மனு நீதி நூல் பற்றி அறப்பளீசுர சதகம் (Post No.11,570)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,570

Date uploaded in London – 21 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxx  

அறப்பளீசுர சதகம் பாடல் 29. ஒழுகும் முறை Good Behaviour

மாதா பிதாவினுக் குள்ளன் புடன்கனிவு

     மாறாத நல்லொ ழுக்கம்;

  மருவுகுரு ஆனவர்க் கினியஉப சாரம்உள

     வார்த்தைவழி பாட டக்கம்;

காதார் கருங்கண்மனை யாள்தனக் கோசயன

     காலத்தில் நயபா டணம்;

  கற்றபெரி யோர்முதியர் வரும்ஆ துலர்க்கெலாம்

     கருணைசேர் அருள்வி தானம்;

நீதிபெறும் மன்னவ ரிடத்ததிக பயவினயம்;

     நெறியுடைய பேர்க்கிங்கிதம்;

  நேயம்உள தமர்தமக் ககமகிழ் வுடன்பரிவு

     நேரலர் இடத்தில் வைரம்

ஆதிமனு நூல்சொலும் வழக்கம்இது ஆகும்எம

     தையனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) எமது ஐயனே – எம் தலைவனே!, அருமை ………..

தேவனே!,

மாதா பிதாவினுக்கு உள் அன்புடன் கனிவு மாறாத

நல்லொழுக்கம் – பெற்றோர்களிடம் உள்ளம்நிறைந்த அன்பும் குழைவும் இடையறாத ஒழுக்கமும் வேண்டும், மருவுகுரு
ஆனவர்க்கு உபசாரம் உளவார்த்தை வழிபாடு அடக்கம் – பொருந்திய
ஆசிரியரிடம் இனிய முகமனுடன் கூடிய பேச்சும் வழிபாடும் அடக்கமும் வேண்டும், காது ஆர் கருமை கண் மனையாள் தனக்கோ சயனகாலத்தில் நய பாடணம் – காது வரையில் நீண்ட கரிய கண்களையுடைய
மனையாளிடமோ படுக்கையில் இனிய பேச்சு வேண்டும். வரும் கற்றபெரியோர் முதியர் ஆதுலர்க்கு எலாம் கருணை சேர் அருள் விதானம் –
நாடி வருகின்ற பெரியோர்கள் வயது முதிர்ந்தவர்களும் வறியோர்களும் ஆகிய இவர்களிடம் மிகுதியும் இரக்கமும் பெருங்கொடையும் வேண்டும்,
நீதிபெறும் மன்னவரிடத்து அதிக பய விநயம் – அறநெறி வழுவா
அரசரிடம் மிகுந்த அச்சமும் வணக்கமும் வேண்டும், நெறியுடைய பேர்க்கு இங்கிதம் – நன்னெறி செல்வோரிடம் இனியன செய்தல் வேண்டும், நேயம்உள தமர் தமக்கு அகம் மகிழ்வுடன் பரிவு – நட்புடைய உறவினரிடம் உளங்கனிந்த அன்பு வேண்டும், நேரலரிடத்தில் வயிரம் – பகைவரிடம் மாறாத சினம் வேண்டும், ஆதி மனு நூல் சொலும் வழக்கம் இது ஆகும் – பழைய மனுவினால் எழுதப்பெற்ற நூல் கூறும் முறைமை இதுவாகும்.

     (வி-ரை.) மனையாளிடம் படுக்கையறையில் இனிய மொழிவேண்டும்
என்பதனால் மற்ற வேளையிற் கூடாதென்பது கருத்தன்று. ‘காதல் இருவர்
கருத்து ஒருமித்து ஆதரவுபட்டதே இன்பம்’ ஆகையால், முற்றிய இன்பம்
அடைவதற்கு மனைவியின் மகிழ்ச்சியும் வேண்டும் என ‘சயன காலத்தில்
நயபா டணம்’ என்றார். பாடணம் – (வட) பேச்சு; (பாஷணம் என்பதன்
தற்பவம்). பகைவர் மொழியால் ஏமாந்துபோதல் கூடாதென்பதற்கு இவ்வாறு கூறினார்.‘தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்’
என்றார் வள்ளுவர்.

Xxxx

My commentary

பகைவரிடம் மாறாத சினம் வேண்டும்

மனு நீதி நூலை கம்பன் முதல் அம்பலவாணர் வரை அனைவரும் பாராட்டுகின்றனர். ஏனெனில் அவர் ஹமுராபிக்கும் முந்தியவர் ; அவரைவிடக் கடுமையானவர். அதனால்தான் மனு நீந்திச் சோழன் தன் மகனையே தேர்க்காலில் பலியிட்டு இறவாத புகழ் பெற்றான் ; நமக்குத் தெரிந்து மனு நீதியைப் பின்பற்றியவர் அவர் ஒருவர்தான்! அம்பலவாணர் பல நல்ல குணங்களை அடுக்கி, இவையெல்லாம் மனு சொன்னது என்கிறார். உண்மைதான்; மனு ஸ்லோகங்களைப் படித்தோருக்கு அது தெரியும்

மண்வெட்டி அல்லது கோடரியால் மண்ணைத் தோண்டுபவனுக்கு தண்ணீர்- ஊற்று நீர்– கிடைப்பது போல , ஆசிரியரிடத்தில் பணிவாக இருந்து கல்வி கற்பவனுக்கு அறிவு ஊற்றுப் பெருக்கெடுக்கும் – மனு நீதி 2-218

வள்ளுவனும் இதையே சொன்னான் –

தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் 

கற்றனைத்தூறும் அறிவு — குறள் 396

XXXX

பயிர்களைக் காப்பதற்காக களைகளைப் பிடுங்கி எறிவது போல அரசனும் எதிரிகளை அழித்து தன் குடிமக்களைக் காக்கவேண்டும் — மனு நீதி 7-110.

வள்ளுவனும்  மரண தண்டனையை ஆதரிப்பவனே ! அவன் சொல்லுவான்

கொலையிற் கொடியாரை வேந்து  ஒறுத்தல்  பைங்கூழ்

களை கட்டதனோடு நேர் – குறள் 550

XXXX

அம்மா அப்பாவுக்கு சலாம் போடு

உலகில் வேறு எந்த நாட்டு சிலபஸிலும் இல்லாத கல்வி இந்து மத ஸ்கூல்களில் மட்டுமே உண்டு .

வகுப்பில் நுழைந்தவுடன் ஆசிரியருக்கு முன்னால் நின்று கொண்டு

குருர் ப்ரம்மா குருர் விஷ்ணுஹு 

குருர்  தேவோ மஹேஸ்வரஹ

குரு சாட்சாத் பரப்ரம்ம

தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ.– என்ற ஸ்லோகத்தைச் சொல்லவேண்டும் .

பொருள்:

ஆசிரியரே பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரர்  ஆவார்கள். பெரிய கடவுளுக்குச் சமமான அந்த ஆசிரியரை நான் அடிபணிந்து வணங்குகிறேன் .

இதைச் சொன்னவுடன் அவர்களை உட்காரும்படி சொல்லிவிட்டு அவர் பாடம் சொல்லிக்கொடுப்பார் .

மாத்ரு தேவோ பவ; பித்ரு தேவோ பவ; ஆசார்ய தேவோ பவ; அதிதி தேவோ பவ;—தைத்திரீய உபநிஷத்.

அன்னையே தெய்வம் , அச்சனே தெய்வம், ஆசிரியரே தெய்வம், விருந்தாளியே தெய்வம்.

உலகில் இப்படிப்பட்ட பாடத்தை — பிஞ்சு மனஸில் –பசு மரத்தாணி போல பதிக்கும் – பாட திட்டம் உலகில் எங்கும் இல்லை. அதை அம்பலவாணரும் நமக்கு நினைவு படுத்துகிறார்.

xxxx

நல்ல மனைவியின் ஆறு லட்சணங்கள்

1.தாயைப் போல அன்பும்

2.வேலைக்காரி போல தொண்டும்

3.திருமகளைப் போல அழகும்

4.பூமாதேவியைப் போல பொறுமையும்

5.அழகிய கொங்கையுடைய வேசி போல இன்பமும்

6.அமைச்சரைப் போல அறிவுரையும்

உடையவளே பெண் என்று பெயர் உடையவள்.

(மற்றதெல்லாம் பெண் உருவில் இறைவன் படைத்த பேய்கள் என்பது சொல்லாமலே விளங்கும்; அதாவது சூர்ப்பநகை, தாடகை, கைகேயி, பூதகி — எல்லாம் ஒன்று சேர்ந்த கட்டழகி!!)

அன்னை தயையும் அடியாள்    பணியுமலர்ப்

பொன்னி   னழகுங் புவிப்பொறையும் — வன்னமுலை

வேசி துயிலும் விறன்மந்     திரிமதியும்

பேசி லிவையுடையாள் பெண்

–நீதி வெண்பா (எழுதியவர் பெயர் இல்லை)

xxxx

விவேக சிந்தாமணிப் பாடல்வரிகளை ஒப்பிடலாம்

நன்மானம் வைத்தெந்த நாளுமவர் தங்களுக்கு நன்மை செய்வோர்
மன்மானி யடைந்தோரைக் காக்கின்ற வள்ளலென வழுத்த லாமே. (96

மதன லீலையில் மங்கையர் வையினும்
இதமுறச் செவிக் கின்பம் விளையுமே. (46)

அறிவுளோர் தமக்கு நாளு மரசருந் தொழுது வாழ்வார்
நிறையொடு புவியிலுள்ளோர் நேசமாய் வணக்கஞ் செய்வார்–64

நிலமதிற் குணவான் தோன்றி னீள்குடித் தனரும் வாழ்வார்
தலமெலாம் வாசந் தோன்றும் சந்தன மரத்திற் கொப்பாம்

Xxxx

பெண்களின் – குறிப்பாக மனைவியின்– இனிய சொற்கள் பற்றி பாரதியும் பாடுகிறார்:-

“வில்லினை யொத்த புருவம் வளைத்தனை

வேலவா! — அங்கொர்

வெற்பு நொறுங்கிப் பொடிப் பொடி

யானது வேலவா!

சொல்லினைத் தேனிற் குழைத்துரைப்பாள் சிறு

வள்ளியைக் — கண்டு

சொக்கி மரமென நின்றனை தென்மலைக்

காட்டிலே

xxxx

1.”பூட்டை திறப்பது கையாலே-நல்ல 
மனம் திறப்பது மதியாலே”
பாட்டை திறப்பது பண்ணாலே –இன்ப
வீட்டைத்  திறப்பது பெண்ணாலே. 

Xxx

காணி நிலம் வேண்டும்

காணி நிலம் வேண்டும்-பராசக்தி
காணி நிலம் வேண்டும்

…………………………………….

………………………………………….
பாட்டுக் கலந்திடவே-அங்கேயொரு
பத்தினிப் பெண் வேணும்;-எங்கள்
கூட்டுக் களியினிலே-கவிதைகள்
கொண்டுதர வேணும்;-அந்தக்
xxxx

சீதாபிராட்டி பேசிய இனிய சொற்களை கம்பன் வருணிக்கிறான் :-

அளவு இல கார் எனும் அப்பெரும்பருவம் வந்தணைந்தால்

தளர்வர் என்பது தவம் புரிவோர் கட்கும் தகுமால்

கிளவி தேனினும் அமிழ்தினும் குழைத்தவள் கிளைத்தோள்

வளவி உண்டவன் வருந்தும் என்றால் அது வருத்தோ

—–கம்பன் பாடல், கிட்கிந்தாக் காண்டம்,கார்காலப் படலம்

பொருள்:–

ஓர் அளவில்லாத சிறப்புடைய கார்காலம் வந்து விட்டால், முற்றும் துறந்த முனிவர்களும் மனம் தளர்ந்து போவார்கள். ஆகவே தேன்அமிழ்தம் ஆகிய இரண்டிலும் தோய்த்து எடுத்தது போன்ற இனிமையான சொற்களைப் பேசும் சீதையின் தோள்களைத் தழுவிய இராமனுக்கு, கார்காலம் துன்பம் தந்தது என்றால் அது துன்பம் என்று கொள்ளத் தக்கதோ?

xxx

அபிராமி பட்டரும் பாடுகிறார்:–

கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்

கபடு வாராத நட்பும்

கன்றாத வளமையும் குன்றாத இளமையும்

கழுபிணியிலாத உடலும்

சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்

தவறாத சந்தானமும்

தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்

தடைகள் வாராத கொடையும்

தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு

துன்பமில்லாத வாழ்வும்

துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய

தொண்டரொடு கூட்டு கண்டாய்

அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே

ஆதிகடவூரின் வாழ்வே!

அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி

அருள்வாமி! அபிராமியே!

Xxx

இரக்கமும் கொடையும்

ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்

மேவார் இலாஅக் கடை –குறள் 1059

பொருள் வழங்குவோருக்கு புகழ் — வள்ளல் —என்ற பெயர் எப்படி உண்டாகிறது ? பிச்சை எடுப்போருக்கு இரக்கப்பட்டு அள்ளிக்கொடுப்பதால்தானே .

இதை இன்னும் தெளிவாகச் சொல்கிறது அறநெறிச்சாரம் ,

பரப்புநீர் வையத்துப் பல்லுயிர்கட் கெல்லாம்

இரப்பாரில் வள்ளல்களும் இல்லை – இரப்பவர்

இம்மைப் புகழும் இனிச்செல் கதிப்பனும்

தம்மைத் தலைப்படுத்த லால்” (அறநெறி.219)

— subham —

tags-  மனு நீதி நூல் , அறப்பளீசுர சதகம் , மனைவி, ஆறு லட்சணங்கள்,குருர் பிரம்மா , மாத்ரு தேவோ பவ , பாரதி 

உங்கள் உடலுக்கு உணவு எப்படி சக்தியூட்டுகிறது? -1 (Post.11,569)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,569

Date uploaded in London – 21 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

திருநெல்வேலியிலிருந்து வெளியாகும் மாத இதழ் ஹெல்த்கேர் டிசம்பர் 2022 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

How Food Powers Your Body

உணவு உங்கள் உடலுக்கு எப்படி சக்தியூட்டுகிறது? -1

ஆங்கில மூலம் : ஜேம்ஸ் சாமர்ஸ் (James Somers)

தமிழில் : ச.நாகராஜன்

விரைவான வளர்சிதை மாற்றம் (metabolism) எனக்கு இருப்பதாக எப்போதுமே சொல்லப்பட்டு வந்திருக்கிறேன். எதைச் சாப்பிட்டாலும் நான் மெலிந்தே இருக்கிறேன்.  முப்பதுகளின் நடுப்பகுதிக்கு வந்து விட்ட நிலையில், இப்போது தான் நான் கிடைமட்டமாக வளர்வதை அனுபவிக்கிறேன்.

ஒரு வாரத்தில் சில முறைகள் ‘ஸ்க்வாஷ்’ விளையாடுகிறேன். நண்பருடன் வியாழக்கிழமைகளில் ஓடுகிறேன். நாயுடன் நடை பழகுகிறேன். மற்றபடி எப்போதுமே நான் எனது கணினியுடன் தான் முழு நாளையும் கழிக்கிறேன். பிறகு படுக்கையில் உட்கார்ந்து கொள்கிறேன், தூங்கி விடுகிறேன். என்றாலும் கூட நான் மெலிந்தே தான் இருக்கிறேன். பசி வந்த நிலையில் சுலபமாக கோபம் வருகிறது. பகல் நேரங்களில், காலையில் செமத்தியான காலை உணவு, பிறகு இரண்டு ரவுண்டு மதிய உணவு ஆகியவற்றிற்குப் பின்னர் இன்னொரு முறை சாப்பிடத் தயாராகி விடுகிறேன். சில சமயம் இரவு நேரங்களில் பசி மேலிட விழித்துக் கொள்கிறேன். நான் சாப்பிட்டதெல்லாம் எங்கே தான் போகிறது?

நம்முடைய உடல்களுக்கு நிறைய கலோரி தேவைப்படுகிறது. இந்த உடல் என்னும் மெஷினை ஓட்டுவதற்கே அவற்றில் பெரும்பாலும் செலவழிக்கப்படுகிறது. உங்கள் கல்லீரல் இருப்பதைப் பற்றி குறிப்பாக நீங்கள் உணர தேவையில்லை, ஆனால் நிச்சயமாக அது இருக்கிறது, வேலை செய்கிறது. அதே போலத்தான் உங்கள் சிறு நீரகங்கள், தோல், மலக்குடல், நுரையீரல் மற்றும் எலும்புகளும் இருக்கிறது.

நம்முடைய மூளைகள் தான் பெரிய அளவு சக்தியை எடுத்துக் கொள்கின்றன; சராசரியாகப் பார்த்தால் உடல் எடையில் ஐம்பதில் ஒரு பங்கு தான் இருக்கிறது என்றாலும் கூட நாம் எடுத்துக் கொள்ளும் கலோரியில் ஐந்தில் ஒரு பங்கு மூளை எடுத்துக் கொள்கிறது.

ஒருவேளை என்னுடையது உங்களை விடத் திறன் குறைந்ததாக இருக்கலாம். எனக்கு கவலைப்படும் சுபாவமான மனம் – நான் அசை போட்டுப் பார்க்கிறேன் – இருந்த இடத்தை விட்டு அசையாமல் ஓடுவதைப் போல!

எழுதும் போது சில சமயம் சோம்பேறித்தனமாக இருப்பதை உணர்கிறேன். ஒரு பாராவை என் மனதில் சிந்தனை செய்த பின், இப்படிச் செய்ததற்கு எனக்கு காபி வேண்டும் போல இருப்பதாக நானே ஊகம் செய்து கொள்கிறேன். கடைசியாக ஒரு சேண்ட்விச் இன்னும் சரியானபடி இருக்கும் என்பதைக் கண்டுபிடித்து விட்டேன். சிந்திப்பதானது எனது கலோரிகளை குறைத்து விட்டதே, ‘தீயில் இன்னொரு கட்டையைப்’ போட வேண்டியது தான்!

தீ என்பது வளர்சிதை மாற்றத்திற்கான ஒரு உவமை மட்டுமல்ல! 18ஆம் நூற்றாண்டில் பிரான்ஸை சேர்ந்த இரசாயன இயல் நிபுணரான ஆண்டாயின் லாரண்ட் டீ லாவோசியர் (Antoine-Laurent de Lavoisier) ஒரு கூரறிவு உடைய தொடர் சோதனையை மேற்கொண்டு, நமது வாழ்க்கை ஆதாரமே தீ தான் என்பதை நிரூபிக்க அதை நடத்தினார்.  

முதலில் காற்று எதனால் ஏற்பட்டிருக்கிறது என்பதை அவர் கண்டார். பிறகு துல்லியமான அளவுகளைக் கொண்டு காற்றிலிருந்து தீயே ஆக்ஸிஜனைப் பிரித்து துருவாகப் படிய வைக்கிறது என்பதைக் காட்டினார்.

பின்னர் ஒரு சிறிய கம்பார்ட்மென்டைச் சுற்றி  – சிறிய பிரிவைச் சுற்றி – ஐஸ் கட்டிகளை வைத்து அந்தப் பிரிவுக்குள் ஒரு எரியும் ஜுவாலையையோ அல்லது ஒரு சிறு மிருகத்தையோ வைக்கும்படியான ஒரு சாதனத்தை உருவாக்கினார்.

ஐஸ் எவ்வளவு உருகுகிறது என்ற அளவை வைத்து ஜூவாலையால் எவ்வளவு சக்தி அந்த மிருகத்தால் எரிக்கப்பட்டிருக்கிறது என்பதை அவர் தொடர்பு படுத்திக் காட்டினார்.

அவர் ஒரு ரெஸ்பிரோமீட்டரைக் கூட உருவாக்கினார். ஒரு மனிதன் வெவ்வேறு காரியங்களைச் செய்யும் போது துல்லியமாக எவ்வளவு ஆக்ஸிஜனை எடுத்துக் கொள்கிறான் என்பதைக் காண டியூப்கள் மற்றும் கேஜ்கள் (tubes and gauges) ஆகியவற்றைக் கொண்டு செய்யப்பட்டது இந்த சாதனம்.

ஒரு எரியும் விளக்கு அல்லது மெழுகுவர்த்தியின் செயல்பாடு போலவே, கார்பன் மற்றும் ஆக்ஸிஜனை மிக மெதுவாக எரிய வைப்பதே சுவாசிப்பது என்னும் செயல் என்ற முடிவுக்கு அவர் வந்தார்.

ஜூவாலைகளும் உயிர் வாழ் இனங்களும் ஆற்றல் மற்றும் வாயுக்களை ‘எரியவைக்கும் எதிர்வினை’ (combustion reaction) என்று இன்று நம்மால் அறியப்படுவது போல பரிமாற்றம் செய்து கொள்ளும் ஒன்றே தான்  என்றார் அவர்.

தீயில் இந்த எதிர்வினை வேகமாக கட்டுப்பாடின்றி இருக்கிறது; பிளவுகளாக எரிபொருளிலிருந்து ஆற்றல் உதறி விடப்படுகிறது. அநேகமாக அனைத்துமே ஒளியாகவும் வெப்பமாகவும் உடனடியாக விடுவிக்கப்படுகிறது.

ஆனால் வாழ்க்கை என்பது இன்னும் அதிக முறையான ஒன்றாக அமைந்திருக்கிறது. உயிரணுக்கள் அவற்றின் எரிபொருளிலிருந்து ஆற்றலை கண்கவரும் வண்ணம் எடுத்துக் கொள்கிறது, ஒவ்வொரு கடைசித் துளியையும் கூட அவற்றினுடைய மிகச் சிறிய நோக்கங்களுக்காக அவை எடுத்துக் கொள்கின்றன. சொல்லப்போனால் எதுவுமே வீணாவதில்லை.

–    சுவாரசியமான நீண்ட கட்டுரை 

——தொடரும்

நூல் பல கல் – ஔவையார் ஏன் சொன்னார்? என் புஸ்தகங்கள் (Post No.11,568)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,568

Date uploaded in London – 20 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

எதிர்காலத்தில் லண்டன் சுவாமிநாதன் போலப் பலரும் “இறவாத புது நூல்கள் ” பல இயற்றுவார்கள் என்பது ஔவையார்ருக்குத் தெரிந்திருக்கிறது. ஆகையால் “நூல் பல கல்” என்று ஆத்தி சூடியில் விளம்பினார் . 

இதோ என்னுடைய 87 நூல்களில், இதோ சில தமிழ் நூல்கள்.

வாங்கிப் படியுங்கள்; எல்லா எழுத்தாளர்களையும் ஆதரியுங்கள் .

XXXX

BOOK 50

ராதே உனக்கு கோபம் ஆகாதடி

(கட்டுரைத் தொகுப்பு)

பொருளடக்கம்

1.ராதே உனக்கு கோபம் ஆகாதடி! அதர்வண வேதம் முதல் பாரதி வரை!!

2.அற்புத உவமை- சேர்ந்தாரைக் கொல்லி: அக்னி பகவான்!

3.ராமரின் வில் பெரிதா? சீதையின் சொல் பெரிதா?

4.பாரதியும் கம்பனும்: சொல்லினைத் தேனிற் குழைத்துரைப்பார்கள்

5.ஏரிக்கடியில் அரண்மனை: காளிதாசன், வால்மீகி தரும் அதிசய தகவல்

 6.மூர்த்தி சிறிது, கீர்த்தி பெரிது!

7.என்ன பரிசு கொடுக்கலாம்?

8.பாண்டிய மன்னனின் அளவற்ற பக்தி!

9.கவிதையில் இலக்கண அதிசயம்!

10.ஒரு சந்தேகம்- அந்தணர் என்போர் யார்?

11.கழகத்தில் சேராதே: தமிழர்களுக்கு எச்சரிக்கை!!

12.கண்ணாடி புராணம்! ‘அடுத்தது காட்டும் பளிங்கு போல’

13.காசிக்குப் போயும் கருமம் தொலையவில்லை

14.கொம்புள்ள மாட்டுக்கு 5 முழம் போதும், தீயோருக்கு……………

15.தமிழ்நாட்டின் எல்லை ‘திருப்பதி’தான்!

16.நால்வகைப் படைகள்: மகாபாரதம்- தமிழ் இலக்கிய ஒற்றுமை!!

17.பஞ்சபூதங்களைக் கண்டுபிடித்தது யார்?

18.பத்தாம் நம்பர்! மாணிக்க வாசகருக்குப் பிடித்த எண் 10! ஏன்?

19.பயப்பட வேண்டும்: வள்ளுவர் அறிவுரை!

20.பாட்டன்,பூட்டன்,ஓட்டன் = பாட்டி, பூட்டி, ஓட்டி: தேவாரம் தரும் அதிசய தகவல்

21.தீபாவளி பற்றி நாம் அறியாத விஷயங்கள்

22.பெரியோர்கள் மரணம் பற்றிய உண்மைகள்

23.மனிதர்களைச் சுற்றி ஒளிவட்டம் இருப்பது உண்மையே!

24.ஏகாதசி கதை, ருக்மாங்கதன் கதை ;

பகல் பத்து – இராப்பத்து

25.கல்வி பற்றி இந்துக்களின் அபூர்வ கண்டுபிடிப்பு

26.குமரியில் புகழ்மிகு சிலைகள்

27.கெட்டவன் அருகில் நல்லவன் வசிப்பது முடியாது!

28.சங்கீத ரகசியம்: இளமையில் கல்

29.சம்ஸ்க்ருதம் பற்றிய இரண்டு அரிய செய்திகள்!

30.உலகத்தை உண்மை தாங்குகிறது! சர்வம் சத்யே ப்ரதிஷ்டிதம்

31.சோம பானம் பருகுவோம் வாரீர்!

32.மூன்று வகையான வெற்றிகள்

33.மேல் ஜாதி, கீழ் ஜாதி பற்றி நாலு பேர் சொன்னது!

34.தொல்காப்பியத்தில் எண்.9 ;ஒன்பது கிரேக்க தேவதைகள்

35.நாட்டின் பெயர் பாரதம் என்று எப்படி வந்தது? புதிய விளக்கம்

36.பத்து சந்யாசிகள் பிரிவு ;சீக்கிய மதத்தின் பத்து குருமார்கள்;

ரிக் வேதத்தில் பத்து ராஜாக்கள்

37.பாவங்களும் அஜீரணமும்: மஹாபாரதத்தில்

விசித்திர உவமை; பஞ்ச மாபாதகம்

XXXXX

பரத நாட்டியக் கதைகளும்

பழமொழிக் கதைகளும் 

பொருளடக்கம்

1.நாட்டிய நாடகம் பிறந்த சுவையான கதை

2.பரதநாட்டியம் பூமிக்கு வந்த கதை !

3.ஆனந்த ராமாயணத்தில் ஒரு புதுக்கதை

4.‘டன்’வந்து ‘டிக்’கொண்டு போய்ட்டான்

5.சுக்குமி, ளகுதி ,ப்பிலி கதை!

6.மாப்பிள்ளை நாயக்கர் தட்டை அறுத்தது போல – ஒரு பழமொழிக் கதை

7.மனைவி கர்ப்பிணி, கணவன் பிரம்மச்சாரி!

ஒரு சுவையான கதை

8.துளசியின் மகிமையை விளக்கிய ருக்மணி!

9.கஷ்டம் வந்தால் கவிதை பிறக்கும்: பால முரளி கிருஷ்ணா அனுபவம்

10.மெதுவாக ருசித்து சாப்பிடுங்கள்: பால முரளி கிருஷ்ணா ‘அட்வைஸ்’

11.நாரதா கலகப் ப்ரியா! பாரிஜாத மரத்தின் கதை

12.தேவர் கோ அறியாத தேவ தேவன்’ யார்? திருவாசகக் கதை

13.கண்கள் இருந்தும் காணாதார்- திருவாசகக் கதை!

14.அன்னதான மகிமை: கைதியின் கண்ணீர்

15.குட்டிக்கதை- கழுதைப் பிரம்மச்சாரி

16.பொறுமை: மூன்று குட்டிக் கதைகள்!

17.ஒரு குட்டிக் கதை: “நுணலும் தன் வாயால் கெடும்”

18.உலகமஹா கவிஞன் பற்றி ஒரு சுவையான கதை!  

19.நடிகைக்குக் கிடைத்த அற்புதப் பரிசு!

20.கணவனே கண் கண்ட தெய்வம்!!!

21.செத்துப் போன நடிகர் படம்!!

22.பவிஷ்ய புராணத்தில் சுவையான யமன் கதை!

23.பெண்ணின் கண்களில் தீப்பொறி! வள்ளுவன் தோற்றான்!

24.ஆண்களின் புகழ்ச்சிக்கு பெண்கள் அடிமை!

25.டேய்! போண்டா மூக்கு!

26.மரண தேவனுடன் சுல்தான் வாக்குவாதம்

27.தத்துவ ஞானியும் மரணமும்

28.செத்துப் பிழைத்தார் மார்க் ட்வைன்!

29.பதினான்கு கோடிக்கு மேல் ஒரு பைஸா கூட வேண்டாம்!

30.காதலியை பிக்குணியாக மாற்றினார் புத்தர்

31.பழ மரமும் ஆறு வர்ண மனிதர்களும் -சமண மதக் கதை

32.யானை விரட்டிய கர்வம் பிடித்த கவிஞர் மனம் மாறிய கதை

33.பேராசை பெரு நஷ்டம்-பழமொழிக் கதை

34.சுவத்துக் கீரையை வழித்துப் போடடி………

36.ஒருபேய்க் கதை! சொக்கா, சொக்கா சோறுண்டோ?

37.பழமொழிக் கதை- ‘சுழியா வருபுனல் இழியாதொழிவது’

38.அன்பின் சின்னம் யொவன்னாஸ் பிராம்ஸ்

39.இளிச்சவாயனைக் கண்டால் எருதும் மச்சான் முறை கொண்டாடும்!

40.பாட்டுக்கு பத்து ரூபாய்! ஞானியார் அடிகள் கதை

41.நாக்கு பெரிதா? மூக்கு பெரிதா?

42.ஏன் மனைவியைத் தள்ளி விட்டாய்?

43.ஞாபக மறதிப் பேராசிரியர்கள்!

44.கறார் பேர்வழி! கணக்கான பேர்வழி!

45.புத்தி கூர்மை: பலே! பலே! ரபலே!!!

46.மேலும் ஒரு தண்ணீர் அதிசயம்: சுவையான சமண மத சம்பவம்

47.ஆத்திரக் காரனுக்கு புத்தி மட்டு! 

48.கீரியைக் கொன்ற அவசரக் கொடுக்கு

49.ஒரு நல்ல கதை வாளும் நாளும் ஒன்று !

50.கடவுளுக்கு ஞாபக மறதி உண்டு’- தாமஸ் ஆல்வா எடிசன்

51. மாதா கோவில் (Church ) தமாஷ்கள்

***************************

வரலாற்று விநோதங்கள்

1.உலகம் முழுதும் பாம்பு வழிபாடு!

பொருளடக்கம்

1.கொலைகார மஹா ராணிகள்- சாணக்கியன் திடுக்கிடும் தகவல்- PART 1

2.கொலைகார மஹா ராணிகள்- சாணக்கியன் திடுக்கிடும் தகவல்- PART 2

3. கிரேக்க, இதாலிய நாடுகளில் பாம்பு வழிபாடு

4.கருவுயிர்த்தாள் குறத்தி; காயம் தின்றான் குறவன்

5.சொல்லாமல் சந்யாசி ஆனால் தண்டணை! சாணக்கிய நீதி

6.திருக்குறளுக்கு ‘முப்பால்’ என்று பெயரிட்டது ஏன்?

7.டாக்டர், நர்ஸ் பெயர்கள் சொல்லும் அபூர்வக் கல்வெட்டுகள்

8.நாயக்கர் ஆட்சியில் சம்ஸ்கிருத மறுமலர்ச்சி!

 9.மகளுக்கு அக்பர் பாதுஷா கற்பித்த ‘செக்ஸ்’ பாடம்!

10. அலெக்ஸாண்டர் ‘புராண’மும், ஜொராஸ்டர் அதிசயமும்

11. இந்து அரசர்களின் பட்டாபிஷேகக் காட்சிகள்

12. இந்து மன்னர்களின் 24 மணி நேர வேலை!

13. உலகின் முதல் சத்யாக்ரஹி

14. எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பாவில் இந்துக்கள் குடியேற்றம்!

15.உலகம் முழுதும் உமா தேவி வழிபாடு!

16.கோண்டு இன மக்களின் விநோதப் பழக்க வழக்கங்கள்

17.கோண்ட் பழங்குடி இன நட்புறவு ஒப்பந்தம்

18.கடலை விரட்டிய தமிழ் மன்னன் ; தண்ணீர் மீது நடந்த அதிசயங்கள்;  சம்பந்தர் செய்த அற்புதம்

19.திராவிடர்களின் மூட நம்பிக்கைகள்

20.திராவிடர்களின் இரத்த பலி! படித்து பயந்துவிடாதீர்கள்!!

21.திராவிடர்கள் யார்?

22.‘திராவிடர்கள்’ பிராமணர்களா ? கேள்வி -பதில்

23.தமிழன் காதுல பூ!!

24.நீலகிரி மலையில் படகர்கள்

25.விநோத பழக்க வழக்கங்கள்

26.முதல் திராவிட ராணி:கி.மு.1320; தசரதன் எழுதிய கடிதங்கள்

27.ஆரியமா? திராவிடமா? நீங்களே சொல்லுங்கள் 

XXXX

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் Ph. D அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

***** 

Please Support all Authors

To get the books

GO to Pustaka.co.in; then go to authors and type London swaminathan in the space.

Or contact admin@pustaka.co.in

Dr Rajesh Devadas Ph.D. has introduced three levels

1.     You may just read it on line

2.     You may download the book and keep it with you

3.  You may order a printed copy

www.pustaka.co.in 

Telephone in India:   9980387852  

In case of difficulties, please contact me at

swami_48@yahoo.com

Or swaminathan.santanam@gmail.com

 — subham— 

Tags- நூல் பல கல் , ஔவையார்,  என் புஸ்தகங்கள்

Tamil Hindu Encyclopaedia – 40; மயிலூர்தி Peacock Rider /Skanda in Sangam Tamil Books (Post No.11,567)

SKANDA- MURUGA FROM SOUTH EAST ASIA 

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,567

Date uploaded in London – 20 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

This is the Third part on Murugan/Skandan in Sangam Tamil Literature

We have already seen Lord Murugan alias Skanda/Kartikeya’s appearance, birth and his worship in Kurinji/ mountain landscape. Now let us look at his ornaments,  clothes , Vahanas (Mounts of Gods) as portrayed in 2000 year old Sangam Tamil literature.

Some scholars consider Sangam books like Tirumurugatruppadai (Murugu), Paripatal (Pari.) and Kalittokai (Kali) form the latest layer of Sangam period. But word occurrences and the themes in the books prove them wrong. Moreover, whatever said in these so called latest books are already in Pura Nanuru and Aka Nanuru which are considered the oldest layer.

xxx

Vaahanaas (Mounts of Gods) of Lord Muruga/Skanda

Sangam poets described him riding a fast flying Peacock (Pari.18-26) விரை மயில்மேல் ஞாயிறு.

His other vehicle was an elephant named Pinimukam பிணிமுகம்  according to Kuru 1-2; Pura.56-8; Pathitr.11-16; Pari.5-2; 17-44; 21-1; Murugu.78-82

My Vahana research shows that whatever the Vahana is that will be the flag of that God (please read my Vahana research articles). That shows that they are simply symbols and not real vehicles. That will explain how a Fat elephant God can ride a little mouse in Ganapathi iconography.

In Murugan’s case also we see the same; his Vahanas Peacock, Elephant, Cock are shown in his flags s well.

Elephant Flag, Peacock Flag- Pari19-90; Puram 56-7; Murugu 122; Pari.17-48

Rooster/ Cock flag- Murugu 38-39

SKANDA- MURUGA FROM SOUTH EAST ASIA 

What does this show?

Hindus invented these flags and Vahanas for gods which the world follows as Flags and National Emblems of 200++ countries. Even in Vedas we see birds and animal names in Rishis and Gotras. From Himalayas to Kanyakumari we see the same Flags and Vahanas for Gods and Goddesses.

English word Vehicle came from Sanskrit word Vaahana.

xxx

Garlands and Clothes

Murugan wears a Pearl Necklace and it looks like geese flying in the sky in “V “ formation (Akam.120-3; Murugu.104). This simile is copied from Kalidas who lived in First century BCE or earlier according famous Sanskrit scholars.

Hindus not only allocated certain Flags and Vehicles to Gods, but also marked some flowers to each God. From Kanyakumari to Kashmir, Vilva/Biva meant Shiva’s leaf and Tulsi meant Vishnu’s leaf.

They allocated Kadamba tree and its flowers along with Valli flowers and Kaanthal Flowers to Lord Skanda / Muruga- Puram 23-3; Murugu.10-11; Pari.21-10; 14-22; Natr.34-8; Murugu.43-44

Muruga is shown also with shining, sparkling jewellery- Kurinji 51; Kurun.1-3.

Xxx

Full Description of his Appearance

There is a beautiful picture of him in Murugu 205-214

ஆடும் முருகனின் அழகும் ஒப்பனையும்

செய்யன், சிவந்த ஆடையன், செவ்வரைச்    

செயலைத் தண் தளிர் துயல் வரும் காதினன்,    

கச்சினன், கழலினன், செச்சைக் கண்ணியன், 

குழலன், கோட்டன், குறும் பல்லியத்தன்,    

தகரன், மஞ்ஞையன், புகர் இல் சேவல்அம்   210

கொடியன், நெடியன், தொடி அணி தோளன்  

நரம்பு ஆர்த்தன்ன இன் குரல் தொகுதியொடு,

குறும் பொறிக் கொண்ட நறுந் தண் சாயல்  

மருங்கில் கட்டிய நிலன் நேர்பு துகிலினன்,  

முழவு உறழ் தடக் கையின் இயல ஏந்தி,                215

மென் தோள் பல் பிணை தழீஇ, தலைத்தந்து,

குன்றுதோறு ஆடலும் நின்ற தன் பண்பே. அதாஅன்று, 

——திருமுருகாற்றுப்படை Tirumurugatruppadai (Murugu)


சிவந்த மேனி= RED BODY

சிவந்த ஆடை= RED CLOTHES

செயலையந்தளிர் அணிந்து ஆடும் காது= TENDER SHOOTS IN HIS EAR

இடுப்பில் கச்சு= CLOTH BELT IN THE WAIST

காலில் கழல்= FOOT ORNAMENT ANKLET/KAZAL

தலையிலே வெட்சிப்பூக் கண்ணி= VETCHI FLOWER WREATH ON HIS HEAD

குழைந்திருக்கும் தலைமயிர் – கொண்டு விளங்கினான் = BEAUTIFUL CURLY/WAVY HAIR

கொம்பு முதலான பல சிறு இசைக்கருவிகளைத் தோளில் மாட்டிக்கொண்டிருந்தான் = HE HAS HORNS AND OTHER MUSICAL INSTRUMENTS HUNG FROM HIS SHOULDERS

சேவல் கொடியைக் கையில் வைத்திருந்தான் = HOLDING ROOSTER FLAG IN HIS HAND (ALSO FLAGS O FRAM AND PEACOCK)

உயர்ந்த உருவம்= TALL FIGURE

தொடி அணிந்த தோள்= ON SHOULDERS HE HAS THODI/BRACELET  JEWEL

யாழ் போன்ற குரலால் பலரும் பாடும் பாட்டைக் கேட்டுக்கொண்டு ஆடினான் = HE DANCED LISTENING TO LYRE VOICED PEOPLE

உடம்பெல்லாம் புள்ளி போட்டுக் கொண்டிருக்கும் மேனி- HE HAS PAINTED DOTS ON HIS BODY

(

குதிபுரள இடுப்பில் கட்டிய ஆடை=THE WAITST CLOTH WAS HANGIG DOWN UPTO HIS FEET

கை அடிக்கும் முழவோசைக் கேற்ப அடியெடுக்கும் நடை= HIS RHYTHMIC STEPS WERE BASED ON THE BEATS FROM THE DRUMS

இப்படிப்பட்ட நிலையில் 

வேலனோடு சேர்ந்து கொண்டும் 

மகளிரின் தோளைத் தழுவிக் கொண்டும் 

தலைமையேற்று முன்னே நின்றுகொண்டும் = ALONG WITH HIM, DAMSELS JOINED SHOULDER TO SHOULDER

குன்றிருக்கும் இடமெல்லாம் 

கூடியாடி நிற்றலும் அவன் பண்பாகும்.

அதுவுமன்றி . . .= THIS IS WHAT HAPPENING WHERVER THERE IS A HILL BECAUSE THAT IS HIS NATURE TO DANCE WITH THE HILL TRIBESMEN AND TRIBES WOMEN.

XXX

NOW A TRANSLATION FROM KAUMARAM..COM

[“(VElan) is of fair complexion; he dons a red garment, cool asOka-shoots behind ears, a girdle, anklets, and vetchi-wreaths; he plays the flute, blows the horn, and other small instruments of music; he has a ram, peacock and flag of rooster; he is tall; he wears an armlet on his forearm; he is with damsels whose sweet voice sounds like the melodious tune of stringed instrument; and he is wearing above the sash around his waist a fragrant shawl trailing upon the ground.”]

XXX

COMMANDER IN CHIEF

In Sanskrit literature Lord Skanda (Murugan) is shown as the Commander in Chief of the Divine Army (of Devas). So he is described as heroic, valorous with a stern look.

Tamils also described him as furious, ferocious and ready to spring in action- Puram 16-12; Akam 158-16;Pathi.26-11; Poruna.131 சீற்றமும் சினமும் மிக்கவன்.

God with great power and skill ஒப்பற்ற பெருந்திறல் வாய்ந்தவன்- Natri.225-1; Akam.181-6

Stands in the front in the battlefield and attain fame – போரிலே முன்னின்று புகழ்பெறுபவன் Akam 1-3; Puram.14-19; Malaipadu.493.

Always victorious – விறல் வெஞ்செய் Puram 22-29; 120-21

These epithets were used for heroic kings and youths as well.

To be continued……………………………………….

Tags. Murugu, Peacock rider, Skanda, Pinimukam elephant, Red dress, fair complexion

மாதா, பிதா, குரு, தெய்வத்துக்கு நிகரானவர் யார் – அறப்பளீசுர சதகம் புது விளக்கம் (Post No.11,566)

UNION MINISTER SMRITI IRANI WITH HER FAMILY

 WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,566

Date uploaded in London – 20 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

28. இவர் இன்ன முறையர்: அறப்பளீசுர சதகம்

தன்னால் முடிக்கவொண் ணாதகா ரியம்வந்து

     தான்முடிப் போன்த மையன்ஆம்;

  தன்தலைக் கிடர்வந்த போதுமீட்டு தவுவோன்

     தாய்தந்தை யென்னல் ஆகும்;

ஒன்னார் செயும்கொடுமை யால்மெலிவு வந்தபோ

     துதவுவோன் இட்ட தெய்வம்;

  உத்திபுத் திகள்சொல்லி மேல்வரும் காரியம்

     உரைப்பவன் குருஎன் னல்ஆம்;

எந்நாளும் வரும்நன்மை தீமைதன தென்னவே

     எண்ணிவரு வோன்பந் துஆம்;

  இருதயம் அறிந்துதன் சொற்படி நடக்குமவன்

     எவன் எனினும் அவனே சுதன்

அந்நார மும்பணியும் எந்நாளு மேபுனையும்

     அண்ணலே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) அம் நாரமும் பணியும் எந்நாளுமே புனையும் அண்ணலே

– அழகிய நீரையும் (கங்கையையும்) பாம்பையும் எப்போதும் அணிந்துள்ள

பெரியோனே!, அருமை …… தேவனே!,

 தன்னால் முடிக்க ஒண்ணாத

காரியம் வந்து முடிப்போன் தான் தமையன் ஆம் – தன்னாலே முற்றுவிக்க இயலாத அலுவலை வந்து முற்றுவிக்கும் ஒருவன் தனக்கு முன்பிறந்தோன் ஆவான்,

தன் தலைக்கு இடர் வந்தபோது மீட்டு உதவுவோன் தாய்

தந்தை என்னல் ஆகும் – தனக்குத் தலைபோகத்தக்க துன்பம்

உண்டானபோது அதிலிருந்து மீட்போன் அன்னையும் பிதாவும் ஆவான்,

ஒன்னார் செயும் கொடுமையால் மெலிவு வந்த போது உதவுவோன் இட்ட

தெய்வம் – பகைவர் செய்கின்ற தீமையால் நலிந்த காலத்தில்

துணையாவோன் வழிபடும் தெய்வம் ஆவான், உத்தி புத்திகள் சொல்லி மேல்வரும் காரியம் உரைப்பவன் குரு என்னலாம் – (தொழில் செய்யும்) முறைமையையும் அறிவுரையையும் ஊட்டி எதிர் காலத்தில் வரும் பயனையும் மொழிபவனை ஆசிரியன் எனலாம், வரும் நன்மை தீமை

எந்நாளும் தனது என்ன எண்ணி வருவோன் பந்து ஆம் – வரக்கூடிய

நன்மை தீமைகளை எப்போதும் தனக்கு வந்தவைகளாக நினைத்துத் (தன்னுடன் நட்புப்பூண்டு) வருவோன் உறவினன் ஆவான், இருதயம் அறிந்து தன் சொற்படி நடக்கும் அவன் எவன் எனினும் அவனே சுதன் – மனமறிந்து தன்மொழி தவறாது நடக்கின்றவன் எவனாயினும் அவனே மகன் ஆவான்.

Xxx

KRISHNA AND BALARAMA

ஒப்பிடுக —

சம்ஸ்க்ருதத்தில் 5 தந்தையர், 5 தாயார் , அதே போல தமிழிலும் பாடல்கள் உள்ளன .

தன்னையளித்தாள் தமையன் மனை குருவின்

பன்னியரசன் பயிறேவி- தன் மனையைப்

பெற்றாளிவரைவர் பேசி லெவருக்கும்

நற்றாய ரென்றே நவில்

பேசுமிடத்து தன்னைப் பெற்றவள், தமையனின் மனைவி, ஆசிரியரின் மனைவி, அரசனின் மனைவி, தன்னுடைய மனைவியைப் பெற்றவள் ஆகிய இந்த ஐந்து வகையினரையும் அவரவர்க்கு பெற்ற தாய்மார்கள் என்றே சொல்லு.. இவர்கள் ஐந்து பேரையும் தாய் போலக் கருத வேண்டும்..

Xxx

ஐந்து தாய்

ராஜாவின் மனைவி (மஹாராணி), குருவின் மனைவி, அண்ணனின் மனைவி, தன்னுடைய சொந்தத் தாய் மற்றும் மாமியார் ஆகிய அனைவரும் தாய்க்குச் சமமானவர்கள்:–

ராஜ பத்னீ குரோஹோ பத்னீ ப்ராத்ரு பத்னீ ததைவ ச

பத்னீ மாதா ஸ்வமாதா ச பஞ்சைதா மாதர ஸ்ம்ருதாஹா

–சுபாஷித ரத்ன பாண்டாகாரம் 160/ 326, — சாணக்ய நீதி

Xxx

தந்தைக்குச் சமமாகக் கருதப்பட வேண்டியவர்கள்:

§  பிறப்பினால் நமக்குத் தந்தையாக இருப்பவர், (2) நமக்கு மந்திர உபதேசம் செய்தவர் அல்லது குருவை அறிமுகப்படுத்தியவர், (3) நமக்கு கல்வி கற்பித்த ஆசிரியர், (4 )நமக்கு உணவு கொடுத்து உதவியவர் (5) ஆபத்திலிருந்து நம்மைக் காப்பாற்றியவர்.

ஜனிதா ச உபநீதா ச யஸ்து வித்யாம் ப்ரயச்சதி

அன்னதாதாபயத்ராதா பஞ்சைதே பிதர ஸ்ம்ருதாஹா

சுபாஷித ரத்ன பாண்டாகாரம் 165/ 542, பஞ்சதந்திரக் கதைகள், சாணக்ய நீதி

Xxxx

ஐந்து குரு

குரு யார் என்பதில் இரண்டு விதக் கருத்துகள் இரண்டு ஸ்லோகங்களில் உள்ளன:

மஹாபாரத வனபர்வம் கூறுகிறது:

அம்மா, அப்பா, அக்னி, ஆத்மா (தனக்குத் தானே குரு), ஆசிரியர் ஆகிய ஐவரும் குரு – ஆவர்.

பஞ்சைவ குரவோ ப்ரம்மன் புருஷஸ்ய புபூஷதஹ

பிதா மாதா அக்னிர் ஆத்மா ச குருஸ்ச த்விஜசத்தமஹ

—மஹா பாரத – வன பர்வ – 204-27

யோக வாசிஷ்டம் சொல்லுகிறது:

அம்மா, அப்பா, ஆசிரியர், தாய்மாமன், மாமனார் ஆகியோர் குரு ஸ்தானத்தில் இருப்பவர் ஆவர்.

குரவஹ பஞ்ச சர்வேஷாம் சதுர்னாம் ஸ்ருதிசோதிதாஹா

மாதா பிதா ததாசார்யோ மாதுல ச்வசுரஸ்ததா

–யோக வாசிஷ்டம் 1-60

Xxxx

தந்தையர் ஐவர்

பிறப்பித்தோன் வித்தைதனைப் பேணிக் கொடுத்தோன்

சிறப்பின் உபதேசம் செய்தோன் – அறப்பெரிய

பஞ்சத்தில் அன்னம் பகர்ந்தோன் பயந்தீர்த்தோன்

எஞ்சாப் பிதாக்களென எண்.

பெற்ற தந்தை, வித்தைகளைக் கற்றுக் கொடுத்தவர், உபதேசம் செய்த ஆசான், பஞ்சத்தில் உணவளித்தவர், அச்சம் போக்கியவன் ஆகிய ஐவரும் ஒருவனுக்குத் தந்தையாவர்..

Xxxx

VALLUVAR AND HIS WIFE

வள்ளுவனோ இந்த உலகத்தில் நல்ல முறையில் வாழும் அனைவரும் வானத்தில் உறையும் கடவுளுக்குச் சமம் என்று பொதுப்படையாகச் சொல்லி விடுகிறான்

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்-குறள் 50

அவன் ‘அஹம்  பிரம்மாஸ்மி , ‘தத்வம் அசி’ என்ற உபநிஷத உண்மைகளை ஆதரிப்பவன் அல்லவா?

–subham–

Tags- தந்தை, தாய், தெய்வம், குரு , புது விளக்கம், அம்பலவாணர்

31 அப்ஸரஸ்கள் (Post No.11,565)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,565

Date uploaded in London – 20 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

31 அப்ஸரஸ்கள்

ச.நாகராஜன்

31 அப்ஸரஸ்கள் 

அதர்வண வேதத்தில் (4.37.4) ஒரு முக்கிய செய்தியைப் பார்க்கிறோம்.

ஆலமரத்திலும் அரச மரத்திலும் அப்ஸரஸ்கள் வாசம் செய்கிறார்களாம்!

தைத்திரீய சம்ஹிதை (3.4.8.4) அத்தி மரத்திலும் ஜாவா அத்தி மரத்திலும் அவர்கள் இருப்பதை உணர முடியும் என்கிறது.

ஆகவே இந்த மரங்களை வழிபடுவதன்  மூலம் அப்ஸரஸ்களின் அருளால் சகல சௌபாக்யங்களையும் பெறலாம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

31 அப்ஸரஸ்களின் பெயர்களை நமது சாஸ்திரங்களில் காண முடிகிறது.

1) அந்தரா

2) க்ஷரவத்யா

3) ப்ரியமுக்யா

4) சுரோத்தமா

5) மிஸ்ரகேஷி

6) சாஷீ

7) பர்ணினி

8) அலம்புஷா

9) மாரீசீ

10) புத்ரிகா

11) வித்யுத்வர்ணா

12) திலோத்தமா

13) அத்ரிகா

14) லக்ஷணா

15) தேவி

16) ரம்பா

17) மனோரமா

18) சுவரா

19) சுவாஹு

20) புர்ணிதா

21) சுப்ரதிஷ்டதா

22) புண்டரீகா

23) சுகந்தா

24) சுதந்தா

25) சுரஸா

26) ஹேமா

27) சாரத்வதி

28) சுவ்ருத்தா

29) கமலா

30) சுபுஜா

31) ஹம்ஸபாதா

xxx

*

ஐந்து விஷயங்களைச் சொல்லாதே!

1) அர்த்த நாசம் – நமது பொருள் இழப்பைச் சொல்லக் கூடாது.

2) மனஸ்தாபம் – மன உளைச்சலை யாருக்கும் சொல்லக் கூடாது.

3) க்ருஹே துஸ்சரிதானி – வீட்டில் நடந்த கெட்ட நடத்தையை யாருக்கும் சொல்லக் கூடாது.

4) வஞ்சனம் – துரோகம்

5) அபமானம் – நமக்கு நேர்ந்த அவமானம்

அர்த்தநாசம் மனஸ்தாபம் க்ருஹே துஸ்சரிதானி ச |

வஞ்சனம் சாபமானம் ச மதிமான் ந ப்ரகாஷயேத் ||

சுபாஷித ரத்னாகர பாண்டாகாரம்

சுபாஷித ரத்னாகர பாண்டாகாரம் 153/28

ஒரு புத்திமானானவன் பொருள் இழப்பு, மன உளைச்சல், வீட்டில் நடந்த கெட்ட நடத்தை, துரோகம், அவமானம் ஆகிய ஐந்தையும் யாருக்கும் சொல்ல மாட்டான்.

xxx

*

ஐந்து வகை ஆனந்தம்

ஆனந்தம் ஐந்து வகைப்படும்.

1) விஷயானந்தம் – உலகியல் சம்பந்தமான ஆனந்தம்

2) யோகானந்தம் – யோகத்தினால் பெறக்கூடிய ஆனந்தம்

3) அத்வைதானந்தம் – அத்வைதத்தினால் பெறக்கூடிய ஆனந்தம்

4) விதேஹானந்தம் – தேகத்திற்கும் அப்பாற்பட்டு பெறக்கூடிய ஆனந்தம்

5) ப்ரஹ்மானந்தம் – மிக உயரியதான ப்ரம்மானந்தம்

விஷயே யோகானந்தௌ த்வாவத்வைதானந்த ஏவ ச |

விதேஹானந்தோ விக்யாதா ப்ரஹ்மானந்தஸ்ச பஞ்சமா: ||

xxxx

அதர்மம் வசிக்கும் இடங்கள் நான்கு

1) த்யூதம் – சூதாடும் இடம்

2) பானம் – கள் குடிக்கும் இடம் (டாஸ்மார்க்)

3) ஸ்த்ரியா:  – பெண்கள் ( இங்கு பெண்கள் என்பதை வழி தவறிய பெண்கள் – வேசிகள் என்று கொள்ள வேண்டும்)

4) சூனா – மிருகங்களை வெட்டும் இடம்.

இந்த நான்கு இடங்களும் அதர்மம் குடியிருக்கும் இடங்களாகும்.

அம்ப்யர்திதஸ்ததா தஸ்மை ஸ்தானானி கலயே ததௌ |

த்யூதம் பானம் ஸ்த்ரீயள் சூனா யத்ராதர்மஸ்சதுர்வித: ||

   பாகவத புராணம் 1.17.38

xxx

*

மூன்று வித சக்திகள்

ஒரு மனிதனுக்கு சக்தி மூன்று வகையில் வரும்.

1) ஞான சக்தி : அறிவினால் வரும் சக்தி

2) க்ரியா சக்தி : செயலினால் வரும் சக்தி

3) அர்த்த சக்தி : செல்வத்தினால் வரும் சக்தி

த்ரயாணாம் சக்தயஸ்திதஸ்ர: தத்வவீமி தவானத |

ஞானசக்தி: க்ரியாசக்திரர்தசக்திஸ்ததா பரா ||

  தேவி பாகவதம் III.7.25

***

Beautiful sloka on Silver Plate to Silver Tongued Srinivasa Sastri (Post No.11,564)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,564

Date uploaded in London – 19 December 2022                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

The Right Honourable Silver tongue V S Srinivasa Sastri (1869-1946) was a famous orator, teacher, legislator, politician, and freedom fighter. He was born just before Mahatma Gandhi in Valangaiman in Tamil Nadu and so Gandhi used to call him ‘My Elder Brother’. Though both had different political viewpoints on several issues, Gandhi always respected him and visited him in hospital just before Sastri’s death.

Srinivasa Sastri’s command over English language was praised by English scholars in Britain, and he was considered one of the five best English speakers in the world.

Sastri delivered thirty lectures on Valmiki Ramayana between April 1944 and November 1944 under the auspices of Samskrit Academy in the Madras Sanskrit college grounds. His weekly lectures attracted a huge crowd every Wednesday. Later his lectures were published in a book which has seen many editions until now. Those who were present in the discourses watched the occasional emotional broke down of the lecturer.

He himself said about it, “When I read the book, I read that book and nothing else; my whole mind is devoted to it. A hard hearted man like me, I read it, and, strange to say there is not a page which does not bring tears into my eyes! Any fine sentiment, any tender feeling,  any affection between brother and brother , any reunions of being that have been separated for a time, aye, any homage to friendship, to gratitude or any of those eternal abiding virtues of human character brings tears into my eyes! I stop; I cannot go on; I have to wait and wipe my eyes and then go on. Why do I do that? A hardened man of the world, Why do I do that? Why has it that effect on me? I suppose it is because deep down in my nature, going to strata which perhaps in my waking life I shall never touch,  there is a spirit of the utmost reverence and affection for those great characters”.

xxx

One would remember two great saints while reading this. Manikkavasagar, the great Saivite saint and Kulasekara Alvar, the great Vaishnavite saint. Manikkavasagar’s Tiruvasagam says that God can be reached by those who cry (for him). It is like a baby crying for its mother.

Kulasekhara was a king in Kerala. He was great Vishnu devotee. Every day he listened to Ramayana from a great orator. When Rama- Kara dushana fighting scene came in the Ramayana, the discourser was graphic in his description saying that Kara came with a big army, the Chera King, who was deeply into Ramayana, stood up and called his minister to order all his army to march forward to support Rama. He also was preparing to put on his army uniform. The wise minister called the speaker and asked him to say that Karan was defeated and got killed by Rama in a second. He also said so and then Kulasekhara ordered his army to come back.

From such stories and more from narrations in Periyapurana and Alvar Charitra (life history) we see great devotees and their emotional reactions.

Xxx

V S S Sastri’s speeches were appreciated by all the devotes of Rama. The organisers made special arrangements to take shorthand notes of his lectures and so we got them in a book form titled Lectures on The Ramayana by The Rt.Hon. V S Srinivasa Sastri (published by Madras Samskrit Academy ).

Silver Plate To Sastri

The concluding function was celebrated in traditional manner on 8-11-1944. The then President of Samskrit Academy Sri P S Sivaswami Aiyar who was in the chair, observed that by delivering these lectures on the national epic of India, the distinguished lecturer had added one more to the manifold and valuable services rendered by him to the country; the Academy and the enthusiastic audience presented the lecturer, in grateful admiration, with a shawl , an address and a silver plate inscribed with the verse:

संस्कार क्रम संपन्नाम् अद्भुताम् अविलम्बिताम् |
उच्चारयति कल्याणीम् वाचम् हृदय हर्षिणीम् || ४-३-३२

32. samskaara krama sampannaanaam = refinement, orderly, he has; adbhutam = remarkable; a vilambitam = un-delaying; uccaarayati kalyaaNiim vaacha = speaks, propitious, words; hrR^idaya harSiNiim = heart-pleasing ones.

“He has orderly refinement in speech that is remarkable and un-delaying, and he speaks propitious words that are heart-pleasing.[4-3-32]

What an appropriate verse !

This is said about Hanuman – Master of Words/language , by Sri Rama in Kishkinda Kanda of Valmiki Ramayana.

xxxx subham xxxx

Tags- Srinivasa sastri, Silver tongued, Silver plate, Ramayana lectures, Hanuman, Sloka

கள் குடித்து, தேள் கொட்டி, பேயும் பிடித்த குரங்கு பற்றி அறப்பளீசுர சதகம் (Post.11,563)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,563

Date uploaded in London – 19 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

    27. நற்பண்புக்கு இடமிலார்

ARAPPALISURA SATAKAM VERSE 27 WITH MY COMMENTARY

வெறிகொண்ட மற்கடம் பேய்கொண்டு, கள்ளுண்டு

     வெங்காஞ் சொறிப்பு தலிலே

  வீழ்ந்து, தேள்கொட்டி டச்சன்மார்க்கம் எள்ளளவும்

     மேவுமோ? மேவா துபோல்,

குறைகின்ற புத்தியாய், அதில் அற்ப சாதியாய்க்,

     கூடவே இளமை உண்டாய்க்,

  கொஞ்சமாம் அதிகார மும்கிடைத் தால்மிக்க

     குவலயந் தனில்அ வர்க்கு,

நிறைகின்ற பத்தியும் சீலமும் மேன்மையும்

     நிதானமும் பெரியோர் கள்மேல்

  நேசமும் ஈகையும் இவையெலாம் கனவிலும்

     நினைவிலும் வராது கண்டாய்;

அறைகின்ற சுருதியின் பொருளான வள்ளலே!

     அண்ணலே ! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) அறைகின்ற சுருதியின் பொருளான வள்ளலே –

புகழப்படுகின்ற மறையின் பொருளான கொடையாளியே!, அண்ணலே –

தலைவனே! அருமை………..தேவனே!,

வெறி கொண்ட மற்கடம் – வெறி பிடித்த ஒரு குரங்குபேய் கொண்டு – பேயாற் பிடிக்கப்பட்டு, கள் உண்டு – (அதன்மேற்) கள்ளையுங் குடித்து, வெம் கரஞ்சொறிப் புதரில் வீழ்ந்து – (மேலும்) கொடிய பூனைக்காஞ்சொறிப் புதரில் விழுந்து, தேள்

கொட்டிட – (அவற்றுடன்) தேளாலும் கொட்டப்பெற்றால், எள்ளளவும்

சன்மார்க்கம் மேவுமோ – (அக் குரங்குக்கு) சிறிதளவேனும் நன்னெறியிலே செல்லும் நிலை உண்டாகுமோமேவாதுபோல் – (அவ்வாறு அக் குரங்குக்கு நன்னெறி) தோன்றாததுபோல்), குறைகின்ற புத்தியாய் – சிற்றறிவுடன், அதில் அற்ப சாதியாய் – மேலும் இழிசெயலுடைய குலத்தினராய்கூடவே இளமை உண்டாய்

– அவற்றுடன் இளமைப் பருவமும் உடையவராய் (இருந்து) அவர்க்கு –

அவர்கட்கு, கொஞ்சமாம் அதிகாரமும் கிடைத்தால் – சிறிது

தலைமைப்பதவி கிடைத்தாலும், குவலயந்தனில் – உலகத்தில், நிறைகின்றபத்தியும் – நிறைந்த கடவுள் அன்பும், சீலமும் – ஒழுக்கமும்மேன்மையும்– பெருந்தன்மையும், நிதானமும் – அமைதியும், பெரியோர்கள்மேல் நேசமும் – அறிஞரிடம் நட்பும்ஈகையும் – கொடைப்பண்பும்,இவையெலாம் நினைவிலும் கனவிலும் வராது – (ஆகிய) இவைகள் யாவும் நினைவிலேயன்றிக் கனவிலும் உண்டாகா.

Xxxx

குரங்கு கள்ளும் குடித்து, பேயும் பிடித்து, தேளும் கொட்டினால் என்ன கதி ஆகும்? என்று தமிழ்ப் பழமொழி உள்ளது . அதை  அடிப்படையாக வைத்து இந்தப் பாடலை அம்பலவாணர் இயற்றியுள்ளார். அதை இளமையும் அதிகாரமும் கீழ்ப்பிறப்பும் உள்ள ஒரு மனிதனுடன் ஒப்பிடுகிறார் . நல்ல ஒப்பீடு. அத்துடன் அரிப்பை  உண்டாக்கும் ஒரு வகைச் செடியையும் சேர்த்துள்ளார் . சாதாரண மாகவே குரங்குகள் நிமிடத்துக்கு நிமிடம் மரத்துக்கு மரம் தாவும் . அத்தோடு

மேற்சொன்ன அனைத்தும் சேர்ந்தால் அனர்த்தம்தான் . இதை ஒப்பிட இதோ ஒரு பாடல்,


திரைப்படம்: மனம் ஒரு குரங்கு

இயற்றியவர்: வீ. சீதாராமன்

இசை: டி.பி. ராமச்சந்திரன்

பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு அதைத்

தாவ விட்டால் தப்பி ஓட விட்டால் நம்மைப்

பாபத்தில் ஏற்றி விடும் அது பாசத்தில் தள்ளி விடும்

மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு

அடித்தாலும் அணைத்தாலும் வழிக்கு வராது

அப்படியே விட்டுவிட்டால் முடிவும் இராது

நயத்தாலும் பயத்தாலும் அடங்கி விடாது

நமக்குள்ளே இருந்து கொண்டு நன்மை தராது

மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு

வெள்ளிப் பணம் நாடி வாலாட்டம் போடும்

கள்ளத்தனம் செய்து வெறியாட்டம் ஆடும்

கள்ளைப் பாலாக்கிக் களியாட்டம் போடும்

கடவுள் இருப்பதைக் கருதாமல் ஓடும்

மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு

கலையின் பெயராலே காமவலை வீசும்

காசு வருமென்றால் மானம் விலைபேசும்

நிலையில் நிற்காமல் கிளைதோறும் தாவும்

நிம்மதியில்லாமல் அலைபோல மோதும்

மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு அதைத்

தாவ விட்டால் தப்பி ஓட விட்டால் நம்மைப்

பாபத்தில் ஏற்றி விடும் அது பாசத்தில் தள்ளி விடும்

மனம் ஒரு குரங்கு 

Xxxx

பொல்லாத மூர்க்கர்கள் பற்றி படிக்காசுத்தம்பிரான் அழகாகப் பாடிவிட்டார் :

பொல்லாத மூர்க்கருக்கு எத்தனை தான் புத்தி போதிக்கினும்

நல்லார்க்கு உண்டான குணம் வருமோ  நடுச் சாமத்திலே

சல்லாப் புடவை குளிர்  தாங்குமோ? பெரும் சந்தையினில்

செல்லாப் பணம் செல்லுமோ? தில்லைவாழும்  சிதம்பரனே

பொருள்:

தில்லை வாழும் அம்பலவாண !

நள்ளிரவில் மெல்லிய உடையானது  வாடைக்காற்றைத் தடுக்குமா ?

பெரிய சந்தையில் செல்லாக்காசை செல்லும்படி செய்ய முடியுமா?

அறிவில்லாமல் தீய செயல்களைச் செய்யும் மூடருக்கு

எவ்வளவு புத்திமதி சொன்னாலும் நல்ல குணம் வருமா ?

வராது .அவர்கள் கள் குடித்து  , தே ளும் கொட்டி, பேயும் பிடித்து ,

அரிப்பை உண்டாக்கும் செடியில் விழுந்த கு ரங்கினைப் போலவே நடப்பர்.

XXX

 ‘அற்பருக்கு வாழ்வு வந்தால் அர்த்தராத்திரியிற் குடை

பிடிப்பர்.’ என்ற பழமொழியையும் இத்துடன் ஒப்பிடலாம்.

XXXX

தாயுமானவர் அறைகூவல்:– சேரவாரும் ஜெகத்தீரே!


காடும் கரையும் மனக்குரங்கு கால் விட்டோட அதன்பிறகு
ஓடும் தொழிலால் பயனுளதோ ஒன்றாய் பலவாய் உயிர்க்குயிராய்
ஆடும் கருணைப் பரஞ்ஜோதி அருளைப் பெறுதற்கு அன்புநிறை
தேடும் பருவம் இதுகண்டீர் சேரவாரும் ஜெகத்தீரே!

மனம் ஒரு குரங்கு. ஓயாமல் தாவிக்கொண்டே இருக்கும். அதன் பின்னால் அலைந்து ‘மனம் போன போக்கில் போய்’ நேரத்தை வீண் அடிப்பதில் என்ன பயன்? எல்லை இலாத கருணயுடைய அன்பு நிறைந்த கடவுளின் அருளைப் பெற அருமையான மனிதப் பிறவி கிடைத்திருக்கிறது. வாருங்கள் ! என்னுடன் சேருங்கள் ! நாம் எல்லோரும் சேர்ந்து பயணம் செய்வோம் என்று தாயுமானவர் கூப்பிடுகிறார்

Xxxx

READ ALSO MY OLD ARTICLES

மனம் ஒரு குரங்கு – Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ம…

·Translate this page

17 Feb 2014 — நம் எல்லோருக்கும் மனம் என்பது ஒரு புரியாப் புதிர். அதைக் கட்டுபடுத்துவது …

You visited this page on 18/12/22.

சங்கடம் – Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ச…

·Translate this page

21 May 2016 — (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com) … குரங்குகள்‘ (மனம் ஒரு குரங்கு) என்ற …

You visited this page on 18/12/22.

மனிதர்காள்! | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ம…

·Translate this page

20 Apr 2014 — மனம் ஒரு குரங்கு. ஓயாமல் தாவிக்கொண்டே இருக்கும். அதன் பின்னால் அலைந்து ‘மனம் …

You visited this page on 18/12/22.

—-SUBHAM—-

TAGS—கள், குடித்து, தேள், கொட்டி , பேய் ,குரங்கு,  அறப்பளீசுர சதகம், மனம் ஒரு குரங்கு

காலத்தைவென்றகவிஞன்கண்ணதாசன் – 8 (Post No.11,562)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,562

Date uploaded in London – 19 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

காலத்தை வென்ற கவிஞன் கண்ணதாசன் – 8

ச.நாகராஜன்

பல துறைகளில் அவர் புகுந்தாலும் தமிழே அவரை வாழ வைத்தது; அவரைக் காலத்தை வென்று நிலையாக நிலைக்க வைத்திருக்கிறது.

அவரே இதைக் கூறுகிறார்:

ஜனநா யகம்என்னும் சந்தைக்கு நான் தந்த

   சரக்குகள் விற்கவில்லை

தமிழ்நா யகம் என்னும் பெயரன்றி மற்றென்னைத்

   தழுவுவார் யாருமில்லை

இனநா யகம்சாதிப்  பணநா யகம்யாவும்

    இயல்பாக வாழுமுலகில்

இருளூடு கண்கட்டித் தருமத்தை நான்தேடி

    இதுவரை காணவில்லை

வனவாசம் போனபின் மனவாசம் அஞ்சாத

    வாசத்தைத் தேடுமனமே!

மைதான விளையாட்டுப் பொய்யென்று கவிபாடு

   வருங்காலம் உணரும்வனமே!

கண்ணதாசனின் இந்தக் கவிதை அவரது ஒப்புதல் வாக்குமூலம்.

காலம் வென்ற தமிழுடன்  தன் தமிழால் காலம் வென்று நிற்பார் கவியரசர் கண்ணதாசன்!

கலங்காதிரு மனமே என ஆரம்பித்து கண்ணே கலைமானே என்று முடித்துத் தன் கவிதைப் பூமாலையைத் தமிழ் அன்னைக்குச் சமர்ப்பித்து முடித்துக் கொண்டார் கவிஞர்!

MY LIFE IS MY MESSAGE என்று கூறினார் மகாத்மா காந்திஜி. ஆனால் கவிஞரோ என் வாழ்க்கையை யாரும் பார்க்காதீர்கள்எனது கவிதையைப் படித்து அதனைப் பின்பற்றுங்கள் என்றார்.

My poems are my messages என்பது அவர் வாக்கு!

ஒரு கவிஞன் என்பவன் யார் அவனது சக்தி என்ன என்பதைப் படம் பிடித்துக் காட்டுகிறார் குடந்தை வேலன் என்னும் அற்புதக் கவிஞர். ‘கவிதைச் சித்தன் கும்மாளம்’ என்ற அவரது கவிதை வரிகளில் சில :

கல்லொடு கல்லினைத் தட்டிக் களைத்திடுங்

கற்றறி மூடர்களே – ஒரு                                                       

 சொல்லொடு சொல்லினைத் தட்டி நெருப்பொடு                                       

சூளை கிளப்பிடுவோம்

சப்பி எறிந்திட்ட கொட்டையில் மாமரம்                                             சட்டென ஓங்குது பார் – எழில்                                                          சிப்பியில் முத்தெனச் சொல்லினில்                                              வையச் சிலிர்ப்பு கிளம்புது பார்

வேதக்குயவன் வனைந்திட்ட மட்குடம்                                                                           

வீழ்ந்தே உடைந்ததடா -யாம்                                                                                     

நாதக்குழம்பில் புனைந்திட்ட                                                                 

சொற்கடம் ஞாலம் முழங்குதடா

(சொற்கடம் என்பதை சொற்கள் + தம் எனப் பிரித்துப் படிக்க வேண்டும்)

இந்தக் கவிதைச் சித்தனின் இலக்கணத்தை வைத்துப் பார்க்கும் போது, சொற்களால் ஜாலம் செய்து ஞாலம் ஆள வந்த, வேதக் குயவன் படைத்திட்ட, கவியரசு கண்ணதாசனின் பூதவுடல் வீழ்ந்தே உடைந்தாலும் அவர் நாதக் குழம்பில் புனைந்திட்ட சொற்கள் என்றும் உலகை ஆளும் என்பதில் ஐயமுண்டோ!

புறநானூற்றுப் புலவர்களின் நெஞ்சாழமும், கம்பனின் கவித்துவமும், இளங்கோவின் இரு சொல் திறமையும், வில்லிப்புத்தூராரின் உவமைத் திறனும், பாரதியின் புதிய, எளிய தமிழின் நளின நடையையும்,  கையாண்ட கண்ணதாசன் தமிழ்த்தாய் பெற்றெடுத்த தவப்புதல்வன். காலத்தை வென்ற கவிஞன்.

உள்ளத்தில் உள்ளது கவிதை இன்ப உருவெடுப்பது கவிதை என்ற தேசிகவிநாயகம் பிள்ளையின் இலக்கணத்தை மெய்ப்பித்தவர் கவிஞர்.

உள்ளத்தில் ஒளியுண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாம் என்ற பாரதியின் வாக்கிற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் கவிஞர்.

தமிழிடமிருந்து கண்ணதாசன் பெற்றது அதிகம் என்றால் தமிழுக்குக் கண்ணதாசன் தந்தது அதை விட அதிகம் என்பது தான் சிறந்த ஒரு மதிப்பீடாக இருக்க  முடியும்.

திரைத்துறையில் பாசப் பாடல்கள், தத்துவப் பாடல்கள், அறிவுரைப் பாடல்கள், நகைச்சுவைப் பாடல்கள், நினைவுப் பாடல்கள், லட்சியப் பாடல்கள், வினா-விடை பாடல்கள், சிறுவர் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள், நடனப் பாடல்கள், பக்திப் பாடல்கள், குடிபோதைப் பாடல்கள், சடங்குப் பாடல்கள், ஆங்கிலச் சொற்கள் கலந்த பாடல்கள், ராகங்கள் கொண்ட பாடல்கள், இதிஹாஸ புராணப் பாடல்கள், தமிழின் பெருமை பற்றிய பாடல்கள், படகு, கார், குதிரை சவாரி பாடல்கள், தேச பக்திப் பாடல்கள், ஒரு சொல்லே பலமுறை வரும் பாடல்கள் போன்ற அனைத்தையும் எடுத்து ஆராய்ந்தால் அதில் கவியரசr கண்ணதாசனின் பெரும் பங்கும் அவர் தம் புலமையும் புலப்படும்.

நாள் தோறும் அவரது பாடலை கேட்கும் தோறும் அவருக்குச் சிரம் தாழ்த்தித் தமிழ் நெஞ்சங்கள் நெஞ்சார்ந்த அஞ்சலியைச் செலுத்துகின்றன!

இந்த உரையில் கண்ணதாசனின் கட்டுரைகள்நாவல்கள்கேள்வி-பதில்செப்பு மொழி பதினெட்டுஅவரது வனவாசம்,  மனவாசம்அர்த்தமுள்ள இந்துமதம் ஆகியவற்றைநேரத்தைக் கருதிச் சொல்லவில்லை. அவற்றையும் அன்பர்கள் படிக்க வேண்டும்

கண்ணதாசனை முழுமையாகப் படித்தால் மட்டும் போதாது, முழுவதுமாகப் படித்துப் புரிந்து கொள்ள வேண்டும். திறந்த மனதுடன் படிக்க வேண்டும். அப்போது தான் அவரது முழுப் பரிமாணங்களையும், அவனது “ஆழ்ந்திருக்கும் கவி உள்ளத்தையும்” காண முடியும்!

அங்கே ராமனும், கண்ணனும், தமிழும், சம்ஸ்கிருதமும், சத்தியக் கொள்கைகளும், நித்திய உண்மைகளும் அற்புதமாக நடனமாடும்.

காழ்ப்பு உணர்ச்சி, ஜாதி உணர்ச்சி, குறுகிய மொழிவெறி, அரசியல் கலந்த, அதில் தோய்ந்த தமிழ்ப் பற்று ஆகியவற்றை உதறி எறிந்தால் கண்ணதாசன் முழுமையாக இறுதி வடிவில் நம் முன் வருவார்.

பார்வை நேராக இருக்க வேண்டும்; நேரடியாக இருக்க வேண்டும்!

தமிழர்களாகிய நமக்கு மாபெரும் கடமை ஒன்று இருக்கிறது.

கண்ணதாசனின் எழுத்துக்கள் அனைத்தையும் ஓரிடத்தில் சேர்க்க வேண்டும். கவியரசு பற்றி எழுதிய ஒவ்வொரு கவிதையையும் கட்டுரையையும் நூலையும் ஓரிடத்தில் சேர்க்க வேண்டும்.

நூற்றுக் கணக்கான தலைப்புகளில் கவியரசைப் பற்றி ஆய்வுக் கட்டுரைகளை உருவாக்க வேண்டும்.

அறிவியலில் கண்ணதாசன், தத்துவத்தில் கண்ணதாசன், அகத்துறையில், புறத்தில், பக்தி இலக்கியத்தில், வடமொழி இலக்கியத்தில், சந்த வகைகளில், கவினுறு சொற்களில், தமிழ் விந்தைகளில் — என இப்படி ஒரு நீண்ட பட்டியல் உள்ளது.

இதை  முன்னெடுத்து கண்ணதாசன் கலைக்கூடமும் நான் ஓர் ஐ.ஏ.எஸ் அகாடமியும் முன் நின்று கண்ணதாசன் கலைக்களஞ்சியத்தை உருவாக்க வேண்டும்.

தமிழர்கள் தலையாய கடமையான இதற்கு உதவி புரிய முன் வர வேண்டும்.

இந்த நல் வாய்ப்பினை எனக்குத் தந்த அனைத்துத் தமிழ் நெஞ்சங்களுக்கும் என் வணக்கத்தையும் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து அமைகின்றேன்.

நன்றி வணக்கம்!

**** 

You tube link

https://www.youtube.com/watch?v=1eEeW7pYxjA சொல்வதெல்லாம் கண்ணதாசன் -பதாகை32 –

 கமெண்ட் ஸையும் பதிவு செய்யலாம்.

நாகராஜன் 

இந்த உரைக்குப் பாராட்டுகளைத் தெரிவித்த அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகுக.

***

Pustakam Hastha Lakshanam –Beauty of Hand is Enhanced by a Book (Post .11,561)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,561

Date uploaded in London – 18 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Following are my latest books in English

Book 24

Rewrite Indian History (book title)

Contents

1.Indian History: Vivekananda’s Advice!

2.Biggest Brainwash in the World!

3.Hindu Wonder – 57 Generations at One Go!

4.Amazing History in one Rig Vedic Hymn! 38 Names at one go!!

(5).160 Kings in Rig Veda!

6.More About Rig Vedic Kings : Nine Interesting Points

(7).35 Historical Records in the Rig Veda

8.Mahabharata and Ramayana Kings in the Rig Veda

9.Ancient Tamils Amazing Historical Sense

10.Amazons of India! 

11.Mankind originated in Asia!

12.Rig Vedic Kings and Their Dates

13.One Hundred Wonders of Karnataka- 1

14.One Hundred Wonders of Karnataka- 2

15.One Hundred Wonders of Karnataka- 3

16.One Hundred Wonders of Karnataka- 4

17.One Hundred Wonders of Karnataka- 5

18.How did Ancient Hindus find Submarine Mountains?

19.Oldest Historian in the World; Rig Veda Reveals-1

20.Oldest Historian in the World; Rig Veda Reveals-2

21.Oldest Historian in the World; Rig Veda Reveals-3

22.Oldest Historian in the World; Rig Veda Reveals-4

23.Oldest Historian in the World; Rig Veda Reveals-5

24.Oldest Historian in the World; Rig Veda Reveals-6

25.Four Wings of Hindu Army: Blow to Aryan- Dravidian Theory!

26.Eighteen groups of Indians!

27.Indus Valley Case: Lord Indra Acquitted

28.Mahabharat Names Vs Indus Valley Names

29.Who is Dhananjayan?

30.Hindus Migrated  to Europe 8000 Years Ago!

31.Was Stonehenge in England a Hindu Temple?

32.Aryan, Non Aryan Issue in Murder Attack in Britain!

xxxxx

BOOK 23

Tamil Hindus 2000 Years Ago!   (Book title)

(Please note the first 15 parts of Tamil Hindu Encyclopaedia were published under the title Hinduism in Sangam Tamil Literature)

Contents

1.Tamil Hindu Encyclopaedia – 16 (Manmatha – God of Love -மன்மதன், காமன்)

2.Tamil Hindu Encyclopaedia – 17 (Tamil Lovers= Rathi+ Manmatha காதல் ஓவியங்கள்)

3.Kama deva – Hindu God of Love in Tamil and Sanskrit Literature!

4. Tamil Kaaman Pandikai/Festival in Rome and Greece!

5.Tamil Hindu Encyclopaedia – 18 (Vedas & Brahmins வேதங்களும் பிராமணர்களும்)

6.Tamil Hindu Encyclopaedia – 19 ( Brahmins அந்தணர்,  பிராமணர்)

7.Tamil Hindu Encyclopaedia – 20 ( Brahmins பார்ப்பான், பார்ப்பன மகன், பார்ப்பனி) –

8.Tamil Hindu Encyclopaedia – 21 (Yaga, Yagnas, Gotras யாக, யக்ஞங்கள், கோத்ரங்கள்)

9.Tamil Hindu Encyclopaedia – 22 (தமிழ் மன்னர் செய்த யாகங்கள் Yagas by Tamil Kings)

10.Tamil Hindu Encyclopaedia 23 (Havis =ஹவிஸ், ஆவுதி; Yupa யூபம்)

11.Yupa Post in Sangam Tamil Literature and Rig Veda

12.Amazing Rig Vedic Yupa in Sangam Tamil Literature

13.Rig Vedic Hariyupia and Indus Valley Harappa

 14.Tamil Hindu Encyclopaedia :24 (Yaga Smoke,

Brahmin Murder  யாகப் புகை,  ஐயர் கொலை)

15.Tamil Hindu Encyclopaedia 25 ( Thirty Three Devas and Yama-

தேவர்கள், யமன்) in Sangam Tamil Poems

16.Importance 12 Tamil Months: Chittirai, Vaikasi Festivals and Beliefs- Part 1

17. Importance 12 Tamil Months: Aani , Aadi, Aavani  Festivals and Beliefs- Part 2

18. Importance 12 Tamil Months…. Purattaasi – Part 3

19. Importance 12 Tamil Months…. Aippasi, Kaarthikai- Part 4

20. Importance 12 Tamil Months…. Maarkazi, Thai- Part 5

21. Importance 12 Tamil Months…. Maasi, Panguni – Part 6

*****************

HOW AND WHERE YOU CAN GET THEM?

Please Support all Authors

To get the books

GO to Pustaka.co.in; then go to authors and type London swaminathan in the space.

Or contact admin@pustaka.co.in

Dr Rajesh Devadas P.Hd. has introduced three levels

1.     You may just read it on line

2.     You may download the book and keep it with you

3.  You may order a printed copy

www.pustaka.co.in 

Telephone in India:   9980387852  

In case of difficulties, please contact me at

swami_48@yahoo.com

Or swaminathan.santanam@gmail.com

 — subham—

Tags- my books pustakam, hastha lakshanam