Hindus’ greatest treasures are in the Four Vedas, Ten Main Upanishads, Two Great Epics and 18 Puranas. They run in to millions of pages and billions of words with commentaries. It is not easy to dive deep into the ocean of Sanskrit books and recover pearls, corals and amber. So, I will just give some gems from one of the two epics known as Valmiki Ramayana. It has got seven sections called Bala, Ayodhya, Aranya, Kishkinda, Sundara , Yudhdha and Uttara Kandas.
Just a word about pronunciation_
Valmiki – Vaalmiiki; Bala Kanda- Baala Kaanda
Let us delve deep into the first section called Baala Kaanda:
Ascetic Valmiki asked Narada (Naarada) the following questions?
“Who in this world lives today endowed with excellent qualities, prowess, righteousness, gratitude, truthfulness and firmness in his vows?
चारित्रेण च को युक्तस्सर्वभूतेषु को हित: । विद्वान्क: कस्समर्थश्च कश्चैकप्रियदर्शन: ।।1.1.3।।
Who is that one gifted with good conduct, given to the wellbeing of all living creatures, learned in the lore (knowledge of all things that is known), capable of doing things which others can not do and singularly handsome?
These three couplets list the good qualities valued by Hindus. What are they? If one goes through the Tamil Veda known as Tirukkural written by Tiru Valluvar, each of the above qualities is discussed by the poet Valluvar.
Prowess- 67, 68 Tirukkural
Righteousness- chapter 4
gratitude -chapter 11
truthfulness – 30
firmness- 47
good conduct- 14
wellbeing of all living creatures- 25,32
learned in the lore -40,42
capable of doing things which others can not do – 67,68
singularly handsome– 97 to 100
self restrained- 13,16
conquered anger-31
Who is endowed with brilliance –24
free from envy- 17
afraid of none -78
since Tirukkural is available on websites, I am not quoting them verbatim.
Xxxx
Mahabharata which came after Ramayana contains some matters which are older than Valmiki’s. Vyasa in a great hurry, gathered all the older materials available at that time and put is as Mahabharata with 100,000 couplets. It has the Bhagavad Gita, the gist of Hinduism, in just 1400 lines. Lord Krishna also lists these qualities as divine qualities in chapters 16, 14 and 12 .
BG 16: 1-3 slokas list the following qualities
The Supreme Divine Personality said: O scion of Bharat, these are the saintly virtues of those endowed with a divine nature—fearlessness, purity of mind, steadfastness in spiritual knowledge, charity, control of the senses, sacrifice, study of the sacred books, austerity, and straightforwardness; non-violence, truthfulness, absence of anger, renunciation, peacefulness, restraint from fault-finding, compassion toward all living beings, absence of covetousness, gentleness, modesty, and lack of fickleness; vigor, forgiveness, fortitude, cleanliness, bearing enmity toward none, and absence of vanity.
முதல் பாடலில் இல்லறம் என்பதற்கு இலக்கணம் கற்பிக்கிறார் கவிராயர்.; மாதா, பிதா, குரு , உறவினர்கள், சகோதர்கள், நல்ல விருந்தினர்கள் , உபசரிக்க வேண்டிய அந்தணர்கள், எல்லாம் அடங்கியது ஒரு பேமிலி; Family அதாவது குடும்பம். இப்படி நடப்பதே இல்லறம். இது துறவறத்துக்கும் மேலானது என்று முடிக்கிறார். மனு, வள்ளுவன் ஆகியோரும் அதையே செப்பினர். அதற்கு காரணத்தையும் சொல்லிப் போந்தனர்.
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை- குறள் 41
பிரம்மச்சாரி, வானப்ரஸ்தர், சந்நியாசி ஆகிய மூன்று வகை மக்களுக்கும் உதவுவதால் இல்லறம் நடத்துவோர்தான் அவர்களைவிடச் சிறந்தவர் என்று பரிமேல் அழகர், மண க்குடவர் முதலியோர் உரை கூறுகிறது. அடுத்த இரண்டாவது குறளிலேயே தென்புலத்தார், தெய்வம், விருந்து , ஒக்கல் , தான் என்ற ஐவருக்கும் உதவும் பஞ்சயக்ஞம் பற்றியும் மனுவும் வள்ளுவரும் கூறுவர். இல்லறம் அல்லது நல்லறம் அல்ல என்று அவ்வையார் கூறியதற்கும் இதுவே காரணம் . அதாவது இல்லறத்தார் இல்லாவிடில் நான்கு பிரிவினர் என்ற இந்து தர்மம் இல்லாமல் போய்விடும். 4 பிரிவினர் – மாணவர்/ பிரம்மச்சாரி, கிரஹஸ்தன்/ இல்லறத்தான், வானப்ரஸ்தன்/ பென்ஷனர் அல்லது ஓல்ட் ஏஜ் மக்களுக்கான முதியோர் இல்லத்தில் Pensioners or Residents of Old Age Homes வசிக்கும் பெற்றோர், நாலாவது வகை- சன்யாசிகள் Ascetics. இவர்கள் நால்வருக்கும் உணவு கொடுப்பதோடு தினமும் பஞ்ச யக்ஞமும் செய்கிறான் என்பார் வள்ளுவர் .
Xxxxx
அடுத்த பாடலில் சைவ, வைணவ, பிரம்மா தொடர்பான புராணங்கள் எவை எவை என்று வகைப்படுத்துகிறார் புலவர். அந்தப் பாடல்களை படிப்பதற்கு முன்னர் புராணம் பற்றிய செய்திகள் இதோ:
18புராணங்கள்
வேத வியாசர் தொகுத்த புராணங்கள்:- அக்னி, பாகவத, பிரம்ம, பிரம்மாண்ட, பிரம்மவைவர்த்த, கருட, ஹரிவம்ச, கூர்ம, லிங்க, மார்க்கண்டேய, மத்ஸ்ய, நாரத, பத்ம, சிவ, ஸ்கந்த, வாமன, வராஹ, விஷ்ணு (வாயு=சிவ புராணம்) ஆகிய 18 புராணங்கள்
18உபபுராணங்கள்
சிறிய, முக்கியமற்ற புராணங்களை 18 ஆகத் தொகுத்தனர்:-சநத்குமார, நரசிம்ம, பிருஹந்நாரதீய,சிவரஹஸ்ய, துர்வாச, கபில, வருண, காலிக, சம்பா, நந்தி, சௌர, பராசர, மஹேச்வர, பார்கவ, வசிட்ட, தேவிபாகவத, முத்கள, கணேச என்பன 18 உப புராணங்கள். சிலர் இதில் வேறு சில பெயர்களைச் சேர்த்து சிலவற்றை விடுப்பர்.
புராணங்கள் பெரிய கலைக் களஞ்சியங்கள்; உலகிலேயே மாபெரும் இலக்கியம்; பல லட்சம் பாக்களை கொண்டவை; வராலாறும் பூகோளமும் பாடுபவை ஆராய வேண்டிய அற்புத பொக்கிஷம். தாவரவியல் அறிவியல்,விலங்கியல் , வறட்சி, பூகம்பம் முதலியன பற்றி அவற்றில் உள. பல லட்சம் பாக்களை ஆராய நமக்கு ஒரு 100 ஆண்டு ஆயுள் போதாதே! என்ன செய்வது!
புராணங்கள் மிகப் பழங்காலத்தைச் சேர்ந்தவை என்பதால் காலப் போக்கில் குழப்பங்கள் ஏற்பட்டன. ஒரே மன்னனின் தம்பிகள் அண்ணன்கள், தாயாதிகள் ஆண்டதையும் குழப்பிக்கொண்டு ஆண்டுகளை மாற்றி எழுதினர். பாண்டியர்களில் ஒரே நேரத்தில் ஆண்ட சஹோதரர்கள் உண்டு. சேர மன்னர்களில் இரண்டு வம்சங்கள் ஒரே நேரத்தில் ஆண்டதும் உண்டு. இவை பிற்காலத்தியவை; ஆகையால் குழப்பம் மிகக் குறைவு. பழங்கால விஷயங்களில் இது அதிகம்
மக்களைக் கவர்வதற்காக மிகைப்பட்ட கூற்றுகளைப் புராணம் சொல்லுவோர் மொழிந்தனர். தசரதனுக்கு 60,000 மனைவியர், காசி மன்னன் அலார்கா 36, 000 ஆண்டுகள் ஆண்டான்; ராமன் 24,000 ஆண்டுகள் ஆண்டான் என்றெல்லாம் கதை விட்டனர். ஆனால் வேதங்களோ மனிதனின் ஆயுள் 100 ஆண்டுகளே என்று திரும்பத் திரும்ப பாடுகின்றன. தீர்க தமஸ் 100 ஆண்டு வாழ்ந்ததையும், மஹீதாஸ ஐதரேயர் 116 வயது வரை இருந்ததையும் குறிப்பிடத் தவறவில்லை. உண்மையில் ஆயிரம் என்பதில் மூன்று பூஜ்யங்களை நீக்கி விட வேண்டும்; ஏனெனில் இது போன்ற ‘கப்ஸா’க்கள் சுமேரியாவிலும் உண்டு; மூன்று தமிழ்ச்சங்கங்கள் வரலாற்றிலும் உண்டு. ஆதிகால மக்கள் இப்படி ஆயிரம் என்பதைச் சேர்த்துச் சொல்லுவர். மஹாபாஷ்யம் யாத்த பதஞ்சலி முனிவர் மட்டும் அறிவியல் முறையில் கணக்கிட்டு ராமன் 24 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார் என்று அறுதியிட்டுக் கூறினார்.
ஆக மிகைப்படுத்தப்பட்ட கூற்றுகள் புராணங்களுக்கு புளுகு மூட்டைகள் என்ற அவப்பெயரை சம்பாத்தித்துத் தந்தன.
ஆதிகாலத்தில் வரலாற்றை வாய் மொழியாக, பாடல் வாயிலாக, பாமர மக்களுக்கு என படைக்கப்பட்டவை புராணங்கள். இதற்கு ஐந்து லட்சணங்கள் உண்டு. அதில் வரலாறும், பூகோளமும் அடக்கம். ஆயினும் இந்துக்கள் மஹா புத்திசாலிகள், ‘ரொம்ப அட்வான்ஸ்ட்’ (far advanced) என்பதால் அவ்வப்பொழுது புது வரலாற்றைப் (updating) புகுத்தினர். இப்படி உலகில் அவ்வப்பொழுது புது வரலாற்றை எழுதியோர் இந்துக்கள் மட்டுமே. வெளிநாட்டுப் பேதைகள் கடைசி தேதியைப் பார்த்துவிட்டு புராணங்கள் பிற்காலத்தியவை என்று முத்திரை குத்திவிட்டனர். பெயரிலேயே புராண (பழையவை) என்ற சொல் இருக்கையில் புதியவை என்று அரை வேக்காடுகள் செப்பியது ‘சூடான ஐஸ்க்ரீம்’ (Hot Icecream!!!) என்று சொல்லுவதற்கு இணையானது. குப்தர் காலம் வரை பிற்சேர்க்கை இருந்ததால் புராணங்கள் குப்தர் காலத்தியவை என்பது காமாலைக் கண்ணர்களின் வாதம்.
புராணங்களில் ஐந்து பகுதிகள் இருக்கவேண்டும் என்பது மரபு:
1.சர்கம்: பிரபஞ்சத்தின் தோற்றம்
2.பிரதி சர்கம்: மற்ற உயிர்களின் தோற்றமும் மறைவும்
3.வம்சம்: ரிஷிகள், தேவர்களின் சரிதம்
4.மன்வந்தரம்: 14 மனுக்களின் காலம்
5.வம்சானுசரிதம்: சூரிய, சந்திர குல அரசர்களின் வரலாறு
xxxxx
அறப்பளீசுர சதகப் பாடல் எண் 95
95. இல்லறம்
தந்தைதாய் சற்குருவை இட்டதெய் வங்களைச்
சன்மார்க்கம் உளமனை வியைத்
தவறாத சுற்றத்தை ஏவாத மக்களைத்
தனைநம்பி வருவோர் களைச்
சிந்தைமகிழ் வெய்தவே பணிவிடைசெய் வோர்களைத்
தென்புலத் தோர் வறிஞரைத்
தீதிலா அதிதியைப் பரிவுடைய துணைவரைத்
தேனுவைப் பூசுரர் தமைச்
சந்ததம் செய்கடனை யென்றும்இவை பிழையாது
தான்புரிந் திடல்இல் லறம்;
சாருநலம் உடையராம் துறவறத் தோரும்இவர்
தம்முடன் சரியா யிடார்!
அந்தரி உயிர்க்கெலாந் தாய்தனினும் நல்லவட்
கன்பனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) அந்தரி உயிர்க்கு எலாம் தாய் தனினும் நல்லவட்கு
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
WRITTEN BY B.KANNAN, NEW DELHI
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களுக்கு வணக்கம் பல.
மூக்குப்பொடிப் பிரியர்களுக்கு இக் கட்டுரை சமர்ப்பணம்…
இன்றைக்கு நாம் பார்க்கப் போவது ஒரு சாதாரண சின்னப் ‘பொடி’ விஷயமே! ஆம்,
‘ஸ்நஃப் பவுடர்’, நுகட்காரம், நாசிப்பொடி, மூக்குப் பொடி எனத் தென்னிந்தியாவிலும், நாஸ்,சுங்கனீ, நஸ்வார் என்றெல்லாம் வட இந்தியாவிலும் அழைக்கப்படும் விநோத பழக்க வழக்கத்தைப் பற்றிதான். இது பரவலாக மேட்டுக்குடி மக்களிடமும், புலவர் கள், கலஞர்களிடமும் அவர்களின் அந்தஸ்துக்கு ஒரு முக்கிய அடையாளமாக 70, 80-ம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்துள்ளது. பின்பு அப்பழக்கத்துக்குச் சாதாரண பொது ஜனங்களும் அடிமையாகி விட்டனர். அந்தக் காலத்து தமிழ் வாரஇதழ்களில் டிஏஎஸ்
ரத்தினம் பட்டணம் பொடி விளம்பரம் நிச்சயம் இடம் பெற்றிருந்ததை மறக்க முடி யுமா? அப்பொடியை அதற்கென்றே பிரம்மதேவன் விசேஷமாக சிருஷ்டித்திருக்கும் வாயகல அண்டா அல்லது பீரங்கி போன்ற மூக்குத் துவாரத்தில் “சொர்..ர்” என்று இழுத்து ஏற்றிக் கொள்ளாவிட்டால் மற்ற காரியங்கள் எதுவும் சுறுசுறுப்பாகவும் சுமு கமாகவும் நடந்தேறாது என்றிருந்தது அக்கால நிலை!
அருகில் இருப்பவருக்குச் தர்மசங்கடம் கலந்த அருவருப்பு, துணி துவைப்போர்க்கு அவஸ்தை என்பதை இப்பிரியர்கள் கண்டு கொள்ள மாட்டார்கள். கடைக்காரர் பிரத் தியேகமான பொடி ஜாடியிலிருந்து, போதை தருவதற்குப் புகையிலை, காரத்துக்குச் சுண்ணாம்பு, மணத்திற்கு நெய் சேர்க்கப்பட்டுள்ளச் சன்னமானத் துகளை, மிகவும் மெலிதான, நீண்ட, தலைப் பகுதியில் சின்னக் குழியுடனிருக்கும் கரண்டியால் தட் டித்தட்டி (விழும் ஆனால் அதிகம் விழாத மாதிரியும் இருக்கும்!) அதில் கலந்துள் ளப் பொருட்களின். சேர்மானத்தைப் பொறுத்து, பொடிகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்” அதை மட்டைநார் இலையில் போட்டு, பாந்தமாக மடித்து, வாழை நார் கொண்டு கட்டிக் கொடுக்கும் அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்!
லார் (திரு அருட்பா,அவா அறுத்தல், பாடல் 12). “சோமசுந்தரன் கடையில் செய்த
பொடியினைப் போடா மூக்குப் புண்ணியம் செய்யா மூக்கு” என்று தமிழ்த் தாத்தா
உ.வே.சா. அவர்கள் ஒரு கவிதையே பாடியுள்ளார். சாதாரணமானவர்களுக்குத் தும்
மலைத் தரும்பொடி இங்கு புலவர் மூலம் புதிர் வெண்பாவைக் கொடுத்துள்ளதை
ரசிக்கலாம்….
கண்பார்வை இழந்தும் கல்வி-கேள்விகளில் வல்லுநராய், கலைச் சிறப்புடையவராய், வளமானக் கற்பனை நிறைந்தக் கவிச்சிங்கங்களாகத் திகழ்ந்தவர் பலருண்டு. இரட் டையருள் ஒருவரான இளஞ்சூரியர், வீரராகவ முதலியார், செட்டிநாட்டு வன்றோண் டச் செட்டியார், வங்காளத்தின் கவிஞர் சுபோத சந்திரர், சூர்தாசர்,ஆங்கிலக் கவிஞன் ஜான்மில்டன், கிரேக்க கவி ஹோமர், இன்றும் நம்மை வழி நடத்திக் கொண்டிருக் கும் வேதசாஸ்திர விற்பன்னர் பூஜ்யஶ்ரீ ராமபத்ராசார்யா ஆகியோரைப் போன்றே பழநி கவிச்சிங்க நாவலர் (மாம்பழக் கவிராயர்) அவர்கள், முகக்கண்களை இழந்த வராக இருந்தாலும் அகக் கண்ணொளிப் பெற்று அரும்பெருங் கவிஞராய் விளங்கிய வர். நையாண்டி, கேலி, பரிகாசம் தொனிக்கும் பாக்களை இயற்றி அனைவரையும் மகிழ்வித்தவர். அதற்கு ஓர் எடுத்துக்காட்டு அவரது கீழ்வரும் பாடல்.
“மேலாடை யின்றிச் சபை புகுந்தால் இந்த மேதினியோர்
நூலாயிரம் படித்தாலும் எண்ணார் நுவல் பாற்கடலோ
மாலானவன் அணி பொன்னாடை கண்டு மகளைத் தந்தே
ஆலாலம் ஈந்தது தோலாடை சுற்றும் அரன் தனக்கே”
( உடுப்பு நெறி-DRESS CODE-விதி இருக்கிறது, அல்லவா? சிலவிடங்களில் நல்ல ஆடைகளை அணிந்திருப்பவர்களுக்கு வரவேற்பும், அப்படி இல்லாதவர்களுக்கு அவ மரியாதையும் ஏற்படுவதை நாம் பார்த்திருப்போம்.அவர்கள் எவ்வளவு நூல்கள் படித் திருந்தாலும் ஆசானாக- நுவல்- ஏற்கமாட்டார்கள். தெய்வங்களில் கூட இந்தப் பாகு பாடு இருக்கிறதே! திருமால் அலங்காரப் பிரியராகப் பட்டாடை அணிந்திருந்ததால் பாற்கடல் அவருக்குத் திருமகளைக் கொடுத்ததாம். சிவபெருமான் புலித்தோலை உடுத்தியிருந்ததால் தான் அதே பாற்கடல் ஆலகால விஷத்தை அவருக்குக் கொடுத் ததாம். ஆடையின் பெருமையை நையாண்டித் தொனியில் இந்த அழகியப் பாடலில் உணர்த்தியிருக்கிறார் புலவர்).
அப்படிப்பட்டவர் இராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க சேதுபதி, பொன்னுச்சாமி தேவர் ராஜசபையை அலங்கரித்தவர். அப்போது நடந்த ஒரு சுவாரசியமானப் “பொடி” சம்பவம்…….
நாவலர் பொடி போடும் பழக்கமுடையவர். எப்போதும் பொடி டப்பி ஒன்றைப் பக்கத் திலேயே வைத்திருப்பார். மூக்கு துறுதுறுக்கும் சமயத்தில் அரசரோ அவையினரோ அறியாதவாறு குனிந்து மரியாதை நிமித்தம்,மேல் உத்தரீயத்தால் முகத்தை மறைத் தபடி பயன்படுத்துவது வழக்கம் (‘சொர்..ர்’ என்ற சத்தம் கேட்டுத் தொலைக்கும்,என்ன செய்வது!). ஒருநாள் சொற்பொழிவின் நடுவில் மூக்கு அவசர சமிக்ஞை கொடுத்து விட, பக்கத்தில் பொடி டப்பியைத் தடவித் தேடியும் கிடைக்கவில்லை. அதைத்தான் தேவர் அவர்கள் விளையாட்டாக நாவலர் அறியாதவாறு முன்பே எடுத்துத் தன்வசம் வைத்துக் கொண்டுவிட்டாரே! சலிப்படைந்துவிட்டப் புலவரை நோக்கி ஏதும் தெரியா தவர் மாதிரி மன்னர் கேட்டார், “தாங்கள் ஏதோ ஒரு வஸ்துவை மறந்து தேடுவது போல் தோன்றுகிறதே! அது யாதோ? என்று
அதற்கு நாவலர், “வள்ளல் பெருமானே! தங்கள் அருமைச் சமூகத்தின் முன்னர் அஞ் சாது அறிவிக்கும் அளவிற்கு அது அத்துணைப் பெரிய காரியமில்லை!” எனவிநயமா கப் பதிலளித்தார்.
“அப்படியாயின் அது ஒரு பொடிக் காரியமாக இருக்குமோ?” என்றார் அரசர்.
புலவர் சங்கடத்துடன் நெளிந்தவாறு, “ஆம்,அரசே!” என்றார்
“தவறியப் பொருள் மீண்டும் கிடைக்க வேண்டுமாயின் ஒன்று செய்ய வேண்டியிருக் கும். அதாவது ஒரு வெண்பாவில் ஐந்து இடங்களில் பொடி என்ற சொல்வருமாறும் அதுவே முருகன் துதியாகவும் அமைந்திருக்குமாறுப் பாடிக் கொடுத்தால்,தங்களிடம் பொடி டப்பியை வரவழைத்துத் தருகிறோம், சம்மதமா?”
மூக்குப்பொடி மீது வைத்துள்ள அதீத வேட்கையால் உந்தப்பட்ட நாவலர் அக்கணமே ஒரு வெண்பாவைப் பாடினார். அப் ‘பொடி’ப் பாடல் இதோ…
“கரும்பொடி மாவஞ்ச வெறிகைப்பொடி சில்விற்பர்
தருங்கொம் பொடிசை தெய்வத்தையல்-விரும்புபுய
வான்பொடியா நின்ற கதிர்மானு மயிலோ எனையாள்
தேன்பொடியார் பூம்பதந் தந்தே”
(கரும்பொடி, கைப்பொடி, தருங்கொம்பொடி, வான்பொடி, தேன்பொடி என ஐந்து பொடிகள் அடங்கியப் பாடலின் பொருள்: கரும்பை ஒடித்துத் தின்னும் யானைகள் (மா) அஞ்சும்படியாக வீசும் பொடிசில் எனும் கையாயுதத்தைக் கொண்ட மலைக் குறவர் தரும் கொம்பு போன்ற வள்ளிதேவியுடன்,இசைந்த தெய்வகுஞ்சரி விரும்பும் பன்னிரு கரங்களைக் கொண்டவரே, வானில் சுடுகின்ற சூரியனைப் போன்ற வடிவே லரே, தேனின் மகரந்தப்பொடி பொருந்தும் உமது தாமரைப் பூம்பாதம் தந்து என்னை அருள்வாயாக! )
இப்பாடலைக் கேட்டு மனம் குளிர்ந்துபோன அரசர் தேவரவர்கள் தங்கத்தால் செய்து நவரத்தினங்கள் பதித்த விலையுயர்ந்தப் பொடி டப்பி ஒன்றை நாவலருக்குப் பரிசா கத் தந்து மகிழ்ந்தார்.
ஒரு குறிப்பிடத்தக்க உரையை நமது வெளியுறவுத் துறை அமைச்சர் திரு எஸ். ஜெயசங்கர் பங்களூரில் நிகழ்த்தியுள்ளார்.
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மானேஜ்மெண்ட் (Indian Institute of Management) மாணவர்கள் மற்றும் ஆசிரியர் குழாமிடையே அவர் 2022 ஜூன் 10ஆம் தேதி இந்த அருமையான உரையை நிகழ்த்தியுள்ளார்.
உரையின் சாராம்சமாவது:
“நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களோ, இல்லையோ எனக்குத் தெரியாது, ஆனால் நீங்கள் அனைவரும் ஒரு மாபெரும் புரட்சி நடக்கும் போது வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். ஆனால் இது ஒரு புரட்சி என்பதை நீங்கள் உணராமல் இருக்கக்கூடியதற்கான காரணம் இது ஜனநாயக ரீதியில் ஒவ்வொரு நாளும் பல்வேறு விதங்களில் நடந்து கொண்டிருப்பதால் தான்.
‘ஆகவே, உங்களைச் சுற்றியும் நிஜமாக, வாழ்க்கையானது நாடக பாணியில் ஆழ்ந்து வியக்கத்தகும் விதத்தில் மிகப் பெரும் மாறுதலை அடைந்து கொண்டிருக்கிறது. நீங்கள் இந்த கல்வி நிலையத்தில் நுழைந்திருக்கும் சமயத்தை விட இப்போது பணியை ஏற்கும் நிலையில் நீங்கள் வெளியேறும் போது அடிப்படையிலேயே மாறுதலை அடைந்துள்ள ஒரு இந்தியாவில் காலடி எடுத்து வைக்கப் போகிறீர்கள்.
கடந்த 8 வருடங்களில் ‘ஜன தான் யோஜனா’ திட்டத்தின் மூலமாக அமெரிக்காவின் 80 சதவிகித ஜனத்தொகை என்று சொல்லக்கூடிய அளவிலான 30 கோடி பேர்கள் வங்கிக் கணக்கைக் கொண்டிருக்கின்றனர்; இந்தக் கணக்கில் தேவைப்படும் மக்களுக்காக பணத்தை அரசு சேர்ப்பிக்கிறது.
‘ஹர் கர் ஜல்’ என்ற திட்டமானது சுத்தமான குடிநீரை 45 கோடி மக்களுக்கு கடந்த 8 வருடங்களில் கொடுத்து வருகிறது. இந்த எண்ணிக்கை முழு ஐரோப்பிய யூனியன் பிரதேசத்தின் ஜனத்தொகையாகும். இவர்கள் அனைவருக்கும் இது வரை குழாய் இணைப்பு இல்லாமல் இருந்தது; இப்போது கிடைத்திருக்கிறது.
ஜெர்மனியின் ஜனத்தொகை அளவிலான 8 கோடி பேர்கள் இதுவரை சமையலுக்கு விறகைப் பயன்படுத்தி வந்தவர்கள், இப்போது எல்பிஜி இணைப்பைப் பெற்று சமையலுக்கு சமையல் வாயுவைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
‘ப்ரதான் மந்த்ரி ஆவாஸ் யோஜனா’ என்ற திட்டத்தின் மூலமாக ஏறக்குறைய ஜப்பானின் ஜனத்தொகை என்று சொல்லக்கூடிய அளவிலான 11.5 கோடி மக்களுக்கு வீடுகள் (நகரங்களிலும் நகர்ப்புறங்களிலும்) கட்ட நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
கோவிட் காலம் கடுமையான காலம். அப்போது தேவைப்பட்ட ரேஷன் கார்ட் வைத்திருக்கும் எளிய மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது; இன்னும் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் 81 கோடி பேர்கள் இதனால் பயனடைந்து வருகின்றனர். இந்த எண்ணிக்கை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனின் ஜனத்தொகைக்குச் சமம்.
கடந்த 8 வருடங்களில் ‘சௌபாக்யா’ என்ற திட்டத்தின் மூலமாக 13 கோடி பேர்கள் நாம் சுதந்திரம் அடைந்ததற்குப் பின்னர் முதல் முறையாக மின் இணைப்பை பெற்றுள்ளனர். இந்த 13 கோடி என்ற எண்ணிக்கை ரஷியாவின் ஜனத்தொகை அளவாகும்.
‘ஜன் ஆரோக்ய யோஜனா’ என்ற திட்டத்தின் மூலமாக 17 கோடி பேர்கள் உடல்நல பாதிப்பின் போது உதவியைப் பெற்றுள்ளனர். இந்த எண்ணிக்கை மெக்ஸிகோவின் ஜனத்தொகையைப் போல 125 % (125 சதவிகிதம்) ஆகும்.
நாம் எவ்வளவு பெரிய மாறுதலை புரட்சி என்று சொல்லும் அளவில் கொண்டு வந்திருக்கிறோம் என்பதை அறிய (இளைய தலைமுறையினராகிய) நீங்கள் இந்த எண்ணிக்கையை மனதிலே ஏற்றிக் கொள்ள வேண்டும்.
நான் ஏன் இந்த எண்ணிக்கைகளை உங்களிடம் சொல்கிறென் என்றால் நீங்கள் இந்தியாவானது மாபெரும் சமூக -பொருளாதார மாறுதல்களை அடைந்து கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தின் நடுவில் நீங்கள் இருப்பதால் தான். நமது சமூகத்தின் கீழ் மட்டத்தில் நாம் உண்மையிலேயே ஒரு சமூக பத்திரத்தன்மையை, பாதுகாப்பைஉருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.
ஆகவே தான் அடிப்படையான எதிர்பார்ப்பு இப்போது வேறு ஒரு மட்டத்தில் இருக்கிறது.
இந்த உரையை ஒவ்வொரு இந்தியனும் மனதிலே ஏற்றிக் கொண்டு இளைஞர்களுக்கும் நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் அவர்கள் மனதில் ஏற்றிக்கொள்ளும் படியாகச் சொல்ல வேண்டும்.
வாழிய பாரத மணித் திருநாடு!
***
நன்றி : ஜெய்சங்கர் அவர்களின் ஆங்கில உரையைப் பிரசுரித்துள்ளது கல்கத்தாவிலிருந்து வெளிவரும் வார இதழான ட்ரூத் (TRUTH) Volume 90 Issue 38 Dated 13th January 2023)
வால்மீகி ராமாயண உத்தர காண்டத்தில் நிறைய சுவையான செய்திகள் உள்ளன . சங்கத் தமிழ்ப் புலவர்கள் இதை அப்படியே பின்பற்றியுள்ளனர். அரசனை இந்திரனுக்கும், யமனுக்கும், முருகனுக்கும் ஒப்பிடுவதை சம்ஸ்க்ருத நூல்களில், காளிதாசன் காவியங்களில் காணலாம்.
ததாபிஷேக வவ்ருதே சத்ருக்நஸ்ய மஹாத்மநஹ
அபிஷிக்தஸ்து சத்ருக்நோ பபெள சாதித்ய ஸன்னிபஹ
அபிஷிக்தஹ புரா சேந்த்ரைரிவ மருத் கணை ஹி
பொருள் மஹிமையுள்ள சத்ருக்நனுக்கு திரு அபிஷேகம் நடந்தது . கதிரவனையொத்த ஒளிமிக்க சத்ருக்நனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டதும் , முன்பு இந்திரன் தலைமையில் தேவர்களால் அபிஷேகம் செய்யப்பட்ட முருகன் போல அவர் இருந்தார்.
சங்க இலக்கியத்தில் மன்னர்களை முருகனுக்கு ஒப்பிடும் இடங்கள் :
புறம் 56 நக்கீரர்பாடியது; பாண்டிய மன்னனை வருணிக்கையில் நீ யமன், முருகன், பலதேவன், கண்ணன் போன்றவன் என்று புகழ்கிறார். அதில் நினைத்தை முடிப்பதில் நீ முருகனையொத்தவன் என்கிறார். முருகனை சேனாதிபதி என்று புராணங்கள் வருணிக்கின்றன. சங்க புலவர்களும் நீ சீற்றமிகு முருகன் என்று மன்னனை வருணிக்கின்றன.
XXXX
சீதைக்கு இரட்டைக் குழந்தை TWINS IN VEDAS, RAMAYANA, MAHABHARATA & ASTROLOGY
உலகிலேயே முதல் இரட்டையர்கள் TWINS பற்றிப் பேசுவது ரிக் வேதம் . அங்கே அஸ்வினி தேவர்கள் என்னும் இரட்டையரைப் பார்க்கிறோம். பின்னர் சீதைக்குப் பிறந்த குசன், லவன் என்ற இரட்டையரைப் பார்க்கிறோம். ராமாயணத்தில் தசரதன் பிள்ளைகளான லெட்சுமணனும் சத்ருக்கனனும் சுமித்ரைக்குப் பிறந்த இரட்டையர் ஆவர் .அதன் பின்னர் மஹாபாரதத்தில் நகுலன் சகாதேவன் என்ற இரட்டையரைப் பார்க்கிறோம். பின்னர் மிதுன ராசி இரட்டையரை ஜோதிட நூல்களில் படிக்கிறோம்.. இவ்வளவு இரட்டைக் குழந்தைகளை வேறு எந்த மத நூலிலும் காண முடியாது
இதில் சுவையான விஷயம் என்னவென்றால், காட்டிலுள்ள வால்மீகி ஆஸ்ரமத்துக்குள் சத்ருக்னன் நுழையும்போது சீதைக்கு குசன் -லவன் என்ற இரட்டையர் பிறக்கின்றனர். உடனே வால்மீகி மகரிஷி குழந்தைகளை பூத ,பிசாசுகள் நெருங்காமல் இருக்க குசம் என்ற தர்ப்பைக் கட்டை எடுத்து நுனிப் பாகத்தையும் அடிப்பக்கத்தையும் எடுத்து வந்து காப்புக் கட்டுகிறார் இவ்வவாறு குசப் புல்லைப் பயன்படுத்தியதால் அவர்களுக்கு குச , லவ என்ற பெயர் ஏற்பட்டது .
இதோ அந்த ஸ்லோகம் :
குச முஷ்டிமுபாதாய லவம் சைவ ஸ து த்விஜஹ
வால்மீகி பிரததெள தாப்யாம் ரக்ஷாம் பூத விநாசினீம்
ஏவம் குசலவெள நாம்நா தாவுபெள யமஜாதகெள
பொருள்
அந்த வேதியர் பெருமானான வால்மீகி, தர்ப்பக் கற்றையை நறுக்கி நுனிப்பாகத்தையும் அடிப்பாகத்தையும் எடுத்துக்கொண்டு வந்து குழந்தையைப் பீடிக்கவல்ல பூத பைசாசங்களை அழிக்கவல்ல காப்பை அக்குழந்தைகளுக்கு அளித்தார் . இதனால் இரட்டைக் குழந்தைகளான அவர்கள் முறையே குசன் என்றும் ,லவன் என்றும் பெயர் உடையவர் களாயினர்.
XXX
2015 மார்ச் 24 ல் நான் எழுதிய கட்டுரை:—
சங்க இலக்கியத்திலும் குழந்தைகளைப் பேய் பிசாசுகள் நெருங்காமலிருக்க ஐயவி என்னும் வெண்கடுகைப் புகைக்கும் செய்தி உளது .
பேய்களை விரட்ட அதர்வண வேதத்தில் சொல்லப்பட்ட அதே வெண் கடுகுப் (ஐயவி) பொடியைத் தான் சங்க காலத் தமிழர்களும் பயன்படுத்தினர் என்பதை 3000 ஆண்டுக்கும் மேலான பழமை உடைய அதர்வண வேத மந்திரங்களும் 2000 ஆண்டுப் பழமையுடைய சங்கத் தமிழ் இலக்கியங்களும் செப்புகின்றன.
EIGHT POINT GHOST BUSTING PLAN OF ANCIENT TAMILS
பேய்களை விரட்ட எட்டு அம்ச திட்டம்:-
1.வேப்ப மர இலைகளை வீட்டில் சொருக வேண்டும்
2.வெண் (ஐயவி) கடுகைப் புகைக்க வேண்டும்
3.வெண் கடுகை (ஐயவி) நெய்யுடன் கலந்து அப்ப வேண்டும்
4.யாழ் இசைக்க வேண்டும்
5.ஆம்பல் குழல் ஊதவேண்டும்
6.மணி அடிக்கவேண்டும்
7.காஞ்சி பாட வேண்டும்
8.அகில் புகை போட வேண்டும்
இதோ பாடல்கள்:—
புண் படு குருதி அம்பு ஒடுக்கவும்
நீயே, ஐயவி புகைப்பவும் தாங்காது, ஒய்யென
உறுமுறை மரபின் புறம் நின்று உய்க்கும் (புற.98)
தீ கனி இரவமொடு வேம்பு மனைச் சொரீஇ
வாங்கு மருப்பு யாழொடு பல் இயம் கரங்க
கை பயப் பெயர்த்து மை இழுது இழுகி
ஐயவி சிதறி, ஆம்பல் ஊதி,
இசை மணி எறிந்து, காஞ்சி பாடி
நெடு நகர் வரைப்பில் கடி நறை புகை இ (புற.281)
வேம்பு சினை ஒடிப்பவும், காஞ்சி பாடவும்
நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும் (புற.296)
பொருள்:
போரில் காயம்பட்டுக் கிடக்கும் வீரர்களிடம் எமன் வராமல் இருக்கவும், பேய்கள் அண்டாமல் இருக்கவும், குழந்தை பிறந்த வீட்டில் குழந்தைக ளையும் பிள்ளை பெற்ற தாய்மார்களையும் பேய் கள் தாக்காமல் காக்கவும் வெண் கடுகு புகைப்பர் அல்லது நெய்யுடன் கலந்து அப்புவர்.
இதோ குழந்தை பெற்ற தாய்மார்கள் பற்றிய நற்றிணைப் பாடல்கள்:
புனிறு நாறு செவிலியொடு புதல்வன் துஞ்ச,
ஐயவி அணிந்த நெய்யாட்டு ஈரணிப்
பசு நெய் கூர்த்த மென்மை யாக்கைச்
சீர் கெழு மடந்தை ஈர் இமை பொருந்த (நற்.40)
நெய்யொடு இமைக்கும் ஐயவித் திரள் காழ்
விளங்கு நகர் விளங்கக் கிடந்தோட்குறுகி
புதல்வன் ஈன்றெனப் பெயர் பெயர்த்து… (நற்.370)
பொருள்: நறுமணம் மிக்க மென்மையான படுக்கையில் செவிலித் தாயுடன் புதல்வன் உறங்க, சிறப்புமிக்க தலைவி வெண் சிறு கடுகு அணிந்த நெய்யாட்டு நிறைவேறிய அணிமைக் காலத்தில் நெய் விளங்கும் மெல்லிய உடம்போடு இரு இமைகளும் பொருந்தத் தூங்கினாள்……………..
நெய்யுடனே ஒளிவீசும் வெண் சிறுகடுகு முதலானவற்றைப் பூசி விளங்கிய நம் இல்லம் சிறப்புறுமாறு ஓய்ந்து படுத்திருந்தாள்…………….
திருமுருகாற்றுப் படை (228), மதுரைக் காஞ்சி ( வரி 287), நெடுநல்வடை (வரி 86) – ஆகிய சங்க நூல்களிலும் ஐயவி (வெண் கடுகு) பற்றிய குறிப்புகள் உண்டு. உரைகாரர்கள் எழுதிய உரைகளில் பேயை விரட்ட ஐயவி புகைக்கப்படுவது பற்றி விளக்கியுள்ளனர்.
XXXX
விஞ்ஞானிகளுக்குத் தெரியாத அதிசய விமானம் THOUGHT POWERED SPACESHIP- PLANE
இதுவரை உலகில் எந்த நாட்டு விஞ்ஞானிகளுக்கும் தெரியாத அதிசய விமானம் இந்தியாவில் அக்காலத்தில் இருந்தது. இது பிரம்மாவினால் குபேரனுக்குக் கொடுக்கப்பட்டு பின்னர் ராவணனால் பறிமுதல் செய்யப்பட்டது. இதை வைத்துக்கொண்டு ராவணன் இமயமலை, நர்மதை நதிக்கரை, மற்றும் கிஷ்கிந்தை ஆகிய இடங்களுக்கு வந்து வால் ஆட்டியதும் சிவ பெருமான், கார்த்த வீர்ய அர்ஜுனன், வாலி ஆகியோரிடம் அடி வாங்கியதும் அனைவரும் அறிந்ததே.. இது எண்ணத்தால் — மனதின் சக்தியால் — இயக்கப்படும் THOUGHT POWERED விமானம். வேண்டிய இடத்துக்குச் செல்லும்; வேண்டிய அளவுக்கு பயணிகளுக்கு இடம் கொடுக்கும். இதை காமகாமி புஷ்பக விமானம் என்று ராமாயணம் புகழ்கிறது. இது போன்ற விமானம் சோதனைச் சாலையில் செய்யப்பட்டத்தை உலகப் புகழ்பெற்ற விஞ்ஞான சஞ்சிகை வெளியிட்டது. ராமர் விமானம் பறந்தது எப்படி ? என்ற என்னுடைய விஞ்ஞானக் கட்டுரையில் அது பற்றி எழுதியுள்ளேன். இதோ அது பற்றிய ராமாயண ஸ்லோகம்:-
இதே போல வலவன் ஏவா வான ஊர்தி PILOTLESS PLANE IN PURA NAANURU என்று புறநானூற்றுப் புலவர் பாடிய வின் ஊர்தி, இப்போது DRONE ட்ரோன் என்ற பெயரில் பறப்பதைப் பார்க்கிறோம் .
32 தர்மங்களின் பட்டியலை அறப்பளிச்சுர சதகத்தில், ஒரே பாடலில், அம்பலவாணக் கவிராயர் அழகாகக் கொடுத்துள்ளார் . இதில் வியப்பான விஷயம் சிறைக் கைதிகளுக்கு உணவு கொடுப்பது, அனாதைப் பிணங்களை அடக்கம் செய்வது , மிருகங்களுக்கு தீவனம் கொடுப்பது, கல்யாணம் செய்ய உதவுவது, பிள்ளைகளுக்கு கல்வி சாலைகள் அமைப்பது , மருந்து கொடுப்பது ஆகியன அனைத்தும் உள . இவை அனைத்தும் புராண , இதிகாசங்களில் உள்ள விஷயங்கள்.
இதிலுள்ள தண்ணீர் பந்தல் வைக்கும் விஷயம் பெரிய புராணத்தில் அப்பர் காலத்தில் இருந்ததை படிக்கலாம் . மணிமேகலை காவியத்தில் அவள் சிறைச் சாலை சேவை செய்ததையும் உணவு கொடுத்ததையும் காணலாம். அசோகர் கல்வெட்டு முதல் இன்று ராமகிருஷ்ண மிஷன் வரை இந்த சேவைகளைக் காண்பதால் இது வாய்ச் சொல் வீரமில்லை ; உண்மைக் கதை என்றும் தெரிகிறது
. தமிழ் நாட்டில் பல ஊர்ப்பெயர்களில் கூட ‘சத்திரம்’ என்ற சொல் இருப்பது அக்கால மன்னர்களின் தர்மத்துக்குச் சான்றாக நிற்கின்றன. மதுரை மங்கம்மாள் சத்திரத்திலும், அதற்கு அணித்தேயுள்ள மார்வாடி தர்மசத்திரத்திலும் நானே பலர் தங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளேன் ; கன்யாகுமரியில் விவேகானந்தர் பாறைச் சின்னம் திறக்கப்பட்ட போது ஆர் எஸ் எஸ் (R S S) ஸ்தாபனம் மூலம் இதைச் செய்தோம் ; ஏதோ வெளிநாட்டினர் வந்து நமக்கு மருத்துவ மனை கட்டவும், காலேஜ் கட்டவும் சொல்லிக்கொடுத்தனர் என்பதெல்லாம் தவறு என்பதை சதகப் பாடலும் புராணங்களும் காட்டுகின்றன.
சமணர்கள் , மிருகங்கள், பறவைகளுக்கும் கூட இலவச மருத்துவ மனை வைத்ததை உலகில் வேறு எங்கும் காண முடியாது .
32வகை தர்மங்கள்
1. வழிப் போக்கர்கட்குச் சத்திரங்கள் (Choultries; free lodging and boarding) கட்டிவைப்பது.
2. கல்வி கற்கும் ஏழைப் பிள்ளைகட்கு (Free Hostels for students or Food Distribution) உணவு வசதி அளிப்பது.
3. அறுவகைச் சமயத்தார்க்கும் (food for Mendicants) உணவு கொடுப்பது.
4. பசுவுக்கு வைக்கோலும் (fodder for cows) புல்லும் வழங்குவது.
5. சிறைச் சாலையில்(Food for prisoners துன்புறுவோர்க்கு சோறளிப்பது
6. வீடு தேடி வரும் ஆதரவற்ற (Giving alms) ஏழைகட்குப் பிச்சை அளிப்பது.
7. தின்பண்டம் (Anna Dhanam) நல்கல்.
8. மகப்பேறு மருத்துவ (Setting up Maternity Homes) மனைகள் அமைத்தல்
9. தாய்மைப் பேறுபெற்ற (Helping pregnant women; pre-natal and post natal care) பெண்கட்கு உதவி செய்வது.
10. குளம் வெட்டுதல் (Excavating Tanks, Lakes for Irrigation)
11. அனாதைப் பிணங்களை (cremating dead bodies of orphans or the poor) அடக்கம் செய்வது.
13. நோயாளிகட்கு மருந்துகள் (Free distribution of medicines; setting up of hospitals for men and animals) கொடுத்து உதவுவது.
14. துணிவெளுக்கும் (Providing laundry service) தொழிலாளர் சேவை செய்து கொடுத்தல்
15. நாவிதர் (providing barber shops) சேவை செய்து கொடுத்தல்
16. காது குத்தி (Piercing ear for both boys and girls; also provide them ear studs) காதோலை/தோடு கொடுத்து உதவுவது.
17. மறைமொழி , தர்ம சாத்திரம் (Setting up schools to teach them Vedic Hymns and Morals ) கற்பித்தல்; பிள்ளைகளுக்கு கல்வி சாலைகள் அமைப்பது
18. தலைக்கு எண்ணெய் கொடுப்பது tamilandvedas.com, swamiindology.blogspot.com (helping children to take oil bath).
19. ஆலயம் கட்டல் (Building Temples)
20. பிறர் துன்பம் தீர்ப்பது.(Helping the downtrodden and the bereaved)
21. தண்ணீர்ப் பந்தல் வைத்து உதவுவது.(Setting up sheds for water distribution)
22. மடம் கட்டிச் சமய அறிவை வளர்ப்பது (Setting up Mutts for religious teachings).
23. அறைதல் = சாலைகளை அமைத்துக் கொடுப்பது அல்லது தமுக்கு முதலியன (Communication facilities) மூலம் செய்தி வழங்குவது.
24. சோலைகளை உண்டாக்கி வைப்பது (Creating gardens and parks for general public).
25. பசுமாடுகள் உடம்பைத் தேய்த்துக் கொள்ள தூண்களை நிறுவுவது (Constructing pillars and water holes for animals; they come there to relieve their itching).
26. விலங்கினங்கட்கு உணவளிப்பது (Giving food to animals and birds; both domestic and wild). tamilandvedas.com, swamiindology.blogspot.com
27. வெற்றிலை பாக்கு (distributing betel-nuts) கொடுத்து உதவுவது.
28. விலை கொடுத்து (saving lives) உயிரைக் காப்பாற்றுதல்.
29. கன்னிகாதானம் செய்து கொடுத்தல். திருமணமாகாத ஏழை களுக்குத் திருமணம் (Helping boys and girls to get married; Free Matrimonial Service) செய்து வைப்பது.
30. குழந்தைகட்குப் (Provision of Free Milk to Children) பால் வழங்குதல்.
31. கண்ணாடி (distributing mirrors for women to help with their look) வழங்குதல்.
32. விலைமாதர் (setting up brothels for the amorous so that common women are not disturbed) சேவை நல்குதல் tamilandvedas.com,
Xxxx
மாதவியின் மகளாக அவதரித்துப் பேரெழிலுடன் விளங்கிய மணிமேகலை!, ஒரு கட்டத்தில் சிறைச் சாலைக்கு விஜயம் செய்து அங்குள்ள கைதிகளைச் சந்திக்கிறார். அமுதசுரபி என்னும் வற்றாத உணவளிக்கும் அற்புத பாத்திரம் மூலம் அங்குள்ள கைதிகளுக்கு அறுசுவை உணவு படைக்கிறார். வயிற்றுக்குச் சோறிட்டதோடு நில்லாமல் மனதுக்கும் ஆறுதல் தரும் அன்பு மொழிகளையும் நல்ல வாழ்க்கை நடத்தத் தேவையான அறிவுரைகளையும் வழங்குகிறார். அற்புதம்! அனைவரும் மனம் மாற்றம் அடைந்துவிடுகின்றனர். இதை அறிந்த சோழ மன்னன் அவளை அரண்மனைக்கு அழைக்கிறார். சிறைக் கைதிகளை உடனே விடுவிக்கும் படியும் சிறச்சாலைகளை சாது சந்யாசிகள் தங்கும் திரு மடங்களாக மாற்றவும் ஆலோசனை வழங்குகிறார். மன்னனும் அதை ஏற்று செயல் படுத்துகிறான்.
சிறைக் கைதிகள் சீர்திருத்தம் Prisoners rehabilitation என்பது மேலை நாட்டில் புதிதாகப் பின்பற்றப்படும் கருத்து. இதை 2000 ஆண்டுகளுக்கு முன்பு செயல்படுத்திக் காட்டியவர் மணிமேகலை!
Xxxx
பெரிய புராண, மஹா பாரத தண்ணீர் பந்தல் கதைகள்
12 ஆண்டுக்கு ஒரு முறை வரும் வறட்சி பற்றி வேதங்கள் முதல் திருவிளையாடல் புராணம் வரை பிரஸ்தாபிக்கின்றன. அத்தகைய காலங்களில் அக்ஷய பாத்திரம், அமுதசுரபி, காமதேனு, கற்பக விருக்ஷம், உலவாக்கிழி என்ற அற்புதக் கலயங்களும் சின்னங்களும் இந்திய மக்களைக் காப்பாற்றி வந்துள்ளன. இதை நம்பாதோரும் கூட கஷ்ட காலங்களில் மனிதர்களைக் காப்பாற்றவேண்டும் என்ற சிந்தனை மலர்ந்த பூமி இப் புனித பாரதம் என்பதையாவது ஒப்புக் கொள்ளவேண்டும்.
அப்பூதி அடிகள் கதை
பெரியபுராணத்தில் வரும் அப்பூதி அடிகள் கதையும் மஹா பாரதத்தில் வரும் சல்லியன் கதையும் நாம் அறிந்ததே. அப்பர் என்னும் திருநாவுக்கரசர் நால்வரில் ஒருவர். சம்பந்தராலும் போற்றப்பட்ட புனிதர். ஆனால் அந்தணர் அல்ல. அவர் திங்களுர் சென்றபோது அவர் பெயரில் திருமடங்களும் தண்ணிர் பந்தல்களும் இருந்ததைக் கண்டு வியந்தார். யார் என்று வினவியபோது அப்பூதி அடிகள் என்னும் அந்தணர் இவ்வாறு செய்ததை அறிந்தார். அவரிடமே சென்று
“ஏனைய்யா இப்படி அப்பர் பெயரை வைத்தீர்? அவர் என்ன சாதனை செய்து கிழித்துவிட்டார்?” என்று வினவ, அப்பூதி அடிகள் புலி எனச் சீறி அப்பர் தம் பெருமையை விளக்கி வந்தவரை விரட்டப் பார்த்தார். தாம்தான் அப்பர் என்று அவர் தம்மையே அறிமுகப் படுத்தியபோது அப்பூதி அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை. நாம் இங்கே கவனிக்கவேண்டியது தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தல் 1300 ஆண்டுகளாக இன்றும் தமிழகத்தில் நீடித்திருக்கும் ஒரு சமூகப் பணி என்பதாகும்.
மாத்ர தேச அதிபதி சல்லியன் கதை
இதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மஹாபாரத காலத்தில் இப்படி ஒரு கதை வருவதைப் பார்த்தால் இமயம் முதல் குமரி வரை 5000 ஆண்டுகளாக இப்படி நற்பணி நடந்திருப்பது உள்ளங்கை நெல்லிக்கனி என விளங்கும். பாண்டவ சகோதரர் நகுலன் சகாதேவனின் மாமன் மாத்ர தேச அதிபதி சல்லியன். மாபாரத போருக்கு முன் இவனை தம் பக்கத்தில் இழுத்துக் கொள்ளவேண்டும் என்று பாண்டவர்களும் கவுரவர்களும் முனைப்புக் காட்டினர். கள்ளத்தனத்தில் கெட்டிக்காரன் துரியோதணன். சல்லியன் வரும் வழியில் தண்ணீர் பந்தல்கள் வைத்து அவன் தாக சாந்தி செய்யவே அவனிடம் உதவி கேட்டனர். உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரல்லவா? அவனும் அப்படியே உதவி தருவதாக வாக்களித்தான். கர்ணனின் தேரோட்டியாக அமர்ந்த சல்லியன், 18ஆம் நாளில் உயிர் துறக்கிறான். வாக்கிற்குக் கட்டுப்பட்ட சத்திய சீலன்!
ஆக தண்ணிர் பந்தல், அன்ன தானம் என்பன பாரதீய வாழ்வில் இரண்டறக் கலந்த அம்சங்கள். வட இந்தியாவில் காளி கம்பளவாலா சத்திரங்கள் என்று வழி நெடுகிலும் உண்டு. அந்தக் காலத்தில் இமய மலையின் புனித தலங்களுக்குச் செல்லுவோருக்கு கம்பளி ஆடைகளை கொடுத்துதவிய ஒரு தர்மாத்மாவின் பெயரில் அமைந்த சத்திரங்கள் அவை. நம் தமிழ் நாட்டிலும் வழி நெடுகிலும் அன்ன சத்திரங்கள் இருந்த காலம் ஒன்று உண்டு.
எறும்புக்கும் கொசுவுக்கும் கூடத் தீங்கு செய்யாத சமண சமயத்தினர் பறவைகளுக்கும் மிருகங்களுக்கும் மருத்துவ மனை நடத்திய நாடு இது!
Above article 32 வகை தர்மங்கள் பட்டியல் (Post No.7683) was written by me on 12 March 2020
xxxx
அறப்பளீசுர சதகப் பாடல் எண் 94
94. முப்பத்திரண்டு அறங்கள்
பெறுமில், பெறுவித்தலொடு, காதோலை, நாள்தொறும்
பிள்ளைகள் அருந்தி டும்பால்,
பேசரிய சத்திரம், மடம்,ஆ வுரிஞ்சுகல்
பெண்போகம், நாவிதன், வணான்,
மறைமொழிக ணாடி, தண்ணீர், தலைக் கெண்ணெய்பசு
வாயின்உறை, பிணம்அ டக்கல்,
வாவி, இறும் உயிர்மீட்டல், தின்பொருள், அடைக்காய்
வழங்கல், சுண் ணாம்பு தவுதல்,
சிறையுறு பவர்க்கமுது, வேற்றிலம் காத்தல், பொழில்
செய்தல், முன் னூலின் மனம்,
திகழ்விலங் கூண், பிச்சை, அறுசமய ருக்குண்டி,
தேவரா லாயம்,அ வுடதம்;
அறைதல்கற் போர்க்கன்னம் நாலெட் டறங்களும்முன்
அன்னைசெயல்; அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே.
(இ-ள்.) அருமை ……. தேவனே!, பெறும் இல் – மகவு பெறுதற்கு
வீடு விடுதல், பெறுவித்தலொடு – மகவு பெறுதற்கு வேண்டியவற்றை
உதவுதல், காது ஓலை – காதணி அளித்தல், நாள்தொறும் பிள்ளைகள்
அருந்திடும் பால் – அன்றாடம் குழந்தைகள் பருகும் பால் அளித்தல்,
பேச அரிய சத்திரம் – சொலற்கரிய சத்திரம் கட்டல், மடம் – (துறவிகள்
இருக்கும்) மடம் அமைத்தல், ஆவுரிஞ்சு கல் – பசுக்களின் தினவு நீக்கும்
கல்நடுதல், பெண்போகம் – பெண்களுக்கு இன்பம் அளித்தல், நாவிதன் –
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கொங்குமண்டல சதகம் பாடல்கள் 17, 16
பேரூர்த் தாண்டவமூர்த்தி!
ச.நாகராஜன்
(சென்ற கட்டுரையில் பேரூர் பட்டீஸ்வரம் கோவில் பற்றிப் பார்த்தோம். அதைத் தொடர்ந்து இதோ…)
கோமுனி, பட்டி முனி காண பட்டீஸ்வரர் நடனம் ஆடிய தலம் மேலைச் சிதம்பரம் என்ற சிறப்புப் பெயரைப் பெற்ற திருத்தலமாகு.
இதைப் பற்றி கொங்குமண்டல சதகம் பாடல் 17இல் சிறப்புறக் கூறுகிறது இப்படி:-
பாகான சொல்லிதென் பேரூர் மரகதப் பார்ப்பதிமா
நாகா பாணர்பட் டீசுரர் பாதத்தை நம்பியெங்கும்
போகாத கோமுனி பட்டி முனிக்குப் பொதுநடஞ்செய்
வாகான மேலைச் சிதம்பர முங்கொங்கு மண்டலமே
பொருள் : கோமுனி, பட்டிமுனி காண, மரகதவல்லி சமேதரான பட்டீஸ்வரர் நடனம் செய்தது மேலைச் சிதம்பரமான பேரூரில்.
அந்தப் பேரூரும் கொங்குமண்டலம் சார்ந்த திருத்தலமே என்பதாம்.
கொங்குமண்டலத்தில் ஆறை நாட்டில் உள்ளது திரு அவிநாசி.
இங்கு ஒரு பெரிய அற்புத சம்பவம் நடைபெற்றது.
திருநாவலூரர் என்னும் சுந்தரமூர்த்தி நாயனார் ஒரு சமயம் அவிநாசிக்கு எழுந்தருளினார். அப்போது ஒரு வீட்டில் மங்கல ஒலி எழுந்தது. ஆனால் அடுத்த வீட்டிலோ அழுகுரல் கேட்டது.
நடந்தது என்ன என்று கேட்டார் சுந்தரர். மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக சில சிறுவர்கள் அங்குள்ள குளத்திற்குச் சென்றனர். ஒரு சிறுவனை முதலை ஒன்று இழுத்துச் சென்று விழுங்கி விட்டது. அந்தச் சிறுவனுடன் கூடச் சென்ற சிறுவனுக்கு இன்று உபநயனம். ஆகவே அந்த வீட்டில் மங்கல ஒலி எழுகிறது. ‘நம் குழந்தை இருந்தால் அவனுக்கும் இது போலவே உபநயனம் நடந்திருக்குமே’ என்று அச்சிறுவனின் தாயார் அழவே, அந்த அழும் ஒலி அங்கு கேட்டது.
சுந்தரமூர்த்தி நடந்தை உணர்ந்தார். அந்தச் சிறுவனின் தாயார் அழுவதைக் காணப் பொறாத அவர் நேராக் குளக்கரைக்குச் சென்றார்.
“காலனைக் குழந்தையைக் கொடுக்கச் சொல்” என்று பதிகம் ஓதினார்.
என்ன ஆச்சரியம்! மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் முதலையால் விழுங்கப்பட்ட சிறுவன் மூன்று ஆண்டுக்குரிய வளர்ச்சியுடன் முதலையின் வாயிலிருந்து கக்கப்பட்டு வெளியே வந்தான்.
அனைவரும் இந்த அதிசய சம்பவத்தைக் கண்டு பிரமித்தனர்.
உலகெங்கும் இந்தச் செய்தி பரவியது.
இன்றும் அதன் நினைவாகத் திருவிழா அங்கு நடை பெறுகிறது.
சுந்தரர் பாடிய பாடல் மிகவும் புகழ் பெற்ற பாடலாயிற்று.
அவர் பாடிய பாடல்:
உரைப்பாருரையிகந் துள்கவல்லார் தங்களுச்சியா
யரைக்காடரவா வாதியு மந்தமுமா னாய்
புரைக்காடு சோலைப் புக்கொளியூரவிநாசியே
கரைக்கான் முதலையைப் பிள்ளைதரச்சொல்லு காலனையே
இதைச் சுட்டிக் காட்டும் அவிநாசிப் புராணம் தரும் பாடல் இது:
கரைக்கான் முதலையைப் பிள்ளைதரச்சொல் காலனையென்றே கட்டுரை செய்தார்”.
இந்த வரலாறை கொங்குமண்டல சதகம் பாடல் 16 சிறப்புறக் கூறி அவிநாசித் திருத்தலத்தைப் போற்றுகிறது:
பூவென்ற சீரடி யாரூர்ப் பரவைதன் போகங்கொளும்
பாவென்ற செந்தமிழ்ச் சுந்தரன் பாடிப் படர்குளத்தில்
ஆவென்ற வாயின் முதலைகொள் பிள்ளையை யன்றுகொண்டு
வாவென் றழைத்த வவிநாசி சூழ்கொங்கு மண்டலமே
பொருள் : பிள்ளையைக் கொண்டு வா என்று சுந்தரமூர்த்தி நாயனார் பதிகம் பாட, விழுங்கிய பிள்ளையை குளக்கரையில் முதலை உமிழ்ந்த அவிநாசித் திருத்தலமும் கொங்குமண்டலத்தைச் சார்ந்ததே என்பதாம்.
Here is a story from Valmiki Ramayana which says people who are appointed as officials in Hindu temples, Go Saalas and Anna Chatras easily go to hell. Rama appointed a Brahmin as an officer in a monastery as a punishment. But he was happy thinking that it was a reward.
Now and then we hear about government officers in Tirupati Balaji temple and HRCE controlled Tamil Nadu temples abusing and misusing the temple money. We also hear about the frauds in Food Distribution Centres. There is a proverb in Tamil Sivan Sothu Kula Naasam meaning Those who steal temple property will be destroyed lock, stock, and barrel.
Stealing is bad according to all religious books. Stealing holy property is worse. All the Tamil inscriptions in temples and brahmin lands say that those who violate the king’s orders will go to hell. If we keep it in the background of our mind and read the dog story we will fully understand what the dog said at the end.
xxxx
Uttara Kaanda of Ramayana is the seventh and last section of the great epic Ramayana. Some people consider it an appendix written by someone else. Others say it was written by Valmiki himself, but there are some interpolations. Whatever it is, the stories and the morals they teach are interesting and valid today.
Here is a story of a dog told by the great saint Valmiki.
Rama, the king, held morning consultations, with his ministers and senior citizens of the state. They included Brahmins and representatives of the business community.
After the consultation, he asked his brother Lakshmana to go to the gate and bring all the citizens with petitions. He went to the palace gate and called for petitioners to come forward. There was none but an injured dog sitting and howling there.
It was a real Ram Rajya. There was neither poverty nor disease and earth filled with grains and herbs. Neither children nor the young nor those of middle age met with death. The kingdom was ruled with equity and there was no adversity. Thus during Rama’s administration none was to be seen who was in need of justice.
But he dog at the gate was howling unceasingly.
Lakshmana said,
“O fortunate one, who brought you here, speak without fear”.
The dog said,
I wish to communicate something to Rama who is the refuge of all beings who confers fearlessness on all. But we are not allowed inside the temples, palaces, or Brahmins houses. So please get the permission of the king. Lakshmana went back to Rama and reported what the dog said. Rama asked him to bring the dog inside the hall.
The dog told Rama, a Brahmin by name Sarvartha siddhi who lives on alms, hit it on the head and injured it without any reason.
Rama sent for the Brahmin. and he came to the assembly hall.
Rama said
“O Brahmin! you have injured this dog. What offence did it commit? You hit it severely with your staff.”
The Brahmin said, “I was wandering about the whole day in search of alms. I was overcome with hunger. The dog was sitting in the centre of a street. I asked it to move but it didn’t move. So I became angry and struck it with my staff. I am guilty, punish me.”
Rama consulted his eight ministers and the business representatives who were present in the hall. They said to him, “A Brahmin is exempt from punishment. So make him the head of a monastery”.
Rama posted him as the head of a monastery. The Brahmin was mounted on an elephant and left the palace happily.
The dog said,
“Oh Ragava, this Brahmin given to anger is impious. He will by no means be able to discharge the duties. He who wishes to see his children, friends and beasts fall into hell is made chief of the gods’ temples, shelter for cows and Brahmins’ Anna Chatras/choultries. Oh, Raghava , he perishes who deprives the Brahmins, women or children of their legitimate possessions; one who misappropriates the offerings of Brahmins goes to the lowest hell”.
Hearing the words of the dog ,Rama’s eyes opened wide in astonishment. Then the dog departed and went to the holy city of Kashi. It went on a fast unto death. In its former birth it was a good person but born as a dog because of its bad .behaviour.
This story implies that if a man is appointed as a higher official and he doesn’t discharge his duties faithfully he is in danger of going to hell.
–subham—
Tags- HRCE, Valmiki, warning, Dog story, Ramayana, Uttara Kanda
வால்மீகி இராமாயண உத்தர காண்டத்தில் வியப்புமிகு செய்திகள் பல உள . ஏழாவது காண்டமாகிய உத்தர காண்டம் நிறைய இடைச் செருகல்களைக் கொண்டு இருப்பதால் பலரும் இதை வால்மீகி மஹரிஷி எழுதி இருக்க முடியாது என்பர். ஆயினும் பகதர்கள் எல்லாவற்றையும் நம்புகின்றனர். என்னிடமுள்ள ஆங்கில மொழிபெயர்ப்பான ஹரிப் பிரசாத் சாஸ்திரி புஸ்தகத்திலும் எல்லா ஸ்லோக மொழிபெயர்ப்புகளும் உள்ளன. அவர் இடைச் செருகல் (INTERPOLATIONS) என்ற தலைப்பில் நாய் கதை, கழுகு-ஆந்தை சண்டைக் கதை (VULTURE AND OWL) முதலியவற்றைக் கொடுத்துள்ளார்.
நேற்று நாய்க் கதையைச் சொன்னேன். இன்று அதன் தொடர்ச்சியைப் பார்ப்போம்.
நாய்க் கதையின் சுருக்கம்:
ராமபிரான், பிராஹ்மணர்களையும் பிசினஸ் கம்யூனிட்டி வி.ஐ.பிக்களையும் சந்தித்து ஆலோசனை நடத்தியபின்னர் , “தம்பி லெட்சுமணா, குறைதீர்க்கும் மனுக்களுடன் வாசலில் காத்திருப்போரை அழைத்து வா” என்கிறார்; அவனும் அரண்மனை வாசலுக்குச் சென்றான். தலையில் அடிபட்ட நாய் ஒன்று மட்டுமே நின்றது. ஒரு பிராமணன் தன்னைக் காரணமின்றி தாக்கியதாக சொல்லவே பிராமணனையும் அழைத்து விசாரித்தார் ராமபிரான். அவன் பசி, கோபத்தில் இவ்வாறு செய்ததாக உண்மையை விளம்பினான். உடனே அவனுக்கு மணியக்காரர் பதவியைக் கொடுத்து அனுப்பினார். அவன் சந்தோஷமாக யானை மீது ஏறி வீட்டுக்குச் சென்றான். அடிபட்ட நாய், மீண்டும் தன் இருப்பிடத்துக்குச் சென்றுவிட்டு, பின்னர் காசிக்குச் சென்று சாகும் வரை உண்ணாவிரத நோன்பு அனுஷ்டித்து உயிர் நீத்தது .
இதற்கு அடுத்துவரும் ஸ்லோகம்தான் மிகவும் சுவையானது :
யமிச் சேந் நரகம் நேதும் ஸ புத்ர பசு பாந்தவம்
தேவேஷ்வ திஷ்டிதம் குர்யாத் கோஷு ப்ராஹ்மணேஷு ச
நிரயாந் நிரயம் ஸைஷ பதத்யேவ நராதமஹ
மக்கள், விலங்கினங்கள் , உறவினர்கள் இவர்களுடன் கூடிய எவனை நரகத்திற்கு அனுப்ப விருப்பமுண்டோ அவனைக் கோவில்களிலும், பசு மடங்களிலும் , பிராமணர்களின் அன்ன சத்திரங்களிலும் அதி காரியாகச் செய்துவிடவேண்டும் . அவன் ஒரு நரகத்திலிருந்து இன்னொரு நரகத்துக்குப் போய்க்கொண்டே இருப்பான் .
வால்மீகி முனிவர் ஏன் இப்படிச் சொன்னார்? என்று ஆராய்வோம். பொதுவாகவே பிறர் பொருளுக்கு ஆசைப்படுவது குற்றம் என்பதை , எல்லா மத நூல்களும் செப்புகின்றன. அதிலும் புனிதமான பொருள்களைத் திருடுவது பெரிய குற்றம்; அவர்கள் நரகத்துக்குச் செல்வார்கள் என்று எல்லா தமிழ்க் கல்வெட்டுக்களும் எச்சரிக்கின்றன. ஏனெனில் அது வேலியே பயிரை மேய்ந்ததற்குச் சமம் ஆகும்.
மேலும் சிவன் சொத்து குல நாசம் என்ற தமிழ்ப் பழமொழியை எல்லோரும் அறிவர். கோவில்கள், பசு மடங்கள் , அன்ன சத்திரங்களில் பொய்க் கணக்கு எழுதி பணத்தைச் சுருட்டுவது எளிது. தமிழ் நாட்டிலும் ஆந்திரத்திலும் இவ்வாறு (H R C E) கோவில் ஊழியர்கள் திருடுவதும், லஞ்சம் வாங்கி கோவிலின் புனிதத்தைக் கெடுப்பதும் நாம் .அறிந்ததே. திருடர்களுக்கு நரகம் கிடைக்கும் என்பதை எல்லா சமயங்களும் எழுதியுள்ளன . இதைப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வால்மீகி மகரிஷியும் எழுதியுள்ளது அடிக்கோடிட்டுக் காண்பிப்பது போல பளிச்சிடுகிறது.
அறப்பளீசுர சதகம் எழுதிய அம்பலவாணக் கவிராயர், பகைக்கக்கூடாதவர்கள் யார் யார் என்று ஒரு லிஸ்ட்/ List பட்டியல் தருகிறார்.; அந்த 15 பேரைக் கனவிலும் பகைக்கக்கூடாது என்கிறார். யார் அந்த 15 பேர்?
நல்ல அறிவுரைதான். சமையல்காரனை பகைத்தால் சாப்பாட்டில் உப்பு அல்லது விளக்கெண்ணெயை சேர்த்துவிடுவான்; டாக்டரைப் பகைத்தால் ஊசி மருந்து ஏற்றுவதாகச் சொல்லி தண்ணீரை ஏற்றிவிட்டு காசு வாங்குவார். கீழோரைப் பகைத்தால் தூக்கணங் குருவிக்கூட்டைப் பிய்த்தெறிந்த பஞ்ச தந்திரக் கதை நினைவுக்கு வரும். பலசாலியைப் பகைத்தால் கைகால்கள் முறியக்கூடும்; பணக்காரர்களைப் பகைத்தால் அடியாட்களைக் கொண்டு தாக்குவார்கள். புலவர்களை பகைத்தால் அறம்பாடி நம்மைக் கொன்றுவிடுவார்கள் .அரசர்/ ஆளும் கட்சியினரைப் பகைத்தால் போலீஸ் கேஸ் கூட பதிவு செய்ய மாட்டார்கள். அம்பலவாணர் சொன்னது நூற்றுக்கு நூறு சரிதான்.
Xxxx
அடுத்த பாடலில் இன்னுமொரு அறிவுரை வழங்குகிறார்; கரும்பு போன்ற பொருள்களைக் கசக்கிப் பிழிந்தால்தான் பலன் கிடைக்கும். சாறு வேண்டுமென்றால் நசுக்க வேண்டும். திருவள்ளுவர் கூட கருமிகளை கையை முறித்து முகவாக்கட்டையில் ஒரு குத்துவிட்டால்தான் காசு தருவான் என்று சொல்கிறார் (காண்க வள்ளுவரும் வன்முறையும் என்ற எனது கட்டுரை). இன்னும் சிலரைப் புகழ்ந்து வேலை வாங்க வேண்டும். சின்னப் பையனாக இருந்தால், அட என் ராஜா , உன்னைப்போல இன்டெலிஜெண்ட் INTELLIGENT யாரும் கிடையாது ; உன் டீச்சர் என்னிடம் சொன்னார். வா, வா, ஹோம் ஓர்க்கை HOME WORK வேகமாக செய் என்று சொன்னால் செய்வான். ஒரு பெண்ணை விரும்பினால், உன்னைப்போல அழகியை நன் உலகிலேயே கண்டதில்லை. அடடா, நீ நல்ல குணங்களுக்கு இலக்கணம்.BEAUTY AND FULL OF GOOD VIRTUES என்று புகழ் வேண்டும். அந்த அசடும் ( DIMWIT)மயங்கி, சொக்கிப் போகும். இது அம்பலவாணர் கண்ட உண்மை.
XXXXXXXXX
இதோ பாடல் எண் 92
அறப்பளீசுர சதகப் பாடல் எண் 92
92. பகை கொள்ளத் தகாதவர்
மன்னவர், அமைச்சர், துர்ச்சனர், கோளர், தூதரொடு
மாறாத மர்மம் உடையோர்,
வலுவர், கரு ணீகர், மிகு பாகம்செய் தன்னம் இடும்
மடையர்,மந் திரவா தியர்,
சொன்னம் உடையோர் புலையர், உபதேச மதுசெய்வோர்
சூழ்வயித் தியர்,க விதைகள்
சொற்றிடும் புலவர் இவர் பதினைந்து பேரொடும்
சொப்பனந் தனில் ஆகிலும்
நன்னெறி அறிந்தபேர் பகைசெய்தி டார்கள் இந்
நானிலத் தென்பர் கண்டாய்!
நாரியோர் பாகனே! வேதாக மம்பரவும்
நம்பனே! அன்பர் நிதி யே!
அன்னம்ஊர் பிரமனும் கண்ணனும் காணாத
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) நாரி ஓர் பாகனே – உமையொரு பங்கனே!, வேத ஆகமம்
பரவும் நண்பனே – மறையும் ஆகமமும் போற்றும் சிறப்புடையவனே!,
அன்பர் நிதியே – அன்பரின் சேமப்பொருளே!, அன்னம் ஊர் பிரமனும்
கண்ணனும் காணாத அண்ணலே – அன்னத்தில் ஊர்ந்து வரும் நான்முகனும்
திருமாலும் கண்டுபிடிக்க இயலாத பெரியோனே!, அருமை …….. தேவனே!,
மன்னர் – அரசர், அமைச்சர் – மந்திரிகள், துர்ச்சனர் – தீயோர், கோளர் –
கோள் சொல்லுவோர், தூதரொடு – தூதர்களுடன், மாறாத மர்மம்
உடையோர் – நீங்காத செற்றம் கொண்டவர்கள்,
வலுவர் – வலிமையுடையோர், கருணீகர் – கணக்கர், மிகு பாகம் செய்து
அன்னம் இடும் மடையர் – சிறந்த சமையல் செய்து உணவிடும் சமையற்காரர்,