மங்கியதோர் நிலவினிலே பாட்டைப் பலரும் காதல் பாட்டு என்றே நினைப்பர். அது ஒரு தத்துவப் பாடல். முதல் ஒரு கன்னியை மட்டும் சினிமாவில் பாடியதால் அதை எவரும் முழுதும் புரிந்து கொள்ள வாய்ப்பே இல்லாமற்போய்விட்டது. யாதும் ஊரே யாவரும் கேளிர் பாடலைப்போல இதுவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது .உண்மையில் கனவில் கண்ட அழகியிடம் — அழகு தெய்வத்திடம் — பாரதியார் 7 கேள்விகளைக் கேட்கிறார்.அவை ஏழும் ஆராயப்பட வேண்டிய கேள்விகள் . அதே போல அவைகளுக்கு அழகு தெய்வம் கொடுத்த பதில்களும் ஆராயப்பட வேண்டிய விஷயங்கள் ஆகும் . இதோ 7 கேள்விகளும் அவைகளுக்கு கிடைத்த பதில்களும் ஆங்கில மொழிபெயர்ப்புடன் :
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
டிசம்பர் 11 பாரதியார் பிறந்த நாள். சிறப்புக் கட்டுரை!
பாரதம் பற்றிய மஹாகவி பாரதியாரின் 8 மற்றும் 9வது பாடல் : ஒரு பார்வை!
ச.நாகராஜன்
முந்தைய கட்டுரைகளின் தொடர்ச்சியாக தொடர் எண் 124லிருந்து தரப்படுகிறது.
பாரத மாதா பாடல்
124) முன்னர் இலங்கையில் இருந்த அரக்கர் அழிவு பட அவர்களை முடித்த வில் யாருடையது? அது எங்கள் அன்னை பயங்கரி பாரத தேவி நல் ஆரிய ராணியின் வில்.
125) இந்திரசித்தனை இரண்டு துண்டாக ஆக்க எடுத்த வில் யாருடைய வில்? அது எங்கள் மந்திர தெய்வம் பாரத ராணியான வயிரவியின் வில்.
126) ஒன்று பரம்பொருள்; நாம் அதன் மக்கள்: உலகம் இன்பக் கேணி என்று நல்ல வேதம் வரைந்த கை பாரத நாயகியின் திருக்கை.
127) ‘இவ்வுலகம் சித்த மயம். நம் சித்தத்தில் உறுதி ஓங்கி விட்டால் துன்பம் அத்தனையையும் வெல்லலாம்’ என்று சொன்ன சொல் ஆரிய ராணியின் சொல்.
128) சகுந்தலை பெற்ற சிங்கப் பிள்ளையை தட்டி விளையாடி நன்று உகந்த பிள்ளையானவன் பாரத ராணி ஒளியுறப் பெற்ற பிள்ளையாகும்.
129) காண்டிவம் வில்லினை ஏந்தி உலகினை வென்ற கல்லொத்த தோள் யாருடைய தோள்? எம்மை ஆண்டு அருள் செய்து பெற்று வளர்ப்பவளான ஆரிய தேவியின் தோள்!
130) சாகும் பொழுது கொடையாக இரு செவி குண்டலங்களை கொடுத்த கொடைக் கை எவருடையது? சுவையான பாகு மொழியில் புலவர்கள் போற்றிடும் பாரத ராணியின் கையாகும்.
131) போர்க்களத்தில் பர ஞான மெய் உரைக்கும் கீதை புகன்றது எவருடைய வாய்? பகையைத் தீர்க்கத் திறந்தரு பேரினளாம் பாரத தேவியின் மலர் போன்ற திரு வாயாகும்.
132) ‘தந்தை இனிதுறந்தான்; அரசாட்சியும் தையலர் உறவும் இனி இந்த உலகில் விரும்ப மாட்டேன்’ என்றது எம் அன்னை செய்த உள்ளமாகும்.
133) ‘அன்பு சிவம்; உலகத்தில் உள்ள துயர் யாவையும் அன்பினால் போகும்’ என்று இங்கு முன்பு மொழிந்து உலகை ஆண்டவன் புத்தன். அவன் மொழி எங்கள் அன்னை மொழியாகும்.
134) மிதிலையே பற்றி எரிய அப்போது வேதப் பொருளை வினவுகின்ற சனகனின் மதியானது தன் மதியில் இருப்பதைக் கொண்டு நின்று முடிக்க வல்ல நம் அன்னையின் மதியாகும்.
135) தெய்வீக சாகுந்தலம் என்னும் நாடகத்தை செய்தது யாருடைய கவிதை? அயன் செய்வது அனைத்தையும் குறிப்பால் உணரும் பாரத தேவியின் அருள் கவிதையாகும்.
எங்கள் தாய் பாடல்
136) ஆதி காலத்திலிருந்து நிகழ்ந்த அனைத்தையும் உணர்ந்திடும் அனைத்துக் கலையும் அறிந்த நிபுணர்களும் கூட இவள் என்று பிறந்தவள் என்பதை உணர முடியாத படி இருக்கும் இயல்பினைக் கொண்டவள் எங்கள் தாய்!
137) யாருமே கூறுவதற்கு அரிதான வயதினை உடையவள் எங்கள் தாய். இந்த உலகில் எந்த நாளும் ஒரு கன்னிகையாக இருப்பவள் எங்கள் தாய்!
138) முப்பது கோடி முகம் கொண்டவள் என்றாலும் கூட உயிர் ஒன்றே எனக் கொண்டவள்; இவள் செப்பும் மொழிகள் பதினெட்டு; எனில் சிந்தனை ஒன்றையே கொண்டவள்.
139) நாவினில் வேதத்தைக் கொண்டவள். கையில் நலம் தரும் வாளை உடையவள்; தன்னை அண்டியவருக்கு இன்னருள் செய்பவள்; ஆயின் தீயர் என்றால் அவர்களை அழிக்கும் தோளை உடையவள் ஆவாள்.
140) அறுபது கோடி தடக்கைகள் கொண்டு அறங்களை நடத்துபவள் எங்கள் தாய். தன்னை வெல்வதற்காக போரிட வருபவரை துகள் துகளாக்கி கீழே கிடத்துவள் எங்கள் தாய்!
141) பூமியை விட அதிக பொறுமையைக் கொண்டவள் எங்கள் தாய். பெறுகின்ற புண்ணிய நெஞ்சினைக் கொண்டவள். என்றாலும் தவறு இழைப்பவர் முன் துர்க்கை அனையவளாகத் திகழ்வாள் எங்கள் தாய்!
142) கற்றைச் சடைமதி கொண்டு இருக்கும் துறவியை கை எடுத்துத் தொழுவாள் எங்கள் தாய். கையில் ஒரு சக்கரத்தைக் கொண்டு ஏழு உலகத்தையும் ஆளும் ஒருவனையும் அவள் தொழுவாள்.
143) யோகத்திலே நிகரற்றவள். உண்மையும் ஒன்றே தான் என்பதை நன்கு அறிவாள். உயர் போகத்திலும் அவள் நிறைந்தவள். எண்ண முடியாதபடி அரும் பொன் குவியலைத் தன்னுடையதாகக் கொண்டவள் அவள்.
144) நல்லறம் நாடி அதன் படி நடக்கும் மன்னரை வாழ்த்தி அவர்களுக்கு நலம் புரிவாள். அப்படி அல்லவர் எனில் அவரை விழுங்கி,, பின்னர் ஆனந்தக் கூத்தாடுவாள்.
145) வெண்மை நிறத்தைக் கொண்ட வளர்கின்ற இமயாசலன் தந்த விறன் மகள் எங்கள் தாய். ஒருவேளை இமயத் திண்மை குறைந்தாலும் கூட ஒருபோதும் தான் மறைய மாட்டாள். நித்தமும் சீரைக் கொண்டிருப்பாள் எங்கள் தாய்!
மஹா வீரன் யார் , மஹா தியாகி யார், மஹா வள்ளல் யார், மஹா நண் பன் யார் என்று புதிய விளக்கம் தருகிறார் அம்பலவாணர்.
முதல் வரிசையில் எந்த ‘சீட்’?
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹ்யூஜஸ் என்பவரை நியூயார்க் நகர பத்திரிகையாளர்கள் ஒரு விருந்துக்கு அழைத்திருந்தனர். அதே விருந்துக்கு பல வெளிநாட்டு ராஜ தந்திரிகளும் அழைக்கப்பட்டி ருந்தனர். மந்திரியை எந்த இடத்தில் உட்கார வைப்பது என்பது அறியாது அவர்கள் திகைத்தனர். இதற்கு நல்ல தீர்வு, அவரிடமே கேட்பதுதான் என்று எண்ணி, தயங்கித் தயங்கி, அவரிடமே போய்க் கேட்டும் விட்டனர். இதற்குக் காரணம் அப்போதுதான் பத்திரிக்கைகளில், இடம் பற்றிய சர்ச்சை, வரிசை அறிந்து ஒழுகாமை என்பதெல்லாம் காரசாரமாக விவாதிக்கப்பட்டன.
சங்க காலப் புலவர்களில் பலர், மன்னர்கள் தங்களுக்கு முதல் மரியாதை செய்ய வில்லை என்று கோபித்துக்கொண்டு பாடிய பாடல்கள் புற நானூற்றில் உள்ளன. வரிசை அறிந்து ஒழுகல் என்பது அவ்வளவு முக்கியம் வாய்ந்தது.
“மாண்புமிகு அமைச்சரே! உங்களுக்கு முதல் வரிசையில் இடம் போடுகிறோம். எந்த இடத்தில், யாருக்கு அருகில் உங்களுக்கு இடம்போடுவதை நீங்கள் விரும்புகிறீர்கள்? என்று பத்திரிக்கையாளர்கள், மரியாதை கலந்த தொனியில், கேட்டனர்.
அவர் சிரித்துக் கொண்டே சொன்னார்:
“நான் முதலில் இருக்க விரும்புவது ஒரே இடத்தில்தான்; தீவிபத்து ஏற்பாட்டால், முதலில் நிற்க (வெளியே ஓடுவதற்காக) விரும்புவது நான்தான். மற்ற இடங்களில் எங்கே இடமிருந்தாலும் பரவாயில்லை.”
வரிசை அறிதல் என்பதன் முக்கியத்துவத்தையும் புலவர் பாடுகிறார். கிராமப்புற கோவில்களில் யாருக்கு முதல் மரியாதை என்பதில் நடக்கும் மோதல்கள் பற்றி நாம் அடிக்கடி நாளேடுகளில் படிக்கிறோம். சங்க காலத்தில் மஹாசித்ரன் / பெருஞ்சித்திரனார் என்று ஒரு புலவர் இருந்தார். அவர் தன்னை மதிக்காத வள்ளலை ஏசிவிட்டுப் பாரிஸில் பெறாமலே சென்றார். உரிய மரியாதை கொடுக்காவிடில் தமிழர்கள் சீறி ப் பாய்வார்கள்..
புரிகின்றவனே!, அமலனே – குற்றம் அற்றவனே!, அருமை ………. தேவனே!,
அடைக்கலம் எனத் தேடிவருவோர் தமைக் காக்கும் அவனே மகாபுருடன்
ஆம் – அடைக்கலம் என்று தேடிவருவோர்களைக் காப்பாற்றுவோன் மக்களிற் சிறந்தவன், அஞ்சாமல் எதுவரினும் எதுபோகினும் சித்தம்
அசைவு இலன் மகாதீரன் ஆம் – எது வந்தாலும் எதுபோனாலும் அச்சம் இன்றி உள்ள உறுதியுடன் இருப்பவன் பெருவீரன், என்று தொடுத்துச் சொன்ன சொல் தப்பாது செய்கின்ற தோன்றலே மகராசன் ஆம் –
ஒன்றைப்பற்றிக் கூறிய சொல்லை நழுவவிடாமல் செய்கின்ற தலைவனே பேரரசன், தூறிக் கலைக்கின்ற பேர் வார்த்தை கேளாத துரையே மகாமேருஆம் – வீண்பழி தூற்றி மனத்தைக் கலைப்பவரின் சொல்லை நம்பாத செல்வனே மாமேரு மலை, அடுக்கின்ற பேர்க்குவரும் இடர்தீர்த்து இரட்சிக்கும் அவனே மகா தியாகி ஆம் – தன்னைச் சார்ந்தோர்க்கு வருந் துன்பத்தை நீக்கிக் காப்பவனே பெரிய வள்ளல், அவரவர் தராதரம் அறிந்து மரியாதை செயும் அவனே மகா உசிதன்ஆம் – ஒவ்வொருவருடைய தகுதியையும் பார்த்து மதிப்புக் கொடுக்கின்றவனே சிறந்த தகவாளன்.
xxxx
அடைக்கலம் நாடி வந்தவர்களைக் காப்போரும் , என்ன நேரிட்டாலும், என்ன கஷ்டம் வந்தாலும், மனம் கலங் காதவர்களும் மகா தீரர்கள் ஆவர்.
ஒரு விஷயத்தை ஆரம்பித்தபின்னர் அதன்படியே, சொன்ன சொல் தவறாமல் நடப்பவனே மகாராஜா என்று உலகோரால் போற்றப்படுவான். அதாவது முதலில் சொன்னதைச் செய்யாமல் தப்பிக்க சாக்குப்போக்கு தேடாமல் சத்தியத்தைக் கடைபிடிப்பவனை ‘ராஜா’வே என்று உலகம் பாராட்டும்.
பிறர் பேச்சைக் கேட்டு தவறு செய்யாதவர்கள் மேரு மலை போன்று உயர்ந்தோர் ஆவர் . குன்றிலிட்ட விளக்கு போல பிரகாசிப்பர்.
தன்னை அடுத்து வாழ்பவர்கள் , தனக்குத் தெரிந்தவர்கள் ஆகியோர் கஷ்டப்படுகையில் வலியச் சென்று உதவி செய்து அவர்களைக் காப்பாற்றுபவன் தியாகி ஆவான் .
ஒவ்வொருவருடைய தகுதி, தரம் ஆகியவற்றை கருத்திற் கொண்டு அவர்களுக்குரிய மரியாதை செய்பவன் எல்லோருக்கும் நண்பன் ஆவான்.
XXX
ராமாயணத்தில் சரணாகதி /அடைக்கலம் தத்துவம்
என்னைச் சரணடைந்தவனைக் காப்பேன்; இது என் கொள்கை என்கிறான் ராமன் . யுத்த காண்டப் பாடல் இதோ :
सकृद् एव प्रपन्नाय तव अस्मि इति च याचते ||६-१८-३३
अभयम् सर्व भूतेभ्यो ददामि एतद् व्रतम् मम |
ஸக்ருத் ஏவ பிரபன்னாய தவ அஸ்மி இதி ச யாசதே
அபயம் ஸர்வ பூதேப்யோ ததாமி ஏதத் விரதம் மம -6-18-33
அடைக்கலம் கொடு என்று ஒரே ஒரு முறை இறைஞ்சி என்னை அணுகினாலும் அவருக்கு எல்லாவற்றிலிருந்தும் பாதுகாப்பு வழங்குவேன் ; இது என்னுடைய விரதம்
XXX
கம்பனும் இதை அப்படியே கூறுவான் ; அடைக்கலம் தராதோனுக்கு நரகம்தான் கிடைக்கும் என்று ராமபிரான் வாய்மொழியாக கம்பன் உரைக்கிறான்
பூமிக்கு ஓர் அலங்காரமாய், சிறந்த பொருள்களைக் கொடுத்து, அறிவினிடத்ததாய் (வயல்களுக்கு உரியதாய்), அமைந்த அகப்பொருளிலக்கணத் துறைவகைகளை உடையதாய், (வெப்பந்தணியத் தக்க இடத்தை உடைய நீராடு துறைகளை உடையதாய்) ஐந்திணை நெறி அளாவி – ஐந்து திணைகளின் இலக்கணத்தைத் தழுவி (ஐவகைகளின் நிலங்களின் வழியைச் சேர்ந்து), சவி உற தெளிந்து – செவ்வையாகத் தெளிந்து தண் என்ற ஒழுக்கமும் தழுவி – குளிர்ச்சியான நல்லொழுக்கத்தையும் கொண்டு, (குளிர்ச்சியாயப் பெருகும் தன்மையை உடையதாய்) சான்றோர் கவி என கிடந்த – சான்றோர் செய்த கவி போலப் பொருந்தி உள்ள கோதாவரியினை – கோதாவரி நதியை வீரர் கண்டனர்.
பலவகை அலங்காரம் கொண்டிருத்தல், உலகில் உயர்ந்தோரால் கொண்டாடப்படுதல், சிறந்த அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப் பொருளை உணர்த்துதல், தன்னைக் கற்போர்க்கு நுண்ணறிவை விளைத்தல், அறிவைக் கொண்டு ஆராய்ச்சி செய்யச் செய்ய நன்கு புலப்படும் ஆன்ற பொருளை அறிவுக்கு உரியதாதல், எழுத்து சொல் பொருள் யாப்பு அணி என்னும் தமிழ் இலக்கணம் ஐந்தினுள் பொருளின் பகுதியாகிய அகம், புறம் என்ற இரண்டில் அகத்தில் களவு கற்பு என்னும் ஒழுக்கங்களைக் கூறுதல்,குறிஞ்சி, முல்லை, பாலை, நெய்தல், மருதம் ஆகிய ஐந்தின் ஒழுக்கங்களைக் கூறுதல், விளங்க வைத்தல் என்னும் அழகை முழுதுமாகத் தருதல், தண் என்று நல்லொழுக்கத்தை உணர்த்துதல் என இப்படி கவிதையின் சிறப்பைக் கூறி அது அப்படியே பெருகி ஓடும் கோதாவரி நதிக்கு ஒப்பிடுவது மிக்க சிறப்புடையதாகும்.
கோதாவரி நங்கை இராமன் முதலியோர் வருவதைப் பார்த்து மிக்க மகிழ்ச்சி கொண்டாள். தெய்வ நதியான அவள் தனது தாமரை போன்ற முகம் மலர தனது அலைகளான கைகளால் பூக்களை வாரித் தூவி அவர்களை வணங்குகிறாள்.
இதை இரண்டாம் பாடல் விவரிக்கிறது:
“வண்டுறை கமலச் செவ்வி வாண்முகம் பொலிய வாசம்
உண்டுறை குவளை யொண்கணொருங்குற நோக்கி ஊழின்
தெண்டிரைக் கரத்தின் வாரித் திருமலர் தூவி”
என்று கூறுகிறான் கம்பன்.
இராவணன் சீதையைத் தூக்கிச் செல்ல, சீதை பல பொருள்களைப் பார்த்து இரங்கிப் புலம்புகிறாள்.
சீதை கோதாவரியைப் பார்த்து
‘கோதாவரியே குளிர்வாய் குழைவாய்
மாதாவனையாய் மனனே தெளிவாய்
ஓதாதுணர்வாருழையோடினை போய்
நீதான் வினையேனிலை சொல்லலையோ
என்கிறாள்.
கோதாவரி நதி இயல்பாகக் குளிர்ந்துள்ளது.
உள் நெகிழ்ச்சி உடையது. ஆகவே அன்னை போன்றது. அகம் தெளிந்துள்ளது.
இப்படிப்பட்ட அரும் நதியிடம் தன் நிலைமையைப் பற்றிக் கூறுமாறு சீதை வேண்டுகிறாள்.
ஆக கம்பனின் கவித் திறம் கோதாவரியை வர்ணிக்கும் போது உச்சகட்டத்தை அடைகிறது.
ஏனெனில் கவிதையின் இலக்கணத்தையும் கோதாவரியை காரணமாக வைத்துச் சொல்லி விடுகிறான் இல்லையா?!
கொலை உழுவைத் தோல் அசைஇக், கொன்றைத் தார் சுவல் புரள,
தலை அங்கை கொண்டு, நீ காபாலம் ஆடுங்கால்,
முலை அணிந்த முறுவலாள் முன் பாணி தருவாளோ?
என வாங்கு;
பாணியும், தூக்கும், சீரும், என்று இவை 15
மாண் இழை அரிவை காப்ப,
வாணம் இல் பொருள் எமக்கு அமர்ந்தனை, ஆடி.
This prayer song was composed by Tamil Sangam poet Nallanthuvanar, who is praised by another famous Sangam poet Maruthan Ilanagan. This gives a full description of Lord Siva and his great actions.
1.Brahmins who study six subjects are taught Vedas by you.
2.You took the Ganges water in your hair to control its tremendous speed.
3.You burnt down the three flying metal forts (TRI PURA) in the sky (what I guess as Space Stations in orbit built by demons/Asuras where shiva used his laser weapon).
4.You are capable waging war where you never show your back- don’t run away—
5.You have blue throat– see the previous part about Siva drinking poison to save humanity
6.You have eight hands – such sculptures are seen in South East Asian temples
7.You did a dance called KODUKOTTI to the accompaniment of kettle drum where you took different postures. Kotti is the Armageddon dance at the end of the world. Hindus believe in cyclical yugas unlike Abrahamic religions.
8.You did Pandarangam dance to burn down the flying castles and smeared the ash in your forehead of the burnt down demons.
9.You also did another dance with the skull of brahma. He plucked out one of the five heads of brahma to control his arrogance.
10. Siva wears Tiger skin and Kondrai Flower garland.
No one can reject this prayer song because all that is said here is confirmed by Sangam poets elsewhere. On the basis of which voluminous devotional literature called Tevaram and Tiruvasagam came out from the great Four Saivite saints.
Xxx
நீ சிவபெருமானைப் போல வாழ்க.Long Live like Lord Siva
புறநானூறு 91 Pura Nanuru Verse 91
பால் புரை பிறை நுதல் பொலிந்த சென்னி 5
நீலமணி மிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும! நீயே, தொல் நிலைப்
By Poetess Avvaiyaar on Athiyaman Anji
Whitish (with holy ash) forehead with crescent moon and sapphire colour throat Siva).
Xxx
புறநானூறு 55Purananuru 55
பாடல்
ஓங்கு மலைப் பெரு வில் பாம்பு ஞாண் கொளீஇ,
ஒரு கணை கொண்டு மூஎயில் உடற்றி,
பெரு விறல் அமரர்க்கு வென்றி தந்த
கறை மிடற்று அண்ணல் காமர் சென்னிப்
பிறை நுதல் விளங்கும் ஒரு கண் போல, 5
Tamil poet Maruthan Ilanagan compared Pandya Nanmaran to the Third Eye of Lord Siva. Siva is unique in having Third Eye. Poet says the other two Tamil Kings Chera and Choza are like two normal eyes; but you are unique like the Third Eye of the Spot Necked God who with one arrow shot destroyed the Three Forts for saving Devas and he did it by using the snake as the bow string.
All the Puranic lore are known to every Tamil in ancient Tamil Nadu.
Xxx
Ravana lifting Kailash
கலித்தொகை 38
இமைய வில் வாங்கிய ஈர்ஞ் சடை அந்தணன்
உமை அமர்ந்து உயர்மலை இருந்தனனாக,
ஐ இரு தலையின் அரக்கர் கோமான்
தொடிப் பொலி தடக் கையின் கீழ் புகுத்து, அம் மலை
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல 5
உறு புலி உரு ஏய்ப்பப் பூத்த வேங்கையைக்
கறுவு கொண்டு, அதன் முதல் குத்திய மத யானை
நீடு இரு விடர் அகம் சிலம்பக் கூய், தன்
கோடு புய்க்கல்லாது, உழக்கும் நாட! கேள்:
Venkai in Tamil has two different meanings: Tiger and a particular tree. Since it has got yellow flowers it looked like tiger, particularly when it sheds its flowrers on a rockunder the tree. So all Tamil poets punned on this word Venkai. The most celebrated poet Kabilar sings in Kalittokai (38):
An elephant in rut mistakes a Venkai tree fully in blossom to a tiger and in great anger it gores into its trunk with its tusks but the poor animal was unable to take off its tusks from it like Ravana who attempted to lift up the Kailas mountain with his arms but shrieked and suffered, when caught under pressure.
To be continued……………………………..Tags- Ravana, Kailash, Siva, Tripurantaka, Blue throat, Siva Dance
எங்கோ கிடைத்த பொருளை அதை உரியவரிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்று கவிபாடிய ஒரே புலவர் அம்பலவாண கவிராயர் ஒருவர்தான்
இரண்டு சம்பவங்கள் — நேர்மைக்குப் பரிசு
1,000 வெள்ளியுடன் பணப்பையைத் தொலைத்த வெளிநாட்டு ஊழியரிடம் அதைப் பத்திரமாக ஒப்படைத்த மற்றொரு ஊழியர் (பிப்ரவரி 2022 செய்தி)
சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர் ஹபிப் கான், இந்த மாதம் 14ஆம் தேதி, தமது பணப்பையைத் தொலைத்துவிட்டார்.
அவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அதில் 1,000 வெள்ளி ரொக்கம், வங்கி அட்டை, வேலை அனுமதி அட்டை அனைத்தும் இருந்தன.
உடனடியாக தமது Facebook பக்கத்தில் பதிவு ஒன்றைச் வெளியிட்டார்.
பணப்பையைக் கண்டால் தம்மை உடனே தொடர்புகொள்ளும்படி கேட்டுக்கொண்டார்.
அவரது பதிவைப் பார்த்த பலர், உடனடியாக அதைப் பகிர்ந்தனர்.
பதிவு கிட்டத்தட்ட ஆயிரம் முறை பகிரப்பட்டது.
பணப்பையைக் கண்டெடுத்த ஜாகிர் ஹுசைன் எனும் மற்றொரு வெளிநாட்டு ஊழியரையும் அந்தப் பதிவு எட்டியது.
உடனே ஹபிபைத் தொடர்பு கொண்டு அவரிடம் பணப்பையைத் திருப்பிக் கொடுத்தார் ஜாகிர்.
பணப்பையில் அனைத்தும் பத்திரமாக இருந்ததைக் கண்டு ஹபிப் நெகிழ்ந்துபோனார்.
ஹுசைனை மனமாரப் பாராட்டி அவர் வெளியிட்ட பதிவும் இணையவாசிகளிடையே பரவியது.
“உழைத்து ஈட்டிய பணம் நிச்சயம் பத்திரமாக இருக்கும் என்பதை உணர்ந்துகொண்டேன். எனக்கு இவ்வளவு பேர் மனமுவந்து உதவுவர் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை.”
என்று நெகிழ்ச்சியுடன் பதிவில் குறிப்பிட்டார் ஹபிப்.
XXXX
நேர்மைக்குப் பரிசு
“நேர்மைக்கு கிடைத்த பரிசு” – வீதியில் கிடந்த நகையை போலீசிடம் ஒப்படைத்த பெண் JANUARY 2022 NEWS
ஈரோட்டில் வீதியில் கிடந்த நகையை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணுக்கு காவல் துறையினர் பரிசு வழங்கி கவுரவித்தனர். கோகிலா என்பவர் காடையாம்பட்டி பகுதியில் மூன்றே முக்கால் சவரன் தாலிக்கொடியை தவறவிட்டுள்ளார். இந்த நகையை அதே பகுதியை சேர்ந்த ருக்மணி என்பவர் கண்டெடுத்து பவானி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். ருக்மணியின் செயலை பாராட்டும் விதமாக காவல்துறையினர் பரிசு வழங்கி கவுரவித்தனர்.
இப்படி வாரம் தோறும் பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டவண்ணம் உள்ளன .கண்டெடுத்த பொருளைத் திருப்பிக்கொடுக்க பெரிய மனது இருக்க வேண்டும் .அம்பலராயக் கவிராயர் தவிர யாரும் இதைப் பாடலில் எவரேனும் வடித்திருப்பார்களா என்பது சந்தேகமே .
XXX
உண்மை என்பதை மதிக்கும் ஒரே நாடு பாரதம் தான். சத்யமேவ ஜயதே என்ற உபநிஷத வாக்கியத்தை நாட்டின் சின்னத்தில் பொறித்த நாடு இந்தியா . இதைத் தமிழில் மொழிபெயர்த்து, வாய்மையே வெல்லும் என்ற வாசகத்தை தமிழ்நாடு அரசும் பொறித்துள்ளது தாயார் சொன்ன ஹரிச்சந்திரன் கதை மஹாத்மா காந்திஜியின் வாழ்வை எப்படி மாற்றி, உலகப் புகழ்பெற வைத்தது என்பதை நாம் அறிவோம்.
வேத பாட சாலைக்குள் சிறுவன் நுழைந்த வயதில் முதல் பாடம் சத்யம் வத / உண்மையே பேசு என்பதாகும்.
குலம் கோத்திரம் தெரியாத சத்யகாம ஜாபாலா என்ற சிறுவன் கதை உபநிஷதத்தில் உள்ளது. எனக்கு அம்மா பெயர் மட்டுமே தெரியும்; அப்பா பெயர் தெரியாது; இதை அம்மாவே சொன்னாள் என்று சிறுவன் ஜாபாலா சொன்னதைக் கேட்ட குரு நெகிழ்ந்து போனார். நீ உண்மை பேசுவதால் வேதம் பயில அருகதை உடையவன் நீ என்று அவர் அறிவிக்கிறார்.
XXX
வி ஜி எஸ் என்ற வி ஜி சீனிவாசன் எங்களுக்கு மதுரை சேதுபதி உயர்நிலைப்பலள்ளியில் தமிழ் மொழி மீது ஆர்வம் ஏற்படுத்திய குருநாதர் ஆவார். அவர் சொல்லிக்கொடுத்த நேர்மைக்கான வழி ஒன்றையும் நினைவு கூறுதல் பொருத்தம். யாராவது கள்ள நாணாயம் அல்லது கள்ள ரூபாய் கொடுத்து உங்களை ஏமாற்றினால் நீங்கள் அதை நைஸாக வேறு ஒருவரிடம் கொடுத்து ஏமாற்றாதீர்கள் ; அதை இரண்டு துண்டாக வெட்டிப் போடுங்கள் என்றார் . இதன் மூலம் ஏமாற்றும் சுழற்சியை நாம் வெட்டிவிடுகிறோம்
ரோட்டில் பணம் கிடைத்தால், அதை இழந்தவரிடம் சேர்ப்பிக்க முடியாவிட்டால், ஏழைகளுக்குக் கொடுக்கலாம் அல்லது கோவில் உண்டியலில் போட்டுவிடலாம். பணத்தை இழந்தவரிடம் கடவுளே சேர்ப்பித்து விடுவார்.
செய்நன்றி
மேற் கூறிய இரண்டு பணம், நகை கண்டெடுப்பு சம்பவங்களிலும் அவர்கள் செய்த உதவிக்கு உடனே நன்றி மறக்காமல் பதில் உதவியும், நன்றி யும் கிடைப்பதை பார்க்கலாம்.
வள்ளுவனும்
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு –குறள் 110
xxxx
புறநானூறு
“ஆன்முலை அறுத்த அறனி லோர்க்கும்
மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்
பார்ப்பார்த் தப்பிய கொடுமை யோர்க்கும்
வழுவாய் மருங்கிற் கழுவாயும் உளவென
நிலம்புடை பெயர்வ தாயினும் ஒருவன்
செய்தி கொன்றோர்க்குய்தி இல்லென
அறம்பா டிற்றே ஆயிழை கணவ” (புறநா 34:1-7) என்று புறநானூறு இயம்பும். இது வால்மீகி இராமாயண சுலோகத்தின் மொழிபெயர்ப்பு (See my earlier article)
(ஒருவர்) செய்த உதவியை மறவாதவரும், ஒருவர் செய் தீமையை
மறந்தபேரும் – ஒருவர் செய்த கெடுதியை மறந்தவர்களும், திரவியம்
தரவரினும் ஒருவர் மனையாட்டிமேல் சித்தம் வையாத பேரும் –
பொருளைக் கொடுக்கவந்தாலும் பிறர் மனைவியின்பால் மனத்தைச்
செலுத்தாதவர்களும், கை கண்டு எடுத்த பொருள் கொண்டுபோய்ப்
பொருளாளர் கையில் கொடுத்தபேரும் – கையினாலே கண்டெடுத்த
பொருளைப் பொருளுக்கு உரியவரிடம் கொண்டுபோய்க்
கொடுத்தவர்களும், காசினியில் ஒருவர் செய் தருமம் கெடாதபடி
காத்தருள் செய்கின்ற பேரும் – உலகில் ஒருவர் செய்த அறம்
கெடுதலுறாமற் காப்பாற்றுகின்றவரும், பொய் ஒன்று நிதி கோடிவரினும்வழக்கு அழிவு புகலாத நிலைகொள் பேரும் – நிலையற்ற செல்வத்தைக்
கோடிக்கணக்காக ஒருவர் கொடுத்தாலும் அழிவழக்குக் கூறாத
நிலையுடையவரும், புவிமீது தலைபோகும் எனினும் கனவிலும் பொய்ம்மை
உரையாத பேரும் – உலகத்திலே தலைபோகும் என்றாலும் கனவிலேயும்
பொய் புகலாதவரும், இங்கு இவரெலாம் ஐய சற்புருடர் என்று உலகர்
அகம் மகிழ்வர் – இவ் வுலகில் இத்தகையோர்கள் யாவரையும் அழகாகிய
நன்மக்கள் என்று உலகமாந்தர் மனம் களிப்பார்கள்.
இந்தப் பாடலில் உள்ள ஏனைய கருத்துக்களை முன்னரே விளக்கியுள்ளேன். பிறன்மனை நோக்காதவரை பேராண்மை — மஹா வீரம் — உடையவர் என்றான் வள்ளுவன். இந்தியாவில் இருவருக்கு மட்டுமே இந்த மாவீரர் பட்டம்; ஜிதேந்திரியர்களான — ஐம்புலன் வென்ற — சமண தீர்த்தங்கரர் மஹாவீரர் — அனுமன் — ஆகிய இருவருக்கு மட்டுமே மாவீரர் பட்டம் கிடைத்தது என்பதை முன்னேரே சொன்னேன்.
— சுபம் —-
tags- செய் நன்றி, நேர்மைக்கு பரிசு, உண்மை, பிறர் பொருள்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அருணகிரிநாதர் தொடர்!
அருள்வாயே! – 7
ச.நாகராஜன்
அருணகிரிநாதர் ‘அருள்’ என்ற சொல்லைத் திருப்புகழில் ஆண்ட இடங்கள் ஏராளம்.
அவர் அருள்வாயே என்று கூறும் இடங்களின் நீண்ட தொகுப்பு இது:
படித்து மகிழ்வோம்; பாடிப் பரவுவோம்!
55) திருத்தணிகை
சேவற்கொடி யொடுசி கண்டியின்
மீதுற்றறி ஞோர்புகழ் பொங்கிய
தேசுக்கதிர் கோடியெ னும்பத மருள்வாயே
பாடல் எண் 300 – ‘வார் உற்று எழும்’ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : சேவல் கொடியோடு, மயிலின் மீது நீ ஆரோகணித்து, அறிஞர்கள் பாடிய உனது திருப்புகழ் நிறைந்துள்ள ஒளி ஜோதி கோடி என்னும்படி வீசுகின்ற திருவடியை அருள்வாயாக!
56) குன்றுதோறாடல்
உன்
அபயம் புகுவ தென்று நிலைகாண
இதயந் தனிலி ருந்து க்ருபையாகி
இடர்சங் கைகள்க லங்க அருள்வாயே
பாடல் எண் 303 – ‘அதிருங் கழல் பணிந்து’ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : நீயே புகலிடம் என்று மெய் நிலையைக் காணுமாறு எனது உள்ளத்தில் வீற்றிருந்து கருணை புரிந்து துன்பங்களும், சந்தேகங்களும் கலங்கி ஒழிய அருள்வாயாக!
57) குன்றுதோறாடல்
செந்தமிழ் நாளு மோதி உய்ந்திட ஞானமூறு
செங்கனி வாயி லோர்சொ லருள்வாயே
பாடல் எண் 306 – ‘வஞ்சக லோப மூடர்’ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : செழுமையான தமிழ்ப் பாட்டுக்களால் தினமும் பாடி வாழ்வுற ஞானம் சுரக்கும் சிவந்த கோவைக்கனி போன்ற திருவாயால் ஒரு திருமொழியை அருள்வாயாக!
58) ஆறு திருப்பதி
கனதன முலைமேல்விழு கபடனை நிருமூடனை
கழலிணை பெறவேயினி யருள்வாயே
பாடல் எண் 307 – ‘அலைகடல் நிகராகிய’ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : பொதுமகளிருடன் இன்பமாகக் கூடி அவர்களுடைய பாரமான மார்பங்கங்கள் மேல் விழும் வஞ்சகனும் முழு மூடனுமான என்னை உனது திருவடி இணையினைப் பெறுமாறு இனி அருள்வாயாக!
59) காஞ்சீபுரம்
திசைதொறுங் கற்பிக் கைக்கினி யற்பந்
திருவுளம் பற்றிச் செச்சைம ணக்குஞ்
சிறுசதங் கைப்பொற் பத்மமெ னக்கென் றருள்வாயே
பாடல் எண் 314 – ‘புன மடந்தைக்கு’ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : திக்குகள் தோறும் உள்ள யாவருக்கும் எடுத்து உபதேசிக்க, இனிமேல் நீ சற்று தயை கூர்ந்து வெட்சி மாலை மணம் வீசும் சிறிய சதங்கை அணிந்துள்ல உன் அழகிய திருவடித் தாமரையை எனக்கு எப்போது தந்து அருள்வாய்?
60) காஞ்சீபுரம்
பெருமானென்
றவிழுமன் புற்றுக் கற்றும னத்தின்
செயலொழிந் தெட்டப் பட்டத னைச்சென்
றடைதரும் பக்வத் தைத்தமி யெற்கென் றருள்வாயே
பாடல் எண் 316 – ‘செறி தரும் செப்பத்து’ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : காஞ்சீபுரத்தில் நின்று அருளும் பெருமா நீ என்றும், நெகிழ்ந்து உருகும் அன்பின் வசமாகி, திருவருள் நெறியைப் பயின்று மனத்தின் செயல் எல்லாம் நீங்கப் பெற்று அந்த நிலையில் எட்டப்படுவதான பொருளைச் சென்று அடைகின்ற மனப் பக்குவத்தை அடியேனுக்கு என்றைக்குத் தந்தருள்வாயோ?!
61) காஞ்சீபுரம்
மற்றவருநிந் திக்கத் தக்கபி றப்பிங்
கலமலஞ் செச்சைச் சித்ரம ணித்தண்
டையரவிந் தத்திற் புக்கடை தற்கென் றருள்வாயே
பாடல் எண் 319 – ‘தசைதுறுந் தொக்கு’ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : பிறர் யாவரும் இகழும் படியான இந்தப் பிறப்பு இங்கு போதும் போதும். வெட்சி மலர் அணிந்ததும் அழகிய ரத்தின மணிகள் அணிந்ததும், தாமரை போன்றதுமான உன் திருவடியைப் பற்றிச் சேர்வதற்கு எப்போது எனக்கு அருள்வாய்?!
62) காஞ்சீபுரம்
இனிவிட வேதாந்தப ரமசுக வீடாம்பொருள்
இதவிய பாதாம்புய மருள்வாயே
பாடல் எண் 338 – ‘கமலரு சோகாம்பர’ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : (பெண் மீது மோகம் மிக்கு எழும் இன்ப நுகர்ச்சியை) இனி விட்டு ஒழிப்பதற்கு வேத முடிவான, பரம சுகம் தருவதான, முக்திப் பொருளாகிய, இன்பம் தருவதான பாதத் தாமரைகளைத் தந்து அருள்வாயாக!
63) காஞ்சீபுரம்
பார டைக்கலக் கோல மாமெனத்
தாப ரித்துநித் தார மீதெனப்
பாத பத்மநற் போதை யே தருத் தருள்வாயே
பாடல் எண் 343 – ‘சீசி முப்புரக் காடு’ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : உலகில் எனக்குப் புகலிடமாக இருக்கும் தோற்றத்தைக் காண்பித்து, ஆதரவுடன் யான் நித்தியமான ஓர் ஆபரணத்தை அணிவதற்காக உன் திருவடியாகிய நற் கமல மலரை என் மீது தரிக்கச் செய்து அருள்வாயாக!
64) காஞ்சீபுரம்
விரகு கெட்டரு நரகு விட்டிரு
வினைய றப்பத மருள்வாயே
பாடல் எண் 345 – ‘படிறொழுக்கமும்’ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : (அந்த) கேவலமான வாழ்வு நீங்கி, அரிய நரகத்தில் நான் விழுவது விலகி, நல்வினை, தீவினை என்ற எனது இரு வினைகளும் ஒழிய, உனது திருவடிகளைத் தந்தருள்வாயாக!
குறிப்பு & நன்றி : https://www.kaumaram.comதளத்தில் உள்ளபடி பாடல் எண் தரப்பட்டுள்ளது. முழுத் திருப்புகழ்ப் பாடலையும் அதன் விளக்கத்தையும் இதில் காணலாம்.
நான் எழுதிய கீழ்கண்ட புஸ்தகங்களில் இந்துமதம் உலகம் முழுதும் இருந்தததற்கான வரலாற்று, இலக்கிய , தொல்பொருட் துறைச் சான்றுகளை கொடுத்துள்ளேன் ; படித்து மகிழுங்கள்
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.