நல்லோர் வாழாததே மிகுதியான மக்கள் கூடிவாழும் பெரிய நகர்க்குப் பாழாகும், மேம்பாடு இலாத மன்னவர்கள் வந்து ஆள்வதே மிக்க
தேசச்சூனியம் – உயர்ந்த பண்பு இல்லாத அரசர்கள் வந்து ஆட்சிபுரிவது பெரிய நாட்டுக்குப் பாழாகும், மிக்க சற்புத்திரன் இலாததே நலமான வீறுசேர் கிருக சூனியம் – சிறந்த நன்மகன் இல்லாமையே அழகிய பெருமைபெற்ற வீட்டுக்குப் பாழாகும், சோம்பாத தலைவர் இல்லாததே
பழமையான உலகத்தில் யாவருக்கும் பெருஞ்செல்வம் இல்லாமையே பெரும் பாழாகும் என்றும் (அறிஞர்) கூறுவர்.
(வி-ரை.) ஆம்பல் – யானை. வதனம் (வட) முகம். சற்சனர் x
துர்ச்சனர். சூனியம் – பாழ். தாம்பூலத்திற்கு முகவாசம் என்று பெயர்.
தொன்மை + உலகு : தொல்லுலகு.
(க-து.) எவற்றிற்கும் அவற்றைச் சிறப்பிக்க ஒரு பொருள் வேண்டும்.
Xxxx
பணம் பற்றிய பாடல்களையும் பொன்மொழிகளையும் பார்த்தாலே செல்வம் என்பது எவ்வளவு முக்கியம் என்பது புரிந்துவிடும்
பணம் பற்றிய தமிழ்ப் பொன் மொழிகள்
பொருளிலார்க் கின்பம் இல்லை புண்ணியம் இல்லை என்றும்,
மருவிய கீர்த்தி யில்லை மைந்தரிற் பெருமை யில்லை,
கருதிய தரும மில்லை கதிபெற வழியுமில்லை,
பெருநிலந் தனிற்சஞ் சாரப் பிரேதமாய்த் திரிகு வாரே.
—-விவேக சிந்தாமணி
கையில் பணம் இல்லாத ஏழைக்கு இவ்வுலகில் மகிழ்ச்சியானது இல்லை, நற்செயல்களை செய்ய முடியாததால் புண்ணியமில்லை, புகழ் இல்லை, அவரது புதல்வர்களுக்கும் பெருமை ( ஸமூக அந்தஸ்து) இல்லை. தான தர்மங்களைச் செய்ய முடியாததால் மறுபிறவிக்கும் நன்மை இல்லை. இந்த பெரும் பூமியில் அவர்கள் நடைப்பிணங்களைப் போல திரிவார்கள். ——-விவேக சிந்தாமணி
பொன்னும் மணியும் நிறைந்த செல்வம் இருந்தால் கீழானவரையும் உறவினன் என்று சொல்லி புகழ்ந்து கொண்டாடி அவன் வீட்டில் திருமணமும் செய்து செய்துகொள்வார்கள். அதேசமயம் மன்னரைப் போல் வாழ்ந்து பின்னர் செல்வம் இழந்து யாருக்கும் எவ்வித உதவியும் செய்ய சக்தி அற்றவராக ஒருவர் ஆனால் அவரை யாரும் கண்டு கொள்ளமாட்டார், இகழ்ந்தும் பேசுவார்.– விவேக சிந்தாமணி
XXXXX
பணம் பத்தும் செய்யும்
xxx
பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை – குறள் 247
xxxx
பணக்கரன் பின்னால் பத்துப் பேர், பைத்தியக்காரன் பின்னால் பத்துப் பேர்
கல்வி கற்பிக்கும் ஆசிரியர் இல்லாத ஊர்; வழக்கைத் தீர்த்து
வைக்கின்ற அறிவு முதிர்ந்தவர் இல்லாத சபை; தமக்கு உள்ளதைப்
பிறருக்கும் பகுத்துக்கொடுத்து உண்ணும் தன்மை யில்லாதவர்களின்
பக்கத்திலே வாழ்வது; இம்மூன்றும் நன்மை தருவதில்லை’’ (பா.10)
XXX
சபைக்கு அழகு விகட கவி (தெனாலி ராமன்)
நகைச்சுவை இறை வணக்கம்
ககனே காக ரத்னானி க்ரக ரத்னானி மூஷிகா
சயனே மட்குண ரத்னானி சபாரத்னானி விதூஷக
ககனே- ஆகாயத்திற்கு
காக ரத்னானி – காகங்கள் பறப்பது அழகு
க்ரகரத்னானி – வீட்டிற்கழகு
மூஷிகா – பெருச்சாளிகள் வசிப்பது
சயனே- படுக்கைக்கு
மட்குண ரத்னானி – மோட்டுப் பூச்சிகள் வசிப்பது
சபாரத்னானி- சபைக்கு அழகாவது
விதூஷகா – காணதனைத்தியும் கண்டவிதம் பிரசங்கம் செய்யும் விகடப் பிரசங்கிகள்
தெனாலி ராமன் போன்ற விகட கவிகள் பேரறிஞராகத் திகழ்ந்தனர்
XXX
நேர்மையான ஆட்சி இல்லாத நாடு பாழ்
கொடுங்கோன் மன்னர் வாழும் நாட்டிற்
கடும்புலி வாழுங் காடு நன்றே. 63– வெற்றிவேற்கை
கொடுங்கோல் மன்னர் ஆளும் நாட்டில் வாழ்வதை விடக்
கொடிய புலி வாழும் காட்டில் வாழ்வது நல்லது.
கொடுங்கோல் மன்னன் புலியை விடக் கொடுமையானவன்.
XX
குறள் 559 முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்
[பொருட்பால், அரசியல், கொடுங்கோன்மை]
பொருள்
நூல்கள் கூறியுள்ள அரச நீதி தவறி, ஒழுக்கம் தவறி, நடுவுநிலைமை தவறி ஒரு மன்னன் ஆட்சி செய்தால் அந்நாட்டின் பெருமை புகழ் செல்வம் உணவு ஆயுதங்கள் மழை ஆகியவை தவறும். மழை பொழியாமல் போனால் நாடு வறண்டு விடும். மிகுந்த துன்பம் நிலவும். அத்தகைய ஆட்சி ஒரு கொடுமையான ஆட்சி.
ராத்திரிப் பகலா ரிக்க்ஷா இழுப்பேன் நைசா பேசி பைசா இழுப்பேன் ராத்திரிப் பகலா ரிக்க்ஷா இழுப்பேன் நைசா பேசி பைசா இழுப்பேன் டிராமா சினிமா சர்க்கஸ் பார்ப்பேன் ராஜா மாதிரி சிகரெட்டும் பிடிப்பேன்
இந்த ஊரில் இருக்க மாட்டேண்டி நான் இப்போதே போவோணும் உங்கப்பாவைக் கேட்டு ஏதாச்சும் வாங்கி வாடி
பட்டணம் தான் போகலாமடி பொம்பளே பணங்காசு தேடலாமடி நல்ல கட்டாணி முத்தே என் கண்ணாட்டி நீயும் வாடி பொண்டாட்டி தாயே
டவுனுப் பக்கம் போகாதீங்க மாப்பிள்ளே டவுனாயிப் போயிடுவீங்க அந்த டாம்பீகம் ஏழைக்கு தாங்காது பயணம் வேண்டான்னா கேளு மாமா
மனுஷனை மனுஷன் இழுக்குற வேலை வயிறு காய்ஞ்சவன் செய்யிற வேலை மனுஷனை மனுஷன் இழுக்குற வேலை வயிறு காய்ஞ்சவன் செய்யிற வேலை கணக்குக்கும் மீறி பணம் வந்த போது மனுஷனை சும்மா இருக்க விடாது
என்னை மறந்து உன்னை மறந்து எல்லா வேலையும் செய்யவே துணிஞ்சு இரவு ராணிகள் வலையிலே விழுந்து ஏமாந்து போவே..இன்னும் கேளு அப்புறம்..?
போலீசுப் புலி புடிக்கும் மாப்பிள்ளே புர்ராவைப் பெயர்த்தெடுக்கும் அங்கே போவாதே வீணாக சாவாதே மாமா பெண்சாதி பேச்சைக் கேளு. அப்பிடியாஆஹா.
நீ உலகம் அறிஞ்ச பொம்மனாட்டி நான் ஒண்ணுமே தெரியா கம்மனாட்டி நீ உலகம் அறிஞ்ச பொம்மனாட்டி நான் ஒண்ணுமே தெரியா கம்மனாட்டி ஊரு விட்டு ஊரு போனா சீரு கெட்டுப் போகுமின்னு உண்மையோட சொன்ன சொல்லு நன்மையாக தோணுது.
பட்டணம்தான் போக மாட்டேண்டி உன்னையும் பயணமாகச் சொல்ல மாட்டேண்டி நல்ல கட்டாணி முத்தே என் கண்ணைத் தொறந்தவ நீ தான் பொண்டாட்டி தாயே.. மாமா ஏம்மா?
என்னைத் தனியா விடவே மாட்டேனுன்னு என் தலை மேலடிச்சி சத்தியம் பண்ணு எங்கப்பனானே சத்தியம் ..சத்தியம் .. சத்தியம் ..
ஏரோட்டிப் பாத்தி பிடிச்சி அதிலே நீர் பாய்ச்சி நெல்லு விதைச்சி நம்ம ஊரோட ஒண்ணாக உள்ளதைக் கொண்டு நாம் உல்லாசமாக வாழ்வோம் (2)
–SUBHAM—
TAGS- அவிசாரி, பட்டணம், மனு நீதி நூல், பணம் பந்தியிலே, பணம் ,தமிழ், பொன் மொழிகள் ,
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
யோகவாசிஷ்டம்
யோக வாசிஷ்டம் கூறும் புஸுண்டோபாக்யானம்!
ச.நாகராஜன்
முன்னொரு காலத்தில் பெரும் மஹரிஷிகள் அனைவரும் தேவ சபையில் ஒருங்கே கூடினர். அப்போது ஒரு கேள்வி எழுந்தது.
உலகில் வசித்துக் கொண்டிருந்தாலும் உலக சம்பந்தமான தொடர்பு சிறிதும் ஏற்படாத மஹா ஞானிகளுள் சிறந்தவர் யார்? அவர் எங்கிருக்கிறார்? – இது தான் கேள்வி.
அப்போது சாதாதபர் என்னும் மஹரிஷி சபையோரைப் பார்த்துச் சொல்லலானார் : “ ரிஷி பெருமக்களே! மஹாமேருவின் ஈசான கோணத்தில் எத்தகைய தவம் செய்தாலும் செல்வதற்கு மிக அரிதாக உள்ள ஒரு ரகசியமான இடத்தில் ஒரு மரம் உள்ளது. அந்த மரத்தின் பொந்திலே காகத்தின் உருவத்தில் புஸுண்டர் என்ற மாபெரும் யோகியார் இருக்கிறார். அவரைப் போன்ற இன்னொருவரைக் காண்பது அரிது”.
இதைக் கேள்வியுற்ற வசிஷ்ட மஹரிஷி தனது தவத்தின் வலிமையாலும் யோக சக்தியாலும் அந்த மரத்தின் அருகில் சென்றார். அங்கே புஸுண்ட மஹரிஷியைக் கண்டார்.
அவரிடம் அர்க்யம் பாத்யம் ஆகிய அனைத்து உபசாரங்களையும் பெற்றார்.
பின்னர் வினவலானார் தனது சந்தேகத்தை!
“ ஓ! யோகீஸ்வரரே! வெகு நீண்ட காலமாக உலகில் நீங்கள் வசிக்கிறீர்கள். உங்களது அனுபவத்தில் கண்ட விஷயங்களைச் சற்று எனக்குச் சொல்லுங்கள்” என்று அவர் வேண்டினார்.
அப்போது புஸுண்ட மஹரிஷி பல ரகசியங்களை அவரிடம் விண்டுரைத்தார்.
அவை அதிசயிக்கத்தக்க விவரங்கள்! யோகம், ஞானம் பற்றிய பல மர்மமான விஷயங்களை அவர் எடுத்துரைத்தார்.
பின்னர் கூறினார் இப்படி:
: ஓ, முனிவரே! நீர் பிரம்மாவினால் இதற்கு முன் ஏழு தடவை உண்டாக்கப்பட்டிருப்பதை நான் கண்டிருக்கிறேன். பிரம்மாவின் சங்கல்பத்தால் கர்ப்பவாசம் இன்றி நீர் தோன்றினீர். அப்படித் தோன்றிய ஜன்மங்களில் இது உமக்கு எட்டாவது ஜன்மம். ஒரு சமயம் ஆகாயத்திலிருந்து நீர் பிரம்மாவின் சங்கல்பத்தினால் தோன்றினீர். இன்னொரு சமயம் அக்னியிலிருந்து தோன்றினீர்.
பூமி அந்தர்தானம் அடைந்து கூர்மத்தினால் சமுத்திரத்திலிருந்து உத்தாரணம் செய்யப்பட்டதை இதற்கு முன் ஐந்து கல்பங்களில் கண்டிருக்கிறேன்.
இப்போது நடந்த அம்ருத மதனமானது நான் கண்டதில் பனிரெண்டாவது தடவை ஏற்படுவதாகும். ஹிரண்யாக்ஷன் பூமியைக் கீழே கொண்டு போனதை மூன்று தடவை நான் கண்டிருக்கிறேன்.
ஹரியானவர் பரந்தாமராகத் தோற்றமுற்ற அவதாரங்களில் எட்டை நான் பார்த்திருக்கிறேன். திரிபுர சம்ஹாரங்களில் முப்பதைப் பார்த்திருக்கிறேன். தக்ஷயக்ஞ நாசம் இரண்டு முறை கண்டிருக்கிறேன்.
ஒரே விஷயத்தைச் சொல்லுவதாகவும் பல பாடங்களை உடையதாயும் உள்ள புராணங்கள் கலியில் நஷ்டமடைந்து போக அவை மீண்டும் ஒவ்வொரு சதுர்யுகத்திலும் மீண்டும் பிரவர்த்திப்பதைப் பார்த்திருக்கிறேன்.
ராமாயணம் என்னும் வேறு இதிஹாஸம் ஒன்று லட்சம் கிரந்தங்களோடு கூடிய ஞான சாஸ்திரமாகத் தோன்றியதைக் கண்டிருக்கிறேன்.
பூபார நிவிருத்திக்காக வசுதேவர் இல்லத்தில் கிருஷ்ணன் என்னும் பெயரை உடைய பதினாறாவது அவதாரமானது விஷ்ணுவுக்கு இனி ஏற்படப் போகிறது.
இதற்கு முன் அந்த அவதாரத்தில் பதினைந்து அவதாரங்களை நான் பார்த்திருக்கிறேன்.
ஒரு சமயம் ருத்திரர் சிருஷ்டி செய்ததையும் ஒரு சமயம் பிரம்மா சிருஷ்டி செய்ததையும் ஒரு சமயம் விஷ்ணு சிருஷ்டி செய்ததையும் ஒரு சமயம் முனிவரது சிருஷ்டியையும் கண்டிருக்கிறேன்.
ஒரு கல்பத்தில் தாமரை மலரிலிருந்தும் ஒரு சமயம் ஜலத்திலிருந்தும் ஒரு கல்பத்தில் அண்டத்திலிருந்தும் ஒரு கல்பத்தை ஆகாயத்திலிருந்தும் பிரம்மா உண்டாகியதைக் கண்டிருக்கிறேன்.
இப்படிப் பல விஷயங்களைக் கேட்ட அனைவரும் பிரமித்தனர்.
நாம் இப்போது இருப்பது ஸ்வேத வராஹ கல்பம். மன்வந்தரத்தின் பெயர் வைவஸ்வத மன்வந்தரம்.இது இந்த கல்பத்தில் ஏழாவது மன்வந்தரம்.
இப்போது இருப்பது பிரம்மாவின் 51வது வருடம்.
இப்படிப்பட்ட நீண்ட ஒரு சரிதத்தை சிருஷ்டி பற்றிக் கேள்விப்பட்ட கார்ல் சகன் என்ற விஞ்ஞானி மலைத்தே போனார்.
சிருஷ்டியின் மர்மத்தைக் கூறும் சிதம்பரம் நோக்கி வந்தார். நடராஜரை தரிசித்தார்.
தனது காஸ்மாஸ் என்ற பிரபலமான அமெரிக்க தொடரின் ஒரு பகுதியின் ஆரம்பத்தில் நடராஜரைக் காண்பித்தார்.
நமது பிரபஞ்சம் பற்றிய அறிவு விஞ்ஞான பூர்வமானது.
இதை முற்றிலுமாக அறிந்து கொள்ள கல்பம் பற்றிய விவரங்களை அறிதல் இன்றியமையாதது!
1. ‘கூறிய’ என்றும் பாடம்.கைப்பொருளாலே மிகு வெற்றி (உண்டு). வரும் மருத்துவர்க்குக் கைவிசேடந்தன்னில் சயம் – முன்னுக்கு வரும் மருத்துவர்களுக்குக் கைராசியால் வெற்றி (உண்டாகும்), நலம் உடைய வேசையர்க்கு அழகிலே- நன்மையுடைய பரத்தையர்க்குத் தங்கள் அழகினாலே (வெற்றியுண்டு),நாளும் அரசர்க்கு ரணசூரத்திலே – எப்போதும் மன்னவர்கட்குப் போர்க்களத்திலே (அதிக வெற்றியுண்டு), நற்றவர்க்கு உலகுபுகழ்பொறையிலே அதிக சயம் – நல்ல தவத்தினர்க்கு உலகம் புகழும் பொறுமையினாலே மிகுவெற்றி (உண்டாகும்), ஞானவேதியர் தமக்கோ குலமகிமை தன்னிலே – அறிஞரான மறையவர்களுக்கோ தம் மரபுக்குரிய பெருமையினாலே வெற்றி உண்டாகும், வைசியர்க்கோ கூடிய துலாக்கோலிலே சயம் – வணிகர்களுக்குப் புகழ்பெற்ற தராசுக்கோலை ஒழுங்காகப் பிடிப்பதனாலே வெற்றி (உண்டாகும்), குற்றம் இல்லாத வேளாளருக்கோ குறையாத கொழுமுனையிலே சயம் – குற்றம் அற்றவர்களான வேளாளர்க்கு நிறைவுற்ற கொழுவின் நுனியினாலே (உழுவதால்) வெற்றி உண்டாகும், அலைவுஇல் குதிரைக்கு நடைவேகத்தில்அதிக சயம் ஆம் என்பர் – வருத்தம் இல்லாத குதிரைக்கு அதனுடைய நடைவிரைவினால் மிகு வெற்றியுண்டாகும் என்று (அறிஞர்) உரைப்பர்.
(க-து.)அவரவர்கள் தம் தொழில் முறையிலேதான் வெற்றியுண்டாகும்.
Xxx
My commentary on verse 33 of ARAPPALISURA SATAKAM
வெற்றி வேற்கை (நறுந்தொகை) எழுதிய அரசர் அதிவீரராம பாண்டியனும் அம்பலவாணரும் ஒரே கருத்தைச் சொல்கின்றனர்.
வேதியர்க்கு அழகு வேதமும் ஒழுக்கமும் 4
மன்னவர்க்கு அழகு செங்கோல் முறைமை 5
வைசியர்க்கு அழகு வளர் பொருள் ஈட்டல் 6
உழவர்க்கு அழகு ஏர்உழுது ஊண் விரும்பல் 7
XXX
பெண்டிர்க்கு அழகு எதிர் பேசாது இருத்தல் 11
குலமகட்கு அழகு தன் கொழுநனைப் பேணுதல் 12
விலை மகட்கு அழகு தன் மேனி மினுக்குதல் 13
XXX
காலையும் மாலையும் நான் மறை ஓதா அந்தணர் என்போர் அனைவரும் பதரே 65
குடி அலைத்து இரந்து வெங்கோலோடு நின்ற முடியுடை இறைவனாம் மூர்க்கனும் பதரே 66
முதல் உள பண்டம் கொண்டு வாணிபம் செய்து அதன் பயன் உண்ணா வணிகரும் பதரே 67
வித்தும் ஏரும் உளவா இருப்ப எய்த்து அங்கு இருக்கும் ஏழையும் பதரே 68
XXX
தவம் செய்வோருக்கு பொறுமை அவசியம் ஏன்?
அப்போது அவர்களுக்கு வெற்றி எளிதில் கிட்டாது; வெற்றி வரும் நேரத்தில் அஹங்காரமும் காம எண்ணங்களும் வலை வீசும்; அதில் அகப்பட்டு சிறை சென்ற ஆனந்தாக்களை பத்திரிக்கையில் படிக்கிறோம் . விசுவாமித்திரர் அகம்கார வெறியில் வஸிட்டரின் காமதேனுவைப் பறிக்கப் பார்த்தார்; நல்ல அடி வாங்கினார் ;பின்னர் திரிசங்குவை உடலுடன் இந்திரலோகத்துக்கு அனுப்பி, அவர்கள் அவரை பூமிக்கு உருட்டிவிட்டபோது மற்றோரு அடி வாங்கினார் மேனகா வலையில் சிக்கி தவத்தை இழந்தார். அவர் மன்னர்- ஞானி; ஆக அவருக்கு பொறுமை இல்லாததால் மும்முறை தோற்றார். பின்னர் தவற்றை உணர்ந்து பக்குவ நிலை அடைந்தார். பிராமணர் பட்டத்தை அவருக்கு வசிஷ்டரே தந்தார்.
XXX
ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதை
ஒரு தவசி ராம கிருஷ்ண பரமஹம்ஸரிடம் வந்தார். வர, வர தனக்கு ஞான திருஷ்டி அதிகரிப்பதாகச் சொல்லி. தொலை தூரத்தில் நடக்கப்போகும் விஷயங்கள் முன் கூட்டியே தெரிவதாகவும் அதைத்தானே சரி பார்த்து அறிந்த தாகவும் சொன்னார். உடனே தவத்தை சில நாட்களுக்கு நிறுத்தும்படி பரமஹம்ஸர் சொன்னார். வந்தவர் வியப்புடன் ஏன் நிறுத்தவேண்டும் என்று வினவினார். தவம் சித்தி அடையப்போகும் நேரத்தில் இப்படி தேவதைகள் வந்து திசை திருப்பும் என்றும் ஆகையால் அதை நிறுத்த, சில நாட்கள் தவம் செய்வதை கைவிடுதல் நன்று என்றும் சொன்னார்.
இன்னொருவர் வந்து தான் தியானம் செய்யும்போது பழைய தீய எண்ணங்கள் மீண்டும் மீண்டும் வந்து தொல்லை கொடுப்பதாக வருத்தத்துடன் செப்பினார்.அதற்கும் பரமஹம்ஸர் தக்க பதில் கொடுத்தார். எண்ணெய் வைத்திருக்கும் பாத்திரத்தை எவ்வளவு கவிழ்த்து எண்ணெயை வெளியேற்றினாலும் சிறிது ஒட்டிக்கொண்டுதான் இருக்கும். நம்முடைய பழைய எண்ணங்களும் அப்படித்தான். எளிதில் போகாது.ஆகையால் அது பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து தியானம் செய்யலாம் என்கிறார். தியானத்தில் வெற்றி அடைய நிறைய பொறுமை வேண்டும்.
XXXX
நரஸ்ய ஆபரணம் ரூபம் ரூபஸ்ய ஆபரணம் குணஹ
குணஸ்ய ஆபரணம் ஞானம் ஞானஸ்ய ஆபரணம் க்ஷமா — என்று
சம்ஸ்க்ருத சுபாஷிதம் செப்பும்.
மனிதனுக்கு அழகு எடுப்பான தோற்றம் ;
அந்த உருவத்துக்கு அழகு நல்ல குணம்;
அந்த குணத்துக்கு அழகு தருவது ஞானம்;
அந்த ஞானத்துக்கு அழகு சேர்ப்பது பொறுமை
XXXX
மற்றொரு பொறுமை ஸ்லோகம் இதோ :
கோகிலானாம் ஸ்வரம் ரூபம் பாதிவ்ரத்யம் து யோஷிதாம்
வித்யா ரூபம் விரூபாணாம் க்ஷமா ரூபம் தபஸ்வினாம்
குயிலுக்கு அழகு அதன் இனிய குரல் ;
பெண்களுக்கு அழகு கற்பு;
அசிங்கமான தோற்றம் உடையோருக்கு அழகு அவர்கள் கற்ற கல்வி;
தவசிகளுக்கு அழகு பொறுமை .!
சாணக்கியர் கதை அனைவரும் அறிந்ததே ; அழகற்ற கருத்த பிராமணர் அவர். ஒரு பந்தியில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த அவரை , நந்த வம்ஸத்து மன்னர், தர தர என்று வெளியே இழுத்து வந்து அவமானப்படுத்தவே உனது சாம்ராஜ்யத்தை வேரறுக்காதவரை என் குடுமியை முடிய மாட்டேன் என்று வீர சபதம் செய்தார். அதன் படி நந்த வம்சத்தை பூண்டோடு அழித்து, அலெக்ஸ்சாண்டரையும் அச்சுறுத்தக்கூடிய மாபெரும் மகத சாம்ராஜ்யத்தை நிறுவினார். மஹா மேதாவி; ஆனால் தோற்றத்தில் விகாரம்.
XXX
பார்ப்பனர் பற்றி வள்ளுவரே சொல்லிவிட்டார். வேதத்தை வேண்டுமானாலும் மறக்கலாம். ஆனால் ஒழுக்கத்தைக் கைவிட்டால் அதற்கு மன்னிப்பே கிடையாது. அந்தக் காலத்தில் பிராமணர் மூலம் செய்திகளை அனுப்புவார்கள் ; அதைத் தொல்காப்பியரும் சொல்கிறார். கோவலனுக்கு மாதவி அனுப்பிய மன்னிப்பு LOVE LETTER லவ் லெட்டரை பார்ப்பனர் கையில் கொடுத்து அனுப்பியதை சிலப்பதிகாரம் செப்புகிறது. அவ்வளவு நம்பிக்கை அவர்கள் மீது.
குறள் 134
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்
பிராமணர்கள் அடிப்படை வேலை, வேதங்களை கற்று ஓதவேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் அவர்கள் அவர்களின் கடமையில் இருந்து தவறுகிறார்கள். அப்படி வேதத்தை மறந்து ஓதாமல் கூட இருக்கலாம். ஆனால் ஒருவன் ஒழுக்கத்தில் இருந்து தவறினால் அவனுடைய புகழும் அவன் குடும்பத்தினுடைய புகழும் குலத்தினுடைய புகழும் குன்றி விடும். ஆதலால் ஒருவருடைய புகழ் அவர் ஒழுக்கத்தில் உள்ளது.
தைவாதீனம் ஜகத் சர்வம்
மந்திராதீனம் து தைவதம்
தன்மந்த்ரம் பிராஹ்மணாதீனம்
பிராஹ்மணோ மமதேவதா
பொருள்: “உலகம் தேவர்களுக்குக் கட்டுப்பட்டது. தேவர்கள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள் மந்திரங்களும் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டவை – பிராமணர்களே எனது தெய்வம்” என்று கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார்
இவை அனைத்தும் ஒழுக்கமுள்ள, வேத வாழ்வினைக் கடைப்பிடிக்கும் பார்ப்பனர்களைப் பற்றி சொன்ன வசனங்கள்.
Ancient Tamils believed in Nymphs, Ghosts, Spirits and Local Gods like the Vedic people. We see unknown and unexplainable ghosts and spirits in the Rigveda and Atharvana Veda. I have already given the long list in my blogs. Even today the village goddesses have only Sanskrit names. Kanchi Paramacharya Swami has explained it in his beautiful lecture.
Many half baked , so called scholars write that these are Dravidian Gods. But all of them have Sanskrit names or stories connected with Hindu gods. In the Veda also we see Raakaayi, Mookaayi, Aranyani (forest nymph), Bhumadevi, Mahaamaayi etc
Greeks and Sumers also have similar stories.
Like their north Indian counterparts , ancient Tamils saw nymphs in all the natural entities; they sing about nymphs in forests, trees, ponds, lakes, mountains, parks, meeting points of streets, city squares, crematoriums , battle fields, musical instruments, animals etc . Hundreds of references are in 2000 year old literature. We see similar things in ancient Greece. They have special names for nymphs of different localities, unlike Tamils . Greeks called them,
Nereides – water nymphs. Neer for water is not a Tamil word. Greeks took it from Rigveda to Greece.
Naiades- Mountain nymphs
Oceanides – Ocean , sea nymphs
Dryads – trees; from Sanskrit Taru, Daru
Most of them are female spirits like Yakshis in Sanskrit. Tamils also considered them feminine spirits. Because of this belief, Hindus gave full respect to all that is Nature and saved the environment
Sangam Age Tamils used அணங்கு, பேய், கடவுள், தெய்வம், சூரரமகளிர் for the nymphs and spirits. Local people worshipped them with special rites.
The following passage lists all the places where the nymphs reside
மலையும் மரமும் மரம்செறி காவும்
காடும் மேடும் கள்ளியும் புதரும்.
சுனையும் துருத்தியும் சுழியும் கடலும்:
நாடும ஊரும் நல்மனை இடங்களும்
மருவு சந்தியும மறுகுகூடு சதுக்கமும்:
மன்றில் பொதியிலில் கந்துடை நிலையிலும்
யாழிலும் பிறவிலும் எங்கனும் மன்னி.
உவந்துறை கடவுளர் காட்சியும் உளவே.
This includes all the sources listed above.
Xxx
Like Vedic people, they approached them with a reverential fear. We see it in Bhumi Sukta of the Atharvana Veda and Aranyani sukta of the Rig Veda, the oldest book in the world.
‘உருகெழு மரபின் கடவுள்: (பதிற் ,21:8) is the description we find in Pathitrupathu, which means fearful and troublesome god.
Xxx
Tirumurukatruppadai (Murugu) gives the list as Forest, Garden, River Islands, River, Pond, Square, Street Meeting Points, Parks,Public Meeting places, Godly places etc
காடும் காவும், கவின் பெறு துருத்தியும்
யாறும் குளனும். வேறுபல் வைப்பும்,
சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும்.
மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையிலும்
(முருகு 223-225)
Xxx
Paripatal adds Trees like banyan, Kadamba, River islands, Hills etc where Gods reside
ஆலமும், கடம்பும், நல் யாற்று நடுவும்.
கால் வழக்கு அறுநிலைக குன்றமும், பிறவும்
அவ்வவை மேலிய வேறுவேறு பெயரோய்
(பரி .4:67-69)
Xxx
People worship such places , report Kalittokai verse.
‘துறையும் ஆலமும் தொல்வலி மராஅமும்
முறையுளி பராஅய், பசய்ந்தனர், தொழூ௨
(கலி.101 13-14)
Xxx
Mountain Spirits
The Greeks called them “The Oreads”
The Oreads (oros, “mountain”) were nymphs of mountains and grottoes; the Napaeae (nape, “dell”) and the Alseids (alsos, “grove”) were nymphs of glens and groves; the Dryads or Hamadryads presided over forests and trees.
In Sanskrit we have Goddesses in each Mountain such as Vindhyavasini in Vindhya mountains, Mookambhika in the Western Ghats, Santoshi Mata and Parvati in the Himalayas, Kanaka Durga in Indrakeeladri Hills in Andhra Pradesh etc.
Tamils also worshipped the hills as Gods
Sangam Tamils sang about the Devas residing in Meru (Sirupan.Lines 205/6 and Perumpan. Lines 429/30.)
Meru is the centre and highest point in Sri Chakra Yantra. We have Meru in all parts of the world such as Pameer (Paa Meru), Khmer and Kumari (Khu Meru), Sumerians (Su Meru; they claimed they came from a far off mountain area/India; Meru in Kenya in Africa etc.
Xxx
Sangam Age Tamils believed that all hills are places where Gods reside
The Gods in the mountain protect the people, they sang.
It makes sense because the hills only prevented invasions of enemies from the other side of the mountain.
Xxx
Beautiful Apsaras from Deva Loka/Divine World/Heaven
Tamils called them Mountain Women ‘வரையர மகளிர்’ . They said that the bards and dancers crossing the Mountains should not stay in such places for long because they will give you sickness.
Throughout the Atharva Veda, we see all bacteria and Viruses are described as evil spirits. That is the layman’s language. Tamils also said don’t stay in cold places for long otherwise you would get troubles (Influenza fever or Pneumonia or even Malaria)
“அனையது அன்று அவன் மலைமிசை நாடே –
நிரை இதழ்க் குவளைக் கடிவீ தொடினும்,
‘வரைஅர மகளிர் இருக்கை காணினும்,
உயிர்செல வெம்பிப் பனித்தலும் உரியிர்;
பலநாள் நில்லாது நிலநாடு படர்மின்‘
(மலைபடு.188-192) Malaipadukadaam
This passage warns the bards and their wives not to stay for long in mountainous areas because you will be made to shiver (with fever)
xxx
Tamils believed those Apsaras or Angels live in caves and they are invisible to human beings. (Akam Verse௮௧.343:11-18).
Tamil poets used this Apsaras as similes to describe the rare sight of a girl (lady love) of the beauty of a ladylove.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அருணகிரிநாதர் தொடர்!
அருள்வாயே! – 7
(55 முதல் 64 முடிய)
ச.நாகராஜன்
அருணகிரிநாதர் ‘அருள்’ என்ற சொல்லைத் திருப்புகழில் ஆண்ட இடங்கள் ஏராளம்.
அவர் அருள்வாயே என்று கூறும் இடங்களின் நீண்ட தொகுப்பு இது:
படித்து மகிழ்வோம்; பாடிப் பரவுவோம்!
55) திருத்தணிகை
சேவற்கொடி யொடுசி கண்டியின்
மீதுற்றறி ஞோர்புகழ் பொங்கிய
தேசுக்கதிர் கோடியெ னும்பத மருள்வாயே
பாடல் எண் 300 – ‘வாருற்றெழும் ‘எனத் தொடங்கும் பாடல்
பொருள் : சேவல் கொடியோடு, மயிலின் மீது நீ ஆரோகணித்து, அறிஞர்கள் பாடிய உனது திருப்புகழ் நிறைந்துள்ள ஒளிச்சோதி கோடி என்னும்படி வீசுகின்ற திருவடியை அருள்வாயாக!
56) குன்றுதோறாடல்
இதயந் தனிலி ருந்து க்ருபையாகி
இடர்சங் கைகள்க லங்க அருள்வாயே
பாடல் எண் 303 – ‘அதிருங் கழல் பணிந்து ‘எனத் தொடங்கும் பாடல்
பொருள் : எனது உள்ளத்தில் வீற்றிருந்து கருணை புரிந்து துன்பங்களும் சந்தேகங்களும் கலங்கி ஒழிய அருள்வாயாக!
57) குன்றுதோறாடல்
செந்தமிழ் நாளு மோதி உய்ந்திர ஞான மூறு
செங்கனி வாயி லோர்சொ லருள்வாயே
பாடல் எண் 306 – ‘வஞ்சக லோப மூடர்‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : செழுமையான தமிழ்ப் பாட்டுக்களால் தினமும் பாடி வாழ்வுற ஞானம் சுரக்கும் சிவந்த கோவைக்கனி போன்ற திருவாயால் ஒரு திருமொழியை அருளிச் செய்வாயாக!
58) ஆறு திருப்பதி
கனதன முலைமேல்விழு கபடனை நிருமூடனை
கழலிணை பெறவேயினி யருள்வாயே
பாடல் எண் 307 – ‘அலைகடல் நிகராகிய‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : (கொடி போன்ற பொதுமகளிருடன் இன்பகரமாகக் கூடி) அவர்களுடைய பாரமான மார்பகங்கள் மேல் விழும் வஞ்சகனும் முழு மூடனுமான என்னை, உனது திருவடி இணையைப் பெறுமாறு இனி அருள்வாயாக!
59) காஞ்சீபுரம்
திசைதொறுங் கற்பிக் கைக்கினி யற்பந்
திருவுளம் பற்றிச் செச்சைம ணக்குஞ்
சிறுசதங் கைப்பொற் பத்மமெ னக்கென் றருள்வாயே
பாடல் எண் 314 – ‘புன மடந்தைக்கு‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : திக்குகள் தோறும் (உள்ள யாவருக்கும்) எடுத்து உபதேசிக்க இனி மேல் நீ சற்று தயை கூர்ந்து, வெட்சி மாலை மணம் வீசும், சிறிய சதங்கை அணிந்துள்ள உன் அழகிய திருவடித் தாமரையை எனக்கு எப்போது தந்து அருள்வாய்?
60) காஞ்சீபுரம்
பெருமானென்
றவிழுமன் புற்றுக் கற்றும னத்தின்
செயலொழிந் தெட்டப் பட்டத னைச்சென்
றடைதரும் பக்வத் தைத்தமி யற்கென் றருள்வாயே
பாடல் எண் 316 – ‘செறிதரும் செப்பத்து‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : (அழகிய காஞ்சீபுரத்தில் நின்றருளும்) பெருமான் நீ என்றும் நெகிழ்ந்து உருகும் அன்பின் வசமாகி, திருவருள் நெறியைப் பயின்று, மனத்தின் செயலெல்லாம் நீங்கப் பெற்று அந்த நிலையில் எட்டப்படுவதான பொருளைச் சென்று அடைகின்ற மனப் பக்குவத்தை அடியேனுக்கு என்றைக்குத் தந்தருள்வாயோ?
61) காஞ்சீபுரம்
தங்கரிவையும் துத்துத் துத்துவெனக்கண் டுமியாமற்
றவருநிந் திக்கத் தக்கபி றப்பிங்
கலமலஞ் செச்சைச் சித்ரம ணித்தண்
டையரவிந் தத்திற் புக்கடை தற்கென் றருள்வாயே
பாடல் எண் 319 – ‘தசைதுறுந்தொக்கு‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : உடன் தங்கியிருந்த பெண்களும் ‘தூ, தூ’ என்று பார்த்தவுடன் அவமதித்துத் துப்ப, பிறர் யாவரும் இகழும்படியான இந்தப் பிறப்பு இங்கு போதும், போதும். வெட்சி மலர் அணிந்ததும், அழகிய ரத்தின மணிகள் அணிந்ததும், தாமரை போன்றதுமான உன் திருவடியைப் பற்றிச் சேர்வதற்கு எப்போது எனக்கு அருள்வாய்?
62) காஞ்சீபுரம்
இனிவிட வேதாந்தப ரமசுக வீடாம்பொருள்
இதவிய பாதாம்புய மருள்வாயே
பாடல் எண் 338 – ‘கமலரு சோகாம்பர‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : (இன்ப நுகர்ச்சியை) இனி விட்டு ஒழிப்பதற்கு, வேத முடிவான, பரம சுகம் தருவதான, முக்திப் பொருளாகிய, இன்பம் தருவதான பாதத் தாமரைகளைத் தந்து அருள்வாயாக!
63) காஞ்சீபுரம்
பார டைக்கலக் கோல மாமெனத்
தாப ரித்துநித்தார மீதெனப்
பாத பத்மநற் போதை யேதரித் தருள்வாயே
பாடல் எண் 343 – ‘சீசி முப்புர‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : உலகில் எனக்குப் புகலிடமாக இருக்கும் தோற்றத்தைக் காண்பித்து, ஆதரவுடன் யான் நித்தியமான ஒரு ஆபரணத்தை அணிவதற்காக உன் திருவடியாகிய நற்கமல மலரை என் மீது தரிக்கச் செய்ய அருள்வாயாக்
64) காஞ்சீபுரம்
விதன முற்றிட மிக வாழும்
விரகு கெட்டரு நரகு விட்டிரு
வினைய றப்பத மருள்வாயே
பாடல் எண் 345 – ‘படி றொழுக்கமும்‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : பெருந்துன்பம் ஏற்பட்டு, அதனால் மிகத் துயரத்தோடு வாழும், அந்தக் கேவலமான வாழ்வு நீங்கி, அரிய நரகத்தில் நான் விழுவது விலகி, நல்வினை, தீவினை என்ற என் இரு வினைகளும் ஒழிய, உனது திருவடிகளைத் தந்தருள்வாயாக!
குறிப்பு & நன்றி : https://www.kaumaram.comதளத்தில் உள்ளபடி பாடல் எண் தரப்பட்டுள்ளது. முழுத் திருப்புகழ்ப் பாடலையும் அதன் விளக்கத்தையும் இதில் காணலாம்.
இந்தப் படத்தில்- in this picture– உலகப் புகழ்பெற்ற – world famous–வரலாற்றுப் பேரறிஞர் Historian /scholar– டாக்டர் நாகசாமி – Dr Nagaswamy– அவருடைய புஸ்தகத்தைப் – his book —படித்துக் கொண்டு இருக்கிறார் —reading
xxx
Let us learn some verbs with ‘ING’
Eg. Going, Coming, Eating, reading etc.
It is called Gerund
Gerund
GRAMMAR
a verb form which functions as a noun, in Latin ending in -ndum (declinable), in English ending in -ing (e.g. asking in do you mind my asking you? ).
We may call it as Present, Future, Past Continuous
Xxx
How to from it?
You must know the Converbial form of each verb and then add to it KONDU/ கொண்டு and then add conjugation of IRU/ இரு
இரு is Be ( We have seen the conjugation of Be and converbial already. But I will remind you again
உணவுப் பொருட்களைப் புகழ்ந்தும் இகழ்ந்தும் கூட ஆன்றோர்கள் நமக்குப் பல நீதி மொழிகளைக் கற்பிக்கின்றனர்; இதனால் நமக்கும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் கிடைத்துவிடுகிறது.
இதோ சில ஸம்ஸ்க்ருதப் பொன்மொழிகள் :
மோரின் மகிமை
ஒரு கவி மோரின் பெருமையைப் புகழ்கையில் , அது இந்திரனுக்கும் கூட கிடைக்காது என்கிறார் .
அம்ருதம் துர்லபம் ந்ருணாம் தேவானாம் உதகம் ததா
பித்ரூணாம் துர்லபஹ புத்ரஹ தக்ரம் சக்ரஸ்ய துர்லபம்
பொருள்:-
மனிதர்களுக்கு அமிர்தம் கிடைப்பது அரிது.
தேவர்களுக்கு தண்ணீர் கிடைப்பது அரிது.
தந்தையருக்கு நல்ல மகன்கள் கிடைப்பது அரிது.
இந்திரனுக்கு மோர் கிடைப்பது அரிது.
உணவில் மோர் சேர்ப்பதன் அவசியத்தை கவிஞர் இப்படி வலியுறுத்துகிறார் போலும்.
Xxx
மூலிகையின் அருமை
கூடப்பிறந்தவன் எல்லாம் நன்மையா செய்கிறான் உடலுடன் பிறந்தாலும் நோய், ஆளைக் கொன்றுவிடுகிறது. காட்டில் எங்கோ முளைத்திருக்கும் மூலிகையல்லவா நம்மைக் காப்பாற்றுகிறது? அதுதான் உண்மையான உடன்பிறந்த உறவினன் என்கிறார் ஒரு புலவர் .
பரோ அபி ஹிதவான் பந்துஹு பந்துரபி அஹிதஹ பரஹ
அஹிதோ தேஹஜோ வ்யாதிஹி ஹிதம் ஆரண்யாம் ஒளஷதம்
பொருள்:-
வேற்று மனிதன் ஆனாலும் நமக்கு நன்மை செய்பவனே உறவினன் ஆவான் .
உறவினன் ஆனாலும் நமக்கு நன்மை செய்யாவிடில் அவன் வேற்றானே ;
எப்படி என்றால், நமது உடலில் பிறக்கும் வியாதி நமக்கு தீங்கிழைக்கிறது .எங்கோ காட்டில் பிறந்த பச்சிலை மூலிகை , நமக்கு நன்மை செய்கிறது .
Xxx
புளியின் பெருமை
மாத்ரு ஹீந சிசு ஜீவனம் வ்ருதா காந்த ஹீந நவ யெளவனம் ததா
தாயில்லாத குழந்தையின் வாழ்க்கையும் , கணவனில்லாதவளின் பருவ அழகும் , பொறுமை இல்லாத தவமும், புளியம்பழத்தின் புளிப்புச் சுவை இல்லாத உணவும் வீண் ; பயனற்றதாகும் .
XXX
உணவைப் போலவே பிள்ளையும் பிறக்கும்!
தீபோ பக்ஷயதே த்வாந்தம் கஜ்ஜலம் ச ப்ரசூயதே
யதா அன்னம் பக்ஷயேத் நித்யம் ஜாயதே தாத்ருசீ ப்ரஜா
பொருள்:-
விளக்கு கருமையான இருட்டைச் சாப்பிடுகிறது.. அதனால் அது வெளியிடும் தன் கரும் புகையால் கருப்பான ‘மை’யையே உண்டாக்குகிறது ; அது போலவே நாம் தினசரி உண்ணும் உணவைப் பொருத்தே குழந்தைகளும் உண்டாகின்றன. சாத்வீக உணவை உண்ணவேண்டும் என்பதே இதன் கருத்து.
xxxx
வெள்ளைப் பூண்டின் சிறுமை
கோவில்கள் மடங்கள் தரும் பிரசாதங்களில் வெங்காயமோ வெள்ளைப் பூண்டோ இராது. அவை காம சம்பந்தமான எண்ணங்களை உண்டாகும் என்பதால் இந்தக் கட்டுப்பாடு.(இலங்கைத் தமிழர் நடத்தும் கோவில்களில் இந்த ஆசாரம் கிடையாது ) ஆகையால் அவ்விரு பொருட்களையும் பெரியோர்கள் இகழ்ந்துரைப்பர்
அமிதகுணோ (அ )பி பதார்த்தோ தோஷேண கேன நிந்திதோ பவதி
ஸகல ரசாயன ராஜோ கந்தேன ஏகேன லசுன இவ
பொருள்:-
அளவற்ற நற்குணம் உடைய பொருட்களும் கூட ஒரு குறையினால் இகழப்பட்டதாக ஆகிறது. இது எவ்வாறெனில் எல்லாச் சுவையும் சேர்ந்த சிறந்த உணவில் பூண்டு என்னும் ஒரு பொருளின் மணத்தால் இகழ்ச்சிக்கு ஆளாவது போலாம்.
ராமகிருஷ்ண பரமஹம்சரும் பூண்டு உதாரணத்தை கையாளுகிறார் :- பூண்டு ரசம் வைத்திருந்த பாத்திரத்தை எவ்வளவுதான் கழுவினாலும் அதில் பூண்டின் மணம் இருக்கும். அது போலத்தான் பாப எண்ணங்களும்; அவை எளிதில் போகாது என்பார்.
அதுகொண்டு திண்கரியையும் கட்டலாம் – பல வைக்கோல் தாள்கள்
சேர்ந்து ஒரு கயிறு ஆனால், அக் கயிற்றைக் கொண்டு வலிய
யானையையும் கட்டஇயலும், திகழ்ந்த பல துளிகூடி ஆறு ஆயின்
வாவியொடு திரள் ஏரி நிறைவிக்கலாம் – விளங்கும் பல நீர்த்திவலைகள்
கூடி ஆறு ஆனால் குளத்தையும் திரண்ட (பல) ஏரிகளையும் நிறையச் செய்யலாம், ஒத்த நுண்பல பஞ்சு சேர்ந்து நூல்ஆயிடின் உடுத்திடும் கலை ஆக்கலாம் – சமமான நுண்ணிய பல பஞ்சு கூடி நூலானால் அணியும் ஆடையாக்கலாம், ஓங்கிவரு கோலுடன் சீலையும் கூடினால் உயர்கவிகைஆ கொள்ளலாம் – உயர்ந்து வளர்ந்த கோலோடு துணியும் சேர்ந்தால் உயர்ந்த குடையாகக் கொள்ளமுடியும், மற்றும் – மேலும், உயர் தண்டுலத்தோடு தவிடு உமி கூடின் பல்கும் முளை விளைவிக்கலாம் –
மேம்பட்ட அரிசியும் தவிடும் உமியும் கூடியிருந்தால் (வளம்) மிகுந்த முளையைத் தோற்றுவிக்கலாம், மனம் ஒத்த நேயமொடு ஒருவர்க்கு ஒருவர் கூடி வாழின் வெகு வெற்றி பெறலாம் – உள்ளம் கலந்த அன்புடன் ஒருவருடன் ஒருவர் சேர்ந்து வாழ்ந்தால் பெரு வெற்றியை அடையலாம்.
Xxx
ஜலம் ஜலேன சம்ப்ருக்தம் மஹாஜலாய பவதி
மேலே சம்ஸ்க்ருதத்தில் உள்ள பழ மொழிக்கு நிகரானது சிறு துளி பெரு வெள்ளம்.
மஹா பாரதத்தில் ஒரு கதை வருகிறது. பாண்டவர்கள் (5) ஐவருக்கும் துர்யோதனாதிகள் நூற்றுவர்க்கும் (100) இடையே இருந்த கருத்து வேறுபாடு, பகைமை எல்லோரும் அறிந்ததே.ஆயினும் துரியோதனனை கந்தர்வர்கள் பிடித்துவைத்தபோது அவனை மீட்பது நம் கடமை என்கிறார் தர்மர்/ யுதிஷ்டிரர்
நாம், நமக்குள் சண்டையிடும்போது நாம் ஐவர்; நம் எதிரிகள் நூற்றுவர். ஆனால் வெளியிலிருந்து பொது எதிரி வருகையில் நா ம் நூற்றைவர் (100+5= 105) என்கிறார் தர்மபுத்திரர்.
परस्परविरोधे तु
वयं पञ्च च ते शतम् ।
अन्यैः साकं विरोधे तु
वयं पञ्चाधिकं शतम् ॥
பரஸ்பர விரோதி து வயம் பஞ்ச ச தே சதம்
அன்யைஹி சாகம் விரோதே து வயம் பஞ்சாதிகம் சதம்
எவ்வளவு நல்ல சிந்தனை !
Xxx
ஊர் கூடித் தேர் இழுக்கலாம்
ஒருவர் மட்டும் தேரை இழுக்க முடியாது. ஊரே கூடினால்தான் தேரினை இழுக்க முடியும்; இறுதிவரை முயன்றாலே தேர் அதன் நிலையை அடையும். ஜாதி மத , ஆண் , பெண் வேறுபாடின்றி அனைவரும் உள்ளம் ஒருமித்து வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தவே தேர்த் திருவிழாவினை இந்துக்கள் நடத்துகின்றனர்.
Xxxx
வள்ளுவரும் இதை ஒரு குறளில் விளக்குகிறார்
அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்– குறள் 474
மற்றவர்களோடு ஒத்து நடக்காமல், தன் வலிமையின் அளவையும் அறியாமல், தன்னை வியந்து மதித்துக் கொண்டிருப்பவன் விரைவில் கெடுவான்.
Xxx
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
சிறுவயதிலேயே நாம் பள்ளிக்கூடத்தில் படித்த கதைதான். ஒரு வயதான தந்தையின் 4 மகன்களும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள் . நால்வர் கையிலும் சில குச்சிகளைக் கொடுத்து உடையுங்கள் என்றார் ; நால்வரும் எளிதில் அவைகளை முறித்துப் போட்டனர். அதே அளவு குச்சிகளை ஒன்றாகக்கட்டி உடைக்கச் சொன்னார். ஒருவராலும் இயல வில்லை ; மகன்களுக்குப் புரிந்தது ஒற்றுமையையே பலம் என்று ..
மேலே அம்பலவாணர் கூறிய ஒவ்வொரு வரியும் இதே கருத்தை வலியுறுத்துகிறது .பஞ்ச தந்திரக் கதையிலும் ஒற்றுமையாய் இருந்த 4 காளை மாடுகளுக்குள் சண்டை மூட்டிவிட்டு அவைகளை தனக்கு இரையாக்கிக்கொண்டது ஒரு நரி.
Xxx
ஒரு குடை தயாரிக்கக்கூட பல அம்சங்கள் ஒன்று சேர வேண்டும் என்கிறார்.
காஞ்சி சுவாமிகள் (1894-1994) உரையில் ஒற்றுமையை விளக்குகிறார்.
“ஒவ்வொரு மனிதனுடைய கையிலும் 5 விரல்கள் இருக்கின்றன. ஐந்தும் சமமாக இருப்பதில்லை. ஆனபோதிலும் ஐந்து விரல்களும் ஒன்றாகச் சேர்ந்தால்தான் உணவைக் கையில் எடுத்து உண்ண முடியும். ஒரு மனிதனுக்கு ஐந்து ஏக்கர் பூமி இருக்கலாம். ஆனால் பயிர் செய்வதற்கு ஏற்றவாறு வரப்புகளைக் கட்டி அநேக வயல்களாகத் தடுத்துக் கொள்ள அவசியம் நேர்கிறது. அப்படிச் செய்தால்தான் ஒவ்வொரு பகுதியாகத் தண்ணிர் தேக்கி நன்றாக உழுது, பயிரிட்டுப் பயனடைய முடியும். ஐந்து ஏக்கராவும் தனது என்ற எண்ணம் இருக்கவேண்டும். வரப்புக் கட்டிப் பல வயல்களாகப் பிரக்கவும் வேண்டும். அதுபோல உயிரினங்கள் அனைத்தும் இறைவனுடைய படைப்பில் ஒன்றே. என்ற எண்ணம் சதா இருக்க வேண்டும். ஆனால் உலக ரீதியல் பார்க்கும்போது ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாகத்தான் இருக்கும். வேற்றுமையில் ஒற்றுமையே இந்து சமயத்தின் சிகரம்”.
மயிலிறகு என்பது மிகவும் எடை குறைவான பொருள் தான். இது என்ன செய்து விட போகின்றது என்று, அதை வண்டியின் மேல் அளவுக்கு அதிகமாக ஏற்றினால், வண்டியின் அச்சாணி முறிந்து விடும். அதனால் மயிலிறகு என்பதனால் அதனை குறைத்து எடை போடக்கூடாது..
ஒற்றுமையே வலிமை !!
–subham—
Tags– சிறு துளி பெரு வெள்ளம் ,ஊர் கூடித் தேர் இழுக்கலாம் , அறப்பளீசுர சதகம் , ஒற்றுமை
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கொங்குமண்டல சதகம் பாடல் 70
பவானி ஆற்றில் அணை கட்டிய காளிங்கராயன்!
ச.நாகராஜன்
வீர பாண்டிய மன்னன் அரசாண்ட காலம் அது. மேல்கரைப் பூந்துறை வெள்ளோட்டில் வசித்து வந்த ஒரு வீர வாலிபன் தன் முயற்சியால் வீர பாண்டிய மன்னனின் சேனையில் சேனாதிபதி ஆனான்.
தமிழரசர்கள் மந்திரி மற்றும் சேனாதிபதிகளுக்குக் காளிங்கராயன், மானவராயன் (மழவராயன்) போன்ற பட்டங்களைக் கொடுத்து கௌரவிப்பது அந்தக் காலத்திய வழக்கமாகும்.
ஆகவே அந்த வீர வாலிபனும் காளிங்கராயன் என்னும் பட்டத்தைப் பெற்றான்.
தான் பிறந்த நாட்டுக்கும் தன் குலத்திற்கும் தனக்கும் புகழ் சேரும் வண்ணம் காவிரி ஆற்றுடன் சங்கமம் ஆகும் இடத்திற்கு அருகே பவானி நதியைத் தடுத்து அணை ஒன்றை அவன் கட்டினான்; புண்ணியத்தையும் சேர்த்துக் கொண்டான்.
இன்றும் அந்த அணைக்குக் காளிங்கராயன் அணை என்ற பெயர் வழங்கி வருகிறது.
கோயமுத்தூருக்கு அடுத்த ஊற்றுக்குழி ஜமீன்தார் (பாளையகாரர்) இவனது சந்ததி ஆனதால் இப்போதும் காளிங்கராயன் என்ற பட்டத்தைக் கொண்டு வருகிறார்கள். அந்த மந்திரி திருச்செங்கோடு ஶ்ரீ அர்த்த நாரீஸ்வரருக்கு மானியம் விட்டிருந்ததாக அறியப்படுகிறது.
மேற்கோள் பாடல்:
ஆலிங்க நாகமலை யர்த்தநா ரீசுரர்க்குக்
காலிங்க ராயனெனுங் காராளன் – மாலிங்க
மென்றேமா மாந்தை நிலமேழுமா வுங்கொடுத்தான்
நன்றே புகழெய்தி னான்
– திருச்செங்கோட்டுப் புராணம் திருப்பணிமாலை
இன்னொரு தனிப்பாடலும் இது பற்றிக் கூறுகிறது:
திரைகொண்ட வாரியை மாலடைத் தான் செழுங் காவிரியை
உரைகொண்ட சோழன்மு னாளடைத் தானுல கேழறிய
வரைகொண்ட பூந்துறை நன்னாடு வாழ்கவல் வானிதனைக்
கரைகொண் டடைத்தவன் வெள்ளோடை சாத்தந்தை காளிங்கனே
– தனிப்பாடல்
ஏற்று திரைப்பொன்னி கூடுறு வானி யிடைமடங்க
வெற்றி மிகுத்த அதிவீர பாண்டிய வேந்தமைச்சன்
கற்ற வறிவினன் காளிங்க ராயன்செய் கால்கழிநீர்
உற்ற வனத்தை வனவயலாக வுயர்த்தியதே – தனிப்பாடல்
வீரபாண்டிய மன்னன் கொங்கு நாட்டை ஆண்டிருக்கிறான் என்பதை விஜயமங்கலம் முதலிய இடங்களிலுள்ள கல்வெட்டுகளும் epigraphyகளும், 1913-1914 வருடாந்திர அறிக்கையும் நன்கு விளக்குகிறது.
கி.பி.1250க்கு மேல் 1280க்குள் இவன் அரசாண்டிருக்கிறான்.
1913ஆம் ஆண்டு ஊற்றுக்குழி ஜமீன் மானேஜரான திரு J.M. துரைசாமிப் பிள்ளை ஜமீன் சரித்திரத்தை ஆங்கிலத்தில் எழுதி புத்தகமாக வெளியிட்டுள்ளார். அதையொட்டி உள்ள கோயமுத்தூர் ஜில்லா மானுவலும் காளிங்கராயன் என்ற பெயர் ஏற்பட்ட காரணமும் அணைக்கட்டு விவரமும் மேலே கூறிய விவரத்திற்கு முரண்பாட்டான விவரத்தைத் தருகின்றன. இவைகளின் ஆதாரம் பற்றி சரியாக விளங்கவில்லை. இது ஆராயப்பட வேண்டிய விஷயமாகும்.
கொங்குமண்டல சதகம் பாடல் 70 இந்த காளிங்கராயனைப் புகழ்ந்து கூறுகிறது இப்படி:
காவிரி யோடு கலக்குறு வானியைக் கட்டணைநீர்
பூவிரி செய்களுக் கூட்டிநற் காஞ்சி புகுதவிசை
தேவர்கள் சாம்பவர் பாவாண ரெல்லாந் தினமகிழ
மாவிச யம்பெறு காளிங்க னுங்கொங்கு மண்டலமே
இதன் பொருள் :
காவேரி நதியுடன் கூடுகின்ற பவானி நதியில் அணை கட்டிப் பாசனம் செய்து வடிநீர் காஞ்சி ஆற்றில் விழும்படி செய்த வெற்றியாளனான காளிங்கராயன் என்பவனும் கொங்குமண்டலத்தைச் சேர்ந்தவனே ஆகும்.