Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அருணகிரிநாதரும் தமிழும்! – 8
ச.நாகராஜன்
அருணகிரிநாதருக்கும் தமிழுக்கும் உள்ள இணைப்பு அதிசயமானது.
முருகனுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு எத்தகையதோ அத்தகையது அந்த இணைப்பு.
பல இடங்களில் தமிழ் முருகனைத் தமிழால் போற்றிப் புகழ்ந்த அருணகிரிநாதப் பெருமான் தமிழையும் பல்வேறு விதமாக அழகுறப் போற்றி வணங்குகிறார்.
அவர் தமிழைப் பற்றிக் கூறும் இடங்களை இந்தத் தொடரில் காணலாம்.
71) பொதுப் பாடல்
எழிற்கமலத் திணைக்கழலைத்
தமிழ்சுவையிட் டிறப்பறஎய்த்
திடக் கருணைத் திறத்தெனைவைத் தருள்வாயே
பாடல் எண் 1021 : வினைத்திரளுக்கு எனத் தொடங்கும் பாடல்
பொருள் : உனது அழகிய தாமரை போன்ற இரண்டு திருவடிகளை தமிழ்ச் சுவை பொருந்தும்படி வாழ்த்தி, நான் சாகாத நிலை பெற்றிட ..
72) பொதுப் பாடல்
திருந்த வேதந் தண்டமிழ் தெரிதரு புலவோனே
பாடல் எண் 1072 : இருந்த வீடு எனத் தொடங்கும் பாடல்
பொருள் : திருத்தமான முறையில் வேதத்தை இன்பமான தமிழ் மொழியில் தேவாரமாக உலகோர் அறியத் தந்தருளிய (திருஞானசம்பந்தப்) புலவனே!
73) பொதுப் பாடல்
குடமுனி கற்க வன்று தமிழ்செவி யிற்ப கர்ந்த
குமரகு றத்தி நம்பு – பெருமாளே
பாடல் எண் 1081 : மடவியர் எச்சில் எனத் தொடங்கும் பாடல்
பொருள் : அகத்திய முனிவர் கற்க அன்று தமிழ் ஞானத்தை அவர் காதில் சொல்லி ஊட்டிய குமரனே, குறத்தியாகிய வள்ளி, நம்பித் தொழும் பெருமாளே!
வரலாறு : அகத்திய முனிவர் சிவபெருமானை வணங்கித் தமிழ் ஞானம் வேண்டினார். அவர் அகத்தியரைத் திருத்தணிகை முருகனை அணுகுமாறு பணித்தார். அங்ஙனமே அகத்தியர் முருகனை பூஜித்துத் தமிழ் ஞானம் பெற்றார். அந்த வரலாறு இங்கு குறிப்பிடப்படுகிறது.
74) பொதுப் பாடல்
கதல மீதிற் பகர்தமிழ் பாடற்
செழுமறை சேர்பொற் – புயநாதா
பாடல் எண் 1082 : கரு மயல் ஏறி எனத் தொடங்கும் பாடல்
பொருள் : இந்தப் பூமியில் புகழ்ந்து பேசப்படும் தமிழ்ப் பாட்டுக்களால் ஆகிய பாமாலைகளும், செழுமை வாய்ந்த வேத மொழிகளும் மாலையாக அணிந்த அழகிய புயங்களைக் கொண்டவனே!
75) பொதுப் பாடல்
அருமறைகள் கூட்டி யுரைசெய்தமிழ் பாட்டை
அடைவடைவு கேட்ட – முருகோனே
பாடல் எண் 1089 : இருவினைகள் ஈட்டும் எனத் தொடங்கும் பாடல்
பொருள் : அருமையான வேத மொழிகளைச் சேர்த்து உரைக்கப்பட்ட (சங்கத்) தமிழ்ப் பாடலை (திருமுருகாற்றுப்படையை) முற்ற முழுவதும் கேட்ட முருகனே!
76) பொதுப் பாடல்
அடலெழுது மேடுமெத்த வருபுனலி லேறவிட்டு
அரியதமிழ் வாது வெற்றி – கொளும் வேலா
பாடல் எண் 1098 : நடை உடையிலே எனத் தொடங்கும் பாடல்
பொருள் : வலிமை மிக்க (மந்திர மொழி) எழுதப்பட்ட ஏட்டினைப் பெருகி ஓடுகின்ற (வைகை நதியின்) நீரில் எதிர் ஏறச் செய்து, அருமை மிக்க தமிழ் பாடலால் (சமணரை) வாதத்தில் (திருஞானசம்பந்தராக வந்து) வெற்றி கொண்ட வேலா!
வரலாறு : இங்கு மதுரையில் திருஞானசம்பந்தர் தேவாரப் பாடலை எழுதி வைகை ஆற்றில் இட அது நீரை எதிர்த்து வந்த வரலாறு குறிப்பிடப்படுகிறது.
77) பொதுப் பாடல்
தொக்கில் நெடு மாமார்பு – தொளையாகத்
தொட்டவடி வேல்வீர நட்டமிடு வார்பால
சுத்ததமி ழார்ஞான – முருகோனே
பாடல் எண் 1109 : கட்டமுறு நோய் எனத் தொடங்கும் பாடல்
பொருள் : தோல் கொண்ட, அகன்ற மார்பில் தொளை படும்படிச் செலுத்திய கூர்மையான வேல் வீரனே, ஊழிக்கூத்து செய்யும் சிவபெருமானுடைய பாலனே, பிழையற்ற தமிழை நன்கு அறிந்த ஞானமுள்ள முருகனே!
78) பொதுப் பாடல்
இடைவைத்துச் சித்ரத் தமிழ்கொடு
கவிமெத்தச் செப்பிப் பழுதற
எழுதிக்கற் பித்துத் திரிபவர் – பெருவாழ்வே
பாடல் எண் 1171 : பகல்மட்க எனத் தொடங்கும் பாடல்
பொருள் : பாட்டின் இடையே பொருந்த வைத்து அழகிய தமிழால் பாடல்களை நிறையப் பாடியும், குற்றமில்லாமல் எழுதியும் கற்பித்தும் திரியும் பாவலர்களின் பெரும் செல்வமே
79) பொதுப் பாடல்
விபுதர் பதி யங்கதல மேவிச் சாற்றிய – தமிழ்நூலின்
பாடல் எண் 1173 : பரதவித புண்டரிக எனத் தொடங்கும் பாடல்
பொருள் : தேவர்களுக்குத் தலைவனான இந்திரனுடைய உடம்பில் உள்ள அடையாளக் குறியை விரும்பிப் பாடிய தமிழ் நூல்களின் பரப்பின்…
வரலாறு : கௌதம முனிவரின் அகலிகையைக் கூட எண்ணி அவர் இல்லாத சமயத்தில் அவர் உருவம் எடுத்து அவளைச் சேர வந்த இந்திரன், முனிவர் சாபத்தால் ஆயிரம் பெண் குறிகள் உண்டாயின. அகலிகை கல்லாகுமாறு சபிக்கப்பட்டாள். பின்னால் ராமாவதாரத்தில் ராமனின் காலடி அந்தக் கல்லின் மேல் பட சாப விமோசனம் ஏற்பட்டு அகலிகை மீண்டும் தன் சுய உருவம் பெற்றாள். அந்த வரலாறு இங்கு குறிப்பிடப்படுகிறது.
80) பொதுப் பாடல்
வெளியாசையொ டடைபூவணர் மருகாமணி முதிராடக
வெயில்வீசிய அழகா தமிழ் – பெருமாளே
பாடல் எண் 1186 : மதனேவிய கணை எனத் தொடங்கும் பாடல்
பொருள் : ஆகாயம், திசைகள் எல்லாம் நிறைந்துள்ள, காயாம்பூ போன்ற நீலவண்ணத்து திருமாலின் மருகனே! ரத்தினம், செம்மை முதிர்ந்த பொன் ஆகியவற்றின் ஒளி கலந்து வீசுகின்ற அழகனே, தமிழர்களின் பெருமாளே!
குறிப்பு & நன்றி : https://www.kaumaram.comதளத்தில் உள்ளபடி பாடல் எண் தரப்பட்டுள்ளது. முழுத் திருப்புகழ்ப் பாடலையும் அதன் விளக்கத்தையும் இந்த தளத்தில் காணலாம்.
***
புத்தக அறிமுகம் – 102
அறிவியல் துளிகள்(பாகம்–2)
பொருளடக்கம்
நூலில் உள்ள அத்தியாயங்கள்
1) வந்துவிட்டது ந்யூரோபோன்!
2) உங்கள் மூளையால் எதிர்காலத்தைப் பார்க்க முடியும்!
3) நமக்குள் மறைந்திருக்கும் இன்னொரு மூளை!
4) அதிகம் டி.வி. பார்த்தால் ஆயுள் குறையுமா?
5) செக்ஸ் இன்பத்திற்கு வருகிறது செக்ஸ் சிப்!!
6) பயமறியாப் பெண்மணி! விஞ்ஞானிகள் திகைப்பு!!
7) உலகையே மாற்றப் போகும் பத்து பிரமாண்டமான
கண்டுபிடிப்புகள் – 1
8) உலகையே மாற்றப் போகும் பத்து பிரமாண்டமான
கண்டுபிடிப்புகள் – 2
9) உலகையே மாற்றப் போகும் பத்து பிரமாண்டமான
கண்டுபிடிப்புகள் – 3
10) நட்சத்திரப் பயணம்!
11) உடல் பயிற்சிகள் மூலம் மூளை ஆற்றல் கூடுகிறது!
12) மனதின் குணப்படுத்தும் ஆற்றல்!
13) சந்திரன் சீனாவுக்குச் சொந்தமாகப் போகிறதா?
14) ஆற்றலைக் கூட்டினால் ஏழரை லட்சம் பேரை உயர்த்த முடியும்!
15) அமெரிக்க விஞ்ஞானியின் அறிவுரை: உங்கள் இலட்சியத்தை
யாரிடமும் சொல்லாதீர்கள்!
16) செவ்வாய் வீரர்களுக்கு 520 நாட்கள் நடந்து முடிந்த
அதிசய சோதனை!
17) சூரியப் புயலால் பூமி வெடித்துச் சிதறுமா?
18) மிஸ்டர் டூம்!
19) வாழ்க்கையை மாற்றும் ஆற்றல் கனவுகள்!
20) தண்ணீர் ரகசியங்களை அறிவிக்கும் விஞ்ஞானி!
21) புதிய பொன்னான எதிர்காலம் 2020இல் ஆரம்பம்!
22) இந்த நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகள் பற்றிய
அறிவியல் விமரிசனம்!
23) மூளையைப் பற்றிய தவறான ஒன்பது அறிவியல் தகவல்கள்! – 1
24) மூளையைப் பற்றிய தவறான ஒன்பது அறிவியல் தகவல்கள்! – 2
25) மூளையைப் பற்றிய தவறான ஒன்பது அறிவியல் தகவல்கள்! – 3
இந்த நூலுக்கு பிரபல விஞ்ஞானியான திரு K.G.நாராயணன் அவர்கள் அணிந்துரை அளித்துள்ளார்.·
நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது:
A must buy book for your home library, this is an interesting second part of Ariviyal Thuligal. It talks about recent inventions, technology improvement in science. This book is flooded with scientific information.
‘அறிவியல் துளிகள்’ நூலின் சுவைமிக்க இரண்டாம் பாகம்! இந்நூலில், வளர்ந்து வரும் நவீனக் கண்டுபிடிப்புகளையும் அறிவியல் முன்னேற்றங்களையும் சிறப்பாக எடுத்துரைக்கிறார் ஆசிரியர். அறிவியல் துளிகள் என்பதைக் காட்டிலும் அறிவியல் வெள்ளம் என்றே சொல்லலாம்! அந்த அளவிற்குத் தகவல்கள் நிறைந்துள்ள இந்நூல் அனைவரின் வீட்டிலும் தவழ வேண்டிய தொகுப்பு!
*இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.
அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘ அறிவியல் துளிகள் -பாகம் 2’ நூலைப் பற்றிய சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.
All the three verbs behave differently in the past tense.
காண் , பார் = See. Past tense is கண்டான் (Kandaan), பார்த்தான் (Paarththaan)
No other verb behaved like Saa = die
Xxxx
PAAR= See
One more lesson today INTERROGATIVE
You can change any verb as an Interrogative (question) by adding ஆ AA sound.
That is the second vowel in the 12 vowel table.
கண்டானா = கண்டான் + ஆ (ன் + ஆ=னா)
,பார்த்தானா = ,பார்த்தான் + ஆ (ன் + ஆ=னா)
வந்தானா = வந்தான் +ஆ (ன் + ஆ=னா)
சுவாமிநாதன் ஹெலிகாப்டரில் வந்தானா?
Did Swaminathan come in helicopter?
இல்லை. ஹெலிகாப்டரில் வரவில்லை
N0. Did not come in Helicopter
NOTE: there is no article the in Tamil sentence.
There is no by the helicopter; we use in helicopter
There is no HE; we can simply say Did not come in helicopter, because the last verb வந்தான் can go only with masculinethird personsingular. So PGN is important
Person = I person, II person, III person
Gender = Feminine or Masculine or Neuter
Number = Singular or Plural
Xxx
Tags, Verbs, Tamil, Die, Saa, See, Kaan, Interrogative
‘Tamil Hindu Encyclopaedia – 15’ WAS POSTED ON 21ST OCTOBER 2022.
Tamils living in the southernmost part of India followed the Hindus in other parts of India in describing the God of Love known as Kama or Manmatha.
Manmatha is a beautiful Sanskrit word meaning ‘One who Churns your Mind’. Hindus are great psychologists and showed that sex is an inborn instinct, and one should not avoid it but control it. Hinduism is the only religion in the world that showed sex is holy and necessary. They included in the four values of life Dharma, Artha, KAMA and Moksha. The greatest of the ancient Tamil poets Tiru Valluvar included Kama in his Tiruk Kural as a big chapter and used the Sanskrit word Kaama. Early Christian preachers were afraid to touch that part and refused to translate it. But Hindus even did the world’s first sex book known as Kamasutra (Kaama suutra) 2000 years ago.
Hindu psychologists showed also that sex can’t be eradicated from earth and said it would survive as an abstract thing but not concrete. When Shiva burnt down the God of Love Manmatha, his wife Rathy, the most beautiful woman in Hindu literature, begged to Lord Shiva to revive him and Shiva told her he would be there for ever on earth as Bodyless (AN+ANGA= Ananga). It shows that whether there are beautiful ladies or not, the inborn sex instinct would be there as abstract feeling in everyone.
All these things are repeated by the poets in ancient Sangam Tamil literature, which is at least 2000 year old.
In addition to the above, Sanskrit poets described that he would fire Five Flower Arrows to induce sexual feelings. Tamils repeated that also in ancient poems. The Five Arrows are the Five Senses. The sexual feelings will pervade through five senses.
In short Tamils never missed anything said in older Sanskrit poems.
I have already given enough information in the following two posts and so I would directly quote the Tamil sources.
Kama deva – Hindu God of Love in Tamil and Sanskrit …
8 Mar 2022 — It is the month of Holi Festival and Tamil Kaman Pandikai. (Pandikai means festival). In Northern India the Hindus celebrate Holi and throw …
xxx
Tamil References:
1.Kaman (kaaman) is son of Lord Vishnu says Kalittokai 140-7; Pari-1-31
Nediyon makan- நெடியோன் மகன்
Vishnu is the father of Brahma and Manmathan- Pari-1-31 இருவர் தாதை இலங்குபூண் மா அல்
Tamils said that the brother of Kaaman/Manmatha is Saaman- Kali.263/4; 94-33/34 சாமன்.
The interesting thig about them is that they are also as black as Vishnu.
This gives a severe blow to the Pro Aryan Invasion theorists. Most famous Hindu Gods are Black (Krishna, Draupadi, Vyasa, Vishnu, Manmatha, his brother Saman). Some people even interpret இருவர் தாதை இலங்குபூண் மாஅல் as Father of Kaman and Saman.
xxx
2.Shark flag
Tamils follow Sanskrit poems in describing the Flag of Manmatha as Shark Flag Kali26-3, 26-84; 147-42 (holder).
There is an interesting scene in Kalittokai. A courtesan puts a shark picture ring in the finger of a boy whose father used to visit that woman. Then his wife becomes angry thinking that the prostitute was bold enough to send me a message that your husband will be a slave to me for ever- Kali 84-22-27
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அருணகிரிநாதரும் தமிழும்! – 7
ச.நாகராஜன்
அருணகிரிநாதருக்கும் தமிழுக்கும் உள்ள இணைப்பு அதிசயமானது.
முருகனுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு எத்தகையதோ அத்தகையது அந்த இணைப்பு.
பல இடங்களில் தமிழ் முருகனைத் தமிழால் போற்றிப் புகழ்ந்த அருணகிரிநாதப் பெருமான் தமிழையும் பல்வேறு விதமாக அழகுறப் போற்றி வணங்குகிறார்.
அவர் தமிழைப் பற்றிக் கூறும் இடங்களை இந்தத் தொடரில் காணலாம்.
61) திருவிடைமருதூர்
மதுர கவியடைவு பாடி வீடறிவு
முதிர அரியதமி ழோசை யாகவொளி
வசன முடையவழி பாடு சேருமருள் – தந்திடாதோ
பாடல் எண் 859 : இலகு குழைகிழிய எனத் தொடங்கும் பாடல்
பொருள் : இனிமை நிரம்பிய பாடல்கள் எல்லாவற்றையும் பாடி, வீட்டின்ப ஞானம் நிரம்ப உண்டாக, அருமையான தமிழ் இசை பிறக்க,
அறிவு மொழிகள் பொலிகின்ற வழிபாட்டு நெறியில் சேரும்படியான உனது திருவருளைத் தரமாட்டாயோ?
62) திருச்சக்கிரப்பள்ளி
துட்ட நிக்ரக சத்தித ரப்ரப
லப்ர சித்தச மர்த்தத மிழ்த்ரய
துட்க ரக்கவி தைப்புக லிக்கர – செனுநாமச்
சொற்க நிற்கசொ லட்சண
பாடல் எண் 878 : திட்டெனப் பல எனத் தொடங்கும் பாடல்
பொருள் : துஷ்டர்களை அடக்கும் சக்தி வேலைத் தரிப்பவனே, புகழும் கீர்த்தியும் கொண்ட வல்லமை வாய்ந்தவனே, முத்தமிழில் முடிப்பதற்கு அருமையான (தேவாரப்) பாடல்களை (திருஞானசம்பந்தராக வந்து) சீகாழி அரசு என்னும் புகழ் பெற்று, (அப்பாடல்களைக் கற்றவர்களுக்கு) வீட்டுப் பேறு நிலைத்து நிற்கும்படி சொன்ன அழகை உடையவனே!
63) வயலூர்
மோகன விருப்பைக் காட்டி ஞானமு மெடுத்துக் காட்டி
மூதமிழ் முனிக்குக் கூட்டு – குருநாதா
பாடல் எண் 915 : மேகலை நெகிழ்த்து எனத் தொடங்கும் பாடல்
பொருள் : அன்பு மிக்க விருப்பத்தைக் காட்டி, ஞான சாஸ்திரங்களை விரித்து எடுத்து உரைத்துக் காட்டி, பழந் தமிழ் வல்ல அகத்திய முனிவருக்கு அந்த ஞானத்தைக் கூட்டுவித்த குருநாதனே!
64) அவிநாசி
அங்கத்தைப் பாவிசெய் தாமென
சங்கத்துற் றார்தமி ழோதவு
வந்துக்கிட் டார்கழு வேறிட – வொருகோடிச்
பாடல் எண் 944 : பந்தப்பொற் பார எனத் தொடங்கும் பாடல்
பொருள் : எலும்பிலிருந்து பெண்ணைப் படைக்கின்றோம் என்று சங்க காலத்துப் புலவர்களின் (தேவாரத்) தமிழ்ப் பாடலை நீ ஓதவும், உனது அருமை பெருமை தெரிந்து மகிழ்ந்து உன்னைச் சேராதவர்களாகிய அமணர்கள் கழுமரத்தில் ஏறவும்
வரலாறு : திருமயிலை சென்ற திருஞானசம்பந்தர் பூம்பாவையை எலும்பிலிருந்து உயிருடன் எழுப்பிய நிகழ்வை இந்தப் பாடல் குறிக்கிறது. (போதியோ பூம்பாவாய் -திருஞானசம்பந்தர் பாடலை அன்பர்கள் படிக்கலாம்)
65) தனிச்சயம்
தலைச்சுமைச் சடைச்சிவற் கிலக்கணத் திலக்கியத்
தமிழ்த்ரயத் தகத்தியற் – கறிவோதுஞ்
பாடல் எண் 954 : இலைச்சுருட் கொடு எனத் தொடங்கும் பாடல்
பொருள் : தலையில் சுமை போலப் பாரமான சடையைக் கொண்ட சிவபெருமானுக்கும், இலக்கணம், இலக்கியம், நாடகம் என்னும் முத்தமிழில் வல்லவரான அகத்திய முனிவருக்கும் ஞான போதகனே, சாமர்த்தியத்தில் முதல் இடத்தில் இருப்பவனே!
66) மதுரை
வடவெற் பங்கய லன்றணி குசசர
வணையிற் றங்கிய பங்கய முகதமிழ்
மதுரைச் சங்கிலி மண்டப இமையவர் – பெருமாளே
பாடல் எண் 961 : புருவச் செஞ்சிலை எனத் தொடங்கும் பாடல்
பொருள் : வடக்கே உள்ள இமயமலைக்கு அருகே சமீபத்தில் உள்ள அழகிய தர்ப்பைகள் வளர்ந்துள்ள சரவணப் பொய்கையில் முன்பு வளர்ந்த தாமரை போன்ற திருமுகத்தை உடையவனே, தமிழ் வளர்ந்த மதுரையில் சங்கிலி என்னும் மண்டபத்தில் வீற்றிருப்பவனே, தேவர்களின் பெருமானே!
குறிப்பு : மதுரையில், சங்கிலி மண்டபம் இப்போது கிளி மண்டபம் என அழைக்கப்படுகிறது.
67) மதுரை
தரும நீதி சேர்தத் துவங்கள் – தனி யோகம்
தவறி லாம லாளப் பிறந்த
தமிழ்செய் மாறர் கூன்வெப் பொடன்று
தவிர ஆல வாயிற் சிறந்த – பெருமாளே
பாடல் எண் 962 : முகமெலா நெய் எனத் தொடங்கும் பாடல்
பொருள் : எல்லா வேதங்களிலும் கூறப்பட்ட லட்சணங்கள், ஆறு சமயங்கள், மூன்று உலகங்கள், தரும நீதிகளுடன் சேர்ந்த உண்மைகள், தவம், யோகம் (ஆகிய இவை எல்லாம் சிறந்து ஓங்கும்படி) பிழையின்றி ஆட்சி செய்வதற்கே தோன்றிய தமிழ் வளர்த்த திருஞானசம்பந்தனே, பாண்டியனுடைய சுரத்தோடு கூனும் அன்று நீங்க மதுரையில் (திருநீறு தந்து) சிறந்த பெருமாளே
வரலாறு; இங்கு மதுரையில் கூன் பாண்டியனின் கூன் தீர்ந்த வரலாறு சொல்லப்படுகிறது.
68) இலஞ்சி
இலங்கு தரதமிழ் விளங்க வருதிரு
இலஞ்சி மருவிய பெருமாளே
பாடல் எண் 971 : கரம் கமலம் மின் எனத் தொடங்கும் பாடல்
பொருள் : விளக்கம் பூண்டுள்ள தமிழ் விளங்க திருஞானசம்பந்தராக வந்து தமிழ் மொழிந்தவனே, திரு இலஞ்சி நகரில் வீற்றிருக்கும் பெருமாளே!
69 ) ஒடுக்கத்துச் செறிவாய்
அகப்பட் டுத்தமிழ் தேர்த்த வித்தகர்
சமத்துக் கட்டியி லாத்த முற்றவன்
அலைக்குட் கட்செவி மேற்ப டுக்கையி லுறைமாயன்
பாடல் எண் 987 : வழக்குச் சொற்பயில் எனத் தொடங்கும் பாடல்
பொருள் : தமிழில் வல்ல அறிஞர்களிடத்தில் வசப்பட்டு சாமர்த்தியமான கவியின் ஈற்றடியிலுள்ள இறுதிப் பொருளில் விருப்பம் கொண்டவனும், கடலில் (ஆதிசேஷன் என்னும்) பாம்பின் மேல் படுக்கை கொண்டிருக்கும் மாயனுமாகிய திருமாலுக்கு – முனிவர் உருவில் வந்த போது ….
வரலாறு : காஞ்சீபுரத்தில் ஆழ்வாரின் சீடனாகிய கனிகண்ணன் வரதராஜப் பெருமாளை நோக்கி ‘கனிகண்ணன் போகின்றான்’ என்று ஆரம்பித்து ‘நீயுமுன்றன் பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள்’ என்று பாட,
பெருமாள் அவரது ஈற்றடியில் வசப்பட்டு காஞ்சீபுரத்திலிருந்து கிளம்ப, பின்னர் மீண்டும் குடியேற வேண்ட அவ்வண்ணமே அருள் பாலித்தார்; ஆகவே அவருக்கு சொன்னவண்ணம் செய்த பெருமாள் என்ற திருநாமம் ஏற்பட்டது. இங்கு அந்த வரலாறு சுட்டிக் காட்டப்படுகிறது.
70 ) பொதுப் பாடல்
சங்கமேறும்
மாத மிழ்த்ரய சேயே நமோநம
வேத னத்ரய வேளே நமோநம
வாழ்ஜ கத்ரய வாழ்வே நமோநம – என்று பாத
பாடல் எண் 992 : போத எனத் தொடங்கும் பாடல்
பொருள் : சங்கப் பலகையில் ஏறி அமர்ந்த முத்தமிழ்ச் செம்மலே, போற்றி, போற்றி. ரிக், யஜுர், சாமம் என்ற மூன்று வேதங்களும் தொழும் தெய்வமே போற்றி போற்றி. வாழ்கின்ற பூலோகம், அந்தரம், சுவர்க்கம் ஆகிய மூவுலகங்களும் போற்றும் செல்வமே போற்றி போற்றி!
குறிப்பு & நன்றி : https://www.kaumaram.comதளத்தில் உள்ளபடி பாடல் எண் தரப்பட்டுள்ளது. முழுத் திருப்புகழ்ப் பாடலையும் அதன் விளக்கத்தையும் இந்த தளத்தில் காணலாம்.
***
புத்தக அறிமுகம் – 101
அறிவியல் துளிகள்(பாகம்–1)
பொருளடக்கம்
நூலில் உள்ள அத்தியாயங்கள்
1. கெப்ளர் விண்கலம்
2. உயிர் தரும் ஆக்ஸிஜன் சுழற்சி!
3. ஹெலனின் தியாகம்!
4. நம்பிக்கை இழக்காதீர்கள்! மனம் தளராதீர்கள்!
5. ஹிப்னாடிஸ யோசனை மூலம் முன்னேற முடியும்!
6. கண்டுபிடிப்புகளைப் பிரபல விஞ்ஞானிகள் கண்டுபிடித்தது எப்படி?
7. யுரேகா கண்டுபிடிப்புகள்!
8. பகல் கனவில் பல கண்டுபிடிப்புகள்!
9. சாவுக்கடல் சாகிறதா?
10. விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் யூரி ககாரின்
11.. ககாரின், விண்ணில் கடவுளைப் பார்த்தீர்களா?
12. சைபர்னெடிக்ஸ்!
13 ‘ஐ லவ் யூ’-வில் சைபர்னெடிக்ஸ்!
14. பிரச்சினைகளைத் தீர்க்கும் நவீன சாதனங்கள்!
15. ஒஸாமா பின் லேடனைப் பிடிக்க உதவிய சாடிலைட்டுகள்!
16. அதிகார ஆணவம் பற்றிய விநோத ஆராய்ச்சி!
17. பெண்களின் எண்ணிக்கையை உலகில் குறைய வைத்த
அல்ட்ராசானிக்
18. 6 மில்லியன் டாலர் பயோனிக் மூளை!
19. நாம் எல்லோருமே ரஜினிகாந்த்தான்!
20. சந்தோஷத்தை விலைக்கு வாங்கலாம்!
21. சந்திரனில் செக்ஸ்
22. நூறு ஆண்டுகள் வாழ ஒரு அதிசய மாத்திரை!
*
இந்த நூலுக்கு பிரபல விஞ்ஞானியான திரு K.G.நாராயணன் அவர்கள் அளித்த அணிந்துரை இது:
திரு K.G.நாராயணன்
அற்புதத்துளிகள்
தென்னை மரத்திலிருந்து தேங்காய் விழுந்தால் தலை தப்பியது என்று ஆறுதல் கொள்வது இயற்கை. அதுவே நம்மில் பெரும்பாலோரின் பிரதிக்கிரியை. ஆனால் ஆயிரத்தில் ஒருவர் – ஐசாக் நியூட்டன் போன்றவர் – தேங்காய் ஏன் தரையை நோக்கி விழுந்தது, வானத்தை பார்த்து ஏன் பறக்கவில்லை என்று அண்ணாந்து பார்த்து அதிசயிப்பார். அந்த அற்புதத்தின் காரணத்தை அறிய முயற்சிப்பார். இரவும் பகலும் தன் அறிவின் திறத்தினால் இயற்கை ரகசியத்தின் மேல் கூட்டை உடைத்து உள்ளிருக்கும் பொருளை எல்லோருக்கும் தெரியுமாறு வெளியில் கொணர வெறி கொண்டவர் போல் உழைப்பார். சிறிய வெற்றி அடைந்தாலும் அதையே முதல் படியாகக் கொண்டு அடுத்த கேள்விக்கு விடை தேடத் தொடங்குவார். காற்று வெளியில் நடக்கும் இந்த விந்தை கடலுக்கு அடியிலும் நடக்குமா என்று வினவுவார். அவருடைய தேடுதலில் தோல்விகளும் வெற்றிகளே.
இயற்கையின் ரகசியங்களை ஆராய்ந்து அறிவதற்கு உண்டாகும் “கொலை வெறி” சில பேருக்கு மட்டுமே உண்டாகிறதா? அதற்க்கு மூல காரணம் என்ன? இயற்கையை அன்றாட வாழ்வுத் தேவைகளுக்குப் பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என்ற ஆசையா? அல்லது நம்மை சூழ்ந்திருக்கும் உலகைப் பற்றி அறிந்துகொள்ளவேண்டும் என்னும் பேராவலா ? மூளைக் கிளர்ச்சியா? இரண்டும் தான். கடந்த பல நூற்றாண்டுகளாக ஏற்பட்டிருக்கும் கணக்கற்ற அறிவியல் முன்னேற்றங்கள் இவ்விரண்டு காரணங்களாலும் உந்தப் பட்டவையே. இந்த அறிவியல் முன்னேற்றங்களால் மனித வாழ்க்கை மிகவும் – அளவிட முடியாத முறையில் – மாற்றப் பட்டிருக்கிறது. பொறியியல் துறையிலும் மருத்துவத் துறையிலும் வியக்கம் தரும் பெரும் சாதனைகள் மனிதனின் அன்றாட வாழ்வை மிக ஆழமான முறையில் மாற்றியிருக்கின்றன. அதே சமயத்தில் பிரபஞ்சம் எப்படி உருவாகியது போன்ற அன்றாட வாழ்விலிருந்து வெகு தூரத்தில் உள்ள கேள்விகளுக்கும் சில சின்ன சின்ன விடைகள் கிடைத்திருக்கின்றன. ஐந்தாயிரம் ஆண்டுகளாக அறிந்து கொண்ட பொருள்களைவிட பல மடங்குகள் அதிகமாக கடந்த முன்னூறு ஆண்டுகளில் அறிவியல் மூலமாக அறிந்து கொண்டிருக்கிறோம். இந்த மகத்தான முன்னேற்றங்களைப் பற்றி முடிந்தவரை தெரிந்து கொள்வது நாம் எல்லோருக்கும் தவிர்க்க முடியாத தேவை ஆகி விட்டது.
திரு நாகராஜன் அவர்களின் அறிவியல் துளிகள் இந்தத் தேவையை பூர்த்தி செய்யும் முயற்சிகளில் தலையாயதாகத் திகழ்கிறது. உரேகா தருணம் என்பதென்ன? மனிதனின் மூளைதான் வருங்கால போர்க்களம் என்கிறார்களே – எப்படி? சந்திரன் சீனாவுக்கு சொந்தமாகப் போகிறதா? உலகையே மாற்றி அமைக்கபோகும் 10 பிரம்மாண்டமான கண்டுப்புகள் எவையாக இருக்கும்? இவை போன்ற நூற்றுக்கணக்கான அறிவியல் துளிகளை அனைவரும் அறியக்கூடுமாறு அன்றாட பழக்கத் தமிழில் பகர்ந்து கொண்டிருக்கிறார். தமிழருக்கும் தமிழுக்கும் நாகராஜன் செய்திருக்கும் பாராட்டுக்குரிய பெரும் சேவை இது.
மஹா விஞ்ஞானி நியூட்டன் சொல்கிறார்:
” நான் மற்றவர்களுக்கு எப்படித் தெரிகிறேன் என்று தெரியாது. ஆனால் எனக்கு நான் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருக்கும் சிறு பையன் போல் தான் தோன்றுகிறேன். பல கோடிக்கணக்கான விந்தைகள் மூழ்கியிருக்கும் பரந்த கடலுக்கு எதிரில் மணலில் கிடக்கும் சில சிப்பிகளையும் வண்ணக் கற்களையும் கண்டு வியப்பு அடைந்து கொண்டிருக்கிறேன் ” . அதே கருத்தை “கற்றது கை மண்ணளவு; கல்லாதது உலகளவு” என்று ஔவையார் சொன்னார்கள். அறிவியல் துளிகளும் அது போன்ற மற்ற முயற்சிகளும் எல்லோர்க்கும் கை மண் அளவாவது அறிவியல் அளிக்கின்றன. நம் நன்றிக்கும் பாராட்டுகளுக்கும் உரியவர் திரு நாகராஜன்.
பங்களூரு K.G.நாராயணன்
28-8-2012
*
நூலுக்கு எனது முன்னுரை இது:
முன்னுரை
நாம் வாழும் இன்றைய யுகம் அறிவுப் புரட்சி யுகம் என்று அழைக்கப்படுகிறது. அறிவியலில் முன்னேறியுள்ள மேலை உலகத்தில் இன்று அமெரிக்காவில் மட்டும் வருடத்திற்கு சுமார் 50000 புத்தகங்கள் புதிதாக வெளியிடப்படுகின்றன. உலகெங்கும் சுமார் நான்கு லட்சம் பத்திரிக்கைகள் வெளியிடப்படுவதாக மதிப்பிடப்படுகிறது. அமெரிக்காவில் லைப்ரரி ஆஃப் காங்கிரஸில் பதினோரு கோடியே முப்பது லட்சம் விஷயங்கள் உள்ளன. ஒரு நாளைக்கு சுமார் 20000 புதிய விஷயங்கள் சேர்க்கப்படுகின்றன. இது இரண்டாயிரம் ஆண்டின் துவக்கத்தில் இருந்த நிலை.
கணினியின் கண்டுபிடிப்பைத் தொடர்ந்து வந்த இன்டர்நெட்டின் வரவு லட்சக்கணக்கான வலைத் தளங்களை நமக்கு அறிமுகப்படுத்தி விட்டது. அவற்றில் கோடிக் கணக்கில் அனைத்து விஷயங்கள் பற்றியும் கோப்புகள் குவிகின்றன.
தொலைக்காட்சியை எடுத்துக் கொண்டாலோ ஒரு வாரத்திற்கு உள்ள 168 மணி நேரத்தில் பல்லாயிரம் மணித்துளிகள் நிகழ்ச்சிகளை உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான தொலைக்காட்சி சேனல்கள் அளிக்கின்றன. எதைத் தேர்ந்தெடுத்துப் பார்ப்பது என்று திகைக்க வேண்டியதாக இருக்கிறது!
தகவல்கள் குவிந்து விட்ட நிலையில் தேவையற்ற தகவல்களும் ஏராளமாக இருப்பதால் நல்லனவற்றைத் தேர்ந்தெடுக்கும் பெரும் சுமை நம் மீது விழுந்து விட்டது – வைக்கோல்போரில் ஊசியைத் தேடுவது போல!
மிக அழகாக கவிஞர் டி.எஸ். எலியட் கூறியது தான் நம் நினைவுக்கு வருகிறது:-
Where is the life we have lost in living?
Where is the wisdom we have lost in knowledge?
Where is the knowledge we have lost in information?
தகவல் புரட்சியில் அற்புதமான அறிவுத் துளிகளைத் தேடிப் படித்தால் நல்லறிவு வளரும். அது ஆக்கபூர்வமான நன்மைகளை நல்கும்.
இது ஒருபுறம் இருக்க, மேலை உலகில் அதிவேகமாக அறிவியல் வளரும் இன்றைய சூழ்நிலையில் நல்ல விஷயங்களைத் தமிழ் உலகிற்குத் தர வேண்டிய கடமையும் நமக்கு உண்டு.
மிக அருமையாக பாரதியார்,
:பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புது நூல்கள்
தமிழ் மொழியிற் இயற்றல் வேண்டும்
என்று நமக்கு உள்ள கடமையைச் சுட்டிக் காட்டினார்.
நாளுக்கு நாள் வளர்ந்து வரும் அறிவியல் உலகில் மிக முக்கியமானம் சுவையான விஷயங்களைத் தொகுத்துத் தந்து அறிவியல் துளிகளைச் அறிமுகப்படுத்தும் பணியில்
எனது நண்பரும் சிறந்த கதாசிரியர், இயக்குநர், நடிகர் மற்றும் பத்திரிக்கை ஆசிரியருமான திரு கே.பாக்யராஜ் அவர்கள் என்னை ஊக்குவித்தார். அதனால் வாரம் தோறும் பாக்யா வார இதழில் மலர்ந்தது அறிவியல் துளிகள்!
அறிவியல் சம்பந்தமான சுவையான விஷயங்களுடன் விஞ்ஞானிகள் வாழ்வில் நடந்த சம்பவங்களையும் வாரம் தோறும் தரலானேன்.வாசகர்கள் ஆதரவோடு தொடர் இன்றும் தொடர்கிறது.
இந்த அறிவியல் துளிகளுக்கு இந்தியாவின் தலை சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரும் எனது சிறந்த நண்பருமான டாக்டர் கே.ஜி. நாராயணன் அவர்கள் அணிந்துரை அளித்துள்ளது எனது நற்பேறே!. எனது இனிய நண்பரும் விஞ்ஞானியுமான திரு தேசிகன் மூலம் அறிமுகமான அவர் டிஆர் டி ஓ என அழைக்கப்படும் Defene R&DOrganisation (DRDO) இல் பல்லாண்டுகள் பணியாற்றியவர். இயக்குநராக இருந்து வழி காட்டியவர். நமது பாரத தேசத்தின் பாதுகாப்பிற்கான முக்கிய சாதனங்கள் உருவாக வழி காட்டியவர். விமான இயலில் குறிப்பிடத் தகுந்த துறையான வான் பயண மின்னணுவியலில் (Avionics)
போர் விமானத்தின் கட்டுப்பாடு சாதனத் துறையில் தேஜஸ் (Tejas) என்ற இந்திய இலகு ரக போர் விமானத்தின் (Indian Light Combat aircraft) பறத்தல் கட்டுப்பாடுகள் (flight control) மற்றும் பறத்தல் ஒப்புச்செயலாக்கத்தில் (flight simulation) அவரது சாதனை குறிப்பிடத் தகுந்தது. இந்திய விமானப் படையின் முன்னணிப் போர் விமானங்கள் மற்றும் ஆளில்லா வான்வழிக் கலங்களுக்கான (front line fighters of IndiaAir Force and Unmanned Air Vehicles) பறத்தல் கட்டுப்பாடுகள் மற்றும் ஒப்புச் செயலாக்கத்திலும் அவரது பணி மகத்தானது. பெரிய விஞ்ஞானி என்றாலும் கூட இலக்கியத்தில் ஆர்வம் கொண்டு அதற்கும் நேரம் ஒதுக்குபவர். பழகுவதற்கு எளிமையானவர்.அறிவியல் துறையில் இளைஞர்கள் முன்னேறுவ்தை வெகுவாக ஆதரிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு வழிகாட்டியாகவும் உறுதுணையாகவும் இருப்பவர். கிராமப்புறங்களில் அறிவியல் கல்வியை ஊக்குவித்து அதனைப் பரப்பும் அகஸ்தியா இண்டர்நேஷனல் பவுண்டேஷனில் ஆலோசகராக இருந்து அறிவியல் வளர்ச்சி முன்னேற்றத்தில் இன்றும் அவர் ஈடுபட்டிருப்பது ஒன்றே அறிவியலைப் பரப்புவதில் அவருக்குள்ள ஆர்வத்தை எடுத்துக் காட்டச் சிறந்த சான்றாகும்.
அவரை அணுகி அணிந்துரை நல்க வேண்டியபோது மிகவும் மனமுவந்து அற்புதமான உரையை நல்கியுள்ளார். அவருக்கு எனது உளம் கனிந்த நன்றியை உரித்தாக்குகிறேன். பாக்யா இதழில் இந்தத் தொடரை வெளியிட்டு வரும் திரு கே.பாக்யராஜ் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி உரித்தாகுக. தொடரை வாங்கிப் படிக்க எளிதாக அமையுமாறு பகுதி பகுதியாக வெளியிடத் தீர்மானித்து முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள் வெளி வருகின்றன.
இந்த நூலை மின்னணு முறையில் மிக அழகிய முறையில் வெளியிட முன் வந்துள்ள லண்டனைச் சேர்ந்த நிலா பப்ளிஷர்ஸ் உரிமையாளர் திருமதி நிர்மலா ராஜு அவர்களுக்கும் ஆக்கபூர்வமாக அவருக்கு உதவி புரிந்து வரும் திருமதி யஷஸ்வினி மற்றும் திரு கார்த்திகை பாண்டியனுக்கும் எனது நன்றிகள்.
எல்லாவற்றிற்கும் மேலாக கடந்த பல ஆண்டுகளாக எனது விஞ்ஞானக் கட்டுரைகளை மனமுவந்து வரவேற்றுப் படித்து என்னைப் பெரிதும் ஊக்குவித்து வரும் வாசகப் பெருமக்களுக்கு எனது உளம் கனிந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.
பங்களூரு ச.நாகராஜன்
·
நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது:
The benefits of ever-growing science to the humanity is countless! The collection of articles about science and its progress, published in ‘Bhagya’ weekly magazine is now in the form of an e-Book in your computer! It is remarkable that every chapter of this book has an ending about incidents in the life of some great scientists. Just the titles of some memorable articles are fascinating such as ‘The 1000 planets explored by Kepler Satellite’, ‘Is the Dead Sea, dying?’ ‘6 Million Dollars Bionic Brain’ and ‘The Secret pill that makes you live for a hundred years’. Then there is no doubt the whole book will be an excitement to the readers! Just read it!
நாளுக்கு நாள் வளர்ந்து வரும் அறிவியல், மனித குலத்திற்குத் தரும் நன்மைகள்தான் எத்தனை! வாரா வாரம் ‘பாக்யா’ இதழில், நவீன கண்டுபிடிப்புகளையும் அறிவியல் முன்னேற்றங்களையும் பற்றி எழுதப்பட்டு வந்த தொடரின் முதல் பாகம் இப்போது மின்னூலாக உங்கள் கணினியில்! ஒவ்வோர் அத்தியாயத்தின் இறுதியிலும் அறிவியல் அறிஞர் ஒருவர் வாழ்வில் நிகழ்ந்த பொருள் பொதிந்த சம்பவம் ஒன்றும் இடம்பெறுவது சிறப்பு! ‘கெப்ளர் விண்கலம் காணும் 1000 கிரகங்கள்’, ‘சாவுக்கடல் சாகிறதா’, ‘6 மில்லியன் டாலர் பயோனிக் மூளை’, ‘நூறு ஆண்டுகள் வாழ ஓர் அதிசய மாத்திரை’ என நூலில் இடம்பெற்றிருக்கும் சில அத்தியாயங்களின் பெயர்களே வியப்பூட்டுகின்றன என்றால் மொத்த நூல்…? படித்துத்தான் பாருங்களேன்!
இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.
அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘ அறிவியல் துளிகள் -பாகம் 1’ நூலைப் பற்றிய சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.
ஆஸ்திரியாவின் தலை நகரமான வியன்னாவில் பல ஓவிய காட்சியகங்கள் இருந்தாலும் மக்கள் அதிகம் படை எடுப்பது அப்பர் பெல்வெடெர் மியூசியம் (Upper Belvedere Museum) ஆகும். அங்கு புகழ் பெற்ற ஓவியக் கலைஞர்களின் நூற்றுக்கண்ணைக்கான ஓவியங்கள் உள்ளன. அவற்றில் மிகவும் புகழ்பெற்றவை த கிஸ் THE KISS என்னும் முத்தம் கொடுக்கும் ஓவியம் ஆகும். அதற்கு எதிரே நான்கு நிர்வாண அழகிகளின் ஓவியங்கள் இருக்கின்றன.
நாங்கள் தங்கிய ஹோட்டல் தாழ்வாரத்திலேயே ஒரு முழு நிர்வாணப் பெண்ணின் படத்தைத் தொங்கவிட்டிருந்தார்கள். என்னடா இது? குடும்பத்தோடு தங்கும் பகுதியில் இப்படி முழு நிர்வாணப் பெண்ணின் படம்? என்ற கேள்வி என் மனதில் எழுந்தது. பெல்வெடெர் மியூசியத்துக்குப் போன பின்னர்தான் அது ஆஸ்திரியாவின் மிகப் புகழ்பெற்ற ஓவியர் குஸ்டாவ் கிலிம்ப்ட் Gustav Klimt வரைந்த ஓவியம் என்பது தெரிந்தது.
ஒரு இடத்திற்குப் போவதற்கு முன்னர் அந்த இடத்தைப் பற்றி படித்துவிட்டுப்போவது, கொடுத்த காசுக்கு முழு பலனையும் தரும். இப்போதெல்லாம் எல்லா சுற்றுலா இடங்களுக்கும் பெரிய நுழைவுக் கட்டணம் வைத்துள்ளனர். மேலும் இந்த பெல்வெடடெர் மியூசியம் மூன்று பிரிவுகளாக உள்ளன. மேல் பெல்வெடெர் , கீழ் பெல்வெடெர் , பெல்வெடெர் 21 என்ற பெயரில் அவை உள்ளன. மற்ற பிரிவுகளில் கடன் வாங்கிய ஓவியங்களை வைத்து தற்காலிக கண்காட்சி நடத்துகின்றனர். எல்லாவற்றையும் காண கொஞ்சம் பயணம் செய்யவேண்டும். ஓவியக் கலை படிப்பு படிப்பவர்களுக்கு அவை பயனுள்ளவை ஆகும்
ஏனைய பல ஓவியர்களின் பெரிய கான்வாஸ் ஓவியங்களும் இங்கே உள்ளன.
குஸ்டாவ் கிளிம்ட் Gustav Klimt வரைந்த ஓவியங்களின் பட்டியல்::
1.த கிஸ் The Kiss முத்தம் — இது உள்ளே நுழைந்தவுடன் இருக்கிறது ;
2.பர்க் ஹீட்டர் Burgheater – வியன்னாவில் பழைய தியேட்டர்
3.ஆடம் அண்ட் ஈவ் Adam and Eve- இதுதான் முழு நிர்வாண ஓவியம் (எனது ஆங்கில கட்டுரை நேற்று வெளியானது. அதில் படத்தைக் காண்க)
4.நுடா வெரிடாஸ் Nuda Veritas – இதுவும் முழு நிர்வாண ஓவியம் ; இதில் ஜெர்மானிய தத்துவ அறிஞர் பிரெடெரிக் ஷில்லரின் மேற்கோள் உள்ளது
The frame’s upper margin quotes a verse by Schiller, indicating, in its difficult consensus, a distinctive sign of quality: “If you can’t please everyone with your deeds and your art – please only a few. To please many is bad. Schiller.” Aim of this quote is to incite the Vienna Secession to action. Another version of this work exists as an etching for the magazine Ver Sacrum. The mirror held by Veritas is a modern invitation to “Know yourself”, whereas the flowers are symbols of regeneration
கவிஞரும் தத்துவ வித்தகருமான பிரெடெரிக் ஷில்லர் (Schiller) சொன்னார்: உன்னுடைய செயல்களாலும் கலையாலும் எல்லாரையும் திருப்தி செய்ய முடியவில்லையானால், சிலரை மட்டும் திருப்திப்படுத்து. எல்லாரையும் திருப்தி செய்யவேண்டும் என்று நினைப்பது நல்லதல்ல.
5.ஜூடித் , பைபிளில் வரும் பெண்மணி:
The painting depicts the biblical character of Judith holding the severed head of Holofernes. Judith’s face exudes a mixed charge of voluptuousness and perversion. Its traits are transfigured so as to obtain the greatest degree of intensity and seduction, which Klimt achieves by placing the woman on an unattainable plane.
6.மற்றும் பல இயற்கைக் காட்சி ஓவியங்களும் கர்ப்பிணி, குழந்தைகளைச் சித்தரிக்கும் ஓவியங்களும் இருக்கின்றன. இவைகளை நுணுக்கமாகப் பார்க்க மணிக்கணக்கில் நேரத்தைச் செலவிடவேண்டும். மேலும் இவை எல்லாம் 150 ஆண்டுகளுக்கு உட்பட்ட ஓவியங்களே; ஆயினும் ஒவ்வொன்றும் மில்லியன் டாலருக்கு மேல் ஏலத்தில் போகும் மதிப்புடையவை.
தமிழ்நாட்டில் நாயக்கர் காலத்தில் வரைந்த ஓவியங்களைக்கூட நாம் இழந்து விட்டோம். குகையில் இருந்ததால் ஓரளவுக்கு அஜந்தா ஓவியங்கள் தப்பின. ஓவியங்களை எப்படி காட்சிக்கு வைத்து ணம் சம்பாதிக்கலாம் என்பதை வெளிநாட்டினரிடமிருந்து கற்கவேண்டும் . ஒவ்வொரு மியூசியத்துக்கும் வெளியே வருகையில் ஒரு பெரிய கடை வழியாகத்தான் வரவேண்டும். அங்கே ஓவியர் பற்றியும் ஓவியங்கள் பற்றியும் ஏராளமான பொருட்களை விலைக்கு விற்பார்கள். நாங்கள் எங்கே சென்றாலும் அந்த ஊரின் நினைவுச் சின்னமாக சில பிரிட்ஜ் மாக்னெட் Fridge Magnet, கீ செயின் Key Chain , புஸ்தகங்களை Books வாங்குவோம் . இதே போல அரண்மனைக்குச் சென்றபோதும் நினைவுச் சின்னங்கள்(Mementos) வாங்கினோம்.
xxx
இறுதியாக ஓவியக்களைப் பற்றிக் காண்போம்
குஸ்டாவ் கிளிம்ட் Gustav Klimt 1862-1918 புதிய கலை (Art Nouveau) இயக்கத்தைச் சேர்ந்தவர் . அவரே கலைஞர்களுக்கு ஒரு அணியை உண்டாக்கி பலரையும் ஒன்று சேர்த்தார். புலன் உணர்ச்சிமிக்க, காம சம்பந்தமான (Sensual and Erotic) ஓவியங்கள் மூலம் புகழ்பெற்றார். 1909-ம் ஆண்டில் வரைந்த ‘முத்தம் The Kiss’ ஓவியம் புகழ் சேர்த்தது.மொஸைக் தரைபோல ஓவியங்களை வரைவதும். அதில் தங்கத்தைக் குழைத்து வார்ப்பதும் இவருடைய ஓவியங்களின் சிறப்பு அம்சங்கள்.
A perfect square, the canvas depicts a couple embracing, their bodies entwined in elaborate robes decorated in a style influenced by both linear constructs of the contemporary Art Nouveau style and the organic forms of the earlier Arts and Crafts Movement. The work is composed of conventional oil paint with applied layers of gold leaf, an aspect that gives it its strikingly modern, yet evocative appearance. The painting is now in the Österreichische Galerie Belvedere museum in the Belvedere palace, Vienna, and is widely considered a masterpiece of the early modern period. It is a symbol of Vienna Jugendstil—Viennese Art Nouveau—and is considered Klimt’s most popular work.
–subham— tags- குஸ்டாவ் கிளிம்ட் , Gustav Klimt ,முத்தம் ,The Kiss, பெல்வெடெர், மியூசியம், வியன்னா, ஓவியம்
One of the greatest ascetics lived amongst us in recent times is Kanchi Paramacharya (1894-1994). I was fortunate enough to have his Darshan and attend his Sadas at Narayanapuram near Madurai. My father V Santanam was also a great devotee of both Kanchi and Sringeri Shankaracharyas. He bought all the books containing their lectures. Acharya’s Call , Vol.II, published by B G Paul company, Madras has all the news items published in The Hindu in 1950s. Here is one of the articles about the world’s largest volunteer organisation known as Rashtreeya Swayamsevak Sangh (RSS).
Kanchi Parmaachaarya, addressing the youths of RSS asked everyone to “convert” at least one as a swayamsevak. His lecture was delivered within 35 years of RSS’ founding. His wish came true now which has grown like a banyan tree producing great leaders like Atal Behari Vajpayee and Narendra Modi. Apart from politicians, there were other great people like Guruji Madava Sadasiva Golwalkar, Nanaji Deshmuk, Dattopant Thengadi and Eknath Ranade (of Vivekanda Rock Memorial).
Here is the lecture delivered by Kaanchi Aachaaryaa:
DEVELOPMENT OF KSHATRA DHARMA
February 23, 1959
(The following is the gist of the message given to the members of RSS at the rally organised by the Sangh to pay their homage to His Holiness, at Sanskrit College, Mylapore)
Each country or Rashtra has its distinctive culture, which is rooted in its religious traditions. There are, both in the East and in the West, Heads of religious organisations who are the custodians of the country’s culture and traditions. For example, His Holiness Pope is the custodian of Catholic traditions. The Caliphate is the institution which symbolises the Islamic traditions. So far as South India is concerned, there are four main Schools of Hindu religious thought and there are also four main Mutts to represent these denominations. I regard this evening’s function as a homage paid not only to myself, but to Heads of all Mutts, upholding Hindu Dharma and culture.
The Rashtreeya Swayamsevak Sangh is an organisation, owing no allegiance to any political party, but dedicated to service. They render real service. You should uphold Truth and Dharma, on the one hand, and eschew fear on the other. Fearlessness does not mean violence. The tradition of true fearlessness is found embodied in Anjaneya, Samartha Ramdas (regarded as an incarnation of Anjaneya) and Shivaji. It is a virtue born out of physical prowess, wedded to Ahimsa, which enables one to rush to the succour of the weak and the oppressed, unmindful of personal consequences. This is signified by the expression Kshatra Dharma ( kshataad kila traayate ithi kshatram). The quality of a Kshatria is rescuing the oppressed.
But unfortunately, we have developed the trait of fearing the bully and oppressing the meek. This is the sign of fear complex. This weakness of the people is found reflected in the government also. If this weakness is to go, and if we are to hold our heads erect and walk as fearless citizens of a free country, we must once again develop kshatra dharma. This implied, the development of individual strength, disciplined unity, and will to resist evil and oppression. We should bear in mind the maxim, paropakaaram idam sareeram. The human body should be developed to protect and help others. Our strength is not to be utilised to oppress others- to do himsa. Our aim should be the welfare of all- Loka kshemam. If the individuals in society rise to such a high moral stature, the Government of the country will also rise to a similar stature.
You the members of the RSS, must make use of your organisational unity to develop physical and moral strength and to lead a pure life based on the eternal dharma of the land, as expounded by Hindu religion. Let each member try to convert at least one other person to his point of view. In that way let the message of the Sangh spread throughout the land. Let your dedicated service lead to the prosperity of the country and to purity in administration.
Source :- Acharya’s Call, Kanchi Jagatguru’s Madras Discourses, Volume Two, Pages 256/257, B G Paul & Co, Madras, 1968, Price Rs.3-50
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அருணகிரிநாதரும் தமிழும்! – 6
ச.நாகராஜன்
அருணகிரிநாதருக்கும் தமிழுக்கும் உள்ள இணைப்பு அதிசயமானது.
முருகனுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு எத்தகையதோ அத்தகையது அந்த இணைப்பு.
பல இடங்களில் தமிழ் முருகனைத் தமிழால் போற்றிப் புகழ்ந்த அருணகிரிநாதப் பெருமான் தமிழையும் பல்வேறு விதமாக அழகுறப் போற்றி வணங்குகிறார்.
அவர் தமிழைப் பற்றிக் கூறும் இடங்களை இந்தத் தொடரில் காணலாம்.
51) சிறுவை
பொருவி லாம லருள்பு ரிந்து மயிலி னேறி நொடியில் வந்து
புளக மேக தமிழ்புனைந்த – முருகோனே
பாடல் எண் 726 : பிறவியான சடம் எனத் தொடங்கும் பாடல்
பொருள் : ஒப்பில்லாத அன்பு வழியிலே கிருபை கூர்ந்து உன் மயில் மீது ஏறி ஒரு நொடிப் பொழுதில் வந்து புளகாங்கிதம் கொள்ளுமாறு மிக்க மகிழ்ச்சி கொண்டு (நக்கீரரை குகையிலிருந்து மீட்டு) திருமுருகாற்றுப்படை என்ற தமிழ் மாலையைப் புனைந்த முருகனே!
வரலாறு: இங்கு குதிரை முகத்தைக் கொண்ட ஒரு பெண் பூதத்திடமிருந்து நக்கீரரை முருகன் காத்த வரலாறு கூறப்படுகிறது.
52) திருநெல்வாயில்
நெறியி லாதவர் சூதினாற் கவர்ந்து
பொருள்செய் பூரியர் மோகமாய்ப் ப்ரபஞ்ச
நிலையில் வீழ்தரு மூடர்பாற் சிறந்த தமிழ்கூறி
நினைவு பாழ்பட வாடிநோக் கிழந்து
வறுமை யாகிய தீயின்மேற் கிடந்து
நெளியு நீள்புழு வாயினேற் கிரங்கி யருள்வாயே
பாடல் எண் 749 : அறிவிலாதவர் எனத் தொடங்கும் பாடல்
பொருள் : (நீதி நூல்களின் பயன் தெரியாது) நன்னெறியில் போகாதவர்கள், மற்றவர்களின் பொருளைக் கவர்ந்து சேகரிக்கும் கீழ்மக்கள், ஆசைப் பெருக்கால் உலக இன்பத்தையே விரும்பும் மூடர்கள் ஆகிய இத்தகையோரிடம் சென்று, நல்ல தமிழ்ப் பாடல்களைக் கூறி நினைவு தேய்ந்து பாழ்பட்டு, வாட்டம் அடைந்து பார்வை மங்கி, வறுமை என்ற நெருப்பின் மேல் கிடந்து, நெளிகின்ற நீண்ட புழுவினைப் போல ஆன என்னை இரக்கத்துடன் ஆண்டு அருள்வாயாக!
53) விருத்தாசலம்
முடிபவர் வடிவறு சுசிகர முறைதமிழ்
முதுகிரி வலம்வரு – பெருமாளே
பாடல் எண் 751 : திருமொழி எனத் தொடங்கும் பாடல்
பொருள் : இங்கு இறப்பவர்கள் மீண்டும் பிறப்பே இல்லாமல் ஆக்கும் தூய்மை உடைய தமிழில் முதுகிரி எனப்படும் விருத்தாசலத்தில் வெற்றியோடு வீற்றிருக்கும் பெருமாளே!
54) நிம்பபுரம்
வந்தசர ணார விந்தமது பாட
வண்டமிழ்வி நோத மருள்வாயே
பாடல் எண் 754 :அஞ்சு வித பூதமும் எனத் தொடங்கும் பாடல்
பொருள் : வந்தடைந்த திருவடித் தாமரைகளைப் பாட எனக்கு வண்தமிழில் அற்புதக் கவித்துவத்தை நீ அருள்வாயாக!
55) யாழ்ப்பாணாயன் பட்டினம்
ஏத்தா நாளுந் தர்ப்பண செபமொடு
நீத்தார் ஞானம் பற்றிய குருபர
யாப்பா ராயுஞ் சொற்றமி ழருள்தரு முருகோனே
பாடல் எண் 759 : பூத்தார் சூடுங் கொத்தலர் எனத் தொடங்கும் பாடல்
பொருள் : நாள் தோறும் போற்றி நீர்க்கடன், ஜெபம் ஆகிய இவைகளைச் செய்து, துறவோர் ஞான நிலையில் பற்றிய குருபரனே, யாப்பிலக்கணம் ஆய்ந்தமைந்த சொற்களைக் கொண்ட தமிழ்ப் பாக்களைத் தந்து அருளிய (திருஞானசம்பந்தராக வந்த) முருகனே.
56) சீகாழி
சேனக்குரு கூடலி லன்று ஞானத்தமிழ் நூல்கள் பகர்ந்து
சேனைச்சம ணோர்கழு வின்கண் – மிசையேறக்
பாடல் எண் 766 : ஊனத்தசை தோல்கள் எனத் தொடங்கும் பாடல்
பொருள் : சேனன் என்னும் பட்டப் பெயர் வைத்திருந்த சமண குருக்களின் முன்னிலையில் மதுரையில் முன்பு (திருஞானசம்பந்தராக வந்து) ஞானத் தமிழ் நூல்களாகிய தேவாரப் பாட்டுக்களைப் பாடி கூட்டமான சமணர்கள் கழுவில் ஏறும்படி செய்து…
57) சீகாழி
சருவி யிகழ்ந்து மருண்டு வெகுண்டுறு
சமயமு மொன்றிலை யென்ற வரும்பறி
தலையரு நின்று கலங்க விரும்பிய தமிழ்கூறுஞ்
சலிகையும்
பாடல் எண் 771 : சருவியிகழ்ந்து எனத் தொடங்கும் பாடல்
பொருள் : மதப் போராட்டத்தில் ஒருவரை ஒருவர் இகழ்ந்தும், பயந்தும், கோபித்தும் வருபவரான சமயவாதிகளும், கடவுள் என்ற ஒன்றே இல்லை என்று கூறும் நாத்திகர்களும், பறிதலையரான சமண குருமாரும் ஆகிய இவ்வனைவரும் கலங்க அனைவரும் விரும்பத் தக்க தமிழ்ப் பாடல்களை (திருஞானசம்பந்தராக வந்து) கூறும் செல்வாக்கையும்….
பாடல் சிறப்புக்கள் : பறிதலை என்ற சொல்லால் சமணர்கள் ‘இப்போது துக்கம் பிற்பாடு சுகம்’ என்ற மந்திரத்தைச் சொல்லி தலைமயிர்களைப் பறிக்கும் வழக்கம் இங்கு சுட்டிக்காட்டப் படுகிறது.
சலிகை என்றால் செல்வாக்கு என்று பொருள். இங்கு செல்வாக்கு தொடங்கி முருகனின் 16 லக்ஷணங்களை அருணகிரிநாதர் விவரிக்கிறார்.
58) பாகை
கூட லான்முது கூனன் றோட வாதுயர் வேதங்
கூறு நாவல மேவுந் – தமிழ்வீரா
பாடல் எண் 789 : ஆடல் மாமத ராஜன் எனத் தொடங்கும் பாடல்
பொருள் : மதுரையம்பதியின் அரசனின் (கூன்பாண்டியனின்) கூன் தொலையும்படி (சமணரோடு) வாதம் செது உயர்ந்த வேதப் பொருள் கொண்ட தேவாரப் பாடல்களைப் பாடிய (திருஞானசம்பந்தராகிய) நாவன்மை படைத்த தமிழ் வீரனே!
வரலாறு : இங்கு கூன்பாண்டியன் கூன் நிமிர்த்தப்படும் வரலாறு சொல்லப்படுகிறது.
59) சிக்கல்
விலையில்த மிழ்ச்சொற் குன்போலு தாரிகள்
எவரென மெத்தக் கொண்டாடி வாழ்வெனும்
வெறிகொளு லுத்தர்க் கென்பாடு கூறிடு – மிடிதீர
பாடல் எண் 827 : புலவரை ரக்ஷிக்கும் எனத் தொடங்கும் பாடல்
பொருள் : விலைமதிப்பற்ற தமிழ்ச் சொல்லை ஆதரிப்பதற்கு உன்னைப் போல் சிறந்த கொடையாளிகள் யார் தான் உள்ளார்கள் என்று நிரம்பப் புகழ்ந்து, தமது வாழ்வே பெரிது என்ற தீவிர உணர்ச்சி கொண்ட லோபிகளிடம் என் வருத்தங்களைப் போய் முறையிடும் வறுமை நிலை தீர…
60) திருப்பந்தணை நல்லூர்
நிதிபொங் கப்பல தவங்க ளாலுனை
மொழியும் புத்திகள் தெரிந்து நானுனை
நிகர்சந் தத்தமிழ் சொரிந்து பாடவு – மருள்தாராய்
பாடல் எண் 856 : மதியஞ் சத்திரு எனத் தொடங்கும் பாடல்
பொருள் : (அருள்ச்) செல்வம் பொங்க பல தவப் பேற்றின் பயனால் உன்னைப் புகழும்படியான அறிவு புலப்பட்டு, நான் உன்னை ஒளி வீசும் சந்தத் தமிழ்ப் பாக்களை நிரம்பப் பொழிந்து பாடவும் உனது திருவருளைத் தந்தருள்வாயாக!
குறிப்பு & நன்றி : https://www.kaumaram.comதளத்தில் உள்ளபடி பாடல் எண் தரப்பட்டுள்ளது. முழுத் திருப்புகழ்ப் பாடலையும் அதன் விளக்கத்தையும் இந்த தளத்தில் காணலாம்.
***
புத்தக அறிமுகம் – 100
விண்வெளியில் மனித சாதனைகள் (பாகம்-3)
பொருளடக்கம்
நூலில் உள்ள அத்தியாயங்கள்
1. பெயரில் என்ன இருக்கிறது?
2. விண்வெளி நிலையத்தில் மின்சக்தி!
3. சிவப்பாகும் விண்வெளி!
4. விண்வெளி வீராங்கனையின் காதல் களேபரம்!
5. புதிய சாதனை படைத்த வீராங்கனை!
6. ஹாலிவுட் திரைப்படம் காப்ரிகார்ன் ஒன் – 1
7. காப்ரிகார்ன் ஒன்! – 2
8. ஸ்டீபன் ஹாகிங்கின் ஜீரோ கிராவிடி பயணம்!
9. யூரி ககாரினைத் தேர்ந்தெடுத்த காரணம் என்ன?
10. ஒரு லட்சம் விண்கற்களைப் பட்டியலிடும் அதிசய முயற்சி! – 1
11. ஒரு லட்சம் விண்கற்களைப் பட்டியலிடும் அதிசய முயற்சி! – 2
12. விண்கல்லில் இறங்க ஒரு திட்டம்!
13. நட்சத்திர மர்மங்கள்! – 1
14. நட்சத்திர மர்மங்கள் – 2
15. நட்சத்திர மர்மங்கள் – 3
16. நீர் நிறைந்த புதிய பூமி கண்டுபிடிப்பு!
17. ஒரு அமெரிக்க கப்பலின் கதை!
18. மூன்றாவது தொழில் புரட்சி!
19. வீட்டை விட்டு நெடுந்தூரத்தில்!
20. பாமரனுக்கும் அறிவியல்! – கார்ல் சகன்
21. கார்ல் சகனைக் கவர்ந்த இந்தியா!
22. பிரபஞ்சம் பற்றிய தமிழர் அறிவு!
23. நடராஜ நடனமும் பிரபஞ்ச ரகசியமும்!
24. செவ்வாய்க்கு முதலில் செல்ல ஆசையா?
25. சந்திரனை நோக்கி இந்திய விண்கலம் ஏப்ரல் 2008ல் ஏவப்படும்!
26. விண்வெளி நிலையத்தில் உயிர்வளி உற்பத்தி!
27. மூன்று சூரியோதயங்கள் உள்ள உலகங்கள்!
28. விண்வெளி வீரர்கள் குடிக்கலாமா?
29. பீனிக்ஸ் மார்ஸ் லேண்டர்!
30. சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற ஆசிரியை!
31. பறக்கும் தட்டுகள் பற்றிய சர்வதேச மகாநாடு!
32. ரோஸ்வெல் பறக்கும் தட்டு மர்மம்! – 1
33. ரோஸ்வெல் பறக்கும் தட்டு மர்மம்! – 2
34. ரோஸ்வெல் பறக்கும் தட்டு மர்மம்! – 3
35. ரோஸ்வெல் பறக்கும் தட்டு மர்மம்! – 4
36. சாதித்தது ஆயிரம், சாதிக்க வேண்டியதோ கோடி!
நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது:
This is the third and final part of the series that deals with humanity’s expeditions into space and beyond, as published in the weekly “Bhagya”. Continuing from the previous two parts, several facts regarding space missions are explained in detail. The book not only satisfies the intellect of the readers, but also motivates them to read further on this topic. A perfect read for everybody, and a perfect gift to space enthusiasts!
ஆயிரக்கணக்கான வாசகர்களின் கவனத்தை ஈர்த்த, ச .நாகராஜன் ‘பாக்யா’ இதழில் எழுதி வந்த, தொடரின் மூன்றாம் பாகம் இப்பொழுது நூலாக உங்கள் கைகளில்! முதல் இரண்டு பாகங்களில் விடுபட்ட பல செய்திகள் இதில் உள்ளன. மாணவர்களின் அறிவுக்கு விருந்தாகவும் அவர்களின் படிக்கும் பழக்கத்தைத் தூண்டும் உற்சாக ஊக்கியாகவும் திகழக் கூடியது! படிக்கவும் பரிசளிக்கவும் ஏற்ற நூல்*
இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.
அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘ விண்வெளியில் மனித சாதனைகள் -பாகம் 3’ நூலைப் பற்றிய சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.