In the next part let us look at his flag and special weapons.

xxxxxxxxxxxxxx

Tamil Poems mentioned above:

எரிமலர் சினைஇய கண்ணைபூவை

விரிமலர் புரையும் மேனியைமேனித்

திரு ஞெமிர்ந்து அமர்ந்த மார்பினை; மார்பில்

தெரிமணி பிறங்கும் பூணினை; மால் வரை

எரி திரிந்தன்ன பொன் புனை உடுக்கையை-Pari 1-6/10

Xxx

திருமணிதிரைபாடு அவிந்த முந்நீர்,

வரு மழை இருஞ் சூல்-மூன்றும் புரையும் மா மெய்;Par.4-6/7

Xxx

Five in One

கார், மலர்ப் பூவை, கடலை, இருள், மணி,

அவை ஐந்தும் உறழும் அணி கிளர் மேனியை;

பரிபாடல் 13-42/43

I have given only few references.

To be continued……………………..

 tags – Vishnu, dark, blue, saphire, ocean, colour, Yellow cloth, Sangam literature